HOME      Lecture      அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் உதவி தேடலாமா? | Tamil Bayan - 606   
 

அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் உதவி தேடலாமா? | Tamil Bayan - 606

           

அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் உதவி தேடலாமா? | Tamil Bayan - 606


بسم الله الرحمن الرّحيم
 
அப்துல் காதிர் ஜீலானி ரஹிமஹுல்லாஹ் அவர்களிடம் உதவி தேடலாமா?
 
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
 
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
 
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
 
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! இந்த ஒரு சிறு தொகுப்பில் முக்கியமான பதிலை நாம் பார்க்க இருக்கின்றோம்.
 
அதாவது கேள்வி என்னவென்றால், சகோதரர் ஆலிம் சுலைமான் மஹ்ழரி என்பவர்கள், அல்லாஹ்வுடைய இறைநேசர்களில் ஒருவரான அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களைப் பற்றி நாம் பேசியிருந்த அல்லது ஸலஃப் மன்ஹஜில் உள்ள சில அறிஞர்கள் பேசியிருந்த கருத்துக்கு மறுப்பு தெரிவிக்கும் விதமாக அவர்கள் சில விஷயங்களை பேசியிருந்தார்கள்.
 
அவர்கள் அதுகுறித்து பேசும்போது, ஸஹீஹுல் புகாரியில் பதிவான ஒரு ஹதீஸை இங்கே எடுத்து சொல்கிறார்கள். அதாவது அல்லாஹ் தஆலா ஹதீஸ் குத்ஸியில் கூறுகிறான்;
 
وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ، فَإِذَا أَحْبَبْتُهُ
 
அடியான் நஃபில் வணக்கங்களை செய்து என்னிடம் நெருங்கிக் கொண்டே இருக்கிறான்; இறுதியில் அவனை நான் நேசித்துவிடும்போது,
 
كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ
 
அவன் கேட்கின்ற காதாக நான் ஆகிவிடுகின்றேன்;
 
وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ
 
அவன் பார்க்கின்ற பார்வையாக நான் ஆகிவிடுகின்றேன்;
 
وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا
 
அவன் பிடிக்கின்ற கையாக நான் ஆகிவிடுகின்றேன்;
 
وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا
 
அவன் நடக்கின்ற காலாக நான் ஆகிவிடுகின்றேன் என்று கூறகின்றான். (1)
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 6502.
 
இந்த ஹதீஸ் குத்ஸியை அவர்கள் பொதுவாக கூறிவிட்டு, பிறகு அந்த ஹதீஸ் குத்ஸியினுடைய ஓட்டத்தில் அப்படியே என்ன செய்தியை நுழைக்கிறார் என்றால்,
 
இந்த ஹதீஸ் குத்ஸி அல்லாஹு தஆலா, அப்துல் காதிர் ஜீலானி அவர்களுக்காக சொல்லியது போன்று. அல்லாஹ் சொல்கிறான், நான் அப்துல் காதிர் ஜீலானி உடைய கையாக இருக்கிறேன். அல்லாஹ் சொல்கிறான்; நான் அப்துல் காதிர் ஜீலானி உடைய கண்ணாக இருக்கிறேன். அல்லாஹ் சொல்கிறான்; நான் அப்துல் காதிர் ஜீலானி உடைய காலாக இருக்கிறேன் என்று.
 
அல்லாஹ்வே சொல்லிவிட்ட போது நாம் அல்லாஹ்விடம் தான் கேள்வி கேட்க வேண்டும். வாங்க மறுமையில் போய் அல்லாஹ் விடம் கேள்வி கேட்போம் என்று அவர் தமாஸாக, நக்கலாக, ஒரு பரிகாசம் செய்யும் விதமாக கூட அவர் இந்த ஹதீஸை கையாண்டு செல்கிறார்.
 
சகோதரர்களே! இங்கே கவணிக்க வேண்டியது என்னவென்றால், நாம் என்ன சொல்கிறோம்; 
 
முதலாவது விஷயம், 
 
இறந்துவிட்டவர்களிடத்தில் நமது தேவையை கேட்பது : 
 
இது ஷிர்க். காரணம் என்ன? அவர்கள் இந்த உலகத்தை விட்டு அல்லாஹ்விடம் சென்றுவிட்டார்கள். அவர்களுக்கும் நமக்கும் உண்டான அந்த தொடர்பு என்பது அது தடுக்கப்பட்டுவிட்டது; திரையிடப்பட்டுவிட்டது; நாம் சொல்லக்கூடிய ஸலாம் அவர்களுக்கு எடுத்துவைக்கப்படுகிறது. 
 
இதை தவிர, நமது பிரார்த்தனைகளை செவியேற்கக்கூடிய சக்தியை அல்லஹு தஆலா அவர்களுக்கு கொடுக்கவில்லை. நாம் ஸலாம் சொல்லக்கூடிய அந்த விஷயத்தை அல்லாஹ் அவர்களுக்கு கேட்க வைக்கிறான் என்று ஹதீஸிலே வருகிறது. அதை நாம் நம்புகிறோம்.
 
ஆகவே தான், எந்த ஒன்றுக்கு அல்லாஹ் அவர்களுக்கு சக்தி கொடுக்கவில்லையோ, அதில் அவர்களுக்கு சக்தி இருப்பதாக நம்பி நாம் அவர்களிடத்திலே நம்முடைய தேவைகளைக் கேட்பது இது ஷிர்க்.
 
இது அல்லாஹ்விற்கு சமமாக அவர்களை ஆக்கியதாக ஆகிவிடும். காரணம் என்ன? துஆ என்பது ஒரு இபாதத். இதுபோன்று மறைவான ஒருவரிடம் நம்முடைய தேவையை கேட்பது என்பது ஒரு இறையச்சத்தோடும், ஒரு பயத்தோடும், ஒரு ஆதரவோடும், கேட்கப்படக்கூடிய ஒன்று. 
 
இது அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செய்யப்படும் போது ஒரு இபாதத்தாக ஆகிவிடுகிறது. அல்லாஹ் அல்லாதவருக்கு அந்த இபாதத்தை செய்ததால் அது ஷிர்க்காக ஆகிவிடுகிறது.
 
அப்துல் காதிர் ஜீலானி அவர்களை அல்லாஹ்விற்கு சமமாக நீங்கள் ஆக்கிவிட்டீர்கள் என்றால், அவர்களையும் அல்லாஹ் என்று நீங்கள் கூறுகிறீர்கள் என்று நாம் கூறவில்லை.
 
எப்படி அல்லாஹ் கூறுகிறான்; இணைவைக்கக்கூடிய மக்களைப்பார்த்து அல்லாஹ் சொல்கிறான்;
 
فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُونَ
 
அவனே பூமியை நீங்கள் வசிக்கும் இடமாகவும், வானத்தை ஒரு முகடாகவும் அமைத்து, மேகத்திலிருந்து மழையைப் பொழிவித்து, அதைக் கொண்டு (நீங்கள்) புசிக்கக்கூடிய கனிவர்க்கங்களையும் உங்களுக்கு வெளியாக்குகிறான். ஆகவே, (இவற்றையெல்லாம்) நீங்கள் தெளிவாக அறிந்துகொண்டே அல்லாஹ்வுக்கு இணைகளை ஆக்காதீர்கள். (அல்குர் ஆன் 2 : 22)
 
வானங்களை படைத்தது, பூமியை படைத்தது, மழைகளை இறக்குவது அல்லாஹ் தான் என்று அறிந்தும் நீங்கள் அல்லாஹ்விற்கு இணைகளை ஏற்படுத்தாதீர்கள் என்று அல்லாஹ் கூறுகிறானே அதற்கு என்ன அர்த்தம்?
 
முஷ்ரிக்குகள் இந்த உலகத்திற்கு இரண்டு அல்லாஹ் இருக்கிறான் என்று சொல்கிறார்கள் என்றா அர்த்தம்? அப்படி எந்த முஷ்ரிக்கும் சொல்லவில்லை. இந்த உலகத்திற்கு மூன்று கடவுள், மூன்று இறைவன் அல்லது பல தெய்வங்கள் இந்த உலகத்தை படைத்தவர்கள் இருக்கிறார்கள் என்றா முஷ்ரிக்குகள் சொல்கிறார்கள்? இல்லையே!
 
அவர்கள் படைத்த இறைவன் ஒருவன் என்று ஏற்றுக்கொண்டுவிட்டு, வழிபாடுகளை அந்த இறைவனை தவிர மற்றவர்களுக்கு செய்வதைத் தான் அல்லாஹு தஆலா, இங்கே நீங்கள், அந்த படைத்த இறைவனுக்கு நிகர்களை இணைகளை ஏற்படுத்திக் கொண்டீர்கள். அப்டி ஏற்படுத்தாதீர்கள். என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். 
 
இதைத்தான் இப்னு கஸீர் (ரஹி) அவர்கள் தங்களது தஃப்ஸீரிலே பதிவு செய்கிறார்கள். அந்த அடிப்படையில் தான், அப்துல் காதிர் ஜீலானி (ரஹி) அவர்களிடத்தில் ஒரு மனிதர் 'என்னுடைய தேவையை நீக்குங்கள் எனக்கு உதவுங்கள் என்று சொல்வது' இது ஒரு துஆ. இது ஷிர்க்காக ஆகிவிடும். இப்படி கேட்பவர் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை விட்டு வெளியேறிவிடுவார். அவர் ஒரு முஷ்ரிக்காகத் தான் கருதப்படுவார்.
 
சரி, நாம் என்ன கேள்வி கேட்கிறோம். இவ்வாறு என்னிடத்திலே பிராரத்தனை கேளுங்கள் என்று அல்லது என்னை அழையுங்கள் என்று அப்துல் காதிர் ஜீலானி (ரஹி) எங்கேயாவது கூறி இருக்கிறார்களா? அவர்களுடைய புத்தகங்கள் ஃகுன்யத்துத் தாலிபீனிலோ, அல்லது ஃபத்ஹுல் ரப்பானியிலோ கூறியிருக்கிறார்களா? 
 
அதைத்தான் நாம் கேட்டோமே தவிர அதை மொழியாக்கம் செய்யுங்கள் என்று நாம் சொல்லவில்லை, அப்படி நீங்கள் மொழியாக்கம் செய்தால் உங்களுக்கு தெரியும் அதில் அப்படி சொல்லப்படவில்லை என்று. அதற்கு பதிலாக நீங்கள் அந்த கிதாபில் வாசித்துக் காட்டுங்கள், உங்களுக்கு அரபி தெரியுமா? என்று கேட்கிறார்கள். 
 
அழகாக இன்ஷா அல்லாஹ் வாசித்துக் காட்டுகின்றோம். வாசித்துக்காட்டுவது மட்டுமல்ல, விளக்கங்களையும் இன் ஷா அல்லாஹ் நாம் சொல்வோம்.
 
அடுத்ததாக, இந்த ஹதீஸ் குத்ஸியைப் பற்றி பேசும்போது, ஒரு அடியான் நஃபில் வணக்கங்களை செய்யும்போது, அவன் செவியாக அவன் பார்வைமாக மாறி விடுவதாக அல்லாஹ் கூறுகிறானே, பொதுவாக அல்லாஹ் கூறக்கூடியதை அப்துல் காதிர் ஜீலானிக்காக அல்லாஹ் கூறியதாக மக்களை நம்பவைக்கிறார்கள். இது மிகப்பெரிய தவறு. 
 
இந்த ஹதீஸ் பொதுவாக எல்லா முஃமின்கள் விஷயமாகத் தான் கூறப்பட்டிருக்கிறது. அப்படி இருக்கும்போது, எல்லா முஃமின்கள் விஷயத்தில் சொல்லப்பட்ட ஹதீஸை நாம் எப்படி விளங்கிக் கொள்ள வேண்டும்? இந்த ஹதீஸினுடைய முன் தொடரையும் பின் தொடரையும் பாருங்கள். 
 
அல்லாஹு தஆலா இங்கு அடியான், ரப்பு என்று பிரிக்கின்றான். அதுபோன்று அமல் செய்யக்கூடியவர்கள் யாருக்காக அமல் செய்யப்படுகிறதோ அப்படி பிரிக்கின்றான். ஆகவே தான் என்னுடைய அடியான் நஃபில் வணக்கத்தின் மூலமாக என்னை நெருங்குகிறான். (புகாரி: 6137) என்று கூறுகிறானே தவிர என்னாக அவன் மாறிவிடுகிறான், நானாக அவன் மாறிவிடுகிறான் என்று அல்லாஹ் சொல்லவில்லை.
 
அடுத்ததாக, அவன் அப்படி நெருங்கும்போது அவன் பிடிக்கும் கரமாக, அவன் பார்க்கும் பார்வையாக நான் ஆகிவிடுகிறேன் என்று அல்லாஹ் ஹதீஸ் குத்ஸியிலே கூறுவதை ரஸூல் (ஸல்) கூறுகிறார்கள்; அடுத்தாக இதை எப்படி புரிய வேண்டும் என்பதையும் அந்த ஹதீஸினுடய இறுதி தொடர் நமக்கு புரிகிறது. 
 
காரணம் என்ன? இந்த தொடரில் அவர் அல்லாஹ்வாகவே ஆகிவிடுகிறார் என்றால், அல்லாஹ்வோடு அப்படியே ஒன்றிவிடுகிறார் என்றால், இவரும் அல்லாஹ்வும் கலந்துவிடுகிறார்கள் என்றால், அந்த ஹதீஸினுடைய அடுத்த வார்த்தை ஹதீஸுக்கு முரணாக ஆகிவிடும். அடுத்த வார்த்தை எப்படி இருக்கிறது?
 
وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ
 
அவன் என்னிடத்திலே கேட்டால் நான் நிச்சயமாக அவனுக்கு கொடுப்பேன்.
 
وَلَئِنِ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ
 
அவன் என்னிடத்திலே பாதுகாப்பு தேடினால் நான் அவனைப் பாதுகாப்பேன்.
 
இப்போது இவர்கள் சொல்வதைப் போன்று, அப்துல் காதிர் ஜீலானி (ரஹி) அவர்களோ அல்லது ஒரு இறைநேசரோ நஃபிலான வணக்கங்கள் செய்து செய்து அல்லாஹ்வாகவே ஆகிவிட்டார்கள் என்று சொன்னால், அல்லது அல்லாஹ் அவராகவே ஆகிவிட்டான் என்றால், இந்த ஹதீஸுடைய இறுதி வார்த்தை அதற்கு முரணாக ஆகிவிடும். 
 
அவரே அல்லாஹ்வாக ஆகிவிட்டால் அவர் ஏன் அல்லாஹ்விடத்தில் தேவைகளை கேட்கவேண்டிய அவசியம் இருக்கிறது? அவர் ஏன் அல்லாஹ்விடத்திலே பாதுகாப்பு தேடவேண்டிய அவசியம் இருக்கிறது? அல்லாஹ் இப்படி சொல்லியிருக்க வேண்டிய அவசியமே இல்லையே!
 
இனி அவனிடத்தில் துஆ கேட்கவேண்டியதில்லை. நானாகவே அவர் ஆகிவிட்டார். இனிமேல் அவரிடத்தில் நீங்களெல்லாம் கேளுங்கள் என்று அல்லாஹ் சொல்லி இருப்பானே! அவரிடத்திலே பாதுகாப்பு தேடுங்கள் என்று அல்லாஹ் சொல்லி இருப்பானே! அப்படி சொல்லவில்லையே!
 
அல்லாஹ் எப்படி சொல்கிறான்? இந்த ஹதீஸ் குத்ஸியை முடிக்கும்போது, அந்த அடியான் என்னிடத்திலே கேட்டால் நிச்சயமாக நான் அவனுக்கு கொடுப்பேன். அவன் என்னிடத்திலே பாதுகாப்பு தேடினால் நான் அவரை பாதுகாப்பேன் என்று தான் அல்லாஹ் சொல்கிறான். 
 
அப்போ இந்த ஹதீஸுடைய ஆரம்பம் என்ன கூறுகிறதோ அதைத்தான் நடு ஹதீஸும் கூறுகிறது. அதைத்தான் இறுதி ஹதீஸும் கூறுகிறது. இதை புரிவதிலே இவர்கள் தவறு செய்கிறார்கள்.
 
என்ன தவறு செய்கிறார்கள்? அவர் பார்க்கக்கூடிய பார்வையாக, செவியாக, பார்வையாக அல்லாஹ் ஆகிவிடுகிறான் என்பதற்கு, நம்முடைய அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆ உடைய அறிஞர்கள் என்ன கூறியிருக்கிறார்கள்? இந்த ஹதீஸை அறிவித்த அறிவிப்பாளர்கள், முஹத்திஸுகள், ஃபுகஹாக்கள், ஹதீஸுடைய விரிவுரையாளர்கள் இமாம் இப்னு ஹஜரைப் போன்றவர்கள் என்ன கூறியிருக்கிறார்கள்? இதே ஹதீஸ் வேறொரு அறிவிப்பில் வரும்போது இமாம் இப்னு ரஜப் ஹன்பலி (ரஹி) பதிவு செய்கிறார்கள்;
 
فبى يسمع وبي يبصر وبي يبطش وبي يمشي 
 
அவன் என்னைக் கொண்டே பார்க்கிறான்; என்னைக்கொண்டே அவன் கேட்கிறான்; என்னைக் கொண்டே பிடிக்கிறான்; என்னைக் கொண்டே நடக்கிறான். 
 
நூல் : ஜாமிவுல் உலூம் வல் ஹிகம்
 
என்று வேறொரு அறிவிப்பில் வரக்கூடியதை பதிவு செய்கிறார்கள். இதிலிருந்து என்ன தெரிகிறது? அந்த அடியான் நஃபில் வணக்கங்களை செய்து செய்து அல்லாஹ்விடம் நெருங்கிவிட்டால், அடுத்ததாக அவன் எப்படி தன்னை மாற்றிக் கொள்கிறான் என்றால், தன்னுடைய மன இச்சைக்கு ஏற்ப வாழாமல், தன்னுடைய மன இச்சை சொல்லக்கூடியதை செய்யாமல், அல்லாஹ் சொல்லக் கூடியதை பார்ப்பான்; அல்லாஹ் சொல்லக் கூடியதை கேட்பான்; அல்லாஹ் எங்கே செல்ல சொல்லியிருக்கிறானோ அங்கே செல்வான். அல்லாஹ் எதை பிடிப்பதை ஹலால் ஆக்கியிருக்கிறானோ அதைப் பிடிப்பான். 
 
இப்படியாக அல்லாஹ்வின் விருப்பத்திற்கு ஏற்ப, அல்லாஹ்வின் கட்டளைக்கு ஏற்ப, அடியான் தன்னை மாற்றிக் கொள்வான் என்பதைத் தான் அல்லாஹு தஆலா இப்படி கூறியிருப்பதாக இந்த ஹதீஸுடைய விரிவுரையாளர்கள் இப்னு ஹஜர் (ரஹி) அவர்களைப் போல மற்ற மற்ற விரிவுரையாளர்கள் எல்லோருமே இந்த கருத்தை தான் சொல்லியிருக்கிறார்களே தவிர, ஸூஃபி கொள்கையில், அத்வேத கொள்கையில் சென்ற -அதாவது ஒரு மனிதன் இபாதத் செய்து செய்து அல்லாஹ்வாகவே மாறிவிட முடியும் என்ற வஹ்தத்துல் உஜூதுடைய கொள்கையைக் கொண்ட ஸூஃபிகளை தவிர வேறு யாரும் இந்த ஹதீஸுக்கு இப்படிப்பட்ட கருத்தை கூறவில்லை.
 
அப்துல் காதிர் ஜீலானி (ரஹ்) அவர்களைப் பொருத்தவரை அவர்கள் உண்மையான ஒரு அஹ்லுஸ்ஸுன்னா வல் ஜமாஆ உடைய அதுவும் குறிப்பாக ஸலஃப் மன்ஹஜை பின்பற்றிய அல்லாஹ்வுடைய ஸிஃபத்துகளின் விஷயத்திலும் மற்றும் இந்த உம்மத்திலே மாறுபட்ட கருத்துகள் எல்லா விஷயங்களிலும் ஸஹாபாக்கள் தாபியீன்களுடைய கருத்திலே இருந்த பெரிய அறிஞர்; ஒரு பெரிய இமாம் அவர்கள். 
 
ஆகவே அந்த இமாமையே இந்த தவ்ஹீதுக்காக உழைத்த அல்லாஹ்வின் பக்கம் மக்களை திருப்ப வேண்டும்; அல்லாஹ்வின் பக்கம் மக்களை கொண்டுவர வேண்டும்; அழைக்க வேண்டும் என்பதற்காகவே தனது வாழ்க்கையை அர்ப்பணித்த அந்த ஒரு இமாமை அந்த ஒரு இறை நேசரையே இவர்கள் கடவுளாக ஆக்கி அவர்கள் பெயரால் அழைப்பது, அவர்கள் பெயரால் நேர்ச்சை செய்வது, அவர்களிடத்திலே துஆ கேட்பது. 
 
இது எப்படி என்றால், அல்லாஹ்வின் பக்கம் அழைக்க வந்த ஈஸா (அலை) அவர்களை கிறிஸ்துவர்கள் அல்லாஹ்வாக ஆக்கியதைப் போன்று. அல்லது அல்லாஹ்விடத்திலே கேட்காமல் ஈஸா நபியிடத்திலே கேட்பதைப் போன்று.
 
அடுத்து நாம் என்ன சொல்ல வருகிறோம் என்றால் எவ்வளவு ஒரு கேலியான ஒரு பேச்சை பேசுகிறார்கள்?! அப்துல் காதிர் ஜீலானி (ரஹி) கூறியிருக்கிறார்களாம்;
 
ومن ينادي اسمي ألفًا بخلوته *** عزمًا بهمة صرمًا لغفوته
 
இப்படியாக மவ்லூதுடைய ஒரு வாக்கியம். அப்துல் காதிர் ஜீலானி (ரஹி) அவர்களை அழைத்தால் அவர்கள் கண்டிப்பாக வருவார்களாம். ஆனால் நிபந்தனை என்ன? அவர்கள் காதிரியா தரீக்காவைச் சேர்ந்தவராக இருக்க வேண்டுமாம். 
 
'அல்லாஹு அக்பர்' இது எவ்வளவு ஒரு அநியாயமான அபாண்டமான ஒரு பழிச்சொல். ஒருவரை இந்த உலகத்திற்கு அல்லாஹ் தூதராக அனுப்பினால் அவர் உலக மக்களுக்கெல்லாம் தூதர். ஒரு மனிதர் இறை நேசர் என்றால் அவர் உலக மக்களுக்கெல்லாம் இறை நேசர். இப்படி இருக்கும்போது அப்துல் காதிர் ஜீலானி (ரஹி) அவர்கள் பெயரால் இவர்கள் உருவாக்கிய காதிரியா என்ற அந்த தரீக்காவை ஏற்றுக் கொண்டவர்களுக்கு அப்துல் காதிர் ஜீலானி (ரஹி) உதவி செய்வார்கள் என்றால் இப்போது என்ன சொல்ல வந்துவிட்டார்கள் என்றால், இந்துக்கள் வைத்திருக்கக் கூடிய குல தெய்வத்தை போன்று.
 
எப்படி இந்துக்கள் தங்களது குலத்துக்கு என்று ஒரு தெய்வத்தை வைத்து நம்புவார்களோ அதுபோன்று காதிரியா என்ற குலத்தை தரீக்காவின் பெயரால் ஏற்படுத்திக் கொண்டு அவர்களுக்காக கடவுளாக தெய்வமாக அப்துல் காதிர் ஜீலானி (ரஹி) அவர்களை இவர்கள் ஆக்கிக் கொண்டார்கள்.
 
அல்லாஹு தஆலா அப்படிப்பட்ட தேவையிலிருந்து நம்மை பாதுகாப்பானாக! எந்த ஒரு தேவையையும் அல்லாஹ்விடத்திலே கேட்கக்கூடியவர்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவானாக! நாமெல்லாம் முஸ்லிம்கள் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆ, நம்முடைய ஃபிக்ஹுடைய கருத்துகள் மாறுபட்டிருக்கலாம். 
 
அதுபோன்று தரீக்காக்களை பொறுத்தவரை அந்த தரீக்காக்கள் அல்லாஹ்விற்கு, தவ்ஹீதை போதித்து, ஷிர்க்கை போதிக்காமல், பித்அத்தை போதிக்காமல், குர்ஆன் சுன்னா அடிப்படையிலே மக்களுக்கு போதிப்பதாக இருந்தால் அந்த பெயரை நாம் எதிர்க்கப்போவதில்லை. 
 
தரீக்காக்கள் என்ற பெயரிலே நீங்கள் சரியான வணக்க வழிபாட்டை செய்தால் நாம் அதை எதிர்க்கப் போவதில்லை. ஆனால், தரீக்காக்கள் என்ற பெயரில் நீங்கள் குர்ஆன் சுன்னாவுக்கு மாற்றமானதை ஏற்படுத்திக் கொண்டு, நீங்கள் ஒரு அமலை செய்வீர்களேயானால், அந்த தரீக்கா எப்பேற்பட்ட அறிஞருடைய பெயரோடு இணைக்கப்பட்டாலும் சரி, அது வழிகேடு தான்! வழிகேடு தான்! வழிகேடு தான்! 
 
அந்த அறிஞர், அந்த இமாம், அந்த இறை நேசர், நீங்கள் அவருக்கு பின்னால் உருவாக்கிய அந்த தரீக்காவிலிருந்து அவர் குற்றமற்றவர். அவர் பாவம் நீங்கியவர். காரணம் என்ன? அவர் அதை உருவாக்கவில்லை. எனக்கு முரீதாகுங்கள் என்றோ, எனக்கு பைஅத் செய்து கொடுங்கள் என்றோ, நான் ஒரு தரீக்காவை உருவாக்கி இருக்கிறேன் அதை பின்பற்றுங்கள் என்றோ எந்த ஒரு இமாமும் ஆலிமும் கூறவேயில்லை! அவர்கள் பெயரால் இவர்கள் இட்டுகட்டுகிறார்கள். மக்களை ஏமாற்றுவதற்காக, மக்களை ஏமாற்றி பொருள் சம்பாதிப்பதற்காக, தங்களை பெரியவர்களாக்கி, மக்களை நம்பவைப்பதற்காக இவர்கள் செய்யக்கூடிய ஒரு ஏமாற்று வித்தை. அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
நாம் என்ன சொல்கிறோம்? அப்துல் காதிர் ஜீலானி (ரஹி) அவர்களுடைய 'ஃகுன்யத்துத் தாலிபீனை' படியுங்கள்; ஏன் என்றால், அவர்கள் அதிலே தவ்ஹீதை சொல்லியிருக்கிறார்கள். அல்லாஹ்வைக் கொண்டு தான் ஆகும். அல்லாஹ் தான் உங்கள் ரப்பு. அல்லாஹ் வின் பக்கம் வாருங்கள். அல்லாஹ்வுடைய நபியுடைய சுன்னத்தை பின்பற்றுங்கள் என்பதை வழியுறுத்தி இருக்கிறார்கள். 
 
எனவே தான் அந்த கிதாபை படிக்க சொல்கிறோம். அப்படியில்லாமல், அதை நீங்கள் முற்றிலுமாக மக்களுக்கு போதிக்காமல், புறக்கணித்துவிட்டு, யாரோ ஒருவர் பெயர் தெரியாதவர் எழுதிய புத்தகத்தை மவ்லூது கிதாப், அதிலே இட்டுக்கட்டப்பட்ட சம்பவங்களையெல்லாம், எழுதியவர் யார்? எந்த காலத்தில் எழுதப்பட்டது? எதுவுமே இல்லாமல் அந்த சம்பவங்களின் அடிப்படையில் அப்துல் காதிர் ஜீலானி (ரஹி) அவர்களை ஒரு கடவுள் அல்லாஹ்வுக்கு சமமான ஒருவராக ஆக்கிக் கொண்டு தங்களுடைய தேவைகளை அவரிடத்தில் கேட்பது, இது மிகப் பெரிய ஷிர்க்காகும். மிகப் பெரிய ஷிர்க்காகும். அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹு தஆலா கற்றுக் கொடுத்தது, நபியே! நீங்கள் என்னிடத்திலே கேளுங்கள் என்பது தான்.
 
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ
 
(நபியே!) உம்மிடம் என் அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால் (அதற்கு நீர் கூறுவீராக:) ‘‘நிச்சயமாக நான் உங்களுக்கு சமீபமானவன். (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன்.'' ஆதலால், அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும்; என்னையே நம்பிக்கை கொள்ளவும். (அதனால்) அவர்கள் நேர்வழி அடைவார்கள். (அல்குர்ஆன் 2 : 186)
 
وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ
 
உங்கள் இறைவன் கூறுகிறான்: ‘‘நீங்கள் (உங்களுக்கு வேண்டியவை அனைத்தையும்) என்னிடமே கேளுங்கள். நான் உங்கள் பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வேன். எவர்கள் என்னை வணங்காது பெருமையடிக்கின்றனரோ, அவர்கள் நிச்சயமாக சிறுமைப்பட்டவர்களாக நரகம் புகுவார்கள். (அல்குர்ஆன் 40 : 60)
 
ஆகவே அன்பு சகோதரர்களே! கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். அப்துல் காதிர் ஜீலானி (ரஹி) வணக்க வழிபாட்டிலும் இறையச்சத்திலும் எவ்வளவு தான் உயர்ந்தாலும் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களை விட உயர்ந்திருக்க முடியுமா? அப்படி இருந்தால், அல்லாஹு தஆலா என்னிடத்திலே துஆ கேளுங்கள்; என்னிடத்திலே தேவையை கேளுங்கள் என்று சொல்லியிருப்பதைப் போன்று, நீங்கள் ரசூலுல்லாஹ்விடத்திலும் உங்களுடைய தேவையை கேளுங்கள், ரசூலுல்லாஹ் மரணித்துவிட்டால் அவருடைய கப்ருக்கு சென்று உங்கள் ஹாஜத்துகளை கேளுங்கள். அவர்களிடத்திலும் துஆ கேளுங்கள் என்று அல்லாஹ் சொல்லியிருப்பானே! 
 
நமக்கு எது தேவையோ அதை சொல்லிக் கொடுப்பதற்கு தானே நமக்கு மார்க்கம் இருக்கிறது. அதை சொல்லிக் கொடுப்பதற்கு தானே ரசூல் (ஸல்) நம்மிடத்திலே வந்தார்கள். ஸஹாபாக்கள் யாராவது நபி (ஸல்) மரணத்திற்கு பிறகு ரசூலுல்லாஹ்வுடைய கப்ருக்கு சென்று தங்களுடைய தேவைகளை கேட்டிருக்கிறார்களா? பாதுகாப்பு தேடியிருக்கிறார்களா? கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள். 
 
அபூபக்ர் (ரலி) அவர்களை விடவா அப்துல் காதிர் ஜீலானி (ரஹி) உயர்ந்துவிட்டார்கள்? உமர்( ரலி) அவர்களை விடவா? உஸ்மான் (ரலி) அவர்களை விடவா? அலி (ரலி) அவர்களை விடவா? எந்த ஒரு ஸஹாபியாவது அபூபக்ர் (ரலி) அவர்கள் இறந்ததற்கு பிறகு கப்ருக்கு சென்று அபூபக்ரே! இந்த தேவையை எனக்கு இதை உதவுங்கள் என்று சொல்லியிருக்கிறார்களா? அல்லது அபூபக்கர் (ரலி) பெயரால் அபூபக்கரே! அபூபக்கரே! என்று அழைத்து துஆ கேட்டிருக்கிறார்களா? அல்லது தேவைகளை கேட்டிருக்கிறார்களா? 
 
கொஞ்சம் சிந்தித்து பாருங்கள். முட்டாள் தனமானது; இது குர்ஆன் சுன்னாவுக்கு எதிரானது. எந்த ஒரு தூய மார்க்கத்தில் நம்மை அல்லாஹ்வுடைய தூதர் ரசூல் (ஸல்) விட்டுச் சென்றார்களோ, ஸஹாபாக்கள் போதித்துச் சென்றார்களோ அந்த அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆ உடைய கொள்கைக்கு, கோட்பாட்டிற்கு, அவர்களுடைய வழிமுறைக்கு முற்றிலும் மாற்றமான முஷ்ரிக்குகளிடத்திலிருந்து காப்பியடிக்கப்பட்ட ஒரு வழிமுறை என்பதை நீங்கள் இங்கே நினைவு கூறுங்கள்.
 
அடுத்து ஒரு முக்கியமான விஷயம் என்ன சொல்கிறார்கள் என்றால், நீ அத்தா என்று கூப்பிடவில்லையா? அம்மா என்று கூப்பிடவில்லையா? அப்பா என்று கூப்பிடவில்லையா? உன் மனைவியை கூப்பிடவில்லையா? அதெல்லாம் கூப்பிடுவது கூடும் என்று சொன்னால் ஏன் அப்துல் காதிர் ஜீலானியை கூப்பிடுவது கூடாது? இது ஒரு முட்டாள் தனமாக சுலைமான் மஹ்ழரி சொல்கிறார். சுத்த கல்வியே இல்லாத ஜாஹில் சொல்லக் கூடிய வார்த்தை இது.
 
நமக்கு முன்னால் உயிருள்ளவர்களை நமக்கு உதவிக்கு அழைப்பதென்பது அல்லாஹ் குர்ஆனிலே அனுமதித்த ஒன்று. ரசூல் (ஸல்) அனுமதித்த ஒன்று. நபி (ஸல்) வாழ்க்கையிலே நடந்த ஒன்று. ஸஹாபாக்கள் வாழ்க்கையில் நடந்த ஒன்று. 
 
இது நமக்கு முன்னால் யார் இருக்கிறார்களோ, யார் நம்முடைய பேச்சை கேட்பார்களோ, யாருக்கு நமக்கு உதவக்கூடிய ஆற்றலை அல்லாஹ் கொடுத்திருக்கிறானோஅவர்களுக்குத் தான். அப்படியிருக்கும்போது கடனுக்காக வேண்டி ஒருத்தரிடத்திலே கடன் கேட்பதோ, அல்லது நமது சுமையை தூக்குவதற்காக வேண்டி ஒருவரிடத்திலே உதவி கேட்பதோ, அல்லது நம்மை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்தில் கொண்டு போய் விடுவதற்காக உதவி கேட்பதோ அல்லது வேறு விதமான உதவி கேட்பதோ இது அல்லாஹு தஆலா மார்க்கத்திலே அனுமதித்த ஒன்று. அல்லாஹ் கூறுகிறான்;
 
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ
 
மேலும், நன்மைக்கும் அல்லாஹ்வுடைய இறையச்சத்திற்கும் நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருங்கள். பாவத்திற்கும் அத்துமீறுவதற்கும் (அநியாயத்திற்கும்) நீங்கள் ஒருவருக்கொருவர் உதவியாக இருக்க வேண்டாம். அல்லாஹ்வுக்கே நீங்கள் பயப்படுங்கள். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ், வேதனை செய்வதில் மிகக் கடுமையானவன் ஆவான்.
 
وَاللهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ
 
அல்லாஹ் தனது அடியானுடைய உதவியிலே இருக்கிறான் எதுவரை அடியான் தனது சகோதரனுக்கு உதவி செய்கின்றானோ. (2)
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 2699.
 
அல்லாஹ்வுடைய அடியார்களே! இது அனுமதிக்கப்பட்ட ஒன்று! செய்யவேண்டிய ஒன்று! இதை அவர்கள் ஷிர்க்கான உதவி தேடுவதற்கு கொண்டுபோய் ஆதாரமாக சொல்வது முட்டாள்தனமான ஒன்று. இப்படி இவர்கள் கூறுவது சரியாக இருக்குமேயானால், சிலை வணங்கிகள் ஜின்களிடத்திலே உதவி தேடுவதை அந்த ஜின்களுடைய பெயரால் அறுத்து பலியிடுவதை இவர்கள் சரி என்று சொல்வார்களே! அதைத்தான் அல்லாஹ் ஷிர்க் என்று சொல்கிறான்.
 
وَأَنَّهُ كَانَ رِجَالٌ مِنَ الْإِنْسِ يَعُوذُونَ بِرِجَالٍ مِنَ الْجِنِّ فَزَادُوهُمْ رَهَقًا
 
மனிதர்களிலுள்ள ஆண்கள் பலர், ஜின்களிலுள்ள பல ஆண்களிடம் மெய்யாகவே (தங்களை) பாதுகாக்கக் கோருகின்றனர். எனவே, மனிதர்கள் அந்த ஜின்களுக்கு கர்வத்தை அதிகரிக்கச் செய்துவிட்டனர். (அல்குர்ஆன் 72 : 6)
 
இதை அல்லாஹு தஆலா ஷிர்க்கிலே கண்டிக்கிறானே! ஆகவே அன்பு சகோதரர்களே! உயிருள்ளவர்கள் நமக்கு முன்னால் இருக்கும்போது அவர்களை அழைப்பதென்பது வேறு. இறந்துவிட்ட மக்களை நம்முடைய உதவிக்காக, தேவைக்காக ஆதரவு வைத்து அழைப்பதென்பது வேறு. 
 
முதலாவது சொல்லப்பட்டது அனுமதிக்கப்பட்ட ஒன்று, இரண்டாவது அது இபாதத்துடைய வகையிலே கொண்டுபோய் சேர்ந்துவிடும். இபாதத் அல்லாஹ் அல்லாதவரித்தில் செய்யப்பட்டால் அது ஷிர்க்காக ஆகிவிடும். 
 
இந்த ஒரு தெளிவான வித்தியாசத்தை புரிந்து கொள்ளுங்கள். இதுபோன்ற போலிகளிடமிருந்தும், இதுபோன்ற ஏமாற்றுப் பேர்வழிகளிடமிருந்தும், மக்களை ஏமாற்றி அல்லாஹ்விடமிருந்து அவர்களை திசைதிருப்பி ஷிர்க்கான காரியங்களிலே தள்ளி அவர்களுடைய மார்க்கத்தையும் கொள்கையையும் கெடுக்கக்கூடிய இந்த வழிகேடர்களிடமிருந்து நீங்கள் கண்டிப்பாக விலகி இருங்கள். அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும் பாதுகாப்பானாக! 
 
நாம் இந்த இடத்திலே சகோதரர் ஆலிம் சுலைமான் மஹ்ழரி அவர்களுக்கும் சொல்லியிருக்கிறோம். அல்லாஹ் உங்களுக்கும் நேர்வழி காட்டுவானாக! எங்களுக்கும் நேர்வழி காட்டுவானாக! நீங்கள் மன இச்சையை பின்பற்றுவதை விட்டு விட்டு குர்ஆனை தெளிவாக படியுங்கள்; ஹதீஸை தெளிவாக படியுங்கள்; ஸஹாபாக்கள் முன்னோர்கள் அஹ்லுஸ் ஸுன்னா வல் ஜமாஆவுடைய அறிஞர்கள் வழிகாட்டுதலை தெளிவாக பின்பற்றுங்கள். 
 
ஷேக் அப்துல் காதிர் ஜீலானி (ரஹி) அவர்களுடைய கிதாபை நீங்கள் படியுங்கள். இந்த மவ்லூது கிதாபை நீங்கள் தூக்கி எறிந்து விடுங்கள். முதலாவது இது யார் எழுதியது என்றே தெரியாது. இரண்டாவது, இதில் எழுதப்பட்டிருக்கக்கூடிய சம்பவங்கள் எல்லாம் இட்டுக்கட்டப்பட்ட, புனையப்பட்ட, ஆதாரமற்ற சம்பவங்கள். இந்த சம்பவங்களை மக்களுக்கு மத்தியிலே பரப்பாதீர்கள். ஹதீஸிலே உள்ள ஸஹீஹான சம்பவங்களை மக்களுக்கு மத்தியிலே பரப்புங்கள்! 
 
அவ்லியாக்களை நாம் அவமதிக்கவில்லை. அவ்லியாக்களை உண்மையாக உயர்த்துவது என்றால் அவர்கள் எந்த ஒரு தூய தவ்ஹீதுடைய பணியை செய்தார்களோ, சுன்னாவை பரப்பக்கூடிய பணியை செய்தார்களோ அதை செய்வது தான் நம்முடைய கடமை. அதுதான் அந்த இறை நேசர்களை மதிப்பது; அவர்களுக்காக துஆ செய்வது; அவர்கள் விட்டுச் சென்ற கல்வியை மக்களிடத்திலே பரப்புவது. இதுதான் நாம் அவர்களுக்கு செய்யக்கூடிய அன்பு. இதுதான் நாம் அவர்கள் மீது வைத்திருக்கக்கூடிய அன்பு. 
 
அதை விட்டு விட்டு அவர்கள் பெயரால் மக்களை மயக்கி மக்களை அவர்களுடைய அடிமைகளாக்கி, அந்த மக்களை தரீக்காக்களின் பெயரால் அவர்கள் மூலமாக வருவாய் காண்பது, அவர்களை தங்களுடைய பக்தர்களாக ஆக்கிக் கொண்டு இந்த பூசாரிகளும், துறவிகளும், சாமியார்களும், சன்னியாசிகளும் செய்வதைப் போன்று மூளையை மழுங்கச் செய்து அல்லாஹ்விடமிருந்து அவர்களை திருப்பி வழிகேட்டிலே தள்ளுவது உங்களுக்கு அழகல்ல! 
 
நீங்கள் கல்வி படித்தவர்களாக இருந்தால், குர்ஆனை மக்களுக்கு சொல்லுங்கள்; அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழையுங்கள்; அல்லாஹ்வை வணங்குவதற்கு மக்களை ஆர்வமூட்டுங்கள்; அல்லாஹ்வை திக்ரு செய்வதற்கு ஆர்வமூட்டுங்கள்; குர்ஆனை ஓதுவதற்கு நீங்கள் ஆர்வமூட்டுங்கள்; ஹதீஸுகளை படிப்பதற்கு, நஃபிலான வணக்க வழிபாடுகளுக்கு ஆர்வமூட்டுங்கள். 
 
அதை விட்டு விட்டு அப்துல் காதிர் ஜீலானியை அழைக்கச் சொல்கிறீர்களே? இது எவ்வளவு பெரிய அநியாயம்! எவ்வளவு பெரிய அக்கிரமம் இது! அல்லாஹ் உடைய மார்க்கத்திற்கு நீங்கள் செய்யக்கூடிய துரோகம்! ஆலிம் என்ற பெயரில் இந்த உம்மத்திற்கு செய்யக்கூடிய அநியாயம் இது! 
 
ஆகவே அல்லாஹ்வை அஞ்சிக் கொண்டு இதுபோன்ற தவறான முறையில் மக்களை வழிகெடுப்பதில் இருந்து நீங்கள் விலகிக் கொள்ள வேண்டும் என்று ஆதரவு வைத்து இந்த சிறிய தொகுப்பை நிறைவு செய்கிறோம். 
 
அல்லாஹு தஆலா நேர்வழியிலே நம்மை உறுதிபடுத்துவானாக! சிறிய பெரிய பாவங்களை விட்டும் ஷிர்க்கான, குஃப்ரான, இணைவைத்தலான, நயவஞ்சகமான எல்லா செயல்களை விட்டும் அல்லாஹு தஆலா என்னையும் உம்மத்தையும் பாதுகாப்பானாக! வழிகேட்டிலிருந்தும் வழிகெடுக்கக் கூடியவர்களிலிருந்தும் அல்லாஹு தஆலா நம்மை பாதுகாப்பானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عُثْمَانَ بْنِ كَرَامَةَ، حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ بِلاَلٍ، حَدَّثَنِي شَرِيكُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي نَمِرٍ، عَنْ عَطَاءٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ اللَّهَ قَالَ: مَنْ عَادَى لِي وَلِيًّا فَقَدْ آذَنْتُهُ بِالحَرْبِ، وَمَا تَقَرَّبَ إِلَيَّ عَبْدِي بِشَيْءٍ أَحَبَّ إِلَيَّ مِمَّا افْتَرَضْتُ عَلَيْهِ، وَمَا يَزَالُ عَبْدِي يَتَقَرَّبُ إِلَيَّ بِالنَّوَافِلِ حَتَّى أُحِبَّهُ، فَإِذَا أَحْبَبْتُهُ: كُنْتُ سَمْعَهُ الَّذِي يَسْمَعُ بِهِ، وَبَصَرَهُ الَّذِي يُبْصِرُ بِهِ، وَيَدَهُ الَّتِي يَبْطِشُ بِهَا، وَرِجْلَهُ الَّتِي يَمْشِي بِهَا، وَإِنْ سَأَلَنِي لَأُعْطِيَنَّهُ، وَلَئِنِ اسْتَعَاذَنِي لَأُعِيذَنَّهُ، وَمَا تَرَدَّدْتُ عَنْ شَيْءٍ أَنَا فَاعِلُهُ تَرَدُّدِي عَنْ نَفْسِ المُؤْمِنِ، يَكْرَهُ المَوْتَ وَأَنَا أَكْرَهُ مَسَاءَتَهُ " (صحيح البخاري 6502 -)
 
குறிப்பு 2)
 
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الْعَلَاءِ الْهَمْدَانِيُّ - وَاللَّفْظُ لِيَحْيَى، قَالَ يَحْيَى: أَخْبَرَنَا وقَالَ الْآخَرَانِ: حَدَّثَنَا - أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا، نَفَّسَ اللهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ، وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ، يَسَّرَ اللهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَمَنْ سَتَرَ مُسْلِمًا، سَتَرَهُ اللهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَاللهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ، وَمَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا، سَهَّلَ اللهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ، وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللهِ، يَتْلُونَ كِتَابَ اللهِ، وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ، إِلَّا نَزَلَتْ عَلَيْهِمِ السَّكِينَةُ، وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَحَفَّتْهُمُ الْمَلَائِكَةُ، وَذَكَرَهُمُ اللهُ فِيمَنْ عِنْدَهُ، وَمَنْ بَطَّأَ بِهِ عَمَلُهُ، لَمْ يُسْرِعْ بِهِ نَسَبُهُ»، (صحيح مسلم 38 - (2699)
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/