HOME      Khutba      ரமழானை ஆர்வத்தோடு ஆசையோடு வரவேற்போம்!! | Tamil Bayan - 669   
 

ரமழானை ஆர்வத்தோடு ஆசையோடு வரவேற்போம்!! | Tamil Bayan - 669

           

ரமழானை ஆர்வத்தோடு ஆசையோடு வரவேற்போம்!! | Tamil Bayan - 669


ஜுமுஆ குத்பா தலைப்பு : ரமழானை ஆர்வத்தோடு ஆசையோடு வரவேற்போம்!!

வரிசை : 669

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 2-4-2021 | 20-8-1442

بسم الله الرحمن الرّحيم

ரமழானை ஆர்வத்தோடு ஆசையோடு வரவேற்போம்!!

إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! கண்ணியத்திற்குரிய சகோதரர்களே!

சகோதரிகளே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றிப் புகழ்ந்தும், அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்த தூதரின் குடும்பத்தார் மற்றும் தோழர்களின் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று சாட்சி கூறியவனாக,

முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அல்லாஹ்வுடைய அடியாராகவும் தூதராகவும் இருக்கின்றார் என்று சாட்சி கூறியவனாக, உங்களுக்கும் எனக்கும் தக்வாவை உபதேசம் செய்தவனாக, அல்லாஹ்வுடைய பயத்தை நினைவூட்டியவனாக, இம்மை மறுமை வெற்றிக்காக துஆ செய்தவனாக, இந்த குத்பாவை ஆரம்பம் செய்கின்றேன்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக!

வணக்க வழிபாடுகளை பேணி, அல்லாஹ்வுடைய பயத்தோடு இக்லாஸோடு செய்யக்கூடிய தவ்ஃபீக்கை எனக்கும் உங்களுக்கும் அருள்வானாக!

அல்லாஹு தஆலா அவனுடைய நல்லடியார்களுக்கு கொடுக்கக்கூடிய வாய்ப்புகளை,

சந்தர்ப்பங்களை பயன்படுத்தி ஈமானையும், தக்வாவையும், ஈமானையும், இபாதத்தையும், செய்யக்கூடிய பாக்கியத்தை எனக்கும் உங்களுக்கும் அல்லாஹு தஆலா தந்தருள்வானாக!

வரக்கூடிய ரமழானை பெற்று அந்த ரமழானில் அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும்

வழிகாட்டி இருக்கின்றபடி இபாதத்துகளை செய்வதற்கும், நன்மைகளை செய்வதற்கும், தான

தர்மங்களை செய்வதற்கும், அல்லாஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் உதவி செய்வானாக! நல்லருள் புரிவானாக! ஆமீன்.

அல்லாஹ்வுடைய அடியார்களே! சகோதரர்களே! சகோதரிகளே! ரமழானுடைய கண்ணியத்தை ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து நாம் கேட்டுத்தான் வருகின்றோம். இருந்தாலும் நம்முடைய மறதியின் நிலைமை எப்படி என்றால்? சென்ற ஜுமுஆ குத்பாவிலே என்ன கேட்டோம் என்பதையே மறந்து விடுகின்றோம்.

இப்படியாக மறதி நம்மோடு பின்னி பினைந்து இருக்கின்ற காரணத்தால்

ஒவ்வொரு ஆண்டும் ரமழான் வருவதற்கு முன்பாக ரமழானை பற்றிய நினைவூட்டுதலை செய்வது

அறிஞர்களுடைய வழக்கமாக இருந்து வருவதை பார்க்கின்றோம்.

وَذَكِّرْ فَإِنَّ الذِّكْرَىٰ تَنْفَعُ الْمُؤْمِنِينَ

(நபியே!) நீர் நல்லுபதேசம் செய்வீராக! நிச்சயமாக நல்லுபதேசம் நம்பிக்கையாளர்களுக்கு பலனளிக்கும்(அல்குர்ஆன் 51:55)

என்று அல்லாஹு தஆலா கூறுகின்றான்.

அந்த அடிப்படையிலேயே அல்குர்ஆனும், அல்ஹதீஸும் ரமழானை பற்றி, நோன்பை பற்றி நமக்கு கூறக்கூடிய நல்ல உபதேசங்களை இந்த குத்பாவிலே எனக்கும் உங்களுக்கும் எடுத்துக் கூறி, அதன் மூலமாக நல்ல நினைவூட்டலை செய்து கொள்ள விரும்புகின்றேன்.

அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா அருள் புரிவானாக!

கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! முதலாவதாக ரப்புல் ஆலமீன் இந்த மாதத்துடைய கண்ணியத்தை நமக்கு அழகாக எடுத்துக் கூறுவதைக் கவனிப்போம்.

ரப்பு கூறுகின்றான் :

شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَىٰ وَالْفُرْقَانِۚ

ரமழான் மாதம்: அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழியாகவும் நேர்வழி மற்றும் பிரித்தறிவிப்பதின் தெளிவான சான்றுகளாகவும் அல் குர்ஆன் இறக்கப்பட்டது. (அல்குர்ஆன் 2:185)

ரமழான் மாதம், ரமழான் மாதத்தினுடைய இந்த பெயரோடு ஷஹ்ர் என்று சேர்த்து சொல்கின்றான், ரமழான் மாதம் என்று.

இதைக் குறித்து அறிஞர்கள் சொல்கிறார்கள். அல்லாஹு தஆலா ரமழானை சிறப்பிப்பதற்காக இந்த ரமழான் என்ற வார்த்தையோடு ஷஹ்ரு - மாதம் என்ற வார்த்தையை சேர்த்து இவ்வாறு அல்லாஹு தஆலா குறிப்பிடுகின்றான்.

அதாவது, அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இந்த ரமழானை சிறப்பிக்க நாடி, கண்ணியப்படுத்த நாடி வெறும் அதனுடைய பெயரை மட்டும் குறிப்பிடாமல் 'ஷஹ்ரு ரமழான்' ரமழான் மாதம் என்று அல்லாஹு தஆலா அழகாக வர்ணிக்கிறான்.

பிறகு, இந்த மாதம் எப்படிப்பட்டது என்று உங்களுக்கு தெரியுமா?

இந்த மாதம் எப்படிப்பட்டது  என்றால்இதில்தான் குர்ஆன் இறக்கப்பட்டது.

என்று குர்ஆன் இறக்கப்பட்ட மாதம் ரமழான் மாதம் என்று இந்த மாதத்தின் கண்ணியத்தை, சிறப்பை, உயர்வை, மதிப்பை அல்லாஹு தஆலா நமக்கு வெளிப்படுத்துகின்றான்.

எப்படி குர்ஆனிற்கு கண்ணியம் இருக்கின்றதோ, அது போன்று இந்த குர்ஆன் இறக்கப்படுவதற்காக முதன்முதலாக தேர்ந்தெடுக்கப்பட்ட மாதமாகிய இந்த ரமழான் மாதத்திற்கும் கன்னியம் உண்டு.

ரமழான் மாதத்தின் சிரப்புகள் பற்றி பல ஹதீஸ்கள் வருவதைப் பார்க்கின்றோம்.

இந்த ரமழான் மாதம் அல்லாஹ்வுடைய வேதங்களுக்காகவே reserve செய்யப்பட்ட மாதம். ரமழான் மாதம் குர்ஆனுக்கு மட்டுமல்ல. முந்தைய நபிமார்களுக்கு இறக்கப்பட்ட வேதங்களுக்காகவும் முந்தைய நபிமார்களுக்கு இறக்கப்பட்ட ஸுஹுஃபுகளுக்காகவும் அல்லாஹு தஆலா இந்த ரமழான் மாதத்தை reserve  செய்துவிட்டான்.

இந்த ரமழான் மாதம்  அல்லாஹ்வுடைய கலாம் - பேச்சு பூமியில் இறங்குவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்டு, முதலாவதாக இந்த மாதத்தில் தான் குர்ஆன் இறக்கப்படுகிறது. பிறகு அடுத்தடுத்து அந்தந்த வாய்ப்புகளுக்கு ஏற்ப, அந்த சூழ்நிலைகள், சந்தர்ப்பங்களுக்கு ஏற்ப

அல்லாஹு தஆலா அவனுடைய கலாமை பூமியில் இறக்கி கொண்டே இருந்தான்.

ரப்பு சொல்கின்றான் :

هُدًى لِلنَّاسِ

இந்த குர்ஆன் மக்களுக்கு நேர்வழி காட்டக் கூடியது. (அல்குர்ஆன் 2:185)

وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَىٰ

நேர்வழியில் அத்தாட்சிகளை கொண்டது.

உங்களுக்கு என்னென்ன விஷயங்களில் எது சரியான வழி என்று நீங்கள் அறிய வேண்டுமா? புரிய வேண்டுமா? அதற்குரிய ஆதாரம் வேண்டுமா? இந்த குர்ஆன் உங்களுக்கு போதும்.

وَالْفُرْقَانِ

அசத்தியத்தை சத்தியத்திலிருந்து பிரித்துவிடும். சத்தியத்தை அசத்தியத்தில் இருந்து பிரித்து, எது அசத்தியம்? எது சத்தியம்? எது உண்மை? எது பொய்? எது ஹக்? எது பாத்தில்? என்று உங்களுக்கு தெளிவுபடுத்தக் கூடிய வேதம் இந்த அல்குர்ஆன்.

இந்த அல்குர்ஆனிலே எந்த மூடலும் எந்த மறைத்தலும் இல்லை. அல்லாஹ்வின் அடியார்களே! இப்படி குர்ஆனுடைய உயர்வை, குர்ஆனுடைய புகழை எடுத்துக்கூறி அத்தகைய குர்ஆன் இறக்கப்பட்ட அதற்கான இந்த மாதத்தின் மதிப்பை நீங்கள் உணருங்கள் என்று அல்லாஹ் சுட்டிக் காட்டுகின்றான்.

குர்ஆன் ஏன் இறக்கப்பட்டது?

இன்று பலர் நினைத்திருப்பது போன்று அல்ல. தர்காக்களிலே சென்று யாஸீன் ஓதுவதற்காக. கப்ருகளுக்கு சென்று கத்தம் ஃபாத்திஹா ஓதுவதற்காக அல்ல.

இறந்தவர்களுக்காக வாரத்தில் ஒரு முறையோ, அல்லது மாதத்திலோ, அல்லது 40என்றோ, அல்லது வருட ஃபாத்திஹா என்றோ, குர்ஆன் ஓதக்கூடிய நான்கு ஹாஃபிள்களை வைத்துக் கொண்டு உணவு ஏற்பாடு செய்து கத்தம் செய்து, ஈசால் சவாப் செய்வதற்காக அல்ல.

யூதர்கள் எப்படி தங்களுடைய வேதங்களை சடங்குகளுக்காக ஆக்கிக் கொண்டார்களோ, அது போன்று இந்த உம்மத்திலே ஒரு கூட்டம் இந்த குர்ஆனை சடங்குகளுக்காக மாற்றிவிட்டது.

கடை திறப்பது என்றால் குர்ஆன் ஓதுவது, வீடு குடியேறுவதற்கு குர்ஆன் ஓதுவது, இறந்துவிட்டவருக்கு குர்ஆன் ஓதுவது (இப்படியாக சடங்குகளுக்காக குர்ஆனை ஆக்கிவிட்டார்கள்).

இன்னும் இதிலும் கேடுகெட்ட ஒரு நிலை இருக்கின்றது. ஒரு கூட்டம் குர்ஆனை இறந்துவிட்டவர்களுக்காக மட்டும் ஓடுவது என்று ஆக்கி கொண்டு, சுப காரியங்களுக்காக, மகிழ்ச்சியான, சந்தோஷமான நற்காரியங்கள் என்று சிலதை ஒதுக்கி அங்கே குர்ஆன் ஓதக் கூடாது. அங்கே மௌலூது ஓத வேண்டும் என்று வைத்து இருக்கின்றார்களே! இது வழிகேடு இன்னும் மிகப்பெரிய வழிகேடு. அல்லாஹ் பாதுகாப்பானாக.

சகோதரர்களே! குர்ஆன் இதற்காக இறக்கப்படவில்லை. அல்லாஹ்வுடைய வேதம் சடங்குகளுக்கு ஓதுவதற்காக இறக்கப்படவில்லை. அல்லாஹ்வுடைய வேதம் அதன்படி அமல் செய்வதற்காக இறக்கப்பட்டது.

هُدًى لِلنَّاسِ

(அல்குர்ஆன் 2:185)

நேர்வழியை அறிவதற்காக, அல்லாஹ்வுடைய தக்வாவை நாம் அதிலிருந்து பெறுவதற்காக, ஹலால் ஹராமை கற்பதற்காக, அல்லாஹ்விற்கு எது பிடிக்கும்? எது பிடிக்காது? மறுமையின் சொர்க்கத்தின்பாதை எது? நரகத்தின் பாதை எது? என்று தெளிவாக அறிந்து, சொர்க்க பாதையில் நாம் நடப்பதற்காக, அமல்களை நாம் தெரிந்து கொள்வதற்காக, அல்குர்ஆன் இறக்கப்பட்டது.

அல்குர்ஆன் சடங்குகளுக்காக இறக்கப்படவில்லை.

தொழுகையில் அந்த குர்ஆனை ஓதி உள்ளச்சத்தை அதிகப்படுத்துவதற்காக குர்ஆன் இறக்கப்பட்டது.

الَّذِينَ آتَيْنَاهُمُ الْكِتَابَ يَتْلُونَهُ حَقَّ تِلَاوَتِهِ أُولَٰئِكَ يُؤْمِنُونَ بِهِ ۗ وَمَنْ يَكْفُرْ بِهِ فَأُولَٰئِكَ هُمُ الْخَاسِرُونَ

(நபியே!) எவர்களுக்கு நாம் வேதத்தைக் கொடுத்தோமோ அவர்கள் அதை, ஓதுவதின் முறைப்படி (அறிந்து) அதை ஓதுகிறார்கள். அவர்கள் அதை நம்பிக்கை கொள்கிறார்கள். எவர்கள் அதை நிராகரிப்பார்களோ அவர்கள்தான் நஷ்டமடைந்தவர்கள்.(அல்குர்ஆன் 2:121)

முஃமின்கள் காலை மாலை அல்லாஹ் உடைய வேதத்தை ஓதுவார்கள். ஓதி அதனுடைய பொருளை உணர்ந்து தக்வாவை அதிகப்படுத்தி கொள்வார்கள்.

சகோதரர்களே! குர்ஆன் இதற்காக இறக்கப்பட்டது.

பிறகு அல்லாஹ் என்ன செய்கின்றான்? இந்த குர்ஆனை கொண்டு தக்வாவை பெறுவதற்காக இந்த குர்ஆனை கொண்டு உள்ளத்தை மென்மை படுத்துவதற்காக இந்த குர்ஆனை அல்லாஹ் இறக்கினான்.

ஏன்? கடினமான உள்ளம் எந்த உபதேசத்தையும் ஏற்காது. உள்ளம் இறுகி இருந்தால், உள்ளத்தில் அல்லாஹ்வுடைய பயம் இல்லை என்றால், அல்லாஹ்வைப் பற்றி இன்னும் மறுமையைப் பற்றி நினைவூட்டும் போது உள்ளத்தில் நடுக்கம் வரவில்லை என்றால், ஒருவிதமான பயம் உள்ளத்தை சூழவில்லை என்றால், அந்த உள்ளம் உபதேசங்களை ஏற்காது.

فَوَيْلٌ لِلْقَاسِيَةِ قُلُوبُهُمْ مِنْ ذِكْرِ اللَّهِ ۚ أُولَٰئِكَ فِي ضَلَالٍ مُبِينٍ

அல்லாஹ்வின் நினைவை விட்டு உள்ளங்கள் இருகியவர்களுக்கு நாசம் உண்டாகட்டும். அவர்கள் தெளிவான வழிகேட்டில் இருக்கின்றனர். 

 (அல்குர்ஆன் : 39:22)

அல்லாஹ்வுடைய நினைவு கூறப்படும் போது எந்தவிதமான மாற்றமும் இல்லாமல், எந்த விதமான உணர்வுகளையும் பெறாமல் இறுகி இருக்கக்கூடிய உள்ளங்களுக்கு நாசம் உண்டாகட்டும்.

"அல்லாஹ் அக்பர்" ரப்பு சபிக்கின்றான்.

அல்லாஹ்வுடைய நினைவு கூறப்படும் போது பயம் வராமல், அச்சம் வராமல், உணர்வு வராமல், அல்லாஹ்வின் மீது அன்பு வராமல், அல்லாஹ்வின் மீது பயம் வராமல், அல்லாஹ்வின் மீது பாசம் வராமல், இறுகி இருக்கக்கூடிய உள்ளங்களுக்கு நரகத்தின் கேடு உண்டாகட்டும்.

சகோதரர்களே! ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் உபதேசம் செய்தால் அவர்களும் அழுவார்கள். அதை கேட்கின்ற தோழர்களும் அழுவார்கள். (பார்க்க )

இன்று நம்முடைய நிலையைப் பாருங்கள்.

சொர்க்கத்தைப் பற்றி நினைவூட்டும் போது, நரகத்தைப் பற்றி அல்லாஹ்வுடைய தூதர்

நினைவூட்டும் போது தோழர்கள் தேம்பித் தேம்பி அழுதார்கள். (பார்க்க)

இன்று பல இடங்களில் சொர்க்கத்தைப் பற்றி நரகத்தைப் பற்றி பேசும் போது முன்னால் இருக்கின்றசிலர் கேட்கின்றார்கள். ஆனால், ஆங்காங்கே அமர்ந்து கொண்டிருப்பவர்கள் கதைகளைப் பேசிக் கொண்டிருக்கின்றார்கள். சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்று பலருடைய நிலைமையாக இருக்கின்றது.

இந்த குர்ஆனைக் கொண்டு ஹிதாயத் பெற வேண்டும் என்றால் தக்வா தேவை. அந்த தக்வாவை

வரவைப்பதற்கு அல்லாஹு தஆலா இந்த ரமழான் மாதத்தில் கட்டாயமாக நீங்கள் நோன்பு வைக்க வேண்டும் என்று கூறுகின்றான்.

குர்ஆன் உங்களுடைய உள்ளங்களில், உங்களுடைய வாழ்க்கையில், உங்களுடைய

இபாதத்துகளில், உங்களுடைய பொருளாதாரங்களில், உங்களது குடும்ப வாழ்க்கையில் அல்லாஹ்விரும்பக்கூடிய மாற்றங்களை உண்டாக்க வேண்டும் என்றால் உங்களுக்கு தக்வா தேவை.

தக்வா தேவை என்றால் நீங்கள் நோன்பு கண்டிப்பாக வைக்க வேண்டும். குறைந்தது ஓர் ஆண்டில் ஒரு மாதத்தில், ஆண்டில் ஒரு முறையாவது ஒரு மாதம் முழுக்க நோன்பிருந்து இந்த தக்வாவை உங்களுடைய உள்ளங்களில் வர வைப்பதற்காக நீங்கள் பயிற்சி எடுக்க வேண்டும்.

சகோதரிகளே! நாம் நினைப்பது போன்று அல்ல. ரமழான் வருகின்றது. நோன்பு வைப்பது முஸ்லிம்களுடைய சடங்கு சம்பிரதாயம் என்று.

அல்லது மக்கள் கூறுவதை போன்று அல்ல. மாற்றார்கள் கூறுவதை போன்றுதான் இன்று

நம்முடைய நிலைமை மாறி கொண்டே இருக்கின்றது.

நோன்பு மாதம் வருகின்றது. பாய்கள் (முஸ்லிம்கள்) எல்லாம் நோன்பு வைப்பார்கள். அவர்கள் விரதம் இருப்பதை போல ஒரு சடங்காக நாம் செய்வதை கற்பனை செய்கின்றார்கள் அல்லவா?

இதுதான் இன்று பலருடைய நிலைமை. ஆகவேதான், நோன்பு மாதம் வருகின்றது என்று

நோன்பிற்கு முன்னரே நோன்பிற்கான shoppingல் இறங்குவதை  பார்க்கின்றோம். நோன்பிற்கான

shopping-ல் இறங்க கூடியவர்களை பார்க்கின்றோம்.

உண்பதற்கான shopping, உடுத்துவதற்கான shopping, ரமழானை வரவேற்பதற்காக மஸ்ஜிதுகளிலே

paint அடிப்பவர்கள் எத்தனை பேர்? இன்னும் வீடுகளை (உலக பொருள்களைக் கொண்டு) தயார்

செய்கிறார்கள் (அலங்கரிக்கிறார்கள்).

எதற்காக அந்த மாதம் வருகின்றதோ, அதை எப்படி கண்ணியப்படுத்தி வரவேற்க வேண்டும் என்று அல்லாஹ்வுடைய தூதர் கூறினார்களோ, அந்த வழி காட்டுதல் சென்றுவிட்டது (மறைந்து விட்டது).

ரமழானிற்கு முன்பாக நோன்பிருந்து ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரமழானை

வரவேற்பார்கள். குர்ஆனை அதிகம் ஓதி வரவேற்பார்கள்.

ரமழானிற்கு முன்பாக நோன்பிருந்து ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரமழானை வரவேற்பார்கள். குர்ஆனை அதிகம் ஓதி வரவேற்பார்கள். ரமழானிற்காக ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏக்கத்தோடு எதிர்பார்த்து ஷஅபான் உடைய பிறையை எண்ணிக் கொண்டிருப்பார்கள்.

இன்று எத்தனை பிறை முடிந்துவிட்டது. நாளை, நாளை, நாளை என்று ஒவ்வொரு பிறையாக எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். பிறகு ரமழான், அந்த ஷஅபானுடைய 29வது பிறை முடிந்துவிட்டால்….

பிறையை தேடுங்கள் பிறையை பாருங்கள் என்று தோழர்களுக்கு கட்டளை இடுவார்கள்.தானும் பிறையை பார்க்க முயற்சி செய்வார்கள்.[i]

இப்படியாக ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய எதிர்பார்ப்பு இருந்தது.

ரமழானிற்கு முன்பே ஒரு குத்பாவில் அல்லது அதற்கு முந்தைய குத்பாவில் ரமழான் குறித்த

 சிறப்புகளை சொல்லி ஸஹாபாக்களின் உள்ளங்களிலே ஆர்வங்களை, அந்த ஆசைகளை,

ரமழானை வரவேற்பதற்குண்டான தேடலை, பிரியத்தை உண்டாக்குவார்கள்.

சகோதரர்களே! ரமழானுக்கு முன்பு ரமழானுக்காக shopping. ரமழான் வந்துவிட்டால் 27ஆம்

கிழமைக்கான shopping, பிறகு பெரு நாளுக்கான shopping.

பலருக்கு வியாபாரத்திற்கான மாதமாகவும் இந்த  மாதம் இருக்கின்றது. பலருக்கு விருந்து

கொடுப்பதற்கும், விருந்திற்கு செல்வதற்கும் இந்த ரமழான் மாதம் மாறி இருக்கின்றது.

இது, கைசேதத்திற்கும் கவலைக்கும் உரிய செய்தி சகோதரர்களே! அல்லாஹு அக்பர்.

அல்லாஹு தஆலா கூறுகின்றான் :

فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُۖ

ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தில் (உள்ளூரில்) தங்கி இருப்பாரோ அவர் அதில் நோன்பு நோற்கவும்.(அல்குர்ஆன் 2:185)

இந்த குர்ஆனை கொண்டு உங்களை நீங்கள் மாற்ற வேண்டும்.

எல்லாவகையிலும் நாம் மாறவேண்டும்.

நம்முடைய அகீதா மாறவேண்டும். நம்முடைய அக்லாக் - குணங்கள் மாறவேண்டும்.

நம்முடைய இபாதத் அல்லாஹ்விற்கான இபாதத்தாக இருக்கின்றதா?

قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ

(அல்குர்ஆன் 23:1-2) தொழுகையில் உள்ளச்சத்தோடு இருக்கின்ற தொழுகையாளி தான் வெற்றியாளர் என்று

அல்லாஹ் சொல்கின்றானே!

எனது உள்ளத்திலே எந்த அளவிற்கு உள்ளச்சம் வந்திருக்கின்றது?

وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ

(தொழுகையில்) அல்லாஹ்வுக்குப் பணிந்தவர்களாக நில்லுங்கள்.(அல்குர்ஆன் 2:238)

அல்லாஹ்விற்கு முன்னால் நிற்கும் போது பணிந்து, பணிவோடு, பயத்தோடு நில்லுங்கள் என்று

அல்லாஹ் கூறினானே!

எந்த அளவு எனது உள்ளத்தில் அல்லாஹ்விற்கு முன்னால் பணிவு வந்திருக்கின்றது என்று நாம்

பரிசோதனை செய்கின்றோமா?

கொள்கை, அக்லாக், இபாதத், முஆமலாத் – கொடுக்கல் வாங்கல், நம்முடைய குடும்ப வாழ்க்கை கணவன், மனைவி, கணவன் பெற்றோர், பிள்ளை என்று அந்த

அன்பான, சுமூகமான நல்லுறவோடு உள்ள வாழ்க்கை, குடும்ப வாழ்க்கையை எந்த அளவு

பேணுகின்றோம்?

நமது பொருளாதாரத்தில் மாற்றம் வர வேண்டும், இப்படியாக நம்முடைய முழு வாழ்க்கையிலும் குர்ஆன் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

அந்த மாற்றம் வருவதற்கு தக்வா தேவை.

தக்வாவிற்கு இந்த ரமழான் தேவை. நோன்பு தேவை.

அல்லாஹு தஆலா கூறுகின்றான் :

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக, உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டது.(அல்குர்ஆன் 2:183)

முஃமின்களே! உங்களுக்கு நோன்பு கடமையாக்கப்பட்டுள்ளது. உங்களுக்கு மட்டும் என்று எண்ணி இதை சிரமமாக எடுக்காதீர்கள். உங்களுக்கு முன் இருந்தவர்களுக்கும் நோன்பு கடமையாக்கப்பட்டிருந்தது.

என்று அல்லாஹு தஆலா நமக்கு ஆறுதல் சொல்கின்றான்.

நேரடியாக அல்லாஹ் சொல்லியிருக்கலாம். நீங்கள் ரமழானிலே கண்டிப்பாக நோன்பு வைத்தே

ஆக வேண்டும். இது கட்டாயமான சட்டம் என்று  சொல்லியிருக்கலாம். (ஆனால், அப்படி சொல்லாமல்) அல்லாஹு தஆலா நமக்கு இபாதத்தின் மீது பிரியத்தை ஏற்படுத்துகின்றான்.

இபாதத்தின் மீது ஆர்வத்தை ஏற்படுத்துகின்றான்.

இந்த கஷ்டமான நோன்பை அல்லாஹு தஆலா நம் மீது கடமையாக்கி அல்லாஹ் சொல்கின்றான் :

يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ

அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுவான். சிரமத்தை நாடமாட்டான்.(அல்குர்ஆன் 2:185)

இந்த கஷ்டமான நோன்பை அல்லாஹு தஆலா உங்களுக்கு கொடுத்து உங்களுக்கு இலகுவை விரும்புகின்றான். காரணம்? இந்த கஷ்டமான நோன்பின் மூலமாக உங்களுக்குள் தக்வா வந்து, ஹலால், ஹராமை புரிந்து,

ஹலாலை கொண்டு போதுமாக்கி, ஹராமை விட்டு விலகி வாழ்ந்தால் கடினமான, கஷ்டமான நரக நெருப்பிலிருந்து நீங்கள் உங்களை பாதுகாக்கலாம். மறுமையின் கஷ்டத்தில் இருந்து உங்களை பாதுகாத்துக் கொள்ளலாம்.

ஆகவே மறுமையின் வேதனை கஷ்டமானதா? அல்லது ரமழானுடைய நோன்பு கஷ்டமானதா?

என்று இப்போதே முடிவு செய்ய வேண்டும்.

யார் இடத்திலாவது கேட்டால், ரமழானிலே நோன்பு இருப்பது கஷ்டமா? அல்லது மறுமையின் வேதனை கஷ்டமானதா? என்று

எந்த கஷ்டத்தை உன்னால் தாங்க முடியும்? அடியார்களே இந்த கஷ்டத்தை தாங்குவது இலகுவானது. மறுமையின் கஷ்டத்தை யாராலும் தாங்க முடியாது.

அல்லாஹுதஆலா சொல்கின்றான் :

நமக்கு இபாதத்தைக் கூறி அந்த இபாதத்தின் மீது நமக்கு பிரியத்தை உண்டாக்குகின்றான்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا

(அல்குர்ஆன் 2:183)

என்னை நம்பிக்கை கொண்ட முஃமின்களே! என்று அவன் மீது நமக்கு பிரியத்தை ஏற்படுத்துகின்றான்.

அவன் மீது நமக்கு ஆர்வத்தை தூண்டுகின்றான்.

وَإِلَىٰ رَبِّكَ فَارْغَبْ

நபியே உமது இறைவனின் மீது ஆர்வப் படுவீராக. (அல்குர்ஆன் 94:8)

உன்னுடைய இறைவனுக்கு முன்னால் நிற்பதற்கு, உன்னுடைய இறைவனுடைய வேதத்தை ஓதுவதற்கு, உனது தர்மத்தைக் கொண்டு உன்னுடைய ரப்பை நெருங்குவதற்கு ஆர்வப்படுவீராக!

நமக்கு பிரியமான ஒருவரை சந்திப்பதாக இருந்தால், அவர் குணத்தால் நல்லவர், விட்டுக் கொடுப்பவர், பொறுமையாளர், நம்முடைய குறைகளை மன்னிப்பவர், நம்முடைய நிறைகளை கொண்டு நம்மை புகழ்பவர், இப்படியாக ஒரு நண்பர் நமக்கு அமைந்தால்,இன்னும் அவர் அவருடைய செல்வத்தைக் கொண்டு நம்மை அரவணைத்துக் கொள்பவர், நம்முடைய செல்வத்தை நம்மிடத்திலிருந்து எதிர்பார்க்காதவர், நாம் கேட்டால் மகிழ்ச்சி அடையக் கூடியவர், நமக்கு கஷ்டம் என்றால் ஓடோடி வந்து உதவி செய்யக் கூடியவர்...

இப்படி ஒரு நண்பர் ஒருவருக்கு கிடைத்தால், அந்த நண்பரை பார்ப்பதற்கு, வரவேற்பதற்கு, அந்த நண்பரோடு அமர்வதற்கு, அந்த மனிதர் எவ்வளவு ஆசையோடு, எதிர்ப்பார்ப்போடு இருப்பார்.

சகோதரர்களே! இத்தகைய நண்பர் ஆயிரம் பேர் அமைந்தாலும் அல்லாஹ்வைப் போல் ஆக முடியுமா?

நம்முடைய ரப்பை போன்று ஆக முடியுமா? இந்த எல்லா தன்மைகளும் நம்முடைய ரப்பிடத்திலே நிறைவாக இருக்கின்றது.

இந்த எல்லா தன்மைகளும் நம்முடைய ரப்பிடத்திலே நிரப்பமாக இருக்கின்றது.

ஆயிரம் முறை பாவம் செய்துவிட்டு

"என் ரப்பே! என்னை மன்னித்துவிடு என்று சொன்னால். உடனே அல்லாஹ் சொல்கிறான்.அடியானே!  உன்னை மன்னித்துவிட்டேன்.காலதாமதம் செய்யவில்லை. மன்னிப்பது மட்டுமல்ல. அந்தப் பாவங்களை எல்லாம் உனது ஏட்டிலிருந்து அழித்து விட்டேன் என்று அல்லாஹ் சொல்கின்றான். [ii]

قُلْ يَا عِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَىٰ أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ ۚ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا ۚ إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ

(நபியே!) கூறுவீராக! தங்கள் மீது வரம்புமீறிய என் அடியார்களே! (பாவங்கள் செய்து தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொண்டவர்களே!) அல்லாஹ்வின் கருணையில் இருந்து நிராசை ஆகாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் எல்லாப் பாவங்களையும் மன்னிப்பான் (அடியான் திருந்தி, மன்னிப்புக் கேட்டுவிட்டால்). நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன்.(அல்குர்ஆன் 39:53)

وَاسْأَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِۗ

அல்லாஹ்விடம் அவன் அருளிலிருந்து கேளுங்கள். (அல்குர்ஆன் 4:32)

உங்களுக்கு என்ன தேவை? ஆட்சி தேவையா? அதிகாரம் தேவையா? செல்வம் தேவையா? உங்களது நோய்களுக்கான நிவாரணம் தேவையா? உங்களது கவலைகளுக்கான

ஆறுதல் தேவையா? எல்லாம் அல்லாஹ்விடம் இருக்கின்றது அல்லாஹ்விடத்தில் கேளுங்கள்

என்று சொல்கின்றான்.

وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ ۖ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ ۖ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ

உம்மிடம் என் அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால், நிச்சயமாக நான் சமீபமானவன்; என்னை அழைத்தால் அழைப்பவரின் அழைப்புக்குப் பதிலளிக்கிறேன் (எனக் கூறுவீராக). ஆகவே, அவர்கள் நேர்வழி அடைவதற்காக அவர்கள் எனக்குப் பதிலளிக்கவும் (கீழ்ப்படியவும்). என்னையே நம்பிக்கை கொள்ளவும்.(அல்குர்ஆன் 2:186)

என்னை அழைப்பவர் எந்த நேரத்தில் என்னை அழைத்தாலும் சரி, எந்த நிலையில் அழைத்தாலும்

சரி, அவனுடைய அழைப்பிற்கு நான் பதில் தருவேன்.

أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ

அல்லது, எவன் சிரமத்தில் இருப்பவருக்கு -அவர் அவனை அழைக்கும் போது (அவருக்கு)- பதிலளித்து, மேலும், (அவருடைய) துன்பத்தை நீக்குகின்றான்?(அல்குர்ஆன் 27:62)

சிரமத்தில் சிக்கி தவிப்பவன் அழைக்கும் போது என்னைத் தவிர பதிலளிக்க யார் இருக்கின்றார்?

அல்லாஹ் கேட்கின்றான்:

أَلَيْسَ اللَّهُ بِكَافٍ عَبْدَهُۖ

எனது அடியானுக்கு நான் ஒருவன் போதுமானவனாக இல்லையா? (அல்குர்ஆன் 39:36)

 

என்னைத் தவிர வேறு யார் தேவை(உங்களுக்கு உதவுவதற்கு)?

أَإِلَٰهٌ مَعَ اللَّهِ

அல்லாஹ்வுடன் (வணங்கப்படும் வேறு) ஒரு கடவுளா?! (அல்குர்ஆன் 27:60-64)

என்னையன்றி என் அடியாருக்கு  உதவுவதற்கு வேறு யார் கடவுள் இருக்கின்றார்? என்று அல்லாஹ்கேட்கின்றான்.

சகோதரர்களே! அத்தகைய அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா அந்த அருளாளன் அந்த ரஹ்மான் கேட்கின்றான்.

يَا أَيُّهَا الْإِنْسَانُ مَا غَرَّكَ بِرَبِّكَ الْكَرِيمِالَّذِي خَلَقَكَ فَسَوَّاكَ فَعَدَلَكَفِي أَيِّ صُورَةٍ مَا شَاءَ رَكَّبَكَ

மனிதனே! கண்ணியவானாகிய உன் இறைவனைப் பற்றி உன்னை ஏமாற்றியது எது?(அவன்தான்) உன்னைப் படைத்தான்; இன்னும் உன்னைச் சீர்செய்தான்; இன்னும் உன்னை (தான் விரும்பிய உருவத்திற்கு) திருப்பினான்.எந்த உருவத்தில் நாடினானோ (அதில்) உன்னைப் பொறுத்தினான்.(அல்குர்ஆன் 82:6)

என்னைவிட கண்ணியமானவன், என்னைவிட தயாளமானவன், என்னைவிட பொறுமையானவன்,என்னைவிட சகிப்பாளன், என்னைவிட மன்னிப்பவன், உனக்கு யார் இருக்கின்றார்? என்னை விட்டு உன்னை ஏமாற்ற கூடியது யார்? என்னை விட்டு உன்னை மாற்றக் கூடியவர் யார்?

சகோதரர்களே! அந்த அல்லாஹ்வை நெருங்குவதற்கு தக்வா இல்லாமல் முடியாது. குறைஷிபரம்பரையில் பிறந்தாலும் சரி, ஒரு நபியின் பிள்ளையாக இருந்தாலும் சரி, தக்வா இருந்தால்தான் அல்லாஹ்வை நெருங்க முடியும்.

يَا أَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَىٰ وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا ۚ إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ ۚ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ

மக்களே! நிச்சயமாக நாம் உங்களை ஓர் ஆண், ஒரு பெண்ணிலிருந்து படைத்தோம். உங்களை பல நாட்டவர்களாகவும் பல குலத்தவர்களாகவும் நாம் ஆக்கினோம். நீங்கள் (உங்களுக்குள்) ஒருவர் ஒருவரை அறிவதற்காக. நிச்சயமாக உங்களில் அல்லாஹ்விடம் மிக கண்ணியமானவர் உங்களில் அதிகம் இறையச்சமுடையவர்தான். நிச்சயமாக அல்லாஹ் நன்கறிந்தவன், ஆழ்ந்தறிபவன் ஆவான்.(அல்குர்ஆன் 49:13)

நீங்கள் எந்த கல்வி உடையவர்களாக இருந்தாலும் சரி, எந்த ஹலாலான தொழில் செய்பவராக

இருந்தாலும் சரி, உங்களது அழகை அல்லாஹ் பார்க்க மாட்டான். (முஸ்லிம் எண்:2564)[iii]

உங்களது செல்வங்களை அல்லாஹ் பார்ப்பானா? நிச்சயமாக பார்க்க மாட்டான். உங்களது அழகை, தோற்றத்தை அல்லாஹ் பார்க்க மாட்டான்.

நபி சொல்லிவிட்டார்கள், நிச்சயமாக அல்லாஹ் இவற்றை பார்க்க மாட்டான் என்று.

அல்லாஹ் உங்களது கல்பை பார்க்கின்றான்.

இந்தக் கல்பை தக்வாவை கொண்டு நிரப்புங்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸ்ஸலம் சொன்னார்கள் : “தக்வா இங்கே இருக்கின்றது. தக்வா இங்கே இருக்கின்றது.”[iv]

உடைகளைப் பார்த்து ஏமாந்து விட வேண்டாம். மனிதனுடைய பேச்சை பார்த்து ஏமாந்துவிடவேண்டாம். மனிதனுடைய வெளிப்படையான அமல்களைப் பார்த்து ஏமாந்து விட வேண்டாம்.சகோதரர்களே! அந்த அமல் தக்வாவுடைய அமலாக இருந்தால், அவனுடைய வாழ்க்கையிலேமாற்றம் ஏற்படும். அவனுடைய சொல்லிலே, நடையிலே, கொள்கையிலே, அவனுடையவாக்குகளிலே, அவன் பேசக்கூடிய பேச்சுகளிலே மாற்றங்கள் ஏற்படும்.

சிலபேர் எத்தனையோ அமல்களை செய்வார்கள். ஆனால் அவர்களுடைய பேச்சிலே சுத்தம் இருக்காது. அவர்களுடைய வாக்கிலே சுத்தம் இருக்காது. அவர்களோடு உடன்படிக்கை செய்து பார்த்தால், அவர்களோடு கொடுக்கல் வாங்கல் செய்து பார்த்தால் சுத்தம் இருக்காது. அப்போது புரிந்துகொள்ளலாம் அந்த நபர்களைப் பற்றி!

இவை எல்லாம் நயவஞ்சகனின் செயல்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:[v] (புகாரி எண்26:82)

"மூன்று குணங்கள் நயவஞ்சகனின் குணம்.

1. பேசினால் பொய் பேசுவான்.

2. வாக்குக் கொடுத்தால் மாறு செய்வான்.

3. ஒப்பந்தம் செய்தால் மீறுவான்.

அவன் தொழுதாலும், நோன்பு வைத்தாலும், அவன் தன்னை முஸ்லிம் என்று பிதற்றினாலும்

அவன் முனாஃபிக் என்று நபியவர்கள் சொன்னார்களே!

சகோதரர்களே! தக்வா உள்ளத்தில் வரவேண்டும்.

அல்லாஹு தஆலா கூறுகின்றான் :

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அஞ்சுவதற்காக, உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போன்று உங்கள் மீதும் நோன்பு கடமையாக்கப்பட்டது.(அல்குர்ஆன் 2:183)

இந்த நோன்பை அவன் நமக்கு பிரியமாக்கி கொடுத்து, இந்த நோன்பு ஏன் உங்கள் மீது கடமையாக்கப்பட்டது? என்று கூறுகின்றான் :

உங்களை சிரமப் படுத்துவதற்காக அல்ல. உங்களை பட்டினி போடுவதற்காக அல்ல.

உங்களை பலவீன படுத்துவதற்காக அல்ல.உங்களிடத்திலே தக்வா வரவேண்டும். உங்களிடத்திலே தக்வா - அல்லாஹ்வுடைய பயம் வர வேண்டும்.

இந்த பயம் என்றால் சிங்கத்தை பார்த்து பயப்படக்கூடிய பயம் அல்ல. ஒரு பாம்பை பார்த்து பயப்படக்கூடிய ஒரு பயம் அல்ல. ஒரு அநியாயக்கார அரசரை பார்த்து பயப்படக்கூடிய பயம் அல்ல.

இந்த தக்வா, இந்த பயம், இபாதத்தான பயம் ஆகும்.

அல்லாஹ்வின் மீது அன்போடு, பாசத்தோடு, பிரியத்தோடு. பிறகு அல்லாஹ்வின் கண்ணியத்தை, அல்லாஹ்வின் மதிப்பை, அல்லாஹ்வின்  ஜலாலியத்தை, அல்லாஹ்வின் கீர்த்தியை நினைத்து, அல்லாஹ்... அவனுக்கு நான் கீழ்படிந்தால், அவன் எத்தகைய சொர்க்கத்தை, நற்பலன்களை எனக்கு தருவான்;

அவனை நான் மீறினால் அவன் பயங்கரமான தண்டனை வைத்திருக்கின்றனே![vi]  (அல்குர்ஆன் 2:196, 2:211, 5:98)

கடுமையான தண்டனை உடையவன் ஆயிற்றே; அவனுடைய கோபத்தை என்னால் தாங்க முடியாதே என்று பயப்படுவது தக்வா ஆகும்.

இப்படியான பயம் உள்ளத்திலே வரவேண்டும்.

மக்களுக்கு மத்தியிலும் அந்த பயம் இருக்க வேண்டும். தனிமையிலும் இருக்க வேண்டும்.தொழுகையிலும் இருக்க வேண்டும். உள்ளத்திலே அந்த பயம் எப்பொழுதும் தரிப்பட்டு இருக்கவேண்டும்.

அல்லாஹு தஆலா சொல்கின்றான்:

لَعَلَّكُمْ تَتَّقُونَ

(அல்குர்ஆன் 2:183)

அத்தையை தக்வா, உங்களுக்கு நோன்பின் மூலமாக கிடைக்கும்.இந்த தக்வாவை கொண்டுதான் நீங்கள் இந்தக் குர்ஆனைப் பின்பற்ற முடியும்.

சகோதரர்களே! குர்ஆனின் மீது அல்லாஹ் அன்பு வைத்திருக்கின்றான்.குர்ஆனின் மீது அல்லாஹ் கண்ணியம் வைத்திருக்கின்றான்.

إِنَّهُ لَقُرْآنٌ كَرِيمٌ  فِي كِتَابٍ مَكْنُونٍ

நிச்சயமாக இது கண்ணியமான குர்ஆனாகும்.  (அது) பாதுகாக்கப்பட்ட பதிவேட்டில் இருக்கிறது.(அல்குர்ஆன் 56 : 77 78)

இது கண்ணியமான வேதம். பாதுகாக்கப்பட்ட அந்த லவ்ஹுல் மஹ்ஃபூலிலே தனியாக அதற்கென இடத்தில் இருந்தது. அதை அல்லாஹ் நமக்கு இறக்கி கொடுத்திருக்கின்றான்.

இத்தகைய கண்ணியமான வேதம் கொடுக்கப்பட்ட இந்த மாதமும் அல்லாஹ்விடத்தில்கண்ணியமானது.

நீங்கள் என்ன செய்ய வேண்டும் இப்பொழுது? இந்த மாதத்தை எதிர்பார்த்து இருக்க வேண்டும், அல்லாஹ்வுடைய தூதர் எதிர்பார்த்து இருந்தது போன்று. இன்னும் ஸஹாபாக்கள் எதிர்பார்த்து இருந்தது போன்று.

நம்முடைய ஸலஃபுகள் ஆறு மாதம் ரமழானுக்காக துஆ செய்வார்கள்:யா அல்லாஹ்! ரமழானை எங்களுக்கு நஸீபாக்கி கொடு என்று.

ரமழான் வந்துவிட்டால் இபாதத் செய்வார்கள். இபாதத் செய்வார்கள். தங்களை களைப்படையச் செய்வார்கள். வருத்திக் கொள்வார்கள்.

ரமழான் முடிந்துவிட்டால் யா அல்லாஹ்! நாங்கள் இந்த ரமழானில் செய்த இபாதத்துக்களை ஏற்றுக் கொள்வாயாக! என்று அடுத்த ஆறு மாதத்திற்கு துஆ செய்து கொண்டிருப்பார்கள்.

இப்படியான எதிர்பார்ப்பிலே அவர்கள் இருந்தார்கள்

யா அல்லாஹ் ரமழானை பாதுகாப்பாக அடைய நீ எனக்கு உதவி செய். என்னை அதுவரை கொண்டு சேர்ப்பாயாக. இந்த ரமழானை என் இடத்திலிருந்து ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அங்கீகரிப்பாயாக! என்று நமது சான்றோர் துஆ கேட்பார்கள்

சகோதரர்களே! இந்த ரமழானை எதிர்பார்த்து இருப்பது நான் முன்பு சொன்னது போல, எந்த ஒருசிறந்த நண்பருடைய வருகையை தெரிந்து கொண்டால் எதிர் பார்த்து இருப்போமோ! அதுபோன்று ரமழானை எதிர்பார்த்து இருப்பது.

ஆகவேதான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ரமழானுடைய அந்த தொடக்கத்தை குறித்து சில உபதேசங்கள் செய்தார்கள். அதைப்பார்த்து இந்த குத்பாவை நிறைவு செய்வோம்.

முதலாவதாக, எந்தவிதமான அறிவியல் கணக்கிற்கோ முன்கூட்டியே பிறைகளை முடிவு செய்வதற்கோ நம்முடைய மார்க்கத்தில் அனுமதி இல்லை. நீங்கள் பிறையைப் பார்க்க வேண்டும் இது ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கூறிய அறிவுரைகளிலே ஒன்று.

عن ابن عمر رضي الله عنهما عن النبي صلى الله عليه وسلم قال: «لا تصوموا حتى تروا الهلال ولا تفطروا حتى تروه فإن أغمي عليكم فاقدروا له» رواه البخاري ومسلم.

பிறையை நீங்கள் பார்க்கின்ற வரை நோன்பை ஆரம்பித்து விடாதீர்கள்.பிறையை பார்க்கின்ற வரை நீங்கள் நோன்பை முடித்து விடாதீர்கள்.அப்படியே உங்களுக்கு பிறை தெரியவில்லை என்றாலும்ஷஅபானுடைய பிறையை நீங்கள் கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். ஷஅபான் பிறை முப்பது முடிந்து விட்டால் அடுத்து ரமழானை ஆரம்பியுங்கள். (புகாரி எண் : 1906)

அடுத்து, சகோதரர்களே! ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். அபூஹூரைரா  அறிவிக்க இமாம் முஸ்லிம் பதிவு செய்கின்றார்கள்.

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «إذا جاء رمضان فتحت أبواب الجنة وغلقت أبواب النار وصفدت الشياطين» رواه مسلم.

ரமழான் வந்துவிட்டால் சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ஷைத்தானுடைய கைகளில் விலங்கிடப்படுகின்றது. (முஸ்லிம் எண்:1079)

 

அல்லாஹு அக்பர்.

இந்த ஒரு மாதத்திற்கு அல்லாஹு தஆலா இத்தகைய கண்ணியம் வைத்திருக்கின்றான் என்றால் நாம் இந்த மாதத்தை எவ்வளவு ஆர்வத்தோடு எதிர்பார்த்து இருக்க வேண்டும்.

மேலும் சொன்னார்கள் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலம்,

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «إذا كان أول ليلة من شهر رمضان صفدت الشياطين، ومردة الجن، وغلقت أبواب النار، فلم يفتح منها باب، وفتحت أبواب الجنة، فلم يغلق منها باب، وينادي مناد: يا باغي الخير أقبل، ويا باغي الشر أقصر، ولله عتقاء من النار، وذلك كل ليلة» رواه الترمذي وصححه الألباني.

ரமழானுடைய முதல் இரவு வந்து விட்டால் (28:59நிமிடங்கள்)ஷைத்தானுக்கு விலங்கிடப் படுகின்றன. (29:02நிமிடங்கள்)

கெட்ட மோசமான தீய ஜின்களுக்கு விலங்கிடப் படுகின்றன.நரகத்தின் வாசல்கள் அடைக்கப்படுகின்றன. ரமழான் முடிகின்ற வரை அந்த நரகத்தின் வாசல்கள் எதுவும் திறக்கப்படாது.சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு விடுகின்றன.ரமழான் முடிகின்ற வரை எந்த வாசலும் அடைக்கப்படாது.  ஒரு வானவரை அல்லாஹ் நிர்ணயம் செய்து விடுகின்றான். அந்த வானவர் சதா இதை கூறிக் கொண்டிருப்பார்.நன்மைகளை தேட கூடியவர்களே முன்னேறி வாருங்கள் முன்னேறி வாருங்கள்.தீமைகளை தேடக்கூடியவர்களே போதும் நிறுத்திக்கொள்ளுங்கள். நிறுத்திக் கொள்ளுங்கள். இந்த ரமழான் மாதத்திலே அல்லாஹ் நரகத்திலிருந்து விடுதலை செய்து கொண்டிருப்பான் ஒவ்வொரு நாளும். (திர்மிதி எண்:682)

 

மேலும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலம் ரமழானை குறித்து சொல்கின்றார்கள்.

عن أبي هريرة رضي الله عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: «أتاكم رمضان شهر مبارك فرض الله عز وجل عليكم صيامه تفتح فيه أبواب السماء وتغلق فيه أبواب الجحيم وتغل فيه مردة الشياطين لله فيه ليلة خير من ألف شهر من حرم خيرها فقد حرم» رواه النسائي وصححه الألباني.

ரமழான் வருவதற்கு முன்பே (30:01நிமிடங்கள்) இதோ ரமழான் உங்களுக்கு வரப் போகின்றது. அல்லாஹ்வுடைய அருள் நிறைந்த மாதம் இது.ரமழானில் நோன்பு நோற்பதை அல்லாஹ் உங்கள் மீது ஃபர்ளு ஆக்கினான்.வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன.நரகத்தின் கதவுகள் அடைக்கப்படுகின்றன.கெட்ட ஷைத்தான்கள் விலங்கிட படுகின்றார்கள்.அதில் இருக்கக்கூடிய ஒரு இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்தது.அந்த இரவின் நன்மைகளை யார் இழந்துவிட்டாரோ? அவர்தான் இழப்புக்குறியவர் ஆவார். (நசாயி எண் :2106)

 

இந்த ரமழானுடைய நன்மைகளைப் பற்றி ரஸூலுல்லாஹ் சொன்னார்கள்:

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم كان يقول: «الصلوات الخمس والجمعة إلى الجمعة ورمضان إلى رمضان مكفرات ما بينهن إذا اجتنب الكبائر» رواه البخاري ومسلم.

ஐந்து நேரத் தொழுகைகள், ஜுமுஆ தொழுகை, ஒரு ரமழான் இன்னொரு ரமழான் அவற்றிற்கு மத்தியில் இருக்கக்கூடிய எல்லா பாவங்களையும் போக்க கூடியவை ஆகும். (முஸ்லிம் எண்:233)

மேலும் சொன்னார்கள், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் :

عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: «من صام رمضان إيمانًا واحتسابًا غفر له ما تقدم من ذنبه، ومن قام ليلة القدر إيمانًا واحتسابًا غفر له ما تقدم من ذنبه» رواه البخاري ومسلم

யார்? ரமழான் மாதத்தில் அல்லாஹ்வின் மீது உள்ள உண்மையான நம்பிக்கையோடு நன்மையை எதிர்பார்த்து நோன்பு வைப்பாரோ, அவருடைய முந்தைய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டுவிடும். யார் லைலத்துல் கத்ருடைய இரவில் நின்று வணங்குவாரோ, ஈமானோடு, நன்மை ஆதரவை வைத்து அவருடைய முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும். (புகாரி எண்:2014)

இப்படியாக அல்லாஹ்வின் அடியார்களே! ரமழான் வருவதற்கு முன்பாகவே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்  ரமழானுடைய சிறப்புகளைப் பற்றி எடுத்துக்கூறி மக்களுடைய உள்ளத்திலே அந்த ரமழானை பற்றிய ஆர்வத்தையூட்டினார்கள்.

ரமழான் வர வேண்டும். அதில் நாம் அமல் செய்ய வேண்டும். அதற்கான தயாரிப்புகளிலே நஃபில் தொழுகைகள், சுன்னத்தான தொழுகைகள் தொழுவது. அதுபோன்று நபிலான நோன்புகளை நோற்பது. இப்படியாக ரமழானை நாம் எதிர்பார்த்திருக்க வேண்டும்.

அதற்காக இப்போதிலிருந்தே ரமழானில் நம்முடைய வேலைகளை எப்படி குறைப்பது? அமல்களை எப்படி அதிகப்படுத்துவது என்று திட்டங்களை நாம் வகுத்துக்கொள்ள வேண்டும்.

அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா எனக்கும் உங்களுக்கும் வரக்கூடிய இந்த ரமழானை அடைவதற்குரிய நற்பாக்கியத்தைத் தந்தருள்வானாக!

யார் ரமழானை அடைவதற்கு முன்பே நம்மிலிருந்து இந்த உலகத்தை விட்டு பிரிந்து விட்டார்களோ அவர்களுக்கு அல்லாஹு தஆலா மக்ஃபிரத்தை செய்வானாக! அவர்களுடைய கப்ரை அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா பிரகாசமாக ஆக்குவானாக! சொர்க்க பூங்காவாக ஆக்கியருள்வானாக!

அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா இந்த ரமழானை பெறுவதற்கும், அதில் அமல்கள் செய்வதற்கும் நமக்கு உதவி செய்வானாக!

 

 

 


 [i]تراءَى النَّاسُ الهلالَ ، فأخبرتُ النَّبيَّ – صلَّى اللهُ عليه وسلَّم – أنِّي رأيتُه ، فصام ، وأمر النَّاسَ بصيامِه
الراوي : عبدالله بن عمر | المحدث : عبد الحق الإشبيلي | المصدر : الأحكام الصغرى
الصفحة أو الرقم: 380 | خلاصة حكم المحدث : [أشار في المقدمة أنه صحيح الإسناد] |  انظر شرح الحديث رقم 119742
التخريج : أخرجه أبو داود (2342)، والدارمي (1691)، وابن حبان (3447) باختلاف يسير.

 

لا تقدِّموا الشهر حتى تروا الهلالَ أو تكملوا العدَّةَ إذا غُمَّ الهلالُ، ثم صوموا حتى تروا الهلال أو تكملوا العدَّةَ.

الراوي : حذيفة بن اليمان | المحدث : النووي | المصدر : المجموع

الصفحة أو الرقم: 6/419 | خلاصة حكم المحدث : صحيح |  انظر شرح الحديث رقم 80459

التخريج : أخرجه أبو داود (2326)، والنسائي (2126) باختلاف يسير

 

 [ii] قال اللهُ تعالَى : يا بنَ آدمَ إنَّك ما دعوتَني ورجوتَني غفرتُ لك على ما كان منك ، ولا أُبالي ، يا بنَ آدمَ لو بلغتْ ذنوبُك عنانَ السَّماءِ ثمَّ استغفرتَني غفرتُ لك ، يا بنَ آدمَ لو أتيتَني بقِرابِ الأرضِ خطايا ، ثمَّ لَقِيتَني لا تُشرِكُ بي شيئًا لأتيتُك بقِرابِها مغفرةً
الراوي : أنس بن مالك | المحدث : المنذري | المصدر : الترغيب والترهيب
الصفحة أو الرقم: 4/214 | خلاصة حكم المحدث : [إسناده صحيح أو حسن أو ما قاربهما] |  انظر شرح الحديث رقم 85142
التخريج : أخرجه الترمذي (3540) واللفظ له، وأحمد (13493) مختصراً بمعناه.
 
إنكم الذين تُخطئون بالليلِ والنهارِ وأنا أغفرُ الذُّنوبَ ، ولا أُبالي ؛ فاستغفِروني أغفرْ لكم
الراوي : أبو ذر الغفاري | المحدث : الألباني | المصدر : صحيح الأدب المفرد
الصفحة أو الرقم: 377 | خلاصة حكم المحدث : صحيح |  انظر شرح الحديث رقم 16718
التخريج : أخرجه مسلم (2577) باختلاف يسير، والبخاري في ((الأدب المفرد)) (490) واللفظ له

 

 [iii]إنَّ اللَّهَ لا يَنْظُرُ إلى صُوَرِكُمْ وأَمْوالِكُمْ، ولَكِنْ يَنْظُرُ إلى قُلُوبِكُمْ وأَعْمالِكُمْ.
الراوي : أبو هريرة | المحدث : مسلم | المصدر : صحيح مسلم
الصفحة أو الرقم: 2564 | خلاصة حكم المحدث : [صحيح] |  انظر شرح الحديث رقم 17130

 

 [iv] لا تَحاسَدُوا، ولا تَناجَشُوا، ولا تَباغَضُوا، ولا تَدابَرُوا، ولا يَبِعْ بَعْضُكُمْ علَى بَيْعِ بَعْضٍ، وكُونُوا عِبادَ اللهِ إخْوانًا المُسْلِمُ أخُو المُسْلِمِ، لا يَظْلِمُهُ ولا يَخْذُلُهُ، ولا يَحْقِرُهُ التَّقْوَى هاهُنا ويُشِيرُ إلى صَدْرِهِ ثَلاثَ مَرَّاتٍ بحَسْبِ امْرِئٍ مِنَ الشَّرِّ أنْ يَحْقِرَ أخاهُ المُسْلِمَ، كُلُّ المُسْلِمِ علَى المُسْلِمِ حَرامٌ، دَمُهُ، ومالُهُ، وعِرْضُهُ.
الراوي : أبو هريرة | المحدث : مسلم | المصدر : صحيح مسلم
الصفحة أو الرقم: 2564 | خلاصة حكم المحدث : [صحيح] |  شرح الحديث
التخريج : أخرجه البخاري (6064) مختصراً، ومسلم (2564).

 

[v]آيَةُ المُنافِقِ ثَلاثٌ: إذا حَدَّثَ كَذَبَ، وإذا وعَدَ أخْلَفَ، وإذا اؤْتُمِنَ خانَ
الراوي : أبو هريرة | المحدث : البخاري | المصدر : صحيح البخاري
الصفحة أو الرقم: 6095 | خلاصة حكم المحدث : [صحيح] |  انظر شرح الحديث رقم 5962
آيَةُ المُنَافِقِ ثَلَاثٌ... وإنْ صَامَ وَصَلَّى وَزَعَمَ أنَّهُ مُسْلِمٌ.
الراوي : أبو هريرة | المحدث : مسلم | المصدر : صحيح مسلم
الصفحة أو الرقم: 59 | خلاصة حكم المحدث : [صحيح] |

 

[vi]   وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ سورة البقرة الآية 196

فَإِنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ سورة البقرة الآية 211

اعْلَمُوا أَنَّ اللَّهَ شَدِيدُ الْعِقَابِ وَأَنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ سورة المائدة الآية 98

 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/