HOME      Khutba      மேலான மன உறுதி!!! (அமர்வு 2-3) | Tamil Bayan - 445   
 

மேலான மன உறுதி!!! (அமர்வு 2-3) | Tamil Bayan - 445

           

மேலான மன உறுதி!!! (அமர்வு 2-3) | Tamil Bayan - 445


மேலான மன உறுதி!

ஜுமுஆ குத்பா தலைப்பு : மேலான மன உறுதி! (அமர்வு 2-3)

வரிசை : 445

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 13-01-2017 | 15-04-1438

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்கும் மதிப்பிற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு, அல்லாஹ்வின் பயத்தைஎங்களுக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக,இந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நமது பாவங்களை மன்னித்தருள்வானாக! அல்லாஹு தஆலா அவனுக்கு பயந்து மார்க்கத்தைப் பின்பற்றி, நபியின் கட்டளைகளுக்கு முற்றிலும் கீழ்ப்படிந்து, மறுமைக்காக வாழ்ந்த நல்ல மக்களில் எங்களையும் உங்களையும் சமுதாய மக்களையும் அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக! அமீன்

சென்ற ஜும்ஆவின் குத்பாவில் மேலாக மன உறுதி என்ற தலைப்பில் நம்முடைய எண்ணங்கள் எப்படி இருக்க வேண்டும்?நம்முடைய மன உறுதி எதில் இருக்க வேண்டும்?நமது இலட்சியம் எப்படி இருக்க வேண்டும் என்பதை பற்றிய சில விளக்கங்களை குர்ஆனுடைய ஒளியிலும் ஹதீஸினுடைய ஒளியிலும் சென்ற வாரம் பார்த்தோம்.

அதுகுறித்து மேலும் சில விவரங்களை சொல்ல வேண்டியிருக்கிறது. அல்லாஹு தஆலா மன உறுதி உடையவர்கள், நேரான எண்ணம் உள்ளவர்களை, உயர்ந்த நோக்கம் உடையவர்களைதான் விரும்புகிறான்.

அவர்களைத்தான் அல்லாஹு தஆலா தனக்கு நெருக்கமாக்கிக் கொள்கிறான். அவர்களுக்குத்தான் இம்மை மறுமையின் நற்பாக்கியங்களைக் கொடுக்கின்றான்.

யாருடைய அலட்சியம் தாழ்ந்து விட்டதோ, யாருடைய எண்ணங்கள் உலக ஆதாயத்திற்காகவும் அற்ப லாபத்திற்காகவும் என்று ஒரு செயல்பாட்டில் அமைந்துவிடுகிறதோ அல்லாஹ் அவர்களையும் அவர்களுடைய எண்ணங்களையும் தாழ்த்தி விடுகிறான். கேவலப்படுத்தி விடுகிறான்.

இது குறித்து அல்குர்ஆனில் ஒரு பெரிய சம்பவத்தை அல்லாஹ் சுருக்கமாக கூறி இருக்கிறான்.

இஸ்ரவேலர்களில் வேதத்தின் கல்வி ஞானம் கொடுக்கப்பட்ட ஒரு மனிதன், அந்த மனிதர் மறுமைக்காக தன்னுடைய கல்வியை பயன்படுத்துவதற்கு பதிலாக, இஸ்ரவேலர்கள் காட்டிய உலக ஆசைக்கு அடிமையாகி, தன்னுடைய மார்க்கத்தைகல்வியை அல்லாஹ் தனக்கு கொடுத்த ஏழு அத்தாட்சிகளை துன்யாவிற்காக விலை பேசி விடுகிறான்.

அல்லாஹ் சுபஹானஹு தஆலா அந்த மனிதனை தரம் தாழ்த்தினான். கல்வி கொடுக்கப்பட்ட இறைஞானம் கொடுக்கப்பட்ட வேதத்தின் அத்தாட்சிகளை கொடுக்கப்பட்ட அந்த மனிதனை அல்லாஹு தஆலா ஒரு நாயின் தன்மையில் மாற்றிவிடுகிறான்.

وَاتْلُ عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فَانْسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ فَكَانَ مِنَ الْغَاوِينَ (175) وَلَوْ شِئْنَا لَرَفَعْنَاهُ بِهَا وَلَكِنَّهُ أَخْلَدَ إِلَى الْأَرْضِ وَاتَّبَعَ هَوَاهُ فَمَثَلُهُ كَمَثَلِ الْكَلْبِ إِنْ تَحْمِلْ عَلَيْهِ يَلْهَثْ أَوْ تَتْرُكْهُ يَلْهَثْ ذَلِكَ مَثَلُ الْقَوْمِ الَّذِينَ كَذَّبُوا بِآيَاتِنَا فَاقْصُصِ الْقَصَصَ لَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ

(நபியே!) நீர் அவர்களுக்கு (‘பல்ஆம் இப்னு பாஊர்' என்னும்) ஒருவனுடைய சரித்திரத்தை ஓதிக் காண்பிப்பீராக. அவனுக்கு நாம் நம் அத்தாட்சிகளைக் கொடுத்(து கண்ணியமாக்கி வைத்)திருந்தோம். எனினும் அவன் ‘‘(பாம்பு தன் சட்டையை விட்டு வெளியேறுவதைப் போல) அதிலிருந்து முற்றிலும் வெளியேறிவிட்டான். ஆகவே, ஷைத்தான் அவனைப் பின்தொடர்ந்து சென்றான்; (அவனுடைய சூழ்ச்சிக்குள் சிக்கி) அவன் வழிதவறி விட்டான்.

நாம் எண்ணியிருந்தால் (நம்) அத்தாட்சிகளின் காரணமாக அவனை நாம் உயர்த்தியிருப்போம். எனினும், அவன் இவ்வுலக வாழ்க்கையை நிரந்தரம் என எண்ணி தன் (சரீர) இச்சையைப் பின்பற்றிவிட்டான். அவனுடைய உதாரணம் ஒரு நாயின் உதாரணத்தை ஒத்திருக்கிறது. நீங்கள் அதைத் துரத்தினாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது. அதை(த் துரத்தாது) விட்டுவிட்டாலும் நாக்கைத் தொங்கவிட்டுக் கொள்கிறது. இதுவே, நம் வசனங்களைப் பொய்யாக்கும் (மற்ற) மக்களுக்கும் உதாரணமாகும். ஆகவே, அவர்கள் சிந்தித்து நல்லுணர்ச்சி பெறுவதற்காக இச்சரித்திரத்தை (அடிக்கடி) ஓதிக் காண்பியுங்கள். (அல்குர்ஆன் 7 : 175,176)

ஒரு மனிதனுடைய எண்ணம் உயர்ந்ததாக சிறந்ததாக இருக்க வேண்டும். உயர்ந்தது சிறந்தது இந்த உலகத்தில் இல்லை. அல்லாஹ்விடத்தில் இருக்கிறது.

وَمَا عِنْدَ اللَّهِ خَيْرٌ وَأَبْقَى

அல்லாஹ்விடத்தில் இருப்பவையோ மிக்க மேலானவையும் நிலையானவையும் ஆகும். (அல்குர்ஆன் 28 : 60)

நாம் உலகத்தில் உள்ளதை சிறந்தது என நினைக்கிறோம். அது நிரந்தரமானது என்று நினைக்கிறோம். அல்லாஹ் சொல்கிறான்:

مَا عِنْدَكُمْ يَنْفَدُ وَمَا عِنْدَ اللَّهِ بَاقٍ

உங்களிடம் இருப்பது அழியக்கூடியது முடியக் கூடியது. அல்லாஹ்விடம் இருப்பதுதான் நிரந்தரமானது. அல்லாஹ்விடம் இருப்பதுதான் சிறந்தது.அதுதான் மிக மேலானது. (அல்குர்ஆன் 16 : 96)

ஒரு முஃமின் எப்பொழுதும் அல்லாஹ்விடம் இருக்கும் வெகுமதியை பார்க்க வேண்டும். உலகத்தை தேடுபவனாக இருக்கக்கூடாது. உலகம் விதிக்கப்பட்டது. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கொடுத்தே தீருவான்.

ஆனால், உலகத்திற்காக மறுமையின் அமல்களை செய்யக்கூடாது. தனது வாழ்க்கையை உலகத்திற்காக ஆக்கிவிடக்கூடாது. தனது வாழ்க்கை அல்லாஹ்வுக்காக, மறுமைக்காக, சொர்க்கத்திற்காக, அல்லாஹ்வின் பொருத்தத்தை நோக்கியே அவனுடைய அமல்கள் இருக்க வேண்டும்.

யார் தமது மறுமையின் காரியங்களை உலகத்திற்காக ஆக்கிக் கொண்டார்களோ, நூற்றுக்கணக்கான குர்ஆன் வசனங்கள் அவர்களுடைய  நஷ்டத்தைப் பற்றி, மறுமையில் அடையக்கூடிய அவர்களின் கேவலத்தை பற்றி எடுத்துரைக்கின்றன. அதுபோன்றுதான் ஹதீஸ்களும்.

மூன்று நபர்களை மறுமையில் கொண்டுவரப்படும். முதல் முதலாக அவர்களிடையே தீர்ப்பு வழங்கப்படும். செய்த செயலோ உயர்ந்த செயல். லட்சியமோ மட்டரகமான லட்சியம்.

மக்களுக்கு கல்வியை போதித்த அறிஞர், தனது செல்வத்தை வாரிவாரி தர்மம் செய்த செல்வந்தர், தனது உயிரையே அல்லாஹ்வின் பாதையில் கொடுத்த வீரர்.

அவர்களுக்கு அல்லாஹ் செய்த அருளை சொல்லி காண்பித்து, இதற்காக நீங்கள் என்ன செய்தீர்கள்? என்று கேட்கப்படும் போது, அந்த அறிஞர் சொல்வான்: குர்ஆனை கற்றேன். மக்களுக்கு உனக்காக கற்பித்தேன் என்று.

அல்லாஹ் சொல்வான்: பொய் சொல்லாதே! உன்னை ஒரு அறிஞர் என்று மக்கள் வாழ்த்துவதற்காக நீ செய்தாய். அப்படியே வாழ்த்தப் பட்டது என்று முகம் குப்புற நரகத்தில் வீசி எறியப்படுவான்.

செல்வந்தனிடத்தில் கேட்கப்படும், நீ என்ன செய்தாய்? என்று. அதற்கு அவர் சொல்வார்: நல்ல காரியங்கள் என்று எதுவெல்லாம் எனக்குத் தெரிந்ததோ அதை எல்லாம் அள்ளி அள்ளி கொடுத்தேன்.

அல்லாஹ் சொல்வான்: உன்னை ஒரு கொடைவள்ளன், தர்மகத்தா என்றுபுகழப்படுவதற்காக நீ இப்படி செய்தாய். அப்படி புகழப்பட்டு விட்டது. எனவே அவனும் முகம் குப்புற நரகில் வீசி எறியப்படுவான்.

வீரனிடம் கேட்கப்படும் போது அவன் சொல்வான்: நீ கொடுத்த உயிரையே நான் அர்ப்பணித்து விட்டேன் என்று.

அல்லாஹ் சொல்வான்: உன்னை ஒரு பெரிய வீரன் என்று மக்கள் புகழ வேண்டுமென்று என்பதற்காக நீ செய்தாய். அப்படி அவர்கள் செய்து விட்டார்கள். அவனும் நரகத்தில் வீசி எறியப்படுவான்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1905.

எண்ணமும் உயர்ந்ததாக இருக்கவேண்டும். செயலும் உயர்ந்ததாக இருக்க வேண்டும். செயல் உயர்ந்ததாக இருந்து, எண்ணம் மட்டரகமாக இருந்து விட்டால், அவர்கள் நஷ்டவாளிகள். எண்ணம் உயர்வாக இருக்கிறது. செயல்கள் அதற்கேற்ப இல்லையெனில் அவர்களும் நஷ்டவாளிகளே.

எனவேதான், அல்லாஹு தஆலா தனது நபிக்கு அறிவுரை சொல்கிறான். மொத்த குர்ஆனும் அல்லாஹ்வுடைய தூதருக்கும் அவர்களுடைய உம்மத்தாகிய நமக்கும் அறிவுரை தான்.

அதிலும் குறிப்பாக சில இடங்களில் நேரடியாகவே நபியே! நீங்கள் இப்படி இருக்க வேண்டும், இப்படி இருக்கக் கூடாது,நீங்கள் செய்தது சரி,நீங்கள் இப்படி செய்திருக்கக்கூடாது என்று அல்லாஹ் தன்னுடைய நபிக்கு ஒழுக்கப் பயிற்சி கொடுத்தான்.

அல்லாஹு தஆலா நபிக்கு ஒரு உபதேசம் செய்தான்.

فَاصْبِرْ كَمَا صَبَرَ أُولُو الْعَزْمِ مِنَ الرُّسُلِ

(நபியே!) நம் தூதர்களிலுள்ள உறுதியுடைய வீரர்கள் (சிரமங்களைச்) சகித்துக் கொண்டிருந்தபடியே நீரும் சகித்துக்கொண்டு பொறுமையாக இருப்பீராக. 46 : 35)

அந்த பொறுமை சாதாரணமாக இருக்கக்கூடாது. முன்னால் வந்த இறைத் தூதர்கள் எப்படி பொறுமை காத்தார்களோ (நூஹ் இப்ராஹீம், மூசா, ஈஸா அந்த இறைத்தூதர்கள் பொறுமையாக இருந்ததைப் போன்று) நீங்கள் இருங்கள்.

ஒருவரை நீங்கள் முன்னோடியாக வைத்து, அவருடைய பாதையில் பயணிக்க வேண்டுமென்றால், அந்த முன்னோடி அல்லாஹ்விடத்தில் உயர்ந்த அங்கீகாரம் பெற்றவராக, சிறந்தவராக, உயர்ந்த லட்சியம் பெற்றவராக இருக்க வேண்டும்.

ஆகவேதான், அல்லாஹு தஆலா ஒன்றுக்கும் மேற்பட்ட வசனங்களில் இப்ராஹீம் அலைஹி வஸல்லம் அவர்களையும், மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்களையும் குர்ஆன் முழுக்க சம்பவங்களாலும் அவர்களுடைய அறிவுரைகளாலும் நபி அவர்களுக்கு நிரப்பி விட்டான்.

ஏனைய நபிமார்களைப் பற்றி அல்லாஹு ரப்புல் ஆலமீன் ஆங்காங்கே நமக்கு நினைவூட்டிக் கொண்டிருந்தாலும், அல்லாஹ்வின் தூதருக்கு நினைவூட்டிக் கொண்டிருந்தாலும், குர்ஆனுடைய பெரும் ஒரு பகுதி நூஹ் அலைஹிஸ்ஸலாம், இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றியும் கூறப்பட்டுள்ளது.

இவர்கள் வாழ்க்கையில் பெரிய லட்சியத்திற்காக வாழ்ந்தார்கள். அல்லாஹ்வின் தீனுக்காக போராடிய வீரர்கள்.

وَاتَّبَعَ مِلَّةَ إِبْرَاهِيمَ حَنِيفًا

நபியே! இப்ராஹீமுடைய கொள்கையில் நீங்கள் பயணிங்கள். (அல்குர்ஆன் 4 : 125)

மேலும், அல்லாஹ் நமக்கு சொல்கின்றான்:

அல்லாஹ்வின் தூதர்களில் நமக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன் 33 : 21)

பிறகு சொல்கிறான்:

முஃமின்களே! உங்களுக்கும்,நபியே!உங்களுக்கும் இப்ராஹீமிடம் படிப்பினை இருக்கிறது. (அல்குர்ஆன் 60 : 4-6)

ஆகவே, அல்லாஹு தஆலா உயர்ந்ததை விரும்புகிறான். சிறந்ததை விரும்புகிறான். இலட்சியம் உடையவர்களை விரும்புகின்றான். தாழ்ந்ததைக் கொண்டு யார் விரும்புகிறாரோ, அவர்களை அந்த தாழ்ந்த நிலையிலேயே அல்லாஹு விட்டு விடுகிறான்.

அல்லாஹு தஆலா யாரிடத்தில் இப்படி உயர்ந்த லட்சியங்கள், உயர்ந்த எண்ணங்கள் இருக்குமோ அவர்களை அல்குர்ஆனில் வர்ணிக்கும் போது ஆண்கள் என்று வர்ணிக்கிறான்.

எல்லோரும் ஆண்கள் தான். ஆனால், அதில் இலட்சியம் உடையவர்களை, கொள்கை உடையவர்களை, அழகான எண்ணம் உடையவர்களை,வீரமுடையவர்களை அவர் ஒரு ஆண் மகன், அவன் ஒரு ஆம்பளை என்று சொல்வார்கள்.

அதுபோன்று, எத்தனையோ வீரமிக்க துணிச்சல்மிக்க பெண்களைப் பார்த்து அவள் ஒரு பெண்ணல்ல, ஆண் என்று சொல்வார்கள்.

அல்குர்ஆனில் அல்லாஹு தஆலா நம்பிக்கையாளர்களில் இந்த தன்மையில் இருக்கின்ற முஃமினான ஆண்களை பெண்களை ஆண்கள் என்று சொல்கின்றான்.

مِنَ الْمُؤْمِنِينَ رِجَالٌ صَدَقُوا مَا عَاهَدُوا اللَّهَ عَلَيْهِ فَمِنْهُمْ مَنْ قَضَى نَحْبَهُ وَمِنْهُمْ مَنْ يَنْتَظِرُ وَمَا بَدَّلُوا تَبْدِيلًا

நம்பிக்கையாளர்களில் ஆண்கள் பலர் இருக்கின்றனர். இவர்கள் அல்லாஹ்விடம் செய்த வாக்குறுதியை உண்மையாக்கி வைத்தார்கள். அவர்களில் பலர் (இறந்து ‘ஷஹாதத்' என்னும்) தங்கள் இலட்சியத்தை அடைந்து விட்டனர். வேறு சிலர் (மரணிக்கவில்லை என்றாலும் அதை அடைய ஆவலுடன்) எதிர்பார்த்தே இருக்கின்றனர். (என்ன நேரிட்டாலும் அவர்கள் தங்கள் வாக்குறுதியிலிருந்து) ஒரு சிறிதும் மாறுபட்டுவிடவே இல்லை. (அல்குர்ஆன் 33 : 23)

அதுபோன்று தான் குபா பள்ளிவாசலை சுற்றியுள்ள முஃமின்களை பற்றி சொல்கிறான்:

فِيهِ رِجَالٌ يُحِبُّونَ أَنْ يَتَطَهَّرُوا وَاللَّهُ يُحِبُّ الْمُطَّهِّرِينَ

ஆகவே, (நபியே!) நீர் ஒருக்காலத்திலும் (அங்கு போய்) அதில் நிற்க வேண்டாம். ஆரம்ப தினத்திலேயே (அல்லாஹ்வின்) பயத்தின் மீது (பரிசுத்தமான எண்ணத்துடன்) அமைக்கப்பட்ட மஸ்ஜிதுதான் நீர் நின்று தொழ(வும் தொழவைக்கவும்) மிகத் தகுதியுடையது. அதிலிருக்கும் மனிதர்களும் பரிசுத்தவான்களாக இருப்பதையே விரும்புகின்றனர். அல்லாஹ்வும் (இத்தகைய) பரிசுத்தவான்களையே நேசிக்கிறான். (அல்குர்ஆன் 9 : 108)

அதுபோன்று தொழுகையில் பேணுதலாக இருக்கின்ற முஃமினான ஆண்கள் பெண்கள் பற்றி அல்லாஹ் சொல்கிறான்:

رِجَالٌ لَا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالْأَبْصَارُ

பல ஆண்கள் இருக்கின்றனர். அவர்களுடைய வர்த்தகமும் கொடுக்கல் வாங்கலும் அவர்கள் அல்லாஹ்வுடைய திருப்பெயரை நினைவு செய்வதில் இருந்தும், தொழுகையை உறுதியாக கடைபிடிப்பதிலிருந்தும், ஜகாத்துக் கொடுப்பதிலிருந்தும் அவர்களைத் திருப்பிவிடாது. உள்ளங்களும் பார்வைகளும் (பயத்தால் திடுக்கிட்டுத்) தடுமாறிவிடக்கூடிய நாளைப் பற்றி அவர்கள் (எந்நேரமும்) பயந்து கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 24 : 37)

இப்படிப்பட்ட உயர்ந்த கொள்கை உடையவர்களை அல்லாஹ் விரும்புகிறான். அந்த மன வலிமை கொள்கை உறுதி என்பது உயர்ந்த விஷயங்களில் இருக்க வேண்டும். நல்ல விஷயங்களில் இருக்க வேண்டும். நன்மைக்காக இருக்க வேண்டும். நன்மைக்காக உழைப்பதை அதற்காக செய்யக்கூடிய தியாகங்களை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வலியுறுத்துகிறார்கள்.

«إِنْ قَامَتْ عَلَى أَحَدِكُمُ الْقِيَامَةُ، وَفِي يَدِهِ فَسِيلَةٌ فَلْيَغْرِسْهَا»

மறுமை நிகழ்வதற்கு முன்னால் உங்கள் ஒருவரின் கையில் செடி இருந்து, அந்த நடுவதற்கு அவருக்கு முடியுமென்றால் அவர் அதை நட்டு விடட்டும்.

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 12902.

ஒருவருக்கு நல்ல காரியத்தை செய்ய வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டால் அதை நீங்கள் வேறு சில காரணங்களால் தள்ளிப் போடாதீர்கள்.

உதாரணமாக,நீங்கள் ஒரு ஏழையை பார்க்கிறீர்கள்;அவருக்கு 50அல்லது 100ரூபாய் கொடுக்கலாம் என்று கருதுகிறீர்கள். அதே நேரத்தில் உங்களைவிட உங்களுக்கு முன்னால் வந்த செல்வந்தவருக்கு 500 ரூபாய் அல்லது 1000ரூபாய் கொடுக்கிறார். இதைப் பார்த்துவிட்டு அந்த செல்வந்தர் 500ரூபாய் அல்லது ஆயிரம் ரூபாய் கொடுத்து விட்டார், அதுவே அவருக்கு போதுமானது என்று கொடுக்காமல் விட்டு விடுகிறோம்..

இப்படி இருக்கக் கூடாது. நீங்கள் எதை நினைத்தீர்களோ அந்த நல்ல காரியத்தை செய்து விடவேண்டும்.

நம்முடைய நிலை, இந்த உலகத்திற்கு இருக்குமேயானால் நமக்கு எவ்வளவுதான் இருந்தாலும் இன்னும் அதிகம் வேண்டும் என்பதாக பார்ப்போம்.

மறுமை என்று வந்துவிட்டால் எந்த அளவிற்கு தவிர்க்க வேண்டுமோ அந்த அளவுக்கு தவிர்க்க பார்ப்போம்.

உலகம் என்று வந்தால் எல்லா காரண காரியங்களையும் சமாளிக்க பார்ப்போம். மறுமை என்று வந்துவிட்டால், ஒரு காரணம் கிடைத்தால் போதும், அதை விடுவதற்கு தயாராகி விடுவோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!

அல்லாஹ்வுடைய தூதர் என்ன சொல்கிறார்கள்? இங்கு ஒரு மனிதன் தொழுவதற்காக உளு செய்துவிட்டு தயாராகவில்லை, ஸஹர் செய்து விட்டு நோன்புக்கு தயாராகவில்லை, இஹ்ராம் கட்டிக்கொண்டு ஹஜ்ஜுக்கு தயாராகவில்லை, அவருடைய கையில் ஒரு செடியை நடுவதற்காக எடுத்தார்.

எப்படி வணக்க வழிபாடுகள் அல்லாஹ்விடத்தில் உயர்ந்த தரஜாவை தருகின்றனவோ, அதுபோன்று தான் அல்லாஹ்வுடைய அடியார்களுக்காக, மக்களுக்காக அவர்கள் நன்மை பெற வேண்டும் என்பதற்காக நல்ல எண்ணத்தில் நீங்கள் செய்யக்கூடிய காரியமும் அல்லாஹ்விடத்தில் இபாதத்தாக கருதப்படுகிறது.

அல்லாஹ்வுடைய தூதர் அவர்களின் இன்னொரு அழகிய ஹதீஸை கவனியுங்கள்.

«مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا، أَوْ يَزْرَعُ زَرْعًا، فَيَأْكُلُ مِنْهُ طَيْرٌ أَوْ إِنْسَانٌ أَوْ بَهِيمَةٌ، إِلَّا كَانَ لَهُ بِهِ صَدَقَةٌ»

ஒரு மனிதன் மக்கள் பயணிக்கின்ற பாதையில் பழம் தரக்கூடிய மரத்தை நட்டு வளர்த்து வருகிறான்.

வழிப்போக்கர் இந்த பழத்தை சாப்பிடும் காலம் எல்லாம், பறவைகள் மரத்தின் நிழலையும் பழங்களை சாப்பிடும் காலம் எல்லாம் அந்த மரம் அவருக்கு சதகாவாக அமையும்.

அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 13389.

ஆகவே,முஃமினுடைய எண்ணம் உயர்ந்ததாக இருக்க வேண்டும்.அந்த எண்ணத்திற்கேற்ப செயல் உறுதி இருக்க வேண்டும்.

வானம், பூமி சின்னாபின்னமாகும் போது, நீங்கள் நட்ட செடியின் மூலம் அல்லாஹ் உங்களுக்கு கூலி கொடுப்பான்.

அல்லாஹ்வினுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள்:

«فَلَقَدْ رَأَيْتُهُ يَتَقَلَّبُ فِي ظِلِّهَا فِي الْجَنَّةِ»

நான் சொர்க்கத்தில் ஒரு மனிதனை பார்த்தேன். அவர் ரொம்ப ஜாலியாக சுற்றித் திரிகிறார். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்கிறார்கள்: இவர் என்ன சொர்க்கத்தில் இப்படி ஜாலியாக சுற்றித் திரிகிறாரே? என்று.

அப்போது நபிக்கு சொல்லப்படுகிறது; மக்களுடைய பாதையில் மக்களுக்கு தொந்தரவு தந்து கொண்டிருந்த நடுவே இருந்த மரத்தை வேரோடு பிடுங்கி சுத்தம் செய்து மக்கள் செல்வதற்கு பாதையை அவர் சமப்படுத்தி கொடுத்தார். அதற்கு அல்லாஹ் கொடுத்த நன்மை தான் இது.

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 13410.

மேலும், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:

«إِنَّ اللهَ يُحِبُّ مَعَالِيَ الْأُمُورِ وأَشْرَافَهَا، وَيَكْرَهُ سَفَاسِفَهَا»

அல்லாஹு தஆலா செயல்களில், காரியங்களில், எண்ணங்களில் மிக உயர்ந்ததை மிக சிறப்பானதை விரும்புகிறான். மட்டமானதை, கீழ்த்தரமானதை, அற்பமானதை அல்லாஹ் வெறுக்கிறான்.

அறிவிப்பாளர் : ஹுசைன் இப்னு அலீ ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அல்முஃஜமுல் கபீர் தப்ரானி, எண் : 2894.

நம்முடைய எண்ணங்களுக்கும் அல்லாஹ்விடத்தில் கூலி இருக்கும்போது, ஏன் தாழ்ந்ததை, மட்டமானதை, பிடித்தமானதை நாம் எண்ணி, அல்லாஹ்விடத்தில் நன்மையை இழக்க வேண்டும்.

ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அறிவிக்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:

உங்களுக்கு ஆசை ஏற்பட்டால் அந்த ஆசையை அதிகம் வையுங்கள். அதை அல்லாஹ்விடத்தில் அதிகமாக கேளுங்கள். நீங்கள் உங்களுடைய ரப்பிடத்தில் கேட்கிறீர்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : அஸ்ஸில்சிலதுஸ் ஸஹீஹா, எண் : 1266.

மக்களிடத்தில் சிலர் இப்படியும் இருக்கிறார்கள். மக்களிடத்தில் கேட்பதற்கு கூச்சப்பட மாட்டார்கள். ரப்பிடத்தில் கேட்பதற்கு தயங்குவார்கள்.

இன்று, நாம் மக்களிடத்தில் எவ்வளவு வலியுறுத்தி, கட்டாயப்படுத்தி கேட்கிறோமோ, அதுபோன்று, அல்லாஹ்விடத்தில் கேட்டிருந்தால் கண்டிப்பாக அல்லாஹ் நமக்கு கொடுத்திருப்பான்.

அல்லாஹ் சொல்கிறான்:

ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ

என்னிடம் கேளுங்கள்,நான் உங்களுக்கு பதில் தருகிறேன். (அல்குர்ஆன் 40 : 60)

என்னைத் தவிர உங்களுக்கு உங்கள் தேவையை நிறைவேற்றக் கூடியவர் யார் இருக்கிறார்கள்.

மேலும், ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களுடைய மற்றொரு ஹதீஸ். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:

அல்லாஹ்விடத்தில் கேட்டால் அதிகமாக கேட்டுக்கொண்டே இருங்கள். அவன் கேட்பதால் சடைவடையாதவன், கொடுப்பதால் குறையாதவன்.

அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : அஸ்ஸில்சிலதுஸ் ஸஹீஹா, எண் : 1325.

நீங்கள் யா ரப்பு! யா அல்லாஹ்! என்று சொல்லும் போதெல்லாம் அவன் சந்தோஷம் அடைவான். மனிதனிடத்தில் நீங்கள் உங்கள் தேவைகளை சொன்னால் அவன் சடைவடைவான், வெறுப்பான், முகம் திருப்புவான்.

நம்முடைய துஆ, தேடல், ஆசை உயர்ந்ததாக இருக்கவேண்டும் என்பதற்கு ஒரு அழகிய வழிமுறையை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லித் தருகிறார்கள்.

«إِنَّ فِي الجَنَّةِ مِائَةَ دَرَجَةٍ، أَعَدَّهَا اللَّهُ لِلْمُجَاهِدِينَ فِي سَبِيلِ اللَّهِ، مَا بَيْنَ الدَّرَجَتَيْنِ كَمَا بَيْنَ السَّمَاءِ وَالأَرْضِ، فَإِذَا سَأَلْتُمُ اللَّهَ، فَاسْأَلُوهُ الفِرْدَوْسَ، فَإِنَّهُ أَوْسَطُ الجَنَّةِ وَأَعْلَى الجَنَّةِ - أُرَاهُ - فَوْقَهُ عَرْشُ الرَّحْمَنِ، وَمِنْهُ تَفَجَّرُ أَنْهَارُ الجَنَّةِ»

அல்லாஹுதஆலா சொர்க்கத்தில் 100தரஜாக்களை வைத்திருக்கின்றான். அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்பவர்களுக்காக அந்த 100தரஜாக்களை அல்லாஹ் வைத்திருக்கின்றான். ஒவ்வொரு தர்ஜாக்களின் இடைவெளி வானத்திற்கும் பூமிக்கும் உள்ள இடைவெளியாக இருக்கிறது. அந்த மாதிரி 100தர்ஜாக்கள் அல்லாஹ்வின் பாதையில் ஜிஹாத் செய்பவர்களுக்கு வைத்திருக்கின்றான். நீங்கள் அல்லாஹ்விடத்தில் கேட்டால்உயர்ந்த ஃபிர்தௌஸ் ஜன்னத்தை கேளுங்கள்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 2790.

இன்று, நம்முடைய நிலையை யோசித்துப் பார்க்க வேண்டும். துன்யாவில் அல்லாஹ்விடத்தில் சகட்டுமேனிக்கு கேட்போம். கேட்கக் கூடிய எல்லா நிஃமத்துகளுக்கும் நாம் தகுதி உள்ளவர்களை போல, நான் கேட்க வேண்டிய நீ அவர்களை அல்லாஹ் கொடுத்தாக வேண்டும் என்பது போல கருதுகிறோம்.

உண்மையுடன் கேட்பதில் தப்பு கிடையாது. ஆனால், அந்த அருட்கொடைக்கு நாம் தகுதி உடையவர்களா? நம்முடைய அமல்கள் அப்படி இருக்கிறதா? அதை நாம் யோசிக்க வேண்டும்.

இன்னும் சிலர், அல்லாஹ்வின் அருளிலிருந்து நிராசை ஆகிவிடுகிறார்கள். இது, மறுமை மீதுள்ள பலவீனமான நம்பிக்கையை காட்டுகிறது. இவருடைய உள்ளத்தில் மறுமையின் மீது உறுதியான நம்பிக்கை இருக்குமேயானால், யா அல்லாஹ்! எனக்கு உயர்ந்ததை அங்கே கொடு, சிறந்ததை அங்கே கொடு, மேலானதை அங்கே கொடு என்று கேட்பான்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் அழகிய உதாரணம் நம்மிடம் இருக்கிறது.யா அல்லாஹ்! ஒருநாள் உணவளி, நான் உனக்கு நன்றி செலுத்துகிறேன். என்னை ஒரு நாள் பசியாக வை, நான் பணிந்து உன்னிடத்தில் கேட்பேன். எனக்கு சிறந்ததை மறுமையில் கொடு.

ஒரு நல்ல உணவை சாப்பிட்டால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்விடத்தில், யா அல்லாஹ்! இதைவிட சிறந்ததை எனக்கு சொர்க்கத்தில் கொடு என்று கேட்பார்கள்.

ஒவ்வொரு துன்யாவுடைய நிஃமத்துக்களை அனுபவிக்கும் போதும், யா அல்லாஹ்! இந்த துன்யாவுடைய நிஃமத்துகள் அழியக் கூடியது. நிரந்தரமான நிஃமத்தை எனக்கு சொர்க்கத்தில் கொடு என்று கேட்பார்கள்.

நூல் : திர்மிதி, எண் : 2347.

நம்முடைய அமல்களை வைத்து அல்லாஹ்விடத்தில் கேட்க முடியாது. யா அல்லாஹ்! உன்னுடைய அருளால் எனக்கு கொடு. உன்னுடைய ரஹமத்தால் எனக்கு கொடு என்று கேட்க வேண்டும்.

ஒருமுறை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சஹாபாக்களிடம் சொன்னார்கள்: உங்களுடைய அமலால் யாரும் சொர்க்கம் செல்ல முடியாது என்று. சஹாபாக்கள் பயந்தார்கள். யா ரசூலல்லாஹ் நீங்களுமா? என்று கேட்டார்கள்.

அதற்கு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:

إِلَّا أَنْ يَتَغَمَّدَنِي رَبِّي مِنْهُ بِمَغْفِرَةٍ وَرَحْمَةٍ

ஆம், நானும் தான்.அல்லாஹ் தன்னுடைய அருளால் என்னை அழைத்து கொண்டாலே தவிர!

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 7203.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்படி மேலான மன உறுதியை நமக்கு கற்றுக் கொடுத்தார்கள். உயர்ந்த எண்ணங்களை சிறந்த லட்சியங்களை கற்றுக் கொடுத்தார்கள்.

நம்முடைய வாழ்க்கையில் குறிப்பாக இன்றைய கால தலைமுறைக்கு உயர்ந்த மேலான மன உறுதியை போதிக்க வேண்டிய, கற்றுக் கொடுக்க வேண்டிய, அதற்கு பயிற்சி கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

தாழ்ந்ததைக்கொண்டு திருப்தியுற்று, இந்த உலக வாழ்க்கையில் தானும் ஒரு இழிந்த நிலையில், சமுதாயமும் ஒரு இழிவான நிலையில் வாழ்ந்து கொண்டிருப்பதை ஏற்றுக் கொண்டவர்களாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!

நமது மார்க்கம் பல துறைகளை நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறது. ஒரு முஃமின் எந்தெந்த வழியிலெல்லாம் உயர்வை கண்ணியத்தை தேட வேண்டுமென்று.

அதில் குறிப்பாக, கல்வியில் நாம் உயர வேண்டும்.ஈமானுக்கு அடுத்ததாக இந்த இல்மைக் கொண்டு கண்ணியத்தை வைத்திருக்கின்றான்.

சிறந்த குர்ஆனுடைய கல்வியும், சுன்னா உடைய கல்வியும்,அது போன்று இந்த துன்யாவுடைய பொருளாதாரக் கல்வியும் இருந்தால்அந்தக் கல்வியையும் கற்றுக்கொள்ள வேண்டும்.

எல்லா விஷயங்களிலும் ஒரு முஃமின் கல்வியில் உயர்ந்து சிறந்து விளங்க வேண்டும்,  தன்னுடைய ஈமான் இஸ்லாம் தனித்துவத்தோடு.

இன்று, நம்மில் பலர் பொருளாதார கல்வியில் உயர்ந்தவர்கள் சிறந்தவர்கள் இருக்கிறார்கள். ஆனால், பொருளாதார கல்வியில் அவர்கள் உயர உயர தன்னுடைய இஸ்லாமிய அடையாளங்களை அழித்து கொண்டே போகிறார்கள்.

அந்தப் பொருளாதார கல்வியில் அவர்கள் மேல் செல்ல செல்ல தாங்கள் ஒரு முஸ்லிம் என்பதையே மறைத்து விட்டு, தன்னை இஸ்லாமியனாக அடையாளப் படுத்துவதை விட்டுவிட்டு தானும் அந்த நூறு கழுதைகளில் ஒரு கழுதை என்று இருந்து கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!

நமது வாலிபர்கள் கல்வியில் பின் தங்கிய நிலையிலேயே பார்க்கிறோம். இன்றைய காலகட்டத்தில் அவர்களுடைய மற்ற மற்ற தொடர்புகள் கல்வியில் அவர்களை பின்னடையச் செய்து கொண்டிருக்கிறது.

படிக்கிறார்கள். பட்டம் பெறுகிறார்கள். ஆனால், அதற்கேற்ற திறமை இருக்கிறதா? அதற்கேற்ற தனித்துவம் இருக்கிறதா என்றால், பேப்பர் இருக்கிறது. ஆனால் கல்வி இருப்பதில்லை. சான்றிதழ் இருக்கிறது. ஆனால் கல்வி இருப்பதில்லை. சான்றிதழ் வைத்து என்ன செய்வது? ஏட்டு சுரைக்காய் கூட்டுக்கு உதவாது.

நம்முடைய முன்னோர் அப்படி அல்ல. இந்த கல்விக்காக வேண்டி அல்லாஹ்வினுடைய கல்வியாக இருக்கட்டும், பொருளாதார மேம்படுத்தக்கூடிய கல்வியாக இருக்கட்டும். ஒவ்வொரு கல்வியையும் ஆழமாக, திருத்தமாக கற்றார்கள். அதில் தனித்துவத்தை பதித்தார்கள்.

இமாம் யஹ்யா இப்னு கசீர் சொல்கிறார்கள்:

«لَا يُسْتَطَاعُ الْعِلْمُ بِرَاحَةِ الْجِسْمِ»

அலட்சியம் உடையவர்களுக்கு கல்வி கிடைக்காது. உடல் சுகத்தோடு கல்வியை ஒருவர் தேடினால் அது கிடைக்காது.

நூல் : முஸ்லிம், எண் : 612.

இமாம் இப்னு ஹிஷாம்,ஹிஜ்ரி 708-ல் பிறந்து 761–ல் இறந்த ஒரு பெரிய கல்விமான். நூற்றுக்கணக்கான இஸ்லாமிய நூல்களையும்,இலக்கண இலக்கிய நூல்களையும் எழுதிய அறிஞர். அவர் சொல்கிறார்:

யார் கல்விக்காக சகித்திருப்பாரோ, பொறுத்திருப்பாரோ அதைப் பெற்று பாக்கியம் பெறுவார்கள். ஒரு அழகான பெண்ணை பெண் பேசுவதென்றால் அதற்காக செலவு செய்வதற்கும் நீ தயாராக இருக்க வேண்டும்.

எந்த ஒரு மனிதன் உயர்ந்ததை தேடுவதில் தன்னைத்தானே இழிவுபடுத்திக் கொள்ளவில்லையோ, அவர் காலமெல்லாம் இழிவானவர்களாகவே இருப்பான்.

உயர்ந்ததைத்தேடி கொஞ்சகாலம் தன்னை இழிவு படுத்திக் கொண்டால், அந்த உயர்ந்ததை அடைவதில் சிரமத்தை சகித்துக் கொண்டால், நீண்ட காலம் கண்ணியமாக வாழ்வான். அப்படி இல்லை என்றால் நீண்ட காலம் கேவலமாக வாழ்வான்.

இமாம் ஷாஃபியி ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள்: உன்னுடைய முயற்சி எவ்வாறோ அவ்வாறே கண்ணியங்களை உயர்வை பெறுவாய். உனக்கு கண்ணியம் வேண்டுமா? இரவெல்லாம் விழித்திரு!

நம்முடைய வாலிபர்களும் விழித்திருக்கிறார்கள்.ஆனால், வீணான காரியங்களில். நம்முடைய முன்னோர்கள் கல்வியை படிப்பதில் விழித்திருந்தார்கள். இன்றைய வாலிப சமுதாயமோ எதன் மூலம் அவர்களுடைய ஆரோக்கியம் கெடுமோ? அவர்களுடைய மனநிலை பாதிக்குமோ? அவர்களுடைய ஒழுக்கம் பாதிக்குமோ? அதில் விழித்திருக்கிறார்கள். இது கேவலத்திற்கு மேல் கேவலம்.

அல்லாஹ் நல்லவர்களைப் பற்றி சொல்கின்றான்.

كَانُوا قَلِيلًا مِنَ اللَّيْلِ مَا يَهْجَعُونَ

அவர்கள் இரவில் குறைவாகவே தூங்குவார்கள். (அல்குர்ஆன் 51 : 17)

முந்திய இரவில் தூங்கி பிந்திய இரவில் அல்லாஹ்வை வணங்குவதில், குர்ஆனை மனனம் செய்வதில், கல்வியைத் தேடுவதில் இருப்பார்கள்.

மேலும் இமாம் ஷாஃபியி ரஹிமஹுல்லாஹ் சொன்னார்கள்: யார் ஒருவர் உழைப்பே இல்லாமல் தனித்துவம் வேண்டும் என்று விரும்புகிறானோ,சிரமமே இல்லாமல் உயர்ந்ததை விரும்புகிறானோ அவன்முடியாததை வேண்டி வாழ்க்கையை வீணடிக்கின்றான்.

மேலும் சொன்னார்கள்: கைசேதமே! வாழ்க்கையை நீ இப்படியே கழித்துக் கொண்டிருக்கிறாயே! உனது நேரமெல்லாம் பலவீனத்திலும், சோம்பேறித்தனத்திலும் கழித்துக் கொண்டிருக்கிறாயே! உனக்கு முன்னால் சென்ற வீரர்களை அந்த சான்றோர்களை பார்!

எனது கை சேதமே! நீ உன் வாழ்க்கையை பலவீனத்திலும் சோம்பேறித்தனத்திலும் கழிக்கின்றாய்.

அன்பானவர்களே! ஒருநாள் அலட்சியத்திற்காக தனது வாழ்நாள் வருந்துகிறார்கள். நாம் வாழ்நாள் எல்லாம் அலட்சியமாக இருந்துவிட்டு ஒருமுறைகூட வருந்துவது இல்லை.

அந்த முன்னோர்கள் ஒரு நேர தொழுகை தவற விட்டால் வாழ்நாளெல்லாம் வருத்தப்படுவார்கள். நம்முடைய இளைஞர்களுக்கு வாழ்நாள் முழுவதும் தொழுகை தவறுகிறது. அதற்காக வருந்துவது கிடையாது.

எனவே, முதலாவதாக நம் கல்பில் ஆகிரத்துடைய விஷயத்தில் மறுமை உடைய உயர்ந்த நோக்கம் சிறந்த முயற்சி இருக்க வேண்டும்.

அதுபோன்று, இந்த உலகத்தில் எந்த இல்மு பயனளிக்கிறதோ அந்த இல்மை தேடுவதில் அதை தரமாக படித்து, மக்களுக்கு போதிப்பதில் அதன் மூலமாக நல்லதை செய்வதில் ஒரு முஸ்லிம் அலட்சியம் செய்து விடக்கூடாது.

குறிப்பாக ஆகிரத்தினுடைய விஷயத்தில் போட்டி போட வேண்டும்.

இமாம் ஹஸன் பஸரி ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள்: உன்னுடைய தீனுடைய விஷயத்தில் ஒருவன் உன்னிடம் போட்டி போட்டால் நீயும் அவனிடத்தில் போட்டி போடு. யார் துன்யாவை காட்டி போட்டி போடுகிறார்களோ அந்த துன்யாவை அவர்கள் கழுத்தில் தூக்கி எரிந்து போய்விடு.

மேலும் ஒரு முன்னோர் சொன்னார்கள்:நீ அல்லாஹ்வுடைய தீன் என்று வந்துவிட்டால், உன்னுடைய முயற்சி எப்படி இருக்க வேண்டுமென்றால், உன்னை முந்தி யாரும் சென்றுவிட கூடாது, அந்த அளவுக்கு நீ அல்லாஹ்வுடைய இபாதத்தில் முயற்சி செய்.

இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கிறது. அடுத்த ஜும்ஆவில் பார்ப்போம். அல்லாஹ்விடத்தில் நல்ல எண்ணத்திற்காக துஆ செய்ய வேண்டும். யா அல்லாஹ்! உயர்ந்த சிந்தனை உடையவனாக, நல்ல எண்ணங்கள் உடையவனாக, மேலான மன உறுதி உடையவனாக, என்னை ஆக்கு என்று.

யா அல்லாஹ்! மட்டரகமான, கீழ்த்தனமான, அற்பமான எண்ணங்களிலிருந்து அழிந்து போகக்கூடிய இந்த துன்யாவினுடைய ஆசைக்கு அடிமையாக்கி மறுமையை இழப்பதிருந்து, மக்களிடத்தில் இருக்கக்கூடிய அற்பத்தை விரும்பி உன்னிடத்தில் இருந்த உயர்ந்ததை இழக்க கூடியவனாக என்னை ஆக்கி விடாதே!

இப்படிப்பட்ட துஆக்களை கொண்டு ஆகிரத்தின் பக்கம் நம்முடைய கவனத்தை செலுத்தி, நம்முடைய முன்னோர்கள், சஹாபாக்கள், தாபியீன்கள் அவர்களுடைய வரலாறுகளை படித்து, அவர்களைப் போன்று உயர்ந்த லட்சியமுடையவர்களாக இருக்க ஆசைப்படுகிறேன் என்று துஆ செய்து, அதற்குக்குண்டான முயற்சி செய்து, நம்முடைய சமுதாய மக்களுக்கும்நல்ல சிந்தனையை வளர்ப்போமாக!

அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நமக்கு அந்த நல்ல பாக்கியத்தை தர வேண்டும். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்முடைய பாவங்களை மன்னித்து, அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரையும் நம்பிக்கை வைத்து, அவர்களுக்கு முழுமையாக கட்டுப்பட்டு வாழக்கூடிய மக்களாக நம்மை ஆக்கி அருள்புரிவானாக.

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ الْحَارِثِيُّ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ، حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، حَدَّثَنِي يُونُسُ بْنُ يُوسُفَ، عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ، قَالَ: تَفَرَّقَ النَّاسُ عَنْ أَبِي هُرَيْرَةَ، فَقَالَ لَهُ نَاتِلُ أَهْلِ الشَّامِ: أَيُّهَا الشَّيْخُ، حَدِّثْنَا حَدِيثًا سَمِعْتَهُ مِنْ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: نَعَمْ، سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " إِنَّ أَوَّلَ النَّاسِ يُقْضَى يَوْمَ الْقِيَامَةِ عَلَيْهِ رَجُلٌ اسْتُشْهِدَ، فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ: قَاتَلْتُ فِيكَ حَتَّى اسْتُشْهِدْتُ، قَالَ: كَذَبْتَ، وَلَكِنَّكَ قَاتَلْتَ لِأَنْ يُقَالَ: جَرِيءٌ، فَقَدْ قِيلَ، ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِيَ فِي النَّارِ، وَرَجُلٌ تَعَلَّمَ الْعِلْمَ، وَعَلَّمَهُ وَقَرَأَ الْقُرْآنَ، فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ: تَعَلَّمْتُ الْعِلْمَ، وَعَلَّمْتُهُ وَقَرَأْتُ فِيكَ الْقُرْآنَ، قَالَ: كَذَبْتَ، وَلَكِنَّكَ تَعَلَّمْتَ الْعِلْمَ لِيُقَالَ: عَالِمٌ، وَقَرَأْتَ الْقُرْآنَ لِيُقَالَ: هُوَ قَارِئٌ، فَقَدْ قِيلَ، ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ حَتَّى أُلْقِيَ فِي النَّارِ، وَرَجُلٌ وَسَّعَ اللهُ عَلَيْهِ، وَأَعْطَاهُ مِنْ أَصْنَافِ الْمَالِ كُلِّهِ، فَأُتِيَ بِهِ فَعَرَّفَهُ نِعَمَهُ فَعَرَفَهَا، قَالَ: فَمَا عَمِلْتَ فِيهَا؟ قَالَ: مَا تَرَكْتُ مِنْ سَبِيلٍ تُحِبُّ أَنْ يُنْفَقَ فِيهَا إِلَّا أَنْفَقْتُ فِيهَا لَكَ، قَالَ: كَذَبْتَ، وَلَكِنَّكَ فَعَلْتَ لِيُقَالَ: هُوَ جَوَادٌ، فَقَدْ قِيلَ، ثُمَّ أُمِرَ بِهِ فَسُحِبَ عَلَى وَجْهِهِ، ثُمَّ أُلْقِيَ فِي النَّارِ "، (صحيح مسلم -1905)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/