HOME      Khutba      மறுமை நம்பிக்கை வெற்றியின் இரகசியம் | Tamil Bayan - 422   
 

மறுமை நம்பிக்கை வெற்றியின் இரகசியம் | Tamil Bayan - 422

           

மறுமை நம்பிக்கை வெற்றியின் இரகசியம் | Tamil Bayan - 422


بسم الله الرحمن الحيم

மறுமை நம்பிக்கை வெற்றியின்இரகசியம்

إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

 

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

 

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

 

கண்ணியத்துக்கு உரியவர்களே! அல்லாஹ் அவனுடைய கண்ணியமிகு புத்தகம் அல்குர்ஆனில் அவனுடைய தூதர் நபி (ஸல்) அவர்களை பார்த்து குறிப்பிடுகிறான்;

إِنَّكَ مَيِّتٌ وَإِنَّهُمْ مَيِّتُونَ

(நபியே!) நிச்சயமாக நீரும் இறந்துவிடக்கூடியவரே. நிச்சயமாக அவர்களும் இறந்துவிடக் கூடியவர்கள்தான். (அல்குர்ஆன் 39 : 30)

 

இந்த உலகில் யாருக்கும் நிரந்தரமான வாழ்க்கை இல்லை. அவர் விரும்பியதை எல்லாம் இந்த உலகத்தில் அடைந்துவிட முடியாது என்ற அந்த உண்மை செய்தியை அல்லாஹ் அவனுடைய தூதருக்கும் நினைவூட்டிக் கொண்டே இருந்தான்.

 

யார் மரணத்தை குறித்து ஒவ்வொரு நிமிடமும் பயந்துக்கொண்டு இருந்தாரோ. அந்த தூதருக்கு அல்லாஹ் நினைவூட்டுவதை பாருங்கள்.

 

உங்களுக்கு மரணம் வரப்போகிறது;நீங்கள் மரணிக்கப் போகிறீர்;உங்களுக்கு சாவு நிச்சயம் என்று நம்மில் ஒருவருக்கு சொல்லப்பட்டால் நாம் முகம் சுழிப்போம். அதை துற்சகுனமாக பார்ப்போம். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!அல்லாஹ் தனது நபியை பார்த்து சொல்கிறான்;

 

நபியே! உங்களுக்கும் மரணம் உண்டு, நீங்களும் மரணிக்கக்கூடிய ஒருவர் தான். இந்த மக்களும் மரணிக்க கூடியவர்கள் தான்.(அல்குர்ஆன் 39:30)

 

அல்லாஹ் ஏன் இப்படி எச்சரிக்கை செய்கிறான்? ஆம் மரணம் என்பது அதிலிருந்து யாரும் தப்பிக்க முடியாத ஒன்று. ஆனால், இதை மக்கள் மறந்தது போன்று வேறு எதையும் மறக்கவில்லை.

 

யாராலும் மறுக்க முடியாது.ஆனால், எல்லாரும் மறந்து இருக்கிறோம். அல்லாஹ் மறுமை என்ற ஒரு வீட்டை நமக்கு வைத்து இருக்கிறான். ஆஹிரத் என்ற ஒரு இல்லத்தை அல்லாஹ் நமக்கு ஏற்படுத்தி இருக்கிறான்.சொர்க்கம் என்ற இன்பம் நிறைந்த ஒரு வீட்டை ஏற்படுத்தி இருக்கிறான். நரகம் என்ற ஒரு துன்பம் நிறைந்த வீட்டை, பாவிகளின் சிறைச்சாலையை அல்லாஹ் அங்கே ஏற்படுத்தி வைத்திருக்கிறான்.

கண்ணியத்துக்குரியவர்களே! ஆஹிரத் என்ற மறுமை என்ற உண்மையை நாம் ஏன் புரிந்தாக வேண்டும்? அப்போது தான் நாம் அந்த மறுமைக்காக வாழ்வோம்.அல்லாஹ்வுடைய இந்த தீனை, அல்லாஹ்வுடைய வேதத்தை,அவனுடைய நபியின் சுன்னாவை நாம் பின்பற்றுவதற்கு நமக்கு மிக எளிதாக இருக்கும்

 

காலை மாலை,இரவு பகல், வியாபாரம், தொழில், துறை, மஸ்ஜித், குடும்பம் என்று எல்லா நேரங்களிலும்,எல்லா இடங்களிலும் மறுமையை உள்ளத்தில் கொண்டு வரவில்லை என்றால்தீனை பின்பற்றுவது மிக சிரமமாக ஆகிவிடும்.ஏன் தீனையே வெறுக்க ஆரம்பித்து விடுவார்கள்.அல்லாஹ் பாதுக்காப்பானாக!

 

தீன் -அல்லாஹ்வுடைய மார்க்கம் குர்ஆன் சுன்னா யாருக்கு விருப்பமாக இருக்கும் என்றால்யார் மறுமையை நம்பிக்கை கொள்கிறார்களோ, மறுமைக்காக வாழ்கிறார்களோ அவர்களுக்குத் தான்.யாரால் இந்த தீனுக்காக வாழ்க்கையை அர்ப்பணிக்க முடியும் என்றால்யார் மறுமைக்காக வாழ்வார்களோ அவர்கள் தான்.

 

அல்லாஹ் அவனுடைய தூதர்களுக்கு இந்த பயிற்சியை கொடுத்தான்.அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் தங்களுடைய தோழர்களுக்கு இந்த பயிற்சியை கொடுத்தார்கள்.குர்ஆனின் மூலமாக, சுன்னாவின் மூலமாகதிரும்பத்திரும்ப மறுமையின் உண்மை நிலை போதிக்கப்படுகிறது.இந்த துன்யாவுடைய அற்பத்தன்மை, இந்த துன்யாவின் ஒரு கேவலமான நிலை நமக்கு புரியவைக்கப்படுகிறது.

 

அல்லாஹ் எப்படி எல்லாம் நம்மை எச்சரிக்கை செய்கிறான் என்பதை கவனியுங்கள். அப்போது இறக்கப்பட்ட அந்த வசனம் இன்று நமக்கு நமது நிலைக்காக இறக்கப்பட்டது போன்று இருப்பதை நீங்கள் பார்பீர்கள்.

 

அல்லாஹ் கூறுகிறான்;

مِنْكُمْ مَنْ يُرِيدُ الدُّنْيَا وَمِنْكُمْ مَنْ يُرِيدُ الْآخِرَةَ

உங்களில் இவ்வுலகை விரும்புபவர்களும் உள்ளனர். உங்களில் மறுமையை விரும்புகிறவர்களும் உள்ளனர். (அல்குர்ஆன் 3 : 152)

 

உங்களில் ஒரு கூட்டம் இருக்கிறது.அவர்கள் மறுமையை தேடக்கூடியவர்கள். மறுமைக்காக யார் வாழ்கிறார்களோ அவர்கள் தான் அல்லாஹ்வுடைய கட்டளைகளை நிலை நிறுத்த முடியும். அல்லாஹ்வுடைய தீனை பூமியில் ஓங்கவைக்க முடியும்

 

மேலும் அல்லாஹ் கூறுகிறான்;

تُرِيدُونَ عَرَضَ الدُّنْيَا وَاللَّهُ يُرِيدُ الْآخِرَةَ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ

நீங்கள் இவ்வுலகப் பொருளை விரும்புகிறீர்கள். அல்லாஹ்வோ (உங்களுக்கு) மறுமை வாழ்க்கையை விரும்புகிறான். அல்லாஹ் (அனைவரையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான். (அல்குர்ஆன்8 : 67)

 

இந்த வசனத்தில் அல்லாஹ் நம்மைப் பார்த்து கேட்கிறான்;கஃபிர்களை பார்த்து கேட்கப்பட்ட வசனம் அல்ல. முஸ்லிம்களே! முஃமின்களே! உங்களுக்கு உலக வாழ்க்கையின் மீது தான் மோகம் ஏற்படுகின்றதா?அதை தான் நீங்கள் நாடி தேடி வாழ்கிறீர்களா?ஆனால் அல்லாஹ் உங்களுக்கு மறுமையை நாடி இருக்கிறான்.அல்லாஹ் மிகைத்தவன்; ஞானம் நிறைந்தவன்.

أَرَضِيتُمْ بِالْحَيَاةِ الدُّنْيَا مِنَ الْآخِرَةِ فَمَا مَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا فِي الْآخِرَةِ إِلَّا قَلِيلٌ

மறுமையை விட இவ்வுலக வாழ்க்கையைக் கொண்டு நீங்கள் திருப்தியடைந்து விட்டீர்களா? மறுமை(யின் வாழ்க்கை)க்கு முன்பாக இவ்வுலக வாழ்க்கை வெகு அற்பமானதே! (அல்குர்ஆன்9 : 38)

 

இன்று நமது நிலையை பாருங்கள்;அல்லாஹ்வுடைய தீனை இந்த துன்யாவுக்காக இழக்க நாடிகிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!

 

தீன்,துன்யா என்ற போட்டி வந்து விட்டால் அங்கு தீனை மறப்பவர்கள் நம்மில் அதிகமாக இருக்கிறார்கள். தீனை விட்டு கொடுப்பவர்கள் அதிகமாக இருக்கிறார்கள்.துன்யாவை எடுத்துக்கொள்பவர்கள் அதிகமாக இல்லை. அதற்கு காரணம்? இந்த துன்யாவின் உண்மை நிலை புரியவில்லை. இந்த துன்யாவுடைய ஆசை உள்ளத்தில் குடிக்கொண்டு இருக்கிறது

 

கன்னியத்துக்கு உரியவர்களே! இந்த உலகத்தின் செல்வம் அவர் விரும்பிய அளவுக்கு ஒருவருக்கு கொடுக்கப்படுகிறது என்று வைத்துக்கொள்ளுங்கள்;ஆட்சி, அதிகாரம், புகழ், நிலம், வசதி, வாழ்க்கை இதை எல்லாம் ஒரு மனிதன் அவன் விரும்பக்கூடிய அளவுக்கு அவனுக்கு கொடுக்கப்பட்டாலும் கடைசியில் அவனுடைய முடிவு மரணத்தில் தான் முடியும்!

 

அவன் இந்த துன்யாவில் இருந்து எதையும் கொண்டு செல்ல முடியாது. அல்லாஹ் ரப்புல் ஆலமின் குறிப்பாக ஹாருனை குறித்து சூரத்துல் கசஸில் குறிப்பிடுகிறான்.

 

வெள்ளி, தங்கம் என்று துன்யாவுடைய செல்வங்கள் அவனை போன்று ஒருவருக்கு கொடுக்கப்படவில்லை.அந்த அளவுக்கு துன்யாவில் செல்வங்களை பெற்றவன்.அல்லாஹ் அவனுடைய வாழ்க்கையை நமக்கு கூறுகிறான் பாருங்கள்;

وَمَا أُوتِيتُمْ مِنْ شَيْءٍ فَمَتَاعُ الْحَيَاةِ الدُّنْيَا وَزِينَتُهَا وَمَا عِنْدَ اللَّهِ خَيْرٌ وَأَبْقَى أَفَلَا تَعْقِلُونَ

(நபியே! கூறுவீராக:) உங்களுக்குக் கொடுக்கப்பட்டிருப்பவை எல்லாம் இவ்வுலக வாழ்க்கையிலுள்ள அற்ப சுகமும், அதனுடைய அலங்காரமும்தான். (எனினும்,) அல்லாஹ் விடத்தில் இருப்பவையோ மிக்க மேலானவையும் நிலையானவையும் ஆகும். இதை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 28 : 60)

 

உங்களுக்கு எதுவெல்லாம் கொடுக்கப்பட்டதோ என்பதில் நாம் ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். அதாவது, இன்று நம்மிலே பலருக்கு தனது அறிவின் மீது நம்பிக்கை, தனது திறமையின் மீது நம்பிக்கை, தனது தொழிலின் மீது நம்பிக்கை அல்லது தன்னுடைய படிப்பின் மீது நம்பிக்கை என்று ஹாருனை போன்று தான் அவர்களும் உள்ளத்திலே நம்பிக்கை கொண்டு இருக்கிறார்கள்.

 

ஹாரூன் கூறினான்;

قَالَ إِنَّمَا أُوتِيتُهُ عَلَى عِلْمٍ عِنْدِي

 

இந்த செல்வம் எல்லாம் எனது திறமையினால் எனக்கு கொடுக்கப்பட்டது.(அல்குர்ஆன் 28 : 78)

அல்லாஹ் கொடுத்தது என்று அவன் நம்பிக்கை கொள்ளவில்லை. இப்படி தான் முஸ்லிம்களில் பலரும் எண்ணிக்கொண்டு இருக்கிறார்கள். எனது திறமையால் சம்பாதித்தேன், எனது அறிவால் சம்பாதித்தேன், என்னுடைய உழைப்பால் சம்பாதித்தேன்.

 

அல்லாஹ் சொல்கிறான்; உனது அறிவால், உனது திறமையால், உனது உழைப்பால் எதுவும் கொடுக்கப்படவில்லை. எது கொடுக்கப்பட்டதோ அது என் புறத்தில் இருந்து உனக்கு கொடுக்கப்பட்டது

 

மனிதனுக்கு எது விதியில் எழுதப்பட்டு இருக்கிறதோ அதை தவிர அதிகமாக அவனால் எதையும் அடைந்து கொள்ள முடியாது.அல்லாஹ் கொடுக்கிறான் என்றால் அது சோதனையாக கொடுக்கின்றான்.

 

இதை நினைத்து பார்க்க வேண்டும். அல்லாஹ்விடம் இருக்கின்ற அருட்கொடைகளை நினைக்கும்போது அமல்களை அதிகப்படுத்துவோம்.அல்லாஹ்விடம் இருக்கின்ற தண்டனையை நினைக்கும் போது பாவத்தை விட்டு வெகுதூரம் விலகி விடுவோம்.

 

அல்லாஹ்விடம் இருக்கின்ற அருட்கொடையை நினைக்கவில்லை என்றால் இந்த துன்யாவின் சுகத்தில் தான் அதிகம் மூழ்கி கொண்டிருப்போம்.அல்லாஹ் பாதுகாப்பானாக!

 

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் இது போன்ற வசனங்களைக் கொண்டு தங்களது தோழர்களை அதிகம் அதிகம் நினைவூட்டி கொண்டு இருந்தார்கள்;அச்சுறுத்திக்கொண்டு இருந்தார்கள்.

 

எப்போது எல்லாம் சந்தர்ப்பங்கள் கிடைக்குமோ அப்போதெல்லாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) தங்களது தோழர்களுக்கு இந்த உலக வாழ்க்கையின் அற்ப தன்மையை புரியவைத்து கொண்டே இருந்தார்கள்.மறுமையின் நிரந்தர, நிலையான தன்மையை அவர்களின் சிந்தனையில் கொண்டு வந்து கொண்டே இருந்தார்கள்.

 

நபி (ஸல்) சொல்லக்கூடிய இரு அறிவுறைகளை கவனியுங்கள்;

حَدَّثَنَا قَيْسُ بْنُ أَبِي حَازِمٍ، قَالَ: سَمِعْتُ مُسْتَوْرِدًا، أَخَا بَنِي فِهْرٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا الدُّنْيَا فِي الآخِرَةِ إِلَّا مِثْلُ مَا يَجْعَلُ أَحَدُكُمْ إِصْبَعَهُ فِي اليَمِّ فَلْيَنْظُرْ بِمَاذَا يَرْجِعُ»: " هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ، وَإِسْمَاعِيلُ بْنُ أَبِي خَالِدٍ [ص:562] يُكْنَى أَبَا عَبْدِ اللَّهِ. وَوَالِدُ قَيْسٍ أَبُو حَازِمٍ اسْمُهُ: عَبْدُ بْنُ عَوْفٍ وَهُوَ مِنَ الصَّحَابَةِ"سنن الترمذي2323 -]حكم الألباني] : صحيح

இந்த உலகத்தின் செல்வத்தை கொஞ்சம் கற்பனையில் கொண்டு வந்து பாருங்கள்; ஏழு கண்டங்களில் உள்ள அத்தனை செல்வங்களும் ஒரு மனிதனுக்கு கொடுக்கப்பட்டுவிட்டது.இந்த பூமியின் மேற்பரப்பில் உள்ள அத்தனை நிலங்களுக்கும் அவன் ராஜாவாக ஆகிவிட்டான் என்றாலும் அவனிடத்தில் இருக்கக்கூடிய அந்த துன்யாவின் செல்வங்களை மறுமையில் அல்லாஹ்விடத்தில் இருக்கக்கூடிய அந்த நிஃமத்களோடுஒப்பிட்டு பார்க்கும் போது உங்களில் ஒருவர் தனது விரலை கடலில் நுழைத்து எடுத்தால் அவ்விரலின் நுனியில் என்ன ஈரம் ஒட்டிக்கொண்டு இருக்கும்மோ அது தான் இந்த முழு துன்யாவும் என்று சொன்னார்கள்

 

அறிவிப்பாளர்: கைஸ் இப்னு அபீ ஹாசிம் ரழியல்லாஹுஅன்ஹு, நூல்: திர்மிதி, எண்: 2323.

 

இரண்டாவது அறிவுரையை கவனியுங்கள்;

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِالسُّوقِ، دَاخِلًا مِنْ بَعْضِ الْعَالِيَةِ، وَالنَّاسُ كَنَفَتَهُ، فَمَرَّ بِجَدْيٍ أَسَكَّ مَيِّتٍ، فَتَنَاوَلَهُ فَأَخَذَ بِأُذُنِهِ، ثُمَّ قَالَ: «أَيُّكُمْ يُحِبُّ أَنَّ هَذَا لَهُ بِدِرْهَمٍ؟» فَقَالُوا: مَا نُحِبُّ أَنَّهُ لَنَا بِشَيْءٍ، وَمَا نَصْنَعُ بِهِ؟ قَالَ: «أَتُحِبُّونَ أَنَّهُ لَكُمْ؟» قَالُوا: وَاللهِ لَوْ كَانَ حَيًّا، كَانَ عَيْبًا فِيهِ، لِأَنَّهُ أَسَكُّ، فَكَيْفَ وَهُوَ مَيِّتٌ؟ فَقَالَ: «فَوَاللهِ لَلدُّنْيَا أَهْوَنُ عَلَى اللهِ، مِنْ هَذَا عَلَيْكُمْ»، (صحيح مسلم  (2957

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) தங்களது தோழர்களுடன் பயணித்துக்கொண்டு இருக்கிறார்கள்.மதினாவின் தெருக்கள் வழியாக கடந்து செல்லும் போது அப்போது தூதர் (ஸல்) அவர்கள் முடமான இறந்து கிடைகின்ற ஒரு ஆட்டை பார்கிறார்கள்.

 

-ஒரு செத்துப்போன ஆடு அதை இயற்கையாக பார்க்கும்போது ஒரு விதமான அருவருப்பு படும் கண்டிப்பாக. ஆனால், இந்த துன்யாவின் அருவருப்பை விட உலகத்தின் மோகம் தமது உள்ளத்தில் குடிக்கொண்டு இருப்பது மிக மோசமானது.

எனவே அதை நீங்குவதற்காக நபி (ஸல்) அவர்கள் குப்பை மேட்டில் தூக்கி போடப்பட்டு இருக்கிற அந்த செத்த ஆட்டின் அருகே சென்று அதனுடைய காதை பிடித்து அதை சற்று உயர்த்தி கேட்கிறார்கள்

أَيُّكُمْ يُحِبُّ أَنَّ هَذَا لَهُ بِدِرْهَمٍ

ஒரு திர்ஹமுக்கு பகரமாக விலை கொடுத்து இதை யாராவது வாங்க விரும்புவீர்களா? என்று கேட்கிறார்கள்; சஹாபாக்கள் சொன்னார்கள்;

 

அல்லாஹ்வின் தூதரே! சும்மா கிடைத்தாலும் கூட அதை நாங்கள் வாங்க விரும்பமாட்டோம். இந்த செத்து போன ஆட்டை வைத்து நாங்கள் என்ன செய்வது அப்போது நபி (ஸல்) அவர்கள் மீண்டும் அங்கே கேட்கிறார்கள்;

 

இது உங்களுக்கு கிடைக்க விருப்பம் இல்லையா? என்று. தோழர்கள் திரும்பிச் சொல்கிறார்கள், மீண்டும் சொல்கிறார்கள்;

 

அல்லாஹ்வின் தூதரே!இந்த மாறி நொன்டியான, நோய் நொடி உள்ள ஆடு உயிரோடு இருந்தால் கூட யாரும் விரும்ப மாட்டார்களே! அதை வாங்க பிரிய பட மாட்டார்களே! அதுவும் இறந்து போய் கிடக்கக்கூடிய அந்த ஆட்டை ஒரு திரகத்திற்கு பகரமாக வாங்க விரும்புவார்களா?

 

அதற்க்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்;

فَوَاللهِ لَلدُّنْيَا أَهْوَنُ عَلَى اللهِ، مِنْ هَذَا عَلَيْكُمْ

உங்களில் ஒருவர் இந்த ஆட்டை கேவலமாக பார்பதை விட இந்த ஆட்டை மதிப்பற்றதாக பார்ப்பதைப் போல் அதை விட அல்லாஹ் இந்த துன்யாவை மதிப்பற்றதாக பார்க்கிறான்

பார்கிறான்.(1)

 

அறிவிப்பாளர்: ஜாபிர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 2957.

 

மக்களில் இரண்டு வகை இருக்கிறார்கள்.ஒரு கூட்டத்தார் இந்த துன்யாவை விற்று ஆஹிரத்திற்காக வாழக்கூடியவர்கள்;இன்னும் ஒரு கூட்டம் இருக்கிறார்கள். அவர்கள் மதிப்பு மிக்க இன்பங்களும், சுகங்களும், அல்லாஹ்வின் அருட்கொடைகளும், அல்லாஹ்வின் தரிசனமும் நிறைந்த அந்த சொர்க்க வாழ்க்கையை விட்டு விட்டு அற்பமான, கேவலமான இந்த துன்யவிற்க்காக வாழக்கூடியவர்கள்

 

அல்லாஹ் இந்த இரண்டு கூட்டத்தையும் நமக்கு குர்ஆனில் சொல்லிக்காட்டுகிறான்.மக்களில் இருக்கின்ற இந்த இரண்டு கூட்டங்களையும் அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான்

காஃபிர்கள், இறை நிராகரிப்பவர்கள், இனைவைப்பவர்கள், பாவிகள், அல்லாஹ்வின் கட்டளைகளை மீறக்கூடியவர்கள், அல்லாஹ்வுடைய சட்டங்களை பால்படுத்த கூடியவர்கள், அல்லாஹ்வுடைய தீனை மறந்து துன்யாவிற்காக வாழக்கூடியவர்கள்,அல்லாஹ்வின் விதியை மறந்தவர்கள், குர்ஆனை மறந்தவர்கள், இவர்களை எல்லாம் அல்லாஹ் அல்குர்ஆனிலே குறிப்பிடும் போது எப்படி சொல்கிறான் தெரியுமா?

أُولَئِكَ الَّذِينَ اشْتَرَوُا الْحَيَاةَ الدُّنْيَا بِالْآخِرَةِ فَلَا يُخَفَّفُ عَنْهُمُ الْعَذَابُ وَلَا هُمْ يُنْصَرُونَ

இவர்கள்தான் மறுமை (வாழ்க்கை)க்குப் பதிலாக இவ்வுலக வாழ்க்கையை விலை கொடுத்து வாங்கிக் கொண்டவர்கள். ஆதலால், அவர்களுக்கு (கொடுக்கப்படும்) வேதனை ஒரு சிறிதும் இலேசாக்கப்பட மாட்டாது. அவர்கள் (ஒரு) உதவி(யும்) செய்யப்பட மாட்டார்கள்.

இந்த மக்கள் யார்? இவர்கள் மறுமைக்கு பகரமாக இந்த அற்பமான துன்யாவை வாங்கியவர்கள்(அல்குர்ஆன் 2 : 86)

 

இன்னொரு கூட்டம் இருக்கிறார்கள்; அல்லாஹ் அவர்களை எப்படி சொல்கிறான் பாருங்கள்;

فَلْيُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ الَّذِينَ يَشْرُونَ الْحَيَاةَ الدُّنْيَا بِالْآخِرَةِ وَمَنْ يُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ فَيُقْتَلْ أَوْ يَغْلِبْ فَسَوْفَ نُؤْتِيهِ أَجْرًا عَظِيمًا

மறுமை (வாழ்க்கை)க்காக இவ்வுலக வாழ்க்கையைத் துறப்பவர்கள் அல்லாஹ்வின் பாதையில் போர் செய்யட்டும். எவரேனும் அல்லாஹ்வின் பாதையில் போர் புரிந்து வெட்டப்பட்டாலும் அல்லது வெற்றி பெற்றாலும் நாம் அவருக்கு அதிசீக்கிரத்தில் மகத்தான கூலியைக் கொடுப்போம். (அல்குர்ஆன் 4 : 74)

 

அல்லாஹ்வுடைய தீனுக்காக உயிரை கொடுக்க கூடிய ஒரு கூட்டம் இருக்கிறார்கள்.இந்த துன்யாவிலே வேறு என்ன இருக்கிறது? எப்படி இருந்தாலும் சாக தான் போகிறோம்.நோய் நொடியில் சாவு, இல்லை என்றால் செல்வம் இருந்தாலும் சுகத்தில் சாவு, சிறு வயதிலும் சாவு, வாலிபத்திலும் சாவு, வயோதிகத்திலும் சாவு, எந்த ஒரு நிலையிலும் மரணம் நமக்கு வராது என்று உறுதியாக சொல்ல முடியாது, எந்த மருத்துவரும் எந்த சான்றிதழையும் வழங்க முடியாது.

 

ஒரு சின்ன சின்ன பொருட்களுக்கு எல்லாம் கேரண்டிகொடுப்பார்கள். ஒரு வருசம், இரண்டு வருசம், ஆறு மாதம் என்று. மனிதனுடைய உயிருக்கு கேரண்டிகொடுக்க முடியுமா?

 

எனவே மறுமை வாழ்க்கைக்காக இவ்வுலகை புறக்கணிப்பவர்கள் அல்லாஹ்விற்காக பல தியாகங்களை செய்வார்கள்.

 

கண்ணியமிக்க தோழர்களின் வாழ்க்கையை நினைத்து பாருங்கள்.சுஹைப் அர்ரூமி (ரலி) மக்காவிலிருந்து மதினாவை நோக்கி ஹிஜ்ரத் செய்தவர்களாக வெளியேறுகிறார். குறைஷிகள், காஃபிர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து சூழ்ந்து கொள்கிறார்கள்.அவரை தடுக்கிறார்கள்;எங்களுடைய இந்த ஊருக்கு வரும் போது ஒரு ஏழையாக,செல்வம் அற்றவனாக, ஒரு பரதேசியாக வந்தாய். இவ்வளவு செல்வங்களை எல்லாம் நீ இங்கே சம்பாதித்ததற்கு பிறகு அவற்றை எல்லாம் எடுத்துக் கொண்டு சென்று விட நாங்கள் உன்னை அனுப்பதிப்போமா! என்று கேட்கிறார்கள்

 

அப்போது சுஹைப் அர்ரூமி (ரலி) அந்த மக்களைப் பார்த்து சொல்கிறார்கள்; நீங்கள் எனது செல்வத்திற்காகத்தான் என்னை நீங்கள் தடுக்கிறிர்கள் என்றால் எனது செல்வங்கள் எல்லாம் இங்கே இங்கே அமானிதமாக இந்த இந்த இடத்திலே இருக்கிறது. அந்த செல்வங்களை எல்லாம் எடுத்து கொள்ளுங்கள். என்னை விட்டு விடுங்கள். உங்களுக்கு தெரியும்; என்னை நெருங்க நினைத்தால் உங்களிலே குறியாக அம்பு எரியக்கூடிய வீரன் நான் என்று நீங்கள் அறிவீர்கள். எனது கூட்டிலே அம்பு இருக்கின்ற வரை உங்களில் யாரும் என்னை நெருங்க முடியாது என்று ஈமானிய துனிவில் அங்கே சொல்கிறார்கள்.

 

அந்த காஃபிர்களுக்கு துன்யாவில் வேறு என்ன வேண்டும்? அந்த துன்யாவை எடுத்துக்கொண்டு சுஹைபை விட்டு விடுகிறார்கள். இந்த சுஹைப் மதினாவுக்கு வருகிறார்கள். மஸ்ஜித் நபவியில் நுழைகிறார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவரை பார்த்து சொல்கிறார்கள்(2)

رَبِحَ الْبَيْعُ أَبَا يَحْيَى

சுஹைபே! வியாபாரம் லாபம் நிறைந்த வியாபாரம்.

சுஹைபே!  வியாபாரம் லாபம் நிறைந்த வியாபாரம்.

 

சுஹைபுக்கு புரியவில்லை மீண்டும் சொல்கிறார்கள்; சுஹைபே! அல்லாஹ் உனக்காக வசனத்தை இறக்கி இருக்கின்றான்.

وَمِنَ النَّاسِ مَنْ يَشْرِي نَفْسَهُ ابْتِغَاءَ مَرْضَاتِ اللَّهِ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ

மக்களில் முஃமின்களில் இப்படியும் சிலர் இருக்கின்றார்கள்.அல்லாஹ்வின் பொருத்ததிற்காக தன்னையே விட்டு விட்டு வந்தவர்கள். அல்லாஹ்வின் பொருத்ததிற்காக தன்னை விலை பேசி விற்றுவிட்டு வந்தார்கள். இப்படி பட்ட முஃமின்கள் மீது அல்லாஹ் அருளுடையவன், கருனைவுடையவன். (அல்குர்ஆன் 2 : 207)

 

இன்று தமது முஸ்லிம் சமுதாயத்திற்கு படித்தவர்கள் தேவையில்லை; செல்வந்தர்கள் தேவை இல்லை; திறமைசாலிகள் தேவை இல்லை; நமது சமுதாயத்திற்கு யார் தேவை என்றால், யார் துன்யாவை விலை பேசுகிறார்களோ, துன்யாவை விற்கிறார்களோ ஆஹிரத்திற்காக. அவர்களால் தான் இந்த இஸ்லாம் ஓங்கும்.

 

அவர்களால் தான் அல்லாஹ்வுடைய சட்டங்களை எடுத்து நடத்த முடியும். அவர்களால் தான் இந்த உலக அற்ப இன்பத்திற்காக இந்த உலக சுகத்திற்காக மார்க்கத்தை விலை பேச மாட்டார்கள்.

அவர்கள்தான் அல்லாஹ்வுடைய சட்டங்களில் உறுதியாக இருப்பார்கள்; இந்த துன்யா வாழ்க்கையில் எதை இழந்தாலும் சரி தீனிலே ஒரு கடு அளவு கூட சமரசம் செய்து கொள்ள மாட்டார்கள்.

 

அது அல்லாமல் துன்யாவுக்காக வாழ்கிறார்கள் என்றால், ஆஹிரத்தை அற்பமாக நினைக்கிறார்கள் என்றால் அவர்கள் தீனுடைய மிக பெரிய சட்டங்களாக இருந்தாலும் கூட துன்யாவின் அற்ப லாபத்திற்காக விலை பேசுவார்கள். எந்த அளவு காலம் அடுத்து மாறிக்கொண்டு இருக்கிறது என்றால், அடுத்து இந்த நாட்டில் முஸ்லிம்கள் ஜமாஅத்தாக தொழக்கூடாது என்றால் அதற்கு கூட சிலர் சப்போர்ட்செய்வார்கள்; அதரவு கொடுப்பார்கள். அந்த அளவுக்கு இன்றைய தலைவர்கள் உருவாகிக் கொண்டு இருக்கிறார்கள்.

 

இன்னும் இப்படியே தீனுடைய எந்த ஒரு விஷயமாக இருந்தாலும் சரி அதில் சமரசம் செய்து விட்டுக் கொடுத்துக்கொண்டே இருக்கிறோம்.இந்த துன்யா மட்டும் வேண்டும் என்று போராடிக்கொண்டு இருக்கிறோம். எப்படி உலக இன்பம்,உலக சுகம், உலக பொருளாதாரம் என்று இந்த துன்யாவுக்காக மட்டும் என்று போராடி கொண்டு இருக்கிறோமே தவிர, தீனுக்காக, அல்லாஹ்வுடைய கட்டளைக்காக மார்க்கத்திற்காக நம்மில் போராடக்கூடியவர்கள் குரல் கொடுக்கக்கூடியவர்கள் குறைவு தான்.

 

உம்மத்துடைய அறிவு, உழைப்பு, நேரம் அற்ப துன்யாவை அடிப்படையாய் வைத்து அதற்காக மக்களை ஒன்று சேர்ப்பதற்காக செலவழிக்கப்பட்டு கொண்டு இருக்கிறது.

 

ஆனால், இன்று அல்லாஹ்வுடைய தீனுக்கு எதிராக பிரச்சாரம் நடக்கிறது. அதற்கு எதிராக சட்டம் இயற்றப்படுகிறது. அதற்கு எதிராக இன்று முஸ்லிம்கள் மீது கல்விரீதியாக,தொழில்ரீதியாக அவருடைய குடும்பரீதியாக, சமுதாயரீதியாக அத்தனை எதிரான சட்டங்களும் அவர்களின் மீது தினிக்கப்படுகிறது. அதை பற்றியெல்லாம் கண்டுக் கொல்லாமல் மூலையில் அடங்கி கொண்டு இருக்கிறோம்.

 

ஆகவே,கன்னியத்துக்குரியவர்களே! மீண்டும் ஒரு முறை நமது மறுமை நம்பிக்கையை சரிபார்க்க வேண்டிய கட்டத்தில் இருக்கிறோம்.

 

மறுமையை நினைத்துப்பார்த்து ஆஹிரத்திர்காக தான் வாழ்கிறோமா? அல்லது அற்ப துன்யாவுக்காக வாழ்கிறோமா என்று அல்லாஹ்விற்கும் நமக்கும் இடையில் ஒரு உறுதியை,ஒரு நம்பிக்கையை, அந்த பிடிமானமான ஒரு எண்ணத்தை கொண்டு வர வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.

 

இந்த துன்யாவுக்காக வாழ்ந்தவர்கள் எல்லாம் இந்த துன்யாவிலிருந்து எதையும் கொண்டு செல்லவில்லை.

ஆஹிரத்திற்காக வாழக்கூடியவர்கள் இந்த துன்யாவிலிருந்து அதிகம் கொண்டு சென்று இருகிறார்கள்.கண்டிப்பாக தவறாது

 

ஆஹிரத்திற்காக வாழக்கூடியவர்கள் ஆஹிரத்திற்காக எதை செய்தார்களோ கண்டிப்பாக அதை இங்கிருந்து எடுத்துச் செல்வார்கள்.அப்படிபட்ட நல்ல மக்களில் உங்களையும், எங்களையும் ஆக்கி அருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم

குறிப்புகள் :

குறிப்பு 1).

 حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا سُلَيْمَانُ يَعْنِي ابْنَ بِلَالٍ، عَنْ جَعْفَرٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّ بِالسُّوقِ، دَاخِلًا مِنْ بَعْضِ الْعَالِيَةِ، وَالنَّاسُ كَنَفَتَهُ، فَمَرَّ بِجَدْيٍ أَسَكَّ مَيِّتٍ، فَتَنَاوَلَهُ فَأَخَذَ بِأُذُنِهِ، ثُمَّ قَالَ: «أَيُّكُمْ يُحِبُّ أَنَّ هَذَا لَهُ بِدِرْهَمٍ؟» فَقَالُوا: مَا نُحِبُّ أَنَّهُ لَنَا بِشَيْءٍ، وَمَا نَصْنَعُ بِهِ؟ قَالَ: «أَتُحِبُّونَ أَنَّهُ لَكُمْ؟» قَالُوا: وَاللهِ لَوْ كَانَ حَيًّا، كَانَ عَيْبًا فِيهِ، لِأَنَّهُ أَسَكُّ، فَكَيْفَ وَهُوَ مَيِّتٌ؟ فَقَالَ: «فَوَاللهِ لَلدُّنْيَا أَهْوَنُ عَلَى اللهِ، مِنْ هَذَا عَلَيْكُمْ»، (صحيح مسلم (2957)

குறிப்பு 2).

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِبْرَاهِيمَ بْنِ شَبِيبٍ الْأَصْبَهَانِيُّ، ثنا هَارُونُ بْنُ عَبْدِ اللهِ الْحَمَّالُ، ثنا مُحَمَّدُ بْنُ الْحَسَنِ بْنِ زَبَالَةَ الْمَخْزُومِيُّ، ثنا عَلِيُّ بْنُ عَبْدِ الْحَمِيدِ بْنِ زِيَادِ بْنِ صَيْفِيِّ بْنِ صُهَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، عَنْ صُهَيْبٍ، أَنَّ الْمُشْرِكِينَ لَمَّا أَطَافُوا بِرَسُولِ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمْ، فَأَقْبَلُوا عَلَى الْغَارِ، وَأَدْبَرُوا قَالَ: وَا صُهَيْبَاهُ، وَلَا صُهَيْبَ لِي، فَلَمَّا أَرَادَ رَسُولُ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمِ الْخُرُوجَ بَعَثَ أَبَا بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا إِلَى صُهَيْبٍ، فَوَجَدَهُ يُصَلِّي، فَقَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ لِلنَّبِيِّ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمْ: وَجَدْتُهُ يُصَلِّي، فَكَرِهْتُ أَنْ أَقْطَعَ عَلَيْهِ صَلَاتَهُ. قَالَ: «أَصَبْتَ» ، وَخَرَجَا مِنْ لَيْلَتِهِمَا، فَلَمَّا أَصْبَحَ خَرَجَ حَتَّى أَتَى أُمَّ رُومَانَ زَوْجَةَ أَبِي بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ، فَقَالَتْ: أَلَا أَرَاكَ هَهُنَا، وَقَدْ خَرَجَ أَخَوَاكَ، وَوَضَعَا لَكَ شَيْئًا مِنْ زَادِهِمَا. قَالَ صُهَيْبٌ: فَخَرَجْتُ حَتَّى دَخَلْتُ عَلَى زَوْجَتِي أُمِّ عُمَرَ، فَأَخَذْتُ سَيْفِي وَجُعْبَتِي وَقَوْسِي حَتَّى أَقْدَمَ عَلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ، فَأَجِدُهُ وَأَبَا بَكْرٍ رَضِيَ اللهُ عَنْهُ جَالِسَيْنِ، فَلَمَّا رَآنِي أَبُو بَكْرٍ قَامَ إِلَيَّ فَبَشَّرَنِي بِالْآيَةِ الَّتِي نَزَلَتْ فِيَّ، وَأَخَذَ بِيَدِي فَلُمْتُهُ بَعْضَ اللَّائِمَةِ فَاعْتَذَرَ، وَرَبَّحَنِي رَسُولُ اللهِ صَلَّى الله عَلَيْهِ وَسَلَّمْ، فَقَالَ: «رَبِحَ الْبَيْعُ أَبَا يَحْيَى»( المعجم الكبير للطبراني7308 -)

 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/