HOME      Khutba      காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் (அமர்வு 3-8) | Tamil Bayan - 387   
 

காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் (அமர்வு 3-8) | Tamil Bayan - 387

           

காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் (அமர்வு 3-8) | Tamil Bayan - 387


காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் - (அமர்வு 3)

ஜுமுஆ குத்பா தலைப்பு : காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் (அமர்வு 3)

வரிசை : 387

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 22-01-2016| 12-04-1437

بسم الله الرحمن الرّحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் ரப்புல் ஆலமீனை பயந்து கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறியவனாக, அல்லாஹ்வின் அச்சத்தின் படியே வாழ்வை அமைத்துக் கொள்ளுமாறு, அல்லாஹ்வின் பயத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக,

நம்முடைய தனிப்பட்ட வாழ்க்கையிலும், சமுதாய வாழ்க்கையிலும், குடும்ப வாழ்க்கையிலும் அல்லாஹ்வின் அச்சத்தின் படி வாழும்படி எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் அச்சத்தை நியாபகப் படுத்தியவனாக இந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கிறேன்.

அன்பிற்குரியவர்களே! அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நமக்கு சிறந்த ஒரு மார்க்கத்தை தந்திருக்கிறான். சிறந்த ஒரு வழிகாட்டலை தந்திருக்கிறான்.

அந்த மார்க்கத்தின் படி தான் ஒரு முஸ்லிம் வாழ வேண்டும். அந்த மார்க்கத்தின் படி தான் ஒரு முஸ்லிம் தன்னுடைய வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வேண்டும். அதிலிருந்து விலகுவதற்கோ, வழிதவறுவதற்கோ ஒரு முஸ்லிமிற்கு எந்த காலத்திலும் அனுமதியில்லை.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா கொடுத்திருக்கின்ற இந்த மார்க்கம்,இது ஒன்று தான் நம்மை நேர்வழிபடுத்தும், இந்த மார்க்கம் தான் நமக்கு இம்மை வாழ்க்கையை சீர்படுத்தித் தரும். இந்த வாழ்க்கை தான் நம்முடைய மறுமை வாழ்க்கையை சீர்படுத்தித் தரும்.

இந்த மார்க்கத்தை யார் மறுப்பார்களோ, மாற்றுவார்களோ, இந்த மார்க்கத்திலிருந்து யார் விலகுவார்களோ அவர்கள் கண்டிப்பாக வழிகெட்டே தீருவார்கள். அவர்கள் மீது அல்லாஹ்வுடைய சாபம் இறங்கி விடும். அவர்கள் சோதனைக்கு ஆளாகுவார்கள். தனி மனிதன் வழிதவறினால் அவன் தன்னுடைய சுய வாழ்க்கையில் அதை அனுபவிப்பான்.

ஒரு குடும்பம் வழிதவறினால் அந்த குடும்பம் அல்லாஹ்வின் தண்டனையை, சோதனையை, சாபத்தை எதிர் நோக்கும். ஒரு சமுதாயமே அல்லாஹ்வுடைய மார்க்கத்தை மீறினால் அந்த சமுதாயமே அல்லாஹ்வின் தண்டனையை அனுபவிக்க வேண்டி வரும்.

அந்த சமுதாயமே அல்லாஹ்வுடைய சாபத்திற்குரிய சமுதாயமாக அது மாறிவிடும். ஒரு நாடே அப்படி மாறிவிட்டால் அந்த நாட்டின் மீதே அல்லாஹ்வுடைய சாபம் இறங்கி விடும்.அல்லாஹ்வுடைய தண்டனை இறங்கி விடும். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன்னுடைய வேதத்தின் படி மக்களுக்கு ஆதாரங்களை தெளிவு படுத்தாதவரை, வழிகாட்டாத வரை ஒரு சமுதாயத்தின் மீது தன்னுடைய தண்டனையை, வேதனையை இறக்க மாட்டான்.

வேதத்தின் மூலமாக, தூதர்களின் மூலமாக மக்களுக்கு உண்டான வழிகாட்டலை கொடுத்து,அந்த வழிகாட்டலை மக்கள் மீறும் பொழுது,அப்பொழுது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தன்னுடைய தண்டனையை அந்த சமுதாயத்தின் மீது இறக்குகிறான்

இன்றைய முஸ்லிம்களின் நிலையைப் பற்றி நாம் தொடர்ந்து பேசி வருகிறோம்.

அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் கொடுத்த இந்த வாழ்க்கை நெறியை, அழகிய இஸ்லாம் என்ற இந்த கோட்பாட்டை விட்டு விட்டு தங்களுடைய மன இச்சைக்கு ஏற்ப யூதர்களின், கிறிஸ்தவர்களின், மஜுஸிகளின் கலாச்சாரத்திற்குள் சென்று இந்த சமுதாயம் தன்னுடைய தனித்தன்மையை அழித்துக் கொண்டிருக்கிறது.

இன்னொரு பக்கம், இந்த சமுதாயம் அல்லாஹ்வுடைய வேதத்தின் சட்டங்களிலிருந்து விலகிய காரணத்தால், தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிகாட்டுதலில் இருந்து விலகிய காரணத்தால், இந்த சமுதாயத்தில் குழப்பங்கள் அதிகமாகி விட்டன, கோஷ்டிகள் அதிகமாகி விட்டன, கருத்து வேற்றுமைகள் அதிகமாகி விட்டன.

இந்த சமுதாயம் இன்று எதை தங்களுடைய வேதமாகவோ அல்லது தங்களுடைய சட்டமாகவோ எடுத்துக் கொள்கிறார்கள் என்றால், இவர்களை இன்று வழி நடத்துவது இவர்களுடைய மன இச்சையே தவிர வேறொன்றும் இல்லை.

இந்த சமுதாயத்தை தனி மனிதனையோ அல்லது சமுதாயத்தின் குழுக்களையோ, இந்த சமுதாயத்தின் குரூப்புகளையோ வழிநடத்தக் கூடியது மன இச்சையாக இருக்கிறது.

அல்லாஹ்வின் வேதமோ, தூதரின் வழிகாட்டுதல்களோ அதிலிருந்து நேர்வழியை பெற்று அதன் அடிப்படையில் வாழ வேண்டிமென்ற உணர்வுள்ள தனி மனிதரையும் பார்க்க முடியவில்லை, குடும்பத்தையும் பார்க்க முடியவில்லை, சமுதாயத்தையும் பார்க்க முடியவில்லை.

நம்முடைய நிலையை பொறுத்தவரை, எது பிடிக்கிறதோ அது மார்க்கம். எது பிடிக்கவில்லையோ அது நிராகரிக்கப்பட வேண்டும். ஒவ்வொருவருக்கும் அவர் அவருடைய விருப்பத்திற்கு ஏற்ப மார்க்கம் அமைய வேண்டுமென்று எதிர்பார்க்கிறார்கள்.

ஒரு ஆலிம், அவருக்கு எது பிடிக்குமோ அவர் அதை மார்க்கமாக சொல்கிறார். அவருக்கு எது பிடிக்குமோ அவர் அதை மார்க்க சட்டமாக சொல்கிறார்.

ஒரு வியாபாரி, அவருக்கு எது பிடிக்குமோ அவர் அதை மார்க்க சட்டமாக சொல்வார், பின்பற்றுவார். அவருக்கு எங்கே மார்க்கம் இடிக்குமோ, அங்கே அவர் அந்த மார்க்கத்தை கண்டும் காணாமல் விட்டு விட்டு சென்று விடுவார்.

ஒரு தொழிலாளி, ஒரு சமுதாய தலைவன், ஒரு தனி மனிதன் அல்லது குடும்பம் அல்லது சமுதாயத்தின் குழுக்கள், சமுதாயத்தின் பிரிவுகள், இயக்கங்கள், மார்க்கத்திலிருந்து எது தங்களுடைய மன இச்சைக்கு அல்லது தங்களுடைய ஆசைகளுக்கு ஒத்து வருகிறதோ அதை எடுப்பார்கள்.

அதிலும் பல விதமான திருத்தல்களை செய்து அல்லாஹ் இறக்கியதை தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கொடுத்ததை கொடுத்த அடிப்படையில் அப்படியே எடுப்பார்களா? என்றால் அதையும் அப்படியே எடுக்க மாட்டார்கள். அதில் பல திருத்தங்களை செய்வார்கள், வளைப்பார்கள்.

அதை தங்களுடைய கருத்திற்கு ஏற்ப எப்படியாவது பணிய வைக்க வேண்டும் என்று முயற்சி செய்வார்கள்.

கண்ணியத்திற்குரியவர்களே! இது தான் யூதர்களுடைய கலாச்சாரமாக இருந்தது. கிறிஸ்தவர்களுடைய கலாச்சாரமாக இருந்தது.

ஒரு முஸ்லிமுடைய கலாச்சாரம், ஒரு முஸ்லிமுடைய இறை நம்பிக்கை எப்படி இருக்க வேண்டும்.

அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான் :

إِنَّمَا كَانَ قَوْلَ الْمُؤْمِنِينَ إِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ أَنْ يَقُولُوا سَمِعْنَا وَأَطَعْنَا وَأُولَئِكَ هُمُ الْمُفْلِحُونَ

முஃமின்களிடம் அவர்களுக்கிடையே (ஏற்படும் விவகாரங்களில்) தீர்ப்புக் கூறுவதற்காக அல்லாஹ்விடமும் அவனுடைய தூதரிடமும் (வரும்படி) அழைக்கப்பட்டால், அவர்கள் சொல்(வது) எல்லாம் “நாங்கள் செவியேற்றோம், (அதற்குக்) கீழ்படிந்தோம்” என்பது தான்; இ(த்தகைய)வர்கள் தாம் வெற்றியடைந்தவர்கள். (அல்குர்ஆன் 24:51)

வசனத்தின் கருத்து : என்னை நம்பிக்கை கொண்ட முஃமின்களை நீங்கள் அடையாளம் காண வேண்டுமா? முஃமின்கள் யாரென்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டுமா?

(நம்மை பொறுத்த வரை கொஞ்சம் தாடி இருக்க வேண்டும்; ஜிப்பா அணிந்திருக்க வேண்டும் அல்லது ஏதாவது அல்லாஹ் ரஸூலைப் பற்றி வாயில் பேச வேண்டும். இது பொதுவாக நாம் ஒரு வரை முஃமின் என்று அடையாளம் காணுவதற்கு வைத்திருக்கிறோம்.)

இந்த அடையாளங்களுக்கு மேலெல்லாம் ரப்புல் ஆலமீன் அடையாளங்களை வைத்திருக்கிறான். ரப்புல் ஆலமீன் சொல்லக்கூடிய அடையாளம் வெளிரங்கமான செயல்களை வைத்து அல்ல. அல்லாஹ் ரப்புல் ஆலமீனுடைய அடையாளம் உள்ளத்தின் எண்ணங்கள் அடிப்படையில் , உள்ளங்களின் செயல்களின் அடிப்படையில்.

ஒரு மனிதனுடைய வாழ்க்கையில் அவன் பின்பற்றுகின்ற கொள்கையின் அடிப்படையில் இருக்க வேண்டும். இது தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் முஃமின்களுக்கு சொல்லக்கூடிய அடையாளம்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் முனாஃபிக்குகள் தொழவில்லையா? இன்றைய முஃமின்களை விட மிக அழகிய தொழுகை உடையவர்களாக அன்றைய முனாஃபிக்குகள் இருந்தார்கள்.

ரஸூலுல்லாஹ்வின் காலத்தின் முனாஃபிக்குகள் இன்றைய காலத்தில் தங்களை முஸ்லிம் என்று சொல்லக்கூடிய இந்த பெயர்தாங்கியின் தொழுகையை விட அவர்களுடைய தொழுகை சிறந்ததாக இருந்தது. அவர்கள் காலை தொழுகையை தவற விடமாட்டார்கள். சிரமமாக இருந்தாலும் தொழுவார்கள்.

இன்று நம்மில் எத்தனை பேருக்கு ஃபஜ்ருடைய ஜமாஅத் கிடைக்கிறது என்று யோசித்துப் பார்த்துக் கொள்ளுங்கள்.

அன்றைய முனாஃபிக்குகள் ஜகாத் கொடுத்தார்கள். இன்றைய முஸ்லிம்களில் 95%மக்கள் தொழுவதுமில்லை, ஜகாத்தும் கொடுப்பதில்லை.

அன்றைய முனாஃபிக்குகள் மதினாவில் ஜவேளை தொழுகைகளை ஜமாஅத்தோடு தொழுதார்கள், ஜகாத் கொடுத்தார்கள். இன்றைய முஸ்லிம்கள் 95%மக்கள் தொழுகையே இல்லையென்றால் ஜமாஅத்துடைய தொழுகையை பற்றி என்ன சொல்வது? பிறகு ஜகாத்தை பற்றி அங்கே என்ன பேசுவது?

ரப்புல் ஆலமீன் என்ன சொல்கிறான்? முஃமின்களுடைய பேச்சு எப்படி இருக்கும் தெரியுமா? எப்போது எந்த நேரத்தில் அவர்கள் அல்லாஹ்வின் பக்கம் அழைக்கப்பட்டால், அல்லாஹ்வுடைய தூதரின் பக்கம் அழைக்கப்பட்டால், அல்லாஹ்வின் சட்டத்தின் படி நாம் நம்முடைய பிரச்சனைகளை தீர்ப்போம். ரஸூலுல்லாஹ்வின் வழிகாட்டுதலின் படி நாம் நம்முடைய சண்டை சச்சரவுகளை, பினக்குகளை, மனக் கசப்புகளை, நம்முடைய வாக்கு வாதங்களை, நம்முடைய எல்லா விதமான உறவுகளையும் அமைத்துக் கொள்வோம் என்று அழைக்கப்பட்டால் முஃமின்கள், நாங்கள் செவிதாழ்த்தி கேட்போம், அதற்கு கட்டுப்படுவோம் என்று கூறுவார்கள். இவர்கள் முஃமின்கள், இவர்கள் நம்பிக்கையாளர்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.(அல்குர்ஆன் 24:51)

அல்லாஹு தஆலா பிறகு முனாஃபிக்குகளை பற்றி கூறுகிறான்;முனாஃபிக்குகள் செவிதாழ்த்துகிறோம் என்று கூறுவார்கள், ஆனால் மாறு செய்வார்கள்.

இன்றைய நம்முடைய முஸ்லிம்களின் நிலையை போல. மார்க்கம் இஸ்லாம் என்று கூறுவார்கள், ஆனால் கட்டுப்படமாட்டார்கள், ஏற்றுப் பின்பற்ற மாட்டார்கள்.

எது பிடிக்குமோ அதுமட்டும் இவர்களுக்கு மார்க்கம். எது பிடிக்காதோ அதை வாய்மூடி கூட இருக்க மாட்டார்கள்.

முதலில் இஸ்லாமிய மார்க்கத்தில் எனக்கு ஒன்று பிடிக்கவில்லை என்று கூறுவது இறை நிராகரிப்பு என்பதை புரிந்துக் கொள்ளுங்கள்.

இஸ்லாமிய மார்க்கத்தில் அல்லாஹ்வுடைய சட்டத்தில் எனக்கு இது பிடிக்கவில்லை என்று கூறுவது அல்லாஹ்வை நிராகரிப்பது.

இப்படிப்பட்டவர்கள் மனதளவில் கூட தங்களுடைய வெறுப்பை வைத்திருக்கவில்லை. இன்று எந்தளவு துணிந்து விட்டார்கள் என்றால், இவர்களுடைய கலாச்சாரம் மாறிவிட்ட காரணத்தால், இவர்களது சூழ்நிலை மாறிவிட்ட காரணத்தால், இவர்கள் வளர்ந்த, வாழ்கின்ற சூழ்நிலை மாறுகின்ற காரணத்தால், அந்நியர்களோடு அந்நியர்களாக இவர்கள் கலந்துவிட்ட காரணத்தால், அல்லாஹ்வுடைய தீனை இன்று மாற்றார்கள் எதிர்க்க வேண்டிய அவசியமில்லை. முஸ்லிம்களே எதிர்த்து அழித்து விடுவார்கள்.

அல்லாஹ்வுடைய தீனின் சட்டங்களை அழிப்பதற்கு இன்று வேறும் யாரும் யஹூதி, நஸரானி வர வேண்டிய அவசியமில்லை. இன்றைய முஸ்லிம்களே போதும். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

இந்த நிலையைப் பற்றி தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய கண்ணியத்திற்குரிய வேதம் அல்குர்ஆனில் பல இடங்களில் கூறுகிறான்.

இன்று காஃபிர்களின் கலாச்சாரத்தில் முஸ்லிம் சமுதாயமாகிய நாம் வாழ்கிறோம். முஸ்லிம் சமுதாயமாகிய நாம் காஃபிர்களின் கலாச்சாரத்தில் கலந்து கொண்டிருக்கிறோம். அவர்களின் கலாச்சாரத்தோடு ஒன்றி அதை சரிகாணக்கூடிய அளவிற்கு மாறிவிட்டோம்.

இஸ்லாமிய கலாச்சாரத்தை தவறு என்று சொல்லக்கூடிய அளவிற்கு, அதை வெறுக்கக் கூடிய அளவிற்கு, எதிர்க்க கூடிய அளவிற்கு, விமர்சனம் செய்யக்கூடிய அளவிற்கு இஸ்லாமிய சமுதாயம் மாறியிருக்கிறது. காஃபிர்களின் கலாச்சாரம் அவர்களுக்கு அலங்காரமாக இருக்கிறது.

இவர்களது நிலை என்ன? இவர்களுக்கு பிடித்தது மார்க்கம். இவர்களுக்கு பிடிக்காதது மார்க்கம் இல்லை.

இவர்களுக்கு பிடித்தபடி மார்க்கம் இருக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். இந்த ஆலிமிடத்தில் செல்வார்கள். அவர் சொன்னது மனதிற்கு பிடிக்கவில்லையா? தங்களுடைய மனதிற்கு பிடித்ததை ஒரு ஆலிம் சொல்கின்ற வரை மார்க்க தீர்ப்பு கேட்டு அழைந்துக் கொண்டே இருப்பார்கள்.

அல்லாஹ்வுடைய சட்டத்தை கேட்கும் பொழுது ஒருவர் ஹராம் என்று சொல்லிவிட்டால், ஹலாலாக அதை ஆக்காத வரை அவர்களுடைய ஃபத்வா கேட்கின்ற நிலை மாறவே மாறாது.

என்ன செய்வார்கள்? முந்திய ஆலிமிடத்தில் சென்று என்ன சொன்னார்களோ, அதில் அப்படியே பல விஷயங்களை கட் பண்ணி விடுவார்கள். இன்னொரு ஆலிமின் வாயிலிருந்து ஹலால் என்று வார்த்தை வருகின்ற வரை அந்த சம்பவங்களை எப்படியெல்லாம் மறைக்க முடியுமோ, மாற்ற முடியுமோ, திருத்த முடியுமோ, அதில் குழப்பத்தை உண்டாக்க முடியுமோ ஏதாவது ஒன்றை சொல்லி அதிலிருந்து ஹலால் என்ற ஃபத்வா வருமா? என்று கிடைக்கின்ற வரை ஓய்வது கிடையாது.

சில நேரங்களில் இவர்களே ஆலிமுக்கு எடுத்து கொடுப்பான். என்ன ஆலிம்ஷா இது தப்பில்லையே அது ஹலால் தான!. அது எப்படி தப்பாகும், ஹராமாகும் என்று கேட்டவுடன் அந்த ஆலிம் பார்ப்பார்; எதற்கு பெரிய இடத்து வம்பு, ஆம் இருக்கலாம் தான், கொஞ்சம் பார்த்துக் கொள்ளுங்கள்.

(அல்லாஹ் நமது நிலையை பாதுகாப்பானாக!) கண்ணியத்திற்குரிய வேதம் அல்குர்ஆன் இதை ஒரு சாதாரணமான ஒரு பிரச்சனையாக எடுத்துக் கொள்ளவில்லை.

இன்று இது ஒரு சாதாரணமான பிரச்சனையாக மாறியிருக்கிறதே, நாம் நம்முடைய வெளிரங்கமான அமல்களை கொண்டு திருப்தி அடைந்து கொண்டிருக்கிறோமே, ஆனால் உள்ளத்தின் நிலை இப்படி கல்லை விட கடினமாக மாறியிருக்கிறதே! அல்லாஹ்வின் சட்டங்களை ஏற்றுக் கொள்வதில் இது ஒரு சாதாரணமான நிலைமையா?

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இதை குஃப்ர் என்று கூறுகிறான் :

أَفَتُؤْمِنُونَ بِبَعْضِ الْكِتَابِ وَتَكْفُرُونَ بِبَعْضٍ فَمَا جَزَاءُ مَنْ يَفْعَلُ ذَلِكَ مِنْكُمْ إِلَّا خِزْيٌ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَيَوْمَ الْقِيَامَةِ يُرَدُّونَ إِلَى أَشَدِّ الْعَذَابِ وَمَا اللَّهُ بِغَافِلٍ عَمَّا تَعْمَلُونَ

(அப்படியென்றால்) நீங்கள் வேதத்தில் சிலதை நம்பி சிலதை மறுக்கிறீர்களா? எனவே உங்களில் இவ்வகையில் செயல்படுகிறவர்களுக்கு இவ்வுலக வாழ்வில் இழிவைத் தவிர வேறு கூலி எதுவும் கிடைக்காது. மறுமை (கியாம) நாளிலோ அவர்கள் மிகக் கடுமையான வேதனையின்பால் மீட்டப்படுவார்கள்; இன்னும் நீங்கள் செய்து வருவதை அல்லாஹ் கவனிக்காமல் இல்லை. (அல்குர்ஆன் 2:85)

கொஞ்சம் நமது சமுதாயத்தின் நிலையை நினைத்துப் பாருங்கள். எதனால் இன்று முஸ்லிம் சமுதாயம் கேவலப்பட்டுக் கொண்டிருக்கிறது. செல்வம் இல்லையா? படிப்பு இல்லையா? டிகிரிகள் இல்லையா? வசதி இல்லையா? என்ன இல்லை?

இந்த சமுதாயம் தப்புக் கணக்கு போட்டுக் கொண்டிருக்கிறது; உலகத்தை வைத்து கண்ணியத்தை பெற்றுவிடலாம் என்று அல்லாஹ்வின் விதியை இந்த சமுதாயம் மாற்ற நினைக்கிறது.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த சமுதாயத்தின் கண்ணியத்தை அல்லாஹ்வுடைய தீனை முழுமையாக பின்பற்றுவதில் வைத்திருக்கிறான்.

எப்படி கேட்கிறான் அல்லாஹ் தஆலா? இந்த வேதத்தில் சிலவற்றை நீங்கள் ஏற்றுக் கொண்டு சிலவற்றை நீங்கள் மறுத்து விடுவீர்களா?

இப்படி செய்பவர்களுக்கு இந்த உலக வாழ்க்கையில் கேவலமும் இழிவும் உண்டு. இதை தவிர வேறு என்ன கிடைக்கும்? பிறகு மறுமையில் தண்டனையில் பயங்கரமான தண்டனை இவர்களுக்கு உண்டு.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அந்த யூதர்களை பார்த்து மேலும் எப்படி எச்சரிக்கை செய்கிறான் பாருங்கள். இந்த எச்சரிக்கைகளை அல்லாஹ் தஆலா ஏன் நம்முடைய வேதத்தில் முஹம்மது நபியுடைய உம்மத்திற்கு சொல்லிக் காட்டுகிறான் என்று யோசித்துப் பாருங்கள்.

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

أَفَكُلَّمَا جَاءَكُمْ رَسُولٌ بِمَا لَا تَهْوَى أَنْفُسُكُمُ اسْتَكْبَرْتُمْ فَفَرِيقًا كَذَّبْتُمْ وَفَرِيقًا تَقْتُلُونَ

உங்கள் மனம் விரும்பாததை (நம்) தூதர் உங்களிடம் கொண்டு வரும்போதெல்லாம் நீங்கள் கர்வம் கொண்டு (புறக்கணித்து) வந்தீர்களல்லவா? சிலரை நீங்கள் பொய்ப்பித்தீர்கள்; சிலரை கொன்றீர்கள். (அல்குர்ஆன் 2:87)

இந்த எச்சரிக்கையை யாரைப் பார்த்து அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்? யூதர்கள், கிறிஸ்தவர்களை பார்த்து அல்லாஹ் எச்சரிக்கை செய்வதை நம்முடைய வேதத்தில் அல்லாஹ் சொல்லிக் காட்டுகிறானே, முஸ்லிம் சமுதாயமே! உனது நிலை இப்படி மாறிவிட வேண்டாம்.

ரஹ்மத்துடைய உம்மத்தாக, ரஹ்மத்துல் ஆமீனுடைய உம்மத்தாக அனுப்பப்பட்ட நீ யூத, கிறிஸ்தவ கலாச்சாரங்களை பின்பற்றி அல்லாஹ்வுடைய சாபத்திற்கு ஆளாகி விடாதே!

அல்லாஹ்வுடைய தண்டனைக்கு ஆளாகி விடாதே! அல்லாஹ்வை பொறுத்த வரை அவனுடைய நியதி ஒன்று தான்.

அல்லாஹ் கூறுகிறான் :

سُنَّةَ اللَّهِ فِي الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلُ وَلَنْ تَجِدَ لِسُنَّةِ اللَّهِ تَبْدِيلًا

அல்லாஹ் ஏற்படுத்திய வழி - இதற்கு முன் சென்றவர்களுக்கும் இதுவே தான்; அல்லாஹ்வின் (அவ்)வழியில் எவ்வித மாற்றத்தையும் நீர் காணமாட்டீர். (அல்குர்ஆன் 33:62)

وَلَنْ تَجِدَ لِسُنَّتِ اللَّهِ تَحْوِيلًا

அல்லாஹ்வின் (அவ்) வழியில் திருப்புதலையும் நீர் காணமாட்டீர். (அல்குர்ஆன் 35:43)

அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டால், அல்லாஹ்வுடைய தூதருக்கு பணிந்தால் வெற்றி, கண்ணியம். அல்லாஹ்வுடைய சட்டத்தை மீறினால், தூதருடைய வழிமுறையை உதாசினம் செய்தால் இழிவு, நாசம்.

இது தான் அல்லாஹ்வின் விதி, உலகத்தை படைத்த நாளிலிருந்து, இறைத் தூதர்களை அனுப்பிய நாளிலிருந்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த நியதியை பின்பற்றி வருகிறான்.

யாருக்கு கண்ணியம் ?அல்லாஹ் சொல்கிறான் :

وَلِلَّهِ الْعِزَّةُ وَلِرَسُولِهِ وَلِلْمُؤْمِنِينَ وَلَكِنَّ الْمُنَافِقِينَ لَا يَعْلَمُونَ

ஆனால் கண்ணியம் அல்லாஹ்வுக்கும், அவனுடைய தூதருக்கும், முஃமின்களுக்குமே உரியது; எனினும், இந்நயவஞ்சகர்கள் (அதை) அறிந்து கொள்ளமாட்டார்கள். (அல்குர்ஆன் 63:8)

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நமக்கென்று கொடுத்திருக்கக் கூடிய அந்த கலாச்சாரத்தை எந்த ஒரு சூழ்நிலையிலும் ஒரு முஸ்லிம் மாற்றிக் கொள்ளக் கூடாது. அதிலிருந்து அவன் வழிதவறக் கூடாது.

இன்றைய சமுதாயம் எத்தனை விஷயங்களை மாற்றியிருக்கிறது என்பதை நாம் தொடர்ந்து பார்த்து வரும்பொழுது பல விஷயங்களை சென்ற ஜும்ஆக்களில் கூறினோம்.

குறிப்பாக, இந்த சமுதாயத்தின் சீர்கேடுகளை நாம் அலசி ஆராய்ந்து பார்க்கும் பொழுது, திருமண வாழ்க்கை என்ற ஒரு உறவு முறையை எடுத்துக் கொள்ளும் பொழுது, இந்த சமுதாயம் இன்று செய்யக்கூடிய திருமண வாழ்க்கை, கணவன் மனைவி உறவுகள், அவர்களுடைய ஏனைய மனக்கசப்புகள், பிரச்சனைகள் அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் வழிகாட்டிய முறைப்படி இருக்கின்றதா? என்று யோசித்துப் பாருங்கள்.

திருமணம் என்ற பேச்சிலிருந்தே, அது ஆரம்பமாகக் கூடிய இடத்திலிருந்தே இந்த சமுதாயத்தின் வழிகேட்டை பார்க்கிறோம். (அல்லாஹ் பாதுகாப்பானாக! அல்லாஹ் பாதுகாத்த சிலரை தவிர.)

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திருமணத்திற்கு நம்மை வழிகாட்டவில்லையா? அந்த கண்ணியத்திற்குரிய தோழர்கள் திருமணம் செய்து நமக்கு முன்மாதிரியாக திகழவில்லையா?

இன்றைய சமுதாயத்துத் திருமணம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காட்டித் தந்த திருமண வழிமுறைப் படி தான் இருக்கிறதா? என்று யோசித்துப் பாருங்கள். இன்றைய திருமணத்தின் சடங்குகளை யோசித்துப் பாருங்கள்.

ஒரு ஆண்மகனிற்கு அல்லது ஒரு மகளிற்கு துணை பேசுவதிலிருந்தே அங்கே சடங்குகளும் சம்பரதாயங்களும் எப்படி ஆரம்பமாகின்றன? யூதர்களை போன்று, கிறிஸ்தவர்களை போன்று மோதிரங்கள் அணிவிக்கப்படுகின்றன.

நிச்சியதார்த்தங்கள், பரிசம் என்று சொல்வார்கள், சீனி போடுதல் என்று சொல்வார்கள். சீனியும் போட வேண்டாம், பரிசமும் போட வேண்டாம். அந்த குடும்பத்தில் மண்ணை அள்ளி தான் கொட்ட வேண்டும். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

எப்படி இந்த மக்கள் அநியாயத்தில் வரம்பு மீறி கொண்டிருக்கிறார்கள் என்றால் முன்பு ஒரு காலத்தில் பெண் பேசுவது, மாப்பிள்ளை பேசுவது என்றால், ஒரு பத்து பேர் போவார்கள்.

பேசுவார்கள், பிடித்திருந்தால் சரி என்று சொல்லி விட்டு வருவார்கள். திருமண தேதியை அடுத்து அவர்கள் நிர்ணயிப்பார்கள், திருமணம் நடக்கும்.

இன்று எப்படி நடக்கிறது? பெண் பேசுவதற்கு பிறகு அதை முடிவு செய்வது. அதாவது முடிவு செய்ததை வெளிப்படுத்துவது, பகிரங்கப்படுத்துவது. அதற்கு செய்யப்படக்கூடிய செலவுகளை வைத்தே பல திருமணங்கள் செய்துவிடலாம்.

என்ன இங்கே கல்யாணமா நடக்கிறது என்று கேட்டால், கல்யாணம் நடக்கவில்லை, நிச்சயதார்த்தம் நடக்கிறது. காஃபிர்களின் கொள்கை, காஃபிர்களின் கலாச்சாரம். இந்த நிச்சயதார்த்தத்தில் என்னென்ன அநியாயங்கள், அசிங்கங்கள், என்னென்ன ஆபாசங்கள், அத்துமீறல்கள் நடக்கின்றன என்பதை என்னை விட நீங்கள் அதிகம் அறிந்தவர்கள்.

அடுத்து நிச்சயதார்த்தம் நடந்துவிட்டால் என்ன? திருமணமா நடந்தது? நிச்சயதார்த்தம் நடந்தவுடனையே பெண்ணுடைய தொலைபேசி எண் யாருக்கு கொடுக்கப்படுகிறது? மணமகனுக்கு கொடுக்கப்படுகிறது. மணமகனுடைய தொலைபேசி எண் மணமகளுக்கு கொடுக்கப்படுகிறது. இருவரும் பிறகு இன்றைய கலாச்சார சீரழிவில் என்னென்ன நடக்கிறதோ அதையெல்லாம் தொடர ஆரம்பித்து விடுவார்கள்.

இன்னும் சில குடும்பங்களில் அல்லது பல குடும்பங்களில், சில ஊர்களில் அல்லது பல நகரங்களில் நிலைமை எந்தளவு மோசமாகிவிட்டது என்றால், திருமணம் நிச்சயித்த பெண்ணோடு, திருமணம் நிச்சயித்த ஆணோடு தனிமையில் பல நாட்கள் சுற்றித்திரியக் கூடிய பழக்கமாக, கலாச்சாரமாக மாறியிருக்கிறது.

சமுதாயத்தில் அக்கறை கொண்ட பலர், பல இடங்களில் முஸ்லிம் ஜோடிகள் சுற்றித்திரிவதை பார்த்து நிறுத்தி அங்கே கேள்வி கேட்டால், எங்களுக்கு திருமணம் நிச்சியம் பன்னியாச்சு, அதனால்தான் வந்தோம். எப்பொழுது பேசினார்கள்? ஆறு மாதித்திற்கு முன்னால், எப்பொழுது கல்யாணம்? இன்னும் ஆறு மாதம் கழித்து. (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

கண்ணியத்திற்குரியவர்களே! இதில் எவ்வளவு ஆபத்துகளும், எவ்வளவு அநியாயங்களும், விபச்சாரங்களும் நடந்தரங்கேரி விடுகின்றன!

எத்தனையோ பல சூழ்நிலைகளில் நிச்சயிக்கப்பட்ட திருமணங்கள் நடக்காமல் இருந்துவிடுகின்றன. பேசப்பட்டது பேசப்பட்டதாக இருந்து விடுகிறது, முறிந்து விடுகிறது. அதற்கு பின்னால் அதனுடைய நிலையை நினைத்துப் பாருங்கள்.

முறியவே இல்லை என்றாலும் சரி, இவர்கள் செய்வது இஸ்லாமிய கலாச்சாரமா? ஒரு தகப்பன் தன்னுடைய மகன் அந்நிய பெண்ணிடத்தில் பேசுவதை சகித்துக் கொள்கிறார் என்றால், அதை ஏற்றுக் கொள்கிறார் என்றால், அந்த பெண்ணோடு தனிமையில் இருப்பதை சந்திப்பதை, தனிமையில் செல்வதை அவர் அங்கீகரிக்கிறார் என்றால் அவனை விட இந்த சமுதாயத்தில் கேடுகெட்ட வழிகேடன் யார் இருக்க முடியும்?

ஒரு முக்கியமான ஒருவரை சந்திப்பதற்காக காலை நேரத்தில் சென்றால், அங்கே பேசிக் கொண்டிருக்கும் பொழுது, அறைகுறை ஆடையோடு நடுத்தர வயதுடைய ஒரு காலேஜ் படிக்கக் கூடிய ஒரு பெண் கேட் வாசலில் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறாள்.

ஏதோ புதுசா ஊருக்கு வந்த பெண் போல, வழி தெரியாமல் திகைத்துக் கொண்டிருக்கிறது போல என்று சொல்லி கேட்டிற்கு வெளியே சென்று யார் நீங்கள்? உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்டால், இல்லை உள்ளே போக வேண்டும். உள்ளே போக வேண்டுமா? எதற்கு? அப்பொழுது தான் பேசிக் கொண்டிருந்த அந்த செல்வந்தர் கூறுகிறார்; இது என் பையனோடு படிக்கின்ற பெண், நீங்கள் இருக்கிறீர்கள் என்று உள்ளே போவதற்கு வெட்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

அதற்கு பிறகு அவர் சொல்கிறார்; நீ போமா என்று. அந்த பெண் நேராக வீட்டிற்குள் செல்கிறாள். அந்த பையன் படுக்கை அறையில் படுத்துக் கொண்டிருக்கிறான். அங்கே செல்கிறாள், பிறகு கதவு தாழ்பாள் போடப்படுகிறது. அங்கே பேசிக் கொண்டிருக்கின்ற வரை அவர்கள் இருவரும் தனிமையில் இருக்கிறார்கள். அதற்கு பிறகு எப்பொழுது வெளியேறினாளோ அந்த பெண்.

கல்யாணம் பன்னி கொடுத்திட்டிங்களா? இல்லை இரண்டு பேரும் ஒரு கிளாஸில் படிக்கிறார்கள். அப்பப்போ படிப்பை பற்றி டிஸ்கஸ் பன்னிக் கொள்வார்கள் என்று தகப்பன் கூறுகிறார்.

இந்த சமுதாயத்தின் வெட்கமும் மானமும் சீரழிந்ததற்கு, அல்லாஹ்வுடைய சாபம் தாரை தாரையாக இறங்கக்கூடிய மழையாக இறங்குவதற்கு இதை விட வேறு என்ன காரணத்தை நீங்கள் தேடப் போகிறீர்கள்? எவ்வளவு கேடு கெட்ட ஒரு நிலை! ஒரு தகப்பன் தனது வீட்டிற்குள் ஜினா –விபச்சாரம் நடப்பதை அங்கீகரிக்கிறான்.

இன்னும் பல இடங்களில் தனது மகள் அந்நிய ஆணோடு படிக்கிறேன் என்ற பெயரில் தனிமையில் சந்திப்பதை, தனிமையில் செல்வதை ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவிற்கு ஒரு தகப்பனுடைய நிலை மாறியிருக்கிறது என்றால் இவனை தானே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தய்யூத் (பொன்னையன்) என்று கூறினார்கள்.

யார் இவன்? தன்னுடைய குடும்பத்தார்கள் மனைவியோ, தாயோ, சகோதரியோ, மகளோ அந்நிய ஆண்களோடு பழகுவதை அங்கீகரிக்கக் கூடியவன்.

இவனை அல்லாஹ் பார்க்கமாட்டான். இவன் பக்கம் அல்லாஹ் திரும்பமாட்டான். அல்லாஹ் இவனிடம் பேசமட்டான். இவனை அல்லாஹ் பரிசுத்தப்படுத்தமாட்டான். நரகத்தின் கொடிய வேதனை இவனுக்கு உண்டு.

நூல் : நசாயி, எண் : 2562.

இன்று அல்லாஹ்வுடைய சட்டத்தை சிறு பிள்ளையிலிருந்தே ஊட்டி, அல்லாஹ்வின் அச்சத்தின் படி வாழ வைக்காத அந்த குடும்ப தலைவன் கையாளாகாதவனாக மாறியிருப்பதை பார்க்கிறோம்.

பிள்ளைகளெல்லாம் தலைக்கு மேல் வளர்ந்து விட்டார்கள். இனி நாம் என்ன சொல்வது? என்ன உங்களது பையன் இப்படி இருக்கிறானே?என்ன உங்களது மகள் ஹிஜாப், புர்கா அவள் செல்வது இப்படி இருக்கிறதே? கடைத் தெருவில் நீங்கள் மாலை நேரத்திற்கு பிறகு நம்முடைய பெண் பிள்ளைகள் செல்கின்ற அந்த கலாச்சாரத்தை என்றைக்காவது பார்த்திருக்கிறீர்களா?

அவர்கள் அப்படி செல்கின்ற நேரத்தில் ஒரு முஸ்லிமாக அடையாளம் காண்பித்துக் கொண்டு, தொப்பியோடோ, தாடியோடோ, ஜிப்பாவின் அங்கீகளோ, முஸ்லிமாக தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு அந்த இடத்தில் நாம் செல்வதற்கே கேவலமாக இருக்கிறது.

ஏன் இவள் புர்கா அணிந்து செல்கிறாள்? இவள் ஏன் இந்த கருப்பு நிற புர்காவோடு செல்கிறாள்?இதை அவிழ்த்துவிட்டு சென்றிருக்கலாமே! என்று கைசேதப்படக் கூடிய அளவிற்கு, கண் கலங்கக்கூடிய அளவிற்கு, மனம் வேதனைப்படக் கூடிய அளவிற்கு அந்த பெண்ணுடைய நடை, உடை, பாவனை, அவளுடைய அலங்காரம். தலைமுடி வெளியே தெரியும்படி, முகத்தின் அலங்காரங்கள் கழுத்திலிருந்து, பிறகு இறுக்கமான ஹிஜாபுகள், அலங்காரமான ஹிஜாபுகள்.

அணிந்திருக்கின்ற ஆடைகளை விட ஹிஜாப் கவரக்கூடியதாக, ஈர்க்கக்கூடியதாக இருக்கிறது. இதையெல்லாம் ஒரு தகப்பன் ஏற்றுக் கொள்கிறான் என்றால் இந்த தகப்பனை விட கேடுகெட்டவன் யாரும் இருக்க முடியாது.

பெண்களை சொல்லி குற்றமில்லை. அந்த பெண்களை நிர்வகிக்கக்கூடிய ஆண்கள் குற்றவாளிகள். உன்னால் உன்னுடைய மகளை திருத்த முடியவில்லை என்றால் நீ எதற்கு கல்யாணம் செய்தாய்?

உன்னால் உன்னுடைய மனைவியை நிர்வகிக்க முடியவில்லை என்றால் உனக்கு எதற்கு திருமணம்?! அல்லாஹ்வுடைய ஹலாலான திருமணத்தை நீ உன்னுடைய இச்சைக்காக செய்து உன்னுடைய மனைவியை ஹராமில் தள்ளிக் கொண்டிருக்கிறாயே, பிள்ளைகளை பெற்று அல்லாஹ்விற்கு மாறு செய்யக்கூடிய பாவிகளாக வளர்க்கிறாயே இதற்காகவா அல்லாஹ் உனக்கு பிள்ளைகளை கொடுத்தான்?

சமுதாயத்தின் நிலையை யோசித்துப் பாருங்கள். இந்த பெண்கள் தெருக்களில் செல்கிறார்களே, இவர்களெல்லாம் யார்? எங்கேயோ வேறு ஊர்களிலிருந்து வந்தவர்களா? வேறு கிரகத்திலிருந்து வந்தவர்களா?நம்மில் சிலருடைய சகோதரிகள் தானே, நம்மில் சிலருடைய தாய்மார்களாக இருக்கலாம் அல்லவா? நம்மில் சிலருடைய சிறிய பெரிய தாய்களாக இருக்கலாம் அல்லவா? நம்மில் சிலருடைய மாமிகளாக இருக்கலாம் அல்லவா?

கண்ணியத்திற்குரியவர்களே! ஆண்களாகிய நமக்கு ரோஷம் வரவில்லையா? தன்னுடைய குடும்பத்தில் ஒரு பெண் இப்படி சீரழிவதை பார்க்கும் பொழுது. இவள் காஃபிர்களை போன்று மாறியிருக்கிறாள்.

சமீபத்தில் ஒரு இடத்திற்கு சென்றோம். இந்துக்களுக்கு வந்த ஒரு பண்டிகை, அந்த பண்டிகைக்கு இந்துக்களெல்லாம் வெளியே இரவு நேரத்தில் கோலம் போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

நாங்கள் செல்லும் பொழுது 10:30மணி இருக்கும். அங்கே பார்த்தால் அந்த இந்து பெண்களுக்கு இடையே, இந்து பெண்கள் என்றால் ஹிஜாப் இல்லாமல் வெளியே இருப்பதால் இந்துப் பெண்கள் என்று சொல்கிறோம். அதில் எத்தனை முஸ்லிம் பெண்கள் இருந்தார்களோ அல்லாஹ் அறிவான். அதில் வாலிபமான ஒரு பெண் பர்தா அணிந்துக் கொண்டு கோலம் போட்டுக் கொண்டிருக்கிறாள்.

காரில் சென்ற நாங்கள் காரை நிறுத்தி விட்டோம். அதற்கு மேல் அதை தாண்டி செல்வதற்கு, அந்த தீமையை பார்த்துவிட்டு கண்டிக்காமல் செல்வதற்கு எங்களுக்கு மனம் வரவில்லை. என்ன செய்வது? யார் இறங்கி சொல்வது? என்று திகைத்துக் கொண்டிருக்கின்ற வேளையில் அந்த பெண் பார்த்தாள் என்ன சில நிமிடங்களாக கார் நிற்கிறது? வெளிச்சம் அடிக்கிறது என்று காரை பார்க்கிறாள்.

அங்கே பார்த்தால் தொப்பியோடு, தாடியோடு சில பேர் இருக்கிறார்கள். அந்த பெண் எப்படி சுதாரிக்கிறாள் பாருங்கள். உடனே, அதே நிலையில் அப்படியே தனது வேளையை விட்டு விட்டு வீட்டிற்குள் ஓடுகிறாள். சரி வெட்கம் வந்துவிட்டது போல, பயந்துவிட்டாள் போல, அல்லாஹ்வின் அச்சம் வந்துவிட்டது, சென்றுவிட்டாள் என்று காரை நகர்த்தினோம்.

கண்ணியத்திற்குரியவர்களே! அந்த வீட்டின் கார் பார்க்குடைய அந்த இடத்தில் நின்று கொண்டு, அவசர அவசரமாக தன்னுடைய புர்காவை கலற்றி வீசுகிறாள். கொஞ்சம் தாண்டி நாங்கள் அப்படியே நின்று விடுகிறோம். புர்காவை கலற்றி வீசிவிட்டு காஃபிர்களை போன்று தன்னுடைய சேலையை இறுக்கக் கட்டிக் கொண்டு மீண்டும் வந்து கோலம் போட்டுக் கொண்டிருக்கிறாள்.

முஸ்லிம் தெருவில் நடக்கக்கூடிய கேவலம். எத்தனை முஸ்லிம் தெருக்களில், முஸ்லிம்களுடைய முஹல்லாக்களில் இஸ்லாமிய பெண்கள் அந்நிய ஆண்களோடு படிக்க செல்வதோ, வேலைக்கு செல்வதோ, அல்லது சுற்ற செல்வதோ நடந்துக் கொண்டிருக்கிறது.

கடைசியில் ஒரு முஸ்லிமான பெண் ஒரு காஃபிரோடு ஓடிவிட்டால் என்று சொல்லும் பொழுது மட்டும் இந்த சமுதாயத்தில் ஆண்களுக்கு ரோஷம் வருகிறதே அவர்களை வளர்க்கும் பொழுது ஏன் உங்களுக்கு ரோஷம் வரவில்லை.

அந்த தவறை அவர்கள் செய்ய ஆரம்பிக்கும் பொழுது இந்த ரோஷம் எங்கே சென்றது? இது தான் அந்நியருடைய கலாச்சாரத்தில் உறுகிவிட்ட காரணத்தால், ஊறிவிட்ட காரணத்தால், மாறிவிட்ட காரணத்தால் ஏற்படுகின்ற அவலம், கேவலம்.

இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. அடுத்த அடுத்த ஜும்ஆக்களில் பார்ப்போமாக!

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம்முடைய சமுதாயத்தை சீர்திருத்தம் செய்வானாக! நம்முடைய வாலிபர்களுக்கும், வாலிப பெண்களுக்கும் இறையச்சத்தையும், அல்லாஹ்வின் மார்க்கத்தை பின்பற்றக்கூடிய ஈமானையும் தந்தருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/