HOME      Khutba      காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் (அமர்வு 2-8) | Tamil Bayan - 387   
 

காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் (அமர்வு 2-8) | Tamil Bayan - 387

           

காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் (அமர்வு 2-8) | Tamil Bayan - 387


காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம்

ஜுமுஆ குத்பா தலைப்பு : காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் (அமர்வு 2-8)

வரிசை : 387

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 15-01-2016 | 05-04-1437

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா சிறந்த மார்க்கத்தில்,நபியின் சிறந்த சமுதாயமாக, நம்மை ஆக்கி அருளியிருக்கிறான்.அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அவன் நமக்கு நன்மையை விரும்புகிறான், கண்ணியத்திற்குரிய வாழ்க்கையை நமக்கு விரும்புகிறான்.

அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா கூறுகிறான்:

وَاللَّهُ يُرِيدُ أَنْ يَتُوبَ عَلَيْكُمْ وَيُرِيدُ الَّذِينَ يَتَّبِعُونَ الشَّهَوَاتِ أَنْ تَمِيلُوا مَيْلًا عَظِيمًا

மேலும், அல்லாஹ் உங்களுக்குப் பாவமன்னிப்பு அளிக்க விரும்புகிறான்; ஆனால் தங்கள் (கீழ்தரமான) இச்சைகளைப் பின்பற்றி நடப்பவர்களோ நீங்கள் (நேரான வழியிலிருந்து திரும்பி பாவத்திலேயே) முற்றிலும் சாய்ந்துவிட வேண்டுமென்று விரும்புகிறார்கள்.(அல்குர்ஆன் 4 : 27)

வசனத்தின் கருத்து :யார் தங்களது மன இச்சைகளை பின்பற்றுகிறார்களோ, அதாவது இஸ்லாமிய மார்க்கத்திற்குள் நுழையாத யூதர்கள், கிறிஸ்தவர்கள், மஜூஸிகள், சிலை வணங்கிகளை அல்லாஹ் கூறுகிறான்.

அவர்களுக்கு சரீர இச்சையை தவிர, அதை நிறைவேற்றிக் கொள்வதை தவிர, மிருகங்களை போன்று அந்த சரீர இச்சைகளுக்கு பின்னால் சுற்றுவதை தவிர, அவர்களுக்கு வேறு மார்க்கம் தெரியாது.

அப்படி அவர்களுக்கு வேறு மார்க்கம் தெரியுமேயானால், அது ஆடலும் பாடலும் தவிர வேறு ஒன்றாக இருக்காது.

இதுதான் அவர்களுடைய மார்க்கம், இதுதான் அவர்களுடைய கொள்கை. சடங்குகளும், சம்பர்தாயங்களும், ஆபாசங்களும் நிறைந்த ஒன்று தான் மாற்றார்களுடைய மார்க்கம்.

இஸ்லாம், பரிசுத்தமான, நீதமான, நேர்மையான, கண்ணியமான ஒரு வாழ்க்கை வழிமுறையை கற்றுக் கொடுக்கக் கூடியது.

சரீர இச்சைகளை பின்பற்றக் கூடிய அந்த மாற்றார்கள், இஸ்லாமிய மார்க்கத்திலிருந்து நீங்கள் விலகி விட வேண்டும், அதிலிருந்து நீங்கள் சறுகி விட வேண்டும, தங்களது தவறான அசத்தியமானவழிபாட்டின் பக்கம் நீங்கள் வந்துவிட வேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்.

கண்ணியத்திற்குரியவர்களே! இப்போது நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.நாம் எப்படி அவர்களுடைய தவறான கலாச்சாரத்தில் கரைய முடியும்? நாம் என்ன சாதாரணமான மக்களா?

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கென்று ஒரு மார்க்கத்தைகொள்கையை கொடுக்கவில்லையா?

அல்லாஹ் ஹக், அவனுடைய தீன் ஹக், அவன் சொல்லக் கூடிய ஒவ்வொன்றும் ஹக். அல்லாஹ்வை தவிர உள்ள அனைத்தும், வழிபடக்கூடிய அனைத்தும் பொய்யானது.

அல்லாஹ்வை தவிர வணங்கப்படக் கூடிய அந்த சிலைகளோ அல்லது வேறு எந்த ஒன்றோ, அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட கலாச்சாரமும், அந்த நம்பிக்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட சமுதாயமும் பொய்யானது. அதில் எந்த சந்தேகமும் ஒரு முஸ்லிமுக்கு இருக்கக் கூடாது.

அல்லாஹ் கூறுகிறான் :

وَلَا تَتَّبِعْ أَهْوَاءَهُمْ عَمَّا جَاءَكَ مِنَ الْحَقِّ لِكُلٍّ جَعَلْنَا مِنْكُمْ شِرْعَةً وَمِنْهَاجًا

உமக்கு வந்த உண்மையை விட்டும் (விலகி,) அவர்களுடைய மன இச்சைகளை நீர் பின்பற்ற வேண்டாம். உங்களில் ஒவ்வொரு கூட்டத்தாருக்கும் ஒவ்வொரு மார்க்கத்தையும், வழிமுறையையும் நாம் ஏற்படுத்தியுள்ளோம்.(அல்குர்ஆன் 5 : 48)

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா முந்திய இறைத்தூதர்களுக்கு மூஸா அலைஹிஸ்ஸலாம், ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஒரு ஷரிஅத்தை கொடுத்தான்.

நம்முடைய முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் ஒரு ஷரிஅத்தை கொடுத்தான். இந்த ஷரிஅத் முந்திய ஷரிஅத்துகள் அனைத்தையும் மாற்றி விட்டது.

இனி ஒருவர், அல்லாஹ்விடத்தில் வெற்றி பெறக் கூடிய வாய்ப்பை, ஒரு நல்லருளை பெற வேண்டும் என்றால், முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஏற்று, அவர்களுடைய கலாச்சாரத்தை பின்பற்றுவதை தவிர வேறு வழியே அவருக்கு இல்லை.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

«وَالَّذِي نَفْسُ مُحَمَّدٍ بِيَدِهِ، لَا يَسْمَعُ بِي أَحَدٌ مِنْ هَذِهِ الْأُمَّةِ يَهُودِيٌّ، وَلَا نَصْرَانِيٌّ، ثُمَّ يَمُوتُ وَلَمْ يُؤْمِنْ بِالَّذِي أُرْسِلْتُ بِهِ، إِلَّا كَانَ مِنْ أَصْحَابِ النَّارِ»

முஹம்மதுடைய ஆன்மா எந்த இறைவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக!

(ஒரு விஷயத்தின் ஆழத்தையும், அதனுடைய அழுத்தத்தையும் உணர்த்துவதற்காக அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இது போன்று சத்தியம் செய்வார்கள்.

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுப்பப்பட்டதற்கு பிறகு,எல்லா மக்களும்,அவர்கள் எந்த நாட்டில் வசித்தாலும் சரி, எந்த சமுதாயத்தில் வசித்தாலும் சரி அவர்களெல்லாம் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உம்மத்.

அந்த முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உம்மத்தில் இரண்டு வகை இருக்கிறது.

1. அவர்களை ஏற்றுக் கொண்டவர்கள். இவர்களுக்கு 'உம்மத்துல் இஜாபா'என்று சொல்லப்படும்.

2. நபியுடைய அழைப்பிற்கு உரியவர்கள். இவர்களுக்கு'உம்மத்துத் தஃவா'என்று சொல்லப்படும்.

எல்லோரையும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அழைத்தார்கள். அல்லாஹ், மக்களை அழைத்துச் சொல்ல சொல்கிறான்.

قُلْ يَاأَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا

உலக மக்களே! உங்கள் அனைவருக்கும் நான் தூதராக வந்துள்ளேன். (அல்குர்ஆன் 7 : 158)

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அரபிகளுக்கோ அல்லது அந்த அரபு நாட்டில் வசிக்கக் கூடிய மக்களுக்கோ மட்டும் அவர்கள் நபியாக வரவில்லை.

எந்த நாட்டில் எந்த மொழி பேசுபவராக இருந்தாலும் சரி, எந்த சமுதாயத்தவராக இருந்தாலும் சரி, அவர்கள் எல்லோருக்கும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இறுதி இறைத்தூதராக அனுப்பப்பட்டவர்கள்.)

ஹதீஸின் தொடர் : இந்த உம்மத்தில் இருக்கக் கூடிய ஒரு யஹூதியோ அல்லது ஒரு நஸ்ரானியோ அல்லது வேறு யாரோ அவர் எனது வருகையை பற்றி கேள்விப்பட்டதற்கு பிறகு, என்னை நம்பிக்கை கொள்ளாமல் இறந்து விட்டால், நிச்சயமாக அவர் நரகவாதிகளில் ஒருவராக தான் இருப்பார்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 153.

அவர்,தனது சொத்து சுகங்களை எல்லாம் சமுதாயத்திற்கு நல்லறங்களில் செலவளித்தவராக இருந்தாலும் சரி, இரவெல்லாம் அல்லாஹ்வை வணங்கிய மனிதராக இருந்தாலும் சரி, முஹம்மது ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கேள்விபட்டதற்கு பிறகு,அவர்களை நம்பிக்கை கொண்டு,அவர்கள் காட்டிய வழிமுறையில் அல்லாஹ்வை வணங்கவில்லை என்றால் அவர்கள் நரகவாதிகள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சபையில், ஸஹாபாக்களில் சிலர் அமர்ந்திருக்கிறார்கள்.

உமருல் ஃபாரூக், அய்யாமுல் ஜாஹிலிய்யாவில் கல்வி அறிவு கொடுக்கப்பட்ட ஒரு தோழர்.எழுத படிக்க தெரிந்தவர்.

மதினாவிற்கு வந்த பிறகு, ஒரு சமயம் யூதர்களை சந்திக்க சென்ற பொழுது, அரபி மொழியில் மொழியாக்கம் செய்யப்பட்ட தவ்ராத்துடைய சில பிரதிகளை பார்க்கிறார்கள், அதை படிக்கிறார்கள். அதனுடைய கருத்துகள் அவர்களை கவர்கிறது. அதிலிருந்து சில பிரதிகளை எடுத்து வருகிறார்கள்.

ரஸூலுல்லாஹ்வின் சபையில் அமர்ந்த பொழுது, அல்லாஹ்வுடைய தூதரே! நான் யூதர்களை சந்திக்க சென்றேன். அப்போது அவரிடம் இருந்த தவ்ராத்தின் அரபி பிரதிகளை பார்த்தேன். அதில் சிலவற்றை வாங்கி வந்தேன் என்று கூறி படிக்க ஆரம்பித்தார்கள்.

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய முகம் சிவந்து கொண்டே செல்கிறது. அருகில் இருந்த தோழர்கள் உமரை பார்த்து சாடை செய்கிறார்கள்.

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் படிக்கின்ற ஆர்வத்தில் தொடர்ந்து கொண்டே செல்கிறார்கள். பிறகு, தோழர்கள் அவர்களுக்கு உணர்வூட்டிய பொழுது, நபியின் முகத்தை உமர் ரழியல்லாஹு அன்ஹு பார்க்கிறார்கள்; நபியின் முகம் சிவந்திருக்கிறது.

அல்லாஹ்! நான் உன்னிடம் உனது கோபத்திலிருந்து, உனது தூதரின் கோபத்திலிருந்து பாதுகாவல் தேடுகிறேன் என்று உமர் ரழியல்லாஹு அன்ஹு உஷார் ஆனார்கள்.

பிறகு,அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், உமரே! நான் உங்களுக்கு ஒன்றை சொல்லட்டுமா?

«لَوْ أَنَّ مُوسَى كَانَ حَيًّا، مَا وَسِعَهُ إِلَّا أَنْ يَتَّبِعَنِي»

இந்த தவ்ராத் வேதம் கொடுக்கப்பட்ட மூஸா இப்பொழுது உயிரோடு இருப்பாரேயானால் என்னை பின்பற்றுவதை தவிர அவருக்கு வேறு வழி கிடையாது.

அறிவிப்பாளர் : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 15156.

இந்த சம்பவம் நமக்கு எதை உணர்த்துகிறது? அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நமக்கென்று ஒரு தீனை, நமக்கென்று ஒரு கலாச்சாரத்தை கொடுத்திருக்கிறான்.

இந்த தீனுல் இஸ்லாம் நமக்கு முழுமைப்படுத்தப்பட்டுகொடுக்கப்பட்டிருக்கிறது. முந்திய உம்மத்துகளுக்குள்ள நபிமார்களுக்கு அல்லாஹ் இந்த தீனுல் இஸ்லாமை படிப்படியாக கொடுத்துக் கொண்டேயிருந்தான்.

ஆனால், முழுமையாக்கப்படவில்லை. முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு இந்த தீனுல் இஸ்லாமை அல்லாஹ் முழுமையாக்கிக் கொடுத்தான்.

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا

இன்றைய தினம் உங்களுக்காக உங்கள் மார்க்கத்தை பரிபூர்ணமாக்கி விட்டேன்; மேலும் நான் உங்கள் மீது என் அருட்கொடையைப் பூர்த்தியாக்கி விட்டேன். (அல்குர்ஆன் 5 : 3)

மேலும், அல்லாஹ் கூறுகிறான்:

إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ

நிச்சயமாக (தீனுல்) இஸ்லாம் தான் அல்லாஹ்விடத்தில் (ஒப்புக்கொள்ளப்பட்ட) மார்க்கமாகும். (அல்குர்ஆன் 3 : 19)

கண்ணியத்திற்குரியவர்களே! இங்கே ஒரு விஷயத்தை நாம் புரிய வேண்டும். இன்று, நம்மில் பலருக்கு தீன் என்றால், மார்க்கம் என்றால், பள்ளிக்கு வந்து தொழுவதில் மட்டும் தான் மார்க்கம் இருப்பதாக நினைக்கிறார்கள்.

ஆனால், இப்படி ஒரு குறுகிய வட்டத்தில் நம்முடைய மார்க்கம் அடைக்கப்பட வில்லை.

கண்ணியத்திற்குரிய ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸ்களோ, குர்ஆனுடைய வசனங்களோ தொழுகையை பற்றி மட்டும் தான் அல்லது ஜகாத்தை பற்றி மட்டும் தான் அல்லது நோன்பை பற்றி மட்டும் தான் அல்லது வெறும் இறை வணக்க வழிபாடுகளை பற்றி மட்டும் தான் பேசுகிறது என்று யாராவது சொல்ல முடியுமா?

இஸ்லாமிய சட்ட திட்டங்களை உணர்த்தக் கூடிய வசனங்கள் 500வசனங்கள். மீதமுண்டான 6000 -த்திற்கும் மேற்பட்ட வசனங்கள், அந்த சட்டதிட்டங்களுக்கு அப்பாற்பட்டு, குடும்ப வாழ்க்கையை பற்றி பேசுகின்றன. சமூக அமைப்பை பற்றி பேசுகின்றன. நம்முடைய வாழ்க்கையின் ஒவ்வொரு அம்சத்தைப் பற்றியும் அந்த வசனங்கள் பேசிக் கொண்டிருக்கின்றன.

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகை சம்மந்தமான ஹதீஸ்களோடு மட்டும் தங்களுடைய ஹதீஸ்களை நிறுத்திக் கொண்டார்களா? லட்சக் கணக்கான ஹதீஸ்களில் தொழுகையைப் பற்றி சொல்லப்பட்டதற்கு பிறகு, வணக்க வழிபாடுகளை பற்றி சொல்லப்பட்டதற்கு பிறகு, வேறு ஒன்றும் நமது மார்க்கத்தில் போதிக்கப்படவில்லையா?

சிந்திக்க வேண்டாமா? இன்று மார்க்கம் என்றால், தீன் என்றால் சடங்காக நிறைவேற்றி செல்கின்ற ஒரு வணக்கத்தில் மட்டும் நிறுத்தி விட்டார்கள்.

தொழுகை இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை தூண் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அதுவும் சரியாக நிறைவேற்றப்படுகிறதா? என்றால், அதிலும் சடங்குகள், ஒரு சம்பர்தாயமாக நிறைவேற்றப்படக் கூடிய ஒரு மோசமான நிலையை பார்க்கிறோம், உணர்வில்லாமல் தொழப்படக்கூடிய தொழுகையை பார்க்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!

தீன் என்றால் ஒரு மனிதனுடைய கொள்கை, ஒரு மனிதனுடைய வணக்க வழிபாடுகள், ஒரு மனிதனுடைய சமூக வாழ்க்கை, ஒரு மனிதனுடைய பண்பாடு, வியாபாரம், தொழில் துறை இவை அனைத்திற்கும் வழிகாட்டக் கூடிய ஒன்றைதான் அல்லாஹ் தீனாக கொடுத்திருக்கிறான்.

அதைத்தான் அல்லாஹ் கூறுகிறான்;அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்பட்டது, இஸ்லாமிய முறை மட்டும் தான்.

அல்லாஹ் கூறுகிறான் :

وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ

இன்னும் இஸ்லாம் அல்லாத (வேறு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் (அது) ஒருபோதும் அவரிடமிருந்து ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது; மேலும் அ(த்தகைய)வர் மறுமை நாளில் நஷ்டமடைந்தோரில் தான் இருப்பார். (அல்குர்ஆன் 3:85)

அல்லாஹ்வை பொறுத்தவரை அவன் சொன்னது மட்டும் தான் உண்மை. அவன் சொன்னதை செய்தால் தான் சொர்க்கம். அவன் சொன்னதை மட்டும் அவனுடைய தூதர் வழிகாட்டியதை மட்டும் ஏற்று பின்பற்றினால் தான் சொர்க்கம்.

அதை தவிர, நீ எதை எடுத்தாலும் சரி, நீ என்ன நன்மைகளை செய்தாலும் சரி அவற்றை அல்லாஹ் ஏறெடுத்தும் பார்க்கமாட்டான்.

قُلْ هَلْ نُنَبِّئُكُمْ بِالْأَخْسَرِينَ أَعْمَالًا (103) الَّذِينَ ضَلَّ سَعْيُهُمْ فِي الْحَيَاةِ الدُّنْيَا وَهُمْ يَحْسَبُونَ أَنَّهُمْ يُحْسِنُونَ صُنْعًا (104) أُولَئِكَ الَّذِينَ كَفَرُوا بِآيَاتِ رَبِّهِمْ وَلِقَائِهِ فَحَبِطَتْ أَعْمَالُهُمْ فَلَا نُقِيمُ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَزْنًا

‘‘(பாவமான) செயல்களில் இவர்களைவிட நஷ்டமடைந்தவர்களை நாம் உங்களுக்கு அறிவிக்கவா?'' என்று, (நபியே!) கேட்பீராக.அவர்கள் (யாரென்றால்) இவ்வுலக வாழ்வில் தவறான வழியிலேயே முயற்சி செய்து கொண்டு, தாங்கள் மெய்யாகவே நல்ல செயல்களையே செய்வதாக எண்ணிக் கொள்வார்கள்.இவர்கள்தான் தங்கள் இறைவனின் வசனங்களையும் அவனுடைய சந்திப்பையும் நிராகரித்து விட்டவர்கள். ஆகவே, அவர்களுடைய நன்மைகள் அனைத்தும் அழிந்துவிட்டன. (நன்மை, தீமையை நிறுக்க) அவர்களுக்காக மறுமை நாளில் எடைக் கோலையும் நாம் நிறுத்த மாட்டோம்.(அல்குர்ஆன் 18 : 103-105)

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இதை தொடர்ந்து நமக்கு எச்சரிக்கை செய்து கொண்டே இருக்கிறான்.

இந்த எச்சரிக்கை என்பது,ஏதோ நமக்கு விருப்பமாக அல்லது நமக்கு ஒரு சந்தர்ப்பமாக சொல்லப்பட்ட ஒன்று கிடையாது.

முஸ்லிம் என்றால், அவன் இஸ்லாமிய மார்க்கத்தை மட்டும்தான், இஸ்லாமிய கலாச்சாரத்தை மட்டும்தான் எல்லா சூழ்நிலைகளிலும் பின்பற்றியாக வேண்டும். அதிலிருந்து அவன் பிசகவே கூடாது.

ஒரு சிலை வணங்கிக்கு ஒப்பாகவோ அல்லது ஒரு யஹூதிக்கு ஒப்பாகவோ அல்லது ஒரு நஸரானிக்கு ஒப்பாகவோ வாழ்க்கையின் எந்த சூழ்நிலையிலும், எந்த சந்தர்பங்களிலும் அவன் போகவே கூடாது.

சூரா ஆல இம்ரான் 105–வது வசனத்தில் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முன்னோக்கியும், அவர்களுடைய உம்மத்தை முன்னோக்கியும் அல்லாஹ் கூறுகிறான்:

وَلَا تَكُونُوا كَالَّذِينَ تَفَرَّقُوا وَاخْتَلَفُوا مِنْ بَعْدِ مَا جَاءَهُمُ الْبَيِّنَاتُ وَأُولَئِكَ لَهُمْ عَذَابٌ عَظِيمٌ

(இறைவனின்) தெளிவான ஆதாரங்கள் தங்களிடம் வந்த பின்னரும், யார் தங்களுக்குள் பிரிவையுண்டுபண்ணிக் கொண்டு, மாறுபாடாகி விட்டார்களோ, அவர்கள் போன்று நீங்களும் ஆகிவிடாதீர்கள்; அத்தகையோருக்குக் கடுமையான வேதனை உண்டு. (அல்குர்ஆன் 3:105)

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த வசனத்தில் ஒட்டுமொத்தமாக கூறுகிறான், நீங்கள் அந்த யூதர்களை போன்று, கிறிஸ்தவர்களை போன்று இருக்கக் கூடாது. அவர்களுடைய கொள்கைகளை போன்று, கோட்பாடுகளை போன்று, அவர்களுடைய பழக்கவழக்கங்களை போன்று நீங்கள் இருக்கக் கூடாது. அவர்களுக்கு மாற்றமாக நீங்கள் இருக்க வேண்டும்.

ஏன் அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இவ்வளவு அழுத்தமாக கூறுகிறான்?

நீங்கள் யாருடைய கலாச்சாரத்தை பின்பற்றுகின்றீர்களோ கண்டிப்பாக அவர்களின் கோட்பாடுகளை, அவர்களின் கொள்கைகளை, அவர்களின் நெறிகளை நேசிக்கக் கூடிய காலம் வெகு விரைவில் வந்து விடும். நீங்கள் யாரை நேசிக்கின்றீர்களோ அவர்களை தான் வாழ்க்கையில் பின்பற்றுவீர்கள்.

அல்லாஹ்வுடைய தூதரை நேசிப்பவர்களாக நாம் இருந்தால், அவர்களுடைய நேசம் நமது உள்ளத்தில் உண்மையாக இருக்குமேயானால், அந்த நபி காட்டிய கலாச்சாரத்தை விட்டு விட்டு, யூதர்கள், கிறிஸ்தவர்கள் உருவாக்கிய கலாச்சாரத்தை, அந்த ஆடை அலங்காரங்களை, அவர்களுடைய வாழ்க்கை முறைகளை ஒரு முஸ்லிமால் எப்படி பின்பற்ற முடியும்?

நீங்கள் யாரை நேசிக்கின்றீர்களோ அவர்களை பின்பற்றுகிறீர்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்கள் நபியை நேசித்தார்கள். எனவே, நபியை பின்பற்றினார்கள். அவர்கள் நபியை நேசித்தது உண்மையாக இருந்தது.

எனவே, நபியின் நேசம் உள்ளவர்களாக இருந்தவர்கள் நபியை பின்பற்றக் கூடியவர்களாகவும் இருந்தார்கள்.

இன்று,நமது மக்களுக்கு நபியின் நேசம் எங்கே இருக்கிறது? நபியின் நேசம் எதில் இருக்கிறது? ஷிர்க்கான காரியங்களை செய்வதில், சடங்குகளை செய்வதில் நபியின் நேசத்தை அங்கே அவர்கள் உள்ளடக்கி விட்டார்கள்.

மௌலிது ஓதுவது, மீலாது விழா கொண்டாடுவது, கந்தூரி, உரூஸ் என்று கொண்டாடுவது. இதில்தான் அல்லாஹ்வுடைய தூதரின் நேசத்தையும், நல்லவர்களின் நேசத்தையும் கொண்டு வந்து நிறுத்தி வைத்திருக்கிறார்கள்.

இவையனைத்தும் ஷிர்க்கான காரியங்கள், அனாச்சாரங்கள், அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் தடுத்த விஷயங்கள்.

மற்றபடி வாழ்க்கையை எடுத்துக் கொண்டால், அவர்களுடைய வாழ்க்கைக்கும், அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லாமல் இருப்பதை பார்க்கிறோம்.

அடிப்படை இபாதத்துகளே இல்லாமல் இருக்கின்றன.இன்று, முஸ்லிம்களில் பெரிய கூட்டம் ஐங்காலத் தொழுகைகளே இல்லாமல் இருக்கின்றார்கள்!

ஆனால், அவர்கள் எவ்வளவு புனிதமாக மௌலிது ஓதுகிறார்கள். எவ்வளவு பேணுதலாக மீலாதுகளை, சடங்குகளை செய்கிறார்கள். என்ன நம்பிக்கையில் இதனை செய்கிறார்கள்? இந்த மௌலிதுகளும், மீலாதுகளும் தங்களை இஸ்லாமிய மார்க்கத்தில் தரிப்படுத்தி வைக்கும்.

தங்களை இஸ்லாமிய மார்க்கத்தை பின்பற்றக் கூடியவர்களாக பறைசாட்டும் என்பதாக நம்பி வைத்திருக்கிறார்கள். எவ்வளவு பெரிய கேவலமான, இழிவான ஒரு புரிதல் என்பதை யோசித்துப் பாருங்கள்!

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு கொடுத்த இந்த கலாச்சார தனித்துவம் பாதுகாக்கப்பட வேண்டும். இதை கொண்டுதான் நாம் அல்லாஹ்வுடைய தீனை பின்பற்றுகிறோம்.

நம்முடைய ரப்பு அல்லாஹ், நம்முடைய நபி முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதை வாழ்க்கை பூர்வமாக உறுதிப்படுத்துகிறோம்.

அப்படி இல்லாமல், பள்ளிக்கு ஒரு கலாச்சாரம்,பள்ளிக்கு வெளியே ஒரு கலாச்சாரம் என்றால், பள்ளிக்குள் நாங்கள் அல்லாஹ்வை வணங்குவோம், பள்ளிக்குள் நாங்கள் முஹம்மது நபியை ஏற்றுக் கொள்வோம். பள்ளிக்கு வெளியே எங்களது வழிகாட்டிகள் யூதர்கள். இதுவா ஒரு முஸ்லிமின் அடையாளம்?

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய எச்சரிக்கை ஒவ்வொன்றையும் நீங்கள் படித்துப் பாருங்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் துல்லியமாக முன்னறிவிப்பு செய்கிறார்கள்:

«لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ، وَذِرَاعًا بِذِرَاعٍ، حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ»

சத்தியமாக ஒரு காலம் வரும். நீங்கள் முந்திய மக்களின் சடங்குகளை, அவர்களின் வழிமுறைகளை பின்பற்றுவீர்கள்.

ஜானுக்கு ஜான், முழத்துக்கு முழம் அவர்களை போன்று அப்படியே மாறிக்கொண்டே இருப்பீர்கள்.

(அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எதை கூறினார்கள்? நாம் தொழுகின்ற தொழுகையைப் பற்றியோ, நோன்பை பற்றியோ, ஜகாத்தைப் பற்றியோ கூறவில்லை.

இந்த தொழுகை, இந்த நோன்பில், இந்த ஜகாத்தில், இந்த ஹஜ்ஜில் மாற்றார்களுடைய வழிபாட்டு முறைகள் கலப்பதற்கு வாய்ப்பே இல்லை. கலக்க முடியாது.

கலப்பதாக இருந்தால் பண்பாடுகளில், கலாச்சாரத்தில், பழக்க வழக்கங்களில், சடங்கு சம்பர்தாயங்களில் தான் இருக்கும்.

அல்லாஹ்வை விட அழகிய சட்டத்தை கொடுப்பவன் யாரும் இருக்க முடியுமா? முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கலாச்சாரத்தை விட சிறந்த, அழகிய, பண்பாடு மிக்க ஒரு புனிதமான கலாச்சாரத்தை யாராவது போதிக்க முடியுமா?

என்னுடைய கலாச்சாரத்தை விட்டு விட்டு, என்னுடைய அழகிய வழிமுறையை விட்டு விட்டு,தன்னுடைய உம்மத் எப்படி வழிபிறலும் என்பதை வேதனையோடு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறுவதை கேளுங்கள்.)

ஹதீஸின் தொடர் : அவர்கள் ஒரு உடும்பின் பொந்துக்குள் நுழைய முயற்சி செய்தால் இவர்களும் அதுபோன்று செய்வார்கள்.

(ஏன், எதற்கு? இது சரியா? தவறா? என்று யோசிக்கமாட்டான். ஒரு உடும்பு நுழையக்கூடிய பொந்தின் அளவு எப்படி இருக்கும்? என்பதை யோசித்துப் பாருங்கள்.

அந்த பொந்துக்குள் ஒருவன் தலையை நுழைத்துநுழைய முயற்சிபானேயானால் அவன் எவ்வளவு பெரிய முட்டாளாக, மடையனாக, கிறுக்கனாக இருப்பான்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள், ஆம் அப்படி தான் அந்த யூத மடையர்கள், கிறிஸ்துவ மடையர்கள் இருப்பார்கள்.

இன்று சில உதாரணங்களை இன்ஷா அல்லாஹ் தொடர்ந்து பார்ப்போம். நமக்கென்று உள்ள தலைமுடி கலாச்சாரத்தை பாருங்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தலை முடி எப்படி வைக்க வேண்டும் என்பதற்கும் வழிகாட்டி இருக்கிறார்கள். குறிப்பாக நமது வாலிபர்களுடைய தலையை பாருங்கள்.

எல்லா பக்கங்களிலும் சிரைத்து விட்டு நடுவில் மட்டும் ஒரு தீவை போன்று வைத்திருப்பான். அல்லது இடை இடையே சிரைத்து விட்டு பாலத்தை போன்று அங்கங்கே நாற்று நடுவதை போன்று வைத்திருப்பான்.

இன்னும் எவ்வளவு கேவலமான விஷயம்! ஆடை விஷயத்திலும் அவர்களைத்தான் பின்பற்றுகிறார்கள்.ஆடை என்பது,அவ்ரத்தை மறைப்பதற்காகதான். தான் ஒரு கண்ணியமான மனிதன், கண்ணியமான குடும்பத்தை சேர்ந்தவன், ஒழுக்கமானவன் என்பதை உணர்த்துவதற்காகத்தான் ஆடை.

இன்று பார்க்கிறோம்;முஸ்லிம்களுடைய ஆடை நாளுக்கு நாள் மாறுகிறது. எதை அவர்கள் சினிமாக்களில், சீரியல்களில் பார்க்கிறார்களோ, எதை ஃபேஷன் புத்தகங்களில் பார்க்கிறார்களோ அது தான் அவர்களுடைய ஆடையாக மாறிக் கொண்டிருக்கிறது.

தொப்புளில் இருந்து அணியப்பட்ட அவர்களுடைய கீழாடை, இன்றுதொடைக்கு கீழிருந்து அணியப்படுகிறது. அவர்களுடைய பின் புறத்தை மறைத்து தொடை வரை நீளமாக இருந்த அந்த மேலாடை தொப்புலுக்கு மேல் சென்று விட்டது.

எவ்வளவு அசிங்கமான இந்த கலாச்சாரம்!அநாகரிகமான கலாச்சாரம்!

ஒரு மிருகத்திற்கு உடை உடுத்தி தனது அவ்ரத்தை மறைக்க வேண்டுமென்ற உணர்வு இருக்குமேயானால் அந்த மிருகம் கூட அப்படி உடை உடுத்தாது.

அப்படிப்பட்ட கேவலமான உடை இன்று முஸ்லிம்களுடைய உடையாக மாறிக் கொண்டிருக்கிறது. முஸ்லிம்களுடைய பெண்களை எடுத்துக் கொள்ளுங்கள் அல்லாஹ் பாதுகாப்பானாக!

சினிமாக்களிலும், சீரியல்களிலும் வரக்கூடிய அந்த விபச்சாரிகள் உடுத்தக் கூடிய அந்த அலங்காரங்கள் தான் இன்று முஸ்லிம் பெண்களுடைய மனதை கவர்கிறது. அந்த பெயர்களை கூறித்தான் ஆடைகளை அவர்கள் வாங்குகிறார்கள்.

தனிமையில் இருக்கும் பொழுது கூட அந்த ஆடையை அணிவதற்கு வெட்கம், மானம், சூடு, சொரனை உள்ள ஒரு மனிதன் விரும்பமாட்டான்.

அப்படிப்பட்ட ஒரு ஆடையை தன்னுடைய ஆடையாக உடுத்திக் கொண்டு ஒரு முஸ்லிம் குடும்பத்திற்கு மத்தியிலோ, சமூகத்திற்கு மத்தியிலோ செல்கிறாள் என்றால் எந்த அளவிற்கு அவளுடைய வெட்க உணர்வு, அவளுடைய ரோஷம், மானம் அங்கே கெடுக்கப்பட்டிருக்கிறது என்பதை யோசித்துப் பாருங்கள்.

அல்லாஹ் நமக்கு மார்க்கத்தில் கொடுத்திருக்கக் கூடிய மிகப் பெரிய பொக்கிஷம் வெட்கம். நம்முடைய மார்க்கத்தில் அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கக் கூடிய மிகப் பெரிய ஒரு ஈமானுடைய தன்மை வெட்கம்.

யூதர்கள், கிறிஸ்தவர்கள் மஜூஸிகள், சிலை வணங்கிகள் அவர்களை பொறுத்த வரை வெட்கத்தை களைய வேண்டும், வெட்கம் என்ற ஒரு விஷயமே எதிலும் இருக்கக் கூடாது என்று விரும்புபவர்கள்.

சிலை வணங்கிகளை பாருங்கள். அவர்களில் பெண்கள் ஆறுகளில் வெளிப்படையாக குளிப்பார்கள், ரோடுகளில் குளிப்பார்கள், குளங்களில் குளிப்பார்கள். அறைகளுக்குள் இருப்பதை போன்று தெருக்களில் திரிவார்கள்.

அது போன்று தான் நமது பெண்களை மாற்ற நினைக்கினார்கள். நமது பெண்களும் மாற நினைக்கிறார்கள்.

உடலை மறைப்பதற்காகத்தான் ஆடை.உடலை படம் பிடித்து காட்டுவதற்காக அல்ல.

நான் இங்கே வாலிபர்களையும் சேர்த்து தான் சொல்கிறேன். ஆண்களுக்கும் அப்படித்தான்.தன்னுடைய உடல் அமைப்பைகாட்டுவதற்காக ஆடை அல்ல. தனது உடலை மறைப்பதற்காகபோர்த்துவதற்காகத்தான் ஆடை.

அல்லாஹ் அப்படித்தான் கூறுகிறான்:

لِبَاسًا يُوَارِي سَوْآتِكُمْ وَرِيشًا

நாம் உங்களுக்கு உங்களுடைய மானத்தை மறைக்கவும், உங்களுக்கு அலங்காரமாகவும் ஆடையை அளித்துள்ளோம். (அல்குர்ஆன் 7 : 26)

ஒரு வாலிபன் எப்படி ஆடை அணிகிறான்? ஒரு கட்டுமஸ்தான வாலிபனாக இருந்தால் தன்னுடைய muscles களை காட்டும்படியான நெருக்கமான ஆடைகளை அணிந்து கொண்டு வருகிறான்.

எத்தனை வாலிபர்கள், பள்ளிக்கு வந்து அவர்கள் தொழுதார்கள் என்றால், அவர்களுக்கு பின்னால் ஸூஜூது அல்ல, ருகூஉவே செய்ய முடியாது.

அவர்களது தொழுகையே கூடாது. ஏன்? ஆண்களை பொறுத்த வரை குறைந்த பட்சம் தொப்புளுக்கு கீழ் முடி வளரக் கூடிய இடத்திலிருந்து முட்டிக் கால் கீழே வரை கண்டிப்பாக மறைத்திருக்க வேண்டும்.

அதிலிருந்து ஒரு திர்ஹத்தின் அளவு, ஒரு ரூபாய் நாணயத்தின் அளவிற்கு கூட திறந்திருக்குமேயானால் அவனுடைய தொழுகை கூடாது.

ஆனால்,இங்கே எப்படிதொழுகிறான்? அவனின் பித்தட்டின் கோடுகள் குழிகள் வெளியே தெரிகின்ற அளவிற்கு விகாரமாக தெரிகிறது.

கண்களை கட்டிக் கொண்டு தான் அந்த வாலிபர்களுக்கு பின்னால் தொழ வேண்டும்.அல்லது தக்பீர் கட்டியதிலிருந்து இறுதி வரை கண்களை மூடிக் கொண்டுதான் அவர்களுக்கு பின்னால் தொழ வேண்டும்.)

ஹதீஸின் தொடர் : இதைத்தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:

அவர்களில் ஒருவன் உடும்பின் பொந்துக்குள் சென்றாலும் அதற்குள்ளும் நீங்கள் நுழைய நினைப்பீர்கள்.

ஸஹாபாக்கள் கேட்டார்கள், அல்லாஹ்வுடைய தூதரே! யூதர்கள், கிறிஸ்தவர்களை பற்றியா நீங்கள் கூறுகிறீர்கள்? அவர்களது கலாச்சாரத்திற்கு பின்னால் செல்வதையா நீங்கள் கூறுகிறீர்கள்?

நபியவர்கள் கூறினார்கள், பிறகு யாரை பின்பற்றுவதை பற்றி நான் கூறுகிறேன். (1)

அறிவிப்பாளர் : அபூ ஸயீது அல்குத்ரி ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 3456.

அது போன்று அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கக் கூடிய மற்றொரு ஹதீஸை இமாம் புகாரி பதிவு செய்கிறார்கள்.

لاَ تَقُومُ السَّاعَةُ حَتَّى تَأْخُذَ أُمَّتِي بِأَخْذِ القُرُونِ قَبْلَهَا، شِبْرًا بِشِبْرٍ وَذِرَاعًا بِذِرَاعٍ»

என்னுடைய உம்மத் முந்திய உம்மத்துகளின்வழியில் செல்கின்ற வரை மறுமை நிகழாது.ஒரு ஜானுக்கு ஒரு ஜான், ஒரு முழத்துக்கு ஒரு முழம் அவர்களைப் பின்பற்றுவார்கள்.

நபித்தோழர்கள் கேட்டார்கள்,

فَقِيلَ: يَا رَسُولَ اللَّهِ، كَفَارِسَ وَالرُّومِ؟ فَقَالَ: «وَمَنِ النَّاسُ إِلَّا أُولَئِكَ»

அல்லாஹ்வுடைய தூதரே! பாரசீகர்களையும், ரோமர்களையும் பற்றியா நீங்கள் கூறுகிறீர்கள்? அவர்களுடைய வழியில் செல்வதை பற்றியா நீங்கள் கூறுகிறீர்கள்?

நபியவர்கள் சொன்னார்கள், நான் வேறு யாரை பற்றி சொல்லப் போகிறேன் என்று.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 7319.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய மற்றும் ஒரு ஹதீஸை அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், இஸ்ரவேலர்களுக்கு வந்ததை போன்று ஒரு காலம் என்னுடைய உம்மத்திற்கு வரும்.

அந்த காலத்தில் இந்த உம்மத் யூதர்களை போன்று எப்படி மாறிவிடும் என்றால்,ஒரு ஜோடி செருப்பில் ஒரு செருப்பு இன்னொரு செருப்பை எப்படி ஒத்ததாக, அச்சசலாக இருக்கிறதோ, அது போன்று நீங்கள் யூதர்களை போன்றோ, கிறிஸ்தவர்களை போன்றோ முற்றிலுமாக மாறியிருப்பீர்கள்.

பிறகு சொன்ன வார்த்தை தான் பயங்கரமான எச்சரிக்கை நிறைந்தது.

அவர்களில் யாராவது ஒருவன் தன்னுடைய தாயோடு வெளிரங்கமாக விபச்சாரம் செய்திருந்தால், இந்த உம்மத்திலும் அப்படிப்பட்ட ஒருவன் உருவாகுவான்.

(இன்றைய சினிமா, சீரியல் கலாச்சாரத்தினுடைய எல்லை இதுதான்.ஆண்களுக்கும், பெண்களுக்கும் இடையில், பெண்களுக்கும் ஆண்களுக்கும் இடையில் இருக்கக் கூடிய அத்தனை உறவு முறைகளையும் அழித்து, இந்த உறவு முறைகளை தரைமட்டமாக்கி, எந்த ஆணும் எந்த பெண்ணோடும் எந்த நேரத்திலும் ஆடலாம், பாடலாம், கும்மாளம் அடிக்கலாம்.அப்படி அடிக்கப்படுவதை பார்த்து ரசிக்கலாம்.

செய்தால் என்ன? செய்யப்படுவதை பார்த்தால் என்ன? ஒரு காரியத்தை அவன் தானாக அதில் ஈடுபட்டால் என்ன? அப்படி ஈடுபடுவதை பார்த்து அதை அவன் ஏற்றுக் கொண்டால் என்ன? இரண்டும் ஒன்று தான்.)

தொடர்ந்து ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், இஸ்ரவேலர்கள் 71கூட்டங்களாக பிரிந்தார்கள். என்னுடைய உம்மத் 73கூட்டங்களாக பிரியும். இந்த எழுபத்தி மூன்று கூட்டங்களிலும் ஒரே ஒரு கூட்டத்தை தவிர எல்லா கூட்டங்களும் நரகத்திற்கு சென்று விடும்.

தோழர்கள் கேட்டார்கள், அல்லாஹ்வுடைய தூதரே! சொர்க்கத்திற்கு செல்லும் அந்த ஒரு கூட்டம் யார்? என்று.

நபியவர்கள் கூறினார்கள், இன்று நானும் என்னுடைய தோழர்களும் எந்த ஒரு கொள்கையில், எந்த ஒரு நெறியில், எந்த ஒரு கோட்பாட்டில் இருக்கிறோமோ அதைப் பின்பற்றக்கூடியவர்கள்.(2)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2641, தரம் : ஹசன் (அல்பானி)

ஆகவே, கண்ணியத்திற்குரியவர்களே! மீண்டும் ஒரு முறை நம்முடைய கலாச்சாரத்தை, நம்முடைய பண்பாடுகளை சீர்தூக்கி பார்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம்.

நாம் கண்மூடித்தனமாக நம்முடைய வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, நம்முடைய உலக விஷயங்களுக்கு நாம் முக்கியத்துவம் கொடுத்து, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை தெரியாமல், படிக்காமல், அதை உணராமல் நாம் வாழ்ந்து முடிந்து விட்டால், மீண்டும் ஒரு முறை வாழ்க்கையை திருத்திக் கொள்வதற்கு, மாற்றிக் கொள்வதற்கான வாய்ப்பு கிடையாது.

இங்கிருந்து நாம் மரணித்து சென்று விட்டால், அடுத்து நாம் தங்கக் கூடிய இடம் இரண்டில் ஒன்றாக இருக்கும்.

ஒன்று, சொர்க்கமாக இருக்கும், சொர்க்கம் யாருக்கு? அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பின்பற்றியவர்களுக்கு. அல்லது நரகமாக இருக்கும். நரகம் யாருக்கு? அல்லாஹ்வுடைய தூதரை பின்பற்றாதவர்களுக்கு. அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا سَعِيدُ بْنُ أَبِي مَرْيَمَ، حَدَّثَنَا أَبُو غَسَّانَ، قَالَ: حَدَّثَنِي زَيْدُ بْنُ أَسْلَمَ، عَنْ عَطَاءِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي سَعِيدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «لَتَتَّبِعُنَّ سَنَنَ مَنْ قَبْلَكُمْ شِبْرًا بِشِبْرٍ، وَذِرَاعًا بِذِرَاعٍ، حَتَّى لَوْ سَلَكُوا جُحْرَ ضَبٍّ لَسَلَكْتُمُوهُ»، قُلْنَا يَا رَسُولَ اللَّهِ: اليَهُودَ، وَالنَّصَارَى قَالَ: «فَمَنْ» (صحيح البخاري- 3456)

குறிப்பு 2)

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ الحَفَرِيُّ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زِيَادٍ الأَفْرِيقِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيَأْتِيَنَّ عَلَى أُمَّتِي مَا أَتَى عَلَى بني إسرائيل حَذْوَ النَّعْلِ بِالنَّعْلِ، حَتَّى إِنْ كَانَ مِنْهُمْ مَنْ أَتَى أُمَّهُ عَلَانِيَةً لَكَانَ فِي أُمَّتِي مَنْ يَصْنَعُ ذَلِكَ، وَإِنَّ بني إسرائيل تَفَرَّقَتْ عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ مِلَّةً، وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ مِلَّةً، كُلُّهُمْ فِي النَّارِ إِلَّا مِلَّةً وَاحِدَةً»، قَالُوا: وَمَنْ هِيَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «مَا أَنَا عَلَيْهِ وَأَصْحَابِي»: «هَذَا حَدِيثٌ مُفَسَّرٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِثْلَ هَذَا إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ» (سنن الترمذي 2641) [حكم الألباني] : حسن

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/