HOME      Khutba      காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் (அமர்வு 1-8) | Tamil Bayan - 387   
 

காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் (அமர்வு 1-8) | Tamil Bayan - 387

           

காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் (அமர்வு 1-8) | Tamil Bayan - 387


காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் - (அமர்வு 1)

ஜுமுஆ குத்பா தலைப்பு : காஃபிர்களின் கலாச்சாரத்தில் நாம் - (அமர்வு 1)

வரிசை : 387

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 08-01-2016| 28-03-1437

بسم الله الرحمن الرّحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நமது பாவங்களை மன்னிப்பானாக! நன்மைகளில் முன்னேறுவதற்கு அல்லாஹ் நமக்கு உதவி செய்வானாக! அல்லாஹ்வை பயந்தவர்களாக, அல்லாஹ்வின் மார்க்கத்தை பேணியவர்களாக, அல்லாஹ்வின் கட்டளைப்படி வழிநடப்பவர்களாக, அல்லாஹ் தடுத்த, அவன் விரும்பாத ஒவ்வொரு சிறிய பெறிய பாவங்கள் அனைத்திலிருந்தும் அல்லாஹ் தஆலா நம்மை பாதுகாப்பானாக! ஆமீன்.

அதே அல்லாஹ்வின் அச்சத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.

இன்றைய முஸ்லிம் சமுதாயத்தின் கலாச்சார சீரழிவை நாம் தொடர்ந்து பார்த்து வருகிறோம். அந்த கலாச்சார சீரழிவின் தாக்கத்தில் பல சூழ்நிலைகளில் நாம் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பாதிக்கப்படுகின்றோம்.

நம்முடைய குடும்பத்தில்,நம்முடன் பிறந்த நம்முடைய குடும்பத்தினர் பலர் அந்த கலாச்சார தாக்கத்தில் சிக்கியிருப்பதை பார்க்கிறோம்.

ஆரம்பத்தில் ஒரு தீமை தீமையாக தெரியும். ஆரம்பத்தில் ஒரு பாவம் பாவமாக தெரியும்.ஒரு குற்றம் தொடக்கத்தில் கடுமையாக இருக்கும், வெறுப்பாக இருக்கும். அதையே ஒன்றுக்கு இருமுறை மும்முறை அதற்கு மேல் மனிதன் அந்த குற்றத்தில் அந்த பாவத்தில் அந்த தவறில் அந்த அனாச்சாரத்தில் அந்த அசிங்கத்தில் தொடர்ந்து ஈடுபடும்பொழுது இறுதியில் அந்த பாவமே, அந்த குற்றமே, அந்த தவறே, அந்த அனாச்சாரமே அவனுக்கு மிக அழகான காட்சியாக தெரியும்.

அசிங்கம் அதை தொடர்ந்து செய்வதால் கண்களுக்கு அழகாக மாறிவிடுகிறது. இதை அன்றாட வாழ்க்கையில் நாம் பார்க்கிறோம்.

எப்படி துர்நாற்றத்தை பழகியவன்,அந்த துர்நாற்றம் அவனுக்கு துர்நாற்றமாக தெரிவதில்லையோ அதுபோன்று தான்,பாவங்களை குற்றங்களை தொடர்ந்து செய்பவர்களுக்கு அந்த பாவ உணர்வுகுற்ற உணர்வு இருப்பதில்லை.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மிகத் தெளிவான மார்க்கத்தை நமக்கு தந்திருக்கிறான். மிக அழகிய மார்க்கத்தை நமக்கு கொடுத்திருக்கிறான். நீதமான மார்க்கம் அது, நேர்மைமிக்க மார்க்கம் அது, ஒழுக்கமுள்ள மார்க்கம் அது.

தனி மனிதனின் கண்ணியம், சமுதாயத்தின் கண்ணியம், குடும்பத்தின் கண்ணியம், நாட்டின் கண்ணியம் என்று முழு மனித வர்க்கத்தின் கண்ணியங்களை, ஒழுக்கங்களை பாதுகாக்கக் கூடியது மட்டுமல்ல,மேம்படுத்துக் கூடிய மார்க்கத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு வழங்கியிருக்கிறான்.

இதில் கேவலம் பாருங்கள்;இந்த அழகிய மார்க்கத்தை கொடுக்கப்பட்டவர்கள், இஸ்லாமிய அழகிய சட்ட திட்டங்களை, ஒழுக்கங்களை கொடுக்கப்பட்டவர்கள் தனது மார்க்கத்தை அழகாக பார்க்காமல், அல்லாஹ்வின் சட்டத்தை, நபியின் அந்த அழகிய வழிகாட்டுதலை, நபியின் அந்த அற்புதமான கலாச்சாரத்தை அழகாக பார்க்காமல், அதை ரசிக்காமல், காஃபிர்களின் கலாச்சாரத்தை அழகாக பார்க்கிறார்கள்.

அதை ரசிக்கிறார்கள். பள்ளத்தை நோக்கி தண்ணீர் ஓடுவது போல அந்த காஃபிர்களின் கலாச்சாரத்திற்கு பின்னால் ஓடுகிறார்கள்.

அல்லாஹ் கூறுகிறான் :

وَمَنْ أَحْسَنُ مِنَ اللَّهِ حُكْمًا لِقَوْمٍ يُوقِنُونَ

உறுதியான நம்பிக்கையுள்ள மக்களுக்கு அல்லாஹ்வைவிட தீர்ப்பு வழங்குவதில் அழகானவன் யார்?(அல்குர்ஆன் 5:50)

அல்லாஹ்வின் மார்க்கத்தை பற்றிப் பிடியுங்கள். அல்லாஹ்வை விட அழகிய சட்டங்களை வழங்குவதற்கு உங்களுக்கு யார் இருக்கிறார்கள்?

இந்த மார்க்கத்தில் எந்த அம்சத்தில் நீங்கள் அழகில்லை என்று சொல்ல முடியும்? இந்த மார்க்கத்தின் எந்த சட்டத்தை அழகில்லை, பொறுத்தமில்லை, நீதமில்லை என்று சொல்ல முடியும் பாருங்கள்.

அல்லாஹ்வுடைய இந்த தீனை விட, நபியின் இந்த வழிகாட்டுதலை விட, சிறந்த ஒரு வழிகாட்டுதலை, நேர்மையான, கண்ணியமான ஒரு வழிகாட்டுதலை, இந்த மனித சமுதாயத்திற்கு யாராவது கொடுக்க முடியுமா?

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் :

بعثت لاتمم مكارم الاخلاق

உயர்ந்த சீரிய சிறந்த நற்குணங்களை போதிப்பதற்கு மட்டுமல்ல, அதை முழுமையாக உங்களுக்கு நடைமுறைப் படுத்தி காட்டுவதற்காக நான் அனுப்பப் பட்டிருக்கிறேன்.

நூல் : சுனன் குப்ரா – பைஹகீ, எண் : 20782.

நபி போதித்த பண்புகளை விடவா? நபி போதித்த நற்குணங்களை விடவா? ஒரு அழகிய நற்குணத்தை இந்த மனித சமுதாயத்திற்கு ஒரு தத்துவவாதியோ, ஒரு சிந்தனைவாதியோ, அறிமுகப்படுத்தி விட முடியும்!

கலாச்சாரம் என்று எடுத்துக் கொள்ளுங்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பற்றி அல்லாஹ் கூறுகிறான் :

لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا

அல்லாஹ்வின் மீதும், இறுதி நாளின் மீதும் ஆதரவு வைத்து, அல்லாஹ்வை அதிகம் தியானிப்போருக்கு நிச்சயமாக அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி உங்களுக்கு இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)

ஆகவேதான், வாழ்நாளெல்லாம் தங்களின் பிராச்சாரத்தில் அல்லாஹ்வின் தூதர் தொடங்கும் போது கூறுவார்கள் :

إِنَّ أَحْسَنَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَأَحْسَنَ الْهَدْيِ هَدْيُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

கலாச்சாரங்கள், பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், நடைமுறை இவை அனைத்திலும் சிறந்தது முஹம்மதுடைய பழக்க வழக்கம், முஹம்மதுடைய கலாச்சாரம்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5633.

மனித சமுதாயம் பற்களை சுத்தம் செய்வதை கூட அறியாமல் இருந்தது.தங்களது நகங்களை வெட்டி சுத்தத்தை பேணுவதற்கு கூட அறியாமல் இருந்தது மனித சமுதாயம்.

எந்த முடிகளை அகற்ற வேண்டுமோ, எங்கே அசுத்தங்கள் ஒன்று சேறுமோ, அழுக்குகள் ஒன்று சேர்ந்து நோய்களை உருவாக்குமோ,அதை கூட சுத்தம் செய்வதற்கு தெரியாத ஜாஹில்களாக சமுதாயம் இருந்தது.

எதை வளர்க்க வேண்டும்? எதை வெட்ட வேண்டும்? என்ற அறிவில்லாத சமுதாயமாக,மீசையை வளர்த்துக் கொண்டு, தாடியை நறுக்கிக் கொண்டோ, கத்தரித்துக் கொண்டோ அல்லது சிரைத்துக் கொண்டோ இருந்தது. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதற்கு கூட வழிகாட்டினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிகாட்டுதல் வணக்க வழிபாடுகளுக்கு மட்டுமல்ல.அவர்களுடைய வழிகாட்டுதல் மஸ்ஜிதிற்குள் முஸ்லிம்களுக்கு கொடுக்கப்பட்டன. மஸ்ஜிதிற்கு வெளியிலும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முஸ்லிம்களுக்கு வழிகாட்டினார்கள்.

மஸ்ஜிதிற்கு வெளியில் என்றால் கடைத் தெருவுகளில், இல்லறங்களில், தனி மனித ஒழுக்கங்களில், சமுதாயப் பண்பாடுகளில், சமுதாய கலாச்சாரங்களில் இப்படி எல்லா துறைகளிலும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அழகிய வழிகாட்டுதலை நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள்.

எனவே ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்:

تَرَكْتُكُمْ عَلَى الْبَيْضَاءِ لَيْلُهَا كَنَهَارِهَا لَا يَزِيغُ عَنْهَا بَعْدِي إِلَّا هَالِكٌ

நான் உங்களை வெண்மையான மார்க்கத்தில் விட்டுச் செல்கிறேன். அதன் இரவும் பகலைப் போன்றதே. தானாக அழிபவரை விட வெறு யாரும் அதில் பிசகிச் செல்லமாட்டார். (1)

அறிவிப்பாளர் : இர்பாழ் இப்னு சாரியா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் : 43.

நமது மார்க்கம் கறைபடியாத மார்க்கம், வெண்மையான மார்க்கம், பரிசுத்தமான மார்க்கம், அல்லாஹ்வின் புறத்திலிருந்து ரப்புல் ஆலமீனிடமிருந்து, ஞானமிக்கவன், அறிவு மிக்கவன், அனைத்தையும் சூழ்ந்தறியக் கூடியவனின் புறத்திலிருந்து நமக்கு கொடுக்கப்பட்ட மார்க்கம்.

அதை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு கொடுத்து விட்டுச் சென்றிருக்கிறார்கள். இந்த அழகிய நேரிய சிறந்த நெறி முறையிலிருந்து ஒருவன் வழி தவறுவான் என்றால் அவன் அழிந்து நாசமாகக்கூடியவனாக தான் இருப்பான்.

இந்த மார்க்கம், நபியின் கலாச்சாரம், நபியின் ஒழுக்கம், நபியின் பண்பாடு ஒருவனுக்கு பிடிக்கவில்லை என்று, அதில் அவனுக்கு கவர்ச்சி, அழகு, ஈர்ப்பு இல்லை என்று அவன் இதை விட்டு வெளியேறுகிறான் என்றால் அடுத்து அவன் சறுகுவது நரகத்தில் தான்.

اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ (6) صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ

நீ எங்களை நேர்வழியில் நடத்துவாயாக!  (அது) நீ எவர்களுக்கு அருள் புரிந்தாயோ அவ்வழி. (அது) உன் கோபத்திற்கு ஆளானோர் வழியுமல்ல நெறி தவறியோர் வழியுமல்ல. (அல்குர்ஆன் 1:6, 7)

இந்த நேரிய மார்க்கத்திலிருந்து ஒருவன் சறுகுகிறான் என்றால், அவனுடைய பாதம் படிவது அடுத்து நரகத்தில் தான் இருக்கும், காஃபிர்களின் வழிமுறையில் தான் இருக்கும், யஹூதிகளுடைய முஷ்ரிக்குகளுடைய வழிமுறையில் தான் இருக்கும்.

நாம் அன்றாடம் ஓதுகின்ற இந்த சூரத்துல் ஃபாத்திஹாவின் வசனத்தை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்!

இமாம் இப்னு தைமிய்யா ரஹிமஹுல்லாஹ்இந்த ஒரு வசனத்தைக் கொண்டு பல பக்கங்களுக்கு விளக்கம் எழுதுகிறார்கள்.

பார்க்க : அல் இக்திழாவு இமாம் இப்னு தைமிய்யா.

முஸ்லிம்களுடைய கலாச்சாரம், முஸ்லிம்களுடைய பழக்கம், பண்பாடு எப்படி இருக்க வேண்டும் ?

இந்த சூரத்துல் ஃபாத்திஹாவை அவர்கள் சிந்திக்க வேண்டாம்? நாம் என்ன ஓதுகிறோம்? என்ன வார்த்தையை அல்லாஹ் நமக்கு போதிக்கிறான்?

எங்களை வழிநடத்து! எங்களுக்கு வழி காண்பி!எங்களை வழியில் உறுதிப் படுத்தி வை!நிரந்தரமாக்கி வை! எந்த வழியில்? மிக சரியான பாதையில், மிக நேரான பாதையில், கோணல் இல்லாத பாதை, தவறுகள் இல்லாத பாதை, குழப்பங்கள் இல்லாத பாதை.

மானக்கேடுகளுக்கோ, அசிங்கக்களுக்கோ, வழக்கம் என்ற பெயரில் அசிங்கக்களுக்கோ, ஆபாசங்களுக்கோ, மூடப்பழக்க வழக்கங்களுக்கோ இடமில்லாத பாதை.

சரியானது, நேரானது, நீதமானது, இந்த பாதையில் ஒருவன் நடக்க ஆரம்பித்தால் அவனுடைய முடிவு அது ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸாக தான் இருக்கும்.

وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ

நிச்சயமாக இதுவே என்னுடைய நேரான வழியாகும்; ஆகவே இதனையே பின்பற்றுங்கள் - இதர வழிகளை நீங்கள் பின்பற்ற வேண்டாம் - அவை உங்களை அவனுடைய வழியைவிட்டுப் பிரித்துவிடும்; நீங்கள் (நேர் வழியைப் பின்பற்றி) பயபக்தியுடையவர்களாக இருப்பதற்கு இவ்வாறு அவன் உங்களுக்கு போதிக்கிறான். (அல்குர்ஆன் 6:153)

வசனத்தின் கருத்து : பிறகு அல்லாஹ் எப்படி வர்ணிக்கிறான்? இந்த நேரான பாதையை எதைக் கொண்டு நீங்கள் அடையாளம் காணுவீர்கள்? இந்த நேரான பாதையை யார் மூலமாக நீங்கள் அறிவீர்கள்?

இந்த பாதையில் ஏற்கனவே வழி நடத்த உங்களுக்கு முன்னோடிகள் இருக்கிறார்கள், உங்களுக்கு முன் உதாரணங்கள் இருக்கிறார்கள், வழிகாட்டிகள் இருக்கிறார்கள். அவர்கள் தான், யாருக்கு அல்லாஹ் அருள் புரிந்தானோ அவர்களுடைய பாதை.

ஒரு பாதையை அடையாளம் காட்டுவதற்கு இவ்வளவு விளக்கங்களை அல்லாஹ் கூறுகிறான். ரப்பே! உன்னுடைய பாதையில் வழிகாட்டு என்று அல்லாஹ் கூறும்பொழுது, என்னுடைய பாதை எது தெரியுமா? அது நேரான பாதை, இறைத்தூதர்களுடைய பாதை. அந்த இறைத் தூதர்களை பின்பற்றிய நல்லவர்களின் பாதை, ஒழுக்கசீழர்களின் பாதை, உத்தமர்களின் பாதை, நல்லவர்கள் நடந்த அருள் பெற்ற பாதை.

இறைவனை வணங்கி, இறைவனின் சட்டங்களை பேணி, இறைவனுக்காகவே வாழ்ந்த நல்லவர்களுடைய பாதை.

அதற்கு பிறகு அல்லாஹ் சொல்லிக்காட்டுகிறான், அந்த பாதை அது தனியாக தெரியும். அந்த பாதை தனித்து தெரியும். எதிலிருந்து தனித்து தெரியும்? அது கலப்படமான, குழப்பமான, ஏனையப் பாதையோடு குழம்பிவிட்ட குழப்பமான பாதை அல்ல.

அந்த பாதை வழிகெட்டவர்களின் பாதை அல்ல. அல்லாஹ்வின் கோபத்திற்குரியவரின் பாதை அல்ல. அவர்கள் அப்படிப்பட்டவர்கள் அல்ல. இவர்கள் வேறு, இவர்கள் வேறு.

 غيرஎன்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இங்கே பாகுபடுத்துகிறான், வித்தியாசப்படுத்துகிறான். நேர்வழியில் நடப்பவன் ஒருகாலும் எந்த சூழ்நிலையிலும் அல்லாஹ்வின் கோபத்திற்குள்ளவனைப் போன்று, வழிகெட்டவனை போன்று அவன் இருக்க முடியாது.

அவனுடைய வணக்க வழிபாட்டில் மட்டுமல்ல, அவனுடைய நடை, உடை, கலாச்சாரம், பேச்சு, வாழ்க்கை, வியாபாரம், தொழில்துறை எதிலும் அல்லாஹ்வின் கோபத்திற்குரியவர்களுடைய வழிகெட்ட வழிகளிலோ, கலாச்சாரங்களிலோ அவன் இருக்கமாட்டான்.

இவர்களுடைய பாதை வேறு, இவர்களுடைய கலாச்சாரம் வேறு, வழிகெட்டவர்களின் கலாச்சாரம் வேறு.

இரண்டிற்கும் எந்த விதமான சம்மந்தமும் இல்லை. நமக்கு என்ன தெரிகிறது? லாயிலாஹ இல்லல்லாஹு முஹம்மதுர் ரஸூலுல்லாஹ் என்று கூறி இந்த மார்க்கத்திற்குள் நுழைந்து விட்டோம். இனி நாம் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். எப்படி வேண்டுமானாலும் வாழலாம். எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம். எப்படி வேண்டுமானாலும் உடை உடுத்தலாம்.

எதை வேண்டுமானாலும் நம்முடைய கலாச்சாரமாக ஏற்றுக் கொள்ளலாம் என்று நினைக்கிறார்களே, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய எச்சரிக்கையை அறியாத மக்களாக அவர்கள் இருக்கிறார்கள்.

எப்படி லாயிலாஹ இல்லல்லாஹுவை கூறி ஒரு மனிதர் இஸ்லாமிற்கு வருகிறாரோ, இஸ்லாமிற்குள் வந்த மனிதர் இஸ்லாமுடைய கலாச்சாரத்தை பின்பற்றாமல், மாற்றார்களின் கலாச்சாரத்தை பின்பற்றினால் வந்த வழியில் அவன் திரும்ப சென்று விடுவான்.

அவனுக்கும் இஸ்லாமிற்கும் சம்மந்தம் இல்லை. இஸ்லாமுடைய மார்க்கத்திலிருந்து அவன் வெளியேறிவிடுவான்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒரு ஹதீஸை பாருங்கள். இமாம் பைஹகி சுனன் குப்ராவில் பதிவு செய்கிறார்கள்.

« من نشأ في بلاد الأعاجم فصنع نوروزهم ، ومهرجانهم ، وتشبه بهم حتى يموت وهو كذلك حشر معهم يوم القيامة »

ஒரு மனிதன்,அவன் தன்னை முஸ்லிமென்று கூறுகிறான். முஷ்ரிக்குகளோடு வாழ்வதற்காக முஷ்ரிக்குகள் இருக்கின்ற இடத்தில் வீடு கட்டிக் கொள்கிறான்.

(நமக்கென்று முஹல்லா இருக்க வேண்டும். எவ்வளவு கஷ்டமாக இருந்தாலும், துன்பமாக இருந்தாலும் முஸ்லிம்கள் முஸ்லிம்களின் முஹல்லாவில் தான் வசிக்க வேண்டும். அதை தான் சீர்திருத்த முயற்சிக்க வேண்டும், மேம்படுத்த முயற்சிக்க வேண்டுமே தவிர,முஸ்லிம்களுடைய முஹல்லா பிடிக்கவில்லை என்று காஃபிர்களின் முஹல்லாவில் குடியிருப்பதற்கு முஸ்லிம்களுக்கு அனுமதியில்லை. எங்கே முஸ்லிம்களுடைய வீடுகள் பெரும்பகுதியாக இருக்கிறதோ குறைந்த பட்சம் அங்கே நாம் குடியிருக்க வேண்டும்.

அதைவிட்டு விட்டு காஃபிர்கள் பெரும்பகுதியாக இருக்கக் கூடிய இடத்திற்கு அது எவ்வளவு தான் அழகானதாக சுத்தமானதாக இருந்தாலும் குடியேறுவதற்கு ஒரு முஸ்லிமிற்கு அனுமதியில்லை.

அவன் குடியேறி சென்று விடுகிறான். சென்று அவர்களுடைய பண்டிகைகளையும் அவன் கொண்டாடுகிறான். அந்த காஃபிர்கள் என்ன பண்டிகைகளை அவர்கள் கொண்டாடுகிறார்களோ அதில் அவனும் பங்கேற்கிறான்.

நூல் : சுனன் குப்ரா – பைஹகீ, எண் : 18863, 9069.

இன்றைய முஸ்லிம் மக்களில் பலர் தீபாவளிகளை கொண்டாடுவதை போன்று. தீபாவாளி கொண்டாடுவதென்றால் நீங்கள் அவர்கள் வழங்குகின்ற சாமிகளை வணங்கினால் மட்டும் கொண்டாடுவது என்பது கிடையாது.

அவர்கள் மகிழ்ச்சியை தங்களுடைய பெருநாள்களில் வெளிப்படுத்துவதற்காக என்ன சடங்குகளை செய்கிறார்களோ, என்ன காரியங்களை செய்கிறார்களோ அதை செய்தாலும் அவர்களுடைய பெருநாளை கொண்டாடியது போன்று தான். தீபாவளியில் அவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்துவதற்காக வெடி வெடிக்கிறார்கள். முஸ்லிம்கள் வெடி வெடிக்கிறார்களா இல்லையா?

பொங்கள் வருகின்ற சில தினங்களில் மாற்றார்கள் கொண்டாடக்கூடிய அவர்களது பெருநாள். இதில் அவர்களை போன்று நம்மில் பலர் நடப்பதை பார்க்கிறோம்.)

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் :

அவர்களுடைய அந்த பெருநாள்களில் பங்களிக்கிறான். கோவிலுக்கு போவதற்கு மட்டுமல்ல, அவன் எதை செய்கிறான்? அவர்களுடைய மகிழ்ச்சியான தினங்களில் இவனும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி அவர்களோடு இருக்கிறான்.

இதே நிலையில் அவன் மரணித்தால் அவன் முஷ்ரிக்குகளோடு தான் எழுப்பப்படுவான். இதில் எந்த விதமான வித்தியாசமும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறவில்லை.

அவன் தொழுதிருந்தாலும் சரியே, இரவெல்லாம் தஹஜ்ஜத் தொழுதிருந்தாலும் சரி, தினந்தோறும் குர்ஆனை ஓதி முடிப்பவனாக இருந்தாலும் சரி.

எப்போது முஷ்ரிக்குகளுடைய கலாச்சாரத்தை அவன் பின்பற்றுகிறானோ, வருடத்தில் அந்த காஃபிர்கள் கொண்டாடக்கூடிய இரண்டு பெருநாள்களை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள். அந்த காலத்தில் மஜூஸிய முஷ்ரிக்குகள் கொண்டாடிய நாட்கள்.

இதை அவன் கொண்டாடினால் நாளை மறுமையில் அந்த முஷ்ரிக்குகளோடு எழுப்பப்படுவான்.

நூல் : சுனன் குப்ரா – பைஹகீ, எண் : 18863, 9069.

இன்று யோசித்துப் பாருங்கள். நமது சமுதாயம் பாலில் சர்க்கரை கறைவது போன்று காஃபிர்களின் கலாச்சாரத்தில் முற்றிலுமாக கறைந்திருக்கிறார்கள்.

மஸ்ஜிதில் அமர்ந்திருக்கும் பொழுது தான் அவர்களை நீங்கள் முஸ்லிம் என்று அடையாளம் காண முடியுமே தவிர மஸ்ஜிதிலிருந்து அவர்கள் வெளியேறிவிட்டால் யார் முஸ்லிம்? யார் காஃபிர்? என்று அடையாளப்படுத்தி பார்க்க முடியாத அளவிற்கு இன்றைய முஸ்லிம்களுடைய கோலம் மாறியிருக்கிறது. அவர்களுடைய கலாச்சாரம், பண்பாடு, ஆடை, உடை, முக தோற்றம் எல்லாம் மாறியிருக்கிறது.

யாருக்கு ஸலாம் சொல்வது? யார் நம்மவர்? யார் மற்றவர்? என்று பிரித்து பார்க்க முடியாத அளவிற்கு காஃபிர்களோடு கரைந்து போன ஒரு சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் மாறியிருக்கிறது.

நாம் நேர்வழி பெற்றவர்கள், அல்லாஹ்வின் அருளை பெற்றவர்கள், அல்லாஹ்வின் அன்பை பெற்றவர்கள். நமக்கு கட்டளை கொடுக்கக் கூடியவன், நமக்கு ஒழுக்கத்தை போதிக்கக் கூடியவன் அல்லாஹ்.

காஃபிர்கள் யார்? அவர்கள் இப்லீலை வணங்கக் கூடியவர்கள். அவர்களுக்கு கட்டளை கொடுப்பவன் இப்லீஸ். அல்லாஹ் ஒழுக்கத்தை, நல்லதை ஏவுவான். இப்லீஸ் அசிங்கமானதை ஏவுவான், ஒழுங்கீனத்தை ஏவுவான், கெட்டதை ஏவுவான்.

இப்லீஸ் அல்லாஹ்வுடைய மார்க்கத்திலிருந்து மனிதனை சறுக வைப்பதற்குறிய காரியங்களை செய்ய தூண்டுவான்.

ரஹ்மானை பின்பற்றுவதா? அல்லது ஷைத்தானை பின்பற்றுவதா? அல்லாஹ்வுடைய மார்க்கத்தையா? அல்லது இப்லீஸுடைய வழிமுறையையா?

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதினா வாழ்க்கையில் மிக தூய்மையான ஒரு கலாச்சாரத்தை கொண்ட ஒரு சமுதாயத்தை கட்டமைத்தார்களே, அந்த சமுதாய கட்டமைப்பின் அடிப்படை அஸ்திவாரமாக எதை அமைத்தார்கள் என்றால், எதை யூதர்கள் செய்கிறார்களோ, எதை கிறிஸ்தவர்கள் செய்கிறார்களோ, எதை மஜூஸிகள் செய்கிறார்களோ, எதை சிலை வணங்கிகள் செய்கிறார்களோ அதை நாம் செய்ய முடியாது, செய்யக் கூடாது.

எல்லா காரியத்திலும் சரி, வணக்க வழிபாட்டில் மட்டுமல்ல, உணவு, உடை, இருப்பிடம், பழக்க வழக்கம், சந்திப்பது, பிரிவது, திருமணம், நம்முடைய இறப்பு, நம்முடைய குடும்பம் அனைத்திலும் அவர்களுக்கு மாற்றமான ஒரு சமுதாயமாக நாம் இருக்க வேண்டும்.

இதை தான் அல்லாஹ் கூறுகிறான்: நபியே! நீங்களும் முஷ்ரிக்குகளும் வேறு, அல்லாஹ்வின் கோபத்திற்குரியவர்கள் வேறு, வழிகெட்டவர்கள் வேறு.

அவர்களை போன்று நீங்கள் இருக்க முடியாது, உங்களை போன்று அவர்கள் இருக்க முடியாது. நீங்கள் இருவரும் சமுதாயத்தில் வித்தியாசப்பட்டு தெரிய வேண்டும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதினாவிற்கு வந்த பொழுது தோழர்கள் வந்து கேட்கிறார்கள். அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் கூறுகிறார்கள்.

யூதர்களுடைய ஒரு பழக்கத்தை சொல்லிக் காட்டுகிறார்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மதினாவிற்கு வருகிறார்கள், சட்டங்கள் இறங்க ஆரம்பித்தன.

யூதர்கள் கலாச்சாரம் என்னவென்றால் பெண்களுக்கு மாதவிடாய் வந்துவிட்டால் அவர்கள் அந்த பெண்களோடு கலக்கமாட்டார்கள், அவர்களோடு அமர்ந்து சாப்பிட மாட்டார்கள். அவர்களை வீட்டிற்குள் வைத்திருக்க மாட்டார்கள். அவர்களை ஒதுக்கி வைத்துவிடுவார்கள். இது தான் அவர்களுடைய பழக்கமாக இருந்தது.

கிறிஸ்தவர்களை பொறுத்த வரை இறுதி வரை உள்ள எல்லா காரியங்களையும் செய்வார்கள். இது கிறிஸ்தவர்களுடைய பழக்கமாக இருந்தது. இப்போது ஸஹாபாக்கள் நபியிடம் வருகிறார்கள். அல்லாஹ்வுடைய தூதரே! நாம் முஸ்லிகளாயிற்றே நாம் எப்படி நடந்துக் கொள்வது?

(இங்கே பாருங்கள், சாதாரண ஒரு இயற்கை தேவை. அன்றாட மனிதனின் உடல் ஆசை அதை யூதர்கள் இப்படி செய்கிறார்கள், கிறிஸ்தவர்கள் இப்படி செய்கிறார்கள். நபியே!  நாம் முஸ்லிம்கள் நாம் எப்படி நடந்துக் கொள்வது? இது தான் கண்ணியத்திற்குரிய ஸஹாபாக்கள் வழிமுறை. அல்லாஹ்வுடைய மார்க்கத்தை புரிந்தவர்கள் என்று ஏன் கூறுகிறோம்? அவர்கள் கேள்வி கேட்டதால் தான் மார்க்கம் நமக்கு முழுமைப் படுத்தப்பட்டது.

சட்டங்களை தேடி நபியிடம் வந்து விளக்கங்களை கேட்டுப் பெற்றார்கள். நாம் இன்று விளக்கம் உள்ளவர்களாக, தூய சிந்தனை உடையவர்களாக இருக்கிறோம். இல்லையென்றால் மிருகங்களாக இருந்திருப்போம் அல்லாஹ் பாதுகாப்பானாக!)

அவர்கள் கேட்ட பிறகு அல்லாஹ் சட்டத்தை இறக்கினான்.

وَيَسْأَلُونَكَ عَنِ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ وَلَا تَقْرَبُوهُنَّ حَتَّى يَطْهُرْنَ فَإِذَا تَطَهَّرْنَ فَأْتُوهُنَّ مِنْ حَيْثُ أَمَرَكُمُ اللَّهُ إِنَّ اللَّهَ يُحِبُّ التَّوَّابِينَ وَيُحِبُّ الْمُتَطَهِّرِينَ

மாதவிடாய் பற்றியும் உம்மிடம் வினவுகிறார்கள்; நீர் கூறும்: “அது (ஓர் உபாதையான) தீட்டு ஆகும்; ஆகவே மாதவிடாயின் போது பெண்களை விட்டும் விலகியிருங்கள்; அவர்கள் தூய்மையாகும் வரை அவர்களை அணுகாதீர்கள்; அவர்கள் தூய்மையடைந்த பின் அல்லாஹ் எப்படி கட்டளையிட்டிருக்கின்றானோ அதன்படி அவர்களிடம் செல்லுங்கள்; பாவங்களைவிட்டு மீள்பவர்களை நிச்சயமாக அல்லாஹ் நேசிக்கிறான்; இன்னும் தூய்மையாக இருப்போரையும் நேசிக்கின்றான்.”(அல்குர்ஆன் 2:222)

இந்த வசனத்தை அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா இறக்கியருள்கிறான். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் :

குடும்பம் சேர்வதை தவிர மற்ற எல்லா இன்பங்களையும் நீங்கள் அந்த பெண்களிடமிருந்து அனுபவிக்கலாம். இந்த செய்தி யூதர்களுக்கு தெரிய வருகிறது.

(பல மார்க்க ஆதாரங்களை பார்க்கப் போனால் அன்றைய காலத்து யூதர்கள் இன்றைய காலத்து முஸ்லிம்களை விட நமது இஸ்லாமிய மார்க்கத்தை புரிந்திருந்தார்கள். இன்றைய காலத்தில் கப்ருகளையும் தர்காக்களையும் வணங்கக் கூடிய முஸ்லிம்கள் கலிமாவை புரியவில்லை, அபூஜஹல், அபூலகப் கலிமாவை புரிந்து வைத்திருந்தான். எனவே தான் அதை ஏற்க மறுத்தார்கள்.)

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்;நீங்கள் அந்த பெண்களோடு எல்லா இன்பங்களையும் அனுபவிக்கலாம். ஆனால், குடும்பம் மட்டும் சேரக் கூடாது. இந்த வார்த்தையை கேட்ட யூதர்கள் கூறினார்கள்; நபியை மட்டமாக கூறினார்கள். இவர்கள் சொன்னால் என்ன?

இந்த மனிதர் நாம் எதை செய்தாலும் அதற்கு மாற்றமாக செய்ய வேண்டுமென்று கட்டளையிடுகிறார். நாம் எதை செய்தாலும் சரி அதற்கு மாற்றமான சட்டங்களையே இந்த மனிதர் போடுகிறான் என்று அந்த யூதர்கள் கூறினார்கள். (2)

அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 455.

கண்ணியத்திற்குரியவர்களே! யோசித்துப் பாருங்கள். நம்முடைய மார்க்கம் அந்த யூதர்களோடு ஒத்துப் போவதற்கு நமக்கு அனுமதிக்க வில்லை. அவர்களுடைய கலாச்சாரத்தில் கறைவதற்கு நமக்கு அனுமதிக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் தஆலா இப்படி தான் வழிகாட்டினான்.

ثُمَّ جَعَلْنَاكَ عَلَى شَرِيعَةٍ مِنَ الْأَمْرِ فَاتَّبِعْهَا وَلَا تَتَّبِعْ أَهْوَاءَ الَّذِينَ لَا يَعْلَمُونَ

இதன் பின்னர் உம்மை ஷரீஅத்தில் (மார்க்கத்தில்) ஒரு நேரான வழியில் நாம் ஆக்கியுள்ளோம். ஆகவே நீர் அதனையே பின்பற்றுவீராக; அன்றியும், அறியாமல் இருக்கின்றார்களே அவர்களின் விருப்பங்களைப் பின்பற்றாதீர்.(அல்குர்ஆன் 45 : 18)

ஷரீஅத் என்பதற்குண்டான அர்த்தமே தெரியவில்லை. ஷரீஅத் என்றால்? கூட்டுதல், குறைத்தல், சேர்த்தல், பிரித்தல், கழித்தல் இவை எவற்றுக்கும் பாகுபாடு இல்லாமல் முற்றிலுமாக வரையறுக்கப்பட்ட ஒரு கொள்கை அதற்கு தான் ஷரீஅத் என்று சொல்லப்படும்.

நாமாக எதையும் சேர்க்க முடியாது, நாமாக எதையும் அதிலிருந்து குறைக்க முடியாது. யாரும் தன்னுடைய விருப்பத்திருக்கு ஏற்ப கூட்டவோ, குறைக்கவோ முடியாது.

இந்த கட்டளையில் ஒரு ஷரீஅத்தை நாம் உங்களுக்கு கொடுத்து அதில் உங்களை நாம் அமைத்திருக்கிறோம்.

நபியே! அந்த ஷரீஅத்தை நீங்கள் பின்பற்றுங்கள். அறியாத ஜாஹில்கள் இருக்கிறார்களே, மடையர்களும், முட்டாள்களும், அறிவீனர்களும் அவர்களுடைய விருப்பங்களுக்கு ஏற்ப இந்த மார்க்கத்தை ஆக்காதீர்கள். அதை நீங்கள் பின்பற்றிவிடாதீர்கள்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நூற்றுக் கணக்கான சம்பவங்களை ஹதீஸ்களை நாம் பார்க்கிறோம்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்படியெல்லாம் நம்மை எச்சரித்தார்கள்!.

مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ

யார் பிற மதத்தவர்களுக்கு ஒப்பாக இருக்கிறாரோ, அவன் அவர்களை சார்ந்தவன்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத், எண் : 3512,  4031.

பொதுவாக தான் சொன்னார்கள்.பிற மதத்தவரை போன்று வணங்குகிறாரோ என்று கூறவில்லை. அது வணக்க வழிபாடுகளில் ஒப்பாக இருந்தாலும் சரி,கொடுக்கல், வாங்கள்களில் ஒப்பாக இருந்தாலும் சரி,நடை, உடை, பாவனை, கலாச்சாரத்தில்  அவர்களை போன்று இருந்தாலும் சரி. நாம் அல்லாத பிற சமுதாயத்தவர்களுக்கு யார் ஒப்பாக இருக்கிறாரோ அவன் அவர்களையே சேர்ந்தவன்.

ஒரு மனிதன் முஸ்லிமாக ஆக வேண்டுமென்றால் அவன் முஸ்லிம்களை போன்று வாழ வேண்டும்.

முஸ்லிம்கள் என்றால் யார்? யார் நபியின் காலத்தில் முஸ்லிம்களாக இருந்தார்களோ அவர்களை போன்று, அவர்களுடைய வணக்க வழிபாடு, அவருடைய கலாச்சாரம், நடை, உடை பாவனை எல்லாம் அவர்களை போன்று இருந்தால் தான் அவன் முஸ்லிம்களை சேர்ந்தவன்.

வெறும் கலிமாவை சொல்லிவிட்டால் மட்டும் அவன் முஸ்லிம்களை சேர்ந்தவன் அல்ல. இதற்கு எத்தனை உதாரணங்களை நாம் பார்க்கிறோம்.

கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களை பார்க்கிறார்கள்.

அவர்கள் மஞ்சள் நிறத்தில் அன்றைய காஃபிர்கள் தங்களுடைய சிலை வணக்க வழிபாட்டின் அடையாளத்திற்காக அணியக்கூடிய ஒரு ஆடையின் நிறம் அது 'அஸ்ஃபர்'என்று சொல்லப்படும். இன்றைய காஃபிர்கள் சிலை வணங்கிகள் காவி உடைகளை அணிவதைப் போன்று அல்லது ஒரு விதமான சிவப்பு நிறத்தை அவர்கள் அணிவது போன்று.

அந்த நிறத்தையுடைய ஒரு ஆடையை அணிந்து வந்தார்கள் அவ்வளவு தான். ஆடைகளின் வடிவு முஸ்லிம்களின் வடிவமாக இருந்தது. ஆனால், ஆடையின் நிறம் காஃபிர்கள் அணிகின்ற ஆடையின் நிறமாக இருந்தது.

நபியவர்கள் கூறினார்கள்;

إِنَّ هَذِهِ مِنْ ثِيَابِ الْكُفَّارِ فَلَا تَلْبَسْهَا

 

இது காஃபிர்கள் அணியக்கூடிய ஆடை இதை நீ அணியாதே!

அதை பார்த்து விட்டு நீ அணியாதே என்று மட்டும் சொல்ல வில்லை.இது காஃபிர்களின் ஆடை, இதை நீ அணியாதே! என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அமர் இப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 3872.

அப்படியென்றால், காஃபிர்கள் தங்களுக்கென்று அடையாளமாக எந்த ஆடையை, எந்த நிறத்தை அணிகிறார்களோ அதை நாம் அணியவே முடியாது. எவ்வளவு காலங்கள் மாறினாலும் சரியே.

ஏன்? அப்துல்லாஹ் இப்னு அம்ரு இப்னு ஆஸ் அவர்கள் ஆடை அணிந்த காரணத்தால் நபியை விட்டு விலகிச் சென்றார்களா? அவர்களுடைய வணக்க வழிபாடு மாறிவிட்டதா? அவர்களுடைய கொள்கை மாறிவிட்டதா?

கண்ணியமிக்க உயர்ந்த நபித்தோழர்களில் மூத்த நபித்தோழர்களுக்கு அடுத்ததாக வாலிப நபித்தோழர்களில் நபியோடு நெருக்கம் பெற்றவர்கள் என்பதில் இவர்களுடைய பெயர் இரண்டாவது பெயரில் இருக்கிறது. அப்துல்லாஹ் இப்னு உமருக்கு அடுத்த படியாக உள்ளது. அந்த தோழரை பார்த்து கூறினார்கள்.

அவர்களையே ஆடையின் நிறம் அவர்களுடைய ஈமானை பலவீனப்படுத்தி அவர்களை காஃபிர்களோடு சேர்த்து விடுமென்றால் நம்மைப் போன்ற சாதாரணமான முஸ்லிம்களுடைய நிலை என்னவென்று யோசித்துப் பாருங்கள்.

மேலும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள் :

خَالِفُوا الْمُشْرِكِينَ وَفِّرُوا اللِّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ

முஷ்ரிக்குகளுக்கு மாற்றமாகவே நீங்கள் நடக்க வேண்டும்.

(இதற்கு அடுத்து அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ன கூறியிருப்பார்கள்?பொதுவாக நாம் சிந்தித்துப் பார்ப்போம். ஏதோ வழிபாட்டு முறையைப் பற்றி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லப் போகிறார்களோ? அல்லாஹ்வுடைய உள்ளமை சம்பந்தப்பட்ட விஷயமோ?அல்லாஹ்வை வணங்குவது சம்பந்தப்பட்ட விஷயமோ? இப்படி ஏதோ ஒன்றை சொல்லப் போகிறார்களோ?

காஃபிர்களைப் போன்று நமது நம்பிக்கை இருக்கக் கூடாது. காஃபிர்களை போன்று நமது வழிபாடு இருக்கக் கூடாது என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏதோ சொல்லப் போகிறார்களா?

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லக் கூடிய இந்த விஷயத்தைப் பாருங்கள். இன்று நம்மில் எத்தனை கோடி மக்கள் இதில் அலட்சியம் செய்து கொண்டிருக்கிறோம்!)

முஷ்ரிக்குகளுக்கு மாற்றமாக நடங்கள். மீசைகளை கத்தரியுங்கள். தாடியை அடர்த்தியாக, நீளமாக வளர விடுங்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5442, 5892.

யாரை பழி சொல்வது? என்ன வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருக்கிறோம்? நபியவர்கள் கூறினார்கள், நீங்கள் முஷ்ரிக்குகளுக்கு மாற்றமாக நடக்க வேண்டும்.

ஏன்? அந்த முஷ்ரிக்குகள் மீசைகளை வளர வைத்து தாடியை சிரைக்கிறார்கள் அல்லது குறைக்கிறார்கள்.நீங்கள் மீசையை குறைத்து தாடியை அடர்த்தியாக நிறைவாக வையுங்கள்.

மனிதனுடைய வயது அதிகமாக தாடியில் நரை விழுந்து விடுகிறது. நரை ஏற்படுதல் என்பது அல்லாஹ் படைத்த இயற்கையான ஒன்று. இந்த நரை வெள்ளை முடி இருக்கிறதே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், இந்த யூதர்கள் தங்களுடைய தாடிக்கு தாடி நரைத்து விட்டால் அவர்களுடைய வெள்ளை முடியை அப்படியே வைத்துக் கொள்கிறார்கள்.

நபியவர்கள் கூறினார்கள்:

إِنَّ الْيَهُودَ وَالنَّصَارَى لَا يَصْبُغُونَ فَخَالِفُوهُمْ

முஸ்லிம்களே! நீங்கள் உங்களுடைய தாடிக்கு மருதாணி இட்டுக் கொள்ளுங்கள், சாயம் பூசிக் கொள்ளுங்கள்.யூதர்களுக்கு மாற்றமாக நீங்கள் நடங்கள். யூதர்கள் கிறிஸ்தவர்கள் தங்களுடைய தாடி முடிகளுக்கு சாயம் பூசுவதில்லை.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3203, 5448.

இமாம் அஹமத் அறிவிக்கிறார்கள்.

غَيِّرُوا الشَّيْبَ وَلَا تَشَبَّهُوا بِالْيَهُودِ وَلَا بِالنَّصَارَى

நரையை நீங்கள் மாற்றுங்கள். யூதர்கள், கிறிஸ்தவர்களை போன்று நீங்கள் இருக்காதீர்கள். உங்களுடைய தலை முடியின் நரையையோ, தாடியின் நரையையோ நீங்கள் மருதாணியைக் கொண்டு சாயமிட்டுக் கொள்ளுங்கள்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 7230, 7545.

இன்னும் ஒரு முக்கியமான ஹதீஸைப் பாருங்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள், அம்ரு இப்னு அனஸ் (ரழி) அவர்கள் அறிவித்தார்கள்.

அல்லாஹ்வுடைய தூதரே! நான் எப்படி தொழ வேண்டுமென்று எனக்கு சொல்லித் தாருங்கள். நபியவர்கள் கூறினார்கள்;

لَا تُصَلُّوا حِينَ تَطْلُعُ الشَّمْسُ وَلَا حِينَ تَسْقُطُ فَإِنَّهَا تَطْلُعُ بَيْنَ قَرْنَيْ الشَّيْطَانِ وَتَغْرُبُ بَيْنَ قَرْنَيْ الشَّيْطَانِ

 

சுப்ஹு தொழுகையை தொழுதுக் கொள். அதற்கு பிறகு நீ தொழாமல் இரு, சூரியன் உதயமாகின்ற வரை.

சூரியன் உதிக்கின்ற நேரத்தில் நீ தொழாதே! ஏனென்றால், அது ஷைத்தானின் இரண்டு கொம்புகளுக்கு இடையில் உதிக்கின்றது. அந்த நேரத்தில் காஃபிர்கள் சூரியனுக்கு ஸஜ்தா செய்கிறார்கள். எனவே, நீ அந்த நேரத்தில் தொழாதே! காஃபிர்கள் அந்த நேரத்தில் சூரியனுக்கு ஸஜ்தா செய்கிறார்கள்.

எனவே, சூரியன் உதிக்கக் கூடிய நேரங்களில் நீ அல்லாஹ்விற்கு ஸஜ்தா செய்யாதே! நீ தொழாதே!

அறிவிப்பாளர் : சமுரா இப்னு ஜுன்துப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் :முஸ்னத் அஹ்மத்,  எண் : 17014, 19310.

எத்தனையோ முஸ்லிம்களுக்கு எத்தனையோ தொழுகையாளிக்கு அந்த எண்ணமாவது வருமா? அப்படி ஒரு நேரத்தில் கூட அந்த நேரம் காஃபிர்கள் தங்களுடைய வழிபாட்டை,  தொழுகையை நிறைவேற்றக் கூடிய நேரமாக இருக்கிறது.

எனவே, முஸ்லிம்களே நீங்கள் அந்த நேரத்தில் தொழுகை என்ற உயர்ந்த வணக்கமாக இருந்தாலும் சரி செய்யாதீர்கள் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்தார்கள் என்றால் கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்; நம்முடைய கலாச்சாரம் எப்படி இருக்க வேண்டும்? நம்முடைய வாழ்க்கை வழிமுறை, நம்முடைய பழக்க வழக்கம் எப்படி இருக்க வேண்டும்?

இன்று கண்ணியத்திற்குரியவர்களே! இஸ்லாமியர்களின் மார்க்க பலவீனம், ஈமானிய பலவீனம், அதனுடைய தொடக்கம் ஏன் ஏற்பட்டது என்றால்மாற்றார்களின் கலாச்சாரத்தில் கொஞ்சம் கொஞ்சமாக நுழைய ஆரம்பித்தார்கள். அதில் கொஞ்சம் கொஞ்சமாக கரைய ஆரம்பித்தார்கள். அவர்களுடைய மார்க்கம் பலவீனப்பட்டது, அவர்களுடைய இறை நம்பிக்கை பலவீனப்பட்டது, அவர்களுடைய வீரம் குறைந்தது.

பிறகு காஃபிர்களை போன்றே காஃபிர்களில் ஒருவராக மாற ஆரம்பித்து விட்டார்கள். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

ஆகவே, கண்ணியத்திற்குரியவர்களே! நம்முடைய அடுத்த தலைமுறையினருக்கு மார்க்கத்தை பாதுகாத்துக் கொடுக்க வேண்டுமென்றால் நாம் நம்முடைய உண்மையான இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு நாம் மாறியாக வேண்டும்.

அப்போது தான் அடுத்த தலைமுறை தங்களுடைய நடை, உடை, பாவனை, காலாச்சாரத்தால், மார்க்கத்தால் முஸ்லிம்களாக இருப்பார்கள். இல்லையென்றால் கலாச்சாரத்தை, ஆடை, உடை, பண்பாடுகளை மாற்றியதைப் போன்று மார்க்கத்தையும் மாற்றிவிடுவார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ بِشْرِ بْنِ مَنْصُورٍ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ السَّوَّاقُ قَالَا حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ عَنْ مُعَاوِيَةَ بْنِ صَالِحٍ عَنْ ضَمْرَةَ بْنِ حَبِيبٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَمْرٍو السُّلَمِيِّ أَنَّهُ سَمِعَ الْعِرْبَاضَ بْنَ سَارِيَةَ يَقُولُ وَعَظَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَوْعِظَةً ذَرَفَتْ مِنْهَا الْعُيُونُ وَوَجِلَتْ مِنْهَا الْقُلُوبُ فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنَّ هَذِهِ لَمَوْعِظَةُ مُوَدِّعٍ فَمَاذَا تَعْهَدُ إِلَيْنَا قَالَ قَدْ تَرَكْتُكُمْ عَلَى الْبَيْضَاءِ لَيْلُهَا كَنَهَارِهَا لَا يَزِيغُ عَنْهَا بَعْدِي إِلَّا هَالِكٌ مَنْ يَعِشْ مِنْكُمْ فَسَيَرَى اخْتِلَافًا كَثِيرًا فَعَلَيْكُمْ بِمَا عَرَفْتُمْ مِنْ سُنَّتِي وَسُنَّةِ الْخُلَفَاءِ الرَّاشِدِينَ الْمَهْدِيِّينَ عَضُّوا عَلَيْهَا بِالنَّوَاجِذِ وَعَلَيْكُمْ بِالطَّاعَةِ وَإِنْ عَبْدًا حَبَشِيًّا فَإِنَّمَا الْمُؤْمِنُ كَالْجَمَلِ الْأَنِفِ حَيْثُمَا قِيدَ انْقَادَ (سنن ابن ماجه 43 -)

குறிப்பு 2)

و حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ حَدَّثَنَا ثَابِتٌ عَنْ أَنَسٍ أَنَّ الْيَهُودَ كَانُوا إِذَا حَاضَتْ الْمَرْأَةُ فِيهِمْ لَمْ يُؤَاكِلُوهَا وَلَمْ يُجَامِعُوهُنَّ فِي الْبُيُوتِ فَسَأَلَ أَصْحَابُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى(وَيَسْأَلُونَكَ عَنْ الْمَحِيضِ قُلْ هُوَ أَذًى فَاعْتَزِلُوا النِّسَاءَ فِي الْمَحِيضِ) إِلَى آخِرِ الْآيَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اصْنَعُوا كُلَّ شَيْءٍ إِلَّا النِّكَاحَ فَبَلَغَ ذَلِكَ الْيَهُودَ فَقَالُوا مَا يُرِيدُ هَذَا الرَّجُلُ أَنْ يَدَعَ مِنْ أَمْرِنَا شَيْئًا إِلَّا خَالَفَنَا فِيهِ فَجَاءَ أُسَيْدُ بْنُ حُضَيْرٍ وَعَبَّادُ بْنُ بِشْرٍ فَقَالَا يَا رَسُولَ اللَّهِ إِنَّ الْيَهُودَ تَقُولُ كَذَا وَكَذَا فَلَا نُجَامِعُهُنَّ فَتَغَيَّرَ وَجْهُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَتَّى ظَنَنَّا أَنْ قَدْ وَجَدَ عَلَيْهِمَا فَخَرَجَا فَاسْتَقْبَلَهُمَا هَدِيَّةٌ مِنْ لَبَنٍ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَرْسَلَ فِي آثَارِهِمَا فَسَقَاهُمَا فَعَرَفَا أَنْ لَمْ يَجِدْ عَلَيْهِمَا (صحيح مسلم 455 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/