HOME      Khutba      மாறிவரும் சூழ்நிலைகளும், மாறாத இறை நியதிகளும் (அமர்வு 1/3) | Tamil Bayan - 384   
 

மாறிவரும் சூழ்நிலைகளும், மாறாத இறை நியதிகளும் (அமர்வு 1/3) | Tamil Bayan - 384

           

மாறிவரும் சூழ்நிலைகளும், மாறாத இறை நியதிகளும் (அமர்வு 1/3) | Tamil Bayan - 384


மாறிவரும் சூழ்நிலைகளும்மாறாத இறை நியதிகளும்

ஜுமுஆ குத்பா தலைப்பு : மாறிவரும் சூழ்நிலைகளும்மாறாத இறை நியதிகளும் (அமர்வு-1-3)

வரிசை : 384

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 23-10-2015 | 10-01-1437

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு தெள்ளத் தெளிவான சான்றுகளுடைய ஒரு ஆதாரமிக்க வேதத்தை வழங்கியிருக்கிறான்.

அந்த வேதத்தில் முன்னோர்களுடைய வரலாறுகளை, அவர்களுடைய காலத்தில் நடந்த நிகழ்வுகளை பாடமாகவும் படிப்பினையாகவும் நமக்கு வழங்கியிருக்கிறான்.

இன்றைய முஸ்லிம் சமுதாயத்தின் மிகப் பெரிய ஒரு கைசேதம் என்னவென்றால், அல்லாஹுவின் வேதம் மறக்கப்பட்டுவிட்டது.அல்லாஹுவின் வேதம் இன்று வனக்க வழிபாடுகளில் ஓதப்படுகிறது, ஆனால் சிந்திக்கப்படுவதில்லை.

அல்லாஹுவின் வேதம் கற்பிக்கப்படுகிறது, ஆனால் ஆராயப்படுவதில்லை. அல்லாஹுவின் வேதங்களின் பொருள்களை படிப்பவரும் பலர் இருக்கின்றார்கள், ஆனால், அவற்றின் மூலம் படிப்பினை பெறுபவர்கள் மிகக் குறைவாக இருக்கின்றார்கள்.

அல்லாஹுவின் வேதத்தை சிந்திக்கின்ற ஒருவர், அதை ஆராய்கின்ற ஒருவர், அதை ஆழ்ந்து பொருளுணர்ந்து அதில் கவனத்தை செலுத்துகின்ற ஒருவர், கண்டிப்பாக தனது வாழ்க்கையில் தான் சந்திக்கின்றதனது சமுதாயம் சந்திக்கின்ற எல்லா பிரச்சினைகளுக்குமுண்டான தெளிவான தீர்வுகளை காண்பார்.

அல்லாஹுவின் வேதம் எந்த ஒன்றுக்கும் நமக்கு வழிகாட்டாமல் விடவில்லை. நம்முடைய வாழ்க்கையின் எல்லா பிரச்சினைகளுக்கும்தெளிவான தீர்வை, விளக்கத்தை, காரணத்தையும், அந்த பிரச்சினைகளிலிருந்து எப்படி வெளிப்படுவதென்று தெளிவாக வழிகளையும் அல்குர்ஆன் இன்றும் நமக்கு வழங்கிக் கொண்டிருக்கிறது.

அல்லாஹ் அப்படிப்பட்ட சிறந்த உண்னதமான ஒரு வேதத்தை நமக்கு வழங்கியிருக்கிறான். ஆகவேதான், அல்குர்ஆனுடைய பல வசனங்களில் நம்மை அழைத்து கேட்கின்றான்;

இதை சிந்திக்க மாட்டீர்களா?படித்து உணர மாட்டீர்களா?இதை நீங்கள் ஆராய மாட்டீர்களா?இதை பின்பற்ற மாட்டீர்களா?இரவிலும் பகலிலும் இதை நிங்கள் ஓத மாட்டீர்களா? என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மை அழைக்கின்றான்.

ஏன் அப்படி அழைக்கின்றான் என்றால், அதில்தான் நம்முடைய தீர்வு இருக்கின்றது, அதில்தான் நம்முடைய வெற்றி இருக்கின்றது, அதில்தான் நம்முடைய கண்னியம் இருக்கின்றது, நம்முடைய நூற்றுக்கணக்கான கேள்விகளுக்கு பதில் அல்குர்ஆனில்தான் இருக்கின்றது.

இன்றைய காலம் சென்ற காலத்திற்கு சற்றும் குறையாமல் இருப்பதை நாம் பார்க்கிறோம். இன்றைய காலத்தில் முஸ்லிம்கள் சந்திக்கின்ற சோதனைகள், முஸ்லிம்கள் மீது தொடுக்கப்பட்டுள்ள போர்கள், முஸ்லிம்களின் மீது நிகழ்கின்ற கொடுமைகள் அனைத்திற்கும் குர்ஆனில் தீர்வு சொல்லப்பட்டுள்ளது.

முதலாவதாக, ஒரு விஷயத்தை விளங்கிகொள்ள வேண்டும்;ஒரு முஸ்லிம் எப்போதும் தாழ்வு மனப்பன்மை உள்ளவனாக இருக்கக்கூடாது. எந்த ஒரு சக்திக்கு முன்னாலும் பலவீனப்பட்டு விடக்கூடாது. அவன் தனது துணிவை இழந்து விடக்கூடாது.

அது ஃபிர்அவ்னாக இருந்தாலும் சரி, அல்லது நம்ரூதாக இருந்தாலும் சரி, இன்னும் அவர்களைவிட கொடிய வல்லரசுகளின் தலைவன் உலகத்தில் தோன்றினாலும் சரி, அவனுடைய உள்ளம் சோர்ந்து விடக்கூடாது.

அவனுடைய உள்ளம் அல்லாஹ்வின் மீது ஆழ்ந்த நம்பிக்கை உடையதாக இருக்க வேண்டும். சோதனைகள் மலை போல் குவிந்து கிடந்தாலும், அலைகளாக ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாக வந்தாலும், அந்த சோதனைகளை சந்திக்கும் போதுதான் ஒரு முஸ்லிமுடைய ஈமான் அதிகரிக்க வேண்டும்.

சோதனைகளின்போது நம்முடைய தொடர்பு அல்லாஹ்வோடு பலப்பட வேண்டும், தவக்குல் மற்றும் இறையச்சம் அதிகரிக்க வேண்டும். அதுதான் சோதனைகளுக்கு பின்னால் உள்ள படிப்பினைகள் என்பதை மறந்து விடக்கூடாது.

ஆனால், இன்று நாம் சோதனைகளின் போது மனம் தளர்ந்து விடுகிறோம்.இஸ்லாத்திற்கு ஒரு நல்ல காலம் வராதா?முஸ்லிம்கள் முன்னேறக்கூடிய மற்றொரு வாய்ப்பில்லையா?இஸ்லாம் ஓங்கக்கூடிய இன்னொரு சகாப்தம் எப்போது வரும்? என்றெல்லாம் பலவீனப்படக்கூடிய பலருடைய பேச்சுக்களை கேட்கிறோம்.

அப்படிப்பட்ட ஒரு நிலைக்கு ஒருகாலும் ஒரு முஸ்லிம் ஆகிவிடக்கூடாது. எவ்வளவு பெரிய சோதனைகள் வந்தாலும் சரி, உலகமே சேர்ந்து எதிர்க்க ஆரம்பித்தாலும் சரி, முஸ்லிம்களுடைய இறை நம்பிக்கை, தவக்குல், இறை பினைப்பு ஆழமாகவும் அதிகரித்துக் கொண்டும் இருக்க வேண்டும்.

இறை மார்க்கத்தை இந்த உலகத்தில் நிலை நாட்டுவதில் தம்முடைய பயணித்தில் ஒரு முஸ்லிம் தளர்ந்து விடக்கூடாது.

நம்மை படைத்த ரஹ்மான்நமக்கு ஆறுதல் சொல்கின்றான். நாம் அவனை நம்பியவர்கள், அவனுடைய வேதத்தை நம்பியவர்கள், இந்த உலகத்தில் ஒவ்வொன்றும் அவனுடைய கட்டளையின் படிதான் செயல்படுகின்றன.

அவன் நாடாமல் எதுவும் நடக்காது, ஒரு மரத்தின் இலை கூட அல்லாஹ் நாடாமல் விழாது என்று நம்பிக்கை கொள்ளக்கூடிய முஃமின்கள் நாம்.

நம்முடைய ரப்பு நமக்கு ஆறுதல் கூறுகின்றான்,

وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள் தைரியத்தை இழந்திட வேண்டாம். கவலைப்படவும் வேண்டாம். (உண்மையாகவே) நீங்கள் நம்பிக்கை கொண்டவர்களாக இருந்தால் நீங்கள்தான் மேன்மை அடைவீர்கள்.(அல்குர்ஆன் 3:139)

ஒரு முஸ்லிம் ஏன் கோழையாக வேண்டும்?ஒரு முஸ்லிமுடைய நம்பிக்கை ஆயுதத்தின் மீதல்ல, எண்ணிக்கையின் மீதல்ல, தன்னுடைய சாமர்த்தியத்தின் மீதல்ல, தன்னுடைய திட்டங்களின் மீதோ, தன்னுடைய அனுபவத்தின் மீதோ அல்ல.

ஒரு முஸ்லிமின் நம்பிக்கை இவற்றையெல்லாம் இயக்கக்கூடிய அல்லாஹுவின் மீது இருக்கிறது. யாருடைய கையில் பிரபஞ்சத்தினுடைய ஆட்சி அதிகாரம் இருக்கிறதோ,வானம் பூமியின் பேராட்சி யாருடைய கையில் இருக்கிறதோ, அந்த மகா பரிசுத்தமான இறைவன் மீது நமது நம்பிக்கை இருக்கிறது. அப்படி இருக்கும்போது நாம் ஏன் நம்பிக்கை இழக்க வேண்டும்?!

இந்த இடத்தில் அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கூற்றை கொஞ்சம் நினைவு கூர்ந்து பார்ப்போம்.

முஃதா போருக்காக அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் தோழர்களை அனுப்புகிறார்கள். அவர்கள் வெறும் மூவாயிரம் பேர்தான். ஆனால் எதிர்த்து வரக்கூடிய காஃபிர்களோ ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள்.

ஜைத் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த படைக்கு அமீராக்கினார்கள். அவர் கொல்லப்பட்டால், ஜஃபர் ரழியல்லாஹு அன்ஹு, அவரும் கொல்லப்பட்டால் அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு' என்று ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களுக்கு நெருக்கமான மூன்று தோழர்களின் முன்னறிவிப்பு கூறியவர்களாக அந்த படையை அனுப்புகிறார்கள். (1)

நூல் : புகாரி, எண்: 4261, முஸ்னது அஹ்மது, எண்: 2317, சீரா இப்னு ஹிஷாம் 2/373, முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக் : 6057.

மரணத்தைக் கண்டு பயப்படாத ஒரு சமுதாயமாக முஸ்லிம் சமுதாயம் இருந்தது. எப்போது மறுமைக்காக வாழ்ந்தார்களோ, எப்போது அல்லாஹுவின் வேதத்தை, அல்லாஹுவின் விறுப்பத்தை நிலைநாட்டுவதை முன்வைத்து வாழ்ந்தார்களோ, அப்போது அவர்கள் மரணத்தை பயப்படவில்லை.

எப்போது மன இச்சைக்காக வாழ ஆரம்பித்தார்களோ, தங்களது சுய இன்பத்திற்காக வாழ ஆரம்பித்தார்களோ, அல்லாஹுவின் விருப்பத்தை புறம் தள்ளினார்களோ, அல்லாஹுவின் கட்டளையை அலட்சியம் செய்தார்களோ, நபியின் சுன்னாவை மதிக்கவில்லையோ அப்போது இவர்களுக்கு மரண பயம் கவ்விக் கொண்டது.

மறுமையின் ஆசை குறைந்தது, துன்யாவின் ஆசை பெருக்கெடுத்தது. அதனால் எதிரிகளைப் பார்த்து பயந்தார்கள், அல்லாஹுவின் தண்டனையைப் பயப்படவில்லை. இதுதான் மிகப் பெரிய சோதனை.

அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் தோழர்களெல்லாம் தயங்கி நிற்கும் நேரத்தில், நாம் மூவாயிரம் பேர்தானே, எதிரிகள் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் என்ற செய்தி நமக்கு கிடைத்திருக்கிறதே, இப்போது இந்த இடத்தில் நாம் தங்கி அல்லாஹுவின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் ஆலோசனை கேட்போமா?நமக்கு உதவிக்காக இன்னும் கொஞ்சம் படையை கேட்போமா? என்று அவர்கள் ஆலோசித்தபோது, அப்துல்லாஹ் இப்னு ரவாஹா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் எழுந்து தங்களது படையைப் பார்த்து ஒரு சிறிய உரையை நிகழ்த்துகிறார்கள்.

தோழர்களே! நீங்கள் எதற்காக இங்கே வந்தீர்கள்?நீங்கலேல்லாம் உயிரோடு திரும்பிச் செல்வதற்காக வந்தீர்களா?அல்லது ஷஹாதத்தை எதிர்பார்த்து வந்திருக்கிறீர்களா?அப்படி நிங்கள் ஷஹாதத்தை எதிர்பார்த்து வந்தால் அந்த ஷஹாதத் உங்கள் முன்னால் இருக்கிறது, ஏன் நீங்கள் அதைப் பார்த்து பயப்படுகிறீர்கள்.

முஸ்லீம்களே! அல்லாஹ் அவனுடைய உதவியை எண்ணிக்கையின் மீது வைத்திருக்கின்றானா, அல்லது ஆயுதங்களின் மிது வைத்திருக்கின்றானா?அல்லது உங்களது ஈமானின் வைத்திருக்கின்றானா? என யோசித்துப் பாருங்கள்.

அல்லாஹ் நமக்கு வெற்றியை கொடுத்தது எண்ணிக்கையைக் கொண்டல்ல, ஆயுதங்களைக் கொண்டல்ல. அப்படியிருக்க நாம் ஏன் பலவீனப்பட வேண்டும். எந்த ஒரு ஷஹாதத்தை நோக்கி நாம் புறப்பட்டோமோ, அப்படி ஒரு ஷஹாதத்தை நோக்கி நாம் முன்னேறி செல்வோம்என்று தங்களது தோழர்களுக்கு அறிவுரை சொன்னார்கள்.

நூல் : சீரா இப்னு ஹிஷாம்-2/375.

كَمْ مِنْ فِئَةٍ قَلِيلَةٍ غَلَبَتْ فِئَةً كَثِيرَةً بِإِذْنِ اللَّهِ

எத்தனையோ சிறு படைகள் பெரும் படைகளை வென்றிருக்கின்றன,அல்லாஹுவின் அனுமதியைக் கொண்டு. (அல்குர்ஆன் 2:249)

என்ற அல்லாஹுவின் திருவசனத்திற்கு ஏற்ப அப்துல்லாஹு இப்னு ரவாஹா ரழியல்லாஹு அன்ஹு அவர்களின் அந்த சிறுபடை ரோமர்களின் லட்சம் பேர் கொன்ட படையை பின்னேற செய்தது. அவர்களை தோற்க்கடித்து வெற்றி கண்டார்கள் என்பது சஹாபாக்களின் வாழ்க்கை வரலாறு.

அல்லாஹ் அதைத்தான் நமக்கு சொல்கின்றான்;

நீங்கள் தைரியம் இழக்க வேண்டாம் என்று. (அல்குர்ஆன் 3:139)

நாம் எந்த வகையில் பலவீனப்பட்டு விட்டோம்?நம்முடைய ரப்பு எந்த வகையில் பலவீனப்பட்டு விட்டான்?

வானங்கள் மற்றும் பூமியை படைக்கும் போது எந்த பேராற்றலோடு அவன் இருந்தானோ, அதே ஆற்றலோடு அவன் இன்றும் இருக்கின்றான்.

ஆது, சமூது மக்களை அழிப்பதற்கு அல்லாஹ் எந்த வல்லமையை வைத்திருந்தானோ, அதே வல்லமை அல்லாஹுவிடத்தில் இப்போதும் இருக்கிறது.

ஃபிர்அவ்னை அல்லாஹ் எந்த கடலில் மூழ்கடிக்கச் செய்தானோ அதே ஆற்றல் அல்லாஹுவிடத்தில் இன்னும் இருக்கிறது.

இப்படிப்பட்ட பேராற்றலுடைய ரப்பை நம்பிக்கை கொள்ளக்கூடிய ஈமானிய சமுதாயம் எந்த வகையில் பலவீனப்பட வேண்டும்?எந்த வகையில் அவர்கள் தைரியத்தை இழக்க வேண்டும்? எந்த அவசியமும் இல்லை.

உலகத்தில் எந்த ஒரு சக்தியும் வந்து விடட்டும், எப்பேற்பட்ட வல்லமையைக் கொண்டும் முஸ்லிம் சமுதாயத்தை அழிப்பதற்கு முயற்சி செய்யட்டும்.

ஃபிர்அவ்னைவிட, அவன் கொடுத்த கொடிய தன்டனையைவிட, அவன் விதித்த கடுமையான சட்டங்களைவிட ஒரு கடுமையான சட்டங்களையோ, தண்டனைகளையோ, ஆட்சி அதிகாரங்களையோ பயன்படுத்தக்கூடிய வேறொரு கொடுங்கோலன் இந்த உலகத்தில் பிறக்க முடியாது.

ஃபிர்அவ்னுடைய சோதனகளை அல்லாஹ் சொல்லிக் காண்பிக்கின்றான், நம்ரூதுடைய கொடுமைகளை அல்லாஹ் சொல்லிக் காண்பிக்கின்றான், அது போன்ற அநியாயம், அக்கிரமம் செய்யக்கூடிய ஒரு கூட்டம் இந்த உலகத்தில் மறுபடி படைக்கப்படவில்லை என்று அல்லாஹ் சொல்லுகின்றான். (அல்குர்ஆன் 89 : 8-12)

அப்படிப்பட்ட சமுதாயத்தையெல்லாம் சந்தித்து வந்திருக்கின்ற ஈமானிய சமுதாயம் நாம்.

இதுதான் அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உருவாக்கிய சமுதாயத்தின் வழிகாட்டுதலாக இருந்தது.

கண்ணியத்திற்குரிய தோழர்களுடைய நம்பிக்கை எதுவாகஇருந்தது?அல்லாஹுடைய பாதைக்கு நாம் சென்றால் நமக்கு இரண்டில் ஒரு நற்செய்தி கண்டிப்பாக இருக்கும்.

குஃப்பார்களையும் முஷ்ரிக்குகளையும், முஸ்லிம்களின் மிது கொடுமைகளையும், அநியாயங்களையும் கட்டவிழ்த்து விட்ட அந்த சமுதயங்களைப் பார்த்து முஃமின்கள் என்ன சொன்னார்கள் என்பதை அல்குர்ஆன் சொல்கிறது;

قُلْ هَلْ تَرَبَّصُونَ بِنَا إِلَّا إِحْدَى الْحُسْنَيَيْنِ وَنَحْنُ نَتَرَبَّصُ بِكُمْ أَنْ يُصِيبَكُمُ اللَّهُ بِعَذَابٍ مِنْ عِنْدِهِ أَوْ بِأَيْدِينَا فَتَرَبَّصُوا إِنَّا مَعَكُمْ مُتَرَبِّصُونَ

(நபியே!) கூறுவீராக: (வெற்றி அல்லது சொர்க்கம் ஆகிய) மிகச் சிறந்த இவ்விரண்டு நன்மைகளில் ஒன்றைத்தவிர (வேறெந்தத் தீங்கையும்) நீங்கள் எங்களுக்கு எதிர்பார்க்க முடியுமா? (ஆகவே, இந்த இரண்டில் எது கிடைத்த போதிலும் எங்களுக்கு நன்மையே ஆகும்.) எனினும், உங்களுக்கோ அல்லாஹ் தன் வேதனையைக் கொண்டோ அல்லது எங்கள் கைகளைக் கொண்டோ உங்களுக்குக் கஷ்டம் உண்டாக்குவதையே நாங்கள் எதிர்பார்க்கிறோம். ஆகவே, நீங்கள் (எங்களுக்கு வரவேண்டியதை) எதிர்பார்த்திருங்கள்; நாங்களும் (உங்களுக்கு வரவேண்டியதை) உங்களுடன் எதிர்பார்க்கிறோம். (அல்குர்ஆன் 9:52)

போருக்கு சென்றால் இந்த இரண்டில் ஒன்று கண்டிப்பாக நிகழும். அந்த இரண்டையும் அல்லாஹ் நமக்கு 'அல்ஹுஸ்னா' -மிக அழகிய முடிவு என்று சொல்கின்றான். ஒன்று அல்லாஹுவின் பாதையில் கொல்லப்பட்டால் அது ஷஹாத்தத்தாகும்.

அல்லாஹுவின் பாதையில் கொல்லப்படக்கூடிய ஒரு முஃமின் எந்த நிலையில் கொல்லப்படுகிறாரோ அதே நிலையில் எழுப்பப்படுவான்.எனவே அவரை குளிப்பாட்டாதீர்கள்.

ஒரு ஷஹீத் குளிப்பாட்டப்பட மாட்டார், அவருடைய இரத்தக் காயம் துடைக்கப்படமாட்டாது. அவர் அதே நிலையில் எழுப்பப்படுவார். மறுமையில் அவருடைய காயத்திலிருந்து இரத்தம் பீறிட்டு வரும்.

«اللَّوْنُ لَوْنُ الدَّمِ، وَالعَرْفُ عَرْفُ المِسْكِ»

நிறம்தான் இரத்தத்தின் நிறமாக இருக்கும், ஆனால் வாடையோ கஸ்தூரியின் வாடையாக இருக்கும் என்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். (2)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 237.

ஒரு முஸ்லிம், அவர் முஸ்லிம் என்பதற்காக அநியாயமாக கொல்லப்பட்டால், அது போர் மைதானமாக இருந்தாலும், அல்லது வீடாக இருந்தாலும், அவருடைய வியாபாரஸ்தளமாக இருந்தாலும்அந்த முஃமினை பொருத்தவரை அது அவருக்கு ஷஹாதத், அது அல்லாஹ் கொடுத்த மாபெரும் கண்ணியம்.

அல்லாஹ் ஒரு ஷஹீதுக்கு எப்படிப்பட்ட தராஜாவைத் தருகின்றான் என்றால், ஒரு நபிக்குஒரு சித்தீக்குக்கு கொடுக்காத கண்ணியத்தை ஒரு ஷஹீதுக்கு தருகிறான்.

وَلَا تَحْسَبَنَّ الَّذِينَ قُتِلُوا فِي سَبِيلِ اللَّهِ أَمْوَاتًا بَلْ أَحْيَاءٌ عِنْدَ رَبِّهِمْ يُرْزَقُونَ

(நபியே!) அல்லாஹ்வின் பாதையில் (போர்செய்து) வெட்டப்பட்டோரை இறந்து விட்டவர்கள் என நீர் ஒருபோதும் எண்ண வேண்டாம். மாறாக, அவர்கள் தங்கள் இறைவனிடத்தில் நிச்சயமாக உயிரோடு இருக்கிறார்கள். (மேலும்,) அவர்களுக்கு உணவும் அளிக்கப்படுகிறது.(அல்குர்ஆன் 3 : 169, 2 : 154)

எனவே,ஒரு முஸ்லிம் ஷஹீதானால் இன்னொரு முஸ்லிமுக்கு கவலை இருக்கும், ஆனால் அது துக்கமாக, சஞ்சலமாக மாறி விடக்கூடாது, நம்மை அல்லாஹ் கைவிட்டு விட்டானோ என்ற எண்ணமாக ஆகிவிடக்கூடாது.

அல்லாஹுவின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஹம்சா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கொல்லப்பட்டதைப் பார்த்து அழுதார்கள்.

ஒரே இனத்தைச் சேர்ந்த, ஒரே சமூகத்தைச் சேர்ந்த, ஒரே மொழி பேசக்கூடிய இரத்த சொந்தங்களால் ஹம்ஸா ரழியல்லாஹு அன்ஹு அவர்களது உடல் சிதைக்கப்பட்டது. இதுதான் காஃபிர்களின் குணம், குஃப்ருடைய குணம் இதுதான், முஷ்ரிக்குகளின் குணம் இதுதான்.

அல்லாஹ் சொல்கிறான்; காஃபிர்களை பொருத்தவரைஅவர்களிடத்தில் இரக்கமிருக்காது, அன்புபாசம் பரிவு இருக்காது.

குறிப்பாக முஃமின்களிடம் அவர்கள் கருணையுடையவர்களாக, பரிவுடையவர்களாக, முஃமின்களை சோதனைக்கு உட்படுத்த வேண்டும் என்ற ஒரே திட்டத்தில் இருப்பார்கள்.

தங்களது நாவால் உங்களை திருப்திபடுத்துவார்கள், ஆனால் அவர்களுடைய உள்ளமோ உங்கள் மீது கர்வம் கொண்டிருக்கும், வஞ்சகம் கொண்டிருக்கும், அவர்களில் அதிகமானவர்கள் உங்களுக்கு தொந்தரவு தரக்கூடிய பாவிகள்தான். (அல்குர்ஆன் 9 : 8-10)

அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதே முஃதா போரில் ஜைது ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கொல்லப்பட்டபோது, அல்லாஹுவின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் செய்தி அறிவித்தான், அவர்கள் கண் கலங்கினார்கள்.

நூல் : அல்பிதாயா வன்னிஹாயா-4/245.

ஆனால், இந்த கண் கலங்குதல் என்பது, உள்ளத்தில் உள்ள கருணையினால் ஏற்பட்டது, சஞலத்தினால் அல்ல, துக்கத்தினால் அல்ல, அல்லாஹுவின் விதி நமக்கு பாதமாக அமைந்துவிட்டது, அல்லாஹ் நம்மை கைவிட்டுவிட்டான் என்ற அவநம்பிக்கையால் அல்ல.

இன்றைய முஸ்லிம்களும் கவலைப்படுகிறார்கள், சஞ்சலப்படுகிறார்கள். ஆனால் பலருடைய கவலைகளும், சஞ்சலங்களும் அவநம்பிக்கையினால் ஏற்படுகிறது, பலவீனத்தால் ஏற்படுகிறது.

அல்லாஹுவின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்கள் சிறு கூட்டமாக இருந்தாலும், எப்படிப்பட்ட நம்பிக்கையுடையவர்களாக, பலமுடையவர்களாக, துணிச்சலுடையவர்களாக இருந்தார்கள்.

ஒரு சமயம் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டோம் என்று கூறி ஒரு கூட்டத்தார் வந்தார்கள். ஆனால், மதீனாவில் அவர்களால் தங்க முடியவில்லை. அவர்களது உடல் நோய்வாய்ப்பட்டது.

அல்லாஹுவின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்,

நீங்கள் மதினாவுக்கு வெளியில் முஸ்லிம்களின் சதகா ஒட்டகங்கள் இருக்கிறது, அங்கே சென்று விடுங்கள், அதனுடைய பாலை நீங்கள் அருந்துங்கள், அதனுடைய சிறுநீரை நீங்கள் குடியுங்கள். உங்களுடைய நோய்க்கு அது மருந்து என்று சொல்லி அனுப்பி வைத்தார்கள்.

அந்த மக்கள் அந்த இடத்திற்கு சென்று அவ்வாறே செய்து சுகமடைந்தார்கள். அவர்களது உடல்கள் திடகாத்திரமடைந்தன.

பின்னர், அந்த மக்களின் உள்ளங்களில் ஷைத்தான் ஊசலாடினான். அங்கே ஒட்டகங்களை மேய்த்து கொண்டிருந்த இரண்டு தோழர்களை கொன்றார்கள், அந்த ஒட்டகங்களையெல்லாம் ஓட்டிக் கொண்டு ஓட ஆரம்பித்தார்கள்.

தங்களது பெருங்கூட்டத்தொடு சேர்ந்து முஸ்லிம்களிடம் இருந்து தம்மை தற்காத்துக் கொள்ளலாம் என்று நினைத்தார்கள்.

இதுதான் ஒரு முஸ்லிம்களின் தலைவர் செய்யக்கூடியதாக இருக்க வேண்டும் என இந்த சம்பவம் நமக்கு உணர்த்துகிறது.

இது அனேகமாக ஹிஜ்ரி 3அல்லது 4ஆண்டுக்குள் நிகழ்ந்த சம்பவம்.

அப்போது மதினாவில் ஒட்டு மொத்த முஸ்லிம்களே சில நூறு பேர்தான் இருந்திருப்பார்கள். பத்ர் யுத்தத்தில் எழுநூறு முஸ்லிம்கள்தான் இருந்தார்கள்.

ஆனால், இந்த காஃபிர்கள் ஒட்டகத்தை ஓட்டிக் கொண்டு இவர்கள் சென்று சேர்ந்த கோத்திரத்தார்களோ பல ஆயிரம் பேர் இருந்தார்கள். அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பலவீனப்பட்டார்களா, பயந்து விட்டார்களா?

ஒரு முஸ்லிமுடைய இரத்திற்காக கண்டிப்பாக பழி வாங்கியே தீருவேன் என்று அல்லாஹுவின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குறைவான எண்ணிக்கையுடைய தோழர்களை அழைத்துக் கொண்டு கொல்லப்பட்ட இரண்டு தோழர்களுக்கு பழி வாங்க படையெடுத்து புறப்பட்டார்கள்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உதவினான். அந்த வஞ்சகக் கூட்டம் தங்களது கூட்டத்தாரோடு சேர்வதற்கு முன்பே அல்லாஹ் தனது தூதருக்கு வாய்ப்பளித்தான்.

இறுதி நாள் வரை வரக்கூடிய வஞ்சக கூட்டங்களுக்கு பாடமாக இருக்க வேண்டும் என்று அல்லாஹுவின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த கூட்டத்தாரின் மாறு கை மாறு கால் வெட்டினார்கள், இரும்பி கம்பியை பழுக்க காய்ச்சி அவர்களை குருடாக்கினார்கள், அதே பாலைவனத்தில் தண்ணீருக்காக தத்தளிக்க விட்டுவிட்டார்கள். (3)

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 233, 1501.

இதுதான் ஒரு முஸ்லிம் கலிஃபாவின் வீரம். கவலைப்படத் தேவையில்லை, அல்லாஹ் கொடுத்த ஆற்றல் இருக்கிறது, நம்பிக்கை இருக்கிறது. நம்மில் கொல்லப்பட்டவர்கள் ஷஹாதத்துகளை அடைவார்கள், வென்றவர்கள் அல்லாஹுடைய பாக்கியத்தை அடைவார்கள்.

எனவே, ஒரு முஸ்லிம் எந்த ஒரு சூழ்நிலையிலும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை, தைரியத்தை இழக்க வேண்டிய அவசியமில்லை.

மேலும், அல்லாஹ் சொல்கிறான்:

நீங்கள்தான் கண்டிப்பாக உயர்ந்தவர்கள், நீங்கள்தான் மிகைத்தவர்கள், நீங்கள் நம்பிக்கை உடையவர்களாக இருந்தால். (அல்குர்ஆன் 3:139)

இந்த வசனம்தான் நமக்கு ஒரு மிகப்பெரிய சிந்தனையை தூண்டுகிறது.

நாம் முஃமின்களாக இருக்கிறோமா? அல்லாஹுவின் வேதம் இறக்கப்பட்டபோது, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுப்பப்பட்டபோது, பத்ரில் அல்லாஹ் வெற்றியை கொடுத்தான்,உஹதில் வெற்றியை கொடுத்தான், வெற்றி தோல்வியாக மாறியது, பிறகு தோல்வி வெற்றியாக மாறியது.

அஹ்சாபில் அல்லாஹ் வெற்றியை கொடுத்தான், ஹுனைனில் வெற்றியை கொடுத்தான், வெற்றி தோல்வியாக மாறியது, பிறகு தோல்வி வெற்றியாக மாறியது.

தபூக்கில் அல்லாஹ் வெற்றியை கொடுத்தான், கைபரில் அல்லாஹ் வெற்றியை கொடுத்தான். இந்த வெற்றிகளையெல்லாம் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஈமான் என்ற ஒரே நிபந்தனையின் அடிப்படையில் கொடுத்தான், முஃமின்கள் என்ற ஒரே அடிப்படையில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கொடுத்தானே தவிர வேறு காரணமில்லை.

அல்லாஹுடைய தீனிக்காக கொடுத்த வெற்றி, இஸ்லாமுக்காக வாழ்ந்தவர்களுக்காக அல்லாஹ் கொடுத்த வெற்றி. அங்கிருந்த அரபுகளுக்காக அல்ல, சிறுபான்மையினருக்காக அல்ல.

அதைதான் அல்லாஹ் சொல்கிறான்:

وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ

முஃமின்களுக்கு உதவுவது நம்மீது கட்டாயமாக இருக்கிறது. (அல்குர்ஆன் 30:47)

அல்லாஹ் ரப்புல் ஆலமீனுடைய சக்தியில் பலவீனம் ஏற்படவில்லை, அவன் அனைத்தையும் பார்த்துக் கொன்டிருக்கிறான், ஒரு இலை விழுவது அல்லாஹுவின் நாட்டமில்லாமல், அவன் அறியாமல் விழாது என்று சொன்னால், இன்று உலக நாடுகளில் நடக்கக்கூடிய நிகழ்வுகள் அல்லாஹ் பார்க்காமல் இருக்கிறானா?அல்லாஹ் நாடாமல் நடக்கின்றதா?

கண்டிப்பாக ஒருபோதும் அப்படியில்லை. கொஞ்சம் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சமுதாய மக்களையும் நமது சமுதாய மக்களுடைய நிலையையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

அல்லாஹ் எவ்வளவு பெரிய பாடத்தை நமக்கு வைத்திருக்கின்றான். மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் கூட்டத்தார் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களை பார்த்துச் சொன்னார்கள்; நாங்கள் ஃபிர்அவ்னிடத்தில் கொடுமை பட்டுக் கொண்டிருக்கிறோம் என்றனர்.

சாதாரண கொடுமையல்ல அது. ஆண்களெல்லாம் விலை பேசப்படாத அடிமைகள். அவர்கள் ஏதாவது கூலியாக கொடுத்தால் வாங்கிக் கொள்ள வேண்டும், வாய் திறந்து பேசக்கூடாது, பேசினால் சாட்டையடி, இல்லையென்றால் கொலை. இதைத்தவிர வேறொன்றும் அங்கே இருக்கவில்லை.

மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் குடும்பத்தாருக்கு ஏதாவது பாதுகாப்பு இருந்ததா என்றால் அதுவும் இல்லை. பிறக்கக்கூடிய குழந்தைகளை கொடூரமாக கொன்றார்கள். இப்படிப்பட்ட துன்பங்களை பனூஇஸ்ராயீல் அனுபவித்துக் கொண்டிருந்தனர்.

மூஸா அலைஹிஸ்ஸலாம் அந்த மக்களை பார்த்து சொன்னார்கள்:

قَالَ مُوسَى لِقَوْمِهِ اسْتَعِينُوا بِاللَّهِ وَاصْبِرُوا إِنَّ الْأَرْضَ لِلَّهِ يُورِثُهَا مَنْ يَشَاءُ مِنْ عِبَادِهِ وَالْعَاقِبَةُ لِلْمُتَّقِينَ

(அதற்கு) மூஸா தன் இனத்தாரை நோக்கி ‘‘நீங்கள் அல்லாஹ்விடம் உதவி தேடி (ஃபிர்அவ்னால் உங்களுக்கு ஏற்படும் துன்பங்களை) பொறுமையுடன் சகித்திருங்கள். நிச்சயமாக இந்த பூமி அல்லாஹ்வுக்குரியதே! அதை அவன் தன் அடியார்களில் தான் விரும்பியவர்களுக்குச் சொந்தமாக்கி விடுவான். (அல்லாஹ்வுக்கு) பயப்படுகிறவர்களே முடிவில் வெற்றி பெறுவார்கள்'' என்று கூறினார். (அல்குர்ஆன் 7 : 128)

இன்று இதைத்தான் நாம் நமக்கு நினைவூட்டக் கடமைப்பட்டிருக்கிறோம். நமக்கு உதவி செய்பவர்கள் அல்லாஹுவைத் தவிர வேறு யாரும் இல்லை.

எந்த அரசாங்கமோ, எந்த கட்சியோ, எந்த சக்தியோ நமக்கு உதவாது, அல்லாஹ் ஒருவனே நமக்கு உதவியாளன்.

إِنْ يَنْصُرْكُمُ اللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ

(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தால் உங்களை வெற்றி கொள்பவர் எவருமில்லை. உங்களை அவன் (கை) விட்டு விட்டாலோ அதற்குப் பின்னர் உங்களுக்கு எவர்தான் உதவி செய்ய முடியும்? ஆதலால், அல்லாஹ்விடமே நம்பிக்கையாளர்கள் பொறுப்பை ஒப்படைக்கவும். (அல்குர்ஆன் 3:160)

அல்லாஹுவிடத்தில் உதவி தேடுங்கள், அவனை நம்புங்கள், அல்லாஹுவின் பக்கம் திரும்புங்கள். இன்றைய முஸ்லிம்களின் முதல் பலவீனம் இங்கிருந்து ஆரம்பிக்கின்றது. சோதனையின போது அல்லாஹுவின் பக்கம் திரும்புவதில்லை.

சோதனை வந்த போது அல்லாஹுவிடம் அவர்கள் மன்றாடியிருக்க வேண்டுமே. (அல்குர்ஆன் 6 : 43)

இன்று, நாம் கேள்விப்படுகிறோம்;முஸ்லிம்களில் பலர் கொல்லப்படுகிறார்கள், முஸ்லிம்களுடைய நாடுகள் அபகரிக்கப்படுகின்றன, இந்த நேரத்தில் எத்தனை பேர் அல்லாஹுவின் பக்கம் தொழுகைக்கு திரும்புகிறார்கள்?

யா அல்லாஹ்!எங்களை பாதுகாத்துக்கொள், கொடுமை செய்யப்பட்ட முஸ்லிம்களுக்கு நீ உதவி செய், அவர்களுக்கு நீ பழிவாங்குஎன்று ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய துஆவை எத்தனை பேர் கேட்கிறார்கள்?

நிறைய பேசுகின்றோம், நின்று, அமர்ந்து, சந்திப்பவர்களிடம் என பேசுகின்றோமே, இந்த குறையை அல்லாஹுவிடத்தில் முறையிட்டோமா? அல்லாஹுக்கு முன்னர் நமது பலவீனத்தை ஒப்புக் கொண்டோமா?நம்முடைய, துக்கங்களை, துயரங்களை, சஞ்சலங்களை இரவின் ஓரங்களில் அல்லாஹுவிற்கு முன்னால் சொல்லி அழுதோமா?

وَمَا كَانَ قَوْلَهُمْ إِلَّا أَنْ قَالُوا رَبَّنَا اغْفِرْ لَنَا ذُنُوبَنَا وَإِسْرَافَنَا فِي أَمْرِنَا وَثَبِّتْ أَقْدَامَنَا وَانْصُرْنَا عَلَى الْقَوْمِ الْكَافِرِينَ

(இத்தகைய சந்தர்ப்பங்களில் அவர்கள் தங்கள் இறைவனை நோக்கி) ‘‘எங்கள் இறைவனே! எங்கள் பாவங்களை நீ மன்னிப்பாயாக! எங்கள் செயல்களில் நாங்கள் வரம்புமீறிய (குற்றத்)தையும் மன்னிப்பாயாக! எங்கள் பாதங்களை (போரில் நழுவாது) நீ உறுதிபடுத்தியும் வைப்பாயாக! (உன்னை) நிராகரிக்கும் மக்களை வெற்றிபெற நீ எங்களுக்கு உதவி புரிவாயாக!'' என்று அவர்கள் (பிரார்த்தித்துக்) கூறியதைத் தவிர (வேறொன்றும்) கூறியதில்லை. (அல்குர்ஆன்3 : 147)

நமது முந்திய சமுதாயம் இது போன்ற சோதனைகளில் இந்த துஆவைக் கேட்டார்கள் என்று அல்லாஹ் சொல்கின்றான்.

இந்த துஆக்களை கொண்டு அவர்கள் வெற்றி அடைந்தார்கள்.

இன்று,நம்முடைய மிகப்பெரிய ஒரு இயலாமை மற்றும் பலவீனம் என்னவென்றால் அல்லாஹுவின் பக்கம் திரும்பி அவனிடத்தில் துஆ செய்வதை விட்டுவிட்டோம்.

எத்தனையோ கட்சிகளிடத்தில் முறையிடுகிறார்கள், மனிதர்களிடத்தில் முறையிடுகிறார்கள். இவர்களையெல்லாம் ஆட்டிப்படைக்கக்கூடிய அல்லாஹுவிடத்தில் முறைவிடுவதில்லை.

இதைதான் மூஸா அலைஹிஸ்ஸலாம் சொன்னார்கள்:

அல்லாஹுவிடத்தில் உதவி தேடுங்கள், நிலைகுலையாமல் இருங்கள் உங்களது இந்த மார்க்கத்தில் உறுதியாக இருங்கள் என்று. (அல்குர்ஆன் 7:128)

பொறுமையென்பது வாய் மூடி இருப்பது மட்டுமல்ல, அல்லாஹுவின் மார்க்கத்தில் உறுதியாக இருப்பது. சோதனைகளை பயந்து அல்லாஹுவின் தீனை, கட்டளைகளை விடுவதல்ல.

மேலும்,மூசா நபி சொன்னார்கள்:

இந்த பூமி அல்லாஹுவுக்கு சொந்தமானது, அவன் நாடியவர்களுக்கு அவன் கொடுப்பான். ஆனால் நல்ல முடிவு தக்வா உடையவர்களுக்கு. (அல்குர்ஆன் 7:128)

அப்போது பனீ இஸ்ராயீல் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடத்தில் சொன்னார்கள்,

قَالُوا أُوذِينَا مِنْ قَبْلِ أَنْ تَأْتِيَنَا وَمِنْ بَعْدِ مَا جِئْتَنَا قَالَ عَسَى رَبُّكُمْ أَنْ يُهْلِكَ عَدُوَّكُمْ وَيَسْتَخْلِفَكُمْ فِي الْأَرْضِ فَيَنْظُرَ كَيْفَ تَعْمَلُونَ

மூஸாவே, நீங்கள் வருவதற்கு முன்னரும் எங்களுக்கு தொந்தரவு, நீங்கள் வந்ததற்குப் பின்னரும் எங்களுக்கு தொந்தரவு அளிக்கப்படுகிறது, இதனுடைய விடிவு காலம்தான் எப்போதுஎன.

இதற்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னார்கள்,

விரைவில் உங்களது எதிரிகளை அல்லாஹ் அழிப்பான், பூமியில் உங்களை ஆட்சியாளர்களாக ஆக்குவான், நீங்கள் எப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அல்லாஹ் பார்ப்பான்என்று. (அல்குர்ஆன் 7:129)

எந்த நாட்டில் முஸ்லிம்கள் கொடுமை படுத்தப்படுகிறார்களோ, ஒரு காலத்தில் அந்த நாட்டை ஆட்சி செய்பவர்களாக, ஆதிக்கம் உடையவர்களாக, அதிகாரம் உடையவர்களாக முஸ்லிம்கள் இருந்தார்கள்.

எப்போது அவர்களது அமல்கள் பாழாகிவிடுமோ, எப்போது அவர்களது செயல்கள் அல்லாஹுடைய மார்க்கத்திற்கு முரணாக அமைந்துவிடுமோ, அப்போது அல்லாஹ் எதிரிகளை அவர்கள் மீது சாட்டினான்.

இன்றைய சூழ்நிலை முஸ்லிம்களுக்கு ஒவ்வொரு நாளும் பாதகமாக மாறிக்கொண்டு வருவதை பார்க்கும்போது நம்மில் யாரும் பலவீனப்பட்டுவிட வேண்டாம், தைரியம் இழந்து விட வேண்டாம்.

அல்லாஹுவின் மார்க்கத்தின் பக்கம் நாம் திரும்புவதற்காக அல்லாஹ் கொடுக்கக்கூடிய ஒரு சோதனை என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹுடைய வேதத்தை நிலை நாட்டுவது கொண்டு, அல்லாஹுவின் வேதத்தை பற்றிப் பிடிப்பது கொண்டு, நமக்கு மத்தியில் தவ்ஹீதின் அடிப்படையில் அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்கி வழிபட்டு, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை நமக்கு நிலை நிறுத்துவது கொண்டு மட்டும்தான் நம்முடைய உறுதியைநம்முடைய பலத்தை அல்லாஹ் மீட்டுக் கொடுப்பான்.

நம்முடைய உள்ளத்தில் வீரத்தை அல்லாஹ் கொடுப்பான். நம்முடைய எதிரிகளின் உள்ளங்களில் அல்லாஹ் பயத்தைப் போடுவான்.

அற்ப காரணங்களுக்காக கருத்து வேற்றுமை கொள்வதை கண்டிப்பாக முஸ்லிம்கள் தடுக்க வேண்டும். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சொல்வதைப் பாருங்கள்,

وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ

மேலும், நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்ப்படியுங்கள். (உங்களுக்குள் ஒற்றுமையாயிருங்கள்.) உங்களுக்குள் தர்க்கித்துக் கொள்ளாதீர்கள். அவ்வாறாயின், நீங்கள் தைரியத்தை இழந்து, உங்கள் ஆற்றல் போய்விடும். ஆகவே, நீங்கள் (சிரமங்களைச் சகித்துக் கொண்டு) பொறுமையாக இருங்கள். நிச்சயமாக அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.(அல்குர்ஆன் 8:46)

இந்த சோதனையின் மறுபக்கத்தை புரிந்து கொள்ள வேண்டும். இப்படிப்பட்ட சோதனைகள் முஸ்லிம்களின் செயல்களின் காரணமாகத்தான் என்பதையும், அல்லாஹுவின் வேதத்தை விட்டும், நபியின் சுன்னாவை விட்டும் நாம் தூரமாகி விட்டனால்தான் என்பதையும் உணர வேண்டும்.

உஹது போர் இதற்கு மிகப்பெரிய படிப்பினை.

உஹது போரில் ஏற்பட்ட சோதனையின்போது இந்த சோதனை எப்படி வந்தது என கேட்டீர்கள். அந்த சோதனையின் காரணம் நீங்கள்தான் என அல்லாஹ் சொல்கின்றான். (அல்குர்ஆன் 3:165)

நபித்தோழர்கள் சிலருடைய மாறுபாடு, அல்லாஹுவின் கட்டளைக்கு சில நிமிடம் மாறு செய்தார்கள், அல்லாஹுடைய தூதர் உயிரோடு இருக்க, இந்த உம்மத்தின் மூத்த சமுதாயம் உயிரோடு இருக்க, அப்படிப்பட்ட ஒரு சோதனை அவர்களுக்கு நிகழ்ந்தது என்றால், ஏனிந்த வசனத்தை நாம் படிப்பினையாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

இன்று ஒரு இடத்தில் ஒரு முஸ்லிமுக்கு அநியாயம் நிகழ்த்தப்படுகின்றது என்றால் அது என்னுடைய பாவத்தின் காரணமாக இருக்கலாம்.

அல்லாஹு சொல்கின்றான்

وَمَا أَصَابَكُمْ مِنْ مُصِيبَةٍ فَبِمَا كَسَبَتْ أَيْدِيكُمْ وَيَعْفُو عَنْ كَثِيرٍ

முஃமின்களே, உங்களுக்கு ஏற்படக்கூடிய சோதனை உங்களது கரங்களால் தேடிக்கொண்டதாகும். இன்னும் நிறைய குற்றங்களை அல்லாஹ் மன்னித்து விடுகின்றான். (அல்குர்ஆன் 42 : 30)

நம்முடைய எல்லா பாவங்களுக்கும் தன்டனையை தீவிரப்படுத்துவதாக இருந்தால் நம்மில் யாரும் உயிரோடு இருக்க மாட்டார்கள்.

அல்லாஹ் ரப்பு ஆலமீன் நம்முடைய பாவங்கள் பெரும்பாலானவற்றை மன்னித்து விடுகின்றான். சில குற்றங்களுக்கு ரப்புல் ஆலமீன் தன்டனையைக் கொடுத்து மார்க்கத்தின் பக்கம் நம்மை திரும்ப வைக்கின்றான்.

ஆகவே, ஒவ்வொரு முஸ்லிமும் இது போன்ற தருனங்களில் அல்லாஹுவின் பக்கம் திரும்பவதையும், தங்களது வணக்க வழிபாடுகளை சரி செய்வதையும், தன்னுடைய மார்க்கப் பற்றை அதிகப்படுத்துவதையும், தன்னுடைய குடும்பத்தார்களுக்கு நன்மையை ஏவுவதையும், தீமையை தடுப்பதையும் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.

இதைக் கொன்டுதான் அல்லாஹுடைய உதவியை நாம் அடைய முடியும். அல்லாஹுடைய உதவி என்பது, அல்லாஹுடைய மார்க்கத்தை செயல்படுத்துவதைக் கொண்டு இருக்கிறது.

பெரும்பாவங்கள், சிறுபாவங்கள், அனாச்சாரங்கள், மார்க்கத்திற்கு முரணான செயல்கள் அனைத்திலிருந்தும் கண்டிப்பாக ஒவ்வொரு முஸ்லிமும் விலகிக்கொள்ள வேண்டிய முக்கியமான, கட்டாயமான நிலை இது. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பாதுகாப்பானாக!

அது போன்று இன்னொரு பக்கம் அழைப்புப் பணி. மாற்றார்கள் இஸ்லாத்தை எதிர்க்கிறார்களே, இஸ்லாத்தின் மீது அவதூறு சொல்கிறார்களே, முஸ்லிம்களைப் பற்றி அவதூறு பேசுகிறார்களே, அதற்கு முக்கியமான காரணம் என்னவென்றால், முஸ்லிம்கள் தங்களது மார்க்கத்தை அவர்களுக்கு எடுத்து சொல்லாமல் இருப்பது, தங்கள் தீனைப் பற்றி பொய்யான பிரச்சாரங்கள் நடக்கின்றது.

இது எந்தளவுக்கு சமுதாயத்தில் பல வழிகளில் பரப்பப்படுகின்றனவோ, அதில் ஒரு சில அளவுக்காவது இஸ்லாத்தை பற்றி சரியான பிரச்சாரம் நம் மக்களால் மேற்கொள்ளப்படுகிறதா? என யோசித்துப் பாருங்கள்.

நம்முடைய அன்றாட தேவைகளுக்காக எவ்வளவு சிரமப்படுகின்றோம். அல்லாஹுடைய தீனைஅல்லாஹுடைய அடியார்களுக்கு கொண்டு சேர்ப்பதற்கு ஏன் முயற்சிப்பதில்லை?

இந்த அழைப்புப்பணியில் நம்முடைய வெற்றியின் ரகசியத்தை அல்லாஹ் வைத்திருக்கின்றான். அல்லாஹுடைய உதவியின் ரகசியத்தை அல்லாஹ் இதில் வைத்திருக்கின்றான்.

அல்லாஹ் எனக்கு உங்களுக்கும் அல்லாஹுடைய தீனை பின்பற்றி நடப்பதற்குரிய பாக்கியத்தை தருவானாக! நம்முடைய முஸ்லிம் சமுதயத்திற்கு அல்லாஹ் உதவுவானாக!

பலவீனமான முஸ்லிம் சமுதாயத்திற்கு அல்லாஹ் வெற்றியை தருவானாக! அல்லாஹ் நம்மை அவனது வேதத்தின் படியும், அவனது சுன்னாவின் படியும் வாழந்து, தீனுக்காக பணி செய்யக்கூடிய நற்பாக்கியத்தை நமக்கு தந்தருள்வானாக! ஆமீன்.

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ أَبِي بَكْرٍ، حَدَّثَنَا مُغِيرَةُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ سَعِيدٍ، عَنْ نَافِعٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، قَالَ: أَمَّرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ مُؤْتَةَ زَيْدَ بْنَ حَارِثَةَ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنْ قُتِلَ زَيْدٌ فَجَعْفَرٌ، وَإِنْ قُتِلَ جَعْفَرٌ فَعَبْدُ اللَّهِ بْنُ رَوَاحَةَ» قَالَ عَبْدُ اللَّهِ: كُنْتُ فِيهِمْ فِي تِلْكَ الغَزْوَةِ، فَالْتَمَسْنَا جَعْفَرَ بْنَ أَبِي طَالِبٍ، فَوَجَدْنَاهُ فِي القَتْلَى، وَوَجَدْنَا مَا فِي جَسَدِهِ بِضْعًا وَتِسْعِينَ، مِنْ طَعْنَةٍ وَرَمْيَةٍ " (صحيح البخاري- 4261)

குறிப்பு 2)

حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا مَعْمَرٌ، عَنْ هَمَّامِ بْنِ مُنَبِّهٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كُلُّ كَلْمٍ يُكْلَمُهُ [ص:57] المُسْلِمُ فِي سَبِيلِ اللَّهِ، يَكُونُ يَوْمَ القِيَامَةِ كَهَيْئَتِهَا، إِذْ طُعِنَتْ، تَفَجَّرُ دَمًا، اللَّوْنُ لَوْنُ الدَّمِ، وَالعَرْفُ عَرْفُ المِسْكِ» (صحيح البخاري- 237)

குறிப்பு 3)

حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلاَبَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَدِمَ أُنَاسٌ مِنْ عُكْلٍ أَوْ عُرَيْنَةَ، فَاجْتَوَوْا المَدِينَةَ «فَأَمَرَهُمُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، بِلِقَاحٍ، وَأَنْ يَشْرَبُوا مِنْ أَبْوَالِهَا وَأَلْبَانِهَا» فَانْطَلَقُوا، فَلَمَّا صَحُّوا، قَتَلُوا رَاعِيَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَاسْتَاقُوا النَّعَمَ، فَجَاءَ الخَبَرُ فِي أَوَّلِ النَّهَارِ، فَبَعَثَ فِي آثَارِهِمْ، فَلَمَّا ارْتَفَعَ النَّهَارُ جِيءَ بِهِمْ، «فَأَمَرَ فَقَطَعَ أَيْدِيَهُمْ وَأَرْجُلَهُمْ، وَسُمِرَتْ أَعْيُنُهُمْ، وَأُلْقُوا فِي الحَرَّةِ، يَسْتَسْقُونَ فَلاَ يُسْقَوْنَ». قَالَ أَبُو قِلاَبَةَ: «فَهَؤُلاَءِ سَرَقُوا وَقَتَلُوا، وَكَفَرُوا بَعْدَ إِيمَانِهِمْ، وَحَارَبُوا اللَّهَ وَرَسُولَهُ» (صحيح البخاري- 233)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/