அந்நாளின் அழைப்பு!! | Tamil Bayan - 377
بسم الله الرّحمن الرّحيم
அந்நாளின் அழைப்பு
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அவர்களுடைய தோழர்கள் மீதும், ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக ஆரம்பம் செய்கின்றேன்.
அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு அல்லாஹ்வின் அச்சத்தை தனிமையிலும், மக்களுக்கு மத்தியிலும் வாழ்க்கையின் எல்லா சூழ்நிலைகளிலும் கடைபிடிக்குமாறு எனக்கும் உங்களுக்கும் முதலாவதாக அறிவுரை கூறுகின்றேன்.
கண்ணியத்திற்குரியவர்களே! எந்த ஒரு பேச்சு நமக்கு அல்லாஹ்வின் மீது நம்பிக்கையை ஏற்படுத்துமோ, எந்த ஒன்றை பற்றி சிந்திப்பது நமது ஈமானை அதிகப்படுத்துமோ, எந்த ஒன்றைப் பற்றி சிந்திப்பது நமது சொர்க்க வாழ்க்கைக்கு வழிவகுக்குமோ, நரகத்தை விட்டு நம்மை பாதுகாக்குமோ, அப்படிப்பட்ட பேச்சை, அப்படிப்பட்ட செய்தியை வாழ்க்கையில் அதிகம் நினைவு கூறுவது நம்மீது இன்றியமையாத ஒரு கடமையாகும்.
ஆகவேதான் அல்லாஹ் தபாரக வதஆலா குர்ஆனுடைய பக்கங்களில் அந்த ஈமானை அதிகரிக்கக்கூடிய, ஈமானை வலுப்படுத்தக்கூடிய அந்த செய்தியை நமக்கு தொடர்ச்சியாக ஒரு செய்திக்கு பின் ஒரு செய்தியாக நமக்கு மாறிமாறி பல வசனங்களில் பல தோற்றங்களில் பல விஷயங்களை கூறிக் கொண்டே இருக்கின்றான்.
அதுதான் மறுமையைப் பற்றிய செய்தி. நாம் எழுப்பப்படுகின்ற அந்த நாளைப் பற்றிய செய்தி. கப்ரிலிருந்து நமக்கு உயிர் கொடுக்கப்பட்டு அல்லாஹ்வை நோக்கி மஹ்ஷரை நோக்கி நாம் எழுந்து செல்கின்ற அந்த செய்தி.
ஏனைய செய்திகளை போன்று ஒருமுறை பேசி விட்டு அப்படியே விட்டு விடுகின்ற ஒரு சாதாரணமான செய்தி அல்ல. அல்லது மறக்கின்ற செய்தி அல்ல. மனிதன் மறந்து விடுவான் என்பதற்காகத்தான் அல்லாஹ் அவனுடைய புத்தகத்திலே மறுமையைப் பற்றிய அந்த ஈமானை தனது ஈமானோடு சேர்த்தே சொல்கின்றான்.
إِنْ كُنْتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ
எந்த ஒரு கட்டளையை கூறுவதாக இருந்தாலும் உங்களுக்கு அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை இருக்குமானால் நீங்கள் இதை கடைபிடியுங்கள் என்று அல்லாஹ் கூறுகின்றான். (அல்குர்ஆன் 4 : 59)
அந்த மறுமை நாளின் காட்சிகளை அல்லாஹு தஆலா அல்குர்ஆனில் பல வகைகளில் பல வசனங்களில் பல தோற்றங்களில் நமக்கு விவரிக்கின்றான்.
1. அந்த மறுமை நாளின் பெயர்களிலே ஒன்றுதான் يَوْمَ التَّنَادِ
அல்லாஹ் குர்ஆனில் சொல்வதைப் பாருங்கள்;
وَيَاقَوْمِ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ يَوْمَ التَّنَادِ
"என்னுடைய மக்களே! உங்களை(க் கூலி கொடுக்க) அழைக்கப்படும் (மறுமை) நாளைப் பற்றியும் நான்பயப்படுகின்றேன். (அல்குர்ஆன் 40 : 32)
அந்நாளில் மக்கள் பல பெயர்களைக் கொண்டு பல தன்மைகளைக் கொண்டு பல அமல்களைக் கொண்டு அழைக்கப்படுவார்கள்.
அழைக்கப்படுகின்ற அந்த நாளைக்கு பல பெயர்களை கூறுகிறான்.
2. அதில் ஒன்று. اليوم الآخر இந்த நாளைக்கு அடுத்த நாள் அவ்வளவுதான்.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَلْتَنْظُرْ نَفْسٌ مَا قَدَّمَتْ لِغَدٍ وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (மெய்யாகவே) அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். ஒவ்வொரு மனிதனும் (மறுமை என்னும்) நாளைய தினத்திற்காக, தான் எதைத் தயார்படுத்தி வைக்கிறான் என்பதைக் கவனித்து கொள்ளட்டும், நீங்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து கொள்ளுங்கள். நிச்சயமாக அல்லாஹ், நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 59 : 18)
அவனுக்கு அடுத்துள்ள நாள் மறுமை நாள். கப்ரிலிருந்து எழுப்பப்படுகின்ற நாள். மஹ்ஷரில் மறுமை நாளை நாம் பார்க்கும்போது தான் வாழ்ந்த நாளையும் கப்ரிலே கழித்த நாளையும் அப்படித்தான் அவன் எண்ணுவான்.
يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا
(நபியே!) மறுமையைப் பற்றி, அது எப்பொழுது வருமென உங்களிடம் அவர்கள் கேட்கின்றனர். (அல்குர்ஆன் 79 : 42)
يَسْأَلُونَكَ عَنِ السَّاعَةِ أَيَّانَ مُرْسَاهَا قُلْ إِنَّمَا عِلْمُهَا عِنْدَ رَبِّي لَا يُجَلِّيهَا لِوَقْتِهَا إِلَّا هُوَ ثَقُلَتْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَا تَأْتِيكُمْ إِلَّا بَغْتَةً يَسْأَلُونَكَ كَأَنَّكَ حَفِيٌّ عَنْهَا قُلْ إِنَّمَا عِلْمُهَا عِنْدَ اللَّهِ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ
(நபியே!) இறுதி நாளைப் பற்றி அது எப்பொழுது வரும் என அவர்கள் உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘அதன் அறிவு என் இறைவனிடத்தில்தான் இருக்கிறது. அது வரும் நேரத்தை அவனைத் தவிர மற்றெவரும் தெளிவாக்க முடியாது. (அது சமயம்) வானங்களிலும் பூமியிலும் மகத்தான சம்பவங்கள் நிகழும். திடீரென்றே தவிர (அது) உங்களிடம் வராது. அதை முற்றிலும் அறிந்து கொண்டவராக உம்மை அவர்கள் எண்ணி, (அதைப் பற்றி) உம்மிடம் கேட்கிறார்கள். (அதற்கு) நீர் கூறுவீராக: ‘‘அதன் அறிவு அல்லாஹ்விடத்தில்தான் இருக்கிறது. மனிதரில் பெரும்பாலானவர்கள் இதை அறிய மாட்டார்கள்.'' (அல்குர்ஆன் 7 : 187)
كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوا إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَاهَا
அதனை அவர்கள் கண்ணால் காணும் நாளில், மாலையிலோ அல்லது காலையிலோ ஒரு சொற்ப நேரமேயன்றி (இவ்வுலகில்) தங்கியிருக்கவில்லை என்றே அவர்களுக்குத் தோன்றும். (அல்குர்ஆன் 79 : 46)
قَالَ كَمْ لَبِثْتُمْ فِي الْأَرْضِ عَدَدَ سِنِينَ (112) قَالُوا لَبِثْنَا يَوْمًا أَوْ بَعْضَ يَوْمٍ فَاسْأَلِ الْعَادِّينَ
‘‘ நீங்கள் பூமியில் எத்தனை வருடங்கள் இருந்தீர்கள்?'' என அவன் கேட்பான். அதற்கவர்கள் ‘‘ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிது பாகம் தங்கியிருந்திருப்போம். (இதைப்பற்றி) கணக்கு வைத்திருப்பவர்களை நீ கேட்பாயாக!'' எனக் கூறுவார்கள். (அல்குர்ஆன் 23 : 112,113)
எனவேதான் மறுமையின் ஒரு பெயர் اليوم الآخر அடுத்த நாள் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான்.
3. அது போன்று மறுமைக்கு يوم القيامة என்று சொல்லப்படும். மக்கள் நிற்க்கின்ற நாள். எவ்வளவு நாள் நிற்ப்பார்கள்? நின்று கொண்டே இருப்பார்கள்.
يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ
அந்நாளில், மனிதர்கள் அனைவருமே உலகத்தாரின் இறைவன் முன் விசாரணைக்காக) நின்று கொண்டிருப்பார்கள். (அல்குர்ஆன் 83 : 6)
மறுமையின் ஒரு நாள் என்பது 50 ஆயிரம் ஆண்டிற்கு சமமானது. இப்படி எத்தனை நாள் அவர்கள் நிற்பார்கள் என்பது தெரியாது.
கண்ணியத்திற்குரியவர்களே! அப்படிப்பட்ட பெயர்களில் ஒன்றுதான் يَوْمُ التَّنَادِ அழைக்கப்படுகின்ற நாள். அல்லாஹ் ஒரு நாளைக்கு இப்படி பெயர் வைக்கிறான் அழைக்கப்படுகின்ற நாள் என்று. அப்படியானால் அந்த நாளிலே அழைப்புகள் பல விதமாக இருக்கும் என்று பொருள்.
அந்த நாளிலே அழைக்கப்படுபவர்கள் பல விதமாக இருப்பார்கள். அழைக்கப்படுகின்ற விதமும் பலவகையாக இருக்கும். சிலர் கண்ணியமாக அழைக்கப்படுவார்கள். சிலர் அழைக்கப்படுகின்ற விதத்திலேயே கேவலம் சூழ்ந்துக் கொள்ளும்.
நல்லவர்கள் அழைக்கப்படுவார்கள், பாவிகள் அழைக்கப்படுவார்கள், அல்லாஹ் அழைப்பான், வானவர்களும் அழைப்பார்கள், சொர்கம் அழைக்கும், நரகமும் அழைக்கும் அதற்குரியவர்களை. அழைக்கப்படுகிறவர்களும் பல விதம். அழைப்பவர்களும் பலபேர்.
அல்லாஹ்வும் அழைப்பான்.
أَيْنَ الْمُتَحَابُّونَ بِجَلَالِي
எனக்காக "நேசம் கொண்டவர்கள் எங்கே? எனக்காக இரவு விழித்தவர்கள் எங்கே? எனக்காக ஒருவருக்கொருவர் உதவி செய்து கொண்டவர்கள் எங்கே? என்று அல்லாஹ்வும் அழைப்பான். (1)
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 2566.
நபிமார்களை அல்லாஹ் அழைப்பான்; ஸாலிஹீன்களை அல்லாஹ் அழைப்பான்; இறையச்சமுடையவர்களை அல்லாஹ் அழைப்பான்; வலதுபக்கம் செல்பவர்களை அல்லாஹ் அழைப்பான்; ஃபிர்தௌசிற்கு சொந்தக்காரர்களை அல்லாஹ் அழைப்பான்; இப்படி கண்ணியத்திற்குரிய நல்லவர்களை அல்லாஹ் கண்ணியப்படுத்தி அழைப்பான். அர்ஷுடைய நிழலுக்கு தகுதியானவர்கள் எங்கே? என்று அல்லாஹ் அழைப்பான்.
வானவர்களும் அழைப்பார்கள். எந்த வானவர்கள் இந்த துன்யாவில் நன்மையான செயலுக்கு சாட்சியாக இருந்தார்களோ? எந்த வானவர்கள் நல்லவர்களின் அந்த அமல்களுக்கு சாட்சியாக இருந்தார்கள் அந்த நல்லவர்களை பெயர் கூறி அழைப்பார்கள். அவர்களை கண்ணியப்படுத்துவார்கள். ஸலாம் சொல்வார்கள்.
சொர்க்கமும் அழைக்கும்; நரகமும் அழைக்கும். நரகம் எப்படி அழைக்கும்?
أَيْنَ الْجَبَّارُونَ؟ أَيْنَ الْمُتَكَبِّرُونَ؟
பெருமை அடித்தவர்கள் எங்கே? அநியாயம் செய்தவர்கள் எங்கே? மக்களின் மீது அக்கிரமம் செய்தவர்கள் அநியாயம் செய்தவர்கள் எங்கே? பெருமை கொண்டவர்கள் எங்கே? என்று நரகமும் அழைக்கும். (2)
அறிவிப்பாளர்: இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 2788.
இப்படி அழைக்கப்படுகின்ற விதமும் பல வகையாக இருக்கும். அழைப்பவரும் பலவிதமாக இருப்பார்கள்.
அல்லாஹ் சொல்கின்றான் பாருங்கள்;
يَوْمَ نَدْعُو كُلَّ أُنَاسٍ بِإِمَامِهِمْ فَمَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَأُولَئِكَ يَقْرَءُونَ كِتَابَهُمْ وَلَا يُظْلَمُونَ فَتِيلًا
ஒவ்வொரு மனிதனையும் அவர்களின் தலைவர்களுடன் (விசாரணைக்காக) நாம் அழைக்கும் நாளில், அவர்களின் (தினசரி குறிப்புப்) புத்தகம் அவர்களுடைய வலது கையில் கொடுக்கப்பட்டால் அவர்கள் தங்கள் (அதே தினசரி குறிப்புப்) புத்தகத்தை (மிக்க மகிழ்ச்சியோடு) வாசிப்பார்கள். (அவர்களுடைய கூலியில்) ஓர் நூல் அளவு (குறைத்து)ம் அநியாயம் செய்யப்படமாட்டார்கள். (அல்குர்ஆன் 17 : 71)
இந்த இடத்தில் நாம் சிந்திக்க வேண்டும். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பின்பற்றி, அவர்களுடைய வழிகாட்டுதல்படி நடந்திருந்தால், அவர்கள் தான் உண்மையான தலைவர்.
أيْنَ أصْحاَبُ مُحَمَّدٍ,أيْنَ أتْباَعُ مُحمَّدٍ
முஹம்மதுடைய தோழர்கள் எங்கே? முஹம்மதை பின்பற்றியவர்கள் எங்கே? என்று அல்லாஹ் அழைப்பான் நபிமார்களைப் பின்பற்றியவர்கள் ஒவ்வொரு நபியை பின்பற்றிவர்களை அல்லாஹ் அந்த நபியுடைய பெயரோடு அழைப்பான்ز
யார் அல்லாஹ்வின் கட்டளைக்கு மாற்றமாக, தூதருடைய கட்டளைக்கு மாற்றமாக தங்களுக்கு ஒரு வழிகாட்டியை, தங்களுக்கு ஒரு தலைவரை எற்படுத்தி மார்க்கத்திற்கு முரணான காரியங்களில் அவர்களை பின்பற்றினார்களோ அவர்களை அவர்களுடைய பாவியான தலைவர்களின் பெயரைக் கொண்டு அழைக்கப்படும்.
அவர்கள் எங்கு அழைக்கப்படுவார்கள்? யார் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்தார்களோ அவர்களுடைய இருப்பிடம் எதுவோ அதை நோக்கி அழைக்கப்படுவார்கள்.
அன்பிற்குரியவர்களே! இந்த அழைப்பு நாளை அந்த இறைதூதர்கள் எந்த அளவுக்கு பறப்படுகிறார்கள் என்றால் அவர்கள் தன் சமுதாய மக்களுக்கு கூறினார்கள்.
وَيَاقَوْمِ إِنِّي أَخَافُ عَلَيْكُمْ يَوْمَ التَّنَادِ
அழைக்கப்படுகின்ற அந்த நாளின் அழைப்பை உங்கள் மீது பயப்படுகிறேன் அந்த நாளின் திடுக்கத்தை நான் உங்களுக்கு பயப்படுகிறேன். (அல்குர்ஆன் 40 : 32)
நம்முடைய அமல்கள் நம்மை எந்த கூட்டத்தில் சேர்க்கும் என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டிய நிலையில் இருக்கிறோம்.
நம்முடைய அமல்கள் நம்முடைய குணங்கள் நம்முடைய பழக்க வழக்கங்கள் நாம் யாரை பின்பற்றுகிறோம் நம்முடைய செயல்பாடு எப்படி இருக்கிறது? இதை வைத்துதான் அங்கே அழைக்கப்படுவோம்.
சகோதர்களே! அல்லாஹ் சுபஹானஹு தஆலா அழைக்கப்படுகின்ற பல விதங்களை அவனுடைய புத்தகம் அல்குர்ஆனிலே சொல்லிக்காட்டுகிறான். ரஸுல் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள்.
சொர்க்கவாசிகள் அழைப்பார்கள்; சொர்க்கவாசிகள் ஒருவர் மற்றவரை அழைப்பார்கள். நல்லவர்கள் அவர்களது நல்ல நண்பர்களை அழைப்பார்கள். அதுபோன்று நரகத்திலே சென்ற பாவிகள் ஒருவர் மற்றவரை அழைப்பார்கள்.
அல்லாஹ் சுபஹானஹு வத ஆலா சொர்க்கத்திற்கு செல்லும் போது சொர்க்கவாசிகளை அழைத்து கூறுவான்; (3)
يَا أَهْلَ الجَنَّةِ خُلُودٌ فَلاَ مَوْتَ، وَيَا أَهْلَ النَّارِ خُلُودٌ فَلاَ مَوْتَ
இது ஒரு பயங்கரமான அழைப்பு. யாருக்கு சொர்கம் முடிவு செய்யப்பட்டதோ அவர்களுக்கு மிக மகிழ்ச்சியான அழைப்பு. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். யாருக்கு நரகம் முடிவு செய்யப்பட்டதோ அவர்களுக்கு இது மிக பயங்கரமான அழைப்பு.
அல்லாஹ் சொல்வான்; சொர்க்கவாசிகளே! உங்களுக்கு இந்த சொர்க்கத்திலே நிரந்தர வாழ்க்கை இருக்கிறது. உங்களுக்கு இங்கே மரணம் இல்லை. இந்த செய்தியை அவர்கள் கேட்கும் போது கிடைக்கும் மகிழ்ச்சி. இரண்டாவது அந்த சொர்கத்தில் நிரந்தரமாக தங்க போகிறோம் மரணம் இல்லை என்ற மகிழ்ச்சி. அந்த இரட்டிப்பு மகிழ்ச்சியோடு செல்வார்கள்.
பாவிகள் நரகத்திற்கு செல்லும் போது அல்லாஹ் அவர்களை அழைப்பான்.
وَيَا أَهْلَ النَّارِ خُلُودٌ فَلاَ مَوْتَ
நரகவாசிகளே! உங்களுக்கு இந்த நகரத்திலே நிரந்தரம். இங்கே உங்களுக்கு மரணம் கிடையாது. (3)
அறிவிப்பாளர்: அபூ சயீத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 4730.
நரகம் முடிவு செய்யப்பட்ட துக்கத்தால் நரகவாசிகள் வருந்திக் கொண்டிருப்பார்கள். தங்கள் விரல்களைக் கடிக்க ஆரம்பித்து துப்புவார்கள்.
وَيَوْمَ يَعَضُّ الظَّالِمُ عَلَى يَدَيْهِ يَقُولُ يَالَيْتَنِي اتَّخَذْتُ مَعَ الرَّسُولِ سَبِيلًا
அந்நாளில் அநியாயக்காரன் தன் இரு கைகளையும் கடித்துக் கொண்டு ‘‘நம் தூதருடன் நானும் நேரான வழியைப் பின்பற்றிச் சென்றிருக்க வேண்டாமா?'' என்று கூறுவான். (அல்குர்ஆன் 25 : 27)
பாவி எப்படி கத்துவான்.
وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَالَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ (25) وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ (26) يَالَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ
எவனுடைய (செயல்கள் எழுதப்பட்ட) ஏடு அவனுடைய இடது கையில் கொடுக்கப்பெறுவானோ அவன், ‘‘என் ஏடு எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டாமா? என்று கூறுவான். மேலும், என் கணக்கை இன்னதென்று நான் அறியாதிருக்க வேண்டுமே! நான் இறந்தபொழுதே என் காரியம் முடிவு பெற்றிருக்க வேண்டுமே! (அல்குர்ஆன் 69 : 25-27)
மேலும் கூறுவான்;
يَاحَسْرَتَا
يَاوَيْلَتَا
எனக்கு ஏற்பட்ட நாசமே! எனக்கு ஏற்பட்ட கேவலமே.! என்று அவன் அழுது கொண்டிருப்பான் (அல்குர்ஆன் 5 : 31, 39 : 56)
لَا تَدْعُوا الْيَوْمَ ثُبُورًا وَاحِدًا وَادْعُوا ثُبُورًا كَثِيرًا
(ஆகவே, அந்நேரத்தில் அவர்களை நோக்கி,) ‘‘இன்றைய தினம் நீங்கள் ஓர் அழிவை மாத்திரம் கேட்காதீர்கள். பல அழிவுகளை கேட்டுக் கொள்ளுங்கள்'' (என்று கூறப்படும்). (அல்குர்ஆன் 25 : 24)
எத்தனை முறை நீங்கள் அழைத்தாலும் சரி அந்த அழிவுகள் உங்களை சூழ்ந்து கொள்ளும். அல்லாஹ் பாதுகாப்பானாக! அவர்களுக்குச் சொல்லப்படும்; நீங்கள் இந்த நரகத்தில் நிரந்தரமாக இருக்கப் போகிறீர்கள்.
அங்கே உங்களுக்கு மௌத் கிடையாது. மௌத்திற்கு மௌத் வந்துவிடும். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அங்கே மௌத்தை ஆட்டின் உருவில் கொண்டுவந்து அந்த ஆட்டை அறுத்து விடுவான்.
சொர்க்கவாசிகளுக்கு அப்பொழுதுதான் சொல்லப்படும். சொர்க்கவாசிகளே! உங்களுக்கு நிரந்தர மௌத் கிடையாது. நரகவாசிகளுக்கு சொல்லப்படும் நரகவாசிகளே! உங்களுக்கு நிரந்தர மௌத் கிடையாது. (3)
அறிவிப்பாளர்: அபூ சயீத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 4730.
அல்லாஹ் சுபஹானஹு தஆலா அந்த நாளின் அழைப்பைப் பற்றி சொல்கிறான்;
وَاسْتَمِعْ يَوْمَ يُنَادِ الْمُنَادِ مِنْ مَكَانٍ قَرِيبٍ
(நபியே!) நீங்கள் செவிமடுத்துக் கேளுங்கள். (சமாதிகளின்) சமீபத்திலிருந்து (கொண்டு "மரணித்தவர்களே! எழும்புங்கள்" என்று) அழைப்பவர் அழைக்கும் நாளில், (அல்குர்ஆன் 50 : 41)
يَوْمَ يَسْمَعُونَ الصَّيْحَةَ بِالْحَقِّ ذَلِكَ يَوْمُ الْخُرُوجِ
(மலக்குகள் அவர்களை விரட்டி ஓட்டும்) பெரும் சப்தத்தை மெய்யாகவே அவர்கள் கேட்பார்கள். அதுதான் (மரணித்தவர்கள் சமாதியிலிருந்து) வெளிப்படும் நாள். (அல்குர்ஆன் 50 : 42)
கணித்திற்குரியவர்களே! அல்லாஹ் சொல்கின்றான்;
يَوْمَ هُمْ بَارِزُونَ لَا يَخْفَى عَلَى اللَّهِ مِنْهُمْ شَيْءٌ لِمَنِ الْمُلْكُ الْيَوْمَ لِلَّهِ الْوَاحِدِ الْقَهَّارِ
(மரணித்த) அவர்கள் அந்நாளில் (சமாதிகளிலிருந்து) வெளிப்பட்டு(த் தங்கள் இறைவனின்) முன் வந்து நிற்பார்கள். அவர்கள் செய்த ஒரு விஷயமும் அல்லாஹ்வுக்கு மறைந்து விடாது. (அவர்களை நோக்கி,) இன்றைய தினம், ‘‘எவருடைய ஆட்சி? (என்று கேட்டு, அனைவரையும்) அடக்கி ஆளும் ஒருவனாகிய அந்த அல்லாஹ்வுக்குரியதே!'' (என்று பதில் கூறப்படும்). (அல்குர்ஆன் 40 : 16)
அல்லாஹ் ரப்புல் ஆலமீனுக்கு முன்னால் உயரமானவர் குட்டையானவர் என்ற பாகுபாடும் கிடையாது. வெள்ளையர் கருப்பர் என்ற எந்த பாகுபாடும் கிடையாது. யாரும் அல்லாஹ்வின் பார்வையில் இருந்து தப்பி விட முடியாது.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்;
أَنَّ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «[ص:110] تُحْشَرُونَ حُفَاةً عُرَاةً غُرْلًا» قَالَتْ عَائِشَةُ: فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، الرِّجَالُ وَالنِّسَاءُ يَنْظُرُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ؟ فَقَالَ: «الأَمْرُ أَشَدُّ مِنْ أَنْ يُهِمَّهُمْ ذَاكِ» (صحيح البخاري6527)
மக்கள் எழுப்பப்படுவார்கள். அவர்களுக்கு அங்கே செருப்பு இருக்காது அவர்களுக்கு ஆடை இருக்காது. அவர்கள் கத்னா செய்திருக்கப்பட மாட்டார்கள். இப்படிப்பட்ட ஒரு நிலையிலே அவர்கள் எழுப்பப்படுவார்கள்.
இந்த செய்தியை கேட்ட ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் மிக நாணமுற்று பயந்து கேட்கிறார்கள் அல்லாஹ்வின் தூதரே! ஆண்களும் பெண்களுமா? இப்படி எழுப்பப்படுவார்கள். அவர்களில் சிலர் சிலரை பார்க்க மாட்டார்களா?
அதற்க்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; காரியம் சாதாரணமானதல்ல. ஒருவர் ஒருவரை பார்க்க முடியாத அளவிற்கு நிலைமை மோசமானதாக இருக்கும். அவர்கள் பார்வையை தலைக்கு மேலே தூக்கினார்கள் என்றால் அப்படியே தூக்கிய விதத்திலேயே இருக்கும். கீழே இறக்கினார்கள் என்றால் அப்படியே கீழே தாழ்த்திய விதத்தில் இருக்கும். வலது பக்கமும் பார்வை திரும்பாது. இடது பக்கமும் பார்வை திரும்பாது. தனக்கு அருகிலே யார் இருக்கிறார் என்பதையும் அவர்கள் கண்டுகொள்ள முடியாது.
நூல்: புகாரி, எண்: 6527.
அப்படிப்பட்ட அந்த நாளிலே அல்லாஹ் ஒரு அழைப்பை கொடுப்பான். அல்லாஹ்வின் அழைப்பு சாதாரணமானதல்ல. அல்லாஹ் கேட்பான்.
لِمَنِ المُلْكُ اليَوْمُ
இன்றைய நாளிலே ஆட்சி யாருக்கு சொந்தமானது? இன்றைய நாளிலே என்னை தவிர வேறு அரசர் இருக்கிறார்களா? எங்கே உலகத்தின் அரசர்கள்? என்று.
யாரும் பேசமாட்டார்கள்; அமைதியாக இருப்பார்கள். அல்லாஹ் கூறுவான்;
لَلّٰهِ الْوَاحِدِ القهَّار
அடக்கி ஆள்பவனாக இருக்கக்கூடிய ஒரே ஒருவனாகிய அல்லாஹ்வுக்கு மட்டுமே இன்றைய தினத்திலே ஆட்சி அதிகாரம் எல்லாம்.
الْيَوْمَ تُجْزَى كُلُّ نَفْسٍ بِمَا كَسَبَتْ لَا ظُلْمَ الْيَوْمَ إِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ
ஒவ்வொரு உயிர்க்கும் ஒவ்வொரு ஆன்மாவிற்கும் அது செய்ததற்குரிய கூலி சரியாக கொடுக்கப்படும். இன்றைய தினத்தில் எந்த விதமான அநியாயமும் கிடையாது. அல்லாஹ் கூலி கொடுப்பதிலே மிக தீவிரமானவன். (அல்குர்ஆன் 40 : 17)
இப்படிப்பட்ட செய்தியை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு சொல்கின்றான் .அந்நாளில் மக்கள் நிற்கும் காட்சியை நமக்கு சொல்கின்றான் அல்லாஹ் பூமியை சுருட்டி விடுவான் வானத்தை சுருட்டி விடுவான்.
பெருமை அடித்தவர்கள் எங்கே? அநியாயம் செய்தவர்கள் எங்கே? என்னை விட பலமானவர்கள் யாரும் இங்கே இருக்கிறீர்களா? என்னை விட வல்லமை உடையவர்கள் எவரும் இன்று இருக்கிறீர்களா? மக்கள் எல்லாம் பயந்து நடுங்கிக் கொண்டிருப்பார்கள். அன்றைய தினத்தில் பலவிதத்தில் அல்லாஹ் வானவர்களை அழைக்க சொல்வான். சொர்க்கத்தை அழைக்க சொல்வான். நரகத்தை அழைக்க சொல்வான். ஒவ்வொருவரும் அவரவர்களுடைய அமலுக்கு ஏற்ப அழைக்கப்படுவார்கள்.
அந்த நாளில் அவர்களுடைய செயலை வைத்து அழைக்கப்படும். தொழுகையை பேணியவர், தொழுகையை பாழாக்கியவர், ஜகாத்தை சரியாக கொடுத்தவர், ஜகாத்தை பாழாக்கியவர், அல்லாஹ்வின் சட்டவரம்புகளை பேணியவா்கள், அல்லாஹ்வின் சட்டவரம்புகளை பாழாக்கியவர்கள், பொறுமையோடு உறுதியாக நிலைகுலையாமல் அல்லாஹ்வையே நம்பி இருந்தவர்கள், அல்லாஹ்வை ஏசியவர்கள் என்று இப்படி நல்லத்தன்மையும் அதற்கு எதிரான தன்மையும் என்று பிரித்து பிரித்து சொர்க்கவாசிகளை அவர்களுடைய நல்லத் தன்மைகளை கொண்டும் பாவிகளை அவா்களின் கெட்ட குணங்களைக் கொண்டும் அழைக்கப்படும்.
இப்படி மக்கள் ஒருபக்கம் அழைக்கப்பட்டு கொண்டிருக்க, இன்னொரு பக்கம் அந்த அழைப்பில் இருந்து இறைதூதர்கள் கூட தப்பமுடியாது இறைத்தூதர்கள் நம்மை விட அதிகமாக அல்லாஹ்வை பயந்து கொண்டு இருந்தார்கள், அந்த இறைத்தூதர்களும் அழைக்கப்படுவார்கள்; அவர்களிடத்திலும் விசாரணை செய்யப்படும்.
يَوْمَ يَجْمَعُ اللَّهُ الرُّسُلَ فَيَقُولُ مَاذَا أُجِبْتُمْ قَالُوا لَا عِلْمَ لَنَا إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ
அல்லாஹ் கூறுகிறான்; தூதர்களை நாம் அழைப்போம். அவர்களிடத்திலே நாம் கேட்போம். உங்களுக்கு என்ன பதில் சொல்லப்பட்டது நீங்கள் அழைப்பு பணி செய்த போது மக்களிடத்திலே நீங்கள் சென்ற போது உங்களுக்கு என்ன பதில் சொல்லப்பட்டது. (அல்குர்ஆன் 5 : 109)
وَيَوْمَ يُنَادِيهِمْ فَيَقُولُ مَاذَا أَجَبْتُمُ الْمُرْسَلِينَ
அவர்கள் (விசாரணைக்காக) அழைக்கப்படும் நாளில், (அவர்களை நோக்கி, நேரான வழியில் அழைக்க உங்களிடம் வந்த நம்) தூதர்களுக்கு நீங்கள் என்ன பதில் கூறினீர்கள்?'' என்று கேட்கப்படும். (அல்குர்ஆன் 28 : 65)
فَلَنَسْأَلَنَّ الَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ وَلَنَسْأَلَنَّ الْمُرْسَلِينَ
ஆகவே, (இதைப் பற்றி நம்) தூதர்களையும், அவர்களை எவர்களிடம் அனுப்பி வைத்தோமோ அவர்களையும் நிச்சயமாக நாம் விசாரணை செய்வோம். (அல்குர்ஆன் 7 : 6)
அல்லாஹ் சொல்கின்றான் நாம் தூதர்கள் இடத்திலும் விசாரணை செய்வோம். அந்த தூதர்கள் யாரிடத்தில் அனுப்பப்பட்டார்களோ அவர்களிடத்திலும் விசாரணை செய்வோம். தூதர்கள் இடத்திலே அல்லாஹ் கேட்பான் உங்களுக்கு என்ன பதில் சொல்லப்பட்டது?என்று. அனுப்பப்பட்ட மக்களிடத்திலேயும் அல்லாஹ் கேட்பான்.
அல்லாஹ் சுபஹானஹு தஆலா அந்த நாளிலே மக்களை எழுப்பியிருக்கும் போது அவர்களுடைய அமல் தான் அவர்களை சுற்றியிருக்கும்.
فَيَنْظُرُ أَيْمَنَ مِنْهُ فَلاَ يَرَى إِلَّا مَا قَدَّمَ مِنْ عَمَلِهِ، وَيَنْظُرُ أَشْأَمَ مِنْهُ فَلاَ يَرَى إِلَّا مَا قَدَّمَ، وَيَنْظُرُ بَيْنَ يَدَيْهِ فَلاَ يَرَى إِلَّا النَّارَ تِلْقَاءَ وَجْهِهِ
அவனது வலது பக்கமும் பார்ப்பான்; இடது பக்கமும் பார்ப்பான்; முன்பக்கமும் பார்ப்பான்; பின்பக்கமும் பார்ப்பான்; அவன் எதை செய்தானோ அது மட்டும் தான் அவனுக்கு முன்னால் இருக்குமே தவிர வேறு எதுவும் இருக்காது.
அறிவிப்பாளர்: அதீ பின் ஹாதிம் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 7512.
அந்த நாளில் செல்வத்திற்கு பின்னால் அலைந்தவர்கள், இந்த உலக வாழ்க்கையின் வசதிக்கு பின்னால் அலைந்தவர்கள், அல்லாஹுடைய கட்டளையை மறந்தவர்கள் அங்கே கைசேதப்படுவார்கள். .அங்கே அவர்கள் துக்கப்படுவார்கள். ஆனால் அந்த நாளில் அவர்களுடைய துக்கம் அவர்களுடைய கைசேதம் அவர்களுக்கு எந்தப் பயனும் இல்லை.
يَوْمَ لَا تَمْلِكُ نَفْسٌ لِنَفْسٍ شَيْئًا وَالْأَمْرُ يَوْمَئِذٍ لِلَّهِ
அந்நாளில் யாதொரு ஆத்மாவும், மற்ற ஆத்மாவுக்கு யாதொரு பயனுமளிக்க சக்தி பெறாது. அதிகாரமும் அந்நாளில் அல்லாஹ்வுக்கே இருக்கும். (அல்குர்ஆன் 82 : 19)
அன்றைய நாளிலே ஆட்சி அதிகாரம் எல்லாம் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டும் தான் இருக்கும். வேறு யாருக்கும் இருக்காது. மக்கள் ஓடுவார்கள். யாரிடத்தில் ஓடுவார்கள்? அல்லாஹ் சொல்வான்; யார் சூரியனை வணங்கி கொண்டு இருந்தார்களோ அவர்கள் சூரியனுக்கு பின்னால் செல்லுங்கள். மக்கள் சூரியனுக்கு பின்னால் செல்வார்கள்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் வானவர்களுக்கு கட்டளையிடுவான். சூரியனை சுருட்டி நரகத்திலே போடுங்கள் என்று. யார் சூரியனை வணங்கிக்கொண்டு இருந்தார்களோ அவர்களும் நரகத்தில் வீசப்படுவார்கள்.
சந்திரனை வணங்கியவர் எங்கே? இந்த சந்திரனை தூக்கி நரகத்தில் போடுங்கள். அதனை வணங்கியவர்களும் நரகத்தில் எறியப்படுவார்கள்.
சிலைகளை வணங்கியர்கள் எங்கே? வணங்கியர் உடன் சேர்த்து நரகத்தில் எறியப்படும். இப்படி யாரு அல்லாஹ்வைத்தவிர வேறு ஒன்றை வணங்குகிறார்களோ அவர்களையும் நரகத்தில் தள்ளப்படும். ஆனால்,
إِنَّ الَّذِينَ سَبَقَتْ لَهُمْ مِنَّا الْحُسْنَى أُولَئِكَ عَنْهَا مُبْعَدُونَ
ஏற்கனவே நம்மால் எவர்களுக்கு நன்மைகள் எழுதப்பட்டு விட்டதோ அவர்கள், நிச்சயமாக நரகத்திற்கு வெகு தூரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 21 : 101)
இந்த செய்தியை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆனிலிருந்து கூறியபோது, அப்பொழுது அங்குள்ள முஷ்ரிக்குகள் சந்தோஷப்பட்டார்கள். அப்படியா? ஈஸா நபியை நாங்கள் வணங்கினோம். வணங்கப்பட்ட நபரோடு சேர்த்து நரகத்தில் போடப்படுவார்கள் என்றால் ஈஸாவை நரகத்தில் போட்டால் திருப்திதான் நாங்களும் நரகத்திற்கு செல்வோம்.
உஸைர் (அலை) அவர்களை நாங்கள் வணங்கினோம். அவர்களை நரகத்தில் போடப்பட்டால் எங்களுக்கு திருப்திதான். நாங்களும் அந்த நரகத்திற்கு செல்வோம் என்று அந்த கிறிஸ்துவ முஷ்ரிக்களும், காஃபிர்களும் பேசிக்கொண்டார்கள்.
அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா மிக அழகாக தெளிவுப்படுத்தினான்;
إِنَّ الَّذِينَ سَبَقَتْ لَهُمْ مِنَّا الْحُسْنَى أُولَئِكَ عَنْهَا مُبْعَدُونَ
ஏற்கனவே நம்மால் எவர்களுக்கு நன்மைகள் எழுதப்பட்டு விட்டதோ அவர்கள், நிச்சயமாக நரகத்திற்கு வெகு தூரமாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 21 : 101)
யாருக்கு நமது அழகிய வாக்கு முந்திவிட்டதோ, யாரை நாம் பாதுகாத்து விட்டோமோ, யார் தான் வணங்கப்படுவதை கொண்டு திருப்தி அடையவில்லையோ, யார் மக்களை ஏகத்துவத்தின் பக்கம் அழைத்தார்களோ அவர்களைத் தவிர அவர்கள் பாது காக்கப்படுவார்கள்.
ஈஸா (அலை) அவர்களை யார் வணங்கினார்களோ அவர்கள்தான் நரகத்தில் தள்ளப்படுவார்களே தவிர வணங்கியவர்களின் குற்றத்திற்காக ஈஸா (அலை) அவர்களை அல்ல. அதுபோன்று யார் உஷைர் (அலை) அல்லாஹ்வின் குழந்தை என்று வணங்கினார்களோ வணங்கியவர்களை தான் அல்லாஹ் நரகத்திலே போடுவானே தவிர உஸைர் (அலை) அவர்களை அல்ல.
இப்படி மறுமை நாளிலே அல்லாஹு தஆலா மக்களை கூட்டம் கூட்டமாக பிரித்து விடுவான்.
وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا
இறையச்சம் உடையவர்கள் கூட்டம் கூட்டமாக பிரிக்கப்பட்டு சொர்க்கத்திற்கு கொண்டு வரப்படும். (அல்குர்ஆன் 39 : 73)
தொழுகையை பேணியவர்கள், இரவிலே எழுந்து தொழுதவர்கள், குர்ஆன் ஓதியவர்கள், நோன்பு நோற்றவர்கள், மக்களுக்கு உதவி செய்தவர்கள், பிறருடைய கஷ்டத்தில் பங்கெடுத்தவர்கள், ஸதகா அதிகமாக செய்தவர்கள், பொறுமையாளர்கள், ஒழுக்கம் பேணியவர்கள் என்று அல்லாஹு ரப்புல் ஆலமீன் எந்தெந்த நற்குணங்களை குர்ஆனிலே பிரித்து சொல்கிறானோ, யாரிடத்தில் எந்த நற்குணம் அதிகமாக காணப்பட்டதோ அதற்கு ஏற்ப அவர்கள் கூட்டம் கூட்டமாக பிரிக்கப்பட்டு சொர்க்கத்திற்கு அழைத்து வரப்படுவார்கள்.
இப்படித்தான் பாவிகளும். எந்த பாவம் யாரிடத்தில் அதிகமாக இருந்ததோ அதற்கு ஏற்ப பாவிகள் பிரிக்கப்படுவார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக! நாளை மறுமையில் முதலாவதாக அல்லாஹ் விசாரிப்பது தொழுகை பற்றி தான். தொழுகையாளிகள் எங்கே? தொழுகையைப் பேணியவர்கள் எங்கே? என்று அல்லாஹ் விசாரிப்பான்.
அவர்களுக்கென்று சிறந்த கூட்டம் இருக்கும். அதுபோன்று தவ்ஹீதை பேணியவர்கள், அல்லாஹ்விற்கு இணை வைக்காதவர்கள், ஈமானிலே ஷிர்க்கை அறவே கலக்காதவர்கள், முகஸ்துதியோ, புகழோ, பெயரோ, நிஃபாகோ எந்த வகையிலும் தவ்ஹீதிலே ஷிர்க்கை கலக்காத உயர்ந்த மக்கள் அவர்களை அழைக்கப்பட்டு எந்த விதமான விசாரணையும் இல்லாமல் சொர்க்கத்திற்க்கு செல்வார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்; நாளை மறுமையில் எழுப்பப்படும் போது, 70,000 மக்களை அல்லாஹ் எந்த விசாரணையும் இல்லாமல் சொர்க்கத்திற்கு அனுப்புவான். அப்பொழுது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த செய்தியை சொல்லி விட்டு வீட்டிற்குள் சென்று விட்டார்கள். சஹாபாக்கள் பலவகையாக பேசுகிறார்கள். இந்த 70 ஆயிரம் பேர் யாராக இருப்பார்கள், இந்த 70 ஆயிரம் பேருடைய அந்த தகுதி என்ன?
இவர்கள் நபிமார்களாக இருப்பார்களா? அல்லது உண்மையாளர்களாக இருப்பார்களா? அல்லது போரில் ஷஹீதானவர்களாக இருப்பார்களா? என்று பலவாறாக பேசிக்கொண்டிருந்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் மீண்டும் வருகிறார்கள். நீங்கள் எதைப் பற்றி பேசிக் கொண்டிருந்தீர்கள் அந்த 70 ஆயிரம் பேர்களை பற்றியா? அவர்கள் யார் தெரியுமா?
هُمُ الَّذِينَ لاَ يَسْتَرْقُونَ
அவர்கள் பிறர் இடத்தில் சென்று ஓதி பாருங்கள் என்று சொல்லமாட்டார்கள்.
وَلاَ يَتَطَيَّرُونَ
அவர்கள் சகுனம் பார்க்கமாட்டார்கள். (4)
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 5705.
இந்த சகுனம் பார்ப்பது பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்; ஒருவருக்கு எந்த விதத்திலாவது அவருடைய உள்ளத்தில் சகுனம் வராமல் இருக்காது. கண்டிப்பாக வரும். அப்படி வரும்போது அவன்,
اللَّهُمَّ لَا خَيْرَ إِلَّا خَيْرُكَ، وَلَا طَيْرَ إِلَّا طَيْرُكَ، وَلَا إِلَهَ غَيْرُكَ
யா அல்லாஹ்! உனது நலவைத் தவிர வேறு நலவு இல்லை. உனது சகுனத்தை தவிர வேறு சகுனம் இல்லை. உன்னை தவிர வணங்கப்படுபவன் வேறு யாருமில்லை என்று அந்த சகுனத்தை அவர் போக்கிக் கொள்ளட்டும்.
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் பின் அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்னத் அஹ்மத், எண்: 7045.
இன்று பார்க்கிறோம். எத்தனை விஷயங்களில் மக்கள் சகுனம் பார்க்கின்றனர். நல்லவர்கள் கூட ஒருசில செயலை துர்சகுனமாக எண்ணிக்கொண்டு அந்த செயலை விட்டு விடுவதை பார்க்கிறோம்.
எது ஹராமோ அது விட்டுவிட தகுதியானது. எது ஹலாலோ, எதில் நன்மை இருக்குமோ அதை ஒரு சகுனத்தின் காரணமாக, தான் முடிவு எடுத்த ஒரு செயலை விட்டு விடுவான் என்றால் அவன் அல்லாஹ்வுக்கு ஷிர்க் செய்து விடுகிறான்.
அதற்காக அவன் استغفار செய்ய வேண்டும். தனது ஈமானை அவன் புதுப்பிக்க வேண்டும். 70,000 பேருடைய அந்த ஈமான் எப்படி என்றால் அறவே அவர்களிடத்தில் எந்தவிதத்திலும் ஷிர்க் கலக்காது. அதிலிருந்து அவர்கள் பரிசுத்தமானவர்கள்.
وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
அல்லாஹ்வின் மீது முழுமையாக தவக்குல் வைத்தவர்கள். தனக்கு எந்த நன்மை கிடைத்ததோ அது அல்லாஹ்வைக் கொண்டே கிடைத்தது. தனக்கு எந்த தீமை ஏற்பட்டதோ அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்தது. உலகத்தின் வஸ்துக்களை காரணம் காட்ட மாட்டார்கள்.
இன்று நாம் எப்படி என்றால் இப்படி இப்படி நிகழ்ந்திருந்தால் எனக்கு இது ஏற்பட்டு இருக்குமே! நான் இதை செய்திருந்தால் எனக்கு இது கிடைத்திருக்குமே! நான் இதை செய்யாமல் இருந்திருந்தால் எனக்கு இது போன்று இந்த பிரச்சனை ஏற்பட்டிருக்காதே! இது தவக்குலுக்கு முரணானது என்பதை புரிய வேண்டும்.
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்;
فَلَا تقولوا لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا، وَلَكِنْ قُلْ قَدَرُ اللهِ وَمَا شَاءَ فَعَلَ، فَإِنَّ لَوْ تَفْتَحُ باب الكفر
நான் இப்படி செய்திருந்தால் இப்படி ஆகி இருக்குமே என்று சொல்லாதீர்கள். நான் செய்திருந்தால் நான் செய்யாமல் இருந்திருந்தால் என்ற வார்த்தை இருக்கிறதே அது குஃப்ருடைய கதவை திறந்து விடுகிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக.. அது நிராகரிப்புடைய கதவை திறந்து விடுகிறது. உங்களுக்கு பிடிக்காத ஒரு விஷயம் நடந்துவிட்டால்,
قُوْلُوْ قَدَّرَ اللّٰه وَ مَا شَاءَ فَعَلَ
அல்லாஹ் எதை நாடினாலும் அதை விதியில் எழுதுகிறான்.
مَا شَاءَ اللّٰه كَانَ
அல்லாஹ் எதை நாடினானோ அது நடந்தது.
وَمَا لَمْ يَشَاءُ لَمْ يَكُنْ
அல்லாஹ் எதை நாடவில்லையோ அது நடக்கவில்லை. (5)
இப்படி ஈமானிலே யார் உறுதியாக இருக்கிறார்களோ அவர் சொர்க்கத்திற்கு கேள்வி கணக்கில்லாமல் செல்வார்கள்.
உக்காஷா என்ற சஹாபி நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் உடைய வார்த்தையை கேட்டு உடனே எழுந்து, யா ரசூலல்லாஹ்!
-எப்படிப்பட்ட ஆசை பாருங்கள். இதுதான் சஹாபாக்களை அல்லாஹ்வின் பார்வையில் உயர்த்தியது. சஹாபாக்களுக்கு அல்லாஹ்வின் பார்வையிலே ஒரு முன்னுரிமை கொடுத்தது. அவர்களுக்கு சொர்க்கத்தின் மீது இருந்த ஆசை மறுமையின் மீது இருந்த நம்பிக்கை, உடனே எழுந்து என்று சொல்கிறார்-
அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் நான் ஒருவனாகுவதற்கு.எனக்கு நீங்கள் துஆ செய்யுங்கள்.. நபி(ஸல்) கூறுகிறார்கள்; وَ اَنْتَ مِنْهُ- உக்காஷா நீயும் அவர்களில் ஒருவன் தான்.
இது தான் சஹாபாக்கள் உடைய ஆசை. ரபீஆ என்ற தோழர் நபி (ஸல்) அவர்களுக்கு பணிவிடை செய்யக்கூடியவர்கள். நபி ஸல் அவர்கள் அவரிடம் கேட்கிறார்கள்; தோழரே! உங்களுக்கு ஏதாவது வேண்டுமா கேளுங்கள். நான் அல்லாஹ்விடத்தில் உங்களுக்காக துஆ செய்கிறேன். அந்தத் தோழர் ரசூல் (ஸல்) உடைய வார்த்தையைச் கேட்ட உடனே அவரின் நாவிலிருந்து வெளிப்படக்கூடிய வார்த்தையை பாருங்கள்;
حَدَّثَنِي رَبِيعَةُ بْنُ كَعْبٍ الْأَسْلَمِيُّ، قَالَ: كُنْتُ أَبِيتُ مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَيْتُهُ بِوَضُوئِهِ وَحَاجَتِهِ فَقَالَ لِي: «سَلْ» فَقُلْتُ: أَسْأَلُكَ مُرَافَقَتَكَ فِي الْجَنَّةِ. قَالَ: «أَوْ غَيْرَ ذَلِكَ» قُلْتُ: هُوَ ذَاكَ. قَالَ: «فَأَعِنِّي عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ» (صحيح مسلم226 -)
அல்லாஹ்வின் தூதரே! நான் உங்களுடன் சொர்க்கத்தில் இருக்க வேண்டும். அல்லாஹு அக்பர்! நான் உங்களோடு சொர்க்கத்தில் உங்களுக்கு ரஃபீக் ஆக –தோழனாக இருக்க வேண்டும். ரசூல் (ஸல்) மீண்டும் கேட்டார்கள்.
أَوْ غَيْرَ ذَلِكَ
வேறு ஏதாவது வேறு ஏதாவது என மூன்று முறை கேட்டார்கள். மூன்று முறையும் அந்தத் தோழர் வேறு எதுவும் வேண்டாம் என்று கூறினார். அப்பொழுது அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள்;
فَأَعِنِّي عَلَى نَفْسِكَ بِكَثْرَةِ السُّجُودِ
நான் அதற்காக அல்லாஹ்விடத்தில் சிபாரிசு செய்ய வேண்டுமா அதிகமான தொழுகையை கொண்டு உனக்கு நீ உதவி செய்.
நூல் : முஸ்லிம், எண் : 226.
இந்த இடத்திலே நபி (ஸல்) இதையும் நமக்கு அறிவுரை கூற மறந்து விடவில்லை. ஒரு மனிதன் அவனுடைய ஆசையின் காரணமாக மட்டும் ஒரு நன்மையை அடைந்து விட முடியாது. அந்த ஆசையோடு அவனுக்கு அமலும் வேண்டும்.
நீங்கள் எந்த சொர்க்கத்தை அடைய விரும்புகிறீர்களோ, அல்லாஹ்வின் நெருக்கத்தை அடைய விரும்புகிறீர்களோ அது போன்ற அமல்களை செய்யவேண்டும்.
وَمَنْ بَطَّأَ بِهِ عَمَلُهُ، لَمْ يُسْرِعْ بِهِ نَسَبُهُ
யாருடைய அமல் ஒரு மனிதரை பின்னால் தள்ளிவிட்டதோ, யாருடைய அமல் சோம்பேறித்தனத்தால் அவனைப் பின்னால் தள்ளிவிட்டதோ அவனுடைய அழகோ, பரம்பரம்பரையோ, அவனுடைய வேறு வஸ்துக்களோ, அவனை அல்லாஹ்வின் சமூகத்திலே அல்லாஹ்வின் முன்னிலையிலே முன் கொண்டுவராது. (6)
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண்: 2699.
ஆகவே கண்ணியத்திற்குரியவர்களே! மறுமை என்பது நாம் குர்ஆனைப் படிக்கும் போது, ரசூல் (ஸல்) உடைய ஹதீஸ் படிக்கும் போது அங்கே நின்று நாம் சிந்தித்து பார்க்கவேண்டும். நம் நிலை அந்த மறுமையிலே என்னவாக இருக்கும் என்று. ஒவ்வொரு தொழுகையிலும் இருக்க வேண்டும்.
எப்போது எல்லாம் தொழுகைக்கு அழைக்கப்படுகிறதோ அந்த அழைப்பை நாம் செவிமடுக்கும் போது மறுமையில் இப்படி தானே நாம் அழைக்கப்படுவோம். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த ஒரு அழைப்பை மறுமையின் அழைப்புக்கு முன்னுதாரணமாக ஆக்கி இருக்கிறான்.
யார் இந்த துன்யாவில் தொழுகைக்கு அழைக்கப்படும் போது தன் வேலைகளை விட்டுவிட்டு அல்லாஹ்வை முன்னோக்கியவர்களாக, இபாதத்தை முன்னோக்கியவர்களாக விரைந்து விடுகிறார்களோ, நாளை மறுமையிலே அவர்கள் நல்லவர்களோடு அழைக்கப்படுவார்கள்.
மறுமையின் அழைப்பை கேட்பதும் அல்லாஹ் அவர்களுக்கு இலகுவாக ஆக்கிவிடுவான் அந்த ஒரு நல்லவர்களினல் அல்லாஹ் உங்களையும் என்னையும் ஆக்கி அருள் புரிவானாக!!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1).
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، عَنْ مَالِكِ بْنِ أَنَسٍ، فِيمَا قُرِئَ عَلَيْهِ عَنْ عَبْدِ اللهِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ مَعْمَرٍ، عَنْ أَبِي الْحُبَابِ سَعِيدِ بْنِ يَسَارٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ اللهَ يَقُولُ يَوْمَ الْقِيَامَةِ: «أَيْنَ الْمُتَحَابُّونَ بِجَلَالِي، الْيَوْمَ أُظِلُّهُمْ فِي ظِلِّي يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلِّي» صحيح مسلم(2566)
குறிப்பு 2).
وَحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، عَنْ عُمَرَ بْنِ حَمْزَةَ، عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللهِ، أَخْبَرَنِي عَبْدُ اللهِ بْنُ عُمَرَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَطْوِي اللهُ عَزَّ وَجَلَّ السَّمَاوَاتِ يَوْمَ الْقِيَامَةِ، ثُمَّ يَأْخُذُهُنَّ بِيَدِهِ الْيُمْنَى، ثُمَّ يَقُولُ: أَنَا الْمَلِكُ، أَيْنَ الْجَبَّارُونَ؟ أَيْنَ الْمُتَكَبِّرُونَ. ثُمَّ يَطْوِي الْأَرَضِينَ بِشِمَالِهِ، ثُمَّ يَقُولُ: أَنَا الْمَلِكُ أَيْنَ الْجَبَّارُونَ؟ أَيْنَ الْمُتَكَبِّرُونَ؟ (صحيح مسلم-(2788
குறிப்பு 3).
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، حَدَّثَنَا أَبُو صَالِحٍ، عَنْ أَبِي سَعِيدٍ الخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يُؤْتَى بِالْمَوْتِ كَهَيْئَةِ كَبْشٍ أَمْلَحَ، فَيُنَادِي مُنَادٍ: يَا أَهْلَ الجَنَّةِ، فَيَشْرَئِبُّونَ وَيَنْظُرُونَ، فَيَقُولُ: هَلْ تَعْرِفُونَ هَذَا؟ فَيَقُولُونَ: نَعَمْ، هَذَا المَوْتُ، وَكُلُّهُمْ قَدْ رَآهُ، ثُمَّ يُنَادِي: يَا أَهْلَ النَّارِ، فَيَشْرَئِبُّونَ وَيَنْظُرُونَ، فَيَقُولُ: وهَلْ تَعْرِفُونَ هَذَا؟ فَيَقُولُونَ: نَعَمْ، هَذَا المَوْتُ، وَكُلُّهُمْ قَدْ [ص:94] رَآهُ، فَيُذْبَحُ ثُمَّ يَقُولُ: يَا أَهْلَ الجَنَّةِ خُلُودٌ فَلاَ مَوْتَ، وَيَا أَهْلَ النَّارِ خُلُودٌ فَلاَ مَوْتَ، ثُمَّ قَرَأَ: {وَأَنْذِرْهُمْ يَوْمَ الحَسْرَةِ إِذْ قُضِيَ الأَمْرُ وَهُمْ فِي غَفْلَةٍ} [مريم: 39]، وَهَؤُلاَءِ فِي غَفْلَةٍ أَهْلُ الدُّنْيَا {وَهُمْ لاَ يُؤْمِنُونَ} [مريم: 39] " صحيح البخاري4730 -)
குறிப்பு 4).
حَدَّثَنَا عِمْرَانُ بْنُ مَيْسَرَةَ، حَدَّثَنَا ابْنُ فُضَيْلٍ، حَدَّثَنَا حُصَيْنٌ، عَنْ عَامِرٍ، عَنْ عِمْرَانَ بْنِ حُصَيْنٍ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ: لاَ رُقْيَةَ إِلَّا مِنْ عَيْنٍ أَوْ حُمَةٍ، فَذَكَرْتُهُ لِسَعِيدِ بْنِ جُبَيْرٍ، فَقَالَ: حَدَّثَنَا ابْنُ عَبَّاسٍ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " عُرِضَتْ عَلَيَّ الأُمَمُ، فَجَعَلَ النَّبِيُّ وَالنَّبِيَّانِ يَمُرُّونَ مَعَهُمُ الرَّهْطُ، وَالنَّبِيُّ لَيْسَ مَعَهُ أَحَدٌ، حَتَّى رُفِعَ لِي سَوَادٌ عَظِيمٌ، قُلْتُ: مَا هَذَا؟ أُمَّتِي هَذِهِ؟ قِيلَ: بَلْ هَذَا مُوسَى وَقَوْمُهُ، قِيلَ: انْظُرْ إِلَى الأُفُقِ، فَإِذَا سَوَادٌ يَمْلَأُ الأُفُقَ، ثُمَّ قِيلَ لِي: انْظُرْ هَا هُنَا وَهَا هُنَا فِي آفَاقِ السَّمَاءِ، فَإِذَا سَوَادٌ قَدْ مَلَأَ الأُفُقَ، قِيلَ: هَذِهِ أُمَّتُكَ، وَيَدْخُلُ الجَنَّةَ مِنْ هَؤُلاَءِ سَبْعُونَ أَلْفًا بِغَيْرِ حِسَابٍ " ثُمَّ دَخَلَ وَلَمْ يُبَيِّنْ لَهُمْ، فَأَفَاضَ القَوْمُ، وَقَالُوا: نَحْنُ الَّذِينَ آمَنَّا بِاللَّهِ وَاتَّبَعْنَا رَسُولَهُ، فَنَحْنُ هُمْ، أَوْ أَوْلاَدُنَا الَّذِينَ وُلِدُوا فِي الإِسْلاَمِ، فَإِنَّا وُلِدْنَا فِي الجَاهِلِيَّةِ، فَبَلَغَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَخَرَجَ، فَقَالَ: «هُمُ الَّذِينَ لاَ يَسْتَرْقُونَ، وَلاَ يَتَطَيَّرُونَ، وَلاَ يَكْتَوُونَ، وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ» فَقَالَ عُكَاشَةُ بْنُ مِحْصَنٍ: أَمِنْهُمْ أَنَا يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: «نَعَمْ» فَقَامَ آخَرُ فَقَالَ: أَمِنْهُمْ أَنَا؟ قَالَ: «سَبَقَكَ بِهَا عُكَّاشَةُ» (صحيح البخاري-5705 )
குறிப்பு5).
ஹதீஸ் வாசகம் கருத்தாக கூறப்பட்டுள்ளது. அசல் ஹதீஸ் பின்வருமாறு;
فَلَا تَقُلْ لَوْ أَنِّي فَعَلْتُ كَانَ كَذَا وَكَذَا، وَلَكِنْ قُلْ قَدَرُ اللهِ وَمَا شَاءَ فَعَلَ، فَإِنَّ لَوْ تَفْتَحُ عَمَلَ الشَّيْطَانِ
பொருள் : நான் இப்படி செய்திருந்தால் இப்படி நடந்திருக்கும் என்று கூறாதீர்! மாறாக அல்லாஹ் நாடியது தான் நடக்கும் என்று சொல்! ஏனெனில் நான் இப்படி செய்திருந்தால் என்று சொல்வது ஷைத்தானுடைய அமலை திறந்துவிடும்.
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 2664.
குறிப்பு6).
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى التَّمِيمِيُّ، وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَمُحَمَّدُ بْنُ الْعَلَاءِ الْهَمْدَانِيُّ - وَاللَّفْظُ لِيَحْيَى، قَالَ يَحْيَى: أَخْبَرَنَا وقَالَ الْآخَرَانِ: حَدَّثَنَا - أَبُو مُعَاوِيَةَ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا، نَفَّسَ اللهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ يَوْمِ الْقِيَامَةِ، وَمَنْ يَسَّرَ عَلَى مُعْسِرٍ، يَسَّرَ اللهُ عَلَيْهِ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَمَنْ سَتَرَ مُسْلِمًا، سَتَرَهُ اللهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ، وَاللهُ فِي عَوْنِ الْعَبْدِ مَا كَانَ الْعَبْدُ فِي عَوْنِ أَخِيهِ، وَمَنْ سَلَكَ طَرِيقًا يَلْتَمِسُ فِيهِ عِلْمًا، سَهَّلَ اللهُ لَهُ بِهِ طَرِيقًا إِلَى الْجَنَّةِ، وَمَا اجْتَمَعَ قَوْمٌ فِي بَيْتٍ مِنْ بُيُوتِ اللهِ، يَتْلُونَ كِتَابَ اللهِ، وَيَتَدَارَسُونَهُ بَيْنَهُمْ، إِلَّا نَزَلَتْ عَلَيْهِمِ السَّكِينَةُ، وَغَشِيَتْهُمُ الرَّحْمَةُ وَحَفَّتْهُمُ الْمَلَائِكَةُ، وَذَكَرَهُمُ اللهُ فِيمَنْ عِنْدَهُ، وَمَنْ بَطَّأَ بِهِ عَمَلُهُ، لَمْ يُسْرِعْ بِهِ نَسَبُهُ»، (صحيح مسلم(2699