HOME      Khutba      புகைப்பிடித்தலும் ஒரு தற்கொலையே | Tamil Bayan - 369   
 

புகைப்பிடித்தலும் ஒரு தற்கொலையே | Tamil Bayan - 369

           

புகைப்பிடித்தலும் ஒரு தற்கொலையே | Tamil Bayan - 369


புகைப்பிடித்தலும் ஒரு தற்கொலையே!

ஜுமுஆ குத்பா தலைப்பு : புகைப்பிடித்தலும் ஒரு தற்கொலையே!

வரிசை : 369

இடம் : எஸ்.எம்.ஜெ.பிளாசா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 30-04-2010 | 16-05-1431

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய சகோதரர்களே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுமாறு, உங்களுக்கும் எனக்கும்அறிவுரை கூறியவனாகஇந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கின்றேன்.

அல்லாஹு தஆலா நமக்கு இஸ்லாமைமார்க்கமாக தேர்ந்தெடுத்திருக்கின்றான். இந்த இஸ்லாமிய மார்க்கத்தைஅல்லாஹ்நமக்கு முழுமைப்படுத்தி தந்திருக்கிறான்.

அல்லாஹ் கூறுகின்றான் :

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا

இன்றைய தினம் நான் உங்களுக்கு உங்கள் மார்க்கத்தை முழுமையாக்கி வைத்து என் அருளையும் உங்கள் மீது முழுமையாக்கி வைத்துவிட்டேன். உங்களுக்காக இந்த இஸ்லாமை மார்க்கமாக திருப்தியடைந்தேன் (அங்கீகரித்துக் கொண்டேன்). எவரேனும், பாவம் செய்யும் எண்ணமின்றி பசியின் கொடுமையினால் நிர்ப்பந்திக்கப்பட்டு (மேலே கூறப்பட்ட விலக்கப்பட்டவற்றைப் புசித்து) விட்டால் (அது குற்றமாகாது. ஏனென்றால்), நிச்சயமாக அல்லாஹ் (நிர்ப்பந்தத்திற்குள்ளான அவருடைய குற்றங்களை) மிகவும் மன்னிப்பவன், (அவர் மீது) பெரும் கருணை காட்டுபவன் ஆவான். (அல்குர்ஆன் 5 : 3)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், தங்கள் இறுதி ஹஜ்ஜில் அரஃபா மைதானத்தில் இருந்தபோதுஇந்த வசனத்தை அல்லாஹ் அவர்கள் மீது இறக்கினான்.

இஸ்லாம் என்ற இந்த மார்க்கத்திற்கு என்ன பொருள்?ஏதோ சில ஆடைகளை உடுத்துவது, தொப்பிகளை போடுவது, ஏதோ சில காரியங்களை சடங்காக செய்வது, இதுவல்ல இஸ்லாம் என்பது.

இஸ்லாம் என்பது அல்லாஹ்விற்கு கட்டுப்படுவது, அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கட்டுப்படுவது.

அல்லாஹ் எதை கட்டளையிட்டானோ அதை செய்வோம். அல்லாஹ் எதை தடுத்து விட்டானோ அதை நாங்கள் செய்ய மாட்டோம்.

முஸ்லிம் என்றால் அவன் தான். இஸ்லாம் என்றால் அதுதான். அல்லாஹ்நமக்கு அனைத்தையும் தெளிவுப்படுத்திவிட்டான்.

இந்த வேதத்தில்அல்லாஹு தஆலாநமக்கு அனைத்தையும் மிக தெளிவாக சொல்லிவிட்டான்.

இந்த குர்ஆன், நாம் எதை சாப்பிட வேண்டும்?எதை சாப்பிட கூடாது? என்பதை, தெளிவுபடுத்துகிறது.

இந்தக் குர்ஆன், வணக்க வழிபாடுகளை மட்டும் நமக்கு சொல்லித் தரவில்லை, ஆன்மீக முன்னேற்றத்தை மட்டும் சொல்லித் தரவில்லை.

இந்த குர்ஆன் நமக்கு அரசியலை சொல்லித் தருகிறது. இந்த குர்ஆன் நமது உடல் ஆரோக்கியத்தை சொல்லித்தருகிறது. இந்தக் குர்ஆன் மனதிற்கு நிம்மதியை சொல்லித் தருகிறது. இந்த குர்ஆன் குடும்ப வாழ்க்கையை நமக்கு சொல்லித் தருகிறது.

இந்த குர்ஆன் சமூக வாழ்க்கையை நமக்கு சொல்லித் தருகிறது. இந்த குர்ஆன் அல்லாஹ்விடத்தில் ஒரு அடியான் எப்படி நெருங்க வேண்டும் என்பதற்கான வழிகளை விவரிக்கிறது.

இப்படிப் பார்த்தால், குர்ஆனில் சொல்லப்படாத விஷயம் என்று எதுவுமே இல்லை. அதற்கு மேலாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்,குர்ஆனில் நாம் புரிய முடியாத எத்தனையோ உண்மைகளைநமக்கு விவரித்து தந்திருக்கிறார்கள்.

ஆக, முஸ்லிம் என்றால், குர்ஆன் எப்படிச் சொல்கிறதோ.! ஹதீஸில் ரசூலுல்லாஹி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் எப்படி சொல்கிறார்களோ அப்படித்தான் ஒரு முஸ்லிம் இருப்பான்.

மற்றவர்களை அவன் காப்பி அடிக்க மாட்டான். யூதர்கள், கிறிஸ்துவர்கள், கலாச்சாரத்தை பின்பற்ற மாட்டான்.

இஸ்லாமுக்கு என்று தனி கலாச்சாரம் இருக்கிறது. தனி ஒழுக்கம் இருக்கிறது. நாம் எதை சாப்பிட வேண்டும், எதை சாப்பிட கூடாது, என்பதற்கு வரையறை இருக்கிறது.

இன்றைய காலகட்டத்தில், குறிப்பாக நம் முஸ்லிம் சமுதாயம், இந்த முஸ்லிம் சமுதாயத்தை பீடித்து இருக்கின்றபல நோய்களில் ஒரு மாபெரும் நோயை நாம் சற்று சிந்தித்து பார்க்க வேண்டும்.

அது என்ன தெரியுமா? ஒரு காலத்தில் பெரியவர்கள் பயந்து பயந்து செய்து கொண்டிருந்தார்கள். ஆனால், இந்த காலத்தில்சிறுவர்கள் கூட, தாங்கள் நடந்து செல்கின்ற தெருக்களில், தங்கள் வீடுகளில், தாங்கள் முஹல்லாக்களில்செய்வதை நாம் பார்க்கிறோம்.

அது தான் இந்த புகை பிடிக்கும் பழக்கம். எத்தகைய ஒரு கெட்ட பழக்கம். ஒரு தீய பழக்கம்.

ஆனால், சர்வ சாதாரணமாக இன்றைய முஸ்லிம் சமூகத்தால்இந்த தீய பழக்கம் அரங்கேற்றப்பட்டுக் கொண்டிருக்கிறது.

முஸ்லிம்கள் இதனுடைய கெடுதியை அறியாமல் இருக்கிறார்கள். அல்லாஹ் இதை ஹராமாக்கி இருக்கிறான் என்பதை தெரியாமல் இருக்கிறார்கள்.

இவர்கள் தங்களுடைய பெற்றோர் குடித்தால், தங்களின் தந்தையின் சகோதரர்கள் குடிப்பதை பார்த்தால்,தங்களைவிட மூத்தவர்கள் குடிக்கிறார்கள், எனவே அவர்களைப் பார்த்து இவர்களும் இந்த புகைப் பழக்கத்திற்கு அடிமையாகி விடுகிறார்கள்.

அவர்களைப் பார்த்து, நாமும் இப்படித்தான் வளரவேண்டும், நாமும் இப்படித்தான் குடிக்க வேண்டும், என்ற ஒரு மன நிலைமைக்கு ஆளாகி விடுகிறார்கள்.

சில வாலிபர்கள் எப்படி நினைத்திருக்கிறார்கள் என்றால்,சிகரெட் குடிப்பதால் வயதில் நமக்கு ஒரு பக்குவம் வந்து விட்டது, அறிவில் ஒரு தெளிவு வந்துவிட்டது, நாமும் ஒரு காரியத்தை சாதிக்கும் அளவுக்கு திறமைக்கு வந்துவிட்டோம் என்பதாக சிலரிடத்தில் ஒரு மன எண்ணம்இருப்பதை பார்க்கிறோம்.

பெரியவர்கள், வேலையில் இருப்பவர்கள்வேலைப் பழுவில் சிகரெட் குடிக்கும் பொழுது, அவர்களுக்கு ஒரு ஓய்வு அல்லது ஒரு விதமான மன அமைதி கிடைப்பது போன்று அவர்களுக்கு காட்டப்படுகிறது.

அவர்கள் அதைப் பார்க்கிறார்கள். ஓஹோ! இப்படித்தான் நாமும் குடிக்க வேண்டும் என்பதாக இந்த சிகரெட் பழக்கத்திற்கு அடிமையாகிறார்கள்.

குறிப்பாக, இன்றைய காலகட்டத்தில் சினிமாக்கள், சீரியல்கள், மேலும் குறிப்பாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை முன் உதாரணமாக, தங்களின் முன்னோடியாக, தலைவனாக, எடுத்துக்கொள்ள வேண்டிய இந்த முஸ்லிம் சமூகம், கேவலத்திலும் கேவலம், அன்னியர்களை,விபச்சாரம் செய்யும் அவர்களை, இந்த சமுதாயத்தின் ஒழுக்கங்களை சீரழிக்கக் கூடிய இந்த சினிமா நடிகர்களையும்., இவர்களுடைய இந்த அரசியல் தலைவர்களையும், தங்களுக்கு முன்னோடிகளாக எடுத்துக் கொண்டிருப்பதை பார்க்கிறோம்.

அவர்கள் குடிக்கிறார்கள். எனவே நாமும் குடிக்கிறோம். அவர்கள் இதை குடித்து, மக்களுக்கு தங்களை பெருமைப்படுகிறார்கள். எனவே அவர்களை பின்பற்றி, நாமும் இந்த சிகரெட்டை குடிக்கிறோம். இந்த புகையிலை பழக்கத்திற்கு நாமும் ஆளாகிறோம்.

என்றெல்லாம் நம்முடைய வாலிபர்கள், நம்முடைய சமுதாய மக்கள்கெடுவதைப் பார்க்கிறோம்.

மற்றவர்களைப் பற்றி நாம் பேசவில்லை. தொழுகையை ஐங்காலமும் அழகிய முறையில் தொழக்கூடிய எத்தனையோ தொழுகையாளிகளுக்குஇந்த புகையிலையை பயன்படுத்துவதோபுகையிலை குடிப்பதோ ஹராம் என்றுதெரிந்து வைத்திருக்கிறார்களா? என்றால் கிடயாது.

நம்முடைய பள்ளிகளில் அதான் சொல்வார்கள், ஓரத்தில் நின்று சிகரெட் குடித்துக் கொண்டிருப்பார்கள், பீடி குடித்துக் கொண்டிருப்பார்கள். அதான் சொல்வதற்குள் அவசர அவசரமாக இழுத்து விட்டு உள்ளே வருவார்கள்.

இவர்களுடைய தொழுகையை அல்லாஹ் ஏற்றுக் கொள்வானா? அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் கூறினார்கள்;

«مَنْ أَكَلَ مِنْ هَذِهِ الشَّجَرَةِ - يَعْنِي الثُّومَ - فَلاَ يَقْرَبَنَّ مَسْجِدَنَا»

பூண்டும், வெங்காயமும் அனுமதிக்கப்பட்ட உணவு. அதை சாப்பிட்டால் கூட,நீங்கள் பள்ளிக்கு வந்து விடாதீர்கள். உடனடியாக நீங்கள் ஜமாஅத் தொழுகையை, நீங்கள் வீட்டிலேயே தொழுது கொள்ளுங்கள். இங்கு வந்து முஸ்லிம்களுக்கு இடையூறு தராதீர்கள். அல்லாஹ்வுடைய மஸ்ஜிதை, நீங்கள் அசுத்தப் படுத்தாதீர்கள் என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 853.

மஸ்ஜிதில் வந்து தொழுவது எவ்வளவு கட்டாயக் கடமை! அந்தக் கடமையை கூட அனுமதிக்கப்பட்ட இந்த உணவைநீங்கள் சாப்பிட்டிருந்தால், மற்ற முஃமின்களுக்கு இடையூறு தரும் வகையில் நீங்கள் பள்ளிக்குள் நுழையாதீர்கள் என்று சொன்னார்கள்.

ருகூஃ செய்ய முடிகிறதா?அவர்களோடு சுஜூது செய்ய முடிகிறதா? மலத்தில் இருந்து வருகின்ற அசுத்த துர்நாற்றத்தை விட, கேவலமான நாற்றம் அல்லவா அவர்களின் வாயிலிருந்து வீசுகின்றது.

அந்த அசுத்த துர்நாற்றத்தோடு அல்லாஹ்விற்க்கு முன்னால் நின்று தொழுகின்றார்களே! யாரை அவர்கள் கேவலப்படுத்துகின்றார்கள்? அல்லாஹ்வை அவர்கள் கேவலப்படுத்துகிறார்கள். அவனுடைய மஸ்ஜிதை கேவலப்படுத்துகிறார்கள். அவர்களோடு தொழுகின்ற முஃமின்களுக்கு அவர்கள் நோவினை தருகின்றார்கள்.

எவ்வளவு அசுத்தமான வாசனை! எவ்வளவு அருவருப்பான வாசனை! சிந்தித்துப் பார்க்கவேண்டாமா!

ஒரு மனிதன் உழைத்தால் வியர்வை வரும். வெளியே வந்தால் வியர்வை வரும். அந்த நாற்றத்தோடு கூட நீங்கள் பள்ளிக்கு வராதீர்கள். குளித்துக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கட்டளையிட்டார்கள்.

ஆனால், இன்று ஹராமான ஒரு பொருளை உண்டுவிட்டுஹராமான ஒன்றை குடித்துவிட்டுபள்ளிக்கு வருகிறார்கள்.

நம் சமுதாயத்தில்பலருக்கு இது அல்லாஹ்வால் தடுக்கப்பட்ட.மார்க்கத்தால் ஹராமாக்கப்பட்ட ஒரு காரியம் என்று தெரியவில்லை.

அது சிகரெடாக இருக்கட்டும்,பீடியாக இருக்கட்டும்,குட்காவாக இருக்கட்டும், இன்னும் இது சார்ந்த எந்த வகையாக வேண்டுமானாலும் இருக்கட்டும் அவை அனைத்தும்அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் தடைசெய்யப்பட்ட ஒரு காரியமாகும்.

அல்லாஹ், தன் தூதரின் பொறுப்பைப் பற்றி சொல்கிறான்:

وَيُحِلُّ لَهُمُ الطَّيِّبَاتِ وَيُحَرِّمُ عَلَيْهِمُ الْخَبَائِثَ

அவர் அவர்களுக்கு தூய்மையானவற்றை ஆகுமாக்குவார்; கெட்டவற்றை அவர்களுக்குத் தடுத்து விடுவார். (அல்குர்ஆன் 7 : 157)

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்கள் இந்த மார்க்கத்தை நமக்கு தெளிவுபடுத்துவதற்காக அனுப்பப்பட்டார்கள்.

எதை சாப்பிட வேண்டும்? எதை சாப்பிட கூடாது? என்பதை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு தெளிவுபடுத்தினார்கள்.

ரசூலுடைய பணியைக் குறித்து அல்லாஹ் இந்த வசனத்தில் சொல்கிறான்; அவர்கள் اَلطَّيِّبَاتُ-நல்லவற்றை உங்களுக்கு ஹலாலாக ஆக்கிக் கொடுப்பார்.

اَلطَّيِّبَاتُஎன்பது طَيِّبٌஎன்பதின் பன்மை.طَيِّبٌஎன்றால் சுத்தமானது, நல்லது.அறிவுக்கு, உடல் ஆரோக்கியத்திற்கு, உடல் வளர்ச்சிக்குபலன் தரக்கூடிய ஒன்று.

அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் தடுத்திடாதநல்ல பொருட்களுக்கு اَلطَّيِّبَاتُஎன்று சொல்லப்படும்.

நபி என்ன செய்வார்? உங்களுக்குநல்ல பொருட்களை அனுமதிப்பார். நீங்கள் அதை புசிக்கலாம், சாப்பிடலாம், உடுத்தலாம், குடிக்கலாம்.

இன்னும் அவர் கெட்ட பொருட்களை, தீய வஸ்துக்களை, உங்களுக்கு தீங்கு தருகின்ற,உங்கள் அறிவுக்கோ, உங்கள் ஆரோக்கியத்திற்க்கோ, உங்களின் உடல் வளர்ச்சிக்கோ, உடனடியாகவோ, அல்லது தாமதமாகவோஎந்த வகையில் இருந்தாலும் சரி, அது "ஹபீஸ்" -கெட்ட, தீய, அசுத்தம் என்ற வார்த்தைக்குள் அடங்கிவிடும்.

அல்லாஹ் கூறுகின்றான்;நபி உங்களுக்குகெட்டவற்றை, தீயவற்றை, கெடுதல் தருபவற்றைதடுத்து விடுவார்.

மேலும் அல்லாஹ் கூறுகின்றான்;

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُلُوا مِنْ طَيِّبَاتِ مَا رَزَقْنَاكُمْ وَاشْكُرُوا لِلَّهِ إِنْ كُنْتُمْ إِيَّاهُ تَعْبُدُونَ

நம்பிக்கை கொண்டவர்களே! நாம் உங்களுக்கு அளித்துள்ளவற்றில் தூய்மையானவற்றையே உண்ணுங்கள்; நீங்கள் அல்லாஹ்வையே வணங்குபவர்களாக இருப்பீர்களாயின், அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தி வாருங்கள். (அல்குர்ஆன் 2:172)

யார் அல்லாஹ்வை நம்புகிறார்களோ,அல்லாஹ்வுடைய தூதரை நம்புகிறார்களோ,மறுமையை நம்புகிறார்களோ,அவர்களை அழைத்து அல்லாஹ் சொல்கிறான்.

யார் அல்லாஹ்வை நம்பவில்லையோ,ரஸூலை நம்பவில்லையோ,மறுமையை நம்பவில்லையோ,சொர்க்கத்தை நம்பவில்லையோ,நரகத்தை நம்பவில்லையோ,அல்லாஹ்வின் கட்டளைகளின் மீது எவர்களுக்கு நம்பிக்கை இல்லையோ,அவர்களைப் பற்றி இங்கு பேச வேண்டிய அவசியமில்லை.

ஏனென்றால் அவர்களுடைய மொத்த தங்குமிடம் நரகமாக இருக்கிறது. அல்லாஹ் அவர்களை அங்கே விசாரித்துக் கொள்வான்.

அல்லாஹ் கூறுகின்றான்:

நம்பிக்கையாளர்களே! உங்களுக்கு நாம் கொடுத்தவற்றில்நல்ல பொருட்களை, சுத்தமானவற்றை, பலன் தருகின்றவற்றை, எது உங்களுடைய உடல் ஆரோக்கியத்திற்கு, அறிவுக்கு, நன்மை தருமோ, அதை நீங்கள் புசியுங்கள்.

உலகத்தில் இருக்கின்ற எந்த ஒரு அறிவாளியாவது இந்த சிகரெட் பலன் தரக்கூடிய ஒன்று என்று யாராவது சொல்ல முடியுமா?

உலகத்தில் உள்ள எந்த ஒரு மருத்துவராவது, சிகரெட் குடிப்பது உடல் நலத்திற்கு நல்லது அது அறிவுக்கு நல்லது, அது ஆரோக்கியத்திற்கு நல்லது என்று எந்த அறிவுள்ள மருத்துவராவது சொல்லி இருக்கிறாரா?

உலகத்தில் உள்ள அனைத்து மருத்துவர்களும், அத்தனை அறிவாளிகளும், அத்தனை நல்ல சிந்தனைவாதிகளும்ஒருமித்து ஒரே விஷயத்தில், அது தடை செய்யப்பட வேண்டியது, அது அருவருப்பானது, அது மனிதனுடைய உடலுக்குத் தீங்கு தரக் கூடியதுஎன்று கூறுகின்றனர்.

தீங்கு என்பது ஒரு வகையில் அல்ல. எத்தனை வகையான தீங்குகளை சிகரெட்டின் மூலமாக மருத்துவர்கள் எண்ணி இருக்கிறார்கள். எத்தனை வகையான கேன்சர்கள் உருவாகின்றன.

வாயில் கேன்சர் உருவாகிறது. உதட்டில் கேன்சர் உருவாகிறது. பற்களில் கேன்ஸர் உருவாகிறது. நாவில் கேன்சர் உருவாகிறது. மூலையில் கேன்சர் உருவாகிறது. தொண்டை குழியில் கேன்சர் உருவாகிறது. நெஞ்சில் உருவாகிறது. குடல் பைகளில் உருவாகிறது. நுரையீரல்களில் உருவாகிறது. ஒட்டுமொத்த கேன்சரின், அனைத்து வகைகளையும் தனக்குள் அடக்கி இருக்கின்றது இந்த சிகரெட், இந்த புகையிலை வர்க்கங்கள்.

அனைத்து மருத்துவர்களும் மிக தெளிவாக சொல்கிறார்கள்; இது மிகப் பெரிய கெடுதி தரக்கூடிய ஒன்று என்பதாக.

இவ்வளவு அழகான குர்ஆன் வசனம்! அல்லாஹ் நமக்கு சொல்கிறான்; கெடுதி தருபவற்றை நீங்களே உங்களுக்கு தடை செய்து கொள்ளுங்கள், நல்லவற்றை நீங்கள் சாப்பிடுங்கள் என்று.

இந்த வசனத்தைக் கேட்டதற்குப் பிறகும் ஒரு முஸ்லிம் சிகரெட் குடிக்கிறான் என்றால், அவனுடைய உள்ளத்தில் இருக்கின்ற ஈமானிய பலவீனத்தை, அல்லாஹ்விற்கும்அவனுடைய தூதருக்கும்கட்டுப்படுவதில் அவனுக்கு உள்ள நோயைத்தான் அது குறிக்கிறது.

இன்னும் அல்லாஹ் தெளிவுப்படுத்துகிறான்;

وَلاَ تَقْتُلُوْا اَنْفُسَكُمْ

உங்களை நீங்களே கொன்று கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் 4:29)

உலகில் உள்ள அத்துணை மருத்துவர்களும் சொல்கிறார்கள்; சிகரெட் அதில் உள்ள அத்துணை கெமிக்கல்கள் மனிதனுடைய உயிரை கொல்லக்கூடிய ஸ்லோ பாய்சன், அது விஷம் என்று சொல்கிறார்கள்.

ஒவ்வொரு ஆண்டும் எத்தனை இலட்ச மக்கள் இந்த புகையிலையால் இறந்து கொண்டிருக்கிறார்கள் தெரியுமா?புள்ளிவிவரங்களை எடுத்துப் பாருங்கள்! ஒவ்வொரு ஆண்டும் பல இலட்சம் மக்கள் இந்த புகையிலையால் இறந்து கொண்டிருக்கிறார்கள்.

ஐரோப்பாவில் மட்டும் ஏறத்தாழ 12லட்சம் மக்கள் இறந்து கொண்டிருக்கின்றார்கள். அமெரிக்காவில் கருப்பின மக்கள் 45ஆயிரம் பேர் ஒவ்வொரு நாளும் இறக்கிறார்கள்.

ஒட்டு மொத்தத்தில் பார்த்தால் பத்து மில்லியன் ஒரு கோடி பேர் ஒவ்வொரு ஆண்டும் புகையிலை பழக்கத்தால், சிகரெட் குடிப்பதால் இறந்து கொண்டிருக்கிறார்கள் என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

2025ஆம் ஆண்டு வருவதற்குள்இந்த புகையிலையின் கெடுதி எந்த அளவு மக்களிடத்தில் ஆட்கொண்டு விடும் என்று சொன்னால், ஏறக்குறைய ஒரு ஆண்டுக்கு ஒரு கோடி மக்கள் இறந்து விடுவார்கள். எத்தனை பேர்.? ஒரு கோடி மக்கள்! இறந்து விடுவார்கள் என்று.

மேலும், அல்லாஹ் கூறுகின்றான்;

وَلَا تُلْقُوا بِأَيْدِيكُمْ إِلَى التَّهْلُكَةِ

உங்களை நீங்கள் அழிவில், நாசத்தில், போட்டுக் கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் 2 : 195)

அறிவுள்ள யாராவது சொல்லமுடியுமா? சிகரெட் குடிப்பது நல்லது, அது அழிவு அல்ல, நாசமில்லைஎன்று யாராவது சொல்ல முடியுமா?

இன்றைய அரசாங்கங்கள் மக்களின் சுகத்தையும் மக்களின் அறிவையும் விலை பேசி மக்களின் அன்றாட வாழ்க்கையில் விளையாண்டு அவர்கள் தங்களுடைய இலாபத்தை பார்க்கிறார்கள்.

மது கடைகளில் எழுதி வைத்துக் கொள்வார்கள்; குடிப்பது தனி மனிதனுக்கு கெடுதி, குடும்பத்திற்கு கெடுதி, நாட்டிற்கு கெடுதிஎன்பதாக.

ஆனால், அதை தடை செய்ய மாட்டார்கள். காரணம், அற்ப இலாபத்தின் மீதுள்ள இவர்களுக்குள்ள ஆசை.

இந்த மதுவை தடுத்து விட்டால், இதிலிருந்து வரக்கூடிய வரியை இழந்து விடுவோமே! இதனால் அரசாங்கம் போண்டி ஆகிவிடுமே! என்று.

அல்லாஹ் சொல்கிறான்; உங்களை நீங்கள் கொன்று கொள்ளாதீர்கள்! குடிப்பது, புகையிலை பழக்கங்கள், புகைபிடிப்பது, இது மனிதனுடைய உடலை கொள்ளக் கூடிய ஒரு விஷம் என்பதாக.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய நபிமொழியை இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

ஒருவன் தற்கொலை செய்து கொண்டால், உதாரணத்திற்கு விஷத்தை குடித்து விட்டால், அல்லது ஒரு உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்து விடுகிறார்,நாளை மறுமையில் நரகத்தில் இவனுக்கு எப்படிப்பட்ட தண்டனை என்றால், எப்படி இவன் தன்னை தற்கொலை செய்து கொண்டானோஅது போன்றுதான் நாளை நரக நெருப்பில் இவனுக்கு தண்டனை கொடுக்கப்படும்.

விஷத்தைக் குடித்து இறந்து விட்டால், அது போன்று கடுமையான விஷம் அவனுக்கு கொடுக்கப்படும். அந்த விஷத்தை அவன் குடித்து அதனுடைய வேதனையை அனுபவித்துக் கொண்டே இருப்பான்.

உயரமான இடத்திலிருந்து கீழே விழுந்து இறந்தால், அல்லது தூக்கில் தொங்கி இறந்தால், அல்லது கத்தியால் குத்தி இறந்தால், அது போன்றே நாளை மறுமையில் நரக நெருப்பில் அவனுக்கு கொடுக்கப்படும் என்று அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.(1)

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 5778.

இன்று மருத்துவர்கள், கேன்சரின் காரணமாக இறக்கக்கூடிய மக்களில் 50சதவிகிதம் புகையிலையால் ஏற்பட்ட கேன்சரால் இறக்கிறார்கள் என்று திட்டவட்டமாகச் சொல்கிறார்கள்.

இதில் இன்னும் மிகப் பெரிய வருத்தம் என்ன என்றால்,இவர்கள் மட்டும் கேன்சர் நோய்க்கு ஆளாகி இறப்பது மட்டுமல்ல,இவர்களுக்கு முன்னால் இருக்கிற, இவர்களுக்கு பக்கத்தில் இருக்கின்ற, இவர்களோடு பழகுகின்ற, இவர்களோடு பேசுகின்ற இவர்களுடைய மனைவி, இவர்களுடைய பச்சிளம் குழந்தைகள், இவர்களுடைய நண்பர்கள், இவர்களுடைய சகோதரர்கள், இவர் எந்த சபையில் சிகரெட் குடிக்கின்றாரோ அந்த மக்கள் எல்லாம் கேன்சர் நோய்க்கு ஆளாகிறார்கள்.

அமெரிக்க முட்டாள்களுக்கும், ஐரோப்பிய முட்டாள்களுக்கும்சுட்டதற்கு பின்னால் தான் புத்தி வரும்.

நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம்; கோட் ஷூட் போட்டவர்கள் எல்லாம் பெரும் அறிவாளிகள் என்று.

இது முட்டாள்களின் வர்க்கம். ஆடம்பரத்தை தேடும் நாய்கள் இவர்கள். இவர்கள் மிகக் கேவலமான சமுதாயம். அல்லாஹ் அவர்களை பழித்திருக்கின்றான்.

இவர்கள் படைப்பிலேயே கெட்டவர்கள். அல்லாஹ் சொல்கின்றான்;யூதர்களை சொல்கின்றான்,கிறிஸ்தவர்களை சொல்கின்றான்,அவர்களை சபித்து இருக்கின்றான். நபிமார்கள் அவர்களை சபித்து இருக்கின்றார்கள்.

தாவூத் நபியின் வாயிலாக, ஈஸா நபியின் வாயிலாக, பன்றிகளாக, குரங்குகளாக, மாற்றப்பட்ட சமுதாயம் அந்த மக்கள். இந்த முஸ்லிம் சமுதாயம் அவர்களை பார்த்து காப்பியடித்து கொண்டு இருக்கின்றார்கள்.

அல்லாஹ் சொல்கிறான்; அவர்களை பின்பற்றாதீர்கள் என்பதாக.

இந்த முஸ்லிம் சமுதாயம், அவர்களைத்தான் பின்பற்றுவேன் என்று நின்று கொண்டிருக்கிறது.

அவர்கள் காட்டக்கூடிய அந்த கலாச்சாரம், அந்த சினிமாக்கள், அந்த சீரியல்களில், அவர்களுடைய ஹீரோக்களை அலங்கரிக்கப்படுகிறது.

அவர்களுடைய லைஃப்ஸ்டைல்,அவர்கள் எப்படி நடக்கிறார்கள், எப்படி உடுத்துகிறார்கள், எப்படிப் பேசுகிறார்கள், அவர்கள் என்னென்ன செய்கிறார்களோ அதை எல்லாம் இவர்களுக்கு குர்ஆனில் சொல்லப்பட்டது போன்று, வேதத்தில் சொல்லப்பட்டது போன்று, அதை நம்பி பின்பற்றுகின்ற ஒரு சமுதாயத்தைநம்மில் அவர்கள் உருவாக்கி வெற்றி கண்டுவிட்டார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!

அந்த முட்டாள்களுக்கு சுட்டதற்கு பின்னால் புத்தி வந்திருக்கிறது. இன்று அவர்கள் சட்டம் கொண்டு வருகிறார்கள். ரெஸ்டாரண்டில் சிகரெட் பிடிக்கக்கூடாது, பிள்ளைகளுக்கு முன்னால் சிகரெட் பிடிக்கக்கூடாது, பொது இடங்களில் சிகரெட் பிடிக்கக்கூடாது, விமானத்தில் சிகரெட் பிடிக்கக்கூடாது, நடைபாதையில் சிகரெட் குடிக்க கூடாது என்று.

எவ்வளவு பெரிய முட்டாள்கள். அந்த முட்டாள்களை பின்பற்றி இன்று அரபு முட்டாள்களும் அடுத்த சட்டம் கொண்டு வருகிறார்கள்.

எவ்வளவு பெரிய கேவலம்! முஸ்லிம்களுக்கு என்று ஒரு புத்தகம் இல்லையா? ஒரு வேதம் இல்லையா?அந்த வேதத்தை போதிக்கக்கூடிய அளவுக்கு மார்க்க அறிஞர்கள் இல்லையா? ஒழுக்க சீலர்கள் இல்லையா? அவர்களுடைய அறிவு இல்லையா? சிந்தித்து பார்க்க வேண்டாமா?

அல்லாஹு ரப்புல் ஆலமீன் நமக்குச் சொல்கிறான்;

உங்களை நீங்கள் அழிவில், நாசத்தில், போட்டுக் கொள்ளாதீர்கள். (அல்குர்ஆன் 2 : 195)

எவன் ஒருவன் சிகரெட் குடிப்பனோ, அதன் மூலமாக அவனுக்கு கேன்சர் வந்து இறப்பானோ, இதுபோன்ற வேதனையை அவன் நரக நெருப்பில் அனுபவிப்பான். அவன் தற்கொலை செய்து கொண்டவனுக்கு சமமாக கருதப்படுவான்.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எந்த ஒரு நோயையும் இறக்கவில்லை, அதற்குள்ள மருந்து இல்லாமல். அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எந்த நோயை உருவாக்குகின்றானோ,அதற்கு பின்னால் பல காரணங்கள் இருக்கின்றன.

இன்று மனிதர்களாக தேடிக்கொண்ட நோய்கள் பல. எய்ட்ஸை போன்று, இந்த கேன்சரை போன்று, இன்னும் பல விதமான நோய்கள். இது பாவத்தால் ஏற்பட்டது. அல்லாஹ்வின் கட்டளையை மீறியதால் ஏற்பட்டது.

ஆகவே,எவனொருவன் இந்த புகையிலை பழக்கத்திற்கு அடிமையாகி, இதனால் ஏற்பட்ட கேன்சரின் மூலமாகவோ, அல்லது வேறு விதமான நோய்களின் மூலமாகவோ இறக்கிறானோ அவனுக்கு மறுமையில் தண்டனை உண்டு.

இந்த புகைப்பிடித்தல் மூலமாக ஹார்ட் அட்டாக் வருகிறது.உடலில் இரத்தக் கொழுப்புகள் அதிகமாகின்றன.மனிதன் சுவாசிப்பதற்கு சிரமப்படுகிறான்.

இப்படி எத்தனை விதமான நோய்களை எண்ணிக்கொண்டே செல்கிறார்கள். ஐயாயிரத்திற்கும் மேற்பட்ட வகை நோய்கள் இருக்கின்றன என்றுஇந்த சிகரட்டை பற்றி மருத்துவர்கள் எழுதுகிறார்கள்.

எவ்வளவு பயங்கரமான ஒன்று! இதை யார் குடித்து இதன் மூலமாக இறப்பானோ, அவன் யாராக இருந்தாலும் சரி,தொழிலாளியாக இருந்தாலும் சரி,அவனும் தற்கொலை செய்து கொண்டவனைப் போன்று.

ஸ்லோ பாய்சன் கொண்டு தற்கொலை செய்துக் கொண்டதைப் போன்று.தற்கொலை செய்து கொண்டவனுக்கு அல்லாஹ்வுடைய தண்டனை, எதன் மூலமாக அவன் இறக்கிறானோஅதை கொண்டே நாளை மறுமையில் அவனுக்கு வேதனை செய்யப்படும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

وَلَا تُبَذِّرْ تَبْذِيرًا (26) إِنَّ الْمُبَذِّرِينَ كَانُوا إِخْوَانَ الشَّيَاطِينِ وَكَانَ الشَّيْطَانُ لِرَبِّهِ كَفُورًا

வீணாகப் (பொருளை) விரையம் செய்யாதீர். நிச்சயமாக விரயம் செய்பவர்கள் ஷைத்தான்களின் சகோதரர்களாவார்கள்; ஷைத்தானோ தன்னுடைய இறைவனுக்கு நன்றி கெட்டவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:26-27)

மேலும் அல்லாஹ் சொல்கிறான்:

وَلَا تُسْرِفُوا إِنَّهُ لَا يُحِبُّ الْمُسْرِفِينَ

எனினும் வீண் விரயம் செய்யாதீர்கள். ஏனெனில் அல்லாஹ் அளவு கடந்து (வீண்) விரயம் செய்பவர்களை நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 7 : 31)

வீண்விரயம் என்றால் என்ன?

மார்க்கத்தில் நன்மையில் செலவு செய்வதுவிரையம் அல்ல. வாரி வழங்குகின்ற தர்மங்கள்.

அல்லாஹ் சொல்கிறான்; இரவில் தர்மம் செய், பகலில் தர்மம் செய், தனிமையில் தர்மம் செய், கூட்டத்தில் தர்மம் செய், அல்லாஹ்வுடைய பாதையில் அள்ளி அள்ளிக் கொடு என்று.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் கேட்கப்பட்டது;

«دِينَارٌ أَنْفَقْتَهُ فِي سَبِيلِ اللهِ وَدِينَارٌ أَنْفَقْتَهُ فِي رَقَبَةٍ، وَدِينَارٌ تَصَدَّقْتَ بِهِ عَلَى مِسْكِينٍ، وَدِينَارٌ أَنْفَقْتَهُ عَلَى أَهْلِكَ، أَعْظَمُهَا أَجْرًا الَّذِي أَنْفَقْتَهُ عَلَى أَهْلِكَ»

ஒரு தீனார்அல்லாஹ்வின் பாதையில் செலவழிக்கப்படுகிறது. ஒரு தீனார் யதீமுக்கு கொடுக்கப்படுகிறது.

ஒரு தீனார் மிஸ்கீனுக்கு கொடுக்கப்படுகிறது. ஒரு தீனார் அந்த மனிதன், தன் குடும்பத்திற்கு கொடுக்கிறான்.

இந்த நான்கு தீனார்களில் சிறந்த தீனார் எது? என்பதாக எங்களுக்கு சொல்லுங்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்;

உன்னுடைய குடும்பத்திற்காக, அவர்களின் பசிக்காக, அவர்களின் உடைக்காக, அவர்களின் வீட்டு குடும்ப தேவைக்காக, நீ செலவழித்த தீனார், அல்லாஹ்வின் பாதையில் இந்த நான்கு தீனார்களில் சிறந்த தீனார் என்பதாக.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 995.

நீங்கள் சொல்ல முடியுமா? நீங்கள் குடிக்கின்ற இந்த சிகரெட்டுகள், இந்த புகையிலை, இந்த மது, நீங்கள் உங்கள் குடும்பத்தின் நன்மைக்காக செலவழிக்கிறீர்கள் என்று.

நன்மை என்பது எது? அல்லாஹ்வின் விருப்பத்திற்குரிய செயல், அல்லாஹ்வுடைய தூதரின் விருப்பத்திற்குரிய செயல், நாளை மறுமையில் சொர்க்கத்தை தேடி தருகின்ற செயல்கள்நன்மையாகும். அந்த நன்மையில் செலவு செய்வது வீண் விரையம் இல்லை.

வீண் விரையம் என்பதை சிலர் எண்ணிக் கொண்டிருக்கின்றார்கள்; ஒரு தட்டு சாப்பிட வேண்டிய இடத்தில்இன்னொரு தட்டை சேர்த்து சாப்பிட்டுவிட்டால்வீண்விரயம் என்று எண்ணி வைத்திருக்கின்றார்கள்.

இது விரயத்தின் ஒரு குறை. இந்த பகுதி குறை, இந்தப் பகுதி விரையம் அனைத்துமே, தடுக்கப்பட்ட ஒன்று. வீண்விரயம் அனைத்துமே தடுக்கப்பட்ட ஒன்று.

ஒன்று, தேவையை விட அதிகமாக செலவு செய்வது.

இரண்டாவது,அவசியமே இல்லாத இடத்தில் செலவு செய்வது.

மூன்றாவது, ஹராமில் செலவு செய்வது. இது மிக பயங்கரமான குற்றமாக அல்லாஹ்விடத்தில் கருதப்படுகிறது.

அல்லாஹ் கூறுகின்றான்:

வீண் விரையம் செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 17:26)

அதாவது, ஹராமில் செலவு செய்வதை சொல்கிறான்.

நம்மில் இருக்கின்ற எந்த ஒரு அறிவாளியாவது சிகரெட் குடிப்பது ஹலால் என்பதாக சொல்லமுடியுமா?அப்படி சிகரெட் குடிப்பது ஹலாலான ஒன்று என்றால், அவர்கள் சொல்லி பார்க்கட்டும்;

நான் சிகரெட் பிடிப்பதற்கு முன்னால் பிஸ்மில்லாஹ் சொல்லி சிகரெட் குடிக்கிறேன் என்று. உலகத்தில் ஏதாவது ஒரு குடிபானம் இருக்கிறதா? பிஸ்மில்லாஹ் சொல்ல முடியாத குடிபானம்.

ஒரு முஸ்லிம்ஒன்றை அருந்தும் போது அல்லதுஒன்றை சாப்பிடும் போதுஅவன் பிஸ்மில்லாஹ் சொல்ல வேண்டும்.

பிஸ்மில்லாஹ் சொல்லாமல் சாப்பிடக்கூடாது. அப்படி சாப்பிட்டால், அப்படி குடித்தால், அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:

யார், பிஸ்மில்லாஹ் சொல்லாமல் சாப்பிடுகிறானோ, அவனோடு ஷைத்தான் சாப்பிட்டு கொள்கிறான். யார் பிஸ்மில்லாஹ் சொல்லாமல் குடிக்கிறானோ, அவனோடு அவன் குடித்துக் கொள்கிறான். யார் பிஸ்மில்லாஹ் சொல்லாமல் தன் மனைவியோடு சேர்கிறானோ, அவனோடு ஷைத்தான் சேர்ந்து கொள்கிறான். யார் பிஸ்மில்லாஹ் சொல்லாமல் வீட்டுக்குள் வருகிறானோ, அவனோடு ஷைத்தான் வந்துவிடுகிறான்.

அறிவிப்பாளர் : ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2018.

நீங்கள் ஒரு கடையில் சென்று சிகரெட் வாங்கும் போது பிஸ்மில்லாஹ் சொல்லி வாங்க முடியுமா? அல்லாஹ்வே! இதில் எனக்கு பரக்கத் செய்! என்று சொல்ல முடியுமா?

ஒரு முஸ்லிம்,ஒன்றை வாங்கும் போதும் விற்கும் போதும் அல்லாஹ்வே! இதில் எனக்கு பரக்கத் கொடு! என்று சொல்லவேண்டும். அதை நீங்கள் சொல்ல முடியுமா?

அல்லது ஒரு பொருளை குடித்ததற்கு பிறகும் சாப்பிட்டதற்கு பிறகும் அல்ஹம்து லில்லாஹ் என்று சொல்லவேண்டும். சிகரெட் குடித்ததற்குப்பிறகு அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்வீர்களா?

நீங்கள் சாப்பிடுவதை யாராவது பார்த்து விடுவார்கள் என்றுநீங்கள் பயப்படுவது உண்டா? நீங்கள் குடித்தால் யாராவது பார்த்துவிடுவார்களோ என்றுபயப்படுவது உண்டா?

நீங்கள் ஒரு கண்ணியமான உடையில், ஒரு கண்ணியமான தோற்றத்தில், ஒழுக்கமானவர் என்று சமுதாயத்தால் அறியப்பட்டிருக்கும்போது,உங்களை ஒருவர், நீங்கள் சிகரெட் குடிக்கும் நிலையில் பார்ப்பதைநீங்கள் பொருத்துக் கொள்வீர்களா? அதை நீங்கள் விரும்புவீர்களா? மக்களின் கண்ணுக்கு முன்னால் நீங்கள் அதை குடிப்பீர்களா?

ஒரு ஆலிம் உங்களை பார்ப்பதை, உங்களுடைய ஆசிரியர் உங்களை பார்ப்பதை, அல்லதுஉங்களின் தந்தை உங்களை பார்ப்பதை, உங்களுடைய தாய் உங்களை பார்ப்பதை நீங்கள் பொருத்துக் கொள்வீர்களா?நிச்சயம் எந்த ஒரு அறிவாளியும் பொறுத்துக் கொள்ள மாட்டான்.

அப்படி என்றால் அது ஹராம் -தடுக்கப்பட்ட ஒன்று. அது கேவலமான ஒன்று.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

மறுமையில் ஒரு மனிதனுடைய கால் ஐந்து கேள்விகளுக்கு பதில் சொல்லாமல் நகர முடியாது. அதில் மூன்றாவது கேள்வி, நீ எங்கே சம்பாதித்தாய்? எங்கே செலவு செய்தாய்?என்பது.(2)

அறிவிப்பாளர் : அபூ பர்சா அல்அஸ்லமி ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2417, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

அஞ்சு ரூபாய், பத்து ரூபாய், ஐம்பது ரூபாய், நூறு ரூபாய், ஒவ்வொரு நாளுக்கும்இவன் குடிக்கின்ற இந்த சிகரெட்டின் மொத்த செலவைஅவனுடைய வாழ்நாளில் கணித்துப் பாருங்கள்!

எத்தனை இலட்சத்தை, எத்தனை ஆயிரத்தை இழந்திருப்பான்? எத்தனை ஆயிரங்களை, எத்தனை இலட்சங்களை அழித்திருப்பான்?

அதைக்கொண்டு ஒரு யதீமை படிக்க வைத்திருக்கலாம், அதைக் கொண்டு ஒரு யதீமுக்கு ஆடை கொடுத்திருக்கலாம், ஒரு வீடு கட்டி கொடுத்திருக்கலாம், ஒரு யதீமுக்கு வியாபாரத்தை அமைத்துக் கொடுத்திருக்கலாம்.

அல்லாஹ்வுடைய பாதையில் சொர்க்கத்தை வாங்குவதற்காக செலவழிக்க வேண்டிய, இந்த தீனார்களும், திர்ஹம்களும், அத்தனை ரூபாய்களும், இலட்சக்கணக்கான பனங்கள் எப்படி வீண்விரயம் அடைகின்றன.

சிந்தித்துப் பார்க்கவேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்;

وَالَّذِيْنَ يُؤْذُوْنَ الْمُؤْمِنِيْنَ وَالْمُؤْمِنٰتِ بِغَيْرِ مَا اكْتَسَبُوْا فَقَدِ احْتَمَلُوْا بُهْتَانًا وَّاِثْمًا مُّبِيْنًا‏

ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர் நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள். (அல்குர்ஆன் 33:58)

இந்த புகையிலை பழக்கத்தின் காரணமாக எத்தனை மக்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று உங்களுக்கு தெரியுமா?

ஒரு கர்ப்பிணிக்கு முன்னால் புகை, சிகரெட்பிடிப்பதன் காரணமாக, அவளுக்கு பிறக்கக் கூடிய குழந்தைக்கு கேடு ஏற்படுகிறது. சிறுவர்கள், குழந்தைகளுக்கு முன்னால் சிகரெட் பிடிப்பதன் காரணமாக, அவர்களுடைய சுவாசம் பாதிக்கப்படுகிறது.

அவர்களுக்கு சளி பிடிக்கிறது. அவர்களுக்கு இருமல் வருகிறது. இன்னும் எத்தனையோ நோய்களுக்கு அவர்கள் ஆளாகிறார்கள். சிகரெட் குடிப்பதின் காரணமாகஒவ்வொரு நாளும் அவருடைய வாழ்நாள் குறைந்து கொண்டே வருகிறது.

அல்லாஹ் சொல்கிறான்;முஃமீன்களுக்கு யார் தொந்தரவு தருகிறார்களோஅவர்கள் பயங்கரமான பாவங்களை செய்து விட்டார்கள்.

இமாம் அஹ்மத் பதிவு செய்கிறார்கள்;

«نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ كُلِّ مُسْكِرٍ وَمُفْتِرٍ»

போதை தரக்கூடிய அனைத்தையும் விட்டு, உடலுக்கு சோர்வு தரக்கூடிய அனைத்தையும் விட்டுஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் தடுத்தார்கள்.

அறிவிப்பாளர் : உம்மு ஸலமா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 26634.

இந்த போதை பழக்கம் முன்பு சாராயத்தில் இருந்தது. பின்பு புகையிலையின் வடிவமாக,அடுத்து மனிதர்களுக்கு எத்தனை வகையான பெயர்களை, எத்தனை வகையான பொருட்களை, இந்த புகையிலையின் மூலமாக செய்து கொடுக்கிறார்கள்?

இந்த சிகரெட்டை பொறுத்தவரை, பெரும்பாலான மக்கள் இதற்கு அடிமையாகி விட்ட காரணத்தால், இதை நியாயப்படுத்த முயற்சி செய்கிறார்கள். இதற்கு ஒரு வரையறையை கொடுத்து, இதை கட்டுப்படுத்த முயற்சி செய்கிறார்கள்.

ஆனால், முஸ்லிமைப் பொறுத்தவரை, அப்படி அல்ல. காரணம், முஸ்லிம், மறுமையை நம்பியவன். அல்லாஹ்வை நம்பியவன்.

இவன், தனது நஃப்ஸைகாலில் போட்டு மிதிப்பதற்கு பழக்கப்பட்டவன். ஒரு முஸ்லிமால், இதை அல்லாஹ் தடுத்து விட்டான் என்றால், அவனால் அதை விட்டு விட முடியும்.

காஃபிரால் அப்படி முடியாது. காரணம்,அவன் நஃப்ஸுக்கு அடிமையானவன். இப்லீஸுக்கு அடிமையானவன். அவனுடைய மன இச்சைகளுக்கு அடிமையானவன்.

அல்லாஹ்வையும் மறுமையையும் நம்பிய முஃமின் அப்படி அல்ல. அவன் அல்லாஹ்வின் அடிமையாக இருக்கின்றான்.

நாம் இந்த புகையிலை பழக்கம் உள்ளவர்களிடத்தில் கேட்கிறோம்; ரமலான் மாதங்களில் நீங்கள் 12மணி நேரங்கள், 10மணி நேரங்கள், அதை விட்டுவிட்டுநீங்கள் தூரமாக இருப்பது இல்லையா?

அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடி தானே, மறுமையின் வெற்றியை நாடி தானே, அதை நீங்கள் விட்டீர்கள். அப்படியென்றால், ஏன் அந்த மறுமையின் வெற்றியை நாடி அல்லாஹ்வின் பொருத்தத்தை நாடிவாழ்க்கையெல்லாம் அதை விட்டுவிடுவேன் என்ற உறுதியைஉங்களால் கொள்ள முடியாது.

முடியும்! ஆனால், ஷைத்தான் தடுக்கிறான், இப்லீஸ் தடுக்கிறான். ஒன்று, அறியாமையாக இருக்கலாம். அல்லதுமுட்டாள்தனமாக மற்றவர்களை பின்பற்றுகின்ற பழக்கமாக இருக்கலாம். அல்லது ஒரு கற்பனை. இதை குடித்தால்ஓய்வு கிடைப்பது போன்று.

நீங்கள் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள், அல்ஹம்து லில்லாஹ் என்று சொல்லுங்கள், மனதில் நிம்மதியை பாருங்கள்! உளூ செய்துவிட்டு இரண்டு ரக்அத் தொழுங்கள்! அதில் உடல் ஆரோக்கியத்தை, மன நிம்மதியை, சுகத்தை பாருங்கள்!

முடிந்தால் குர்ஆனை ஓதுங்கள். அதில் நிம்மதி இருக்கிறது. அதில் சந்தோஷம் இருக்கிறது. மனக் கவலைகளை போக்கக்கூடிய அருமருந்து இருக்கிறது. உள்ளத்தின் நோய்களைப் போக்கக்கூடிய மருந்து இருக்கிறது. உடல் சோர்வைப் போக்கக் கூடிய மருந்து இருக்கிறது. குர்ஆனை ஓதக்கூடியவர் களைப்பார் என்பது கிடையாது.

அல்லாஹ்வுடைய தூதரையும்ஸஹாபாக்களையும்பார்க்கின்றோம். அவர்கள் இரவெல்லாம் குர்ஆன் ஓதியவர்கள். நின்ற நிலையில் குர்ஆன் ஓதியவர்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு ரக்அத்தில் சூரத்துல் அஃராஃப் வரைக்கும் ஓதியவர்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்கள்ஒரு ரக்அத்தில் 10ஜுஸ்உ, 20ஜுஸ்உக்கள் ஓதினார்கள்.

இன்று, ஏன் நம்மால் முடியவில்லை?காரணம், நம்முடைய மக்கள் ஹராமில் சுகம் கண்டு விட்டார்கள். பாவத்தில் சுகம் கண்டு விட்டார்கள். அல்லாஹ்விற்கு மாறு செய்வதில் சுகம் கண்டு விட்டார்கள்.

எனவே இபாதத்திலுள்ள சுகத்தைஇபாதத்தில் உள்ள இன்பத்தைஅல்லாஹ் அவர்களிடமிருந்து எடுத்து விட்டான்.

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும்அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இருவரும் வெளியே செல்கிறார்கள்.

உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கலீஃபாவாக இருக்கும்போது அங்கே ஒரு வியாபாரக் கூட்டம் வந்து, தங்களுடைய கூடாரங்களை போட்டு ஓய்வு எடுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

கலிஃபா உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கின்றார்கள்; அப்துர் ரஹ்மானே! இங்கே வெளியிலிருந்து முஸ்லிம்களுடைய வியாபாரிகள் வந்திருக்கின்றார்கள். அவர்கள் கூடாரமிட்டு இங்கே தங்குகிறார்கள். நாம் இவர்களைஇன்று இரவு பாதுகாப்போமே! இன்று இரவு இவர்களுடைய பொருட்களை பாதுகாப்போமே! என்று.

அந்த இரண்டு கண்ணியமிக்க சஹாபாக்களும் முஸ்லிம்களுக்கு பணிவிடை செய்வதை பாருங்கள்!

இரண்டு பேரும் உட்கார்ந்து கதை பேசிக் கொண்டிருந்தார்களா? அரட்டை அடித்துக் கொண்டிருந்தார்களா?

அப்துர் ரஹ்மானிடத்தில் உமர் சொல்கிறார், உமரிடத்தில் அப்துர்ரஹ்மான் சொல்கிறார்; எழுந்து நில்லுங்கள், நாம் இருவரும் தொழ ஆரம்பித்து விடுவோம் என்று.

தொழுகையில் இவர் குர்ஆனை ஓதுகிறார். அவர் குர்ஆனை ஓதுகிறார். இவர் ஓதஅவர் கேட்கிறார்.

இப்படியே சுபுஹ் (ஃபஜ்ர்) தொழுகைக்குஅதான் செல்லப்படுகிறது.வெளிச்சம் வந்து விடுகிறது. அவர்களை பாதுகாப்பிலேயே விட்டுவிட்டுமஸ்ஜிதுந் நபவியை நோக்கிஉமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களும்அப்துர் ரஹ்மான் ரலியல்லாஹு அன்ஹு அவர்களும் வருகிறார்கள்.

இவர்கள்இபாதத்தில் இன்பத்தை அடைந்தார்கள். ஹராமை விட்டும் வாழ்க்கையை பாதுகாத்தார்கள். எனவே, இபாதத்தில் அல்லாஹ்சுகத்தை கொடுத்தான்.

இன்று பார்க்கலாம்; சிலர், ஒரு இரவெல்லாம்டிவி பார்ப்பதில்சினிமாக்கள் பார்ப்பதில்அல்லது கதை புத்தகங்கள் படிப்பதில்நேரங்களை கழிக்கிறார்கள்.

காரணம், அவர்கள் அதில் சுகத்தை தேடினார்கள். இப்லீஸ் அதில் சுகம் இருப்பதை போன்றுஅவர்களுக்கு காட்டினான்.

பின்பு மிஞ்சியது என்ன?மனதில் இருட்டு, முகத்தில் இருட்டு, உள்ளத்தில் கவலை, மனதில் கவலை, கேவலம், ஒரு விதமான மன நெருக்கடி.

என்ன நாவலை, என்ன கதையை, என்ன சீரியலை, என்ன சினிமாக்களை, பார்க்கிறார்களோஅதில் உள்ள ஒட்டுமொத்த அசுத்தங்களும்ஒட்டுமொத்த அல்லாஹ்வுடைய கோபத்தை உருவாக்கக்கூடிய காரியங்களும்இவனுடைய உள்ளத்தை கெடுக்கக் கூடியதாகநெருக்கடிக்கு ஆளாக்கக் கூடியதாகஇப்லீஸுடைய வலைக்குள்ளே சிக்க வைத்து விடுகிறது.

எந்த ஒரு முஃமின் அல்லாஹ்வுடைய இபாதத்தில் ருசியை தேடுவானோ அவன்ஓதிக் கொண்டே இருப்பான்.

எப்போது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சொல் ஞாபகத்திற்கு வருமோ உன்னுடைய உடலுக்கும் ஒரு பாதுகாப்பு இருக்கிறது. உன்னுடைய கண்களுக்கும் பாதுகாப்பு இருக்கிறது.

ஒரு முஸ்லிம் ஓய்வு எடுப்பது, திரும்ப எழுந்து இபாதத் செய்வதற்காக. இரவில் ஒரு முஸ்லிம் இஷாவுக்கு பின்னால் தூங்குகின்றான்.

ஏன் தெரியுமா? தஹஜ்ஜத் தொழுகைக்கு எழுந்திருப்பதற்காக. தஹஜ்ஜத் தொழுகைக்கு பிறகு சற்று ஓய்வு எடுக்கிறான். ஏன் தெரியுமா? சுப்ஹுக்கு எழுந்து செல்வதற்காக.

இப்படி, ஒரு முஸ்லிமுடைய வாழ்க்கை, இபாதத்தில் இருந்து இன்னொரு இபாதத்தின் பக்கம் மாறியதாக தான் இருக்குமே தவிர, ஆடம்பரங்களில், வீண் விளையாட்டுகளில், வீண் கோரிக்கைகளில்இருக்காது.

மேலும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:

«لَا ضَرَرَ وَلَا ضِرَارَ»

நீங்கள் பிறருக்கு தொந்தரவு தரக்கூடாது. உங்களுக்கு பிறரும் தொந்தரவு தரக்கூடாது.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத்,எண் :2865.

எந்த ஒரு அறிவாளியாவது சொல்ல முடியுமா?எனக்கு பக்கத்தில் ஒருவர் சிகரெட் குடிப்பதால் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை என்று.

ஒரு அறையில் இருவர் இருக்கும்பொழுது, அல்லது ஒரு பஸ்ஸில், அல்லது ஒரு ரயிலில் ஒருவர் பக்கத்தில் சிகரெட் குடிக்கும் போது, அந்த இடத்தில் ஒரு நல்ல மனிதர் இருக்க முடியுமா? அவருக்கு எவ்வளவு மூச்சுத்திணறல் ஏற்படுகிறது!

மேலும்,அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:

" إِنَّ اللَّهَ حَرَّمَ عَلَيْكُمْ: عُقُوقَ الأُمَّهَاتِ، وَوَأْدَ البَنَاتِ، وَمَنَعَ وَهَاتِ، وَكَرِهَ لَكُمْ قِيلَ وَقَالَ، وَكَثْرَةَ السُّؤَالِ، وَإِضَاعَةَ المَالِ "

அல்லாஹ் உங்கள் மீது ஹராமாக்கி விட்டான்;உங்கள் தாய்மார்களுக்கு மாறு செய்வதை, பெண்பிள்ளைகளை கொள்வதை, தேவை இல்லாமல் ஒரு பொருளை தடுப்பதை, அல்லது தேவையில்லாமல் ஒரு பொருளை கொடுப்பதை.

கொடுத்தால் அல்லாஹ்வுக்காக கொடுக்க வேண்டும். தடுத்தால் அல்லாஹ்வுக்காக தடுக்க வேண்டும். அதாவது,தன் விருப்பத்திற்கு ஏற்ப கொடுப்பது, தன் விருப்பத்திற்கு ஏற்ப தடுப்பது. இதை உங்களுக்கு ஹராமாக்கி விட்டான்.

அடுத்து சொன்னார்கள் : உங்களுக்கு மத்தியில் அல்லாஹ்மூன்றை வெறுத்துவிட்டான். ஆதாரம் இல்லாமல் அப்படி சொல்லிக்கிட்டு இருந்தாங்க, அவர பத்தி இப்படி பேசிட்டு இருந்தாங்கஎன்றுமக்களுக்கு மத்தியில்கோல் தீயை மூட்டுவது. ஆதாரமில்லாமல் ஒருவரைப் பற்றி பேசுவது.

தேவையில்லாமல் வீணாக கேள்விகள் கேட்பதையும் அல்லாஹ் வெறுக்கிறான். பொருளை வீணடிப்பதை அல்லாஹ் வெறுக்கிறான்.

அறிவிப்பாளர் : முகீரா இப்னு ஷுஅபாரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 2408.

சிகரெட்டுக்காக செய்யப்படுகிற இந்த செலவுகள், நன்மையில் செலவு செய்யப்படுகின்ற செலவுகள் என்று சொல்ல முடியுமா?பிரயோஜனமான செலவு என்று சொல்ல முடியுமா?நாட்டுக்கு, வீட்டுக்கு, குடும்பத்திற்கு, பிள்ளைகளுக்கு, உடல் ஆரோக்கியத்திற்குஇது பலன் தரக்கூடியது என்று சொல்லமுடியுமா?

அடுத்து மிக அச்சுறுத்தக் கூடிய ஒரு ஹதீஸ்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கின்றார்கள்;

إِنَّ أَوَّلَ مَا يُنْتِنُ مِنَ الإِنْسَانِ بَطْنُهُ

நாளை மறுமையில் மஹ்ஷர் மைதானத்தில் நிற்கும் போது, முதன்முதலாக மனிதனுடைய உடலில் இருந்து வீசுகின்ற மிக மோசமான துர்நாற்றம் மனிதனுடைய வயிற்றிலிருந்து வரும்.

எந்த மனிதன்ஹராமை சாப்பிட்டானோ அவனுடைய வயிற்றிலிருந்துநாளை மஹ்ஷர் மைதானத்தில் பயங்கரமான துர்நாற்றம் அடிக்கும்.

(இந்த சிகரெட்மனிதனுடைய இரத்த நாளங்கள், உடல், சதை, இரத்தம், உறுப்புஎன அனைத்திலும் பரவி இருக்கிறது.

இந்த நிலையில் நாளை மஹ்ஷரில் இவன் எழுப்பப்பட்டால், இப்படிப்பட்ட கேவலமான நிலைமைக்கு ஆளாவான்.)

மேலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்;

فَمَنِ اسْتَطَاعَ أَنْ لاَ يَأْكُلَ إِلَّا طَيِّبًا فَلْيَفْعَلْ

எனவே யார் ஹலாலானதை-சுத்தமானதை மட்டுமே சாப்பிட முடியுமோஅதையே அவர் செய்யட்டும். ஹராம் வேண்டியதில்லை.

அறிவிப்பாளர் : ஜுன்துப் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 7152.

ஒருமுறை அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள், தங்களுடைய அடிமை கொண்டு வந்த பாலை குடித்து விடுகிறார்கள். எப்போதும் கேட்டுவிட்டு குடிப்பார்கள். அந்த நாளில், பசியின் கொடுமையால், கேட்காமல் குடித்து விட்டார்கள்.

சிறிது நேரத்திற்கு பிறகு அடிமையை கூப்பிட்டு கேட்கிறார்கள். அந்தப் பால் எங்கிருந்து வந்தது என்று. அவர் சொல்லுகிறார் முந்திய காலத்தில் நான் குறி பார்க்கும் பழக்கம் உள்ளவளாக இருந்தேன். ஒரு நாள் ஒருவருக்கு நான் குறி பார்த்தேன். அவர்கள் எனக்கு அதற்குள்ள கூலியை கொடுக்கவில்லை. இப்போது கொடுத்தார்கள் வாங்கி வந்தேன் என்பதாக. அதை பாலாக கொடுத்தார்கள் வாங்கிவந்தேன் என்பதாக.

அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களுடைய வாயில் விரலை விட்டு, அந்த பாலை வெளியே எடுப்பதற்காக வாந்தி எடுத்தார்கள்.

பிறகு சொன்னார்கள்;எந்த சதை, ஹராமான ஒரு பொருளினால் வளர்ந்ததோ., அது நரகத்திற்குத்தான் தகுதியானது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மேலும் சொல்கிறார்கள்; முஸ்லிமுடைய பதிவு, ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்;

«يُبْعَثُ كُلُّ عَبْدٍ عَلَى مَا مَاتَ عَلَيْهِ»

மனிதன் எந்த நிலையில் மரணிக்கின்றானோ அந்த நிலையில் எழுப்பப்படுவான்.எந்த நிலையில் இந்த துனியாவில் மரணிக்கின்றானோ அந்த நிலையில் எழுப்பப்படுவான்.

அறிவிப்பாளர் : ஜாபிர்ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் :2878.

சிந்தித்துப் பாருங்கள்! இதற்குப் பிறகு ஒருவர் புகையிலையை சாப்பிட்டுக் கொண்டு இருக்கும் பொழுது, மது அருந்திக் கொண்டிருக்கும் பொழுது, அல்லது அந்த பழக்கத்திற்கு அடிமையாக இருக்கும் பொழுது, அவருடைய மரணம் ஏற்பட்டால் ஹராமில் அவருடைய மரணம் ஏற்பட்டதாக இருந்தால், நாளை மறுமையில் அவருடைய நிலைமை எப்படி இருக்கும்?!

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்; என்னுடைய உம்மத்தில் அல்லாஹ் எல்லோருடைய பாவங்களையும் மன்னித்து விடுவான். ஆனால்,யார்தான் செய்கின்ற பாவத்தைவெளிப்படையாக செய்கின்றானோ, துணிந்து செய்கின்றானோ அதனை அல்லாஹ் மன்னிக்க மாட்டான்.

இந்த புகையிலை பழக்கம், இந்த சிகரெட் பழக்கம், ஆரம்பத்தில் இவன் மறைத்து மறைத்து செய்வான். தந்தைக்குத் தெரியாமல் செய்வான், தாய்க்குத் தெரியாமல் செய்வான், சமூகத்திலுள்ள நல்லவர்களுக்கு தெரியாமல் செய்வான்.

அடுத்து என்ன ஆகிறது? வளர்ந்து வருகிறான், சமுதாயத்தில் இவனுக்கு என்று ஒரு மதிப்பு, கண்ணியம், ஒரு சூழல் ஏற்படுகிறது, பணம் வருகிறது, ஒரு பதவி வருகிறது, இப்போது என்ன நிலைமைக்கு ஆளாகிறான்?

இனி என்னை யார் கேட்பது? இனி யார் என்னை தடுப்பது? என்பதாகஇந்தப் பழக்கத்தை மக்களுக்கு முன்னால் செய்ய ஆரம்பித்து விடுகிறான்.

எதை மறைத்து மறைத்து செய்துகொண்டிருந்தானோ தவறு என்று உணர்ந்து செய்துகொண்டிருந்தானோ அதை இப்போது மக்களுக்கு முன்னால்பகிரங்கப்படுத்தி செய்ய ஆரம்பித்து விடுகிறான்.

ஆரம்பத்தில் தவறு என்று குடித்தவன், ஆரம்பத்தில் தப்பு என்று மறைத்தவன், இப்போது என்ன கேட்கிறான்? குர்ஆன் வசனத்தில் எங்கே எழுதியிருக்கிறது சிகரெட் என்கிற வார்த்தை? ஹதீஸில் எங்கே இருக்கிறது சிகரெட் என்ற வார்த்தை? சிகரெட் ஹராம் என்று, நீங்கள் ஒரே ஒரு வசனத்தையாவதுநேரடியாக எடுத்துக் காட்டுங்கள் என்று கேட்கிறான்.

இவர்களுடைய நாவால் ஷைத்தான் பேசுகிறான், இப்லீஸ் பேசுகிறான்.

உலகத்தில் உள்ள எல்லா ஆலிம்களும்ஒருமித்து சொன்ன ஒரே விஷயம், இந்த புகைத்தல், இந்த மது குடித்தல்அனைத்தும் ஹராம் என்பதில்மாற்றுக்கருத்து, இரண்டாவது கருத்துக்கு இடம் இல்லை.

நம் சமுதாய மக்கள் சிந்திக்க வேண்டும்! நம் சமுதாயத்தில் உள்ள பெரியவர்கள் சிந்திக்க வேண்டும்!

மார்க்க அறிஞர்கள், இந்த புகையிலையை பயன்படுத்துவதைமட்டும் ஹராம் என்று சொல்லவில்லை. அதை விற்பதும் ஹராம், இதை வாங்குவதும் ஹராம், இதை சேகரித்து வைப்பதற்காக தங்களுடைய இடங்களை கொடுப்பதும் ஹராம் என்று தெள்ளத்தெளிவாக ஃபத்வாக்கள் இருக்கின்றன.

அல்லாஹ்வை பயந்துக் கொள்வோமாக! மறுமையை பயந்து கொள்வோமாக! கெட்ட பழக்கங்கள், தீய பழக்கங்கள், சமுதாயத்திற்கும்சமுதாயத்தின் நன்மைக்கும்கேடு விளைவிக்கக் கூடிய அனைத்து விஷயங்களை விட்டும்உடனடியாக விலகிக் கொள்வோமாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الوَهَّابِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الحَارِثِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ ذَكْوَانَ، يُحَدِّثُ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «[ص:140] مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ، فَهُوَ فِي نَارِ جَهَنَّمَ يَتَرَدَّى فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ تَحَسَّى سُمًّا فَقَتَلَ نَفْسَهُ، فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ، فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَجَأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا» (صحيح البخاري- 5778)

குறிப்பு 2)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الوَهَّابِ، حَدَّثَنَا خَالِدُ بْنُ الحَارِثِ، حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ سُلَيْمَانَ، قَالَ: سَمِعْتُ ذَكْوَانَ، يُحَدِّثُ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «[ص:140] مَنْ تَرَدَّى مِنْ جَبَلٍ فَقَتَلَ نَفْسَهُ، فَهُوَ فِي نَارِ جَهَنَّمَ يَتَرَدَّى فِيهِ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ تَحَسَّى سُمًّا فَقَتَلَ نَفْسَهُ، فَسُمُّهُ فِي يَدِهِ يَتَحَسَّاهُ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا، وَمَنْ قَتَلَ نَفْسَهُ بِحَدِيدَةٍ، فَحَدِيدَتُهُ فِي يَدِهِ يَجَأُ بِهَا فِي بَطْنِهِ فِي نَارِ جَهَنَّمَ خَالِدًا مُخَلَّدًا فِيهَا أَبَدًا» (صحيح البخاري- 5778)

குறிப்பு 3)

وحَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ، حَدَّثَنَا الضَّحَّاكُ يَعْنِي أَبَا عَاصِمٍ، عَنِ ابْنِ جُرَيْجٍ، أَخْبَرَنِي أَبُو الزُّبَيْرِ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " إِذَا دَخَلَ الرَّجُلُ بَيْتَهُ، فَذَكَرَ اللهَ عِنْدَ دُخُولِهِ وَعِنْدَ طَعَامِهِ، قَالَ الشَّيْطَانُ: لَا مَبِيتَ لَكُمْ، وَلَا عَشَاءَ، وَإِذَا دَخَلَ، فَلَمْ يَذْكُرِ اللهَ عِنْدَ دُخُولِهِ، قَالَ الشَّيْطَانُ: أَدْرَكْتُمُ الْمَبِيتَ، وَإِذَا لَمْ يَذْكُرِ اللهَ عِنْدَ طَعَامِهِ، قَالَ: أَدْرَكْتُمُ الْمَبِيتَ وَالْعَشَاءَ "، (صحيح مسلم -2018)

حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي سُفْيَانَ، عَنْ جَابِرٍ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ الشَّيْطَانَ يَحْضُرُ أَحَدَكُمْ عِنْدَ كُلِّ شَيْءٍ مِنْ شَأْنِهِ، حَتَّى يَحْضُرَهُ عِنْدَ طَعَامِهِ، فَإِذَا سَقَطَتْ مِنْ أَحَدِكُمُ اللُّقْمَةُ، فَلْيُمِطْ مَا كَانَ بِهَا مِنْ أَذًى، ثُمَّ لِيَأْكُلْهَا، وَلَا يَدَعْهَا لِلشَّيْطَانِ، فَإِذَا فَرَغَ فَلْيَلْعَقْ أَصَابِعَهُ، فَإِنَّهُ لَا يَدْرِي فِي أَيِّ طَعَامِهِ تَكُونُ الْبَرَكَةُ»، (صحيح مسلم-2033)

குறிப்பு 4)

حَدَّثَنَا إِسْحَاقُ الوَاسِطِيُّ، حَدَّثَنَا خَالِدٌ، عَنِ الجُرَيْرِيِّ، عَنْ طَرِيفٍ أَبِي تَمِيمَةَ، قَالَ: شَهِدْتُ صَفْوَانَ وَجُنْدَبًا وَأَصْحَابَهُ وَهُوَ يُوصِيهِمْ، فَقَالُوا: هَلْ سَمِعْتَ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ شَيْئًا؟ قَالَ: سَمِعْتُهُ يَقُولُ: " مَنْ سَمَّعَ سَمَّعَ اللَّهُ بِهِ يَوْمَ القِيَامَةِ، قَالَ: وَمَنْ يُشَاقِقْ يَشْقُقِ اللَّهُ عَلَيْهِ يَوْمَ القِيَامَةِ "، فَقَالُوا: أَوْصِنَا، فَقَالَ: إِنَّ أَوَّلَ مَا يُنْتِنُ مِنَ الإِنْسَانِ بَطْنُهُ، فَمَنِ اسْتَطَاعَ أَنْ لاَ يَأْكُلَ إِلَّا طَيِّبًا فَلْيَفْعَلْ، وَمَنِ اسْتَطَاعَ أَنْ لاَ يُحَالَ بَيْنَهُ وَبَيْنَ الجَنَّةِ بِمِلْءِ كَفِّهِ مِنْ دَمٍ أَهْرَاقَهُ فَلْيَفْعَلْ، قُلْتُ لِأَبِي عَبْدِ اللَّهِ: " مَنْ يَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ جُنْدَبٌ، قَالَ: نَعَمْ جُنْدَبٌ " (صحيح البخاري- 7152)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/