HOME      Khutba      அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெறுவதற்குரிய வழிகள் | Tamil Bayan - 331   
 

அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெறுவதற்குரிய வழிகள் | Tamil Bayan - 331

           

அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெறுவதற்குரிய வழிகள் | Tamil Bayan - 331


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم

அல்லாஹ்வின் பாதுகாப்பைப் பெற வழிகள்.

 

إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள்: நம்பிக்0கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

 

அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வின் பயத்தை அல்லாஹ்வின் அச்சத்தை உங்களுக்கும் எனக்கும் நினைவூட்டியவனாக,அல்லாஹ்வின் பயத்தை கொண்டு எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹ் சுப்ஹானல்லாஹு தஆலாஅவனே நம்மை பாதுகாக்க போதுமானவன். அவனே நமக்கு உதவப் போதுமானவன். அவன் தான் நமது சிறந்த எஜமானன்.

نِعْمَ الْمَوْلَى وَنِعْمَ النَّصِيرُ

சிறந்த எஜமானன் அவன் தான் சிறந்த பொறுப்பாளன் அவன் தான். சிறந்த உதவியாளனும் அவன் தான். (அல்குர்ஆன் 6 : 40)

فَاللَّهُ خَيْرٌ حَافِظًا وَهُوَ أَرْحَمُ الرَّاحِمِينَ

பாதுகாவலர்களில் சிறந்த பாதுகாவலன் அல்லாஹ் தான். அவன்தான் மகா கருணையுடையவன். கருணையாளர்களில் எல்லாம் மிகக கருணையுடையவன். (அல்குர்ஆன் 12 : 64)

கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ்வுடைய பாதுகாப்பை,அல்லாஹ்வுடைய அருளை,அல்லாஹ்வுடைய உதவியை ஒரு சமுதாயம் அடைய வேண்டும் என்றால் அல்லாஹ்வின் கண்ணியத்தை ஒரு சமுதாயம் பெற வேண்டுமென்றால் அது ஒரு சாதாரணமாக கிடைத்துவிடக்கூடியது அல்ல. கற்பணைகளால் பெறக்கூடியது அல்ல.

மாறாக, அல்லாஹுவின் அந்த உதவியை, அல்லாஹுவின் அந்த கண்ணியத்தை அல்லாஹுவின் அந்த பாதுகாப்பைப் பெறுவதற்கு இந்த சமுதாயம் கொஞ்சம் விலை கொடுத்தாக வேண்டும். இந்த சமுதாயம் கொஞ்சம் தன்னை அர்ப்பணித்தாக வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்;

إِنَّ اللَّهَ اشْتَرَى مِنَ الْمُؤْمِنِينَ أَنْفُسَهُمْ وَأَمْوَالَهُمْ بِأَنَّ لَهُمُ الْجَنَّةَ.

அல்லாஹ் முஃமின்கள் இடமிருந்து நிச்சயமாக அவர்களுடைய உயிரையும் அவர்களுடைய செல்வத்தையும் விலைக்கு வாங்கிக் கொண்டான்.(அல்குர்ஆன் 9 : 111)

அவர்களுக்கு அல்லாஹ் அதற்கு சொர்க்கத்தை வாக்களித்து விட்டான். அவர்கள் அல்லாஹுவிற்காக உயிரைக் கொடுத்தால் அல்லாஹுவிற்க்காக செல்வத்தைக் கொடுத்தால் கண்டிப்பாக அல்லாஹ் தனது வாக்கை நிறைவேற்றுவான்.

وَمَنْ أَوْفَى بِعَهْدِهِ مِنَ اللَّهِ فَاسْتَبْشِرُوا بِبَيْعِكُمُ الَّذِي بَايَعْتُمْ بِهِ وَذَلِكَ هُوَ الْفَوْزُ الْعَظِيمُ

யார் தனது வாக்கை நிறைவேற்றுகிறார்களோ, அவர்கள் தாங்கள் செய்த வியாபாரம் அல்லாஹ்விடத்திலே  வெற்றி பெற்றுவிட்டது என்பதை  கொண்டு நற்செய்தி பெறுங்கள்.இதுதான் மகத்தான வெற்றி என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். (அல்குர்ஆன் 9 : 111)

ஆகவே கண்ணியத்திற்குரியவர்களே! ஒரு தனிமனிதன் என்பவன் அவனுடைய கண்ணியம் அவனுடைய உயர்வு,அவனுடைய பாதுகாப்பு.

இது ஒரு சமுதாயத்தின் கண்ணியத்திலே ஒரு சமுதாயத்தின் பாதுகாப்பிலே இருக்கிறது. சமுதாயம் பாதுகாப்பு பெற்றுவிட்டால் அந்த சமுதாயத்தில்இருக்கக்கூடிய தனிமனிதனும் பாதுகாப்பு பெறுவான்.

ஒரு சமுதாயம் உயர்கிறது என்றால் அங்கே தனிமனிதனும் உயர்வு பெறுவான். கண்ணியத்திற்குரியவர்களே! இப்போது திரும்ப இப்படி பாருங்கள். சமுதாயம் என்பது தனி மனிதர்களால் சேர்ந்த ஒரு கூட்டமைப்பு.

தனிநபர்கள் உண்மையில் அல்லாஹ்வை பயந்து கொண்ட அல்லாஹ்வின் அடியார்களாக  மாறிவிட்டால் அல்லாஹு தாலா அவனுடைய பாதுகாப்புக்கும் அவனுடைய கண்ணியத்திற்கும் அவனுடைய உதவிக்கும் தகுதியான ஒரு உம்மத்தை உருவாக்கிவிட்டான்.

ஒரு தனி மனிதன் அல்லாஹுவினுடைய உண்மையான அடியானாக மாறும்போது இப்படி சமுதாயத்தில் உள்ள ஒவ்வொருவரும் அல்லாஹ்வின் மீது பயம் உள்ளவர்களாக அல்லாஹ் எப்படி முமின்கள் இருக்க வேண்டும் என்று  கட்டளையிட்டானோ  அதன் அடிப்படையில் அவர்கள் மாறும்போது அப்போது சமுதாயம் அல்லாஹ்வின் பாதுகாப்புக்கு தகுதியுடையதாக அல்லாஹ்வின் உதவிக்கு அல்லாஹுவின் கண்ணியத்திற்க்கு தகுதி உடையதாக மாறுகிறது.

ஆகவே,கண்ணியத்திர்க்குரியவர்களே! அல்லாஹ்வுடைய பாதுகாப்பு எதைக்கொண்டு கிடைக்கும்,அல்லாஹ் வாக்களித்த வெற்றி எதைக்கொண்டு  கொடுப்பான் என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இன்று மக்கள் அல்லாஹ்வின் வேதத்தின் பக்கம் திரும்பினால் அல்லாஹ்வின் வேதம் வழிகாட்ட தயாராக இருக்கிறது.

எத்தனையோ மக்களின் வாழ்க்கையை ஒளிமிக்க அந்த வேதம் வழிகேட்டிலிருந்த,கேவலத்தில் இருந்த,மிக மோசமான ஒரு நிலையிலிருந்த,பலவீனத்திலும்,பொருளாதாரத்திலும்,உலகமக்களுக்கும் இன்னும் எத்தனையோ கீழ்த்தரமாக இருந்த,கீழே இருந்த ஒரு பெரும் சமுதாயத்தை உலகத்தில் இப்படிப்பட்ட கண்ணியவான்கள் உருவாக முடியாது,இப்படிப்பட்ட அரசியல்வாதிகள் உருவாக முடியாது,இப்படிப்பட்ட ஆட்சியாளர்கள் உருவாக முடியாது,இப்படிப்பட்ட நேர்மையாளர்கள் உருவாக முடியாது,நீதவான்கள் உருவாக முடியாது என்று அவர்களின் எதிரிகளே அவர்களைப்பற்றி புகழக் கூடிய அளவிற்கு,அவர்களைப்பகைப்பவர்களே  அவர்களின் வரலாறுகளை இப்படி சரியாக எழுத கூடிய அளவிற்கு நிர்ப்பந்தத்திற்கு ஆளானார்கள் என்றால் கண்ணியத்திற்குரியவர்களே! அந்த நபித்தோழர்களின் வாழ்க்கையைய் ஒரு முறை நாம் திரும்பப் பார்க்க வேண்டாமா?

எதனால் அவர்களுக்கு கண்ணியம் கிடைத்தது? எப்படி இருந்த மக்கள் பிறகு எப்படி மாறினார்கள் என்று நாம் நமது நபித்தோழர்களின் வரலாறுகளை படிக்காத வரை அந்த வரலாற்றைக் கொண்டு  படிப்பினை பெறாத வரை அந்த வரலாற்றை நமக்கும் நமது பிள்ளைகளுக்கும் நினைவூட்டி அவர்கள் சென்ற பாதையில் சென்று  வெற்றியை கண்ணியத்தை தேடாதவரை அன்பிற்கு உரியவர்களே அல்லாஹ் வாக்களித்த கண்ணியத்தை அடைய முடியாது.

உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஒரு சம்பவத்தை இங்கே நினைவு கூறுவோம். உமர் அல்பாரூக் ரலியல்லாஹு அன்கு தங்களது காலத்திலே  அல் மஸ்ஜிதுல் அக்ஸாவை வெற்றி கொள்வதற்காக அனுப்பிவைத்த படை இறுதியாக அல்ஹம்துலில்லாஹ் வெற்றியை பெறுகிறது.

அப்போது அங்கே இருந்த கிறிஸ்தவ பாதிரிகள் என்ன விரும்புகிறார்கள் இவையெல்லாம் எங்களது வேதத்திலே முன்னால் எங்களுக்கு கூறப்பட்டு விட்டது இன்று நாங்கள் இந்த சாவியை உங்கள் கலீபா உமர் இடத்தில்தான் ஒப்படைப்போம் அவரை நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

நாங்கள் அவரிடத்திலே இந்த சாவியை  ஒப்படைப்பதற்குத் தயாராக இருக்கிறோம் என்று கூறும்போது அபூஉபைதா  ரளியல்லாஹு அன்ஹு காலித் இப்னு வலீத் அவர்களுக்கு கடிதம் எழுதுகிறார்கள் உமர் அவர்கள் புறப்பட்டு வருகிறார்கள்.

ஒருமாத காலம் பயணம் பைதுல்மாலுடைய  ஒட்டகங்களையோ பைத்துல்மால் உடைய குதிரைகளையோ எடுத்துக்கொள்ளாமல் தனக்கு சொந்தமான சாதாரண ஒரு வாகனத்திலே அந்த ஒரு ஒட்டகத்தில் அவர்கள் புறப்பட்டு வருகிறார்கள். ஒரு மைல் தூரம் உமர் நடந்து வருகிறார் அடிமை சவாரி செய்து வருகிறார். பிறகு அடிமை நடந்து வருகிறார் உமர் சவாரி செய்து வருகிறார்

ஒரு கலீபா ஒரு நாட்டை வெற்றி கொண்டு அந்த நாட்டின் சாவியை மட்டுமல்ல அந்த நாட்டின் கோட்டை சாவியை மட்டுமல்ல மஸ்ஜிதுல் அக்ஸாவின் உடைய சாவியை பெரும்பெரும் பாதிரிகள் அந்த மந்திரி களிடமிருந்து பெறப் போகிறார்.

ஆனால் அவருடைய எளிமையைப் பாருங்கள். அவருடைய அந்த கண்ணியத்தை பாருங்கள். அவருடைய உள்ளத்தில் இருந்த அந்த ஈமானின் உறுதியை பாருங்கள் எந்த அளவுக்கு என்றால் அவர்களுடைய அந்த ஆடை ஒட்டு போடப்பட்ட ஆடையாக இருந்தது.

பழைய ஆடையாக இருந்தது. சிறிது நேரம் ஓய்வெடுத்துக் கொண்டு அந்த ஆடையைத் துவைத்துத் தரும்படி கொண்டுவரச்  சொல்கிறார்கள்.

ஆனால் அங்கே இருந்த அம்ர் இப்னு ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களோ அல்லது மற்றுமொரு சகாபியோ உங்களுக்கு வேறு ஒரு ஆடையை நாங்கள் செய்து வைத்திருக்கிறோம் அந்த ஆடையை நீங்கள் அணிந்து கொள்ளுங்கள் என்று சொல்கிறார்கள்.

உமர் அவர்கள் அந்த ஆடையை அணிகிறார்கள் ஆனால் அந்த ஆடையிலே பகட்டு தெரிகிறது அந்த ஆடையை அவர்கள் விரும்பவில்லை உடனே அவர்கள் அந்த ஆடையை கழற்றி விட்டு தனது பழைய ஆடையை திரும்பக் கொண்டுவரும்படி சொல்கிறார்கள்.

இப்படி அணிந்துகொண்டு அந்த குத்ஸ் நகரத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் போது அபூ உபைதா ரலியல்லாஹு அன்ஹு நபித்தோழர்களில் மிக நெருக்கமான நபித்தோழர்  அமீன் (அமீனு ஹாதிகில் உம்மா) இந்த உம்மத்தின் நம்பிக்கைக்குரிய அமீன் என்ற வாக்கு பெற்ற, நபியினால் புகழப்பெற்ற அந்த சஹாபி உமர் அவர்களுக்கு ரொம்ப நெருக்கமானவர்.

உமர் அவர்களிடத்தில் வந்து சொல்கிறார்;. உமர் அவர்களே!அமீருல் முஃமினீன் அவர்களே!உங்களுடைய ஆடையை கொஞ்சம் மாற்றலாம் அல்லவா உங்களுடைய வாகனத்தைக் கொஞ்சம் மாற்றலாம் அல்லவா இந்த மக்கள் கொஞ்சம் உடையிலும் ஆடையிலும் வாகனத்திலும் கொஞ்சம் ஒரு வெளிப் பார்வையைப் பார்க்கக் கூடியவர்கள்.

அதிலே கொஞ்சம் உயர்ந்ததாக இருந்தால்தான் இவர்கள்  மக்களைக் கொஞ்சம் மதிப்பார்கள். இப்படிப்பட்ட ஒரு நிலையிலே நீங்கள் வந்தால் அவர்கள் உங்களை ஏதாவது இளக்காரமாக பார்த்து விட்டால் அது  எங்களுக்கு அல்லவா ஒரு பெரிய தலை குனிவாக அல்லது ஒரு கோபத்தை ஊட்டக் கூடியதாக இருக்கும் என்று அபூ உபைதா அவர்கள் சொன்ன போது, அபு உபைதாவின் நெஞ்சிலே உமர் அவர்கள் ஓங்கி ஒரு அடி அடிக்கிறார்கள்.

அடித்துவிட்டு சொல்கிறார்கள் அபு உபைதா இந்த வார்த்தையை நீ அல்லாத வேறு ஒருவர் சொல்லியிருந்தால் என்ன நடந்திருக்கும் தெரியுமா? என்று கூறிவிட்டு அவர்கள் சொல்லக்கூடிய அந்த வார்த்தையை பாருங்கள்.

نحن قوم اعزنا الله بالاسلام

நாங்கள் எப்படிப்பட்ட  சமுதாயம் தெரியுமா? அல்லாஹ் இஸ்லாமைக் கொண்டு எங்களுக்கு கண்ணியத்தைக் கொடுத்தான். அல்பிதாயா வந்நிஹயா

நாங்கள் என்ன கண்ணியத்திற்கு தகுதியானவர்களாகவா இருந்தோம் உயர்வுக்கும் மதிப்புக்கும் ஆட்சி அதிகாரத்திற்கும் தகுதி உள்ளவர்களாகவா இருந்தோம்

நஹ்நு கவ்முன் அஅஸ்ஸநல்லாஹு பில் இஸ்லாம்

அல்லாஹ் நமக்கு  இந்த இஃஜ்ஜத்தை கொடுத்திருப்பது கிஸ்ராவை வீழ்த்தினோம் கைசர்ரை வீழ்த்தினோம் யாரைல்லாம் எதிற்தோமோ யாரெல்லாம் நம்மை எதிர்த்தார்களோ இந்த இஸ்லாத்தில் அவர்களின் ஆட்சிகளையெல்லாம் அடிச்சுவடு இல்லாமல் மீண்டும் எழ முடியாத அளவிற்கு நாம்வீழ்த்தி இருக்கிறோம் என்றால் நாம் எதைக் கொண்டு வீழ்த்தினோம் எந்த ஒரு வார்த்தையை கொண்டு நாம் வீல்த்தினோம்.

இஸ்லாம் என்ற அந்த ஒரு மார்க்கத்த்தைக் கொண்டு தான் அல்லாஹ் நமக்கு இஜ்ஜத்தைக் கொடுத்திருக்கிறான்.

وماهما ابتنغينا العزة لغيره اذنلنا الله

ஆகவே  நாம் எப்போது எந்த சூழ்நிலையில் இருந்தாலும் இஸ்லாம் அல்லாத வேறொன்றைக் கொண்டு இஜ்ஜத்தைத் தேடினால் கண்ணியத்தை, வெற்றியைத் தேடினால் கண்டிப்பாக அல்லாஹ் நம்மைக் கேவலப்படுத்திவிடுவான் இழிவுபடுத்தி விடுவான்.

உமர் அவர்களுடைய இந்த வார்த்தை நாமும் மனப்பாடம் செய்ய வேண்டியது மட்டுமல்ல நமது பிள்ளைகளுக்கு போதிக்க வேண்டியவை நமது வாலிபர்களுக்கு நினைவூட்ட வேண்டியவை சகோதரர்களே இன்றைய காலம் இப்படிப்பட்ட ஒரு காலமாகத்தான் மாறியிருக்கிறது.

இஸ்லாம் என்பது மஸ்ஜிதோடு நிறுத்தப்பட ஒன்றிய நிறுத்தப்பட வேண்டிய ஒன்றாக, இஸ்லாம் என்பது முஸ்லிம்களுடைய ஜனாஸா அல்லது நிக்காஹ் உடைய சடங்குகளோடு நிறுத்தப்படக் கூடியதாக, இஸ்லாமிய அடையாளங்கள் இஸ்லாமிய கோலங்கள் இஸ்லாமிய பேச்சுகள் எல்லாம் ஒரு சில சபைகளில் பேசப்பட்டு விட்டு அதற்குப்பின்னால் மறக்கக்கப் படக் கூடியதாக அல்லது அதற்குப்பின்னால் அலட்சியம் செய்யப்படக் கூடியதாக வாழ்க்கைக்கும் அதற்க்கும் சம்பந்தம் இல்லாதவர்கள் போன்று ஒரு சூழ்நிலையை  உருவாக்க முயற்சிக்கிறார்கள்.

மாற்றார்களுக்கு பயந்தவர்களாக மாற்றார்களின் அந்த பார்வைக்கு பயந்தவர்களாக மாற்றார்களின் அந்த மிகைப்பைப் பார்த்து பயந்தவர்களாகபலர் தங்களைத் தாங்களே முஸ்லிமின் அடையாளத்தை வெளிப்படுத்திக்கொள்ள மறுக்கிறார்கள் பயப்படுகிறார்கள்

அல்லது இந்த சூழ்நிலையில் இருந்து  தப்பிப்பதற்கு நாம் என்ன செய்யலாம் என்று பலவிதமான திட்டங்களை பலவிதமான தந்திரங்களை பலவிதமான ஏற்பாடுகளை செய்ய நினைக்கிறார்கள்.

ஆனால் கண்ணியத்திற்குரியவர்களே அல்லாஹ் விதித்த  ஏற்பாட்டைத் தவிர அல்லாஹ் கற்றுக் கொடுத்த வழியைத் தவிர அல்லாஹ் போதித்த அந்த ஒரே ஒரு பாதையை தவிர வேறு எந்த பாதையில் சென்றாலும் சரி வேறு எந்த வழியில் சென்றாலும் சரி அதற்காக இவர்கள் என்ன தான் விலை கொடுத்தாலும் சரி முயற்சி செய்தாலும் சரி அதன் முடிவு இழிவாக தான் இருக்கும்.

அதன் முடிவு தோல்வியாக தான் இருக்கும் அதன் முடிவு கேவலமாக தான் இருக்கும் என்பதைத் தவிர வெற்றியாக இருக்காது.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் அந்த ஸஹாபாக்களுக்கு எதைக்கொண்டு கண்ணியத்தை கொடுத்தான் என்றால் இந்த இஸ்லாம் என்ற இந்த தீன் இந்த மார்க்கம் அவர்களிடத்திலே வந்தபோது இந்த மார்க்கம் அவர்களை எப்படி மாற்றியது இந்த மார்க்கத்தால் அவர்கள் எப்படி மாற்றப்பட்டார்கள் இந்த மார்க்கத்தோடு என்ன தொடர்பு வைத்திருந்தார்கள்?

கவனித்துக் கேளுங்கள்,இந்த மார்க்கத்தோடு என்ன ஒரு தொடர்பு வைத்திருந்தார்கள்? இந்த மார்க்கத்தை எப்படி மதித்தார்கள்? இது தான் சகோதரர்களே!

இன்று நாமும் தொழுகிறோம் அதில் சந்தேகமில்லை.

நம்மில் பலர் ஜக்காத்தும் கொடுக்கிறார்கள் அதில் சந்தேகமில்லை

பலர் ஹஜ்ஜுக்கும் செல்கிறார்கள் நோன்பு வைக்கிறார்கள்

இன்னபிற நஃபிலான பர்தான வணக்க வழிபாடுகளைச் செய்கிறார்கள் வழிபாடுகள் இபாதத்கள் இன்னும் பல கடமைகள் உடைய வெளித்தோற்றங்கள் இருக்கின்றன.

ஆனால்,மார்க்கத்தோடு அவர்களுடைய உளரீதியான தொடர்பு மார்க்கத்தோடு அவர்களுடைய உளரீதியான பற்று மார்க்கம் என்றால் தீன் என்றால் அதற்கு அவர்கள் கொடுக்கக்கூடிய விலை என்ன அதற்கு அவர்களுடைய உள்ளத்தில் வரக்கூடிய துடிப்பு அதற்கு அவர்கள் கொடுக்கக்கூடிய விலை மதிப்பு என்ன அவர்கள் என்ன தீனுக்காக செய்ய தயாராக இருக்கிறார்கள்?

இதுதான் சகோதரர்களே,சஹாபாக்களை பொருத்தவரை அவர்களிடத்தில் இருந்த மிகப்பெரிய ஒரு அடையாளம் என்னவென்றால் குர்ஆனுடைய நூற்றுக்கணக்கான வசனங்கள் அவர்களைப்பற்றி புகழும்போது அவர்கள் இந்த தீனுக்காக தங்களது உயிரையும் செலவு செய்ய தயாராக இருந்தார்கள்.

தங்களது செல்வத்தையும் செலவு செய்ய தயாராக இருந்தார்கள் அதில் எந்த விதத்திலும் கருமித் தனத்தை அவர்கள் காட்டவில்லை கஞ்சத்தனத்தை காட்டவில்லை. அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸூலுக்கும் தீனுக்கும் தனது உயிரை பொருளை  செல்வத்தைக் கொடுப்பது என்றால் அதிலே அவர்கள் போட்டி போட்டுக்கொண்டார்கள்.

நான் முன்னால் இருக்க வேண்டும் நான் முன்னால் இருக்க வேண்டும் என்று நாம் எப்படி செய்கிறோம் நாம் பிறரை தள்ளிக் கொண்டு இருக்கிறோம் அவர் செய்வாரா அவர் கொடுப்பாரா நாம் எப்படியாவது இந்த இடத்திலே கொஞ்சம் நழுவி கொள்ளலாமா கொஞ்சம் தலையை குனிந்து கொள்ளலாமா நம்மைப் பார்க்காமல் இருந்து விடலாமா என்றெல்லாம் நாம் என்ன செய்கிறோம் என்றால் பின்னால் நம்மை தள்ள முயற்சிக்கிறோம்.

ஆனால் அவர்கள் என்ன செய்தார்கள் தனக்கு முன்னால் பிறர் சென்றுவிடக் கூடாது என்று பிறரை முந்த முயற்சித்தார்கள்.

எத்தனையோ போர்களைப்பாருங்கள் அல்லாஹ்வுடைய தூதரின் உயிரைப் பாதுகாப்பதற்காக ஆண்கள் மட்டுமல்ல பெண்கள் போட்டி போட்டார்கள்.

போரிலே,சிறுவர்கள் போட்டி போட்டார்கள் அது போன்று செல்வத்தை செலவழிப்பது என்றால் அதற்காக ஒவ்வொரு சஹாபியும் தன்னிடம் இருந்ததை எல்லாம் கொண்டு வந்து கொடுத்தார்கள்.

ஒரு நபித்தோழர் உடைய வீட்டிலே அந்த நேரத்திலே ஒருபிடி தானியத்தை தவிர வேறொன்றுமே கிடையாது. ஒருபிடி கோதுமை தவிர வேறு ஒன்றும் கிடையாது.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் தபூக் போருக்காக அறிவித்தார்கள் யாரிடத்தில் எது இருக்கிறதோ கொண்டு வந்து கொட்டிக் கொண்டே இருந்தார்கள்.

உணவு தானியங்கள் ஒருபக்கம் கொட்டப்படுகின்றன. ஒரு பக்கம் செல்வங்கள் தீனார் திர்கங்கள் கொட்டப்படுகின்றன.

ஒருபக்கம் ஆடைகள் கொண்டுவந்து கொட்டப்படுகின்றன. அந்த உணவு தானியங்களின் குவியலிலே,ஒரு நபித்தோழர் அன்சாரி வருகிறார் ஒரு கையளவு கோதுமையை எடுத்துக்கொண்டு வந்துஅந்த குவியலிலே போடுகிறார்.

அங்கே அமர்ந்திருந்த சில முனாஃபிக்குகள்,மஸ்ஜிதுன் நபவியிலே அமர்ந்திருந்த தொழுகையாளிகள் நபியின் உம்மத்துக்கள் என்ற போர்வையில் அமர்ந்திருந்த சில முனாஃபிக்குகள்,அப்போது பரிகாசம் செய்கிறார்கள் என்ன இவர்கள்?

இவர்கள் கொடுக்கக்கூடிய கைப்பிடிக்கவளத்தின் இந்தப் பிச்சையிலா மார்க்கம் ஓங்கி விடப்போகிறது? இந்த ஜிஹாது நடந்து விடப்போகிறது ?

இது என்ன ஒரு தர்மமா? என்பதாக கேவலமாக அந்த சஹாபாக்களை பார்த்து அந்த அந்த ஏழை அன்சாரிகளை பார்த்து அவர்கள் கொடுத்த அந்த தர்மத்தை பார்த்து பரிகாசம் செய்கிறார்கள்.

அன்பிற்குரியவர்களே!அர்ஷ் உடைய அதிபதி எப்படிப்பட்ட வசனத்தை இறக்குகிறான் தெரியுமா?

الَّذِينَ يَلْمِزُونَ الْمُطَّوِّعِينَ مِنَ الْمُؤْمِنِينَ فِي الصَّدَقَاتِ وَالَّذِينَ لَا يَجِدُونَ إِلَّا جُهْدَهُمْ فَيَسْخَرُونَ مِنْهُمْ سَخِرَ اللَّهُ مِنْهُمْ وَلَهُمْ عَذَابٌ أَلِيمٌ

அல்லாஹ் சொல்கிறான் அல்லாஹ்வுடைய பாதையிலே கொடுப்பதற்காக தங்கள் இடத்தில் எதுவும் இல்லை என்றாலும் எதையாவது அல்லாஹ்வின் பாதையிலே தர்மம் செய்ய வேண்டுமென்று என்பதற்காக வந்த அந்த தோழர்களை வறுமையிலும் அல்லாஹ்வின் பாதையில் கொடுக்க வேண்டும் என்று துணிந்து  விருப்பத்தோடு வந்த அந்த முமின்களை இந்த முனாஃபிக்குகள் பரிகாசம் செய்கிறார்களா? அல்லாஹ் அவர்களை பரிகாசம் செய்வான் அவர்களின் உள்ளத்திலே நயவஞ்சகம் எழுதப்பட்டது. மறுமையில் அவர்களுக்கு பயங்கரமான தண்டனை இருக்கிறது. (அல்குர்ஆன் 9 : 79)

கண்ணியத்திற்கு உரியவர்களே! அந்த தோழர்கள் உடைய அந்த தியாகத்தை அல்லாஹ் எப்படி ஏற்றான் பாருங்கள். இதுதான் கண்ணியத்திற்குரியவர்களே,வெற்றியின் ரகசியமாக அந்த நபித்தோழர்கள் இடத்திலே இருந்தது.

தீனை முன்னிலை வைத்தார்கள். தீன் ஓங்க வேண்டும் என்பதற்காக செலவழிக்கத் தயாராக இருந்தார்கள். சமுதாயத்தைப் பாதுகாப்பதற்க்காக சமுதாயத்தின் கண்ணியத்திற்க்காக  சமுதாயத்திற்கு செலவு செய்ய தயாராக இருந்தார்கள்.

ஒருபக்கம் அல்லாஹ்வுடைய தீனுக்குக் கொடுக்கத் தயாராக இருந்தார்கள் இன்னொரு பக்கம் அல்லாஹ்வின் தீனை ஏற்றுக்கொண்ட உம்மத்திற்கு அது ஏற்கனவே,இஸ்லாத்தை ஏற்ற சமுதாயமாக இருக்கக்கூடிய ஏழைகளாக இருக்கட்டும் அல்லது இஸ்லாமை ஏற்று வரக்கூடிய புதிய ஏழைகளாக இருக்கட்டும்.

இப்படி சமுதாயத்திற்கு செலவு செய்வதிலே,எந்தவிதத்திலும் அவர்கள் கருமித்தனம் காட்டாதவர்களாக கஞ்சத்தனம் காட்டாதவர்களாக அவர்கள் விளங்கினார்கள்.

எத்தனை உதாரணங்களைச் சொல்லலாம் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் இஸ்லாமை ஏற்று வந்த அந்த முஹாஜிர் தோழர்களை இஸ்லாமை ஏற்றுக்கொண்டிருந்த அந்த அன்சாரி தோழர்களுக்கு சகோதரர்களாக மாற்றிக் கொடுத்தார்கள்.

தனது உறவை விட,தனது தாய் தந்தையை விட,தான் பெற்ற பிள்ளைகளை விட,இந்த முஹாஜிர் உனக்கு  வாரிசு என்று நற்செய்தியை சொன்னார்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள்.அப்படியா அல்லாஹ்வின் தூதரே நான் அவரை எனது சகோதரராக எடுத்துக் கொண்டேன். நான் இறந்தால் எனது சொத்துக்கக்கு இவர் வாரிசாவார்.

எனது மனைவியை எனது பிள்ளைகளை,என் உற்றார் உறவினர்களை காட்டிலும் இவர் எனக்கு வாரிசாக ஆகுவார் என்று இஸ்லாமின் அந்த தொடக்கக் காலத்திலே அந்த முஹாஜிர் ஏழைகளை தங்களுடைய சொத்து களுக்கு தங்களது வீடுகளுக்கு தங்களது வியாபாரத்திற்கு பங்காளிகளாக ஆக்கிக் கொண்டார்களே, இவர்களுடைய இந்த தியாகத்தை பாருங்கள்

அல்லாஹு சுபஹானாஹு தஆலா இப்படிப்பட்ட அந்த ஈமானிய பற்றைக்கொண்டும் சமுதாயத்தின் பற்றை கொண்டும் அவர்களை ஒரு பலமிக்க, அவர்களை ஒரு கண்ணியம் மிக்க சமுதாயமாக உருவாக்கினான்.

தீனுடைய உயர்வு தீனுடைய கண்ணியம் அவர்களது உள்ளத்திலே மிகைத்திருந்தது அல்லாஹ்வோடு தொடர்பு அவர்களுக்கு பசுமையாக இருந்தது. அல்லாஹ்வின் வேதத்தோடு அவர்களுக்கு தொடர்பு பசுமையாக இருந்தது.

தங்களது சமுதாயத்திற்கு மத்தியிலே அவர்கள் நேர்வழியை பரப்புவதிலே நன்மையை ஏவுவதிலே தீமையை தடுப்பதிலே அல்லாஹ்வின் குர்ஆனோடு தொடர்பை பசுமையாக வைத்திருப்பதிலே எந்த விதத்திலும் அவர்கள் அலட்சியம் காட்டவில்லை.

அல்லாஹு சுபஹானஹு தாலா அந்த நபித்தோழர்களைப் பற்றி சொல்லும்போது

ஏழாவது அத்தியாயம் 170 வசனத்திலே அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள் அவர்களுடைய அந்த கண்ணியத்திற்கு உண்டான ரகசியத்தை அல்லாஹ் சொல்கிறான்.

وَالَّذِينَ يُمَسِّكُونَ بِالْكِتَابِ وَأَقَامُوا الصَّلَاةَ إِنَّا لَا نُضِيعُ أَجْرَ الْمُصْلِحِينَ

அந்த நபித்தோழர்கள் எப்படி வெற்றி பெற்றார்கள்,அல்லாஹ்வின் வேதத்தை உறுதியாகப் பிடித்தார்கள்.

சாதாரண வார்த்தையை அல்லாஹ் சொல்லவில்லை பிடிப்பதற்கு அதுவும் உறுதியாக பிடிப்பதற்கு اخذ அகத என்ற வார்த்தையே போதுமான வார்த்தை. ஆனால் அதை விட ஆழமான ஒரு வார்த்தை எந்த விதத்திலும் கையின் பிடியிலிருந்து நழுவி விடாத அளவிற்கு யாராலும் பிடுங்கி விட முடியாத அளவிற்கு யாராலும் பறித்துவிட முடியாத அளவிற்கு  ஒரு பொருளை பலமாக ஒருவர் பிடிப்பார் என்றால் அப்போது சொல்லப்படும்,

  مسك بشيءஎப்படிப்பட்ட வார்த்தை என்பதை பாருங்கள் கை வெட்டு படுமே தவிர கையின் பிடி தளராது.

ஆம் அப்படித்தான் நடந்தது. முஸ்அப் இப்னு உமைர் ரலியல்லாஹு அன்ஹுஅவர்களை எடுத்துக்கொண்டு  சஃபீய்யுல் இஸ்லாம் தாயியதுல் இஸ்லாம் அல்லாஹ்வின் தூதரால் இஸ்லாத்தின் முதல் அழைப்பாளர் இஸ்லாத்திர்க்காக வேண்டி தூதரால் அனுப்பப்பட்ட முதல்  தூதர் என்ற சிறப்புப் பெற்றார்கள்.

முஸ்அப். மிகப் பெரிய செல்வச் செழிப்பில் வாழ்ந்த அந்த நபித்தோழர் அப்து தார் உடைய  குடும்பத்தில் உயர்ந்த தரத்தில் இருந்த அந்த தோழர் அல்லாஹ்வுடைய இந்த தீனுக்காக மதினாவிற்கு அனுப்பப்பட்ட போது அத்தனையும் துறந்துவிட்டு ஒரு அகதியாக,ஒரு ஏழையாக,ஒரு ஃபக்கீராக  மதினாவிற்கு வருகிறார்.

அல்குர்ஆனை மதினா வாசிகளுக்கு போதிப்பதற்காக,இஸ்லாமை போதிப்பதற்காக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அந்த முஸ்அப் ரலியல்லாஹு அன்ஹு  அவர்களுக்கு உகதுப் போரிலே கொடியை கையிலே தருகிறார்கள்.

முஸ்லிம்களுடைய கொடி முஸ்‌அப்பிர்க்கு கொடுக்கப்படுகிறது. எதிரிகள்அவர்களைப் பார்க்கிறார்கள். இவருடைய கொடியை வீழ்த்த வேண்டும் என்பதற்காக இவருடைய வலது கையிலே பிடிக்கப்பட்ட அந்தக் கொடி அல்லது இடது கையில் பிடிக்கப்பட்ட கொடி அந்த கை வெட்டப்படுகிறது.

பிறகு மற்றொரு கையால் கொடி பிடிக்கிறார் அந்தக் கையும் வெட்டப்படுகிறது.

பின்னர் வெட்டப்பட்ட இரண்டு கைகளாலும் நெஞ்சோடு அணைத்து அந்த கொடியை பிடிக்கிறார். பிறகு பின்புறத்திலிருந்து அவர்களது முதுகிலே ஈட்டி குத்தப்படுகிறது.

விலக்கூடிய நேரத்திலே,முஸ்லிம்களே! அல்லாஹ்வின் தூதர் எனக்குக் கொடுத்த இந்த கொடியை பிடியுங்கள் என்று அவர்கள் சொல்கிறார்கள்.

அப்போது இன்னொரு முஸ்லிம் பிடிக்கிறார். அதற்குப்பின்னால் முஸ்அப் கீழே விழுகிறார் உயிரை விடுகிறார்.

எப்படிப்பட்ட உறுதி பாருங்கள். இதுதான் தீனுக்கு அவர்கள் கொடுத்த அந்த முக்கியத்துவம். தன் கை வெட்டப்படுகிறது. ஆனால் அல்லாஹ்வின் தூதர் முஸ்லிம்களின் கண்ணியமாக கொடுத்த இந்த கொடியை நான் விடமாட்டேன். எனது கை வெட்டப்பட்டாலும்  சரி.

இரண்டு கை வெட்டப்பட்டு விட்டன ஒரு மனிதனுக்கு பிறகு நெஞ்சிலே குத்தப்படுகிகிறார்.அவர் சமாளிக்கிறார் தான் இறந்தாலும் பரவாயில்லை அல்லாஹ்வுடைய தூதர் முஸ்லிம்களின் கண்ணியமாக கொடுத்த அந்தக் கொடி விடப்படக்கூடாது என்று.

கண்ணியத்திற்குரியவர்களே! ஒரு ரசூலுல்லாஹ்வின் ஒரு அமானிதமாக கொடுக்கப்பட்ட இந்த கொடியை பாதுகாப்பதிலே நபித்தோழர்களின் நிலைமை இப்படிப்பட்ட உயரிய ஒரு அரிய ஒரு போராட்டம் இருந்ததென்றால்,குர்ஆனைப் பாதுகாப்பதிலே அவர்கள் எவ்வாறு போராடி இருப்பார்கள்.

அல்லாஹ் சொல்கிறான் பாருங்கள் குர்ஆனுடைய ஈடுபாடு அவர்களுக்கு இருக்கும் போது

وَالَّذِينَ يُمَسِّكُونَ بِالْكِتَابِ

அல்லாஹ் சொல்கிறான்,குர்ஆனை அவர்கள் பற்றிப் பிடித்துக் கொண்டிருந்தார்கள்.

ஏன்?இன்னும் ஒரு  உதாரணத்தை கூட சொல்லலாம்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் தாத்துர்ரிக்கா என்ற போரை முடித்து விட்டு திரும்பும் போது எதிரிகள் திரும்பவந்து நம்மை தாக்கலாமோ என்ற ஒரு பயத்தால் அச்சத்தால் இரண்டு நபித்தோழர்களை முஸ்லிம்களை பாதுகாப்பதற்காக இரவிலே நிறுத்தி வைத்துவிட்டார்கள்.

மற்ற தோழர்கள் எல்லாம் ஓய்வெடுத்துக்கொண்டிருக்கிறார்கள்.

ஓர் அன்சாரி ஓர்  முஹாஜிர். அன்சாரித்தோழர்  முஹாஜிரிடத்திலே  சொல்கிறார். முஹாஜிரே,நீங்கள் தூங்குங்கள்.

ஒருவேளை இரண்டுபேரும்விழித்திருந்தால்,இரண்டுபேரும் தூங்கி விடலாம்.பாதி இரவு நான் விழித்திருக்கிறேன்.பிறகு பாதியில் உங்களை எழுப்பி விடுகிறேன்.நீங்கள் தூங்குங்கள் என்பதாக சொல்கிறார்.

விழித்திருக்கின்ற அந்த அன்சாரித்தோழருடைய குர்ஆனின் ஈடுபாட்டைப் பாருங்கள்.

போரிலிருந்து வருகிறார் எவ்வளவு அசதி இருக்கும்,என்ன களைப்பு இருக்கும் அந்த முஹாஜிர் தூங்கிய உடனே அன்சாரித் தோழர் எழுந்து குர்ஆனை ஓத ஆரம்பிக்கிறார்.

இரண்டு ரக்அத் நபில் தொழ ஆரம்பிக்கிறார் அந்த இரண்டு ரக்அத்தில் சூரத்துல் கஹ்ஃபை ஓதுதுகிறார். அவர்களைத் துரத்தி வந்த ஒரு எதிரி அங்கே முஸ்லிம்கள் பாராவுக்காக நிற்பதை பார்த்து விட்டு தூரத்திலிருந்து ஒரு அம்பைக் கொண்டு அந்த ஒரு முஸ்லிமைத்(தொழுதுகொண்டிருந்த அந்த ஸஹாபியைத்) தாக்கும்பொழுது,ஒரு அம்பு அவர்களுடைய காலிலே படுகிறது.

ரத்தம் பீரிட்டு கொண்டுசெல்கிறது. அதை பிடிங்கி எடுத்துவிட்டுமீண்டும் தொழுகையிலே நிற்கிறார். அடுத்த அம்பு அவர்களுடைய உடலின் மையப்பகுதியிலே படுகிறது. ரத்தம் பீரிட்டு ஓடுகிறது அதிகமாக ரத்தம் கசிந்த காரணத்தால் மயக்கம் அவர்களுக்கு வர பார்க்கிறது.

உடனடியாக அந்த அம்பையும் பிடுங்கி எடுத்துவிட்டு தனது தொழுகையை சுருக்கமாக முடித்து விட்டு தனது தோழர் முஹாஜிரை எழுப்பும் போது,தோழர் பயந்து விடுகிறார் தோழரே இவ்வளவு ரத்தம் சிந்திகிடக்கிறதே என்ன நடந்தது உங்களுக்கு?

என்னை முதலிலே நீங்கள் எழுப்பி இருக்க வேண்டாமா?என்று

அந்தத் தோழர் சொல்லக்கூடிய பதிலை பாருங்கள் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் எனக்குக் கொடுத்த  அந்த பொறுப்பை நான் பாழாக்கி விட்டேன்  என்ற குற்றம்,என்ற அந்த குற்ற பிடிப்பு என்மீது வராது என்று இருந்திருக்குமேயானால் தொழுகையிலே நான் ஆரம்பித்த சூராவை அவசரப்பட்டு முடித்திருக்க மாட்டேன். (முஸ்னத் அஹ்மத் 14704)

இன்று பாருங்கள் ஒரு பத்து நிமிடம் கூட,இருபது நிமிடம் கூடமுஸ்லிம்களால் உட்கார்ந்து குர்ஆனை ஓதமுடியவில்லை. அல்லாஹ்வின் வேதத்தை திறந்து அவர்கள் படிப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை.

மனம் ஈடுபட மறுக்கிறது உள்ளம் ஈடுபட மறுக்கிறது. வேதத்தோடு அவர்கள் சுவையை அறியவில்லை.அதை ஓதுவதில் சுவையை அறியவில்லை.

அதைப் படிப்பதிலே தங்களது பிள்ளைகளுக்கு படித்துக் கொடுப்பதிலே அதற்காக செலவு செய்வதிலே அதைப் படித்துக்கொடுக்கக்கூடிய மக்களுக்கு உதவி செய்வதிலே அவர்களது மனம் ஈடுபடுவதில்லை. அல்லாஹ்வுடைய வேதத்தோடு அவர்களுக்கு இருக்கக் கூடிய பலவீனமான தொடர்பைப் பாருங்கள்.

தொழுகையிலே குர்ஆன் ஓதப்பட்டால் அது தனி, தான் தனி என்ற நிலையிலே மக்கள் இருந்து கொண்டு  இருக்கிறார்கள்.

வரப்போகிறது ரமழான் உடைய மாதம் நீங்கள் பார்த்துக்கொள்ளலாம்.

முஸ்லிம்களுக்கு குர்ஆனோடு இருக்கக்கூடிய தொடர்பை. சொல்வார்கள் நாங்கள் ஒரு ரமழானிலே ஒரு குர்ஆனை முழுமையாகஓதபோகிறோம் என்று.

அந்த குர்ஆனை அவர்கள் எப்படி ஓதுகிறார்கள். ஓதப் படக்கூடிய குர்ஆனை எப்படி கேட்கிறார்கள் என்பதை பாருங்கள்.

எந்த அளவுக்கு அந்த குர்ஆனை வேகமாக விரட்ட முடியுமோ,பொருளும்  தெரியாமல்,உச்சரிப்பும் சரியில்லாமல் ஓதப் படக்கூடிய வார்த்தையிலும் தெளிவு இல்லாமல்  எவ்வளவு சீக்கிரமாக யார் ஓதுகிறாரோ அவர்தான் மக்களிடத்திலே அதிகமாக அங்கீகரிக்கப்பட்ட ஹாபிழ் ,அதிகமாக அங்கீகரிக்கப்பட்ட  இமாம்.

ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தோழர்கள் ஒவ்வொரு ரக்அத்திலும் குறைந்தது 200 க்கும் மேற்பட்ட வசனங்களை சூரா பகராவின் உடைய அளவிற்கு ஒவ்வொரு  ரக்அத்திலும் ஓதுவார்கள்.

சூரத்துல் பகராவை பிரித்து இரண்டு மூன்று ரக்அத்களிலே ஓதி ருகுஉ சுஜுது ஐ சற்று நீளமாக செய்து விட்டால்,அப்போது மக்கள் சொல்வார்கள். பரவாயில்லை,இமாம் இன்று நம் மீது கொஞ்சம் இரக்கம் காட்டினார் என்று.

எப்படி நிலையிலேயே நீண்டநேரம் நிற்பார்கள் அந்த நிலையை கொஞ்சம் சுருக்கிக்கொண்டு ருகூவு சுஜூதிலே அந்த நேரத்தை செலவழிப்பார்கள் சில நேரங்களிலேநிலையிலே நேரங்களை செலவழிப்பார்கள். ஆனால் இன்று பார்த்தால் எத்தனை இமாம்கள் தக்பீர் கட்டியதர்க்குப் பிறகு சனா ஓதாமல் கிராத்தை ஆரம்பித்துவிடுவார்கள்.

அத்தஹிய்யாத்து ஓதுவதற்க்கு நேரம் இருக்காது ருகூஉ சுஜூதிலே திக்ருகளை முழுமையாக செய்வதற்க்கு நேரம் இருக்காது.

குர்ஆனோடுநமது தொடர்பு எவ்வளவு பலவீனமாகிக்கொண்டிருக்கிறது பாருங்கள்.

அல்லாஹ் சொல்கிறான்

وَالَّذِينَ يُمَسِّكُونَ بِالْكِتَابِ وَأَقَامُوا الصَّلَاةَ إِنَّا لَا نُضِيعُ أَجْرَ الْمُصْلِحِينَ

வேதத்தை உறுதியாக பிடித்தவர்கள்  தொழுகையை நிலை நிறுத்தியவர்கள். இப்படிப்பட்ட சீர்த்திருத்தவாதிகளுக்கு அவர்களது கூலியை நாம் வீணாக்க மாட்டோம்.(அல்குர்ஆன் 7 : 170)

அந்தக்கூலி அவர்களுக்கு இம்மையிலே கண்ணியமாக வெற்றியாக உயர்வாக கொடுக்கப்படும். இதுபோன்று இன்னொரு வசனத்தை அல்லாஹ் சுபஹானாஹு தஆலா ஸுரா அல் பாதிரிலே மிகத் தெளிவாக சொல்கிறான் கண்ணியத்திர்க்குரியவர்களே!

நபித்தோழர்களின் கண்ணியம் எதில் மறைந்திருந்தது.

إِنَّ الَّذِينَ يَتْلُونَ كِتَابَ اللَّهِ وَأَقَامُوا الصَّلَاةَ وَأَنْفَقُوا مِمَّا رَزَقْنَاهُمْ سِرًّا وَعَلَانِيَةً يَرْجُونَ تِجَارَةً لَنْ تَبُورَ

அல்லாஹ்வின் வேதத்தை ஓதக்கூடிய அந்த மக்கள் தொழுகையை சரியாக பேணக்கூடிய அந்த மக்கள் அவர்கள் நாம் அவர்களுக்கு கொடுத்ததில் இருந்து எனது தீனை பாதுகாப்பதற்காக,எனது நபியின் உம்மத்தை பாதுகாப்பதற்காக ரகசியமாகவும் வெளிப்படையாகவும் செலவு செய்து கொண்டிருக்கிறார்களே இவர்கள் தான் நஷ்டம் அடையாத வியாபாரத்தை ஆதரவு வைப்பவர்கள். (அல்குர்ஆன் 35 : 29)

இன்று முஸ்லிம்கள் தனது சொந்த செலவிற்கு தன்னுடைய குடும்பத்தின் சொந்த செலவிற்க்கு தனது சொந்த வருமானத்திர்க்கென்று தனது பாதுகாப்பிற்க்கென்று தனது பிள்ளைகளின் பாதுகாப்பிற்க்கென்று அவர்கள் செய்யக்கூடிய அந்த செலவீனங்கள் அந்த ஏற்பாடுகள் அந்த சொத்து சேகரிப்புகள் செல்வ சேகரிப்புகளிலிருந்து எத்தனை செலவீனத்தை தீன் பாதுகாக்கப்பட வேண்டும்.இந்த உம்மத்து பாதுகாக்கப்பட வேண்டும் என்பதற்க்காக பொது நன்மைக்காக செலவு செய்கிறார்கள்.

சொல்லலாம் சிலர் நாங்கள் ஜக்காதும் கொடுத்து விடுகிறோம் என்று.

கண்ணியத்திர்க்குறியவர்களே! இன்று இந்த ஜக்காத் இது உங்களை நீங்கள் நரகத்திலிருந்து பாதுகாப்பதற்க்கு.

இது கடமையாக்கப்பட்ட ஒன்று.இதை நீ செய்யாமல் முஸ்லிமாக இருக்கவே முடியாது.

அடிப்படை தகுதியை நீ பெற மாட்டாய்.ஆனால்  அதற்க்கு மேல் அல்லாஹுவும் அல்லாஹுவுடைய தூதரும் இந்த தீனை உனக்கு அமானிதமாக கொடுத்தார்களே அல்லாஹுவும் அல்லாஹுவுடைய தூதரும் உனக்கு எத்தனை நன்மைகளை வழங்கி இருக்கிறார்கள்.

அந்த நன்றிக்காக இந்த தீனுக்காக இந்த தீனுடைய சமுதாயதுக்காக நீ என்ன செய்தாய்? நீ எதைக் கொடுத்தாய்?

وَفِي أَمْوَالِهِمْ حَقٌّ لِلسَّائِلِ وَالْمَحْرُومِ51:19

சொத்துகளில் ஒரு தனி பகுதியை ஒதுக்கி அல்லாஹுவினுடைய தீனுக்காக வைத்திருப்பவர்கள் தான் எனக்கு நெருக்கமான முஃமின்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் 51 : 19)

நாம் என்ன செய்கிறோம்? கடமையான ஒரு அளவைக்கொடுக்கும் போது கண்ணியத்திர்க்குரியவர்களே! இதனுடைய நன்மை மறுமையில் கிடைக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

ஜக்காத் கொடுப்பதால் முஸ்லிம் என்ற தகுதியைப்பெற்று மறுமையில் சொர்க்கம் கிடைக்கும் என்பதிலே சந்தேகம் இல்லை.

ஆனால் உலகத்தில் அல்லாஹ் வாக்களித்த வெற்றியை அடையவேண்டுமென்றால் உலகத்தில் வாக்களித்த அந்த கிலாபத் அந்த தகுதியை அந்த கண்ணியத்தை அடைய வேண்டுமென்றால் அதற்க்கு இது மட்டும் போதாது.

இதற்க்கு மேல் அல்லாஹ் உனக்கு கொடுத்ததிலிருந்து எவ்வளவு நீ கொடுக்கத் தயாராக இருக்கிறாய்? எவ்வளவு நீ செலவளிக்கத் தயாராக இருக்கிறாய்?

எங்கேயாவது நபிதோழர்கள் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போருக்காக  தீனுக்காக  ஏழைகளுக்காகக்   கேட்கப்பட்ட பொழுது அல்லாஹ்வின் தூதரே நாங்கள் தான் ஜக்காத் கொடுத்து விட்டோமே அதற்கு மேல் எங்களிடத்திலே ஏன் கேட்கிறீர்கள் என்று எங்கேயாவது சொல்லி இருக்கிறார்களா?

எங்கேயாவது படித்திருக்கிறோமா ? நாம் என்ன சொல்கிறோம் ?

நீங்க கொஞ்சம் முன்னாடி வந்திருக்கக்கூடாதா?

ரமழான் மாதத்திலே நாங்கள் எல்லா ஜக்காத்தையும் கொடுத்து விட்டோம்.

நீங்கள் முன்னாடி கொஞ்சம் சொல்லி இருக்கக் கூடாதா?

ஜக்காத் எல்லாம் கணக்கிட்டு முன்னாடியே நாங்கள் கொடுத்து விட்டோம். இப்படிப் பட்டவர்களின் செல்வத்தை அல்லாஹ் பாதுகாப்பானா?

இவர்களின் செல்வத்தை பாதுகாக்கக் கூடிய ஒரு ஆட்சியாளரை அல்லாஹ் ஏற்படுத்துவானா?

இது தான் ஒரு முஸ்லிம்களுடைய பதிலா ?

யோசித்துப்பாருங்கள்!சர்வ சாதாரணமாக ஏழைகளை அலட்சியம் செய்யக்கூடிய சமுதாய நன்மையை அலட்சியம் செய்யக்கூடிய, ஏன்?

அல்லாஹ் உடைய தீனை அலட்சியம் செய்யக்கூடிய ஒரு நிலையை நாம் பார்க்கிறோம் .

முன்பெல்லாம் நமது முன்னோர்கள் இஸ்லாமை பாதுகாப்பதற்க்காக  ஒவ்வொருவரும் தன்னுடைய சொந்த செலவிலே ஒரு பெரிய மஸ்ஜிதை நிறுவினார்கள் .ஜாமியா மஸ்ஜிதை  நிறுவினார்கள்.மதரஸாக்களை நிறுவினார்கள். அதற்கு வக்ஃப்களை நிறுவினார்கள்.

ஆனால் இன்று பாருங்கள்,ஒரு சிறிய மஸ்ஜிதைக் கட்டுவதாக இருந்தால் கூட அதற்கு அந்த நிர்வாகிகள் அல்லது அதனுடைய பொறுப்புதாரிகள் ஒவ்வொரு மஸ்ஜிதாக பிச்சை எடுக்கக்கூடிய அளவிற்கு கையேந்தக்கூடிய அளவிற்கு உள்ள நிலையைப் பார்ர்க்கிறோம்.

முன்பெல்லாம் ஒரு ஒரு மதரஸாவை  ஒரு ஒரு செல்வந்தர் தன்னுடைய சொந்த செல்வத்தில் நடத்திக் கொண்டிருந்தார்.

அல்லாஹ் அவர்களுக்கு கண்ணியத்தை உயர்வைக்  கொடுத்துக் கொண்டிருந்தான்.

ஆனால் இன்று என்ன ஒரு மதரசாவை நடத்த  வேண்டுமென்றால் அதற்கு ஒரு நிர்வாகம் தேவை. அதற்கு சந்தா வசூல் செய்பவர்கள் தேவை.வருஷமெல்லாம் அவர்கள் முஸ்லிம்களுடைய வீடுகளிலே ஏறி இறங்கி அவர்கள் அலைந்தால்தான் ஒரு சிறிய மதரஸாவை நடத்துவதற்குக் கூட ஒரு பொருளாதாரத்தைக் கொண்டு வர முடியுமென்றால் இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்திற்க்கா அல்லாஹ் பாதுகாப்பைக் கொடுப்பான் ?

இப்படிப்பட்டவர்களைப் பாதுகாப்பதற்க்கா அல்லாஹ் பாதுகாப்பான ஒரு  நல்ல ஒரு ஆட்சியாளரை ஏற்படுத்துவான் ?

தனக்கென்று வந்தால் ,தனது துனியாவுக்கென்று வந்தால் இங்கு என்ன நடக்கிறது ?

முஸ்லிம்களுடைய துன்யா வளர்ந்து கொண்டிருக்கிறது .கட்டிடங்களாக வளர்கின்றன நிலங்களாக வளர்கின்றன. வியாபாரங்களாக வளர்கின்றன.

அவர்களுடைய தீன் வளரவில்லை .அவர்களுடைய மார்க்கம் வளரவில்லை. அவர்களுடைய சமுதாயம் பாதுகாக்கப்படவில்லை .அல்லாஹ் உடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதைதான் சொல்கிறார்கள்

இமாம் அபு தாவூத் பதிவு செய்கிறார்கள் சவ்பான் ரழியல்லாஹு அன்ஹு அறிவிப்புச் செய்கிறார்கள்.எப்படிப்பட்ட வார்த்தை பாருங்கள்.

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ إِبْرَاهِيمَ الدِّمَشْقِيُّ حَدَّثَنَا بِشْرُ بْنُ بَكْرٍ حَدَّثَنَا ابْنُ جَابِرٍ حَدَّثَنِي أَبُو عَبْدِ السَّلَامِ عَنْ ثَوْبَانَ قَالَ

قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُوشِكُ الْأُمَمُ أَنْ تَدَاعَى عَلَيْكُمْ كَمَا تَدَاعَى الْأَكَلَةُ إِلَى قَصْعَتِهَا فَقَالَ قَائِلٌ وَمِنْ قِلَّةٍ نَحْنُ يَوْمَئِذٍ قَالَ بَلْ أَنْتُمْ يَوْمَئِذٍ كَثِيرٌ وَلَكِنَّكُمْ غُثَاءٌ كَغُثَاءِ السَّيْلِ وَلَيَنْزَعَنَّ اللَّهُ مِنْ صُدُورِ عَدُوِّكُمْ الْمَهَابَةَ مِنْكُمْ وَلَيَقْذِفَنَّ اللَّهُ فِي قُلُوبِكُمْ الْوَهْنَ فَقَالَ قَائِلٌ يَا رَسُولَ اللَّهِ وَمَا الْوَهْنُ قَالَ حُبُّ الدُّنْيَا وَكَرَاهِيَةُ الْمَوْتِ(سنن أبي داود - 3745 )

உணவு சாப்பிடக்கூடியவர்கள் தனது உணவின் பக்கம் ஒருவருக்கொருவர் மற்றவரை அழைப்பதைப்போன்று எல்லா சமுதாயமும் உங்களைச் சேர்ந்து கவ்விக்கொள்ள வருவார்கள்.அப்போது ஒரு தோழர் கேட்டார் அல்லாஹுவின் தூதரே!

அந்த நேரத்தில் நாங்கள் குறைவாக இருப்போமா ?நாங்கள் குறைந்து விடுவோமா? ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் இல்லை நீங்கள் அதிகமாக இருப்பீர்கள்.நீங்கள் எப்படி இருப்பீர்கள்?

ஆற்றின் மேல் வரக்கூடிய நுரையைப்போல் இருப்பீர்கள்.அதிகம் ஆனால் பிரயோஜனமில்லை.

உங்கள் மீதுள்ள பயத்தை உங்கள் மீதுள்ள அச்சத்தை எதிரிகளின் உள்ளத்திலிருந்து கண்டிப்பாக அல்லாஹ் நீக்கி விடுவான்.

பாருங்கள்.மஸ்ஜிதுகளிலே அதான் சொல்லக்கூடாதாம்.

மஸ்ஜிதிலே அதானுடைய ஒலிபெருக்கியை வெளியில் வைக்கக் கூடாதாம்.

இன்னும் எத்தனை எத்தனை கோஷங்களை அடுத்துச் சொல்ல போகிறார்கள்.

உங்களின் எதிரிகளின் நெஞ்சங்களில் இருந்து அல்லாஹ் பயத்தை எடுத்து விடுவான்.

உங்களது உள்ளத்திலே வகன் என்ற நோயை அல்லாஹ் போடுவான்.பலவீனத்தை அல்லாஹ் போடுவான்.

நபித்தோழர்கள் கேட்டார்கள்,உள்ளத்தின் பலவீனம் என்றால்  என்ன நபியே?

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்;

حُبُّ الدُّنْيَا وَكَرَاهِيَةُ الْمَوْتِ

ஹுப்புத்துன்யா வ கராகியத்துள் மௌத்.

தீனுடைய கண்ணியம் தீனுடைய உயர்வு தீனுக்காக வேண்டி என்று இருக்கக்கூடிய முஸ்லிமின்  உள்ளத்திலே  துன்யா மிகைத்துவிடும்.

துன்யாவின் அன்பு துன்யாவின் மோகம் மிகைத்துவிடும். மௌத்தை பயப்பட ஆரம்பிப்பான்.மௌத்துக்காக மறுமைக்காக சேகரிப்பது அவனுக்கு விருப்பமாக இருக்காது.இந்த துன்யாவுக்காக சேகரிப்பதிலேயே அவன் நிலையாக இருப்பான்.

இப்படிப்பட்ட நிலை முஸ்லிம்களுக்கு வந்தால் எதிரிகளின் உள்ளத்திலிருந்து அந்த முஸ்லிம்களுடைய பயத்தை அல்லாஹ் எடுத்து விடுவான்.

இவர்களது உள்ளத்திலே அவர்களைப்பற்றிய பயத்தை அல்லாஹ் போட்டு விடுவான்.

ஆகவே கண்ணியத்திற்குரியவர்களே!நாமும் நினைவூட்டி நமக்கு, நமது சகோதரர்களுக்கும் ,சகோதரிகளுக்கும் இந்த சமுதாயத்திற்க்கும் நினைவூட்ட வேண்டிய கட்டாயத்திலே இருக்கிறோம்.

அல்லாஹுவுடைய தீனுக்காக நான் என்ன செய்தேன் ?

எனது சமுதாயத்திற்க்காக நான் என்ன செய்தேன்?

எனது செல்வத்தில் எவ்வளவு அல்லாஹுடைய தீனுக்காக செலவழிக்கப்படுகிறது? எவ்வளவு அல்லாஹுடைய தீன் பாதுகாக்கப்படுவதற்க்காக,

அல்லாஹுடைய இந்த தீனுடைய உம்மத் பாதுகாக்கப்படுவதற்க்காக பொது நன்மைக்காக நான் என்ன செய்கிறேன் ?

எந்த ஒரு செலவீனத்தைக் கொண்டு பொதுமக்கள் நன்மை பெறுவார்களோஅதற்க்கு நான் என்ன செய்கிறேன் என்று யோசித்து அல்லாஹுடைய தீனைப்பாதுகாப்பதற்க்கும் நமது சமுதாயத்தை பாதுகாப்பதற்க்கும் அதை அடிப்படையாக வைத்து உருவாகி அல்லாஹுவின் வேதத்தோடு அல்லாஹுவின் மார்க்கத்தோடு மக்களைச் சீர்திருத்துவதோடு ஒரு பெரிய ஒரு புரட்சியை செய்யாதவரை கண்ணியத்திர்க்குரியவர்களே, அல்லாஹு ரப்புல் ஆலமீன் தனது வாக்கை உண்மைப்படுத்த மாட்டான்.

நாம் அல்லாஹுக்கு கொடுத்த வாக்கை அல்லாஹுவிடத்திலே கொடுத்த வாக்கை நிறைவேற்றினால் அதை நாம் பாதுகாக்கும் பொழுது அந்த ஒரு கண்ணியத்தை ஸஹாபாக்கள் எந்த அடிப்படையிலே பெற்றார்களோ அதே அடிப்படையிலே செல்லும் பொழுது அல்லாஹ் வாக்களித்த கண்ணியத்தை உயர்வை கண்டிப்பாகக் கொடுப்பான்.அதை நோக்கி முயற்சி செய்வோமாக!

அல்லாஹ் சுபஹானாஹு தஆலா அவனுடைய வேதத்திலே நமக்கு நன்மை செய்வானாக! அல்லாஹுவின் வேதத்தைக்கொண்டு படிப்பினை பெற்ற சீர்திருத்தம் பெற்ற நன்மக்களாக ஆக்கி அருள்வானாக !

ஆமீன்

குறிப்புகள் :

குறிப்பு 1).

حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ إِسْحَاقَ، حَدَّثَنَا ابْنُ الْمُبَارَكِ، عَنْ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ، قِرَاءَةً حَدَّثَنِي صَدَقَةُ بْنُ يَسَارٍ، عَنْ عَقِيلِ بْنِ جَابِرٍ، عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللهِ، قَالَ: خَرَجْنَا مَعَ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي غَزْوَةِ ذَاتِ الرِّقَاعِ، فَأُصِيبَتْ امْرَأَةٌ مِنَ الْمُشْرِكِينَ، فَلَمَّا انْصَرَفَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَافِلًا، وَجَاءَ زَوْجُهَا وَكَانَ غَائِبًا، فَحَلَفَ أَنْ لَا يَنْتَهِيَ حَتَّى يُهْرِيقَ دَمًا فِي أَصْحَابِ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَخَرَجَ يَتْبَعُ أَثَرَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَنَزَلَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْزِلًا، فَقَالَ: " مَنْ رَجُلٌ يَكْلَؤُنَا لَيْلَتَنَا هَذِهِ؟ " فَانْتَدَبَ رَجُلٌ مِنَ الْمُهَاجِرِينَ، وَرَجُلٌ مِنَ الْأَنْصَارِ، فَقَالَا: نَحْنُ يَا رَسُولَ اللهِ، قَالَ: " فَكُونُوا بِفَمِ الشِّعْبِ "، قَالَ: وَكَانُوا نَزَلُوا إِلَى شِعْبٍ مِنَ الْوَادِي، فَلَمَّا خَرَجَ الرَّجُلَانِ إِلَى فَمِ الشِّعْبِ، قَالَ الْأَنْصَارِيُّ لِلْمُهَاجِرِيِّ: أَيُّ اللَّيْلِ أَحَبُّ إِلَيْكَ أَنْ أَكْفِيَكَهُ؟ أَوَّلَهُ أَوْ آخِرَهُ؟ قَالَ: اكْفِنِي أَوَّلَهُ، فَاضْطَجَعَ الْمُهَاجِرِيُّ فَنَامَ، وَقَامَ الْأَنْصَارِيُّ يُصَلِّي، وَأَتَى الرَّجُلُ، فَلَمَّا رَأَى شَخْصَ الرَّجُلِ عَرَفَ أَنَّهُ رَبِيئَةُ الْقَوْمِ، فَرَمَاهُ بِسَهْمٍ، فَوَضَعَهُ فِيهِ، فَنَزَعَهُ فَوَضَعَهُ، وَثَبَتَ قَائِمًا، ثُمَّ رَمَاهُ بِسَهْمٍ آخَرَ، فَوَضَعَهُ فِيهِ، فَنَزَعَهُ فَوَضَعَهُ، وَثَبَتَ قَائِمًا، ثُمَّ عَادَ لَهُ بِثَالِثٍ، فَوَضَعَهُ فِيهِ، فَنَزَعَهُ فَوَضَعَهُ، ثُمَّ رَكَعَ وَسَجَدَ، ثُمَّ أَهَبَّ صَاحِبَهُ، فَقَالَ: اجْلِسْ فَقَدْ أُوتِيتَ، (1) فَوَثَبَ، فَلَمَّا رَآهُمَا الرَّجُلُ عَرَفَ أَنْ قَدْ نَذَرُوا بِهِ فَهَرَبَ، فَلَمَّا رَأَى الْمُهَاجِرِيُّ مَا بِالْأَنْصَارِيِّ مِنَ الدِّمَاءِ، قَالَ: سُبْحَانَ اللهِ، أَلَا أَهْبَبْتَنِي قَالَ: كُنْتُ فِي سُورَةٍ أَقْرَؤُهَا، فَلَمْ أُحِبَّ أَنْ أَقْطَعَهَا حَتَّى أُنْفِذَهَا، فَلَمَّا تَابَعَ الرَّمْيَ رَكَعْتُ فَأُرِيتُكَ، وَايْمُ اللهِ، لَوْلَا أَنْ أُضَيِّعَ ثَغْرًا أَمَرَنِي رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِحِفْظِهِ، لَقَطَعَ نَفْسِي قَبْلَ أَنْ أَقْطَعَهَا، أَوْ أُنْفِذَهَا (مسند احمد-14704)

 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/