HOME      Khutba      பயங்கரவாதம் | Tamil Bayan - 339   
 

பயங்கரவாதம் | Tamil Bayan - 339

           

பயங்கரவாதம் | Tamil Bayan - 339


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
 
பயங்கரவாதம்
 
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நேரான அழகிய மார்க்கம் ஒன்றை நமக்குத் தந்திருக்கின்றான். கண்ணியமான மார்க்கம், அமைதியான மார்க்கம், அன்பை போதிக்க கூடிய மார்க்கம், நீதத்தை போதிக்கக்கூடிய மார்க்கம், கட்டுப்பாட்டை போதிக்கக்கூடிய மார்க்கம்  இப்படிப்பட்ட ஒரு சிறந்த மார்க்கத்தை அல்லாஹ்  அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நமக்கு  தந்துள்ளான். 
 
ஒரு முஸ்லிம் அவனுடைய உணர்வுகளுக்கும், உணர்ச்சிகளுக்கும், துவேஷங்களுக்கும், கோபதாபங்களுக்கும் அப்பாற்பட்டு இறைநம்பிக்கை என்ற கயிற்றை கொண்டு அவன் பிணைக்கப்பட்டு இருக்கின்றான். 
 
ஈமான் என்ற ஒரு வளையத்தில் அவன் கட்டுப்பட்டு கிடக்கின்றான். ஆகவே அல்லாஹ்வின் கட்டளையை மீறி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களின் சுன்னாவை மீறி ஒரு முஸ்லீம் எந்த ஒரு செயலையும் செய்ய முடியாது.
ஓர் இறைநம்பிக்கையாளர் அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவனுடைய ஷரீஅத்தையும்  மீறி ஒரு முஸ்லிம் எந்த ஒரு செயலையும் செய்ய முடியாது. 
 
தன்னுடைய பழிவாங்கும் குணமாக இருக்கட்டும் அல்லது தனக்கு விருப்பமாகவோ வெறுப்பாகவோ  இருக்கட்டும் எந்த ஒன்றாக இருந்தாலும் அல்லாஹ்வின் சட்டத்திற்கு உட்பட்டு இருக்கின்றதா என்று பார்க்க வேண்டுமே தவிர தன் மனம் சொல்வதையெல்லாம் மார்க்கமாக ஆக்கிக் கொண்டால் அவர் ஈமானை விட்டு வெளியேறி விடுவார். நாளை மறுமையில் மிகக்கடுமையான  தண்டனைக்கு ஆளாகுவார் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் நினைவில் வைக்கவேண்டும். 
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா அவனது கண்ணியத்திற்குரிய புத்தகம் அல்குர்ஆனில் சொல்வதைப் பாருங்கள்.
 
وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى
 
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வுக்காக நீதிவான்களாக நீதத்திற்கு சாட்சி சொல்பவர்களாக இருங்கள். ஒருவகுப்பார் மீதுள்ள துவேஷம் அவர்களுக்கு அநியாயம் செய்யும்படி உங்களைத் தூண்டாதிருக்கட்டும். (பகைமைஇருந்தாலும்) நீங்கள் நீதியே செலுத்துங்கள். அதுதான் இறையச்சத்திற்கு மிகநெருங்கியது. (எப்போதும்) நீங்கள் அல்லாஹ்வுக்கே பயப்படுங்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 5 : 8)
 
ஆகவே ஒரு முஸ்லிம் நீதத்திற்கு அப்பாற்பட்டு எந்த ஒரு செயலையும் செய்ய முடியாது எந்த ஒரு காரியத்தையும் செய்ய முடியாது. 
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா அவனுடைய கண்ணியத்திற்குரிய இந்த மார்க்கத்தில் மிகப்பெரிய ஒரு கட்டளையாக அவன் என்ன வைத்திருக்கின்றான் என்றால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் உயிரை பேணுவது ஒரு ஆன்மா இன்னொரு ஆன்மாவின் கண்ணியத்தைப் பேணுவது. 
 
ஆகவேதான் அல்லாஹ் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சொல்கின்றான்;
 
 
مَنْ قَتَلَ نَفْسًا بِغَيْرِ نَفْسٍ أَوْ فَسَادٍ فِي الْأَرْضِ فَكَأَنَّمَا قَتَلَ النَّاسَ جَمِيعًا وَمَنْ أَحْيَاهَا فَكَأَنَّمَا أَحْيَا النَّاسَ جَمِيعًا
 
ஒருவன் அநியாயமாக ஒரு உயிரை கொள்வாரே ஆனால் அவன் உலக மக்களை எல்லாம் கொன்றவனுக்கு சமமாவான். ஒரு மனிதன் ஒரு உயிரை வாழ வைப்பானேயானால் அவன் உலக மக்களை எல்லாம் வாழ வைத்தவன் போல. (அல்குர்ஆன் 5 : 32)  
 
ஒரு உயிரைக் கொல்வதென்றால் அதற்குரிய ஹக் (உரிமை) இருக்க வேண்டும்.
 
وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ
 
எந்த ஒரு ஆத்மாவை அல்லாஹ் புனிதப்படுத்தி இருக்கின்றானோ அந்த உயிர் அதற்குரிய   ஹக் உரிமை இல்லாமல் கொல்லப்படக் கூடாது. எதை அல்லாஹ் தடை விதித்து இருக்கின்றானோ அப்படிப்பட்ட ஒரு ஆன்மாவை நீங்கள் அநியாயமாக கொன்று விடாதீர்கள்.  (அல்குர்ஆன் 17 : 33)
 
அல்லாஹ்வுடைய ஒவ்வொரு உயிருக்கும் அது ஒரு முஸ்லிமின் உயிராக இருக்கட்டும் அல்லது ஒரு இறை நிராகரிப்பாளரின் உயிராக இருக்கட்டும் எந்த உயிராக இருந்தாலும் அந்த உயிருக்கு என்று அல்லாஹ் ஒரு கண்ணியத்தை ஏற்படுத்தி இருக்கின்றான். 
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்கள் ஒரு மஸ்ஜிதில் அமர்ந்திருந்தார்கள். ஒரு ஜனாஸா சென்றது; நபியவர்கள் எழுந்து நின்றார்கள்; பிறகு ஸஹாபாக்கள் சொன்னார்கள்; அல்லாஹ்வின் தூதரே! இது ஒரு யஹுதி  உடைய  ஜனாசா என்றார்கள்; அதற்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி ஸலாம் கூறினார்கள் அதுவும் ஒரு உயிர் ஆயிற்றே என்றார்கள். (1)
 
அறிவிப்பாளர்: கைஸ் பின் ஸஃத் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்:  1229
 
இந்த அளவிற்கு உயிரை மதிக்க வேண்டும் என்று மார்க்கம் நமக்கு கட்டளையிடுகிறது. 
 
وَلَا تَقْتُلُوا النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَمَنْ قُتِلَ مَظْلُومًا فَقَدْ جَعَلْنَا لِوَلِيِّهِ سُلْطَانًا فَلَا يُسْرِفْ فِي الْقَتْلِ إِنَّهُ كَانَ مَنْصُورًا
 
(எவரையும் கொலை செய்வதுஆகாதென்று) அல்லாஹ் தடுத்திருக்க, நீங்கள் எம்மனிதனையும்நியாயமின்றி கொலை செய்து விடாதீர்கள். எவரேனும் அநியாயமாகக் கொலை செய்யப்பட்டு விட்டால், அவனுடைய வாரிசுகளுக்கு(ப்பழிவாங்க) நாம் அதிகாரம் அளித்திருக்கிறோம். ஆனால், (கொலையாளியான) அவனைப்பழிவாங்குவதில் அளவுகடந்து (சித்திரவதைசெய்து)விடவேண்டாம். நிச்சயமாக அவன் (பழிவாங்க) உதவி செய்யப்படுவான். (அதாவது: கொலைக்கு பழிவாங்க வாரிசுகளுக்கு உதவி செய்ய வேண்டும்.) (அல்குர்ஆன்  17 : 33)
 
பழி வாங்குவதாக இருந்தால் கூட அந்தப் பழி வாங்கும் விஷயத்திலும் மார்க்கத்தின் வரம்பை மீறி விடக்கூடாது. அதிலும் அநியாயம் செய்துவிடக் கூடாது என்று அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு கட்டளையாக சொல்கின்றான் என்றால் உயிர்கள் இந்த மார்க்கத்திலே  எவ்வளவு மதிக்கப்படுகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்;
 
وَيَكْثُرَ الْهَرْجُ وَهُوَ الْقَتْلُ الْقَتْلُ حَتَّى يَكْثُرَ فِيكُمْ الْمَالُ فَيَفِيضَ
 
மறுமையின் அடையாளங்களில் ஒன்று ஹரஜ் அதிகமாகி விடுவது ஸஹாபாக்கள் கேட்டார்கள் ஹரஜ் என்றால் என்ன? நபி ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் கொலை   கொலை. எங்கு பார்த்தாலும் கொலை ஏற்பட்டுவிடும் என்று சொன்னார்கள். 
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 978    
 
عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَذْهَبُ الدُّنْيَا حَتَّى يَأْتِيَ عَلَى النَّاسِ يَوْمٌ لَا يَدْرِي الْقَاتِلُ فِيمَ قَتَلَ وَلَا الْمَقْتُولُ فِيمَ قُتِلَ فَقِيلَ كَيْفَ يَكُونُ ذَلِكَ قَالَ الْهَرْجُ الْقَاتِلُ وَالْمَقْتُولُ فِي النَّارِ
 
கொன்றவனுக்கும் தெரியாது நாம் ஏன் கொல்லப்படுகிறோம் என்று; கொல்லப்பட்டவனுக்கும் தெரியாது நான் ஏன் கொல்லப்படுகிறோம் என்று. 
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 5178    
 
இன்று பொதுவாக முஸ்லிம் நாடுகளிலும் ஏனைய நாடுகளிலும் நடக்கக்கூடிய அந்த சீர்கேட்டை பாருங்கள். இதைத்தான் அல்லாஹ் ஃபஸாத் என்று கூறுகின்றான். பூமி அமைதி பெற்றதற்கு பிறகு அந்த பூமியிலே குழப்பம் செய்வது; சில மக்கள் சீர்திருத்தம் என்ற பெயரிலே பழிவாங்குவது  அல்லது பழிவாங்குதல் என்ற பெயரில் பதிலடி கொடுப்பது என்ற பெயரில் அவர்கள் செய்யக்கூடிய காரியம் இஸ்லாமிற்கும் மார்க்கத்திற்கும் ஷரீயத்திற்கும் எந்தவிதத்திலும் சம்பந்தப்படாது என்பதை முஸ்லிமாகிய நாம் புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா கூறுகின்றான்;
 
அல்ஃபஸாத் -பூமியிலே குழப்பம் செய்வது, சட்டம் ஒழுங்கை கெடுப்பதை, மனிதர்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவதை அவர்களின் உயிருக்கு பாதிப்பு ஏற்படுத்துவதை கடுமையாகக் கண்டிக்கின்றான். 
 
இறை தூதர்களை எவ்வாறு தவ்ஹீத் ஓர்  இறைவனை  வணங்க வேண்டும், இணை வைக்கக் கூடாது என்று தூய பிரச்சாரத்தில் அனுப்பினானோ அந்த பிரச்சாரத்தின் ஒரு அம்சமாக அல்லாஹ் அறிவித்து இருந்தான், மனிதர்களை பயமுறுத்தாதீர்கள்; அவர்களை அச்சத்திற்குள்ளாக்காதீர்கள்; அநியாயமாக உயிர்கள் ஓட்ட படுவதை தடுங்கள் என்று அந்த இறைத்தூதர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். 
 
கண்ணியத்திற்குரிய இறைத்தூதர் சுஹைப் அலைஹி வசல்லம் தனது சமுதாய மக்களை பார்த்து சொல்வதை குர்ஆனில் அல்லாஹ் வர்ணித்ததை பாருங்கள்; 
 
وَإِلَى مَدْيَنَ أَخَاهُمْ شُعَيْبًا قَالَ يَا قَوْمِ اعْبُدُوا اللَّهَ مَا لَكُمْ مِنْ إِلَهٍ غَيْرُهُ قَدْ جَاءَتْكُمْ بَيِّنَةٌ مِنْ رَبِّكُمْ فَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
 
மத்யன் கூட்டத்தாருக்கு, மத்யன் நகர மக்களுக்கு நாம் அவரது சகோதரர் சுஹைபை நபியாக அனுப்பியதை நினைவு கூறுங்கள். அவர் தனது மக்களை பார்த்து சொன்னார்: மக்களே! அல்லாஹ்வை வணங்குங்கள்; அவனைத் தவிர உங்களுக்கு வேறு கடவுள் இல்லை; அவன் புறத்திலிருந்து உங்களுக்கு தெளிவான அத்தாட்சி வந்திருக்கின்றது. நீங்கள் எந்த மக்களிடத்திலே கொடுக்கல்-வாங்கல் வியாபாரம் செய்தாலும் அளந்து கொடுப்பதையும் நிறுத்தி கொடுப்பதையும் நீதமாகவே நீங்கள் செய்யுங்கள்; மக்களிடத்திலே அவர்களுடைய பொருட்களில் நீங்கள் குறைவு செய்யாதீர்கள்; மோசடி செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 7 : 85)
 
இந்த மார்க்கத்தில் மிகப்பெரிய ஒரு வழிகாட்டுதலை பாருங்கள்; தொழில்துறை விஷயத்திலே நடந்து கொள்ளக்கூடிய ஒழுக்கத்தை ஏகத்துவப் பிரச்சாரத்தின் அடிப்படைகளில் ஒன்றாக அல்லாஹ் ரப்புல் ஆலமின் ஆக்கியிருக்கின்றான் என்றால் தவ்ஹீத் என்பது வேறு மார்க்கம் என்பது வேறு மனிதர்களின் உரிமை என்பது வேறு என்று அல்லாஹ் பிரிக்கவில்லை. அல்லாஹ் தன்னுடைய உரிமையை சொல்லக்கூடிய அதே நேரத்தில் மக்களின் ஹக்கை அல்லாஹ் விவரிக்கின்றான். 
 
எனக்கு எப்படி நீங்கள் ஷிர்க் செய்வது, குப்ர் செய்வது, அநியாயம் செய்வது கூடாதோ அது போன்று நீங்கள் உங்களுக்கு மத்தியிலும் அநியாயம் செய்யக் கூடாது. அநியாயத்தின் உருவம் எதுவாக இருந்தாலும் சரி ,அநியாயத்தின் வழி எதுவாக இருந்தாலும் சரி, அநியாயத்தின் அத்தனை வகைகளும் அத்தனை உருவங்களும் தடுக்கப்பட வேண்டியவை; நிறுத்தப்படவேண்டியவை.
 
அல்லாஹு ரப்புல் ஆலமீன் கூறுவதாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்; அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்; 
 
  
قَالَ يَا عِبَادِي إِنِّي حَرَّمْتُ الظُّلْمَ عَلَى نَفْسِي وَجَعَلْتُهُ بَيْنَكُمْ مُحَرَّمًا فَلَا تَظَالَمُوا 
 
எனது அடியார்களே! நான் என் மீது அநியாயம் செய்வதை ஹராமாக ஆக்கிக் கொண்டேன்; என்மீது தடுத்து க்கொண்டேன்; அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அநியாயம் செய்பவன் அல்ல; எத்தனை வசனங்கள் கூறுகின்றன; அநியாயம் செய்வதை அவன் தடுத்துக் கொண்டான்; யாராவது அவனைக் கேட்க முடியுமா? முடியாது; இருந்தும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நீதத்தை மீறி எதுவும் செய்ய மாட்டான். ஹக்குகளை மீறி எதுவும் செய்ய மாட்டான். 
 
பிறகு அல்லாஹ் கூறுகின்றான்; அந்த அநியாயத்தை உங்களுக்கும் தடுக்கப்பட்ட ஒன்றாக ஹராமாக்கப்பட்ட ஒன்றாக நான் ஆக்கி இருக்கின்றேன். நான் எப்படி என் மீது ஹராமாக்கி கொண்டேனோ, தடுத்து கொண்டேனோ அதுபோன்று அந்த அநியாயத்தை உங்களுக்கும் ஹராமாக்கப்பட்ட ஒன்றாக தடுக்கப்பட்ட ஒன்றாகத்தான் ஆக்கி வைத்திருக்கின்றேன்.
 
ஆகவே உங்களில் ஒருவர் மற்றவர் மீது அநியாயம் செய்து கொள்ளாதீர்கள்; ஒருவர் ஒருவருடைய ஹக்குகளிலே நீங்கள் வரம்பு மீறாதீர்கள். (3)
 
அறிவிப்பாளர்: அபூ தர் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 4674  
 
இந்த வரம்பு மீறுதல் அநியாயம் செய்தல் என்பது விசாலமான பார்வையிலேயே பார்க்கக் கூடிய ஒன்று. ஓர் அரசன் பிரஜைகளின் மீது அநியாயம் செய்யக் கூடாது; அவர்களின்  ஹக்குகளை கொடுக்க வேண்டும்; அவர்களைப் பாதுகாக்க வேண்டும்; அவர்களின் உரிமையை பாழாக்காமல் கட்டிக்காக்க வேண்டும்; நாட்டு மக்களுக்கு உரிய உரிமைகளை கொடுக்க வேண்டும்; அவர்களில் நலிந்தோர்கள், தேவையுடையவர்கள், அவர்களின் ஹக்கை கொடுக்க வேண்டும். இது அரசனுக்குரிய சட்டமாக இருக்கிறது. மக்கள் அரசனின் விஷயத்தில் அநியாயம் செய்யக் கூடாது. எந்த ஒருவருக்கு அல்லாஹு ரப்புல் ஆலமீன் ஆட்சி அதிகாரத்தை கொடுத்தானோ அவரிடமிருந்து ஆட்சியை பிடுங்கக் கூடாது; சண்டை செய்யக்கூடாது; அந்த ஆட்சிக்கு கொடுக்கப்பட்ட ஒப்பந்தத்தை மீறக்கூடாது.
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் தனது தோழர்கள் இடத்திலே ஒப்பந்தம் வாங்கினார்கள்; அந்த ஒப்பந்தத்திலே எப்படி தவ்ஹீதை பேணவேண்டும், அல்லாஹ்வை வணங்க வேண்டும், அல்லாஹ்விற்கு இணை வைக்கக் கூடாது என்ற அம்சங்கள் இடம் பெற்றனவோ அதே நேரத்தில் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் தங்களது தோழர்கள் இடத்தில் ஒப்பந்தம் வாங்கினார்கள்.
யாரின் கரத்தில் அதிகாரம் கொடுக்கப்பட்டு உள்ளதோ, ஆட்சி அதிகாரம் கொடுக்கப்பட்டு உள்ளதோ அவர்களிடத்தில் நாங்கள் சண்டை செய்யக்கூடாது; அவர்களின் ஆட்சியை பறிப்பதற்காக அவர்களின் ஆட்சிக்கு எதிராக நாங்கள் போரிடக் கூடாது; சண்டை செய்யக்கூடாது என்றும் நபி அவர்களிடம் ஒப்பந்தம் வாங்கினார்கள்;
 
மேலும் அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறினார்கள்; ஒரு முஸ்லிம் ஆட்சிக்குரிய ஒப்பந்தத்தை கொடுத்ததற்குப் பிறகு அவன் அந்த ஒப்பந்தத்தில் இருந்து தனது கையை நீக்கி கொள்வானேயானால் அல்லாஹ்வின் மார்க்கத்தை தனது கழுத்திலிருந்து அவன் வெளியேற்றி விட்டான் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்கை செய்கின்றார்கள். 
 
ஆகவே பொதுமக்கள் ஆட்சியாளர்கள் விஷயத்தில் அநியாயம் செய்யக் கூடாது; அவருடைய ஹக்குகளை கொடுக்கவேண்டும்; கீழ்படிந்து நடக்க வேண்டும். ஒரு குடும்பத் தலைவன் தனது மனைவிக்கு அநியாயம் செய்யக்கூடாது; தனது பிள்ளைகளுக்கு அநியாயம் செய்யக் கூடாது; மனைவி தன் கணவனுக்கு அநியாயம் செய்யக் கூடாது; ஒரு எஜமானன் தனது தொழிலாளிக்கு அநியாயம் செய்யக் கூடாது; ஒரு தொழிலாளி தனது எஜமானனுக்கு அநியாயம் செய்யக் கூடாது; ஓர் அண்டை வீட்டுக்காரர் இன்னொரு அண்டை வீட்டுக்காரருக்கு அநியாயம் செய்யக் கூடாது; ஒரு முஸ்லிம் தன்னோடு வாழக்கூடிய சக மனிதருக்கு அநியாயம் செய்யக் கூடாது; இப்படி அநியாயத்தின் வகைகளை விரிவாக மார்க்கம் பார்க்கிறது. 
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹதீஸை பாருங்கள்; 
 
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ قَتَلَ نَفْسًا مُعَاهَدًا لَمْ يَرِحْ رَائِحَةَ الْجَنَّةِ وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ أَرْبَعِينَ عَامًا
 
ஒப்பந்தம் செய்து மக்களுக்கு மத்தியிலே நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கக் கூடிய ஒரு காபிரை ஒரு முஸ்லிம் நாட்டிலே பல மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கும் போது முஸ்லிம் அல்லாதவர்களும் அந்த நாட்டிலே வாழ்ந்து கொண்டிருக்கும்போது அப்படிப்பட்ட ஒரு ஒப்பந்தக்காரரை ஒரு முஸ்லிம் கொன்று விடுவாரேயானால் அவருடைய உயிரை பறித்து விடுவாரேயானால் சொர்க்கத்தின் வாடையை கூட அவன் நுகர முடியாது. அந்த சொர்க்கத்தின் வாடையோ 40 ஆண்டுகள் தூரத்தில் இருந்தும் நுகரப்பட கூடியதாக இருக்கும்.
 
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 6403    
 
எப்படிப்பட்ட ஒரு கட்டளையை சொல்கிறார்கள்; ஒரு இறைமறுப்பாளர், ஒரு இணை வைக்கக் கூடியவர், அல்லாஹ்விற்கு குழந்தை இருக்கு என்று சொல்லக்கூடியவர், அல்லாஹ் மன்னிக்காத ஒரு குற்றத்தை செய்யும் ஒரு மனிதராக இருந்தாலும் அந்த மனிதர் ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே மக்களுக்கு மத்தியிலே சுமூகமாக வாழும்போது மக்களுக்கு மத்தியிலே உரிமைகளைப் பேணப்பட்டு வாழ்ந்து கொண்டிருக்கும் பொழுது மத      துவேசத்தின் அடிப்படையில் மத உணர்வின் அடிப்படையில் அந்த ஒரு காபிர் கொள்ளப்படுவானேயானால் அந்தக் காபிர் கொல்லப்படுவதற்கு இந்த முஸ்லிம் எத்தனை காரணங்களை அவன் கற்பித்தாலும் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சொல்லப்படாத காரணம் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படாது. அல்லாஹு ரப்புல் ஆலமீன் ஒரு உயிர் கொள்ளப்பட வேண்டும் என்றால் அதற்கு என்ன காரணங்களை சொல்லி இருக்கிறார்கள் என்பதை ஒரு முஸ்லிம் புரிந்துகொள்ள வேண்டும். 
 
இன்று நடக்கக்கூடிய பெரும்பாலான கொலைகள் பெரும்பாலான தாக்குதல்கள் தற்கொலைத் தாக்குதல்கள் என்ற அடிப்படையிலே அல்லது ஒரு சமுதாயத்தின் மீது நடத்தக்கூடிய அவர்கள் வசிக்கக்கூடிய இடங்களில் ஏற்படுத்த கூடிய எந்த ஒரு தாக்குதலாக இருக்கட்டும் இந்தத் தாக்குதல் எல்லாம் அல்லாஹ்வின் தூதரின் பார்வையிலே ஷரீஅத்தின் பார்வையிலே அனுமதிக்கப்பட்டதாக ஆகுமா? என்றால் கண்டிப்பாக ஆகாது. 
 
அல்லாஹு ரப்புல் ஆலமீன் ஓர் ௨யிர் கொல்லப்படுவதற்கு என்ன காரணங்களை வைத்திருக்கின்றான்;
 
عَنْ عَبْدِ اللَّهِ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَحِلُّ دَمُ امْرِئٍ مُسْلِمٍ إِلَّا بِإِحْدَى ثَلَاثٍ النَّفْسُ بِالنَّفْسِ وَالثَّيِّبُ الزَّانِي وَالتَّارِكُ دِينَهُ الْمُفَارِقُ
 
ஒரு உயிர் கொள்ளப்பட வேண்டும் என்றால் அதற்கு மூன்றில் ஒரு காரணம் இருக்க வேண்டும். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முதலாவதாக கூறினார்கள்; அந்த மனிதன் இன்னொரு மனிதரை அல்லது இன்னொரு உயிரை அநியாயமாக கொண்டிருப்பானேயானால் அப்போது அந்த மனிதனை அரசாங்கம் சட்டம், என் கையில் அல்லாஹ் அதிகாரத்தைக் கொடுத்திருக்கின்றான் அவர்களை அந்த மனிதன் பழிக்குப்பழியாக கொள்வதற்கு அல்லாஹ் அனுமதி அளித்திருக்கிறான். இந்த ஒன்றையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
இன்று சிலர் பழிவாங்குதல் என்ற அடிப்படையிலேயே அநியாயத்திற்கு பதிலடி கொடுக்கின்றோம் என்ற அடிப்படையிலேயே அநியாயம் செய்வதை குற்றம் செய்யாத மக்களுக்கு மத்தியில் அவர்கள் செய்யக்கூடிய செயல் அது வெடிகுண்டு வைப்பதாக இருக்கட்டும், அல்லது கண்மூடித்தனமாக கொலை செய்வதாக இருக்கட்டும், இதற்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எந்த சம்மந்தமும் இல்லை; இதனை சிலர் என்ன பெயர் சொல்கிறார்கள்.
 
இப்படி தற்கொலை தாக்குதல் நடத்துவதையும் அல்லது பொது இடங்களில் வெடிகுண்டு வைப்பதையும் இஸ்திஷ்ஹாத் என்று சொல்கின்றார்கள். அதாவது அந்த மனிதன் தன்னைத்தானே சஹீத் ஆக்கிக் கொள்வதற்கு முன் வந்துள்ளார் என்று சொல்லிக்கொள்கிறார்கள்.
 
உலமாக்கள் இடத்திலேயே மார்க்க சட்ட அறிஞர்கள் இடத்திலே கேளுங்கள்; ஒரு இயக்கத்தின் தலைவர் சொல்வது மார்க்கச் சட்டம் ஆகாது; உணர்ச்சிகள், அடிப்படைகள் சொல்லக்கூடிய தத்துவங்கள் மார்க்க சட்டம் ஆகாது; கோபத்தின் அடிப்படையில் செய்ய கூடிய செயல்கள் மார்க்க சட்டம் ஆகாது. இன்று முஸ்லிம்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்தைப் பேணி அதன் பக்கம் அழைப்பதற்காக தனது உயிரை, பொருளைச் செலவு செய்பவர்கள் இதுபோன்ற சில குழுக்களுக்கு அடிமையாகி அவர்களுடைய உணர்ச்சிகரமான, கவர்ச்சியான பேச்சுக்கு அடிமையாகி ஆதாரங்களை திருத்தி மார்க்கச் சட்டங்களைத் திரித்து அவர்கள் சொல்லக்கூடிய அந்த பேச்சுக்களுக்கு பிரச்சாரங்களுக்கு அடிமையாகி இதுபோன்ற தவறான செயல்களில் ஈடுபடுவதை நாம் பார்க்கின்றோம். 
 
 
அது முஸ்லிம்கள் வசிக்கக்கூடிய முஸ்லிம் நாடாக இருக்கட்டும் அல்லது காபிர் மத்தியிலே பொதுவான ஒப்பந்தத்தின் அடிப்படையில் முஸ்லிம்களும் முஸ்லிம் அல்லாதவர்களும் வாழக் கூடிய நாடாக இருக்கட்டும், எந்த ஒரு இடத்திலும் இப்படிப்பட்ட செயல்களை செய்வது இஸ்லாமிய மார்க்கத்தில் சொல்லப்படாத ஒன்று; அல்லாஹ்வுடைய தீனில் இல்லாத ஒன்று; இது மனிதனுடைய அறிவுக்கும் மனிதனுடைய இயற்கைக்கும் அப்பாற்பட்ட ஒன்று. 
 
இது போன்ற செயல்களை உண்மையில் செய்பவர்கள் யார் என்று வரலாறுகளை நீங்கள் பார்ப்பீர்களானால் கம்யூனிச சிந்தனை உள்ளவர்களால் செய்யப்பட்ட செயல்கள்தான். இந்த பொது இடங்களைத் தாக்குவது பொதுமக்களுக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்துவது அங்கே வெடிகுண்டு நிகழ்ச்சிகளை நடத்துவது கண்மூடித்தனமாக பொதுமக்களை சுடுவது இதை கம்யூனிச சிந்தனையார்களிடமிருந்து பெறப்பட்ட தீய கலாச்சாரம் ஆகும். 
 
ஒரு முஸ்லிம் என்ன செய்கின்றான்? அவருடைய மார்க்கத்திற்காக அவன் ஜிஹாத் செய்வதாக இருந்தால் கூட அதற்கென சட்டம் இருக்கிறது; அதற்கென்று ஒழுங்கு இருக்கிறது; அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் ஜிஹாதுக்கு என்று ஒழுக்கத்தை, சட்டத்தை, கட்டுப்பாட்டை கற்றுக் கொடுத்துள்ளார்கள்; அதற்கென அறிவு இருக்க வேண்டும்; ஹிஜ்ரத் செய்து முஸ்லிம்கள் பாதுகாப்பாக வாழ்வதற்கு உண்டான பாதுகாப்பு அங்கே இருக்க வேண்டும். 
 
ஜிஹாத் என்பது காபிர்களுக்கு மத்தியில் முதலாவதாக எச்சரிக்கை கொடுக்கப்படவேண்டும் அழைப்பு கொடுக்கப்பட்டதற்குப் பிறகு செய்யப்படக்கூடிய ஒரு போருக்கு தான் ஜிகாத் என்று சொல்லப்படுமே தவிர, ஒரு தெருவிலே சென்று குண்டு வைத்து விடுவதை அல்லது பொது மக்கள் கூடி இருக்கக்கூடிய இடத்திலே கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்துவது அல்லது அவர்களை கைப்பற்றிக் கொண்டு அவர்களை பதுக்கி வைப்பது எல்லாம் மார்க்கம் ஜிஹாத் என்று ஏற்றுக்கொள்ளவில்லை. 
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் ஜிஹாத் உடைய மைதானத்தில் சொன்ன ஒழுக்கங்களை பாருங்கள்; போர் உக்கிரமாக நடந்து கொண்டிருக்கக்கூடிய சூழ்நிலையில் அல்லாஹ்வின் தூதர் வழிகாட்டுதலை பாருங்கள்; கண்ணியத்திற்குரிய தோழர்களைப் பார்த்து, யார் தனது ஊரிலிருந்து வெளியேற்றப்பட்டார்களோ அப்படிப்பட்ட சஹாபாக்களை பார்த்து நபியவர்கள் சொன்னார்கள்;
 
போர் மைதானத்தில் நீங்கள் பெண்களை கொள்ளாதீர்கள்; போர் மைதானத்தில் ஒரு காபிர் தனது மனைவியுடன் வந்து இருப்பானேயானால் அந்த மனைவியை கொள்ளாதீர்கள் எதுவரை அவள் வாளெடுத்து உங்களுக்கு  மத்தியில் போர் செய்யாதவரை. போரில் ஈடுபடுபவர்களுக்கு  உதவுவதற்காகவோ அல்லது காயம் பட்டவருக்கு மருந்து இடுவதற்காகவோ வந்திருந்தாலோ அப்படிப்பட்ட பெண்களை கொன்றுவிடாதீர்கள்; போர் மைதானத்தில் நீங்கள் குழந்தைகளை கொன்று விடாதீர்கள். 
 
வயது முதிர்ந்தவர்களை  நீங்கள் கொன்றுவிடாதீர்கள்; காபிர்கள் நாடுகளில் அவர்களுடைய கோவில்களிலும் மடங்களிலும் இருக்கக்கூடிய துறவிகளை நீங்கள் கொன்று விடாதீர்கள்; அவர்களின் வீடுகளுக்கு நீங்கள் தீ வைக்காதீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சொன்னது மட்டுமல்ல ஒரு காபிர் கொல்லப்பட்டு விடுவானேயானால் உனது வாளால் வெட்டப்பட்டு அவனது உயிர் பிரிந்து விடுவானேயானால் அவனது உயிரை சிதைக்காதே; அவனது உறுப்புகளை வெட்டாதே; எந்த அளவிற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போரின் ஒழுங்குகளை சொல்லி இருக்கின்றார்கள்.
 
நூல்: ஸஹீஹ் முஸ்லிம் 
 
யாருடைய உயிராக இருக்கட்டும் முஸ்லிமின் உயிராக இருக்கட்டும் முஸ்லிமல்லாதவரின் உயிராக இருக்கட்டும். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் சொன்ன வார்த்தையை இமாம் திர்மிதி பதிவு செய்கின்றார்கள்.
 
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَلَا مَنْ قَتَلَ نَفْسًا مُعَاهِدًا لَهُ ذِمَّةُ اللَّهِ وَذِمَّةُ رَسُولِهِ فَقَدْ أَخْفَرَ بِذِمَّةِ اللَّهِ فَلَا يُرَحْ رَائِحَةَ الْجَنَّةِ وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ سَبْعِينَ خَرِيفًا
 
யார் ஒருவர் அல்லாஹ்வின் உரிமையின் அடிப்படையில் நபியின் உரிமையின் அடிப்படையில் ஒப்பந்தத்தை பெற்றிருக்கின்ராரோ அப்படிப்பட்ட ஒப்பந்தம் பெற்ற ஒரு உயிரை கொள்வானேயானால் அல்லாஹ்வின் பார்வையில் அவன் மோசம் செய்து விட்டான். எழுபது ஆண்டுகள் தூரமாக இருந்தாலும் கூட மணம் வீசக் கூடிய சுவர்க்கத்தின் வாடையைக் கூட நுகர முடியாது.
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி, எண்: 1323.    
 
இது போன்ற இன்னொரு ஹதீஸை அபூபக்ரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்;
 
عَنْ أَبِي بَكْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ قَتَلَ نَفْسًا مُعَاهِدَةً بِغَيْرِ حِلِّهَا حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ أَنْ يَشُمَّ رِيحَهَا
 
ஒரு மனிதன் ஒரு காபிர் உடைய உயிரை ஒப்பந்தத்தின் அடிப்படையில் சேர்ந்து வாழக்கூடிய ஒரு மனிதனின் உயிரைக் கொள்வதற்கு உண்டான  ஹலாலான காரணமில்லாமல் கொன்று விடுவாரேயானால் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சொர்க்கத்தை அவன்மீது தூரமாக்குகின்றான். அதனுடைய வாடையைக் கூட நுகர முடியாது. 
 
நூல்: நசாயி, எண்: 4667
 
ஆகவே இது போன்ற செயல்களை நம்முடைய வாலிபர்கள் நம்முடைய சமுதாய மக்கள் ஈடுபடுவதிலிருந்து நாம் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இதுபோன்று மக்களுக்கு சரியான விழிப்புணர்வும் கொடுத்து மார்க்கத்திற்கு தியாகம் செய்வது, முஸ்லிம்களைப் பாதுகாப்பது என்றால் அதற்கு அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் என்ன வழிமுறைகளை கூறியிருக்கின்றார்கள் என்பதை குறிப்பாக வாலிப மக்களுக்கு உணர்த்த வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். 
 
அல்லாஹ் கூறுகின்றான்;
 
وَلَا تُفْسِدُوا فِي الْأَرْضِ بَعْدَ إِصْلَاحِهَا ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
 
பூமி அமைதி பெற்றதற்கு பிறகு சீர்திருத்தம் பெற்றதற்கு பிறகு அதில் குழப்பம் செய்யாதீர்கள். நீங்கள் மூமினாக இருந்தால் அது தான் உங்களுக்கு சிறந்தது. (அல்குர்ஆன் 7 : 85) 
 
மேலும் அல்லாஹ் கூறுகின்றான்:
 
وَلَا تَقْعُدُوا بِكُلِّ صِرَاطٍ تُوعِدُونَ وَتَصُدُّونَ عَنْ سَبِيلِ اللَّهِ مَنْ آمَنَ بِهِ وَتَبْغُونَهَا عِوَجًا
 
நீங்கள் ஒவ்வொரு வழியிலும் உட்கார்ந்து கொண்டு அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களைப்பயமுறுத்தி, அல்லாஹ்வுடைய வழியில் அவர்கள் செல்வதைத் தடைசெய்து அதில் கோணலை உண்டு பண்ணாதீர்கள். (அல்குர்ஆன் 7 : 86)
 
மக்களை அச்சுறுத்தும் படி பாதையில் நீங்கள் அமராதீர்கள்; எப்படிப்பட்ட அறிவுரையை சொல்கின்றார்கள். அவர்களைக் கொல்வது அல்ல; உங்களைப் பார்த்தால் அச்சம் தோன்றுகிறது. ஒரு குழந்தை, ஒரு பெண், ஒரு மனிதன், தனியாக செல்லும்போது உட்கார்ந்து இருக்கக்கூடிய மக்களை பார்த்து அவனுக்கு பயம் ஏற்படுகிறது. இவர்கள் நமக்கு ஏதாவது  செய்து  விடுவார்களா என்று, அப்படிப்பட்ட நிலையில் கூட நீங்கள் பாதையிலே   உட்காராதீர்கள் என்று சொன்னால் கண்மூடித்தனமாக பொதுமக்கள் இருக்கக்கூடிய இடங்களில் வெடிகுண்டுகளை வைப்பது எந்த வகையில் இஸ்லாமிய மார்க்கத்தில் சேரும். இப்படிப்பட்டவர்கள் முஸ்லிம்களில் எந்த இனத்தை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். 
 
கண்டிப்பாக இரண்டு விஷயத்தை இங்கு நாம் பார்க்கவேண்டும்; இப்படிப்பட்ட செயல்கள் அவர்கள் உண்மையில் காபிர்களை பழிவாங்கவில்லை; மாறாக காபிர்களை இஸ்லாமைப் பற்றிய தவறான பாடத்தை கொடுக்கின்றார்கள். மற்ற மக்கள் இஸ்லாம் பக்கம் வருவதற்கு இவர்கள் தடையாக இருக்கின்றார்கள். 
 
எனது இந்த செயல் மார்க்கத்திலிருந்து தடுப்பது என்ற ஒரு  குற்றத்தில் வரும். மார்க்கத்தை நீங்கள் கோணலாக்க முயற்சி செய்கிறீர்களா? நேர்மையான நீதமான மார்க்கத்திலே அநியாயத்தை அக்கிரமத்தை சொல்கின்றீர்களா? ஆகவே அல்லாஹு ரப்புல் ஆலமீன் கட்டளையை மீறி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதலை மீறி ஒரு முஸ்லிம்  தனது உணர்வுகளை உணர்ச்சிகளை கோபத்தை வெளிப்படுத்த முடியாது. 
 
அல்லாஹ்வும் அல்லாஹ்வின் ரஸூலும் நமக்கு ஒவ்வொரு சமய சந்தர்ப்பத்திலும் எப்படி நடக்க வேண்டும் என்று அழகிய வழிகாட்டுதலை கொடுத்துள்ளார்கள். அந்த வழிகாட்டுதலை குர்ஆன் சுன்னாவின் அடிப்படையில் மார்க்கத்தின் மூத்த அறிஞர்களை அணுகி அவர்களின் தெளிவான வழிகாட்டுதலிருந்து நாம் பெரும் போது தான் மார்க்கத்தில் நேர்வழி பெற்றவர்களாகவும் உலகத்தில் பாதுகாப்பு பெற்றவர்களாகவும் நாம் வாழ முடியும். 
 
இயக்கங்களோ குழுக்களோ அல்லது அரசியலோ கோபதாபங்களுக்கு உட்பட்டு இயக்கங்களின் தலைவர்களின் பேச்சுக்குப் பின்னால், குழுக்களின் பேச்சுக்குப் பின்னால், அவர்களுடைய தலைவர்களின் பேச்சுக்குப் பின்னால், செல்லக்கூடிய மக்களுக்கு மட்டும் பிரச்சனை அல்ல; அவர்கள் எந்த சமுதாயத்தை சார்ந்திருக்கிரார்களோ அவர்களுக்கும் மக்களுக்கும் அவர்கள் பிரச்சனையை சேர்த்துவிடுகிறார்கள் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நம்மையும் நமது வாலிப மக்களையும் பாதுகாப்பானாக!
 
ஆமீன் 
 
 
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1).
 
حَدَّثَنَا آدَمُ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا عَمْرُو بْنُ مُرَّةَ قَالَ سَمِعْتُ عَبْدَ الرَّحْمَنِ بْنَ أَبِي لَيْلَى قَالَ كَانَ سَهْلُ بْنُ حُنَيْفٍ وَقَيْسُ بْنُ سَعْدٍ قَاعِدَيْنِ بِالْقَادِسِيَّةِ فَمَرُّوا عَلَيْهِمَا بِجَنَازَةٍ فَقَامَا فَقِيلَ لَهُمَا إِنَّهَا مِنْ أَهْلِ الْأَرْضِ أَيْ مِنْ أَهْلِ الذِّمَّةِ فَقَالَا إِنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَرَّتْ بِهِ جِنَازَةٌ فَقَامَ فَقِيلَ لَهُ إِنَّهَا جِنَازَةُ يَهُودِيٍّ فَقَالَ أَلَيْسَتْ نَفْسًا يَقُومَانِ لِلْجَنَازَةِ  (صحيح البخاري- 1229) 
 
குறிப்பு 2).
 
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ قَالَ أَخْبَرَنَا شُعَيْبٌ قَالَ أَخْبَرَنَا أَبُو الزِّنَادِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ الْأَعْرَجِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ
 
قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى يُقْبَضَ الْعِلْمُ وَتَكْثُرَ الزَّلَازِلُ وَيَتَقَارَبَ الزَّمَانُ وَتَظْهَرَ الْفِتَنُ وَيَكْثُرَ الْهَرْجُ وَهُوَ الْقَتْلُ الْقَتْلُ حَتَّى يَكْثُرَ فِيكُمْ الْمَالُ فَيَفِيضَ (صحيح البخاري 978 -)
 
குறிப்பு 3).
 
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ بَهْرَامَ الدَّارِمِيُّ حَدَّثَنَا مَرْوَانُ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ الدِّمَشْقِيَّ حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ عَنْ أَبِي ذَرٍّ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيمَا رَوَى عَنْ اللَّهِ تَبَارَكَ وَتَعَالَى أَنَّهُ قَالَ يَا عِبَادِي إِنِّي حَرَّمْتُ الظُّلْمَ عَلَى نَفْسِي وَجَعَلْتُهُ بَيْنَكُمْ مُحَرَّمًا فَلَا تَظَالَمُوا يَا عِبَادِي كُلُّكُمْ ضَالٌّ إِلَّا مَنْ هَدَيْتُهُ فَاسْتَهْدُونِي أَهْدِكُمْ يَا عِبَادِي كُلُّكُمْ جَائِعٌ إِلَّا مَنْ أَطْعَمْتُهُ فَاسْتَطْعِمُونِي أُطْعِمْكُمْ يَا عِبَادِي كُلُّكُمْ عَارٍ إِلَّا مَنْ كَسَوْتُهُ فَاسْتَكْسُونِي أَكْسُكُمْ يَا عِبَادِي إِنَّكُمْ تُخْطِئُونَ بِاللَّيْلِ وَالنَّهَارِ وَأَنَا أَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا فَاسْتَغْفِرُونِي أَغْفِرْ لَكُمْ يَا عِبَادِي إِنَّكُمْ لَنْ تَبْلُغُوا ضَرِّي فَتَضُرُّونِي وَلَنْ تَبْلُغُوا نَفْعِي فَتَنْفَعُونِي يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَتْقَى قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مِنْكُمْ مَا زَادَ ذَلِكَ فِي مُلْكِي شَيْئًا يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَفْجَرِ قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مَا نَقَصَ ذَلِكَ مِنْ مُلْكِي شَيْئًا يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ قَامُوا فِي صَعِيدٍ وَاحِدٍ فَسَأَلُونِي فَأَعْطَيْتُ كُلَّ إِنْسَانٍ مَسْأَلَتَهُ مَا نَقَصَ ذَلِكَ مِمَّا عِنْدِي إِلَّا كَمَا يَنْقُصُ الْمِخْيَطُ إِذَا أُدْخِلَ الْبَحْرَ يَا عِبَادِي إِنَّمَا هِيَ أَعْمَالُكُمْ أُحْصِيهَا لَكُمْ ثُمَّ أُوَفِّيكُمْ إِيَّاهَا فَمَنْ وَجَدَ خَيْرًا فَلْيَحْمَدْ اللَّهَ وَمَنْ وَجَدَ غَيْرَ ذَلِكَ فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ (صحيح مسلم4674 -)
 
 
 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/