தோழர்களும் நபிக்கு கீழ்ப்படிதலும் (அமர்வு 2/2) | Tamil Bayan - 338
தோழர்களும் நபிக்கு கீழ்ப்படிதலும்
ஜுமுஆ குத்பா தலைப்பு : தோழர்களும் நபிக்கு கீழ்ப்படிதலும் பகுதி 2
வரிசை : 338
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 29-08-2014 | 03-11-1435
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
கண்ணியத்துக்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை தனிமையிலும் பொது வாழ்க்கையிலும் எல்லா சூழ்நிலைகளிலும் பயந்து கொள்ளுமாறு உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை கொண்டு அறிவுரை கூறியவனாக தொடங்குகிறேன்.
நமது இம்மை மறுமையின் வெற்றி, நமது இம்மை மறுமையின் நல்ல வாழ்க்கை, அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வுடைய தூதருக்கும் கட்டுப்படுவதில் தான் இருக்கின்றது.
وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
யார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டார்களோ அவர் மகத்தான வெற்றி அடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 71)
அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டுவது என்பது அவர்களுடைய கட்டளை, அவர்களுடைய சொல், செயல், அவர்களுடைய வழிகாட்டுதல், அவை நமக்கு பிடித்தமாக இருந்தாலும் சரி, அல்லது பிடிக்கவில்லை என்றாலும் சரி, அவற்றையே நாம் நமக்கு பிடித்தமானவையாக மாற்றிக்கொள்ள வேண்டும்.
அல்லாஹ்வுடைய கட்டளை,அது சில நேரங்களில் நமது நஃப்சுக்கு சிரமமாக இருக்கலாம். ஆனால், எதை அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் கட்டளையிட்டார்களோ அதுதான் நமக்கு பிரியமானதாக மாறவேண்டும்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
لا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يَكُونَ هَوَاهُ تَبَعًا لِمَا جِئْتُ بِهِ
"உங்களில் ஒருவர் முஃமினாக ஆக முடியாது. அவருடைய ஆசையும் நான் கொண்டு வந்த மார்க்கத்தை பின்பற்றக்கூடியதாக மாறுகின்ற வரை".(1)
ஹதீஸின் தரம் : ஹசன் (இப்னு பாஸ்)
ஒருவன் "லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ் என்ற இந்த தூய திருக்கலிமாவை சொல்லிவிடுவாரேயானால் அதற்குப் பிறகு அவருடைய விருப்பம் அல்லாஹ்வுக்கு எது விருப்பமோ அதுவாகத்தான் இருக்கவேண்டும்.
அவருடைய விருப்பம், எது முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு விருப்பமானதோ அதுதான் அவருக்கும் விருப்பமானதாக மாறவேண்டும்.
இதைகொண்டு தான் ஒரு மனிதன் முழுமையாக இஸ்லாமிய மார்க்கத்திற்குள் நுழைகிறான்.
வெறும் இந்த வாசகத்தை சொன்னதற்குப் பிறகு, ஒரு மனிதனுடைய சொல், செயல், சிந்தனை, ஆசை மாறவில்லை என்றால் ,அவர் உண்மையில் முழுமையாக இஸ்லாமிய மார்க்கத்திற்குள் நுழையவில்லை என்பதை அல்லாஹு தஆலா உறுதிப்படுத்துகிறான்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً وَلَا تَتَّبِعُوا خُطُوَاتِ الشَّيْطَانِ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ
நம்பிக்கையாளர்களே! நீங்கள் (தயங்கிக் கொண்டிருக்க வேண்டாம்.) இஸ்லாமில் முற்றிலும் நுழைந்து விடுங்கள். (இதைத் தடை செய்யும்) ஷைத்தானின் அடிச்சுவடுகளைப் பின்பற்றாதீர்கள். நிச்சயமாக அவன் உங்களுக்குப் பகிரங்கமான எதிரியாவான். (அல்குர்ஆன் 2:208)
இந்த வசனம், எப்போது இறக்கப்பட்டது என்றால், யூத மதத்திலிருந்து இஸ்லாத்தை ஏற்ற சிலர்,தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள். நாம் யூத மதத்தை பின்பற்றி வந்த போது ஒட்டகத்தின் மாமிசத்தை சாப்பிடாமல் இருந்தோம். இப்பொழுது நாம் இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுக் கொண்டோம்.
இப்போதும் நாம் ஒட்டக கறியை தடுத்துக் கொள்வோமயானால் யூத மதத்தை பின்பற்றியதின் நன்மையும் நமக்கு கிடைக்கும் அல்லவா? இஸ்லாமிய மார்க்கத்தில் ஒட்டக இறைச்சியை சாப்பிட வேண்டும் என்ற கட்டளை இல்லையே! என்று அவர்கள் எண்ணிக் கொண்டு ஒட்டகத்தின் மாமிசத்தை சாப்பிடுவதை தவிர்த்துக் கொண்டபோது அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த கட்டளையை இறக்கினான்.
முஃமின்களே! இஸ்லாமிய மார்க்கத்திற்கு நுழைந்து விடுங்கள். அல்லாஹ்வையும், அவனுடைய தூதரையும் நீங்கள் இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் அடிப்படையில் நம்பிக்கை கொண்டதற்குப் பிறகு, வேறு மதம், வேறு கொள்கை, வேறு கோட்பாடு, வேறு பழக்கவழக்கங்கள், அவற்றை நீங்கள் இந்த இஸ்லாமிய மார்க்கத்தில் நுழைக்க கூடாது.
அவற்றையும் கடைப்பிடிக்கலாம். அவற்றையும் எடுத்து நடக்கலாம். அவற்றிலும் சில நன்மைகள் இருக்கலாம் என்ற எண்ணங்கள் உங்கள் சிந்தனைகளில வந்துவிடக்கூடாது.
உங்களது விருப்பம் எதுவாக இருக்க வேண்டும் என்றால்,எதை அல்லாஹ் ஹலாலாக்கினானோ அது உங்கள் விருப்பமாக, உங்களது வெறுப்பு,எதுவாக இருக்க வேண்டுமென்றால்,எதை அல்லாஹ் ஹராமாக்கினானோ அதுவாகத்தான் இருக்கவேண்டும்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒருசில சந்தர்ப்பத்தில்,மனைவிமார்களின் சில விருப்பத்தின் அடிப்படையில் தேன் அருந்துவதை தடுத்துக் கொண்டார்கள்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தனது அன்பிற்குரிய அந்த தூதர் அவர்களைப் பார்த்து கேட்கக் கூடிய அந்த தோரணையை பாருங்கள்.
يَا أَيُّهَا النَّبِيُّ لِمَ تُحَرِّمُ مَا أَحَلَّ اللَّهُ لَكَ تَبْتَغِي مَرْضَاتَ أَزْوَاجِكَ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
நபியே! நீர் உமது மனைவிகளின் திருப்தியைக் கருதி, அல்லாஹ் உமக்கு ஆகுமாக்கி வைத்தவற்றை (எடுத்துக் கொள்வது இல்லை என்று) நீர் ஏன் (சத்தியம் செய்து அதை ஹராம் என்று) விலக்கிக் கொண்டீர்? அல்லாஹ் மிக மன்னிப்பவனும் மகா கருணையுடையவனும் ஆவான்.(அல்குர்ஆன் 66 : 1)
அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்விற்கு எது விருப்பமோ அதுதான் உங்களுக்காக இருக்கவேண்டும். அல்லாஹ்விற்கு எது வெறுப்போ அது தான் உங்களுக்கும் வெறுப்பாக இருக்க வேண்டும் என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு போதிப்பதின் மூலமாக முழு உம்மத்தாகிய நமக்கு அல்லாஹு ரப்புல் ஆலமீன் அந்த வழிகாட்டுதலை தருகின்றான்.
நேசத்துக்குரிய நபித்தோழர்களை நாம் பார்க்கின்றோம். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு கட்டுப்படுவதில்,வரக்கூடிய எல்லா சமுதாய மக்களுக்கும் இறுதிநாள் வரை வரக்கூடிய முஸ்லிம்களுக்கு எவ்வளவு அழகிய முன்மாதிரியை விட்டுச் சென்றிருக்கிறார்கள்.
இன்று,நம்முடைய வாழ்க்கை எப்படி இருக்கின்றது என்றால், சில சந்தர்ப்பங்களில் மட்டும்தான் நமக்கு அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் நினைவுக்கு வருகிறார்கள். சில சூழ்நிலைகளில் மட்டும்தான் நமக்கு சுன்னத் ஞாபகம் வருகிறது.
வாழ்க்கையின் எத்தனையோ சந்தர்ப்பங்களில் அல்லாஹ்வின் கட்டளைகளை மறந்தவர்களாக, அல்லது புறக்கணித்தவர்களாக, அலட்சியம் செய்தவர்களாக, ரசூலுல்லாஹ் உடைய சுன்னத்தை மறந்தவர்களாக, அல்லது அலட்சியம் செய்தவர்களாக, நமது சமுதாயத்தின் பெரும்பகுதி மக்கள் இருப்பதைப் பார்க்கின்றோம்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கட்டுப்படுவதில் கண்ணியத்துக்குரிய தோழர்களின் முன்மாதிரியை பாருங்கள். அவர்கள் எப்படி பின்பற்றினார்கள். எவ்வளவு அழகிய சம்பவங்கள் நபித்தோழர்கள் அந்த வரலாற்றில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.
அவற்றில் சில வரலாறுகளை பார்ப்போம்.அபு பர்சா அல்அஸ்லமி ரழியல்லாஹு அன்ஹுஎன்ற நபித்தோழர் அறிவிக்கிறார்கள். இமாம் அஹ்மத் பதிவு செய்கிறார்கள்.
وَكَانَتْ الْأَنْصَارُ إِذَا كَانَ لِأَحَدِهِمْ أَيِّمٌ لَمْ يُزَوِّجْهَا حَتَّى يَعْلَمَ هَلْ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِيهَا حَاجَةٌ أَمْ لَا
அன்சாரிகளில் யாராவது ஒரு பெண் விதவையாகி விட்டால் அந்தப்பெண்ணை அன்சாரிகளில் யாரும் பெண் பேச மாட்டார்கள். எதுவரை ரசூலுல்லாஹ் உடைய விருப்பம் எது என்று தெரிந்து கொள்வார்களோ, நபி அந்தப் பெண்ணை மணமுடிக்க விரும்புகிறார்களா இல்லையா என்று தெரிந்ததற்கு பிறகுதான் அவர்கள் மணம் முடிப்பார்கள்.
நபிக்கு விருப்பம் இருக்குமேயானால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் முடித்துக் கொள்வார்கள். நபிக்கு அந்தப் பெண்ணின் மீது விருப்பமில்லை என்று தெரிந்தால் மட்டும் தான் அந்த விதவைப் பெண்மணியை ஒரு தோழர் பெண் பேச முன்வருவார்.
இப்படி இருக்கும் பொழுது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அன்சாரி தோழர்களில் ஒருவருக்கு நபியவர்கள் சொன்னார்கள்;
உனது மகளை எனக்கு நீ மணம் முடித்து வை என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதரே!எவ்வளவு சந்தோஷமான செய்தி, கண்ணியமான செய்தி, என் கண்களெல்லாம் குளிர்ச்சியாகட்டும் என்று அந்த தோழர் சொன்னபோது, நபியவர்கள் சொன்னார்கள்;உனது மகளை நான் எனக்காக கேட்கவில்லை.
அல்லாஹ்வின் தூதரே! யாருக்காக நீங்கள் பெண் பேசினீர்கள்? அப்போது நபி சொன்னார்கள், ஜுலைபிப் என்ற தோழருக்கு என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! எனது மகளின் தாயிடத்தில் எனது மனைவியிடத்தில் நான் ஆலோசனை கேட்டுக்கொள்கிறேன் என்று கூறிவிட்டு, தனது மனைவியிடத்தில் வருகிறார்.
ஏன் இப்படி செய்தார்? இந்த ஜுலைபிப் என்ற தோழரை பொருத்தவரை, அவருடைய அங்க அடையாளங்கள், அவருடைய தோற்றம், பெரும்பாலான மக்களால் கவறப்படாததாக, பெரும்பாலான மக்களுக்கு அவரை பார்த்தால் ஒரு விருப்பமற்றவராக இருந்தார். அவருடைய தோற்றம் அப்படியே இருந்தது.
எனவே அவருக்கு யாரும் பெண் கொடுக்க முன்வரவில்லை. அவருடைய தோற்றம், அவருடைய உயரம், அவருடைய அழகு, இதனால் அதிகமான மக்கள் அவருக்கு பெண் கொடுக்க முன்வரவில்லை.
அந்த நேரத்தில்தான் ஜுலைபிப்ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அணுகிய போது அன்சாரித் தோழர் ஒருவரை அழைத்து ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பேசுகிறார்கள்.
இப்போது இந்த தோழர் தனது மனைவியிடத்தில் வருகிறார். அப்போது தனது மனைவியிடத்தில் சொல்கிறார்; அல்லாஹ்வின் தூதர் உனது மகளை பெண் கேட்கிறார்கள்.
ஆம், ரொம்ப சந்தோசமான செய்தி, என் கண்குளிர்ச்சியே, நல்லபடியாக நடக்கட்டும் என்று சொன்னபோது, அந்தத் தோழர் சொல்கிறார்;
நபியவர்கள் உனது மகளை தனக்காக பெண் கேட்கவில்லை. நபியவர்கள் அந்தப் பெண்ணை கேட்பதெல்லாம் ஜுலைபிக்காக வேண்டி.
உடனே அந்தப் பெண் சொல்கிறார். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவருக்கு நாங்கள் மணம் முடித்து கொடுக்க மாட்டோம் என்று அந்த பெண் சொன்னபோது, தனது மனைவி சொன்னதை நபியிடத்தில் சொல்வதற்காக வீட்டிலிருந்து புறப்பட்ட போது, இந்த நிகழ்வுகளைப் பார்த்து கொண்டிருந்த அல்லது கேட்டுக் கொண்டிருந்த அவர்களுடைய மகள் சொன்னார்கள்;
என் தாய் தந்தையே! உங்களிடத்தில் யார் பெண் பேசினார்கள்? அந்தப் பெண்ணுடைய தாய் நடந்ததை சொன்னபோது,
ரசூலுல்லாஹ்விடம் அவர்களுடைய கட்டளைகளையா நீங்கள் மறுக்கின்றீர்கள்? நபிக்கா நீங்கள் மறுப்பு சொல்கின்றீர்கள்?
நபி என்னை யாரிடம் ஒப்படைக்க சொல்கின்றார்களோ அவரிடம் ஒப்படைத்து விடுங்கள். அல்லாஹ்வின் தூதர் என்னை வீணாக்க மாட்டார்கள். என்னை வீணாக சீரழிய மாட்டார்கள். கண்டிப்பாக அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லமுடைய கட்டளையில் எனக்கு ஒரு நன்மை இருக்கும் என்று சொன்னார்கள்.
அவருடைய தந்தை நபியிடத்தில் வந்து சொல்கிறார், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அப்படி செய்து கொள்ளுங்கள். நபி அவர்கள் ஜுலைபிக்கு அந்த மகளை மணம் முடித்து வைக்கிறார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த நிகழ்வுக்குப் பிறகு ஒரு போரில் கலந்து கொள்ள சென்றபோது, அதில் எல்லா தோழர்களும் கலந்து கொள்கிறார்கள்.
அதில் ஜுலைபிபும் இருக்கிறார். போர் முடிந்த போது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கேட்கிறார்கள். நீங்கள் தோழர்களில் யாரையாவது காணவில்லை என்று கருதுகிறீர்களா? என்று சொன்ன போது, அல்லாஹ்வின் தூதரே! எல்லா தோழர்களும் இருக்கத்தானே செய்கிறார்கள்.
அப்போது சொன்னார்கள், இல்லை இல்லை. நான் ஜுலைபிபை காணவில்லை, அவரை என்று நான் தேடுகிறேன்.
கொல்லப்பட்டவர்களில் அவர்களை நீங்கள் தேடுங்கள் என்று சொன்னபோது, அப்பொழுது அந்தத் தோழர்கள் தேடி வரும்போது அதில் ஜுலைபிபும் இருக்கிறார்.
ஏழு காஃபிர்கள் அங்கே இருக்கிறார்கள். ஜுலைபிப் அந்த ஏழு பேரையும் கொன்று இருக்க, அந்த ஏழு பேர் இவரை கொன்று இருக்கிறார்கள். அவருக்கு அருகில் ஏழு காஃபிருடைய சடலங்கள் இருக்கிறது.
நபியிடத்தில் வந்து சொன்னபோது நபியவர்கள் சொன்னார்கள். ஏழு காஃபிர்களை கொன்று இருக்கிறார். அவர்கள் இவரை கொன்றிருக்கிறார்கள்.
هَذَا مِنِّي وَأَنَا مِنْهُ هَذَا مِنِّي وَأَنَا مِنْهُ مَرَّتَيْنِ أَوْ ثَلَاثًا
"நான் இவரை சேர்ந்தவன் இவர் என்னை சேர்ந்தவர்" என்று மூன்று முறை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிவிட்டு, அந்தத் தோழரை தனது இரு கைகளில் ஏந்தி கொள்கிறார்கள். அவருக்காக குழி தோண்டப்படுகிறது. அதுவரை அந்த தோழரை தனது கரத்தில் ஏந்தி இருக்கிறார்கள்.
பிறகு, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே குழியில் இறங்கி அந்தத் தோழரை அடக்கம் செய்கிறார்கள்.
செய்துவிட்டு சொல்கிறார்கள்;
اللَّهُمَّ صُبَّ عَلَيْهَا الْخَيْرَ صَبًّا وَلَا تَجْعَلْ عَيْشَهَا كَدًّا كَدًّا
அல்லாஹ்வே! இந்த ஜுலைபிபின் மனைவிக்கு செல்வத்தை நீ பொழிவாயாக! அவருடைய வாழ்க்கையை சிரமத்திற்கு உள்ளானதாக வறுமைக்கு உள்ளானதாக ஆக்கிவிடாதே! என்று துஆ செய்கிறார்கள்.
நபியின் துஆ எப்படி அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது என்பதை பாருங்கள். தோழர்கள் சொல்கிறார்கள், அன்சாரி பெண்களில் எத்தனையோ விதவைப் பெண்களைப் பார்த்து இருக்கின்றோம்.
ஆனால், ஜுலைபிபீபுடைய மனைவி அல்லாஹ்வின் பாதையில் தர்மம் செய்வதற்கு செல்வத்தை வாரி இறைத்ததை போன்று வேறு பெண்கள் யாரும் இல்லை என்று சொல்கிறார்கள்.
அந்த அளவிற்கு அல்லாஹு சுப்ஹானஹு தஆலா அவர்களுக்கு செல்வத்தை கொடுத்ததை பார்க்கின்றோம்.
அறிவிப்பாளர் : அபூ பர்சா அல்அஸ்லமி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 18948.
இந்த சம்பவத்திலிருந்து நாம் என்னென்ன அறிவுரைகளை தெரிந்து கொள்கிறோம்?
ஒன்று,நம்முடைய இயற்கைக்கு அதாவது ஒரு மனிதனுடைய தனி விருப்பம் என்று இருக்கலாம். சிலருக்கு சில நிறம் பிடிக்கலாம். சிலருக்கு சில பொருள் பிடிக்கலாம்.
ஆகுமான விஷயங்களில் சிலவற்றை பிடிக்கலாம். சில விஷயங்கள் பிடிக்காமல் இருக்கலாம். இருந்தாலும் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் என்ற ஒரே காரியத்திற்காக அதை விரும்பியதின் அருளால்,
ஒன்று,அவருடைய கணவரைப் பற்றி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு சொல்கிறார்கள்;"இவர் என்னைச் சார்ந்தவர் நான் இவரை சார்ந்தவன்"என்று.
இரண்டாவது,ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அந்த பெண்ணிற்காக செய்த துஆவின் அருளையும் பார்க்கின்றோம்.
கண்ணியத்துக்குரியவர்களே!இது போன்றுதான் மற்றொரு சம்பவத்தை அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
எப்படிப்பட்ட ஒரு சூழ்நிலை பாருங்கள்! நபியின் அழைப்பை ஏற்றுக் கொள்ளும்போது நாமும் கொல்லப்படலாம்,உயிர் போகலாம்என்ற ஒரு சூழல் இருந்தும் கூட அதற்கு அந்த தோழர்கள் துணிந்ததை நாம் பார்க்கின்றோம்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் உஹது போர் தினத்தில் ஒரு வாளை கையில் எடுத்துக்கொண்டு கேட்கிறார்கள்.
مَنْ يَأْخُذُ مِنِّي هَذَا
இந்த வாளை என்னிடமிருந்து யார் பெறுகிறார்கள் என்று சொன்னபோது, எல்லா தோழர்களும் முன்வருகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதரே! நான் வாங்கிக் கொள்கிறேன், நான் வாங்கிக் கொள்கிறேன்என்று.
இந்த வாளை எனது கையில் இருந்து பெற்றால் அதற்குரிய ஹக்கை-உரிமையை, அதை எப்படி வீச வேண்டுமோ அப்படி அந்த வாளை வீச வேண்டும் என்று கேட்கும் பொழுது, எல்லோரும் பயப்படுகிறார்கள்.
அல்லாஹ்வின் தூதரின் இந்த கூற்றை நாம் செயல்படுத்துவோமா? என்று பயந்தபோது,அபூ துஜானா சொல்கிறார்;அல்லாஹ்வின் தூதரே! நான் இதற்குரிய ஹக்குகளுடன் நான் இதை வாங்கிக் கொள்கிறேன் என்று கூறி, நபியிடம் இருந்து அந்த வாளை பெற்றவர் முஷ்ரிக்குகளின் தலைகளை அந்த வாளின் மூலமாக சீவி இருக்கிறார்.
அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் போர் முடிந்ததற்குப்பிறகு தனது வாளை கழுவும்போது சொல்கிறார்கள், அல்லாஹ்வின் தூதரே! இந்த வாள் போரில் கடுமையாக உழைத்து இருக்கிறது என்று சொன்னபோது, நபியவர்கள் சொன்னார்கள்;உமது வாள் அல்லாஹ்வின் பாதையில் இந்த உஹது யுத்தத்தில்கடுமையாக உழைத்து இருக்குமேயானால், அதைவிட அதிகமாக அபூ துஜானாவின் வாள் உழைத்து இருக்கிறது என்பதாக.(2)
அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 4516.
நபியின் கட்டளைக்கு முன்பாக சஹாபாக்கள் தன்னை அப்படியே அர்ப்பணிக்கின்ற அந்த ஆர்வத்தை பார்க்கின்றோம்.
மரணம் வந்தாலும் சரி, கொல்லப்பட்டாலும் சரி, எத்தகைய துன்பம் வந்தாலும் சரி, நபியின் கட்டளைகளை நிறைவேற்றுவதில் அவர்கள் ஈமானுடைய திருப்தியை பார்த்தார்கள்.
இன்னொரு சம்பவத்தை பாருங்கள், அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் ஒரு மனிதர் விருந்தாளியாக வருகிறார். எனவே நபி தனது மனைவிமார்களிடத்தில் ஏதாவது இருக்கிறதா என்று கேட்டு அனுப்புகிறார்கள்.
அப்போது ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடத்தில் ஏறக்குறைய ஏழு மனைவிமார்கள் ஹயாதாக இருக்கிறார்கள். எல்லோரும் சொல்கிறார்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்கள் இடத்தில் தண்ணீரை தவிர எந்தவிதமான உணவும் இல்லை.
நபியவர்கள் கேட்கிறார்கள்;
مَنْ يَضُمُّ أَوْ يُضِيفُ هَذَا
இவருக்கு யார் விருந்து வைப்பார்? இவரை யார் தனது வீட்டிற்கு அழைத்துச் செல்வார்? என்று சொன்னபோது, அல்லாஹ்வின் தூதரே! நான் அழைத்துச் செல்கிறேன் என்று ஒரு அன்சாரி சொல்கிறார்.
தனது மனைவியிடத்தில் வருகிறார்., ரசூலுல்லாஹ் உடைய விருந்தாளியை கண்ணியப்படுத்து என்று சொல்கிறார்கள்.
கணவரே! நமது பிள்ளைகளுக்கு உள்ள உணவு தானே நம்மிடத்தில் இருக்கிறது. அப்போது கணவன் சொல்லக்கூடிய அறிவுரையைப் பாருங்கள்.
உன்னிடத்தில் இருக்கக் கூடிய உணவை நீ தயார் செய். உனது பிள்ளைகளை நீ தூங்க வைத்து விடு. அவர்கள் உணவு கேட்டால் இரவு உணவை தேடினால் அவர்களை எப்படியாவது தூங்க வைத்து விடு.
பிறகு அந்த மனைவி அவருடைய கட்டளைக்கு ஏற்ப உணவை தயார் செய்து விளக்கை ஏற்றி வைத்து பிள்ளைகளை தூங்க வைத்து விடுகிறார்கள்.
எப்போது தனது கணவரும் ரசூலுல்லாஹ் உடைய விரிந்தாளியும் உணவு சாப்பிடுவதற்காக வீட்டிருக்கு வருகிறார்களோ, அந்த விளக்கை சரி செய்வது போன்று விளக்கை அணைத்து விடுகிறார்கள்.
இந்தப் பக்கம் மனைவியும் இந்த பக்கம் கணவரும் தாங்கள் இருவரும் உணவு சாப்பிடுவதை போன்று அசைவு போடுகிறார்கள்.
ஆனால் அவர்கள் உண்மையில் சாப்பிடவில்லை. விருந்தாளி வயிறார சாப்பிடுகிறார். கடுமையான பசியோடு அந்த இருவரும் இரவைக் கழிக்கிறார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் அந்த தோழர் சுபுஹு தொழுகைக்காக சென்ற போது சொல்கிறார்கள்.
ضَحِكَ اللَّهُ اللَّيْلَةَ أَوْ عَجِبَ مِنْ فَعَالِكُمَا فَأَنْزَلَ اللَّهُ
உங்களுடைய செயல்களைப் பார்த்து அல்லாஹ்வே ஆச்சரியப்பட்டு விட்டான். உங்களுடைய செயலால் அல்லாஹ்வே மகிழ்ச்சி அடைந்து விட்டான் என்று கூறிய ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் உங்களுக்காக அல்லாஹ் வசனத்தை இறக்கினான் என்று சூரத்துல் ஹஷ்ருடைய ஒன்பதாவது வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمْ الْمُفْلِحُونَ
தங்களுக்கு அவசியம் இருந்த போதிலும், தங்கள் பொருளை அவர்களுக்குக் கொடுத்து உதவி செய்தும் வருகின்றனர். இவ்வாறு எவர்கள் (அல்லாஹ்வின் அருளால்) கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டார்களோ அவர்கள்தான் வெற்றி பெற்றவர்கள் ஆவர்.(அல்குர்ஆன் 59:9) (3)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3514.
அந்த சஹாபாக்களை பொருத்தவரை,ரசூலுல்லாஹ் உடைய கட்டளை என்று வந்துவிட்டால்,அவர்கள் ஒரு விஷயத்தை பரம்பரை பரம்பரையாக செய்து,அவர்கள் பழக்கப்பட்டு இருந்தாலும்கூட,நபியின் கட்டளை என்று வந்துவிட்டால்,அவர்கள் அப்படியே அந்தப் பழக்கத்தை விடக்கூடியவர்களாக இருந்தார்கள்.
இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அறிவிக்கிறார்கள். அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள்;நான் அபூ உபைதா, அபூதல்ஹா, உபை இப்னு கஅப் இவர்களுக்கு மதுவின் ஒருவகையான பானத்தை புகட்டிக் கொண்டிருந்தபோது, நபியிடம் இருந்து ஒரு தோழர் வந்து சொன்னார்.
إِنَّ الْخَمْرَ قَدْ حُرِّمَتْ
"சாராயம் இப்போது ஹராமாக்கப்பட்டு விட்டது" என்று. அந்த வீட்டின் உரிமையாளராக இருந்த அபூதல்ஹா ரழியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள்; (அபூதல்ஹா யாரென்றால் அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய தாயை மணம் முடித்தவர்.)
அனஸே! நீ உடனடியாக எழுந்து செல். நம்மிடம் இருக்கின்ற அத்தனை மதுபான சட்டிகளையும் உடைத்து நீ அவற்றை ஊற்றி விடுவாயாக.
அனஸ் சொல்கிறார்; அனைத்து மதுபான சட்டிகளையும் உடைத்து நான் ஊற்றி விட்டேன் என்று.(4)
அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2284.
பாருங்கள்! நபியின் கட்டளையை ஒரு தோழர்தான் வந்து சொல்கிறார். யார் சொல்கிறார்? எப்போது இறக்கப்பட்டது? எவ்வளவு குடிப்பது? இப்படி எல்லாம் அவர்கள் விளக்கம் கேட்க வில்லை "சாராயம் ஹராமாக்கப்பட்டுவிட்டது" என்ற ஒரு செய்தி, நபி தடுத்துவிட்டார்கள், மார்க்கம் தடுத்துவிட்டது என்ற செய்தியை கேட்டதற்கு பிறகு அதை எவ்வளவுதான் அவர்கள் பழக்கப்பட்டிருந்தாலும் கூட அதில் அவர்கள் நாட்டம் கொள்ளவில்லை.
அதை அழிப்பதில்தான் அவர்கள் கவனம் செலுத்தினார்கள். இதை வேறுவகையில் பயன்படுத்தலாமா? வேறு ஏதாவது மாற்று ஒரு காரியத்தை செய்து அதிலிருந்து பயன்பெறலாமா? என்றெல்லாம் அவர்கள் யோசிக்கவில்லை. நபியின் கட்டளையை செயல்படுத்துவதில்தான் அவர்கள் கவனம் காட்டினார்கள்.
ராஃபிஃ இப்னு ஹதீஜ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் என்ற தோழர் அறிவிக்கின்ற மற்றொரு செய்தியை இமாம் முஸ்லிம் பதிவு செய்கிறார்கள்.
அன்சாரிகளிடத்தில் ஒரு பழக்கம் இருந்தது. அவர்கள் தங்களது விவசாய நிலத்தை குத்தகைக்கு போகியத்திற்கு விடுவார்கள். அதாவது நிலத்தை கொண்டு நீ அறுவடை செய்து கொள். என்ன செய்கிறாயோ எனக்கு தெரியாது. எனக்கு இவ்வளோ கொடுத்து விடவேண்டும் என்று.
நமது மார்க்கத்தில் அதற்கு அனுமதி இல்லை.
மார்க்கத்தில் எது அனுமதிக்கப்பட்டிருக்கிறது? என்றால், எது விளைகிறதோ அதிலிருந்து எனக்கு ஒரு பகுதி, விளைச்சலில் இருந்து ஒரு பகுதி. விளைச்சல் கிடைக்கவில்லை என்றால், நஷ்டத்தை இருவரும் பகிர்ந்து கொள்ள வேண்டும். விளைச்சல் கிடைக்குமேயானால் அதை விதைத்தவருக்கு ஒரு பகுதி, அதில் அந்த நிலத்தை கொடுத்தவருக்கு ஒரு பகுதி
ராஃபிஃ இப்னு ஹதீஜ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள் :
نَهَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَمْرٍ كَانَ لَنَا نَافِعًا
"எங்களுக்கு பயன் தந்து கொண்டிருந்த ஒரு விஷயத்தை நபியவர்கள் தடுத்துவிட்டார்கள்.
ஒரு நிலத்தை கொடுத்துவிட்டு அவர் அதிலிருந்து எப்படி தேடுகிறாரோ அதைப் பற்றியெல்லாம் கவலைப்படாமல் எனக்கு இவ்வளவு கொடுத்துவிடுங்கள் என்று சொல்வது, நிலத்தின் உரிமையாளர்களுக்கு பயன்தரக்கூடியது.
ஏனென்றால், அவருக்கு எந்தவிதமான நஷ்டமும் இல்லை. ஆனால், நபி அவர்கள் தடுத்தார்கள். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்படுவது தான் எங்களுக்கு பயன் தரக்கூடியது.
நாங்கள் இந்த உலகத்தில் இவ்வியாபாரத்தில் எது பயன் தருகிறது என்று கருதுகிறோமோ அது எங்களுக்கு பயன்தராது. அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வுடைய தூதருக்கும் கீழ்ப்படிவதுதான் பயன் தரக்கூடியது. (5)
அறிவிப்பாளர் : ராஃபிஃ இப்னு ஹதீஜ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2885.
இங்கே இன்னொரு விஷயத்தைக் கவனியுங்கள். தடை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து வருகிறது.
நபியவர்கள், அல்லாஹ் தடுக்கிறான் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை. தான் தடுப்பதாகத்தான் அங்கே சொல்கிறார்கள்.
ஆனாலும், ரசூலுல்லாஹ் தடுத்தது, அல்லாஹ் தடுத்தது தான். எனவேதான், அந்த தோழர் சொல்கிறார். ரசூலுல்லாஹ்வின் புறத்திலிருந்து ஒரு கட்டளை வருமேயானால் அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வந்த கட்டளை. ரசூலுல்லாஹ்வின் புறத்திலிருந்து ஒரு தடை வருமேயானால் அது அல்லாஹ்வின் புறத்திலிருந்து வரும் தடை என்பதை தான் தோழர்கள் விளங்கிக் கொண்டிருந்தார்கள்.
அந்தத் தோழர் சொல்லுகிறார், நாங்கள் விவசாயத்தை போக்கியத்திற்கு குத்தகைக்கு விடுவதை நபியவர்கள் தடுத்தார்கள். நாங்கள் அதற்கு பிறகு மூன்றில் ஒரு பகுதி நான்கில் ஒரு பகுதி என்று நாங்கள் அதை வாடகைக்கு விவசாயத்துக்கு பயன்படுவதற்கு கொடுப்பவர்களாக இருந்தோம்.
அறிவிப்பாளர் : ராஃபிஃ இப்னு ஹதீஜ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2885.
நபியவர்களின் கட்டளை என்று வந்து விட்ட பொழுது அது தனக்கு எவ்வளவுதான் பயன் இருந்தாலும், நபியவர்களின் தடை வந்து விட்ட பொழுது அது தனக்கு பயன்தரக் கூடியதாக இருந்தாலும், அதில் மாற்று கருத்தையோ, நபியிடத்தில் போய் வேறு ஏதாவது பேசி பார்ப்போம், வேறு ஏதாவது வழி இருக்குமா? என்றெல்லாம் அவர்கள் தேடவில்லை.
இன்று நம்மில் பலர்,ஹராம் என்று தெளிவாகி விடும்,தடுக்கப்பட்டது என்று தெளிவாகி விடும்,வெறுக்கப்பட்டது என்று தெளிவாகி விடும்,இருந்தாலும் அதை தான் செய்ய வேண்டும் அல்லது அதை நான் செய்து கொண்டிருக்கிறேன் என்ற ஒரு காரணத்திற்காக ஏதாவது ஒரு மாற்று வழி இருக்கிறதா?எப்படியாவது அதை தனது சூழலுக்கு ஏற்ப மாற்ற பார்க்கலாமா? என்று நம்மில் பலர் முயற்சி செய்வதை பார்க்கிறோம்.
கண்ணியத்திற்குரிய சஹாபாக்களுடைய பல உதாரணங்களை நாம் பார்க்கும் பொழுது இன்னொரு உதாரணத்தை இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பதிவு செய்கிறார்கள். அனஸ் பின் மாலிக் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்.
கடுமையான பசியின் நேரம், அதுவும் ஒரு பெரிய பயணத்தை கடந்து விட்டு வந்திருக்கிறார்கள். கைபர் உடைய தினத்தில் அவர்களிடத்தில் எந்தவிதமான உணவும் கிடைக்கவில்லை. ஊருக்கு வெளியே கழுதைகள் மேய்ந்து கொண்டிருந்தன. அந்த கழுதைகளை அறுத்து அவர்கள் சமைத்து விட்டார்கள்.
فَنَادَى مُنَادِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَا إِنَّ اللَّهَ وَرَسُولَهُ يَنْهَيَانِكُمْ عَنْهَا فَإِنَّهَا رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَأُكْفِئَتْ الْقُدُورُ بِمَا فِيهَا وَإِنَّهَا لَتَفُورُ بِمَا فِيهَا
ரசூலுல்லாஹ் ஒரு அழைப்பாளரை கூப்பிட்டு சொல்கிறார்கள். நீங்கள் சொல்லுங்கள். அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் இந்த கழுதைகளை சமைத்துச் சாப்பிடுவதிலிருந்து உங்களை தடுக்கிறார்கள். இது ஷைத்தானின் செயலை சேர்ந்த ஒரு அசுத்தமான செயல் என்று மக்களுக்கு அறிவிப்பு செய்யுங்கள் என்று ஒரு தோழரை அறிவிப்பாளராக அனுப்புகிறார்கள்.
அந்த தோழருடைய அறிவிப்பு கிடைக்கும்போது, அங்கே உணவு பாத்திரங்களில் கழுதையின் மாமிசம் மிகச்சூடாக சமைக்கப்பட்டு கொண்டிருக்கிறது. இன்னும் சில வினாடிகளில் அவை இறக்கப்பட்டு சாப்பிடுவதற்கு தயாராக இருக்கின்றது. சட்டிகள் கொதித்துக் கொண்டிருக்கின்றன.
நபிகளுடைய இந்த கட்டளையைக் கேட்ட அதே சமயத்தில் அத்தனை தோழர்களும் அத்தனை சட்டிகளையும் அப்படியே கவிழ்த்து விட்டார்கள். கடைசி நேரத்தில் சட்டிகள் கொதித்து கொண்டிருந்தன. அந்த மாமிசங்கள் அவற்றில் வெந்து சட்டிகள் இறக்குவதற்குரிய நேரத்தில் இருந்தன. ஆனால், அத்தனை சட்டிகளும் முழுமையாக கொட்டப்பட்டன என்று அனஸ் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.(6)
அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 3593.
அன்புக்குரியவர்களே! இந்த இடத்தில் எந்த தோழர்களும் யாரசூலுல்லாஹ் இறைச்சியை கூடாது என்றுதானே சொல்கிறீர்கள். பசியின் நேரமாக இருக்கிறது. மாமிசத்தை தூரமாக எறிந்துவிட்டு நாம் அதனுடைய சால்னாவை சாப்பிடலாமா? வேறு எதையாவது அதிலிருந்து அனுபவித்துக் கொள்ளலாமா? பசியின் நேரமாகி விட்டது என்றெல்லாம் விளக்கத்தை கேட்கவில்லை.
நபி சொல்லிவிட்டார்கள், ஹராம் ஆகிவிட்டது என்று, உடனே அதை தூரப்படுத்துவதில்தான் முனைப்பு காட்டினார்களே தவிர, அதை ஆகுமாக்குவதற்கோ, அல்லது இந்த ஒரு முறை மட்டும் செய்து கொள்வதற்கோ நபியிடத்தில் அனுமதி கேட்போமா என்றெல்லாம் சிந்திக்கவில்லை.
இதுதான் அந்த சஹாபாக்கள், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய தடை, அவர்களுடைய எச்சரிக்கை, எதை அவர்கள் செய்யக்கூடாது என்று சொல்லிவிட்டார்களோ அதற்கு அவர்கள் கூறிய பதிலாவதை பார்க்கிறோம்.
இன்று நம்முடைய பெரும்பாலானவர்களுடைய மனநிலை எப்படி இருக்கிறது என்றால், கட்டளை என்று வந்துவிட்டால், சரி செய்யலாம் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். ஹராம் தடுக்கப்பட்டது என்று வரும்பொழுது, அதை அவர்கள் பழக்கமாகி வைத்திருக்கும் பொழுது, அதற்கு ஏதாவது ஒரு மாற்று சூழ்நிலை, அதற்கு ஏதாவது ஆகுமானதற்குண்டான ஒரு வழியை தேடலாமா? என்று முயற்சி செய்கிறார்கள்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சொல்கிறார்கள்:
فَإِذَا أَمَرْتُكُمْ بِأَمْرٍ فَاتَّبِعُوهُ مَا اسْتَطَعْتُمْ وَإِذَا نَهَيْتُكُمْ عَنْ أَمْرٍ فَاجْتَنِبُوهُ
"நான் உங்களுக்கு ஒரு கட்டளையை கொடுத்தால் முடிந்த அளவுக்கு அதை செய்யுங்கள். நான் உங்களை ஒன்றைவிட்டு தடுத்து விட்டால் விலகிக் கொள்ளுங்கள்".
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 9404.
அதில் முடிந்த அளவு என்ற அந்த ஒரு ஜாய்சை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கொடுக்கவில்லை.
அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் வெறுத்ததிலிருந்து ஒரு முஸ்லிம் கண்டிப்பாக விலகிதான் ஆக வேண்டும்.
அலீ ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய சமூகத்தை பாருங்கள். இமாம் முஸ்லிம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பதிவு செய்கிறார்கள்.அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கைபர் தினத்தில் சொன்னார்கள்.
لَأُعْطِيَنَّ هَذِهِ الرَّايَةَ رَجُلًا يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ يَفْتَحُ اللَّهُ عَلَى يَدَيْهِ
இன்றைய தினத்தில் இந்தக் கொடியை அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய ரசூலையும் நேசிக்கக் கூடிய ஒரு மனிதருக்கு கொடுக்கப் போகிறேன். அல்லாஹ் அவருடைய கரத்தால் வெற்றியை முஸ்லிம்களுக்கு தருவான் என்று சொன்னபோது,
உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள்: நான் ஆட்சி அதிகாரத்தை தலைமைத்துவத்தை விரும்பி இருப்பேனேயானால் அன்றைய தினத்தில் தான் விரும்பி இருப்பேன்.
அப்படிப்பட்ட ஒரு பாக்கியத்தை நான் அடைவதற்காக நபிக்கு முன்னால் என்னை உயர்த்தி உயர்த்தி, நபி அவர்கள் என்னை அழைக்க வேண்டுமென்று விரும்பினேன்.
ரசூலுல்லாஹ் அலீயை அழைத்தார்கள். அழைத்து அந்தக் கொடியை கொடுத்தார்கள். சொன்னார்கள்.
امْشِ وَلَا تَلْتَفِتْ حَتَّى يَفْتَحَ اللَّهُ عَلَيْكَ
அலியே! இந்த கொடியை எடுத்துக் கொண்டு செல். திரும்பி பார்க்காதே. அல்லாஹ் உனக்கு வெற்றியை கொடுக்கின்ற வரை நீ முன்னோக்கி சென்று கொண்டே இரு.
அலி அவர்கள் எப்படி பின்பற்றினார்கள் பாருங்கள். அலி அவர்கள் கொஞ்சதூரம் சென்றதற்கு பிறகு நபியிடத்தில் தனது ஒரு சந்தேகத்திற்குண்டான பதிலை தெளிவை அடைய விரும்புகிறார்கள்.
அந்த கைபரை நோக்கி சென்றவர்கள் அப்படியே நின்று கொள்கிறார்கள். திரும்பவில்லை. அல்லாஹ்வின் தூதரே! நான் எதற்காக போராட வேண்டும்? எதற்காக இந்த மக்களிடத்தில் நான் சண்டை செய்ய வேண்டும்? எனக்கு விளக்கம் தாருங்கள் என்று உரத்த சத்தத்தோடு அழைத்து கேட்கிறார்கள். திரும்பி கேட்கவில்லை. அல்லது நபியிடத்தில் சென்று திரும்பி கேட்டுவிட்டு வருவோமே என்று அவர்கள் நினைக்கவில்லை.
நபி சொன்னார்கள், திரும்பி பார்க்காதே! சென்று கொண்டே இரு! ஆனால் சந்தேகம் கேள்விக்கான பதிலை தெரிந்தாக வேண்டும். அதே இடத்தில் நின்று கொண்டு உரத்த குரலில் நபியவர்களை அழைத்து அவர்கள் கேட்கிறார்கள்.
நபியவர்கள் சொன்னார்கள்; அலியே! லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் என்று அவர்கள் சாட்சி சொல்கின்ற வரை இந்த சாட்சியத்திற்காக இந்த ஷஹாதத்திற்காக நீ அவர்களிடத்தில் போர் செய்வீராக! அவர்கள் அப்படி செய்துவிட்டால் தங்களது உயிரை செல்வத்தைப் பாதுகாத்துக் கொண்டார்கள்.
அதற்குரிய உரிமை இல்லாமல் அவர்களது உயிரை செல்வத்தை தொடுவது அனுமதி அல்ல, அவர்களை விசாரிக்க அல்லாஹ் போதுமானவன். (7)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 4422.
அலி ரலியல்லாஹு அன்ஹு உடைய இந்த ஒரு உணர்வை பாருங்கள். திரும்பிப் பார்க்காதே என்று நபி சொன்னார்கள். அதற்கு இன்ன அர்த்தம் இருக்குமா? இப்படி அர்த்தம் இருக்குமா? இப்படி விளங்கிக் கொள்ளலாமா? என்றெல்லாம் அவர்கள் சொல்லவில்லை.
இன்னுமொரு சம்பவத்தை இமாம் அபூதாவூத் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பதிவு செய்கிறார்கள்.
போருக்கு செல்லும் பொழுது, மக்களெல்லாம் ஓய்வெடுக்கும் பொழுது, எங்கெங்கு நிழல் இருக்குமோ, அல்லது நீர்த்தேக்கம் இருக்குமோ, அதற்கு அருகில் சென்று கொண்டு தங்களது கூடாரங்களை அமைத்து தங்குவார்கள்.
அப்போது, எல்லா தோழர்களும் பிரிந்து பல இடங்களில் தங்கி கொண்டிருந்தார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
إِنَّ تَفَرُّقَكُمْ فِي هَذِهِ الشِّعَابِ وَالْأَوْدِيَةِ إِنَّمَا ذَلِكُمْ مِنْ الشَّيْطَانِ
இதில் உங்களுக்கு நன்மையும் உங்களுக்கு சுகமும் இருந்தாலும்கூட, ஜமாஅத்தை விட்டு நீங்கள் பிரிந்து இப்படி நிழல்களுக்கு அருகிலும், நீர்த்தேக்கங்களுக்கு அருகிலும்நீங்கள் பிரிந்து விடுவது, இது ஷைத்தானின் செயலை சேர்ந்தது” என்று சொல்கிறார்கள்.
அபு சஃலபா அல்குஷபி அறிவிக்கிறார்கள். இதற்குப் பிறகு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு சென்ற தோழர்கள் எந்த இடத்தில் தங்கினாலும் அப்படியே ஒருவரை ஒருவர் நெருக்கமாக கூடாரங்களை அமைத்து கொண்டு தனது விரிப்பை அமைத்துக்கொண்டு தங்கிக் கொள்வார்கள்.
அவர்கள் மீது ஒரு விரிப்பு விரிக்கப்படுமேயானால் அந்த ஒரு விரிப்பு அப்படியே அனைவரையும் கவர் செய்து கொள்ளும். அந்த அளவிற்கு அவர்கள் நெருக்கமாக தங்கிக் கொள்வார்கள்.(8)
அறிவிப்பாளர் : அபு சஃலபா அல்குஷபி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத்,எண் : 2259.
அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் அவர்களுடைய நிகழ்வை பார்க்கிறோம். இமாம்அபூதாவூத் பதிவு செய்கிறார்கள்.
ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள்; ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஒருநாள் வெள்ளிக்கிழமை பயான் செய்வதற்காக மிம்பரில் அமர்ந்திருக்கிறார்கள்.
அப்பொழுது சில தோழர்கள், அங்குமிங்குமாக நின்று கொண்டிருந்த போது, அவர்களை பார்த்து உட்காருங்கள் என்று சொல்கிறார்கள்.
அப்போதுதான் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் பள்ளி உடைய வாசலின் அருகில் வந்திருக்கிறார்கள். நபியவர்கள் உட்காருங்கள் என்று சொன்ன செய்தி என்று சொன்ன வாசகத்தை கேட்டார்கள்.
அந்த மஸ்ஜிதினுடைய வாசலின் கதவில் அப்படியே உட்கார்ந்து கொள்கிறார்கள். அல்லாஹ்வின் தூதர் அப்துல்லாஹ் இப்னு மஸ்வூதை பார்க்கிறார்கள்.
சொல்கிறார்கள்; அப்துல்லாஹ்! என் அருகில் வந்து அமர்வாயாக. நபியவர்கள் உட்கார சொன்னார்கள்.
இதற்கு விளக்கம் தேவையில்லை. பள்ளிக்குள்ளே ஆங்காங்கே நின்று கொண்டிருப்பவர்களை தான் உட்கார சொன்னார்கள். நான் இப்போது தானே வருகிறேன், உள்ளே சென்று உட்காரும் என்றெல்லாம் அவர்கள் யோசிக்கவில்லை. (9)
அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 920.
சஹாபாக்கள் உடைய அந்த உயர்ந்த ஈமானை பற்றி அல்லாஹ் கூறுகிறான்.
நாங்கள் நபியின் கட்டளைகளை நபியின் அந்த ஏவல்களை கேட்போம். அதற்கு கட்டுப்படுவோம். (அல்குர்ஆன் 2 : 285)
இதைத்தான் அல்லாஹ் ஈமான் என்று சொல்கிறான்.
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா இப்படிப்பட்ட ஒரு கட்டுப்படுவதை கீழ்ப்படிதலை தான் முஃமின்களிடத்தில் எதிர்பார்க்கிறான்; விரும்புகிறான்.
அல்லாஹ்வின் கட்டளைகளில் ரசூலுல்லாஹ்வின் சுன்னாவில் செய்வதையோ, அதைப் புறக்கணிப்பதையோ, அலட்சியம் செய்வதையோ, அல்லது தனது மன இச்சைக்கு ஏற்ப தனது சூழ்நிலைகளுக்கு ஏற்ப அதை மாற்றுவதற்கு முயற்சி செய்வதையோ அல்லாஹ் ஒருகாலும் விரும்புவதில்லை.
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நம் அனைவரையும் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வுடைய தூதருக்கும் முழுமையாக கட்டுப்பட்ட நல்ல முஃமின்களாக முஸ்லிம்களாக ஆக்கி அருள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
- لا يؤمِنُ أحدُكم حتى يكونَ هواه تبعًا لما جئْتُ بِهِ. الراوي: عبدالله بن عمرو | المحدث: الألباني | المصدر: تخريج مشكاة المصابيحالصفحة أو الرقم: 166خلاصة حكم المحدث: إسناده ضعيف
ஹதீஸின் தரம் குறித்து அறிய கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும் :
https://binbaz.org.sa/fatwas/15783/%D8%A7%D9%84%D8%AD%D9%83%D9%85-%D8%B9%D9%84%D9%89-%D8%AD%D8%AF%D9%8A%D8%AB-%D9%84%D8%A7-%D9%8A%D9%88%D9%85%D9%86-%D8%A7%D8%AD%D8%AF%D9%83%D9%85-%D8%AD%D8%AA%D9%89-%D9%8A%D9%83%D9%88%D9%86-%D9%87%D9%88%D8%A7%D9%87
குறிப்பு 2)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ حَدَّثَنَا ثَابِتٌ عَنْ أَنَسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخَذَ سَيْفًا يَوْمَ أُحُدٍ فَقَالَ مَنْ يَأْخُذُ مِنِّي هَذَا فَبَسَطُوا أَيْدِيَهُمْ كُلُّ إِنْسَانٍ مِنْهُمْ يَقُولُ أَنَا أَنَا قَالَ فَمَنْ يَأْخُذُهُ بِحَقِّهِ قَالَ فَأَحْجَمَ الْقَوْمُ فَقَالَ سِمَاكُ بْنُ خَرَشَةَ أَبُو دُجَانَةَ أَنَا آخُذُهُ بِحَقِّهِ قَالَ فَأَخَذَهُ فَفَلَقَ بِهِ هَامَ الْمُشْرِكِينَ (صحيح مسلم 4516 -)
குறிப்பு 3)
حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ عَنْ فُضَيْلِ بْنِ غَزْوَانَ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَعَثَ إِلَى نِسَائِهِ فَقُلْنَ مَا مَعَنَا إِلَّا الْمَاءُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ يَضُمُّ أَوْ يُضِيفُ هَذَا فَقَالَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ أَنَا فَانْطَلَقَ بِهِ إِلَى امْرَأَتِهِ فَقَالَ أَكْرِمِي ضَيْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ مَا عِنْدَنَا إِلَّا قُوتُ صِبْيَانِي فَقَالَ هَيِّئِي طَعَامَكِ وَأَصْبِحِي سِرَاجَكِ وَنَوِّمِي صِبْيَانَكِ إِذَا أَرَادُوا عَشَاءً فَهَيَّأَتْ طَعَامَهَا وَأَصْبَحَتْ سِرَاجَهَا وَنَوَّمَتْ صِبْيَانَهَا ثُمَّ قَامَتْ كَأَنَّهَا تُصْلِحُ سِرَاجَهَا فَأَطْفَأَتْهُ فَجَعَلَا يُرِيَانِهِ أَنَّهُمَا يَأْكُلَانِ فَبَاتَا طَاوِيَيْنِ فَلَمَّا أَصْبَحَ غَدَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ ضَحِكَ اللَّهُ اللَّيْلَةَ أَوْ عَجِبَ مِنْ فَعَالِكُمَا فَأَنْزَلَ اللَّهُ { وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمْ الْمُفْلِحُونَ } (صحيح البخاري 3514 -)
குறிப்பு 4)
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ أَبُو يَحْيَى أَخْبَرَنَا عَفَّانُ حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ حَدَّثَنَا ثَابِتٌ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ كُنْتُ سَاقِيَ الْقَوْمِ فِي مَنْزِلِ أَبِي طَلْحَةَ وَكَانَ خَمْرُهُمْ يَوْمَئِذٍ الْفَضِيخَ فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُنَادِيًا يُنَادِي أَلَا إِنَّ الْخَمْرَ قَدْ حُرِّمَتْ قَالَ فَقَالَ لِي أَبُو طَلْحَةَ اخْرُجْ فَأَهْرِقْهَا فَخَرَجْتُ فَهَرَقْتُهَا فَجَرَتْ فِي سِكَكِ الْمَدِينَةِ فَقَالَ بَعْضُ الْقَوْمِ قَدْ قُتِلَ قَوْمٌ وَهِيَ فِي بُطُونِهِمْ فَأَنْزَلَ اللَّهُ
} لَيْسَ عَلَى الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ جُنَاحٌ فِيمَا طَعِمُوا{ الْآيَةَ (صحيح البخاري 2284 -)
குறிப்பு 5)
و حَدَّثَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ السَّعْدِيُّ وَيَعْقُوبُ بْنُ إِبْرَاهِيمَ قَالَا حَدَّثَنَا إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ عُلَيَّةَ عَنْ أَيُّوبَ عَنْ يَعْلَى بْنِ حَكِيمٍ عَنْ سُلَيْمَانَ بْنِ يَسَارٍ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ كُنَّا نُحَاقِلُ الْأَرْضَ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَنُكْرِيهَا بِالثُّلُثِ وَالرُّبُعِ وَالطَّعَامِ الْمُسَمَّى فَجَاءَنَا ذَاتَ يَوْمٍ رَجُلٌ مَنْ عُمُومَتِي فَقَالَ نَهَانَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ أَمْرٍ كَانَ لَنَا نَافِعًا وَطَوَاعِيَةُ اللَّهِ وَرَسُولِهِ أَنْفَعُ لَنَا نَهَانَا أَنْ نُحَاقِلَ بِالْأَرْضِ فَنُكْرِيَهَا عَلَى الثُّلُثِ وَالرُّبُعِ وَالطَّعَامِ الْمُسَمَّى وَأَمَرَ رَبَّ الْأَرْضِ أَنْ يَزْرَعَهَا أَوْ يُزْرِعَهَا وَكَرِهَ كِرَاءَهَا وَمَا سِوَى ذَلِكَ و حَدَّثَنَاه يَحْيَى بْنُ يَحْيَى أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ عَنْ أَيُّوبَ قَالَ كَتَبَ إِلَيَّ يَعْلَى بْنُ حَكِيمٍ قَالَ سَمِعْتُ سُلَيْمَانَ بْنَ يَسَارٍ يُحَدِّثُ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ قَالَ كُنَّا نُحَاقِلُ بِالْأَرْضِ فَنُكْرِيهَا عَلَى الثُّلُثِ وَالرُّبُعِ ثُمَّ ذَكَرَ بِمِثْلِ حَدِيثِ ابْنِ عُلَيَّةَ و حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبٍ حَدَّثَنَا خَالِدُ بْنُ الْحَارِثِ ح و حَدَّثَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ حَدَّثَنَا عَبْدُ الْأَعْلَى ح و حَدَّثَنَا إِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ أَخْبَرَنَا عَبْدَةُ كُلُّهُمْ عَنْ ابْنِ أَبِي عَرُوبَةَ عَنْ يَعْلَى بْنِ حَكِيمٍ بِهَذَا الْإِسْنَادِ مِثْلَهُ و حَدَّثَنِيهِ أَبُو الطَّاهِرِ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي جَرِيرُ بْنُ حَازِمٍ عَنْ يَعْلَى بْنِ حَكِيمٍ بِهَذَا الْإِسْنَادِ عَنْ رَافِعِ بْنِ خَدِيجٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَقُلْ عَنْ بَعْضِ عُمُومَتِهِ (صحيح مسلم 2885 -)
குறிப்பு 6)
و حَدَّثَنَا ابْنُ أَبِي عُمَرَ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ أَيُّوبَ عَنْ مُحَمَّدٍ عَنْ أَنَسٍ قَالَ لَمَّا فَتَحَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْبَرَ أَصَبْنَا حُمُرًا خَارِجًا مِنْ الْقَرْيَةِ فَطَبَخْنَا مِنْهَا فَنَادَى مُنَادِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَلَا إِنَّ اللَّهَ وَرَسُولَهُ يَنْهَيَانِكُمْ عَنْهَا فَإِنَّهَا رِجْسٌ مِنْ عَمَلِ الشَّيْطَانِ فَأُكْفِئَتْ الْقُدُورُ بِمَا فِيهَا وَإِنَّهَا لَتَفُورُ بِمَا فِيهَا (صحيح مسلم 3593 -)
குறிப்பு 7)
حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا يَعْقُوبُ يَعْنِي ابْنَ عَبْدِ الرَّحْمَنِ الْقَارِيَّ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَوْمَ خَيْبَرَ لَأُعْطِيَنَّ هَذِهِ الرَّايَةَ رَجُلًا يُحِبُّ اللَّهَ وَرَسُولَهُ يَفْتَحُ اللَّهُ عَلَى يَدَيْهِ قَالَ عُمَرُ بْنُ الْخَطَّابِ مَا أَحْبَبْتُ الْإِمَارَةَ إِلَّا يَوْمَئِذٍ قَالَ فَتَسَاوَرْتُ لَهَا رَجَاءَ أَنْ أُدْعَى لَهَا قَالَ فَدَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلِيَّ بْنَ أَبِي طَالِبٍ فَأَعْطَاهُ إِيَّاهَا وَقَالَ امْشِ وَلَا تَلْتَفِتْ حَتَّى يَفْتَحَ اللَّهُ عَلَيْكَ قَالَ فَسَارَ عَلِيٌّ شَيْئًا ثُمَّ وَقَفَ وَلَمْ يَلْتَفِتْ فَصَرَخَ يَا رَسُولَ اللَّهِ عَلَى مَاذَا أُقَاتِلُ النَّاسَ قَالَ قَاتِلْهُمْ حَتَّى يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ فَإِذَا فَعَلُوا ذَلِكَ فَقَدْ مَنَعُوا مِنْكَ دِمَاءَهُمْ وَأَمْوَالَهُمْ إِلَّا بِحَقِّهَا وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ (صحيح مسلم 4422 -)
குறிப்பு 8)
حَدَّثَنَا عَمْرُو بْنُ عُثْمَانَ الْحِمْصِيُّ وَيَزِيدُ بْنُ قُبَيْسٍ مِنْ أَهْلِ جَبَلَةَ سَاحِلِ حِمْصَ وَهَذَا لَفْظُ يَزِيدَ قَالَا حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْعَلَاءِ أَنَّهُ سَمِعَ مُسْلِمَ بْنَ مِشْكَمٍ أَبَا عُبَيْدِ اللَّهِ يَقُولُ حَدَّثَنَا أَبُو ثَعْلَبَةَ الْخُشَنِيُّ قَالَ كَانَ النَّاسُ إِذَا نَزَلُوا مَنْزِلًا قَالَ عَمْرٌو كَانَ النَّاسُ إِذَا نَزَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْزِلًا تَفَرَّقُوا فِي الشِّعَابِ وَالْأَوْدِيَةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ تَفَرُّقَكُمْ فِي هَذِهِ الشِّعَابِ وَالْأَوْدِيَةِ إِنَّمَا ذَلِكُمْ مِنْ الشَّيْطَانِ فَلَمْ يَنْزِلْ بَعْدَ ذَلِكَ مَنْزِلًا إِلَّا انْضَمَّ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ حَتَّى يُقَالَ لَوْ بُسِطَ عَلَيْهِمْ ثَوْبٌ لَعَمَّهُمْ (سنن أبي داود 2259 -)
குறிப்பு 9)
حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ كَعْبٍ الْأَنْطَاكِيُّ حَدَّثَنَا مَخْلَدُ بْنُ يَزِيدَ حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ عَنْ عَطَاءٍ عَنْ جَابِرٍ قَالَ لَمَّا اسْتَوَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْجُمُعَةِ قَالَ اجْلِسُوا فَسَمِعَ ذَلِكَ ابْنُ مَسْعُودٍ فَجَلَسَ عَلَى بَابِ الْمَسْجِدِ فَرَآهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ تَعَالَ يَا عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ (سنن أبي داود 920 -)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/