HOME      Khutba      அல்லாஹ்வின் அன்பைப் பெற 10 வழிகள் - திக்ருல்லாஹ் | Tamil Bayan - 320   
 

அல்லாஹ்வின் அன்பைப் பெற 10 வழிகள் - திக்ருல்லாஹ் | Tamil Bayan - 320

           

அல்லாஹ்வின் அன்பைப் பெற 10 வழிகள் - திக்ருல்லாஹ் | Tamil Bayan - 320


அல்லாஹ்வின் அன்பைப் பெற 10 வழிகள் - திக்ருல்லாஹ்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : அல்லாஹ்வின் அன்பைப் பெற 10 வழிகள் - திக்ருல்லாஹ்
 
வரிசை : 320
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு அல்லாஹ்வின் பயத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவுபடுத்தியவனாக ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹ்வை பயந்து கொண்டவர்கள் இம்மையிலும் வெற்றியடைவார்கள் மறுமையிலும் வெற்றியடைவார்கள். அல்லாஹ்வை பயந்து கொண்டவர்களுக்கு அல்லாஹு தஆலா அவர்களுடைய எல்லா பிரச்சினைகளுக்கும் வெகுவிரைவிலே அழகிய தீர்வை ஏற்படுத்துகிறான். அவர்களுக்கு அல்லாஹு தஆலா ஆதாரங்களை தருகிறான். அவர்களுக்கு அல்லாஹு தஆலா அவனுடைய விசேஷமான அருளைக் கொண்டு அவர்களை சூழ்ந்து கொள்கிறான். 
 
அல்லாஹ்வுடைய அன்பைப் பெறுவதற்குரிய வழிகளில் மூன்றாவது அந்த வழியை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அல்லாஹு தஆலா நாம் அவனை நேசிப்பது போன்று அவனும் நம்மை நேசிக்கிறான். 
 
1.53 - 6.01 : சவுண்ட் இல்லை. 
 
ஒரு மனிதன் கடமையான விஷயங்களில் அலட்சியம் செய்து கொண்டிருக்கிறான் அந்த மனிதனுக்கு அல்லாஹ்வுடைய கடமைகளை நிறைவேற்றுவதற்கு அவனுக்கு அழைப்பு கொடுப்பது. அவனுக்கு அல்லாஹ்வுடைய கடுமையை பற்றி அவனுக்கு சொல்வது இதுவும் அல்லாஹ்வை நினைவு கூறுவதில் வரும். நாம் ஓரிடத்தில் உட்கார்ந்து கொண்டிருக்கிறோம். அந்த இடத்தில் நமது பேச்சுகளை துன்யா சம்பந்தமான நமது வியாபாரம் சம்பந்தமான உறவு சம்பந்தமான பேச்சுகளை பேசினாலும் கூட அந்த சபையையும் அல்லாஹ்வின் நினைவிலிருந்து நீங்கியதாக நாம் ஆக்கிவிடக்கூடாது.
 
உங்களுடைய கொடுக்கல் வாங்கல்களாக இருக்கட்டும், இரண்டு நபர்களுக்கு மத்தியிலுள்ள, மூன்று நபர்களுக்கு மத்தியிலுள்ள அல்லது அதற்கு அதிகமாகவோ குறைவாகவோ எந்த ஒரு சபையிலே நாம் இருந்தாலும் சபையை ஏற்படுத்திக் கொண்டாலும் கூட அந்த இடத்தில் அல்லாஹ்வின் பெயரைக் கூறி நபியின் மீது ஸலவாத் கூறி ஆரம்பிப்பது பிறகு அல்லாஹ்வை புகழ்ந்து நபியின் மீது ஸலவாத் கூறி முடிப்பது. 
 
இது அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு கற்றுக்கொடுத்த ஒழுக்கம். நீங்கள் எந்தவிதமான பேச்சுக்களைப் பேசினாலும் கூட முஸ்லிம்களின் சபை முஸ்லிம்கள் கலந்து கொண்ட சபை என்றால் இப்படித்தான் இருக்க வேண்டும். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரண்டு ஹதீஸ்களை நமக்கு போதிக்கின்றார்கள் பாருங்கள். 
 
எந்த சபையில் அல்லாஹ் நினைவுக் கொள்ள படவில்லையோ, அல்லாஹ்வைப் பற்றி பேசப்படவில்லையோ, இரண்டு பேர் ஒன்று சேர்ந்தார்கள், தங்களுடைய துனியாவை பற்றியே  பேசிவிட்டு தங்களது உலகத்தைப் பற்றிய பேசிவிட்டு, தங்களது செல்வத்தை பற்றி பேசிவிட்டு, தங்களைப் பற்றியே பேசி விட்டு, தங்களை படைத்த ரப்பை நினைவு கூறாமல், தங்களுடைய ரப்பு தங்களுக்கு செய்த அந்த அருளை நினைவு கூறாமல், அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்லாமல், மாஷா அல்லாஹ் என்று சொல்லாமல், சுபஹானல்லாஹ் என்ற வார்த்தையை மொழியாமல், இப்படி அல்லாஹ்வை புகழாமல் அல்லாஹ்வை நினைவு கூறாமல், அந்த சபையிலிருந்து அவர்கள் எழுந்தார்கள் என்றால், ஒரு செத்த கழுதையை சாப்பிட்டுவிட்டு, அல்லாஹ் பாதுகாப்பானாக, அல்லது அந்த செத்து அழுகிப்போன அந்தக் கழுதைக்கு அருகிலிருந்து நாற்றம் பிடித்தவர்களாக, துர்வாடை பிடித்தவர்களாக, ஒரு அசிங்கத்தை அசுத்தத்தை ஒரு மோசமான துர்வாடையை சுமந்தவர்களாக, அந்த இடத்தில் சென்றால் அவர்கள் எப்படியோ அப்படித்தான் அல்லாஹ்வை நினைவு கூறாமல் ஒரு சபையிலிருந்து கலைந்து சென்றால்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள், அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்க இமாம் அபூதாவூத் (4814) வது ஹதீஸாக பதிவு செய்கிறார்கள்
 
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا مِنْ قَوْمٍ يَقُومُونَ مِنْ مَجْلِسٍ لَا يَذْكُرُونَ اللَّهَ فِيهِ، إِلَّا قَامُوا عَنْ مِثْلِ جِيفَةِ حِمَارٍ وَكَانَ لَهُمْ حَسْرَةً»
 
எந்த ஒரு மக்கள் ஒரு சபையை முடித்துவிட்டு அதிலிருந்து எழுந்து செல்கிறார்களோ, சபையில் ஆரம்பத்திலும் அல்லாஹ்வை நினைவு கூறவில்லை, சபையின் நடுவிலும் அல்லாஹ்வை நினைவு கூறவில்லை, சபை முடியும் போதும் அல்லாஹ்வை நினைவு கூறவில்லை. இப்படி அல்லாஹ்வை நினைவு கூறாமல் தங்களைப் பற்றியே பேசிவிட்டு இந்த துனியாவை பற்றியே பேசிவிட்டு அவர்கள் எழுந்து சென்றால் அவர்கள்  ஒரு செத்துப்போன கழுதையின் பிரேதத்திற்க்கு அருகிலே உட்கார்ந்துவிட்டு அவர்கள் எழுந்து சென்றவர்கள் போல்தான். அத்தோடு நின்று விடுகிறதா? இல்லை.
 
நாளை மறுமையிலே இந்த சபை அவர்களுக்கு ஒரு கைசேதமாக, துக்கம் நிறைந்த சபையாக, வேதனை  நிறைந்த ஒரு சபையாக, கவலை நிறைந்த ஒரு சபையாக மாறிவிடுகிறது என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். 
 
இதே கருத்தை அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ் ரலியல்லாஹூ அன்ஹூ அவர்களும் அறிவிக்க இமாம் அஹ்மத் (7093) பதிவு செய்கிறார்கள். 
 
عَنْ عَبْدِ اللهِ بْنِ عَمْرٍو، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَا مِنْ قَوْمٍ جَلَسُوا مَجْلِسًا لَمْ يَذْكُرُوا اللهَ فِيهِ، إِلَّا رَأَوْهُ حَسْرَةً يَوْمَ الْقِيَامَةِ "
 
எந்த சபையில் முஸ்லிம்கள் ஒன்றுகூடி, அந்த இடத்தில் அல்லாஹ்வை நினைவு கூறாமல் அவர்கள் பிரிந்து சென்றால், அல்லாஹ்வைப் பற்றி பேசாமல் அவர்கள் எழுந்து சென்றால், அந்த சபையை நாளை மறுமையில் கண்டுகொள்வார்கள். ஒரு துக்கமாக பார்ப்பார்கள். ஒரு கவலையாக பார்ப்பார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக.
 
கண்ணியத்திற்குரியவர்களே, நம்முடைய சபையில், முஸ்லிம்களுடைய சபையில் அது வியாபாரம் சம்பந்தப்பட்டதோ,கொடுக்கல் வாங்கல் சம்பந்தப்பட்டதோ, எந்த ஒரு அடிப்படையாக இருக்கட்டும். ஏனென்றால், ஒரு முஸ்லிம் கண்டிப்பாக பாவத்தைப் பற்றி பேச மாட்டான். பாவத்திற்காக ஆலோசனை செய்பவன் முஸ்லிமாக இருக்கமாட்டான். 
 
பாவத்தைப் பற்றி பேசும் போது தான் அங்கு அல்லாஹ் நினைவு கூறப்பட மாட்டான். நல்ல விஷயங்களை பற்றி பேசும்போதோ, அல்லது ஆகுமான விஷயங்கள் பேசும்போதோ, அல்லாஹ் ஹலாலாக்கிய விஷயங்கள் பற்றி பேசும் போதோ, கண்டிப்பாக அல்லாஹ் நினைவுகூரப்பட்டே ஆகவேண்டும். அல்லாஹ்வின் பெயர் அங்கே உச்சரிக்கப்பட்டே ஆகவேண்டும். 
 
பாவத்தில் தான் அல்லாஹ்வுடைய பெயரை நினைவு கூறக் கூடாது. பாவத்தில் அல்லாஹ்வின் பெயர் நினைவு கூறப்படக்கூடாது. ஒரு முஸ்லிம் பாவம் செய்யக்கூடாது. ஒரு முஸ்லிம் தெரியாமல் பாவம் செய்து விட்டாலும், உடனடியாக அல்லாஹ்விடம் திரும்பி வரக் கூடியவனாக இருக்க வேண்டும்.
 
அப்போ அல்லாஹ் நமக்கு அனுமதித்த ஹலாலான முபாஹான விஷயங்களை செய்யும்போது, அல்லாஹ்வின் நிஃமத் வியாபாரம், அல்லாஹ்வின் நிஃமத். நிக்காஹ், அல்லாஹ்வின் நிஃமத். கொடுக்கல் வாங்கல், அல்லாஹ்வின் நிஃமத். அல்லாஹ் நமக்கு சட்டமாக்கிய ஒன்று. 
 
இப்படி அல்லாஹ் ஆகுமாக்கிய விஷயத்தைப் பற்றி நாம் பேசும் போது கண்டிப்பாக அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டு ஆரம்பித்து, அல்லாஹ்வை நினைவு கூறப்பட்டு, இன்ஷா அல்லாஹ் என்பதைக் கொண்டும், மாஷா அல்லாஹ் என்பதைக் கொண்டும், லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்பதைக் கொண்டும், இப்படி அல்லாஹ்வின் அந்த பெயர்கள் அல்லாஹ்வின் புகழ்கள் கூறப்பட்டு, அது ஆரம்பிக்கப்பட வேண்டும். 
 
இடையில் அல்லாஹ்வின் பெயர்கள் உச்சரிக்கப்பட வேண்டும். முடிவின் போதும் அல்லாஹ்வின் பெயர்கள் உச்சரிக்கப்பட வேண்டும். 
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி அவர்கள் நமக்கு  المجلس كفارة என்றே ஒரு திக்ரை ஒரு துஆவை கற்றுத்தருகிறார்கள்.
 
ஒரு சபையிலே ஓரிடத்தில் நீங்கள் ஒன்று சேருகிறீர்கள். ஏதோ சில விஷயங்கள் உங்களுக்கு அறியாமலேயே உங்களுடைய நாவில் இருந்து வெளிப்பட்டு இருக்கலாம். அல்லாஹ்விற்கு  பொருத்தமற்றதாக இருந்திருக்கலாம். அல்லது, ஒரு தவறான சிந்தனையின் அடிப்படையில் அமைந்திருக்கலாம். 
 
இப்படியெல்லாம் சபையிலே நடந்துவிட்ட தவறுகளை, அந்த சபையிலே நடந்துவிட்ட பாவங்களுக்கு பரிகாரமாக, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் المجلس كفارة சபையின் பரிகாரம் என்று  நமக்கு ஓர் திக்ரை கற்றுதருகிறார்கள்.
 
«سُبْحَانَكَ اللَّهُمَّ وَبِحَمْدِكَ، أَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا أَنْتَ، وَحْدَكَ لَا شَرِيكَ لَكَ، أَسْتَغْفِرُكَ وَأَتُوبُ إِلَيْكَ» قَالَ مَعْمَرٌ: «وَسَمِعْتُ غَيْرَهُ يَقُولُ: هَذَا الْقَوْلُ كَفَّارَةُ الْمَجْلِسِ»
 
இந்த வார்த்தையை சொல்லும் பொழுது, அந்த சபையில் ஏற்பட்ட சிறிய பெரிய எண்ணங்கள், அந்த சிறிய பெரிய வார்த்தைகள், இவையெல்லாம் மன்னிக்கப்பட்டு விடுகின்றன என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுத்தருகிறார்கள்.
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3433, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
 
அடுத்து கண்ணியத்திற்குரியவர்களே, அல்லாஹ்வைப் பற்றி பேசப்படக்கூடிய இடங்கள். அல்லாஹ்வைப் பற்றி, அல்லாஹ்வுடைய மார்க்கத்தைப் பற்றி பேசப்படக்கூடிய இடங்கள், அல்லாஹ்வுடைய அந்த தீனைப் பற்றி, ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவைப் பற்றி பேசப்படக்கூடிய இடங்கள். அது ஜும்ஆவுடைய உரையாக இருக்கட்டும், குறிப்பாக ஜும்ஆவுடைய உரையைப் பற்றி  கூறும் பொழுது,
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ
 
நீங்கள் ஜும்ஆவுடைய அழைப்பை கேட்டால், ஜும்ஆவுடைய அதானை கேட்டால், அல்லாஹ்வை நினைவு கூற நீங்கள் விரைந்து வாருங்கள் என்று ஜும்ஆவிலே நிகழ்த்தப்படும் உரையைப் பற்றி அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் 62 : 9)
 
அப்போது, அல்லாஹ்வைப் பற்றி எங்கெல்லாம் அவனுடைய குர்ஆனிலிருந்தும், சுன்னாவில் இருந்தும், தெளிவான ஆதாரங்கள் இருந்து பேசப்படுகிறதோ, அந்த சபை திக்ருல்லாஹ்வுடைய சபை. 
 
வெறும் கைகளிலே சில பேர் செய்கிறார்கள் அல்லவா, தஸ்பீஹ் மணிகளை வைத்துக்கொண்டு, சேர்ந்து உட்கார்ந்து திக்ரு செய்வது, இதை திக்ருடைய சபைகள் என்று விளங்கிக் கொண்டிருக்கிறார்களே, இப்படி ஒரு சபை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் கிடையாது. 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே, அல்லாஹ்வை திக்ரை  கூறுவது, விரல்களை வைத்து எண்ணினார்கள். எங்கே எண்ண சொன்னார்களோ அந்த இடங்களில் மட்டும். அல்லாஹ்வுடைய திக்ரை எண்ண வேண்டுமென்றால் அதற்கு  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சில குறிப்பிட்ட இடங்களை நேரங்களை சொல்லியிருக்கிறார்கள். அப்பொழுதுதான்  அந்த திக்ரை எண்ண வேண்டும். 
 
தொழுகைக்குப் பின்னால் செய்ய வேண்டிய திக்ருகள். தூக்கத்திற்கு முன்னால் செய்யப்படக்கூடிய திக்ருகள். காலையில் சுபுஹுக்கு பின்னால் செய்யப்படக்கூடிய திக்ருகள். இப்படிப்பட்ட திக்ருகளைத்தான் விரல்கள் கொண்டு எண்ண வேண்டும். 
 
இவற்றைத் தவிர ,பொதுவாக அல்லாஹ்வுடைய திக்ரை செய்யும்பொழுது எண்ண கூடாது சகோதரர்களே. 
 
ஆனால், மக்கள் மாற்றார்களை காப்பியடித்து அவர்களுடைய பழக்கங்களை எடுத்து எப்பொழுதும் கைகளில் சில மணிகளை வைத்துக்கொண்டோ, அல்லது சில மிஷின்களை வைத்துக்கொண்டோ அவர்கள் உருட்டிக் கொண்டு இருக்கிறார்கள் அல்லது டிக் டிக் என அடித்துக் கொண்டிருக்கிறார்கள். 
 
கேட்டால், நாங்கள் லா இலாஹ இல்லல்லாஹ் வை ஒரு நாளைக்கு ஆயிரம் முறை எண்ணிகிறோம் அல்லது பத்தாயிரம் முறை எண்ணிகிறோம் என்று. இவர்கள் அல்லாஹ்வை நினைவு கூற வில்லை இவர்கள் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.
 
அல்லாஹ்வை நினைவு கூறுவதென்றால், ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்கே எண்ண சொன்னார்களோ, அங்கேதான் எண்ணி நினைவு கூறுவது. 33 தடவை அதிகப்படியாக நூறுமுறை எண்ணுவதற்கு தான் நமக்கு ஹதீஸில் ஆதாரம் இருக்கிறதே தவிர, 100க்கு மேற்பட்டு எண்ணுவதற்கு உண்டான ஆதாரங்கள் நாம் பார்க்கவில்லை. 
 
மாறாக, இப்படி எண்ணுவதின் காரணமாக திக்ரின் மூலமாக என்ன ஒரு பணிவு, அடக்கம், தக்வா வர வேண்டுமோ, அதற்கு மாற்றமாக பெருமை வந்து விடுகிறது. நான் ஒரு நாளைக்கு ஆயிரம் முறை எண்ணினேன், பத்தாயிரம் முறை எண்ணினேன் என்று தங்களுக்கு மத்தியிலே அவர்கள் பெருமை பேசுவதை நாம் பார்க்கிறோம். 
 
இமாம் அஹ்மத் ரஹ்மத்துல்லாஹி அலைஹி சொல்கிறார்கள்; எங்கெல்லாம் ஒரு சுன்னத் மீறப்படுமோ, நபியின் சுன்னத்திற்கு மாற்றமாக நடப்பார்களோ, கண்டிப்பாக பிதுஅத்திலே விழுந்து விடுவார்கள். கண்டிப்பாக ஷிர்க்கிலே விழுவார்கள். 
 
முகஸ்துதி என்பது என்ன? முகஸ்துதி என்பதும் ஒரு மறைமுகமான ஷிர்க். பெருமை பேசுவது, புகழ் பேசுவது, தான் செய்த அமல்களை பிரஸ்தாபித்து சொல்லிக் காட்டுவது என்பது அது ஒரு மறைமுகமான ஷிர்க் . خفي شرك என்று அல்லாஹ்வுடைய ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொல்லிகிறார்கள். 
 
இப்படிப் பாருங்கள் அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் எண்ண சொல்லாமல் எண்ணுவது, அதை மக்களுக்கு மத்தியிலே பிரஸ்தாபித்து பேசியது, நாங்கள் இந்த தரீக்காவிலே இருக்கிறோம், நாங்கள் ஒரு நாளைக்கு பத்தாயிரம் முறை இப்படி செய்கிறோம், ஆயிரம் முறை இப்படி செய்கிறோம், என்பதாக இது பெருமை பேசுவதிலே சென்று அவர்களுடைய நன்மை அழிந்துவிடுகிறது. 
 
அப்போ, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்திலே, இப்படி கூட்டாக ஒன்று சேர்ந்து ஒரு சப்தத்திலோ அல்லது ஒருவர் செய்ய மற்றவர்கள் அந்த அல்லாஹ்வுடைய திக்ரை கேட்பதோ, இப்படி அறியப்படவில்லை. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். 
 
ஏனென்றால், திக்ருடைய சபை என்று எங்கு வருகிறதோ, அந்த ஹதீஸ்களை எல்லாம் வைத்துக்கொண்டு, தவறான வழியிலேயே உள்ள சூபீஸத்திலேயோ, அல்லது தவறான தரிக்காவில்லேயோ உள்ளவர்கள் கூட்டாக சேர்ந்து சப்தமாக அல்லாஹ்வை திக்ரு செய்வதென்று பொருள் விளங்கிக் கொள்கிறார்கள். 
 
அப்படி விளங்கிக் கொள்வதற்கு நமக்கு ஹதீஸ்களிலிருந்தும் ஆதாரம் இல்லை. சஹாபாக்களுடைய வழிமுறைகளிலிருந்தும் ஆதாரங்கள் இல்லை.
 
அப்போ, எந்த விஷயங்களை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திக்ருடைய மஜ்லிஸ் என்று சொல்கிறார்கள். தெரிந்து கொள்ள வேண்டும். எந்த விஷயங்களை திக்ருடைய மஜ்லிஸ் என்று சொன்னார்கள், எந்த சபையை திக்ருடைய மஜ்லிஸ் என்று சொன்னார்கள். எங்கே அல்லாஹ்வைப் பற்றி, அவனுடைய வல்லமையைப் பற்றி பிரஸ்தாபித்து,அவனுடைய தீனைப் பற்றி, அவனுடைய மார்க்கத்தைப் பற்றி, பேசப்படுகிறதோ அந்த சபை அல்லாஹ்வின் திக்ருடைய சபை. 
 
ஒருவர் பேச அல்லாஹ்வைப் பற்றி, ஒருவர் அல்லாஹ்வைப் பற்றி நினைவுகூர, மற்றவர்கள் அதைச் செவிதாழ்த்திக் கேட்பது இதற்கு மிகப் பெரிய ஆதாரம் என்ன? ஜும்ஆவுடைய தொழுகை ஜும்ஆவுடைய குதுபா. அல்லாஹ் என்ன சொல்கிறான்,
 
إِذَا نُودِيَ لِلصَّلَاةِ مِنْ يَوْمِ الْجُمُعَةِ فَاسْعَوْا إِلَى ذِكْرِ اللَّهِ
 
மக்களே, நீங்கள் ஜும்ஆவுடைய அழைப்பை கேட்டால், நீங்கள் அல்லாஹ்வின் நினைவு பக்கம் வாருங்கள். அல்லாஹ்வுடைய திக்ரின் பக்கம் நீங்கள் வாருங்கள். (அல்குர்ஆன் 62 : 9)
 
அப்போ, ஒருவர் அல்லாஹ்வைப் பற்றி நினைவு கூற, அதை நாம் செவி தாழ்த்தி கேட்பது இருக்கிறதே, அது நாமெல்லாம் அல்லாஹ்வை நினைவு கூர்ந்ததைப்போன்று.
 
இமாம் அவர்கள் ஓதுகிறார்கள் தொழுகையிலே, அப்படி இமாம் ஓதும் பொழுது நாமெல்லாம் செவிதாழ்த்திக் கேட்டால், அவர் குர்ஆனை கொண்டு அல்லாஹ்வின் நினைவு கூறும் பொழுது, அதைச் செவிதாழ்த்திக் கேட்ட காரணத்தினால் நாமும் குர்ஆன் ஓதியவர்கள் போல. 
 
وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنْصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ
 
குர்ஆன் ஓதப்பட்டால், நீங்கள் வாய்மூடி இருங்கள். நீங்கள் செவிதாழ்த்திக் கேளுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் 7 : 204)
 
ஏன்? குர்ஆன் ஓதும் பொழுது, ஓதியவருடைய அந்த வார்த்தைக்கு ஓதியவருடைய அந்த குர்ஆனுக்கு நாம் செவிதாழ்த்திக் கேட்கும்பொழுது, ஓதியவருக்கு என்ன நன்மை கிடைக்கிறதோ, அதே நன்மை அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா அதைக் கேட்பவருக்கும் கொடுக்கிறான். 
 
யார் அவர்கள்? யார் குர்ஆன் ஓதும் பொழுது செவிதாழ்த்திக் கேட்கவில்லையோ, காது கொடுத்து கேட்கவில்லையோ, அவருக்கு ஓதியவருடைய நன்மை கிடைக்காது.
 
இப்பொழுது பாருங்கள், ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸில், திக்ருடைய சபை என்பதற்கு மிக அழகான விளக்கத்தை ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லித் தருகிறார்கள். 
 
அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹிஹ் புகாரியிலே, இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் 5929 -ஆவது ஹதீஸாக பதிவு செய்கிறார்கள். 
 
إِنَّ لِلَّهِ مَلاَئِكَةً يَطُوفُونَ فِي الطُّرُقِ
 
இந்த பூமியிலே, அல்லாஹு தஆலா சில மலக்குகளை ஏற்பாடு செய்திருக்கிறான். அவர்களுக்கு என்ன வேலை? அவர்கள் பாதைகளிலே, தெருக்களிலே சுற்றுவார்கள்.
 
يَلْتَمِسُونَ أَهْلَ الذِّكْرِ
 
அல்லாஹ்வுடைய திக்ரை பேசக்கூடியவர்களை, அஹ்லுல் திக்ரை, திக்ரு உடையவர்களை அவர்கள் தேடிக் கொண்டிருப்பார்கள்.
 
فَإِذَا وَجَدُوا قَوْمًا يَذْكُرُونَ اللَّهَ تَنَادَوْا
 
யாராவது அல்லாஹ்வை திக்ரு செய்யகூடியவர்களாக அவர்கள் பார்த்துக்கொண்டால், சொல்வார்கள்,
 
தங்களுக்கு  மத்தியிலே அவர்கள்  அழைப்பார்கள்.
 
هَلُمُّوا إِلَى حَاجَتِكُمْ
 
உங்களுடைய தேவை இங்கே இருக்கிறது. உங்களுடைய நோக்கம் இங்கே இருக்கிறது. இங்கே வாருங்கள் என்று. நபியவர்கள் சொல்லுகிறார்கள்,
 
فَيَحُفُّونَهُمْ بِأَجْنِحَتِهِمْ إِلَى السَّمَاءِ الدُّنْيَا
 
அந்த வானவர்கள், அந்த திக்ர் உடையவர்களை அப்படியே சூழ்ந்து கொள்வார்கள். சூழ்ந்து கொள்வார்கள். தங்கள் இறக்கைகளால் அடுக்கடுக்காக அவர்கள் அமர்ந்துகொண்டு வானம் வரை அவர்கள் உயர்ந்து விடுவார்கள். அல்லாஹு அக்பர். பிறகு அந்த வானவர்கள், ரப்பிடத்திலே திரும்பச் செல்லும் பொழுது,
 
فَيَسأَلهُم رَبُّهُم
 
அவர்களுடைய இறைவன் அவர்களிடத்திலே கேட்பான். இந்த வானவர்கள் உடனே ரிப்போர்ட் கொடுக்க வேண்டும். திக்ருடையவர்களை பார்த்தால், அங்கே அமர்ந்து விட்டு அவர்கள் அந்த சபையை முடித்துவிட்டு திரும்பச் செல்லும் பொழுது, அந்த வானவர்கள் அல்லாஹ்விடத்தில் திரும்ப சென்று அவர்கள் ரிப்போர்ட் கொடுப்பார்கள். அப்பொழுது அல்லாஹு ரப்புல் ஆலமீன்,
 
وَهُوَ أَعْلَمُ مِنْهُمْ
 
ரப்பிற்கு தெரியும் இவர்கள் எங்கே சென்றார்கள். எங்கே உட்கார்ந்தார்கள். எதைக் கேட்டார்கள். எந்த சபையிலே கலந்துகொண்டார்கள். அவர்கள் யார் எதை பேசினார்கள் என்றெல்லாம் அல்லாஹ்விற்கு தெரியும். இப்படி இருக்க அல்லாஹு ரப்புல் ஆலமீன் கண்ணியப்படுத்தும் விதமாக கேட்கிறான்,
 
مَا يَقُولُ عِبَادِي؟
 
என் அடியார்கள் என்ன பேசினார்கள்? பாருங்கள், திக்ருடைய சபை என்று வருகிறது. திக்ருடையவர்கள் என்று வருகிறது. அல்லாஹ் கேட்கக் கூடிய கேள்வி என்ன?
 
என் அடியார்கள் என்ன பேசினார்கள்? என்ன தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்?
 
قَالَ: يَقُولُونَ
 
அந்த வானவர்கள் சொல்வார்கள், உனது அடியார்கள் இறைவா!
 
يُسبِّحُونَكَ
 
உன்னை தஸ்பீஹ் செய்கிறார்கள்.
 
وَيُكَبِّرونَكَ
 
உன்னை பெருமை படுத்தினார்கள்.
 
ويحْمَدُونَكَ
 
உனது புகழை பேசினார்கள்.
 
ويُمَجِّدُونَكَ
 
உனது கண்ணியத்தை அவர்கள் பேசினார்கள். உனது மாண்பு அவர்கள் பேசினார்கள். அல்லாஹ் கேட்பான்,
 
فَيَقُولُ: هَلْ رَأَوْنِي؟
 
அவர்கள் என்னைப் பார்த்து இருக்கிறார்களா? அல்லாஹு அக்பர். அவர்கள் என்னை பற்றி பேசுகிறார்களே, அவர்கள் என்னை பார்த்து இருக்கிறார்களா?அவர்கள் சொல்வார்கள், 
 
فَيَقُولُونَ: لاَ وَاللَّهِ مَا رَأَوْكَ؟
 
அல்லாஹ்வின் மீது சத்தியமாக, ரப்பே! அவர்கள் உன்னைப் பார்க்கவில்லை. அப்போ, இந்த துனியாவிலே யாரும் எவ்வளவுதான் தரஜாஅடைந்தாலும் கூட அல்லாஹ்வை பார்க்க முடியாது.
 
கண்ணியத்திற்குரியவர்களே, இஸ்லாமிலே பல சூபி என்ற பெயரிலே, தரீக்கா என்ற பெயரிலே வழிகெட்ட மக்கள், எவ்வளவு அனாச்சாரங்களை செய்கிறார்கள் பாருங்கள். மக்களை ஏமாற்றி நீங்கள் எங்கள் இடத்திலே வாருங்கள். 
 
நாங்கள் எங்கள் தியானத்தின் மூலமாக உங்களுக்கு அல்லாஹ்வை பார்க்கும்படி செய்வோம். உங்களுக்கு அல்லாஹ்வை காண்பிப்போம். பச்சை விளக்கு தெரியும், அப்புறமாக சிவப்பு விளக்கு தெரியும். கடைசியில் ஒரு விளக்கு தெரியும் இப்படி எல்லாம் மக்களை எப்படி ஏமாற்றுகிறார்கள் பாருங்கள். அல்லாஹு தஆலா அவர்களின் வழிகேட்டிலிருந்து நம்மை பாதுகாப்பானாக! 
 
அப்போ, துனியாவிலே எந்த நபியும் அல்லாஹ்வை பார்த்தது கிடையாது. எந்த அவுலியாவும் அல்லாஹ்வை பார்த்தது கிடையாது. பார்க்கவும் முடியாது. மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களாலயே பார்க்க முடியவில்லை என்றால், வேறு யாரால் பார்க்க முடியும் சகோதரர்களே.
 
அடுத்து அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கேட்பான்,
 
فَمَا يَسْأَلُونِي؟
 
திக்ருடைய சபை திக்ருடையவர்கள் அல்லாஹ் கேட்பான்,  
 
அவர்கள் என்ன கேட்டார்கள்? அவர்களுடைய கோரிக்கை எதுவாக இருந்தது? அல்லாஹு அக்பர். இன்று கோரிக்கை எதுவாக இருக்கிறது? இட ஒதுக்கீடு ஆக இருக்கிறது. 
 
இன்று கோரிக்கை என்ன? ஜும்ஆவுடைய பயான்கள் எல்லாம் அரசியலாக மாறிக் கொண்டிருக்கின்றன. மக்களுடைய தீனுடைய சபைகள் எல்லாம் அரசியலாக மாறிக் கொண்டிருக்கின்றன. அல்லாஹ் கேட்கிறான் 
 
அவர்களது யாசகம், கோரிக்கை எதுவாக இருந்தது? அவர்கள் சொல்லுவார்கள்,
 
يَسْأَلُونَكَ الجَنَّةَ
 
அவர்களது கோரிக்கைகள் எல்லாம் ஓரிடத்திலே  சொர்க்கமாக இருந்தது. அல்லாஹ் கேட்பான், அவர்கள் அந்த சொர்க்கத்தை பார்த்திருக்கிறார்களா?
 
يَقُولُ: وَهَلْ رَأَوْهَا؟
 
பார்த்திருக்கிறார்களா? வானவர்கள் சொல்லுவார்கள்,
 
لاَ وَاللَّهِ يَا رَبِّ مَا رَأَوْهَا
 
எங்கள் இறைவா! அவர்கள் சொர்க்கத்தை பார்க்கவே இல்லையே சத்தியமாக. அல்லாஹ் கேட்பான்,
 
فَكَيْفَ لَوْ أَنَّهُمْ رَأَوْهَا؟
 
அந்த சொர்க்கத்தை அவர்கள் பார்த்தால், அவர்கள் எப்படி இருப்பார்கள். அல்லாஹு அக்பர். சொல்லுகிறார்கள்,
 
لَوْ أَنَّهُمْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ عَلَيْهَا حِرْصًا، وَأَشَدَّ لَهَا طَلَبًا، وَأَعْظَمَ فِيهَا رَغْبَةً
 
அந்தச் சொர்க்கத்தை பார்த்துவிட்டால், அதன் மீது பேராசை கொள்வார்கள். அதை அதிகம் தேடுவார்கள். அதில் அவர்களுக்கு ஆர்வம் இருப்பது போன்று வேறு எதிலும் அவர்களுக்கு ஆர்வம் இருக்காது. அல்லாஹ் கேட்பான்,
 
فَمِمَّ يَتَعَوَّذُونَ؟
 
அவர்களுக்கு என்ன பாதுகாப்பு வேண்டினார்கள்? எதையாவது பற்றி அவர்கள் பயந்தார்களா, பாதுகாப்புத் தேடினார்களா? அப்பொழுது வானவர்கள் சொல்வார்கள், ஆம் இறைவா!
 
يَقُولُونَ: مِنَ النَّارِ
 
நரகத்திலிருந்து பாதுகாப்பு தேடிக் கொண்டிருந்தார்கள். அல்லாஹ் கேட்பான், நரகத்தை பார்த்து இருக்கிறார்களா?
 
நரகத்தை கண்டிருக்கிறார்களா? சொல்வார்கள் அல்லாஹ்வே! சத்தியமாக நரகத்தை அவர்கள் பார்த்ததில்லை. அல்லாஹ் கேட்பான்
 
அந்த நரகத்தை அவர்கள் பார்த்தால், அவர்களது நிலை எப்படி இருக்கும். சொல்வார்கள்,
 
لَوْ رَأَوْهَا كَانُوا أَشَدَّ مِنْهَا فِرَارًا، وَأَشَدَّ لَهَا مَخَافَةً
 
அந்த நரகத்தை அவர்கள் பார்த்தால், விரண்டோடுவார்கள். அதை பயந்து கொண்டே இருப்பார்கள்.
 
இந்த ஒரு ரிப்போர்ட்டை, இந்த ஒரு தகவலை அவர்கள் முடித்தவுடன், அல்லாஹ்வுடைய அருளை பாருங்கள். அல்லாஹ் சொல்லுவான்,
 
فَأُشْهِدُكُمْ أَنِّي قَدْ غَفَرْتُ لَهُمْ
 
அவர்களை அந்த நிலையில் பார்த்த உங்களை நான் சாட்சியாக்குகிறேன்.
 
நான் அவர்களை மன்னித்து விட்டேன். அல்லாஹு அக்பர். அல்லாஹ்வின் இந்த திக்ருடைய அல்லாஹ்வைப் பற்றி பேசக்கூடிய சபையிலே கலந்து கொள்ளும் பொழுது நமக்கு கிடைக்கக்கூடிய இந்த வெகுமதி என்ன? 
 
எதற்காக வேண்டி அமல் செய்கிறோமோ, எதற்காக வேண்டி அல்லாஹ்விடத்தில் நாம் வேண்டுகிறோமோ, அல்லாஹ் அதை தருகிறான். மலக்குகளை சாட்சியாக்கி நான் அவர்களை மன்னித்து விட்டேன். அப்பொழுது பாருங்கள், ஒரு வானவர் கேட்பார். அல்லாஹ்வே!
 
فِيهِمْ فُلاَنٌ لَيْسَ مِنْهُمْ، إِنَّمَا جَاءَ لِحَاجَةٍ
 
ஒருவர் வந்தார். அவர் அந்த சபையிலே கலந்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக வரவில்லை. 
 
ஒரு தேவைக்காக வந்தார். அவருடைய நண்பர் ஒருவர் அங்கே இருந்தார். சந்திப்பதற்காக வந்தார். அவர் அங்கே உட்கார்ந்து கொண்டிருந்தார். சரி, அவரை சந்திக்க வேண்டும் கடைசியிலே அவரிடத்திலே பேசுவோமே என்று சபையின் முடிவை காத்திருந்து அங்கே உட்கார்ந்து கொண்டார். 
 
அல்லது வேறு ஏதாவது தேவைக்காக வந்தார் அவர் அந்த இடத்தில் சபை முடிவடையும் வரை உட்கார்ந்துகொண்டார் இவரைப் பற்றி உன்னுடைய தீர்ப்பு என்ன அல்லாஹ்? எப்படி கேட்கிறார்கள்?
 
ஒருவர் அந்த திக்ருடைய சபையிலே கலந்து கொள்வதற்காக வரவில்லை. ஒரு தேவைக்காக அங்கே வந்தார். அந்த சபை முடிகின்ற வரை அந்த இடத்திலேயே உட்கார்ந்து கொண்டார். அப்பொழுது தான் அவருடைய தேவை நிறைவேறும் என்பதற்காக. அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள்.
 
هُمُ الجُلَسَاءُ لاَ يَشْقَى بِهِمْ جَلِيسُهُمْ
 
அந்த நண்பர்கள் யார் தெரியுமா? அங்கே அமர்ந்திருந்த அந்த தோழர்கள் யார் தெரியுமா? அவர்களுக்கு அருகிலே அமர்பவன் கூட துர்பாக்கியவனாக, நன்மையை இழந்தவனாக ஆகமாட்டான். அப்படிப்பட்ட நண்பர்கள். ஆகவே அந்த சபையிலே, வேறு நோக்கத்துக்காக வந்தவனைக் கூட நான் மன்னித்து விட்டேன் என்று அல்லாஹ் சொல்கிறான். 
 
இப்படி கண்ணியத்திற்குரியவர்களே, திக்ர் என்பது பல வகையாக இருக்கிறது. நம்முடைய சபை எதுவாக இருந்தாலும், அல்லாஹ்வைப் பற்றி பேசும் பொழுது நமக்கு இந்த நன்மையை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தருகின்றான்.  
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம், இந்த திக்ருடைய, அந்த முக்கியத்துவத்தை நமக்கு வலியுறுத்தும்போது கூறிய ஒரு ஹதீஸை கூறி முடிப்போமாக.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லுகிறார்கள். அப்துல்லாஹ் இப்னு பூஸ்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்க, இமாம் இப்னுமாஜா (3793) பதிவு செய்கிறார்கள்.
 
ஒரு அஃராபி, ஒரு கிராமத்தார் வருகிறார், பாமரர் வருகிறார், மார்க்கத்தைப் பற்றிய ஒரு நீண்ட விளக்கமோ, அல்லது ஒரு பெரிய வணக்க வழிபாட்டிலோ, அல்லது இல்மிலோ பிரசித்தம்  பெற்றவர் இல்லை. சாதாரணமான ஒரு பாமரர், ஒரு விவசாயி போல, அவர் வந்து சொல்கிறார்.
 
أَنَّ أَعْرَابِيًّا قَالَ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: إِنَّ شَرَائِعَ الْإِسْلَامِ قَدْ كَثُرَتْ عَلَيَّ، فَأَنْبِئْنِي مِنْهَا بِشَيْءٍ أَتَشَبَّثُ بِهِ قَالَ: «لَا يَزَالُ لِسَانُكَ رَطْبًا مِنْ ذِكْرِ اللَّهِ عَزَّ وَجَلَّ»
 
அல்லாஹ்வின் தூதரே! இந்த இஸ்லாமுடைய மார்க்க சட்டங்கள் நிறைய இருக்கின்றன.
 
எனக்கு ஏதாவது ஒன்றை சொல்லித் தாருங்கள். நான் அதை பிடித்துக் கொள்கிறேன். அதாவது, உங்களுடன் இருக்கும் தோழர்களைப் போல அதிகமாக மஸ்ஜிதில் நேரம் கொடுப்பதற்கோ, ஜிஹாதிலே செல்வதற்கோ, இன்னும் பெரிய பெரிய வணக்க வழிபாடுகளில் ஈடுபடுவதற்கோ என்னால் இயலவில்லை. எனக்கு ஏதாவது இலகுவாக ஒன்றை சொல்லித் தாருங்கள். நான் அதைப்பற்றி பிடித்துக் கொள்கிறேன். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னதை பாருங்கள் ,
 
لَا يَزَالُ لِسَانُكَ رَطْبًا مِنْ ذِكْرِ اللَّهِ
 
உனது நாவு எப்பொழுதும் அல்லாஹ்வின் நினைவில் ஈரமாக இருக்கட்டும். அல்லாஹ்வின் நினைவிலிருந்து உனது நாவு காய்ந்து விடவேண்டாம். 
 
எவ்வளவு சின்ன ஒரு அமல். ஆனால், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நாம் எதை சிறியதாக சாதாரணமாக கருதுகிறோமோ அதைதான் அந்த தோழருக்கு சொல்லிக் கொடுத்தார்கள். அல்லாஹ்வுடைய நினைவிலிருந்து உனது நாவு காய்ந்து விட வேண்டாம். காரணம் என்ன தெரியுமா? திக்ர் என்பது அவ்வளவு பெரிய வணக்கம்.
 
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள் பாருங்கள். அபூதர்தா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், இமாம் திர்மிதி (3377) பதிவு செய்கிறார்கள். 
 
«أَلَا أُنَبِّئُكُمْ بِخَيْرِ أَعْمَالِكُمْ، وَأَزْكَاهَا عِنْدَ مَلِيكِكُمْ، وَأَرْفَعِهَا فِي دَرَجَاتِكُمْ وَخَيْرٌ لَكُمْ مِنْ إِنْفَاقِ الذَّهَبِ وَالوَرِقِ، وَخَيْرٌ لَكُمْ مِنْ أَنْ تَلْقَوْا عَدُوَّكُمْ فَتَضْرِبُوا أَعْنَاقَهُمْ وَيَضْرِبُوا أَعْنَاقَكُمْ»؟ قَالُوا: بَلَى. قَالَ: «ذِكْرُ اللَّهِ تَعَالَى» قَالَ مُعَاذُ بْنُ جَبَلٍ: «مَا شَيْءٌ أَنْجَى مِنْ عَذَابِ اللَّهِ مِنْ ذِكْرِ اللَّهِ»
 
நபியவர்கள் சொல்லுகிறார்கள், அமல்களிலே சிறந்த அமல், உங்கள் இறைவனிடத்திலே உங்கள் அரசனிடத்திலே மிக பரிசுத்தமான அமல், உங்கள் தரஜாக்களையும், உங்களது நன்மைகளை, உங்களது படித்தரங்களை, அல்லாஹ்விடத்திலே அதிகம் உயர்த்தக்கூடிய ஒன்று. 
 
நீங்கள் தங்கம் வெள்ளிகளை செலவு செய்வதைவிட, எதிரிகளை சந்தித்து அவர்கள் உங்களை வெட்ட, நீங்கள் அவர்களை வெட்ட இவற்றைவிடயெல்லாம் சிறந்த ஒன்றை நான் உங்களுக்கு சொல்லி தரட்டுமா? என்று கேட்டு போது சஹாபாக்கள் சொன்னார்கள், அல்லாஹ்வின் தூதரே கண்டிப்பாக எங்களுக்கு சொல்லித் தாருங்கள்.
 
ஸஹாபாக்கள் கேட்டதற்கு, நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் சொல்லுகிறார்கள். ஆம்! அதுதான் அல்லாஹ்வுடைய திக்ர் என்பதாக. 
 
இந்த ஹதீஸை கேட்கக்கூடிய நாம் இந்த இடத்திலே ஒன்றை கவனத்திலே கொள்ள வேண்டும். இந்த ஹதீஸை சஹாபாக்களும் கேட்டார்கள். இந்த ஹதீஸை நாமும் கேட்கிறோம். நமக்கும் ஸஹாபாக்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன?
 
இந்த ஹதீஸை கேட்கும்போதே நம்மிலே பலர் என்ன செய்கிறார்கள். ஆஹா! ஹதீஸிலே சொல்லிவிட்டார்கள். திக்ரு செய்தால் போதும், தர்மம் செய்வதை விட அதிகமான நன்மை. கையை சுருக்கிக் கொள்கிறார்கள். 
 
திக்ரு செய்தால் போதும், ஜிஹாதிலே செல்வதை விட அதிக நன்மை இருக்கிறது. எனவே, ஜிஹாதிலே செல்ல தேவையில்லை. அமல்கள் அதிகமாக செய்வதை விட, திக்ரில் அதிகமான நன்மை இருக்கிறது. எனவே, அமல்கள் செய்ய தேவை இல்லை. 
 
இது மார்க்க அறிவிலே குறைவாக இருக்கக்கூடிய சோம்பேறிகளாக இருக்கின்ற மார்க்கத்தை சரியாக புரியாமல் இருக்கின்ற பலவீனர்களுடைய  புரிதல் சகோதரர்களே.
 
ஸஹாபாக்கள் என்ன விளங்கினார்கள், அப்படியா அல்லாஹ்வின் தூதரே! திக்ருக்கு அவ்வளவு நன்மைகள் இருக்கிறதா? அப்படி என்றால் அல்லாஹ்வின் பாதையிலே, நாங்கள் ஜிஹாது செய்யும் பொழுது அல்லாஹ்வை திக்ர் கூறுவோம். 
 
எப்படி? அல்லாஹ்வின் பாதையிலே ஜிஹாத் செய்தவர்களாக நாங்கள் அல்லாஹ்வை திக்ரு கூறுவோம். நாங்கள் தர்மம் கொடுத்தவர்களாக அல்லாஹ்வை திக்ரு கூறுவோம். எங்களது எல்லா அமல்களிலும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தவர்களாக நாங்கள் செய்வோம். 
 
இது சஹாபாக்களுடைய புரிதல். எப்படி? சிறந்த ஒரு அமலோடு எல்லா அமல்களையும் தொடர்புபடுத்தினார்கள். 
 
நம்மவர்கள் என்ன செய்கிறார்கள் சிறந்த அமல் இருக்கும்பொழுது, வேறொரு அமல் எதற்காக என்று அந்த அமல்களை விடுகிறார்கள் சகோதர்களே. பர்ளுகளை விட்டுவிட்டு, எப்படி? கடமையான வணக்க வழிபாடுகளை விட்டுவிட்டு என்ன உபரியான வணக்க வழிபாடுகள் செய்தாலும் சரி, அது அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படாது. காரணம், சில மக்கள் இந்த திக்ரிலே உங்களை ஈடுபடுத்திகிறோம் என்று கூறி கடைசியிலே பர்ளான தொழுகையும் நீங்கள் தொழத் தேவையில்லை நீங்கள் என்ன பாவம் செய்தாலும் அல்லாஹ் உங்களை பொருட்படுத்த மாட்டான். 
 
திக்ர் ஒன்றே போதும் என்பதாக பிரச்சாரம் செய்கிறார்கள். இது அல்லாஹ்விடத்திலே அங்கீகரிக்கப்படாது. 
 
ஒரு மனிதன் மஸ்ஜிதுக்குள்ளே வருகிறான். அவன் சுன்னத்தை தொழுதுவிட்டு வெளியே சென்று விடுகிறான். பர்ளை தொழுவது கிடையாது. பிறகு,அடுத்த வக்துக்கு வருகிறான். நான்கு ரக்அத்து சுன்னத்து தொழுது விட்டு மீண்டும் சென்றுவிடுகிறான். இவனைப் பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்? சுன்னத்தை தொழுகிறான். ஆனால் பர்ளுகளை தொழவில்லை. 
 
இவனைப் பற்றி என்ன நீங்கள் சொல்வீர்கள்? இவன் ஒரு வழி கெட்டவன், இவன் மார்க்கத்தை புரியாதவன். சுன்னத் என்பது பர்ளுகளிலே ஏற்படுகின்ற குறைகளை நிவர்த்தி செய்வதற்காக. பர்ளுகளை சரிவர செய்வதற்கு, நமக்கு மன ஓர்மையை ஏற்படுத்துவதற்காக. அல்லாஹ்வுடைய அன்பையும் தரஜாத்துகளையும் இன்னும் அதிகம் நாம் பெறுவதற்காக சுன்னத்துகள் கண்ணியத்திற்குரியவர்களே. 
 
ஆனால், ஒரு மனிதர் இப்படி நபில்களிலே ஈடுபட்டு பர்ளுகளை விட்டுவிட்டார் என்றால் அவர் அல்லாஹ்விடத்திலே அன்பை அடைய முடியாது. 
 
ஆகவே, இந்த திக்ர் என்பது சாதாரண ஒன்று அல்ல. நாம் நாவால் அல்லாஹ்வை நினைவு கூறுவது போன்று, நம்முடைய எல்லா உறுப்புகளை கொண்டு அல்லாஹ்வுக்குக் கீழ்ப்படிந்து அல்லாஹ்வை நினைவு கூற வேண்டும். 
 
ஒரு மனிதர் நாவால் திக்ரு செய்கிறார். பலரை நீங்கள் பார்த்திருக்கலாம் கையிலே தஸ்பீஹ் மணிகளை வைத்துக்கொண்டு உருட்டிக்கொண்டு இருப்பார்கள். 
 
ஆனால், இன்னொரு பக்கம் பொய் பேசுவார்கள். இன்னொரு பக்கம் அளவிலே மோசம் செய்வார்கள். 
 
இன்னும் பலர் தவறான செயல்களை செய்துகொண்டு, மக்கள் பார்ப்பதற்காக கைகளிலே மணிகளை வைத்துக்கொண்டு நாவுகளிலே உச்சரிப்பார்கள். ஆனால் அவர்களுடைய ஏனைய உறுப்புகள் பாவங்களிலே இருக்கும். அல்லாஹ் பாதுகாப்பானாக! 
 
இது திக்ராக ஆகாது. நாவால் திக்ர் செய்வது, உள்ளத்தில் அச்சத்தை ஏற்படுத்த வேண்டும். நாவால் திக்ர் செய்வது உங்களுடைய உடல் உறுப்புகளை அல்லாஹ்விற்கு மாறு செய்வதிலிருந்து தடுக்க வேண்டும். 
 
ஒரு மனிதன் திக்ர் செய்கிறான். நான் திக்ர் செய்து கொண்டே இருக்கிறேன் என்று சொல்கிறான். ஆனால் பொய் பேசுகிறான். ஏமாற்றி வியாபாரம் செய்கிறான். கொடுக்கல் வாங்கல்களிலே அளவுகளில் மோசடி செய்கிறான் என்றால், இவன் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தவனாக ஆகமாட்டான்.
 
இப்படி கண்ணியத்திற்குரியவர்களே, அல்லாஹ்வை நினைவு கூறுவது என்பது நாவாலும் நினைவு கூறவேண்டும். உள்ளத்தாலும் நினைவு கூறவேண்டும். நமது உடல் உறுப்புகள் அனைத்தாலும் அல்லாஹ்விற்கு கீழ்படிவது கொண்டு,அல்லாஹ்வுடைய சட்டங்களை பேணுவதை கொண்டு, அல்லாஹ்வை நினைவு கூறும்பொழுது அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா நம்மை அதிகம் திக்ரு செய்தவர்களிலே எழுதுகிறான். 
 
அல்லாஹூ ஸூப்ஹானஹூதஆலா அப்படிப்பட்ட சிறந்த ஒரு நற்பாக்கியத்தை எனக்கும் உங்களுக்கும் தந்தருள்வானாக. அல்லாஹ்வை நாம் நேசிக்கக் கூடியவர்களாக அல்லாஹ்வுடைய நேசத்தைப் பெற்றவர்களாக ஆக்கியருள்வானாக.
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/