HOME      Khutba      தொழுகை | Tamil Bayan - 154   
 

தொழுகை | Tamil Bayan - 154

           

தொழுகை | Tamil Bayan - 154


தொழுகை

ஜுமுஆ குத்பா தலைப்பு : தொழுகை

வரிசை : 154

இடம் : எஸ். எம். ஜெ. பிளாஸா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 2-4-2021 | 18-10-1431

بسم الله الرّحمن الرّحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு,அல்லாஹ்வின் அச்சத்தை கடைபிடிக்குமாறு,உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவுபடுத்தியவனாக இந்த உரையை தொடங்குகிறேன்.

அல்லாஹ் உடைய வேதத்தின் படியும், அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறையின் படியும், நாமெல்லாம் வாழ்ந்து அல்லாஹ்வுடைய மன்னிப்பை பெற்றவர்களாக இவ்வுலகை விட்டுப் பிரிவதற்கு எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ் நல்லருள் புரிவானாக!

கண்ணியத்திற்குரியவர்களே! இன்றைய முஸ்லிம் சமுதாயத்தின் அலட்சியம், கவனக்குறைவு, மார்க்க புறக்கணிப்பு ஒரு எல்லையை தாண்டி சென்று கொண்டிருப்பதைப் பார்க்கிறோம்.

அல்லாஹ்வுடைய தவ்ஹீத் -அந்த ஒருமைப்பாட்டு விஷயத்தில் வணக்க வழிபாடுகளை அல்லாஹ்விற்கு மட்டுமே கலப்பற்ற முறையில் ஆக்க வேண்டும் அதுதான் இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை, இது விஷயத்திலும் நம் சகோதரர்கள் நம்மை சார்ந்தவர்கள் எந்த அளவு அலட்சியத்தோடும் கவனக்குறைவோடும் நடந்துகொள்கிறார்கள் என்பதையும் நாம் பார்க்கிறோம்.

கண்ணியத்திற்குரியவர்களே! இதற்கு அடுத்து மிகப் பெரிய ஒரு கட்டளை இருக்கிறது. அந்த கட்டளை தவ்ஹீதுடைய அடையாளமாக ஆக்கப்பட்டிருக்கிறது.

தவ்ஹீத் لاالهالااللهஎன்ற ஏகத்துவ சாட்சியத்தை மொழிதல், அதை உள்ளத்தில் நம்பிக்கை கொள்வது, இதற்கு ஒரு செயலை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அடையாளமாக ஆக்கி இருக்கிறான்.

அந்த செயல் இருந்தால்தான் இந்த தவ்ஹீது ஏற்றுக்கொள்ளப்ப்படும். அந்த செயல் இல்லை என்றால் இந்த தவ்ஹீத் எப்பலனையும் தராது. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அங்கீகரிக்கவில்லை.

அல்லாஹு ரப்புல் ஆலமீன் அவனை வணங்குவதற்கே தவிர வேறு எந்த ஒன்றுக்காகவும் மனிதர்களையும் ஜின்களையும் நான் படைக்கவில்லை என்று சொல்கிறான்.

وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ

ஜின்களையும், மனிதர்களையும் (அவர்கள் என்னை அறிந்து) என்னை வணங்குவதற்கே தவிர (வேறெதற்காகவும்) நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51 : 56)

ஜின்களும் மனிதர்களும் படைக்கப்பட்டிருப்பது ரப்பை வணங்கவேண்டும், படைத்த அல்லாஹ்வை வணங்க வேண்டும். இந்த உலக வாழ்க்கையில் சூரியன், சந்திரன்,காற்று,மழை,மலை,கடல் இத்தனை பிரபஞ்ச அமைப்புகளும் இயங்கிக் கொண்டிருப்பது ஜின்களும் மனிதர்களும் அல்லாஹ்வை இபாதத் செய்வதற்காக தான்.

அல்லாஹ் உடைய இபாதத் இல்லை என்றால் இந்த துன்யாவிற்கு வேலை இல்லை, இந்த துன்யாவை அழித்துவிடுவான்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள்:

அல்லாஹ்வை ஏற்று அவனுக்கு வழிபடக்கூடிய ஒரு அடியான் இந்த உலகத்தில் இருக்கும் வரை இந்த உலகத்தில் உள்ள அத்தனை இயக்கங்களையும் அல்லாஹ் இயக்கி கொண்டு இருப்பான்.

நூல் : திர்மிதி, எண் : 2133

அல்லாஹ் உடைய வழிபாடு,அல்லாஹ்வை வணங்குவது, இதுதான் நாம் படைக்கப்பட்டதின் நோக்கம். இந்த நோக்கத்தை யார் செயல்படுத்துகிறானோ  அவன்தான் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டவன்.

ஒருவன் அல்லாஹ் இருக்கிறான், அவன் என் இறைவன் என்று சொல்கிறான், ஆனால் அவன் அல்லாஹ்வை வணங்க வில்லை என்றால் அவன் அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளவில்லை என்று பொருள்.

ஒருவன் அல்லாஹ்வை நான் ஏற்றுக் கொண்டேன் என்று கூறுகிறான்,மொழிகிறான், ஆனால் அவனை வணங்குவதில்லை என்றால் என்ன பொருள்? அவன் அல்லாஹ்வை நம்பவில்லை, அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளவில்லை.

அல்லாஹு தஆலா வணக்க வழிபாட்டோடு அல்லாஹ்விற்கு பணிவதோடு உள்ள ஈமானை தான் நம்மிடத்தில் கேட்கிறானே தவிர, வழிபாடுகள் இல்லாத அல்லாஹ்விற்கு பணியாத அல்லாஹ்விற்கு கட்டுப்படாத ஈமானை அல்லாஹ் நம்மிடத்தில் கேட்கவில்லை.

அல்லாஹ் கூறுகிறான் :

وَمَاأُمِرُواإِلَّالِيَعْبُدُوااللَّهَمُخْلِصِينَلَهُالدِّينَحُنَفَاءَوَيُقِيمُواالصَّلَاةَوَيُؤْتُواالزَّكَاةَوَذَٰلِكَدِينُالْقَيِّمَة

(எனினும், அவர்கள்) இறைவனுடைய கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி, மற்ற மார்க்கங்களைப் புறக்கணித்து, அல்லாஹ் ஒருவனையே வணங்கி, தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருமாறே தவிர, (வேறெதுவும் இத்தூதர் மூலம்) அவர்களுக்கு ஏவப்படவில்லை. (இது, அவர்களுடைய வேதத்திலும் ஏவப்பட்ட விஷயம்தான்.) இதுதான் நிலையான சட்டங்களுடைய மார்க்கம். (அல்குர்ஆன் 98 : 5)

இந்த வசனத்தை ஓதிக் காண்பித்து விட்டு இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகிறார்கள்: இதைவிட மிகத் தெளிவான ஒரு ஆதாரத்தை தேட வேண்டிய அவசியம் இல்லை என்று.

அன்பிற்குரியவர்களே! இந்த செய்தியை தான் நாம் பார்க்க போகிறோம். அல்லாஹ் உடைய வழிபாடு, அல்லாஹ்வை வணங்குவது, இந்த தொழுகை என்ற அமைப்பில்.

இது தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உலக மக்களுக்கெல்லாம் கொடுத்த கட்டளை. இந்த தொழுகை இல்லை என்றால் அவன் மார்க்கத்தை பின்பற்றுபவனல்ல. அவன் அல்லாஹ்வால் அங்கீகரிக்கப்பட்ட மார்க்கத்தை உடையவன் அல்ல.

இன்று முஸ்லிம்களுடைய நிலைமை என்ன? ஜும்ஆ தொழுதால் போதும் என்று ஒரு கூட்டம். இரண்டு பெருநாட்களை தொழுதால் போதும் என்று ஒரு கூட்டம். இன்னொரு கூட்டம் இவற்றில் எதையும் பற்றி கவலைப் படாமல் தொழுகை என்றால் என்னவென்றே தெறியாமல் இருக்கிறார்கள்.

முதலில் ஒரு அடிப்படையை புரிந்து கொள்ளுங்கள். யார் ஒருவன் அல்லாஹ் தனக்கு கடமையாக்கிய ஐங்கால தொழுகைகளை அதற்குரிய நேரத்தில் தொழ வில்லையோ அவன் முஸ்லிம் அல்ல. பரிபூரணமான முஸ்லிமும் கிடையாது. குறைவுள்ள முஸ்லிமும் கிடையாது. அவன் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டே வெளியேறி விட்டான்.

அவனுக்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்க்கும் எந்த உறவும் கிடையாது. அல்லாஹ்வை நிராகரித்த ஒரு காஃபிர் ஆவான். அல்லாஹ்விற்க்கு இணைவைத்த ஒரு முஷ்ரிக்காக இருப்பான். நாளை நரக நெருப்பில் நிரந்தரமாக தங்கி அல்லாஹ்வின் வேதனையை சுவைக்கக் கூடிய காஃபிர்களில் ஒருவனாக இருப்பான். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

ஸூரா மர்யமில் அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள் :

فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا

(இவர்களுக்குப் பின்னர், இவர்களுடைய சந்ததியில்) இவர்களுடைய இடத்தை அடைந்தவர்களோ சரீர இச்சைகளைப் பின்பற்றி தொழுகையை(த் தொழாது) வீணாக்கி விட்டார்கள். அவர்கள் (மறுமையில்) தீமையையே (அழிவையே) சந்திப்பார்கள். (அல்குர்ஆன் 19 : 59)

வசனத்தின் கருத்து : இந்த வசனத்தில் இரண்டு செயல்களை அல்லாஹ் சொல்கிறான். ஒன்று, தொழுகையை வீணாக்கினார்கள், பாழ்படுத்தினார்கள்.

தொழுகையை விட்டார்கள் என்று அல்லாஹ் சொல்லவில்லை. வீணடித்தல் என்ற இந்த வார்த்தைக்கு விசாலமான பொருள் உள்ளது.

முற்றிலுமாக தொழுவதை விட்டுவிடுவது இதுவும் இந்த அர்த்தத்தில் வரும். தொழுகிறான், ஒரு நேரம் தொழுகிறான், இன்னொரு நேரம் விட்டுவிடுகிறான், ஒருநாள் தொழுகிறான், அடுத்த நாள் தொழுவதில்லை, வாரத்திற்கு ஒருமுறை தொழுகிறான், பிறகு தொழுவதில்லை,அது போன்று விரும்பினால் தொழுகிறான், விருப்பமில்லை என்றால் தொழுகையை விட்டு விடுகிறான்.

ஆனால் ஒட்டுமொத்தத்தில் இவன் தொழுகையை மறுக்கவில்லை. தொழுகிறான், ஆனால் பாழ்படுத்தி தொழுகிறான்.

ஒன்று, ஒவ்வொரு நாளும் தொழுகிறான், ஆனால் ஒரு நேரம் தொழுவான், இன்னொரு நேரம் விட்டு விடுவான், பிறகு அடுத்த நேரம் தொழுவான்.

இன்னொன்று, ஒரு நாள் தொழுவான், அடுத்த நாள் விட்டு விடுவான். வாரத்தில் ஒருமுறை தொழுவான், பிறகு விட்டு விடுவான். இல்லையென்றால் ஓய்வாக இருக்கும்போது தொழுவான், வேலை வந்தால் விட்டு விடுவான். இத்தனை அர்த்தங்களும் இந்த தொழுகையை பாழ்படுத்துதல், வீண்அடிக்குதல் என்பதில் வரும்.

ஆனால் ஒரு விஷயம் என்னவென்றால்? இவற்றில் எதிலும் முற்றிலுமாகவே தொழுகையை விட்டு விட்டான் என்பது இல்லை. புரிந்து கொள்ளுங்கள்.

இந்த நிலையுடைய மனிதனை பற்றி அல்லாஹ் சொல்கிறான் : இவர்கள் தொழுகையை வீண் அடித்தவர்கள். மன இச்சையைப் பின்பற்றக் கூடியவர்கள்.

ஒரு மனிதன் மன ஓர்மையோடு உள்ளச்த்தோடு அல்லாஹ்வை அவன் விதித்த நேரங்களில் தொழவி்ல்லை என்றால் நிச்சயமாக அவன் ஆபாசங்களை அசிங்கங்களை செய்யக் கூடிய மனிதனாக தான் இருப்பான்.

ஏனென்றால், தொழுகையைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான் :

اتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنَ الْكِتَابِ وَأَقِمِ الصَّلَاةَ إِنَّ الصَّلَاةَ تَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنْكَرِ وَلَذِكْرُ اللَّهِ أَكْبَرُ وَاللَّهُ يَعْلَمُ مَا تَصْنَعُونَ

 (நபியே!) வஹ்யி மூலம் உமக்கு அறிவிக்கப்பட்ட இவ்வேதத்தை (மக்களுக்கு) நீர் ஓதிக் காண்பித்து தொழுகையைக் கடைப்பிடித்து வருவீராக. ஏனென்றால், நிச்சயமாகத் தொழுகை மானக்கேடான காரியங்களிலிருந்தும். பாவங்களிலிருந்தும் (மனிதனை) விலக்கிவிடும். அல்லாஹ்வை (மறக்காது நினைவில் வைத்து, அவனை) திக்ரு செய்து வருவது மிகமிகப் பெரிய காரியம். நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிவான். (ஆதலால், இவற்றுக்குரிய கூலியை நீங்கள் அடைந்தே தீருவீர்கள்). (அல்குர்ஆன் 29 : 45)

ஒரு மனிதன் தொழுகையில் அலட்சியம் செய்கிறானென்றால், ஒரு மனிதன் தொழுகையை பாழ்படுத்துகிறானென்றால், நிச்சயமாக அசிங்கங்களுக்கு பின்னால், ஆபாசங்களுக்கு பின்னால், மன இச்சைகளுக்கு பின்னால் அவன் சென்றே ஆவான்.

ஒரு மனிதனுக்கு மஸ்ஜிதோடு தொடர்பில்லை என்றால், அவனுக்கு எங்கோ ஒரு இடத்தில் தொடர்பிருக்கிறது.

ஒரு மனிதனுக்கு, ஒரு முஸ்லிமிற்கு அல்லாஹ்வுடைய பள்ளியில் உள்ளம் லைக்கவில்லை என்றால் மஸ்ஜிதிற்கு முன்கூட்டி செல்வோம், அங்கே தொழுகையை எதிர்பார்த்து இருப்போம், தொழுது முடிந்ததற்கு பிறகும் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து கொண்டிருப்போம், குர்ஆன் ஓதுவோம், முடிந்தால் அடுத்த நேர தொழுகையையும் சேர்த்து தொழுதுவிட்டு வெளியே செல்வோம் என்று தொழுகையில் அல்லாஹ்வுடைய மஸ்ஜதில் அவனுக்கு ஈடுபாடு இல்லை என்றால் அவனுக்கு எங்கோ வேறு இடத்தில்  ஈடுபாடு இருக்கிறது. அவனுக்கு எங்கோ வேறொரு இடத்தில் தொடர்பு இருக்கிறது.

அவனுடைய உள்ளத்தில் அல்லாஹ்வுடைய அன்பு இருப்பதற்கு பதிலாக, அவனுடைய உள்ளத்தில் மார்க்கம் இருப்பதற்கு பதிலாக வேறு ஏதோ ஒன்று இருக்கிறது.

இதை தானே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்குச் சொன்னார்கள்.

ஏழு வகையான மக்கள் ரப்புடைய அர்ஷுடைய நிழலில் நிம்மதியாக இருப்பார்கள்.

(நபிமார்கள் என்றோ, ஷஹீதுகள் என்றோ அல்லாஹ் பிரிக்கவில்லை. ஒரு மயில் தூரத்தில் உள்ள சூரியனும் அவர்களை சுட்டெரிக்காது. மக்களெல்லாம் அந்த ஹஷரில் பதரி கொண்டிருக்கும்பொழுது இவர்கள் நிம்மதியாக இருப்பார்கள். அதில் ஒரு மனிதன் யார்? எத்தனை முறை இந்த ஹதீஸை கேள்விபடுகிறோம். வாழ்க்கையில் நாம் அமல் படுத்தியதுண்டா? )

وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ

யாருடைய உள்ளம் பள்ளியோடு தொடர்பில் இருக்கிறதோ அவர் மறுமையில் அல்லாஹ்வின் அர்ஷின் நிழலில் இருப்பார். (1)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 620.

உங்களுடைய உள்ளம் அல்லாஹ்வுடைய பள்ளியோடு தொடர்பு கொண்டிருக்கிறதா? கல்பில் மஸ்ஜித் உடைய முஹப்பத் இருக்கிறதா? ஒரு நேர தொழுகைக்குப் பின்னால் அடுத்த நேர தொழுகை எப்போது நேரம் வரும்? நான் அல்லாஹ்வை அல்லாஹ் உடைய வீட்டில் சந்திக்க செல்ல வேண்டுமே, அல்லாஹ்விற்கு முன்னால் அல்லாஹ் அக்பர் என்று கை உயர்த்தி அடிமை என்பதை வெளிபடுத்த வேண்டுமே என்ற உள்ளத்தின் துடிப்பு எங்கே!?

ஈமான் நிறைந்தவர்கள், ஈமானால் செழிப்படைந்தவர்கள்,அல்லாஹ் உடைய அன்பு நிறைந்தவர்கள், அல்லாஹ் உடைய பயம் நிறைந்தவர்கள். பாதுகாப்பு மிக்க இடம் அல்லாஹ் உடைய மஸ்ஜிதுகள்.

தெருக்களில் கூடி நின்று, முச்சந்திகளில் கூடி நின்று, தேனீர் கடைகளில் கூடி நின்று மணி கணக்காக , கால் கடுக்க பேசி கொண்டிருக்கிற முஸ்லிம் சமுதாயத்தை இன்று நாம் பார்க்கிறோம்.

அரசியல் பேசுவார்கள், சமூகம் பேசுவார்கள், ஃபித்னா, ஃபசாதும் சேர்ந்து பேசுவார்கள். அல்லாஹ் உடைய மஸ்ஜிதில் ஐந்து நமிடம் இருப்பதென்றால் அவர்களால் பொறுக்க முடியாது, துடித்து விடுவார்கள்.

ஏன்? உள்ளத்தில் நயவஞ்சகம் குடி கொண்டிருகின்ற காரணத்தால். ஈமான் குடி கொண்டிருந்தால் அவர்கள் மஸ்ஜிதில் நிம்மதி அடைந்திருப்பார்கள்.

ஹதீஸில் எப்படிபட்ட உவமையோடு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள். அவன் மஸ்ஜிதை விட்டுச் சென்றால் உடல் தான் செல்கிறதே தவிர அவனுடைய கல்பு பள்ளியில் கட்டப்பட்டுள்ளது.

مُعَلَّقٌஎன்று சொன்னால் கட்டி தொங்கவிடப்பட்ட ஒரு பொருளுக்கு சொல்லப்படும்.

அல்லாஹ்வும், அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சொல்லிய அத்தனை அமல்களையும் தவ்ஹீதிலிருந்து, வழிபாடுகளிலிருந்து, ஒழுக்கங்களிலிருந்து, பொருளாதார சட்டங்களிலிருந்து என அனைத்தையும் காலுக்கு கீழ் புதைத்து விட்டு, அடியோடு பாழாக்கிவிட்டு இன்று சமூகம் வெற்றியை தேடுகிறது, பாதுகாப்பை தேடுகிறது, இன்று சமூகம் மிகைப்பை தேடுகிறது.

அல்லாஹுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் :

நீங்கள் பாதுகாக்கப்பட வேண்டுமா? உங்கள் குடும்பம் பாதுகாக்கப்பட வேண்டுமா? உங்கள் நாடு பாதுகாக்கப்பட வேண்டுமா?

மஸ்ஜிதில் தொழுதுவிட்டு அடுத்த நேர தொழுகையை எதிர்பார்த்து இருங்கள். ஒரு தொழுகைக்குப் பின்னால் இன்னொரு தொழுகையை எதிர்பார்த்திருப்பது அல்லாஹ்வுடைய மார்க்கத்தை முஸ்லிம்களை பாதுகாப்பதற்காக போர் செய்கின்ற ஜிஹாது என்று சொன்னார்கள். (2)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம்எண் : 369

ஆனால் இன்று அத்தனை கடமைகளையும் ஐந்து நேர தொழுகைகளையும் மொத்தமாக பாழடித்து விடுவார்கள்.

ஆனால் இவர்கள் அல்லாஹ்விடத்தில் எங்களுக்கு வெற்றி வேண்டும், எங்களுக்கு பாதுகாப்பு வேண்டும் என்று கேட்பார்கள்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமும் சொன்னார்கள்: நீங்கள் தொழுகையை எதிர்பார்த்து இருக்கும்போது நீங்கள் தொழுது கொண்டிருக்கிற நன்மையை அல்லாஹ் உங்களுக்கு தருகிறான்.

அடுத்து அல்லாஹ் சொல்கிறான் : தொழுகையை பாழ்படுத்தினார்கள், மன இச்சையை பின்பற்றினார்கள்,

இவர்களுடைய தண்டனை என்ன? யார் தொழுகையை பாழ்படுத்தினானோ, மன இச்சையை பிற்பற்றினானோ,தொழுகையை வீனாக்கினானோ, ஆபாசங்களுக்கு பின்னால் சென்றானோ இவனுடைய தண்டனை இவன் மிகப்பெரிய வழிகேட்டை, மிகப்பெரிய நாசத்தை, ஆபத்தை சந்தித்தே தீருவான். (அல்குர்ஆன் 19 : 59)

தொழுகையை பாழ்படுத்துபவனுக்கே, வீணடிப்பவனுக்கே இந்த நிலைமை என்றால், அறவே தொழுகையில்லாமல் இருக்கின்ற மனிதனுடைய நிலைமை என்ன?

அல்லாஹ் ரப்புல் தொழாதவர்களின் தண்டனையைப் பற்றி கூறுகிறான் :

وَمَا أَدْرَاكَ مَا سَقَرُ (27) لَا تُبْقِي وَلَا تَذَرُ (28) لَوَّاحَةٌ لِلْبَشَرِ (29) عَلَيْهَا تِسْعَةَ عَشَرَ

(நபியே!) அந்த ‘சகர்' நரகம் என்னவென்று நீர் அறிவீரா? அது எவரையும் மிச்சம் வைக்காது; விடவுமாட்டாது. அது (எரித்து) மனிதனுடைய கோலத்தையே மாற்றிவிடும். (அவனை வேதனை செய்ய) அதில் பத்தொன்பது பேர்கள் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 74 : 27-30)

அல்லாஹ் ஒரு பொருளுடைய பயங்கரத்தையோ, அல்லது மதிப்பையோ உணர்த்த வேண்டுமென்றால் இப்படி கேள்வி கேட்பான்; செய்தி வந்துவிட்டதா? உமக்கு தெரியுமா? என்பதாக.

இப்படி அல்லாஹ் கேட்டால், அங்கே ஒரு பயங்கரம் இருக்கிறது. அங்கே ஒரு மிக பெரிய ஒரு நிலை இருக்கிறது. நம்முடைய கற்பனைக்கு அப்பாற்பட்டது என்பதை அல்லாஹ் புரியவைக்க விரும்புகிறான்.

கர்பனை செய்ய முடியாது, சிந்திக்க முடியாது. நம்முடைய சிறு அறிவால் அவற்றை யோசிக்க முடியாது. அப்படிப்பட்ட ஒரு செய்தி அங்கே இருக்கிறது. ஒன்று கண்ணியத்தால் உயர்வால் அல்லது பயங்கரத்தால் இழிவால், தண்டனையால். இரண்டில் ஒன்று அங்கு இருக்கும்.

அப்படிதான் அல்லாஹ் இந்த வசனத்தில் கேட்கிறான். (அல்குர்ஆன் 74 : 27-30)

வசனத்தின் கருத்து : நபியே! இந்த சகர் என்ற நரகத்தைப் பற்றி உமக்கு செய்தி தெரியுமா?

இந்த நரகத்திற்குள் நுழைந்தவனை இது உள்ளேவும் வைத்துக் கொள்ளாது, அவனை வெளியேவும் விட்டுவிடாது. நசுக்கி கொண்டே இருக்கும், சுட்டு எரித்துக் கொண்டே இருக்கும்.

நரகங்களிலேயே அதிகமான உஷ்ணமுடைய நரகம் இந்த சகர் என்ற நரகம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

ஏன் தெரியுமா? நரகத்தில் போடப்படுகிற மனிதனுடைய உடல் அவனுடைய தோல். இந்த உலகத்தில் நமக்கு தோலுக்கு தடிப்பம் இருக்காது.

ஆனால் ஒரு மனிதன் நரக நெருப்பில் போடப்பட்டால் அவனுடைய தோலுடைய தடிப்பம் குறித்து அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் சொல்கிறார்கள்:

மூன்று இரவுகள் மூன்று பகல் ஒருவன் தொடர்ந்து சென்றால் எவ்வளவு தூரம் அவனால் நடந்து செல்ல முடியுமோ அந்த அளவிற்கு தடிப்பமாக இருக்கும். நரகில் போடப்படுகிற அந்த நரகவாதியுடைய உடலின் தோலுடைய தடிப்பம். (3)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 6069.

கண்ணியத்தற்குரியவர்களே! அவ்வளவு மொத்தம் உள்ள அந்த தோலை சகர் என்ற நரகம் கண் சிமிட்டும் நேரத்திற்குள்ளால் அவனுடைய தோலை அப்படியே உரித்து அவனை எலும்புகூடாக மாற்றிவிடும்.

இதற்குமேல் பத்தொன்பது வானவர்கள் அந்த நரக நெருப்பை கண்கானித்துக் கொண்டு அதில் இருப்பவர்களை அடித்துக் கொண்டிருப்பார்கள், தண்டித்துக் கொண்டிருப்பார்கள்.

இப்படி அல்லாஹ் சூரா முத்தஸ்ஸிரில் அந்த சகர் என்ற நரகத்தை ஆரம்பித்து அதனுடைய கடைசி பகுதியில் நமக்குச் சொல்கிறான்.

சொர்க்கவாசிகளுக்கும் சகர் என்ற நரகத்தில் விழுந்து வேதனை அனுபவித்து கொண்டிருக்கிற பெரும் பாவிகளுக்கும் இடையில் நடக்கிற உரையாடலை அல்லாஹ் நமக்கு பதிவு செய்கிறான்.

சொர்கத்தில் சென்றவர்கள் அல்லாஹ்விடத்தில் கேட்பார்கள்: யா அல்லாஹ்! சில மக்களை நாங்கள் இங்கே பார்க்கவில்லையே! அவர்களெல்லாம் எங்கே இருக்கிறார்கள் என்று, அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சகர் என்ற நரகத்தில் சிக்கி தவிப்பவர்களிலிருந்து அவர்களுடைய திரையை அகற்றி அல்லாஹ் காண்பிப்பான்.

இதோ பாருங்கள்! ஒரு கூட்டம் இங்கே இருக்கிறார்கள் என்று, அந்த சொர்க்கவாசிகள் சகர் என்ற நரகத்தில் இருப்பவர்கள் படுகின்ற வேதனைகளை பார்த்ததற்கு பிறகு பயந்து நடுங்கி கேட்பார்கள், இப்படிபட்ட ஒரு வேதனையை அனுபவிப்பதற்கு என்ன காரணம் ?

مَا سَلَكَكُمْ فِي سَقَرَ (42) قَالُوا لَمْ نَكُ مِنَ الْمُصَلِّينَ

அந்த பாவிகள், சகர் உடையவர்கள் சொல்கின்ற பதில் என்ன தெரியுமா?

‘‘உங்களை ‘சகர்' நரகத்தில் புகுத்தியது எது?'' என்று கேட்பார்கள். அதற்கவர்கள் கூறுவார்கள்: ‘‘நாங்கள் தொழவில்லை. (அல் குர்ஆன் 74 : 42,43)

ஒரு மனிதன் ஜினா –விபச்சாரம் செய்திருந்தால் அல்லாஹ் நாடினால் தண்டனை கொடுப்பான், நாடினால் தண்டனை இல்லாமலும் அல்லாஹ் மன்னிக்கலாம். ஆனால் தொழுகையை விடுவது இறை நிராகரிப்பு.

சிலர், தொழுகையை விடுவதை பெரும்பாவங்களில் ஒரு பாவம். தொழுகையை விட்டால் தண்டனை உண்டு, பிறகு சொர்க்கம் சென்று விடலாம் என்று நினைக்கிறார்கள்.

ஆனால் அப்படி இல்லை. தொழுகை இல்லாதவனுக்கு நரகம் நிச்சயம்.

கபாயிர் –பெரும்பாவம் என்று அல்லாஹ் சொல்வது, ஒரு மனிதன் மன இச்சையால் வழிதவறிவிட்டால், ஆசையால் ஒன்றை செய்துவிட்டால் என்பது பற்றி அல்லாஹ் சொல்கிறான்.

தொழுகையை விடுவது பற்றி அல்ல. தொழுகையை விடுவது நிரந்தரமாக ஒருவனை நரக நெருப்பில் தள்ளக்கூடியது.

அல்லாஹ் கூறுவதைப் பாருங்கள் :

فَوَيْلٌ لِلْمُصَلِّينَ (4) الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ

(கவனமற்ற) தொழுகையாளிகளுக்கும் கேடுதான். அவர்கள் தங்கள் தொழுகைகளை விட்டும் மறந்தவர்களாக இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 107 : 4)

தொழுகிறான்,ஆனால் நேரங்களை தவரவிட்டும், அலட்சியம் செய்தும் தொழுகிறான். இவனுக்கு நரக நெருப்பில் தண்டனை இருக்கிறதென்றால் அறவே தொழாதவனுக்கு, அறவே தொழுகையை விட்டவனுக்கு நாளை மறுமையில் சொர்க்கத்தில் எந்த இடமும் கிடையாது.

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கையில், ஸஹாபாக்களுடைய வாழ்க்கையில் பாருங்கள்.

அல்லாஹ் உடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களுடைய மரண நேரத்தில் ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே உடல் வலியை, தலை வலியை அதிகமான உடல் சூட்டை அனுபவித்து கொண்டிருந்தார்கள்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வஃபாத் ஆவதற்கு மூன்று நாட்களுக்கு முன்பு தொழுகை நேரம் வருகிறது. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள:

எனக்கு உளூ செய்வதற்கு தண்ணீர் கொண்டு வாருங்கள். தண்ணீர் கொண்டு வரப்படுகிறது.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மயக்கமுற்று விழுந்து விடுகிறார்கள். மயக்கம் தெளிந்து எழுகிறார்கள்,

முஸ்லிம்கள் தொழுதுவிட்டார்களா? என்ன கேள்வி கேட்கிறார்கள்? முஸ்லிம்கள் தொழுதுவிட்டார்களா? ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹாசொல்கிறார்கள்: இல்லை அல்லாஹ்வின் தூதரே! தொழவில்லை, உங்களை எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.

சொல்கிறார்கள் : உளூ செய்வதற்கான தண்ணீர் கொண்டுவாருங்கள். மீண்டும் அந்த தண்ணீர் கொண்டு வந்து வைக்கப்படுகிறது. உளூ செய்வதற்கு தயாராகிறார்கள் மயக்கமுற்று கீழே விழுந்துவிடுகிறார்கள். பிறகு எழுந்திருக்கிறார்கள்

முஸ்லிம்கள் தொழுதுவிட்டார்களா? சொல்கின்றார்கள் : இன்னும் தொழவில்லை. எனக்கு உளூ செய்ய தண்ணீர் கொண்டு வாருங்கள். மீண்டும் தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. மூன்று முறை தண்ணீர் கொண்டு வரப்படுகிறது. மூன்று முறையும் மயக்கமுற்று கீழே விழுந்து விடுகிறார்கள்.

பிறகு மயக்கத்திலிருந்து எழுந்ததற்கு பிறகு, என்னால் மஸ்ஜிதுவரை நடந்து வர முடியாது. முஸ்லிம்களுக்குச் சொல்லுங்கள் ; அவர்கள் அபூ பக்ரை இமாமாக ஆக்கி தொழுகையை நிலை நிறுத்தட்டும்.

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த நேரத்தில் கூட தங்களுடைய வீட்டில் தொழுகையை நிலை நிறுத்துகிறார்கள்.

அடுத்து, ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மரணத்திற்கு ஒரு நாளைக்கு முன்பதாக உடலில் கொஞ்சம் ஆற்றல் வருகிறது. உடலில் சற்று எழுந்து நிற்பதற்கோ, நடப்பதற்கோ கொஞ்சம் ஆற்றல் வருகிறது.

அல்லாஹ் உடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்பாஸை அழைக்கிறார்கள், அலீயை அழைக்கிறார்கள்.

அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுரஸூலுல்லாஹுடைய ஒரு புஜத்தை பிடித்துக் கொள்கிறார்கள். அலீ ரழியல்லாஹு அன்ஹுமற்றொரு புஜத்தை பிடித்துக் கொள்கிறார்கள். ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கால் தரையில் தேய்த்துக் கொண்டே செல்கிறது. அழைத்து கொண்டு வருகிறார்கள். அபூபக்ர் இமாமத் செய்து கொண்டிருக்கிறார்கள்.

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழவைப்பதற்கு வருகிறார்கள் என்று எண்ணிய அபூபக்ர் பின்னால் வர முயற்சிக்கிறார்கள். ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள் : இல்லை நீர் அப்படியே நிர்பீராக.

அப்பாஸிற்கும் அலிக்கும் கட்டளையிடுகிறார்கள்; அபூபக்ருக்கு பக்கத்தில் என்னை உட்கார வைப்பீராக. அப்பாஸ் அவர்களும் அலீ அவர்களும் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அபூபக்ருக்கு அருகில் உட்கார வைக்கிறார்கள்.

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உட்கார்ந்து தொழுகை நடத்த அவர்களுடைய தொழுகையை பின்பற்றி அபூபக்கர் ரழியல்லாஹு அன்ஹுதொழவைக்க பின்னால் முஸ்லிம்கள் தொழுகிறார்கள்.

அறிவிப்பாளர் : உபைதுல்லாஹ் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம்,எண் : 629

தொழுகையுடைய முக்கியத்துவத்தை பார்த்தீர்களா? ஒரு நபியாக இருந்தால் கூட அவருக்கு தொழுகை மன்னிக்கப்பட்டதல்ல.

கண்ணியத்திற்குரியவர்களே! ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கண் மூடுவதற்கு நெருங்குவதற்கு இன்னும் சில நிமிடங்கள் தான் இருகின்றன. மணி நேரங்கள் அல்ல, சில நிமிடங்கள் தான் இருகின்றன. அந்த நேரத்தில் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களுடைய உம்மத்துக்கு கூறிய வஸிய்யத் என்ன?

الصَّلَاةَ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ

தொழுகை! தொழுகை! உங்களது வலக்கரங்கள் சொந்தமாக்கிய அடிமைகள் இரண்டையும் நீங்கள் பாதுகாத்து கொள்ளுங்கள், பேணி கொள்ளுங்கள். (4)

அறிவிப்பாளர் : உம்மு சலமா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : இப்னு மாஜா,எண் : 1614, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது ரழியல்லாஹு அன்ஹுசொல்கின்றார்கள். ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் நாங்கள் எங்களை பார்த்திருக்கிறோம்; வயோதிகம் அடைந்து தள்ளாடக்கூடிய ஒரு மனிதர் அவருக்கு இரண்டு ஆட்கள் துணைக்கு இருந்தால் (பிள்ளைகளோ, சகோதரர்களோ, அண்டை வீட்டார்களோ) யாரவது இரண்டு பேர் அவருக்கு துணைக்கு இருக்கிறார் என்றால் அந்த இரண்டு பேருடைய துணையோடு அவர் மஸ்ஜிதில் அழைத்து வரப்பட்டு ஸஃப்பில் நிறுத்தப்படுவார். (5)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1046.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த உம்மத்தை விட்டு சென்ற போது தொழுகை இல்லாதவனை முஸ்லிமாக சஹாபாக்கள் ஏற்றுக் கொள்ளவில்லை.

இமாம் திர்மிதி ரஹிமஹுல்லாஹ்  பதிவு செய்கிறார்கள்.

كان أصحاب محمد صلى الله عليه وسلم لا يرون شيئا من الأعمال تركه كفر غير الصلاة

ஒரு செயலை குஃப்ருடைய செயல் என்று சஹாபாக்கள் கருதினார்களென்றால் அது தொழுகையை விடுவதுதான்.

நூல் : திர்மிதி,எண் : 2546, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

இங்கே ஒரு மிகப்பெரிய வரலாற்றை நினைத்துப் பாருங்கள். அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் கலீஃபாவாக ஆக்கப்பட்டபோது சிலர் என்ன செய்தார்கள்? முதல் கட்டமாக வழிகெட்ட ஒரு கூட்டம், இனி நாங்கள் கலீஃபாவிற்கு ஜகாத் கொடுக்க மாட்டோம். ஜகாத் வாங்க வேண்டிய கட்டளை குர்ஆனில் ரஸூலுல்லாஹ்வைப் பார்த்து சொன்ன கட்டளை அது. அந்த கட்டளை கலீஃபாவுக்கு பொருந்தாது. எனவே நாங்கள் தொழுவோம், ஆனால் ஜகாத் கொடுக்கமாட்டோம்.

ஷஹாதா சொல்வோம், இஸ்லாமுடைய எல்லா ஹலால், ஹராம்களை பேணுவோம். எல்லா கட்டளைகளையும் ஏற்றுக்கொள்வோம். தொழுவோம், மஸ்ஜிது கட்டுவோம், மஸ்ஜிதில் இமாமோடு தொழுவோம், எல்லாம் செய்வோம், ஆனால் ஜகாத் கொடுக்கமாட்டோம். (6)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி,எண் : 6741.

யாரெல்லாம் ஜகாத் கொடுக்கமாட்டோம் என்று மறுத்தார்களோ, அவர்களுடைய தகப்பனிலிருந்து பிள்ளை வரை அத்தனை பேரையும் அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களும் சஹாபாக்களும் கொன்று குவித்தார்கள். அவர்களுடைய சொத்துகளை எல்லாம் பைத்துல்மாலில் கொண்டு வந்து சேர்த்தார்கள். அவர்களுடைய பெண்களெல்லாம் முஸ்லிம்களுக்கு அடிமைகளாக ஆக்கப்பட்டார்கள்.

தவ்பா செய்யவில்லை என்றால் கழுத்து வெட்டப்படுவதைத் தவிர வேறு ஒரு தீர்ப்பு இல்லை என்று அபூபக்ர் ரழியல்லாஹு அன்ஹுஅவர்கள் நிர்ணயித்தார்களே அந்த அடிப்படையில் சட்டத்தை செயல்படுத்தினார்களே! அந்த சட்டத்தோடு முஸ்லிம்களாகிய நாம் ஒத்துப் போகிறோமா? இல்லையா? ஒத்து போனால்தான் முஸ்லிம், இல்லையென்றால் அபூபக்ருடைய இந்த தீர்ப்பை சரியானது என்று கருதவில்லையென்றால் இங்கு தொழக்கூடிய நாம் முஸ்லிம்களாக இருக்க மாட்டோம். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

அன்பிற்குரியவர்களே! ஜகாத் தொழுகைக்குப் பின்னால் உள்ள கடமை. ஷஹாதா சொன்னார்கள், மஸ்ஜிதுகள் இருந்தன. அந்த வரலாறுகளை நீங்கள் படித்தால் தெறியும். மஸ்ஜிதுகளில் ஐங்காளத் தொழுகை ஜமாத்தோடு, இமாமோடு நிறைவேற்றப்பட்டது. வேறு எந்த ஹராமையும் செய்ய வில்லை.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்களே! அல்லாஹ் கூறினானே! இஸ்லாம் ஐந்து விஷயங்களைக் கொண்டது. ஷஹாதா, தொழுகை, ஜகாத், ஹஜ், நோன்பு என்று. இந்த ஐந்தில் மூன்றாவது இடத்திலுள்ள ஒரு ஜகாத்தை அந்த மக்கள் நிறைவேற்ற மாட்டோம் என்று சொன்னார்கள். அபூபக்ர், அவர்கள் விஷயத்தில் என்ன தீர்ப்பு செய்தார்கள்? அவர்கள் கொல்லப்பட வேண்டியவர்கள். தவ்பா செய்யாதவரை அவர்கள் கொல்லப்பட்டுக் கொண்டே இருக்க வேண்டுமென்று அடியோடு அவர்களை கொன்று குவித்தார்கள்.

அன்பிற்குரியவர்களே! ஜகாதிற்கு மேலாக உள்ளதுதான் இந்த தொழுகை. ஏழையாக இருந்தாலும், பணக்காரணாக இருந்தாலும், உள்ளூரில் இருந்தாலும், வெளியூரில் இருந்தாலும், நோய்வாய்ப் பட்டிருந்தாலும், சுகமாக இருந்தாலும், சுகத்தில் இருந்தாலும், துக்கத்தில் இருந்தாலும் எல்லா நிலைமைகளிலும் தொழ வேண்டியது உங்களுடைய கடமை.

إِنَّ الصَّلَاةَ كَانَتْ عَلَى الْمُؤْمِنِينَ كِتَابًا مَوْقُوتًا

நிச்சயமாக தொழுகை முஃமின்களின் மீது நேரம் விதிக்கப்பட்ட, குறிப்பிட்ட நேரம் என்று வகுக்கப்பட்ட ஒரு கடமையாக இருக்கிறது. (அல்குர்ஆன் 4 : 103)

ஆகவே தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குர்ஆனில் ஏறக்குறைய ஐம்பத்து ஐந்து இடங்களில் தொழுகையை நிலைநிறுத்துங்கள் என்று சொல்கிறான்.

இந்த இடங்களில் எங்குமே தொழுங்கள், தொழுபவர்கள் என்று கூறி அல்லாஹ் நிறுத்தவில்லை. தொழுகையை நிலைநிறுத்துங்கள், தொழுகையை நிலைநிறுத்த கூடியவர்கள் என்று கூறுகிறான்.

இதற்கு மேலும் அல்லாஹ் சொல்கிறான் :

حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ

(நம்பிக்கையாளர்களே!) அனைத்து தொழுகைகளையும் (குறிப்பாக நடுத் தொழுகையையும் (நேரம் தவறாமல்) பேணி(த் தொழுது) கொள்ளுங்கள். மேலும், (தொழுகையில்) அல்லாஹ்வுக்குப் பயந்து மிக்க உள்ளச்சத்தோடு நில்லுங்கள். (அல்குர் ஆன் 2 : 238.

முஃமின்களுடைய, முஸ்லிம்களுடைய தன்மையைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான் :

وَالَّذِينَ يُؤْمِنُونَ بِالْآخِرَةِ يُؤْمِنُونَ بِهِ وَهُمْ عَلَى صَلَاتِهِمْ يُحَافِظُونَ

மறுமையை நம்பகூடியவர்கள் குர்ஆனை நம்புவார்கள். குர்ஆனையும், மறுமையையும் நம்பக்கூடியவர்கள் தொழுகையை பாதுகாப்பார்கள். (அல்குர்ஆன் 6 : 92)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்

وَالَّذِينَ هُمْ عَلَى صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ

ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸிற்கு தகுதியானவர்கள் யார்? தொழுகைகளை பாதுகாக்ககூடியவர்கள். (அல்குர்ஆன் 23 : 9)

ஸூரத்துல் மஆரிஜில் அல்லாஹ் சொல்கிறான்:

وَالَّذِينَ هُمْ عَلَى صَلَاتِهِمْ يُحَافِظُونَ

தொழுகைகளை பாதுகாக்ககூடியவர்கள் இவர்கள் அல்லாஹ் உடைய மன்னிப்பிற்கு உரியவர்கள். (அல்குர்ஆன்70 : 34)

கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ் உடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த தொழுகை விஷயத்தில் நமக்கு வலியுறுத்தியதை கவனியுங்கள்:

إِنَّ بَيْنَ الرَّجُلِ وَبَيْنَ الشِّرْكِ وَالْكُفْرِ تَرْكَ الصَّلَاةِ

 

ஒரு மனிதனுக்கும், குஃப்ருக்கும் இடையில் ஒரே ஒரு எல்லைகோடுதான் இருக்கிறது. அது தொழுகையை விடுவது. தொழுகையை விட்டால் அவன் காஃபிராகி விடுகிறான்.

அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 116.

இதே அறிவிப்புகள், எத்தனை வாசகங்கள் மாற்றி மாற்றி மற்ற ஹதீஸ்களில் அறிவிக்கப் படுகின்றன. ஒரு மனிதனுக்கும், குஃப்ருக்கும்,ஷிர்க்குக்கும் இடையில் தொழுகையை விடுவதுதான். நமக்கும் அவர்களுக்கும் மத்தியில் உள்ள ஒப்பந்தமே இந்த தொழுகைதான். யார் இந்த தொழுகையை விட்டானோ அவன் அல்லாஹ்வை மறுத்துவிட்டான். (அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!)

நம்முடைய ஈமான் முழுமையாக வேண்டும் என்றால், இந்த ஷஹாதா முழுமையாக வேண்டும் என்றால், இதற்குரிய பலனை இம்மை மறுமையில் அடைய வேண்டுமென்றால் அல்லாஹ்விற்கு பணிவதை தவிர, அல்லாஹுடைய பணிவை இந்த தொழுகையை பேணுவதை கொண்டு வெளிப்படுத்துவதை தவிர நமக்கு வேறு வழி இல்லை.

ஒரே ஒரு விஷயத்தை கவனித்துப் பாருங்கள். அஹ்ஸாப் யுத்தம் ஏறக்குறைய ஒரு மாதங்கள் தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. அந்த ஒரு மாத தொடர் யுத்தத்தில் அஹல் தோண்டப்பட்டதால் எதிரிகளால் நேரடியாக மோத முடியாமல் அம்புகளை கொண்டு முஸ்லிம்களை தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து அம்பு மழையாக பொழிந்து கொண்டிருக்கிறது.

அல்லாஹ் உடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் அந்த ஒரு மாத காலத்தில் ஒரு நாள் லுஹர் தொழுகை தவறிவிடுகிறது. எப்படி தொழ முடியும் தொடர்ந்து அம்பு வந்து விழுந்து கொண்டே இருக்கிறது. தடுத்து கொண்டே இருக்க வேண்டிய நிலை, தற்காப்பு செய்து கொண்டே இருக்க வேண்டிய நிலை.

லுஹர் தொழ முடியவில்லை, பிறகு அஸரும் தொழ முடியவில்லை, பிறகு மஃரிபுடைய நேரம், மஃரிபும் தொழ முடியவில்லை, இஷா உடைய நேரத்தில்தான் அம்புகளை கொண்டு தாக்குவதை குறைஷிகள் நிறுத்துகிறார்கள்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடனே சஹாபாக்களை விரைந்து வர சொல்கிறார்கள். உளூ செய்துவிட்டு தொழுகைக்காக நிற்கும் போது அந்த நேரத்தில் ரஸூலுல்லாஹ் உடைய மன வேதனையைப் பாருங்கள்.

مَلَأَ اللَّهُ بُيُوتَهُمْ وَقُبُورَهُمْ نَارًا

யார் நம்மை தொழ முடியாமல் இப்படி ஆக்கிவிட்டார்களோ அவர்களுடைய வீடுகளையும்,அவர்களுடைய கப்ருகளையும் அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக! என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் : அலீ ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி,எண் : 2714.

பிறகு அதான் சொல்லப்படுகிறது, பிறகு இகாமத் சொல்லப்படுகிறது, லுஹர் தொழுகிறார்கள். பிறகு இகாமத் சொல்லப்படுகிறது, பிறகு அஸர் தொழுகிறார்கள், பிறகு இகாமத் சொல்லப்படுகிறது மஃரிபு தொழுகிறார்கள். பிறகு இகாமத் சொல்லப்பட்டு இஷாவை நிறைவேற்றுகிறார்கள்.

தொழுகையுடைய முக்கியத்துவத்தை பார்த்தீர்களா சகோதர்ர்களே! இன்று இந்த தொழுகையை பாழ்ப்படுத்திவிட்டு துன்யாவிற்கு பின்னால், மன ஆசைகளுக்கு பின்னால், ஆபாசங்களுக்கு பின்னால் சென்று கொண்டு, படிப்பைக் கொண்டு, கல்வியைக் கொண்டு,அதிகாரத்தைக் கொண்டு வெற்றி கிடைக்கும் என்று ஒரு முஸ்லிம் கூட்டம் நம்பி கொண்டிருந்தால் அவர்கள் முஸ்லிம்களல்ல. எனவே அவர்களைப் பற்றி கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.

தொழுகையை பாதுகாக்கக்கூடிய,இபாதத்தை பாதுகாக்கக்கூடிய ஒரு சமூகத்தை அமைத்து அல்லாஹ்விடத்தில் இம்மையிலும் மறுமையிலும் கண்ணியத்தை தேடுவோமாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ بُنْدَارٌ قَالَ حَدَّثَنَا يَحْيَى عَنْ عُبَيْدِ اللَّهِ قَالَ حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ سَبْعَةٌ يُظِلُّهُمْ اللَّهُ فِي ظِلِّهِ يَوْمَ لَا ظِلَّ إِلَّا ظِلُّهُ الْإِمَامُ الْعَادِلُ وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسَاجِدِ وَرَجُلَانِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ إِنِّي أَخَافُ اللَّهَ وَرَجُلٌ تَصَدَّقَ أَخْفَى حَتَّى لَا تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ (صحيح البخاري 620 -)

குறிப்பு 2)

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ وَابْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَعِيلَ بْنِ جَعْفَرٍ قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَعِيلُ أَخْبَرَنِي الْعَلَاءُ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَلَا أَدُلُّكُمْ عَلَى مَا يَمْحُو اللَّهُ بِهِ الْخَطَايَا وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكَارِهِ وَكَثْرَةُ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ وَانْتِظَارُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ فَذَلِكُمْ الرِّبَاطُ (صحيح مسلم 369)

குறிப்பு 3)

حَدَّثَنَا مُعَاذُ بْنُ أَسَدٍ أَخْبَرَنَا الْفَضْلُ بْنُ مُوسَى أَخْبَرَنَا الْفُضَيْلُ عَنْ أَبِي حَازِمٍ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا بَيْنَ مَنْكِبَيْ الْكَافِرِ مَسِيرَةُ ثَلَاثَةِ أَيَّامٍ للرَّاكِبِ الْمُسْرِعِ (صحيح البخاري 6069 -)

குறிப்பு 4)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ قَتَادَةَ عَنْ صَالِحٍ أَبِي الْخَلِيلِ عَنْ سَفِينَةَ عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ فِي مَرَضِهِ الَّذِي تُوُفِّيَ فِيهِ الصَّلَاةَ وَمَا مَلَكَتْ أَيْمَانُكُمْ فَمَا زَالَ يَقُولُهَا حَتَّى مَا يَفِيضُ بِهَا لِسَانُهُ (سنن ابن ماجه 1614 -)

குறிப்பு 5)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا الْفَضْلُ بْنُ دُكَيْنٍ عَنْ أَبِي الْعُمَيْسِ عَنْ عَلِيِّ بْنِ الْأَقْمَرِ عَنْ أَبِي الْأَحْوَصِ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ مَنْ سَرَّهُ أَنْ يَلْقَى اللَّهَ غَدًا مُسْلِمًا فَلْيُحَافِظْ عَلَى هَؤُلَاءِ الصَّلَوَاتِ حَيْثُ يُنَادَى بِهِنَّ فَإِنَّ اللَّهَ شَرَعَ لِنَبِيِّكُمْ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُنَنَ الْهُدَى وَإِنَّهُنَّ مِنْ سُنَنِ الْهُدَى وَلَوْ أَنَّكُمْ صَلَّيْتُمْ فِي بُيُوتِكُمْ كَمَا يُصَلِّي هَذَا الْمُتَخَلِّفُ فِي بَيْتِهِ لَتَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ وَلَوْ تَرَكْتُمْ سُنَّةَ نَبِيِّكُمْ لَضَلَلْتُمْ وَمَا مِنْ رَجُلٍ يَتَطَهَّرُ فَيُحْسِنُ الطُّهُورَ ثُمَّ يَعْمِدُ إِلَى مَسْجِدٍ مِنْ هَذِهِ الْمَسَاجِدِ إِلَّا كَتَبَ اللَّهُ لَهُ بِكُلِّ خَطْوَةٍ يَخْطُوهَا حَسَنَةً وَيَرْفَعُهُ بِهَا دَرَجَةً وَيَحُطُّ عَنْهُ بِهَا سَيِّئَةً وَلَقَدْ رَأَيْتُنَا وَمَا يَتَخَلَّفُ عَنْهَا إِلَّا مُنَافِقٌ مَعْلُومُ النِّفَاقِ وَلَقَدْ كَانَ الرَّجُلُ يُؤْتَى بِهِ يُهَادَى بَيْنَ الرَّجُلَيْنِ حَتَّى يُقَامَ فِي الصَّفِّ (صحيح مسلم 1046 -)

குறிப்பு 6)

حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ عَنْ عُقَيْلٍ عَنْ الزُّهْرِيِّ أَخْبَرَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاسْتُخْلِفَ أَبُو بَكْرٍ بَعْدَهُ وَكَفَرَ مَنْ كَفَرَ مِنْ الْعَرَبِ قَالَ عُمَرُ لِأَبِي بَكْرٍ كَيْفَ تُقَاتِلُ النَّاسَ وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَمَنْ قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ عَصَمَ مِنِّي مَالَهُ وَنَفْسَهُ إِلَّا بِحَقِّهِ وَحِسَابُهُ عَلَى اللَّهِ فَقَالَ وَاللَّهِ لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلَاةِ وَالزَّكَاةِ فَإِنَّ الزَّكَاةَ حَقُّ الْمَالِ وَاللَّهِ لَوْ مَنَعُونِي عِقَالًا كَانُوا يُؤَدُّونَهُ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهِ (صحيح البخاري 6741 –)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/