HOME      Khutba      மறுமையை மறக்காதீர் & பாவம் செய்யாதீர் | Tamil Bayan - 145   
 

மறுமையை மறக்காதீர் & பாவம் செய்யாதீர் | Tamil Bayan - 145

           

மறுமையை மறக்காதீர் & பாவம் செய்யாதீர் | Tamil Bayan - 145


மறுமையை மறக்காதீர் பாவம் செய்யாதீர்

ஜுமுஆ குத்பா தலைப்பு : மறுமையை மறக்காதீர் பாவம் செய்யாதீர்

வரிசை : 145

இடம் : எஸ்.எம்.ஜெ.பிளாஸா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 01-10-2010 | 22-10-1431

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குறிய அல்லாஹ்வின் நல்லடியார்களே!அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் பயத்தை தனிமையிலும் சபையிலும் நினைவு படுத்தியவனாக ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹுவை பயந்து கொண்டவர்கள் இம்மையிலும் வெற்றி அடைந்தார்கள், மறுமையிலும் வெற்றி அடைந்தார்கள்.

அல்லாஹு சுப்ஹானஹு தஆலா அவனுடைய புத்தகமல் குர்ஆனில் குறிப்பிடுகின்றான் :

اقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ وَهُمْ فِي غَفْلَةٍ مُعْرِضُونَ (1) مَا يَأْتِيهِمْ مِنْ ذِكْرٍ مِنْ رَبِّهِمْ مُحْدَثٍ إِلَّا اسْتَمَعُوهُ وَهُمْ يَلْعَبُونَ

மனிதர்களுக்கு அவர்களுடைய கேள்வி கணக்கு (நாள்) நெருங்கிக் கொண்டே வருகிறது; எனினும், அவர்களோ அதைப் புறக்கணித்துக் கவலை அற்றவர்களாக இருக்கின்றனர். தங்கள் இறைவனிடமிருந்து புதிதாக ஒரு நல்லுபதேசம் வரும் போதெல்லாம் அதை அவர்கள் (நம்பாது பரிகாசம் செய்து) விளையாடிக் கொண்டே கேட்கிறார்கள். (அல்குர்ஆன் 21 : 1,2)

இந்த வசனத்தை எடுத்து நமது வாழ்க்கையோடு சிந்தித்துப் பார்த்தால், இன்று நம்முடைய நிலைமை எப்படி இருக்கிறது என்பது புரியவரும்.

அல்லாஹுத ஆலா ஆயிரத்து நானூறு ஆண்டுகளுக்கு முன்பாக இந்த மார்க்கத்தை புறக்கணித்த குறைஷி காஃபிர்களைக் குறித்து இறக்கிய இந்த வசனம் தங்களை முஃமின்கள் தங்களை முஸ்லிம்கள் என்று சொல்கிற நம் சமுதாயத்தில் பலருக்கு அப்படியே பொருத்தமாக இருப்பதை பார்க்கிறோம்.

மறுமையின் நினைவில்லை, இந்த மார்க்கத்தை மறந்து, இந்த மார்க்கத்தின் சட்டங்களை அலட்சியம் செய்து, அல்லாஹ்விடம் ஒவ்வொரு நாளும் போர் செய்துக் கொண்டு, அல்லாஹ்வுடைய மார்க்கத்தை நிராகரித்தவராக வாழ்வதை பார்க்கின்றோம்.

சொல்லால் அவர்கள் நிராகரிக்கவில்லை. செயலால் அவர்கள் நிராகரித்து கொண்டிருக்கிறார்கள்.

மார்க்கத்தை ஏற்க மாட்டோம் என்று அவர்கள் சொல்லவில்லை மாறாக அவர்களுடைய செயல்கள் அதை உண்மைப்படுத்துகிறது.

தொழுகையை அவர்கள் பாழ்ப்படுத்துவது, தொழுகையை விடுவது,ஜக்காத் கொடுக்காமல் இருப்பது,நோன்பை அலட்சியம் செய்வது,ஹஜ் கடைமையாகியும் ஹஜ் செய்யாமல் இருப்பது,அல்லாஹ் தடுத்த பாவமான காரியங்களில் ஈடுபடுவது,விபச்சாரம் வட்டி மது இது போன்ற அல்லாஹ் தடுத்த கொடூர பெரும் பாவங்களில் ஈடுபடுவது.

இவை, எதை சொல்கிறது என்றால் அவர்கள் செயலால் இந்த மார்க்கத்தை மறுத்துக்கொண்டிருக்கிறார்கள். செயலால் அல்லாஹ்வின் சட்டங்களை அவர்கள் புறக்கணித்து கொண்டிருக்கிறார்கள். மறுமையை அவர்கள் நம்பவில்லை என்பதை அது காண்பிக்கிறது.

மறுமையை நம்பிய முஃமின்கள் பற்றி முஸ்லிம்கள் பற்றி அல்லாஹ் சொல்கிறான்:

وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ

இன்னும், அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டாலும் அல்லது தங்களுக்குத் தாங்களே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அல்லாஹ்வை நினைத்து (அவனிடமே) தங்கள் பாவமன்னிப்பைத் தேடுவார்கள். (அல்லாஹ்வும் அவர்களை மன்னித்து விடுவான்.) அல்லாஹ்வைத் தவிர (இவர்களின்) குற்றங்களை மன்னிப்பவன் யார்? அவர்கள் செய்த (தவறான) காரியத்தை (தவறென்று) அவர்கள் அறிந்து கொண்டால் அதில் நிலைத்திருக்கவும் மாட்டார்கள். (உடனே அதில் இருந்து விலகி விடுவார்கள்.) (அல்குர்ஆன் 3 : 135)

வசனத்தின் கருத்து : மறுமையின் நம்பிக்கை இருக்கிறது என்பதற்கு அடையாளம், ஒரு முஃமின் முதலாவதாக பெரும் பாவத்திலிருந்து விலகி இருப்பான். பெரும் பாவங்களை விட்டு ஓடோடி இருப்பான்.

அசிங்கமான ஆபாசமான அனாச்சாரங்களை விட்டு, மானக்கேடான அருவருக்கத்தக்க காரியங்களை விட்டு, தன் பார்வையை தன் செவியை தன் உள்ளத்தை தன் வாழ்கையை பேணிக் கொண்டிருப்பான்.

அல்லாஹ்வை மறக்கடிக்கக் கூடிய செயல்களில், ஈமானில் கறை படியக்கூடிய செயல்களில், அல்லாஹ்வின் அன்பில் அல்லாஹ்வின் அச்சத்தில் பங்கம் ஏற்படுத்தக் கூடிய செயல்களில் அவன் விழுந்து விட மாட்டான். பயந்து கொண்டு இருப்பான். அதை விட்டு ஓடிக் கொண்டிருப்பான்.

இன்று நம் நிலைமை, உடலுக்கு ஒரு நோய் என்றால் அதில் நாம் அக்கறை செலுத்துகிறோம். பேணிக்கையாக இருக்கிறோம். உடல்களில் ஏதாவது ஒரு ஆபத்து வருகிறது என்று சொன்னால் நோய் பரவுகிறது என்று சொன்னால் அவ்வளவு கண்ணும் கருத்துமாக இருக்கிறோம்.

ஆனால், அல்லாஹ் பாதுகாக்க கொடுத்த இந்த ஆன்மாவை படுகுழியில் தள்ளிக் கொண்டு இருக்கிறான் மனிதன்.

وَقَدْ خَابَ مَنْ دَسَّاهَا

இந்த ஆன்மாவை படுகுழியில் போட்டவன் நாசம் அடைந்து விட்டான். (அல்குர்ஆன் 91 : 10)

இந்த ஆன்மாவை கறைகளை விட்டு சுத்தப்படுத்துவதில் அக்கறை இல்லை. இந்த உடலுக்காக அன்றாடம் குளிக்கிறான்; ஆடைகளை துவைத்து சுத்தம் செய்கிறான்; ஆனால், அவனுடைய உள்ளமோ துர்நாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது.

அல்லாஹ்வின் கோபத்தில் உலண்டுக் கொண்டிருக்கிறது. பாவம் என்ற அசிங்கத்தில் சாக்கடையில் மூழ்கி கொண்டிருக்கிறது. அல்லாஹ் பாதுகாப்பானாக!

இந்த முஃமின்கள் பற்றி அல்லாஹ் சொல்கின்றான் :

அவர்கள் பாவமான ஒரு அசிங்கமான செயலை செய்து விட்டால், தங்களுக்கு தாங்களே ஒரு தீங்கு செய்து கொண்டால் அல்லாஹ்விடம் மன்னிப்பு தேடுவார்கள்.

யார் ஒருவன் தீமை செய்கிறானோ, அவன் அந்த தீமை மூலமாக தனக்கு தானே தீமை செய்துகொண்டான். அல்லாஹ்விற்கு அல்ல.

ஒருவருடைய பாவம் அல்லாஹ்விற்கு எந்த நஷ்டத்தையும் ஏற்படுத்தாது. அல்லாஹ்விற்கு எந்த குறையும் ஏற்படுத்தாது, அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு எந்த குறையும் ஏற்படுத்தாது.

ஒருவன் பாவம் செய்கிறான் என்றால் அந்த பாவத்தால் அவன் தனக்கு தானே தீங்கு இழைத்து கொண்டான். தன்னை நரகத்தில் அவன் தள்ளிக் கொண்டான்.

அல்லாஹ் கூறுகின்றான் :

அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தினால் அந்த நன்றியை அல்லாஹ் பொருந்திக் கொள்வான். நீங்கள் அல்லாஹ்வை நிராகரித்தால் அந்த நிராகரிப்பை அல்லாஹ் பொருந்திக் கொள்ள மாட்டான்.

يَا أَيُّهَا النَّاسُ أَنْتُمُ الْفُقَرَاءُ إِلَى اللَّهِ وَاللَّهُ هُوَ الْغَنِيُّ الْحَمِيدُ

மனிதர்களே! நீங்கள் அனைவரும் (எந்நேரத்திலும்) அல்லாஹ்வுடைய உதவி தேவைப்பட்டவர்களாகவே இருக்கிறீர்கள். அல்லாஹ்வோ  முற்றிலும் தேவையற்றவன், புகழுக்குரியவன் ஆவான்.(அல்குர்ஆன்35 : 15)

அல்லாஹ்விற்கு எந்த தேவையும் இல்லை. இவன் வணங்க வேண்டும், இவன் நோன்பு வைக்க வேண்டும், இவன் தொழ வேண்டும் என்ற தேவையை விட்டு அல்லாஹ் அப்பாற்பட்டவன்.

நாம் அவனை வணங்கவில்லை என்றால் என்ன? வானத்தில் உள்ள கோடி வானவர்கள் வணங்கிக் கொண்டு இருக்கிறார்கள். லட்சம் பறவைகள் வணங்கி கொண்டிருக்கின்றன, அவனை துதித்துக் கொண்டிருக்கின்றன.

அல்லாஹ் சொல்கின்றான் :

تُسَبِّحُ لَهُ السَّمَاوَاتُ السَّبْعُ وَالْأَرْضُ وَمَنْ فِيهِنَّ وَإِنْ مِنْ شَيْءٍ إِلَّا يُسَبِّحُ بِحَمْدِهِ وَلَكِنْ لَا تَفْقَهُونَ تَسْبِيحَهُمْ إِنَّهُ كَانَ حَلِيمًا غَفُورًا

ஏழு வானங்களும் பூமியும் இவற்றிலுள்ள அனைத்தும் அவனைப் புகழ்ந்து கொண்டே இருக்கின்றன. (இவற்றில்) ஒன்றுமே அவனைத் துதி செய்து புகழாதிருக்க வில்லை. எனினும், அவை துதி செய்து புகழ்வதை நீங்கள் அறிந்து கொள்வதில்லை. நிச்சயமாக அவன் பொறுமையுடையவனாக, மன்னிப்புடையவனாக இருக்கிறான். (அல்குர்ஆன்17 : 44)

ஆகவே,ஒரு மனிதன் பாவம் செய்கிறான் என்றால், அல்லாஹ்விற்கு மாறு செய்கிறான் என்றால், மார்க்கத்தை மீருகிறான் என்றால், இதனுடைய தீமையை இவன் அனுபவிப்பான். இதனுடைய தீமையை அவன் சந்திப்பான்.

فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ (7) وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ

ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதையும் கண்டுகொள்வார். (அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதையும் அவன் (அங்கு) கண்டு கொள்வான். (அல்குர்ஆன் 99 : 7,8)

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அந்த மறுமையின் காட்சியை குறித்து சொல்கிறான் :

وَكُلَّ إِنْسَانٍ أَلْزَمْنَاهُ طَائِرَهُ فِي عُنُقِهِ وَنُخْرِجُ لَهُ يَوْمَ الْقِيَامَةِ كِتَابًا يَلْقَاهُ مَنْشُورًا

ஒவ்வொரு மனிதனின் (செயலைப் பற்றிய விரிவான தினசரிக்) குறிப்பை அவனுடைய கழுத்தில் மாட்டியிருக்கிறோம். மறுமை நாளில் அதை அவனுக்கு ஒரு புத்தகமாக எடுத்துக் கொடுப்போம். அவன் அதை விரிக்கப்பட்டதாகப் பார்ப்பான். (அல்குர்ஆன்17 : 13)

மேலும், அல்லாஹ் கூறுகிறான் :

وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ (10) كِرَامًا كَاتِبِينَ (11) يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ

நிச்சயமாக உங்கள் மீது காவலாளர்கள் ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றனர். அவர்கள் (வானவர்களில் உள்ள) கண்ணியமான எழுத்தாளர்கள். நீங்கள் செய்பவற்றையெல்லாம் அவர்கள் (தவறாது) அறிந்து (எழுதிக்) கொள்வார்கள். (அல்குர்ஆன் 82 : 12)

எப்படி பட்ட புத்தகம் இது!நாளை மறுமையில் இந்த அடியான் வரும் பொழுது அல்லாஹ் கூறுவான் :

மனிதனே! உன் புத்தகத்தை நீ படி. இதில் எழுதப்பட்டு இருப்பதை படி. உன்னை விசாரிப்பதற்க்கு நீயே போதுமானவன். வேறு யாரும் தேவை இல்லை.

மனிதன் படிப்பான் படிப்பான். மேலும், அவன் கூறுவான்:

وَوُضِعَ الْكِتَابُ فَتَرَى الْمُجْرِمِينَ مُشْفِقِينَ مِمَّا فِيهِ وَيَقُولُونَ يَا وَيْلَتَنَا مَالِ هَذَا الْكِتَابِ لَا يُغَادِرُ صَغِيرَةً وَلَا كَبِيرَةً إِلَّا أَحْصَاهَا وَوَجَدُوا مَا عَمِلُوا حَاضِرًا وَلَا يَظْلِمُ رَبُّكَ أَحَدًا

(நபியே அவர்களுடைய செயல்கள் எழுதப்பட்ட தினசரிக் குறிப்புப்) புத்தகம் அவர்கள் முன் வைக்கப்பட்டால் குற்றவாளிகள் (தாங்கள் செய்த பாவங்கள் அனைத்தும் அதில் இருப்பதைக் கண்டு) பயந்து ‘‘எங்கள் கேடே! இதென்ன புத்தகம்! (எங்கள் பாவங்கள்) சிறிதோ பெரிதோ ஒன்றையும்விடாது இதில் எழுதப்பட்டிருக்கின்றதே'' என்று அவர்கள் (புலம்பிக்) கூறுவதை நீர் காண்பீர். (நன்மையோ தீமையோ) அவர்கள் செய்த அனைத்தும் (அதில்) இருக்கக் காண்பார்கள். உமது இறைவன் எவனுக்கும் (அவனுடைய தண்டனையைக் கூட்டியோ, நன்மையைக் குறைத்தோ) அநியாயம் செய்யமாட்டான். (அல்குர்ஆன் 18 : 49)

மறுமையின் அடையாளங்களில் எத்தனை அடையளங்களை நாம் சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: மறுமை அடையாளங்களில் ஒரு பெரிய அடையாளம், இறுதி இறைத் தூதர் வருவது.

அவர்களும் வந்து சென்று விட்டார்கள். இப்படி அல்லாஹ்வின் எச்சரிக்கை ஒன்று ஒன்றாக வந்து கொண்டு இருக்கின்றன.

இன்னும் எத்தனை அடையாளங்களை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்களோ அந்த அடையாளங்களை கண்கூடாக, பட்ட பகலில் சூரியனை பார்ப்பதை போன்று பார்த்து கொண்டு இருக்கின்றோம்.

இதற்கெல்லாம் மேலாக நம்முடைய மெளத்தை நாம் மறக்க முடியுமா?நம்முடைய மரணத்யை விட்டு நம்மை நாம் பாதுகாக்க முடியுமா?

ஒருவன் மரணித்து விட்டால் அவனுடைய கியாமத் அவனுக்கு ஏற்பட்டு விடுகிறது. ஒரு மனிதன் மரணிக்கிறான் என்றால் அவனுடைய மறுமை வந்துவிடுகிறது. அவனுடைய கப்ருக்கு உள்ளே அவனுடைய விசாரணையை சந்திக்க போகிறான்.

நல்லவர்களை பற்றிப் பார்க்கிறோம். ஒரு வீட்டில் மௌத் ஏற்பட்டு விட்டால் அவர்கள் கவலை உள்ளவர்களாக இருப்பார்கள்.

இவர் சொர்க்கத்துக்கு அனுப்பப்படுவாரா? இல்லை நரகத்திற்கு அனுப்பப்படுவாரா? இவருடைய விசாரணையில் இவர் என்ன பதில் சொல்வார்? என்ற கவலையில் நாங்கள் சிக்கி இருக்கிறோம் என்று நல்லவர்கள் கூறுவார்கள்.

நாம், அவருடைய மரணத்தில் அவரது இழப்பை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

வசனத்தின் கருத்து தொடர் :

அல்லாஹு முஃமின்களைப் பார்த்து சொல்கின்றான் :

முஃமின்கள் பாவங்களை விட்டு தூரமாக இருப்பார்கள். ஒரு நிர்பந்தத்தில் ஒரு  இச்சையால் தூண்டப்பட்டு அவன் பாவம் செய்யும்படி நேர்ந்து விட்டால் உடனடியாக அல்லாஹ்வின் நினைவு அவர்களுக்கு வந்துவிடும். அல்லாஹ்வை நினைத்து விடுவார்கள். தாங்கள் செய்த பாவத்திற்காக உடனே அல்லாஹ்விடத்தில் மன்னிப்புக் கேட்பார்கள். மேலும், தாங்கள் செய்தது பாவம் என்று தெரிந்த பிறகு அந்த பாவத்தை அவர்கள் தொடர மாட்டார்கள். (அல்குர்ஆன் 3 : 135)

இந்த வசனத்தில் நாம் படிக்க வேண்டிய படிப்பினைகளில் ஒன்று, ஒரு முஃமின் பாவத்தை விட்டு மானக்கேடான காரியத்தை விட்டு தூரமாக இருக்க வேண்டும்.

மாற்றமாக, ஒரு சூழ்நிலையில் இவன் பாவத்தில் வீழ்ந்து விட்டால் உடனே அல்லாஹ்வின் நினைவு வர வேண்டும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் ஒரு நபித் தோழர் கேட்கிறார்;

யா ரசூலுல்லாஹ்! ஈமான் இருக்கிறது என்பதற்கு என்ன அடையாளம்?

(ஈமான் உடைய கவலை உள்ளவர்களுக்கு தான் இந்த நினைவு வரும். உமர் (ரலி) அவர்கள், ஹுதைஃபாவை அழைத்து, ஹுதைஃபா நான் முஃமினா? இல்லை முனாஃபிக்கா? உனக்கு ரசூலுல்லாஹ் கொடுத்த பட்டியலில் எனது பெயர் இருக்கிறதா?  என்று எனக்கு அறிவிப்பீராக! என்று கேட்பார்கள்.

மார்க்க அறிஞர்கள் எழுதுகிறார்கள்; யாருக்கு உள்ளத்தில் ஈமான் இருக்குமோ அவர்தான் தன் உள்ளத்தில் நயவஞ்சக தன்மை கலந்து விடக்கூடாது என்று பயந்து கொண்டிருப்பார்கள்.

நம் முன்னோர்கள் கூறுவார்கள் :

ما خافه إلا مؤمن ولا أمنه إلا منافق

முஃமின் தான் நிஃபாக்கை பயப்படுவார். யார் இதை விட்டு பயமற்று இருக்கிறான் என்றால் அவன் முனாஃபிக் ஆகத்தான் இருப்பான்.

ஈமானுடைய பயம் இந்த மறுமையின் பயம். ஏனென்றால் இந்த ஈமானுடைய பயம் இல்லை என்றால் மறுமையில் அத்தனை அமல்களும் வீணாகி விடும்.

சஹாபாக்கள் கேட்கிறார்கள், அவர்களுடைய கேள்விகளை எல்லாம் பார்த்தால் இப்படித்தான் இருக்கும். அனைத்தும் மறுமையை சார்ந்ததாக இருக்கும்.

மறுமைக்காக வாழ்தவர்கள், சொர்க்கத்தை நாடி வாழ்ந்தவர்கள், அல்லாஹ்விற்காக வாழ்ந்தவர்கள் கேட்ட கேள்விகள் எல்லாம் அல்லாஹ்வின் அச்சத்தை குறித்துதான்.)

ஹதீஸின் தொடர் : சஹாபாக்கள் கேட்கிறார்கள்; என்னுடைய உள்ளத்தில் ஈமான் இருக்கிறதா,இல்லையா என்று நாங்கள் எப்படி அறிந்து கொள்வது?

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் :

إِذَا سَرَّتْكَ حَسَنَتُكَ وَسَاءَتْكَ سَيِّئَتُكَ فَأَنْتَ مُؤْمِنٌ

நீ நன்மை செய்யும் போது அது உனக்கு மனதில் மகிழ்ச்சியை கொடுத்தால்,நீ ஏதாவது ஒரு பாவம் செய்தால் அது உனக்கு வருத்தத்தை கொடுத்தால் நீ முஃமின் என்பதை தெரிந்து கொள்.

அறிவிப்பாளர் : அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 21145.

அல்லாஹ்,தொழுவதற்கு,தர்மம் செய்வதற்கு,அல்லாஹ்வின் பாதையில் செலவு செய்வதற்கு வாய்ப்புக் கொடுத்தானா? அல்ஹம்துலில்லாஹ்!

இப்படிபட்ட பாக்கியத்தை எனக்குக் கொடுத்தாயே! இது போதும்.இந்த திருப்தி இருக்க வேண்டும். இல்லை என்று சொன்னால் அவன் அந்த அமலை சடங்காக செய்கிறான்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இதைதான் சொன்னார்கள்.

ஒரு முஃமின் அல்லாஹ்வை நினைக்க வேண்டும், நடுங்க வேண்டும். பாவம் செய்து பயப்பட வேண்டும்.

பயங்கரமான வனவிலங்குகளுக்கு மத்தியில் ஒருவன் மாட்டிக்கொண்டால் எப்படி பயம் வருமோ அது போன்று.

மூஸா (அலை) பாம்பை பார்த்து பயந்தார்கள். யாரும் சொல்ல முடியாது நான் பயப்பட மாட்டேன் என்று. நிச்சயமாக அந்த பயம் வரும். அப்படிதான் அல்லாஹ் படைத்துதான் வைத்திருக்கிறான் .

அதை விட பயங்கரமானது, ஒருவன் பாவத்தில் விழுவது. கொடூர மிருகங்கள் கடித்துக் குதறுவதை விட பாவமானது ஷைத்தானுடைய வலையில் சிக்கி பாவத்தில் விழுவது.

அந்த பாவத்தை கொண்டு கொஞ்ச காலம் மனிதன் சுகம் பெறலாம். இன்பத்தை அடையலாம். ஆனால், இதனுடைய முடிவு, நாளை மறுமையில் மிகப்பெரிய கைசேதம். மிகப் பெரிய துக்கம் .

உதாரணத்திற்கு, முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிஃராஜ் உடைய ஹதீஸில் சொல்கிறார்கள். மறுமையின் நீண்ட பயணத்தின் காட்சியை விவரிக்கிறார்கள்.

ஒரு இடத்தில், வாய் குறுகலாக வயிறு பெருத்த ஒரு பெரிய அடுப்பில் மக்கள் நிர்வாணமாக எரிந்து கொண்டிருக்கிறார்கள். ஆண்களும் பெண்களுமாக நிர்வாணமாக எரிந்து கொண்டிருக்கிறார்கள்.

(ரொட்டி சுடுகின்ற அந்த அடுப்பை நீங்கள் பார்க்கலாம். வாய் சின்னதாக இருக்கும், அதனுடைய வயிறு பெரியதாக இருக்கும். பூமியில் புதைத்து வைத்திருப்பார்கள். அந்த தன்னூர் அடுப்பில் ஆண்களும் பெண்களும் நிர்வாணமாக எரிந்து கொண்டிருக்கிறார்கள்.)

இந்த காட்சி ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு காட்டப்படுகிறது.

நெருப்பின் வேகம் அதிகரிக்க அதிகரிக்க அந்த ஜுவாலையால் அவர்கள் அப்படியே மேல் தூக்கி வரப்படுகிறார்கள். பிறகு, அல்லாஹ் அந்த நெருப்பிற்கு அணையும்படி கட்டளையிடும் போது அவர்கள் மீண்டும் கீழே செல்கிறார்கள்.

மீண்டும் எரிக்கப்படுகிறது. இப்படியாக அந்த நரக நெருப்பில் வேதனை செய்யப்படுவதை பார்த்த ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்கிறார்கள், தன்னை அழைத்து சென்ற அந்த வானவர்களை பார்த்து. வானவர்களே இவர்கள் யார்? என்று.

நினைத்துப் பாருங்கள்; இது சாதாரண வேதனையா? சிந்தித்துப் பார்க்க முடியுமா? தனிமையில் உட்கார்ந்து நினைத்து பாருங்கள்.

ஒரு நெருப்பு குண்டத்தில் ஒரு மனிதன் உயிரோடு அப்படியே எரிக்கப்படுகிறான். அந்த எரித்தல் ஒரு நாளோடு ஒரு மணி நேரத்தில் முடிவதில்லை. மாறாக, முடிவில்லாத காலம் தொடரப்படும் என்றால் அந்த வேதனை எப்படி இருக்கும்? அந்த காட்சி எப்படி இருக்கும்!?

மறுமையின் நெருப்பு பற்றி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் :

நீங்கள் எரிக்கின்ற இந்த நெருப்பை விட அறுபத்தி ஒன்பது மடங்கு அதனுடைய உஷ்ணம் இருக்கும். எழுபது ஆயிரம் ஆண்டுகள் எரிக்கப்பட்டன, அந்த நெருப்பு சிவப்பு நிறமாக ஆனது.

பிறகு எழுபது ஆயிரம் ஆண்டுகள் எரிக்கப்பட்டன, மஞ்சள் நிறமாக மாறியது. பிறகு எழுபது ஆயிரம் ஆண்டுகள் எரிக்கப்பட்டன, கருப்பு நிறமாக மாறியது. இப்போது அது கருப்பு நிறத்தில் இருக்கிறது.

அந்த நெருப்பு குண்டத்தில் ஒரு மனிதன் முடிவில்லாத காலம் வரை எரிக்கப்படுவான்.

அல்லாஹ் சொல்கிறான் :

لَا تُبْقِي وَلَا تَذَرُ

வெளியே வரவும் முடியாது, உள்ளே இருக்கவும் முடியாது. (அல்குர்ஆன் 74 : 28)

அந்த கொடுமையை நினைத்துப் பாருங்கள்; எப்படி இருக்கும் அந்த காட்சி!

ஹதீஸின் தொடர் : இவர்கள் யார்? இந்த தன்னூர் அடுப்பில் இப்படி பொசுக்க பட்டுக்கொண்டிருக்கிற மக்கள் யார்?

அந்த அடுப்பை பார்த்த நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், இந்த கேவலமான நிர்வாணமாக காட்சியை பார்த்து, ஜிப்ரீலிடம் கேட்கிறார்கள்; இவர்கள் யார் என்று?

இவர்கள் தான் விபச்சாரத்தில் ஈடுபட்ட ஆண்கள் பெண்கள். இவர்கள் தான் இப்படி வேதனை செய்யப்படுகிறார்கள் என்று பதில் கூறுகிறார்கள்.

அறிவிப்பாளர் : சமுரா இப்னு ஜுன்துப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1297.

இன்று பரவி வருகின்ற அல்லது முற்றிலுமாக பரவி விஷம் ஏறி இதனுடைய நிலைமை முத்தி விட்ட இந்த சினிமா சீரியல்கள் இந்த கலாச்சாரத்தின் உச்சநிலை என்ன?

அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் சபித்த கோபித்த விபச்சாரத்தை தவிர,அதற்கு பின்னால் என்ன இருக்கிறது.

அற்ப இன்பங்கள்,ஆடல் பாடல்களில் தன்னுடைய அற்ப வாழ்க்கையை கழித்து, அதை ரசித்தவர்கள், அந்த இன்பத்தை தேடியவர்கள், நாளை மறுமையில் அனுபவிக்கக் கூடிய வேதனை என்ன!

இந்த உலகத்தில் அவற்றை பார்க்கும் போது, அவற்றை கேட்கும் போது, அங்கே செல்லும்போது மனிதனுக்கு ஒரு உற்சாகம் வருகிறது. பள்ளிக்கு வருவதில் அலட்சியம், வணக்க வழிபாடுகளில் அலட்சியம்.

ஆனால், அந்த பாவங்களை வாங்கும் போதோ, அவற்றிற்கு செலவு செய்யும் போதோ மனதில் எந்த விதமான சலனமும் மனதில் எந்த விதமான பயமும் வருவதில்லை.

நாம் இன்னும் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். அல்லாஹ் கூறுகின்றான்

إِنَّ الَّذِينَ يُحِبُّونَ أَنْ تَشِيعَ الْفَاحِشَةُ فِي الَّذِينَ آمَنُوا لَهُمْ عَذَابٌ أَلِيمٌ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ وَاللَّهُ يَعْلَمُ وَأَنْتُمْ لَا تَعْلَمُونَ

எவர்கள் (இதற்குப் பின்னரும்) நம்பிக்கையாளர்களுக்கு இடையில் மானக்கேடான செயல்கள் பரவுவதை விரும்புகிறார்களோ அவர்களுக்கு நிச்சயமாக இம்மையிலும் மறுமையிலும் மிக்க துன்புறுத்தும் வேதனையுண்டு. (அதனால் ஏற்படும் தீங்குகளை) அல்லாஹ்தான் நன்கறிவான்; நீங்கள் அறிய மாட்டீர்கள். (அல்குர்ஆன் 24 : 19)

கேவலம், இரத்த கண்ணீர் வடிக்க வேண்டிய நிலை என்னவென்றால், இன்றைய பெயர் தாங்கி முஸ்லிம்கள், தங்களை முஸ்லிம் சமூகத்தில் ஒருவன் என்று சொல்பவர்கள், இந்த சினிமா சம்பந்தப்பட்ட சீடிகளை விற்கிறார்கள். இதை தொழிலாக கொண்டிருக்கிறார்கள். இதை கொண்டு வருவாய் ஈட்டுகிறார்கள்.

இவர்கள் அல்லாஹ்வை பயப்பட வேண்டாமா?! யார் இந்த பாவங்களுக்கு காரணமாகிறார்களோ அவர்கள் அந்த பாவத்திற்கு துணை போனவர்கள் ஆவர்.

யார் இதை விரும்புகிறார்களோ அவர்களுக்கு பயங்கரமான தண்டனை இருக்கிறது என்று அல்லாஹ் சொல்கின்றான்.

காஃபிர்கள், மறுமையை நம்பாதவர்கள், தாயுக்கும் மகனுக்கும் வித்தியாசம் தெரியாதவர்கள், பாவங்களையே வாழ்க்கையாக கொண்டவர்கள், அவர்களுடைய வியாபாரத்தை முஸ்லிம் செய்கிறார்கள் என்றால், இதை பார்ப்பதே பயங்கரமான பாவம் என்றால், இதையே ஒருவன் தொழிலாக செய்கிறான் என்றால் அது எவ்வளவு பெரிய பயங்கரமான கொடுமையான பாவமாக இருக்கிறது.

இது எதை காட்டுகிறது? ஒன்று, அவன் மறுமை விஷயத்தில் செத்த ஜனசாவாக ஆகிவிட்டான்,இந்த மார்க்கத்தை அலச்சியம் செய்து விட்டான்,அல்லாஹ்வை நிராகரிக்கும் நிலமைக்கு ஆளாகி விட்டான்.

இந்த சமுதாயத்தில் உள்ள அறிஞர்களும் தலைவர்களும், இந்த சமுதாயத்தில் பொறுப்பு வகிப்பவர்களும், சமூதாய விஷயத்தில் அக்கறை இல்லாமல் இருக்கிறார்கள்.

ஒரு பெரும், இப்படி கண்ணுக்கு எதிராக பகிரங்கமாக செய்யப்படும் அந்த தவறை தடுக்க இந்த சமூதாயதிற்கு வக்கு இல்லை என்றால், இந்த சமுதாயத்திற்கு திறன் இல்லை என்றால், இந்த சமூதாயதிற்கு ஏன் ஆலிம்கள்? இந்த சமுதாயத்திற்கு ஏன் தலைவர்கள்? இந்த சமுதாயத்திற்கு ஏன் ஜமாத்கள்?

அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள். இஸ்ரவேலர்கள் ஏன் சபிக்கப்பட்டவர்கள் தெரியுமா? அவர்களில் ஒருவன் பாவம் செய்தால், முதல்நாள் சொல்வார்கள்; செய்யாதே என்று.

இரண்டாம் நாள் வருவார்கள். அவனோடு உட்கார்ந்து சாப்பிடுவார்கள். அவனோடு உட்கார்ந்து குடிப்பார்கள்.

ذَلِكَ ضَرَبَ اللَّهُ قُلُوبَ بَعْضِهِمْ بِبَعْضٍ

அல்லாஹ் சிலருடைய உள்ளங்களை சிலருடைய உள்ளங்களோடு அப்படியே சாட்டிவிட்டான்.

அதாவது, பாவிகளுடைய உள்ளங்களை போன்று நல்லவர்களின் உள்ளங்களையும் அல்லாஹ் அப்படி ஆக்கிவிட்டான்.

பிறகு நபிமார்களின் நாவின் மூலம் அவர்கள் சபிக்கப்பட்டார்கள். குரங்குகளாகவும் பன்றிகளாகவும் ஆக்கப்பட்டார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 3774.

தீமையை தடுக்க முடியவில்லை,தடுத்தால் இவன் பிரச்சனைவாதி என்று சொல்கிறார்கள்.

சமுதாயத்தில், கண்டும் காணாமல், சமுதாயத்தில் மூழ்கிவிட்ட பெரும் பாவங்களை கலையாமல் தன்னுடைய வழிபாடு தன்னுடைய வணக்கம் என்று செல்பவர்களை பார்த்து, இவர் ரொம்ப நல்லவர், எந்த வம்புக்கும் செல்லமாட்டார் என்று போற்றிப் புகழ்வார்கள்.

நன்மையை ஏவி தீமையை தடுப்பவர்களை, இவர்களால் சமுதாயத்திற்கு பிரச்சினை என்று சொல்வார்கள்.

எது பிரச்சனை? ஒரு முஸ்லிம் பாவம் செய்யும்போது, அந்தப் பாவத்தில் அவனை விடுவதற்கா இந்த இஸ்லாமிய மார்க்கம்?

அல்லாஹ் கூறுகிறான் :

كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ

 (நம்பிக்கையாளர்களே!) நீங்கள்தான், மனிதர்களில் தோன்றிய வகுப்பார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள். (ஏனென்றால்,) நீங்கள் (மனிதர்களை நன்மையான) காரியங்களை(ச் செய்யும்படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி, மெய்யாகவே அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்கிறீர்கள். (அல்குர்ஆன் 3 : 110)

நன்மையை ஏவி தீமையை தடுக்க முடியவில்லை என்றால், இந்த சமுதாயம் சிறந்த சமுதாயமாக இருக்க முடியாது.

எப்படிப்பட்ட ஒரு கேவலமான நிலை! இது நாளுக்கு நாள் பெருகிக் கொண்டே இருக்கிறது.

நம்முடைய சில சிறந்த அறிஞர்கள் சொன்னார்கள்: நீங்கள் ஒரு காலம் இந்த சினிமா சீரியல் கலாச்சாரங்களை விட்டு இந்த அசிங்கங்களை விட்டு இந்த சமுதாயங்களை நீங்கள் தடுக்கவில்லை என்றால், இதைப் பார்ப்பதை கேட்பதை விட்டும் இந்த சமூகத்தை நீங்கள் தடுக்கவில்லை என்றால், அடுத்து என்ன நிலைமை வரும் தெரியுமா?

அடுத்து ஒரு காலம் வரும். அந்த காலத்தில் இவர்களே இதை செய்ய ஆரம்பித்துவிடுவார்கள்.

எத்தனை முஸ்லிம் வாலிபர்கள், எத்தனை முஸ்லிம் பெண்கள் அவர்களையும் இந்த சமுதாயம் அங்கீகரிக்கிறது.இன்று, அவர்கள் அந்த தொழிலில் செல்லக்கூடியவர்களாக இருக்கிறார்கள்.

இதில் கேவலம் என்ன என்றால், இப்படிப்பட்ட அசிங்கமான அனாச்சாரங்களை பரப்ப கூடியவர்களை இந்த சமுதாயத்தில் உள்ளவர்கள் தங்களுக்கு மத்தியில் கொண்டுவந்து நிறுத்துகிறார்கள். அவர்களை தங்களுடைய சபையில் கொண்டுவந்து வைக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்த்து சொல்கிறார்கள். அவர்களை இந்த சமுதாயத்தில் சிறந்தவர்கள் என்று சொல்கிறார்கள்.

எங்கே ஈமான் செல்கின்றது. இஸ்லாம் இயக்கம் என்று சொல்பவர்கள் இவர்களை உயர்த்துகிறார்கள்.

இந்த மஸ்ஜிதில் மார்க்க அறிஞர்களும் இந்த சமுதாயத்திற்கு உழைத்தவர்களையும் சங்கைபடுத்தப்பட வேண்டிய இடங்களில், யார் கண்ணியப்படுத்தபடுகிறார்கள்? யாருடைய ஹராமான சொத்துக்களின் மூலமாகஇவர்கள் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்களோ அவர்கள்தான். அல்லாஹ் பாதுகாப்பானாக!

மறுமை என்ற நம்பிக்கை இல்லை என்றால் இந்த உலகத்தில் எந்த அமலும் இல்லை. நான் செய்கின்ற செயலுக்கு நான் பேசுகின்ற பேச்சுக்கு நாளை மறுமையில் அல்லாஹ்விற்கு பதில் கொடுத்தாக வேண்டும்.

مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ

 (மனிதன்) எதைக் கூறியபோதிலும் அதை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. (அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகிறது.) (அல்குர்ஆன் 50 : 18)

பேசுகின்ற பேச்சுகளை கூட என்ன பேசினான்? புறம் பேசுகிறான், குறை பேசுகிறான், குத்தி பேசுகிறான், பிறருடைய உள்ளத்தை காயப் படுத்துகிறான், ஒரு முஃமினுடைய கண்ணியத்தை பாழ்படுத்துகிறான், இவை அனைத்தையும் வானவர்கள் பதிந்து கொண்டிருக்கிறார்கள்.

லுக்மான் அலைஹிஸ்ஸலாம் தன்னுடைய மகனுக்கு சொல்கிறார்கள்:

يَا بُنَيَّ إِنَّهَا إِنْ تَكُ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ فَتَكُنْ فِي صَخْرَةٍ أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ فِي الْأَرْضِ يَأْتِ بِهَا اللَّهُ إِنَّ اللَّهَ لَطِيفٌ خَبِيرٌ

(மேலும், லுக்மான் தனது மகனை நோக்கி) ‘‘என் அருமை மகனே! (நன்மையோ தீமையோ) அது ஒரு கடுகின் விதை அளவில் இருந்தாலும் சரி, அது (கரும்) பாறைகளுக்குள்ளோ அல்லது வானத்திலோ, பூமியின் ஆழத்திலோ (மறைந்து) இருந்தபோதிலும் (உங்களிடம் கணக்குக் கேட்கும் போது) நிச்சயமாக அல்லாஹ் அதையும் கொண்டு வந்து விடுவான். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் வெகு நுட்பமான அறிவுடையவனும் (அனைத்தையும்) நன்கு தெரிந்து வைத்திருப்பவனும் ஆவான். (அல்குர்ஆன் 31 : 16)

எதுவரை இந்த மறுமையை இந்த முஃமின் உறுதியாக எடுத்துக்கொள்ளமாட்டானோ, அவனுடைய பாதையில் மறுமையை முன்வைத்து நடக்க மாட்டானோ, இஸ்லாமிய மார்க்கத்தை அவனால் பின்பற்ற முடியாது.

யார் அல்லாஹ்வுடைய சட்டங்களை பேணுவார்கள், யார் இந்த ஷரீஅத்தை மதிப்பார்கள், யார் இந்த ஷரீஅத்தை புனிதப் படுத்துவார்கள் என்றால், யாருடைய கண்ணீருக்கு முன்னால் மறுமை நிற்குமோ, யாருக்கு முன்னால் அந்த கப்ருடைய வாழ்க்கை இருக்குமோ, யாருக்கு அல்லாஹ்விற்கு முன்னால் நிற்கப்படுவோம் என்று பயம் இருக்குமோ அவர்கள் தான் இந்த தீனை பின்பற்ற முடியும்.

அத்தகைய ஒரு சமுதாயத்தை உருவாக்குவதை நோக்கி நம்முடைய வாழ்க்கையை ஆக்குவோமாக! நல்ல உள்ளங்களாக நம்முடைய உள்ளங்களை மாற்றுவதற்கு அல்லாஹ்விடத்தில் பிரார்த்திப்போமாக!

அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னித்து நம்முடைய குறைகளை நீக்கி நல்லவர்களில் அல்லாஹ் ஆக்கி அருள் புரிவானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/