HOME      Khutba      பெற்றோரை பேணுவோம் | Tamil Bayan - 116   
 

பெற்றோரை பேணுவோம் | Tamil Bayan - 116

           

பெற்றோரை பேணுவோம் | Tamil Bayan - 116


பெற்றோரை பேணுவோம்

ஜுமுஆ குத்பா தலைப்பு : பெற்றோரை பேணுவோம்

வரிசை : 116

இடம் : எஸ்.எம்.ஜெ.பிளாஸா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய பெரியோர்களே, சகோதரர்களே!அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் நினைவுபடுத்தியவனாக அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு, அல்லாஹ் ஏவிய கட்டளையை எனக்கும் உங்களுக்கும் நினைவுபடுத்தியவனாக ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹு தஆலா அவனது புத்தகம் அல்குர்ஆனில் அதுபோன்று அல்லாஹ்வின் தூதர் صلىاللهعليهوسلمஅவர்கள் தங்கள் நபிமொழிகளில் அனேக கட்டளைகளை,சட்டங்களை நமக்கு சொல்லி இருக்கின்றார்கள்.

அல்லாஹ்வை வழிபட வேண்டும்,அவனுக்கு இணைவைக்ககூடாது,அவனுக்கு மாறு செய்யகூடாது என்று சொல்கிற இடங்களிலெல்லாம் பெற்றோரை பற்றியும் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.

பெற்றோர்களுக்கு செய்ய வேண்டிய கடமைகள் என்ன? அவர்களை எப்படி பேண வேண்டும்? அவர்களுக்கு மரியாதை எப்படி செய்ய வேண்டும்?அவர்களோடு நாம் எப்படி பேச வேண்டும்? அவர்களோடு எப்படி நாம் ஒழுக்கமாக நடந்து கொள்ள வேண்டும்?அவர்களுக்கு மாறு செய்தால் என்ன தண்டனை கிடைக்கும்?

போன்ற விஷயங்களை எல்லாம் அல்லாஹு தஆலா அல்குர்ஆனிலும் அவனுடைய தூதர் صلىاللهعليهوسلمஅவர்கள் தங்கள் நபிமொழிகளிலும் சொல்லியிருக்கிறார்கள்.

அல்லாஹு தஆலா குறிப்பிடுகின்றான் :

وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا

நபியே!) உமது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். (அல்குர்ஆன் 17 : 23)

எவ்வளவு அழுத்தமாக அல்லாஹ் கட்டளையிடுகிறான் பாருங்கள். வணக்கவழிபாடு,பணிவு,மரியாதை,பயம்,அச்சம்,பிரார்த்தனை,நேர்ச்சை என்று என்னென்ன வழிபாடுகள் இருக்குமோ அந்த வழிபாடுகள் அனைத்தையும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே தூய்மையான முறையில் செய்ய வேண்டும்.

இந்த இடத்தில் அல்லாஹு தஆலா إِحْسَانஎன்ற பதத்தை பயன்படுத்துகிறான்.

எல்லா வார்த்தைகளுக்கும்,சொற்களுக்கும் விசாலமான பொருளுடைய அரபி மொழியில், إِحْسَانஎன்ற பதமும் விசாலமான பொருளுடையது.

نصرஉதவுங்கள் என்ற வார்தையை அல்லாஹ் சொல்லவில்லை .

அல்லது பெற்றோருக்கு அதிக தானம், தர்மம் செய்யுங்கள் என்ற வார்தையை அல்லாஹ் இங்கே சொல்லவில்லை.

அல்லது பணிவிடை செய்தல் என்ற வார்த்தையை அல்லாஹ் இந்த இடத்தில் பயன்படுத்தவில்லை.

அல்லது இது போன்று நன்மைகளை குறிக்கும் அனேக பதங்கள் அரபியில் இருந்தாலும்,அந்த பதங்களையெல்லாம் அல்லாஹ்,பெற்றோருக்கு மரியாதை செய்வது,பெற்றோருக்கு பணிவிடை செய்வது, பெற்றோருக்கு உபகாரம் செய்வது,பெற்றோருடன் ஒழுக்கமாக நடந்து கொள்வது என்ற சட்டங்களை குறித்து பேசும் போது  சொல்லாமல்,அல்லாஹுவதஆலா احسانஎன்ற பதத்தை பயன்படுத்துகிறான்.

பணிவிடை செய்தல்,மரியாதை செய்தல்,ஒழுக்கமாக நடந்து கொள்ளுதல்,அவர்களை கண்ணியபடுத்துதல்,அவர்களுக்காக செலவு செய்தல்,அவர்களுடைய திருப்தியை தேடுதல்,

அவர்களை மனம் நோகாமல் வைத்துக் கொள்ளுதல்,அவர்களுக்கு செய்ய வேண்டிய,அவர்களுக்கு கொடுக்க வேண்டிய உரிமைகளை கொடுத்தல்.

இன்னும் பெற்றோரை பேணும் விஷயத்திலும் அல்லது பெற்றோருக்கு மாறுபாடு செய்ய கூடாது என்ற விஷயத்திலும் என்னென்ன ஒழுக்கங்களை ஒரு தெளிவான அறிவுள்ள மனிதன் சிந்திக்க முடியுமோ,கற்பனை செய்ய முடியுமோ,சட்டங்களாக எழுத முடியுமோ அவை அனைத்தையும் உள்ளடக்கியது தான் அல்லாஹ் தேர்ந்தெடுத்த இந்த احسانஎன்ற பதம்.

எவ்வளவு அழகான தேர்வு அல்லாஹ் செய்திருக்கிறான் பாருங்கள்.

பெற்றோருடன் احسان-மிக அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள். அது பணிவிடையாக இருக்கலாம்,கண்ணியமான பேச்சாக இருக்கலாம்,அவர்களுக்கு தேவைபடும்போது செய்யகிற உதவியாக இருக்கலாம்,அவர்களை மரியாதை செய்வதாக இருக்கலாம்,நோய்வாய் பட்டால் அவர்களுக்கு நீங்கள் செய்யும் (treatment) மருத்துவ உதவியாக இருக்கலாம்.

பெற்றோர் தொடர்பாக நீங்கள் என்னென்னசெய்கிறீர்களோ அவை அனைத்தையும் இது எடுத்துக்கொள்ளும்.

பெற்றோருக்கு தீங்கு செய்யும் விதமாக,பெற்றோர் மனம் நோவும் படியாக நீங்கள் நடந்துகொள்கிற அனைத்து நடைமுறைகளையும்,பழக்கவழக்கங்களையும் தடைசெய்வதாக இது இருக்கிறது.

பெற்றோருடன் மிக அழகிய முறையில் நடந்து கொள்ளுங்கள். உபகாரமாக,கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள்.

அல்லாஹ் பிறகு குறிப்பிடுகிறான். உபகாரத்தின் ஒரு பகுதியை அல்லாஹ் நமக்கு விவரிக்கிறான்.

إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا

உம்மிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) ‘சீ' என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுவீராக. (அல்குர்ஆன் 17 : 23)

மேலும், அல்லாஹ் கூறுகிறான் :

وَاخْفِضْ لَهُمَا جَنَاحَ الذُّلِّ مِنَ الرَّحْمَةِ وَقُلْ رَبِّ ارْحَمْهُمَا كَمَا رَبَّيَانِي صَغِيرًا

அவர்களுக்கு மிக்க அன்புடன் பணிந்து நடப்பீராக! மேலும், ‘‘என் இறைவனே! நான் குழந்தையாக இருந்த பொழுது (மிக்க அன்பாக) என்னை அவர்கள் வளர்த்துப் பாதுகாத்தவாறே நீயும் அவ்விருவர் மீது அன்பும் அருளும் புரிவாயாக!'' என்றும் பிரார்த்திப்பீராக! (அல்குர்ஆன் 17 : 24)

அல்லாஹு தஆலா எப்படி ஆரம்பிக்கிறான்,எப்படி முடிக்கிறான் பாருங்கள்.

பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள், அவர்களை கண்ணியப்படுத்துங்கள், அவர்களோடு மரியாதையாக ஒழுக்கமாக நடந்து கொள்ளுங்கள் என்று கூறுகிற அல்லாஹ்,அது உள்ளத்திலிருந்து எழ வேண்டும் என்று சொல்கிறான்.

வெளிநாடுகளில் நீங்கள் பார்க்கலாம். அது இங்கும் தொத்துவதை நாம் பார்க்கிறோம் (Father's Day,Mother's Day)பெற்றோர் தினம், தந்தையர் தினம், தாயார் தினம் என்று ஒரு தினத்தை மட்டும் வைத்துவிட்டு,அந்த தினத்தில் பெற்றோரை அன்பாக முத்தமிட்டாலோ,அல்லது அவர்களுக்கு சில அன்பளிப்புகளை செய்துவிட்டாலோ நாம் பெற்றோரை கண்ணியபடுத்திவிட்டோம் என்று முட்டாள்கள் எண்ணிகொள்கிறார்கள்.

அந்த முட்டாள்கள் வழியில் சில முஸ்லிம்களும் இன்று செல்கிறார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!

மார்க்கம் ஐங்காலத் தொழுகையை கடமையாக்கிய அதே வசனத்தில்,தவ்ஹீதை கடமையாக்கிய அதே வசனத்தில் பெற்றோரை பேணுவதற்கு கட்டளை இடும் போது வருஷத்தில் ஒரு நாளை குறித்து வைத்துக்கொண்டு,அந்த நாளில் பெற்றோருக்கு தர்மம் செய்தாலோ,பெற்றோருக்கு அன்பளிப்பு கொடுத்து விட்டாலோ பெற்றோரின் கடமை நீங்கிவிடும் என்று எண்ணுபவன், ஒரு முஸ்லிமாக இருக்க முடியுமா?

அவன் அல்லாஹ்வை வணங்குபவனாக இருக்கமுடியுமா?அவன் தவ்ஹீதை மொழிந்தவனாக இருக்க முடியுமா?நிச்சயமாக இருக்க முடியாது.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவ்வளவு கட்டளையிடுகின்றான்.

மேலும் ஒரு வசனத்தை பாருங்கள். லுக்மான் என்ற அத்தியாயத்தில், லுக்மான் தன் மகனுக்கு செய்யும் அறிவுரையை அல்லாஹ் நமக்கு சொல்கின்றான்

وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ

லுக்மான் தனது மகனுக்கு நல்லுபதேசம் செய்யக் கருதிய சமயத்தில் அவரை நோக்கி ‘‘ என் அருமை மைந்தனே! நீ அல்லாஹ்வுக்கு (ஒன்றையுமே) இணையாக்காதே! ஏனென்றால், இணைவைப்பது நிச்சயமாக மிகப்பெரும் அநியாயமாகும்'' என்று கூறினார். (அல்குர்ஆன் 31 : 13)

பாருங்கள்! குர்ஆனில் எங்கு அல்லாஹ் கட்டளையை ஆரம்பித்தாலும், ஆரம்பிப்பது தவ்ஹீதை கொண்டு தான்.

இன்று, நம் பெற்றோர்கள் தவ்ஹீதை விட்டுவிட்டு அனைத்தையும் தன் பிள்ளைகளுக்கு உபதேசம் செய்கிறார்கள்.

தவ்ஹீதின் பிரச்சாரம் முடிந்த காரணத்தால், தவ்ஹீதின் பிரச்சாரம் புறக்கணிக்கப்பட்ட காரணத்தால் இன்று முஸ்லிம்களுடைய நிலையை பார்கிறோம்.

மற்றார்களுக்கு, குலத்திற்கு ஒரு கோயில் இருப்பதை போன்று, முஸ்லிம்களுடைய ஒவ்வொரு வகுப்பாருக்கும் தர்கா என்ற கோயில் இருப்பதை பார்க்கிறோம்.

அல்லாஹ்விற்கு வழிபாடு செய்ய வேண்டிய முஸ்லிம்கள்,சமாதிகளில் சென்று வழிபாடு செய்வதை பார்க்கிறோம். அல்லாஹ்விற்க்கு முன்னால் கெஞ்சி,கதறவேண்டிய பிரார்த்தனைகளை இன்று பல முஸ்லிம்கள் தர்காக்களில் சென்று கெஞ்சி,கதறுவதை பார்க்கிறோம்.

அல்லாஹ்வின் வீட்டை சுற்றுவதற்குரிய முஸ்லிம்கள்,இன்று தர்காக்களை சுற்றுவதை பார்க்கிறோம்.

அல்லாஹ்விற்க்கு முன்னால் பணிய வேண்டிய,பயப்படவேண்டிய,ஆதரவு வைக்க வேண்டிய முஸ்லிம்களில் இன்று பலர், தர்காக்களுக்கு முன்னால் சென்று கொண்டு பணிவதை,அங்கு சுஜூது செய்வதை,அங்கு இஃதிகாப் இருப்பதை,அங்கு குர்ஆன் ஓதுவதை பார்க்கிறோம்.

அல்லாஹ்வுடைய பள்ளிகளில் அல்லாஹ்வை அழையுங்கள்,அல்லாஹ்வை வணங்குங்கள். இபாதத்திற்காக பள்ளிகள் கட்டப்பட்டிருக்கின்றன என்று சொல்லுகிற அல்லாஹு தஆலா,அவனுடைய மார்க்கத்தில் இருக்கின்ற முஸ்லிம்கள் பள்ளிகளை பூட்டிவிட்டு இன்று தர்காக்களை அலங்கரித்து கொண்டிருக்கிறார்கள்.

அடுத்த வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான் :

وَوَصَّيْنَا الْإِنْسَانَ بِوَالِدَيْهِ حَمَلَتْهُ أُمُّهُ وَهْنًا عَلَى وَهْنٍ وَفِصَالُهُ فِي عَامَيْنِ أَنِ اشْكُرْ لِي وَلِوَالِدَيْكَ إِلَيَّ الْمَصِيرُ

‘‘தனது தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படி மனிதனுக்கு நாம் நல்லுபதேசம் செய்தோம். அவனுடைய தாய் துன்பத்தின் மேல் துன்பத்தை அனுபவித்து(க் கர்ப்பத்தில்) அவனைச் சுமந்து கொண்டலைந்தாள். (பிறந்த) பிறகும் இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னரே அவனுக்குப் பால் மறக்கடித்தாள். ஆகவே, நீ எனக்கும் நன்றி செலுத்து; உன் தாய் தந்தைக்கும் நன்றி செலுத்து. முடிவில் நீ நம்மிடமே வந்து சேர வேண்டியதிருக்கிறது. (அல்குர்ஆன் 31 : 14)

இந்த இடத்தில் அல்லாஹ் லுக்மானின் கூற்றை தன் கூற்றாக மாற்றிச் சொல்கிறான்.

எனக்கு நன்றி செலுத்து, உன் பெற்றோருக்கு நன்றி செலுத்து.

அல்லாஹு அக்பர்! குர்ஆனில் இந்த ஒரு வசனம் மட்டும்தான் பெற்றோரை குறித்து அல்லாஹ் சொல்லிருக்கிறான் என்றால் இதை விட ஒரு பெரிய கட்டளை தேவையில்லை.

எனக்கு நன்றி செலுத்து என்று சொல்லும்போது, அதே அந்த வார்த்தையை கொண்டு,எனக்கு என்பதையும் அல்லாஹ் சொல்கிறான்,உன் பொற்றோருக்கும் என்று அல்லாஹ் சொல்கிறான்.

கட்டளை ஒன்று “நன்றி செலுத்து”.அதை அல்லாஹ் சேர்த்துச் சொல்லுகின்றான்.

எவ்வளவு அழுத்தமான ஆழமான கட்டளை பாருங்கள்!

அடுத்து, அல்லாஹ் ஒரு விதிவிலக்கைத் தருகிறான்.

وَإِنْ جَاهَدَاكَ عَلَى أَنْ تُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا وَصَاحِبْهُمَا فِي الدُّنْيَا مَعْرُوفًا وَاتَّبِعْ سَبِيلَ مَنْ أَنَابَ إِلَيَّ ثُمَّ إِلَيَّ مَرْجِعُكُمْ فَأُنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ

எனினும், (இறைவன் என்று) நீ அறிந்துகொள்ளாத ஒரு பொருளை எனக்கு இணைவைக்கும்படி அவர்கள் உன்னை நிர்ப்பந்தித்தால் (அவ்விஷயத்தில்) நீ அவர்களுக்கு கீழ்ப்படிய வேண்டாம். ஆயினும், இவ்வுலக விஷயத்தில் நீ அவர்களுக்கு (நீதமாக) உதவி செய்து (அன்பாக) நேசித்துவா. எவ்விஷயத்திலும் என்னையே நோக்கி நிற்பவர்களின் வழியை நீ பின்பற்றி நட. பின்னர், நீங்கள் அனைவரும் நம்மிடமே வரவேண்டியதிருக்கிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றைப் பற்றி அச்சமயம் நான் உங்களுக்கு அறிவுறுத்துவேன்'' (என்று கூறினோம்). (அல்குர்ஆன் 31 : 15)

இணைவைத்தல்,அல்லாஹ்விற்கு மாறு செய்தல்,மார்க்கத்திற்கு மாறு செய்தல் இதில் பெற்றோருக்கு கீழ்ப்படியக் கூடாது.

இது தவிர, என்னென்ன கட்டளை சட்டங்களை அவர்கள் சொன்னாலும்,என்னென்ன கடமைகளை நமக்கு கொடுத்தாலும்,எத்தனை சிரமங்களை நமக்கு கொடுத்தாலும் அவற்றை சகித்துக் கொண்டு அவர்களோடு அழகிய முறையில் நடக்க வேண்டும் என்று அல்லாஹ் நமக்கு குர்ஆனில் கட்டளையிடுகின்றான்.

அப்துல்லாஹ் இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் ஒரு தோழர் வருகிறார்.

ஈரானில் உள்ள ஒரு நகரம், ஹுராசானிலிருந்து நான் என் தாயை சுமந்து வந்திருக்கிறேன்.

ஹஜ் செய்வதற்காக. எங்கிருந்து சுமக்கிறார்? ஈரானிலிருந்து சுமந்து வருகிறார். ஏறக்குறைய 2500கிலோ மீட்டர்களுக்கு மேல் உள்ள தூரம். அதைவிட தூரமாகத்தான் இருக்கும் .

அங்கிருந்து தன் தாயை தூக்கி தன் முதுகில் சுமந்து ஒருவர் வந்திருக்கிறார். எதற்காக? அவர்களை ஹஜ் செய்ய வைக்க வேண்டும் என்பதற்காக.

இன்றும் நாம் பார்க்கிறோம்! சில வயதான ஹாஜிகள் உடன் வரும் போது இவ்வளவு சிரமப்படுகிறீர்களே! உங்களுக்கு ஆண் பிள்ளைகள் இல்லையா?அவர்களுடைய துணையை நீங்கள் நாடி இருக்கலாமே! அவர்களை அழைத்து வந்திருக்கலாமே! என்று சொன்னால்,அந்த வயதான பெற்றோர்கள் சொல்கிறார்கள்.

அவர்கள் எங்கே எங்களை பார்க்கிறார்கள். காசு கொடுத்து விட்டால் போதும் என்று சிலர் காசை கொடுத்து, எப்படியாவது நீ ஹஜ் செஞ்சிக்கப்பா! ஏதாவது ஒரு டிராவல்ஸ்ல கழுத்தை பிடித்து தள்ளி விடுதல்.

சில முஸ்லிம் அறிவாளிகள் எப்படி எண்ணியிருக்கிறார்கள் என்றால்,ஹஜ் எப்போது கடமை ஐம்பது வயசுக்கு மேல், நான்கு பில்டிங்,ஐந்து பில்டிங், காம்ப்ளக்ஸ்,பெரிய சொத்து எல்லாம் வாங்கி வைத்து, அதற்குப் பிறகு பெண் பிள்ளை இருந்தால் அதையும் கட்டி வைத்து அதற்கு சொத்தை எழுதி வைத்து அதற்கு பிறகு ஹஜ்ஜைப் பத்தி யோசிப்போம்.

உங்களுக்கு ஒரு கட்டளையை தெரியுமா?உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள் :

“ஹஜ் கடுமையானதற்குப் பிறகு ஹஜ் செய்யாமல் இருப்பவர்கள் மஜூஸிகள். அவர்கள் மீது நான் ஜிஸியா வரியை விதிப்பேன் என்று”.

பார்க்க - (தப்ஸீர் இப்னு கஸீர் 2/85) , (அல்குர்ஆன் 3:97).

ஹஜ் கடமை ஆவதற்கு என்ன தேவை?இன்று பலர் என்ன எண்ணியிருக்கிறார்கள்? டிராவல்ஸில் செல்லும் அளவு மிகப்பெரிய ஒரு சொத்து இருக்கவேண்டும். அங்கே சென்று பர்சேஸ் பண்ணுவதற்கு மிகப்பெரிய கையிருப்பு இருக்க வேண்டும். அப்போது தான் ஹஜ் கடமை என்று எண்ணி இருக்கிறார்கள்.

ஹஜ் கமிட்டியில் செல்வதற்கு அதிலும் கடைசி வகுப்பில் செய்வதற்கான குறைந்தபட்ச தொகையும், நீங்கள் சென்று திரும்பும் அளவுக்கு உங்களுடைய குடும்பத்தார்கள் கஞ்சி குடிப்பதற்கு உண்டான தொகையும் இருந்தால் உங்கள் மீது ஹஜ் ஃபர்ளாகிவிடுகிறது.

அந்த நிலைமையில் நீங்கள் அதற்காக முயற்சி செய்து, அங்கே குழுக்களில் பெயர் வரவில்லை என்றால் நீங்கள் மன்னிக்கப்படுவீர்கள். இல்லை அதற்கு நீங்கள் முயற்சியே செய்யாமல் மரணித்து விட்டால் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கின்றார்கள், ரஸூலுல்லாஹ் صلىاللهعليهوسلمஅவர்கள் புறத்திலிருந்து இமாம் தபரி பதிவு செய்கிறார்கள்.

“அவர் யஹூதியாக மரணிப்பதும் ஒன்றுதான், அவர் நஸ்ராணியாக மரணிப்பதும் ஒன்றுதான், அவர் மஜூசியாக மரணிப்பதும் ஒன்று தான்”.

தஃப்ஸீர் தபரி (அல்குர்ஆன் 97விரவுரை))

ஏன்? ரப்புல் ஆலமீன் அப்படித்தான் சொல்கிறான் :

وَلِلَّهِ عَلَى النَّاسِ حِجُّ الْبَيْتِ مَنِ اسْتَطَاعَ إِلَيْهِ سَبِيلًا وَمَنْ كَفَرَ فَإِنَّ اللَّهَ غَنِيٌّ عَنِ الْعَالَمِينَ

ஆகவே, எவர்கள் அங்கு பிரயாணம் செல்ல சக்தி உடையவர்களாக இருக்கிறார்களோ அத்தகைய மனிதர்கள் மீது அல்லாஹ்வுக்காக (அங்கு சென்று) அந்த ஆலயத்தை ஹஜ் செய்வது கடமையாகும். எவரேனும் (இதை) நிராகரித்தால் (அதனால் அல்லாஹ்வுக்கு ஒன்றும் குறைந்து விடுவதில்லை. ஏனென்றால்,) நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் தேவையற்றவன் ஆவான்.(அல்குர்ஆன்3 : 97)

சம்பவத்தின் தொடர் :

அப்துல்லாஹ் இப்னு உமரிடத்தில் சொல்கின்றார். “என் தாயை முதுகில் சுமந்தவனாக தவாஃப் செய்தேன், என் தாயை முதுகில் சுமந்தவனாக சயீ செய்தேன், முதுகில் சுமந்தவனாக மினா அழைத்துச் சென்றேன், பிறகு அரஃபா, பிறகு முஸ்தலிஃபா, பிறகு மக்கா என அனைத்து கடமைகளையும் என் தாயை முதுகில் சுமந்தவனாகச் செய்தேன்.

பிறகு கேட்கிறார்; என் தாய்க்குள்ள கடமையை நான் செய்துவிட்டேனா? என்று.

இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு சொன்னார்கள் : இல்லை.

நீ சிறு பிராயத்தில் இருக்கும் போது, அந்த தாய் உன்னை பார்த்து ஒரு புன்முறுவலாக சிரித்தாள் அல்லவா, மனமாற உன்னை பார்த்து மகிழ்ந்தாள் அல்லவா! அதற்கு கூட நீ இன்னும் நன்றி செலுத்தவில்லை என்று.

நம்முடைய முன்னோர்கள் அந்த சிறப்பிற்குரிய சஹாபாக்கள் எப்படி விளங்கி வைத்திருந்தார்கள் என்று கவனியுங்கள்.

இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு சொல்கின்றார்கள். அல்லாஹ் கூறுகிறான் அல்லவா, பெற்றோருக்கு முன்னால் மரியாதையாக நடந்து கொள்ளுங்கள்,அதட்டி பேசாதீர்கள்,கண்ணியமாக பேசுங்கள்,பணிவோடு நடந்து கொள்ளுங்கள் என்று.

அதற்கு என்ன பொருள் தெரியுமா? எந்த விஷயங்களை எல்லாம், அல்லாஹ் இங்கே குறிப்பிடுகிறான் என்று குர்ஆனின் விரிவுரையாளர்கள் இப்னு அப்பாஸ் சொல்கிறார்.

“உங்கள் பெற்றோருக்கு முன்னால் உங்கள் ஆடைகளை உதறாதீர்கள். அப்படி உதறும் போது ஏற்படுகிற காற்றினாலோ அல்லது அந்த ஆடையில் பட்டு இருக்கக்கூடிய தூசியினால் அவர்கள் சிரமப்பட்டால் அதுவும் அவர்களுக்கு நீங்கள் செய்கிற நோவினை,குறைபாடு என்று இப்னு அப்பாஸ் அவர்கள் விளக்கம் சொல்கின்றார்கள்.

பார்க்க - (சாதுல் மஸீர் 1/92(அல்குர்ஆன் 2:83)

மேலும் சொல்கின்றார்கள், அவர்களை அதட்டாதீர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான் அல்லவா, அவர்களுக்கு முன்னால் கத்திப்பேசாதீர்கள்,சத்தத்தை உயர்த்திப் பேசாதீர்கள்.

சயீத் இப்னு முஸய்யிப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பல நூறு சஹாபாக்களிடத்தில் கல்வி படித்த மிகப்பெரிய தாபியீ.

அவர்கள் சொல்கிறார்கள்; அவர்களிடத்தில் கேட்கப்படுகிறது, பெற்றோருக்கு முன்னால் முற்றிலும் பணிந்து விடுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறானே இதற்கு விளக்கம் என்ன? என்று.

விளக்கம் சொல்கிறார்கள்,“ஒரு அடிமை தவறு செய்து விட்டான்,தன் எஜமானனுக்கு குற்றம் இழைத்துவிட்டான், அந்த எஜமானன் மிகக் கோபக்காரன்,மிகக் கண்டிப்புடையவன், அந்த எஜமானனுக்கு முன்னால் குற்றம் செய்த அடிமை எப்படி பயந்து பணிவோடு இருப்பானோ அப்படி பணிவோடு நீங்கள் நிர்ப்பதைத்தான் அல்லாஹ் இங்கு சொல்கின்றான், பெற்றோர்களுக்கு முன்னால் பணிந்து விடுங்கள் என்று.”

எந்த அளவுக்கு பெற்றோர்களுக்குப் பணிய வேண்டும், எந்த அளவுக்கு பெற்றோர்களுக்கு கட்டுப்பட வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் صلىاللهعليهوسلمசொல்கின்றார்கள்: முஆத் இப்னு ஜபல் அறிவிக்கிறார்கள்,

(உங்களை உங்கள் பெற்றோர் படிக்க வைக்கவில்லை,வேலை கற்றுக்கொடுக்கவில்லை,பெற்றார்கள் விட்டு விட்டார்கள்,வயிறு பசிக்கி ஏதோ உணவு கொடுத்து இருப்பார்கள்,இந்த நிலையில் நீங்களாக கஷ்டப்பட்டு படித்தீர்கள், நீங்களாக கஷ்டப்பட்டு தொழிலை கற்றுக் கொண்டீர்கள், பெரிய முயற்சி செய்தீர்கள்,

அல்லாஹ் உங்களுக்கு இரண விஸ்தீரத்தையும் கொடுத்தான். அல்லாஹ் உங்களுக்கு வசதியை கொடுத்தான், பெரும் பொருளாதாரத்தை கொடுத்தான், பெரும் செல்வத்தைக் கொடுத்தான்.

இந்த நேரத்தில் உங்கள் பெற்றோர் வருகிறார்கள்,இந்த செல்வத்தை எல்லாம் எங்கள் பேரில் எழுதி வைத்து விடுங்கள் என்று சொல்கிறார்கள், நீ கட்டிய வீட்டில் இருந்து நீ வெளியேறி விடும் என்று சொல்கிறார்கள்.

அல்லாஹ்வின் தூதர் صلىاللهعليهوسلمஅவர்களுடைய கட்டளை, அந்த வீட்டிலிருந்து அந்த செல்வத்திலிருந்து அப்படியே பெற்ற மகன் வெளியேறிவிட வேண்டும் என்று. அவர்கள் கேட்கின்ற அந்த சொத்தை எல்லாம் அவர்களுக்கு எழுதி வைத்துவிட வேண்டும் என்று.)

முஆத் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கின்றார்கள்.

أَوْصَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا تَعُقَّنَّ وَالِدَيْكَ وَإِنْ أَمَرَاكَ أَنْ تَخْرُجَ مِنْ أَهْلِكَ وَمَالِكَ

அல்லாஹ்வின் தூதர் எனக்கு வஸிய்யத் -அறிவுரை கூறினார்கள்; உன் பெற்றோருக்கு நீ மாறு செய்யாதே! அவர்கள் உன் குடும்பத்தை விட்டும் உன் சொத்தை விட்டும் உன்னை வெளியே செல் என்று சொன்னாலும் சரியே”. (1)

அறிவிப்பாளர் : முஆத்ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 21060.

அப்துல்லாஹ் பின் அம்ர் அறிவிக்கின்றார்கள். ”ஒருவர் ரஸூலுல்லாஹ் صلىاللهعليهوسلمஅவர்களிடத்தில் வந்தார். அல்லாஹ்வின் தூதரே! நான் ஜிஹாதுக்கு வந்திருக்கிறேன் என்று.

ரஸூல் صلىاللهعليهوسلمகேட்டார்கள்,

َ أَحَيٌّ وَالِدَاكَ قَالَ نَعَمْ قَالَ فَفِيهِمَا فَجَاهِدْ

உன் பெற்றோர் உயிருடன் இருக்கிறார்களா? என்று. ஆம் அல்லாஹ்வின் தூதரே.

ரஸூல் صلىاللهعليهوسلمஅவர்கள் சொன்னார்கள்,

அந்த இருவரிடத்தில் சென்று அவர்களுக்கு பணிவிடை செய்து ஜிஹாதுடைய  நன்மையை தேடுவீராக.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2782.

இதே சஹாபி அப்துல்லாஹ் பின் அம்ர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். அல்லாஹ்வின் தூதரிடத்தில் ஒரு மனிதர் வந்து கூறினார்.

أُبَايِعُكَ عَلَى الْهِجْرَةِ وَالْجِهَادِ أَبْتَغِي الْأَجْرَ مِنْ اللَّهِ قَالَ فَهَلْ مِنْ وَالِدَيْكَ أَحَدٌ حَيٌّ قَالَ نَعَمْ بَلْ كِلَاهُمَا قَالَ فَتَبْتَغِي الْأَجْرَ مِنْ اللَّهِ قَالَ نَعَمْ قَالَ فَارْجِعْ إِلَى وَالِدَيْكَ فَأَحْسِنْ صُحْبَتَهُمَا

அல்லாஹ்வின் தூதரே! நான் ஹிஜ்ராவிற்காக உங்களிடத்தில் பைஅத் செய்கிறேன். இனி என் தாய் நாட்டிற்கு நான் திரும்பமாட்டேன். அல்லாஹ்வுடைய பாதையில் ஹிஜ்ரா செய்து வந்துவிட்டேன்.

ஆனால், அந்த சஹாபி கூறுகிறார்,என் தந்தை என் தாயை அழும் நிலையில் நான் விட்டுவிட்டு வந்துவிட்டேன். ஒரே மகனார் அவர்கள், இந்த மகனின் பக்கம் தேவையுடையவராக இருக்கிறார்கள்.

எங்களை விட்டு விட்டுச் சென்றுவிட்டால் எங்க நிலைமை என்னவாகும் என்று அழைக்கிறார்கள். அவர்கள் அழுத நிலையில் நான் விட்டு வந்திருக்கிறேன் என்று கூறினார்.

அல்லாஹ்வின் தூதர் صلىاللهعليهوسلمசொன்னார்கள்.

“நீ மதினாவில் தங்காதே, உன் பெற்றோர் எங்கே இருக்கிறார்களோ அங்கே சென்று விடு”.

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் பின் அம்ர்இப்னுல் ஆஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம்,எண் : 4624

இமாம் அபூதாவூத் பதிவுசெய்கிறார். நீ அவர்களிடத்தில் சென்று அவர்களுக்கு சிரிப்பை கொடு,அவர்களுக்கு மகிழ்ச்சியை கொடு. எப்படி நீ அழ வைத்தாயோ, அவர்களை சிரிக்கவை என்று சொன்னார்கள்.

அப்துல்லாஹ் இப்னு அம்ரு ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள். ஒருவர் ரஸூலுல்லாஹ் صلىاللهعليهوسلمஅவர்களிடத்தில் வருகிறார். ஜிஹாதிற்கு செல்ல வேண்டும் என்று அனுமதி தேடியவராக. ரஸூலுல்லாஹ் صلىاللهعليهوسلمகேட்டார்கள்.

உன் பெற்றோரில் ஒருவராவது உயிரோடு இருக்கிறார்களா?அவர் சொன்னார்; என் தாய் உயிரோடு இருக்கிறார்.

ரஸூலுல்லாஹ் صلىاللهعليهوسلمசொன்னார்கள்,நீ செல், உன் தாய்க்கு நன்மை செய் என்று.

அவர் உடனடியாக தன் பயணத்திற்கு புரப்படுகிறார்.

ரஸூலுல்லாஹ் صلىاللهعليهوسلمசொன்னார்கள் :

“அல்லாஹ்வின் பொருத்தம் பெற்றோருடைய பொருத்ததில் இருக்கின்றது.”

அபூ ஸயீது அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கிறார்கள், ஒருவர் ரஸூலுல்லாஹ் صلىاللهعليهوسلمஇடத்தில் எமன் நாட்டிலிருந்து வருகிறார்.

هَاجَرَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ الْيَمَنِ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَجَرْتَ الشِّرْكَ وَلَكِنَّهُ الْجِهَادُ هَلْ بِالْيَمَنِ أَبَوَاكَ قَالَ نَعَمْ قَالَ أَذِنَا لَكَ قَالَ لَا فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ارْجِعْ إِلَى أَبَوَيْكَ فَاسْتَأْذِنْهُمَا فَإِنْ فَعَلَا وَإِلَّا فَبِرَّهُمَا

ரஸூல் صلىاللهعليهوسلمஅர்களிடத்தில் சொல்கிறார்; ”அல்லாஹ்வின் தூதரே! என் முழு வாழ்க்கையையும் அர்ப்பணம் செய்து வந்து விட்டேன்.

ரஸூல் صلىاللهعليهوسلمஅவர்கள் சொன்னார்கள்,ஷிர்க்கை விட்டு விட்டாயா?விட்டு விட்டேன். ஜிஹாத் பாக்கியிருக்கிறது, அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வது,

உன்னிடம் கேட்கிறேன், இதை விட முக்கியமான ஒன்று இருக்கிறது.

எமன் நாட்டில் உன் பெற்றோர் இருவரும் உயிரோடு இருக்கிறார்களா? அவர் கூறினார், உயிரோடு இருக்கிறார்கள் என்று.

(கவனிக்க வேண்டும்! எமன் நாடு ரஸூலுல்லாஹ் صلىاللهعليهوسلمஅவர்களுடைய கடைசி காலத்தில் முஸ்லிம்களுடைய கைக்கு வந்துவிட்டது. அங்குள்ளவர்கள் எல்லாம் முஸ்லிம்களாக ஆகிவிட்டார்கள். அது முஸ்லிம்களின் நாடாக மாறிவிட்டது. இனி அங்கிருந்து ஹிஜ்ரா செய்ய வேண்டிய அவசியம் இல்லை.

அதனடிப்படையில் தான், ரஸூல் صلىاللهعليهوسلمஅவர்கள் கேட்கிறார்கள்; அங்கே உன்னுடைய பெற்றோர்கள்  உயிராக இருக்கிறார்களா?என்று).

அவர் கூறினார்; அல்லாஹ்வின் தூதரே! இருவரும் உயிரோடு இருக்கிறார்கள்.

நீ ஜிஹாதிற்கு வந்திருக்கிறாயே, உன் பெற்றோர் இடத்தில் அனுமதி கேட்டு விட்டு வந்திருக்கிறாயா! என்று கேட்டார்கள்.

அப்போது அந்த நபித்தோழர் கூறுகிறார், அல்லாஹ்வின் தூதரே! நான் அனுமதி கேட்கவில்லை, ஜிஹாதின் மேல் உள்ள பிரியத்தால் நான் அனுமதி இல்லாமல் ஓடி வந்துவிட்டேன் என்று.

அப்போது ரஸூல் صلىاللهعليهوسلمசொன்னார்கள்,உன் பெற்றோரிடத்தில் செல்வாயாக, அவர்களிடத்தில் அனுமதி கேட்பாயாக. அவர்கள் அனுமதி கொடுத்தால் நீ என்னிடம் வருவாயாக. அவர்கள் அனுமதி கொடுக்கவில்லை என்றால்,அவர்களிடத்தில் இருந்து அவர்களுக்கு நன்மை செய்வீராக.

அறிவிப்பாளர் : அபூ ஸயீது அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மது,எண் : 11296.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது ரழியல்லாஹு அன்ஹு ரஸூலுல்லாஹ் صلىاللهعليهوسلمஇடத்தில் கேட்கிறார்கள்;

أَيُّ الْعَمَلِ أَفْضَلُ قَالَ الصَّلَاةُ عَلَى مِيقَاتِهَا قُلْتُ ثُمَّ أَيٌّ قَالَ ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ

அல்லாஹ்வின் தூதரே! அமல்களில் மிக விருப்பமான அமல் எது என்று? ரஸூல் صلىاللهعليهوسلم. சொன்னார்கள்; தொழுகையை அதற்குரிய நேரத்தில் நிறைவேற்றுவது.

பிறகு, அப்துல்லாஹ் இப்னு மஸ்வூது கேட்கிறார்கள்; அல்லாஹ்வின் தூதரே! பிறகு என்ன?என்பதாக.

ரஸூல் صلىاللهعليهوسلم. சொன்னார்கள், பெற்றோருக்கு நன்மை செய்வது.

தொழுகைக்கு அடுத்தபடியாக அல்லாஹ்வின் தூதர் صلىاللهعليهوسلمபெற்றோருக்கு நன்மை செய்வதை சொல்கின்றார்கள். (2)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூதுரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 496,2574.

முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.

« من بر والديه طوبى له زاد الله في عمره »

யார் தன் பெற்றோருக்கு உபகாரம் செய்கிறானோ, நன்மை செய்கிறானோ, அவனுக்கு நற்செய்தி சொர்க்கம் கிடைக்கட்டுமாக! அல்லாஹ் அவனுடைய வாழ்க்கையை அதிகப்படுத்தட்டுமாக.

அறிவிப்பாளர் : முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஹாகீம்,எண் : 7366.

(இன்று எத்தனையோ மருத்துவ முறைகளை நாடுகிறார்கள். தன் உடலுக்கு நோய் என்றால் துடிதுடித்துப் போகிறார்கள்).

சுகமான வாழ்க்கை நீண்ட வாழ்க்கைக்கு,நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள் பெற்றோருக்கு உபகாரம் செய்யுங்கள் என்று கூறியுள்ளார்கள்.

مَنْ أَحَبَّ أَنْ يُمَدَّ لَهُ فِي عُمْرِهِ وَأَنْ يُزَادَ لَهُ فِي رِزْقِهِ فَلْيَبَرَّ وَالِدَيْهِ وَلْيَصِلْ رَحِمَهُ

யார் தனக்கு நீண்ட வாழ்க்கை வேண்டுமென்று ஆசைப்படுகின்றாரோ,மேலும், தனது வாழ்வாதாரம் விரிவாக வேண்டும் என்று ஆசைப்படுகின்றாரோ,செல்வம் அதிகரிக்க வேண்டும் என்று ஆசைபடுகின்றாரோ,தனது உணவு விஸ்தீரணமாக வேண்டும் என்று ஆசை படுகின்றாரோ அவர் தன் பெற்றோருக்கு கருணை காட்டட்டும்.

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 12922.

இன்று, எத்தனை பிள்ளைகள், பெற்றோருக்கு கொடுப்பதில் கையை சுருக்கி கொள்கிறார்கள்.

இப்படி கொடுத்து கொண்டே இருந்தால், இவர் செலவு செய்து கொண்டே இருப்பார்,நாங்கள் பக்கீர்களாக ஆகிவிடுவோமே என்று.

அல்லாஹ்வின் தூதர் صلىاللهعليهوسلم. சொன்னாரகள்; “பெற்றோருக்கு செலவு செய்யுங்கள்,அல்லாஹ் உங்களுக்கு ரிஸ்க் உடைய பரக்கத்தை கொடுப்பான் என்று.

எத்தனையோ வாலிபர்கள் பெற்றோர்களுடைய மருத்துவத்திற்கு செலவு செய்வதில் கருமித்தனம் காட்டுகின்றார்கள், அவர்களுக்கு வசதி செய்து கொடுப்பதில் கருமிதனம் காட்டுகிறார்கள்.

இவர் சாக போறாரே, இந்த நேரத்தில் இவருக்கு எதுக்கு இவ்வளவு செலவு என்பதாக என்ன எண்ணத்தில் இருக்கிறார்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

நபித்தோழர்களில் பலரை பார்க்கிறோம், தாபியீன்களில் பலரை பார்க்கிறோம்.

ஒரு தாபியீ தன்னுடைய தாய் இறந்து விட்டபோது தேம்பி தேம்பி அழுகிறார். அப்போது அங்கே இருந்த அவருடைய மாணவர் கேட்கிறார், உங்களுடைய தாய்க்காக இப்படி அழுகிறீர்களே என்று.

ஆம், சொர்க்கத்தின் ஒரு வாசல் அடைக்கப்பட்டு விட்டதே! என்று இமாம் கூறுகிறார்கள்.

என்ன பொருள் இதற்கு?அல்லாஹ்வின் தூதர் صلىاللهعليهوسلمசொன்னார்கள்.

“உங்களுடைய பெற்றோர் உயிராக இருந்து அவர்களுக்கு பணிவிடை செய்தால் உங்களுக்கு சொர்க்கம்.

யார் வயோதிக காலத்தில் தன் பெற்றோரை அடைந்து,அவர்களுக்கு பணிவிடை செய்து அவர்களால் சொர்க்கத்தை அடைய முடியவில்லையோ அவர்களுக்கு கேடு உண்டாகட்டும் என்று சொன்னார்கள்”.

தொழுகை எப்படி சொர்க்கத்தின் ஒரு வாசலோ, அது போன்று தாயும் தந்தையும் ஒரு வாசல். அந்த வாசல் இப்போது மூடப்பட்டு விட்டதே! அவர்களுக்கு பணிவிடை செய்து அந்த சொர்க்கத்தின் வாசல்குரிய அமல்களை நான் செய்து கொண்டிருந்தேனே!

இப்போது அந்த வாசலை இழந்து விட்டேனே! என்று அந்த சொர்க்கத்தின் மீதுள்ள ஆசையால்,தேட்டத்தால் அழுகிறேன் என்று சொன்னார்கள்.

ஹஸன் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடத்தில் கேட்கப்படுகின்றது.

பெற்றோருக்கு உபகாரம் செய்ய வேண்டுமென்றால் என்ன? என்பதாக.

கூறினார்கள்.

أن تبذل لهما ما ملكت ، وأن تطيعهما في ما أمراك به ، إلا أن تكون معصية

“நீ என்ன உன் கை வசம் வைத்திருக்கிறாயோ, அனைத்தையும் அவர்களுக்காக செலவு செய்ய வேண்டும். பாவமற்ற காரியங்களில் அவர்கள் கூறும் விஷயத்திற்கு நீ கீழ்படிந்து  நடக்கவேண்டும்”.

நூல் : முஸன்னஃப் அப்துர் ரஸ்ஸாக், எண் : 9288.

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் இருவரை பார்க்கிறார்கள்.

அவர்களை பார்த்ததற்கு பிறகு,இவர் யார்? என்று கேட்கிறார். அப்போது, இரண்டாமவர் சொல்கிறார், இவர் என்னுடைய தந்தை என்பதாக.

உன் தந்தையா! அவரை பெயர் கூறி நீ அழைக்காதே! அவர் நடந்தால் அவருக்கு முன்னால் நீ நடக்காதே! ஓர் இடத்திற்கு நீங்கள் சென்றால் அவர் உட்கார்வதற்க்கு முன்னால் நீ உட்காராதே!

பார்க்க - (அத்துர்ருல் மன்சூர் 6/253, அல்குர்ஆன்: 17:23,34)

ஹஸன் பஸரீ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடத்தில் அவர் மாணவர் ஒருவர்.”என் பெற்றோர் தப்பு செய்கிறார்கள் நான் என்ன செய்வது?

நன்மையை சொல்கிறார், தீமையை தடுக்கிறார் என்ன செய்வது? இமாம் ஹஸன் பஸரீ ரஹ்மத்துல்லாஹி சொல்கிறார்கள்.

கண்ணியமாகச் சொல், நீ சொல்வதை அவர்கள் ஏற்றுக்கொண்டால் சரி,இல்லை உன் பேச்சு பிடிக்கவில்லை, அவர்கள் முகம் திருப்புகிறார்களா? அவர்கள் அதை வெறுத்தால் நீ அவர்களை அப்படியே விட்டு விடுவீராக”.

(உஸ்னதுல் இப்னு ஜஅத் 2608)

பெற்றோர் இருவரில் அதிகமாக யாருக்கு முதலில் உபகாரம் செய்ய வேண்டும்?

ரஸூல் صلىاللهعليهوسلم. பதில் தருகிறார்கள்; உங்களுடைய தாய்க்கு என்பதாக.

مَنْ أَحَقُّ النَّاسِ بِحُسْنِ الصُّحْبَةِ قَالَ أُمُّكَ ثُمَّ أُمُّكَ ثُمَّ أُمُّكَ ثُمَّ أَبُوكَ ثُمَّ أَدْنَاكَ أَدْنَاكَ

“நான் யாருக்கு அதிகம் உபகாரம் செய்ய வேண்டும். ரஸூல் صلىاللهعليهوسلمஉன் தாய் என்று சொன்னார்கள். பிறகு கேட்கிறார்; பிறகும் தாய் என்று சொல்கிறார்கள். பிறகு கேட்கிறார் பிறகும் தாய் என்று சொல்கிறார்கள். மூன்று முறை தாய் என்று கூறியதற்கு பிறகு நான்காவது முறை தந்தை என்று சொல்கிறார்கள்”.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம்,எண் : 4622

ரஸூல் صلىاللهعليهوسلم. அவர்கள் சொன்னார்கள்.

نِمْتُ فَرَأَيْتُنِي فِي الْجَنَّةِ فَسَمِعْتُ صَوْتَ قَارِئٍ يَقْرَأُ فَقُلْتُ مَنْ هَذَا قَالُوا هَذَا حَارِثَةُ بْنُ النُّعْمَانِ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَذَاكَ الْبِرُّ كَذَاكَ الْبِرُّ وَكَانَ أَبَرَّ النَّاسِ بِأُمِّهِ

“நான் சொர்க்கத்திற்கு சென்றபோது ஹாரிஸ் இப்னு நுக்மானை பார்த்தேன். பிறகு ரஸூல் صلىاللهعليهوسلم. சொன்னார்கள் ஆம் இப்படித்தான் பெற்றோருக்கு உபகாரம் செய்வது நன்மை தரும் என்பதாக.

ஹாரிஸ் இப்னு நுக்மான் ரழியல்லாஹு அன்ஹு தன் தாய்க்கு அதிகம் உபகாரம் செய்ய கூடிய,தன் தாயோடு அதிகம் நன்மை செய்யக்கூடிய, தன் தாய்க்கு அதிகம் துணை போகக் கூடிய, தன் தாய்க்கு அதிகமாக பணிவிடை செய்யக்கூடிய ஒரு நபித்தோழராக இருந்தார்”.

அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்னத் அஹ்மது, எண் : 24026

அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களைப் பற்றி வருகிறது. அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு வீட்டிலிருந்து வெளியே சென்றால் வெளியில் நின்று கொண்டு

السلامعليكيااميورحمةاللهوبركاته.

என் தாயே! உனக்கு சலாம் உண்டாகட்டும்! உனக்கு கருணை உண்டாகட்டும்! அல்லாஹ்வின் பரக்கத் உண்டாகட்டும்! என்று சொல்வார்.

பிறகு அந்த தாய் அதற்கு பதில் சொல்வார்கள்.

வீட்டிலிருந்து வெளியே வந்தால், வெளியிலிருந்து வீட்டுக்குள் வந்தால் கதவுக்கு அருகில் நின்று கொண்டு

السلامعليكورحمةاللهوبركاتهياامي

என்று முழுமையாக தன் தாய்க்கு சலாம் கூறுவார். அந்த தாய் அதற்கு பதில் கூறியதற்கு பிறகு வீட்டுக்குள் வருவார். என்று அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களை பற்றி எழுதுகின்றார்கள்.

இமாம் ஜுஹ்ரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி சொல்கின்றார்கள். ஹசன் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய தாயோடு (பாத்திமா(ரலியல்லாஹு அன்ஹா) சாப்பிடும்போது முதலில் தாயை சாப்பிட வைப்பார்கள்.

பிறகு ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு சாப்பிடுவார்கள். இன்று நடப்பது என்ன?இருக்கிறதை எல்லாம் முதலில் பிள்ளைகள் கொட்டிக் கொள்வார்கள். மிச்ச மீதியை பெற்றோருக்கு வைப்பார்கள்.

ஆனால், சஹாபாக்களின் வீட்டில் நடப்பது என்ன? முதலில் தாயை சாப்பிட வைக்கிறார்கள். பிறகு மகன் சாப்பிடுகிறார். ஆனால் ஹஸன் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் ஒரே நேரத்தில் தாயோடு சாப்பிட மாட்டார்கள். தாயை சாப்பிட வைப்பார்கள்,பிறகு சாப்பிடுவார்கள்.

அவர்களிடத்தில் கேட்கப்பட்டது, ஏன் நீங்கள் அப்படி செய்கிறீர்கள்? என்று. அதற்கு அவர் கூறிய வார்த்தையை பாருங்கள்! அல்லாஹு அக்பர்!.

எந்த அளவு பெற்றோர் மனம் நோவுவதை பயந்தார்கள். அல்லாஹ் தண்டித்து விடுவானோ என்ற பயத்தில்.

காரணம்,அல்லாஹ் ரப்புல் ஆலமீன் குர்ஆனில் பெற்றோருக்கு மாறு செய்வது அவ்வளவு கடுமையாக கண்டிக்கிறான்.

அல்லாஹ்வின் தூதர் صلىاللهعليهوسلم. பெரும் பாவங்களை எண்ணும்போது, இணை வைத்தலை கூறியதற்கு பிறகு, பெற்றோருக்கு நோவினை தருவது, பெற்றோருக்கு மனக் கஷ்டத்தை ஏற்படுத்துவது, பெற்றோருக்கு மன சங்கடத்தை ஏற்படுத்துவதை இரண்டாவது பாவமாக அல்லாஹ் எண்ணுகிறான்.

அவரிடத்தில் கேட்கப்பட்டது,ஏன் இப்படி? என்பதாக. அப்போது சொன்னார்கள் நானும் அவர்களோடு சேர்ந்து சாப்பிட்டால், ஏதாவது உணவு பொருளை நான் அவசரப்பட்டு, ஆசைப்பட்டு எடுத்து விடுவேன்.

அந்த உணவு என் தாய் சாப்பிட வேண்டுமென்று ஆசைப்பட்டு இருக்கலாம் அல்லவா. என் தாய் சாப்பிட வேண்டுமென்று ஆசைப்பட்ட உணவை,ஒரு கவளத்தை அல்லது ஒரு பொருளை நான் எடுத்து சாப்பிட்டு விட்டதால், என் தாய்க்கு அது ஒரு கஷ்டமாக  ஆகிவிடுமோ,மன சங்கடத்தை ஏற்படுத்தி விடுமோ! அவர்கள் விரும்பிய ஒன்றை நான் எடுத்து விட்டேன் என்ற அடிப்படையில் அவர்களுக்கு தொந்தரவு தந்த காரணத்திற்கு நான் ஆளாகி விடுவேனோ, என்ற பயத்தில் தான் நான் அப்படி செய்கிறேன்.

முஹம்மது இப்னு சீரீன் ரஹ்மதுல்லாஹி அலைஹி பல சஹாபாக்களிடத்தில் கல்வி படித்த மிகப்பெரிய தாபியீ. அவரை ஒருவர் பார்க்கிறார். ஒரு சபையில் இருக்கும்போது ஒரு நோயாளியைப் போன்று காட்சி அளிக்கிறார்கள். பயந்து நடுங்கி கூனிக்குறுகி காட்சியளிக்கிறார்கள்.

வந்தவருக்கு தெரியவில்லை, சபையில் யார் இருக்கிறார் என்று. அவர் முஹம்மத் இப்னு சீரின் உடைய மாணவர்.

அவர் கேட்கிறார்; உங்களுக்கு என்ன காய்ச்சலா? பதில் ரொம்ப சப்தம் தாழ்ந்து வருகிறது. உங்களுக்கு என்ன காய்ச்சலா? உடம்பு சரியில்லையா? நோய்நொடியா? என்று.

அப்போது அவர்கள் சொல்கிறார்கள்; என்னுடைய பெற்றோர் அமர்ந்திருக்கிறார்கள்.

எந்த அளவு அந்த உத்தமர்கள் தங்கள் பெற்றோருக்கு முன்னால் பணிந்து நடந்து இருக்கிறார்கள். அவர்கள் மனம் நோகாமல் அவர்களை பேணி இருக்கிறார்கள். ஏன் தெரியுமா?

அல்லாஹ்வின் தூதர் صلىاللهعليهوسلم. அப்படித்தான் சொல்கிறார்கள். அப்துல்லாஹ் இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அறிவிக்கிறார்கள்.

لَا يَدْخُلُ الْجَنَّةَ عَاقٌّ وَلَا مُؤْمِنٌ بِسِحْرٍ وَلَا مُدْمِنُ خَمْرٍ وَلَا مُكَذِّبٌ بِقَدَرٍ

தன் தாய்க்கு மாறு செய்பவர், சொர்க்கம் செல்ல மாட்டார். மது அருந்துபவர், விதியை மறுப்பவர் சொர்க்கம் செல்லமாட்டார்.

அறிவிப்பாளர் : அபுத் தர்தா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 26212.

இப்னு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள். மூன்று மக்களை நாளை மறுமையில் அல்லாஹ் அவர்களோடு பேச மாட்டான். அவர்களைப் பார்க்க மாட்டான்.

பெற்றோருக்கு மாறு செய்தவன்,மது அருந்துபவன், தான் கொடுத்ததை பிறருக்கு தான் தர்மம் செய்ததை சொல்லி காட்டுபவன்.

அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

« أربعة حق على الله أن لا يدخلهم الجنة ولا يذيقهم نعيمها : مدمن الخمر ، وآكل الربا ، وآكل مال اليتيم بغير حق ، والعاق (1) لوالديه »

நான்கு வகையான மக்களை அல்லாஹ் கண்டிப்பாக சொர்க்கம் நுழைக்க மாட்டான். அவர்களுக்கு சொர்க்கத்தின் அருட்கொடைகளில் சுவைக்க வைக்க மாட்டான்.

தொடர்ந்து மது குடித்தவன், வட்டி உண்பவன், அனாதையின் சொத்தை அபகரித்தவன்,தன் பெற்றோருக்கு மாறு செய்தவன்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஹாகிம், எண் : 2220.

கண்ணியத்திற்குரியவர்களே! இப்படி ஏராளமான குர்ஆன் வசனங்களையும்,நபிமொழிகளையும் நாம் பார்க்கிறோம்.

அல்லாஹ்வும்,அல்லாஹ்வின் தூதர் صلىاللهعليهوسلم. அவர்களும்,எந்த அளவுக்கு பெற்றோரை பேணும் விஷயத்தில் கட்டளையிட்டு இருக்கிறார்கள், பெற்றோருக்கு மாறு செய்யும் விஷயத்தில் எந்த அளவுக்கு நமக்கு எச்சரிக்கை செய்திருக்கிறார்கள் என்பதை.

ஆனால், இன்று குர்ஆனை ஏற்றுக்கொள்கின்ற சமூகம், நபிமொழிகளை ஏற்றுக்கொள்கின்ற சமூகம், மறுமையை ஏற்றுக்கொள்கின்ற சமூகம்.

இன்று பார்த்தால் பெற்றோரின் விஷயத்தில் அவர்கள் செய்கின்ற அலட்சியம், அவர்களைப் புறக்கணிக்கின்ற விதம்.

அல்லாஹ் பாதுகாப்பானாக! உறவை துண்டித்தவர் ஒரு சமூகத்தில் இருக்கும்போது அல்லாஹ்வுடைய அருள் இறங்காது

பெற்றோரை துண்டிப்பவரைப் பற்றி என்ன சொல்வது.

உறவுகளை முறிப்பவர்,உறவுகளைப் பேணாதவர் ஒரு சமூகத்தில் இருந்தால், அல்லாஹுடைய கருணை இறங்காது என்று ரஸூல் صلىاللهعليهوسلمஅவர்கள் சொல்லியிருக்கின்றார்கள். ஆனால், பெற்றோர்களையே புறக்கணித்து வருகின்ற ஏராளமான பிள்ளைகளை நாம் பார்க்கின்றோம்.

அல்லாஹ் மன்னிப்பானாக! குர்ஆனின் பக்கம் திரும்புவோமாக! ஹதீஸின் பக்கம் திரும்புவோமாக! அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் صلىاللهعليهوسلمஅவர்கள் கூறிய ஒழுக்கங்களையும் கட்டளைகளையும் பேணுவோமாக! அவர்கள் எந்த விஷயங்களை விட்டு தடுத்தார்களோ,அவற்றை விட்டு நாம் நம்மை பாதுகாத்துக் கொள்வோமாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا عَبْد اللَّهِ حَدَّثَنِي أَبِي حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَنَا إِسْمَاعِيلُ بْنُ عَيَّاشٍ عَنْ صَفْوَانَ بْنِ عَمْرٍو عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرِ بْنِ نُفَيْرٍ الْحَضْرَمِيِّ عَنْ مُعَاذٍ قَالَ أَوْصَانِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَشْرِ كَلِمَاتٍ قَالَ لَا تُشْرِكْ بِاللَّهِ شَيْئًا وَإِنْ قُتِلْتَ وَحُرِّقْتَ وَلَا تَعُقَّنَّ وَالِدَيْكَ وَإِنْ أَمَرَاكَ أَنْ تَخْرُجَ مِنْ أَهْلِكَ وَمَالِكَ وَلَا تَتْرُكَنَّ صَلَاةً مَكْتُوبَةً مُتَعَمِّدًا فَإِنَّ مَنْ تَرَكَ صَلَاةً مَكْتُوبَةً مُتَعَمِّدًا فَقَدْ بَرِئَتْ مِنْهُ ذِمَّةُ اللَّهِ وَلَا تَشْرَبَنَّ خَمْرًا فَإِنَّهُ رَأْسُ كُلِّ فَاحِشَةٍ وَإِيَّاكَ وَالْمَعْصِيَةَ فَإِنَّ بِالْمَعْصِيَةِ حَلَّ سَخَطُ اللَّهِ عَزَّ وَجَلَّ وَإِيَّاكَ وَالْفِرَارَ مِنْ الزَّحْفِ وَإِنْ هَلَكَ النَّاسُ وَإِذَا أَصَابَ النَّاسَ مُوتَانٌ وَأَنْتَ فِيهِمْ فَاثْبُتْ وَأَنْفِقْ عَلَى عِيَالِكَ مِنْ طَوْلِكَ وَلَا تَرْفَعْ عَنْهُمْ عَصَاكَ أَدَبًا وَأَخِفْهُمْ فِي اللَّهِ (مسند أحمد 21060 -)

குறிப்பு 2)

حَدَّثَنَا الْحَسَنُ بْنُ صَبَّاحٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَابِقٍ حَدَّثَنَا مَالِكُ بْنُ مِغْوَلٍ قَالَ سَمِعْتُ الْوَلِيدَ بْنَ الْعَيْزَارِ ذَكَرَ عَنْ أَبِي عَمْرٍو الشَّيْبَانِيِّ قَالَ قَالَ عَبْدُ اللَّهِ بْنُ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ سَأَلْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَيُّ الْعَمَلِ أَفْضَلُ قَالَ الصَّلَاةُ عَلَى مِيقَاتِهَا قُلْتُ ثُمَّ أَيٌّ قَالَ ثُمَّ بِرُّ الْوَالِدَيْنِ قُلْتُ ثُمَّ أَيٌّ قَالَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ فَسَكَتُّ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَوْ اسْتَزَدْتُهُ لَزَادَنِي

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/