இஸ்லாத்தின் பார்வையில் குடும்பக் கட்டுப்பாடு | Tamil Bayan - 112
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
இஸ்லாத்தின் பார்வையில் குடும்ப கட்டுப்பாடு
கண்ணியத்திற்குரிய இஸ்லாமிய பெரியோர்களே! சகோதரர்களே!அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் நினைவுபடுத்தியவனாக. அல்லாஹ்வின் பயத்தை, அல்லாஹ்வின் அச்சத்தை வாழ்க்கையின் எல்லா பகுதிகளிலும் கடைபிடிக்க வேண்டுமென்ற அல்லாஹ்வின் அறிவுரையை எனக்கும் உங்களுக்கும் நினைவுபடுத்தியவனாக தொடங்குகிறேன் .
அல்லாஹு தஆலா நமக்கு சிறந்த ஒரு மார்க்கத்தை தந்திருக்கிறான். யார் அந்த மார்க்கத்தை பற்றி பிடித்தார்களோ அவர்கள் வெற்றியாளர்கள். அந்த மார்க்கம் அல்லாஹ் அங்கீகரித்த மார்க்கம். அந்த மார்க்கம் அல்லாஹ் இறைத்தூதர்களுக்கு வழங்கிய மார்க்கம்.இறைத்தூதர்கள் பின்பற்றி இவ்வுலகிலும் மறுமையிலும் வெற்றி கண்ட மார்க்கம் அந்த மார்க்கம். அந்த மார்க்கம் இப்ராஹீம் (அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம்) அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்த மார்க்கம்.
وَمَنْ يَرْغَبُ عَنْ مِلَّةِ إِبْرَاهِيمَ إِلَّا مَنْ سَفِهَ نَفْسَهُ
மூடன், முட்டாள் ,அறிவீனன், புத்தி இல்லாதவன் இவர்கள் தான் அந்த நேரிய மார்க்கத்தை விட்டு வழிதவருவார்கள்.யாருடைய அறிவிலே கோணல் இருக்குமோ,யாருடைய புத்தியில் தடுமாற்றம் இருக்குமோ,யாருக்கு அல்லாஹ் நேர்வழியின் பாதையை திறக்க வில்லையோ அவர்கள்தான் இந்த மார்க்கத்திலே குறை காணுவார்கள்,இந்த மார்க்கத்தை புறக்கணிப்பார்கள். (அல்குர்ஆன் 2 : 130)
யார் நேரிய ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும், தூய நெறியின் படி வாழவேண்டும், உண்மையான இறைவனை உண்மையான முறையில் பயந்து கொள்ள வேண்டும் என்று நினைப்பார்களோ, நாடுவார்களோ அவர்களுடைய கடைசி எல்லை இந்த மார்க்கமாக தான் இருக்கும்.இந்த மார்க்கத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய இறுதி இறைத்தூதர் தூதர் முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மூலமாக முழுமை படுத்தினான்.
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا
அல்லாஹ் நம் நபிக்கு இறக்கிய வசனம். அதில் கூறுகிறான், இன்றைய தினம் நான் உங்களுக்கு, உங்கள் மார்க்கத்தை முழுமை படுத்தினேன். என் அருளை நிறைவு செய்தேன்.இஸ்லாமை உங்களுக்கு மார்க்கமாக நான் ஏற்றுக் கொண்டேன், அங்கீகரித்தேன் , பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன் 5 : 3)
அந்த இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை அந்த இஸ்லாமிய மார்க்கத்தின் அஸ்திவாரம் எதன்மீது அமைக்கப்பட்டிருக்கிறது என்று தெரியுமா? எல்லா ஏவல் விலக்கல்களுக்கும், எல்லாவிதமான சட்டதிட்டங்களுக்கும் கடை பிடிக்க வேண்டிய ஒழுக்கங்கள் ஆக இருக்கட்டும்,நிறைவேற்றவேண்டிய வணக்க வழிபாடுகளாக இருக்கட்டும்,அல்லது விட்டொழிக்க வேண்டிய சமூக தீமைகள் ஆக இருக்கட்டும் அல்லது தனி மனிதனுக்கோ அல்லது குணத்திற்கோ,பண்பாட்டிற்கோ, ஒழுக்கத்திற்கோ,ஊறு விளைவிக்கக் கூடிய எந்த குணமாக இருக்கட்டும்,அந்த குணத்தை விலக்கிக் கொள்ள வேண்டும்,அதைவிட்டு தூரமாக வேண்டும் என்ற இரண்டு விதமான அடிப்படைகளும்.செய்யவேண்டியவை செய்யக்கூடாதவை இந்த எல்லாவிதமான இஸ்லாமிய சட்டதிட்டங்களுக்கும் அடிப்படை அல்லாஹ்விற்க்கு கட்டுப்படுதல், அவனுடைய தூதருக்குக் கட்டுப்படுதல்.
اطاعة الله عز وجل و اطاعة الرسول
அல்லாஹ்விற்கு கட்டுப்பட வேண்டும். அல்லாஹ்விற்கு பணிய வேண்டும். அல்லாஹ் சொன்னதை எடுத்து நடக்க வேண்டும். அதிலே அறிவை புகுத்தி இப்லீசை போன்று வழிகெட்டு விடக்கூடாது. ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் என்ன சொன்னார்களோ அது நம்முடைய அறிவுக்கு எட்டினாலும் சரி எட்டவில்லை என்றாலும் சரி .நம்முடைய அறிவின் படி அதனுடைய முடிவு தீமையாக இருக்குமென்று மனிதன் நினைத்தாலும் சரி அல்லது அதை முழுமையாக ஏற்றுக் கொண்டாலும் சரி. தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு முழுமையாக கட்டுப்படுதல். அப்படி முழுமையாக கட்டுப்படாதவர் அப்துல்லாஹ் இப்னு உபைப் இப்னு ஸலூல் போன்ற முனாஃபிக்குகளுடைய பட்டியலிலே சேர்ந்து விடுவார்.
اطاعة الله عز وجل و اطاعة الرسول
அல்லாஹ்விற்கு கட்டுப்படுதல். அல்லாஹ்வுடைய தூதருக்கு கட்டுப்படுதல் .இந்த இரண்டு அஸ்திவாரங்களின் மீதுதான் இஸ்லாம் அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த இரண்டும் தனித்தனி அடிப்படைகள் அல்ல. அல்லாஹு தஆலா மிகத்தெளிவாக சொல்லுகின்றான்.
مَنْ يُطِعِ الرَّسُولَ فَقَدْ أَطَاعَ اللَّهَ
தூதருக்கு கட்டுப்பட்டால் தான் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டவர்களாக ஆவீர்கள். தூதரிடத்திலே முரண்பாடு காண்பவர்கள், தூதரை எதிர்ப்பவர்கள், தூதருடைய கூற்றிலே எதிர் கேள்வி கேட்பவர்கள் இவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு விலகிக்கொண்டார்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். (அல்குர்ஆன் 4 : 80)
أَمْ تُرِيدُونَ أَنْ تَسْأَلُوا رَسُولَكُمْ كَمَا سُئِلَ مُوسَى مِنْ قَبْلُ وَمَنْ يَتَبَدَّلِ الْكُفْرَ بِالْإِيمَانِ فَقَدْ ضَلَّ سَوَاءَ السَّبِيل
மூசாவிடத்திலே இஸ்ரவேலர்கள் குதர்க்கங்கள் செய்தது போன்று,இஸ்ரவேலர்கள் எதிர் கேள்வி கேட்டது போன்று நம் தூதர் இடத்திலும் நீங்கள் எதிர் கேள்வி கேட்க விரும்புகிறீர்களா? யார் இறைநம்பிக்கையை ஏற்றதற்கு பிறகு, இறைநிராகரிப்பை எடுத்துக் கொள்கிறானோ அவன் நேரான வழியை விட்டு வழி தவறி விட்டான். (அல்குர்ஆன் 2 : 108)
அதாவது ,தூதருடைய கூற்றிலே முரண்பாடு காணுவது, தூதரை எதிர்த்து பேசுவது, தூதருடைய பேச்சை நிராகரிப்பது. தூதருடைய பேச்சு காலத்திற்க்கு பொருந்தாது, நேரத்திற்கு பொருந்தாது, சமூகத்துக்குப் பொருந்தாது, வியாபாரத்திற்கு பொருந்தாது தொழிலுக்குப் பொருந்தாது, குடும்பத்திற்கு பொருந்தாது, நாட்டுக்கு பொருந்தாது என்று எந்தக் காரணத்தைச் சொல்லி தூதரின் பேச்சை நிராகரித்தால் அவர்களுக்கு அல்லாஹ் சொல்லுகிற எச்சரிக்கை...
இறை நம்பிக்கைக்கு பிறகு யார் இறை நிராகரிப்பை தனக்கு மாற்றிக் கொள்கிறானோ அவர் நேரிய வழியை விட்டு வழிதவறி விட்டார்.
கண்ணியத்துக்குரியவர்களே! அல்லாஹ் சொல்லுகிறான்;
قُلْ أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ فَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا عَلَيْهِ مَا حُمِّلَ وَعَلَيْكُمْ مَا حُمِّلْتُمْ وَإِنْ تُطِيعُوهُ تَهْتَدُوا وَمَا عَلَى الرَّسُولِ إِلَّا الْبَلَاغُ الْمُبِينُ
நபியே! நீங்கள் சொல்லுங்கள். அல்லாஹ்விற்க்குக் கட்டுப்படுங்கள், அல்லாஹ்வுடைய தூதருக்குக் கட்டுப்படுங்கள். அல்லாஹ்விற்கு கட்டுப்படும் போது அடியான் எப்படி இப்லீஸைப்போன்று அறிவை நுழைக்க முடியாதோ, அதுபோன்றுதான் தூதருக்கு கட்டுப்படும் போதும் ஏன் எதற்கு என்ற கேள்வி கேட்கக் கூடாது.
அல்லாஹ் நபியை பார்த்து சொல்கிறான்.நபியே நீங்கள் ஒன்றை சொல்கிறீர்கள் ,ஆனால் மக்கள் அதை ஏற்றுக் கொள்ளாமல் விலகிச் சென்றால் உங்களுக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை நீங்கள் செய்து விட்டீர்கள்.நபியின் பொறுப்பு என்ன சத்திய மார்க்கத்தை எடுத்துச் சொல்லுவது. (அல்குர்ஆன் 24 : 54)
அதைக்கேட்பவர்களுடைய கடமை என்ன அதை ஏற்றுக்கொள்வது. இப்படித்தான் நான் பிரித்து வைத்து இருக்கிறேனே தவிர சொல்லுகின்ற நீங்கள் கேட்கின்ற மக்களை வலுக்கட்டாயப்படுத்தி நேர்வழியில் கொண்டு வந்துவிட வேண்டும்,அதைச் செய்யும் படி ஆக்கிவிட வேண்டும் என்பது உங்கள் கடமை அல்ல. பிறகு அல்லாஹ் மிகப் பெரிய ஒரு எச்சரிக்கையை நமக்குச் சொல்கிறான்.
இதிலே யார் அடங்குவார்கள். ஐங்காலத் தொழக் கூடிய மக்கள் வருவார்கள். நோன்பு நோற்கிற மக்கள் வருவார்கள். ஹஜ் செய்கிற மக்கள் வருவார்கள். ஜக்காத்து கொடுக்கின்ற மக்கள் வருவார்கள். இஸ்லாமிய பிரச்சாரம் செய்கிற அழைப்பாளர்கள் வருவார்கள் . மார்க்கத்தை கற்ற ஆலிம்கள் வருவார்கள். வியாபாரிகள் வருவார்கள் தொழிலாளிகள் வருவார்கள். எல்லா முஸ்லிம்களும் வருவார்கள். பிறகு எல்லா மக்களும் வருவார்கள்.அல்லாஹ் சொல்கிறான்;
وَإِنْ تُطِيعُوهُ تَهْتَدُوا
அந்த தூதருக்கு நீங்கள் பணிந்து நடந்தால், அந்த தூதருக்கு நீங்கள் கட்டுப்பட்டு நடந்தால், அவருக்கு நீங்கள் கீழ்ப்படிந்து நடந்தால், அவருடைய பேச்சை நீங்கள் கேட்டு நடந்தால் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள்.
எவ்வளவு பெரிய எச்சரிக்கை பாருங்கள். தூதருக்கு கட்டுப்பட்டால் தான் நேர்வழி. .ஒருவர் தொழுகிறார் ஆனால் தூதரோடு முரண்பாடு கொள்கிறார் அவர் நேர்வழியில் அல்ல .ஒருவர் ஹஜ் செய்கிறார் ஆனால் தூதரோடு முரண்பாடு கொள்கிறார். அவர் நேர்வழியில் அல்ல. ஒருவர் தானதர்மங்கள் செய்கிறார்,இஸ்லாமியப் பிரச்சாரம் செய்கிறார் , மார்க்கக் கல்வியை போதிக்கிறார் ஆனால் தூதரோடு முரண்படுகிறார் அவர் நேர்வழியில் அல்ல.
وَإِنْ تُطِيعُوهُ تَهْتَدُوا
நீங்கள் அவர்களுக்குக் கட்டுப்பட்டால் தான் அவருக்கு கீழ்ப்படிந்து நடந்தால் தான் அவருடைய பேச்சை கேட்டால்தான். எந்த நிபந்தனையும் இல்லாமல். அல்லாஹ் சொல்கிறான். நீங்கள் நேர் வழி பெறுவீர்கள்.
சூரா முஹம்மது உடைய வசனத்திலே அல்லாஹ் சொல்கிறான்;
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ
நம்பிக்கையாளர்களே! தங்களை முஃமீன் என்று சொல்லுகின்ற கூட்டமே!! தங்களை, மூஃமீன்கள் என்று சொல்லுகிற கூட்டமே நீங்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்படுங்கள் .ரசூலுக்கு கட்டுப்படுங்கள். உங்கள் செயல்களை வணக்க வழிபாடுகளை பாழாக்காதீர்கள். (அல்குர்ஆன் 47 : 33)
எவ்வளவு பெரிய ஒரு எச்சரிக்கை இந்த வசனத்தில் இருக்கிறது தெரியுமா?ஒருவர் வணக்க வழிபாடு செய்கிறார். தொழுகிறார், நோன்பு வைக்கிறார், ஜகாத் கொடுக்கின்றார், தானதர்மங்கள் செய்கிறார், நல்லொழுக்கங்களை பேணுகிறார் ஆனால் தூதரோடு முரண்பாடு கொள்கிறார்
وَلَا تُبْطِلُوا أَعْمَالَكُمْ
உங்களுடைய அமல்கள் எல்லாம் நாசமாகிவிடும் அப்படி செய்யாதீர்கள். தூதரோடு முரண்படுவது நல்ல அமல்களை நாசமாக்கிவிடும். ஈமானையும் நாசமாக்கிவிடும். எதை நாசமாக்கிவிடும் ,ஈமானை நாசமாக்கிவிடும்.அல்லாஹ் உண்டு என்று நம்பிக்கை கொள்கிறான், மறுமை உண்டு என்று நம்பிக்கை கொள்கிறான், சொர்க்கம் உண்டு என்று நம்பிக்கை கொள்கிறான் ஆனால் அவனுக்கு சொர்க்கம் கிடைக்காது காரணம், அல்லாஹ்வுடைய தூதருக்கு முரண்பட்டதால்.
கண்ணியத்துக்குரியவர்களே! உங்களுக்கு தெரியுமா? ஹுனைன் யுத்தம்.ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கனிமத்தை பங்கு வைத்துக் கொடுத்து கொண்டு இருக்கிறார்கள்.அப்பொழுது ஒருவர் வருகிறார்.முஹம்மதே நீதமாக பங்கு வையுங்கள்.நீங்கள் அல்லாஹ்வின் முகத்தை நாடி பங்கு வைக்கவில்லை என்று தூதரோடு முரண்படுகிறார்.அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்களுடைய முகம் சிவந்து விட்டது.சொன்னார்கள்;
فَمَنْ يَعْدِلُ إِنْ لَمْ يَعْدِلْ اللَّهُ وَرَسُولُهُ
நான் நீதம் செலுத்த வில்லை என்றால் யாரால் நீதம் செலுத்த முடியும். நான் அல்லாஹ்வை பயப்படவில்லை என்றால் யாரால் அல்லாஹ்வை பயப்பட முடியும். (1)
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 1759
பிறகு, அவர் திரும்பியதற்குப் பிறகு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள், இவ்வாறு நரகத்தின் நாயாக இருப்பார் என்று. அல்லாஹ் பாதுகாப்பானாக. இவருடைய ஒரு வமிசத்திலிருந்து இவருடைய கொள்கையை ஏற்று வந்தவர்கள் தான் இஸ்லாமிய வரலாற்றிலேயே முதன் முதலாக இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக கலகம் செய்த காரிஜியாக்கள்.ஸஹாபாக்களுக்கு எதிராக வாள் தூக்கிய காரிஜியாக்கள்.இவர்களை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், நரகத்தில் மிக கீழ் தரத்திலே இருப்பார்கள் என்று சொன்னார்கள்.இவர்களை கொள்பவர்களுக்கு மிகப்பெரிய நன்மை உண்டு என்று ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாக்கு கொடுத்தார்கள்.
கண்ணியத்துக்குரியவர்களே! என்ன காரணம்? தூதரோடு முரண்படுவது. இந்த அடிப்படைகளை புரிந்ததற்க்குப் பிறகு நாம் அல்லாஹ்வுக்கு கட்டுப்படவேண்டும். அல்லாஹ்வுடைய தூதருக்கு கட்டுப்பட வேண்டும் என்ற உண்மையை நாம் புரிந்ததற்கு பிறகு, நம்முடைய நாடு அப்படி இல்லையே. நாம் வாழக்கூடிய தேசம் அப்படி இல்லையே என்று குதர்க்கம் பேசக்கூடாது, என்று மார்க்கத்தை நிராகரிக்கக்கூடாது. நம்மால் முடிந்த அளவு சத்தியத்திற்காக போராடவேண்டும்.
தன் சுய வாழ்க்கையிலே அல்லாஹ்விற்கு எப்படி நான் கட்டுப்படுவேன். என்னுடைய குடும்ப வாழ்க்கையிலே ரசூல் உடைய ஒழுக்கங்களை பேணி நான் எப்படி குடும்பம் நடத்துவேன் என்று முயற்சி செய்து கொண்டே இருக்க வேண்டும். ஏற்படுகிற தவறுகளுக்கு அல்லாஹ்விடத்திலே வருந்திக் கொண்டே இருக்கவேண்டும், மன்னிப்பு கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.
இன்று பொதுவாக சமுதாய மக்களால் பின்பற்றப்பட்ட ஒரு பழக்கம். காஃபிர் நாடுகளிலே வசிக்கிறோம், முஷ்ரிக்குகளுக்கு மத்தியில் வசிக்கிறோம், மஜூஸிகளுக்கு மத்தியிலே வசிக்கிறோம், கொள்கைகளை விற்ற சமுதாய ஒழுக்கங்களை விற்ற சமூகத் துரோகிகளுக்கு மத்தியிலே வசித்து கொண்டிருக்கிறோம். இதற்க்கு மத்தியிலே இஸ்லாமிய மக்களுக்கு இடையிலும் அந்த கலாச்சார தாக்கம், அந்த சிந்தனைத் தாக்கம் ஏற்படுவதை நாம் ஒரு ஆச்சரியப்படுவதற்க்குள்ள விஷயமாக இல்லை.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய புத்தகம் அல்குர்ஆனிலே, ஷிர்க் இணைவைத்தலை மிக பயங்கரமாக கண்டிக்கிறான் .அல்லாஹ்விற்கு சமமாக ஒருவரை வணங்குவது.அது கோயிலில் வணங்கினாலும் சரி அல்லது சர்ச்சிலே வழங்கினாலும் சரி அல்லது தர்ஹாக்கள் என்ற சமாதிகளில் வணங்கினாலும் சரி.
முஸ்லிம் என்ற பெயர் வைத்துக்கொண்டு அப்துல்லாஹ் என்று பெயர் வைத்துக்கொண்டு வணங்கினாலும் சரி, அல்லது வேறு ஒரு அரபி அல்லாத பெயர்களை வைத்துக்கொண்டு வணங்கினாலும் சரி. அல்லாஹ் அல்லாதவரை வணங்குவது.அல்லாஹ் புனிதப்படுத்த வேண்டும் என்று கூறியதைத் தவிர மற்ற விஷயங்களை புனித படுத்துவது. இவை அல்லாஹ்விடத்திலே ஷிர்க் இணைவைத்தல் என்ற பயங்கரமான குற்றம் .மன்னிக்க முடியாத குற்றம். மன்னிப்பு கேட்காமல் இறந்துவிட்டால் மன்னிப்பு கிடையாது .அது ஒரு நபி, தன்னுடைய நேசர் கலீல் உடைய தந்தை செய்தாலும் சரி குற்றம். அவர் குற்றவாளி என்று அல்லாஹ் திட்டவட்டமாக எழுதிவிட்டான் .
கண்ணியத்துக்குரியவர்களே! ஷிர்க்கைப்பற்றி நம்மிலே பலர், அல்ஹம்துலில்லாஹ் கவனமாக இருக்கின்றோம். அல்ஹம்துலில்லாஹ். அல்லாஹ்வுக்கே எல்லாப்புகழும். அல்லாஹ் இறுதிவரை உண்மையான முஸ்லிம்களாக நம்மை ஆக்கி அருள்வானாக. எல்லா விதத்திலும் அல்லாஹ்வுக்கு இணை வைக்காத ஒரு தூய முஸ்லிம்களாக அல்லாஹ் நம்மை ஆக்கி அருள்வானாக.
அல்லாஹ் உடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதுபோன்று அல்லாஹூ ஸூப்ஹானஹூ தஆலா அவனுடைய புத்தகம் அல்குர்ஆனிலே பல பாவங்களை, பல பெரும் குற்றங்களை இணைவைத்தலுக்கு சமமாக கண்டிக்கிறான். இணைவைத்தலோடு சேர்த்து அல்லாஹ் கண்டிக்கிறான். எங்கே முஷ்ரிக்குகளுடைய செயல்களை பற்றி அல்லாஹ் கண்டிக்கிறானோ, அந்த இடத்திலே முஷ்ரிக்குகள் இடத்திலுள்ள இந்த செயலையும் அல்லாஹ் கண்டிக்கிறான்.
சூரா அல்அன்ஆம் உடைய 137 வது வசனம் 6 வது அத்தியாயம்
وَكَذَلِكَ زَيَّنَ لِكَثِيرٍ مِنَ الْمُشْرِكِينَ قَتْلَ أَوْلَادِهِمْ شُرَكَاؤُهُمْ لِيُرْدُوهُمْ وَلِيَلْبِسُوا عَلَيْهِمْ دِينَهُمْ وَلَوْ شَاءَ اللَّهُ مَا فَعَلُوهُ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ
இவ்வாறே, இணைவைத்து வணங்குபவர்களில் பலர் (தாங்களே) தங்கள் குழந்தைகளைக் கொலை செய்வதை அவர்கள் அழகாகக் காணும்படி அவர்களுடைய தெய்வங்கள் செய்து அவர்களைப் படுகுழியில் தள்ளி, அவர்களுடைய மார்க்கத்தையும் குழப்பமாக்கி விட்டன. அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். ஆகவே, (நபியே!) நீர் அவர்களையும் அவர்களுடைய பொய்க்கூற்றுகளையும் விட்டு விடுவீராக.
இதே சூரா அல்அன்ஆம் உடைய ஆறாவது அத்தியாயத்தினுடைய இதற்கு அடுத்து மூன்று வசனங்கள் கழித்து 140 வது வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்
قَدْ خَسِرَ الَّذِينَ قَتَلُوا أَوْلَادَهُمْ سَفَهًا بِغَيْرِ عِلْمٍ وَحَرَّمُوا مَا رَزَقَهُمُ اللَّهُ افْتِرَاءً عَلَى اللَّهِ قَدْ ضَلُّوا وَمَا كَانُوا مُهْتَدِينَ
எவர்கள் அறிவின்றி மூடத்தனத்தால் தங்கள் குழந்தைகளைக் கொலை செய்தார்களோ அவர்களும், எவர்கள் அல்லாஹ் (புசிக்கக்) கொடுத்திருந்த (நல்ல)வற்றை (ஆகாதென) அல்லாஹ்வின் மீது பொய் கூறித்தடுத்துக் கொண்டார்களோ அவர்களும் நிச்சயமாக நஷ்டமடைந்து விட்டார்கள். ஆகவே, அவர்கள் நேர்வழி பெற்றவர்களாக இருக்கவில்லை; நிச்சயமாக தீய வழியிலேயே சென்றுவிட்டனர்
அடுத்து சூரா அல்அன்ஆம் உடைய ஆறாவது அத்தியாயத்தில் 151 வது வசனத்தில் அல்லாஹ் சொல்லுகிறான்.
قُلْ تَعَالَوْا أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ أَلَّا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ مِنْ إِمْلَاقٍ نَحْنُ نَرْزُقُكُمْ وَإِيَّاهُمْ
(நபியே! அவர்களைநோக்கி) கூறுவீராக: ‘‘வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்தவற்றை(யும் ஏவியிருப்பவற்றையும்) நான் உங்களுக்கு ஓதிக்காண்பிக்கிறேன். (அவையாவன:) அவனுக்கு எதையும் நீங்கள் இணையாக்காதீர்கள். (உங்கள்) தாய் தந்தையுடன் மிக அழகிய முறையில் நடந்துகொள்ளுங்கள் (அவர்களுக்கு உதவி செய்யுங்கள்). வறுமைக்குப் பயந்து உங்கள் பிள்ளைகளை நீங்கள் கொலை செய்யாதீர்கள். (ஏனென்றால்,) உங்களுக்கும் அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். இரகசியமாகவோ, பகிரங்கமாகவோ உள்ள மானக்கேடான விஷயங்களில் எதற்கும் நெருங்காதீர்கள். (கொலைசெய்யக்கூடாதென்று) அல்லாஹ் தடைசெய்துள்ள எந்த மனிதனையும் நியாயமின்றி கொலை செய்யாதீர்கள். நீங்கள் (தவறுசெய்யாது) உணர்ந்து கொள்வதற்காக (இறைவன்) உங்களுக்கு இவற்றை (விவரித்து) உபதேசிக்கிறான்.
ஒரே அத்தியாயத்திலேயே இந்த கருத்தை சற்று குறைந்த இடைவெளிக்குள் மூன்று இடங்களிலே அல்லாஹ் குறிப்பிடுகிறான். அப்படி என்ன ஒரு பெரும் பாவமாக இருக்கும்.
கண்ணியத்துக்குரியவர்களே! அய்யாமுல் ஜாஹிலிய்யாவில் வாழ்ந்த முஷ்ரிக்குகளுக்கு மத்தியில் இந்த பழக்கம் இருந்தது. தங்கள் பெண் பிள்ளைகளை கொல்வார்கள் .ஒரு கூட்டம் ,அரபுகளின் ஒரு கூட்டம் தங்கள் பெண் பிள்ளைகளை கொல்லுவார்கள். காரணம்? பெண் பிள்ளைகள் பிறந்தால், அது தங்கள் சமூகத்துக்கு இழக்கு.இழிவு என்று அந்த பெண் பிள்ளைகளை கொன்று வந்தார்கள். இதை அல்லாஹ் பயங்கரமாக கண்டிக்கிறான்.
இரண்டாவது ஒரு கூட்டம் இருந்தார்கள். இவர்கள் பொதுவாகவே அதிகமாக பிள்ளைகள் பெற்றால் பிரச்சனை. குடும்பத்திலே வறுமை ஏற்பட்டுவிடும்.விசாலமான வசதியான வாழ்க்கை வாழ முடியாது. வறுமை அதிகரித்து விடும். என்ற நம்பிக்கையில் குழந்தை பெறாமல் இருந்தார்கள் .அப்படி ஏதாவது குழந்தை பெற்றுவிட்டாலும் அந்த குழந்தையை கொன்று கொண்டிருந்தார்கள். குர்ஆனிலே பல இடங்களிலே பிறந்த பெண் குழந்தைகளை, பிறந்த பெண் குழந்தைகளை உயிரோடு புதைப்பதை அல்லாஹ் கண்டித்திருப்பது போன்று, வறுமையை பயந்து, வசதியான வாழ்க்கைக்கு இடையூறாக அமைந்துவிடும், செழிப்பான வாழ்க்கைக்கு இடையூறாக அமைந்துவிடும்,
அதிகமான பிள்ளைகள் பெற்றால் சொத்துகளை பங்கு வைத்துக் கொடுக்கவேண்டும் .அதிகமான பிள்ளைகள் பெற்றால் ஒவ்வொரு நாளும் வசதியாக உணவை சுவைத்து சாப்பிட முடியாது. பண நெருக்கடி ஏற்பட்டு விடும், பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு விடும், வேலை வாய்ப்பு குறைந்து விடும் என்ற பயத்தில் எல்லாம் குழந்தைகளை கொல்கிற வழக்கம் அய்யாமுல் ஜாஹிலிய்யாவிலும் இருந்தது. அந்த ஒரு பெரும் பாவத்தை தான் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த சூரா அல் அன்ஆம் உடைய 6 வது அத்தியாயத்தில் மூன்று வசனங்களில் சொல்லுகிறான். அல்லாஹ் குறிப்பிடுகின்றான்...
وَكَذَلِكَ زَيَّنَ لِكَثِيرٍ مِنَ الْمُشْرِكِينَ قَتْلَ أَوْلَادِهِمْ شُرَكَاؤُهُمْ لِيُرْدُوهُمْ وَلِيَلْبِسُوا عَلَيْهِمْ دِينَهُمْ وَلَوْ شَاءَ اللَّهُ مَا فَعَلُوهُ فَذَرْهُمْ وَمَا يَفْتَرُونَ
இணைவைப்பவர்களுக்கு, அவர்களுடைய இணை தெய்வங்கள் அவர்கள் யாரை வணங்குகிறார்களோ அது சிலைகளாக இருக்கட்டும் அல்லது அவர்களுடைய சமுதாய தலைவர்களாக இருக்கட்டும். இன்று பார்க்கிறோம் அல்லவா முட்டாள்கள் ஆட்சியிலே பேசுகிறார்கள் ,குழந்தை பெற்காதீர்கள். ஒன்று போதும், இரண்டு போதும் அல்லது குழந்தையே தேவையில்லை என்று.
இதுபோன்று தான் அந்த அய்யாமுல் ஜாஹிலிய்யாவில் அரபுகளுக்கு மத்தியிலும் குலம் கோத்திரம் இருந்தது. அந்த கோத்திரத்தின் தலைவருக்கு ,அந்த கோத்திர மக்கள் எல்லாம் அப்படியே..... கட்டுப்பட்டு நடப்பார்கள் .அவர்கள் எதைச் சொன்னார்களோ அதைச் செய்வார்கள். அவர்கள் தடுத்ததை விட்டு விலகிக் கொள்வார்கள் .அவர்களை தான் அல்லாஹ் இங்கே குறிப்பிடுகிறான்.
அவர்கள் யாரை அல்லாஹ்வுக்கு இணையாக மதித்தார்களோ அல்லது வழிப்பாட்டில் இருக்கட்டும் அல்லது கீழ்ப்படிவதிலே இருக்கட்டும். சட்ட திட்டங்களிலே இருக்கட்டும் .இந்த இணைகள் இவர்களுக்கு அலங்கரித்துக் காட்டின. குழந்தைகளை கொல்வதை. ஏன்?
ليردوهم
இவர்களை அழிப்பதற்காக. குழந்தைகள் கொல்வது அதனுடைய முடிவு என்ன, விபரீதமான முடிவு என்ன? இவர்களை அழிக்க வேண்டும். நாசத்திலே தள்ள வேண்டும் . எதனால்? ஒரு பெரிய அபாயம் பயங்கரம் இருக்கிறது அந்த அபாயத்திலே அந்த பயங்கரத்திலே சமூகத்தை தள்ளவேண்டும்
தங்களுடைய வழிபாட்டை இவர்கள் மீது குழப்ப வேண்டும் என்பதற்காக. இந்த வசனத்திலே அல்லாஹ் இப்படி சொல்லுகிறான்.அடுத்து 140 ஆவது வசனத்திலே அல்லாஹ் சொல்வது இன்னும் அதிகமாக கண்டிக்கிறான்.
قَدْ خَسِرَ الَّذِينَ قَتَلُوا أَوْلَادَهُمْ سَفَهًا بِغَيْرِ عِلْمٍ وَحَرَّمُوا مَا رَزَقَهُمُ اللَّهُ افْتِرَاءً عَلَى اللَّهِ قَدْ ضَلُّوا وَمَا كَانُوا مُهْتَدِينَ
முட்டாள்தனமாக, மூடத்தனமாக, அறிவு கெட்ட தனமாக யார் கல்வி இல்லாமல் ஒழுக்கம் இல்லாமல் ,ஞானம் இல்லாமல் தங்கள் பிள்ளைகளை கொன்றார்களோ ,அவர்கள் நஷ்டமடைந்தார்கள்.
(سفاه) முட்டாள்தனம், மூடத்தனம், அறிவு கெட்டத்தனம், கேவலம் (بغير علم) ஞானம் இல்லாமல்,புரியாமல் இதனுடைய விபரீதத்தை உணர்ந்து கொள்ளாமல். அல்லாஹ் சொல்கிறான்.
و حرموا ما رزقهم الله
அல்லாஹ் அவர்களுக்கு கொடுத்த நிஃமத்தை அவர்கள் தங்களுக்கே தடுத்துக் கொண்டார்கள்.
இன்று மக்கள் நம்பி வைத்திருக்கிற நம்பிக்கை என்ன? ஒரு குழந்தை போதும்,இரண்டு குழந்தை போதும் .ராஹத்.அடுத்த குழந்தை பிறந்தால் அது ஆபத்து ,அது பிரச்சனை, அதனால் வறுமை ஏற்பட்டுவிடும். அல்லாஹ்வுடைய நிஃமத்தை அவர்கள் தங்களுக்கு தடுத்துக் கொண்டார்கள்.
وَحَرَّمُوا مَا رَزَقَهُمُ اللَّهُ افْتِرَاءً عَلَى اللَّهِ
அல்லாஹ் மீது கட்டுகிறார்கள் கதைகளை, பொய்களை. அல்லாஹ்வுக்கு உணவு கொடுக்க முடியாதா? அல்லாஹ்விடத்திலே வாழ்வாதாரம் இல்லையா? அல்லாஹ்வுடைய கஜானா காலியாகிவிட்டதா? அல்லாஹ் கேட்கிறான்.
இப்படி சொல்வது, இப்படி நினைப்பது ,
அல்லாஹ்வின் மீது பொய்யை நினைப்பது,பொய்யான கற்பனை இது.
இவர்கள் வழிகெட்டவர்கள். இவர்கள் ஹிதாயத்திலே இல்லை.
151 வது வசனத்தில் அல்லாஹ் சொல்கிறான்.. நபியே நீங்கள் மக்களுக்கு சொல்லுங்கள். மக்களே!! வாருங்கள் .நான் உங்களுக்கு ஓதி காட்டுகிறேன்,விவரிக்கிறேன். அல்லாஹ் உங்கள் மீது தடுத்த பாவங்கள் என்ன என்ன என்று. என்ன தெரியுமா முதலாவது பாவம்,
أَلَّا تُشْرِكُوا بِهِ شَيْئًا
அல்லாஹ்விற்க்கு எதையும் இணை ஆக்காதீர்கள்.அல்லாஹ்விற்கு எதையும் சமமாக ஆக்காதீர்கள். மலக்கை அல்லாஹ்விற்கு சமமாக்க முடியாது. நபியை அல்லாஹ்விற்க்கு சமமாக்க முடியாது.ரசூலை அல்லாஹ்விற்கு சமமாக்க முடியாது .எந்த ஒரு வலியையும் சாலிஹான ஷஹீதையும் அல்லாஹ்வுக்கு சமமாக்க முடியாது. அடுத்து அல்லாஹ் சொல்கிறான்;
وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا
பெற்றோருடன் உபகாரமாக நல்ல முறையிலே நடந்து கொள்ளுங்கள். கண்ணியமாக நடந்து கொள்ளுங்கள் என்று. மூன்றாவது அல்லாஹ் சொல்கிறான்.
وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ مِنْ إِمْلَاقٍ
வறுமையை பயந்து நெருக்கடி ஏற்பட்டுவிடும். பொருளாதார நெருக்கடி, வேலைவாய்ப்பு நெருக்கடி, தங்குமிடங்களிலே நெருக்கடி,எந்த நெருக்கடியாக இருந்தாலும் சரி,
நெருக்கடியை பயந்து உங்கள் பிள்ளைகளை கொல்லாதீர்கள். அல்லாஹ் சொல்கிறான் முட்டாள்களே உங்களுக்கு உணவளிப்பவன் யார்? நான் எனக்கு ரப் ஆக முடியுமா ?நான் எனக்கு உணவளிக்கின்ற இறைவனாக ஆக முடியுமா?
உனக்கும்,அவர்களுக்கும் உணவளிப்பவன் நான். நான் உணவளித்து வருகிறேன்.
نَحْنُ نَرْزُقُكُمْ وَإِيَّاهُمْ
அவர்களுக்கும் நாம் தான் உணவு அளிக்கிறோம். உங்களுக்கும் நாம்தான் உணவளிக்கிறோம்.
இதே வசனத்தில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ,இதே அந்த வாசகத்தை ஸுரத்துல் இஸ்ரா உடைய 31வது வசனத்திலும் அல்லாஹ் சொல்கிறான்.
وَلَا تَقْتُلُوا أَوْلَادَكُمْ خَشْيَةَ إِمْلَاقٍ نَحْنُ نَرْزُقُهُمْ وَإِيَّاكُمْ إِنَّ قَتْلَهُمْ كَانَ خِطْئًا كَبِيرًا
(மனிதர்களே!) நீங்கள் வறுமைக்குப்பயந்து உங்கள் குழந்தைகளைக் கொலைசெய்து விடாதீர்கள். நாம் தான் அவர்களுக்கும் உங்களுக்கும் உணவளிக்கிறோம். அவர்களைக் கொலை செய்வது நிச்சயமாக (அடாத) பெரும்பாவமாகும். (அல்குர்ஆன் 17 : 31).
கண்ணியத்துக்குரியவர்களே! சிந்தித்துப் பார்த்தோமா? எவ்வளவு பெரிய பயங்கரமான பாவம். அல்லாஹ் காஃபிர்களுடைய செயல் என்று சொல்கிறான் .முஷ்ரிக்குகளுடைய செயல் என்று சொல்கிறான் மூடர்களுடைய செயல் என்று சொல்கிறான் வீணானவர்களுடைய செயல் என்று சொல்கிறான். கல்வியற்றவர்கள் அல்லாஹ்வையும், அல்லாஹ்வுடைய மார்க்கத்தையும் அறியாதவர்களுடைய செயல் என்று சொல்கிறான். இன்று இந்த வார்த்தை பேமிலி பிளானிங். (Family planning.) பர்த் கண்ட்ரோல். (birth control.)
இன்றைய வசதியான வாழ்க்கையிலே, வசதியாக வாழ்வதற்கு அதிகமான பிள்ளைகளை பெற்றால், இடையூறாக இருக்கும் .சில கல்விமான்களிடத்திலே, சமீபத்திலே ஒரு பத்திரிக்கையாளர் கேள்வி கேட்கிறார். உங்களுடைய சமுதாய மக்கள் அதிகமான பிள்ளைகளைப் பெற்றுக் கொள்கிறார்களே, வேலைவாய்ப்புகளுக்கு இடையூறாக இருக்கிறதே, என்று கேட்கும்போது அந்த கல்விமான் பதில் சொல்கிறார்.
சமுதாய சிந்தனை மாற்றுமத கலாச்சாரத்தால் சீர்கெடும் போது, அதிலே ஆலிம்களும் கூட விதிவிலக்காக இருக்க முடியாது. அந்த அளவிற்கு இந்த நெருப்பு தீப்பற்றி எரிகிறது.என்ன சொல்கிறார்கள். அதெல்லாம் அந்தக் காலத்திலே இருந்தது. இந்தக் காலத்திலே எங்களுடைய முஸ்லிம் சமுதாயம் கல்வியிலே முன்னேற வேண்டும், கண்ணியமான வாழ்க்கை வாழவேண்டும், பொருளாதாரத்திலே உயரவேண்டும் ,சிறந்த வாழ்க்கை வாழ வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள். எனவே அவர்கள் இப்போது இப்படி செய்வதில்லை.என்ன வார்த்தை இது. எப்படிப்பட்ட வார்த்தை இது .அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்அவர்கள் சொன்னார்கள்.
ஒரு மனிதர் கேட்கிறார் அல்லாஹ்வின் தூதரே! பாவத்திலே எது பயங்கரமான பாவம். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பதில் சொன்னார்கள்.
عَنْ عَمْرِو بْنِ شُرَحْبِيلَ قَالَ قَالَ عَبْدُ اللَّهِ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَيُّ الذَّنْبِ أَكْبَرُ عِنْدَ اللَّهِ قَالَ أَنْ تَدْعُوَ لِلَّهِ نِدًّا وَهُوَ خَلَقَكَ قَالَ ثُمَّ أَيٌّ قَالَ ثُمَّ أَنْ تَقْتُلَ وَلَدَكَ خَشْيَةَ أَنْ يَطْعَمَ مَعَكَ قَالَ ثُمَّ أَيٌّ قَالَ ثُمَّ أَنْ تُزَانِيَ بِحَلِيلَةِ جَارِكَ فَأَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ تَصْدِيقَهَا{وَالَّذِينَ لَا يَدْعُونَ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ وَلَا يَقْتُلُونَ النَّفْسَ الَّتِي حَرَّمَ اللَّهُ إِلَّا بِالْحَقِّ وَلَا يَزْنُونَ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ يَلْقَ أَثَامًا }
الْآيَةَ (صحيح البخاري 6354 -)
அல்லாஹ்விற்கு நிகர் இருக்கிறது என்று சொல்வது. இஸ்லாமிய மார்க்கத்திலே முதலில் ஷிர்க்கை தகர்க்க வேண்டும் .ஷிர்க் இல்லாத இஸ்லாம் உருவனால்தான் அங்கே வெற்றி கிடைக்கும். ஷிர்க்கை வைத்துக்கொண்டு என்ன கோஷங்கள் போட்டாலும் சரி,என்ன முயற்சிகள் செய்தாலும் சரி எந்த முயற்சியும் பலன் அளிக்காது .ஆகவேதான் அல்லாஹ்வின்தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்தில் எங்கெல்லாம் கேள்வி கேட்கப்பட்டதோ, அங்கெல்லாம் பதில் என்ன பார்க்கலாம். முதலிலே ஷிர்க்கை ஒழிக்கும் படியான செயல். இரண்டாவது அந்த சஹாபி கேட்டார்கள்;
யாரஸூலல்லாஹ் ஷிர்கிற்கு அடுத்த பெரும் பாவம் எது? ஷிர்க்கிற்க்கு அடுத்த பெரும் பாவம் எது?
உன்னுடைய குழந்தையை நீ கொன்றுவிடுவது. உன்னோடு அமர்ந்து அவன் சாப்பிடுவதை பயந்து.
இது எதைப்பற்றி சொல்கின்றார்கள். குழந்தை கருவிலே இருக்கும்போதே குழந்தையை கொன்று விடுவதை, அல்லது பிள்ளைகள் பெற்றுக் கொள்வதை தவிர்ப்பதை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கிறார்கள்;
சில அறிஞர்கள் எப்படி தவறாக புரிந்து வைத்திருக்கிறார்கள். குழந்தை பிறந்ததற்கு பிறகு கொல்வதுதான் தவறு பர்த் கன்ட்ரோல் (birth control) செய்வதோ அல்லது பேமிலி பிளானிங் (family planning) செய்வதோ இஸ்லாத்திலே தடை செய்யப்பட்டது அல்ல என்று விளங்குகிறார்கள், விளக்குகிறார்கள். உண்மையில் அப்படியில்லை. கண்ணியத்துக்குரியவர்களே!
குர்ஆனை ஆராய்ந்தவர்கள், ஹதீஸை ஆராய்ந்தவர்கள் ஒருபோதும் அப்படி சொல்ல மாட்டார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வார்த்தை என்ன தெரியுமா
تَزَوَّجُوا الْوَدُودَ الْوَلُودَ فَإِنِّي مُكَاثِرٌ بِكُمْ الْأُمَمَ (سنن أبي داود 1754 -)
அதிகம் குழந்தைகளைப் பெற்றுத் தரக்கூடிய, அதிகமாக உங்களை நேசிக்கக் கூடிய பெண்ணை நீங்கள் மண முடியுங்கள்.அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.(2)
அறிவிப்பாளர்: மஃகல் இப்னு யசார் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: அபூ தாவூத், எண்: 1754
تناكحوا تكثروا فإني أباهي بكم الأمم
நூல்: பைஹகீ
أَلَا إِنَّ كُلَّ نَبِيٍّ قَدْ مَضَتْ دَعْوَتُهُ إِلَّا دَعْوَتِي فَإِنِّي قَدِ ادَّخَرْتُهَا عِنْدَ رَبِّي إِلَى يَوْمِ الْقِيَامَةِ أَمَّا بَعْدُ فَإِنَّ الْأَنْبِيَاءَ مُكَاثِرُونَ فَلَا تُخْزُونِي فَإِنِّي جَالِسٌ لَكُمْ عَلَى بَابِ الْحَوْضِ
அதிகமாக குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். குழந்தையை அதிகம் பெருக்குங்கள். உங்கள் மூலமாக நான் மறுமையிலே சந்தோஷம் அடைவேன். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். ஹவ்லுல் கவ்ஸரிலே நான் எதிர்பார்த்து இருப்பேன். ஒவ்வொரு நபியும் தம் சமூகத்தவர்களை எதிர்பார்த்து இருப்பார்கள். நானும் என் சமூகத்தவர்களை எதிர்பார்த்து இருப்பேன். அந்த நேரத்திலே நீங்கள் குறைவாக வந்து என்னை கேவலப்படுத்தாதீர்கள்.(3)
அறிவிப்பாளர்: அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: மஜ்மஉ சவாயித் எண்: 5636
இந்த வார்த்தை எதைச் சொல்கிறது? இஸ்லாமிய மார்க்கத்திலே முஸ்லிம்களுடைய அடிப்படை ,அதிகக் குழந்தைகளைப் பெறுவது. அதிக குழந்தைகளைப் பெறுவது அல்லாஹ்வுடைய நிஃமத். அல்லாஹ்வுடைய அருள்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள், அதிகமாக நீங்கள் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். உங்களுக்கு தெரியாது எந்தக் குழந்தையின் மூலமாக அல்லாஹ் உங்களுடைய வாழ்வாதாரத்தை விரிவாக்குகிறான் என்று. எந்தக் குழந்தையின் மூலமாக அல்லாஹ் உங்களுடைய வாழ்வாதாரத்தை விரிவாக்குகிறான் என்று உங்களுக்கு தெரியாது.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களுடைய ஸஹாபாக்களுக்கு துஆ செய்தார்கள். யா அல்லாஹ்! இவருடைய சந்ததியை பெருக்குவாயாக, அதிகமாக்குவாயாக என்று. இஸ்லாமிய மார்க்கத்தில் இன்னும் மிகச் சிறந்த ஒரு அம்சம் என்ன தெரியுமா? இந்த சந்ததிகளை பெருக்க வேண்டும் என்பதற்காகவே,
உலகத்திலே லா யிலாஹ இல்லல்லாஹ் என்று மொழியக்கூடிய, முஹம்மது ரசூலுல்லாஹ் என்று பறைசாற்றகூடிய, அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக போராடக்கூடிய, அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக பிரச்சாரம் செய்யக்கூடிய, அல்லாஹ்வுடைய தீனை பேணக்கூடிய முஸ்லிம்கள், தியாகிகள் உருவாக வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனுடைய இந்த மார்க்கத்திலே பலதார மணத்தை ஆர்வமூட்டினான். வலியுறுத்தினான். அதற்க்கு உண்டான வழிகளை அல்லாஹ் இலகுவாக்கிக் வைத்தான் .திருமணத்தைப் பற்றி அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பேசும்போது
فَانْكِحُوا مَا طَابَ لَكُمْ مِنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ
நீங்கள் பெண்களை இரண்டாக முடியுங்கள் அல்லது மூன்றாக முடியுங்கள் அல்லது நன்காக முடியுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். உங்களுக்கு பயம் இருக்கிறது நீதம் செலுத்த முடியாது என்று, உங்களுக்கு பயம் இருந்தால் நீங்கள் ஒன்றை போதுமாக்கிக்கொள்ளுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் 4 : 3)
ஆர்வபடுத்துவது எது, ஆசையூட்டுவது எது? எதன் பக்கம் அல்லாஹ் முதலாவதாக கவனத்தை செலுத்துகிறான். பார்க்கிறோம்.இன்றைய கேடுகெட்ட இந்த முஷ்ரிக் சமுதாயத்திற்கு மத்தியிலே வாழுகின்ற நிர்பந்தத்தில் ஆக்கப்பட்ட நாம், எப்படியெல்லாம் சிந்தனை தாக்கங்களுக்கு ஆளாகி இருக்கிறோம்.
இன்று நம்மிலே எத்தனை சகோதரர்கள் எத்தனை மக்கள் இந்த பலதார மணத்தை வெறுப்பவர்கள் இருக்கிறார்கள். இந்த பலதார மணத்தை ஏளனமாக பேசுபவர்கள் இருக்கிறார்கள். பலதாரமணம் செய்தவர்களை குத்தி பேசுபவர்கள் எத்தனை பேர்.அல்லது அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய ரசூலும் போடாத கண்டிஷன்களை இதற்கு போடக்கூடியவர் எத்தனை பேர். ஒரு முஹல்லாவிலே ஒரு தஃப்தர் வாங்கி விட முடியுமா அடுத்து திருமணத்திற்கு.? எத்தனை கண்டிஷன்கள், எத்தனை கேள்வி.
ஜினா –விபச்சாரம் செய்வது இலகுவாகி விட்டது .சில குடும்பத்திலே சொல்கிறார்கள் ,உனக்கு மனைவி பிடிக்கவில்லை என்றால் அங்கே இங்கே போய்க்கொண்டு வந்துவிடு .ஆனால் அதற்காக இன்னொரு திருமணம் செய்து விடாதே என்று. அல்லாஹ் பாதுகாப்பானாக! .எவ்வளவு கேவலமான சிந்தனை.
அதுபோன்று செல்வந்தர்கள், தங்களை படித்தவர்கள், தாங்கள் பெரிய சமுதாயத்தின் நேர் சிந்தனை உள்ளவர்கள் என்று தங்களை போற்றிக் கொள்பவர்களுடைய நிலைமை என்ன? நாங்கள் கல்யாணம் முடித்தோம் ஒரு குழந்தை போதும். அதோடு முடிந்தது. அதற்குப்பிறகு என்ன பேமிலி பிளானிங். ஒன்று நிரந்தரமாக கருப்பையை அறுத்து விடுவது, இல்லை என்றால் அதோடு முடித்துக் கொள்வது. இவர்களுடைய தொழுகை வீணானது. இவர்களுடைய இறை நம்பிக்கை வீணானது. இதை நான் சொல்லவில்லை. அல்லாஹ் சொல்கிறான். இது முஷ்ரிக்குகளுடைய செயல். எதற்காக இவர் இப்படி செய்கிறார்.
ஒரு நண்பர் இடத்திலே கேட்டபொழுது அவர் சொல்கிறார் .ஒரு பிள்ளையை பெற்று, அவரை நன்றாக படிக்க வைத்து, சொத்துபத்து எல்லாம் அவருக்காக சேர்த்து வைத்தால் நிம்மதியாக இருப்பார். எதற்காக இன்னொரு பிள்ளையை பெற்றுக்கொண்டு கடைசியில் சொத்தை பங்கு வைத்துக் கொண்டு பிரச்சனையாகி கொண்டு. எப்படி சொல்கிறார்கள்? சொத்தை பங்கு வைத்து எதற்கு பிரச்சினையாகி கொண்டு. ஒரு குழந்தையை பெற்றோமா எல்லா சொத்தையும் அவனுக்கு கொடுத்தோமா முடிந்துவிட்டது. ஒரு குழந்தை பெற்றோமா அவரை நன்றாக படிக்க வைத்தோமா முடிந்துவிட்டது.எப்படி இவர்கள் தங்களுடைய வாழ்க்கைகளை இவர்களாகவே விதித்துக்கொள்கிறார்கள். அல்லாஹ் சொல்லுகிறான்
أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي وَأَنَا مَعَهُ
என்னுடைய அடியான் என்னை எப்படி எண்ணுகிறானோ அப்படியே நான் நடந்து கொள்கிறேன்.எனவே என் மீது நல்லெண்ணம் வையுங்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். (4)
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 6856
அல்லாஹ் எனக்கு அதிகமான குழந்தைகளை கொடுக்க வேண்டும். ஒருவரை கல்விமானாக ஆக்குவேன். ஒருவரை இஸ்லாமிய பிரச்சாரராக ஆக்குவேன். ஒருவரை அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு போராடக்கூடிய முஜாஹிதாக ஆக்குவேன். என்று நல்ல எண்ணங்கள் வைத்தால், அவருடைய வாழ்வாதாரங்களை அல்லாஹ் லேசாக்கி கொடுப்பான் என்று வைத்தால் அல்லாஹ் அதற்கு ஏற்ப நடத்திகாட்டுவான்.
ஆனால் இவர் வைப்பது என்ன? எல்லா செல்வத்தையும் தான் சம்பாரித்தது போன்று. எல்லா செல்வமும் தம்முடைய அறிவினால் கொண்டு வந்தது போன்று, காரூனுடைய எண்ணத்தில் உடையவர்கள். யாருடைய எண்ணம்? காரூனுடைய எண்ணத்தை உடையவர்கள். இவர்களுடைய குடும்பம் பார்ப்பதற்கு இஸ்லாமிய குடும்பமாக வெளியிலே தோன்றினாலும், கண்ணியத்திற்குரியவர்களே அல்லாஹ் இதை அங்கீகரிக்க மாட்டான். எது வரை? முஷ்ரிக்குகளுடைய கொள்கை, முஷ்ரிக்குகளுடைய நம்பிக்கை இவர்களிடத்திலே இருக்கும்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த விஷயத்தை குர்ஆனிலே இவ்வளவு அழுத்தமாக சொல்கிறான்.அல்லாஹ்வுடைய தூதர் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகக் கடுமையாக சொல்லுகின்றார்கள் .ஒரு நபி தோழர் வருகிறார். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே, அல்லாஹ்வின் தூதரே எனக்கு ஒரு பெண் கிடைத்து இருக்கிறாள். அவள் மிக அழகாக இருக்கிறாள். வசதி உள்ளவனாக இருக்கிறாள். ஆனால் அவளுக்கு குழந்தை பேறு கிடையாது. அவளால் குழந்தை பெற்றுக்கொள்ள முடியாது. இவளை நான் மணமுடித்துக் கொள்ளட்டுமா என்று. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
لا
மணமுடிக்காதே .மூன்று முறை கேட்கிறார் .பிறகு பிறகு என மூன்று முறை கேட்கிறார். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வேண்டாமென்று சொல்லி விடுகிறார்கள். (2)
யோசித்துப் பாருங்கள். இன்று என்ன சமுதாயத்திலே நடக்கிறது. மார்க்க அறிஞர்கள் எங்கே அனுமதி தருகிறார்கள் என்றால், எந்த இடத்திலே இனி பெண் குழந்தை பெற்றால் அவளுடைய உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்று பயம் ஏற்படுகிறதோ அந்த நேரத்தில்தான் பெண் கருவுறுவதை, கற்பமாவதை தடை செய்து கொள்வதற்கு அனுமதி அளிக்கிறது.
அதைத்தவிர வறுமையை பயந்தோ, வசதியான வாழ்க்கை பறிபோய்விடும் என்று பயந்தோ அல்லது இந்த உலகத்திலே மக்கள் ஜனத்தொகை நெருக்கடி ஏற்பட்டு விடும் என்று பயந்தோ ஒருவர் அதிக குழந்தைகளை பெறுவதை தவிர்த்தால் அவர் அல்லாஹ்விற்கு இணை வைக்கக் கூடிய கூட்டத்திலே இருப்பார். அவர் தொழுதாலும் நோன்பு வைத்தாலும் சரி மற்ற அமல்களை செய்து தன்னை முஸ்லிமாக கருதினாலும் சரி.
குறிப்புகள் :
குறிப்பு 1).
حَدَّثَنَا زُهَيْرُ بْنُ حَرْبٍ وَعُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ قَالَ إِسْحَقُ أَخْبَرَنَا و قَالَ الْآخَرَانِ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ أَبِي وَائِلٍ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ لَمَّا كَانَ يَوْمُ حُنَيْنٍ آثَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَاسًا فِي الْقِسْمَةِ فَأَعْطَى الْأَقْرَعَ بْنَ حَابِسٍ مِائَةً مِنْ الْإِبِلِ وَأَعْطَى عُيَيْنَةَ مِثْلَ ذَلِكَ وَأَعْطَى أُنَاسًا مِنْ أَشْرَافِ الْعَرَبِ وَآثَرَهُمْ يَوْمَئِذٍ فِي الْقِسْمَةِ فَقَالَ رَجُلٌ وَاللَّهِ إِنَّ هَذِهِ لَقِسْمَةٌ مَا عُدِلَ فِيهَا وَمَا أُرِيدَ فِيهَا وَجْهُ اللَّهِ قَالَ فَقُلْتُ وَاللَّهِ لَأُخْبِرَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَأَتَيْتُهُ فَأَخْبَرْتُهُ بِمَا قَالَ قَالَ فَتَغَيَّرَ وَجْهُهُ حَتَّى كَانَ كَالصِّرْفِ ثُمَّ قَالَ فَمَنْ يَعْدِلُ إِنْ لَمْ يَعْدِلْ اللَّهُ وَرَسُولُهُ قَالَ ثُمَّ قَالَ يَرْحَمُ اللَّهُ مُوسَى قَدْ أُوذِيَ بِأَكْثَرَ مِنْ هَذَا فَصَبَرَ قَالَ قُلْتُ لَا جَرَمَ لَا أَرْفَعُ إِلَيْهِ بَعْدَهَا حَدِيثًا (صحيح مسلم 1759 -)
குறிப்பு 2).
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا مُسْتَلِمُ بْنُ سَعِيدٍ ابْنَ أُخْتِ مَنْصُورِ بْنِ زَاذَانَ عَنْ مَنْصُورٍ يَعْنِي ابْنَ زَاذَانَ عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ قَالَ جَاءَ رَجُلٌ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنِّي أَصَبْتُ امْرَأَةً ذَاتَ حَسَبٍ وَجَمَالٍ وَإِنَّهَا لَا تَلِدُ أَفَأَتَزَوَّجُهَا قَالَ لَا ثُمَّ أَتَاهُ الثَّانِيَةَ فَنَهَاهُ ثُمَّ أَتَاهُ الثَّالِثَةَ فَقَالَ تَزَوَّجُوا الْوَدُودَ الْوَلُودَ فَإِنِّي مُكَاثِرٌ بِكُمْ الْأُمَمَ (سنن أبي داود 1754 -)
குறிப்பு 3).
وَعَنْ أَبِي أُمَامَةَ صُدَيِّ بْنِ عَجْلَانَ الْبَاهِلِيِّ قَالَ: «جَاءَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي حَجَّةِ الْوَدَاعِ عَلَى نَاقَةٍ حَتَّى وَقَفَ وَسَطَ النَّاسِ فِي يَوْمِ عَرَفَةَ فَقَالَ: " أَيُّ يَوْمٍ هَذَا؟ ". فَقَالُوا: يَوْمُ عَرَفَةَ الْيَوْمُ الْحَرَامُ. قَالَ: " فَأَيُّ شَهْرٍ؟ ". قَالُوا: فِي الشَّهْرِ الْحَرَامِ. قَالَ: " فَأَيُّ بَلَدٍ هَذَا؟ ". قَالُوا: الْبَلَدُ الْحَرَامُ. قَالَ: " فَإِنَّ أَمْوَالَكُمْ وَأَعْرَاضَكُمْ وَدِمَاءَكُمْ عَلَيْكُمْ حَرَامٌ كَيَوْمِكُمْ هَذَا فِي شَهْرِكُمْهَذَا فِي بَلَدِكُمْ هَذَا أَلَا إِنَّ كُلَّ نَبِيٍّ قَدْ مَضَتْ دَعْوَتُهُ إِلَّا دَعْوَتِي فَإِنِّي قَدِ ادَّخَرْتُهَا عِنْدَ رَبِّي إِلَى يَوْمِ الْقِيَامَةِ أَمَّا بَعْدُ فَإِنَّ الْأَنْبِيَاءَ مُكَاثِرُونَ فَلَا تُخْزُونِي فَإِنِّي جَالِسٌ لَكُمْ عَلَى بَابِ الْحَوْضِ». الكتاب: مجمع الزوائد ومنبع الفوائد المؤلف: أبو الحسن نور الدين علي بن أبي بكر بن سليمان الهيثمي (المتوفى: 807هـ) المحقق: حسام الدين القدسي
குறிப்பு 4).
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا الْأَعْمَشُ سَمِعْتُ أَبَا صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اللَّهُ تَعَالَى أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي وَإِنْ ذَكَرَنِي فِي مَلَإٍ ذَكَرْتُهُ فِي مَلَإٍ خَيْرٍ مِنْهُمْ وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ بِشِبْرٍ تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ ذِرَاعًا تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعًا وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً) صحيح البخاري (6856 –