HOME      Khutba      தொழுகையைப் பேணுவீர் | Tamil Bayan - 37   
 

தொழுகையைப் பேணுவீர் | Tamil Bayan - 37

           

தொழுகையைப் பேணுவீர் | Tamil Bayan - 37


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
 
தொழுகையைப் பேணுவீர்
 
அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் அறிவுரை கூறியவனாக அல்லாஹ்வின் அச்சத்தை உங்களுக்கும் எனக்கும்நினைவுபடுத்தியவனாகநம்முடையஎல்லா காரியங்களிலும் அல்லாஹ்வை பயந்து வாழுமாறு நம்முடையசொல் செயல் நம்முடைய அனைத்து விதமான காரியங்களிலும்  அல்லாஹ்வின் அச்சத்தை முன்னிறுத்தி அல்லாஹ்வின் கட்டளைகளை பேணி வாழுமாறு உங்களுக்கும் எனக்கும் நினைவுறுத்தி உபதேசம் செய்தவனாக இந்தஜும்மா உரை ஆரம்பம் செய்கின்றேன். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! ஒன்றை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள வேண்டும் நம்முடைய மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். நாம் இந்த உலகத்தில் படைக்கப்பட்டதன் நோக்கம் அல்லாஹ்வை வணங்குவதற்காக, நாம் அல்லாஹ்வின் அடிமைகள், அல்லாஹ்  நம்மை படைத்திருக்கிறான் அவனை நாம் வழிபட வேண்டும் என்பதற்காக தவிர வேறு இல்லை. 
 
அல்லாஹ்  சுப்ஹானஹு தஆலா  நம்மை படைத்ததின் நோக்கம் நாம் அவனை வணங்கி வழிபட வேண்டும் என்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இல்லை. நம்மை படைப்பதை கொண்டு அல்லாஹ் வேறு எதையும் நாடவில்லை. அவன்  நம்மிடமிருந்து வேறு எதையும் எதிர்பார்க்கவில்லை. அவன் எதிர்பார்க்கின்ற ஒரே ஒரு தன்மை என்னவென்றால் அல்லாஹ்வை நாம் வணங்கி வழிபட வேண்டும். நாம் அவனுடைய அடிமைகள் என்பதை உணர வேண்டும். 
 
அல்லாஹ் சுபஹானஹு தஆலா   இதை குர்ஆனில் பல இடங்களில் தெளிவாக வலியுறுத்தி சொல்கிறான்.
 
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ
 
"மனிதர்களையும் ஜின்களையும் என்னை அவர்கள் வணங்குவதற்காகவே தவிர நான் படைக்கவில்லை"(அல்குர்ஆன் 51:56).
 
இந்த வசனம் நமக்குத் தெளிவாக தருகின்ற பாடம்  என்னவென்றால், அல்லாஹு தஆலா நம்மை படைத்த நோக்கத்தை சொல்லிக் காட்டுகிறது. ரப்புல் ஆலமீன் கூறக்கூடிய   இந்த வசனம் நம்மை  ஏன் இந்த பூமியிலே படைத்தான்? நாம் எதற்காக படைக்கப்பட்டோம் என்ற அடிப்படை நோக்கத்தை உணர்த்துகிறது.
 
ஆகவேதான் யார் ஒருவர் தான் படைக்கப்பட்ட நோக்கத்தை புரிந்து கொள்ளவில்லையோ, அல்லாஹ்வை வணங்குவது தான் என் வாழ்க்கையின் நோக்கம் என்பதை அறிந்து கொள்ளவில்லையோ,  அவர் அல்லாஹ்வின் அடியான் ஆகவோ,  அல்லாஹ்வை ஏற்றுக் கொண்ட, அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்ட முஸ்லிமாகவோ  இருக்க முடியாது. 
 
அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட முஸ்லிம் யாரென்றால், அல்லாஹ்விற்கு கட்டுப்படக்கூடிய முஸ்லிம் யார் என்றால், யார் ஒருவர் அல்லாஹ் என்னை அவனை  வணங்குவதற்காகத்  தான் படைத்தான் என்ற நோக்கத்தை புரிந்து அதற்கேற்ப வாழ்க்கையை அமைத்து வாழ்கின்றாரோ அவர்தான். யார் அந்த நோக்கத்தை புரிந்து கொள்ளாமல் அதற்கேற்ப தனது வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வில்லையோ அவர்களை அல்லாஹு தஆலா தனது அடியார்களாக அங்கீகரிப்பது கிடையாது. 
 
அல்லாஹு சுப்ஹானஹு தஆலா பெருமைக்குரியவன்,கண்ணியத்திற்குரியவன்,  உயர்வுக்குரியவன் அவன்தான் வணங்கப்படுவதற்கு தகுதியானவன். அல்லாஹு தஆலா  எப்போது நாம் அவனை வணங்குகின்றோமோ,  புகழ்கின்றோமோ,  அவனை நாம் துதிக்கின்றோமோ அப்போது  அல்லாஹ்  மகிழ்ச்சி அடைகின்றான். அல்லாஹூ சுப்ஹானஹூ தஆலா பெரும் எண்ணிக்கை  உடைய வானவர்களை அவனை வணங்குவதற்காகவே படைத்திருக்கிறான். அல்லாஹ் வானவர்களை முழுமையாகவே அவனை வணங்குவதற்காக படைத்துள்ளான். முழு நேரத்தையும் முழு ஆயுள் காலத்தையும் அவனை வணங்குவதற்காக  செலவழிக்க வேண்டும் என்பதற்காகவே அல்லாஹ் வானவர்களை படைத்தான். 
 
நபி ஸல்லல்லாஹு (அலை )அவர்கள் வானவர்கள் பற்றி குறிப்பிடும் போது, 
 
நீங்கள் பார்க்கிறீர்கள் அல்லவா! மேல் இருக்கிற வானங்களை,  இந்த வானத்திலே ஒரு பாதத்தின் அளவு கூட இடம் காலியாக இல்லை. ஒரு  மலக்கு ருகூவில்   இருந்து கொண்டு அல்லாஹ்வை வணங்கிக் கொண்டு இருக்கிறார். அல்லது இன்னொரு மலக்கு  சுஜூதில்  இருந்து கொண்டு அல்லாஹ்வை வணங்கிக்கொண்டிருக்கிறார். அல்லாஹுதஆலா  ஏழாவது வானத்திலே " அல் பைத்துல் மஃமூர்" என்ற இல்லத்தை கட்டியிருக்கிறான். அந்த இல்லம் எப்படிப்பட்டதென்றால், 
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்:
ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் மலக்குகள் "பைத்துல் மஃமூர்" என்ற அல்லாஹ்வின் வீட்டிற்குள் சென்று அல்லாஹ்வை வணங்கி விட்டு வெளியேறுகிறார்கள் மீண்டும் அவர்கள் அந்த பள்ளிக்கு வருவதற்கு அவர்களுக்கு வாய்ப்பு ஏற்படுவது கிடையாது. 
இதிலே இரண்டு விஷயங்களை நமக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உணர்த்துகின்றார்கள் . ஒன்று அல்லாஹ் படைத்த மலக்குகளின் எண்ணிக்கை மிக அதிகம். இரண்டாவது அல்லாஹ்வை வணங்குவதற்காக அந்த மலக்குகள் இருக்கிறார்கள். (1)
அல்லாஹ்  அவர்களைப் பற்றி சொல்லும்போது, 
 
وَمَنْ عِنْدَهُ لَا يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِهِ وَلَا يَسْتَحْسِرُونَ  
 
நபியே! உம்முடைய இறைவன் இடத்தில் இருக்கக்கூடிய வானவர்கள் அந்த அல்லாஹ்வைவணங்குவதை விட்டு அவர்கள் பெருமை அடித்து விலகுவது கிடையாது. (அல்குர்ஆன் 21 : 19)
 
يُسَبِّحُونَ اللَّيْلَ وَالنَّهَارَ لَا يَفْتُرُونَ
 
"இடைவிடாமல் அவர்கள் இரவிலும், பகலிலும் அவனைத் துதித்துக் கொண்டே இருக்கிறார்கள்."(அல்குர்ஆன் 21:20)
 
அவர்கள் சோர்வடைவது கிடையாது. தொடர்ந்து அல்லாஹ்வை புகழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். அல்லாஹ்வை வணங்கிக் கொண்டே இருக்கிறார்கள். அல்லாஹ்வுடைய புகழை உயர்த்திக் கொண்டே இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு தூய படைப்பை அல்லாஹு தஆலா தன்னை வணங்குவதற்காகவே படைத்துள்ளான். 
 
அடுத்து, மனித படைப்பாகிய நம்மை அல்லாஹு தஆலா நமக்கு இச்சையையும் கொடுத்து நமக்கு தேவையையும் கொடுத்து ரப்புல் ஆலமீன் நம்மை சோதிக்கின்றான். மனிதன் இவனுடைய வாழ்க்கையிலே தன்னுடைய இச்சையை முன்னிலைப்படுத்துகிறானா?  தன்னுடைய தேவையை முன்னிலைப்படுத்துகிறானா?  தன்னுடைய வாழ்வாதாரத்தை முன்னிலைப்படுத்துகிறானா? அல்லது தன்னைப் படைத்த ரப்புடைய இபாதத்தை இவன் முன்னிலை படுத்துகிறானா? இவனுடைய வாழ்க்கை எதற்காக வேண்டியிருக்கிறது.? 
 
ஆம். வியாபாரம் செய்வது,  தொழில்துறைகள்,  நம்முடைய அன்றாட வாழ்விற்கு உண்டானவற்றை சம்பாதிப்பது இவையெல்லாம்  அன்புக்குரியவர்களே! அல்லாஹ்வின் நல்லடியார்களே !நம்முடைய வாழ்க்கையின் தேவைகள் தானே தவிர,  இவற்றை சேகரிப்பது இவற்றுக்காக நம்முடைய நேரங்களை கழிப்பது நமது வாழ்க்கையின் நோக்கம் இல்லை. நாம் பிறந்தது படைக்கப்பட்டது எதற்காக என்றால் ரப்புல் ஆலமீன் உடைய இபாதத்திற்காகவும் அல்லாஹ்வை வணங்குவதற்காகவும்  தான்.
 
அல்லாஹ்வை வணங்குவதிலே நமது உள்ளங்கள்  ஈடுபட வேண்டும். நம்முடைய உள்ளங்கள் அமைதி பெற வேண்டும்.
 
أَلَا بِذِكْرِ اللَّهِ تَطْمَئِنُّ الْقُلُوبُ
 
" அல்லாஹ்வை நினைவு கூறுவதிலே  உள்ளங்கள் அமைதி பெறுகின்றன".(அல்குர்ஆன் 13 : 28)
 
எத்துணை வணக்க வழிபாட்டு வகைகள் இருக்கின்றனவோ அந்த எல்லா  வகைகளைக்  கொண்டு அல்லாஹ்வை வணங்க வேண்டும். 
 
அல்லாஹ்  சுப்ஹானஹு தஆலா இந்த மனித படைப்புகளிலே உயர்ந்தவர்களாக இருக்கும்  இறைத்தூதர்களை பற்றி  குர்ஆனில் குறிப்பிடும்போது, எங்கெல்லாம் அவர்களைப்பற்றி   அல்லாஹ் சொல்கிறானோ,  எந்த இடத்தில் எல்லாம் அவர்களுடைய உயர்வுகளை  மேன்மைகளைப் பற்றி நமக்கு சொல்லித் தருகிறான்றானோ அந்த  இறைத்தூதர்களை பற்றி நமக்குக் எப்படி வருணிக்கின்றான். படித்து பார்த்தீர்களா?  அவர்கள் செல்வந்தர்களாக இருந்தார்கள். பெரிய ஆடம்பர வாழ்க்கைக்கு சொந்தக்காரர்களாக இருந்தார்கள். இந்த பூமியில் ஆட்சி அதிகாரங்கள் செய்தார்கள் என்று அல்லாஹ்  சொல்லுகின்றானா? 
 
ஆம்,  சுலைமான் நபி (அலை) தாவூத் நபி அலைஹிஸ்ஸலாம் அய்யூப் (அலை) போன்றவர்கள்  அரசர்களாகவும்  இருந்து இறைத் தூதர்களாகவும்  இருந்த நபிமார்களை குறிப்பிடும் போது கூட அந்த நபிமார்களுடைய வணக்கங்களை தான் அல்லாஹ்  முன்னிலைப்படுத்துகின்றான்.அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டிற்காக அல்லாஹ்வுடைய நினைவிற்காக  வேண்டி,  அல்லாஹ்வுடைய இபாதத்திற்காக வேண்டி,   அவர்கள் எடுத்துக்கொண்ட பிரயாசைகள்,  அவர்கள் எடுத்துக்கொண்ட சிரமங்கள், அவர்களுக்கு இருந்த ஈடுபாடுகள்.
 
சுலைமான் அலைஹிவஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் இந்த உலகத்தின் பெரிய ஆட்சியை கொடுத்திருந்தான்.
 
குதிரைப் படைகள் அவர்களுக்கு அலங்கரிக்கப்பட்டு மாலை  நேரத்திலே காட்சிக்கு வைக்கப்படுகின்றன. சுலைமான் நபி அந்த காட்சியை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தார்கள். ஜிஹாதுக்காக  நம்மிடத்திலே  இவ்வளவு பெரிய ஏற்பாடு இருக்கிறதே என்பதாக!. அதில் அவருடைய அஸர் தொழுகை தவறி விட்டது. 
 
அல்லாஹ்வின் நல்லடியார்களே ! நினைத்துப்பாருங்கள்! தொழுகையை மறப்பதற்கு காரணமாக இருந்த இந்த உலக அலங்காரங்கள் எனக்குத் தேவையில்லை என்பதாக அனைத்து குதிரைகளையும் அறுத்து அல்லாஹ்வின் பாதையில் குர்பானி கொடுத்து விட்டார்கள். (அல்குர்ஆன் 38 : 31)
 
فَسَخَّرْنَا لَهُ الرِّيحَ  
 
அல்லாஹ் சுபஹானஹு தஆலா  நபி சுலைமான் உடைய அந்தத் தியாகத்தை ஏற்றுக்கொண்டு அதற்கு பதிலாக அல்லாஹ்  காற்றை வசப்படுத்திக் கொடுத்தான். (அல்குர்ஆன் 38 : 36)
 
குதிரையிலே வாகனித்து  சென்று கொண்டிருந்த  சுலைமான் நபி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ் காற்றை வாகனமாக ஆக்கினான். அவர்களுக்கு மட்டுமல்ல,  அவர்களின் முழு  ராணுவங்களையும் தன்னிலே  சுமந்து செல்லக்கூடிய காற்றை அவர்களுக்கு அல்லாஹ் வசப்படுத்திக் கொடுத்தான்.
 
அல்லாஹ் தஆலா நபி தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பற்றிச் சொல்லும்போது,
 
نِعْمَ الْعَبْدُ إِنَّهُ أَوَّابٌ 
 
அடியார்களிலே மிகச் சிறந்தவர்கள்.என்னையே முன்னோக்கியவர்கள். (அல்குர்ஆன் 38 : 30)
 
அல்லாஹ்வை வணங்குவதற்காக வாழ்க்கையில் நிறைய நேரங்களை அவர்கள் கணக்கீட்டு முறைபடுத்தி வைத்திருந்தார்கள். எந்த அளவிற்கு அல்லாஹ்வை வணங்குவார்கள் என்று சொன்னால்,  அல்லாஹ்வுடைய இபாதத்திலே அவர்கள் நின்று விட்டார்கள் என்றால், வேறு எந்த கவனமும்,  வேறு எந்த சிந்தனையும் அவர்களுக்கு வராது. அந்த அளவு  முழுமையாக அல்லாஹ்வை வணங்குவதில் தங்களுடைய நேரங்களை முறைப்படுத்தி வைத்திருந்தார்கள். 
 
அன்பிற்குரியவர்களே! இறைத்தூதர்களை பற்றி அல்லாஹ் புகழ்ந்து கூறுகின்றான். இறுதியாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நாம் பார்க்கிறோம். அல்லாஹு தஆலா எப்படி அவர்களுக்கு  கட்டளை இட்டானோ, எப்படி அவர்களுக்கு  அல்லாஹ் ஷரீஅத்தை கொடுத்தானோ, அந்த ஷரீஅத் உடைய  சட்டங்களை எப்படிப் பேணினார்களோ  அல்லாஹ்வுடைய இபாதத்தை அதுபோல பேணினார்கள். அல்லாஹ்வை வணங்குவதில் தனது வாழ்க்கையின் பெரும் பகுதியை கழித்தார்கள்.
 
ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்:
 
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ حَدَّثَنَا مِسْعَرٌ عَنْ زِيَادٍ قَالَ سَمِعْتُ الْمُغِيرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ إِنْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَقُومُ لِيُصَلِّيَ حَتَّى تَرِمُ قَدَمَاهُ أَوْ سَاقَاهُ فَيُقَالُ لَهُ فَيَقُولُ أَفَلَا أَكُونُ عَبْدًا شَكُورًا (صحيح البخاري 1062 -)
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் இரவில் நின்று வணங்குவார்கள். அவர்களுடைய பாதங்கள் வீங்கி விடும்.நான் கேட்பேன் அல்லாஹ்வின் தூதர் இடத்திலே, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுடைய முன் பின் பாவங்களை மன்னித்து இருக்கிறானே! நீங்கள் இப்படி சிரமப்பட்டு கொள்கிறீர்களே !"அதற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல் (அலை) அவர்கள் பதிலளிப்பார்கள்,"  நன்றி உள்ள ஒரு அடியானாக நான் ஆக வேண்டுமே!".
 
நூல்: புகாரி, எண்: 1062
 
அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா  ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சொல்கின்றான்: 
 
فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَكُنْ مِنَ السَّاجِدِينَ (98) وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ
 
நீர் உமது இறைவனைத் துதி செய்து புகழ்ந்து அவனுக்குச் சிரம் பணிந்து வணங்குவீராக;
 
உமக்கு ‘எகீன்' (என்னும் மரணம்) ஏற்படும் வரை (இவ்வாறே) உமது இறைவனை வணங்கிக் கொண்டிருப்பீராக! (அல்குர்ஆன் 15 : 98,99)
 
அல்லாஹ்விற்கு  வணக்க வழிபாடுகளில் பிடித்தமான வணக்க வழிபாடு தொழுகை.இந்த தொழுகையிலேயே அல்லாஹ்வுக்கு பிடித்தமான நிலைமை அடியான் சுஜூதில் இருப்பது.உச்சக்கட்ட பணிவை, பணிவின் எல்லையை அல்லாஹ்விற்கு வெளிப்படுத்தக்கூடிய ஒரு நிலைப்பாடு இருக்கிறது என்று சொன்னால்,  அல்லாஹ்   படைத்த இந்த உடலில் சிறந்த பகுதியான முகத்தை, உயர்ந்த பகுதியான இந்த தலையை மண்ணிலே சாய்த்து விடுவதுதான். 
 
யாஅல்லாஹ்! உனக்கு முன்பு  நான் பணிந்து விட்டேன். நான் உன்னுடைய அடிமை எனக்கென்று எந்த பெருமையும் கிடையாது. எனக்கென்று எந்த உயர்வும்கிடையாது. உனக்கு முன்பு நீ படைத்த அடிமை,  உன்னுடைய  கட்டளைக்கு நான் கட்டுப்பட்டு விட்டேன்.யா அல்லாஹ்! உனக்கு எது  பிடிக்குமோ அது எனக்கு பிடிக்கும்.நான்  உன்னுடைய அப்து, நான் முழுமையாக  உன் முன்பு சரணடைந்து விட்டேன் என்று தனது  பணிவை  வெளிப்படுத்தக்கூடிய அந்த காட்சிதான்,  அந்த நிலைமைதான் சுஜூது.ஆகவே தான், 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல் (அலை) அவர்கள் சொன்னார்கள் :
 
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَقْرَبُ مَا يَكُونُ الْعَبْدُ مِنْ رَبِّهِ وَهُوَ سَاجِدٌ فَأَكْثِرُوا الدُّعَاءَ (صحيح مسلم744 -)
 
"ஒரு அடியான் தனது ரப்புடனே  நெருக்கமாக இருக்கக் கூடிய நேரம் அவன் சுஜுதுலே  இருக்கக்கூடிய நேரம்.அந்த சுஜூதிலே அல்லாஹ்விடத்தில் நீங்கள் பிரார்த்தனை அதிகமாக கேளுங்கள்.துவாவை அதிகமாக கேளுங்கள்."
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 744
 
سُبْحَانَ اللّٰهِ, سُبْحَانَ رَبِّيَ الْأَعْلٰى   رَبِّ اغْفِرْ  لِيْ   
 
இன்னும் எத்துனை துனியா ஆகிரத் உடைய  தேவைகள் நமக்கு இருக்குமோ அந்தத் தேவைகளை எல்லாம் அல்லாஹ்விடத்தில் கேட்டு பெறுவதற்கு அல்லாஹ் கொடுத்த சிறந்த நிலைமை தான் சுஜுதுடைய நிலைமை. அல்லாஹு தஆலா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு சொல்லுகின்றான்;
 
. وَكُنْ مِنَ السَّاجِدِينَ  15:98
 
"நபியே! சுஜூதில் நீங்கள் சேர்ந்து விடுங்கள். ஸுஜூது செய்பவர்கள் உடனே நீங்கள் சேர்த்து விடுங்கள்"(அல்குர்ஆன் 15 : 98)
 
ஆகவேதான் எந்த ஒரு அடியான் அல்லாஹ்விற்கு  ஸுஜூது செய்யவில்லையோ,  அல்லாஹ்விற்கு பணியவில்லையோ அவனை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஏற்றுக்கொள்வது கிடையாது. இந்த தொழுகை நம்முடைய மார்க்கத்தின்  அடிப்படை கடமை. அல்லாஹு தஆலா எத்தனை இறைத்தூதர்களை இந்த பூமியில் இறக்கினானோ  அந்த எல்லா இறைத்தூதர்களுடைய மார்க்கத்திலும் இந்தத் தொழுகையை முதல் கடமையாக்கினான்.
 
இந்த தொழுகை என்பது நமக்கு மட்டும் கடமையாக்கப்பட்ட வணக்கமல்ல இந்த பூமியில் இறக்கப்பட்ட முதல் மனிதனிலிருந்து தொடர்ந்து அல்லாஹு தஆலா எத்தனை இறைத்தூதர்களை அனுப்பி வந்தானோ அந்த எல்லா இறைத்தூதர்களின்  மார்க்கத்திலும் முதலாவது கடமை எதுவென்று சொன்னால், ஷஹாதாவிற்கு அடுத்து, லாயிலாஹ இல்லல்லாஹ்விற்கு அடுத்து, அந்த  லாயிலாஹ இல்லாஹ்வை செயல்படுத்திக் காட்டும் விதமாக அதனுடைய  சாட்சியாக   அல்லாஹ் ஆக்கியது தொழுகையைத் தான்.
 
மூஸா (அலை)  அவர்களுக்கு அல்லாஹ் நபித்துவத்தை  கொடுக்கின்றான்.தூர் மலையிலே அவர்களை அல்லாஹ் அழைத்து,
 
إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي    
 
"வணக்கத்திற்குரியவன் என்னைத் தவிரவேறு யாருமில்லை. மூஸா! நீ என்னை வணங்கவேண்டும்".(அல்குர்ஆன் 20 : 14)
 
லா யிலாஹ இல்லல்லாஹ் என்பதை மூஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹ்  கற்றுக்கொடுத்து கூறியமுதல் கட்டளை என்ன?மூஸா!இனிமேல் நீ என்னை வணங்கவேண்டும். என்னுடையஇபாதத்தை செய்யவேண்டும். அந்தஇபாதத்திற்கு அல்லாஹ் கட்டளையிட்டபோது சொல்லக்கூடியமுதல் கட்டளை என்ன?
 
وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي
 
"தொழுகையை நீ நிலைநிறுத்து! என்னுடைய நினைவு வருவதற்காக! என்னுடைய நினைவு உன்னுடைய உள்ளத்தை ஆக்கிரமித்துக் கொள்வதற்காக! உன்னுடைய உள்ளத்திலே என்னுடைய நினைவு நிலைத்து இருப்பதற்காக! தொழுகையை நிலைநிறுத்துவீராக!". (அல்குர்ஆன் 20 : 14)
அதற்குத் தொடர்ந்து நாம் பார்க்கிறோம் எத்துணை இறைத்தூதர்கள் வந்தார்களோ !அவர்களுக்கு அல்லாஹ் கூறிய கட்டளைகளை சொல்கின்றான்;
 
நபி ஈஸா (அலை) அவர்கள் சொல்கின்றார்கள்: 
 
وَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا
 
அல்லாஹ் எனக்கு தொழுகையை கட்டளையிட்டான். எனக்கு ஸக்காத்தை கட்டளையிட்டான். (அல்குர்ஆன் 19 : 31)
 
நபி இஸ்மாயில் அலைஹி வஸ்ஸலாம் சொல்கிறார்கள்:
 
وَكَانَ يَأْمُرُ أَهْلَهُ بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَكَانَ عِنْدَ رَبِّهِ مَرْضِيًّا  
 
தொழுகையைக் கடைப்பிடிக்கும்படியும், ஜகாத்தும் கொடுத்து வரும்படியும் அவர் தன் குடும்பத்தினரை ஏவிக்கொண்டிருந்தார். அவர் தன் இறைவனால் மிகவும் விரும்பப் பட்டவராகவும் இருந்தார். (அல்குர்ஆன் 19 : 55)
 
இப்படி அன்புக்குரியவர்களே! இறைத்தூதர்களுடைய  வாழ்க்கையே அல்லாஹ்வை வணங்குவதற்காக தான்! இந்த பூமியிலே வந்த மனித சமுதாயத்திலேயே  மிக உயர்ந்தவர்களாக அவர்கள் மதிக்கப்படுவதற்கு  காரணம் என்ன?  அவர்களுக்கு அல்லாஹுதஆலா அந்த உயர்வை கொடுத்ததற்கு காரணம் என்னவென்றால், அல்லாஹ் எதற்காக இந்த மனித சமுதாயத்தை படைத்தானோ,  அந்த நோக்கத்தை முழுமையாக அவர்கள் செயல்படுத்தினார்கள்.
 
மற்ற மனிதர்களைப் பார்க்கிலும் இறைத்தூதர்களுக்கு அல்லாஹ் கொடுத்த சிறப்பு எதற்காக வேண்டி,  நபித்துவத்தை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கினானே, ரிசாலத்தை அவர்களுக்கு வழங்கினானே அவர்கள் அல்லாஹ்வின் அடிமைகளாக !.
 
அல்லாஹு தஆலா ஒவ்வொரு இறைத்தூதரை பற்றி சொல்லும் பொழுது 'அப்து' என்ற வார்த்தையைப் பயன்படுத்துகின்றான்.
 
إِنَّهُ كَانَ عَبْدًا شَكُورًا
 
நூஹ் (அலை) அவர்களைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் போது, நூஹ்! நமக்கு நன்றி செலுத்தக்கூடிய அடிமையாக இருந்தார். (அல்குர்ஆன் 17 : 3
 
அல்லாஹ்வை வணங்கக்கூடிய அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டு அவனுக்குப் பணியக்கூடிய வணக்க வழிபாட்டை நோக்கமாகக் கொண்ட அடிமை. இறைத் தூதர்கள் உடைய வணக்க வழிபாடு இன்று  நாம் வணங்கக்கூடிய வணக்க வழிபாடுகளை போன்று கிடையாது.அல்லாஹூ சுப்ஹானஹுதஆலா அவர்களுடைய வணக்க  வழிபாட்டை குர்ஆனில் பல இடங்களில் சொல்கின்றான்.எப்படி அவர்கள் வணங்குவார்கள்  தெரியுமா?
 
أُولَئِكَ الَّذِينَ أَنْعَمَ اللَّهُ عَلَيْهِمْ مِنَ النَّبِيِّينَ مِنْ ذُرِّيَّةِ آدَمَ وَمِمَّنْ حَمَلْنَا مَعَ نُوحٍ وَمِنْ ذُرِّيَّةِ إِبْرَاهِيمَ وَإِسْرَائِيلَ وَمِمَّنْ هَدَيْنَا وَاجْتَبَيْنَا إِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُ الرَّحْمَنِ خَرُّوا سُجَّدًا وَبُكِيًّا
 
அல்லாஹ் கூறுகின்றான்!" இதோ! அல்லாஹ்வின் அருட்கொடை பெற்றவர்கள்,  அல்லாஹ்வுடைய நிஃமத்தைப்  பெற்றவர்கள் அவர்கள் நபிமார்கள். ஆதமுடைய சந்ததியில் இருந்து வந்தவர்கள்,  இப்ராஹிம் உடைய சந்ததியில்  இருந்து வந்தவர்கள், இஸ்ராயீலின் சந்ததியில்  இருந்து வந்தவர்கள்.அந்த இறைத்தூதர்கள் மட்டுமல்ல,  யாருக்கெல்லாம்  நாம் நேர்வழி கொடுத்தோமோ யாரையெல்லாம் நாம் தேர்ந்தெடுத்துக் கொண்டோமோ,  அவர்களும். எப்படி அல்லாஹ்வை வணங்குவார்கள்,  அவர்களுக்கு முன்பு ரஹ்மானுடைய வசனங்கள், வேத வாக்கியங்கள்  ஓதி காண்பிக்கப்பட்டால் அழுதவர்களாக கண்ணீர் சிந்தியவர்களாக சுஜூதில் விழுந்து விடுவார்கள் ".(அல்குர்ஆன் 19 : 58)
 
இன்று நாம் பார்க்கிறோம் அல்லாஹ்வின் அடியார்களே! இந்த வணக்க வழிபாடு என்பதும், வணக்க வழிபாட்டில் அழுகை என்பதும்,  இன்று நம்முடைய சமுதாயத்தில் இருந்து எடுக்கப்பட்டுவிட்டது. பிடுங்கப்பட்டு விட்டது என்று கூட சொல்லலாம். காரணமென்ன? உலக வஸ்துக்களின் மீது உள்ள மோகம். நம்முடைய வாழ்க்கையிலே அல்லாஹ்வை மறந்து நாம் கழிக்கக்கூடிய நேரங்கள், அதிலே நாம் செய்யக்கூடிய பாவங்கள், அல்லாஹ்வை மறந்திருத்தல் இதன் காரணமாக, வணக்க வழிபாடு என்பதே வாழ்க்கையில் இருந்து எடுக்க பட்டு விட்டது. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் ! 
 
ஏதோ! பெயருக்கு சில தொழுகைகள், சில வணக்க வழிபாடுகள்  ஆனால் அந்த வணக்க வழிபாடுகளும் உண்மையான தரத்திலே இருக்கிறதா? என்று சொன்னால்,  எங்கே! எந்த வணக்க வழிபாட்டை கொண்டு அல்லாஹ்வுடைய அச்சம் வர வேண்டுமோ! அவனுடைய பயம் வர வேண்டுமோ! அல்லாஹ்வுடைய அழுகை வர வேண்டுமோ! மறுமையின் நினைவு வர வேண்டுமோ!அல்லாஹ்வின் சட்டங்களை பேணவேண்டும் என்ற அச்சம் வர வேண்டுமோ! அந்த அச்சங்கள் எல்லாம், வணக்க வழிபாட்டின் தன்மைகள் எல்லாம்,இன்று நம்முடைய வாழ்க்கையிலே எங்கே இருக்கிறது?  என்று யோசித்துப் பாருங்கள்.
 
பள்ளிக்கு  வருவார் வரும் பொழுதே ஏதாவது ஒரு சிந்தனையிலே, பள்ளியை விட்டுச் செல்வார் அடுத்து வேறு ஒரு புதிய சிந்தனையிலே,  அல்லாஹு அக்பர் என்று சொல்லுவார் ஆனால், அல்லாஹ்தான்  மிகப் பெரியவன், அவன் தான் என்னுடைய ரப்பு,  அவருடைய கட்டளை மிகப்பெரிய கட்டளை,  என்னுடைய வாழ்க்கையில் அதை ஏற்று நடக்க வேண்டும் என்ற குறிக்கோள்களை எல்லாம் உள்ளத்திலே தாங்காமல் 'அல்லாஹுஅக்பர்' என்று இவர்  தக்பீர் கட்டுவார். 
 
سُبْحَانَ رَبِّيَ الْعَظِيْمِ
 
"மிகமகத்தானஎனது  இறைவனை துதிக்கிறேன் " என்று தஸ்பீஹ்  செய்வார். 
 
 'سُبْحَانَ رَبِّيَ الْأَعْلٰى' 
 
என்று சொல்லுவார். இன்னும் எத்தனையோ திக்ருகளை தொழுகையில் செய்வார்.குர்ஆனு  டையவசனங்களை ஓதுவார். ஆனால்,  இந்த திக்ருகளோ! இந்தகுர்ஆனுடையவசனங்களோ!அவருடையவாழ்க்கையிலே அவருடையஉள்ளத்திலே எந்தமாற்றத்தையும் ஏற்படுத்தி இருக்காது. இந்தத் தொழுகை என்னதொழுகை?  இந்தவணக்கவழிபாடு என்னவணக்கவழிபாடு? 
 
ரஸூலில்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தொழுகை பற்றி ஆயிஷா ரலியல்லாஹு அவர்கள் சொல்கின்றார்கள்;
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்தொழுகையிலே நின்றால் நான் அவர்களிலிருந்து அழுகையின் சப்தத்தைக் கேட்பேன். பாத்திரத்தில் தண்ணீர் கொதிக்க வைக்கப்பட்டால் அது கொதிக்கும் போது என்ன சத்தம் வருமோ! அந்த சத்தம் ரசூலுல்லாஹ்வின் நெஞ்சில் இருந்து கிளம்புவதை நான் கேட்பேன்.அவர்களுடைய கண்ணிலிருந்து சிந்தக் கூடிய அந்த நீர்கள் அவர்களுடைய தாடியை  நனைத்து அவர்களின் நெஞ்சை நினைப்பதை நான் பார்த்திருக்கிறேன். (2)
 
யாருடைய தொழுகை? ரசூலுல்லாஹி  ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தொழுகை! சஹாபாக்கள் உடைய தொழுகை!அல்லாஹ்வை நினைத்து தொழுகையிலே அழுவார்கள். சுஜூதில் இருந்து அழுவார்கள். குரானுடைய வசனங்கள் ஓதப்படும் பொழுது அழுவார்கள்.இத்தகைய தொழுகையாளிகளைத்  தான் அல்லாஹு தஆலா வெற்றியாளர்கள் என்று சொல்கின்றான்.
 
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ
 
"ஈமான் கொண்டவர்கள் நிச்சயமாக வெற்றி பெற்று விட்டனர்."(அல்குர்ஆன் 23 : 1).
 
நம்பிக்கை கொண்ட அந்த மூஃமீன்கள் வெற்றி பெற்றுவிட்டார்கள். வெற்றி நிச்சயம் அவர்களுக்கு வெற்றி உறுதி. அந்த மூஃமீன்கள் யார்?
 
الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ
 
"அவர்கள் எத்தகையயோரென்றால், தங்கள் தொழுகையில் உள்ளச்சத்தோடு இருப்பார்கள்."( அல்குர்ஆன் 23:2).
 
யார் தங்களுடைய தொழுகையில் அல்லாஹ்வை பயந்தவர்களாக அல்லாஹ்விற்குப் பணிந்தவர்களாக இருக்கின்றார்களோ!
 
خشوع குஷு 'என்று சொன்னால் உள்ளத்தால் பயப்படுவது, உள்ளத்தால் பணிவது, உள்ளத்தால் அஞ்சுவது, உள்ளம் ஒருவரின்  மகத்துவத்தை நினைத்து, உள்ளம் ஒருவரின்  கண்ணியத்தை  நினைத்து அவருக்கு  பணியும் பொழுது, அவருக்கு பயப்படும் பொழுது அதனால் உள்ளத்திற்குள் உடலுக்குள் ஏற்படுகின்ற ஒரு நடுக்க தன்மை இருக்கின்றது அல்லவா! இதற்கு தான் 'குஷு ' என்று சொல்லப்படும்.
 
அல்லாஹு தஆலா  நம்பிக்கையாளர்கள் உடைய தொழுகை பற்றி சொல்லும் பொழுது அவர்களுக்கு வெற்றி உறுதி என்று சொல்லும் பொழுது என்ன தன்மையை குறிப்பிடுகின்றான். பயத்தோடும் நடுக்கத்தோடும் அச்சத்தோடு தொழக்கூடிய அந்த மூமின்கள் வெற்றி பெற்று விட்டார்கள். இன்று நமக்கு வெற்றி தேவையா?  இல்லையா?  அல்லாஹ்விடத்தில் வெற்றி பெற வேண்டுமா? இல்லையா?இந்த உலகத்திலே  நமக்கு வெற்றி கிடைக்க வேண்டுமா? இல்லையா?  அல்லாஹ் சொல்லக்கூடிய முதல் நிபந்தனை தொழுகையை பயத்தோடு நிறைவேற்றுங்கள். 
 
ஆனால்,இன்று அல்லாஹ்வுடைய கட்டளைகளை புறக்கணித்துவிட்டு தொழுகையைப் பாழாக்கி விட்டு இன்று முஸ்லிம்கள் வெற்றியை தேடுகின்றார்கள்.பல கோஷங்களை கொண்டு இந்த சமுதாயத்தில் இந்த உலகத்திலே இந்த மக்களின் மீது ஆட்சியை எதிர்பார்க்கிறார்கள் வெற்றியை எதிர்பார்க்கிறார்கள். அன்புக்குரியவர்களே! நிச்சயமாக முடியாது. எந்த வழியே கொண்டு இறைத்தூதர்கள் வெற்றியைப் பெற்றார்களோ! அந்த வழியில் தான் இந்த உம்மத்து வெற்றியை  பெற முடியும்.
 
அல்லாஹ்  சுப்ஹானஹு தஆலா  இதே வசனத்தை சூரா அல்முஃமினூனுடைய, 
 
"قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَالَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ"
 
என்று ஆரம்பிக்கிறான் அல்லவா!இந்த வசனத்தை தொடர்ந்து பல தன்மைகளை நம்பிக்கையாளர்களுக்கு அல்லாஹ் சொல்கி ன்றான்.அதிலே குறிப்பாக நம்பிக்கையாளர்கள், தொழுகையில் பயம் உடையவர்களாக, அச்சம் உடையவர்களாக இருப்பார்கள் என்று ஆரம்பித்து அவர்களுடைய தன்மையை அல்லாஹ்  முடிக்கும் போது, 
 
وَالَّذِينَ هُمْ عَلَىٰ صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ
 
"மேலும் அவர்கள் தம் தொழுகைகளை(க் குறித்த காலத்தில் முறையோடு) பேணுவார்கள்."(23:9).
 
அந்த நம்பிக்கையாளர்கள் தங்களுடைய தொழுகையை  பாதுகாப்பார்கள்.அந்தத் தொழுகையைப் பேணுவார்கள் என்று சொல்கின்றான். ஒரு பொருளை முழுமையாக பாதுகாப்பது.ஒரு பொருளை தவறவிடாமல் அதிலே குறை ஏற்படாமல் முழுமையாக பாதுகாப்பதற்கு 'அல்ஹிபாஃழ்  அலா ஷேய்' என்று சொல்வார்கள். இதைத்தான் அல்லாஹ் சொல்கின்றான், 
 
 
وَالَّذِينَ هُمْ عَلَىٰ صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ
 
யார்  தங்களுடைய தொழுகையைப்  பாதுகாப்பார்களோ,அந்த மூஃமின்கள்!. அந்த மூஃமின்கள் உடைய உயர்ந்த தன்மைகளைப் பற்றி அல்லாஹ் குறிப்பிடும் பொழுது "தொழுகையில் உள்ளச்சம் உடையவர்களாக இருப்பார்கள்" என்று குறிப்பிடுகின்றான். பிறகு அந்தத் தன்மையை முடிக்கும் பொழுது "தொழுகையை பாதுகாப்பார்கள்" என்று கூறுகிறான்.
 
தொழுகையை பாதுகாப்பது என்றால் என்ன? அதற்கு அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லி  கொடுத்திருக்கக் கூடிய முறையிலே அதனுடைய நேரங்களை பேணுவது,  அதனுடைய சட்டங்களை பேணுவது.எப்படி ரசூலுல்லாஹ்வை நாம் தொழ கண்டோமோ  அதுபோன்று தொழுவது. எப்படி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு தொழுகையை கற்றுக்கொடுத்தார்களோ அதுபோன்று தொழுவது. இந்த முறையில் உள்ளச்சத்தைப்  பேணி, முறைகளைப் பேணி, ஒழுக்கங்களைப் பேணி தொழக்கூடிய தொழுகை,அந்த தொழுகை தான் பாதுகாக்கப்பட்ட தொழுகை.
 
 
யார் இப்படி தொழுகின்றார்களோ  அவர்கள் தங்களுடைய தொழுகையை பாதுகாத்துக் கொள்கிறார்கள்.இவர்களுக்கு அல்லாஹ் கொடுக்கின்ற சிறப்பு என்னவென்று தெரியுமா?அந்த தகுதி என்னவென்று தெரியுமா?
 
أُولَٰئِكَ هُمُ الْوَارِثُونَ*الَّذِينَ يَرِثُونَ الْفِرْدَوْسَ هُمْ فِيهَاخَالِدُونَ
 
"இத்தகையோர் தாம் (சுவர்க்கத்தின்) வாரிசுதாரர்கள். இவர்கள் ஃபிர்தவ்ஸ் (என்னும் சுவனபதியை) அனந்தரங் கொண்டு அதில் இவர்கள்  என்றென்றும் தங்கியிருப்பார்கள்" .(அல்குர்ஆன் 23:10, 11).
 
இப்படிப்பட்ட மூஃமின்கள், இவர்கள் தான் வாரிசுதாரர்கள்.எதற்கு வாரிசுதாரர்கள்?  இந்த அழியக்கூடிய துனியாவின்  செல்வத்திற்கா? நாளை ஒருவர் மரணித்து விட்டால் அடுத்து இன்னொருவருடைய கைகளுக்கு மாறக்கூடிய இந்த துனியாவுடைய  அர்ப்ப செல்வங்களுக்கா? அல்லாஹ் சொல்கின்றான் :இல்லை !இவர்கள் ஜன்னத்துல் பிர்தௌஸ் உடைய வாரிசுதாரர்கள். அவர்கள் அதில் நிரந்தரமாக இருப்பார்கள்.
 
அன்பிற்குரியவர்களே! அல்லாஹ்வின் நல்லடியார்களே! அந்த ஜன்னத்துல் பிர்தௌஸ் உடைய வாரிசுகளாக நாம் ஆகவேண்டும் என்று சொன்னால் அல்லாஹ்வுடைய இபாதத்தைச் செய்யவேண்டும்.அல்லாஹ்வுடைய இபாதத்திலே மிக முக்கியமான இபாதத்தாகிய தொழுகையை பேணவேண்டும்.அல்லாஹு சுபஹானஹு தஆலா இந்த தொழுகையை குறித்து எத்துணை கடமைகளை நமக்குத் தந்திருக்கின்றான் தெரியுமா? எத்தனை  சட்டங்களை நமக்கு தருகிறான் தெரியுமா? 
 
அல்லாஹ்வுடைய தூதருக்கு அல்லாஹ் சொல்கிறான்" 
 
وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ  
 
நபியே! மௌத்து வரை அல்லாஹ்வை இபாதத் செய்து கொண்டே இருங்கள்".(அல்குர்ஆன் 15 : 99)
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணிக்கும் போது இரண்டு உபதேசங்களை செய்கின்றார். ஒன்று தொழுகையின்  விஷயத்தில் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். இரண்டாவது உங்களுடைய அடிமைகள் விஷயத்தில் நீங்கள் அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள்.எந்த அளவு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்அவர்களின் கவனம் இந்த தொழுகையின் விஷயத்தில் இருந்தது பாருங்கள்.
 
போருடைய காலம் !கஷ்டமான காலம்! சிரமமான காலம்!எதிரிகள் அங்கே முஸ்லிம்களை கொல்வதற்காக கங்கணம் கட்டிக்கொண்டு, வாள்களை ஏந்திக்கொண்டு,  அம்புகளைக் கொண்டு தாக்கிக் கொண்டிருக்கிறார்கள். அந்த நேரத்தில் கூட நீங்கள் தொழுகையை தவற விடக்கூடாது.
 
அல்லாஹ் சொல்லுகிறான் :
 
حَافِظُوا عَلَى الصَّلَوَاتِ وَالصَّلَاةِ الْوُسْطَى وَقُومُوا لِلَّهِ قَانِتِينَ  2:238
 
மூஃமின்களே  தொழுகையை பாதுகாத்துக் கொள்ளுங்கள். குறிப்பாக நடு நேரத் தொழுகையை நீங்கள் பாதுகாத்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 2 : 238)
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போருடைய நேரத்தில் கூட இரண்டு ரக்அத்துகள் தொழுவதற்கு அங்கே நேரம் இருக்கும் என்று சொன்னால் அங்கே ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தொழுகையை நிலை நிறுத்தினார்கள்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு  இரண்டு ரக்ஆத்தாகவும் அவர்களுக்கு பின்னாடி தொழக்கூடிய மூஃமின்களுக்கு ஒரு ரக்அத் ஆகவும் இருந்தது.அந்த நேரத்தில் கூட தொழுகை அவர்களுக்கு மன்னிக்கப்படவில்லை. 
 
عَنْ عَلِيٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْأَحْزَابِ شَغَلُونَا عَنْ صَلَاةِ الْوُسْطَى حَتَّى آبَتْ الشَّمْسُ مَلَأَ اللَّهُ قُبُورَهُمْ نَارًا أَوْ بُيُوتَهُمْ أَوْ بُطُونَهُمْ شَكَّ شُعْبَةُ فِي الْبُيُوتِ وَالْبُطُونِ (صحيح مسلم 994 -)
 
ஒரு சமயம் அஹ்சாபுடைய யுத்தம் அந்த நேரத்திலே எதிரிகள் புறத்திலிருந்து அம்புகள் மழையாகப் பொழிந்து கொண்டிருந்தன.அந்த நேரத்திலே ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களால் லுஹருடைய தொழுகையை தொழ முடியவில்லை. அஸருடைய தொழுகையை தொழ முடியவில்லை. மஃரிபுடைய தொழுகையை அதனுடைய நேரத்தில் தொழ முடியவில்லை. அந்த நேரத்தில் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் "இந்த காபிர்கள் தொழுகையை விட்டு நம்மை ஈடுபடுத்தி விட்டார்களே! தொழுகையை விட்டு நம்மை  அப்புறப்படுத்தி விட்டார்களே! இந்த காபிர்கள் இவர்களுடைய கப்ருகளை இவர்களுடைய வீடுகளை அல்லாஹ் நெருப்பால் நிரப்புவானாக!".
 
அறிவிப்பாளர்: அலீ ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 994
 
யோசித்துப் பாருங்கள்! போருடைய காலத்தில் கூட ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இந்த  தொழுகையை பேணுவதிலே எந்த அளவிற்கு கண்ணும் கருத்துமாக இருந்தார்கள். அல்லாஹ்வுடைய கட்டளை அப்படி!அந்த நேரத்தில் கூட நீங்கள் இந்த கடமையை மறந்து விடக்கூடாது. காரணம் என்ன தெரியுமா? 
 
அன்பிற்குரியவர்களே!அல்லாஹ் சுபஹானஹுதஆலா நமக்கு கொடுத்து இருக்கக்கூடிய இந்த தீனிலே, இந்தத் தொழுகையினுடைய தரத்தை இன்னும் நாம்  சரியாகப் புரிந்து கொள்ளவில்லை. இந்த தொழுகைக்கு  இந்த மார்க்கத்திலே  என்ன தரம்  இருக்கிறது? 
 
இன்று தெரியும் ஷஹாதாவிற்கு   உள்ள அந்த அந்தஸ்து என்ன? ஒருவர் லாயிலாஹ இல்லல்லாஹ் முஹம்மதுர் ரசூலுல்லாஹ்வை  ஏற்றுக்கொள்ளவில்லை என்றால் அவர் முஸ்லிமாக ஆவாரா?அவர் முஸ்லிமாக ஆக மாட்டார்.ஆனால் அதே சமயத்திலே நம்முடைய இன்றைய சமுதாயத்தில் ஒருவர் தொழாமல் இருப்பார் ஆனால் அவர் அந்த சமுதாயத்தில் முஸ்லிமாக கணிக்கப்படுவார்.ஒருவரிடத்திலே தொழுகை இருக்காது ஆனால் அவர் முஸ்லிம் சமுதாயத்தில் உடைய உறுப்பினராக மதிக்கப்படுகிறார்.
 
இது இஸ்லாமிய பார்வையிலே, அல்லாஹ்வுடைய கிதாபு குர்ஆனின் பார்வையிலேயே,ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸில் வழியிலே, இவர் முஸ்லிமா?என்று பார்க்கும் பொழுது நிச்சயமாக முஸ்லிமாக ஆகமாட்டார்.யார்  இடத்தில் தொழுகை இல்லையோ அவர் முஸ்லிம் கிடையாது. 
 
அல்லாஹு தஆலா குர்ஆனுடைய பல இடங்களில் குறிப்பிடுகின்றான்: குறிப்பாக சூரத்துத் தவ்பா உடைய ஐந்தாவது வசனத்தில்  அல்லாஹ் சொல்கின்றான்.
 
ஒரு காபிர் ஒரு முஷ்ரிக் அவர்  ஷிர்க்கை விட்டுவிட்டு குப்ரை விட்டுவிட்டு இஸ்லாமிற்கு வருகிறார் என்று சொன்னால்,  அங்கே இரண்டு அடிப்படை விஷயங்கள் இருக்க வேண்டும்.தவ்பாவிற்கு பிறகு,  அந்த ஷிர்க்கிலிருந்து குப்ரில் இருந்து அவர் தவ்பா செய்ய வேண்டும்.
فَإِنْ تَابُواوَأَقَامُواالصَّلَاةَ وَآتَوُاالزَّكَاةَ فَخَلُّواسَبِيلَهُمْ
"அவர்கள் தவ்பா செய்து அவர்கள் தவ்பா கேட்டு தொழுகையை நிலை நிறுத்தி ஸகாத்து கொடுத்தால் அவர்களை நீங்கள் விட்டு விடுங்கள்.அவர்கள் உங்களுடைய சகோதரர்கள்." (அல்குர்ஆன் 9 : 5)
அன்புக்குரியவர்களே! இந்த வசனத்தை அல்லாஹ்சுபஹானஹுதஆலா யார் தொழ வில்லையோ!யார் ஜகாத் கொடுக்க வில்லையோ!அவர்களை இந்த முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்றுக்கொள்ளவில்லை.இதைத்தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல் (அலை)   அவர்கள் சொன்னார்கள்.
 
عَنْ عَبْدِ اللهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: العَهْدُ الَّذِي بَيْنَنَا وَبَيْنَهُمُ الصَّلاَةُ، فَمَنْ تَرَكَهَا فَقَدْ كَفَرَ. (سنن الترمذي 2621 -)
"நமக்கும் காஃபிர்களுக்கும் இடையே உள்ள வித்தியாசம் இருக்கிறதே அது தொழுகைதான்.யார் இந்த தொழுகையை விட்டார்களோ அவர்கள்  காபிராகிவிட்டார்கள் 
 
அறிவிப்பாளர்: புரைதா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி எண்: 2621
 
عَنْ أَبِي سُفْيَانَ قَالَ سَمِعْتُ جَابِرًا يَقُولُا سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ بَيْنَ الرَّجُلِ وَبَيْنَ الشِّرْكِ وَالْكُفْرِ تَرْكَ الصَّلَاةِ (صحيح مسلم 116 -)
இமாம் முஸ்லிம் ரஹ்மதுல்லாஹி அலைஹி ஜாபிர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மூலமாக அறிவிக்கிறார்கள்: ஒரு மனிதனுக்கும்  ஷிர்க்கிற்க்கும் குப்ரிற்க்கும் இடையே உண்டான இடைவெளி இருக்கிறதே அது தொழுகையை விடுவதுதான்.
 
அறிவிப்பாளர்: அபூ சுஃப்யான் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 116
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ شَقِيقٍ الْعُقَيْلِيِّ قَالَ كَانَ أَصْحَابُ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَرَوْنَ شَيْئًا مِنْ الْأَعْمَالِ تَرْكُهُ كُفْرٌ غَيْرَ الصَّلَاةِ
(سنن الترمذي 2546 -)
அப்துல்லாஹ் இப்னு ஷகீக் அல்அகீலி  ரஹ்மதுல்லாஹி அலைஹிஅவர்கள்  அறிவிக்கிறார்கள்: சஹாபாக்கள் உடைய மாணவர், சொல்லுகின்றார்கள்: சஹாபாக்கள் எந்த ஒரு இஸ்லாமிய செயலையும் விடுவதை,  குப்ர்  இறை நிராகரிப்பாக கருதியதாக நமக்கு தெரியவில்லை ஆனால் தொழுகையைத் தவிர. தொழுகையை விடுவதை  சஹாபாக்கள் குஃப்ர் ஆக கருதினார்கள்.
 
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு ஷகீக் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி, எண்: 2546
 
காரணம் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்படித்தான் சொல்கின்றார்கள். ஒரு முஃமினான மனிதனுக்கும் ஷிர்க்கிற்கும் குப்ரிற்கும் இடையே உள்ள வித்தியாசம் என்ன தொழுகையை விடுவது தான்.ஆகவேதான் பெரும்பான்மையான சஹாபாக்கள், அடுத்து வந்த தாபியீன்கள்,  அதற்கு அடுத்து வந்த இமாம்களுடைய  அதிகப்படியான மார்க்க அறிஞர்களின் கருத்து என்னவென்று சொன்னால் எந்த ஒரு மனிதன் தெரிந்த நிலையிலே வேண்டுமென்றே தொழுகையை விட்டு விடுகின்றனோ !தன் மீது தொழுகை கடமை என்பதை அறிந்தும் அலட்சியத்தாலோ கவனக்குறைவாலோ தொழுகையை விட்டு வாழ்கின்றானோ இவன் முஸ்லிம் அல்ல.   
 
இவனுடய சட்டம் முர்தத். இஸ்லாமிய நாடாக இருக்கும் என்றால் இஸ்லாமிய கலிபா இருப்பார் என்று சொன்னால் இவரை சிறையில் அடைக்க வேண்டும்.இவர் தொழவில்லை என்றால் மூன்று நாட்களுக்குள் தவ்பா செய்து தொழுகையை எடுத்துக் கொள்ளவில்லை என்று சொன்னால் முர்தத் உடைய சட்டத்திலே இவரை கொன்றுவிட வேண்டும். தொழுகையற்ற நிலையிலேயே ஒருவர் மரணித்து விட்டால் அவரை முஸ்லிம்களுடைய கப்ருகளிலே அடக்கம் செய்யக்கூடாது. எந்த அளவிற்கு கடுமையான சட்டம் பாருங்கள்.
 
அது மட்டுமல்ல, இன்னும் மூத்த மார்க்க அறிஞர்களின் தீர்ப்பு என்னவென்று சொன்னால், பொதுவாக இன்று இருக்கக்கூடிய நாட்டுடைய கலாச்சாரங்கள்,  இஸ்லாமிய ஆட்சி கிடையாது. கலிஃபா உடைய ஆட்சி கிடையாது.அந்த நாடுகளிலே முஸ்லிம் சமுதாயத்திலே யாராவது தொழுகை இல்லாமல் வாழ்கிறார்கள் என்று சொன்னால் அவர்கள் இறந்து விட்டால் அவர்களை உங்களுடைய கப்ர்களில் அடக்கம் செய்யாதீர்கள்.அவர்களுக்கு உங்களுடைய பெண்பிள்ளைகளை மணமுடித்துக் கொடுக்காதீர்கள்.அவர்களை உங்களுடைய உறவினர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள்.
 
அந்த அளவிற்கு கடுமையான சட்டம் இந்தத் தொழுகையின் விஷயத்திலே மார்க்கத்திலே கூறப்பட்டிருக்கிறது. அன்பிற்குரியவர்களே!தொழுகையின் உடைய விஷயங்களிலேயே பலவற்றை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும். ஒன்று தொழுகை அதனுடைய நேரத்திலே தொழுவது.யார் இந்த தொழுகையை அதனுடைய நேரத்தில் தொழாமல் பாழாக்குகின்றார்களோ அவர்களையும் அல்லாஹ் சபிக்கின்றான்.அப்போ யார் தொழவே இல்லையோ அவர்களுடைய தண்டனை எவ்வளவு பயங்கரமாகனது என்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
 
فَوَيْلٌ لِلْمُصَلِّينَ الَّذِينَ هُمْ عَنْ صَلَاتِهِمْ سَاهُونَ
 
"இன்னும், (கவனமற்ற) தொழுகையாளிகளுக்குக் கேடுதான். அவர்கள் எத்தகையோர் என்றால் தம் தொழுகையில் பராமுகமாக(வும், அசிரத்தையாக)வும் இருப்போர்." (அல்குர்ஆன் 107:4, 5).
 
இன்று குர்ஆனை அறிந்த ஹதிசை  பேசக்கூடிய மார்க்கத்தை பேசக்கூடிய பலருடைய உள்ளத்திலே தொழுகையைப் பற்றி உண்டான துடிப்பு இல்லை. இந்தத் தொழுகையின் மீது உண்டான பற்று கிடையாது.பேசுகின்றார்கள் மார்க்கத்தை  ஆனால் எப்படி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த தொழுகைக்கு முக்கியத்துவம் கொடுத்தார்களோ, இந்த உம்மத் உடைய மூத்த சமுதாயம் இந்தத் தொழுகையை எப்படி மதித்தார்களோ, தொழுகையுடைய நேரம் வந்து விட்டால், அல்லாஹ் அக்பர் என்று அழைக்கப்பட்டு விட்டால், அல்லாஹ்வுடைய பள்ளிக்கு அழைக்கப்பட்டு விட்டால் யாரெல்லாம் எந்தெந்த வேலைகள் இருக்கிறார்களோ,  அந்த வேலைகளை அப்படியே விட்டுவிட்டு பள்ளியின் பக்கம் வந்து பள்ளிகளிலேயே விரைந்து வந்து அந்தத் தொழுகையை நிலை நாட்டினார்கள் அல்லவா! அந்த காட்சியை இன்று பார்க்க முடிகிறதா?  என்ன சட்டம் ஆகிவிட்டது! எப்பொழுது தூங்கி எழுந்து இருக்கிறோமோ அப்போது தொழுது கொள்ளலாம். 
 
ரசூலுல்லாஹி (ஸல்) வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்
 
عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي مُوسَى عَنْ أَبِيهِ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَلَّى الْبَرْدَيْنِ دَخَلَ الْجَنَّةَ (صحيح البخاري- 540 -)
 
"யார் இரண்டு தொழுகைகளை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவர்கள் சொர்க்கம் செல்வார்"
 
அறிவிப்பாளர்: அபூ மூஸா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 540
 
"இரண்டு தொழுகைகள் முனாபிக்குகளுக்குத்தான் சிரமமாக இருக்கும் "யாருடைய உள்ளத்தில் ஈமான் குடி கொள்ளவில்லையோ, அத்தகைய அந்த  முனாபிக்குகளுக்கு, யார் உள்ளத்தால் ஈமான் கொள்ளாமல், நாவால் ஈமானை வெளிப்படுத்திக் கொண்டு இருக்கிறார்களோ,  அந்த முனாபிக்குகளுக்கு  இரண்டு நேர தொழுகை கடுமையாக இருக்கும்.ஒன்று இஷாவுடைய தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவது. இரண்டாவது சுப்ஹு உடைய தொழுகையை ஜமாஅத்துடன் தொழுவது. (3)
 
மூஃமின்கள் உடைய அடையாளத்தில் ஒன்றாக ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆக்கினார்கள் 'சுப்ஹ் தொழுகையை ஜமாத் உடனே பள்ளியே நிறைவேற்றுவது. அதுமட்டுமல்ல  அன்புக்குரியவர்களே! அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழி அவர்கள் அறிவிக்கிறார்கள் எங்களுடைய காலத்திலே யார் தெளிவான முனாபிக் என்று அறியப்பட்டானோ அவன் தான் பள்ளிக்கு வந்து ஜமாத்து தொழுவதிலே அலட்சியம் செய்வான்.
 
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَقَدْ هَمَمْتُ أَنْ آمُرَ بِحَطَبٍ فَيُحْطَبَ ثُمَّ آمُرَ بِالصَّلَاةِ فَيُؤَذَّنَ لَهَا ثُمَّ آمُرَ رَجُلًا فَيَؤُمَّ النَّاسَ ثُمَّ أُخَالِفَ إِلَى رِجَالٍ فَأُحَرِّقَ عَلَيْهِمْ بُيُوتَهُمْ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَوْ يَعْلَمُ أَحَدُهُمْ أَنَّهُ يَجِدُ عَرْقًا سَمِينًا أَوْ مِرْمَاتَيْنِ حَسَنَتَيْنِ لَشَهِدَ الْعِشَاءَ (صحيح البخاري 608 -)
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் சொன்னார்கள். ஒருவரை பள்ளியில் இமாமாக நிற்க வைத்துவிட்டு யார் காரணம் இல்லாமல் தங்கள் வீடுகளில் தொழுது கொள்கிறார்களோ அவர்களை அவர்களுடைய வீட்டுடனே சேர்த்து எரித்து  விட எனது மனம் நாடுகிறது.
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 608
 
யார் இவர்கள்? யோசித்துப் பாருங்கள்!தொழுகை இல்லாமல் இல்லை. இவர்கள் இடத்திலே தொழுகை இருக்கிறது. தொழுகையை பேணுவது கிடையாது. தொழுகையை மஸ்ஜிதுகளில் நிலைநிறுத்துவது கிடையாது. எப்படிப்பட்ட கடுமையான கட்டளையைப் பாருங்கள்.
 
தொழுகை மட்டுமல்ல தொழுகை உடைய நேரங்களை பாதுகாப்பது. எந்த இடத்தில் தொழ வேண்டுமோ, ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்; புகாரி 6520
 
யார் தொழுகையுடைய  நேரங்களைப் பாதுகாக்க வில்லையோ, யார் தொழுகையுடைய நேரங்களை மறந்து இருக்கிறார்களோ அத்தகைய தொழுகையாளிகளுக்கு நாசம் உண்டாகட்டும்!
 
இன்று சில மக்கள்  ஒரு சில ஹதீஸ்களை தங்களுக்கு சாதகமாக அந்த ஹதீஸை வளைத்துக்கொண்டு தங்களது மன இச்சைகளுக்கு ஏற்ப தொழுகையை மாற்றிக் கொண்டார்கள். 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்;
 
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا رَقَدَ أَحَدُكُمْ عَنْ الصَّلَاةِ أَوْ غَفَلَ عَنْهَا فَلْيُصَلِّهَا إِذَا ذَكَرَهَا فَإِنَّ اللَّهَ يَقُولُ أَقِمْ الصَّلَاةَ لِذِكْرَى (صحيح مسلم 1104 -)
 
"ஒருவர் தூங்கி விட்டால் அல்லது ஒருவர் மறதியில் தொழுகையை மறந்து விட்டால் அவர்களுக்கு எப்போது நினைவு வருகிறதோ எப்போது எழுந்து இருக்கிறாரோ அப்போது தொழுது கொள்ளட்டும்.'
 
அறிவிப்பாளர்: அனஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், எண்: 1104
 
இது எப்போது சொல்லப்பட்ட ஹதீஸ் ஒரு நிர்பந்தத்திலே, ஏதாவது ஒரு சந்தர்ப்பத்திலே, அந்த மாதிரி  ஒரு இக்கட்டான நிலைமையிலே, ஒருவர்  அசதியிலே தூங்கி விட்டால் அல்லது ஏதாவது ஒரு நேரத்திலே,  மறதியிலே, பிரச்சினையின் காரணமாகவோ  ஏதாவது வேலையின் காரணமாகவோ,  தன்னை அறியாமல் மறதியில் இருந்து விட்டார் என்று சொன்னால் அந்த நேரத்தில்,  சொல்லப்பட்ட இந்த ஹதீசை வாழ்க்கையின்  அமலாகவே இன்று மாற்றிக் கொண்டார்கள்.அன்புக்குரியவர்களே! இது மூஃமின்கள் உடைய பண்பு கிடையாது.
 
அல்லாஹு சுப்ஹானஹுதஆலா முஃமீன்களின் பண்பு என்று எதை சொல்கின்றான்.
 
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ
 
மூஃமின்கள் உடையபண்புகளைப் பற்றி அல்லாஹ் சொல்லும் போது 
 
وَالَّذِينَ هُمْ عَلَىٰ صَلَوَاتِهِمْ يُحَافِظُونَ.....
 
காபிர்கள் உடைய கெட்ட பண்பை குறிப்பிடும்போது அந்தப் பண்பிலிருந்து தொழக்கூடிய மூஹ்மின்கள் பாதுகாக்கப்படு வார்கள்.தொழக் கூடிய மூமின்கள் பாதுகாக்க ப்படுவார்கள்  என்று சொல்லும்பொழுது இரண்டு பண்புகளை, அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா  சூரத்துல் மஆரிஜ் உடைய அந்த வசனத்தில் குறிப்பிடுகின்றான்.
 
إِلَّاالْمُصَلِّينَ   الَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ دَائِمُونَ
 
"தொழுகையாளிகளைத் தவிர. (அதாவது) தம் தொழுகையின் மீது நிலைத்திருக்கின்றார் களோ  அவர்கள்." (அல்குர்ஆன் 70 : 22,23).
 
"யார் தங்களுடைய தொழுகைகளை நிரந்தரமாக பாதுகாத்து வருகிறார்களோ" என்று ஆரம்பித்து, முடிக்கும்போது அல்லாஹ் சொல்லுகிறான்.
 
وَالَّذِينَ هُمْ عَلَىٰ صَلَاتِهِمْ يُحَافِظُونَ
 
"எவர்கள் தங்கள் தொழுகைகளைப் பேணிக் கொள்கின்றார்களோ அவர்கள்." (அல்குர்ஆன் 70:34).
 
 
"தங்களுடைய தொழுகைகளை இவர்கள் பாதுகாப்பார்கள்". இவர்களுக்கு அல்லாஹ் சொல்லுகிறான் "சொர்க்கத்திலே  கண்ணியப்படுத்தபடுவார்கள் ".
 
أُولَئِكَ فِي جَنَّاتٍ مُكْرَمُونَ   70:35
 
அன்புக்குரியவர்களே!இந்த தொழுகை என்பது மார்க்கத்தில் அவ்வளவு முக்கியமான கடமை. யார் இந்த தொழுகையை விட்டால் அவர்களுக்கு இஸ்லாத்தில் பங்கு கிடையாது.      
 
உமர் ரலியல்லாஹு அன்ஹுவை அபுலுஃலுஆ அல்மஜூஸி அவர்களை அந்தக் குற்றருவாளால் குத்தி விடுகின்றான்.அவர்களுடைய வயிற்றில் ஏற்பட்ட அந்த காயத்தால் ரத்தம் அதிகமாக பெருக்கெடுத்து ஓடிய காரணத்தால் மயக்கமுற்று இருக்கிறார்கள்.அந்த நேரத்தில் கூட சகாபாக்கள் தொழுகையின் நேரம் வரும் பொழுது அவர்களை எழுப்புகிறார்கள். அமீருல் மூமினீன் அவர்களே!தொழுகையின் நேரம் வந்து விட்டது என்பதாக.அவர்கள் மயக்கம் தெளியும் போது சொல்கிறார்கள்,
 
عَنِ الْمِسْوَرِ بْنِ مَخْرَمَةَ قَالَ جَاءَ ابْنُ عَبَّاسٍ إِلَى عُمَرَ رضى الله عنهما حِينَ طُعِنَ فَقَالَ الصَّلاَةَ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ فَقَالَ عُمَرُ إِنَّهُ لاَ حَظَّ فِى الإِسْلاَمِ لأَحَدٍ أَضَاعَ الصَّلاَةَ فَصَلَّى عُمَرُ وَجُرْحُهُ يَثْعَبُ دَمًا. (سنن الدارقطني 1770 -)
 
யார் தொழுகையை விட்டானோ அவனுக்கு இந்த இஸ்லாமில் பங்கு கிடையாது என்பதாகக் கூறி அந்த நேரத்திலும் கூட அவர்கள் தொழுகையை நிலை நிறுத்துகிறார்கள். 
 
யோசித்துப் பாருங்கள்! இன்று நம் இடையே எப்படிப்பட்ட சமூக கலாச்சாரம்  மாறிவிட்டது என்று சொன்னால், சில வழிகேடர்கள், இந்த மார்க்கத்தை மன இச்சைக்கு ஏற்ப மாற்றிக் கொண்ட சில மக்கள் நாங்கள் முக்தி நிலையை அடைந்து விட்டோம். எங்களுக்கு தொழுகையே தேவையில்லை என்று சொல்கிறார்கள். தங்களை பின்பற்றக்கூடியவர்களை தங்களுடைய மன இச்சைக்கு ஏற்ப வழிகெடுக்க பார்க்கிறார்கள். நாங்கள் சொல்லித் தரக்கூடிய திக்ருகளை நீங்கள் செய்யுங்கள். தியானங்களை நீங்கள் செய்யுங்கள் உங்களுக்கு தொழுகை தேவை இல்லை என்பதாக. 
 
அன்புக்குரியவர்களே! இவர்கள் முஸ்லிம்களே இல்லை. இவர்கள் மஜூஸிகள் இவர்கள் முஷ்ரிக்குகள்.இந்த உம்மத்தை இந்த இஸ்லாமிய மார்க்கத்தை தகர்த்தெறிய கூடிய படு காபிர்கள். காரணமென்ன? ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களை விட ஆன்மீகத்தில் கரை கண்டவர் யார் இருக்க முடியும்.ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை விட அல்லாஹ்வுடைய நினைவிலே அல்லாஹ்வுடைய அன்பிலே அல்லாஹ்வுடைய  நெருக்கத்திலே திளைத்தவர் யார் இருக்க முடியும்.
 
இந்த சமுதாயத்தில் அனுப்பப்பட்ட எல்லா இறைத்தூதர்களுக்கும் இமாம் அல்லாஹ்வுடைய தூதர் முகமது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம். அவர்களுக்கு அல்லாஹ்வுடைய கட்டளை
 
وَاعْبُدْ رَبَّكَ حَتَّى يَأْتِيَكَ الْيَقِينُ
 
உமக்கு ‘எகீன்' (என்னும் மரணம்) ஏற்படும் வரை (இவ்வாறே) உமது இறைவனை வணங்கிக் கொண்டிருப்பீராக! (அல்குர்ஆன் 15 : 99)
 
நம்பிக்கை வரும் வரை இந்த இடத்திலே, 'யகீன் ' என்பதற்கு இவர்கள் என்ன சொல்கிறார்கள் 'எங்களுக்கு உச்சகட்ட நம்பிக்கை வந்துவட்டது  தேவையில்லை 'என்று சொல்கிறார்கள். அப்போது என்ன அர்த்தம் என்று தெரியுமா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹுஅலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மவுத் வரைக்கும் நம்பிக்கை வரவில்லை  எனவே தான் தொழுது கொண்டிருந்தார்கள். 
 
ஹதீஸிலே நாம் பார்க்கிறோம் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மரணப்படுக்கையில் இருக்கும் பொழுது, இரண்டு சஹாபாக்கள் உடைய தாங்கலால்,அவர்களுடைய கால்கள் பூமியில் தேய்த்துக் கொண்டிருக்கும்  நிலையிலே தொழுகையில் நிறுத்தப்படுகிறார்கள். அதைத் தொடர்ந்து வந்த சஹாபாக்கள் வாழ்க்கையை  நாம் பார்க்கிறோம்.
 
அன்புக்குரியவர்களே! யார் இந்த உம்மத்தில் தொழுகை தேவையில்லை என்று சொல்கிறார்களோ அல்லது தொழுகை சாதாரண மக்களுடைய வணக்க வழிபாடு தான். ஆன்மீகத்தில் கரை கண்டவர்கள் ஆன்மீகத்தில் செல்லக்கூடிய முரீதுகளுக்கோ  ஷேக்குகளுக்கோ ஸாலிஹீன்களுக்கோ  தரிகாவாதிகளுக்கோ இந்த தொழுகையை தேவையில்லை என்று சொல்கிறார்களோ அவர்கள் முஸ்லிம்களே  கிடையாது. அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறி விட்டார்கள். 
 
இரண்டாவது கூட்டம் தொழுகிறார்கள். ஆனால் அந்தத் தொழுகையை பேணுவது கிடையாது. அந்த தொழுகையை  பாதுகாப்பது கிடையாது. இவர்களும் நஷ்டத்திற்கு உரியவர்கள்.அல்லாஹ் சொல்கிறான்: 
 
فَخَلَفَ مِنْ بَعْدِهِمْ خَلْفٌ أَضَاعُوا الصَّلَاةَ وَاتَّبَعُوا الشَّهَوَاتِ فَسَوْفَ يَلْقَوْنَ غَيًّا
 
நபிமார்களை கூறுகின்றான்,  நல்லோரை அல்லாஹ் குறிப்பிடுகின்றான், பிறகு சொல்கின்றான்.அதற்குப் பிறகு வந்தவர்கள் அந்த இறைத் தூதர்கள், அந்த நல்லோருக்கு பின்பு வந்தவர்கள். இவர்களை அல்லாஹ் குறிப்பிடும்போது தொழுகைகளை வீண் அடித்தார்கள்.தொழவில்லை என்று அல்லாஹ் சொல்லவில்லை.எப்படி சொல்கின்றான் தொழுகைகளில் வீணடித்து அலட்சியம் செய்தார்கள். நேரத்தை பாழ்படுத்துவது அல்லது முறையாக தொழுவது கிடையாது. (அல்குர்ஆன் 19 : 59)
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்: "திருடனிலே  மோசமான திருட்டு என்ன தெரியுமா? தொழுகையிலேயே திருடுவது.எப்படி காக்கா கொத்துவது போல,கோழி கொத்துவது போல ருகூகளை சுஜூதுகளை பேணாமல் தொழுவது. நிற்பார் நின்றது தான் தெரியும்  ருகூவு செய்திருப்பார், ருக்கூவில் ஒரு சில தஸ்பீஹ்  கூட செய்திருக்க மாட்டார்மாட்டார், எழுந்திருப்பார், எழுந்து நிதானமாக நின்றிருக்க மாட்டார். ஒரு சில வினாடிகளிலேயே இரண்டு ரக்ஆத் நான்கு ரக்அத் தொழுகைகளை முடித்திருப்பார்.
 
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ الْمَسْجِدَ فَدَخَلَ رَجُلٌ فَصَلَّى فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَدَّ وَقَالَ ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ فَرَجَعَ يُصَلِّي كَمَا صَلَّى ثُمَّ جَاءَ فَسَلَّمَ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ ارْجِعْ فَصَلِّ فَإِنَّكَ لَمْ تُصَلِّ ثَلَاثًا فَقَالَ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ مَا أُحْسِنُ غَيْرَهُ فَعَلِّمْنِي فَقَالَ إِذَا قُمْتَ إِلَى الصَّلَاةِ فَكَبِّرْ ثُمَّ اقْرَأْ مَا تَيَسَّرَ مَعَكَ مِنْ الْقُرْآنِ ثُمَّ ارْكَعْ حَتَّى تَطْمَئِنَّ رَاكِعًا ثُمَّ ارْفَعْ حَتَّى تَعْدِلَ قَائِمًا ثُمَّ اسْجُدْ حَتَّى تَطْمَئِنَّ سَاجِدًا ثُمَّ ارْفَعْ حَتَّى تَطْمَئِنَّ جَالِسًا وَافْعَلْ ذَلِكَ فِي صَلَاتِكَ كُلِّهَا (صحيح البخاري 715 -)
 
இப்படி ஒருவர் தொழுத போது,  ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்." திரும்பச் செல்! நீ தொழு! முன்னால் நீ தொழுதது தொழுகையை கிடையாது "என்று சொன்னார்கள்.
 
ஹுதைபா )ரழி( அவர்கள் ஒருவரை பார்க்கிறார்கள். அவர்கள் தொழுகையை அவசர அவசரமாக தொழுகிறார்.இன்று தொழக்கூடிய மக்கள் அது குர்ஆன் ஹதீசை பற்றிப் பேசுகின்ற மக்களாக இருந்தாலும் சரி அல்லது வெளியில் இருக்கிற மக்களாக இருந்தாலும் சரி பெரும்பான்மையான தொழுகையாளிகள் தொழுகை நிலைமை இதுதான். ஒன்று நேரத்தை வீண் அடிப்பார்கள்,  ஜமாத்தை வீண் அடிப்பார்கள் அல்லது தொழுகையையே வீண் அடிப்பார்கள். 
 
தொழுகைக்கு வந்த பிறகு கூட தொழுகையை பாழ்படுத்துவார்கள். தொழுகையில் தக்பீர் கட்டும் போது அல்லாஹ்வின்  நினைவிருப்பது  கிடையாது.ருக்கூவிலேயே சுஜூதிலே  குர்ஆன் ஓதும்போது அல்லாஹ்வுடைய நினைவு இருப்பது கிடையாது. அவசர அவசரமாக தொழுவார்கள். 
 
இப்படி தொழுத ஒரு மனிதரை ஹுதைபா ரழியல்லாஹு அவர்கள் பள்ளியிலே பார்க்கிறார்கள். அவர்கள் தொழுது முடித்த பிறகு சொன்னார்கள்;
 
حَدَّثَنَا شُعْبَةُ عَنْ سُلَيْمَانَ قَالَ سَمِعْتُ زَيْدَ بْنَ وَهْبٍ قَالَ رَأَى حُذَيْفَةُ رَجُلًا لَا يُتِمُّ الرُّكُوعَ وَالسُّجُودَ قَالَ مَا صَلَّيْتَ وَلَوْ مُتَّ مُتَّ عَلَى غَيْرِ الْفِطْرَةِ الَّتِي فَطَرَ اللَّهُ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَيْهَا (صحيح البخاري 749 -)
 
மனிதனே!நீ இந்த நிலையில் மரணித்து விட்டால் உனக்கு இந்த நிலையிலேயே மரணம் வந்துவிட்டால் முஹம்மதிற்கு அல்லாஹ் எந்த மார்க்கத்தை கொடுத்தானோ அந்த மார்க்கத்தில் உனது  மரணம் வராது.சுபஹானல்லாஹ் என்ன வார்த்தை சொல்கிறார்கள் நீ குப்ரிலே மரணித்ததாக ஆகும்.தொழுகையைபாழ்படுத்துவதை அந்த தன்மையோடு கொண்டு சேர்க்கிறார்கள்.
 
அடுத்து மூன்றாவது வகை தொழுகையாளிகள் யார் தெரியுமா?  யார் தொழுகையுடைய நேரங்களை பாதுகாக்கிறார்களோ ,அந்த தொழுகையினுடைய சட்டங்களை பாதுகாக்கின்றார்களோ,  ஜமாத்தை பாதுகாக்கிறார்களோ, தொழுகையின் உடைய உள்ளச்சத்தை பாதுகாக்கிறார்களோ, தொழுகையுடைய முஸ்தபுகளை,  தொழுகையுடைய ஒழுக்கங்களை பாதுகாக்கிறார்களோ இவர்கள்தான் அல்லாஹ்விடத்தில் வெற்றியாளர்கள். 
 
இவர்களுக்கு அல்லாஹ் கொடுக்க கூடிய கண்ணியங்கள் என்னவென்று தெரியுமா? அன்புக்குரியவர்களே! தொழுகைக்காக நேரத்தை எதிர்பார்த்து இருப்பவர்கள். 
 
عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَلَا أَدُلُّكُمْ عَلَى مَا يَمْحُو اللَّهُ بِهِ الْخَطَايَا وَيَرْفَعُ بِهِ الدَّرَجَاتِ قَالُوا بَلَى يَا رَسُولَ اللَّهِ قَالَ إِسْبَاغُ الْوُضُوءِ عَلَى الْمَكَارِهِ وَكَثْرَةُ الْخُطَا إِلَى الْمَسَاجِدِ وَانْتِظَارُ الصَّلَاةِ بَعْدَ الصَّلَاةِ فَذَلِكُمْ الرِّبَاطُ (صحيح مسلم  369 -)
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்: "ஒரு தொழுகைக்கு பிறகு அடுத்த தொழுகைக்கான நேரத்தை எதிர்பார்த்து இருப்பது, அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிவது. முந்திய ஸஃப்புகளிலே நீங்கள் அமர்ந்து தொழுகையை எதிர்பார்த்து அமர்ந்திருப்பது உடைய நன்மையை  நீங்கள் தெரிந்து கொண்டால் அதற்காக நீங்கள் போட்டி போட்டுக் கொள்வீர்கள்."
 
என்ன நிலைமை ஏற்படும்? யார் அங்கு அமர வேண்டும் என்பதற்காக நீங்கள் சீட்டுக் குலுக்கி போட வேண்டிய நிலைமை ஏற்படும். 
 
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்;
 
وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي الْمَسْجِدِ وَرَجُلَانِ تَحَابَّا فِي اللَّهِ وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ إِلَى نَفْسِهَا قَالَ إِنِّي أَخَافُ اللَّهَ وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لَا تَعْلَمَ شِمَالُهُ مَا صَنَعَتْ يَمِينُهُ (صحيح البخاري 6308 -)
 
"ஏழு மக்களை அல்லாஹ் அர்ஷின் நிழலில் அமர வைப்பான்.அதிலே ஒரு கூட்டம் யார் தெரியுமா? எவருடைய உள்ளங்கள் பள்ளியிலேயே இருக்குமோ! அல்லாஹ்வுடைய மஸ்ஜிதுகளில் திளைத்து  இருக்குமோ! அந்த கூட்டம் தான் அங்க இருப்பார்கள்"என்பதாக. 
 
நூல்: புகாரி, எண்: 6308
 
அன்புக்குரியவர்களே! அல்லாஹு தஆலா எப்படி போரிலே அணிவகுத்து இருக்கக்கூடிய முஜாஹித்களைப் பார்த்து சந்தோஷப்படுகின்றானோ! சஃப்புகளிலே அணிவகுத்து நிற்க கூடிய அந்த தொழுகையாளிகளை பார்த்து அல்லாஹ்  சந்தோஷப்படுகிறான்.  ரசூல் )ஸல்( அவர்கள் சொன்னார்கள்: 
 
عَنْ بُرَيْدَةَ الأَسْلَمِيِّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «بَشِّرِ المَشَّائِينَ فِي الظُّلَمِ إِلَى المَسَاجِدِ بِالنُّورِ التَّامِّ يَوْمَ القِيَامَةِ»،: هَذَا حَدِيثٌ غَرِيبٌ (سنن الترمذي 223 -)
 
யார்  பள்ளிகளை செழிப்பாக்குகின்றார்களோ! அவர்களுக்கு ஈமானை கொண்டு நீங்கள் சாட்சி சொல்லுங்கள் என்பதாக.
 
அன்புக்குரியவர்களே! குர்ஆன் ஹதீஸை பேசக்கூடிய, மார்க்கத்தை பற்றி பேசக்கூடிய,  ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சுன்னத்தை உயிர்ப்பிக்க கூடிய நாம்,  ரசூலுல்லாஹ்வுடைய சுன்னத்துகளிலே  ரசூல்லாஹ்வுடைய கட்டளைகளில் மிக முக்கியமான கட்டளையான  இந்த தொழுகையை நாம் பாதுகாக்க வேண்டும். இதனுடைய நேரங்களை பாதுகாக்க வேண்டும். இதில் நேரம் வருவதற்கு முன்னதாகவே நாம் ஆயத்தமாக வேண்டும். அந்த தொழுகையில் நாம் உள்ளச்சத்துடனே மனஓர்மையுடனே அல்லாஹ்வின் நினைவுடனே அந்த தொழுகையில் ஈடுபட வேண்டும். இதைக் கொண்டுதான் மற்ற வணக்கங்களை நாம் சீர் செய்ய முடியும்.
 
இந்த தொழுகையை யார் பாழ்படுத்தினார்களோ! அவர்கள் எல்லா வணக்கங்களையும் பாழ்படுத்துவார்கள். யார் இந்த தொழுகையை வீணடித்தார்களோ அவர்கள் ஜக்காத்தை வீணடிப்பார்கள். அவர்கள் ஹஜ்ஜை வீணடிப்பார்கள். அவர்கள் நோன்பை வீணடிப்பார்கள்.இவர்கள் அல்லாஹ்வின் எல்லா சட்டங்களையும் பாழ்படுத்துவார்கள். யார் தொழுகையை பாதுகாத்தார்களோ! யார் தொழுகையை சீர் வர செய்தார்களோ!அவர்கள் மார்க்கத்தின்  எல்லா சட்டங்களையும் சீர்பெற செய்வார்கள்.
 
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களுடைய கவர்னர்களுக்கு தபால் எழுதுகிறார்கள்: தங்களுடைய  ஆட்சிக்குக் கீழ் இருக்கக்கூடிய ஆளுநர்களுக்கு  என்ன வாசகங்கள் எழுதுகிறார்கள் என்று தெரியுமா? என்னுடைய ஆளுநர்களே! 
 
إن أهم أموركم عندي الصلاة ، من حفظها (1) واحافظ عليها حفظ دينه ، ومن ضيعه فهو لسواها أضيع
(2039 - عبد الرزاق)
 
என்னுடைய கவர்னர்களே! உங்களுடைய காரியங்களில் என்னிடத்தில் மிக மிக முக்கியமான காரியம்தொழுகைதான். ஒரு கலீபா  தனக்கு கீழே  இருக்க கூடிய ஒரு ஆளுநருக்கு எழுதுகின்றார். நீங்கள் நிர்வகிக்க வேண்டிய நீங்கள் கவனித்துப் பேண வேண்டிய காரியங்களில் எல்லாம் என்னிடத்தில் மிக முக்கியமானது தொழுகை. யார் இந்த தொழுகையை பாதுகாத்தாரோ!அவர் முஸ்லிம்களுடைய எல்லா காரியங்களையும் ஷரிஅத் உடைய எல்லா சட்டங்களையும் பாதுகாப்பார்.யார் இந்த தொழுகையை பாழ்படுத்தினார்களோ அவர் மார்க்கத்தில் உள்ள எல்லா சட்டங்களையும் கட்டளைகளையும் பாழ்படுத்துவார்.
 
அன்பிற்குரியவர்களே! நம்முடைய வாழ்க்கையிலே நாம் பார்க்கிறோம். எப்போது இந்த சமுதாயம் தொழுகையை பாதுகாப்பாக ஒழுக்கமாக நிறைவேற்றுகிறதோ! மார்க்கம் அந்த சமுதாயத்திலேயே நிறைவாக இருந்தது. எப்பொழுது தொழுகையை அலட்சியம் செய்தார்களோ!இதை தொடர்ந்து எல்லா சட்டங்களிலும் எல்லா கட்டளைகளிலும் எல்லா ஒழுக்கங்களிலும் அலட்சியம் செய்து விட்டார்கள்.அல்லாஹுதஆலா நம் அனைவருக்கும் இந்தத் தொழுகையை அவன் விரும்பக்கூடிய lமுறையிலே நிறைவேற்றி,  அவனுடைய அன்பை அடைந்து, அவனுடைய முழுமையான அடியார்கள் என்பதை  நாம் வெளிப்படுத்துவதற்கு  உதவி செய்வானாக!
 
ஆமீன்
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1).
 
حَدَّثَنَا أَسْوَدُ هُوَ ابْنُ عَامِرٍ، حَدَّثَنَا إِسْرَائِيلُ، عَنْ إِبْرَاهِيمَ بْنِ مُهَاجِرٍ، عَنْ مُجَاهِدٍ، عَنْ مُوَرِّقٍ، عَنْ أَبِي ذَرٍّ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ: «إِنِّي أَرَى مَا لَا تَرَوْنَ، وَأَسْمَعُ مَا لَا تَسْمَعُونَ، أَطَّتِ السَّمَاءُ وَحَقَّ لَهَا أَنْ تَئِطَّ، مَا فِيهَا مَوْضِعُ أَرْبَعِ أَصَابِعَ إِلَّا عَلَيْهِ مَلَكٌ سَاجِدٌ. لَوْ عَلِمْتُمْ مَا أَعْلَمُ، لَضَحِكْتُمْ قَلِيلًا وَلَبَكَيْتُمْ كَثِيرًا، وَلَا تَلَذَّذْتُمْ بِالنِّسَاءِ عَلَى الْفُرُشَاتِ، وَلَخَرَجْتُمْ عَلَى، أَوْ إِلَى، الصُّعُدَاتِ تَجْأَرُونَ إِلَى اللَّهِ» قَالَ [ص:406]: فَقَالَ أَبُو ذَرٍّ: «وَاللَّهِ لَوَدِدْتُ أَنِّي شَجَرَةٌ تُعْضَدُ» (مسند أحمد- 21516 )
 
குறிப்பு 2).
 
حَدَّثَنَا يَزِيدُ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ ثَابِتٍ الْبُنَانِيِّ، عَنْ مُطَرِّفِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِيهِ قَالَ: «رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي صَدْرِهِ أَزِيزٌ [ص:239] كَأَزِيزِ الْمِرْجَلِ مِنَ الْبُكَاءِ» ، قَالَ عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ: لَمْ يَقُلْ مِنَ الْبُكَاءِ إِلَّا يَزِيدُ بْنُ هَارُونَ (مسند أحمد -16312)
 
குறிப்பு 3).
 
قَالَ أَبُو هُرَيْرَةَ: عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَثْقَلُ الصَّلاَةِ عَلَى المُنَافِقِينَ العِشَاءُ وَالفَجْرُ» وَقَالَ: «لَوْ يَعْلَمُونَ مَا فِي العَتَمَةِ وَالفَجْرِ» قَالَ أَبُو عَبْدِ اللَّهِ: " وَالِاخْتِيَارُ: أَنْ يَقُولَ العِشَاءُ، لِقَوْلِهِ تَعَالَى: {وَمِنْ بَعْدِ صَلاَةِ العِشَاءِ} [النور: 58] " وَيُذْكَرُ عَنْ أَبِي مُوسَى، قَالَ: «كُنَّا نَتَنَاوَبُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عِنْدَ صَلاَةِ العِشَاءِ فَأَعْتَمَ بِهَا» وَقَالَ ابْنُ عَبَّاسٍ، وَعَائِشَةُ: «أَعْتَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالعِشَاءِ» وَقَالَ بَعْضُهُمْ، عَنْ عَائِشَةَ: «أَعْتَمَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالعَتَمَةِ» وَقَالَ جَابِرٌ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي العِشَاءَ» وَقَالَ أَبُو بَرْزَةَ: «كَانَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يُؤَخِّرُ العِشَاءَ» وَقَالَ أَنَسٌ: «أَخَّرَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ العِشَاءَ الآخِرَةَ» وَقَالَ ابْنُ عُمَرَ، وَأَبُو أَيُّوبَ، وَابْنُ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ: «صَلَّى النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ المَغْرِبَ وَالعِشَاءَ» (صحيح البخاري (1/ 117)