HOME      Khutba      முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வு என்ன? | Tamil Bayan - 19   
 

முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வு என்ன? | Tamil Bayan - 19

           

முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வு என்ன? | Tamil Bayan - 19


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
 
முஸ்லிம்களின் பிரச்சினைக்கு தீர்வு என்ன?
 
 
 
எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே அவனை புகழ்கின்றோம் அவனிடம் உதவி தேடுகின்றோம்.அவனிடம் நமது குற்றங்களுக்காக பாவங்களுக்காக பிழை  பொறுப்பை தேடுகின்றோம். அல்லாஹ்விடமே நம்முடைய மன இச்சைகளின் கெடுதிகளை விட்டும் நமது செயல்களின் தீங்குகளை விட்டும் பாதுகாப்புத் தேடுகின்றோம்  அல்லாஹ் யாரை நேர்வழியில் செலுத்துகிறானோ அவரை யாரும் வழி கெடுத்து விட முடியாது அல்லாஹ் யாரை வழி கேட்டில் விட்டு விடுகின்றானோ அவரை யாரும் நேர்வழி காட்ட முடியாது.
 
 
 
வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை அவன் தனித்தவன் அவனுக்கு இணை துணை இல்லை முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வின் அடிமையும் அவனுடைய தூதருமாவார் என்றும் சாட்சி சொல்கின்றோம்.
 
 
 
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வை எப்படி அஞ்சிக் கொள்ள வேண்டுமோ பயப்பட வேண்டுமோ அந்த முறையில் அஞ்சிக்கொள்ளுங்கள் பயந்து கொள்ளுங்கள் நீங்கள் முஸ்லிம்களாக இருக்கும் நிலையிலேயே தவிர மரணித்து விட வேண்டாம் .
 
 
 
நம்பிக்கை கொண்டவர்களே! ஒரே ஆத்மாவிலிருந்து உங்களை படைத்த இறைவனை பயந்து கொள்ளுங்கள். அவன் தான் அந்த ஆத்மாவிலிருந்து அதற்கு உண்டான ஜோடியைப் படைத்தான்.அவ்விருவர் மூலமாக ஆண்களையும் பெண்களையும் படைத்தான்.
 
 
 
எந்த அல்லாஹ்வின் மூலமாக நீங்கள் ஒருவருக்கு ஒருவர் கொடுத்து வாங்கிக்கொள்ளுவீர்களோ அந்த அல்லாஹ்வையும் ரத்த பந்தங்களையும் நீங்கள் பயந்து கொள்ளுங்கள் நிச்சயமாக அல்லாஹ் உங்களை கண்காணித்துக் கொண்டிருக்கிறான்.
 
 
 
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் நேர்மையான விஷயத்தை பேசுங்கள் அல்லாஹ் உங்களுடைய காரியங்களை சீர்படுத்துவான் உங்களது பாவங்களை மன்னிப்பான். யார் அல்லாஹ்விற்கும் அல்லாஹ்வுடைய தூதருக்கும் கீழ்ப்படிந்து வழிப்பட்டு நடக்கிறார்களோ நிச்சயமாக அவர் மகத்தான வெற்றி அடைந்து விட்டார்.
 
 
 
பேச்சுகளில் மிக உண்மையானது அல்லாஹ்வின் புத்தகமாகும் .நேர்வழியில் மிகச்சிறந்தது முஹம்மத் (ஸல்) அவர்கள் அவர்கள் காட்டிய வழியாகும். காரியங்களில் மிக தீமையானது எது புதிதாக உருவாக்கப்பட்டதோ அதுவே. புதிதாக உருவாக்கப்பட்ட ஒவ்வொன்றும் அனாச்சாரம் ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும்  வழிகேடு தான். ஒவ்வொரு வழிகேடும் மனிதனை நரகத்திற்கு கொண்டு போய் சேர்த்துவிடும் .
 
அன்பிற்குரியவர்களே! இன்று நம்முடைய ஜும்ஆவின் தலைப்பு நம்முடைய பின்தங்கிய நிலைக்கு தீர்வு என்ன? முஸ்லிம்கள் இன்று  உலகளாவிய மேடையிலே பின்தங்கியவர்களாக பொதுவாக எண்ணப்படுகிறார்களே இதற்கு என்ன காரணம் என்பதை தான் அல்லாஹ்வும்  அல்லாஹ்வின் ரசூல் (ஸல்) அவர்களும் கூறியிருக்கும் வெளிச்சத்திலேயே பார்க்கப்போகிறோம்.
 
 
 
அன்பிற்குரியவர்களே! அல்லாஹ் குறிப்பிடுகின்றான்:
 
وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ 
 
நீங்கள் பயப்பட வேண்டாம். நீங்கள் கோழையாக வேண்டாம் நீங்கள் கவலைப்பட வேண்டாம் நீங்கள் துக்கப்பட  வேண்டாம் சஞ்சலமும்பட வேண்டாம்.  நீங்கள்தான் உயர்ந்தவர்கள். (அல்குர்ஆன் 3 : 139)
 
 
 
அல்லாஹு தஆலா நம்மைப் பார்த்து நீங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்லவில்லை. أَنْتُمُ الْأَعْلَوْنَ நீங்கள்தான் உயர்ந்தவர்கள் மற்றவர்கள் உயர்ந்தவர்கள் அல்ல என்று அழுத்தம் திருத்தமாக குறிப்பிடுகின்றான். நீங்கள் உயர்ந்தவர்கள் என்று சொல்வதற்கும் நீங்கள் தான் உயர்ந்தவர்கள் என்று சொல்வதற்கும் இடையில் நிறைய வேறுபாடுகள் இருக்கின்றது. அல்லாஹ் குறிப்பிடுகின்றான். أَنْتُمُ الْأَعْلَوْنَ நீங்கள்தான் மிக உயர்ந்தவர்கள். இந்த இடத்தில் அல்லாஹ் சுப்ஹானஹு  தஆலா  பல விஷயங்களை கொண்டு உறுதியாக சொல்கின்றான்.
 
 
 
عال (ஆலி) என்பது உடைய மிகைப்பு சொல் தான்اعلى  (அஃலா) என்பது. அல்லாஹ் இந்த இடத்திலே நீங்கள் உயர்ந்தவர்கள் என்று அல்லாஹ் சொல்லவில்லை. நீங்கள் தான் மிக உயர்ந்தவர்கள் நீங்கள் நான்  மிக மிகைத்தவர்கள் என்று அல்லாஹ் இந்த இடத்தில் குறிப்பிடுகிறான்.
 
 
 
இப்படி குறிப்பிடும் அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா அவனுடைய இந்த வாக்குக்கு ஒரு காரணத்தை சொல்கின்றான்.
 
إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
 
நீங்கள் நம்பிக்கை உடையவர்களாக நீங்கள் நம்பிக்கை உடையவர்களாக வாழ்ந்தால் ஈமானை உடையவர்களாக அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூல்(ஸல்)அவர்களும் எந்த ஈமானை நம்பிக்கையை உங்களிடத்தில் எதிர்பார்க்கிறார்களோ அந்த இறை நம்பிக்கை உடையவர்களாக நீங்கள் வாழ்ந்தால் நீங்கள்தான் மிகமிக மிகைத்தவர்கள் மிக கண்ணியத்திற்குரியவர்கள் மனிதர்களை ஆட்சி செய்யக்கூடிய மனிதர்களை வழிநடத்தக் கூடிய தகுதிக்கு உரியவர்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான் யோசித்து பாருங்கள்.
 
 
 
அடுத்ததாக அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா மேலும் அவனது அல்குர்ஆனில் பல வாக்குகளை நமக்கு சொல்கின்றான்;
 
 
 
وَلَيَنْصُرَنَّ اللَّهُ مَنْ يَنْصُرُهُ إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ 
 
நிச்சயமாக அல்லாஹ் திட்டவட்டமாக நிச்சயமாக அல்லாஹ் உதவி செய்தே தீருவான். பாருங்கள் எப்படிப்பட்ட வாசகத்தை அழுத்தத்தை கருத்து அழுத்தத்தை அல்லாஹ் பயன்படுத்துகிறான். உதவி செய்வேன் என்று அல்லாஹ் சொல்லவில்லை சாதாரணமாக அல்லாஹ் குறிப்பிடவில்லை. திட்டவட்டமாக நிச்சயமாக உதவி செய்தே தீருவேன் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான். (அல்குர்ஆன் 22 : 40)
 
وَلَيَنْصُرَنَّ اللَّهُ  நிச்சயமாக சத்தியமாக உறுதியாக அவன் உதவி செய்வான். யாருக்கு அல்லாஹ் உதவி செய்வான்? مَنْ يَنْصُرُهُ யார் அல்லாஹ்விற்கு உதவி செய்கிறார்களோ  அவர்களுக்கு அல்லாஹ் உதவி செய்வான் அல்லாஹ்வுடைய ஆற்றல் எப்படிப்பட்டது அல்லாஹ்வுடைய வல்லமை எப்படிப்பட்டது நாம் கற்பனை செய்வது போன்று கிடையாது.
 
 
 
ஏழு வானங்களை படைத்தவன். அர்ஷை படைத்தவன். குர்சியை  படைத்தவன் இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு படைப்பினத்தையும் தெளிவாக திட்டமாக முறையாக அழகாக படைத்து நிர்வகித்து கொண்டிருப்பவன்.
 
وَلَا يَئُودُهُ حِفْظُهُمَا 
 
வானங்களையும் பூமியையும் படைத்து பரிபாலித்து வளர்த்து காப்பது அவனுக்கு எந்த சிரமத்தையும் எப்போதும் அளித்ததில்லை இனியும் அளிக்காது. மிகைத்தவன் அவனை யாரும் மிகைக்க  முடியாது. சட்டம் இயற்றுபவன். அவனுக்கு யாரும் சட்டம் சொல்ல  முடியாது. (அல்குர்ஆன் 2 : 255)
 
لَا يُسْأَلُ عَمَّا يَفْعَلُ وَهُمْ يُسْأَلُونَ 
 
அவன் தான் நம்மிடம் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்பானே தவிர அவனிடம்  விரல் நீட்டி யாரும் ஏன் எதற்கு என்று கேள்வி கேட்க முடியாது (அல்குர்ஆன் 21 : 23)
 
 
 
மகிமைக்குரியவன் கண்ணியத்திற்குரியவன் ஆட்சி செய்யக்கூடியவன் அதிகாரம் செய்யக்கூடியவன் அவன் கூறுகின்றான்,  தம்மைப்பற்றி,
 
إِنَّ اللَّهَ لَقَوِيٌّ عَزِيزٌ  
 
திட்டவட்டமாக உறுதியாக சொல்கின்றான், அவன் நமக்கு குறிப்பிடுகின்றான், திட்டவட்டமாக அல்லாஹ் உறுதியானவன்தான் மிகைத்தவன் தான். (அல்குர்ஆன் 22 40)
 
 
 
அல்லாஹு அக்பர் யோசித்துப் பாருங்கள் நண்பர்களே ஏன் அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா  இவ்வளவு அழுத்தமாக குறிப்பிடுகின்றான் நம்மை பார்த்து சொல்லுகின்றான்.
 
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا  
 
நம்பிக்கை கொண்டவர்களே! ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை  நம்புகின்றோம் என்று சொல்பவர்களே! மறுமையை நம்பிக்கை கொள்கின்றோம் என்று சொல்பவர்களே! இந்தக் குர்ஆனை நம்புகின்றோம் என்று சொல்பவர்களே! இந்த நபியை நம்பிக்கை கொள்கின்றோம் என்று சொல்பவர்களே! மறுமை தான் உண்மையான நிரந்தரமான வீடு என்று சொல்பவர்களே! இந்த உலகம் அழியக் கூடியது என்ற நம்பிக்கை கொண்டவர்களே! உங்களுக்கு நான் சொல்லுகின்றேன் அல்லாஹ் அழைக்கின்றான்.
 
 
 
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ் ஒவ்வொரு முறையும் குர்ஆனிலே நம்பிக்கை கொண்டவர்களே என்று அழைக்கும் போது இத்துனை  கருத்துகளையும் அங்கே அடக்கி நாம் பார்க்கவேண்டும். வாயலவிலே ஏற்றுக் கொண்டவர்களை எல்லாம் அழைக்கவில்லை அவர்கள் நயவஞ்சகர்கள் அவர்கள் முனாபிக்குகள்  என்று அல்லாஹ்  ஒதிக்கி விடுகின்றான்.
 
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا
 
யாருடைய உள்ளத்தில் ஈமான் இறை நம்பிக்கை ஆழமாக பதிந்துவிட்டதோ அந்த இறைநம்பிக்கை அவருடைய வாழ்க்கையில் செயல்களாக பிரதிபலிக்கின்றனவோ அவரது கொள்கையிலே அவரது செயல்களில் அவரது சொற்களிலேயேஅவருடைய  குணங்களில் அவருடைய  கொடுக்கல்-வாங்கலிலே அவருடைய இறை வழிபாட்டிலே இப்படி ஒவ்வொரு துறையிலும் அவரை பார்க்கும் பொழுதுஇவர் ஒரு இறை நம்பிக்கையாளர் அல்லாஹ்வையும் அல்லாஹ்வுடைய தூதர் ரசூலையும் ஏற்று அவர்களுக்கு கீழ்படிந்து நடக்க கூடிய உண்மையான முஸ்லிம் என்ற அடையாளம் காணப்படுகின்றதே அவர்களை அல்லாஹ் அழைக்கின்றான் .
 
 
 
போலிகளை அல்லாஹ் அழைக்கவில்லை. அல்லாஹு தஆலா  இரட்டை அர்த்தம் உடையவர்களை அழைக்கவில்லை இரட்டை முகம் உடையவர்களை அல்லாஹ் அழைக்கவில்லை. பள்ளிக்கு வந்தால் முமீன்களாக இருப்பார்கள் கடைத்தெருவிற்கு சென்றால் காபிர்களாக மாறி விடுவார்களே  அவர்களை அழைக்கவில்லை.தொழுகையில் முஸ்லிம்களாக இருந்து கொண்டு குணத்தில் காஃபிர்களாக இருக்கின்றார்களே அவர்களை இங்கு  அல்லாஹ் அழைக்கவில்லை. நோன்பிலே முஸ்லிம்களாக இருந்து கொண்டு நோன்பு முடித்ததும் காபிர்களாக மாறி விடுகிறார்களே அவர்களை அல்லாஹ் இங்கு அழைக்கவில்லை. அல்லாஹ் யாரை அழைக்கிறான்?
 
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا
 
நம்பிக்கை கொண்டவர்களே! யாருடைய நம்பிக்கை யாருடைய சொல்லை செயலை குணத்தை கொள்கையைப்  பண்பை மாற்றியதோ அவர்களையே அல்லாஹ் அழைக்கின்றான்.
 
 
 
அறிந்து கொள்ளுங்கள்! யாருடைய இறைநம்பிக்கையை அவரது குணத்தை சொல்லை செயலை இறைவழிபாட்டிற்க்கு ஏற்ப இறைக் கொள்கைக்கு ஏற்ப இறை மார்க்கத்திற்கு ஏற்ப அந்த இறைமார்க்கத்தினுடைய நபியினுடைய வழிமுறைகளுக்கு ஏற்ப மாற்றவில்லையோ அவர்கள் தங்களைத் தாங்களே வேண்டுமானால் முஸ்லிம்களாக முஃமின்களாக நம்பிக்கை கொண்டிருக்கலாம். ஆனால் மறுமையில் அவர்கள் நம்பிக்கையாளர்கள் உடைய கூட்டத்தில் எழுப்பப்பட மாட்டார்கள். அவர்கள் முனாபிக்குகள்  நயவஞ்சகர்கள் என்பதாக அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் பிரித்து விடுவார்கள். சகோதரர்களே!
 
 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லியதை நினைவு வைத்து பாருங்கள் 
 
 
 
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَرْبَعٌ مَنْ كُنَّ فِيهِ كَانَ مُنَافِقًا خَالِصًا وَمَنْ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْهُنَّ كَانَتْ فِيهِ خَصْلَةٌ مِنْ النِّفَاقِ حَتَّى يَدَعَهَا إِذَا اؤْتُمِنَ خَانَ وَإِذَا حَدَّثَ كَذَبَ وَإِذَا عَاهَدَ غَدَرَ وَإِذَا خَاصَمَ فَجَرَ (صحيح البخاري33 - )
 
நான்கு குணங்கள் இருந்தால் சுத்தமான முனாஃபிக் சுத்தமான நான்கு குணங்கள் இருந்தால் அவன் நூற்றுக்கு நூறு சத்தமான முனாபிக் அவன் மூஃமின் அல்ல.
 
பேசினால் பொய் பேசுவான், கொடுத்த வாக்கிற்க்குமாறு செய்வான்,தர்க்கம் செய்தால் அத்துமீறி வாக்கிடுவான், ஆதாரம் இல்லாமல் பிறருடைய சொத்தை பறிப்பதற்கு முயற்சி செய்வான்.    நம்பிக்கையாக ஒன்றை ஒப்படைக்கப்பட்டால் அவனை நம்பினால் நம்பிக்கை துரோகம் செய்வான். அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் அவன் தொழுது நோன்பு வைத்து தன்னை முஸ்லிம் என்று எண்ணிக் கொண்டாலும் சரியே அல்லாஹ்வின் பார்வையில் இவன் சுத்தமான முனாஃபிக் ஆக இருப்பான். அல்லாஹு அக்பர் யோசித்துப்பாருங்கள்.
 
 
 
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 33
 
 
 
எப்படிப்பட்ட எச்சரிக்கையை! அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) நமக்குச் சொன்னார்கள். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு  அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்திலே சில கிராமத்து மக்கள்  வந்தார்கள் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் அவர்களைப் பார்த்து சொன்னார்கள்.
 
قَالَتِ الْأَعْرَابُ آمَنَّا قُلْ لَمْ تُؤْمِنُوا وَلَكِنْ قُولُوا أَسْلَمْنَا وَلَمَّا يَدْخُلِ الْإِيمَانُ فِي قُلُوبِكُمْ  
 
(நபியே!) நாட்டுப்புறத்து அரபிகளில் பலர், தாங்களும் நம்பிக்கையாளர்கள் எனக் கூறுகின்றனர். (அவர்களை நோக்கி) நீர் கூறுவீராக: ‘‘நீங்கள் உங்களை நம்பிக்கையாளர்கள் எனக் கூறாதீர்கள். ஏனென்றால், நம்பிக்கை உங்கள் உள்ளங்களில் நுழையவே இல்லை. ஆயினும், (வெளிப்படையாக) வழிபடுபவர்கள் என்று (உங்களை) நீங்கள் கூறிக் கொள்ளுங்கள்.(அல்குர்ஆன் 49 : 14)
 
 
 
அல்லாஹ்விடத்தில் கிராமவாசிகள் வந்து சொல்கிறார்கள். இறைத்தூதரே! நாங்களும் நம்பிக்கை கொண்டோம் நாங்களும் மூஃமின்களாக மாறி விட்டோம் என்பதாக,  அல்லாஹு அக்பர் அகிலத்தின் அதிபதி அர்ஷின் இறைவன் அங்கிருந்து வசனத்தை அனுப்புகின்றான் தனது தூதருக்கு சுட்டிக் காட்டுகின்றான்.
 
 
 
யாரிடமிருந்து வேண்டுமானாலும் நமது உள்ளத்தில் உள்ள எண்ணங்களையும் மறைக்கலாம். நமது கண்களின்மோசடிகளை மறைக்கலாம் நமது சிந்தனையில் உதிக்க கூடிய தவறான விஷயங்களை மறைத்து விடலாம். ஆனால் அன்பிற்குரியவர்களே அல்லாஹ்வின் அறிவிலிருந்து நாம் எதையும் மறைக்க முடியாது.
 
 
 
அல்லாஹ் சொல்கின்றான்;’
 
يَعْلَمُ خَائِنَةَ الْأَعْيُنِ وَمَا تُخْفِي الصُّدُورُ  
 
உங்களது கடைக்கண் பார்வைகளையும் நான் அறிவேன் எங்களது உள்ளங்கள் மறைத்து வைத்திருப்பதையும் நான் அறிவேன். (அல்குர்ஆன் 40 : 19)
 
إِنَّهُ يَعْلَمُ الْجَهْرَ وَمَا يَخْفَى  
 
வெளிப்படையானதையும் மறைவானதையும் நான் அறிவேன் என்று அல்லாஹ் சொல்கின்றான். (அல்குர்ஆன் 87 : 7)
 
 
 
அந்த அல்லாஹ்விடம் நமது எண்ணங்களை மறைக்க முடியாது. நமது செயல்களை மறைக்க முடியாது. நமது சிந்தனைகளை மறக்கமுடியாது. நாம் என்னென்ன எண்ணினோம் எப்படியெல்லாம் எண்ணினோம் இனி என்ன எண்ணுவோம் என்பதை அனைத்தையும் அல்லாஹ் தெள்ளத் தெளிவாக தெரிந்து வைத்திருக்கிறான்.
 
 
 
அல்லாஹ் சொல்கின்றான்;
 
لَا يَعْزُبُ عَنْهُ مِثْقَالُ ذَرَّةٍ فِي السَّمَاوَاتِ وَلَا فِي الْأَرْضِ وَلَا أَصْغَرُ مِنْ ذَلِكَ وَلَا أَكْبَرُ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ  
 
அணு அளவு இருக்கக்கூடிய  ஒன்று வானங்களில் இருந்தாலும் சரி பூமியில் இருந்தாலும் சரி பூமியின் ஆழத்தில் இருந்தாலும் சரி வானத்திற்கு மேல் இருந்தாலும் சரி,அதை விட சிறியதாக இருக்கட்டும், அணு என்று ஒன்று இருந்து அதை விட சிறியதாக ஒன்று இருந்தாலும் சரி அதற்கு பெரியதாக இருந்தாலும் சரி தெளிவான பதிவு புத்தகத்தில் எழுதப்பட்டிருக்கிறது எனது அறிவை விட்டு அது மறையாது. (அல்குர்ஆன் 34 :3)
 
وَمَا تَسْقُطُ مِنْ وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِي ظُلُمَاتِ الْأَرْضِ وَلَا رَطْبٍ وَلَا يَابِسٍ إِلَّا فِي كِتَابٍ مُبِينٍ  
 
ஒரு மரத்திலிருந்து விழக்கூடிய இலை கூட அல்லாஹ்வின் அறிவைக்கொண்டு விழுகின்றது சகோதரர்களே, பூமியில் இருக்கக்கூடிய ஈரமான காய்ந்த எந்த ஒன்றாக இருந்தாலும் சரி. அல்லாஹ் அதை அறியாமல் இல்லை தனது பதிவு புத்தகத்தில் பதிவு செய்யாமலும் இல்லை அல்லாஹு அக்பர் அல்லாஹ்வுடைய அறிவை நாம் என்னவென்று எண்ணிக் கொண்டோம். (அல்குர்ஆன் 6 : 59)
 
 
 
இன்றைய நம்முடைய இறைநம்பிக்கையின் பலவீனத்திற்கு காரணம் அல்லாஹ்வை எப்படி அறிந்து கொள்ள வேண்டுமோ அப்படி நாம் அறிந்து கொள்ளவில்லை அல்லாஹ் சொல்கின்றான்.
 
 
 
நபிக்கு அறிவுரையை சொல்கின்றான். இந்த மக்கள் வந்து உங்களிடம் சொல்கின்றார்களே நாங்கள் நம்பிக்கை கொண்டோம் என்பதாக இல்லை இல்லை
 
قُلْ لَمْ تُؤْمِنُوا وَلَكِنْ قُولُوا أَسْلَمْنَا وَلَمَّا يَدْخُلِ الْإِيمَانُ فِي قُلُوبِكُمْ  49:14
 
நீங்கள் இன்னும் நம்பிக்கை கொண்டவர்களாக மூஃமின்களாக மாறவில்லை. இறை நம்பிக்கை உங்களுடைய உள்ளங்களிலே இன்னும் நுழையவில்லை.
 
قُولُوا أَسْلَمْنَا
 
இப்போதுதான் இஸ்லாமிய செயல்பாடுகளை இஸ்லாமிய சட்டங்களை நீங்கள் பின்பற்ற ஆரம்பித்து இருக்கிறீர்களே தவிர நம்பிக்கை உங்களது உள்ளத்தின் ஆழத்தில் இன்னும் நுழையவில்லை. (அல்குர்ஆன் 49 : 14) 
 
 
 
அல்லாஹு அக்பர் அன்பிற்குரியவர்ளே!  இன்றைய காலத்தில் குர்ஆன் இறங்கி இருந்தால் இறைத்தூதர் (ஸல்) உயிருடன் இருந்திருந்தால் என்ன ஒரு தீர்ப்பு அல்லாஹ் இந்த மக்களுக்கு இறக்கி இருப்பான் என்பதை சற்று சிந்தித்துப் பாருங்கள்.
 
 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் எச்சரிக்கை செய்கின்றான். நபியே! இவர்களை மூஃமின்களாக ஏற்றுக் கொள்ளாதீர்கள். இவர்கள் இப்போதுதான் இஸ்லாமைப் பின்பற்ற ஆரம்பித்து இருக்கிறார்களே தவிர உள்ளத்தில் இறைநம்பிக்கை வரவில்லை. ஏன் அல்லாஹ் சொல்கின்றான் இறைநம்பிக்கை என்பது வாழ்க்கையிலேயே புரட்சியை ஏற்படுத்த  வேண்டும். சிந்தனையில்  புரட்சி வரவேண்டும். கொள்கையிலே புரட்சி வரவேண்டும் குணத்திலே புரட்சி வரவேண்டும் 
 
 
 
யாருடைய இறைநம்பிக்கை அவருடைய சொல்லை செயலை குணத்தை ஒழுக்கங்களை அவருடைய நடைமுறைகளை மாற்றவில்லையோ அவர் ஒருபோதும் தன்னை இறை நம்பிக்கையாளராக எண்ணிக்கொள்ள வேண்டாம்.வேண்டுமென்றால் நான் ஒரு தொழுகையாளி நான் ஒரு நோன்பாளி நான் ஒரு ஹஜ் செய்திருக்கிறேன் சில தர்மங்கள் நல்ல காரியங்கள் செய்து இருக்கிறேன் என்று தன்னைப்பற்றி எண்ணலாம் தவிர, இறை நம்பிக்கையாளர் என்பதாக  எண்ண முடியாது. அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்களும்  இறைநம்பிக்கையாளர் என்ற வார்த்தைக்கு பல அடையாளங்களை சொல்லியிருக்கிறார்கள்.
 
 
 
அந்த அடையாளங்களை அந்த தன்மைகளை நமது வாழ்க்கையில் ஏற்று செயல்படுத்தாத வரை நாம் நம்மை முழுமையான இறை நம்பிக்கையாளர் என்பதாக சொல்லமுடியாது. அல்லாஹ் அழைக்கின்றான் யாரை? அந்த முழுமையான இறை நம்பிக்கையாளர்களை அழைக்கின்றான்.
 
 
 
யாரை அல்லாஹ் ஏற்றுக்கொண்டானோ யாரை அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) ஏற்றுக் கொண்டார்களோ அவர்களை அல்லாஹ் அழைக்கின்றான்.
 
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تَنْصُرُوا اللَّهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ  
 
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்விற்கு நீங்கள் உதவி செய்தால் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான்.உங்களது பாதங்களை அல்லாஹ் உறுதிப்படுத்துவான். (அல்குர்ஆன் 47 : 7) 
 
சி
 
ந்தித்துப் பாருங்கள் .அல்லாஹ் உதவி செய்தால் யாருக்கு அல்லாஹ் உதவி செய்கிறானோ அவரை யாரால் மிகைக்க முடியும் அல்லாஹ் சொல்கின்றான்.
 
إِنْ يَنْصُرْكُمُ اللَّهُ فَلَا غَالِبَ لَكُمْ وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ  
 
(நம்பிக்கையாளர்களே!) அல்லாஹ் உங்களுக்கு உதவி புரிந்தால் உங்களை வெற்றி கொள்பவர் எவருமில்லை. உங்களை அவன் (கை) விட்டு விட்டாலோ அதற்குப் பின்னர் உங்களுக்கு எவர்தான் உதவி செய்ய முடியும்? ஆதலால், அல்லாஹ்விடமே நம்பிக்கையாளர்கள் பொறுப்பை ஒப்படைக்கவும். (அல்குர்ஆன் 3 : 160)
 
 
 
அல்லாஹ் தன்னுடைய உதவியை உங்களுக்கு செய்யவில்லை என்றால், தனது உதவியை உங்களை விட்டு தடுத்துக்கொண்டால்  அவனைத் தவிர உங்களுக்கு அவனுடைய உதவி   எடுக்கப்பட்டதற்கு பிறகு உங்களுக்கு உதவி செய்யக்கூடியவர் யார்? கூக்குரல் இட்டுக் கொள்ளுங்கள். என்ன வேண்டுமானாலும் அழைத்துக் கொள்ளுங்கள். எத்தகைய சங்கங்களை வேண்டுமானாலும் ஏற்படுத்திக் கொள்ளுங்கள். என்னென்ன வாதங்கள் வேண்டுமானாலும் அரசாங்க இடத்திலே நீங்கள் வைத்துக்கொள்ளுங்கள்.
 
 
 
ஆனால் அன்பிற்குரியவர்களே! எந்த முஸ்லிம்கள் அல்லாஹ்விற்கு உதவி செய்யவில்லையோ எந்த முஸ்லிம்களின் உதவியை அல்லாஹ் கைவிட்டு விட்டானோ அவர்களுக்கு  உலகமெல்லாம் சேர்ந்தாலும் சரி கண்ணியம் கொடுக்க முடியாது. உலகமெல்லாம் முயற்சி செய்தாலும் சரி அவர்களுக்கு மறுவாழ்வு கொடுக்க முடியாது .அல்லாஹ் அழைக்கின்றான்.
 
 
 
என்னுடைய உதவி உங்களுக்கு வேண்டுமா? நான் உங்களுக்கு உதவி செய்ய வேண்டுமா? நான் உங்களை பாதுகாக்க வேண்டுமா? உங்கள் மீது கருணை காட்ட வேண்டுமா? உங்களை உலக சமுதாயத்தின் மீது உயர்வானவர்களாக ஆக்க  வேண்டுமா? ஒன்றே ஒன்று செய்யுங்கள்.எனக்கு நீங்கள் உதவுங்கள். யோசித்துப்பாருங்கள். அல்லாஹ்விற்கு நாம் என்ன உதவி செய்ய வேண்டும்? அல்லாஹ்விற்கு நாம் செய்ய வேண்டிய அளவிற்கு அவன் பலவீனம் அடைந்து விட்டானா? அவனுக்கு என்ன தேவை ஏற்பட்டது? ஏன் குர்ஆனில் இத்தனை இடங்களில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு சொல்கின்றான்.
 
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا أَنْصَارَ اللَّهِ   
 
நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்விற்கு உதவி செய்பவர்களாக மாறுங்கள்.  அல்லாஹ்வின் உதவியாளர்களாக  மாறிவிடுங்கள். (அல்குர்ஆன் 61 :14)
 
 
 
இத்துனை  வசனங்களில் அல்லாஹ் சொல்கிறானே அல்லாஹ்விற்கு உதவி செய்வது என்றால் என்ன என்பதை என்றாவது நாம் சிந்தித்துப் பார்த்திருக்கிறோமா?
 
 
 
அன்பிற்குரியவர்களே! நம்மிடத்தில் இருக்கக்கூடிய மிகப்பெரிய கெட்ட குணம் என்னவென்று தெரியுமா? நம்மிடத்தில் இருக்கக்கூடிய மிக பெரிய அலட்சியம் என்ன  என்று தெரியுமா? அல்லாஹ்வுடைய புத்தகமாகிய இந்த குர்ஆனை வாழ்க்கையிலே திறந்து சிந்தித்து ஆழ்ந்து படிப்பதற்கு நாம் ஒரு நேரத்தை ஒதுக்க வில்லை. 
 
 
 
எத்தனை புத்தகங்களை படிக்கின்றோம் எத்தனை நாளிதழ்களை நாம் படிக்கின்றோம். இன்னும் என்னென்ன விஷயங்களைப் பற்றியெல்லாம் ஆராய்ச்சி செய்கின்றோம்.  அர்ப்ப அர்ப்ப விஷயங்கள் ஒருவர் காலில் இருக்கக்கூடிய செருப்பை பற்றிய ஆராய்ச்சி செய்கின்றோம். ஒருவர் உடம்பில் இருக்கக்கூடிய சட்டையை பற்றிய ஆராய்ச்சி செய்கின்றோம். நேற்று என்ன சாப்பிட்டாய் இன்று என்ன சாப்பிட்டோம் என்று அர்ப்ப விஷயங்களைப் பற்றியெல்லாம் பேசிக் கொண்டிருக்கின்றோம். 
 
 
 
இன்னும் எத்தனை விஷயங்கள் எவற்றையெல்லாம் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் பேசக்கூடாது பார்க்கக்கூடாது முஸ்லிம்கள் அதன் நடுவிலே  நெருங்கக்கூடாது என்று சொன்னார்களோ அத்தனை  அசிங்கங்களையும் அனாச்சாரங்களையும் இந்த சமுதாயம் எந்த வெட்க உணர்வும் இன்றி ஈமானுடைய உணர்வும் இன்றி மறுமை உடைய அச்சமின்றி செய்து கொண்டிருக்கின்றார்கள். 
 
 
 
அல்லாஹ், படிக்க வேண்டும் ஆராயவேண்டும், சிந்திக்க வேண்டும், பின்பற்ற வேண்டும் என்று சொன்னானோ அந்த குர்ஆனை பற்றி நம்முடைய வாழ்க்கையில் என்ன நாம் செய்து கொண்டிருக்கின்றோம் யோசித்துப் பாருங்கள்.
 
 
 
எத்தனை நேரம் நாம் 24 மணி நேரத்திலே குர்ஆனை  சிந்திப்பதற்காக  குர்ஆனை படிப்பதற்காக புரிவதற்காக  நாம் நேரங்களை  ஒதுக்குகின்றோம். அல்லாஹ் சொல்கின்றான்;
 
أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا   
 
உங்களுடைய உள்ளங்கள் ஏன் குர்ஆனை சிந்தித்து  ஆராய்வது கிடையாது? அந்த உள்ளங்களில் யார் பூட்டு போட்டது என்று அல்லாஹ் கேட்கின்றான். (அல்குர்ஆன் 47 : 24)
 
أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ وَلَوْ كَانَ مِنْ عِنْدِ غَيْرِ اللَّهِ لَوَجَدُوا فِيهِ اخْتِلَافًا كَثِيرًا  
 
குர்ஆனை நீங்கள் சிந்திக்க வேண்டாமா ?ஆராய வேண்டாமா? அல்லாஹ் அல்லாத ஒருவர் இதை இறக்கியிருந்தால்  இதில் எத்தனை முரண்பாடுகளை நீங்கள் பார்த்திருக்கலாம். அழகிய வேதம் என்று அல்லாஹ் சொல்லுகின்றான். (அல்குர்ஆன் 4 : 82)
 
وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُدَّكِرٍ   
 
நீங்கள் சிந்திப்பதற்காக படிப்பதற்காக நினைவு வைப்பதற்காக இந்த குர்ஆனை திட்டவட்டமாக நாம் லேசாக்கி  வைத்தோம்.யாராவது இந்த குர்ஆனை படிக்க மாட்டீர்களா? சிந்திக்க மாட்டீர்களா? ஆராய்ச்சி செய்ய மாட்டீர்களா? என்று அல்லாஹ் கேட்கின்றான். (அல்குர்ஆன் 54 : 17)
 
 
 
பாருங்கள் எப்படிப்பட்ட துக்கமான செய்தி ரமலானுக்கு மட்டும் குர்ஆன் என்பதாக நம்முடைய முஸ்லிம் சமுதாயத்தில் பெரும்பாலான மக்களிடத்திலே மாறிவிட்டது.     ரமலான் வந்தால்  பெண்களும் ஆண்களும் குர்ஆனை  திறக்கிறார்கள் படிக்கிறார்கள். ரமலான் முடிந்து விட்டால் அதனை மூடி வைத்து விடுகிறார்கள். ரமலான் மாதத்திற்கு மட்டும் இறக்கப்பட்ட ஒன்றா.?
 
 
 
அல்லாஹ் சொல்லுகின்றான் நம்பிக்கையாளர்கள் யார்  தெரியுமா காலையிலும் மாலையிலும் எனது கிதாபை எனது நூலை படித்துக் கொண்டிருப்பார்கள் என்று நம்பிக்கையாளர்கள் உடைய அடையாளம் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
 
فِي بُيُوتٍ أَذِنَ اللَّهُ أَنْ تُرْفَعَ وَيُذْكَرَ فِيهَا اسْمُهُ يُسَبِّحُ لَهُ فِيهَا بِالْغُدُوِّ وَالْآصَالِ  
 
அல்லாஹு அக்பர் காலையிலும் மாலையிலும் அல்லாஹ்வை துதி செய்து அவனுடைய புத்தகத்தைப் படிக்கக் கூடியவர்கள் நம்பிக்கையாளர்கள் என்று அல்லாஹ்  சொல்லுகின்றான். (அல்குர்ஆன் 24 : 36)
 
 
 
அன்பிற்குறியவர்களே! குர்ஆனை ஓதுவது வணக்கம் நபியே! இந்த குர்ஆனை நீங்கள் ஓதுங்கள்.
 
وَاتْلُ مَا أُوحِيَ إِلَيْكَ مِنْ كِتَابِ رَبِّكَ لَا مُبَدِّلَ لِكَلِمَاتِهِ وَلَنْ تَجِدَ مِنْ دُونِهِ مُلْتَحَدًا   
 
 (நபியே!) வஹ்யி மூலம் உமக்கு அறிவிக்கப்பட்ட உமது இறைவனின் வேதத்தை நீர் (தொடர்ந்து) ஓதிக் கொண்டே இருப்பீராக! அவனுடைய கட்டளைகளை எவராலும் மாற்றிவிட முடியாது. அவனைத் தவிர உமக்கு பாதுகாக்கும் எந்த ஓர் இடத்தையும் காணமாட்டீர். (அல்குர்ஆன் 18 : 27)
 
 
 
அல்லாஹ்  அக்பர்!  யாரின் மீது  இந்த குர்ஆன் இறக்கப்படுகிறதோ யார் இந்த குர்ஆனை நெஞ்சிலே சுமந்து இருக்கிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.
 
 
 
நபியே உமது இறைவனின்  புத்தகத்திலிருந்து  உமக்கு எது இறக்கப்படுகிறதோ அதை நீங்கள் படித்துக் கொண்டே இருங்கள் என்பதாகும்.
 
 
 
குர்ஆனுடன் எந்த ஒரு முஸ்லிமுக்கு  தொடர்பு  இருக்கிறதோ அவருடைய உள்ளம் பசுமை ஆக இருக்கும் அவனுடைய உள்ளம் உயிருடன் இருக்கும் அவனுடைய சிந்தனை மறுமையை பற்றியிருக்கும் அவன் அல்லாஹ்வை அஞ்சி கொள்வார். அவருடைய வாழ்க்கை தூய்மையானதாக இருக்கும் அல்லாஹ் அவனுடைய வாழ்க்கையில் செழிப்பை உண்டாக்குவான்.
 
 
 
அல்லாஹு தஆலா நபிக்கு மட்டும் இந்த கட்டளையை சொல்லவில்லை.  நபியின் உடைய மனைவிகளுக்கும் இந்த கட்டளையை சொல்லுகின்றான். எல்லா.மூஃமின்களுக்கும் இந்த கட்டளையை சொல்லுகின்றான்.
 
وَاذْكُرْنَ مَا يُتْلَى فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللَّهِ وَالْحِكْمَةِ إِنَّ اللَّهَ كَانَ لَطِيفًا خَبِيرًا  
 
நபியின் மனைவிகளே நீங்கள் ஓதப்படக்கூடிய இந்த குர்ஆனை வீட்டிலே படித்துக் கொண்டிருங்கள். நபியின் உடைய  ஞானம் மிகுந்த பேச்சுகளை நீங்கள் படியுங்கள் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான். (அல்குர்ஆன் 33 : 34)
 
 
 
அன்பிற்குரியவர்களே! அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா நமக்கு இந்த வாக்குகளை சொல்லுகின்றானே ஏனென்று குர்ஆனை திறந்து சிந்தித்துப் பார்த்தோமா? இந்த அல்லாஹ்வுடைய வாக்குக்கு சொந்தக்காரர்களாக அல்லாஹ்வுடைய வாக்கை அடையக்கூடியவர்களாக நாம் எப்போது ஆகுவோம் என்று தெரியுமா? அதையும் அல்லாஹு தஆலா இங்கே  குறிப்பிடுகின்றான் அல்லாஹ் எந்த ஒன்றையும் மூடலாக விட்டுவிடுவதில்லை அல்லாஹ் சொல்லுகிறான்;
 
وَلَيَنْصُرَنَّ اللَّهُ مَنْ يَنْصُرُهُ   
 
அல்லாஹ்வுக்கு யார் உதவி செய்கிறாரோ அவருக்கு நிச்சயமாக அல்லாஹ்வும் உதவி செய்கிறான். (அல்குர்ஆன் 22 : 40)
 
 
 
நம்பிக்கையாளர்களுக்கு நான் உதவி செய்வேன் என்று  வாக்குறுதி  கொடுத்தேனே அந்த நம்பிக்கையாளர்கள் யார்? யார் தங்களது பெயரை அப்துர்ரஹ்மான் அப்துல்லாஹ்  கதிஜா சுமையா ஸகிலா என்று வைத்துக்கொண்டார்களோ அவர்களா?  இல்லை. யாருடைய வாழ்க்கை மாறியதோ  யாருடைய குணங்கள் கொள்கை மாறியதோ யாருடைய செயல்பாடுகள் மாறியதோ அவர்கள் தான் அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
 
الَّذِينَ إِنْ مَكَّنَّاهُمْ فِي الْأَرْضِ أَقَامُوا الصَّلَاةَ وَآتَوُا الزَّكَاةَ وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِ وَلِلَّهِ عَاقِبَةُ الْأُمُورِ 
 
அல்லாஹ் குறிப்பிடுகின்றான்,யார் அந்த முஃமின்கள் அவர்களுக்கு இந்த பூமியிலே இந்த உலக வாழ்க்கையிலே நாம் வசதியை கொடுத்தால் நாம் அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தை கொடுத்தால் அவர்களுக்கு இந்த பூமியிலே கண்ணியத்தையும் உறுதியையும்  கொடுத்தால் தொழுகையை நிலை நிறுத்துவார்கள். தொழுகையை விடாது முறையுடன் கடைபிடித்து நடப்பார்கள். (அல்குர்ஆன் 22 : 41)
 
 
 
அல்லாஹு தஆலா நம்பிக்கையாளர்கள் உடைய அடையாளங்களை எண்ணும்போது முதல் அடையாளமாக தொழுகையை நிலைநிறுத்துவதை குறிப்பிடுகின்றான். தொழுகையை பேணித் தொழுவதை  அல்லாஹ்   குறிப்பிடுகின்றான்.
 
 
 
இன்று பாருங்கள் தங்களை மூஃமின்கள் முஸ்லிம்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் எத்தனை பேர்கள் வார முஸல்லிகளாக வாரம் ஒருமுறை தொழக்கூடியவர்களாக இருக்கின்றார்கள்.
 
 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள், யார் ஒருவர் தொழுகையை தெரிந்த நிலையில் விட்டு விட்டானோ, வேண்டும் என்று விட்டு விட்டானோ அவன் இஸ்லாமை விட்டு வெளியேறி விடுகின்றான்.தொழுகையை மறதியிலே தெரியாமல் விட்டுவிடுவது என்பது மன்னிக்கப்பட்ட ஒன்று.ஆனால், தான் அறிந்த நிலையிலேயே தொழுகை உடைய நேரம் வந்ததும் தொழுகை உடைய நேரம் வந்தும் அலட்சியமாக ஒருவன் தொழுகையை விட்டால் அவன் முனாஃபிக் ஆகி விடுகின்றான். 
 
 
 
யாரொருவன் வேண்டுமென்றே, தொழ வேண்டிய அவசியமில்லை அல்லது பின்பு பார்த்துக்கொள்ளலாம் என்று அல்லது வெள்ளிக்கிழமை தொழுது கொள்ளலாம் என்று தெரிந்த நிலையில் ,தொழுகை கடமை என்று தெரிந்து, தொழுகையின் நேரம் வந்து விட்டது என்று தெரிந்து, அவனை தொழுகையிலிருந்து தடுக்கக்கூடிய எந்த ஒரு பலாத்கார சக்தியும் அங்கு இல்லாமல் இருக்கும் நிலையிலே அவன் தொழுகையை விட்டால்  அவன் முற்றிலும் அல்லாஹ்வை மறுத்தவனாக  ஆகி விடுகின்றான்.
 
 
 
இந்த நிலையிலேயே அவனுக்கு மீண்டும் தொழுகை பற்றி விளக்கப்பட்டு தொழுகை உடைய அவசியத்தைப் பற்றி உணர்த்தப்பட்டும் அவன் தொழவில்லை என்று சொன்னால் அவன் இஸ்லாமுடைய மார்க்கச் சட்டப்படி முர்தத் ஆக மதம் மாறியவனாக கணக்கில் எடுக்கப்படுவான்.  அவன்  அந்த நிலையிலேயே இறந்துவிட்டால் முஸ்லிம்களுடைய கபருஸ்தானிலே அவனை அடக்கம் செய்யக்கூடாது. அவனை குளிக்க வைக்க கூடாது அவனுக்கு ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாது.
 
 
 
அப்படியில்லாமல் குப்பைத் தொட்டியிலே ஒரு குப்பையிலே அவனை கிடாசி விடவேண்டும் என்பதாக இஸ்லாமிய சட்டம் சொல்கின்றது. அந்த நிலையிலே அவனுடைய தொழக்கூடிய மனைவி அவனுக்கு ஹலால் அல்ல. அவனுடைய பிள்ளைகள் அவனுக்கு வாரிசாகமாட்டார்கள். எல்லாவிதமான உறவுகளும் இஸ்லாமியர்களிடம் இருந்து முஸ்லிம்களிடமிருந்து முற்றிலுமாக அறுபட்டு விடும் என்று அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் (ஸல்)அவர்கள் சொல்லியிருக்கிறார்கள் சகோதரர்களே.
 
 
 
عَنْ أَبِي سُفْيَانَ قَالَ سَمِعْتُ جَابِرًا يَقُولُا سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ بَيْنَ الرَّجُلِ وَبَيْنَ الشِّرْكِ وَالْكُفْرِ تَرْكَ الصَّلَاةِ (صحيح مسلم116 -)
 
ஒருவர் அவனை குஃரிலிருந்து ஷிர்க்கில் இருந்து அப்புறப்படுத்த கூடிய ஒரே ஒரு வணக்கம் இந்த தொழுகை தான் யார் இந்த தொழுகையை விடுகின்றாரோ அவன்  இறைவனை நிராகரித்துவிட்டான் என்பதாக ஆகிவிடும் என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்)அவர்கள் எச்சரிக்கை செய்கிறார்கள்.
 
 
 
அல்லாஹ் சொல்லுகின்றான்; நம்பிக்கையாளர்கள் உடைய அடையாளம் என்ன? தொழுகையை நிலை நிறுத்துவார்கள். தொழுகையிலே  உறுதியாக இருப்பார்கள். 
 
رِجَالٌ لَا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالْأَبْصَارُ 
 
நம்பிக்கையாளர்கள் யார்? அவர்களுடைய கொடுக்கல்-வாங்கலிலோ  அவர்களுடைய  வியாபாரமோ தொழில் துறையோ  அல்லாஹ்வை நினைவு கூறுவதை விட்டும் தொழுகையை நிலைநிறுத்துவதை விட்டும் அவர்களை  மறதியிலே ஆழ்த்தி விடாது. (அல்குர்ஆன் 24 : 37)
 
 
 
அல்லாஹு அக்பர். அல்லாஹு தஆலா நம்பிக்கையாளர்களை விட்டுவிட்டு பிரித்து விட முடியாத பண்பாக இந்த தொழுகையை குறிப்பிடுகின்றான். இந்த தொழுகை என்பது நம்பிக்கையாளர்களுக்கும்  அல்லாஹ்வுக்கும் இடையே உள்ள ஆழமான உறவை ஒவ்வொரு நேரத்திலும் உறுதி செய்யக்கூடியது புதுப்பிக்கக்கூடியது யோசித்துப் பாருங்கள்.
 
 
 
அல்லாஹு தஆலா அழைக்கின்றான் யாரின் மூலமாக    பள்ளியின் முஅத்தின்   மூலமாக 
 
அல்லாஹு…….. அக்பர் அல்லாஹு…….. அக்பர் அல்லாஹ் மிகப் பெரியவன் அல்லாஹ் மிகப் பெரியவன் என்பதாக 
 
 
 
இந்த வார்த்தைக்கு என்ன பொருள் இந்த வார்த்தையை கேட்டு விட்டு இந்த வார்த்தையை செவிமடுத்துவிட்டு  இதனுடைய நேரம் வந்ததற்குப் பின்பாக ஒரு முஸ்லிம் அங்கு பாங்கு சொல்லக்கூடிய இடத்திற்கு அவன் செல்லவில்லை என்று சொன்னால் அவன் அல்லாஹ்வை மதிக்கவில்லை.அவன் அல்லாஹ்வின் அழைப்பை மதிக்கவில்லை, அல்லாஹ்வை மறுத்து விட்டான் என்பதாக பொருள்.
 
الَّذِينَ إِنْ مَكَّنَّاهُمْ فِي الْأَرْضِ أَقَامُوا الصَّلَاةَ 
 
தொழுகை என்பது ஒரு முஸ்லிமை விட்டு பிரிக்க முடியாத ஒன்று. எந்த நேரத்தில் எந்த இடத்தில் இருந்தாலும் சரி அந்த தொழுகையை எப்போது கடமையாகின்றதோ தொழுகையை உடைய நேரம் வந்து விட்டால் அந்தத் தொழுகையை உடைய நேரத்தை அறிந்த நிலையில் ஒரு முஸ்லிம் தவறவிடுவதற்கு அனுமதி கிடையாது.
 
 
 
அடுத்து அல்லாஹ் சொல்லுகின்றான்;
 
وَآتَوُا الزَّكَاةَ
 
ஜக்காத் கொடுப்பார்கள். நம்பிக்கையாளர்கள் யார்?
 
அவர்களது செல்வத்திலே அல்லாஹ் எதை கடமை ஆக்கி இருக்கின்றானோ  ஏழைகளின் உரிமை என்பதாக அதை முறையாக நிறைவேற்றுவார்கள்.
 
 
 
அன்பிற்குரியவர்களே! 100க்கும் மேற்பட்ட இடங்களில் தொழுகையையும் ஜகாத்தையும் அல்லாஹ் இனணத்து சொல்லுகின்றான். அப்படியே, தூதர் (ஸல்) அவர்கள் எங்கு தொழுகையை குறிப்பிடுகின்றார்களோ அங்கு ஜக்காத்தையும் குறிப்பிடுகின்றார்கள்.
 
 
 
அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய காலத்திலே ஒரு கூட்டம் நாங்கள் இனி ஸக்காத் கொடுக்க மாட்டோம். தொழுவோம் நோன்பு வைப்போம் ஹஜ் செய்வோம் எல்லா வணக்கங்களையும் செய்வோம். ஆனால் எங்களுடைய செல்வத்திலிருந்து ஜக்காத் கொடுக்க மாட்டோம் என்பதாக மறுத்தார்கள். என்ன செய்தார்கள் அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் அவர்களை முஸ்லிம்களாக ஏற்றுக் கொண்டார்களா? அவர்களை முஸ்லிம்களாக அங்கீகரித்தார்களா? இல்லை சொன்னார்கள் 
 
 
 
நீங்கள் மதம் மாறி விட்டீர்கள்.  மார்க்கத்தை விட்டு வெளியேறி விட்டீர்கள். நீங்கள் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்)அவர்களுடைய காலத்திலே உங்களுடைய கால்நடைகளுக்கு உண்டான ஜக்காத்தில்  இருந்து ஒரு ஆட்டுக்குட்டியை கொடுத்து கொண்டு இருந்து அதை இப்போது என்னுடைய காலத்தில் கொடுக்க மறுத்தாலும் அதற்காக நான் உங்கள் இடத்திலே போர் செய்வேன்.
 
لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلَاةِ وَالزَّكَاةِ  
 
யார் தொழுகையையும் ஜகாத்தையும் பிரித்து பார்க்கிறார்களோ அவர்களிடத்திலே நான் போர் செய்வேன். போருக்கு பிரகடனம்படுத்துகிறேன் என்று அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு எச்சரிக்கை செய்கிறார்கள். (1)
 
 
 
முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள். யார் ஜகாத் கொடுக்க வில்லையோ அவருடைய அந்த செல்வங்களை கொண்டே நாளை மறுமையிலே அவருக்கு வேதனை செய்யப்படும். (வசனத்தின் கருத்து)
 
 
 
அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிடுகின்றான்;
 
يَوْمَ يُحْمَى عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ فَتُكْوَى بِهَا جِبَاهُهُمْ وَجُنُوبُهُمْ وَظُهُورُهُمْ هَذَا مَا كَنَزْتُمْ لِأَنْفُسِكُمْ فَذُوقُوا مَا كُنْتُمْ تَكْنِزُونَ 
 
(தங்கம், வெள்ளியாகிய) அவற்றை நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சி அவற்றைக் கொண்டு அவர்களுடைய நெற்றிகளிலும், அவர்களுடைய விலாக்களிலும், அவர்களுடைய முதுகுகளிலும் சூடிட்டு ‘‘உங்களுக்காக நீங்கள் சேகரித்து வைத்திருந்தவை இவைதான். ஆகவே, நீங்கள் சேகரித்து வைத்திருந்த இவற்றை சுவைத்துப் பாருங்கள்'' என்று கூறப்படும் நாளை (நபியே! நீர் அவர்களுக்கு ஞாபகமூட்டுவீராக). (அல்குர்ஆன் 9 : 35)
 
 
 
அன்பிற்குரியவர்களே! இன்று நம்மிலே பலர் எண்ணிக் கொண்டிருக்கிறார்கள் தாங்கள் சம்பாதித்த செல்வம் எங்களுக்குத்தான் சொந்தமானது என்பதாக. மக்களை ஏமாற்றுவதற்காக சில சில்லறைக் காசுகளை அள்ளி வீசிவிட்டு நாங்கள் ஜகாத் கொடுத்து விட்டோம் தர்மம் செய்து விட்டோம் என்று எண்ணுகிறார்கள். செல்வங்களை தாங்கள் சம்பாதிக்க வேண்டும் தாங்கள் அனுபவிக்க வேண்டும் அது தான் செல்வத்துடைய நோக்கம் என்பதாக தவறாக புரிந்துவைத்து இருக்கிறார்கள்.
 
 
 
அன்பிற்குரியவர்களே! செல்வத்தை அல்லாஹ் நமக்கு கொடுத்திருப்பது நாம் அனுபவிப்பதற்கு மட்டுமல்ல. ஏழைகளுக்கு எளியோருக்கு அனாதைகளுக்கு தேவையுள்ளவர்களுக்கு கொடுத்து அவர்களுக்கு உதவி செய்வதற்காக, அவர்களது சிரமங்களை நீக்குவதற்காக அல்லாஹ் நமக்கு செல்வத்தை கொடுத்து இருக்கிறானே தவிர நாம் மட்டும் அனுபவிப்பதற்காக அல்ல.
 
 
 
யார் ஒருவர் அல்லாஹ்வுடைய பாதையிலே தர்மம் செய்யவில்லையோ அல்லாஹ்வுடைய பாதையிலே வாரி வழங்கவில்லையோ கடமையான ஜக்காத்தோ உபரியான தர்மங்களோ,  அவர்களைப் பற்றி அல்லாஹ் எச்சரிக்கை செய்கின்றான்
 
الَّذِي جَمَعَ مَالًا وَعَدَّدَهُ 
 
யார்செல்வத்தை சேகரித்தார்களோ அதை எண்ணி எண்ணி பார்த்தார்களோ, (அல்குர்ஆன் 104 : 2)
 
 
 
இன்று நம்மிலே பலர் பாருங்கள் பேங்க் பேலன்ஸ்களை அவ்வப்போது கணக்கிட்டுக் கொண்டே இருப்பார்கள். இந்தபேங்கிலே எவ்வளவு வைத்திருக்கின்றோம்? அந்த பேங்கிலே எவ்வளவு வைத்திருக்கின்றோம்? நம்முடைய கணக்கு நிலவரம் என்ன என்பதை கணக்கு பார்த்து சரி பார்த்துக் கொண்டே இருப்பார்கள் இவர்களை தான் அல்லாஹ் இங்கே குறிப்பிடுகிறான்.
 
செல்வத்தை ஒன்று சேர்த்தால் அதை எண்ணி எண்ணிப் பார்த்து மகிழ்ச்சியாக மகிழ்ச்சி அடைந்து கொண்டிருக்கிறார் கொடுக்கவில்லை.
 
يَحْسَبُ أَنَّ مَالَهُ أَخْلَدَهُ
 
தனது செல்வம் தன்னை இந்த பூமியிலே நிரந்தரமாக தங்க வைக்கும் என்பதாக மமதையிலும் பெருமையிலும் மறதியிலும் இருக்கின்றார்கள். அல்லாஹ் சொல்கின்றான் அப்படியா இந்த செல்வம் உன்னை பாதுகாத்து விடுமா? இந்த செல்வத்தை நல்ல வழியிலேயே செலவழிக்கவில்லையா? அல்லாஹ்வின் பொருத்தத்திற்க்கு ஏற்ப அப்படி செலவழிக்க வில்லையா?
 
كَلَّا لَيُنْبَذَنَّ فِي الْحُطَمَةِ
 
இவனுக்காக நான் ஒரு நரகத்தை தயார் செய்து வைத்திருக்கிறேன். இவனுக்காக நெருப்பாலான தண்டனைக்குரிய ஒரு இடத்தை தயார் செய்து வைத்திருக்கிறேன். அதற்கு பெயர் என்ன அல்குத்தமா அல்லாஹ் கேட்கிறான் நபியை பார்த்து.
 
وَمَا أَدْرَاكَ مَا الْحُطَمَةُ
 
நபியே! உங்களுக்கு அல்குத்தமா என்ற ஒரு நரகத்தைப் பற்றி ஏதாவது தெரியுமா? அது எப்படிப்பட்ட வேதனை உடைய நரகம் என்பதாக. அல்லாஹ் சொல்லுகின்றான்.
 
نَارُ اللَّهِ الْمُوقَدَةُ
 
அல்லாஹ்வுடைய மூட்டிய  கொதிக்கக்கூடிய கொழுந்துவிட்டு எரியக்கூடிய நெருப்பால் ஆனதே அந்த குத்தமா என்பது அல்லாஹு அக்பர்.
 
 
 
அன்பிற்க்குரியவர்களே! யோசித்துப்பாருங்கள் அகிலத்தின் அதிபதி அர்ஷிர்க்கு உரியவன் அவன் அந்த நெருப்பை மூட்டி இருக்கிறான் என்று சொன்னால் அதனுடைய பயங்கரம் எப்படி இருப்பதாக இருக்கும் .
 
 
 
அல்லாஹ் சொல்லுகிறான்
 
الَّتِي تَطَّلِعُ عَلَى الْأَفْئِدَةِ
 
அந்த நெருப்பினுடைய வேகம் கொடுமை அதனுடைய சுட்டெரிக்கும் தன்மை எப்படி இருக்கும் தெரியுமா? அந்த நரகத்திற்க்கு ஜகாத் கொடுக்காதவர்கள்,  தர்மம் செய்யாதவர்கள் இழுத்துக் கொண்டுவரப்படும் பொழுதே அந்த நெருப்பானது அவருடைய இதயத்தை சுட்டெரித்து விடும் சுப்ஹானல்லாஹ் ரப்பில்ஆலமீன்.
 
 
 
எப்படிப்பட்ட விகாரமான தோற்றம் உடைய இந்த மனிதன் இவன் நரகத்திலே போடப்படக்கூடிய மனிதனுடைய உடல் இருக்கிறதே அவனுடைய ஒரு புஜத்தில் இருந்து இன்னொரு புஜம் வரை நாற்பது நாட்கள் ஒருவர் நடந்து சென்றால் எவ்வளவு தூரம் செல்வானோ அவ்வளவு பெரிய உடம்பாக நரகவாதியின்  உடம்பு மாற்றப்படும்.
 
مسند أحمد مخرجا (32/ 13) وَحَدَّثَنَا زَيْدٌ، فِي مَجْلِسِهِ قَالَ: «إِنَّ الرَّجُلَ مِنْ أَهْلِ النَّارِ لَيَعْظُمُ لِلنَّارِ حَتَّى يَكُونَ الضِّرْسُ مِنْ أَضْرَاسِهِ كَأُحُدٍ»
 
அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்)அவர்கள் சொன்னார்கள். நரகத்திலே போடக்கூடிய மனிதனுடைய பல் இருக்கிறதே அது உஹது மலையைப் போல் இருக்கும். உஹது மலை எவ்வளவு நீளமானது தெரியுமா? உயரத்திலே ஒரு மைல் தூரம். அகலத்தில் ஐந்து மைல் தூரம். ஒரு பல்லின் உடைய நிலைமை இப்படி விகாரமாக இருக்கும் என்று சொன்னால் அவனுடைய முழு உடல் அமைப்பு எவ்வளவு கொடூரமாக மாற்றப்படும் என்பதை யோசித்துப் பாருங்கள்.
 
 
 
ஏன்? அல்லாஹ்வுடைய கட்டளையை நிராகரித்த அவன் நிரந்தரமாக தண்டனையை  அனுபவிக்க வேண்டும் என்பதற்காக அல்லாஹ் அவனுடைய உடலை விகாரமாக மாற்றி விடுவான். இவ்வளவு விகாரமான உடம்பு இவ்வளவு பெருத்த உடம்பு ஆனால் அந்த நரகத்தில் அந்த குத்தமா உடைய நெருப்பு என்ன செய்யும் அவன் தூரத்திலே சங்கிலிகளால் கட்டப்பட்டு இழுத்து வரும் பொழுது அவனுடைய கல்பை அவனுடைய நெஞ்சை எரித்து விடும் என்று சொன்னால் இங்கே இருக்கக்கூடிய தோல்களும் உடம்புகளும் சதைகளும் என்ன  ஆகிவிடும் என்று யோசித்துப் பாருங்கள்
 
 
 
அது மட்டுமா அல்லாஹ் சொல்கின்றான்.
 
إِنَّهَا عَلَيْهِمْ مُؤْصَدَةٌ (8) فِي عَمَدٍ مُمَدَّدَةٍ
 
உயரமான நெருப்பு கம்பங்களில் அவர்கள் கட்டப்பட்டு அந்த நரக நெருப்பின் சாட்டைகளைக் கொண்டு அடிக்கப்பட்டு கொண்டிருப்பார்கள் என்பதாகும்.
 
 
 
அன்பிற்குரியவர்களே! ஜக்காத் என்பதும் ஸதக்கா என்பதும் இறைநம்பிக்கையுடைய பிரித்துப் பார்க்க முடியாத ஒன்று. 
 
 
 
அல்லாஹ் சொல்கின்றான். நம்பிக்கையாளர்கள் யார்? தொழுகையை நிலை நிறுத்துவார்கள் ஜக்காத் கொடுப்பார்கள்
 
وَأَمَرُوا بِالْمَعْرُوفِ وَنَهَوْا عَنِ الْمُنْكَرِ
 
நன்மையை ஏவுவார்கள் தீமையில் இருந்து தடுப்பார்கள். ஒரு இறை நம்பிக்கையாளர் தான் எந்த ஒரு கொள்கையை வாழ்க்கையிலே உண்மையான கொள்கையாக உயர்ந்த கொள்கையாக நேரிய  கொள்கையாக கொண்டிருக்கிறானோ அந்தக் கொள்கையின் பக்கம் மக்களை அழைப்பவனாக  இருக்க வேண்டும்.
 
 
 
அல்லாஹ்வைப் பற்றி மக்களுக்கு எடுத்துச் சொல்பவராக இருக்கவேண்டும். மறுமையைப் பற்றி மக்களுக்கு எடுத்து சொல்பவனாக இருக்கவேண்டும். ஆனால் இன்று நாம் பார்க்கிறோம் நம்முடைய வாழ்க்கையிலே அல்லாஹ் சொல்லக்கூடிய இந்தக் காரணங்கள் எந்த அளவிற்கு நாம்  எடுத்து நடக்கின்றோம் என்பதுதான். சிலர் ஒரு கூட்டம் தொழுகை மட்டும் போதும் என்பதாக எண்ணிக் கொள்கிறார்கள். செல்வந்தர்களிலே   சிலர்  சில தர்மங்கள் செய்து விட்டால் போதும் என்று எண்ணுகிறார்கள். அன்பிற்குரியவர்களே அப்படி அல்ல.ஒரு முஸ்லிம் என்பவன் இறைநம்பிக்கையாளன் முழு மார்க்கத்தையும் பின்பற்ற வேண்டும் அல்லாஹ் சொல்கின்றான்.
 
 
 
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا ادْخُلُوا فِي السِّلْمِ كَافَّةً
 
நம்பிக்கையாளர்களே! முழுமையாக இந்த மார்க்கத்திற்கு வாருங்கள். முழுமையாக இந்த மார்க்கத்திற்குள் வந்துவிடுங்கள். ஏதாவது ஒரு கடமை எடுத்துக்கொண்டு அதைப் பின்பற்றினால் மட்டும் போதும் என்பதாக, தவறாக எண்ணாதீர்கள் தவறாக புரிந்து கொள்ளாதீர்கள் முழுமையாக வந்து விடுங்கள். 
 
 
 
அல்லாஹ் குறிப்பிடுகின்றான் நீங்கள் முழுமையாக மார்க்கத்திற்கு வாருங்கள் என்பதாக. இதை தான் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள் .(2)
 
إِذَا تَبَايَعْتُمْ بِالْعِينَةِ وَأَخَذْتُمْ أَذْنَابَ الْبَقَرِ وَرَضِيتُمْ بِالزَّرْعِ وَتَرَكْتُمْ الْجِهَادَ سَلَّطَ اللَّهُ عَلَيْكُمْ ذُلًّا لَا يَنْزِعُهُ حَتَّى تَرْجِعُوا إِلَى دِينِكُمْ  
 
நம்பிக்கையாளர்களே! நீங்கள் மார்க்கத்தை இஸ்லாமை புறக்கணித்துவிட்டு இஸ்லாமை புறக்கணித்துவிட்டு வட்டியைக் கொண்டு வியாபாரம் செய்தால் உங்களது வியாபாரத்தில் வட்டி கலந்துவிட்டால் இன்று பாருங்கள் வட்டியில்லாமல் ஒரு வியாபாரமா என்று முஸ்லிம் எண்ணக்கூடிய அளவிற்கு அவன் தள்ளப்பட்டு இருக்கிறான் என்று சொன்னால் அவனுடைய இறை நம்பிக்கை எவ்வளவு பலவீனமடைந்து விட்டது.
 
 
 
உங்களது கொடுக்கல்-வாங்கலில் நீங்கள் வட்டியை கலந்துகொண்டால்,கால்நடைகளின் வால்களை நீங்கள் பிடித்துக்கொண்டால்,விவசாயத்தை நீங்கள் ஏற்றுக் கொண்டால் அதாவது துன்யாத்தான் வேண்டும் இஸ்லாம் தேவையில்லை மார்க்கம் தேவை இல்லை என்பதாக உங்களது தொழிலே கதி என்பதாக நீங்கள் சென்றுவிட்டால்,அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிவதை  நீங்கள் விட்டுவிட்டால் அல்லாஹ்வுடைய பாதையில் போர் புரிவது என்று சொன்னால்  காலத்திற்கு ஏற்ப சூழ்நிலைக்கு ஏற்ப இதனுடைய சட்டங்கள் மாறுபட்டுக் கொண்டே செல்லும் நம்முடைய நாட்டுக்கு  ஏற்ப நமக்கு நமது சூழ்நிலைக்கு ஏற்ப அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள் ஜிஹாத் என்பதற்கு விசாலமான பொருளை சொல்லுகின்றார்கள். இமாம் புஹாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தங்களுடைய நூலிலே ஜும்மா தொழுகைக்கு செல்வது பள்ளிக்கு செல்வதுனுடைய சிறப்பிலே ஜிஹாத் உடைய ஹதீஸை கொண்டுவருகிறார்.
 
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَغَدْوَةٌ فِي سَبِيلِ اللَّهِ أَوْ رَوْحَةٌ خَيْرٌ مِنْ الدُّنْيَا وَمَا فِيهَا (صحيح البخاري2583 -)
 
அல்லாஹ்வுடைய பாதையிலே காலையிலே செல்வது அல்லது மாலையிலே செல்வது முழு உலகத்தை விட சிறந்தது என்று அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்)அவர்கள் சொல்லி இருக்கக்கூடிய இந்த சிறப்பை இமாம் புஹாரி அவர்கள் எங்கே கொண்டு வருகிறார்கள் தொழுகைக்கு பள்ளிக்கு வருவதுனுடைய பாடத்திலே கொண்டு வருகிறார்கள்.
 
 
 
இதிலிருந்து என்ன விளக்கத்தை சொல்லித் தருகிறார்கள் ஜிஹாத் என்பது வாள் எடுத்து சண்டை போடுவது மட்டும் அல்ல அல்லாஹ்வுடைய மார்க்கத்தை அல்லாஹ்வுடைய தீனை அல்லாஹ்வுடைய கட்டளையை இந்த பூமியிலே உயர்த்துவதற்காக தனது வாழ்க்கையிலே கடை பிடிப்பதற்காக எடுத்து நடத்தக்கூடிய ஒவ்வொரு நல்ல முயற்சியும் ஜிஹாதிலே அடங்கும்.
 
 
 
அல்லாஹ்வுடைய தூதர் )ஸல்) அவர்கள் சொன்னார்கள் ஸஹீஹுல் புகாரி உடைய அறிவிப்பு
 
  الْمُجَاهِدُ مَنْ جَاهَدَ نَفْسَهُ
 
உண்மையான முஜாஹித் யார் தெரியுமா யார் தான் நஃப்சை போராடி அல்லாஹ்வின் கட்டளைக்கு ஏற்ப அடக்குகின்றானோ அவன் உண்மையான முஜாஹித் (5)
 
 
 
அறிவிப்பாளர்: ஃபலாலா இப்னு உபைத் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி, எண்: 1621
 
 
 
உண்மையான முஹாஜிர் யார் தெரியுமா யார் அல்லாஹ் தடுத்ததை விட்டு  விலகி தன்னை விலக்கி ஒதுக்குகின்றானோ  அவன் உண்மையான முஹாஜிர்.(6)
 
 
 
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 6484
 
 
 
இப்படி ஜிஹாத் என்பதற்கு விசாலமான நிறைய பொருள் இருக்கின்றது. சில மக்கள் தவறாக புரிந்து கொண்டு கலகம் விளைவிப்பதையோ குழப்பம் விளைவிப்பதையோ பொருள்கள்மீது உடைமைகள் மீது அத்துமீறுவதையோ ஜிஹாத் என்பதாக எண்ணுகின்றார்கள். உண்மையில் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்)அவர்களும் இதிலே இஸ்லாமிய மார்க்கத்திலேஇதற்கு அனுமதி அளிக்கவில்லை.
 
 
 
அன்பிற்குரியவர்களே! அல்லாஹ் உடைய தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அல்லாஹ் உடைய மார்க்கத்திற்காக உயிரை பொருளை  செலவு செய்வது. எப்படி அமீர் எப்போது தேடுகின்றாரோ அதற்கு ஏற்ப உங்களுடைய சூழ்நிலை காலத்திற்கு ஏற்ப அல்லாஹ்வுடைய மார்க்கத்தை நிலை நிறுத்துவதற்காக அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதற்காக எடுக்கக்கூடிய ஒவ்வொரு முயற்சியும்.
 
 
 
ஒருவர் இஸ்லாத்தின் பக்கம் அழைப்பதற்காக அல்லது இஸ்லாமை ஒருவருக்கு எடுத்துச் சொல்வதற்காக இஸ்லாமை  ஓங்க வைப்பதற்காக இஸ்லாமை பரப்புவதற்காக இஸ்லாமை தனது வாழ்க்கையில் எடுத்து நடந்து வழிபட்டு அதை மக்களுக்கு  காண்பிப்பதற்காக நீங்கள் எடுக்கக்கூடிய ஒவ்வொரு முயற்சிக்கும் அல்லாஹ் ஜிஹாத் உடைய  நன்மையைத் தருவான்.  
 
 
 
இதைத்தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் நீங்கள் ஜிஹாதை விட்டுவிட்டால் அல்லாஹ் உங்கள் மீது இழிவை சாட்டிவிடுவான். அல்லாஹ் உங்கள் மீது இழிவை சாட்டி விடுவான் வட்டியைக் கொண்டு வியாபாரம் மார்க்கத்தை புறக்கணித்து தொழிலே கதி என்பதாக மாறிவிடுவது 
 
 
 
இந்த மார்க்கத்திற்காக வேண்டி எந்த கவலையும் படுவது கிடையாது. மார்க்கம் சீரழியட்டும் மார்க்கத்தை பற்றி யார் வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் பேசட்டும் மக்கள் இணை வைத்துக் கொள்ளட்டும் மக்கள் கப்ருகளுக்கு செல்லட்டும் மக்கள் கோயில்களுக்கு செல்லட்டும் மக்கள் சர்ச்சுகளுக்கு செல்லட்டும் அதைப்பற்றி எல்லாம் எனக்கு கவலை இல்லை எனக்கு என்னுடைய பேங்க் பேலன்ஸ் கூடி கொண்டிருக்கிறதா எனக்கு என்னுடைய வியாபாரம் தொழில் துறை பெருகிக் கொண்டிருக்கிறதா  எனது குடும்பம் நிம்மதியாக வாழ்கின்றனரா  என்று இஸ்லாமிய ஈமானிய உணர்வு இல்லாமல் வாழுகின்றார்கள் 
 
 
 
அன்பிற்குரியவர்களே! இணைவைப்பதை பற்றி, இணைவைக்கப்படுகிறது அல்லாஹ்விற்க்கு ரப்புல் ஆலமீனுக்கு இணை வைக்கப்படுகிறது ஆனால் நம்மில் எத்தனை பேருக்கு அதைப் பற்றிய வருத்தம் வருகிறது பாருங்கள். மக்கள் கற்களை வணங்குகின்றார்கள் சிலைகளை வணங்குகின்றார்கள் 
 
 
 
இன்னும் எந்த அளவிற்கு நிலமை மோசமாகி விட்டது என்று சொன்னால் தங்களை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்பவர்கள் இஸ்லாத்தை அறியாமல் பள்ளியை  செழிப்பாக்காமல் அல்லாஹ்விடத்தில் கேட்காமல் இறந்துவிட்ட நல்லோர்களுக்காக கப்ருகளையும் தர்காக்களையும் கட்டிக்கொண்டு அங்கே சென்று வணங்குகிறார்கள் 
 
 
 
அங்கே சென்று பிரார்த்திக்கிறார்கள் அங்கே சென்று இரவிலே தங்குகிறார்கள் அவர்களின் மூலமாக நன்மை தீமை கிடைக்கும் என்பதாக நம்புகிறார்களே எப்படிப்பட்ட கொடூரமான செயல் அல்லாஹ் சொல்லுகின்றான்;
 
إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ  31:13
 
மிக மகத்தான அநியாயம் என்ன தெரியுமா அல்லாஹ்விற்கு இணை கற்பிப்பது அல்லாஹ்விற்கு இணை கற்பிக்கப்படுவது என்று அல்லாஹ் சொல்லுகின்றானே. (அல்குர்ஆன் 31 : 13)
 
 
 
அந்த செயலைப் பார்த்து நம்மில் எத்தனை பேர் முகம் சுளிக்கிறோம் அதை மாற்றுவதற்காக அவர்களுக்கு நல்லதை எடுத்துச் சொல்வதற்காக நாம் என்ன முயற்சி செய்து கொண்டிருக்கிறோம் பாருங்கள்.
 
 
 
அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா எப்படிப்பட்ட வசனத்தை குர்ஆனிலே சொல்லி இருக்கிறான்தெரியுமா?
 
تَكَادُ السَّمَاوَاتُ يَتَفَطَّرْنَ مِنْهُ وَتَنْشَقُّ الْأَرْضُ وَتَخِرُّ الْجِبَالُ هَدًّا (90) أَنْ دَعَوْا لِلرَّحْمَنِ وَلَدًا 19:90
 
அல்லாஹு அக்பர் அல்லாஹ் சொல்கின்றான் இந்த மக்கள் அல்லாஹ்வுக்கு குழந்தை உண்டு என்று சொல்லக்கூடிய ஒவ்வொரு நேரத்திலும் ஒவ்வொரு நொடியிலும் வானம் நடுங்குகிறது பூமி நடுங்குகின்றது மலை நடுங்குகின்றன என்று அல்லாஹ் கூறுகின்றான். (அல்குர்ஆன் 19 : 90)
 
 
 
வானங்கள் பிளந்து விட துடிக்கின்றன. பூமி பிளந்து விட நெருங்குகின்றது. பூமி மண்ணாக உதிர்வதற்கு நெருங்குகிறது ரஹ்மானிற்க்கு குழந்தை இருக்கிறது என்று சொன்ன ஒரே காரணத்தால் நடுங்கி பயந்து அந்த  வானங்கள் அதிருகின்றன என்று சொன்னால் ஒரு முஸ்லிமுடைய உள்ளத்தில் பாருங்கள் 
 
 
 
இப்படிப்பட்ட கேவலமான நிலைமைக்கு முஸ்லிம் தள்ளப்பட்டு இருக்கிறார்கள். ஒரு முஸ்லிமைப் பார்த்து இவன் முஸ்லிம் என்று தெரிந்த நிலையில் ஒரு கிறிஸ்துவன் வந்து அவனிடத்திலே சொல்லுகின்றான் ஈஷாவை ஏற்றுக்கொள் நீ வெற்றியடைய முடியும் என்று தனது பைபிலை தருகின்றான்  தனது பிரசுரங்களை தருகின்றான் 
 
 
 
ஆனால் இந்த முஸ்லிமிற்கு துணிச்சல் இல்லை அவனை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதற்கு அவனுக்கு உண்மையான மார்க்கத்தை எடுத்துச்சொல்வதற்கு. யோசித்துப் பாருங்கள் இன்றைய பத்திரிக்கையில் வந்த செய்தி ஒரே ஒரு ஆள் வெளிநாட்டிலிருந்து வந்து இந்த தமிழ்நாட்டிலே 80 ஆயிரம் பேர்களை அவன் மதம் மாற்றி இருக்கிறான் என்று சொன்னால் .
 
 
 
அன்பிற்குரியவர்களே! நாம் என்ன செய்து கொண்டிருக்கின்றோம் முஸ்லிம்களை கிறிஸ்தவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் அவர்களுக்கு இஸ்லாம் உடைய அழைப்பை கொடுத்து நரக நெருப்பிலிருந்து பாதுகாப்பது நம் மீது கடமை. நான் ஒருவரின் இஸ்லாத்திற்கு அழைக்கிறேன் நீங்கள் ஒருவரை இஸ்லாத்திற்கு  அழைக்கிறீர்கள் என்று சொன்னாள் நம்முடைய நோக்கம் பொருளாதாரமோ மெஜாரிட்டியை காட்டுவதோ அல்லது பெரிய ஆளுமை ஏற்படுத்த வேண்டும் என்பது நம்முடைய நோக்கமல்ல 
 
 
 
நம்முடைய நோக்கம் என்ன? அவனை நரக நெருப்பிலிருந்து பாதுகாக்க வேண்டும் எனக்கு அல்லாஹ்  கொடுத்த கடமையை நிறைவேற்ற வேண்டும் நாளை மறுமையில் அல்லாஹ் விசாரிக்கும் பொழுது அவன் தலை குனிந்து நரகத்திற்கு செல்லக்கூடாது என்ற ஒரே காரணம்தான்.
 
 
 
ஆனால் அவர்களின் செல்வத்திற்காக கணக்குக்காக ஆயிரக் கணக்கான மக்களை இன்று தன்னுடைய பொய்யான மதத்திற்கு அவர்களால் அதைப் பின்பற்ற முடியாது பின்பற்றுவதற்கு தகுதி இல்லை என்று தெரிந்தும் ஒரே ஒரு காரணம் கொண்ட கொள்கையில் வெறி என்பதற்காக அவர்கள் செய்து கொண்டிருக்கிறார்களே.  
 
 
 
அன்பிற்குரியவர்களே யோசித்துப் பாருங்கள் அழகான உடைகளை உடுத்திக் கொள்கின்றோம். இன்பமான முறையான உணவுகளுக்கு  சுவையான உணவுகளுக்கு பின்பு இப்படி நாய்களாக  மிருகங்களாக அலைந்து கொண்டு அர்ப்ப  இன்பங்களை தேடுவதிலே இன்று மக்கள் மூழ்கி கொண்டிருக்கிறார்களே 
 
 
 
இவர்கள் இஸ்லாத்தின் பக்கம் அழைப்பது நேரான  வழியின் பக்கம் அழைப்பது முஸ்லிம்களாகிய  நம் மீது கடமை இல்லையா? இதற்காக அல்லாஹ் ஒரு தூதரை அனுப்புவானா முஹம்மது நபிக்கு பின்பு ஒரு தூதர் வருவார்களா? அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.
 
لا نَبِيَّ بَعْدِي، وَلا أُمَّةَ بَعْدَكُمْ  
 
எனக்கு பின்பு ஒரு நபி கிடையாது உங்களுக்கு பின்பு  அடுத்த ஒரு சமுதாயம் கிடையாது.(3)
 
 
 
அறிவிப்பாளர்: அபூ உமாமா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: தப்ரானி, எண்: 7413
 
بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً  
 
என் புறத்திலிருந்து ஒரு செய்தியை நீங்கள் தெரிந்தாலும் அதையும் மக்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள் என்று சொன்னார்கள்.(4)
 
 
 
அறிவிப்பாளர்: அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 3202
 
عَنْ طَلْحَةَ بْنِ عُبَيْدِ اللهِ بْنِ كَرِيزٍ أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ , قَالَ: " أَفْضَلُ الدُّعَاءِ دُعَاءُ يَوْمِ عَرَفَةَ وَأَفْضَلُ مَا قُلْتُ أَنَا وَالنَّبِيُّونَ مِنْ قَبْلِي: لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ " (السنن الكبرى للبيهقي 9473 - ) 
 
நானும் எனக்கு முன்பு சென்ற  இறைத்தூதர்களும் சொல்லிய வார்த்தைகளில்  உறுதியானது சிறந்தது எது தெரியுமா? லா இலாஹ இல்லல்லாஹ் 
 
 
 
அறிவிப்பாளர்: தல்ஹா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: பைஹகீ, எண்: 9473
 
 
 
அன்பிற்குரியவர்களே! யாரை நீங்கள் பார்த்தாலும் எந்த நேரத்தில் நீங்கள் பார்த்தாலும் அவர்களுக்கு இதை எடுத்துச் சொல்லுங்கள்.வணங்க தகுதியானவன் அல்லாஹ்வைத் தவிர வேறுயாருமில்லை முஹம்மத் அல்லாஹ்வுடைய உண்மையான அடியான் தூதர் அவருக்கு நீங்கள்  வழிப்படுங்கள் இஸ்லாமை ஏற்றுக் கொள்ளுங்கள் நீங்கள் வெற்றியடைவீர்கள். இல்லை என்றால் இவ்வுலகத்திலும் மறுவுலகிலும் நஷ்டம் அடைவீர்கள் என்ற தூதுத்துவ செய்தியை எடுத்துச் சொல்வது ஒவ்வொரு முஸ்லிம்களுடைய கடமை சகோதரர்களே.
 
 
 
அல்லாஹ் சொல்லுகின்றான்;
 
قُلْ هَذِهِ سَبِيلِي أَدْعُو إِلَى اللَّهِ عَلَى بَصِيرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِي وَسُبْحَانَ اللَّهِ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ  
 
நபியே! நீங்கள் சொல்லுங்கள். இது என்னுடைய மார்க்கம் இதை தவிர வேறு ஒரு மார்க்கத்தை என்னால் தேர்ந்தெடுக்க முடியாது. இது என்னுடைய கொள்கை இதைத்தவிர வேறு ஒரு கொள்கையை என்னால் தேர்ந்தெடுக்க  முடியாது. இது என்னுடைய பழக்கவழக்க குணங்கள் இதைத்தவிர வேறு ஒரு குணத்தை பழக்க வழக்கங்களை நாம் தேர்ந்தெடுக்க முடியாது (அல்குர்ஆன் 12 : 108)
 
إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ  
 
அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்பட்ட தூய்மையான நீதமான சமத்துவம் கொடுக்கக்கூடிய ஒரே ஒரு மார்க்கம் அல்லாஹ்வுடைய மதம் இந்த இஸ்லாம் தான். (அல்குர்ஆன் 3 : 19)
 
 
 
இதுதான் என்னுடைய பாதை. இதை தவிர வேறொன்றையும்  பாதையாக ஆக்கிக் கொள்ள முடியாது. இதைத்தவிர வேறு ஒரு கொள்கையை நோக்கமாக லட்சியமாக மாற்றிக் கொள்ள முடியவே முடியாது.
 
 
 
எனது பணி என்ன  أَدْعُو إِلَى اللَّهِ அல்லாஹ்வின் பக்கம் அழைப்பேன் அழைத்துக் கொண்டே இருப்பேன் இரவிலே அழைப்பேன் பகலிலே அழைப்பேன் எனது நல்ல நேரத்திலே அழைப்பேன் என்னுடைய சுகமான நேரத்திலே அழைப்பேன் என்னுடைய கஷ்ட நேரத்திலே அழைப்பேன் என்னுடைய உடல் சுகமாக இருந்தாலும் நோய்வாய்ப்பட்டு இருந்தாலும் எந்த நேரத்திலும் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பது தான் என்னுடைய வாழ்க்கை, என்னுடைய குறிக்கோள்.
 
 
 
எப்பொழுது அல்லாஹ் நபிக்கு கட்டளையிட்டானோ
 
يَا أَيُّهَا الْمُدَّثِّرُ (1) قُمْ فَأَنْذِرْ (2) وَرَبَّكَ فَكَبِّرْ  
 
நபியே! எழுந்திருங்கள் இனி நீங்கள் படுக்கக்கூடாது அல்லாஹ்வை பெறுமை படுத்துங்கள். அல்லாஹ்வை பற்றி இந்த மக்களுக்கு எச்சரிக்கை செய்யுங்கள். என்று முதல் அழைப்பை அல்லாஹ் எப்போது நபியின் மீது கடமையாக்கினானோ அன்பிற்குரியவர்களே! அன்றிலிருந்து தனது இறுதி மூச்சு வரை இந்த பூமியிலே விடும்வரை தனது இன்பத்திற்காக தனது சுகத்திற்காக தனது மனைவி மக்களின் லாபத்திற்காக நபி இந்த உலகத்திலே வாழவில்லை இந்த உலகத்திலே இன்பத்தை அனுபவிக்கவில்லை. (அல்குர்ஆன் 74 : 1,2)
 
 
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய பண்பை பற்றி அவர்களது வாழ்க்கையைப் பற்றி அவர்களுடைய தோழர் ஜாபிர் கூறுகின்றார் பாருங்கள்;
 
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُتَوَاصِلَ الأَحْزَانِ، دَائِمَ الْفِكْرَةِ، لَيْسَتْ لَهُ رَاحَةٌ
 
அல்லாஹ்வுடைய தூதர் எப்போதுமே சிந்தனையில் இருப்பார்கள், எப்போதுமே கவலையில் இருப்பார்கள், ஓய்வு என்பது அவர்களுடைய வாழ்க்கையிலே கிடையாது. நூல்: தப்ராணி, எண்: 17867
 
 
 
எதற்காக வேண்டி அவர்கள் கவலைப்பட்டார்கள் பாத்திமாவுக்கு செல்வத்தை சேர்த்து வைக்க வேண்டும் என்பதற்காகவா?  ஹசன் ஹுசைனுக்கு  ஆட்சியை வாங்கித்தர வேண்டும் என்பதற்காகவா? இல்லை சகோதரர்களே ஒரே கவலை இந்த மனித சமுதாயத்திற்கு அல்லாஹ் அறியாத இந்த மக்களுக்கு படைப்பாளனை அறியாத இந்த மக்களுக்கு அந்த அல்லாஹ்வை அறிமுகப்படுத்த வேண்டும் அந்த படைப்பாளனை அறிமுகப்படுத்த வேண்டும் நாளை மறுமையில் இந்த மக்கள் நரகத்திற்கு செல்லக்கூடாது என்ற ஒரே காரணத்திற்காக வேண்டி தான் சொன்னார்கள்.
 
نحنُ معشرَ الأنبياءِ لا نورَثُ ما ترَكناهُ فهو صدقة
 
நாங்கள் நபிமார்கள். நாங்களும் யாருக்கும் வாரிசு அல்ல எங்களுக்கும் வாரிசு கிடையாது. நாங்கள் எதையெல்லாம் விட்டுச் செல்கின்றமோ அதையெல்லாம் இந்த முஸ்லிம்களுக்கு தர்மம் என்பதாக  சொன்னார்கள். 
 
 
 
செல்வத்திற்காக பதவிக்காக பொருளுக்காக  வாழவில்லை அந்த நபிக்கு அல்லாஹ் கூறுகின்றான் நபியே! உங்களுடைய பொறுப்பு என்ன ? அல்லாஹ்வின் பக்கம் அழைப்பது எந்த முஸ்லிமுடைய உடலிலே உள்ளத்திலே அல்லாஹ்வின் பக்கம் அழைக்க வேண்டும் என்ற உணர்வு அந்த உணர்ச்சி அந்த ஆசை வரவில்லையோ அவன் தன்னை முஸ்லிமாக எண்ண  வேண்டாம். என்று அல்லாஹ் சொல்கிறான் அடுத்து அல்லாஹ் சொல்லுகின்றான்.
 
 நானும் என்னை பின்பற்றக் கூடியவர்களும் என்ன செய்வோம் அல்லாஹ்வின் பக்கம் அழைத்து கொண்டே இருப்போம்.
 
 
 
இதைத்தான் அன்பிற்குரியவர்களே! அல்லாஹ் நமக்கு கடமையாக்குகின்றான். நன்மையை ஏவுவார்கள் அதை யாரிடம் இருந்தாலும் சரி .இன்று பார்க்கிறோம் எப்படிப்பட்ட அலட்சியப்போக்கு ஆண்மகன் தனது கண்ணுக்கு முன்பாக தவறு செய்கிறான். அவன் தவறான பழக்கம் உடையவனாக இருக்கிறான். தந்தையை கேட்டால் அதெல்லாம் காலப்போக்கில் திருந்திவிடுவான் என்று சொல்லுகிறார். மனைவி தவறு செய்கிறாள் தகாததை பார்க்கிறாள். நேரங்களை வீணடிக்கிறாள். கண்டிப்பதற்கு கணவனுக்கு நேரமில்லை. 
 
 
 
இப்படி குடும்பத்திலே பார்த்தால் நன்மையை ஏவுவது தீமையை தடுப்பது என்பது முற்றிலும் விடப்பட்ட, முற்றிலும் அது மக்கள் புறக்கணித்து விட்டார்கள் விரும்பினால் ஏற்றுக்கொள்வது விரும்பாவிட்டால் விட்டுவிடலாம் என்பதாக. இஸ்லாமிய மார்க்கத்தில் அல்லாஹ்வுடைய கட்டளையிலே சமரசம் செய்து கொள்கிறார்கள். எதிலே சமரசம் செய்கிறார்கள்? உங்களுடைய சுய விருப்பு வெறுப்புகளில்  சமரசம் செய்து கொள்ளுங்கள். உங்களுடைய லாப நஷ்டத்திலே சமரசம் செய்து கொள்ளுங்கள். அல்லாஹ்வுடைய மார்கத்திலே அல்லாஹ்வுடைய கட்டளைகளிலே நபியின் உடைய வழிமுறைகளிலே உங்களுக்கு சமரசம் செய்து கொள்வதற்கு யார் அதிகாரம் கொடுத்தது?
 
 
 
அன்பிற்குரியவர்களே!  நாம் இந்த மார்க்கத்தை முழுமையாக விளங்கிக் கொள்ளவேண்டும். அல்லாஹ்வுடைய மார்க்கத்தை எப்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் எப்படி விளக்கினார்களோ சஹாபாக்கள்  விளக்கினார்களோ நல்லோர்கள் தாபியீன்கள் எப்படி புரிந்து செயல்பட்டார்களோ அப்படி நாம் புரிய வேண்டும். ஏனென்று  சொன்னால் இந்த காலகட்டத்திலே ஒவ்வொருவரும் நம் மார்க்கத்தை பின்பற்றுகிறோம் என்பதாக சொல்லுகிறார்கள் அவர்களெல்லாம் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பின்பற்றியவர்கள் ஆக ஆகி விடுவார்களா? உண்மையான நேர்வழிப் பெற்ற கூட்டமாக ஆகி விடுவார்களா? நிச்சயமாக முடியாது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்
 
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَأْتِيَنَّ عَلَى أُمَّتِي مَا أَتَى عَلَى بَنِي إِسْرَائِيلَ حَذْوَ النَّعْلِ بِالنَّعْلِ حَتَّى إِنْ كَانَ مِنْهُمْ مَنْ أَتَى أُمَّهُ عَلَانِيَةً لَكَانَ فِي أُمَّتِي مَنْ يَصْنَعُ ذَلِكَ وَإِنَّ بَنِي إِسْرَائِيلَ تَفَرَّقَتْ عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ مِلَّةً وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ مِلَّةً كُلُّهُمْ فِي النَّارِ إِلَّا مِلَّةً وَاحِدَةً قَالُوا وَمَنْ هِيَ يَا رَسُولَ اللَّهِ قَالَ مَا أَنَا عَلَيْهِ وَأَصْحَابِي (سنن الترمذي 2565 -)
 
இஸ்ரவேலர்கள் 72 கூட்டங்களாக பிரிந்தார்கள். எனது சமுதாயம் 73 ஆகப் பிரியும். அனைத்தும் நரகத்திற்கு செல்லும். ஒரே ஒரு கூட்டத்தை தவிர. அவர்கள் யார்? அவர்கள் தங்களை பற்றி நாங்கள்தான் குர்ஆனையும் ஹதீஸையும் பின்பற்றுகிறோம் என்று வாதிடக் கூடியவர்களா? தங்களுடைய கருத்திற்கேற்ப சிந்தனைக்கு ஏற்ப மார்க்கத்தை கூருபோட்டு  கொண்டவர்களா? வழிகாட்டல் மூலமாகவோ மத்ஹபுகள் மூலமாகவோ இன்னும் எத்தனை  வழியிலே நபியின் உடைய காலத்திற்கு பிறகு புதுமையாக உண்டாக்கினார்களோ அந்த புதுமையான வழி கேட்டிலேயே இருந்துகொண்டு அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பின்பற்றுகிறோம் என்று சொல்வோர்களா !
 
 
 
இல்லை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் அல்லாஹ்டைய தூதரே! சொர்க்கத்திற்குள் செல்ல கூடிய அந்த ஒரு கூட்டம் நீங்கள் எங்களுக்கு அடையாளம் காட்டுங்கள் என்று கூறியபோது பாருங்கள் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவர்களுக்கு அல்லாஹ் கொடுத்திருந்த தூரப்பார்வை காலப்போக்கிலே ஒவ்வொருவரும் குர்ஆனை தன்னுடைய மன இச்சைக்கு ஏற்ப ஹதீசை தன்னுடைய மன இச்சைக்கு ஏற்ப விளக்கம் சொல்லிக்கொண்டு இதுதான் குர்ஆன் ஹதீஸ் இது தான் சட்டம் இதுதான் தவ்ஹீத் என்பதாக பேசுவார்கள்.எனவே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  எப்படி சொன்னார்கள் குர்ஆன் ஹதீசுக்கு உண்டான முறைகளை குர்ஆன் ஹதீஸ்களுக்கு உண்டான செயல்முறைகளை சொன்னார்கள்.
 
مَا أَنَا عَلَيْهِ وَأَصْحَابِي
 
நானும் எனது தோழர்களும் எந்த ஒரு வழி முறையில் இருக்கின்றோமோ அந்த வழிமுறையில் இருக்கக்கூடிய கூட்டம் ஒன்று தான் சொர்க்கத்திற்கு செல்வார்கள்.
 
 
 
நீங்கள் குர்ஆன் ஹதீஸ்கள் என்பதாக உங்களுடைய கற்பனைக்கு ஏற்ப பின்பற்றுவதை கொண்டோ  உங்களுடைய கற்பனைக்கு ஏற்ப எடுத்து செயல்படுவதை கொண்டோ குர்ஆனையும் ஹதீசையும் பின்பற்றியவர் ஆகமாட்டிர்கள். .அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் குர்ஆனுக்கு என்ன விளக்கம்  சொன்னார்கள் ஸஹாபாக்கள் எப்படி குர்ஆனை பின்பற்றி நடந்தார்கள் ஸஹாபாக்கள் எப்படி இந்த ஹதீசை எப்படி விளங்கிக்  கொண்டார்கள் 
 
உதாரணத்திற்கு எடுத்துக்கொள்வோம். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் வஹி இறக்குகிறான் ஜகாத் கொடுங்கள் என்பதாக. ஜகாத்  வாங்குங்கள் என்பதாக அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிஸ்ஸலாம் ஒவ்வொரு ஆண்டும் ரமலானுடைய மாதத்திற்கு முன்பு குறிப்பிட்ட மாதத்தில் ஜகாத் வசூல் செய்வதற்காக அனுப்பினார்கள். 
 
 
 
சஹாபாக்கள் தங்களுடைய செல்வங்களிலே இந்த ஜகாத் போன ஆண்டுக்கு  எடுக்கப்பட்ட பொருள்களை தனியாக ஆக்கிவிட்டு இந்த ஆண்டுக்கான பொருளுடைய ஜகாத்தை மட்டும் நீங்கள் எடுத்துச் செல்லுங்கள் என்பதாக செய்யவில்லை. ஒவ்வொரு ஆண்டிலும் எந்த பொருள்களை அல்லாஹ் கொடுத்திருக்கிறானோ அந்த பொருட்கள் அனைத்திற்கும் அதிலிருந்து ஜக்காத் கொடுத்தார்கள். ஜக்காத் வசூல் செய்வதற்காக வேண்டியே அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஒரு பெரிய கூட்டத்தை வைத்திருந்தார்கள் 
 
 
 
அவர்கள் ஜகாத் வாங்க செல்லும் பொழுது போன வருடத்திற்கு கொடுத்த பொருட்களை எல்லாம் நீங்கள் தனியாகி விடுங்கள் இந்த வருடத்திலேயே உங்களுக்கு கொடுத்த பொருளை மட்டும் நீங்கள் தனிமைப்படுத்தி காட்டுங்கள் என்று சொன்னது கிடையாது. 
 
 
 
இதிலிருந்து என்ன விளங்குகிறது எட்டு ஆண்டுகள் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்படி தான் இருந்தது. அவருடைய வழிமுறைகளும் அப்படிதான் இருந்தது. அதற்குப் பிறகு கலீபாக்கள் உடைய வழிமுறைகளும் அப்படிதான் இருந்தது. அதற்கு பிறகு முஸ்லிம்களுடைய வழிமுறைகளும் அப்படி தான் இருக்கிறது. 
 
 
 
ஆனால் இன்று குர்ஆனையும் ஹதீசையும் பின்பற்றுகிறோம் என்ற பெயரிலே எப்படிப்பட்ட குஃப்ரான கொள்கையை புகுத்த பார்க்கிறார்கள் யோசித்துப் பாருங்கள். இது ஒரு தனி ஒருவரை சொல்வதற்காக அல்ல. குர்ஆன் ஹதீஸின் பெயரிலே  அல்லாஹ்வையும்  அல்லாஹ்வுடைய தூதரையும் ஸஹாபாக்களையும் முறைகளாக ஆக்கவில்லை என்று சொன்னால் அவர்களுடைய விளக்கத்தை முன்னுதாரணமாக ஆக்கவில்லை என்று சொன்னால் எப்படிப்பட்ட குழப்பத்திற்கு சமுதாயம் தள்ளப்படும் என்பதற்காக சொல்லுகின்றேன்.
 
 
 
அன்பிற்குரியவர்களே! எதை நாம் அல்லாஹ்வுடைய மார்க்கமாக குர்ஆன் ஹதீஸ்னுடைய முறையிலே சஹாபாக்கள் உடைய முறையிலேயே புரிந்தோமோ அதை அப்படியே வாழ்க்கையில் எடுத்து நடக்க வேண்டும். நாம் புரிந்து கொண்ட அமல்படுத்தி கொண்டிருக்க கூடிய இந்த மார்க்கத்தை அல்லாஹ் உடைய அடியார்களுக்கு நாம் எடுத்துச் சொல்ல வேண்டும். இதுதான் நாம் அல்லாஹ்விற்கு செய்யக்கூடிய உதவி. இதுதான் அல்லாஹ் நம்மிடத்தில் எதிர்பார்க்கக்கூடிய உதவி. இந்த உதவியை செய்பவர்களுக்குத் தான் அல்லாஹ் வாக்குறுதி அளிக்கின்றான்.
 
وَلَيَنْصُرَنَّ اللَّهُ مَنْ يَنْصُرُهُ  
 
إِنْ تَنْصُرُوا اللَّهَ يَنْصُرْكُمْ   
 
யார் எனக்கு உதவி செய்வார்களோ அவர்களுக்கு நான் உதவி செய்வேன். (அல்குர்ஆன் 22 : 40)
 
நீங்கள் அல்லாஹ்விற்கு உதவி செய்யுங்கள் அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்வான் (அல்குர்ஆன் 47 : 7)
 
 
 
என்று சொன்னானே அது என்ன? நாம் மார்க்கத்தைப் புரிந்து கொள்வது, மார்க்கத்தை பின்பற்றுவது, இந்த மார்க்கம் மக்களுக்கு பரப்பப்பட வேண்டும் மக்கள் இந்த மார்க்கத்தை பின்பற்ற வேண்டும் என்பதற்காக நம்முடைய உயிரை பொருளை நேரத்தை என்னென்ன தகுதிகளையும் என்னென்ன சிறப்புகளையும் அல்லாஹ் நமக்கு கொடுத்து இருக்கிறானோ நம்மால் முடிந்த அளவு அவற்றை அல்லாஹ்விற்காக செலவிடுவது அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்காக செலவிடுவது. அல்லாஹ்சுப்ஹானஹு தஆலா உங்களுக்கும் எனக்கும் அவனுடைய மார்க்கத்தை முழுமையாக பின்பற்றி அவனுடைய கிதாபை கொண்டும் சுன்னத்தை கொண்டும் பயன்பெறக்கூடிய தவ்ஃபிக்கை தருவானாக. 
 
ஆமீன்
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1).
 
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ الْحَكَمُ بْنُ نَافِعٍ أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ عَنْ الزُّهْرِيِّ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ وَكَفَرَ مَنْ كَفَرَ مِنْ الْعَرَبِ فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ كَيْفَ تُقَاتِلُ النَّاسَ وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَمَنْ قَالَهَا فَقَدْ عَصَمَ مِنِّي مَالَهُ وَنَفْسَهُ إِلَّا بِحَقِّهِ وَحِسَابُهُ عَلَى اللَّهِ فَقَالَ وَاللَّهِ لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلَاةِ وَالزَّكَاةِ فَإِنَّ الزَّكَاةَ حَقُّ الْمَالِ وَاللَّهِ لَوْ مَنَعُونِي عَنَاقًا كَانُوا يُؤَدُّونَهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهَا
 
قَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ فَوَاللَّهِ مَا هُوَ إِلَّا أَنْ قَدْ شَرَحَ اللَّهُ صَدْرَ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ (صحيح البخاري- 1312 )
 
குறிப்பு 2).
 
 
 
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ دَاوُدَ الْمَهْرِيُّ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي حَيْوَةُ بْنُ شُرَيْحٍ ح و حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُسَافِرٍ التِّنِّيسِيُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَحْيَى الْبُرُلُّسِيُّ حَدَّثَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ عَنْ إِسْحَقَ أَبِي عَبْدِ الرَّحْمَنِ قَالَ سُلَيْمَانُ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْخُرَاسَانِيِّ أَنَّ عَطَاءً الْخُرَاسَانِيَّ حَدَّثَهُ أَنَّ نَافِعًا حَدَّثَهُ عَنْ ابْنِ عُمَرَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِذَا تَبَايَعْتُمْ بِالْعِينَةِ وَأَخَذْتُمْ أَذْنَابَ الْبَقَرِ وَرَضِيتُمْ بِالزَّرْعِ وَتَرَكْتُمْ الْجِهَادَ سَلَّطَ اللَّهُ عَلَيْكُمْ ذُلًّا لَا يَنْزِعُهُ حَتَّى تَرْجِعُوا إِلَى دِينِكُمْ (سنن أبي داود - 3003 -)
 
குறிப்பு 3).
 
 
 
حَدَّثَنَا جَعْفَرُ بن مُحَمَّدٍ الْفِرْيَابِيُّ، حَدَّثَنَا عَمْرُو بن عُثْمَانَ الْحِمْصِيُّ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ بن عَيَّاشٍ، حَدَّثَنَا شُرَحْبِيلُ بن مُسْلِمٍ، ومُحَمَّدُ بن زِيَادٍ، أنهما سمعا أبا أمامة الباهلي، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمْ، يَقُولُ:"أَيُّهَا النَّاسُ، إِنَّهُ لا نَبِيَّ بَعْدِي، وَلا أُمَّةَ بَعْدَكُمْ أَلا فَاعْبُدوا رَبُّكُمْ، وَصَلُّوا خَمْسَكُمْ، وَصُومُوا شَهْرَكُمْ، وَأَدُّوا زَكَاةَ أَمْوَالَكُمْ طَيْبَةً بِهَا أَنْفُسَكُمْ، وَأَطِيعُوا وُلاةَ أَمْرِكُمْ، تَدْخُلُوا جَنَّةَ رَبِّكُمْ". (المعجم الكبير للطبراني 7413 -)
 
குறிப்பு 4).
 
حَدَّثَنَا أَبُو عَاصِمٍ الضَّحَّاكُ بْنُ مَخْلَدٍ أَخْبَرَنَا الْأَوْزَاعِيُّ حَدَّثَنَا حَسَّانُ بْنُ عَطِيَّةَ عَنْ أَبِي كَبْشَةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَلِّغُوا عَنِّي وَلَوْ آيَةً وَحَدِّثُوا عَنْ بَنِي إِسْرَائِيلَ وَلَا حَرَجَ وَمَنْ كَذَبَ عَلَيَّ مُتَعَمِّدًا فَلْيَتَبَوَّأْ مَقْعَدَهُ مِنْ النَّارِ (صحيح البخاري3202 -)
 
குறிப்பு 5).
 
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدٍ قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِ قَالَ: أَخْبَرَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ، قَالَ: أَخْبَرَنِي أَبُو هَانِئٍ الخَوْلَانِيُّ، أَنَّ عَمْرَو بْنَ مَالِكٍ الجَنْبِيَّ، أَخْبَرَهُ، أَنَّهُ سَمِعَ فَضَالَةَ بْنَ عُبَيْدٍ، يُحَدِّثُ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: «كُلُّ مَيِّتٍ يُخْتَمُ عَلَى عَمَلِهِ إِلَّا الَّذِي مَاتَ مُرَابِطًا فِي سَبِيلِ اللَّهِ فَإِنَّهُ يُنْمَى لَهُ عَمَلُهُ إِلَى يَوْمِ القِيَامَةِ، وَيَأْمَنُ مِنْ فِتْنَةِ القَبْرِ»، وَسَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «المُجَاهِدُ مَنْ جَاهَدَ نَفْسَهُ»: وَفِي البَاب عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، وَجَابِرٍ وَحَدِيثُ فَضَالَةَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ (سنن الترمذي 1621)
 
குறிப்பு 6).
 
حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ، حَدَّثَنَا زَكَرِيَّاءُ، عَنْ عَامِرٍ، قَالَ: سَمِعْتُ عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «المُسْلِمُ مَنْ سَلِمَ المُسْلِمُونَ مِنْ لِسَانِهِ وَيَدِهِ، وَالمُهَاجِرُ مَنْ هَجَرَ مَا نَهَى اللَّهُ عَنْهُ» (صحيح البخاري-6484 )
 
 
 
 
 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/