HOME      Khutba      ஹஜ் வணக்கமும் ஆன்மீக உணர்வுகளும் | Tamil Bayan - 361   
 

ஹஜ் வணக்கமும் ஆன்மீக உணர்வுகளும் | Tamil Bayan - 361

           

ஹஜ் வணக்கமும் ஆன்மீக உணர்வுகளும் | Tamil Bayan - 361


بسم الله الرحمن الرحيم

ஹஜ் வணக்கமும் ஆன்மீக உணர்வுகளும்

إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள்: நம்பிக்0கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

 

அல்லாஹுசுப்ஹானஹுதஆலா நமக்கு கொடுத்திருக்கின்ற இந்த மார்க்கத்தில் அல்லாஹ்வை நாம் வணங்கி வழிபடுவதற்காக, அல்லாஹ் நமக்கு வரையறுத்து தந்திருக்கின்ற இந்த வணக்க வழிபாடுகள், பலவகை வணக்க வழிபாடுகளாக இருக்கின்றன.

 

சிலவகைவணக்க வழிபாடுகள் செல்வத்தால் செய்யப்படுகின்றது, உதாரணமாக தர்மம் மற்றும் ஜகாத்தை போல.

 

சிலவகைவணக்க வழிபாடுகள் உடல் உறுப்புகளால் மட்டும் செய்யப்படுகின்றன, உதாரணமாக அல்லாஹ்வை நினைவு கூர்வது, திக்ரு செய்வது, நம்முடைய உடல் உறுப்புகளால் அல்லாஹ்வை வணங்கி வழிபடுவது, தொழுகையை நிறைவேற்றுவது,ஏனைய மக்களுக்கு உதவுவது, இப்படி நமது உடல் உறுப்புகளால்மட்டும்செய்யக்கூடிய வணக்க வழிபாடுகளும் இருக்கின்றன.

 

இவற்றிலிருந்து கொஞ்சம், மேலும் அதிகப்படியாக உடலாலும், பொருளாலும் நிறைவேற்றப்படுகின்ற ஓர் உன்னதமான வணக்கம் இருக்கின்றது, அதுதான் இந்த ஹஜ் என்ற வணக்கம்.

 

இந்த ஹஜ் வணக்கத்திலே நமது உடலும், மேலும் நமது பொருளும் சம்பந்தப்படுகிறது. நமது உடல் உழைப்பும் அங்கு சம்பந்தப்படுகிறது, நமது பொருளாதாரத்தின் செலவும் அங்கே இருக்கின்றது.

 

அதற்காக கொடுக்கப்படக்கூடிய நேரம், ஏனைய வழிப்பாட்டிற்கு கொடுக்கக்கூடிய நேரத்தை விட அதிகமாக இருக்கின்றது.

 

அதற்காக மனிதன் எடுத்துக் கொள்ளக்கூடிய சிரமம், அந்த சிரமத்தை அவன் சகித்துக் கொள்வது, ஏனைய வணக்க வழிபாட்டில் அவன் காட்டுவதை விட கொஞ்சம் அதிகமாக இருப்பதை பார்க்கிறோம்.

 

அப்படி என்றால், இந்த ஹஜ் வணக்க வழிப்பாடு, அல்லாஹு சுப்ஹானஹுதஆலா விடத்திலே ஒரு பெரிய அந்தஸ்தை உடையதாக, மிகப்பெரிய உயர்வை உடையதாக இருப்பதை நாம் பார்க்கிறோம்.

 

இந்த ஹஜ் என்ற வணக்க வழிபாட்டிலே தொழுகையை நிறைவேற்றுகிறோம், அல்லாஹ்வை அதிகம் திக்ரு செய்கிறோம், மேலும் தானதர்மங்களும் அங்கு செய்யப்படுகின்றன.

 

அத்தோடு சேர்த்து, ஏனைய வணக்க வழிபாட்டில் இல்லாதபலஅம்சங்கள் இந்த ஹஜ் வணக்க வழிபாட்டில் அமைந்திருக்கின்றன.

 

அப்படியென்றால், இந்த வணக்க வழிபாட்டின் மூலமாக அல்லாஹு சுப்ஹானஹுதஆலா நம்மிடத்திலே என்ன  எதிர்பார்க்கின்றான்?   இந்த இபாதத் நமக்கு என்ன பாடத்தை கற்பிக்க விரும்புகிறது? இந்த ஹஜ் என்ற இபாதத்தின் மூலமாக என்ன மாற்றங்களை,என்ன குணங்களை, என்ன  தன்மைகளை அல்லாஹ் நம்மிடத்தில் விரும்புகிறான்?அவற்றை தெரிந்து நாம் இந்த ஹஜ்ஐை நிறைவேற்றும்போது, அன்பிற்குரியவர்களே! இந்த ஹஜ் ஓா் அர்த்தமுள்ள ஹஐ்ஐாக மாறுகின்றது.

 

பொதுவாக மக்களிலே சிலர், சடங்குகளாக தான் இந்த ஹஜ் வணக்கத்தை நிறைவேற்றுவதை பார்க்கிறோம்.  உணர்வு இல்லாமல், இந்த ஹஜ்ஜுடைய வணக்கத்தின் தாத்பிறியத்தை புரியாமல், ஏன் செல்கிறோம்? அங்கு என்ன செய்கிறோம்? எதற்காக செய்கிறோம்? இந்த வணக்க வழிபாட்டின் மூலமாக நாம் எப்படி மாறவேண்டும், என்பதையெல்லாம் கற்றுக் கொள்ளாமல் எல்லாரோடும் சென்றோம் அப்படியே திரும்பி வந்தோம் என்ற நிலையில் நமது ஹாஐிகளில்சிலர் இருப்பதை பார்க்கிறோம்.

 

கண்ணியத்திற்குரியவர்களே!அல்லாஹு சுப்ஹானஹுதஆலா எந்த ஒரு வணக்க வழிபாட்டை நமக்கு, நம்முடைய மார்க்கத்திலே வரையறுத்து கொடுத்திருந்தாலும், அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்அவர்கள் எந்த ஒரு வணக்க வழிபாட்டை நமக்கு போதித்திருந்தாலும், அந்தவணக்கவழிபாட்டிற்கென்று அடிப்படை தத்துவம், கருத்துவம் இருக்கின்றது.

 

எல்லா வணக்க வழிப்பாட்டினுடைய பொதுவான நோக்கம் என்று ஒன்று இருக்கின்றது. அந்த நோக்கத்தில் முதலாவதாக, உள்ளத்தை சுத்தப்படுத்துவது (தஸ்கியத்துன்னுஃபூஸ்).

 

எல்லா வணக்க வழிபாட்டினுடைய உயிர்என்ன?நம்முடைய கல்பை,நம்முடைய நஃப்சை, நம்முடைய உள்ளத்தை பரிசுத்தமாக்கவேண்டும்.  இந்த உள்ளத்தில் அல்லாஹ்வின் அன்பை, அல்லாஹ்வின் பயத்தை, அல்லாஹ்வின் மீது ஆதரவை கொண்டு வரவேண்டும். இந்த உள்ளத்திலே நல்ல குணங்களை கொண்டு வரவேண்டும். கெட்ட குணங்கள், தீய எண்ணங்கள், அசுத்தமான சிந்தனைகளிலிருந்து உள்ளத்தை பரிசுத்தப்படுத்த வேண்டும்.மிருக ஆசையிலிருந்து உள்ளங்களை சுத்தப்படுத்தி வானவா்களுடைய அந்த பரிசுத்தமான கீழ்ப்படிகின்றநல்ல குணத்திற்கு இந்த நஃப்சை கொண்டு போக வேண்டும் என்ற அடிப்படை நோக்கம் எல்லா வணக்க வழிபாட்டிற்கும் பொதுவானது.

 

இவை வணக்க வழிபாட்டின் ஒட்டுமொத்த அடிப்படையாக, தத்துவமாக இருக்கின்றது.

 

இதற்கும் மேலாக ஹஐ்ஐுடைய வணக்க வழிபாட்டிலே, மேலும் பல தத்துவங்கள் பொதிந்திருப்பதை நாம் பார்க்கிறோம்.

 

கண்ணியத்திற்குரிய மார்க்க அறிஞர்கள்,  முந்திய காலத்திலிருந்து இன்று வரை இந்த ஹஐ்ஐுடைய தாத்பிறியங்களை பற்றி,விளக்கங்களை பற்றி, ஒவ்வொரு வணக்கமும் நமக்கு கொடுக்கின்ற படிப்பினைகளை, பாடங்களைப் பற்றி, பல நூல்களை எழுதி இருக்கின்றார்கள்.

 

அதிலிருந்து சிலவற்றை நாம் பார்க்க இருக்கின்றோம்.

 

அன்பிற்குரியவர்களே! ஹஐ்ஐுடைய வணக்க வழிபாட்டின் நோக்கங்களிலே தலையாய மேலான நோக்கமாக ஒன்று இருக்கின்றது. நாம் அல்லாஹ்விற்கு அடிமை என்பதை,  நாம் அல்லாஹ்விற்கு, அவனுக்கு கீழ் படிகின்ற, அவனை பயந்து, பணிந்து வணங்குகின்ற, அவனுடைய கட்டளைக்கு முழுமையாக தலை சாய்க்கின்ற அவனுடைய அடிமை என்பதை வெளிப்படுத்துகின்ற,ஓர் உன்னதமான நோக்கம், இந்த ஹஜ்என்றவணக்க வழிபாட்டில் இருக்கின்றது.

 

நம்முடைய இந்த ஹஜ் வணக்க வழிபாட்டின் மூலமாக இப்படிப்பட்ட ஒரு தன்மையை அல்லாஹு சுப்ஹானஹுதஆலா நம்மிடத்திலே எதிர்பார்க்கின்றான், இந்த தன்மையை நம்மிடத்திலே அல்லாஹ் விரும்புகிறான்.

அடிமை என்பதுடைய கருத்து என்ன?

 

அல்லாஹுதஆலா நம்மைப் பற்றிசொல்லும்பொழுது நாம் அவனுடைய அடிமைகள் என்று சொல்கிறான், (இ்பாதுர்ரஹ்மான்) ரஹ்மானுடைய அடிமைகள் என்று சொல்கிறான்.

 

நபிமார்களை அல்லாஹ் சொல்லும் போதெல்லாம் அவர்கள் என்னுடைய அடிமை என்று அல்லாஹ் சொல்கிறான்.

إِنَّهُ كَانَ عَبْدًا شَكُورًا

நூஹ்மிக்க நன்றி செலுத்தும் அடியாராகவே இருந்தார்(அல்குர்ஆன் 17 : 3)

 

நூஹ் (அலை) அவா்களை பற்றி அல்லாஹ் இப்படி தான் சொல்கிறான்.

 

அல்லாஹ்வுடைய தூதர் தன்னுடைய வாழ்நாள் முழுவதும் அப்படி தான் சொல்லிக்கொண்டு இருந்தார்கள், "நான் அல்லாஹ்வுடைய அடிமையாக இருக்கின்றேன்".

 

நாம் அல்லாஹ்வுடைய தூதருக்கு, தூதுத்துவத்தை கொண்டு சாட்சி சொல்லும்போது,

اشهد ان محمد عبده ورسوله

அவர் அல்லாஹ்வுடைய அடிமையாக இருக்கின்றார்;மேலும் தூதராக இருக்கின்றார்என்று முதலில் அடிமைத்துவத்தை கொண்டு அல்லாஹ்வுடைய தூதர் நபி (ஸல்)  அவர்களுக்கு சாட்சியம்கூறியதற்கு பிறகுதான் தூதுத்துவத்தை கொண்டு சாட்சியை நாம் கூறுகின்றோம்.

 

கண்ணியத்திற்குரியவர்களே!அப்படி என்றால் இந்த அடிமைத்துவத்திலேமிகப்பெரியஒரு அல்லாஹ்வுடைய விருப்பம் இருக்கிறது.  நான் படைத்த என்னுடைய இந்த மனித படைப்பு எனக்கு கட்டுப்பட்டு முழு அடிமைகளாக இருக்க வேண்டுமென்று அல்லாஹ் விரும்புகிறான்.

 

அல்லாஹு சுப்ஹானஹுதஆலா இந்த அடிமைத்துவத்தை இந்த இபாதத்திலே ஏனைய இபாதத்துகளிலிருந்து சற்றே அதிகமாக மனிதனிடத்திலே வெளிப்படுத்திவைக்கின்றான்.

 தொழுகையும் அந்த அடிமைத்துவத்தை தான் காட்டுகிறது.அல்லாஹ்வுக்கு முன்னால் வருகிறோம், சுத்தம் செய்து வருகிறோம், அல்லாஹு அக்பர் என்னுடைய எஜமானன் அல்லாஹ் தான்  மிகப் பெரியவன் என்று ஒரு அடிமை தன்னுடைய மன்னனுக்கு முன்னால் கூனிக்குறுகி பயந்து நிற்பதைப் போன்று கையை கட்டிக்கொண்டு அடக்கமாக பேசுகிறோம். தனது பக்கத்திலே தன்னுடைய எஜமானர் வந்தாலும் அவரை திரும்பி பார்ப்பது இல்லை.

 

அவருக்கென்று நாம் தனியாக தொழுகையிலே நின்று கொண்டிருக்கும் போது, ஸலாம் சொல்வதில்லை;அவர் ஸலாம் சொன்னாலும் நாம் பதில் சொல்வதில்லை;யார் வருகிறார், யார் செல்கிறார், உற்றாரா, உறவினரா, எஐமானாரா, அடிமையா?என்று எந்த விதமான சிந்தனையும் நமக்கு செல்லாமல், அல்லாஹ்வுக்கு முன்னால் நிற்கிறோம்,

 

எஜமானருக்கெல்லாம் எஜமானாகிய அல்லாஹ் முன்னால் நிற்கிறோம், எதையும் பார்க்க மாட்டோம் ஸஐ்தாவுடைய இடத்தை தவிர; எதையும் பேசமாட்டோம்  அல்லாஹ் கட்டளையிட்ட தவிர;யாரையும் நினைத்துப் பார்க்க மாட்டோம் அல்லாஹ் ஒருவனை தவிர;அவன் குனிய  சொல்லும்போது குனிகிறோம், அவன் எழுந்திருக்க சொல்லும்போது எழுகிறோம்,அவன் ஸுஜூது செய்ய சொல்லும் போது ஸுஜூது செய்கிறோம்.

 

இப்படி, இதுவும்அல்லாஹ்விற்குநாம்அடிமைஎன்பதைவெளிப்படுத்தக்கூடியஒருதோற்றமாகஇருக்கின்றஇந்தநேரத்தில், இந்தஹஜ்வணக்கத்திலேஇந்தஅடிமைத்துவத்தின்வெளிப்பாட்டைபாருங்கள்.

 

அல்லாஹு சுப்ஹானஹுதஆலா ஹாஜிகளுக்கு இஹ்ராம் என்ற உடையை உடுத்த சொல்கிறானே, எனது வீடாகிய அந்த கஃபாவிற்கு எனது ஊராகிய அந்த மக்காவிற்கு வருவதற்கு முன்பே உங்களுடைய உடைகள் மாற்றப்படவேண்டும். நீங்கள் மன்னராக, பெரிய செல்வந்தராக இருக்கலாம், வசதியான வாழ்க்கையிலே விரும்பிய ஆடைகளை உடுத்தக்கூடியவர்களாக இருக்கலாம்.ஆனால் யாராக இருந்தாலும் இப்போது, இவற்றுக்கெல்லாம் மேலாக நாளை மறுமையில் நீங்கள் வரும்போது

وَلَقَدْجِئْتُمُونَافُرَادَىكَمَاخَلَقْنَاكُمْأَوَّلَمَرَّةٍ

நீங்கள் நாளை மறுமையிலே நம்மிடத்தில் திட்டமாக வருவீர்கள் தனித்தனியாக வருவீர்கள் எப்படி நாம் உங்களைப் படைத்தோமோ அதே தோற்றத்தில் வருவீர்கள்.(அல்குர்ஆன் 6 : 94)

 

இதைத்தான் நபி (ஸல்) அவர்கள் நமக்கு எச்சரித்து சொல்கிறார்கள்,

يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ حُفَاةً عُرَاةً غُرْلًا

நாளைமறுமையில்எழுப்பப்படும்போதுஅவர்களிடத்திலேசெருப்புகள்இருக்காது;அவர்களதுமேனியிலேஆடைகள்இருக்காது;திறந்தநிலையில்ஹத்னாசெய்யப்படாதவர்களாகஎழுப்பப்படுவார்கள்.(1)

 

அறிவிப்பாளர்: ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹா, நூல்: முஸ்லிம்,எண்:5102

 

அந்த காட்சியை நினைத்துப் பாருங்கள் "ஹஷ்ர்" உடைய அந்த காட்சியை நினைத்துப் பாருங்கள்.

 

அல்லாஹு ரப்புல் ஆலமீன், அந்த நேரத்திலே நம்முடைய நிலையைப் பற்றிச் சொல்கிறான்.

وَكُلُّهُمْ آتِيهِ يَوْمَ الْقِيَامَةِ فَرْدًا

நாளை மறுமையில் எல்லோரும் அல்லாஹ்விற்கு அடிமையாக தான் வந்தாக வேண்டும். தனியாக வந்தாகவேண்டும், அடிமையாக வந்தாக வேண்டுமென்று. (அல்குர்ஆன் 19 : 95)

 

அந்த ஒரு அடிப்படையை இந்த ஹஜ் வணக்கத்திலே அல்லாஹ் வெளிப்படுத்துகின்றான்.

 

நாட்டில் பெரிய மன்னராக இருந்தாலும் கூட தன்னுடைய அத்தனை அலங்காரங்களையும், ஆடம்பர ஆடைகளையும், கீரிடங்களையும் கழற்றி வைத்துவிட்டு, ஒரு ஏழையை போன்று, சாதாரண இரண்டு ஆடைகள், தைக்கப்படாத ஆடைகளை அணிந்து கொண்டு, தன்னுடைய தலையிலிருந்து தொப்பி,கீரிடம் அனைத்தையும் கழற்றி வைத்துவிட்டு, தலையை திறந்தவராக வருகிறான்.

 

அவருடைய உடையிலே நறுமணங்கள் பூச முடியாது, அவர் தல்பியா சொல்ல வேண்டும். தல்பியா சொல்லாமல் அந்த இடத்தை அவர் கடக்க முடியாது.

 

தல்பியா உடைய அடிப்படை என்ன?

لَبَّيْكَ اللهُمَّ لَبَّيْكَ – لَبَّيْكَ لَا شَرِيْكَ لَكَ لَبَّيْكَ – إِنَّ الْحَمْدَ وَالنِّعْمَةَ لَكَ وَالْمُلْكَ – لَا شَرِيْكَ لَكَ

யா அல்லாஹ்! உனக்கு முன்னால் பணிந்து வந்துவிட்டேன்;உனக்கு முன்னால் நான் ஆஜராகி விட்டேன்;உனக்கு இணை துணை இல்லை அல்லாஹ்வே;உனக்கு முன்னால் வந்துவிட்டேன்;பணிந்து வந்துவிட்டேன்;புகழெல்லாம், ஆட்சி அதிகாரம் எல்லாம்,அருட்கொடைகள் எல்லாம் உனக்கே சொந்தமானது;இணை துணை உனக்கு இல்லை

 

இந்த வார்த்தையை சொல்லிக்கொண்டே இருக்கிறார், உம்ராவுக்கு செல்லக்கூடியவர்கள் அந்த கஅபத்துல்லாவில் தவாஃபை ஆரம்பிக்கும் வரை.

 

எத்தனை மணிநேரங்கள் ஆனாலும், மீக்காத்திலே இந்த தல்பியாவை ஆரம்பத்திலிருந்து, இறுதியில் அந்த உம்ராவுடைய தவாஃபை ஆரம்பிக்கும் வரை அந்த தல்பியாவை உரக்கச் சொல்லிக்கொண்டே இருக்கிறார்.

 

அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹ் அவர்கள் சொன்னார்கள், ஒரு தல்பியாவை ஓதக்கூடியவா் தல்பியா சொல்லும்போது, அவருடைய வலப்பக்கத்தில் எவ்வளவு தூரம் அந்த சத்தம் கேட்கிறதோ, அவை எல்லாம் நாளை மறுமையில் இவருக்காக சாட்சி சொல்லும், அப்படித்தான் இடது பக்கமும் என்று.

 

இந்த தல்பியா மனிதனுக்கு என்னபாடத்தை சொல்லுகின்றது? மனிதனே! நீ அல்லாஹ்வின் அடிமை;அல்லாஹ்வின் அன்பிலே உன்னை நீ தொலைத்து விடு, அவனை நினைவு கூறுவதிலே நீ உண்னையே மறந்து விடு;உன்னுடைய அனைத்தையும் நீ அல்லாஹ்வுக்கு சொந்தமாக்கிவிடு்;

 

உன்னுடைய செல்வம், ஆட்சி அதிகாரம், உன்னிடத்தில் இருக்கக்கூடிய அத்தனை நிஃமத்துகள், உனக்கு இருக்கக்கூடிய அனைத்து வசதிகள், உனக்கு இருக்கக்கூடிய புகழ், பெயர் அனைத்தையும் நீ அல்லாஹ்வுக்கு சொந்தமாக்கிவிடு்.

 

கண்ணியத்திற்குரியவர்களே! இந்த அடியானுக்கு தர்பியத்து கொடுக்கப்படுகிறது.

 

அது போன்று ஹாஐிகள் பிறை 8 அன்று இஹ்ராமை அணிந்ததிலிருந்து பிறை 8 முழுக்க பிறகு,பிறை 9 முழுக்க அந்த அரஃபாவுடைய தினம் முடிந்து அவர்கள் பிறை பத்திலே ஐம்ரத்துல் அகபா என்ற அந்த பெரிய அகபாவிலே முதல் கல்லை அவர்கள் எரிகின்ற வரை,இரண்டு நாட்கள் முழுமையாக இந்த தல்பியாவை அவர்கள்சொல்லிக் கொண்டே இருப்பார்கள்.

 

இந்த தல்பியாவின்மூலமாக அல்லாஹ்வுடைய நினைவில் அவர்கள் திழைத்துக் கொண்டே இருப்பார்கள்;அல்லாஹ்வுக்கு தாங்கள் அடிமை என்பதை தங்களுக்கு தாங்களே நினைவுபடுத்திக் கொண்டே இருப்பார்கள்.

இன்னும் எத்தனை மாற்றங்கள் இந்த தல்பியாவுக்கு பிறகு! இந்த இஹ்ராமிற்கு பிறகு!

தான் விரும்பக்கூடிய எதையும் இந்த அடியானால் செய்ய முடியாது. அல்லாஹ் விரும்புகின்ற,அல்லாஹ் இட்ட கட்டளைகளை தவிர.

 

இதுவும் எதை உணர்த்துகிறது?அல்லாஹ்விற்கு அடிமை என்பதை.

 

ஒரு அடிமையினுடைய பண்பு என்ன? அவன் எதையும் விரும்பமுடியாது, அவனுடைய எஜமானன் எதை விரும்புகிறானோ அதைத்தான்  அவன் செய்ய முடியும்.

 

எஜமானன்எதைகொடுக்கிறானோஅதைதான்அவன்பெற்றுக்கொள்ளமுடியும்;அதைதான்அவன்உடுத்தமுடியும்; எஜமானன்எதைசாப்பிடகொடுக்கிறானோஅதைதான்அவன்சாப்பிடமுடியும்;எஜமானர்தூங்கசொல்லும்நேரத்தில்தூங்கவேண்டும்;விழிக்கசொல்லும்நேரத்தில்அவன்விழித்தாகவேண்டும்.

 

இன்னும் எஜமானன், வீட்டுக்கு செல்ல அனுமதித்தால் மட்டும் தான் அவன் வீட்டுக்கே செல்ல முடியும். இது ஒரு அடிமையினுடைய நிலை.

 

இந்த நிலையில் நாம் இங்கு என்ன செய்கிறோம்,  நம்மிடத்திலே எவ்வளவு வசதியாக பொருட்கள் இருந்தாலும் அல்லாஹ்வின்அனுமதி இல்லாமல், அல்லாஹ் இஹ்ராமிலே எதை நமக்கு ஹராமாக்கி இருக்கிறானோ எதை நமக்கு தடுத்துவிட்டானோ, அதை நாம் நம்மீது தடை செய்து கொள்கிறோம்.

 

உடலிலே வியர்வை ஏற்படுகிறது, அந்த வியர்வையை நறுமணத்தை கொண்டு மாற்றிக்கொள்ள முடியாது;அல்லாஹு ரப்புல் ஆலமீன் தடுத்துவிட்டான் குறிப்பிட்ட நேரத்திற்காக;மனைவி இருந்தாலும், ஹலாலான மனைவியின் பக்கமும் இச்சையின்,ஆசையின் பார்வையைகூட பார்க்க முடியாது. அந்த மனைவியிடத்திலே ஆசையாக, ஆசையின் வார்த்தையை கொண்டு பேசக்கூடாது.

 

فَمَن فَرَضَ فِيهِنَّ الْحَجَّ فَلَا رَفَثَ وَلَا فُسُوقَ

தங்களது  மனைவியிடத்தில் கூட நீங்கள் ஆசையான வார்த்தைகளை பேசக்கூடாது.

உங்களுடைய இச்சையான வார்த்தைகளை பேசக்கூடாது, பேசவும் முடியாது அல்லாஹ் தடுத்து விட்டான்.(அல்குர்ஆன் 2 : 197)

 

தன்னுடையஇச்சையை, ஆசைகளை, விருப்பங்களைகட்டுப்படுத்திக்கொள்கிறான்.

 

எல்லாம்இருந்தாலும், எப்படிநோன்பிலேஅடியான்தன்னைக்கட்டுப்படுத்துகிறானோஅதுபோன்றஒருநிலையைஇந்தஹஐ்ஜிலேஅல்லாஹ்கொண்டுவந்து, நாம்அல்லாஹ்வின்அடிமைஎன்பதைநமக்குஉணரவைக்கிறான்.

அன்பிற்குரியவர்களே! ஹஐ் வணக்க வழிப்பாட்டிலே இந்த இஹ்ராமுடைய நிலை, இந்த தல்பியாவுடைய நிலை, எப்படி தொழுகைக்கு உளு உடைய நிலை இருக்கிறதோ, நோன்புக்கு முன்னால் ஸஹரிலிருந்து நாம் ஆரம்பிக்கக் கூடிய அந்த  நிய்யத்தினுடைய நிலை இருக்கிறதோ அதற்கெல்லாம் இன்னும் மேலாக,இந்த தல்பியா இஹ்ராமுடைய நிலை உண்மையிலே உணர்ந்து செயல்படக்கூடிய ஒருவருக்கு கண்டிப்பாக மறுமையின்  நினைவை கொடுத்து,அந்த ஆஹிரத்துடைய நினைவை அவருடைய உள்ளத்திலே கொண்டு வரச்செய்து,  அல்லாஹ்விற்கு முன்னால் பணியக்கூடிய, பயப்படக்கூடிய, தன்னை அல்லாஹ்வுடைய அடிமை என்பதை உணர வைக்கக்கூடிய மிகப்பெரிய சந்தர்ப்பம் சகோதரர்களே..!

 

அந்த நேரத்தில் கூட ஒருவன் அதை உணரவில்லை என்றால், தான் அல்லாஹ்வுடைய அடிமை என்பதை உணரவில்லை என்றால், வாழ்க்கையில் வேறு எந்த சந்தர்ப்பத்திலும் அவனால் உணர முடியாது, அப்படிப்பட்ட ஒரு சந்தர்ப்பம் சகோதரர்களே..!

 

அதுபோன்று இந்த ஹஐ்ஐுடைய  வணக்க வழிபாட்டின் மூலமாக அல்லாஹுதஆலா நம்மிடத்திலே நாடக்கூடிய முக்கியமான பண்புகளிலே ஒன்று, இவ்வுலகத்திலே நீ வாழும் பொழுதெல்லாம் அடியானே, என்னுடைய நினைவோடு வாழ்; என்னுடைய நியாபகத்தோடு வாழ்;என்னை மறந்து வாழ்ந்து விடாதே.

 

வணக்க வழிபாட்டின் நோக்கம், நீ என்னை நினைவு கூர்ந்தவனாக, என்னை போற்றி புகழ்ந்தவனாக, எனது பெருமைகளை பேசியவனாக, எனது மேன்மைகளை, மாண்புகளை மக்களுக்கு எடுத்துச் சொல்பவனாக நீ வாழ வேண்டும்.

 

அல்லாஹ்வுடைய திக்ரு, எல்லா வணக்க வழிப்பாட்டினுடைய அடிப்படை நோக்கங்களிலே இது ஒன்று.

 

அல்லாஹுதஆலாஹஐ் வணக்க வழிப்பாட்டிலே இந்த அம்சத்தை கொஞ்சம் கூடுதலாக வைத்திருக்கிறான்.

 

ஹஐ்ஐுடைய வசனங்களை நீங்கள் ஸூரா பகராவிலே எடுத்து படித்தாலும், ஸூரா ஹஐ்ஐில்நீங்கள் எடுத்து படித்தாலும் சரி, இந்த திக்ரை விசேஷமாகஅல்லாஹ் சொல்லியிருப்பதை பார்க்கிறோம்.

فَاذْكُرُوا اللَّهَ كَذِكْرِكُمْ آبَاءَكُمْ أَوْ أَشَدَّ ذِكْرًا

அல்லாஹ்வை நீங்கள் நினைவு கூறுங்கள், உங்களது மூதாதிகளை நீங்கள் நினைவு கூர்ந்தது போன்று. (அல்குர்ஆன் 2 : 200)

 

அரபுகள் அந்த மினாவிலே முஸ்தலிஃபாவிலே  தங்களது மூதாதிகளின் பெயர்களை கூறி அவர்களை நினைவுகூர்ந்து இருப்பார்கள்.

அல்லாஹ் சொல்கிறான், அதையெல்லாம் நீங்கள் விட்டு விட்டு அல்லாஹ்வை நீங்கள் திக்ரு செய்யுங்கள்.

 

அன்பிற்குரியவர்களே! ஸூரா ஹஐ்ஜிலே அல்லாஹ் சொல்கிறான்..

لِّيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَّعْلُومَاتٍ

(வர்த்தகத்தின் மூலம்) தங்கள் பயனை நாடியும் (அங்கு வருவார்கள்). குறிப்பிட்ட நாள்களில் அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்த (ஆடு, மாடு, ஒட்டகம் ஆகிய) கால்நடை பிராணிகள் மீது அவனது திருப்பெயரைக் கூறி அறுப்பதற்காகவும் அ(ங்கு வருவார்கள்.(அல்குர்ஆன் 22 : 28)

 

இந்த ஹஐ்ஐுடைய வணக்க வழிபாட்டுக்கு வரக்கூடியவர்கள் செய்ய வேண்டிய இபாதத்துகளிலே ஒன்று, அந்த குறிப்பிட்ட நாட்களிலே பிறை  8, 9, 10, 11, 12, 13 ஆகிய நாட்களில் அல்லாஹ்வை அவர்கள் அதிகமாக திக்ர் செய்ய வேண்டும்.

 

ஆனால் அன்பிற்குரியவர்களே! மிக கவலையான செய்தி என்ன தெரியுமா? அந்த மினாவுடைய நாட்கள் ஒரு நிமிடம் என்ன, ஒரு நொடியை கூட வீணாக்காமல் தக்பீர், தஹ்லீல், தல்பியாவிலே இருக்க வேண்டிய அந்த நாட்கள் மக்கள் ஒருவருக்கொருவர் சந்தித்துக் கொண்டு தங்களது ஊர் கதைகளை பேசிக்கொண்டு, ஏன் தடுக்கப்பட்ட ஹராமான பேச்சுகளை கூட-புறம் பேசுவது, விமர்சனம் செய்வது, தேவையற்ற கேலி பேச்சுகளை பேசுவது.. இப்படி பல ஹாஐிகள் செய்வதை பார்க்கிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக.!

 

ஹஐ்ஐுடைய வணக்க வழிபாடுகள் நாசமடைந்து விடுகின்றன.இபாதத்துகளுடைய உயிரோட்டம் அங்கே போய் விடுகின்றது.

 

அல்லாஹ் ஹஐ்ஐுடைய வணக்க வழிபாட்டின் அடிப்படை நோக்கமாக சொல்கிறான், அவர்கள் அல்லாஹ்வை அந்த குறிப்பிடப்பட்ட நாட்களில் அதிகமாக திக்ர் செய்ய வேண்டும் என்பதற்காக, அல்லாஹ் சொல்வதை பாருங்கள் சூரா பகராவிலே,

فَإِذَا أَفَضْتُم مِّنْ عَرَفَاتٍ فَاذْكُرُوا اللَّهَ عِندَ الْمَشْعَرِ الْحَرَامِ ۖوَاذْكُرُوهُ كَمَا هَدَاكُمْ وَإِن كُنتُم مِّن قَبْلِهِ لَمِنَ الضَّالِّينَ

நீங்கள்அரஃபாவிலிருந்துமுஸ்தலிஃபாவிற்குபுறப்பட்டால், அந்தமுஸ்தலிஃபாவிலேஅல்லாஹ்வைதிக்ருசெய்யுங்கள். அவன்உங்களுக்குநேர்வழிகாட்டியிருக்கிறான். அதனைநீங்கள்நினைவுகூறுங்கள். இதற்கு முன்னால் நீங்கள் வழிகேட்டிலேயே இருந்தீர்கள். அல்லாஹ்வை, படைத்த இறைவனை, எப்படி வணங்க வேண்டும் என்பதை அறியாமல் இருந்தீர்கள். அவன் உங்களுக்கு வழிகாட்டி, தூய்மையான வணக்க வழிபாடுகளை  சொல்லிக் கொடுத்திருக்கிறான்;அதற்கு நன்றி செலுத்தும் விதமாக அல்லாஹ்வை நீங்கள் திக்ரு செய்யுங்கள். (அல்குர்ஆன் 2 : 198)

 

மேலும் அல்லாஹ் சொல்கிறான்,  அல்லாஹ்விடத்திலே மன்னிப்பு கேளுங்கள், அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.

 

உங்களுடைய ஹஐ்ஐுடைய வணக்க வழிபாடுகளை பிறை பத்திலே நீங்கள் முடித்து விட்டு,அடுத்து பிறை 11, 12, 13 இந்த மூன்று நாட்களில் நீங்கள் மினாவிலே தங்கியிருக்கும் பொழுது, அல்லாஹ்வை அதிகமாக நினைவு கூறுங்கள் என்று.

 

 ஆகவே கண்ணியத்திற்குரியவா்களே! ஹஐ்ஐுடைய வணக்க வழிபாட்டில்  அந்த நீண்ட நாட்கள்,இஹ்ராம் அணிந்ததிலிருந்து கடைசியாக முடிகின்ற வரை தல்பியாவிலே இருக்கிறோம், பிறகு மினாவிலே

لا اله الا الله والله أكبر

என்ற அந்த தஹ்லீல் தக்பிரிலே இருக்கிறோம்.

 

இதன் மூலமாக அல்லாஹு சுப்ஹானஹுதஆலா வாழ்நாளெல்லாம் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து வாழக்கூடிய, அல்லாஹ்வுடைய திக்ரிலே வாழக்கூடிய, அல்லாஹ்வை பற்றிய பெருமை பேசக் கூடிய ஒரு நாவை நமக்கு ஏற்படுத்த விரும்புகிறான் சகோதரர்களே!

 

இன்று நாம் என்ன செய்து கொண்டு இருக்கிறோம்? நம்முடைய நிலை எப்படி இருக்கிறது? இந்த நாவை நாம்எதற்கு பயன்படுத்துகிறோம்? கொஞ்சம் சிந்தித்துப்பாருங்கள்.

 

அல்லாஹ்வின் பெருமையை பேசுவதிலே நமது நாவு அதிகம் ஈடுபடுகிறதா? அல்லாஹ்வின் மேன்மைகளை, உயர்வுகளை,அல்லாஹ்வை போற்றி புகழ்வதற்கு இந்த நாவை நாம் அதிகம் பயன்படுத்துகிறோமா? அல்லது நம்மில் ஒவ்வொருவரும் தன்னை பற்றி பேசுவதற்கு, நான் என்ன படித்திருக்கிறேன்? என்னிடத்திலே என்ன இருக்கிறது? எனது வீடு எப்படி? எனது வாகனம் எப்படி? என்னுடைய பொருள் எப்படி? எனது குடும்பம் எப்படி? என்று நமது பெருமைகளை இந்த நாவை கொண்டு பேசிக் கொண்டிருக்கிறோமா..??யோசித்துப் பாருங்கள்...!

 

அல்லது வீணான பேச்சுக்கள், தடுக்கப்பட்ட பேச்சுகள், நம்முடைய வாழ்க்கையின் நன்மைகளை பாழக்கக்கூடிய பேச்சுக்கள். எந்த பேச்சுகள், நாளை மறுமையிலே மிகப்பெரிய ஒரு தீமையாக,  தண்டனையாக நமக்கு அமைந்து விடுமோ, அப்படிப்பட்ட பேச்சுக்களை தான் இந்த நாவை கொண்டு பேசுகிறோம்.

 

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள், முஆத் இப்னு ஜபல் (ரலி) அவர்களுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டே இருக்கிறார்கள். எல்லா அறிவுரைகளையும் அவர்களுக்கு தேவையானவற்றை கூறியதற்கு பிறகு கடைசியாக சொல்கிறார்கள்,

ثُمَّ قَالَ:"أَلا أُخْبِرُكَ بِمِلاكِ ذَلِكَ؟"، قُلْتُ: بَلَى، يَا رَسُولَ اللَّهِ، قَالَ: فَأَخَذَ بِلِسَانِهِ، فَقَالَ:"اكْفُفْ عَلَيْكَ هَذَا"، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، وَإِنَّا لَمُؤَاخَذُونَ بِمَا نَتَكَلَّمُ بِهِ؟ قَالَ:"ثَكِلَتْكَ أُمُّكَ يَا مُعَاذُ، وَهَلْ يَكُبُّ النَّاسَ عَلَى وُجُوهِهِمْ أَوْ قَالَ: مَنَاخِرِهِمْ فِي النَّارِ إِلا حَصَائِدُ أَلْسِنَتِهِمْ؟".)المعجم الكبير للطبراني-16689 (

மூஆதே..! இந்த எல்லா வணக்க வழிபாடுகளுக்கும் ஒரு சாரம்சமாக

ஒரு வணக்கத்தை நான் உனக்கு சொல்லித் தரட்டுமா?என்று கேட்கிறார்கள்..

அதற்கு மூஆது (ரலி)அல்லாஹ்வின் தூதரே கண்டிப்பாக அப்படி ஒரு வணக்கத்தை எனக்கு சொல்லுங்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹ் அவர்கள் வாயால் சொல்லவில்லை, தன்னுடைய நாவை பிடித்துக் காட்டினார்கள். மூஆது (ரலி)பயந்து விட்டார்கள், அல்லாஹ்வின் தூதரே நாங்கள் பேசுகின்ற பேச்சுகளுக்காக எங்களுக்கு தண்டனையா? என்று. நபி ஸல் அவர்கள் சொன்னார்கள், மனிதர்களை நாளை மறுமையிலே,முகம் குப்பற நரகத்தில் தள்ளக்கூடியது, அவர்கள் நாவுகள் பேசிய பேச்சுகளை தவிர வேறு எதுவாக இருக்க முடியும்.

 

அறிவிப்பாளர்: முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹுஅன்ஹு, நூல்: தப்ரானி எண்: 16689

 

எத்தனை பேச்சுகள், அல்லாஹ்வை அதிருப்தி பட செய்துவிடுகின்றன. எத்தனை பேச்சுகள் அடியார்களின் கண்ணியங்களை கரைபடிய வைத்து விடுகின்றன. எத்தனை பேச்சுகளை கொண்டு மனிதர்களின் மான, மரியாதைகளை கலங்கப்படுத்தி விடுகின்றோம்.எத்தனை பேச்சுகளை கொண்டு அவதூறு சொல்லி விடுகின்றோம்,எத்தனை பேச்சுகளிலே புறம் பேசிவிடுகின்றோம்.. அல்லாஹ் பாதுகாப்பானாக!

 

கண்ணியத்திற்குரியவா்களே! இப்படிப்பட்ட ஒரு நாவை அல்லாஹு சுப்ஹானஹுதஆலா அவனுடைய வணக்க வழிபாட்டிலே திக்ர் என்ற உயர்ந்த ஒரு வணக்க வழிபாட்டிலே, அல்லாஹு ரப்புல் ஆலமின் இந்த ஹஐ்ஜிலே பழக்கப்படுத்தி வாழ்நாளெல்லாம் அல்லாஹ்வை நினைவு கூா்ந்தவனாக நீ இரு என்பதற்கு உண்டான பயிற்சியை இந்த ஹஐ்ஜிலே தருகின்றான் சகோதரர்களே..!

 

இந்த பயிற்சியின் மூலமாக அடியான் வாழ்க்கையிலே என்ன செய்தாலும், எங்கு சென்றாலும் குறிப்பிட்ட சில நேரங்களை தவிர, எல்லா நேரங்களிலும்,

ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதரை பற்றி எப்படி சொன்னார்கள்,

عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَذْكُرُ اللَّهَ عَلَى كُلِّ أَحْيَانِهِ (صحيح مسلم -558 )

நபியவா்கள் தங்களது எல்லா நேரங்களிலும் அல்லாஹ்வை நினைவு கூறுபவா்களாக இருந்தார்கள்.

 

நூல்: முஸ்லிம்: 558

என்றுசொல்வதைபோன்று, நம்முடையவாழ்க்கையிலேஅல்லாஹ்வுடையநினைவுஉள்ளத்தில்பசுமையாகஇருக்கவேண்டும்.

 

அபுதர் (ரலி) அவர்கள் நபி ஸல்லல்லாஹு அவர்களிடம் கேட்கிறார்கள், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு நீங்கள் ஒரு நஸிஹத் செய்யுங்கள் என்று. நபியவர்கள் சொல்கிறார்கள்;

 

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُسْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ اللَّهِ إِنَّ شَرَائِعَ الْإِسْلَامِ قَدْ كَثُرَتْ عَلَيَّ فَأَخْبِرْنِي بِشَيْءٍ أَتَشَبَّثُ بِهِ قَالَ لَا يَزَالُ لِسَانُكَ رَطْبًا مِنْ ذِكْرِ اللَّهِ (سنن الترمذي 3297 )

உனதுநாவுஅல்லாஹ்வுடையதிக்ரிலேகாயாமல்பசுமையாகஇருக்கட்டும்.

 

நூல்: ஐாமிவுத் திர்மிதீ 3297

 

அந்ததிக்ருடையவணக்கவழிபாடுஇந்தஹஐ்ஜிலேநமக்குஅதற்காகபயிற்சிகொடுக்கப்பட்டு, வாழ்க்கையெல்லாம்அல்லாஹ்வுடையதிக்ரிலேவாழ்வதற்குஉண்டானஒருதர்பியத்இந்தஹஐ்ஜிலேகொடுக்கப்படுகின்றதுசகோதரர்களே.

 

அது போன்று நம்முடைய வாழ்க்கையிலே, நம்முடைய தொழுகையிலே  எந்த ஒரு கிப்லாவை முன்னோக்கி நாம் ஐந்து நேரத் தொழுகைகளை தொழவேண்டுமோ,நம்முடைய எல்லாத் தொழுகைகளையும் அந்த கிப்லாவின் திசையை நோக்கி நாம் தொழ வேண்டுமோ, அந்த கிப்லாவோடு நமக்கு ஒரு இணைப்பை அல்லாஹு ரப்புல் ஆலமீன் ஏற்படுத்துகின்றான்.

 

எந்த கிப்லாவை முன்னோக்கி நீங்கள் தொழுதீர்களோ,அந்த கிப்லாவை இப்போது நேரடியாக பார்த்து வாருங்கள்,அந்த கஅபாவை பார்த்து உங்களுடைய ஈமானிய உணர்வுகளை நீங்கள் மேம்படுத்துங்கள்.

 

ஆம் சகோதர்களே...உண்மையான முஃமின்கள், முஸ்லிம்களுடைய நிலைகளை நாம் அங்கே கேட்கிறோம், அங்கே நாம் அவர்களிடத்திலே பார்க்கிறோம்.

 

எல்லோருடைய விருப்பம் என்ன? அந்த காபாவிற்கு எவ்வளவு அருகிலே நான் செல்ல முடியும், தொழுகையிலே எவ்வளவு அருகிலே செல்ல முடியும், தவாஃபிலே எவ்வளவு அருகில் செல்ல முடியும், துஆ கேட்கும் போது அந்த கஅபாவிற்கு எவ்வளவு அருகில் நாம் செல்ல முடியும்.

 

இப்படிப்பட்ட ஒரு எண்ணம் ஹஜ்ஜுக்கு செல்லக்கூடிய ஒவ்வொரு குழந்தையிலிருந்து முதியவர் வரை, அந்தக் கூட்டத்திற்கு நுழையவே முடியாது என்ற ஒரு நிலை இருந்தாலும், எவ்வளவு முடியுமோ நான் அதற்கு அருகிலே சென்று விட மாட்டேனா... நான் அதற்கு அருகிலே நின்று இரண்டு ரக்ஆத் தொழுவதற்கு உண்டான வாய்ப்பு கிடைக்காதா, என்ற ஏக்கம் அங்கே அவர்களுக்கு இருப்பதை பார்க்கும் பொழுது அல்லாஹு ரப்புல் ஆலமீன் ஒரு முஃமினுடைய உள்ளத்தை அந்த கஅபாவோடு தொடர்புபடுத்த விரும்புகிறான்;ஏன்? அது அல்லாஹ்வுடைய வீடு,

فَلْيَعْبُدُوا رَبَّ هَٰذَا الْبَيْتِ

இந்த வீட்டினுடைய இறைவனை அவர்கள் வணங்க வேண்டும்.)அல்குர்ஆன் 106:3(

 

அல்லாஹ் இந்த வீட்டை கண்ணியப்படுத்தி இருக்கிறான். கண்ணியத்திற்குரிய உலமாக்கள் அந்த ஹஐ், உம்ரா வணக்கத்திலே அவர்கள் செய்த பிரார்த்தனைகளிலே பல பிரார்த்தனைகளை பார்க்கிறோம்.

 

கஅபத்துல்லாவை பார்க்கும்பொழுதே அவர்களுடைய துஆக்களிலே நாம் பார்க்கிறோம். யா அல்லாஹ் இந்த வீட்டுக்கு மேலும் நீ சிறப்பை அதிகப்படுத்து;இந்த வீட்டின் கண்ணியத்தை மேலும் நீ அதிகப்படுத்து;இந்த வீட்டின் மரியாதையை மேலும் நீ அதிகப்படுத்து.

 

என்ன அர்த்தம் அதற்கு?எனது உள்ளத்திலே, என்னுடைய பார்வையிலே, என்னுடைய ஈமானிலே இந்த வீட்டை நான் பார்க்கும் போதெல்லாம் எனக்கு இதனுடைய மதிப்பு வர வேண்டும்.

 

ஆகவே கண்ணியத்திற்குரியவா்களே! இந்த ஹஜ் வணக்க வழிபாட்டின் மூலமாக, அல்லாஹ் நம்மிடத்தில் எதிர்பார்க்கக்கூடிய, விரும்பக்கூடிய அந்த பண்புகளிலே, மாற்றங்களிலே, ஒன்று கஅபத்துல்லாவோடு நமக்கு இருக்கக்கூடிய அந்த தொடா்பு அங்கே பசுமையாக்கப்படுகிறது.

 

அந்த கஅபத்துல்லாவை கண்ணால் பார்ப்பதின் மூலமாக, அங்கே செல்வதின் மூலமாக அல்லாஹ்வுடைய அந்த வீட்டை தரிசிப்பதின் மூலமாக தொழுகையிலே எந்த கிப்லாவை, கஅபாவை முன்னோக்கி நாம் தொழுகிறோமோ அதோடு நமக்கு ஒரு பினைப்பு, ஒரு ஈடுபாடு, முழு மரியாதை அங்கே ஏற்படுத்தப்படுகிறது சகோதரர்களே.

 

அது போன்றுதான் இந்த ஹஜ் வணக்க வழிபாட்டில் அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கின்ற மாபெரும் அருட்கொடைகளிலே ஒன்று இந்த வணக்க வழிபாட்டின் மூலமாக நாம் அடையவேண்டிய அந்த ஆன்மீக உணர்வுகளிலே ஒன்று,இந்த ஹஜ் வணக்க வழிப்பாடு நம்முடைய பாவங்களை போக்கி விடுகிறது.

 

நம்முடைய தவறு, குற்றங்கள், குறைகளுடைய அழுக்குகளை நம்மிடத்தில் இருந்து சுத்தப்படுத்தி விடுகின்றது.

 

அப்படிப்பட்ட ஒரு வணக்கத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் செய்ய வைத்து, பாவ சிந்தனைகளிலிருந்து, பாவ எண்ணங்களிலிருந்து, நாம் பிறந்ததிலிருந்து வாழ்நாளிலே சுமந்திருக்கக்கூடிய நம்முடைய பாவச்சுமைகள், பாவகறைகளிலிருந்து விடுபட்டு விட்டோம், இனி ஒரு புதிய தூய்மையான ஒரு வாழ்க்கையை தொடங்குவோம்.

 

அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு பணிந்து வாழக்கூடிய ஒரு ஹலாலான

முஸ்லிமுடைய வாழ்க்கையைத் தொடங்குவோம் என்ற ஈமானிய உணர்வை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த ஹஐ்ஜிலே ஏற்படுத்துகின்றான்.

 

அல்லாஹ்வின் தூதர் நபி(ஸல்) அவர்கள் கூறிய ஒரு அறிவிப்பை பார்க்கிறோம், அம்ர் இப்னு ஆஸ்(ரலி), ரசூலுல்லாஹ் விடத்திலே இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள வருகிறார்கள். நபியவர்கள் பல விளக்கங்களை சொல்லி தனது கையை நீட்டி அவருக்கு ஷஹாதா சொல்லித் தர விரும்பிய போது,அம்ர் இப்னு ஆஸ் அந்த கரத்தை மடக்கிக்கொண்டு கேட்கிறார்கள், அல்லாஹ்வின் தூதரே, வாழ்க்கையிலே பல பெரும் பாவங்களை நான் செய்திருக்கின்றேனே, அவற்றுடைய நிலைமையெல்லாம் என்னவாகும்? அவற்றைப் பற்றி மறுமையிலே என்னுடைய நிலை என்ன? என்று கேட்டபோது, அல்லாஹ்வின் தூதர் நபி )ஸல்(அவர்கள் அம்ரே!

أَمَا عَلِمْتَ أَنَّ الْإِسْلَامَ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ وَأَنَّ الْهِجْرَةَ تَهْدِمُ مَا كَانَ قَبْلِهَا وَأَنَّ الْحَجَّ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ

உமக்குதெரியாதா.. ஒருவா்இஸ்லாமைஏற்றுக்கொள்ளும்பொழுதுஅந்தஇஸ்லாம்அவருடையமுந்தியபாவங்களையெல்லாம்தரைமட்டமாக்கிவிடுகிறது.

இஸ்லாத்திற்காக வேண்டி தனது ஊரை விட்டு விட்டு இஸ்லாமை பேணுவதற்கு சுதந்திரம் உள்ள ஒரு ஊருக்கு செல்லும் பொழுது அந்த ஊரிலே அவர் குடியேற விரும்பும் பொழுது அந்த ஹிஐ்ரா அவருடைய முந்திய பாவங்களை மன்னித்து விடுகிறது. ஹஐ் வணக்கம் அவருடைய முந்திய பாவங்களை மன்னித்து விடுகிறது. அந்த பாவ உணர்வுகளை அல்லாஹு ரப்புல் ஆலமீன் நம்முடைய எண்ணங்களிலிருந்து எடுத்துவிடுகிறான்.

 

நூல்: முஸ்லிம் 173

 

ஏனென்றால், நாம் குற்றம் செய்து விட்டோம் என்ற சுமை இருக்கிறதே, சில நேரங்களிலே அல்லாஹ்விடமிருந்து நம்மை தூரமாக்க கூடியதாகவும் ஆக்கிவிடலாம்; நிராசையின் பக்கம் கொண்டு சென்றுவிடலாம்.

 

அல்லாஹு ரப்புல் ஆலமீன், உனது பாவங்கள் மன்னிக்கப்பட்டு விட்டது. நீ நிராசை அடைய தேவையில்லை,உனது ரப் உன்னை மன்னித்து விட்டான் என்று அடியானுக்கு அல்லாஹ் இந்த ஹஜ் வணக்கத்தின் மூலமாக ஆறுதல் சொல்கிறான்.

 

இதை அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) அவர்கள், மேலும் நாம் புரிவதற்கு எப்படி சொல்கிறார்கள் பாருங்கள், இமாம் புகாரி,இமாம் முஸ்லிம் அறிவிப்பு செய்கிறார்கள்;

قَالَ سَمِعْتُ أَبَا حَازِمٍ قَالَ سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَسَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ حَجَّ لِلَّهِ فَلَمْ يَرْفُثْ وَلَمْ يَفْسُقْ رَجَعَ كَيَوْمِ وَلَدَتْهُ أُمُّهُ(صحيح البخاري -1424 )

ஹஐ் செய்து அசிங்கமான, ஆபாசமான, இச்சையான பேச்சுகளை பேசாமல், பாவங்களைச் செய்யாமல் திரும்பக்கூடியவர் தன்னுடைய தாய் பெற்றெடுத்த தினத்திலே எப்படி இருப்பாரோ அதுபோன்று அவர் திரும்புகிறார்.

 

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல்: புகாரி,எண்: 1424

عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سُئِلَ أَيُّ الْعَمَلِ أَفْضَلُ فَقَالَ إِيمَانٌ بِاللَّهِ وَرَسُولِهِ قِيلَ ثُمَّ مَاذَا قَالَ الْجِهَادُ فِي سَبِيلِ اللَّهِ قِيلَ ثُمَّ مَاذَا قَالَ حَجٌّ مَبْرُورٌ (صحيح البخاري- 25)

ரசூல்(ஸல்)அவர்களிடத்திலேகேட்கப்படுகிறது, அல்லாஹ்வுடையதூதரே!அமல்களிலேசிறந்தஅமல்எதுஎன்பதாக?நபியவர்கள்சொல்கிறார்கள், அல்லாஹ்வைநம்பிக்கைகொள்வது, அவனுடையதூதரைநம்பிக்கைகொள்வது, பிறகுஎதுயாரசூலல்லாஹ்? ரசூல்(ஸல்) அவர்கள்சொல்கிறார்கள், அல்லாஹ்வுடையபாதையிலேஜிஹாத்செய்வது, பிறகுஎதுஎன்றுகேட்கப்படுகின்றது, சொல்கின்றார்கள், நன்மைகள்நிறைந்தஹஐ்என்றுசொல்கிறார்கள்.

 

அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல்: புகாரி, எண்: 25

 

இப்படிப்பட்ட ஒரு வணக்கத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் முஃமினுக்கு கொடுத்து, அவருடைய ஈமானுக்கு, அவனுக்கு உள்ளத்திற்கு ஆறுதலை தருகிறான். இப்படிப்பட்ட இபாதத்தை செய்வதற்கு அல்லாஹ் உனக்கு அருள் புரிந்திருக்கும்போது நீ ஏன் நிராசை அடைய வேண்டும்? அல்லாஹ்வுடைய ரஹ்மத்துக்கு நீ உரித்தானவனாய் இருக்கிறாய்,அல்லாஹ்வுடைய வீட்டுக்கு வருவதற்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களிலே நீ இருக்கின்றாய், எனக்கு முன்னால் வந்து தல்பியா சொல்வதற்குண்டான தவ்ஃபீக் கொடுக்கப்பட்டவனாகநீ இருக்கின்றாய்.

 

எனவே மேலும் அந்த அல்லாஹ்வை நேசிக்க கூடியவனாக இரு;மேலும் அந்த அல்லாஹ்வின் மீது ஆதரவு வைக்க கூடியவனாக இரு;மேலும் நன்மைகளை கொண்டு அல்லாஹ்வை நெருங்க கூடியவனாக இரு;என்ற அந்த ஈமானிய உணர்வை ஏற்படுத்துகின்றான்.

 

عَنْ عَائِشَةَ أُمِّ الْمُؤْمِنِينَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا قَالَتْيَا رَسُولَ اللَّهِ نَرَى الْجِهَادَ أَفْضَلَ الْعَمَلِ أَفَلَا نُجَاهِدُ قَالَ لَا لَكِنَّ أَفْضَلَ الْجِهَادِ حَجٌّ مَبْرُورٌ (صحيح البخاري 1423 -)

ரசூலுல்லாஹிஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம்அவர்களிடத்திலேஆயிஷா(ரலி) அவர்கள்கேட்கிறார்கள், அல்லாஹ்வுடையதூதரே! ஐிஹாதைதான்அமல்களிலேபெரியஅமலாகநாங்கள்  கருதுகிறோம்என்று, ஆயிஷா(ரலி) அவர்கள், ரசூலுல்லாஹ்விடத்திலே, கேள்விதொடுக்கும்  விதமாககேட்டபோது, அதாவதுநாங்கள்எண்ணுவதுசரிதானாஎன்றுகேட்டபோது, அல்லாஹ்வுடையதூதர்ஸல்லல்லாஹு  அவர்கள்சொன்னார்கள்,

 

ஆயிஷாவே! குறிப்பாக, ஆயிஷா(ரலி)பெண்களைபற்றிகேட்கிறார்கள், பெண்களுக்குஐிஹாதைபற்றிகேட்கின்றார்கள், யாரசூலுல்லாஹ்! ஐிஹாத்ஒருசிறந்தவணக்கம்ஆயிற்றே, நாங்கள்பெண்கள்என்பதால்எங்கள்மீதுகடமையாக்கப்படவில்லைஎன்றாலும், நாங்கள்எங்களுடையவிருப்பத்தின்படி, நாங்கள்ஐிஹாத்துக்குசெல்லலாமா? அதற்குநபி(ஸல்) அவர்கள், உங்களுக்குஐிஹாதைபொறுத்தவரையில், சிறந்தஐிஹாத்உங்களுக்குநன்மைகள்நிறைந்தஹஐ்என்று  அல்லாஹ்வுடையதூதர்(ஸல்) அவர்கள்சொல்கிறார்கள்.

 

நூல்: புகாரி 1423

 

ஆகவே கண்ணியத்திற்குரியவர்களே! இப்படிப்பட்ட ஒரு வணக்க வழிபாட்டை அல்லாஹு ரப்புல் ஆலமீன் யாருக்கு அருள் புரிந்தானோ அவர்களுடைய உள்ளத்திலே அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நன்மையான எண்ணங்களை, அல்லாஹ்வின் மீது ஆதரவுடைய எண்ணங்களை, அல்லாஹ்வுடைய ரஹ்மத்திற்கு, அல்லாஹ் என்னை தேர்ந்தெடுத்திருக்கின்றான் எனவே, நான் இனி பாவத்தின் பக்கம் திரும்பி விட கூடாது. அல்லாஹ் அவனுடைய வீட்டிற்கு என்னை அழைத்து விட்டான், இனிமேல் அவனுக்கு மாறு செய்யும் படியான இடங்களுக்கு நான் திரும்ப கூடாது. அல்லாஹ்வை வணங்கி வழிபடக்கூடிய பரிசுத்தமான இடத்திற்கு அல்லாஹு ரப்புல் ஆலமீன் என்னை கொண்டு வந்து,எனது கண்ணை, எனது காலை, எனது உடல் உறுப்புகள் அனைத்தையும் அவனுக்கு வழிபாடு செய்வதிலே ஈடு படுத்தி விட்டான்.

 

இனிமேல் இந்த உறுப்புகளை கொண்டு அல்லாஹ்விற்கு மாறு செய்யக் கூடிய காரியங்களிலே நான் ஈடுபட மாட்டேன். அல்லாஹ்விற்கு மாறுபாடு செய்யக்கூடிய பாவங்களிலே, ஷைத்தான்களுடையஇடங்களுக்கு நான் செல்ல மாட்டேன் என்று ஈமானிய உணர்வை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் ஒரு ஹாஐிக்கு,ஒரு உம்ரா பயணிக்கு கொடுத்து அவருடைய உள்ளத்திலே ஒரு பரிசுத்தமான எண்ணத்தை ஏற்படுத்துகின்றான்.

 

மேலும் கண்ணியத்திற்குரியவர்களே! இந்த ஹஜ் வணக்க வழிபாட்டிலே, இப்ராஹிம் (அலை) அல்லாஹ்வின் நண்பரை நாம் நினைவு கூறுகிறோம். அவர்கள் உருவாக்கிய இந்த பட்டணத்திலே தங்கி, அவர்கள் கட்டிய அந்த கஅபாவை நாம் பார்க்கின்றோம். அவர்களும் அவர்களுடைய மகனாரும் அல்லாஹ்வுடைய வீட்டை கட்டி எழுப்பினார்களே, என்று அல்லாஹ் சொல்லக்கூடிய அந்த வசனங்களை சிந்தித்துப் பார்த்து அந்த வீட்டை பார்க்கும் பொழுது, இப்ராஹீம் நபியுடைய நினைவு வருகிறது, இஸ்மாயில் நபியுடைய நினைவு வருகிறது, எத்தனையோ ஆயிரம் வருடங்களுக்கு முன்னால் நாம் சென்று விடுகிறோம்.

 

அன்னை ஹாஐரா (அலை)இந்த ஸஃபா,மர்வா மலைகளுக்கு இடையில்  தானே தனக்கும், தன் குழந்தைக்கும் தண்ணீர் தேடி அலைந்தார்கள், அந்த அலைச்சலை அவர்களுடைய அந்த சிரமத்தை பார்த்து அல்லாஹு ரப்புல் ஆலமின் இரக்கம் கொண்டவன், உலக மக்களுக்கு எல்லாம் ஒரு படிப்பினையாக இருக்க வேண்டுமென்று அதையே ஒரு ஃபா்ளான இபாதத்தாக ஆக்கிவிட்டானே என்று நினைவு கூறும் பொழுது, அந்த குடும்பத்தார் அல்லாஹ்விற்கு எப்படிப்பட்ட தியாகம் செய்தார்கள். நாம் எப்படி அல்லாஹ்வுடைய அந்த மார்க்க விஷயங்களை நிறைவேற்றுவதிலே எப்படிப்பட்ட தியாகங்களை செய்ய வேண்டுமென்ற தியாக உணர்வை நம்முடைய உள்ளத்திலே ஏற்படுத்த வேண்டும் என்பதும் ஹஜ்ஜுடைய தாத்பரியங்களிலே மிக முக்கியமான ஒன்று

 

மேலும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்கள், இந்த மக்காவிலே தானே பிறந்தார்கள், இங்கே தானே வளர்ந்தார்கள், ரசூல் ஸல்லல்லாஹுஅலைஹிவஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை, அபூபக்கர் (ரலி), உமர் (ரலி), உஸ்மான் (ரலி), அலி(ரலி) போன்ற பெரிய ஸஹாபாக்களுடைய வாழ்க்கை, இன்னொருபக்கம் எந்த ஒரு மூத்த சமுதாயம் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதற்காக வேண்டி துன்புறுத்தப்பட்டார்களோ, அடிக்கப்பட்டார்களோ, அந்த ஊரும் இந்த ஊர் தானே,

 

எப்படிப்பட்டதியாகங்களைநம்முடையமூத்தசமுதாயம்செய்திருக்கிறதுஎன்றுசிந்தித்துப்பார்க்கக்கூடியஒருஎதார்த்தமானஒருஉணர்வுகளை, அல்லாஹுரப்புல்ஆலமீன்அங்கேகொண்டுவந்து, ஒவ்வொருமுஸ்லிமுடையஉள்ளத்திலும்இஸ்லாமுடைய, ஈமானுடையமதிப்புமரியாதையைஅதற்காகநாம்எதையும்அர்ப்பணம்செய்ய,நான்உலகத்தினுடையஎதைவேண்டுமானாலும்இழக்கதயாராகுவேன்.

 

ஆனால் என்னுடைய இஸ்லாமை, என்னுடைய ஈமானை அல்லாஹ்வின் மீது படைத்தவனின் மீது எனக்கு இருக்கக்கூடிய நம்பிக்கையை அவன் மீது நான் வைத்திருக்கக்கூடிய அந்த தவக்குளை, ஆதரவை நான் இழக்க தயாராக மாட்டேன் என்ற அந்த ஈமானிய உணர்வை ஹஐ்ஜிலே கொண்டுவர வேண்டும், அது ஹஐ்ஐுடைய நோக்கங்களிலே முக்கியமான ஒன்று சகோதரர்களே!

 

நாம் பார்க்கின்றோம், நம்முடைய மூத்த மார்க்க அறிஞர்கள், தாபியீன்கள் காலத்திலிருந்து இன்று வரை ஹஐ்ஐுக்கு செல்லக்கூடிய எல்லோரும், அந்த ஹஐ்ஐிலிருந்து திரும்பியதற்குப் பிறகு, அவர்கள் தங்களுடைய ஹஐ் உணர்வுகளை பற்றி, அந்த ஹஐ்ஜிலே அவர்கள் படித்த பாடங்கள், படிப்பினைகளைப் பற்றி நூல்களாக எழுதி இருக்கின்றார்கள்.

 

அவற்றிலே மிகப் பெரிய ஒரு விஷயமாக அவர்கள் என்ன குறிப்பிடுகின்றார்கள், அங்கே சென்றதற்கு பிறகு, அவர்களுக்கு ஏற்பட்ட அந்த ஈமானிய உணர்வுகள், இக்லாஸ், மனத்தூய்மை, அல்லாஹ்வின் மீது அன்பு, பயம், அந்த வீட்டின் மீது அவர்களுக்கு ஏற்பட்ட அந்த ஈடுபாடு இது கண்ணியத்திற்குரியவர்களே! நமதுஈமானை பசுமையாக வைத்திருக்கிறது;நம்முடைய உள்ளத்திலே அல்லாஹ்வுடைய அன்பைத் ஏற்படுத்துகிறது;அல்லாஹ்வின் அன்பிலே நமக்கு அதிகத்தை ஏற்படுத்துகிறது.

 

இப்படிப்பட்ட உணர்வுகளோடு நாம் அல்லாஹ்வின் வீடாகிய கஅபாவிற்கு ஹஜ் செய்ய செல்ல வேண்டும். ஏதோ செல்வம் கிடைத்துவிட்டது, அனுப்பி வைத்தார்கள் என்பதற்காக அல்ல, அல்லாஹ்வை வணங்கி அவனுடைய அடியானாக சென்று, அவனுடைய அடியானாக திரும்பி வரப் போகிறேன். அங்கே அல்லாஹ்வை வணங்கியதை போன்று உலகத்தின் எல்லா இடங்களிலும் அல்லாஹ்வை நான் வணங்குவேன்.

 

அல்லாஹ்விற்கு அங்கே இணை வைக்காததை போன்று நான் எங்கிருந்தாலும் இணை வைக்க மாட்டேன்.

 

அல்லாஹ்வையே பெருமை பேசி, அல்லாஹ்வையே புகழ்ந்து கொண்டிருந்தது  போன்று நான் எங்கிருந்தாலும் அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பேன்.

 

அல்லாஹ்வின் பெருமைகளை சொல்லுவேன், அல்லாஹ்வின் பக்கம் அல்லாஹ்வுடைய  அடியார்களை அழைப்பேன்.

 

நான்அல்லாஹ்விடத்திலேஅங்கேசென்றுதுஆகேட்டதுபோன்று,  என்னுடையவாழ்நாளெல்லாம், எனக்குஎன்னதேவைஏற்பட்டாலும்என்னுடையரப்பிடத்திலேகேட்பேன்.

 

என்னுடைய ரப் என்னைக் கைவிட மாட்டான்;என்னுடைய ரப், அவனுடைய ரஹ்மத்திலே என்னை அழைத்ததற்கு பிறகு, அவனுடைய வீட்டிற்கு என்னை அழைத்ததற்கு பிறகு, அவன் என்னை அவனுடைய கருணையிலிருந்து நிராசையாக்கமாட்டான்;தூரமாக்க மாட்டான் என்று அல்லாஹ்வின் மீது ஆதரவோடு வணக்க வழிபாட்டிலே அதிகம் ஈடுபட வேண்டும். இதுதான் கண்ணியத்திற்குரியவா்களே! ஹஜ் உம்ராவுடைய அடிப்படை நோக்கங்களிலே சிலவை.

 

அல்லாஹு சுப்ஹானஹுதஆலா அவனுடைய வணக்க வழிபாடுகளை புரிந்து, அறிந்து தெளிவான விளக்கங்களோடு செய்து அந்த ஈமானில் நல்ல உணர்வுகளை பெறக்கூடிய நன்மக்களாக நம்மை ஆக்கி வைப்பானாக!

 

ஆமீன்

 

குறிப்புகள் :

குறிப்பு 1).

و حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ سَعِيدٍ عَنْ حَاتِمِ بْنِ أَبِي صَغِيرَةَ حَدَّثَنِي ابْنُ أَبِي مُلَيْكَةَ عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ يُحْشَرُ النَّاسُ يَوْمَ الْقِيَامَةِ حُفَاةً عُرَاةً غُرْلًا قُلْتُ يَا رَسُولَ اللَّهِ النِّسَاءُ وَالرِّجَالُ جَمِيعًا يَنْظُرُ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا عَائِشَةُ الْأَمْرُ أَشَدُّ مِنْ أَنْ يَنْظُرَ بَعْضُهُمْ إِلَى بَعْضٍ (صحيح مسلم5102 - )

குறிப்பு 2).

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى الْعَنَزِيُّ وَأَبُو مَعْنٍ الرَّقَاشِيُّ وَإِسْحَقُ بْنُ مَنْصُورٍ كُلُّهُمْ عَنْ أَبِي عَاصِمٍ وَاللَّفْظُ لِابْنِ الْمُثَنَّى حَدَّثَنَا الضَّحَّاكُ يَعْنِي أَبَا عَاصِمٍ قَالَ أَخْبَرَنَا حَيْوَةُ بْنُ شُرَيْحٍ قَالَ حَدَّثَنِي يَزِيدُ بْنُ أَبِي حَبِيبٍ عَنْ ابْنِ شِمَاسَةَ الْمَهْرِيِّ قَالَ حَضَرْنَا عَمْرَو بْنَ الْعَاصِ وَهُوَ فِي سِيَاقَةِ الْمَوْتِ فَبَكَى طَوِيلًا وَحَوَّلَ وَجْهَهُ إِلَى الْجِدَارِ فَجَعَلَ ابْنُهُ يَقُولُ يَا أَبَتَاهُ أَمَا بَشَّرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَذَا أَمَا بَشَّرَكَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَذَا قَالَ فَأَقْبَلَ بِوَجْهِهِ فَقَالَ إِنَّ أَفْضَلَ مَا نُعِدُّ شَهَادَةُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ إِنِّي كُنْتُ عَلَى أَطْبَاقٍ ثَلَاثٍ لَقَدْ رَأَيْتُنِي وَمَا أَحَدٌ أَشَدَّ بُغْضًا لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنِّي وَلَا أَحَبَّ إِلَيَّ أَنْ أَكُونَ قَدْ اسْتَمْكَنْتُ مِنْهُ فَقَتَلْتُهُ فَلَوْ مُتُّ عَلَى تِلْكَ الْحَالِ لَكُنْتُ مِنْ أَهْلِ النَّارِ فَلَمَّا جَعَلَ اللَّهُ الْإِسْلَامَ فِي قَلْبِي أَتَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْتُ ابْسُطْ يَمِينَكَ فَلْأُبَايِعْكَ فَبَسَطَ يَمِينَهُ قَالَ فَقَبَضْتُ يَدِي قَالَ مَا لَكَ يَا عَمْرُو قَالَ قُلْتُ أَرَدْتُ أَنْ أَشْتَرِطَ قَالَ تَشْتَرِطُ بِمَاذَا قُلْتُ أَنْ يُغْفَرَ لِي قَالَ أَمَا عَلِمْتَ أَنَّ الْإِسْلَامَ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ وَأَنَّ الْهِجْرَةَ تَهْدِمُ مَا كَانَ قَبْلِهَا وَأَنَّ الْحَجَّ يَهْدِمُ مَا كَانَ قَبْلَهُ وَمَا كَانَ أَحَدٌ أَحَبَّ إِلَيَّ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا أَجَلَّ فِي عَيْنِي مِنْهُ وَمَا كُنْتُ أُطِيقُ أَنْ أَمْلَأَ عَيْنَيَّ مِنْهُ إِجْلَالًا لَهُ وَلَوْ سُئِلْتُ أَنْ أَصِفَهُ مَا أَطَقْتُ لِأَنِّي لَمْ أَكُنْ أَمْلَأُ عَيْنَيَّ مِنْهُ وَلَوْ مُتُّ عَلَى تِلْكَ الْحَالِ لَرَجَوْتُ أَنْ أَكُونَ مِنْ أَهْلِ الْجَنَّةِ ثُمَّ وَلِينَا أَشْيَاءَ مَا أَدْرِي مَا حَالِي فِيهَا فَإِذَا أَنَا مُتُّ فَلَا تَصْحَبْنِي نَائِحَةٌ وَلَا نَارٌ فَإِذَا دَفَنْتُمُونِي فَشُنُّوا عَلَيَّ التُّرَابَ شَنًّا ثُمَّ أَقِيمُوا حَوْلَ قَبْرِي قَدْرَ مَا تُنْحَرُ جَزُورٌ وَيُقْسَمُ لَحْمُهَا حَتَّى أَسْتَأْنِسَ بِكُمْ وَأَنْظُرَ مَاذَا أُرَاجِعُ بِهِ رُسُلَ رَبِّي (صحيح مسلم- 173)

 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/