HOME      Khutba      பயணத்திற்கு தயாராகுவோம் | Tamil Bayan - 356   
 

பயணத்திற்கு தயாராகுவோம் | Tamil Bayan - 356

           

பயணத்திற்கு தயாராகுவோம் | Tamil Bayan - 356


பயணத்திற்கு தயாராகுவோம்

ஜுமுஆ குத்பா தலைப்பு : பயணத்திற்கு தயாராகுவோம்

வரிசை : 356

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 03-06-2015 | 16-08-1436

بسم الله الرحمن الرّحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்த பின், அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் அவர்கள் மீதும், அன்னாரின் குடும்பத்தார் மீதும், தோழர்கள் மீதும் ஸலவாத்தும்ஸலாமும் கூறிய பிறகு, அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுமாறு, அல்லாஹ்வின் அச்சத்தைஅல்லாஹ்வின் பயத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக ஆரம்பம் செய்கிறேன்.

ஒரு உண்மையான முஃமின்,இரண்டு விஷயங்களை அவன் தனது மனதில் உறுதிப்படுத்திக்கொள்ள வேண்டும்.அதற்கேற்ப அவன் தன்னுடைய செயல்பாட்டை அமைத்துக் கொள்ள வேண்டும்.

முதலாவதாக,என்னை படைத்தவன், என்னை வளர்ப்பவன், என்னை பரிபாளிப்பவன், என் தேவைகளை நிறைவேற்றுபவன், இல்லாமையிலிருந்து உள்ளமைக்கு என்னை கொண்டு வந்தவன், மீண்டும் எனக்கு மரணத்தை கொடுத்து தன் பக்கம் என்னை மீட்பவன் எனது ரப்பாகிய அல்லாஹ்.

அவன்தான் உண்மையான அரசன், அவன் தான் நன்மைக்கு நற்கூலியும், பாவத்திற்கு தண்டனையும்கொடுப்பதற்கு ஆற்றலுடையவன்.

அவனுடைய பார்வையிலிருந்து எதுவும் தப்ப முடியாது;அவனுடைய பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது; அவன் அனைவரையும் சூழ்ந்து இருக்கின்றான்; அனைவரையும் அவன் பார்க்கின்றான்; அனைத்தையும் அவன் கேட்கின்றான்.

அவனுடைய ஆற்றல் மனித கற்பனைக்கு அப்பாற்பட்டது.அவனுடைய வல்லமை இப்பிரபஞ்சத்தில் அவன் படைத்த எல்லா படைப்புகளுடைய வல்லமைகளுக்கும்  மேலானது.

பிரபஞ்சத்தின் எல்லா படைப்புகளும் ஒன்று சேர்ந்து தனக்கு கொடுக்கப்பட்ட வல்லமையை பயன்படுத்தினாலும் அல்லாஹ்வுடைய வல்லமை அனைவருடைய வல்லமையையும் மிஞ்சியது, அதற்கும் மேலானது.

என்னை படைத்த இறைவன் நன்மைகளை விரும்புகின்றான், தீமைகளை வெறுக்கின்றான், நற்செயல்களை அங்கீகரிக்கின்றான், பாவங்களை; குற்றங்களை அவன் வெறுக்கின்றான், நல்லவர்களை அவன் நேசிக்கிறான், பாவிகளை; குற்றவாளிகளை வெறுக்கின்றான்.

அவனை திருப்திப்படுத்துவதுதான்,நான் இந்த உலகத்தில் படைக்கப்பட்ட எனது படைப்பினுடைய நோக்கம்.

நான் இந்த உலகத்திற்கு வந்திருப்பது,என்னை படைத்த இறைவனாகிய அல்லாஹ்வை திருப்திப்படுத்தி,அவனுடைய நெருக்கத்தைஅவனுடைய அன்பை, அவனுடைய பாசத்தை பெற்றவனாக நான் அவனிடத்தில் செல்ல வேண்டும் என்ற இந்த உறுதி முதலாவதாக ஒவ்வொரு முஃமின்களிடத்திலும் இருந்தாக வேண்டும்.

அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளக் கூடிய அடியானிடத்தில், நான் என் இறைவனிடம் திரும்பிச் செல்ல வேண்டும்; அவனைத் திருப்தி படுத்தியவனாக செல்ல வேண்டும்;அவனுக்கு நன்றி உள்ளவனாக செல்ல வேண்டும்;அவன் அங்கீகரிக்கப் பட்டவனாக செல்ல வேண்டும்;அவனுடைய அருள் பெற்றவனாக செல்ல வேண்டும் என்ற ஒரு மன உறுதி இருக்க வேண்டும்.

நான் என் ரப்பை சந்திக்கும்போது,என் ரப்பு என் மீது திருப்தி கொண்டவனாக இருக்கவேண்டும், என் ரப்பு அதிருப்தி கொண்ட நிலையில் என் மீது வெறுப்பாக இருக்கும் நிலையில்எனக்கு அந்த சந்திப்பு ஏற்பட்டு விடக்கூடாது என்ற ஒரு உறுதி ஒவ்வொரு முஸ்லிமின் ஆழ் மனதில் மிகத் தெளிவாக பதிவு செய்யப்பட்டு, அதற்கேற்ப தனது செயல்பாடுகளை, தனது ஒழுக்கங்களை, தன்னுடைய உலகமறுமை காரியங்கள் அனைத்தையும் அவன் செயல்படுத்திகக் கொள்ள வேண்டும்; ஆக்கிக் கொள்ள வேண்டும். இதுவும் முக்கியமான ஒரு விஷயம்.

இரண்டாவதாக,இந்த உலகம்,இந்த உலகத்தின் இன்பங்கள், இந்த உலகத்தின் சொத்து, சுகங்கள்,நானும் இதை விட்டுவிட்டு சென்று விடுவேன்,இந்த செல்வமும் என்னை விட்டு விட்டு பிரிந்து விடும்,இதுவும் எனக்கு நிரந்தரமல்ல,நானும் நிரந்தரமானவன் இல்லை,  எனக்கு முன்னால் வந்த யாரும் இதில் நிரந்தரமாக இருக்கவில்லை, இந்த உலகம் அழியக் கூடியது, இந்த உலகத்தில் உள்ள மக்களும் அழியக் கூடியவர்கள்.

அல்லாஹ் கூறுகின்றான் :

كُلُّ شَيْءٍ هَالِكٌ إِلَّا وَجْهَهُ

உலகத்திலுள்ள எல்லாம் அழிய கூடியவையே,அல்லாஹ் ஒருவனைத் தவிர. (அல்குர்ஆன் 28 : 88)

அல்லாஹ்தான் நிலையானவன், அவன் படைத்த மறுமை நிலையானது, சொர்க்கம் நிலையானது, நரகம் நிலையானது.

நான் மறுமையை நோக்கி பயணம் செய்கிறேன்;எனது செயல்களுக்கு மறுமையில் கூலி உண்டு.

فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ (7) وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ

யார் ஒருவர்,ஒரு அணுவளவு நன்மை செய்தாலும் அதற்கு உரிய கூலியை மறுமையில் அவன் பார்ப்பான்.யார் ஒருவர் ஒரு அணு அளவு தீமை செய்தாலும் அதையும் நாளை மறுமையில் பார்ப்பான். (அல்குர்ஆன் 99 : 7,8)

அல்லாஹ் சொல்கிறான்:

وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ فَلَا تُظْلَمُ نَفْسٌ شَيْئًا وَإِنْ كَانَ مِثْقَالَ حَبَّةٍ مِنْ خَرْدَلٍ أَتَيْنَا بِهَا وَكَفَى بِنَا حَاسِبِينَ

மறுமையில் தராசுகளை நாம் ஏற்படுத்துவோம். (அல்குர்ஆன்21 : 47)

அது நீதமான தராசு. அங்கு அநியாயம் இழைக்கப்படாது, மறதி கிடையாது,கூட்டுதல் குறைத்தல் கிடையாது.

அல்லாஹ் ரப்புல் ஆலமீன் பாரபட்சம் காட்ட மாட்டான். தனது இறைத்தூதர்களாக இருந்தாலும் சரியே, அவர்களுக்கும் அங்கு பொது சட்டம் தான்.

يَوْمَ يَجْمَعُ اللَّهُ الرُّسُلَ فَيَقُولُ مَاذَا أُجِبْتُمْ قَالُوا لَا عِلْمَ لَنَا إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ

(நபியே!) ஒரு நாளில் அல்லாஹ், (தன்) தூதர்களை ஒன்று சேர்த்து ‘‘நீங்கள் எனது தூதை மக்களிடம் எடுத்துரைத்த சமயத்தில்) அவர்கள் உங்களுக்கு என்ன பதில் கூறினார்கள்?'' என்று கேட்பான். அதற்கவர்கள், (‘‘நாங்கள் உயிருடன் இருந்த வரை அவர்களுடைய வெளிக்கோலத்தையே நாங்கள் அறிவோம். அதற்கு மாறாக உள்ளத்தில் உள்ளதையோ, நாங்கள் இறந்தபின் அவர்கள் செய்ததையோ) நாங்கள் அறியமாட்டோம். நிச்சயமாக நீதான் மறைவான அனைத்தையும் நன்கறிந்தவன்'' என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 5 : 109)

விசாரணையில் முதல் விசாரணை, மிக அழுத்தமான விசாரணை, தப்பிக்க முடியாத விசாரணை தூதர்களிடத்திலேயும் கேட்கப்படும்.

فَلَنَسْأَلَنَّ الَّذِينَ أُرْسِلَ إِلَيْهِمْ وَلَنَسْأَلَنَّ الْمُرْسَلِينَ

யாரிடம் தூதர்கள் அனுப்பப் பட்டார்களோ சத்தியமாக அவர்களையும் நாம் விசாரிப்போம். அனுப்பப்பட்ட தூதர்களையும் நாம் விசாரிப்போம்.(அல்குர்ஆன் 7 : 6)

நாளை மறுமையில் ஒவ்வொரு இறைத்தூதர்களிடத்தில் சிபாரிசுக்கு மக்கள் வந்த போது ஒவ்வொரு விஷயத்தையும் கூறி, தான் செய்த ஒவ்வொரு தவறையும் நினைவு கூறி மக்களை அடுத்த தூதரிடம் அனுப்பி கொண்டிருக்கும் போது, அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சொன்னார்கள் :

ஈஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடத்தில் மக்கள் வருவார்கள். அவர் நினைவு கூறுவதற்கு எந்த ஒரு பாவத்தையோ, தவறையோ நினைவு படுத்த மாட்டார்.

அந்த அளவு அல்லாஹ்வுடைய வணக்க வழிபாட்டில், அல்லாஹ்வின் திருப்தி படுத்துவதில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட أُولُو الْعَزْمِ-என்ற வீரமிக்க அல்லாஹ்வின் நெருக்கத்தை உடைய தூதர்களில் ஒருவர்.

ஆனால்,இப்படிப்பட்ட தூதர் கூட நாளை மறுமையில் விசாரிக்கப்படுவார்கள்.அந்த தூதரின் உம்மத் செய்த தவறுக்காக.

அல்லாஹ் சொல்கிறான் :

وَإِذْ قَالَ اللَّهُ يَاعِيسَى ابْنَ مَرْيَمَ أَأَنْتَ قُلْتَ لِلنَّاسِ اتَّخِذُونِي وَأُمِّيَ إِلَهَيْنِ مِنْ دُونِ اللَّهِ قَالَ سُبْحَانَكَ مَا يَكُونُ لِي أَنْ أَقُولَ مَا لَيْسَ لِي بِحَقٍّ إِنْ كُنْتُ قُلْتُهُ فَقَدْ عَلِمْتَهُ تَعْلَمُ مَا فِي نَفْسِي وَلَا أَعْلَمُ مَا فِي نَفْسِكَ إِنَّكَ أَنْتَ عَلَّامُ الْغُيُوبِ

அல்லாஹ் (மறுமை நாளில் ஈஸாவை நோக்கி), ‘‘மர்யமுடைய மகன் ஈஸாவே! அல்லாஹ்வுடன் என்னையும், என் தாயையும் இரு கடவுள்களாக எடுத்துக் கொள்ளுங்கள் என்று மனிதர்களை நோக்கி நீர் கூறினீரா?'' என்று கேட்பான் என்பதையும் ஞாபகமூட்டுவீராக. அதற்கு அவர் கூறுவார்: ‘‘நீ மிகப் பரிசுத்தமானவன். எனக்கு ஒரு சிறிதும் தகாததை நான் ஒருபோதும் கூறமாட்டேன். அவ்வாறு நான் கூறியிருந்தால் நிச்சயமாக நீ அதை அறிந்திருப்பாயே! என் உள்ளத்திலுள்ளதை நீ நன்கறிவாய். உன் உள்ளத்திலுள்ளதை நான் அறியமாட்டேன். நிச்சயமாக நீதான் மறைவானவை அனைத்தையும் நன்கறிபவன். (அல்குர்ஆன் 5 : 116)

பயந்து நடுங்குவார்கள்.அல்லாஹ்விற்கு முன்னால் பயந்தவர்களாக, நடுகியவர்களாக பதில் கூறுவார்கள் :

مَا قُلْتُ لَهُمْ إِلَّا مَا أَمَرْتَنِي بِهِ أَنِ اعْبُدُوا اللَّهَ رَبِّي وَرَبَّكُمْ وَكُنْتُ عَلَيْهِمْ شَهِيدًا مَا دُمْتُ فِيهِمْ فَلَمَّا تَوَفَّيْتَنِي كُنْتَ أَنْتَ الرَّقِيبَ عَلَيْهِمْ وَأَنْتَ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ

நீ எனக்கு ஏவியபடியே நான் (அவர்களை நோக்கி), ‘‘நீங்கள் எனக்கும் உங்களுக்கும் இறைவனாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்'' என்றுதான் கூறினேன். தவிர, வேறொன்றையும் (ஒருபோதும்) நான் கூறவில்லை. நான் அவர்களுடன் இருந்த வரை அவர்களின் செயலை நான் பார்த்துக்கொண்டிருந்தேன். நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீதான் அவர்களைக் கவனித்தவனாக இருந்தாய். அனைத்திற்கும் நீயே சாட்சி.(அல்குர்ஆன் 5 : 117)

இப்படி இறைத்தூதர்கள் எல்லாம் விசாரிக்கப்படக் கூடிய நாளில், ஏடுகள் விரிக்கக்படக் கூடிய நாளில், தராசுகள் நிறுத்தக்படக் கூடிய நாளில் ஒவ்வொரு மனிதனும் தான் செய்த அமல்களை தான் அங்கே கொண்டு வருவான். அவனுடைய அமல்கள் தான் அங்கே வரும்.

மறுமையின் வெற்றி அமல்களை கொண்டுதான்.மறுமையின் வெற்றி உறவுகளை கொண்டோ, இந்த உலகத்தின் பதவிகளை கொண்டோ, இந்த உலகத்தின் செல்வாக்கை கொண்டோ, இந்த உலகத்தின் வசதிவாய்ப்புகளைக் கொண்டோ மறுமையின் வெற்றி இல்லை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் தெளிவாக நம்பிக்கை கொள்ள வேண்டும்.

நாளை மறுமையில் செல்வந்தர்கள், பதவி உடையவர்கள் எப்படி அழுவார்கள் என்பதை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.

وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَالَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ (25) وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ (26) يَالَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ (27) مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ (28) هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ

எவனுடைய (செயல்கள் எழுதப்பட்ட) ஏடு அவனுடைய இடது கையில் கொடுக்கப்பெறுவானோ அவன், ‘‘என் ஏடு எனக்குக் கொடுக்கப்படாமல் இருந்திருக்க வேண்டாமா? என்று கூறுவான். மேலும், என் கணக்கை இன்னதென்று நான் அறியாதிருக்க வேண்டுமே! நான் இறந்தபொழுதே என் காரியம் முடிவு பெற்றிருக்க வேண்டுமே! என் பொருள் எனக்கு ஒன்றும் பயனளிக்கவில்லையே! என் அரசாட்சியும் அழிந்துவிட்டதே!'' (என்றும் புலம்புவான்). (அல்குர்ஆன்69 : 25-29)

அந்த ஒரு தோல்விக்குப் பிறகு வெற்றியின் சாத்தியமே இல்லை.அந்த ஒரு தோல்விக்குப் பிறகு வெற்றியின் சாத்தியமே இல்லை. அந்த நஷ்டத்திற்கு பிறகு லாபத்தை, நன்மையை ஈடாக கொடுக்க எந்த வாய்ப்பும் இல்லை.

لَا يَجْزِي وَالِدٌ عَنْ وَلَدِهِ وَلَا مَوْلُودٌ هُوَ جَازٍ عَنْ وَالِدِهِ شَيْئًا

(அந்நாளில்) தந்தை பிள்ளைக்கு உதவமாட்டார்; பிள்ளையும் தந்தைக்கு ஒரு உதவியும் செய்ய மாட்டான். (அல்குர்ஆன்31 : 33)

فَإِذَا نُفِخَ فِي الصُّورِ فَلَا أَنْسَابَ بَيْنَهُمْ يَوْمَئِذٍ وَلَا يَتَسَاءَلُونَ

சூர் (எக்காளம்) ஊதப்பட்டு விட்டால், அந்நாளில் அவர்களுக்கிடையில் பந்துத்துவம் இருக்காது. ஒருவரின் (சுக துக்க) செய்தியை மற்றொருவர் விசாரிக்கவும் மாட்டார். (தத்தம் கவலையே பெரிதாக இருக்கும்.)(அல்குர்ஆன் 23 : 101)

يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ (34) وَأُمِّهِ وَأَبِيهِ (35) وَصَاحِبَتِهِ وَبَنِيهِ (36) لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ

அந்நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும் வெருண்டோடுவான், தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும், தன் மனைவியை விட்டும், தன் பிள்ளைகளை விட்டும் (ஓடுவான்). உறவுகளெல்லாம் துண்டிக்கப்படும். அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், மற்றவர்களைக் கவனிக்க முடியாதவாறு சொந்தக் கவலை ஏற்பட்டுவிடும். (அல்குர்ஆன் 80 : 34-37)

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சொன்னார்கள்; எல்லோரும் யா நஃப்ஸீ, யா நஃப்ஸீ, ரப்பி ஸல்லிம், ரப்பி ஸல்லிம்-யா அல்லாஹ்! என் ஆன்மாவை பாதுகாத்துக் கொள், என் ஆன்மாவை பாதுகாத்துக் கொள் என்று சொல்வார்களே தவிர அங்கே கூச்சல்கள் வேறெதுவும் இருக்காது.

கண்ணியத்திற்குரியவர்களே! அந்த நாளில் அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு, அல்லாஹ்வுடைய சட்ட வரம்புகளை மீறியவர்கள், தங்களது செயலேட்டில் பாவத்தை குமித்தவர்கள், இந்த உலக இன்பங்களில், இந்த அற்ப சுக போகங்களில் மூழ்கி மறுமையை மறந்து வாழ்ந்தவர்கள், இந்த உலகம்தான் நிலையானது என துன்யாவை சேகரிப்பதில் அல்லாஹ்வுடைய இபாத்தை பாலாக்கிய அந்த மக்கள், அழுதுபுலம்பக் கூடிய காட்சியை  அல்லாஹ் சூரா ஹாக்காவில் வர்ணிக்கின்றான்.

இன்றைய மக்கள்,தங்களை படைத்த ரப்புடைய கையில் கீரீடம் இருக்கிறது, அவன் நாடினால் தான் கிடைக்கும், அவன் விதித்ததைத் தவிர வேறு எதையும் நான் அடைந்து கொள்ள முடியாது என்று சொல்லிக்கொண்டு,எங்களுக்கு நம்பிக்கை உள்ளது என வாதித்துக் கொண்டு அந்த ரப்புக்கு மாறு செய்தவனாக, அவனுடைய மார்க்கத்தை மீறியவர்களாக இந்த செல்வத்தை சேர்க்கிறார்கள்.

இரண்டாவதாக, செல்வத்தை சேர்ப்பதிலும் அல்லாஹ்வின் சட்டத்தை மீறுவது, சேர்த்த செல்வதிலும் அல்லாஹ்வுடைய கடமைகளை பாலாக்குவது.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சொன்னார்கள்:

«لَيَأْتِيَنَّ عَلَى النَّاسِ زَمَانٌ، لاَ يُبَالِي المَرْءُ بِمَا أَخَذَ المَالَ، أَمِنْ حَلاَلٍ أَمْ مِنْ حَرَامٍ»

கண்டிப்பாக மனிதனுக்கு இப்படி ஒரு காலம் வரும்.மறுமை நாள் நிகழ்வதற்கு முன்பு,மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்று,மனிதன் செல்வத்தை சேகரிப்பான். தான் சேகரிப்பது ஹலாலான வழியிலா? ஹராமான வழியிலா?என்பதை அறவே பொருட்படுத்த மாட்டான்.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : . 2059, 2083.

மேலும் சொன்னார்கள் : ஒரு காலம் வரும்.குறிப்பாக ஆண்களை குறித்து சொன்னார்கள்.அவர்கள் பட்டாடை உடுத்துவதை ஹலாலாக்கி கொள்வார்கள்.

மொத்த சமுதாயத்தை பார்த்து சொன்னார்கள், விபச்சாரத்தை நீங்கள் ஹலாலாக்குவீர்கள்.

மேலும் சொன்னார்கள் : எனது உம்மத் மதுவைக் குடிக்கும் அதற்கு அது அல்லாத வேறு பெயரை வைக்கும் என்று.(1)

அறிவிப்பாளர் : அபூமாலிக் அல்அஷ்அரி ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 5590.

கண்ணியத்திற்குரிய ஸலஃப்களில் ஒருவர் சொல்கின்றார் : மனிதனே! நீ சேகரிக்கும் செல்வத்தைப் பற்றி நினைத்துப் பார்த்தாயா? மனிதனே! நீ அந்த செல்வத்தை உனது மனைவிக்காக அல்லது உன் பிள்ளைகளுக்கு தான் விட்டு செல்லப் போகிறாய்! உனக்கு அதிலிருந்து எதுவும் இல்லை, நீ எதை உன் மறுமைக்காக முற்படுத்திக் கொண்டாயோ அதை தவிர.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் நமக்கு ஒரு அழகிய அறிவுரையை சொன்னார்கள் :

நீங்கள் எதை அல்லாஹ்வின் பாதையில் கொடுத்தீர்களோ அது உங்களுக்காக மறுமையில் நீங்கள் சேகரித்து கொண்டது உங்களுக்கு நிலையானது.

நமது நிலை,இந்த உலகத்தில் நாம் விட்டுச் செல்கின்ற, இந்த உலகத்தில் நாம் சேகரித்து வைக்கின்ற, செல்வத்தின் மீது இருக்கின்ற பேராசையை பார்க்கின்ற போது ஏதோ மறுமைக்கு சென்றாலும் திரும்ப உலகத்திற்கே வந்துவிடுவோம் போல இருக்கிறது.

எப்படி சேர்க்கிறார்கள்? மறுமைக்காக எப்படி செலவு செய்கிறார்கள்? ஏதோ அங்கே சில காலம் மட்டும் தங்க வேண்டி இருக்கிறது.எனவே,அந்த அளவுக்கு அங்கே கொஞ்சம் கொடுத்தால் போதும்.

இந்த உலகத்தில்தான் நாம் நிரந்தரமாக இருக்கப் போகிறோம். அப்படி மவுத்தாகி சென்றால் கூட திரும்ப இந்த உலகத்திற்கு வந்து விடுவோம் என்ற நிலையில் இருப்பதை பார்க்கிறோம்.

இந்த மனிதன்தான் நாளை மறுமையில் சொல்வான்:

எனது செல்வம் எனக்கு உதவவில்லையே! எனது செல்வதால் எந்த பயனும் இல்லாமல் போய்விட்டதே! தன்னுடைய ஆட்சி, அதிகாரம் தன்னுடைய படை பலம் எங்கே? அரசனின் ஆட்சியோ, மந்திரியின் பதவியோ அவனுக்கு அங்கே எந்தவித நன்மையும் அளிக்காது. (அல்குர்ஆன் : 69 : 28,29)

ஃபிர்அவ்ன், காரூன், ஹாமான், நம்ரூத், ஷத்தாத் போன்ற பெரும்பெரும் மன்னர்கள், செல்வந்தர்கள் எல்லாம் அங்கே நரகத்திற்காக வரிசைப்படுத்தப் பட்டிருப்பார்கள்.

அல்லாஹ்வின் சட்டங்களை மீறிய அநியாயக்காரர்கள், அல்லாஹ்வின் அடியார்கள் மீது அநியாயம் செய்தவர்கள், அல்லாஹ்வின் சட்டங்களை மதிக்காமல் ஆட்சி செய்தவர்கள், இவர்களெல்லாம் ஸஃப்களாக நிறுத்தப்பட்டுக் கொண்டிருப்பார்கள்.

அல்லாஹ் கூறுகிறான் :

وَسِيقَ الَّذِينَ كَفَرُوا إِلَى جَهَنَّمَ زُمَرًا

குற்றவாளிகள், பாவிகள், நிராகரிப்பாளர்கள் ஒவ்வொருவருடைய குற்றங்களுக்கு ஏற்ப, குழுக்களாக இழுத்துக் கொண்டு வரப்படுவார்கள். (அல்குர்ஆன் 39 : 71)

அப்படிப்பட்ட ஒரு காட்சி மறுமையில் நடக்கும்.நிச்சயமாக நடந்தேறும்.ஒவ்வொருவரும் அக்காட்சியை பார்த்துதான் ஆவான்.

அல்லாஹ் சொல்கிறான்:

أَتَى أَمْرُ اللَّهِ فَلَا تَسْتَعْجِلُوهُ

(இதோ) அல்லாஹ்வுடைய கட்டளை வந்துவிட்டது! அதைப்பற்றி நீங்கள் அவசரப்பட வேண்டாம். (அல்குர்ஆன் 16 : 1)

நிச்சயமாக நீங்கள் அந்த காட்சியை பார்க்க தான் போகிறீர்கள்.அல்லாஹ் சொல்கின்றான்:

لَتَرَوُنَّ الْجَحِيمَ (6) ثُمَّ لَتَرَوُنَّهَا عَيْنَ الْيَقِينِ (7) ثُمَّ لَتُسْأَلُنَّ يَوْمَئِذٍ عَنِ النَّعِيمِ

நிச்சயமாக நரகத்தையே நீங்கள் (உங்கள் கண்முன்) காண்பீர்கள். பிறகு, சந்தேகமற மெய்யாகவே அதை நீங்கள் உங்கள் கண்களால் கண்டுகொள்வீர்கள். (உங்களுக்கு இறைவன் புரிந்த) அருளை (நீங்கள் எவ்வழியில் செலவு செய்தீர்கள் என்பதை)ப் பற்றியும், பின்னர் அந்நாளில் நிச்சயமாக நீங்கள் கேட்கப்படுவீர்கள். (அல்குர்ஆன் 102 : 6-8)

இமாம் ஹஸன் பஸரீ ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள்:ஒரு முனாஃபிக் (நயவஞ்சகன்) உடைய அடையாளம்,

முனாஃபிக் எப்படிப்பட்டவன் என்றால்,அவனை ஒரு சுவற்றுக்கு பின்னால் நிறுத்தப்பட்டு அதற்கு பின்னால் நரக நெருப்பு உள்ளது என்று சொன்னால்கூட அதை அவன் நம்ப மாட்டான், அதில் அவன் நுழையாத வரை.

ஆகவேதான்,அல்லாஹ் முனாஃபிக்களுக்கு கொடுக்கக் கூடிய தண்டனைப் பற்றி சொல்கிறான்:

அவர்கள் நரகத்தின் அடித்தட்டில் இருப்பார்கள் என்று. (அல்குர்ஆன் 4 : 145)

எங்கிருந்து வேதனை ஆரம்பமாகிறதோ அந்த இடத்தில் அல்லாஹ் முனாஃபிக்கை தங்க வைப்பான்.

அல்லாஹ்வை ரப்பாக ஏற்றுக்கொண்டு, அந்த ரப்பை வணங்கி, அவனுடைய சட்டங்களை பேணி, அவனை திருப்தி படுத்த வேண்டும் அதற்குதான் நான் இந்த உலகத்தில் படைக்கப்பட்டிருக்கிறேன்.

அல்லாஹ் எத்துனை இடத்தில் அவனுடைய சந்திப்பை குறித்து நமக்கு உணர்த்துகின்றான்.

وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّكُمْ مُلَاقُوهُ

அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். அவனை நீங்கள் சந்திக்க வேண்டும் என்பதை அறிந்து கொள்ளுங்கள் என்பதை அழுத்தமாக அல்லாஹ் சொல்கின்றான். (அல்குர்ஆன் : 2:223)

அவனை சந்திக்காமல் எங்கே ஓடமுடியும்? எங்கே சென்று தப்பிக்க முடியும்? அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சொன்னார்கள்: நாளை மறுமையில் ரஹ்மானிடம் ஒவ்வொரு அடியானும் பேசுவான். அவனுக்கும் ரப்புக்கும் இடையில் மொழிபெயர்ப்பாளர் இருக்கமாட்டார்.

அந்த ரஹ்மானுக்கு முன்னால் நிற்கக்கூடிய நிலையை நினைத்து பாருங்கள்!

இதை தான் அல்லாஹ் சொல்கிறான் :

وَلِمَنْ خَافَ مَقَامَ رَبِّهِ جَنَّتَانِ

எவன் தன் இறைவனின் சந்திப்பைப் பற்றிப் பயப்படுகின்றானோ, அவனுக்குச் (சொர்க்கத்தில்) இரு சோலைகள் உண்டு. (அல்குர்ஆன் 55:46)

இமாம் ஹஸன் பஸரீ ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்:

ஒரு முஃமினுடைய செயல்பாடுஎப்படி இருக்கும் என்றால்,செய்வதற்கு முன்னால் யோசிப்பான், பேசுவதற்கு முன்னால் யோசிப்பான், யோசனைக்கு பிறகு தான் அந்த செயலில் ஈடுபடுவான்.

நயவஞ்சகன் அப்படியல்ல. அவன் யோசிக்க மாட்டான், அதன் விளைவை சிந்திக்க மாட்டான், அவனுடைய கல்போ நாவின் நுணியில் இருக்கும்.

நம்முடைய நிலையை நினைத்து பாருங்கள். ரப்புக்கு முன்னால் நிற்கக்கூடிய அந்தநிலையைபயப்பட வேண்டும் என்று அல்லாஹ் சொல்கிறான்.

அந்த நம்பிக்கை இருக்கவேண்டும். இதை தான் அல்லாஹ்வை மறைவில் பயப்படுவது என்று சொல்லப்படும்.

அந்த நாளை நாம் நெருங்கி கொண்டிருக்கிறோம். நமது நாட்களில் முடியக்கூடிய ஒவ்வொரு நாளும் நம்முடைய ஆயுட்காலம். நம்முடைய வாழ்நாள் முடிந்து கொண்டிருக்கிறது என்பதை அறிவுறுத்துகிறது.

இமாம் ஹஸன் பஸரீ ரஹிமஹுல்லாஹ் கூறினார்கள் :

يا أبن آدم إنما أنت أيام .. إذا ذهب يومك ذهب بعضك

மனிதனே!நீ நாட்கள் தான்.உன்னுடைய ஆயுட்காலங்களில் வாழ்நாள் சென்றுவிட்டால் அவற்றில் மீதம் உள்ளதை நீ அறிய மாட்டாய். மறுமைக்காக நீ என்ன செய்கிறாய் என்பதை யோசித்து கொள்வாயாக!

நூல் : அஸ்ஸுஹ்த், எண் : 1586.

அல்லாஹ்விடத்தில் தவ்பாவுடைய பாவங்களை சேகரித்து வைத்துள்ளோமா? நம்முடைய மலக்குல் மவுத் சொல்லாமல் வருவாரே! அனுமதி பெறாமல் நுழைவாரே! இரக்கமில்லாமல் அழைத்து செல்வாரே! தனிமையில் நாம் இருந்தோம் என்பதை யோசிக்க மாட்டார். பயணத்தில் இருக்கிறோம் என்று பார்க்க மாட்டார். தூரத்தில் இருக்கிறோம் என்று இரக்கம் காட்ட மாட்டார்.

மனைவி அருகில் இல்லையே!பிள்ளைகள் உடன் இல்லையே!என்பதை பொருட்படுத்த மாட்டார்.

அப்படி வருகின்ற நிலையில் முதலாவது,நன்மையை சேர்த்து வைத்திருப்பது ஒரு பக்கம் இருக்கட்டும். பாவங்களுக்காக பாவமன்னிப்பை சேர்த்துவைத்து இருக்கின்றோமா?

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا تُوبُوا إِلَى اللَّهِ تَوْبَةً نَصُوحًا

நம்பிக்கையாளர்களே! நீங்கள் கலப்பற்ற மனதுடன் (பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் திரும்புங்கள். (அல்குர்ஆன் 66:8)

ஸலஃபுகள் சொல்வார்கள் : இன்று மனிதனுடைய தவ்பா எப்படி இருக்கின்றது என்றால், தவ்பாவே பாவமாக இருக்கிறது. தவ்பா செய்கிறார்கள். ஆனால், எந்தப் பாவத்திற்கு தவ்பாவை செய்தார்களோ அதே பாவத்திற்கு மீள்கிறார்கள். தவ்பா செய்தோம் என்று பொய் சொல்கிறார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!

தவ்பாவுடைய அடிப்படை நிபந்தனைகளில் ஒன்று, நான் இனி அந்த பாவத்தில் மீளமாட்டேன் என உறுதிமொழி கொடுப்பது. அல்லாஹ்விடத்தில் ஒப்பந்தம் செய்வது, செய்த பாவத்தை நினைத்து வருந்துவது, இனி அந்த பாவத்தில் மீளமாட்டேன் என்று நஃப்ஸில் உறுதி எடுப்பது. அதற்காக அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேட்பது.

இதுதான் தவ்பா. இரண்டாவதாக, அல்லாஹ்வின் ஹக்கு விஷயத்தில்,உரிமைகள் விஷயத்தில், அந்த உரிமைகளை நான் பேணி இருக்கின்றேனா?ஏனென்றால் நாளை மறுமையில் முதலாவது விசாரிக்கப்படுவது உரிமைகளின் விஷயத்தில்தான்.

தாய் தந்தைக்கு செய்ய வேண்டிய கடமை, சகோதரர்களுக்கு செய்ய வேண்டிய கடமை, அண்டை வீட்டாருக்கு செய்ய வேண்டிய கடமை, பிள்ளைகளுக்குச் செய்ய வேண்டிய கடமைகளை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.

ஒரு பூனைக்கு செய்த அநியாயத்தால் ஒரு வணக்கசாலியான பெண் நரக நெருப்பில் வேதனை செய்யப்படுவாள் என்றால், ஒரு முஃமினுக்கு வேதனை செய்யப்பட்டவனின் நிலை என்ன?

இதனை இமாம் ஹஸன் பஸரீ ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள் : ஒரு முஸ்லிம் ஒரு பன்றிநாய் அதற்கு கெடுதி செய்யக்கூடாது என்று இருக்கும் நிலையில், ஒரு முஸ்லிமுக்கு அல்லாஹ் உடைய அடிமைக்கு தொந்தரவு தருவதைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

இன்று பாருங்கள். சர்வசாதாரணமாக புறம் பேசுவது, கோள் சொல்வது, பிறரை மட்டமாக பார்ப்பது, பிறரின் கண்ணியத்தை குறைப்பது, அவமரியாதை செய்வது, ஏன்? தன்னுடைய தாய்தந்தையை அவமரியாதை செய்யக்கூடிய மக்கள் நம்மிடையே இருக்கிறார்கள்!

அல்லாஹ் இந்த உலகத்தில் எந்த ஒரு குற்றத்திற்கும் தண்டனையை தீவிரப்படுத்த மாட்டான், தாய் தந்தைக்கு செய்யப்படக்கூடிய அவமரியாதைக்கு தண்டனையை தீவிரப்படுத்துவது போல.

وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا إِمَّا يَبْلُغَنَّ عِنْدَكَ الْكِبَرَ أَحَدُهُمَا أَوْ كِلَاهُمَا فَلَا تَقُلْ لَهُمَا أُفٍّ وَلَا تَنْهَرْهُمَا وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا

 (நபியே!) உமது இறைவன் தன்னைத் தவிர (மற்றெவரையும்) வணங்கக் கூடாதென்று (கட்டளையிட்டிருப்பதுடன்) தாய் தந்தைக்கு நன்றி செய்யும்படியாகவும் கட்டளையிட்டிருக்கிறான். உம்மிடம் இருக்கும் அவர்களில் ஒருவரோ அல்லது இருவருமோ முதுமையை அடைந்து விட்டபோதிலும் அவர்களை வெருட்டவும் வேண்டாம்; அவர்களை (நிந்தனையாகச்) ‘சீ' என்றும் சொல்ல வேண்டாம். அவர்களிடம் (எதைக் கூறியபோதிலும்) மிக்க மரியாதையாக(வும் அன்பாகவுமே) பேசுவீராக. (அல்குர்ஆன் 17:23)

இமாம் ஹஸன் பஸரீ ரஹிமஹுல்லாஹ் அவர்களிடத்தில் கேட்கப்படுகிறது; தாய்தந்தையிடம் கண்ணியமாக பேச வேண்டும் என்று அல்லாஹ் சொல்கிறானே,அதற்கு என்ன விளக்கம்? என்று.

அதற்கு இமாம் பதில் சொன்னார்கள் : ஒரு பெரிய அரசனுக்கு முன்னால் ஒரு சாதாரண அடிமை எப்படி கூனிக்குறுகி மரியாதையாக பேசுவானோ அதுபோன்று தாய், தந்தை இடத்தில் பேச வேண்டும்.

இப்படி அல்லாஹ்வுடைய ஹக்குகள், அல்லாஹ்வின் அடியார்கள் விஷயத்தில் விசாலமாக இருக்கிறது. அதை குறித்து நாம் என்ன செய்திருக்கிறோம்? எத்தனை பேருடைய செல்வம் நம்மிடத்தில் இருக்கிறது, அதற்கான வஸிய்யத்தை எழுதி வைத்தோமா?

நாம் வழங்கிய கடன், வாங்கிய ஹக்குகள், நாம் இரவலாக பெற்றது, நாம் கடனாகப் பெற்றது, புலங்கிவிட்டு தருகிறோம் என்று சொல்லி அமானிதமாக பெற்றது, இப்படி எத்தனை ஹக்குகளை நாம் பெற்றிருக்கிறோம்.

இதற்கு நாளை மறுமையில் என்ன செய்யப்போகிறோம்? அடுத்து அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகள், தொழுகை, நோன்பு, ஜக்காத், ஹஜ் இன்னும் இதர வணக்க வழிபாடுகள் இதில் நம்முடைய நிலை என்ன?

சகோதரர்களே! மரணத்தின் தேதி முடிவு செய்யப்பட்டது. ஆனால், நமக்கு அது அறிவிக்கப்பட்டதா? மலக்குல் மவுத் குறிப்பிட்ட நேரத்தில் வருவார் என்று அல்லாஹ் சொல்லிருக்கிறான். ஆனால், நமக்கு அந்த நேரம் சொல்லப்பட்டதா?

وَمَا تَدْرِي نَفْسٌ بِأَيِّ أَرْضٍ تَمُوتُ

எந்தப் பூமியில் இறப்பார் என்பதையும் (அவனைத் தவிர) எவரும் அறியமாட்டார்.(அல்குர்ஆன் 31:34)

கண்டிப்பாக ஒரு இடத்தில் இருக்கும் பொழுது தான் மரணம் வரும். அந்த இடம் எந்த இடம் என்று சொல்லப்பட்டதா? இந்த பூமியில் எந்த நாளில் மரணிப்போம் என்பதை யாரும் அறிய மாட்டார்கள். இது ஒரு நினைவூட்டல்.எனவே இது, நம்முடைய உள்ளத்தில் பசுமையாகநிரந்தரமாக இருக்க வேண்டும்.

அல்லாஹ் கொடுத்திருக்க கூடிய புனிதமான குர்ஆனுடைய மாதம், தவ்பாவுடைய மாதம், ஸதகாவுடைய மாதம், இது நம்முடைய பாவ மன்னிப்புக்காக கொடுக்கப்பட்ட மாதம், நம்முடைய நன்மைகளில் நாம் தவறவிட்டதை சரிசெய்யக்கூடிய மாதம்.

சுற்றுவதற்காகவோ, இங்குமங்கும் அழைவதற்காகவோ அல்லது நம்முடைய தேவைகளை வாங்குவதற்காக, சுற்றி அழைவதற்காக கொடுக்கப்பட்ட மாதம் அல்ல.

இது ஒரு மகிழ்ச்சியான மாதம் என்று நினைக்காதீர்கள். மகிழ்ச்சி வணக்க வழிபாட்டைக் கொண்டு, தவ்பாவைக் கொண்டு, குர்ஆன் ஓதுவதைக் கொண்டும், சதகாவை கொண்டும் தான்.

உண்ணுவதிலோ, நம்முடைய ஆடைகளிலோ இந்த மாதத்தில் மகிழ்ச்சியாக இருக்கலாம் என்று மகிழ்ச்சியின் அர்த்தத்தை தவறாக விளங்காதீர்கள்.

அல்லாஹ் கொடுத்திருக்கக் கூடிய இந்த ரமலான் மாதம், சென்ற வருடத்தில் நமக்கு கிடைத்தது. நாம் என்ன செய்தோம்? இந்த ஆண்டு கிடைத்தது, அந்த பகுதி நம்மை விட்டு வெளியேறி விட்டு எஞ்சி இருக்கக் கூடிய நாட்களில் நாம் என்ன செய்யப்போகிறோம்?

இப்படிதான் நாட்கள் சென்று கொண்டிருக்கும், முடிவு என்னவென்று தெரியாது. அல்லாஹ் அறிந்தவன்

وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ كِتَابًا

எனினும், இவை அனைத்தையும் நாம் (நம் குறிப்புப்) புத்தகத்தில் பதிவு செய்து கொண்டோம். (அல்குர்ஆன் 78:29)

وَكُلُّ صَغِيرٍ وَكَبِيرٍ مُسْتَطَرٌ

சிறிதோ, பெரிதோ அனைத்துமே அதில் வரையப்பட்டிருக்கும்.(அல்குர்ஆன் 54:53)

ஆகவே, அல்லாஹ்விடத்தில் நெருங்கக் கூடிய இந்த மாதத்தில் அலட்சியத்தை தவிர்ப்போ மாக! அல்லாஹ்விடத்தில் அழுது, புலம்பி தனிமையில் பாவ மன்னிப்பு கேட்போமாக!

இந்த ரமலானின் இரவு தொழுகைகளை சிரமத்தோடு, ஆசைப்பட்டு, ஆர்வமாக அல்லாஹ்விற்கு முன்னால், ரஹ்மானே! நான் அடிமையாக உன்னிடத்தில் வந்திருக்கிறேன், எனது வேலைகளை விட்டு வந்திருக்கிறேன் என்னை ஏற்றுக் கொள்வாயாக!

தேவையுள்ளவனாக வந்திருக்கிறேன், மன்னிப்பு கேட்பவனாக வந்திருக்கின்றேன், பாவங்களை ஒப்புக் கொண்டவனாக வந்திருக்கின்றேன், என்னை பொருந்திக் கொள்வாயாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

وَقَالَ هِشَامُ بْنُ عَمَّارٍ: حَدَّثَنَا صَدَقَةُ بْنُ خَالِدٍ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ يَزِيدَ بْنِ جَابِرٍ، حَدَّثَنَا عَطِيَّةُ بْنُ قَيْسٍ الكِلاَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ غَنْمٍ الأَشْعَرِيُّ، قَالَ: حَدَّثَنِي أَبُو عَامِرٍ أَوْ أَبُو مَالِكٍ الْأَشْعَرِيُّ، وَاللَّهِ مَا كَذَبَنِي: سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: " لَيَكُونَنَّ مِنْ أُمَّتِي أَقْوَامٌ، يَسْتَحِلُّونَ الحِرَ وَالحَرِيرَ، وَالخَمْرَ وَالمَعَازِفَ، وَلَيَنْزِلَنَّ أَقْوَامٌ إِلَى جَنْبِ عَلَمٍ، يَرُوحُ عَلَيْهِمْ بِسَارِحَةٍ لَهُمْ، يَأْتِيهِمْ - يَعْنِي الفَقِيرَ - لِحَاجَةٍ فَيَقُولُونَ: ارْجِعْ إِلَيْنَا غَدًا، فَيُبَيِّتُهُمُ اللَّهُ، وَيَضَعُ العَلَمَ، وَيَمْسَخُ آخَرِينَ قِرَدَةً وَخَنَازِيرَ إِلَى يَوْمِ القِيَامَةِ " (صحيح البخاري- 5590)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/