லாயிலாஹ இல்லல்லாஹ் | Tamil Bayan - 39
லா இலாஹ இல்லல்லாஹ்
ஜுமுஆ குத்பா தலைப்பு : லா இலாஹ இல்லல்லாஹ்
வரிசை : 39
இடம் : மஸ்ஜித் அஹ்லே ஹதீஸ், மற்றும் மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
அல்லாஹு தஆலா இந்த உலகத்தில் எத்துணை இறைத்தூதர்களை அனுப்பினானோ அத்துணை தூதர்களுக்கும் கொடுத்த கட்டளை ஒன்று தான். அல்லாஹ் அவன் அனுப்பிய தூதர்களுக்கு கொடுத்த பணி என்ன என்பதை அல்குர்ஆனில் தெளிவு படுத்துகிறான்.
அல்லாஹ், மக்களை தவ்ஹீதின் பக்கம் அதாவது, அல்லாஹ் ஒருவனையே வணங்க வேண்டும்; அனைத்து வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ் ஒருவனுக்கே செய்ய வேண்டும் என்பதின் பக்கம் மக்களை அழைப்பதற்காக முதலில் தேர்ந்தெடுத்த நபி நூஹ் அலைஹிஸ்ஸலாம்.
பிறகு தூதர்களின் வரிசையை அல்லாஹ் நம் இறுதி தூதர் முஹம்மது ﷺஅவர்களை கொண்டு நிறைவு செய்தான். அவர்களுக்குப் பின்பு தூதர் யாரும் வர மாட்டார்.
யார் அவர்களுக்குப் பின் தன்னை தூதன் என்று வாதிடுகிறானோ அவன் பொய்யன், ஏமாற்றுக்காரன், அவன் அல்லாஹ்வின் சாபத்திற்கு உரியவன், வானவர்கள் மற்றும் அனைத்து படைப்பினங்களின் சாபத்திற்கு உரியவன்.
இன்றைய கால கட்டத்தில் நாம் நமக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை அறிந்தும் தெரிந்தும் அலட்சியம் செய்தவர்களாக வாழ்ந்து வருகிறோம்.
எந்த செய்திக்காக வேண்டி இறைத்தூதர்களின் இரத்தம் ஓட்டப்பட்டதோ, படுகொலை செய்யப்பட்டனரோ, அந்த இறைத்தூதர்களின் நேசர்களும், அந்த இறைதூதர்களை பின்பற்றியவர்கள் கொல்லப்பட்டார்களோ, எந்த செய்திக்காக வேண்டி அல்லாஹ் தன் தூதர்களிடம் வானவர்களை இறக்கினானோ, மக்களில் இருந்து தூதர்களை தேர்ந்தெடுத்து அனுப்பினானோ, எந்த செய்திக்காக வேண்டி அல்லாஹ் இந்த பூமியில் இரத்தம் சிந்துவதை அனுமதித்தானோ, எந்த செய்திக்காக வேண்டி கணவன் மனைவி பிரிவதை அனுமதித்தானோ, கடமையாக்கினானோ, எந்த செய்திக்காக வேண்டி மகன் தந்தையிடம் போர் புரிவதை அனுமதித்தானோ, கடமையாக்கினானோ, எந்த செய்திக்காக வேண்டி ஒருவருக்கு தான் பிறந்து, வளர்ந்த, வாழ்ந்து வருகிற ஊரை விட்டு வெளியேறுவதை அனுமதித்தானோ, கடமையாக்கினானோ, அந்த செய்தி தவ்ஹீத் -லா இலாஹ இல்லல்லாஹ்முஹம்மது ரசூலுல்லாஹ் என்பதாகும்.
வணங்குவதற்கு தகுதியான இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை. இருக்க முடியாது. முஹம்மது ﷺஅல்லாஹ்வுடைய தூதராவார்கள். இதுவே தவ்ஹீத்.
இந்த தவ்ஹீதிற்காக தான் மனிதர்களும் ஜின்களும் படைக்கப்பட்டார்கள்.
அல்லாஹ் கூறுகிறான் :
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ
ஜின்களையும், மனிதர்களையும் என்னை வணங்குவதற்காகவேயன்றி வேறெதற்காகவும் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51:56)
அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும்; அனைத்து வணக்க வழிபாடுகளையும் அல்லாஹ்விற்கு மட்டுமே செலுத்த வேண்டும்; அல்லாஹ்வை மட்டும் பெருமைப்படுத்த வேண்டும்; வணக்க வழிபாடுகள், பணிவு, பயம், ஆதரவு, அனைத்தையும் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே கலப்பற்றதாக ஆக்க வேண்டும்.
சூரா பய்யினாவில் அல்லாஹ் கூறுகிறான் :
وَمَا أُمِرُوا إِلَّا لِيَعْبُدُوا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ حُنَفَاءَ وَيُقِيمُوا الصَّلَاةَ وَيُؤْتُوا الزَّكَاةَ وَذَلِكَ دِينُ الْقَيِّمَةِ
(எனினும், அவர்கள்) இறைவனுடைய கலப்பற்ற மார்க்கத்தையே பின்பற்றி, மற்ற மார்க்கங்களைப் புறக்கணித்து, அல்லாஹ் ஒருவனையே வணங்கி, தொழுகையையும் கடைப்பிடித்து, ஜகாத்தும் கொடுத்து வருமாறே தவிர, (வேறெதுவும் இத்தூதர் மூலம்) அவர்களுக்கு ஏவப்படவில்லை. (இது, அவர்களுடைய வேதத்திலும் ஏவப்பட்ட விஷயம்தான்.) இதுதான் நிலையான சட்டங்களுடைய மார்க்கம். (அல்குர்ஆன் 98 : 5)
இது தான் அல்லாஹ் நமக்கு கொடுத்த கட்டளை. நமக்கு முன் சென்ற மக்கள், இறை தூதர்கள் என அனைவருக்கும் அல்லாஹ் கொடுத்த கட்டளை.
தவ்ஹீத்,இது இஸ்லாமின் அடிப்படை. தவ்ஹீத் இல்லை என்றால் அல்லாஹ்வின் தீன் இல்லை.
இஸ்லாம் ஐந்து அடிப்படைகள் மீது அமைக்கப்பட்டுள்ளது. அதில் முதலாவது, லா இலாஹ இல்லல்லாஹ் -அல்லாஹ்வைத் தவிர யாரையும் வணங்கக் கூடாது. வணக்கத்திற்கு உரியவன், அனைத்து வணக்க வழிபாடுகளுக்கும் தகுதியானவன் அவன் ஒருவன் தான்.(1)
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 7.
மேலும் குர்ஆனில் அல்லாஹ் கூறக்கூடிய வசனங்களைப் படித்துப் பாருங்கள் :
قُلْ هُوَ اللَّهُ أَحَدٌ (1) اللَّهُ الصَّمَدُ (2) لَمْ يَلِدْ وَلَمْ يُولَدْ (3) وَلَمْ يَكُنْ لَهُ كُفُوًا أَحَدٌ (4)
(நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: அல்லாஹ் ஒருவன்தான். (அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். (அனைத்தும் அவன் அருளையே எதிர்பார்த்திருக்கின்றன.) அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. (ஆகவே, அவனுக்குத் தகப்பனுமில்லை சந்ததியுமில்லை.) (தவிர) அவனுக்கு ஒப்பாகவும் (நிகராகவும்) ஒன்றுமில்லை. (அல்குர்ஆன் 112 : 1-4)
மேலும் அல்லாஹ் கூறுகிறான் :
لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ
அவனுக்கு ஒப்பானது ஒன்றுமில்லை. அவன் (அனைத்தையும்) செவியுறுபவன், உற்று நோக்குபவன் ஆவான். (அல்குர்ஆன்42 : 11)
மேலும் அல்லாஹ் கூறுகிறான் :
فَلَا تَجْعَلُوا لِلَّهِ أَنْدَادًا وَأَنْتُمْ تَعْلَمُونَ
ஆகவே, (இவற்றையெல்லாம்) நீங்கள் தெளிவாக அறிந்துகொண்டே அல்லாஹ்வுக்கு இணைகளை ஆக்காதீர்கள். (அல்குர்ஆன்2 : 22)
மேலும் அல்லாஹ் கூறுகிறான் :
أَيُشْرِكُونَ مَا لَا يَخْلُقُ شَيْئًا وَهُمْ يُخْلَقُونَ
ஒரு பொருளையும் படைக்க சக்தியற்றவற்றை அவர்கள் (அவனுக்கு) இணையாக்குகின்றனரா? அவையோ (அவனால்) படைக்கப்பட்டவைதான். (அல்குர்ஆன் 7 : 191)
மேலும் அல்லாஹ் கூறுகிறான் :
خَلَقُوا كَخَلْقِهِ فَتَشَابَهَ الْخَلْقُ عَلَيْهِمْ
அவ்வாறிருக்க ‘‘அவனை அன்றி (பொய்யான தெய்வங்களை) பாதுகாவலர்களாக நீங்கள் எடுத்துக் கொள்கிறீர்களா? (அல்குர்ஆன்13 : 16)
மேலும் அல்லாஹ் கூறுகிறான் :
قُلْ أَفَغَيْرَ اللَّهِ تَأْمُرُونِّي أَعْبُدُ أَيُّهَا الْجَاهِلُونَ
(நபியே!) கூறுவீராக: ‘‘மூடர்களே! அல்லாஹ் அல்லாதவற்றையா நான் வணங்கும்படி என்னை நீங்கள் ஏவுகிறீர்கள்?'' (அல்குர்ஆன் 39 : 64)
மேலும் அல்லாஹ் கூறுகிறான் :
أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَتَكُونَ لَهُمْ قُلُوبٌ يَعْقِلُونَ بِهَا أَوْ آذَانٌ يَسْمَعُونَ بِهَا فَإِنَّهَا لَا تَعْمَى الْأَبْصَارُ وَلَكِنْ تَعْمَى الْقُلُوبُ الَّتِي فِي الصُّدُورِ
ஆகவே, இவர்கள் பூமியில் சுற்றித் திரிந்து (இவற்றைப்) பார்க்க வேண்டாமா? (அவ்வாறு பார்ப்பார்களாயின்) உணர்ந்து கொள்ளக்கூடிய உள்ளங்கள் அவர்களுக்கு ஏற்பட்டுவிடும் அல்லது (நல்லுபதேசத்தைக்) கேட்கக்கூடிய செவிகள் அவர்களுக்கு உண்டாகிவிடும். நிச்சயமாக அவர்களுடைய (புறக்) கண்கள் குருடாகிவிடவில்லை. எனினும், நெஞ்சுகளில் இருக்கும் (அவர்களுடைய அகக் கண்களான) உள்ளங்கள் தான் குருடாகிவிட்டன.(அல்குர்ஆன்22 : 46)
இந்த தவ்ஹீத் இல்லை என்றால் இஸ்லாம் இல்லை, முஸ்லிம் இல்லை.
ஒரு முஸ்லிமுடைய தனித்தன்மை தவ்ஹீதைக் கொண்டு அறியப்பட வேண்டும். லா இலாஹ இல்லல்லாஹ் என்ற முழக்கத்தைக் கொண்டு அறியப்பட வேண்டும். தவ்ஹீத் இல்லை என்றால் இஸ்லாமிய கடமை எதுவும் இல்லை.
அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது ﷺஅவர்கள் முஆத் இப்னு ஜபல் அவர்களை ஏமன் நாட்டுக்கு அனுப்பி வைக்கும்போது சொன்னார்கள் :
إِنَّكَ تَأْتِي قَوْمًا مِنْ أَهْلِ الْكِتَابِ فَادْعُهُمْ إِلَى شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ
"முஆதே! நீங்கள் யூத சமுதாயத்தை சேர்ந்த, கிறிஸ்துவ சமுதாயத்தை சேர்ந்த மக்களிடம் செல்லப் போகிறீர்கள்.
(உங்களுக்கு கொடுக்கப்பட்ட பணி என்ன தெரியுமா? ஆட்சி அதிகாரத்தை கொண்டு அந்த மக்களை அடக்கி ஆள வேண்டுமா? அங்குள்ள சொத்துக்களை சூறையாடிக் கொண்டு வந்து மதீனாவில் சேர்க்க வேண்டுமா? அங்குள்ள மக்களை அடிமையாக்கி, அவர்களை முஸ்லிம்களின் வேலைக் காரர்களாக ஆக்க வேண்டுமா? அந்த பூமிகளை நீங்கள் உரிமை கொண்டாடி, முஸ்லிம்களின் பூமியாக மாற்றி அவற்றின் அதிபதிகளாக முஸ்லிம்களை மாற்ற வேண்டுமா?)
முஆதே அதுவல்ல நமது நோக்கம். அதுவல்ல நம்முடைய குறிக்கோள். புரிந்து கொள்! முஆதே! உன்னுடைய பணி, லா இலாஹ இல்லல்லாஹ்வின்பக்கம் மக்களை அழைப்பது.
அறிவிப்பாளர் : முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 27.
முஸ்லிம்களின் பணி, லா இலாஹ இல்லல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பது.
தான் மட்டும் பள்ளிவாசலில் அல்லாஹ்வை வணங்கினால் மட்டும் போதாது. அவர்கள் உண்மையான முஸ்லிம்கள் இல்லை.
லா இலாஹ இல்லல்லாஹ் என்ற முழக்கத்திற்காக வேண்டி யார் மக்களுக்கு மத்தியில் அழைப்பு விடுக்கின்றாரோ, அந்த அழைப்பின் போது வருகின்ற சோதனையை யார் தாங்கி கொள்கிறாரோ, அதையே தனது வாழ்க்கையின் இலட்சியமாக, குறிக்கோளாக கொண்டு வாழ்கின்றார்களோ, அவர்கள் தான் முஸ்லிம்கள்.
ஒரு முஸ்லிம் என்று சொன்னால் அவனது நோக்கம் இது தான். அவனது இலட்சியம் இது தான்.
அவன் ஆளுனராக இருந்தாலும் சரி, அடிமையாக இருந்தாலும் சரி, அரசனாக இருந்தாலும் சரி, ஏழையாக இருந்தாலும் சரி, செல்வந்தனாக இருந்தாலும் சரி, படித்தவனாக இருந்தாலும் சரி, படிக்காத பாமரனாக இருந்தாலும் சரி, ஒரு முஸ்லிம் இந்த பூமியில் படைக்கப்படுவதன், இந்த பூமியில் பிறப்பதன் நோக்கம் தவ்ஹீத்.
அல்லாஹ் கூறுகிறான் :
قُلْ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ (162) لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أُمِرْتُ وَأَنَا أَوَّلُ الْمُسْلِمِينَ
நீங்கள் கூறுங்கள்: நிச்சயமாக என் தொழுகையும், என் (மற்ற) வணக்கங்களும், என் வாழ்வும், என் மரணமும் உலகத்தாரை படைத்து வளர்த்து பரிபக்குவப்படுத்தும் அல்லாஹ்வுக்கே உரித்தானவை.அவனுக்கு ஒரு இணையுமில்லை; (துணையுமில்லை.) இவ்வாறே, நான் ஏவப்பட்டுள்ளேன். ஆகவே, அவனுக்கு பணிந்து வழிப்பட்டவர்களில் நான் முதன்மையானவன்'' (என்றும் கூறுவீராக.)(அல்குர்ஆன் 6 : 162,163)
சிந்தித்துப் பாருங்கள்; தொழுகையில் நாம் மேற்கூறிய விஷயங்களின் அடிப்படையிலா நம் வாழ்க்கை கழிந்து கொண்டிருக்கிறது? நம் வாழ்க்கையில் எத்தனை மணிநேரங்கள் இந்த லா இலாஹ இல்லல்லாஹ்வை பரப்புவதற்கும், மனித உள்ளங்களில் இதை பதிப்பதற்கும் செலவு செய்கிறோம்?
நம்முடைய செல்வத்தில் எத்துணை பகுதிகளை இந்த லா இலாஹ இல்லல்லாஹ்வை பரப்புவதற்கு செலவு செய்கிறோம்?
நமக்கு அல்லாஹ் கொடுத்த முதல் கட்டளை, லா இலாஹ இல்லல்லாஹ்.
அல்லாஹ் தன் நபிக்கு கூறுகிறான் :
فَاعْلَمْ أَنَّهُ لَا إِلَهَ إِلَّا اللَّهُ
நபியே! லா இலாஹ இல்லல்லாஹுவை தெரிந்து கொள்ளுங்கள்! அறிந்து கொள்ளுங்கள்! புரிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 47 : 19)
இதற்காக இப்படி ஒரு புரட்சியா? இதற்காக இப்படிபட்ட போராட்டமா?
ஆம்! அப்படித்தான். இந்த லா இலாஹ இல்லல்லாஹ் இல்லை என்றால் சுவர்க்கம் கிடையாது;மறுமையில் அல்லாஹ்வுடைய அன்பு கிடையாது;மறுமையில் அல்லாஹ் விடத்தில் வெற்றியை அடைய முடியாது.
லா இலாஹ இல்லல்லாஹ் இருந்து வேறு பாவங்கள் இருந்தால் அல்லாஹ் அந்த பாவங்களை மன்னிப்பான்.
இந்த லா இலாஹ இல்லல்லாஹ் இல்லாமல் எவ்வளவு நன்மைகள் இருந்தாலும் அந்த நன்மைகள் அனைத்தையும் அல்லாஹ் அழித்து விடுவான்.
லா இலாஹ இல்லல்லாஹ்வில் உறுதியாக மற்றும் சுத்தமாக இருந்து வேறு எத்துணை பாவங்களை கொண்டு வந்தாலும் ரப்புல் ஆலமீன் சொல்கின்றான்:
ஆதமின் மகனே! இந்த பூமி நிரம்ப பாவங்களை, குற்றங்களை செய்து நீ என்னிடத்தில் வந்துவிட்டாய் என்று வைத்துக்கொள். லா இலாஹ இல்லல்லாஹ்வில் நீ சுத்தமாக இருந்து, யாரையும் எதையும் எனக்கு நீ இணை வைக்காமல் நீ என்னிடம் வந்து விட்டால், நீ செய்த பாவங்கள் அளவிற்கு நான் உனக்கு மன்னிப்பைத் தருகிறேன். (3)
அறிவிப்பாளர் : அபூதர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 4852.
இது ரப்புல் ஆலமீனாகிய அல்லாஹ்வுடைய வாக்குறுதி.
மற்றொரு ஹதீஸில் வருகிறது, வேறு எதையும் நான் பொருட்படுத்த மாட்டேன் என்று.
யாரும் என்னைக் கேட்க முடியாது. எந்த வானவரும் கேட்க முடியாது, எந்த தூதரும் கேட்க முடியாது. நான் மன்னிப்பேன். நான் மன்னிப்பேன்.
ரப்புல் ஆலமீனிடத்தில் நிறுத்தப் படக்கூடிய முதல் அமல், தவ்ஹீத் - லா இலாஹ இல்லல்லாஹ்.
முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்கள் கூறுகிறார்கள்.
முஆதே! அடியார்கள் மீது அல்லாஹ்வுக்குரிய கடமை என்னவென்று உனக்குத் தெரியுமா? அல்லாஹ்வின் மீது அடியார்களுக்குரிய கடமை என்னவென்று உனக்குத் தெரியுமா?
முஆத் இப்னு ஜபல் சொல்லுகிறார்கள், அல்லாஹ்வும் அவனது தூதருமே மிக அறிந்தவர்கள்.
அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்கள் கூறுகிறார்கள்,
«حَقُّ اللَّهِ عَلَى العِبَادِ أَنْ يَعْبُدُوهُ وَلاَ يُشْرِكُوا بِهِ شَيْئًا»
அடியார்கள் மீது அல்லாஹ்வின் கடமையாகிறது, அல்லாஹ்வை வணங்க வேண்டும், அவனுக்கு எதையும் இணையாக்கக்கூடாது. அவனுக்குரிய வணக்க வழிபாடுகளில் எதையும் சேர்க்க கூடாது. (4)
அறிவிப்பாளர் : முஆத் இப்னு ஜபல்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 2856, 6267.
இது தான் முதல் கடமை.இந்த கடமை சரியானால் தான் அடுத்துள்ள விஷயங்களுக்கெல்லாம் அங்கே நன்மைகள் நிறுக்கப்படும். அங்கே பாவங்கள் மன்னிக்கப்படும்.
இதில் ஒருவன் கோட்டை விட்டுவிட்டால், இதில் ஒருவன் தவறிழைத்து விட்டால், இதில் ஒருவன் அலட்சியம் செய்து விட்டால், அல்லாஹ் கூறுகிறான் :
فَلَا نُقِيمُ لَهُمْ يَوْمَ الْقِيَامَةِ وَزْنًا
நாளை மறுமையில் அவர்களுக்கு நாம் எந்த ஒரு தராசையும் நிறுக்க மாட்டோம். நிறுக்க முடியாது. (அல்குர்ஆன் 18 : 105)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான் :
وَلَقَدْ أُوحِيَ إِلَيْكَ وَإِلَى الَّذِينَ مِنْ قَبْلِكَ لَئِنْ أَشْرَكْتَ لَيَحْبَطَنَّ عَمَلُكَ وَلَتَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ
நபியே! உங்களுக்கும் உங்களுக்கு முன் சென்ற தூதர்களுக்கும் வஹியின் மூலம் சொல்லப்பட்டு விட்டது. நீர் இணை வைத்தாலும் உன்னுடைய அமல்கள் அனைத்தும் அழிந்து விடும். பிறகு நீர் நஷ்டம் அடைந்தவர்களில் ஒருவராகி விடுவாய். (அல்குர்ஆன் 39 : 65)
அன்புக்குரியவர்களே! சாதாரண செய்தியா இது?
தவ்ஹீத் -லா இலாஹ இல்லல்லாஹ் -செய்திகளில் பெரிய செய்தி. அல்லாஹ்வின் கட்டளைகளில் மிக மகத்தானது இந்த தவ்ஹீத் தான்.
அல்லாஹ் கூறுகிறான்,
وَاعْبُدُوا اللَّهَ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا
அல்லாஹ்வை வணங்குங்கள். அவனுக்கு எதையும் இணை ஆக்காதீர்கள். (அல்குர்ஆன் 4 : 36)
எங்கெல்லாம் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவனது வேத சட்டங்களை சொல்கிறானோ அங்கெல்லாம் தவ்ஹீதை ஆரம்பம் செய்கிறான்.
قُلْ تَعَالَوْا أَتْلُ مَا حَرَّمَ رَبُّكُمْ عَلَيْكُمْ أَلَّا تُشْرِكُوا بِهِ شَيْئًا
நபியே! நீங்கள் சொல்லுங்கள், உங்களுக்கு அல்லாஹ் தடுத்தவற்றை நான் ஓதிக் காட்டுகிறேன். அல்லாஹ்விற்கு எதையும் இணையாக்காதீர்கள். அவனுக்கு ஷிர்க் செய்து விடாதீர்கள். (அல்குர்ஆன் 6 : 151)
தன்னுடைய ஹபீப் முஹம்மது ﷺஅவர்களைப் பார்த்து அல்லாஹ் கூறுகிறான்,
وَلَا تَجْعَلْ مَعَ اللَّهِ إِلَهًا آخَرَ فَتُلْقَى فِي جَهَنَّمَ مَلُومًا مَدْحُورًا
வசனத்தின் கருத்து : முஹம்மதே! (அல்லாஹ்வுடன் இன்னொருவரை சேர்த்து வணங்கி விடாதீர்கள். வணக்கம், வழிபாடு, கீழ்ப்படிதல், பணிதல், அஞ்சுதல், அனைத்தும் அல்லாஹ் ஒருவனுக்கு தான். இந்த ரப்புடன் இன்னொருவரை நீங்கள் வணங்கி விடாதீர்கள். அப்படி நீங்கள் வணங்கினால், நீங்கள் நரகத்தில் (ஜஹன்னமில்) தூக்கி எறியப்படுவீர்கள். கேவலப்படுத்த பட்டு இழிவு படுத்தபட்டு எறியப்படுவீர்கள். (அல்குர்ஆன் 17 : 39)
எப்படிப்பட்ட எச்சரிக்கை! தன் நபியைப் பார்த்து அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.
அன்புக்குறியவர்களே! தவ்ஹீத் சாதாரண ஒரு செய்தி அல்ல. நம் வாழ்க்கையின் மூச்சு அது. தவ்ஹீதுக்காக வேண்டி யார் ஒருவர் தனது உயிரைக் கொடுக்க வில்லையோ அவர் ஒரு முஸ்லிமாக இருக்க முடியாது.
அவர் தவ்ஹீதில் நிலைக்க முடியாது. ரப்புல் ஆலமீன் அல்லாஹ்வுக்கு வணக்க வழிபாடுகளில் வேறு ஒருவரை இணையாக்க நிர்பந்திக்கப் பட்டால் அங்கு தான் ஹிஜ்ரா கடமை ஆகிறது. அங்கு தான் ஜிஹாத் கடமை ஆகிறது.
ரப்புல் ஆலமீனை மட்டும் தான் முஸ்லிம்களாகிய நாங்கள் வணங்குவோம். இதுதான் எங்கள் வரலாறு. இந்த வரலாற்றில்தான் தூதர்கள் சென்றிருக்கிறார்கள்.
ஒரு முஸ்லிம் புரட்சி செய்வானென்று சொன்னால், ஒரு முஸ்லிம் போராடுவானென்று சொன்னால், ஒரு முஸ்லிம் தன் இரத்தத்தை சிந்துவானென்று சொன்னால், தன் தாய், தந்தை மற்றும் சகோதரனைக் கூட தனக்கு எதிரியாக பார்ப்பானென்று சொன்னால் அதற்கு ஒரே காரணம் அங்கே தவ்ஹீத் - லா இலாஹ இல்லல்லாஹ் இருப்பதுவே.
நம்முடைய நேசம், அன்பு, உறவு இந்த கலிமா லா இலாஹ இல்லல்லாஹ் மீது தான். யார் இதை நேசிக்கிறார்களோ, யார் இதை அங்கீகரிக்கிறார்களோ, யார் இதற்காக உழைக்கிறார்களோ அவர்கள் நம்முடைய நேசர்கள்.
யார் இதை எதிர்த்து பேசுகிறார்களோ யார் அல்லாஹ்வுடன் வேறு ஒருவரை வணங்க நிர்பந்திக்கிறார்களோ அவர்கள் நம் எதிரிகள்.
யார் இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம்அவர்களுடைய எதிரியாக இருந்தார்களோ ! யார் முஹம்மது ﷺஅவர்களுடைய எதிரியாக இருந்தார்களோ அவர்கள் மறுமை நாள் வரை வரக்கூடிய முஸ்லிம்களின் எதிரியாக இருக்க வேண்டும்.
நபி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம்யாரை எதிரியாக தங்களது தந்தையை எதிரியாக பார்த்தார்கள். அல்லாஹ்வைத்தவிர இன்னொரு சிலையை வணங்கக் கூடிய தனது தந்தையைப் பார்த்துகூறினார்கள்.
وَأَعْتَزِلُكُمْ وَمَا تَدْعُونَ مِنْ دُونِ اللَّهِ وَأَدْعُو رَبِّي عَسَى أَلَّا أَكُونَ بِدُعَاءِ رَبِّي شَقِيًّا
உன்னைவிட்டு நான் விலகிக் கொள்கிறேன். உன்னுடைய அந்தக் கூட்டம் வணங்கிக் கொண்டிருக்கும் அந்த சிலைகளை விட்டும் விலகிக் கொள்கிறேன்.எனது ரப்பு ஒருவனிடத்தில் மட்டும் தான் நான் பிரார்த்திப்பேன். அவனை மட்டும் தான் நான் வணங்குவேன். (அல்குர்ஆன் 19 : 48)
மேலும் அல்லாஹ் கூறுகிறான்,
قَدْ كَانَتْ لَكُمْ أُسْوَةٌ حَسَنَةٌ فِي إِبْرَاهِيمَ وَالَّذِينَ مَعَهُ إِذْ قَالُوا لِقَوْمِهِمْ إِنَّا بُرَآءُ مِنْكُمْ وَمِمَّا تَعْبُدُونَ مِنْ دُونِ اللَّهِ كَفَرْنَا بِكُمْ وَبَدَا بَيْنَنَا وَبَيْنَكُمُ الْعَدَاوَةُ وَالْبَغْضَاءُ أَبَدًا حَتَّى تُؤْمِنُوا بِاللَّهِ وَحْدَهُ
வசனத்தின் கருத்து : இப்ராஹீமில் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. அவரைக் கொண்டு ஈமான் கொண்ட மக்களில் உங்களுக்கு அழகிய முன் மாதிரி இருக்கிறது. நாங்கள் உங்களை விட்டும் நீங்கள் வணங்கும் சிலைகளை விட்டும் விலகிக் கொள்ளுகிறோம். நமக்கும் உங்களுக்கும் இடையே பகைமை ஏற்பட்டு விட்டது. உங்களை நாங்கள் நிராகரிக்கிறோம். நீங்கள் வணங்கும் சிலைகளை, கடவுள்களை, அந்த பொய்யான தெய்வங்களை, பொய்யான வணக்க வழிபாடுகளை நாங்கள் மறுக்கிறோம். நாங்கள் அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்கக் கூடியவர்கள். (அல்குர்ஆன் 60 : 4)
அந்த மக்கள் பயமுறுத்தினார்கள். அச்சுறுத்தினார்கள். ஆட்சியைக் கொண்டு, அதிகாரத்தைக் கொண்டு, படை பலத்தை கொண்டு பெரும்பான்மையைக் கொண்டு பயமுறுத்தினார்கள்.
இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் சொன்னார்கள்,
وَكَيْفَ أَخَافُ مَا أَشْرَكْتُمْ وَلَا تَخَافُونَ أَنَّكُمْ أَشْرَكْتُمْ بِاللَّهِ
வசனத்தின் கருத்து : முட்டாள்களே! மடையர்களே!அல்லாஹ்விற்கு சமமாக மற்ற கடவுள்களை வணங்குகிறீர்கள். அதை நீங்கள் பயப்படுவதில்லை. ரப்புல் ஆலமீனை பயப்படுவது கிடையாது. நீங்கள் வணங்க கூடிய இந்த பொய்யான கற்பனை சிலைகளையா நான் பயப்பட போகிறேன்? நான் பயப்பட மாட்டேன், அல்லாஹ் ஒருவனை தவிர. (அல்குர்ஆன் 6 : 81)
என்ன நடந்தது? எத்துணை போராட்டங்களை நபி இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம்அவர்கள் சந்தித்தார்கள்!? அவர்கள் வழியில் வந்த முஹம்மது ﷺஅவர்களுக்கு இந்த தவ்ஹீதுக்காக எத்துணை கொடுமைகள் நிகழ்த்தபட்டன!?எத்துணை சோதனைகளை அவர்கள் சந்தித்தார்கள்!?
அன்புக்குரியவர்களே! இந்த தவ்ஹீதைக் கொண்டுதான் அல்லாஹ் நம் உறவை நிர்ணயம் செய்கிறான். இந்த தவ்ஹீதை இழந்த பிறகு இந்த உலகத்தில் வாழ்வதில் நன்மை கிடையாது. நரகம் தான் மிச்சமாகும்.
இந்த தவ்ஹீத்தான் குர்ஆனுடைய மொத்த சாராம்சம். இந்த தவ்ஹீதுக்காக தான் அல்லாஹ் குர்ஆனை இறக்கினான். குர்ஆனுடைய வரலாறுகளை நமக்கு சொல்கிறான்.
எத்துணை வரலாறுகளை அல்லாஹ் நமக்கு சொல்கிறான் பாருங்கள்!குகைவாசிகள் என்ற சம்பவத்தை நீங்கள் படித்து பார்க்கலாம்.
18-வது அத்தியாயத்துடைய மிக முக்கியமான சம்பவமே அந்த குகைவாசிகள் சம்பவம் தான். அல்லாஹு ரப்புல் ஆலமீன் அதில் நமக்கு என்ன சொல்கிறான்?
وَرَبَطْنَا عَلَى قُلُوبِهِمْ إِذْ قَامُوا فَقَالُوا رَبُّنَا رَبُّ السَّمَاوَاتِ وَالْأَرْضِ لَنْ نَدْعُوَ مِنْ دُونِهِ إِلَهًا لَقَدْ قُلْنَا إِذًا شَطَطًا
அவர்களுடைய உள்ளங்களையும் (நேரான வழியில்) நாம் உறுதியாக்கி விட்டோம். (அவர்கள் காலத்திலிருந்த அரசன் அவர்களை சிலைவணக்கம் செய்யும்படி நிர்ப்பந்தித்த சமயத்தில்) அவர்கள் எழுந்து நின்று ‘‘வானங்களையும் பூமியையும் படைத்தவன்தான் எங்கள் வணக்கத்திற்குரிய இறைவன். அவனைத் தவிர (வேறொருவரையும் வணக்கத்திற்குரிய) இறைவனாக நாங்கள் நிச்சயமாக அழைக்க மாட்டோம். (அப்படி அழைத்தால்) நிச்சயமாக நாங்கள் அடாத வார்த்தையைக் கூறியவர்களாவோம்'' என்றார்கள். (அல்குர்ஆன் 18 : 14)
வசனத்தின் கருத்து : சில வாலிபர்கள், அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும் என்ற கொள்கையில் உள்ளவர்கள். வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வைத் தவிர யாருக்கும் செய்ய கூடாது என்ற உறுதியில் உள்ளவர்கள். ஊர் மக்கள் எல்லாம் சேர்ந்து அவர்களை நிர்பந்திக்கிறார்கள்; சிலைகளை வணங்கு, ராஜாக்களை வணங்கு, அரசாங்கத்தை வணங்கு என்பதாக.
அந்த வாலிபர்கள் சொல்கிறார்கள், முடியாது, நீங்கள் அநியாயக்கார மக்கள். அல்லாஹ்வின் மீது பொய் சொல்லக் கூடியவர்கள். அல்லாஹ்வை தவிர யார் மற்ற ஒன்றை வணங்குகிறார்களோ அவர்கள் அல்லாஹ்வின் மீது மிக பெரிய அபாண்டத்தை பழியை சுமத்துகிறார்கள்.
எங்களுடைய இறைவன் யார் தெரியுமா? யாரை நாங்கள் வணங்குவோம் தெரியுமா? வழிபாடு என்ற ஒன்றை நாங்கள் யாருக்கு செய்வோம் தெரியுமா?
வானங்களையும் பூமியையும் படைத்த இறைவனுக்கு தான் நாங்கள் வழிபாடுகள் வணக்கங்களை செய்வோம். எங்களுடைய பணிவு, மரியாதை, பயம்,நேர்ச்சை இவை அனைத்தும் அந்த ரப்புல் ஆலமீன் ஒருவனுக்கு மட்டும்தான் நாங்கள் சொந்தமாக்குவோம். அவனைத் தவிர வேறு யாருக்கும் நாங்கள் சொந்தமாக்க மாட்டோம்.
இந்த உறுதியை அவர்கள் கூறும்போது அந்த மக்கள் எல்லாம் அவர்களுக்கு எதிரிகளாக மாறுகிறார்கள்.
அன்புக்குரியவர்களே! இஸ்லாம் இருக்கும் என்றால் அங்கே நாம் வாழலாம். எங்கே தவ்ஹீதை பேணி வாழ முடியவில்லையோ அது எந்த பூமியாக இருந்தாலும் அங்கே நாம் வாழ முடியாது. வாழக் கூடாது. வசிக்க கூடாது. இது அல்லாஹ்வின் கட்டளை.
அல்லாஹ் புனிதப் படுத்திய கண்ணியப் படுத்திய அந்த மக்கா மாநகரம்.
إِنَّ أَوَّلَ بَيْتٍ وُضِعَ لِلنَّاسِ لَلَّذِي بِبَكَّةَ مُبَارَكًا وَهُدًى لِلْعَالَمِينَ
இந்த பூமியில் முதலாவதாக அல்லாஹ் ஒருவனை மட்டுமே வணங்குவதற்காக கட்ட பட்ட வீடு கஅபா. (அல்குர்ஆன் 3 : 96)
அது இருக்கும் இடம் மக்கா நகரம். அல்லாஹ் சொல்கிறான்,
لَا أُقْسِمُ بِهَذَا الْبَلَدِ
அதன் மீது நான் சத்தியம் செய்கிறேன் என்று சொல்கிறான். (அல்குர்ஆன் 90 : 1)
எத்துணை அழகான பெயர்களை பண்புகளை அங்கே சொல்லுகிறான்! அந்த ஊரில் கூட அல்லாஹ்வை வணங்க முடியவில்லையோ என்று சொன்னால், அல்லாஹ்வை வணங்க தடை என்று சொன்னால் தன்னுடைய ஹபீபுக்கு அல்லாஹ் சொல்கிறான்
தன்னுடைய ஹபீப் பிறந்த ஊர். தன்னுடைய வீடு இருக்கின்ற ஊர். தன்னுடைய நபி இஸ்மாயில் இருந்த ஊர். தன்னுடைய நபி இப்ராஹிம் கட்டி தந்த அந்த பள்ளிவாசல் இருக்கின்ற ஊர். நபியே அந்த ஊரை விட்டும் வெளியேறுங்கள்.
அன்புக்குரியவர்களே! புனிதம் எங்கே இருக்கும்? தவ்ஹீத் எங்கே இருக்குமோ அங்கே புனிதம் இருக்கும். ஒரு முஃமின் எங்கே இருப்பான்? எங்கே தவ்ஹீத் இருக்குமோ அங்கே இருப்பான். தவ்ஹீத் இல்லாத இடத்தில் முஃமினால் வாழ முடியாது. முஸ்லிமால் வாழ முடியாது. தவ்ஹீத் இல்லாத இடத்தில் ஒருவன் வாழ்கிறான் என்று சொன்னால் அவன் முஸ்லிம் அல்ல.
அல்லாஹ் கூறுகிறான் :
إِنَّ الَّذِينَ تَوَفَّاهُمُ الْمَلَائِكَةُ ظَالِمِي أَنْفُسِهِمْ قَالُوا فِيمَ كُنْتُمْ قَالُوا كُنَّا مُسْتَضْعَفِينَ فِي الْأَرْضِ قَالُوا أَلَمْ تَكُنْ أَرْضُ اللَّهِ وَاسِعَةً فَتُهَاجِرُوا فِيهَا فَأُولَئِكَ مَأْوَاهُمْ جَهَنَّمُ وَسَاءَتْ مَصِيرًا
எவர்கள் (தங்கள் மார்க்கக் கட்டளையை சரிவர நிறைவேற்ற முடியாமல் நிராகரிப்பவர்களின் நாட்டில் இருந்து கொண்டு) தங்களுக்குத் தாமே தீங்கிழைத்துக் கொள்கின்றனரோ அவர்களின் உயிரை வானவர்கள் கைப்பற்றும்பொழுது (அவர்களை நோக்கி ‘‘மார்க்கக் கட்டளையை நிறைவேற்றாது) நீங்கள் எவ்வாறு இருந்தீர்கள்'' என்று கேட்பார்கள். அ(தற்க)வர்கள் ‘‘அந்தப் பூமியில் நாங்கள் சிறுபான்மையினர்களாகவே இருந்தோம்'' என்று (பதில்) கூறுவார்கள். (அதற்கு வானவர்கள்) அல்லாஹ்வுடைய பூமி விசாலமானதல்லவா? நீங்கள் (இருந்த) அவ்விடத்தை விட்டு வெளியேறி இருக்கவேண்டாமா?'' என்று கேட்பார்கள். இவர்களின் ஒதுங்குமிடம் நரகம்தான். அது ஒதுங்கும் இடங்களில் மிகக் கெட்டது! (அல்குர்ஆன் 4 : 97)
இந்த தவ்ஹீதில் ஒரு முஸ்லிமுக்கு சமரசம் இருக்க முடியாது. ஒரு நபி கூட சமரசம் செய்ய முடியாது.
ரசூலுல்லாஹ் ﷺஅவர்களிடத்தில் குறைஷிகள் வந்து கேட்டார்கள், நபியே! ஒரு உடன்படிக்கை செய்து கொள்வோம். எங்களுடைய சிலைகளை நீங்கள் ஓராண்டு வணங்குங்கள். உங்களுடைய ரப்பை நாங்கள் ஓராண்டு வணங்குகிறோம்.
நபியின் பதில் முடியாது.எங்களுடைய சிலைகளை ஒரு மாதம் வணங்குங்கள். உங்களுடைய ரப்பை ஒரு மாதம் வணங்குகிறோம். நபியின் பதில் முடியாது.
ஒரு நாளைக்கு நீங்கள் எங்கள் சிலைகளையும், நாங்கள் உங்கள் ரப்பையும் மாற்றி மாற்றி வணங்கலாம். அல்லது ஒரு முறையாவது அல்லது குறைந்தபட்சம் எங்கள் சிலைகளை ஏசாதீர்கள். எங்களுடைய பொய்யான கடவுள்களை விமர்சிக்காதீர்கள்.
அல்லாஹ் வசனத்தை இறக்கினான்:
قُلْ يَاأَيُّهَا الْكَافِرُونَ (1) لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ (2) وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ
காஃபிர்களே -அல்லாஹ்வை வணங்க மறுப்பவர்களே! நீங்கள் வணங்கக் கூடியவற்றை நான் வணங்க மாட்டேன். நான் வணங்கக் கூடிய ரப்பை நீங்கள் வணங்கவில்லை. (அல்குர்ஆன் 109 : 1-3)
உங்களுக்கும் எனக்கும் இடையில் பெரிய இடைவெளி இருக்கிறது. உங்களுடைய வழிபாடு பொய்யானது. அதற்கான தண்டனையை நீங்கள் அனுபவிப்பீர்கள். என்னுடைய வழிபாடு உண்மையானது. அதற்குரிய கூலியை நான் என் இறைவனிடத்திலிருந்து பெறுவேன்.
இன்று, இந்த தவ்ஹீதில் சமரசம் செய்து கொள்வதற்கு, இந்த ஏகத்துவத்தில் சமரசம் செய்தி கொள்வதற்கு பலர் தங்களை முஸ்லிம் என்று சொல்பவர்கள் தயாராகி விட்டார்கள்.
இந்த தவ்ஹீதை புறந்தள்ளிவிட்டு, இந்த தவ்ஹீதுடைய முழக்கத்தை தள்ளிவிட்டு, உலகத்தினுடைய பிரச்சனைகள் தான் அவர்களுக்கு முதல் பிரச்சனையாக தெரிகிறது
அல்லாஹ்வைத் தவிர யாரை வணங்கவேண்டி இருந்தாலும் அது பேப்பரையோ, போட்டோக்களையோ, ஆட்சியையோ, அதிகாரத்தையோ அல்லது அதில் உள்ளவர்களையோ யாரை வேண்டுமானாலும் நாங்கள் வணங்குவோம் எங்களுக்கு தேவை எங்கள் உலக பிரச்சனைகள் தீர வேண்டும். எங்களுக்கு தேவை எங்களுக்கு படிப்பு வேண்டும். எங்களுக்கு வேலை வேண்டும்.
அன்பிற்குரியவர்களே! தவ்ஹீதை இழந்து இந்த துன்யாவை ஒருவன் சம்பாதிக்கிறான் என்று சொன்னால், இந்த துன்யாவில் மிக பெரிய வாழ்வான உயிரை ஒருவன் சம்பாதிக்கிறான் என்று சொன்னால், அவன் முன்கூட்டியே நரகத்தில் தன்னுடைய இருப்பிடத்தை வாங்கி கொண்டான்.
தாரிக் இப்னு ஷிஹாப் அவர்கள் அறிவிக்கின்றார்கள். இமாம் அஹமது ஹம்பல் அவர்கள் தங்களது நூலான அஸ்ஸுஹ்தில் பதிவு செய்கிறார்கள்.
ரஸூலுல்லாஹி ﷺகூறுகிறார்கள்,
«دَخَلَ رَجُلٌ الْجَنَّةَ فِي ذُبَابٍ، وَدَخَلَ النَّارَ رَجُلٌ فِي ذُبَابٍ»
ஒரு ஈயின் காரணமாக ஒருவர் சொர்க்கத்தில் நுழைந்தார், ஒரு ஈயின் காரணமாக ஒருவர் நரகத்தில் நுழைந்தார்.
ஸஹாபாக்கள் கேட்டார்கள், யா ரசூலுல்லாஹ்! அது எப்படி? அதனுடைய விவரம் என்ன? விளக்கம் என்ன?
அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்கள் பதில் சொன்னார்கள், இரண்டு மனிதர்கள் ஒரு கூட்டத்தார் வசிக்கக் கூடிய ஊரை கடந்து செல்கின்றார்கள். அந்த கூட்டத்தார்கள் தங்களுக்கு என்று ஒரு சிலையை வைத்து வழிபாடு செய்து கொண்டு இருந்தார்கள். அந்த ஊர் வழியாக யார் கடந்து சென்றாலும் அவர்களை பிடித்து வந்து, இந்த சிலைக்கு எதாவது வழிபாடு செய், இந்த சிலைக்கு முன்னால் எதாவது நேர்ச்சை செய்து விட்டு அறுத்து பலியிட்டு விட்டு செல்என்பதாக சொல்வார்கள்.
யார் அறுத்துப் பலியிடுகின்றார்களோ அவர்களை பத்திரமாக விட்டுவிடுவார்கள். யார் அறுத்துப் பலியிட வில்லையோ அவர்களின் தலையை சீவி விடுவார்கள். கொன்று விடுவார்கள்.
இது அந்த ஊருடைய பழக்கம். இந்த இரண்டு முஸ்லிம்களும் அந்த வழியாக சென்ற போது, இது போன்றே அந்த ஊர் மக்கள் அவர்களை அழைத்து சொல்கின்றார்கள். உங்கள் இருவருக்கும் சொல்கிறோம்; முந்தி வந்தவர்களின் நிலைமையைப் பார்த்து கொள்ளுங்கள். இந்த சிலைக்கு நீங்கள் எதாவது தியாகம் குர்பானி செய்து விடுங்கள். நேர்ச்சை செய்து விடுங்கள். அறுத்துப் பலியிடுங்கள்.
அதில் ஒருவன் சொல்கிறான், என்னிடத்தில் எதுவும் இல்லையே! நான் எப்படி இதற்காக வேண்டி வழிபாடுகளை செய்வது? அறுத்துப் பலியிடுவது? இதற்கு வணக்கமாக சமர்பிப்பதற்கு என்னிடத்தில் எதுவுமே இல்லையே! என்று.
அவன் சொன்னவுடன் அவர்கள் சொன்னார்கள், ஒரு ஈயை பிடித்தாவது அதை நசுக்கி விட்டு செல். பலியிட்டு செல். இந்த சிலையின் பெயரை கூறி, இந்த சிலைக்காக ஒரு ஈயையாவது பலியிட்டு சென்று விடு.
எனவே, அவரும்ஒரு ஈயை பிடித்து அந்த சிலைக்காக பலியிட்டு விட்டு சென்று விட்டார். மக்கள் அவரை பத்திரமாக விட்டு விட்டார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் ﷺசொன்னார்கள், அவர் நரக நெருப்பில் நுழைந்து விட்டார்.
இன்னொரு மனிதரிடத்தில் சொல்கின்றார்கள். இந்த சிலைக்கு நீ நேர்ச்சை செய், அறுத்து பலியிடு என்பதாக.
அவர் சொன்னார்;அல்லாஹுவை தவிர,வேறு யாருக்கும் வழிபாடுகளை செய்ய மாட்டேன். பலியிட மாட்டேன். இது என்னுடைய கொள்கை. இது என்னுடைய நோக்கம். இது என்னுடைய குறிக்கோள். இதிலிருந்து நான் அடி பிறழ மாட்டேன்.
(எதை செய்தாலும் அல்லாஹ்வை தவிர மற்றவர்களுக்கு வணக்க வழிபாடுகளை செய்தால் அது தான் இணை வைத்தல்.இணை வைத்தல் என்பது ஒரு நிமிடம் நடந்தாலும் கூட, ஒரு ஈயின் அளவு இருந்தாலும் கூட மன்னிக்கப்பட முடியாத குற்றம் அது.)
இப்படி அவர் கூறியவுடன் அவர் தலையை சீவி விடுகிறார்கள். ரஸூலுல்லாஹி ﷺ சொன்னார்கள், அவர் சொர்கத்தில் நுழைந்தார். (5)
அறிவிப்பாளர் : தாரிக் இப்னு ஷிஹாப் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அஸ்ஸுஹ்த் லிஅஹ்மத் இப்னு ஹன்பல், எண் : 84, தரம் : ளயீஃப்.
அன்பிற்குரியவர்களே! இந்த தவ்ஹீதுடைய நிலைமை நமது முஸ்லிம்களிடத்தில் நாளுக்கு நாள் பலவீனமாகிக் கொண்டிருக்கிறது. இந்த தவ்ஹீதை பற்றி கவனம் செய்பவர்கள், இந்த தவ்ஹீதுக்காக வாழக் கூடியவர்கள், இந்த தவ்ஹீதை வாழ்க்கையின் குறிக்கோளாக கொண்ட சமுதாயம் காண கிடைப்பது கிடையாது.
மாற்றார்களை போன்று எத்துணை பிரச்சனைகளை இந்த உலகத்தில் அவர்கள் பார்க்கிறார்களோஅது தான் அவர்களின் பிரச்சனையாக இருக்கிறது.
வாழ்க்கை பிரச்சனை, அன்றாட பிரச்சனை, நாட்டின் பிரச்சனை, சமுதாயத்தில் உள்ள ஏனைய பிரச்சனை தான் அவர்களுக்கு பிரச்சனையாக கண்ணுக்கு தெரிகின்றதே தவிர, தவ்ஹீத் -லா இலாஹ இல்லல்லாஹ் ஒரு பொருட்டாக தெரிவதில்லை.
எந்த லா இலாஹ இல்லல்லாஹ்விற்காக நபி அவர்களுடைய சாச்சா படுகொலை செய்யப் பட்டாரோ, நபி விரட்ட பட்டார்களோ, நபியுடைய குடும்பம் தொந்தரவுக்கு ஆளாக்கபட்டதோ, எந்த லா இலாஹ இல்லல்லாஹ்விற்காக நபியினுடைய பல் உடைக்கப்பட்டதோ, எந்த லா இலாஹ இல்லல்லாஹ்விற்காக சஹாபாக்களின் உயிர்கள் பத்ரில், உஹதில், ஹந்தகில், தபூக்கில் ஓட்டப் பட்டனவோ, எந்த லா இலாஹவிற்காக வேண்டி ஸஹாபாக்கள் வாழ்ந்தார்களோ, நபிமார்கள் வாழ்ந்தார்களோ, அந்த லா இலாஹ இல்லல்லாஹ்வை குறிக்கோளாக கொண்ட சமுதாயம் எங்கே?
அந்த லா இலாஹ இல்லல்லாஹுவை ஏற்றுக்கொண்டு அவர்களை போன்று இந்த லா இலாஹ இல்லல்லாஹ்விற்காக எதையும் செய்ய தயாராக இருக்கும் சமுதாயம் எங்கே?
லா இலாஹ இல்லல்லாஹ்விற்கு பிறகு தான் தொழுகை, அதற்கு பிறகு தான் நோன்பு, அதற்கு பிறகு தான் ஜக்காத், அதற்கு பிறகு தான் ஹஜ். வணக்க வழிபாடுகள் எதுவாக இருந்தாலும் சரி.
இந்த லா இலாஹ இல்லல்லாஹ்வில் சமரசம் செய்து கொண்ட பிறகு, இதை அழித்து நாசமாக்கிய பிறகு, யாரை வேண்டுமானாலும், யாருக்கு வேண்டுமானாலும், வணக்க வழிபாடுகள் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்ற கொள்கைக்கு பிறகு, அந்த சமரசத்திற்கு பிறகு, வணக்க வழிபாடுகள் பலனளிக்காது. நாளை மறுமையில் வெற்றி அடைய முடியாது.
தலைப்பு : லா இலாஹ இல்லல்லாஹ்
தொடர் : 2.
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வின் மிகப்பெரிய அருள், அல்லாஹுவுடைய மிகப் பெரிய கருணை, அவன் நம்மை முஸ்லிம்களாக ஆக்கி இருப்பது. நம்பிக்கை, ஈமான் உடையவர்களில் நம்மை அல்லாஹ் படைத்திருப்பது. இது அல்லாஹ்வுடைய மிக பெரிய அருள்.
இந்த ஈமானை யார் அடைந்தார்களோ அவர்கள் இந்த உலகத்திலும் சரி மறுமையிலும் சரி அல்லாஹுவின் பார்வையில் கண்ணியம் அடைந்தவர்கள்.
இந்த உலகத்தில் வேண்டுமானால் சிலரிடத்தில் அல்லது பலரிடத்தில் செல்வம் இல்லாமல் இருக்கலாம். ஆட்சி இல்லாமல் இருக்கலாம், அதிகாரம் இல்லாமல் இருக்கலாம்.
ஆனால், மறுமையில் இவர் மரணித்த பிறகு அல்லாஹுவிடத்தில் மிகப் பெரிய கண்ணியத்திற்கு உரித்தானவராக, அல்லாஹுவுடைய அன்புக்கு உரித்தானவராக, அருளுக்கு உரித்தானவராக, நிரந்தர சொர்க்க வாழ்க்கைக்கு உரித்தானவராக அவரை அல்லாஹ் ஆக்குவான்.
ஈமான் இல்லையென்றால், இவ்வுலக வாழ்க்கையில் ஆட்சி, அதிகாரம், செல்வம், வசதியான வாழ்க்கை, செழிப்பான வாழ்க்கையை அவர் அடைந்து கொண்ட போதிலும் நாளை மரணத்திற்கு பிறகு உள்ள வாழ்க்கையில் நிரந்தர நரகத்தில், பற்றி எரியும் நெருப்பில் எரிந்து கொண்டிருப்பான்.
ஈமானை யார் பெற்றார்களோ அவர்கள் வெற்றி அடைந்தார்கள். யார் ஈமானை இழந்தார்களோ அவர்கள் தோற்று விட்டார்கள்.
உலகத்தில், அல்லாஹ் ரப்புல் ஆலமீன் மனிதனை படைத்ததிலிருந்து, எப்பொழுது ஷைத்தான் மனிதர்களை நிரந்தர நரகத்தில் தள்ளுவதற்காக ஷிர்க்கை உருவாக்கினானோ, இந்த ஈமானுக்கும் ஷிர்கிற்கும் இடையே உள்ள போராட்டம் தொடர்ந்தது, தொடர்ந்து கொண்டே இருக்கும், மறுமை நாள் வரும் வரை, அல்லது இந்த உலகத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சொந்தமாக்கி கொள்ளும் வரை.
அல்லாஹு தஆலா நம்பிக்கை கொண்டவர்களை, தவ்ஹீதை ஏற்றுக்கொண்டவர்களை, லா இலாஹ இல்லல்லாஹுவை கூறியவர்களை, அல்லாஹ் சோதிப்பான்.
உன்னுடைய ஈமான் எப்படி இருக்கிறது? இந்த தவ்ஹீதில், அவனை மட்டுமே வணங்குவதில், அவனுக்கு மட்டுமே வழிபாடுகளை சொந்தமாக்கி வைப்பதில் உன்னுடைய நிலைபாடு என்ன? நீ எந்த நிலையில் இருக்கிறாய்? என்பதை அல்லாஹ் சத்தியமாக சோதிப்பான். சோதிக்காமல் யாரையும் அல்லாஹ் முஃமின்களாக ஏற்று கொள்வது கிடையாது. இது அல்லாஹ்வுடைய வாக்கு, அல்லாஹ்வுடைய சத்தியம்.
அல்லாஹ் சூரா அன்கபூதில் கூறுகிறான் :
أَحَسِبَ النَّاسُ أَنْ يُتْرَكُوا أَنْ يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ
கருத்து : மக்கள் எண்ணி கொண்டார்களா? லா இலாஹ இல்லல்லாஹுவை கூறிய விட்டு நாங்கள் முஃமீன்கள் என்று சொல்லி விட்டால் அப்படியே அவர்கள் விட்டு விடுபடுவார்கள். அவர்கள் சோதிக்க படாமல் என்று எண்ணி கொண்டார்களா? (அல்குர்ஆன் 29 : 2)
அல்லாஹுவின் எச்சரிக்கையைப் பாருங்கள், அடுத்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான் :
وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ
இவர்களுக்கு முன்னிருந்தவர்களை எல்லாம் நிச்சயமாக நாம் சோதித்தே இருக்கிறோம். ஆகவே, (நம்பிக்கை கொண்டோம் என்று கூறுகின்ற) இவர்களில் உண்மை சொல்பவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் (சோதித்து) அறிந்து கொள்வான். (அவ்வாறே இதில்) பொய் சொல்பவர்கள் எவர்கள் என்பதையும் நிச்சயமாக அவன் (சோதித்து) அறிந்து கொள்வான். (அல்குர்ஆன் 29 : 3)
வசனத்தின் கருத்து : இவர்களுக்கு முன் உள்ளவர்களை திட்ட வட்டமாக நாம் சோதித்தோம்.எதற்காக அந்த சோதனை? அல்லாஹ் உண்மையாளர்கள் யார்? பொய்யர்கள் யார்?என்பதைபிரித்து அறிய விரும்புகிறான்.
ஏன் சொர்க்கத்தைத் தர வேண்டும்?
وَمَوْضِعُ سَوْطِ أَحَدِكُمْ مِنَ الجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا عَلَيْهَا
எந்த சொர்க்கத்தின் உடைய ஒரு சாண் இடம், ஒரு சாட்டையின் இடம், இந்த முழு உலகத்தையும் அதில் உள்ள செல்வங்களையும் சொந்தமாக்கி கொள்வதை விட சிறந்ததோ அந்த சொர்க்கத்தின் இடத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தருவது என்று சொன்னால் சோதனை இல்லாமல், உண்மையான ஈமான் இல்லாமல் தருவது கிடையாது. (6)
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 9651, 10270.
சாதாரணமாக எண்ணிக் கொண்டீர்களா? சொர்க்கம் என்பது ஒரு சாதாரண பூங்காவா? நிரந்தரமான வாழ்க்கை, வெற்றிக்குரிய வாழ்க்கை, அல்லாஹ்வின் முகத்தை பார்க்கக் கூடிய வாழ்க்கை, அல்லாஹ்வின் அன்பை பார்க்கக் கூடிய வாழ்க்கை, அல்லாஹ்வின் கருணையை முழுமையாக அனுபவிக்கக் கூடிய வாழ்க்கை, அந்த வாழ்க்கையை சாதாரணமாக நீங்கள் தட்டி செல்லலாம் என்று எண்ணி கொண்டீர்களா? உங்களால் முடியாது.
அல்லாஹ் சொல்கிறான், உண்மையானவர்களுக்கு தான் நான் அதை கொடுப்பேன். பொய்யர்களுக்கு கிடையாது. ஈமானில் சுத்தமானவர்களுக்கு கொடுப்பேன்.
உண்மையான பூமி சொர்க்கம். ஈமானில் சுத்தமானவர்களுக்கு அந்த சொர்க்கம் கிடைக்கும். நாம் கூறிய லா இலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தை,இது இந்த நாவின் நுனியில் இருந்ததா? அல்லது தொண்டை வரைக்குமா? அல்லது கல்பு வரைக்குமா? அடுத்து செயல்பாடுகளிலும் இந்த லா இலாஹ இல்லல்லாஹ் வெளிப்பட்டதா? இல்லையா? என்பதை அல்லாஹு ரப்புல் ஆலமீன் பிரித்து விடுகின்றான்.
யாருடைய உள்ளத்தில் இறங்கவில்லையோ, யாருடைய செயல்களில் வெளிபட வில்லையோ இவர்களை எல்லாம் அல்லாஹ் பொய்யர்கள் என்று பிரித்து விடுகின்றான். பொய்யர்களுக்கு நாளை மறுமையில் சொர்க்கம் கிடையாது. பொய்யர்களுக்கு நாளைஅல்லாஹுவுடைய பொருத்தம் கிடையாது.
பொய்யர்களில் மிகப் பெரிய பொய்யர்கள் யார் என்றால், யார் இந்த லா இலாஹ இல்லல்லாஹுவை நாவால் கூறிவிட்டு உள்ளத்தால் உறுதி கொள்ள வில்லையோ,யார் செயல் வடிவத்தால் அதை நிரூபிக்கவில்லையோ,இந்த லா இலாஹ இல்லல்லாஹ்விற்காக வேண்டி சோதனைகளை ஏற்று கொள்ளவில்லையோ,அவர்கள் பொய்யர்கள்.
யார் இந்த லா இலாஹ இல்லல்லாஹ்வில் சமரசம் செய்து கொண்டார்களோ, அவர்கள் பொய்யர்கள். யார் இந்த லா இலாஹ இல்லல்லாஹுவில் விட்டு கொடுத்தார்களோ அவர்கள் பொய்யர்கள். யார் இந்த லா இலாஹ இல்லல்லாஹுவில் அனுசரணை செய்தார்களோ அவர்கள் பொய்யர்கள்.
எந்த சமரசமும் இல்லை. இதில் எந்த விதமான விட்டு கொடுக்க கூடிய தருணமும் கிடையாது. அல்லாஹ் ஒருவனை தான் வணங்க வேண்டும். அவன் தான் வணங்க தகுதியானவன்.
வணக்கம் என்ற வார்த்தையாக இருக்கட்டும், வழிபாடுகள் என்ற செயல்களாக இருக்கட்டும், எதுவாயினும் சரி, என்னுடைய பணிவு, என்னுடைய அச்சம், என்னுடைய நம்பிக்கை, என்னுடைய ஆதரவு, என்னுடைய பணிதல், என்னுடைய சிரம்பணிதல், என்னுடைய நேர்ச்சை, என்னுடைய பிரார்த்தனை இவை அனைத்தும் என்னை படைத்து, இந்த ஆலம் அனைத்தையும் படைத்த ரப்புல் ஆலமீன் ஒருவனுக்கு மட்டும் தான் நான் பரிசுத்தமாக்கி செய்வேன்.
இதில் அவனைத் தவிர வேறு எவரையும், வேறு எதையும் கூட்டாக்கி கொள்வதற்கு எனக்கு அனுமதி இல்லை. இந்த லா இலாஹ இல்லல்லாஹ் யாருடைய வாழ்க்கையில உண்மையாக உறுதியானதோ இவர்கள் வெற்றி அடைவார்கள்.
இந்த லா இலாஹ இல்லல்லாஹ்விற்காக வேண்டி யார் சோதனைகளை தாங்கி கொண்டிருக்கிறார்களோ இவர்கள் வெற்றியடைவார்கள்.
இன்று, சர்வ சாதாரணமாக நம்முடைய வாழ்க்கையில் இந்த லா இலாஹ இல்லல்லாஹ்வின் பிரச்சனை ஆகி விட்டது. உலகத்தில் இன்று எதற்கு வேண்டுமானாலும் போராட்டங்கள். அற்ப விஷயங்களுக்கெல்லாம் இன்று பெரிய சர்ச்சை.
ஆனால் லா இலாஹ இல்லல்லாஹ்வைப் பற்றி சிந்திப்பவர்கள், இந்த லா இலாஹ இல்லல்லாஹ்வை நம்முடைய வாழ்க்கையில் நடைமுறைப் படுத்துவதில் இன்று நாம் எத்துனை குறைவுகளை செய்கின்றோம். எத்துனை அலட்சியங்களை செய்கின்றோம். அதைப் பற்றி சிந்திக்க கூடிய முஃமின்கள் எங்கே?
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கேட்கிறான்;
أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَعْلَمِ اللَّهُ الَّذِينَ جَاهَدُوا مِنْكُمْ وَيَعْلَمَ الصَّابِرِينَ
(நம்பிக்கையாளர்களே!) உங்களில் (அல்லாஹ்வுக்காக) போர் புரிபவர்கள் யார்? (சிரமங்களைப் பொறுமையுடன்) சகித்துக் கொள்பவர்கள் யார்? என்பதை அல்லாஹ் (பரிசோதித்து) அறிவதற்கு முன்னதாகவே நீங்கள் சொர்க்கம் நுழைந்துவிடலாம் என்று எண்ணிக்கொண்டு இருக்கிறீர்களா? (அல்குர்ஆன் 3 : 142)
இந்த வசனத்தை முதன்முதலில் முஹம்மது ﷺஅவர்களுக்கு அல்லாஹ் இறக்கினான். அபூபக்ர், உமர், உஸ்மான், அலி ரழியல்லாஹு அன்ஹும் போன்ற அந்த நபித்தோழர்களை பார்த்து அல்லாஹ் பேசுகிறான்.
இன்று,இந்த குர்ஆனுடைய வசனங்கள் சடங்குகளாக மாறி விட்டன. வாழ்க்கையில் சிந்திக்காமல், உணராமல், பொருளை அறியாமல் அன்றாடம் ஓதுவதற்கு உண்டான சடங்குகளாக இன்று குர்ஆன் ஆக்கப்பட்டு விட்டது.
தொழுகையில் ஓதுவதற்காக அல்லது ஒவ்வொரு நாளும் பரக்கத்தை தேடி ஓதுவதற்காக உள்ள வசனங்களாக மாற்றப்பட்டு விட்டனவே தவிர, அதன் பொருளுணர்ந்து, சிந்தித்து ஒரு புரட்சியை செய்வதற்காக வேண்டி உள்ள வசனங்களாக யார் பார்க்கிறார்கள்? யார் படிக்கிறார்கள்?
உங்களுடைய இந்த போராட்டத்தால் யாருக்கு லாபம்? அல்லாஹ்விற்கா? அல்லாஹ்வுடைய தீனிற்கா? சொர்க்கத்திற்கா? நீங்கள் இந்த லா இலாஹ இல்லல்லாஹுவை வாழ்க்கையில் உறுதிபடுத்துவதற்காக. அதை செயல்படுத்துவதற்காக. அதன் நன்மையை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உங்களுக்கு தருவான்.
அல்லாஹ் சொல்கின்றான்;
مَنْ كَانَ يَرْجُو لِقَاءَ اللَّهِ فَإِنَّ أَجَلَ اللَّهِ لَآتٍ وَهُوَ السَّمِيعُ الْعَلِيمُ (5) وَمَنْ جَاهَدَ فَإِنَّمَا يُجَاهِدُ لِنَفْسِهِ إِنَّ اللَّهَ لَغَنِيٌّ عَنِ الْعَالَمِينَ
எவர்கள் அல்லாஹ்வைச் சந்திப்போம் என நம்புகிறார்களோ அவர்கள் (அதற்கு வேண்டிய காரியங்களைச் செய்து கொள்ள வேண்டியது அவசியம். ஏனென்றால்) அதற்காக அல்லாஹ் ஏற்படுத்திய தவணை நிச்சயமாக வந்தே தீரும். அவன் (அனைத்தையும்) செவியுறுபவனும் நன்கறிந்தவனும் ஆவான்.(அல்லாஹ்வுடைய வழியில்) எவரேனும் கடின முயற்சி மேற்கொண்டால், நிச்சயமாக அவர் தன் நலனுக்காகவே முயன்றவராகிறார். ஏனென்றால், நிச்சயமாக அல்லாஹ் உலகத்தாரின் (உதவி) தேவையற்றவன். (அல்குர்ஆன் 29 : 5,6)
அல்லாஹ்விற்கு உங்களுடைய வழிபாடு தேவையில்லை. உங்களுடைய பணிவு அச்சம் அல்லாஹ்விற்கு தேவையில்லை. நமக்குதான் அல்லாஹ்வுடைய அன்பு தேவை. அதனால், நாம் அல்லாஹுவை வணங்குகிறோம். நமக்கு அல்லாஹ்வுடைய மன்னிப்பு தேவை. எனவே நாம் அல்லாஹுவை வணங்குகிறோம்.
சொர்க்கம் நமக்கு தேவை. எனவே நாம் அல்லாஹுவை வணங்குகிறோம். அல்லாஹ்விற்கு நம்முடைய தேவை அறவே கிடையாது. யாருடைய தேவையும் கிடையாது.
இந்த உலகத்தில் அவன் படைத்த மலக்குகளின் தேவை அல்லாஹ்விற்கு கிடையாது. அவன் தேர்ந்தெடுத்த இறைத்தூதர்களின் தேவை அல்லாஹ்விற்கு கிடையாது. இந்த உலகத்தில் உள்ள எந்த பொருளுடைய தேவையும் அந்த ரப்புல் ஆலமீனுக்கு கிடையாது.
அந்த அல்லாஹ் அனைத்து தேவையை விட்டும் அப்பாற்பட்டவன், தூய்மையானவன், முழுமையானவன். அனைத்தும் அவனிடம் தேவை உடையவைகளாக இருக்கின்றன.
அன்பிற்குரியவர்களே! அல்லாஹு தஆலா இந்த ஈமானுடைய விஷயத்தில் நம்மை சோதிக்கிறான். நம்முடைய ஈமான் எந்த தரத்தில் இருக்கிறது? இந்த ஈமானை நாம் பாதுகாப்பதற்காக வேண்டி எந்த அளவு உஷாராக இருக்கிறோம்?
இன்று, நம்முடைய வாழ்க்கையில் பார்க்கின்றோம்; அல்லாஹு ரப்புல் ஆலமீன் 1400ஆண்டுகளுக்கு முன்பதாக என்ன விஷயத்தை நமக்கு கூறினானோ, அந்த விஷயங்கள் இன்று நம் வாழ்க்கையில் பார்க்கிறோம்.
ரஸூலுல்லாஹி ﷺஅவர்களுடைய காலத்தில் ஈமானுக்கும்குஃப்ருக்கும்இடையில் என்ன ஒரு போராட்டம் இருந்ததோ, அது போன்ற புரட்சியை, போராட்டத்தை தான், நெருக்கடியை தான் இன்று முஃமின்களாகிய நாமும் சந்தித்துக் கொண்டு இருக்கிறோம்.
உலக விஷயங்களைப் பற்றி நாம் பேசவில்லை. ஆட்சி, அதிகாரத்திற்காக, பொருளுக்காக, வசதியான வாழ்க்கைக்காக இந்த உலகத்தின் ஆடம்பரத்திற்காக, கல்விக்காக முஸ்லிம்கள் சோதிக்கப் படுகிறார்கள். முஸ்லிம்கள் பழிக்கப் படுகிறார்கள். முஸ்லிம்களுக்கு அவர்கள் உரிமை கொடுக்கப் படுவது இல்லை. அதற்காக வேண்டி நான் சொல்லவில்லை.
நாம் நம்முடைய மார்க்கத்தில் சுதந்திரமாக இருப்பதற்கு அனுமதிக்கப் படுகிறோமா? நாம் நம்முடைய லா இலாஹ இல்லல்லாஹுவை உறுதியாக பின்பற்றுவதில், இந்த லா இலாஹ இல்லல்லாஹ்வை கலப்பற்ற முறையில், தூய்மையான முறையில், சரியான முறையில் சொல்வதில் நாம் சுதந்திரமாக விட்டு வைக்கப் பட்டிருக்கிறோமா? என்றால், அப்படி இல்லை.
நம்முடைய காலத்தில், முஸ்லிம்கள் ஏமாற்றத்தில் இருக்கிறார்கள். நம்முடைய வாழ்க்கையில் இன்று ஈமான் விலை பேசப்படுகிறது. ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடத்திலும் மாற்று மதத்தார்கள் மூலமாக ஷிர்க் நம்மில் புகுத்தப் படுகின்றது.
ஆனால், நாம் அதை உணர்ந்து கொள்ளாமல் அதை சகித்துக் கொண்டு, ஈமானில் சமரசம் செய்து கொண்டு, ஐங்கால தொழுகைகள், நோன்புகளையும், ஜக்காத்துகளையும், ஹஜ்களையும் செய்து கொண்டு நாமும் முஃமின்கள் தான் என்று நாம் நினைத்துக் கொண்டு இருக்கிறோம்.
அன்பிற்குரியவர்களே! ஈமானில் சமரசம் செய்ததற்கு பிறகு லா இலாஹ இல்லல்லாஹ்வில் விட்டு கொடுத்த பிறகு உங்களுடைய தொழுகை அல்லாஹ்விற்கு தேவை இல்லை. உங்களுடைய நோன்பு அல்லாஹ்விற்கு தேவை இல்லை. உங்களுடைய எந்த வேஷமும் ரப்புல் ஆலமீனுக்கு தேவை இல்லை.
இந்த காஃபிர்கள், அவர்கள் சிலை வணங்கக் கூடியவர்களாக இருந்தாலும் சரி, யஹூதிகளாக இருந்தாலும் சரி, நஸ்ரானி மஜூசிகளாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் சரி, இவர்களுடைய நோக்கம் இன்னும் இவர்களுடைய செயல்பாடுகள் நம்மை நம்முடைய மார்க்கத்தில் இருந்து திருப்புவதாக தான் இருக்கும்.
நம்மை ஈமானிலிருந்து திருப்ப வேண்டும். இஸ்லாமிலிருந்து திருப்ப வேண்டும். லா இலாஹ இல்லல்லாஹுவில் இருந்து திருப்ப வேண்டும். அவர்களை போன்று வழி கெட்ட முஷ்ரிக்குகளாக வழி கெட்ட மக்களாக மாற்ற வேண்டும் என்பதில் அவர்கள் புரட்சி செய்து கொண்டே இருப்பார்கள். போராடிக் கொண்டே இருப்பார்கள். அசர மாட்டார்கள், அயர மாட்டார்கள்.
அல்லாஹ் சொல்கின்றான்;
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تُطِيعُوا الَّذِينَ كَفَرُوا يَرُدُّوكُمْ عَلَى أَعْقَابِكُمْ فَتَنْقَلِبُوا خَاسِرِينَ
நம்பிக்கையாளர்களே! (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களை நீங்கள் பின்பற்றினால் அவர்கள் உங்களை (உங்கள் நம்பிக்கையிலிருந்து நீங்கள் விலகி)ப் பின் செல்லும்படி திருப்பிவிடுவார்கள். அதனால் நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகவே மாறிவிடுவீர்கள்.(அல்குர்ஆன் 3 : 149)
அல்லாஹ்விடத்தில் ஏற்றுகொள்ளப்பட்ட கொள்கை, மதம் இஸ்லாம் ஒன்று தான். அல்லாஹ்விடத்தில் ஏற்றுகொள்ளப்பட்ட வாழ்க்கை முறை, வாழ்க்கை கலை இஸ்லாம் ஒன்று தான்.
அல்லாஹ் கூறுகின்றான் :
وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنَ الْخَاسِرِينَ
இஸ்லாமையன்றி (வேறொரு) மார்க்கத்தை எவரேனும் விரும்பினால் நிச்சயமாக அவரிடமிருந்து (அது) அங்கீகரிக்கவே படமாட்டாது. மறுமையில் அவர் நஷ்டமடைந்த வராகவே இருப்பார். (அல்குர்ஆன் 3 : 85.
அல்லாஹு தஆலா நமக்கு மேலும் உணர்த்துகின்றான். இந்த முஷ்ரிக்குகளுடைய விஷயத்தில், இந்த காஃபிர்களுடைய விஷயத்தில், நாம் கவனமாக இருக்க வேண்டும்.
அல்லாஹ்வுடைய தீனை நம் வாழ்க்கையில் முழுமையாக பின்பற்றுகின்றோமா? அல்லாஹ்வுடைய தீனை நம் வாழ்க்கையில் எந்த அளவு கண்காணித்து சுத்தமாக்கி வைத்திருக்கிறோம்? காரணம், சுத்தமான மார்க்கம் அல்லாஹ்விற்கு தேவை. அசுத்தம் கலந்த தீன் அல்லாஹ்விற்கு தேவை இல்லை.
அல்லாஹ் தெளிவாக சொல்கிறான்;
أَلَا لِلَّهِ الدِّينُ الْخَالِصُ
பரிசுத்தமான வழிபாடு அல்லாஹ் ஒருவனுக்கே சொந்தமானது. (அல்குர்ஆன் 39 : 3)
சுத்தமான தீன் எனக்கு வேண்டும். எப்படி நான் கலப்பற்றதாக, தூய்மையானதாக இறக்கி வைத்தேனோ அந்த தீனை யார் என்னிடத்தில் கொண்டு வருகிறார்களோ அவர்களுக்கு வெற்றி.
அல்லாஹ் கூறுகிறான் :
يَوْمَ لَا يَنْفَعُ مَالٌ وَلَا بَنُونَ (88) إِلَّا مَنْ أَتَى اللَّهَ بِقَلْبٍ سَلِيمٍ
அந்நாளில், பொருளும் பிள்ளைகளும் ஒரு பயனுமளிக்கா. ஆயினும், பரிசுத்த உள்ளத்துடன் (தன் இறைவனாகிய) அல்லாஹ்விடம் வருபவர்தான் (பயனடைவார்). (அல்குர்ஆன் 26 : 88,89)
யாரிடம் ஈமான் சுத்தமாக இருக்கிறதோ அவர்களுக்கு நாளை மறுமையில் நன்மை உண்டு.
அல்லாஹ் சொல்கிறான்:
وَلَا تَأْكُلُوا مِمَّا لَمْ يُذْكَرِ اسْمُ اللَّهِ عَلَيْهِ وَإِنَّهُ لَفِسْقٌ وَإِنَّ الشَّيَاطِينَ لَيُوحُونَ إِلَى أَوْلِيَائِهِمْ لِيُجَادِلُوكُمْ وَإِنْ أَطَعْتُمُوهُمْ إِنَّكُمْ لَمُشْرِكُونَ
(நம்பிக்கையாளர்களே! அறுக்கும்போது) அல்லாஹ்வுடைய பெயர் கூறப்படாதவற்றை நீங்கள் புசிக்காதீர்கள். நிச்சயமாக அது பெரும் பாவமாகும். (இதில்) உங்களுடன் தர்க்கிக்குமாறு நிச்சயமாக ஷைத்தான்கள் தங்கள் நண்பர்களைத் தூண்டுகின்றனர். நீங்கள் அவர்களுக்கு கீழ்ப்படிந்தால் நிச்சயமாக நீங்கள் (அவர்களைப் போல்) இணைவைத்து வணங்குபவர்கள்தான்! (அல்குர்ஆன் 6:121)
வசனத்தின் கருத்து : அல்லாஹ் நமக்கு இந்த இடத்தில் என்ன சொல்ல வருகின்றான்? உங்களுடைய தீனில் இந்த காஃபிர்கள் தர்க்கம் செய்யும் போது, அல்லாஹ்வுடைய தீனை நீங்கள் விட்டு விட்டு அவர்களுக்கு கட்டுப்பட்டு விட்டால் நீங்களும் முஷ்ரிக்குகள் தான்.
நீங்கள் தொழுங்கள், நோன்பு வையுங்கள், ஜக்காத் கொடுங்கள், ஹஜ் செய்யுங்கள், தாடி வைத்து கொள்ளுங்கள், ஜிப்பா அணியுங்கள், தலைப்பாகையை கட்டி கொண்டு, என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், உங்களுடைய மார்க்கத்தின் ஏதாவது ஒரு சட்டத்தில் ஒரு சிறிய விஷயத்தில் கூட நீங்கள் காஃபிர்களுடன் சமரசம் செய்து கொண்டு அவர்களுடைய கட்டளையை,அவர்களுடைய சொல்லை, செயலை, நீங்கள் அங்கீகரித்தால் நீங்கள் முஷ்ரிக்குகளாக ஆகி விடுவீர்கள்.
அடுத்து அல்லாஹ் சொல்கிறான் :
وَدَّ كَثِيرٌ مِنْ أَهْلِ الْكِتَابِ لَوْ يَرُدُّونَكُمْ مِنْ بَعْدِ إِيمَانِكُمْ كُفَّارًا
முன்பு வேதம் கொடுக்கப்பட்ட இந்த யூதர்களும் கிறிஸ்தவர்களும் நீங்கள் ஈமான் கொண்டதற்குப் பிறகு உங்களையும் தங்களைப் போன்று காஃபிர்களாக மாற்ற வேண்டும் என்று விரும்புகிறார்கள். தாங்கள் எப்படி வழிகெட்டோமோ அது போன்று உங்களையும் வழிகெடுக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். (அல்குர்ஆன் 2 : 109)
மேலும் அல்லாஹ் சொல்கிறான்:
وَلَنْ تَرْضَى عَنْكَ الْيَهُودُ وَلَا النَّصَارَى حَتَّى تَتَّبِعَ مِلَّتَهُمْ قُلْ إِنَّ هُدَى اللَّهِ هُوَ الْهُدَى وَلَئِنِ اتَّبَعْتَ أَهْوَاءَهُمْ بَعْدَ الَّذِي جَاءَكَ مِنَ الْعِلْمِ مَا لَكَ مِنَ اللَّهِ مِنْ وَلِيٍّ وَلَا نَصِيرٍ
(நபியே!) யூத மற்றும் கிறிஸ்தவர்களுடைய மார்க்கத்தை நீர் பின்பற்றும் வரை உம்மைக் குறித்து அவர்கள் திருப்தியடையவே மாட்டார்கள். (ஆகவே, அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ்வின் நேர்வழி(யாகிய இஸ்லாம்)தான் நேரான வழி. (அதையே பின்பற்றுவேன்)'' எனக் கூறிவிடுவீராக. மேலும், உமக்கு (மெய்யான) ஞானம் வந்த பின்னும் அவர்களுடைய விருப்பங்களை பின்பற்றினால் அல்லாஹ்விடத்தில் (அதற்காக விசாரணை செய்யப்படும் நாளில்) உம்மை காப்பவனும் இல்லை; உமக்கு உதவி செய்பவனும் இல்லை. (அல்குர்ஆன் 2 : 120)
அன்பிற்குரியவர்களே! இப்போது சிந்தித்துப் பாருங்கள். உலகத்தில் முஸ்லிம்கள் இன்று இந்த இழி நிலையில் ஏன் இருக்கிறார்கள்? இந்த உலகத்தில் ஆட்சி இல்லாத காரணத்தினால் அல்ல. செல்வம் இல்லாத காரணத்தினால் அல்ல. அல்லாஹ்வுடைய தீனில் சமரசம் செய்து கொண்ட காரணத்தினால். யஹூதிகளை, முஷ்ரிக்குகளை, மஜூஸிகளை, நஸரானிகளை பின்பற்றிய காரணத்தினால்.
இந்த லா இலாஹ இல்லல்லாஹ்வை விட்டு கொடுத்த காரணத்தினால். இது தான் இன்று நாம் சோதிக்கப் படுவதற்கு உண்டான காரணம். இது தான் நம்முடைய உயிர்கள், பொருள்கள் சூறையாடப்படுவதற்கான காரணம்.
இது தான் நாம் நம்முடைய சக்தியை இழந்ததற்கான காரணம். இது தான் நாம் நம்முடைய பலத்தை இழந்ததற்கான காரணம். இது தான் நாம் நம்முடைய உள்ளத்தில் இருந்த அந்த ஈமானிய உறுதியை இழந்ததற்கான காரணம்.
இந்த லா இலாஹ இல்லல்லாஹ்வில் சோதனையை தாங்கி கொள்வதற்கு இன்று தயார் கிடையாது. லா இலாஹ இல்லல்லாஹ்விற்காக வேண்டி பிரச்சனைகளை எதிர் கொள்வதற்கு தயார் கிடையாது.
இவர்களெல்லாம் முஃமின்களே கிடையாது. போலிகள். எனவே இவர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற அவசியம் அல்லாஹ்விற்கு இல்லை.
ரசூலுல்லாஹ் ﷺஅவர்களிடத்தில் ஹப்பாப் இப்னு அரத் அவர்கள் வருகிறார்கள்.வந்து தாங்கள் இந்த குறைஷிகளிடத்தில் அனுபவிக்க கூடிய துன்பங்களை, சோதனைகளை முறையிடுகிறார்கள்.
(எதற்காக சோதனைகளை அனுபவித்தார்கள்? ஆட்சிக்காக வேண்டியா? அதிகாரத்திற்காக வேண்டியா? குறைஷிகளை போன்று எங்களுக்கு கண்ணியம் வேண்டும் என்பதற்காக வேண்டியா? குறைஷிகளின் மீது ஆட்சி, அதிகாரம் செலுத்த வேண்டும் என்பதற்காக வேண்டியா? ஆட்சியில் பங்கு கேட்டா? எதில் அவர்கள் போராடினார்கள்? எதற்காக வேண்டி துன்புறுத்த பட்டார்கள்?
அல்லாஹ்வின் நல்லடியார்களே! நாம் போராடுவது என்று சொன்னால் இந்த லா இலாஹ இல்லல்லாஹ்விற்காக தான். ஆட்சிக்காக அல்ல, அதிகாரத்திற்காக அல்ல. நாம் இந்த லா இலாஹ இல்லல்லாஹ்வில் தூய்மையாக இருப்பதற்கு நமக்கு அனுமதிக்கப் படவேண்டும்.)
ரசூலுல்லாஹ் ﷺஇடத்தில் ஹப்பாப் அவர்கள் சொல்கின்றார்; அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்காக நீங்கள் அல்லாஹ்விடத்தில் பிரார்த்தனை செய்ய மாட்டீர்களா? இந்த முஷ்ரிக்குகளுக்கு எதிராக அல்லாஹ்விடத்தில் கையேந்த மாட்டீர்களா?
ரசூலுல்லாஹ் ﷺசொன்னார்கள்:ஹப்பாப் அறிந்து கொள்! முந்தியுள்ள சமுதாயத்தில் ஈமான் கொண்ட ஒருவரை, லா இலாஹ இல்லல்லாஹ்வை கூறிய ஒருவரை அழைத்து வரப்படும்.
அவரிடம் நீ இந்த லா இலாஹ இல்லல்லாஹ்வை விட்டு விடு, படைப்புகளை வணங்கி விடு, ராஜாக்களை வணங்கு, ஆட்சியை வணங்கு, என்பதாக சொல்லப்படும். அவர் சொல்வார். முடியாது! லா இலாஹ இல்லல்லாஹ், அல்லாஹுவைத் தவிர வேறு யாரையும் வணங்க முடியாது.
எனவே, ரம்பத்தை எடுத்து அவர் தலையை அறுத்து இரண்டு துண்டுகளாக அவரை மாற்றி விடுவார்கள். அவன் லா இலாஹ இல்லல்லாஹ் என்ற வார்த்தையை தவிர வேறு எதையும் முழங்க மாட்டான். (7)
அறிவிப்பாளர் : ஹப்பாப் இப்னு அரத்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : எண் : 3612, 6943.
தலையில் ரம்பத்தை வைத்து அறுத்து அவரை இரண்டு துண்டுகளாக ஆக்கப்படும். மரத்தை அறுப்பது போன்று மனிதனை, முஸ்லிமை, முஃமினை அறுத்தார்கள். ஆட்சியில் பங்கு கேட்டதற்காக அல்ல. அதிகாரத்தில் பங்கு கேட்டதற்காக அல்ல. லா இலாஹ இல்லல்லாஹ்வை கூறியதற்காக.
அடுத்து இன்னொரு வகையான வேதனை. நம்பிக்கையாளரை கொண்டு வந்து நிறுத்துவார்கள். கூர்மையான நுனியை கொண்ட இரும்பு சீப்புகளைக் கொண்டு வருவார்கள். அவருடைய உடம்பை வருடுவார்கள். உடம்பில் சீவுவார்கள். அவருடைய தோல், சதைகள் பிய்த்து கொண்டு அவருடைய எலும்புகள் தெரிய ஆரம்பித்துவிடும்.
இந்த நிலைமையிலும் கூட அவர்கள் லா இலாஹ இல்லல்லாஹ்வை விடவில்லை. இந்த நிலைமை யிலும் கூட. இந்த வேதனை இந்த சோதனைகள். இதை விட ஒரு கஷ்டம் இருக்க முடியுமா? யோசித்து பாருங்கள் ! அவர்களை இந்த நிலைமையிலும் கூட, இந்த துன்பங்கள், சோதனைகள் லா இலாஹ இல்லல்லாஹ்வை விட்டு அவர்களை திருப்பவில்லை.
அல்லாஹ்வின் அடியார்களே! இன்று,நம்முடைய ஈமான்இந்த நாட்டில் விலைபேசப்படுகிறது.
அல்லாஹ்வை வணங்ககூடிய இந்த சமுதாயம், அல்லாஹ் மட்டுமே வணக்க வழிபாடுகளுக்கு உரித்தானவன் என்று சொல்லக் கூடிய இந்த முஃமின் சமுதாயம் காஃபிர்களிடத்தில் கலக்கும் போது, சிலை வணங்கிகளிடத்தில் கலக்கும் போது, நஸரானிகள், மஜூசிகளிடத்தில் கலக்கும் போது தங்களுடைய மார்க்கத்தில் சமரசம் செய்து கொள்வதற்கு தயார். தாங்களும், தங்களுடைய பிள்ளைகளும், ஒவ்வொரு நாளும் முஷ்ரிக்குகளாக மாறுவதற்கு தயார்.
இந்த சோதனையை தாங்கி கொள்ள தயாராக இல்லை என்று சொன்னால், அல்லாஹ்வுடைய தீனுக்காக வேண்டி இதை இழக்க தயாராக இல்லை என்று சொன்னால், இந்த லா இலாஹ இல்லல்லாஹ்விற்காக வேண்டி, நம்முடைய ஈமானில் உறுதியாக இருப்போம், இந்த ஷிர்க்கான செயலை செய்ய மாட்டோம் என்று கூறினால் நாம் இழக்கப் போவது என்ன?
நாம் இழக்கப் போவது இந்த அற்ப துன்யாவாக இருக்கலாம். இந்த துன்யாவின் கல்வியாக இருக்கலாம். இவர்களுடன் ஆட்சியில் சமமாக அமர்வதாக இருக்கலாம்.
ஆனால், நாம் பெறப் போவது, உண்மையான அரசனான அந்த ரப்புல் ஆலமீன் உடைய சொர்க்கத்தின் ஆட்சியில் நமக்கு வீட்டைத் தருகின்றான்.
இன்று பார்க்கிறோம்;முஸ்லிம் மாணவர்கள் பள்ளிக்கூடங்களில் படிக்கும் போது அவர்களுக்கு சொல்லி கொடுக்கப் படுகின்ற கல்வி முறைகள்.
முஸ்லிம்கள் ரப்பு ஒருவனை மட்டுமே வணங்க வேண்டும். அவனே நம்முடைய இன்பத்திற்கும் துன்பத்திற்கும் நம்முடைய நன்மைக்கும், தீமைக்கும் போதுமானவன். அவனே நம்மை இரட்சிக்கக் கூடியவன், அவனே நம்மை பாதுகாக்க கூடியவன், அவன் தான் நமக்கு அனைத்தையும் கொடுத்தான், அவன் தான் நம்முடைய நிஃமத்துகளுக்கு சொந்தக்காரன். அவன் தான் நமக்கு இரணம் அளிப்பவன்என்ற கொள்கையுடைய இந்த முஃமின், இந்த நம்பிக்கையாளர்களை தங்களுடைய தேசிய கீதங்களை பாடுவதற்கு அவர்கள் நிர்ப்பந்திகிறார்கள்.
இந்த தேசிய கீதத்தில் என்ன இருக்கிறது? அதில் அவர்கள் சொல்கின்றார்கள் :
இந்திய தாயே மக்களின் இன்ப துன்பங்களை கணிக்கின்ற நீயே எல்லோருடைய மனதிலும் ஆட்சி செய்கிறாய்.
என்ன வார்த்தை இது? இந்த வார்த்தையை ஒருவன் கூறினால் அல்லது தங்களது பிள்ளைகள் கூறுவதை திருப்தி கொண்டால் அவன் முஷ்ரிகாக மாறுவான்.
அடுத்து சொல்கிறார்கள்: நின் திருப்பெயர் பஞ்சாபையும், சிந்துவையும், கூர்ச்சரத்தையும்மராட்டியத்தையும், திராவிடத்தையும், ஒரிசாவையும் வங்காளத்தையும், உள்ளக் கிளர்ச்சி அடையச் செய்கிறது.
நின் திருப்பெயர் விந்திய, இமய மலைத் தொடர்களில்எதிரொலிக்கிறது; யமுனை, கங்கை ஆறுகளின்இன்னொலியில் ஒன்றுகிறது; இந்தியக் கடலலைகளால்வணங்கப்படுகிறது.அவை நின்னருளை வேண்டுகின்றன; நின் புகழைப் பரப்புகின்றன. இந்தியாவின் இன்ப துன்பங்களைக் கணிக்கின்ற தாயே.
அன்பிற்குரியவர்களே! இந்த வார்த்தையை ஒரு முஸ்லிம் தன்னுடைய பிள்ளைகளுக்கு விரும்பினால்,அவன் முஷ்ரிக்காக மாறி விடுவான். இந்த வார்த்தையை ஒரு முஸ்லிம் நிறுவனம் தங்களுடைய பள்ளிகளில் கூறினால்அந்த நிறுவனமும், அந்த நிறுவனத்தை ஆதரிக்க கூடிய அனைத்து மக்களும் முஷ்ரிக்குகளாக மாறி விடுவார்கள்.
இன்று பார்க்கிறோம், காஃபிர்களுடைய பள்ளிக்கூடங்களை விட்டு விடுங்கள். முஸ்லிம்களுடைய பள்ளி கூடங்களில் இதை அவர்கள் படிக்கின்றார்கள். இதை அவர்கள் வணக்கம் செய்கின்றார்கள்.
எங்கே ஈமான் இருக்கிறது? எங்கே ஈமானுடைய கல்வி இருக்கிறது? இது போன்று எத்துனை விஷயங்களை கல்வியின் பெயர் மூலமாக நமக்குள்ளே புகுத்தி, நம்மையும் நம்முடைய பிள்ளைகளையும் அன்றாடம் முஷ்ரிக்குகளாக மாற்றி கொண்டு இருக்கிறார்கள்.
அன்பிற்குரியவர்களே! ஆட்சிக்காக வேண்டி அல்ல, அதிகாரத்திற்காக வேண்டி அல்ல, செல்வமான ஆடம்பரமான வாழ்க்கைக்காக வேண்டி அல்ல. நாம் கேட்பது என்ன? நம்முடைய உரிமை என்ன? நம்முடைய மார்கத்தில் நாம் சுதந்திரமாக இருக்க வேண்டும். லா இலாஹ இல்லல்லாஹ் –அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் வணங்க கூடாது.
வணக்கம் என்ற சொல்லை கூட அல்லாஹ்வைத் தவிர அடுத்தவருக்கு சொல்லக் கூடாது.
இன்று முஸ்லிம் பள்ளிக் கூடங்களில் பார்க்கிறோம்; தமிழ் நடத்த கூடிய தமிழ் வாத்தியார்கள் வந்தால் கூட, முஸ்லிம் ஆசிரியர்கள் வந்தால் கூட அவர்களுக்கு வணக்கம் என்று தான் சொல்ல வேண்டுமாம்.
இன்னும் எத்துனை ஷிர்க்கான செயல்கள் நம்முடைய பிள்ளைகளின் உள்ளங்களில் நுழைக்கப் படுகிறது!
இன்று நாம் நம்முடைய வாழ்க்கையில் நம் ஈமானை பாதுகாக்கவில்லை என்றால், இதில் அலட்சியமாக இருந்து விட்டால், இனி நம்முடைய தலைமுறை அடுத்து வரக்கூடிய நம் சந்ததிகள் முழுமையாக முஷ்ரிக்குகளாக மாற்றப்பட்டு விடுவார்கள். அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
அதற்குள் நம் ஈமானை, நம்முடைய இஸ்லாமை பாதுகாக்க வேண்டும். அதற்காக எதை இழந்தாலும் பரவாயில்லை. கல்வி தேவை.
நீங்கள் இந்த மாதிரி ஷிர்க்கான செயல்களை செய்யவில்லை என்றால் உங்களுக்கு பள்ளி கூடங்களில் அனுமதி இல்லையா? கல்லூரிகளில் அனுமதி இல்லையா? பரவாயில்லை. இரண்டு துணிகளை எடுத்து கொண்டு கடை வீதிகளுக்கு சென்று வியாபாரம் செய்து நாம் சம்பாதித்து கொள்ளலாம்.
அல்லாஹ் நம்மிடத்தில் நாளை மறுமையில் கேட்பது,நீ மிகப் பெரிய பட்டங்களை பெற்றாயா என்று கேட்பானா? உன்னுடைய நாட்டின் அரசாங்கத்தில் பங்கு கொண்டாயாஎன்று கேட்பானா? உன்னுடைய அரசாங்கத்தில் நீ பெரிய பதவிகளை வகித்தாயா என்று கேட்பானா? அல்லது உன்னுடைய ஈமான் முழுமையாக இருந்ததா என்று கேட்பானா? உன்னுடைய இஸ்லாம் முழுமையாக இருந்ததா என்று கேட்பானா?
நீ முஃமினா? முஷ்ரிக்கா? என்று அல்லாஹ் கேள்வி கேட்பானா? அல்லது நீ படித்தவனா படிக்காதவனா என்று கேட்பானா? என்று யோசித்துப் பாருங்கள்.
அன்பிற்குரியவர்களே!இந்த ஈமானுக்காக வேண்டி எதையும் இழக்கலாம். ஆனால்,மற்ற அற்ப செல்வங்களுக்காக, ஆட்சிக்காக, கல்விக்காக, எதற்காக வேண்டி இருந்தாலும் சரி, இந்த ஈமானை இழந்தால் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும், முடிவு மிக மோசமானது.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம் பாவங்களை மன்னிப்பானாக! நம்முடைய ஈமானை அல்லாஹ் உறுதிப்படுத்துவானாக, நம்முடைய இஸ்லாமை அல்லாஹ் பலப்படுத்துவானாக! நம்முடைய இறைநம்பிக்கையை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சுத்தப்படுத்துவானாக!
தலைப்பு : லா இலாஹ இல்லல்லாஹ்
தொடர் : 3.
அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலா அவனுடைய தூதர் முஹம்மது ﷺஅவர்களுக்கு கட்டளையிடுகின்றான்:
يَاأَيُّهَا النَّبِيُّ اتَّقِ اللَّهَ
நபியே! நீங்கள் அல்லாஹுவை பயந்து கொள்ளுங்கள்.(அல்குர்ஆன் 33:1)
இதே கட்டளையை அல்லாஹு தஆலா முஃமின்களுக்குசொல்கின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ
நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹுவை பயந்து கொள்ளுங்கள். எப்படி அல்லாஹுவை பயப்பட வேண்டுமோ அந்த உரிய முறையில் அல்லாஹுவை நீங்கள் அஞ்சி கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 3 : 103)
ஈமானுடன், இறை நம்பிக்கையுடன், இஹ்லாசுடன் தக்வா இருந்தால், தவ்ஹீதுடன் தக்வா இருந்தால், இஸ்லாமுடன் தக்வா இருந்தால் அல்லாஹு தஆலா நமக்கு உயர்வைத் தருகிறான். கண்ணியத்தை தருகிறான்.
நமக்குள் அல்லாஹு ரப்புல் ஆலமீன் ஈமானில் மிக பெரிய உறுதியை, வலிமையை, ஆற்றலை அல்லாஹு படைக்கின்றான்.
இந்த ஆற்றலை கொண்டு தான் இஸ்லாமை எதிர்க்க கூடிய சக்திகள் இந்த உலகத்தில் எவ்வளவு பெரிதாக கண்ணுக்கு தெரிந்தாலும் சரி, அந்த சக்திகளை அல்லாஹு ரப்புல் ஆலமீன் ஈமானிய சக்திக்கு முன்பதாக சிலந்தியின் வலையை போன்று ஆக்கி விடுகிறான்.
இந்த ஈமானிய ஆற்றலுக்கு முன்பதாக, அல்லாஹு அக்பர் என்ற முழக்கத்திற்கு முன்பதாக, அந்த அனைத்து பிரசாரங்களும், அந்த அனைத்து ஆற்றல்களும், வலிமைகளும் அல்லாஹுவுடைய சக்தியை கொண்டு அல்லாஹுவுடைய குதரத்தை கொண்டு ஒன்றும் இல்லாமல் ஆகிவிடுகின்றது.
அல்லாஹு ரப்புல் ஆலமீன் எப்படி அப்ரஹா வின் கூட்டத்தை சிறிய பறவைகளின் கூட்டத்தை கொண்டு அழித்துக் காட்டினானோ, ஆத் சமூத் கூட்டத்தார்களை காற்றை கொண்டு அல்லாஹ் எப்படி அழித்துக் காட்டினானோ, அது போன்று அல்லாஹு ரப்புல் ஆலமீன் ஈமானை எதிர்க்கக் கூடியவர்களை, இஸ்லாமை எதிர்க்க கூடியவர்களை தவ்ஹீதை எதிர்க்க கூடியவர்களை அல்லாஹ் அழித்து காட்டுவான். முஸ்லிம்களுக்கு அல்லாஹ் உதவி செய்வான்.
அல்லாஹ்வின் அடியார்களே! நமக்கு அல்லாஹ் கொடுத்திருக்க கூடிய இந்த வாழ்க்கை, இந்த உயிர், நம்முடைய அறிவு, நம்முடைய சிந்தனை இந்த உலகத்தில் நாம் எதையெல்லாம் சொந்தமாக்கி கொண்டிருக்கிறோமோ இவை அனைத்தும் லா இலாஹ இல்லல்லாஹ்விற்காக தான்.
அதற்காக அர்ப்பணம் செய்வதற்காக தான். இதற்காக நாம் நம்முடைய இந்த உயிர் பொருளை அர்ப்பணம் செய்யவில்லை என்று சொன்னால், லா இலாஹ இல்லல்லாஹுவை கொள்கையாக கொண்டு இதற்காக வாழ்ந்து மரணிக்கவில்லை என்று சொன்னால் மிகப் பெரிய நஷ்டத்தை நாளை மறுமையில் சந்தித்தாக வேண்டும்.
லா இலாஹ இல்லல்லாஹ் நமக்கு எதை சொல்கின்றது? இந்த லா இலாஹ இல்லல்லாஹ் நம்மை எதன் பக்கம் அழைக்கின்றது?
அல்லாஹ் தெளிவாக அவனுடைய புத்தகம் அல்குர்ஆனில் சொல்கிறான்.
இன்று முஸ்லிம்கள் எல்லாவற்றையும் நினைவில் வைத்திருக்கின்றார்கள். ஆனால் அவர்கள் மறந்த ஒன்று,தவ்ஹீத் -லா இலாஹ இல்லல்லாஹ். இந்த தவ்ஹீதை வாழ்க்கையில் எப்படி உண்மை படுத்துவது? இன்று பலருக்கு தவ்ஹீத் என்ற பேச்சை எடுத்தால் வெறுப்பு அடைகின்றார்கள்.
இவர்களைப் பற்றியும் அல்லாஹ் குர்ஆனில் சொல்கின்றான் :
وَإِذَا ذُكِرَ اللَّهُ وَحْدَهُ اشْمَأَزَّتْ قُلُوبُ الَّذِينَ لَا يُؤْمِنُونَ
அல்லாஹ்வின் பெயரை மட்டும் தனியாகக் கூறப்பட்டால், மறுமையை நம்பாத அவர்களின் உள்ளங்கள் (கோபத்தால்) சுருங்கி விடுகின்றன. (அல்குர்ஆன் 39 : 45)
மேலும் அல்லாஹ் கூறுகின்றான் :
وَإِذَا ذَكَرْتَ رَبَّكَ فِي الْقُرْآنِ وَحْدَهُ وَلَّوْا عَلَى أَدْبَارِهِمْ نُفُورًا
திருகுர்ஆனில் உமது இறைவன் ஒருவனைப்பற்றியே நீர் கூறிக் கொண்டிருந்தால், அவர்கள் வெறுத்துத் தங்கள் முதுகுப்புறமே (திரும்பிச்) சென்று விடுகின்றனர். (அல்குர்ஆன் 17 : 46)
காஃபிர்களை ஒப்பிட்டுப் பார்க்கும் போது,அதே நிலைமை இன்று முஸ்லிம்களிடையே இருக்கிறது. அல்லாஹுவை மட்டுமே வணங்க வேண்டும். அல்லாஹுவை வணங்குவதற்காக எதையும் இழக்க வேண்டும். அல்லாஹ் ஒருவனை வணங்குவதற்காக தான் இந்த உடலும் உயிரும் பொருளும் கொடுக்கப் பட்டுள்ளது.
அல்லாஹ் ஒருவனுக்கு தான் வணக்க வழிபாடுகளை கலப்பற்ற முறையில் ஆக்கி வைக்க வேண்டும். முஸ்லிம்கள் இதில் நாம் சமரசம் செய்து கொள்ள கூடாது.
முஸ்லிம்களே! இதில் நாம் விட்டு கொடுக்கக் கூடாது. தவ்ஹீத் இஸ்லாமுடைய அடிப்படை. தவ்ஹீத் இல்லையென்று சொன்னால் வேறு எந்த வணக்க வழிபாடுகளும் அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப் படாது என்று சொன்னால் சிலருடைய உள்ளங்கள் சுருங்கி விடுகின்றன. முகங்கள் சுழிக்கின்றன. உள்ளங்கள் நெருக்கடிக்கு ஆளாகின்றன.
அன்பிற்குரியவர்களே! நாம் இந்த காலத்தில் சந்திக்கும் நெருக்கடியை விட, நாம் இந்த காலத்தில் எதிர்நோக்கும் சவால்களை விட மிகப் பெரிய சவால்களை, மிகப் பெரிய துன்பங்களை, மிகப் பெரிய இன்னல்களை நமது சிறப்பிற்குரிய முன்னோர்கள், இறை தூதர்கள் அவர்களை பின்பற்றியவர்கள் சந்தித்திருக்கிறார்கள்.
அல்லாஹ் தஆலா நபிக்கு சொல்கின்றான்.
قُلْ إِنِّي أُمِرْتُ أَنْ أَعْبُدَ اللَّهَ مُخْلِصًا لَهُ الدِّينَ (11) وَأُمِرْتُ لِأَنْ أَكُونَ أَوَّلَ الْمُسْلِمِينَ (12) قُلْ إِنِّي أَخَافُ إِنْ عَصَيْتُ رَبِّي عَذَابَ يَوْمٍ عَظِيمٍ (13) قُلِ اللَّهَ أَعْبُدُ مُخْلِصًا لَهُ دِينِي (14) فَاعْبُدُوا مَا شِئْتُمْ مِنْ دُونِهِ قُلْ إِنَّ الْخَاسِرِينَ الَّذِينَ خَسِرُوا أَنْفُسَهُمْ وَأَهْلِيهِمْ يَوْمَ الْقِيَامَةِ أَلَا ذَلِكَ هُوَ الْخُسْرَانُ الْمُبِينُ
(நபியே!) கூறுவீராக: ‘‘முற்றிலும் நான் அல்லாஹ்வுக்கே வழிப்பட்டு, வணக்கத்தை அவனுக்கே கலப்பற்றதாக ஆக்கி அவன் ஒருவனையே வணங்குமாறு ஏவப்பட்டுள்ளேன். மேலும், அவனுக்கு முற்றிலும் பணிந்து வழிப்பட்டவர்களில் முதன்மையானவனாக இருக்குமாறும் ஏவப்பட்டுள்ளேன்'' (மேலும்,) கூறுவீராக: ‘‘என் இறைவனுக்கு நான் மாறு செய்தால், மகத்தான ஒருநாளின் வேதனைக்கு நிச்சயமாக நான் பயப்படுகிறேன்.'' (மேலும்,) கூறுவீராக: ‘‘அல்லாஹ் ஒருவனையே கலப்பற்ற மனதுடன் நான் வணங்குவேன், அவனுக்கே என் வணக்கம் அனைத்தும் உரித்தானது அல்லாஹ்வையன்றி நீங்கள் விரும்பியவர்களை வணங்கிக் கொண்டிருங்கள். (ஆகவே, அதற்குரிய தண்டனையை அடைவீர்கள்.)'' “மெய்யாகவே நஷ்டமடைந்தவர்கள் யாரென்றால், (இறைவனுக்கு மாறுசெய்து) தங்களுக்கும் தங்கள் குடும்பத்திற்கும் மறுமையில் நஷ்டத்தை உண்டு பண்ணிக் கொண்டவர்கள்தான். அறிந்து கொள்ளுங்கள் இதுதான் தெளிவான நஷ்டம் என்று (நபியே) கூறுவீராக. (அல்குர்ஆன் 39 : 11-15)
அல்லாஹ் இந்த வசனங்களில் நஷ்டவாளிகள் யார் என்பவர்கள் பற்றி சொல்கிறான். யார் தங்களுக்கும், தங்களுடைய குடும்பத்தார்களுக்கும் மறுமையில் நஷ்டத்தை ஏற்படுத்தினார்களோ, மறுமையில் தோல்வியை ஏற்படுத்தினார்களோ, அவர்கள் தான் நஷ்டவாளிகள்.
இந்த உலகத்தில் செல்வம் இல்லாமல் இருப்பதை, படிப்பில்லாமல் இருப்பதை, கஷ்டப்படுவதை, வயிற்றுக்கும் வாயிற்கும் சிரமப்படுவதை அல்லாஹு ரப்புல் ஆலமீன் நஷ்டம் என்று சொல்லவில்லை.
அது நஷ்டம் என்று நீங்கள் கூறினால் இறைத்தூதர்களைப் பற்றி நீங்கள் என்ன சொல்வீர்கள்?
அல்லாஹுவுடைய தூதர் ﷺஅவர்களைப் பற்றி, அவர்களுடைய மனைவியர் சொல்கின்றார்கள் :
«مَا شَبِعَ آلُ مُحَمَّدٍ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مِنْ خُبْزِ شَعِيرٍ يَوْمَيْنِ مُتَتَابِعَيْنِ، حَتَّى قُبِضَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
இரண்டு நாட்கள் தொடர்ந்து வயிறு நிரம்ப அல்லாஹ்வின் தூதர் ﷺபார்லியின் ரொட்டியை கூட சாப்பிட்டது கிடையாது. ஒரு நாளைக்கு இரண்டு முறை கூட வயிறு நிரம்ப சாப்பிட்டது கிடையாது. அல்லாஹ்வின் தூதர் மரணிக்கும் வரை இதே நிலை தான்.
அறிவிப்பாளர் : ஆயிஷாரழியல்லாஹுஅன்ஹா, நூல் : முஸ்லிம், எண் : 2970.
ஆயிஷாரழியல்லாஹுஅன்ஹாசொல்கின்றார்கள்: எங்களுடைய வீடுகளில்இரவு நேரத்தில்விளக்கு எரிப்பதற்கு எண்ணைய் இருக்காது என்று.
அல்லாஹுவுடைய தூதர் ﷺஅவர்களுடைய குடும்ப நிலையைப் பற்றி ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா சொல்கின்றார்கள்.
ரஸூலுல்லாஹி ﷺஅவர்களிடத்தில் விருந்தாளி வருகிறார். அல்லாஹ்வுடைய தூதர் ﷺஅன்னை ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களிடத்தில் அனுப்புகின்றார்கள். ஆயிஷா! அல்லாஹ்வின் விருந்தாளியை கண்ணியப்படுத்த உன்னிடத்தில் ஏதாவது இருக்கிறதா?
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா சொல்கின்றார்கள், அல்லாஹ்வின் தூதரே! உம்மை சத்தியத்தைக் கொண்டு அனுப்பிய அல்லாஹ்வின் மீது சத்தியமாக சொல்கின்றேன்; தண்ணீரைத் தவிர எனது வீட்டில் வேறெதுவும் கிடையாது.
ஹஃப்சா விடத்தில் அனுப்புகின்றார்கள். இதே பதிலை சொல்கின்றார்கள். உம்மு சலாமா விடத்தில் அனுப்புகின்றார்கள். இதே பதிலை சொல்கின்றார்கள். ஒன்பது மனைவியரிடத்திலும்ரஸூலுல்லாஹி ﷺஉணவு வேண்டி அனுப்புகின்றார்கள். ஒன்பது மனைவிகளும் இதே பதிலை சொல்கின்றார்கள். (8)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 3798.
எப்படிபட்ட வறுமையை சந்தித்தார்கள் என்று யோசித்துப் பாருங்கள். ஸஹாபாக்களுடைய வாழ்க்கையை எடுத்துப் பாருங்கள்.
நஷ்டம் எது? இந்த ஈமானை, இந்த தவ்ஹீதை இழந்து நாளை நரக நெருப்பில் ஒருவன் தள்ளப்படுவானே, நன்மைகள் அழிக்கப்படுமே அது தான் நஷ்டம். அல்லாஹ் அதை நமக்கு சொல்கின்றான்.
இன்று ஈமானை புரியாத தவ்ஹீதை புரியாத மக்களாக தான் இன்றைய காலத்தில் வாழக்கூடிய முஸ்லிம்கள் இருக்கிறார்கள். குர் ஆனை எங்கே எடுத்துப் படிக்கிறார்கள்? குர்ஆனை எங்கே திறக்கின்றார்கள்.? நபிமார்களுடைய வரலாறுகளை எங்கே படிக்கிறார்கள்? அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்களின் வரலாற்றை எங்கே படிக்கின்றார்கள்?
இன்றைய காலத்தில் வாழக்கூடிய முஸ்லிம்களில் பலர் வியாபாரம் செய்வதோ, தொழில் துறை செய்வதோ, ஆடம்பர வாழ்க்கைக்காக, வசதியான வாழ்க்கைக்காக, சுகபோகமான வாழ்க்கைக்காக செய்கிறார்கள்.
இதெல்லாம் மிஞ்சியதற்கு பிறகு அவர்களிடத்தில் இருக்கக்கூடிய அற்ப நேரங்களையும் என்டர்டைமெண்ட் -இந்த வாழ்க்கையில் ஏற்பட்ட அந்த அசதியை களைப்பை போக்குவதற்காக, இவர்கள் விடுமுறைக்கு சென்று விடுகிறார்கள்.
சுற்றிப் பார்ப்பதற்கு சென்று விடுகிறார்கள். தன்னுடைய வாழ்க்கையை சுகபோகமாக கழிப்பதற்கு சென்று விடுகிறார்கள். இப்படிப்பட்ட தரம் கெட்ட முஸ்லிம் சமுதாயத்தில் எங்கே குர் ஆனை படித்துப் பார்ப்பதற்கு நேரம் இருக்கிறது?
யார் இதை சிந்திக்கிறார்கள்? நபிமார்களுடைய வரலாறுகள் நமக்கு ஆதாரமாக இல்லையா? இறைத்தூதர்கள் எத்துனை பெரிய சோதனைகளை சந்தித்தார்கள்?
நாம் இன்று சந்திக்க கூடிய சோதனைகளை ஒரு பக்கம் வைத்து அல்லாஹ்வுடைய தூதர்களில் ஒருவர் சந்தித்த சோதனையை, அவர்கள் ஒரு நாள் சந்தித்த சோதனையை மறு தட்டில் வைத்தால் அவர்கள் சந்தித்த சோதனை தான் மிகப் பெரியது.
இன்று,அந்த அளவிற்கு நம்முடைய முஸ்லிம் சமுதாயம் அலட்சியத்தில் இருக்கிறார்கள். நபிமார்களுடைய வரலாறுகளை பார்ப்பது இல்லை.
அல்லாஹு தஅலா இறைத்தூதர்களின் சம்பவங்களை நமக்கு சொல்லி காட்டுகின்றான்,படிப்பினை பெறுவதற்காக.
இந்த இஸ்லாமை எதிர்க்கக் கூடியவர்கள், ஈமானை எதிர்க்ககூடியவர்கள்சொல்கின்றார்கள் அல்லவா; நீங்கள் இந்த நாட்டில் வாழ்வதாக இருந்தால் முஷ்ரிக்குகளாக மாறி வாழுங்கள், எங்களுடைய மதத்தை பின்பற்றி வாழுங்கள் என்று.
இதை நபிமார்கள் காலத்தில் வாழ்ந்த மக்கள் நடைமுறை படுத்தி காட்டினார்கள். இன்று, நமக்கு எச்சரிக்கை செய்யப்படுகிறது. அதுவும் எங்காவது யாராவது ஒருவரின் மூலமாக. நபிமார்களுடைய காலம் அப்படிப்பட்ட காலம் அல்ல. முழு சமுதாயமும் ஒன்று திரண்டார்கள், நபிமார்களை எதிர்ப்பதற்காக. அவர்களை கொலை செய்வதற்காக.
யார் நேரடியாக வஹியின் மூலமாக அல்லாஹ்விடத்தில் பேசி கொண்டிருக்கிறார்களோ அந்த தூதர்களை கொலை செய்வதற்காக.
அல்லாஹ் கூறுவதை பாருங்கள்.இறைத்தூதர்களுக்கும் மறுமையை மறுத்தகாஃபிர்களுக்கும் மத்தியில் ஏற்பட்ட உரையாடலை அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்.
وَمَا لَنَا أَلَّا نَتَوَكَّلَ عَلَى اللَّهِ وَقَدْ هَدَانَا سُبُلَنَا وَلَنَصْبِرَنَّ عَلَى مَا آذَيْتُمُونَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُتَوَكِّلُونَ
‘‘நாங்கள் அல்லாஹ்வை நம்பாதிருக்க எங்களுக்கென்ன (தடை நேர்ந்தது)? நிச்சயமாக அவன்தான் எங்களுக்கு நேரான வழியை அறிவித்தான். (நிராகரிப்பவர்களே!) நீங்கள் எங்களுக்கு இழைக்கும் துன்பங்களைச் சகித்துக் கொண்டு உறுதியாக இருப்போம். ஆகவே, நம்பிக்கை வைப்பவர்கள் அனைவரும் அல்லாஹ்வின் மீதே நம்பிக்கை வைக்கவும்'' என்றும் கூறினார்கள். (அல்குர்ஆன் 14 : 12)
இந்த வார்த்தையை கூறிய பொழுது அந்த இறை மறுப்பாளர்கள் கூறினார்கள்:
وَقَالَ الَّذِينَ كَفَرُوا لِرُسُلِهِمْ لَنُخْرِجَنَّكُمْ مِنْ أَرْضِنَا أَوْ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَا
நிராகரித்தவர்கள் தங்களிடம் வந்த (நமது) தூதர்களை நோக்கி, ‘‘நிச்சயமாக நீங்கள் எங்கள் மார்க்கத்தில் திரும்பிவிட வேண்டும். இல்லையேல், நாங்கள் உங்களை எங்கள் ஊரிலிருந்து வெளியேற்றி விடுவோம்'' என்று கூறினார்கள். (அல்குர்ஆன் 14 : 13)
எல்லா இறைத்தூதர்களுக்கும் இந்த சவால் கொடுக்கப் பட்டது. லூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களைப் பார்த்து மக்கள் சொன்னார்கள்:
أَخْرِجُوا آلَ لُوطٍ مِنْ قَرْيَتِكُمْ
அதற்கவர்கள் (தங்கள் மக்களை நோக்கி)லூத்துடைய குடும்பத்தை உங்கள் ஊரை விட்டும் நீங்கள் ஓட்டிவிடுங்கள். (அல்குர்ஆன் 27 : 56)
ஷுஐப் உடைய கூட்டத்தார்கள் நபிஷுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை பார்த்து சொன்னார்கள்:
قَالَ الْمَلَأُ الَّذِينَ اسْتَكْبَرُوا مِنْ قَوْمِهِ لَنُخْرِجَنَّكَ يَاشُعَيْبُ وَالَّذِينَ آمَنُوا مَعَكَ مِنْ قَرْيَتِنَا أَوْ لَتَعُودُنَّ فِي مِلَّتِنَا قَالَ أَوَلَوْ كُنَّا كَارِهِينَ
(ஷுஐப் நபியை நாம் நம் தூதராக அனுப்பிய பொழுது) அவருடைய மக்களில் கர்வம்கொண்ட தலைவர்கள் (அவரை நோக்கி) ‘‘ஷுஐபே! நீங்களும் உங்களை நம்பிக்கை கொண்டவர்களும் எங்கள் மார்க்கத்திற்கு திரும்பிவிட வேண்டும். இல்லையென்றால், நிச்சயமாக நாங்கள் உங்களை எங்கள் ஊரிலிருந்து துரத்தி விடுவோம்'' என்று கூறினார்கள். அதற்கு அவர் (அவர்களை நோக்கி ‘‘உங்கள் மார்க்கத்தை) நாங்கள் வெறுத்தபோதிலுமா?'' என்று கேட்டார். (அல்குர்ஆன் 7 : 88)
இந்த நேரத்தில்,ஒரு முஸ்லிம் எதற்காக வேண்டி போராட வேண்டும்? இன்று போராட கூடியவர்கள் சிந்தித்து பார்க்கட்டும். ஒரு முஸ்லிமுடைய முழக்கம் எதற்காக இருக்க வேண்டும்.
அல்லாஹ் சொல்கின்றான்:
لَنُهْلِكَنَّ الظَّالِمِينَ (13) وَلَنُسْكِنَنَّكُمُ الْأَرْضَ مِنْ بَعْدِهِمْ ذَلِكَ لِمَنْ خَافَ مَقَامِي وَخَافَ وَعِيدِ
அதற்கு அவர்களுடைய இறைவன் (அந்த தூதர்களை நோக்கி) ‘‘நிச்சயமாக நாம் இந்த அநியாயக்காரர்களை அழித்து விடுவோம்'' என்றும் ‘‘உங்களை அவர்களுக்குப் பின்னர் (அவர்களுடைய) பூமியில் நிச்சயமாக நாம் குடியேறச் செய்வோம்'' (என்றும் வஹ்யி மூலம் அறிவித்து) ‘‘இது எவன் என் முன்னால் (விசாரணைக்காக) நிற்பதைப் பயந்தும், என் அச்சமூட்டலைப் பயந்தும் நடக்கிறானோ அவனுக்கு ஒரு சன்மானமாகும்'' என்றும் அவர்களுடைய இறைவன் அறிவித்தான்.(அல்குர்ஆன் 14 : 13,14)
ஒரு முஸ்லிம் எப்பொழுது இந்த லா இலாஹ இல்லல்லாஹ்விற்காக வேண்டி எழுந்திருக்கின்றானோ, குரல் கொடுக்கின்றானோ, அதற்காக தனது உயிரை பொருளை இழப்பதற்கு தயாராகின்றானோஅல்லாஹ் இவனையோ இவனது சந்ததியையோ இந்த பூமிக்கு வாரிசாக ஆக்குவான்.
அல்லாஹ்வுடைய தூதர் ﷺஅவர்கள் மக்காவில் எதற்காக கஷ்டப்பட்டார்கள். அவர்களுடைய துன்பங்கள் எதற்காக?
இரண்டரை ஆண்டுகள் அபூதாலிப் என்றழைக்கபடும் அந்த கணவாய்களுக்கு இடையில், அந்த இரண்டு மலைகளுக்கு இடையில், முஹம்மது ﷺஅவர்களுடைய தோழர்கள் அங்கே ஊரை விட்டு ஒதுக்கி வைக்கப் பட்டார்கள்.
அவர்களுக்கு உணவு கொடுக்கக் கூடாது. அவர்களிடத்தில் திருமணம் செய்யக் கூடாது. அவர்களிடத்தில் விற்கக் கூடாது, வாங்கக் கூடாது என்பதாக.
இந்த இரண்டரை ஆண்டுகளில் அல்லாஹ்வுடைய தூதர் ﷺபட்ட கஷ்டத்தை சொல்கின்றார்கள்,
அவர்களுடைய பிள்ளைகள் கதற ஆரம்பித்தார்கள். அதனுடைய சத்தத்தை மலைக்கு பின்பு இருந்து கேட்கலாம். முஸ்லிம்கள் ஒதுக்கி வைக்க பட்டார்கள்.
அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள் :
பசியின் கொடுமை, எழுந்து நடக்க விரும்பினேன் முடியவில்லை. மயக்கம் அடித்து கீழே விழுந்தேன். மீண்டும் எழுந்து நடக்க விரும்பினேன், முடியவில்லை. மயக்கம் அடித்து கீழே விழுந்தேன். ஏதோ ஒரு பளபளப்பான ஒரு பொருள் தெரிந்தது. அதை எடுத்து சாப்பிட்டேன். அது என்ன பொருள் என்று என்னால் கண்டுபிடிக்கமுடியவில்லை என்பதாக.
எப்படிப்பட்ட சோதனைகளை தாங்கினார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ﷺஅவர்களை பார்த்து குறைஷிகள் சொன்னார்கள் :
وَإِنْ كَادُوا لَيَسْتَفِزُّونَكَ مِنَ الْأَرْضِ لِيُخْرِجُوكَ مِنْهَا وَإِذًا لَا يَلْبَثُونَ خِلَافَكَ إِلَّا قَلِيلًا
(நபியே! உமது) ஊரிலிருந்து உமது காலைப்பெயர்த்து அதிலிருந்து உம்மை வெளிப்படுத்திவிடவே அவர்கள் முடிவு கட்டியிருந்தார்கள். அப்படி அவர்கள் செய்திருந்தால் உமக்குப் பின்னர் வெகு சொற்ப நாள்களே தவிர அங்கு அவர்கள் இருந்திருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 17 : 76)
மேலும் அல்லாஹ் சொல்கின்றான்:
وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ
(நபியே!) உம்மைச் சிறைப்படுத்தவோ அல்லது உம்மைக் கொலை செய்யவோ அல்லது உம்மை (ஊரைவிட்டு) அப்புறப்படுத்தவோ நிராகரிப்பவர்கள் சூழ்ச்சி செய்துகொண்டிருந்த (நேரத்)தை நினைத்துப் பார்ப்பீராக. அவர்களும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தனர்; (அவர்களுக் கெதிராக) அல்லாஹ்வும் சூழ்ச்சி செய்து கொண்டிருந்தான். ஆனால், சூழ்ச்சி செய்பவர்களிலெல்லாம் அல்லாஹ் மிக மேலானவன். (அல்குர்ஆன் 8 : 30)
முஹம்மது ﷺஅவர்கள் மக்காவில் விடுத்த அழைப்பு,எங்களுக்கு உங்களுடைய தலைமைத்துவத்தில், உங்களுடைய ஆட்சி அதிகாரத்தில், இந்த மக்காவை நிர்வகிப்பதில் அல்லது இந்த கஅபாவை நிர்வகிப்பதில் எங்களுக்கு பங்கு வேண்டும்; எங்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும்; உங்களைப் போன்று நாங்கள் சரிசமமாக நடத்தபட வேண்டும்; இந்த அடிமைகளுக்கு சம உரிமைகள் வழங்க பட வேண்டும் என்பதற்காக அல்ல, அவர்களுடைய போராட்டம்.
மாறாக, எதற்காக வேண்டி என்றால்,இந்த பூமியில் அல்லாஹ் வணங்கப்பட வேண்டும், அவன் மட்டுமே வணங்க பட வேண்டும்.
எப்பொழுது அல்லாஹ்வுடைய தூதர் ﷺஅவர்களுடைய அழைப்பு இதுவாக இருந்ததோ, இதற்காக வேண்டி அவர்கள் விரோதிக்கப் பட்டார்களோ, இதற்காக வேண்டி அவர்கள் பகைக்கப் பட்டார்களோ, இதற்காக வேண்டி அவர்கள் துன்புறுத்தப் பட்டார்களோ, இதற்காக வேண்டி அச்சுறுத்தப் பட்டார்களோ அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களுக்கு உதவி செய்தான்.
இந்த மக்காவில் இருந்தால் நீங்கள் கொல்லப் படுவீர்கள், கைது செய்யப் படுவீர்கள் என்று எச்சரிக்கப்பட்ட நிலைமையில் அல்லாஹ்வுடைய தூதர் ﷺஅவர்களும் அவர்களுடைய சஹாபாக்களும் அந்த மக்கா நகரத்தை விட்டு வெளியறுகிறார்கள்.
சரியாக எட்டு ஆண்டுகளுக்கு பின்பு,இந்த லா இலாஹ இல்லல்லாஹ்வுடைய புரட்சி, இந்த லா இலாஹ இல்லல்லாஹ்வுடைய முழக்கத்தின் அதிர்ச்சி காரணமாக காஃபிர்கள் நடுங்குகின்றார்கள். அவர்களுடைய உள்ளங்களை பயம் சூழ்ந்து கொள்கிறது.
அல்லாஹ்வுடைய தூதர் ﷺமக்காவை விட்டு வெளியறிய போது பயந்தவர்களாக ஒளிந்தவர்களாக வெளியேறினார்கள்.
அதே மக்காவிற்க்குள் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அவர்களை அழைத்து வருகிறான், ஒரு மிகப் பெரிய ஆட்சியாளர்களாக. அவர்கள் கட்டளையிட்டால் ஆயிரம் தலைகள் அங்கே கொல்லப் படலாம்.
ஆனால்,அல்லாஹ்வுடைய தூதர் ﷺசொல்லுகின்றார்கள்:
لا تثريبَ عليكم اليوم، اذهبوا فأنتم الطلقاءُ
உங்கள் மீது இன்று வரம்பு மீறப் பட மாட்டாது. அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக. அல்லாஹ்வுடைய தூதர் ﷺஅல்லாஹ்வை புகழ்கிறார்கள். எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவன் தனது வாக்கை முழுமைப் படுத்தினான். தனது அடிமைக்கு உதவி செய்தான். இந்த பொய்யான ராணுவங்களை இந்த எதிரிகளை அவன் தனியாக தோற்கடித்தான்.
நூல் : பைஹகீ, எண் :18275.
அல்லாஹ்வுடைய தூதர் ﷺஅவர்களுடைய பணிவை,அவர்களுக்கு அல்லாஹ்வின் மீது இருந்த உறுதியை நம்பிக்கையை பாருங்கள்.
ரசூலுல்லாஹ் ﷺஅவர்களுடைய 23ஆண்டுகளுடைய தொடர் போராட்டத்திற்க்கு பிறகு இந்த வெற்றி.
இந்த போராட்டம் லா இலாஹ இல்லல்லாஹ்விற்காக இருந்தது.தன்னுடைய நலனுக்காக அல்ல. தனக்கு ஆட்சி வழங்கப்பட வேண்டும் என்பதற்காக அல்ல. தன்னுடைய தோழர்கள், தோழிகள் நல்ல முறையில் வசதியாக வாழ வேண்டும் என்பதற்காக அல்ல. ஒரே முழக்கம் லா இலாஹ இல்லல்லாஹ் மட்டுமே.
குறைஷிகள் வந்தார்கள், அல்லாஹ்வின் தூதர் என்று நீங்கள் சொல்கின்றீர்களே, நாங்கள் இதை ஏற்று கொள்ள முடியாது. இதை தவிர எதை வேண்டுமானாலும் நாங்கள் உங்களுக்கு கொடுக்க தயார்.
உங்களுக்கு ஆட்சியை கொடுக்க தயார். செல்வத்தை கொடுக்க தயார். அழகிய பெண்களை உங்களுக்கு மணம் முடித்து கொடுக்க தயார்.
அல்லாஹ்வுடைய தூதர் ﷺசொன்னார்கள்,
«يَا أَيُّهَا النَّاسُ، قُولُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ تُفْلِحُوا»
இவை அனைத்தும் எனக்கு தேவை இல்லை. லா இலாஹ இல்லல்லாஹ் என்ற ஓரே வார்த்தையை தான் நான் உங்களிடம் இருந்து எதிர் பார்க்கிறேன். லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள் நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.(9)
நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 16603, 23151.
இந்த லா இலாஹ இல்லல்லாஹ்விற்காக வேண்டி அல்லாஹ்வுடைய தூதர் ﷺஅவர்களுடைய தோழர்கள் பட்ட கஷ்டங்களை துன்பத்தை பாருங்கள்.
இன்று, சர்வ சாதாரணமாக இந்த லா இலாஹ இல்லல்லாஹ்வில் மக்கள் உடனே சமரசம் செய்து கொள்கிறார்கள். எந்த சோதனையையும் துன்பத்தையும் சந்திக்க தயாராக இல்லாமல், அல்லாஹ்வுடைய புறத்தில் இருந்து உதவியை எதிர் பார்க்க கூடிய ஏமாளி சமுதாயமாக இன்று முஸ்லிம்கள் இருக்கிறார்கள். தங்களை தாங்களே ஏமாற்றிக் கொள்கிறார்கள்.
இந்த ஈமானை, இந்த இஸ்லாமை, இந்த தவ்ஹீதை, அல்லாஹ்வின் மீதான நம்பிக்கையை வாழ்க்கையில் கொண்டு வராமல் முஸ்லிம் என்று தங்களை சொல்லி கொள்ளும் ஒரே காரணத்தால் அல்லாஹ்வின் புறத்திலிருந்து உதவியை எதிர் பார்க்க கூடிய ஒரு அறியாமையில் இருக்க கூடிய சமுதாயம் என்று சொன்னால் நம்முடைய காலத்தில் வாழக்கூடிய சமுதாயத்தை சொல்லலாம்.
எதற்கு வேண்டுமானாலும் இவர்கள் போராட்டம் செய்வார்கள். எதற்கு வேண்டுமானாலும் இவர்கள் குரல் கொடுப்பார்கள்.
ஆனால், இவர்கள் குரல் கொடுக்காத ஒன்று, தவ்ஹீதுக்காக வேண்டி. லா இலாஹ இல்லல்லாஹ்விற்காக வேண்டி.
தனது உயிரை பொருளை தன்னுடைய வாழ்க்கையில் அனைத்தையும் இவர்கள் செலவு செய்ய தயார். இந்த உலக அற்ப வாழ்க்கையில் இன்பம் அடைவதற்காக.
மறுமை என்று வந்து விட்டால் அனைத்தையும் சமரசம் செய்து கொள்ள இவர்கள் தயார். தவ்ஹீதை விட்டு கொடுக்க இவர்கள் தயார்.
இப்படிப்பட்ட துர்பாக்கியவாதிகளை பற்றி தான்அல்லாஹ் குர்ஆனில் சொல்கிறான்.
مَنْ كَفَرَ بِاللَّهِ مِنْ بَعْدِ إِيمَانِهِ إِلَّا مَنْ أُكْرِهَ وَقَلْبُهُ مُطْمَئِنٌّ بِالْإِيمَانِ وَلَكِنْ مَنْ شَرَحَ بِالْكُفْرِ صَدْرًا فَعَلَيْهِمْ غَضَبٌ مِنَ اللَّهِ وَلَهُمْ عَذَابٌ عَظِيمٌ (106) ذَلِكَ بِأَنَّهُمُ اسْتَحَبُّوا الْحَيَاةَ الدُّنْيَا عَلَى الْآخِرَةِ وَأَنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ (107) أُولَئِكَ الَّذِينَ طَبَعَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ وَسَمْعِهِمْ وَأَبْصَارِهِمْ وَأُولَئِكَ هُمُ الْغَافِلُونَ (108) لَا جَرَمَ أَنَّهُمْ فِي الْآخِرَةِ هُمُ الْخَاسِرُونَ (109) ثُمَّ إِنَّ رَبَّكَ لِلَّذِينَ هَاجَرُوا مِنْ بَعْدِ مَا فُتِنُوا ثُمَّ جَاهَدُوا وَصَبَرُوا إِنَّ رَبَّكَ مِنْ بَعْدِهَا لَغَفُورٌ رَحِيمٌ
(ஆகவே,) எவரேனும் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டதன் பின்னர் அவனை நிராகரித்தால் அவனைப் பற்றி கவனிக்கப்படும். அவனுடைய உள்ளம் நம்பிக்கையை கொண்டு முற்றிலும் திருப்தியடைந்தே இருக்க, எவருடைய நிர்ப்பந்தத்தினால் அவன் (இப்படி) நிராகரித்தால் அவன் மீது ஒரு குற்றமுமில்லை. எனினும், அவனுடைய உள்ளத்தில் நிராகரிப்பே நிறைந்திருந்(து இப்படி செய்)தால் அவன் மீது அல்லாஹ்வுடைய கோபம்தான் ஏற்படும். அவனுக்கு கடுமையான வேதனையுமுண்டு.
ஏனென்றால், நிச்சயமாக இவர்கள் மறுமையைவிட இவ்வுலக வாழ்க்கையின் மீதுதான் நேசம் கொண்டார்கள். நிச்சயமாக, நிராகரிக்கின்ற (இத்தகைய) மக்களை அல்லாஹ் நேரான வழியில் செலுத்தமாட்டான்.
இவர்களின் இதயங்கள் மீதும், காதுகள் மீதும், கண்கள் மீதும் அல்லாஹ் முத்திரையிட்டு விட்டான். இவர்கள்தான் (தங்கள் தீய முடிவை) உணர்ந்து கொள்ளாதவர்கள்.
மறுமையில் முற்றிலும் நஷ்டமடைபவர்கள் இவர்கள்தான் என்பதில் ஒரு ஐயமுமில்லை.
(நபியே!) எவர்கள் (எதிரிகளால்) துன்புறுத்தப்பட்டு, பின்னர் (தங்கள் இல்லத்திலிருந்து) வெளிப்பட்டு, போரும் புரிந்து (பல சிரமங்களையும்) சகித்துக் கொண்டு உறுதியாக இருந்தார்களோ அவர்களுக்(கு அருள் புரிவதற்)காகவே நிச்சயமாக உமது இறைவன் இருக்கிறான். நிச்சயமாக உமது இறைவன் இதற்குப் பின்னரும் (அவர்களை) மன்னிப்பவன் (அவர்கள் மீது) கருணையுடையவன் ஆவான். (அல்குர்ஆன் 16 : 106-110)
வசனத்தின் விளக்கம் : இமாம் இப்னு கஸீர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி இந்த வசனங்களைப் பற்றி எழுதிய பிறகு இதனுடைய விரிவுரையை எழுதுகிறார்கள். இந்த வசனங்கள் அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை பற்றி இறக்க பட்டது. பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்களை பற்றி இறக்க பட்டது.
அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கொடுமைப் படுத்தப் பட்டார்கள். சாதாரண கொடுமை அல்ல. நெருப்பு கங்குகளின் மீது படுக்க வைக்கப் பட்டார்கள். சங்கிலியால் பிணைக்கப் பட்டார்கள். சுடும் பாறை அவர்களது நெஞ்சில் போட்டு அமுக்கப் பட்டது. சிறுவர்களும் பெரியவர்களும் குண்டர்களும் கோரமான முறையில் அவர்களை தாக்கினார்கள்.
எதற்காக வேண்டி? இட ஒதுக்கீடு கேட்டா? ஆட்சியில் பங்கு கேட்டா? ஒரே வார்த்தை லா இலாஹ இல்லல்லாஹ்விற்காக.
பிலால் சொல்கின்றார்கள்: என்னை கொடுமைப் படுத்தினார்கள். மயக்கம் அடித்து விழுந்தேன். அஹத் அஹத் (அல்லாஹ் ஒருவனே) என்று சொல்வதை விட்டு விடு.
அப்பொழுது, பிலால் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொன்னார்கள்: இதை விட உங்களுக்கு ரோஷத்தை ஏற்படுத்தக் கூடிய ஒரு வார்த்தை எனக்கு தெரிந்திருந்தது என்று சொன்னால் நான் அதை உங்களுக்கு சொல்லி இருப்பேன் என்பதாக.
அம்மார் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கடுமையான துன்பத்திற்கு ஆளானார்கள். கடுமையான சோதனைக்கு ஆளாகி விட்டார்கள். அந்த நேரத்தில் அவர்கள் பயந்து காஃபிர்களை திருப்தி படுத்துவதற்காக ஓரிரு வார்த்தைகளை நாவால் சொன்னார்கள்.
அவர்களுடைய உடம்பெல்லாம் ரத்த காயங்களாக நெருப்பு புண்களாக நெருப்பால் காயப்படுத்தப் பட்டார்கள். சோதிக்கப் பட்டார்கள். சாட்டைகளால் அடிக்கப் பட்டார்கள்.
அந்த நேரத்தில் அவர்களுடைய வலியை தாங்கி கொள்ள முடியாமல் அந்த காஃபிர்களை திருப்திப் படுத்தும் படியான ஒரு சில வார்த்தைகளை சொன்னார்கள். காஃபிர்கள் அவர்களை விட்டு விட்டார்கள்.
உடனே அல்லாஹ்வின் தூதர் ﷺஅவர்கள் சமூகத்திற்கு வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன். எனக்கு என்ன நிலைமை ஆகும்! என்று தெரிய வில்லை. என்னை இந்த காஃபிர்கள் படுத்திய கொடுமையில் உங்களை ஏசி விட்டேன். அவர்களது சிலைகளை பற்றி சில வார்த்தைகளை அவர்கள் சந்தோஷப் படும்படி கூறி விட்டேன். என்னுடைய நிலைமை என்ன ஆகும் என்று பயந்தார்கள்.
எப்படி பட்ட சோதனைக்கு பிறகு, எப்படி பட்ட கஷ்டத்திற்கு பிறகு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அர்ஷில் இருந்து இத்தகைய தோழர்களுக்காக வசனத்தை இறக்கினான்.
பார்க்க : (அல்குர்ஆன் 16 : 106-110)
நீங்கள் குர்ஆனில் அதிகமாக ஓதக்கூடிய ஒரு சூரா, பல தொழுகையில் நீங்கள் கேட்டிருக்கலாம், 85வது அத்தியாயமாகிய அல் புரூஜ். ஆனால், இந்த சூரா இறக்கப்பட்ட காரணத்தை, இந்த சூராவில் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் எத்தகைய வரலாற்று பின்னணியை குறிப்பிடுகின்றான் என்று பார்த்தீர்களா?
وَالسَّمَاءِ ذَاتِ الْبُرُوجِ (1) وَالْيَوْمِ الْمَوْعُودِ (2) وَشَاهِدٍ وَمَشْهُودٍ (3) قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ (4) النَّارِ ذَاتِ الْوَقُودِ (5) إِذْ هُمْ عَلَيْهَا قُعُودٌ (6) وَهُمْ عَلَى مَا يَفْعَلُونَ بِالْمُؤْمِنِينَ شُهُودٌ (7) وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ (8) الَّذِي لَهُ مُلْكُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ (9) إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ
கோள்கள் நிறைந்த வானத்தின் மீது சத்தியமாக, வாக்களிக்கப்பட்ட (மறுமை) நாள் மீது சத்தியமாக, சாட்சியின் மீதும், சாட்சி சொல்ல வேண்டிய நாளின் மீதும் சத்தியமாக! அகழுடையவர்கள் அழிக்கப்பட்டார்கள். (அவ்வாறே இம்மக்காவாசிகளும் அழிக்கப்படுவார்கள்.) அது, விறகுகள் போட்டெரித்த நெருப்பு (அகழ்). அதன் முன் அவர்கள் உட்கார்ந்து கொண்டிருந்த சமயத்தில், நம்பிக்கையாளர்களை (நெருப்புக் கிடங்கில் போட்டு) நோவினை செய்வதை அவர்கள் (வேடிக்கையாகப்) பார்த்துக் கொண்டுமிருந்தார்கள். (நம்பிக்கை கொண்ட) அவர்களில் ஒரு குற்றத்தையும் அவர்கள் காணவில்லை. எனினும், மிக்க புகழுடையவனும், (அனைவரையும்) மிகைத்தவனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் நம்பிக்கை கொண்டதையே அவர்கள் குற்றமாகக் கண்டனர். வானங்கள், பூமியின் ஆட்சி அவனுக்குரியதே! (அவனை நம்பிக்கை கொண்டதற்காகவே அந்த பாவிகள் அவர்களை நெருப்பில் எறிந்தனர்.) அல்லாஹ்வோ, (இவர்கள் செய்த) அனைத்திற்கும் சாட்சி ஆவான். ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் இவ்வாறு துன்புறுத்தி பின்னர், அதைப்பற்றி அவர்கள் (கைசேதப்பட்டு) மன்னிப்புக் கோரவும் இல்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நரக வேதனை உண்டு. மேலும், (அவர்கள் நம்பிக்கையாளர்களை நெருப்பிட்டவாறு) அவர்களுக்கும் பொசுக்குகின்ற வேதனையுண்டு. (அல்குர்ஆன் 85 : 1-10)
வசனத்தின் கருத்து : முந்தைய சமுதாயத்தில் ஒரு பெரிய ஊரை சேர்ந்த மக்கள் அனைவரும் ஈமானை ஏற்று கொண்டார்கள்.ஒரு வாலிபருடையஉழைப்பின் காரணமாக.அந்த வாலிபருடைய அழைப்பின் காரணமாக தங்களுடைய ராஜாவை வணங்கி கொண்டிருந்த மக்கள் அல்லாஹ்வை வணங்குபவர்களாக மாறினார்கள்.
இந்த அரசன் அவர்களை பழி வாங்க நினைத்தான். அவர்களுடைய மதத்தை விட்டு, மார்க்கத்தை விட்டு திருப்ப நாடினான். தவ்ஹீதை விட்டு அவர்களை திருப்ப நாடினான். அவர்களை தன்னை வணங்குவதற்கு நிர்பந்தித்தான்.
இதற்காக வேண்டி அவன் அந்த ஊரை சுற்றி, அந்த ஊரின் தெருக்களை சுற்றி மிக பெரிய வாய்காலை அகழை தோண்டினான். அதில் நெருப்புகளை ஏற்றினான். அதில் விறகுகளை போட்டு நெருப்புகளை மூட்டினான். அங்கே ஊர் மக்கள் அனைவரையும் அழைத்து வந்து கட்டப்பட்டு நிறுத்தப் பட்டார்கள்.
நீங்கள் லா இலாஹ இல்லல்லாஹ்வை விட்டு விடுங்கள்,என்னை வணங்குங்கள். உங்களை நாங்கள் விட்டு விடுகிறோம் என்பதாக.
ஆனால், அந்த ஊரில் வசித்த 20,000திற்கும் மேற்பட்ட மக்களில்ஒருவர் கூட லா இலாஹ இல்லல்லாஹுவை விட தயாராக இல்லை. தனக்கு முன்பு எரியக் கூடிய நெருப்பை பார்த்ததற்கு பிறகு கூட.
ஒவ்வொருவராக அந்த நெருப்பில் தூக்கி எரியப்படுகிறார்கள். அந்த நெருப்பில் போட்டு பொசுக்கப்படுகிறார்கள்.
அந்த 20,000மக்களில் இருந்து ஒருவர் கூட தனது ஈமானை விடவில்லை. தனது தவ்ஹீதை விடவில்லை. எத்தகைய சோதனை பாருங்கள்.
இது சாதாரணமாக யாரோ ஒருவர் சொல்லகூடிய வரலாற்று சம்பவம் கிடையாது. ரப்புல் ஆலமீன் சொல்ல கூடிய குர் ஆனுடைய சம்பவம்.
20,000பேர்கள் ஒரே பகலில் நெருப்பில் போட்டு பொசுக்கப் பட்டார்கள். எதற்காக? ராஜாவிடத்தில் ஆட்சியை கேட்டதற்காகவா? மந்திரி பதவி கேட்டதற்காக வேண்டியா? சிப்பாய்களின் பதவியை கேட்டதற்காக வேண்டியா? இல்லை.
லா இலாஹ இல்லல்லாஹ்விற்காக வேண்டி. ரப்புல் ஆலமீனை வணங்க வேண்டும். நீ வணங்க தகுதியானவன் அல்ல. நீ உன்னை வணங்க கூறினாலும் சரி அல்லது யாரை வணங்க கூறினாலும் சரி, அல்லாஹ்வை தவிர நாங்கள் யாரையும் வணங்க மாட்டோம் என்ற ஒரே முழக்கத்திற்காக வேண்டி. அல்லாஹு அக்பர்!
எப்படிப்பட்ட சோதனை பாருங்கள். அது போன்ற சோதனை நம்முடைய சமுதாயத்திலும் சஹாபாக்கள் அனுபவித்து இருக்கிறார்கள்.
அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா ஸலமி ரழியல்லாஹு அன்ஹு அவர்களை ரோமர்கள் கைது செய்து விட்டார்கள். ரோமருடைய அரசன் மிக பெரிய ஒரு பாத்திரத்தை ஏற்பாடு செய்து அதில் தண்ணீரை கொதிக்க வைக்கின்றான். முஸ்லிம்களுடைய இரண்டு கைதிகளை அழைத்து வந்து அந்த தண்ணீரில் போட்டு பொசுக்குகின்றான்.
அப்துல்லாஹ்! இதே கதி உனக்கு ஏற்படும். உனக்கு நான் எனது ஆட்சியை தருகிறேன். எனது மகளை உனக்கு மணம் முடித்து தருகிறேன். நீ இஸ்லாமை விட்டு விடு. நசரானி மதத்தில் நீ சேர்ந்து விடு என்பதாக.
அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா முஸ்லிம் தலைவர்களுக்கு முன்பாக, அவருடைய தோழர்கள், படை வீரர்கள் அந்த கொதிக்கும் நீரில் பொசுக்கப் படுகிறார்கள். அவர்களுடைய உடல் உறுப்புகள் தனித்தனியாக பிரிகின்றன.
அந்த நேரத்திலும் கூட அவர்கள் ஈமானை விடவில்லை. லா இலாஹ இல்லல்லாஹ்வை விட வில்லை. கடைசியாக அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா ரதியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு பல விதத்தில் கொடுமை எச்சரிக்கை செய்யப்பட்டதற்கு பிறகும் கூட அவர்கள் ஈமானை இஸ்லாமை விட தயாராக இல்லை.
இந்த சம்பவங்களை எல்லாம் இதே ஆயத்துனுடைய தொடரில் இமாம் இப்னு கஸீர் ரஹ்மத்துல்லாஹி எழுதுகின்றார்கள்.
கடைசியாக, அவர்களை கழுமரத்தில் ஏற்றி அவர்களுடைய நாலா பக்கங்களிலும் அம்புகளை கொண்டு எறிகின்றார்கள். அந்த நேரத்திலும் அவர்களுடைய ஈமான் தடுமாறவில்லை.
அவர்களை நெருப்பு கங்கில் போடுவதற்காக வேண்டி கொதிக்கக் கூடிய அந்த நீரில் போடுவதற்காக வேண்டி அழைத்து வருகிறார்கள். கொக்கியை கொண்டு அவர்களை தூக்கி அதில் இரக்ககூடிய நேரத்தில், அப்துல்லாஹ் இப்னு ஹுதாபா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் கண்களில் இருந்து கண்ணீர் வருகிறது.
உடனடியாக அதை பார்த்த அரசர் அவர்களை கீழே இறக்கும் படி சொல்கின்றான். அழைத்துச் சொல்கின்றான், உன்னுடைய மனம் மாறி விட்டதா? நீ இஸ்லாமை, ஈமானை விட தயாராகி விட்டாயா? லா இலாஹ இல்லல்லாஹ்வை விட தயாராகி விட்டாயா? என்று.
சொன்னார்கள்: முட்டாளே! நான் அழுதது இந்த உடலுக்காக, இந்த உயிருக்காக அல்ல. அல்லாஹ் எனக்கு கொடுத்து இருப்பதோ ஒரு உயிர். அது இப்போது அழிந்து விட்டால் வேறு எந்த உயிரை நான் அல்லாஹுவுடைய பாதையில் தியாகம் செய்வேன்!?
என்னுடைய உடலில் இருக்க கூடிய ரோமங்களின் அளவிற்கு அல்லாஹ் எனக்கு உயிரை கொடுக்க வேண்டுமே! ஒரு உயிருக்கு பின் ஒரு உயிராக இதே வேதனையை சுவைக்க வேண்டுமே! என்ற ஆசையால் நான் அழுதேனே தவிர என்னுடைய உயிரை பயந்து நான் அழவில்லை என்பதாக கூறினார்கள்.
அந்த அரசன் அதிர்ச்சியாகி விட்டான். நடுக்கத்திற்கு ஆளாகி விட்டான். இறங்கி வருகிறான். அப்துல்லாஹ் எனது நெற்றியில் முத்தம் கோடு. என்னை மன்னித்து விடு. உன்னையும் உன் தோழர்களையும் நான் விட்டு விடுகிறேன். எனது செயலுக்காக மன்னிப்பு கேட்கிறேன் என்று கூறுகிறான்.
நூல் : சீரா இப்னு ஹிஷாம்.
அன்புக்குரியவர்களே! நம்முடைய முஸ்லிம்கள் இந்த ஈமானை கொண்டு தான் அனைத்தையும் சாதித்தார்கள். லா இலாஹ இல்லல்லாஹுவை கொண்டு தான் அனைத்தையும் சாதித்தார்கள்.
ஆனால்,நாம் லா இலாஹ இல்லல்லாஹுவை விட்டு விட்டு மற்றதை கொண்டு எதையும் சாதிக்கலாம் என்று நினைக்கிறோம்.
ஆனால்,அல்லாஹ்வுடைய ஏற்பாடு அப்படி கிடையாது. அல்லாஹுவுடைய விதி அப்படி கிடையாது.
ஒரு முஸ்லிம் இந்த உலகத்தில் கண்ணியபடுத்த பட வேண்டும் என்று சொன்னால் ஒரு முஸ்லிமுக்கு உயர்வு என்று சொன்னால் இந்த லா இலாஹ இல்லல்லாஹுவை கொண்டு தான்.
இந்த லா இலாஹ இல்லல்லாஹுவை கொண்டு நாம் எழுந்தால், இந்த லா இலாஹ இல்லல்லாஹுவை கொண்டு அல்லாஹ்வின் பக்கம் மக்களை நாம் அழைத்தால்,இந்த லா இலாஹ இல்லல்லாஹ்விற்காக நாம் போராடினால் அல்லாஹ் ரப்புல் ஆலமீனுடைய வாக்கு இந்த பூமியினுடைய கலீபாக்களாக அல்லாஹ் நம்மை ஆக்குவான்.
அவர்கள் நம்மிடத்தில் தங்களுடைய தேவைகளை கேட்க கூடியவர்களாக அல்லாஹ் மாற்றுவான்.
இன்று என்ன நிலைமை? லா இலாஹ இல்லல்லாஹுவை புறக்கணித்து விட்டு, அதை விட்டு விட்டு அதன் பக்கம் அழைக்காமல் நம்முடைய உலக தேவைகளை முன்னிட்டு நாம் செய்யக்கூடிய போராட்டங்களின் காரணமாக நம்முடைய நிலைமை எப்படி மாறி விட்டது? அல்லாஹ் அந்த பாவிகளிடத்தில், அந்த காஃபிர்களிடத்தில் நம்மை கையேந்தும் படி ஆக்கி விட்டான்.
அல்லாஹ் சொல்கின்றான்:
وَعَدَ اللَّهُ الَّذِينَ آمَنُوا مِنْكُمْ وَعَمِلُوا الصَّالِحَاتِ لَيَسْتَخْلِفَنَّهُمْ فِي الْأَرْضِ كَمَا اسْتَخْلَفَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَى لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُمْ مِنْ بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَنْ كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ
(மனிதர்களே!) உங்களில் எவரேனும் மெய்யாகவே நம்பிக்கை கொண்டு நற்செயல்களையும் செய்து வந்தால், அவர்களுக்கு முன்னர் சென்றவர்களை(ப் பூமிக்கு) அதிபதிகளாக்கியது போன்றே இவர்களையும் நிச்சயமாகப் பூமிக்கு அதிபதியாக்கி வைப்பதாகவும், அவன் இவர்களுக்கு விரும்பிய மார்க்கத்தில் இவர்களை உறுதியாக்கி வைப்பதாகவும், அமைதியையும் பாதுகாப்பையும் கொண்டு இவர்களுடைய பயத்தை மாற்றி விடுவதாகவும் நிச்சயமாக அல்லாஹ் வாக்களித்திருக்கிறான். (அன்றி) அவர்கள் தன்னையே வணங்கும்படியாகவும், எதையும் தனக்கு இணையாக்கக் கூடாது என்றும் அவன் கட்டளையிட்டிருக்கிறான். இதன் பின்னர், எவரேனும் நிராகரிப்பவர்களாகி விட்டால் நிச்சயமாக அவர்கள் பெரும் பாவிகள்தான். (அல்குர்ஆன் 24 : 55)
அல்லாஹ்வின் அடியார்களே! நமது வாழ்க்கையை நாம் புரிந்து கொள்வோமாக. வாழ்க்கையின் நோக்கத்தை குறிக்கோளை புரிந்து கொள்வோமாக! அல்லாஹ்வுடைய தவ்ஹீதை அறிந்து கொள்வோமாக!
இந்த வாழ்க்கையில் தவ்ஹீதை உறுதியாக கொண்டு வாழ்ந்த சமுதாயத்தினரை பின்பற்றி ஈமானில் நம்முடைய இஸ்லாமில் நம்முடைய தவ்ஹீதில் உண்மையை நிலை நிறுத்துவோமாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ مُوسَى قَالَ أَخْبَرَنَا حَنْظَلَةُ بْنُ أَبِي سُفْيَانَ عَنْ عِكْرِمَةَ بْنِ خَالِدٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بُنِيَ الْإِسْلَامُ عَلَى خَمْسٍ شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ وَالْحَجِّ وَصَوْمِ رَمَضَانَ (صحيح البخاري 7 -)
குறிப்பு 2)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ جَمِيعًا عَنْ وَكِيعٍ قَالَ أَبُو بَكْرٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ زَكَرِيَّاءَ بْنِ إِسْحَقَ قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ عَنْ أَبِي مَعْبَدٍ عَنْ ابْنِ عَبَّاسٍ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ أَبُو بَكْرٍ رُبَّمَا قَالَ وَكِيعٌ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ مُعَاذًا قَالَ بَعَثَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّكَ تَأْتِي قَوْمًا مِنْ أَهْلِ الْكِتَابِ فَادْعُهُمْ إِلَى شَهَادَةِ أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنِّي رَسُولُ اللَّهِ فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَأَعْلِمْهُمْ أَنَّ اللَّهَ افْتَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ فَتُرَدُّ فِي فُقَرَائِهِمْ فَإِنْ هُمْ أَطَاعُوا لِذَلِكَ فَإِيَّاكَ وَكَرَائِمَ أَمْوَالِهِمْ وَاتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّهُ لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ حِجَابٌ (صحيح مسلم 27 -)
குறிப்பு 3)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا الْأَعْمَشُ عَنْ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ عَنْ أَبِي ذَرٍّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ مَنْ جَاءَ بِالْحَسَنَةِ فَلَهُ عَشْرُ أَمْثَالِهَا وَأَزِيدُ وَمَنْ جَاءَ بِالسَّيِّئَةِ فَجَزَاؤُهُ سَيِّئَةٌ مِثْلُهَا أَوْ أَغْفِرُ وَمَنْ تَقَرَّبَ مِنِّي شِبْرًا تَقَرَّبْتُ مِنْهُ ذِرَاعًا وَمَنْ تَقَرَّبَ مِنِّي ذِرَاعًا تَقَرَّبْتُ مِنْهُ بَاعًا وَمَنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً وَمَنْ لَقِيَنِي بِقُرَابِ الْأَرْضِ خَطِيئَةً لَا يُشْرِكُ بِي شَيْئًا لَقِيتُهُ بِمِثْلِهَا مَغْفِرَةً (صحيح مسلم 4852 -)
குறிப்பு 4)
حَدَّثَنِي إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، سَمِعَ يَحْيَى بْنَ آدَمَ، حَدَّثَنَا أَبُو الأَحْوَصِ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ عَمْرِو بْنِ مَيْمُونٍ، عَنْ مُعَاذٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كُنْتُ رِدْفَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى حِمَارٍ يُقَالُ لَهُ عُفَيْرٌ، فَقَالَ: «يَا مُعَاذُ، هَلْ تَدْرِي حَقَّ اللَّهِ عَلَى عِبَادِهِ، وَمَا حَقُّ العِبَادِ عَلَى اللَّهِ؟»، قُلْتُ: اللَّهُ وَرَسُولُهُ أَعْلَمُ، قَالَ: «فَإِنَّ حَقَّ اللَّهِ عَلَى العِبَادِ أَنْ يَعْبُدُوهُ وَلاَ يُشْرِكُوا بِهِ شَيْئًا، وَحَقَّ العِبَادِ عَلَى اللَّهِ أَنْ لاَ يُعَذِّبَ مَنْ لاَ يُشْرِكُ بِهِ شَيْئًا»، فَقُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَفَلاَ أُبَشِّرُ بِهِ النَّاسَ؟ قَالَ: «لاَ تُبَشِّرْهُمْ، فَيَتَّكِلُوا» (صحيح البخاري- 2856)
குறிப்பு 5)
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ، أَخْبَرَنَا أَبِي، حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، حَدَّثَنَا الْأَعْمَشُ، عَنْ سُلَيْمَانَ بْنِ مَيْسَرَةَ، عَنْ طَارِقِ بْنِ شِهَابٍ، عَنْ سُلَيْمَانَ قَالَ: «دَخَلَ رَجُلٌ الْجَنَّةَ فِي ذُبَابٍ، وَدَخَلَ النَّارَ رَجُلٌ فِي ذُبَابٍ» قَالُوا: وَكَيْفَ ذَلِكَ؟ قَالَ: " مَرَّ رَجُلَانِ عَلَى قَوْمٍ لَهُمْ صَنَمٌ لَا يَجُوزُهُ أَحَدٌ حَتَّى يُقَرِّبَ لَهُ شَيْئًا، فَقَالُوا لِأَحَدِهِمَا: قَرِّبْ قَالَ: لَيْسَ عِنْدِي شَيْءٌ فَقَالُوا لَهُ: قَرِّبْ وَلَوْ ذُبَابًا فَقَرَّبَ ذُبَابًا، فَخَلَّوْا سَبِيلَهُ " قَالَ: " فَدَخَلَ النَّارَ، وَقَالُوا لِلْآخَرِ: قَرِّبْ وَلَوْ ذُبَابًا قَالَ: مَا كُنْتُ لِأُقَرِّبَ لِأَحَدٍ شَيْئًا دُونَ اللَّهِ عَزَّ وَجَلَّ " قَالَ: «فَضَرَبُوا عُنُقَهُ» قَالَ: «فَدَخَلَ الْجَنَّةَ» (الزهد لأحمد بن حنبل- 84)
இந்த ஹதீஸின் தரம் குறித்து கூடுதல் விளக்கங்களைப் பார்க்க கீழ் உள்ள லிங்கை க்ளிக் செய்யவும் :
https://www.islamweb.net/ar/fatwa/98868/%D8%AD%D8%AF%D9%8A%D8%AB-%D8%AF%D8%AE%D9%84-%D8%B1%D8%AC%D9%84-%D8%A7%D9%84%D8%AC%D9%86%D8%A9-%D9%81%D9%8A-%D8%B0%D8%A8%D8%A7%D8%A8-%D9%85%D9%88%D9%82%D9%88%D9%81
https://www.dorar.net/search?q=+%D8%AF%D8%AE%D9%84+%D8%A7%D9%84%D8%AC%D9%86%D9%91%D9%8E%D8%A9%D9%8E+%D8%B1%D8%AC%D9%84%D9%8C+%D9%81%D9%8A+%D8%B0%D9%8F%D8%A8%D8%A7%D8%A8%D9%8D+%D9%88%D8%AF%D8%AE%D9%84+%D8%A7%D9%84%D9%86%D8%A7%D8%B1%D9%8E+%D8%B1%D8%AC%D9%84%D9%8C+%D9%81%D9%8A+%D8%B0%D9%8F%D8%A8%D8%A7%D8%A8%D9%8D
குறிப்பு 6)
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُنِيرٍ، سَمِعَ أَبَا النَّضْرِ، حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «رِبَاطُ يَوْمٍ فِي سَبِيلِ اللَّهِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا عَلَيْهَا، وَمَوْضِعُ سَوْطِ أَحَدِكُمْ مِنَ الجَنَّةِ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا عَلَيْهَا، وَالرَّوْحَةُ يَرُوحُهَا العَبْدُ فِي سَبِيلِ اللَّهِ، أَوِ الغَدْوَةُ خَيْرٌ مِنَ الدُّنْيَا وَمَا عَلَيْهَا» (صحيح البخاري- 2892)
குறிப்பு 7)
حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ المُثَنَّى، حَدَّثَنَا يَحْيَى، عَنْ إِسْمَاعِيلَ، حَدَّثَنَا قَيْسٌ، عَنْ خَبَّابِ بْنِ الأَرَتِّ، قَالَ: شَكَوْنَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَهُوَ مُتَوَسِّدٌ بُرْدَةً لَهُ فِي ظِلِّ الكَعْبَةِ، قُلْنَا لَهُ: أَلاَ تَسْتَنْصِرُ لَنَا، أَلاَ تَدْعُو اللَّهَ لَنَا؟ قَالَ: «كَانَ الرَّجُلُ فِيمَنْ قَبْلَكُمْ يُحْفَرُ لَهُ فِي الأَرْضِ، فَيُجْعَلُ فِيهِ، فَيُجَاءُ بِالْمِنْشَارِ فَيُوضَعُ عَلَى رَأْسِهِ فَيُشَقُّ بِاثْنَتَيْنِ، وَمَا يَصُدُّهُ ذَلِكَ عَنْ دِينِهِ، وَيُمْشَطُ بِأَمْشَاطِ الحَدِيدِ مَا دُونَ لَحْمِهِ مِنْ عَظْمٍ أَوْ عَصَبٍ، وَمَا يَصُدُّهُ ذَلِكَ عَنْ دِينِهِ، وَاللَّهِ لَيُتِمَّنَّ هَذَا الأَمْرَ، حَتَّى يَسِيرَ الرَّاكِبُ مِنْ صَنْعَاءَ إِلَى حَضْرَمَوْتَ، لاَ يَخَافُ إِلَّا اللَّهَ، أَوِ الذِّئْبَ عَلَى غَنَمِهِ، وَلَكِنَّكُمْ تَسْتَعْجِلُونَ» (صحيح البخاري- 3612)
குறிப்பு 8)
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، عَنْ فُضَيْلِ بْنِ غَزْوَانَ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَبَعَثَ إِلَى نِسَائِهِ فَقُلْنَ: مَا مَعَنَا إِلَّا المَاءُ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ يَضُمُّ أَوْ يُضِيفُ هَذَا»، فَقَالَ رَجُلٌ مِنَ الأَنْصَارِ: أَنَا، فَانْطَلَقَ بِهِ إِلَى امْرَأَتِهِ، فَقَالَ: أَكْرِمِي ضَيْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: مَا عِنْدَنَا إِلَّا قُوتُ صِبْيَانِي، فَقَالَ: هَيِّئِي طَعَامَكِ، وَأَصْبِحِي سِرَاجَكِ، وَنَوِّمِي صِبْيَانَكِ إِذَا أَرَادُوا عَشَاءً، فَهَيَّأَتْ طَعَامَهَا، وَأَصْبَحَتْ سِرَاجَهَا، وَنَوَّمَتْ صِبْيَانَهَا، ثُمَّ قَامَتْ كَأَنَّهَا تُصْلِحُ سِرَاجَهَا فَأَطْفَأَتْهُ، فَجَعَلاَ يُرِيَانِهِ أَنَّهُمَا يَأْكُلاَنِ، فَبَاتَا طَاوِيَيْنِ، فَلَمَّا أَصْبَحَ غَدَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: «ضَحِكَ اللَّهُ اللَّيْلَةَ، أَوْ عَجِبَ، مِنْ فَعَالِكُمَا» فَأَنْزَلَ اللَّهُ: {وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمُ المُفْلِحُونَ} [الحشر: 9] (صحيح البخاري 3798)
குறிப்பு 9)
قَالَ عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ، حَدَّثَنِي أَبُو سُلَيْمَانَ الضَّبِّيُّ دَاوُدُ بْنُ عَمْرِو بْنِ زُهَيْرٍ الْمُسَيِّبِيُّ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي الزِّنَادِ، عَنْ أَبِيهِ، عَنْ رَبِيعَةَ بْنِ عِبَادٍ الدِّيلِيِّ، وَكَانَ جَاهِلِيًّا أَسْلَمَ، فَقَالَ: رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَصَرَ عَيْنِي بِسُوقِ ذِي الْمَجَازِ، يَقُولُ: " يَا أَيُّهَا النَّاسُ قُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ، تُفْلِحُوا " وَيَدْخُلُ فِي فِجَاجِهَا وَالنَّاسُ مُتَقَصِّفُونَ عَلَيْهِ، فَمَا رَأَيْتُ أَحَدًا يَقُولُ شَيْئًا، وَهُوَ لَا يَسْكُتُ [ص:405]، يَقُولُ: " أَيُّهَا النَّاسُ قُولُوا: لَا إِلَهَ إِلَّا اللَّهُ تُفْلِحُوا " إِلَّا أَنَّ وَرَاءَهُ رَجُلًا أَحْوَلَ وَضِيءَ الْوَجْهِ، ذَا غَدِيرَتَيْنِ يَقُولُ: إِنَّهُ صَابِئٌ، كَاذِبٌ، فَقُلْتُ: مَنْ هَذَا؟ قَالُوا: مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ، وَهُوَ يَذْكُرُ النُّبُوَّةَ، قُلْتُ: مَنْ هَذَا الَّذِي يُكَذِّبُهُ؟ قَالُوا: عَمُّهُ أَبُو لَهَبٍ، قُلْتُ: إِنَّكَ كُنْتَ يَوْمَئِذٍ صَغِيرًا، قَالَ: لَا وَاللَّهِ إِنِّي يَوْمَئِذٍ لَأَعْقِلُ (مسند أحمد- 16023)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/