HOME      Khutba      நபியை நேசிப்பதின் அடையாளம் | Tamil Bayan - 312   
 

நபியை நேசிப்பதின் அடையாளம் | Tamil Bayan - 312

           

நபியை நேசிப்பதின் அடையாளம் | Tamil Bayan - 312


بسم الله الرحمن الرّحيم

நபியை நேசிப்பதின் அடையாளம்

إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

 

அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா இந்த உள்ளத்தை பல வழிகளில் சோதனை செய்கிறான். இந்த உலகில் நம் உடலை விட அதிகமாக சோதிக்கப்படுவது நமது கல்பு –உள்ளம் தான்.

இந்த உள்ளத்தை அல்லாஹ் ரப்புல் ஆலமின் எப்படி சோதிக்கிறான் என்றால், இந்த உள்ளம் யாரை நேசிக்கிறது? இந்த உள்ளம் யாரை பயப்படுகிறது? இந்த உள்ளம் யாரை ஆதரவு வைக்கிறது? இந்த உள்ளம் யாரை முன்னோக்கி நிற்கிறது? இந்த உள்ளத்தில் யார் இருக்கிறார்? என்று ரப்புல் ஆலமின் கல்பை சோதிக்கிறான்.

உடலுக்கு வரக்கூடிய சோதனை சில சிறிய பெரிய சிகிக்சைகளைக் கொண்டு, மருத்துவத்தைக் கொண்டு குணமாகிவிடும். ஆனால் கல்புக்கு வரக்கூடிய சோதனையை சாதாரண வெளிரங்கமான சிகிச்சைகளைக் கொண்டு நிவர்த்தி செய்ய முடியாது.

அதற்காக தனி ஒரு போராட்டம், தனி ஒரு முயற்சி, மனிதன் அவனுடைய உள்ளத்திலிருந்து அதற்காக தனி ஒரு மாற்றத்தை கொண்டு வர வேண்டும்.

கண்ணியத்திற்குரிய சஹாபாக்கள் இந்த உள்ளத்தின் சோதனையில் மிகப்பெரிய வெற்றி அடைந்தார்கள். அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா அவர்களது உள்ளத்தை சுத்தப்படுத்தினான்.

فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ

அந்த நபித்தோழர்களின் உள்ளத்தில் உள்ள நன்மைகளை நற்குணங்களை உயர்ந்த அந்த பண்புகளை அல்லாஹ் அறிந்திருந்தான். (அல்குர்ஆன் 48 : 18)

அவர்கள் அதற்கு தகுதியானவர்கள் என்று வெளிப்படையாக அறிந்திருந்தான் என்று கண்ணியத்திற்குரிய நபித்தோழர்கள் பற்றி அல்லாஹ் சான்று சொல்கிறான்.

அவர்களுடைய நோக்கம் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய பொருத்தமும். அதுபோன்று ரஸுல் (ஸல்) அவர்களும் அவர்களுடைய பொருத்தமும். இதைத் தவிர உலகில் அவர்கள் வேறு எதையும் நாடவில்லை. வேறு எதுவும் அவர்களுக்கு பெரிய நோக்கமாக பொருட்டாக இருக்கவில்லை என்று அந்த கண்ணியத்திற்குரிய தோழர்களை பற்றி அல்லாஹ் சொல்கிறான்.

அல்லாஹ் சுப்ஹாஹு தஆலா அந்த நபித் தோழர்கள் பற்றி சொல்லும் போது,

لِلْفُقَرَاءِ الْمُهَاجِرِينَ الَّذِينَ أُخْرِجُوا مِنْ دِيَارِهِمْ وَأَمْوَالِهِمْ يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا وَيَنْصُرُونَ اللَّهَ وَرَسُولَهُ أُولَئِكَ هُمُ الصَّادِقُونَ

தங்கள் வீடுகளை விட்டும், தங்கள் பொருள்களை விட்டும் (அநியாயமாக) வெளிப்படுத்தப்பட்டு (மக்காவிலிருந்து) ஹிஜ்ரத் செய்து வந்த ஏழைகளுக்கும் அதில் பங்குண்டு. அவர்கள் அல்லாஹ்வுடைய அருளையும், அவனுடைய திருப்பொருத்தத்தையும் அடையக் கருதி (தங்கள் உயிரையும் பொருளையும் தியாகம் செய்து) அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் உதவி செய்து கொண்டிருக்கின்றனர். இவர்கள்தான் உண்மையான நம்பிக்கையாளர்கள் ஆவர். (அல்குர்ஆன் 59 : 8)

வசனத்தின் கருத்து : அல்லாஹ்வுடைய பொருத்தம், அல்லாஹ் உடைய அருள் மட்டுமே அவர்களுக்கு குறிக்கோளாக இருந்தது. மதீனாவிற்கு செல்வோம், அங்கு ஆட்சி அமைப்போம், அரசாங்கத்தை அமைப்போம், உலகத்தை பெறுவோம், என்றெல்லாம் அவர்களுக்கு நோக்கமில்லை. அல்லாஹ்விற்காக வெளியேறினார்கள். ஆட்சி அதிகாரத்திற்காக அல்ல.

அல்லாஹ்வுக்கு உதவ வேண்டும், அவனுடைய ரஸுலுக்கு உதவ வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக அவர்கள் வெளியேறினார்கள். இப்படி கல்புடைய சோதனையில் வெற்றிக் கண்டவர்கள் கண்ணியத்திற்குரிய நபித்தோழர்கள்.

இன்று நாம் நமது நிலையை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா கல்புடைய சோதனையில் அன்பு என்ற ஒன்றை படைத்திருக்கிறான். இந்த உள்ளம் யாரை நேசிக்கிறது? யாரை அதிகமாக நேசிக்கிறது? இது சாதாரண சோதனை அல்ல.

இந்த சோதனையில் யார் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் அதிகம் நேசித்தார்களோ அவர்கள்தான் வெற்றி அடைவார்கள். அல்லாஹ் உடைய அன்பை அல்லாஹ் உடைய தூதர் (ஸல்) அவர்கள் அன்பை தன் உள்ளத்திலே அதிகப்படுத்தினார்களோ,அல்லாஹ்வுக்கும் அவனுடைய ரஸுலுக்கும் யார் முன்னுரிமை கொடுத்தார்களோ அவர்கள் வெற்றியடைவார்கள்.

அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா அவனது அன்பையும் அவனுடைய தூதர் நபி (ஸல்) அவர்களின் அன்பையும் நம்மீது கடமையாக்கி இருக்கிறான்.தொழுகை எப்படி கடமையோ, நோன்பு எப்படி ஒரு மகத்தான கடமையோ, ஜகாத், ஹஜ் எப்படி ஒரு மகத்தான கடமையோ அது போல தான் அல்லாஹ்வை நேசிப்பதும் அல்லாஹ்வுடைய ரஸுலை நேசிப்பதும்.

النَّبِيُّ أَوْلَى بِالْمُؤْمِنِينَ مِنْ أَنْفُسِهِمْ

இந்த நபி (ஸல்) முஃமின்களுக்கு அவர்களுடைய உயிரை பார்க்கிலும் இந்த நபி தான் மிக உரிமை உள்ளவர். மிக நெருக்கமானவர். இந்த முஃமின்கள் நேசிப்பதற்கு இந்த முஃமின்கள் அன்பு வைப்பதற்கு இந்த நபி தான் அதிகம் உரிமை உள்ளவர் என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். (அல்குர்ஆன் 33 : 6)

அல்லாஹ் ஒரு மனிதரை சுட்டிக்காட்டி இவரை நீங்கள் நேசிக்க வேண்டும், இவரை நீங்கள் மிக நெருக்கமாக வைத்து கொள்ள வேண்டும் என்றால் அது இந்த நபி (ஸல்) அவர்கள் தான்.

அல்லாஹ் உடைய தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்;

«فَوَالَّذِي نَفْسِي بِيَدِهِ، لاَ يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ وَوَلَدِهِ»

என் உயிர் எந்த இறைவன் கைவசம் இருக்கிறதோ அவன் மீது சத்திமாக! உங்களில் யாரும் முஃமினாக முடியாது. எதுவரை? உங்களுக்கு உங்கள் ஆன்மைவை விட, உங்கள் செல்வத்தை விட, உங்கள் பிள்ளைகளை விட, ஏன் மக்கள் எல்லோரைவிட உங்களுக்கு நான் அதிகம் நேசமுள்ளவனாக உங்கள் உள்ளங்களில் நான் மாறுகிற வரை உங்களில் யாரும் முஃமினாக முடியாது.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 14.

ஒரு தொழுகையாளி ஒரு நோன்பாளி ஒரு வணக்கசாலி இப்படி முஃமின்களில் எத்தனையோ வகையினர் இருக்க, அவர்கள் அனைவரையும் முன்னோக்கி அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) சொல்கிறார்கள்; உங்கள் ஈமான் நிறைவடைய வேண்டும் என்றால் அது இந்த உடல் சார்ந்த வணக்க வழிபாடுகளை செய்வது மட்டுமல்ல, உங்கள் உள்ளத்தில் எனது பிரியம் அதிகரிக்க வேண்டும். அதை கொண்டு தான் ஈமான் நிறைவடைகிறது.

உமர் (ரலி) அவர்கள் ரஸுல் (ஸல்) அவர்களை பார்க்கிறார்கள்; அந்த தோழர்களுக்கு நபி (ஸல்) அவர்களோடு இருந்த நிலைகளை நாம் எப்படி இந்த காலத்தில் கற்பனை செய்து பார்க்க முடியும்?

மனைவி, பிள்ளைகள், குடும்பம், தனது கண்ணியம் என அனைத்தையும் அந்த நபிக்காக இழந்தவர்கள் தான் அந்த தோழர்கள்.

ரஸுல் (ஸல்) அவர்களை பார்ப்பதைவிட விருப்பமானது எதுவும் அந்த தோழர்களுக்கு இருக்காது. நபியுடைய மஜ்லிஸில் அமர்ந்திருப்பதை விட அவர்களுக்கு விருப்பமான ஒன்று ஏதும் இருக்காது. நபிக்கு ஒரு சிரமமென்றால் அது அவர்களுக்கு சிரமம்.

நபிக்கு எது பிடிக்குமோ அதுதான் அந்த தோழர்களுக்கு பிடிக்கும். இப்படிப்பட்ட அன்பின் உச்சத்தை அடைந்த தோழர் அவர்கள்.

உமர் (ரலி) அவர்கள் ரஸுல் (ஸல்) அவர்களை பார்த்து ஒருநாள் சொல்கிறார்கள்;

يَا رَسُولَ اللَّهِ، لَأَنْتَ أَحَبُّ إِلَيَّ مِنْ كُلِّ شَيْءٍ إِلَّا مِنْ نَفْسِي

அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உங்களை அதிகம் பிடிக்கும். மக்கள் எல்லோரைவிட, என் மனைவி, மக்கள், பிள்ளைகள், குடும்பம், இந்த உலகில் உள்ள எல்லோரையும் விட உங்களை நேசிக்கிறேன் ஆனால் என்னைத் தவிர. எனக்கு அடுத்து எனக்கு என் உயிர் பிரியம் அதற்கு அடுத்து நீங்கள் என்று உமர் (ரலி) கூறினார்கள்.

ரஸுல் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்;

«لاَ، وَالَّذِي نَفْسِي بِيَدِهِ، حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْكَ مِنْ نَفْسِكَ»

உமரே!அது முடியாது. காரியம் அப்படிக் கிடையாது. நீங்கள் எண்ணுவது போல் கிடையாது.

உங்களுக்கு உங்கள் உயிரைவிட உங்கள் உயிரின் மீது இருக்கின்ற பிரியம் விட என் மீது அதிகப் பிரியம் இருக்கின்ற வரை நீங்கள் முஃமீனாக முடியாது. என்று (ஸல்) அவர்கள் சொன்னபோது,

وَاللَّهِ، لَأَنْتَ أَحَبُّ إِلَيَّ مِنْ نَفْسِي

அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக சொல்கிறேன்; எனக்கு என்னை விட உங்களை அதிகமாக பிடிக்கிறது என்று சொன்னபோது ரஸுல் (ஸல்) அவர்கள் கூறினார்கள்;

«الآنَ يَا عُمَرُ»

இப்போது தான் நீங்கள் நிறைவடைகிறீர்கள் உமரே! என்று (ஸல்) அவர்கள் உமருடைய ஈமானுக்கு உமருடைய பிரியத்திற்கு சாட்சி சொல்கிறார்கள்.

நூல் : புகாரி, எண் : 6632.

மிகத் தெளிவாக ஒன்றை புரிய வேண்டும். எது உள்ளத்தில் இருந்ததோ உள்ளதை உள்ளபடி உமர் அவர்கள் சொன்னார்கள். ஏன்? அதற்கு மாற்றாக சொன்னால் வஹி இறங்கிவிடும் .

ரஸுல் (ஸல்) அவர்களுக்கு முன்னால்  உண்மையை தவிர வேறு எதை சொன்னாலும் சரி உடனடியாக வஹி இறங்கி இவர் உண்மையாளர் அல்லது இவர் பொய் சொல்லி இருந்தால் உள்ளத்தில் ஒன்றை மறைத்து வைத்திருந்தால் இவர் பொய்யர் என்று அல்லாஹ் தெளிவு படுத்தி விடுவான்.

அப்படி என்றால் அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா உள்ளங்களை அறிந்தவன்; நபிக்கு அந்த அறிவிப்பை ஏற்படுத்துகிறான்.

நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ரப்புல் ஆலமின் உமருடைய அந்த நேசம் அங்கீகரிக்கப்பட்டது என்று அங்கீகாரத்தை கொடுக்கும் போது ரஸுல் (ஸல்) அவர்கள் சொல்கிறார்கள், உயரே உங்களது ஈமான் இப்போது நிறைவடைகிறது என்று.

இன்று பார்க்கிறோம்; முஹம்மது (ஸல்) அவர்களுடைய நேசம் எப்படி இருக்கிறது என்றால் ஏதாவது சில சமய சந்தர்ப்பங்களை முன்னிட்டு யாராவது (ஸல்) அவர்களை ஏசினால் பிரியம் வந்துவிடுகிறது அல்லது சில மாதங்கள் பிறந்துவிட்டால் அந்த மாதங்களில் மட்டும் (ஸல்) அவர்களை நேசிப்பதற்காக ஆக்கி வைத்துக் கொள்கிறார்கள்.

அல்லது மீலாது விழா என்றும் மவ்லித் வைபவங்கள் என்றோ சில சடங்குகளை செய்வதைக் கொண்டு ரஸுல் (ஸல்) அவர்களுடைய பிரியத்தை வெளிப்படுத்துகிறார்கள். அதுதான் நபி (ஸல்) அவர்கள் மீது நாம் வைத்திருக்கிற பிரியத்திற்கு அடையாளங்கள் என்று சிலர் ஆக்கிக் கொண்டார்கள்.

ஆனால் உண்மை அப்படி அல்ல. ரஸுல் (ஸல்) அவர்களுடைய பிரியமென்பது இதற்கெல்லாம் அப்பாற்பட்டது. அல்லாஹ்வின் தூதரை நாம் ஏன் நேசிக்க வேண்டும் என்பதை முதலில் புரிய வேண்டும்.

அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா அந்த தூதரை நேசித்திருக்கிறான். எப்படி இப்ராஹிம் (அலை) அவர்களை எப்படி “கலீல்” தனது உற்ற நண்பனாக எடுத்துக் கொண்டானோ அது போன்று (ஸல்) அவர்களை அல்லாஹ் தனது கலீலாக எடுத்துக் கொண்டான்.

ரஸுல் (ஸல்) தங்களுடைய மரண நேரத்தில் சொல்கிறார்கள்;

فَإِنَّ اللهِ تَعَالَى قَدِ اتَّخَذَنِي خَلِيلًا، كَمَا اتَّخَذَ إِبْرَاهِيمَ خَلِيلًا

அல்லாஹ் எப்படி இப்ராஹிமை தனது உற்ற நண்பனாக எடுத்துக் கொண்டானோ அப்படியே என்னையும் உற்ற நண்பனாக அல்லாஹ் எடுத்துக் கொண்டான்.

குர்ஆனின் நூற்றுக்கணக்கான வசனங்களில் அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா நபியின் மீது தான் வைத்திருக்கக்கூடிய அன்பை வெளிப்படுத்துகிறான்.

وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا

நபியே! உங்களுக்கு தெரியாத விஷயங்களை எல்லாம் அல்லாஹ் உங்களுக்கு கற்றுக் கொடுத்துக்கொண்டே இருக்கிறான். உங்கள் மீது அல்லாஹ்வுடைய கருணை மிக மகத்தானதாக இருக்கிறது. (அல்குர்ஆன் 4 : 113)

அப்படியென்றால் யாரை அல்லாஹ் அதிகம் நேசிக்கிறானோ அந்தத் தூதரை நாமும் நேசிப்பது தான் அல்லாஹ்வின் மீது நாம் வைத்திருக்கக் கூடிய தேசத்தின் அடையாளம்.

அடுத்து ஈமான் -இறைநம்பிக்கை முழுமை அடைய வேண்டும் என்றால் முஹம்மது (ஸல்) அவர்களுடைய பிரியம் நமது உள்ளத்தில் மிகைத்திருக்க வேண்டும்.

இதை தான் இமாம் புகாரி அவர்களின் ஹதீஸிலே பார்த்தோம்.

உங்களில் யாரும் முஃமீனாக முடியாது எதுவரை? அவருக்கு நான் அவரைவிட அவரது செல்வத்தை விட அவரது பிள்ளைகளை விட மக்கள் எல்லோரையும் விட அதிகம் விருப்பத்திற்கு உரியவனாக மாறுகிறேனோ.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 14.

அப்படியென்றால் நாம் இதை ஒவ்வொரு நாளும் சோதித்துப் பார்க்க வேண்டும். எதை கொண்டு சோதிப்பது? நமது உள்ளத்திலே இருக்கின்ற அந்த தன்மை, அல்லாஹ்வின் தூதர் மீது நமக்கு எவ்வளவு தேட்டம் இருக்கிறது, அல்லது தூதரின் சுன்னத்தை செய்வதில் எவ்வளவு தேட்டம் இருக்கிறது.

அவர்களது பெயர் சொல்லப்படும் போது நமது உள்ளத்திலே என்ன மாற்றம் ஏற்படுகிறது, உங்களுக்கு விருப்பமானவர் பெயர் சொல்லப்பட்டால் உங்கள் உள்ளத்திலே என்ன நிலை ஏற்படும் பாருங்கள்.

கண்ணியத்திற்குரிய நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களின் வஃபாத்திற்கு பிறகு நபியவர்களின் பெயர் சொல்லப்பட்டால் அவர்களில் பலர் அழுது விடுவார்கள். தாபியீன்கள் ரஸுலுடைய ஹதீஸை படித்துக் கொடுப்பதற்காக உளு செய்துவிட்டு தூய்மையான ஆடை அணிந்து கொண்டு மிக கண்ணியமான முறையில் உட்கார்ந்து, (ஸல்) அவர்களின் ஹதீஸை மக்களுக்கு அறிவிப்பார்கள்.

ஆனால் இன்று மக்கள் நபியின் பிரியத்தை சடங்குகளில் ஆக்கிவிட்டார்கள்.

அல்லாஹ் சொல்கிறான்;

قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ

நபியே நீங்கள் மக்களுக்கு சொல்லுங்கள், உங்களுக்கு அல்லாஹ் உடைய அன்பு இருக்குமேயானால் நீங்கள் என்னை பின்பற்றுங்கள். என்னை நீங்கள் பின்பற்றினால் அல்லாஹ் உங்களை நேசிப்பான். அல்லாஹ் உங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பாளனாக மகா கருணையாளனாக இருக்கிறான்.(அல்குர்ஆன் 3 : 31)

இந்த வசனத்தை சிந்தித்து பாருங்கள்; மிகத் தெளிவாக அல்லாஹ் சொல்கிறான், அல்லாஹ் உடைய அன்பு இருக்கிறதென்றால் நீங்கள் அதற்கு பதிலாக அல்லாஹ்வுடைய அன்பையும் அல்லாஹ்வுடைய மன்னிப்பையும் அடைவதற்கு இந்த நபியை பின்பற்றுவதைத் தவிர அல்லாஹ்விடத்திலே வேறு வழி உங்களுக்கு இல்லை.

கண்ணியத்திற்குரிய ஸஹாபக்கள் நபி (ஸல்) அவர்களிடத்தில் இவ்வாறு பையத்து செய்து கொடுப்பார்கள்.

بَايَعْنَا رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى السَّمْعِ وَالطَّاعَةِ فِي الْعُسْرِ وَالْيُسْرِ، وَالْمَنْشَطِ وَالْمَكْرَهِ

அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு நாங்கள் கட்டுபடுவோம்; உங்களது பேச்சை நாங்கள் கேட்போம்; முற்றிலுமாக உங்களுக்கு நாங்கள் பணிந்து நடப்போம். எங்களுக்கு மகிழ்ச்சியாக இருந்தாலும் அல்லது எங்களுக்கு துக்கமாக இருந்தாலும்.

எங்களுக்கு பிடித்திருந்தாலும் சரி பிடிக்கவில்லையென்றாலும் சரி, எங்களுக்கு சுலபமானதாக இருந்தாலும் சரி கடினமானதாக இருந்தாலும் சரி, எல்லா சூழ்நிலையிலும் உங்களுக்கு கட்டுப்படுவோம்.

அறிவிப்பாளர் : உபாதா இப்னு சாமித் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1709.

இங்கே நமது நிலைபாடு என்ன? எங்கே நமக்கு சாதகமாக வருமோ அங்கே சுன்னத்தை எடுத்துக் கொள்வோம். அல்லாஹ் மன்னிப்பானாக!

எங்கே நபியுடைய சுன்னா நமக்கோ, நம்முடைய கலாச்சாரத்திற்கோ, நமது சூழ்நிலைகளுக்கு மாற்றமாக இருக்குமோ அங்கே சுன்னத்தை அப்படியே விட்டுவிடுகின்ற சூழ்நிலையை தான் பார்கிகிறோம். அல்லாஹ் பாதுகாப்பானாக!

ரஸுல் (ஸல்) அவர்கள் மீது வைத்திருக்கின்ற அன்பு சாதகமாக வரும்போது அந்த அன்பை சுன்னத் என்று வெளிப்படுத்துகின்றோம். எப்போது நபியுடைய சுன்னா நமது கலாச்சாரத்தை கண்டிக்கக்கூடியதாக நமது பழக்க வழக்கத்தை தடுக்கக்கூடியதாக இருக்குமோ அப்போது நம்மில் பெரும்பாலானோர் நபியை மறப்பவர்களாக அல்லது நபியை புறக்கணிக்கிறவர்களாக தான் இருக்கிறார்கள்.

அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா இதைத்தான் தெளிவுப்படுத்தி சொல்கிறான். உங்களுக்கு அல்லாஹ்வின் அன்பை அடைவதற்கு, அல்லாஹ்வின் மன்னிப்பை அடைவதற்கு இந்த நபியை பின்பற்றுவதை தவிர வேறு வழி இல்லை.

இந்த நபியை பின்பற்றுவது நிபந்தனை இல்லாமல் பின்பற்ற வேண்டும். நீங்கள் இந்த நபியை தவிர வேறு யாரை பின்பற்றினாலும் சரி உங்களுக்கு அல்லாஹ்வின் அன்பு உறுதி இல்லை. உங்களுக்கு அல்லாஹ்வுடைய மன்னிப்பை அடைவதற்கு எந்தவிதமான உத்திரவாதமும் கிடையாது.

ஏனென்றால் யாரை அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா ஒரு வழிகாட்டியாக, ஒரு அழகிய முன்மாதிரியாக ஆக்கி இருக்கின்றானோ அந்த முஹமது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வஹீ கொடுக்கப்பட்டவர்கள்; பாதுகாக்கப்பட்டவர்கள். அல்லாஹ்வின் புறத்திலிருந்து கற்பிக்கப்பட்டவர்கள்.

அவர்களைத் தவிர யாராக இருந்தாலும் சரி. அவர்களுடைய சொல் செயல் நபியின் சுன்னாவிற்கு ஒத்து வந்தால், நபியின் சுன்னாவோடு மோதாமல் அதோடு முரண்படாமல் அதற்கு கட்டுப்பட்டதாக அதற்கு விளக்கமாக இருக்குமேயானால் அவர்களது சொல்லை ஏற்றுக் கொள்வது, அவர்களது செயலை ஏற்றுக்கொள்வது மார்க்கத்தில் ஆட்சியேபனையில்லை.

ஆனால் ஒரு இமாமுடைய சொல்லோ அல்லது ஒரு ஆசிரியருடைய சொல்லோ ஒரு வழிகாட்டியின் சொல்லோ நபியின் தெளிவான ஒரு வழிகாட்டுதலுக்கு நபியின் ஒரு தெளிவான வழிமுறைக்கு மாற்றமாக இருக்கும் பட்சத்தில் நபியின் சுன்னாவை விட்டுவிட்டு வேறு யாருடைய கூற்றையும் ஏற்றுக் கொள்ள முடியாது.

இமாம் மாலிக்(ரஹ்) அவர்கள் தங்கள் மாணவர்களை பார்த்து சொல்கிறார்கள்; மாணவர்களே கேளுங்கள்;

كل أحد يؤخذ من قوله، ويُترك إلا صاحب هذا القبر، صلى الله عليه وسلم.

நாங்கள் எங்களுடைய சொல்லில் அங்கீகரிப்பதற்கு தகுதியானதும் இருக்கிறது. எங்களுடைய சொல்லில் மறுப்பதற்கு தகுதியானதும் இருக்கிறது. ஆனால் இந்த கப்ரிலே அடங்கி இருக்கின்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை தவிர.

அவர்கள் ஒருவர் தான் அவருடைய அனைத்து கூற்றுகளையும் எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல், பிடிக்கிறதோ, பிடிக்கவில்லையோ, அறிவுக்கு ஒத்து வருகிறதோ, ஒத்து வரவில்லையோ, சூழ்நிலைக்கு ஒத்து வருகிறதோ, வரவில்லையோ

இப்படி எந்தவிதமான பாகுபாடும் இல்லாமல் முற்றிலுமாக கட்டுப்பட்டு நடப்பதற்கு தகுதியானவர் இந்த கப்ரிலே அடங்கி இருக்கின்ற இந்த தூதர் (ஸல்) அவர்கள் தான். அவர்களைத் தவிர உள்ள மார்க்க அறிஞர்கள், வழிகாட்டிகள், ஆசிரியர்கள் யாராக இருந்தாலும் சரி அவர்களது பேச்சிலே அங்கீகரிப்பதற்கு தகுதியானதும் இருக்கிறது.

அங்கீகரிப்பதற்கு தகுதியானது எது? எது அல்லாஹ்வின் வேதத்திற்கும் நபியின் சுன்னாவிற்கும் விளக்கமாக அமைகிறதோ, எது புரிய வைப்பதற்கு துணையாக இருக்கிறதோ அது ஏற்றுக்கொள்ள தகுதியானது.

எது அவர்களின் அறியாமையின் காரணமாகவோ அல்லது அவர்களுக்கு ஹதீஸின் விளக்கம் எட்டாததின் காரணமாகவோ மாற்றமாக இருக்குமேயானால் அதை பின்பற்ற முடியாது.

காரணம் என்ன? அவர்களை பின்பற்றுவதால் அல்லாஹ்வின் அன்போ அல்லாஹ்வின் மன்னிப்போ நமக்கு உறுதி கிடையாது. அல்லாஹ் தெளிவாக சொல்கிறான்;

நீங்கள் அல்லஹ்வை நேசிப்பவராக இருந்ததால் இந்த நபியை பின்பற்றுங்கள். அப்போது தான் அல்லாஹ் உங்களை நேசிப்பான். அல்லாஹ் உங்களை மன்னிப்பான் என்று அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா தெளிவுப்படுத்தி இருக்க. (அல்குர்ஆன் 3 : 31)

அந்த நபியின் சுன்னாவை விட்டு விட்டு மன இச்சையின் படி ஆரம்பிக்கப்பட்ட பிற மத கலாச்சாரத்தை பின்பற்றி தோற்றுவிக்கப்பட்ட சடங்குகளை செய்வதைக் கொண்டு எப்படி நாம் அல்லாஹ்வின் தூதரின் மீதுள்ள அன்பை நிலைநாட்டியவராக ஆகுவோம்?

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள்;

«مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ»

யார் பிற மதக் கலாச்சாரத்திற்கு ஒப்பாக செய்கிறார்களோ அவர் அந்த மதத்தை சேர்ந்தவர்கள் என்று தெளிவுப்படுத்தி இருக்கிறார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 4031, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

«مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ، فَهُوَ رَدٌّ»

யார் நம்முடைய மார்க்கத்திலே நாம் கட்டளையிடாத ஒன்றை புதிதாக உருவாக்குகிவார்களோ அந்த செயல் மறுக்கப்பட வேண்டியது. அந்த செயல் ஏற்றுக் கொள்ளப்படுவற்கு தகுதியானது அல்ல என்று நபி (ஸல்) அவர்கள் தெளிவுப்படுத்தி இருக்கிறார்கள்.

அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : புகாரி, எண் : 2697.

இன்று மக்கள் (ஸல்) அவர்களை எப்படி நேசிக்கிறார்கள்? ரபிய்யுல் அவ்வல் மாதத்திலே விழா கொண்டாடுவது; மவ்லித் ஓதுவது.

இந்த மீலாது விழா எங்கிருந்து வருகிறது?

கிறிஸ்துவர்கள் அந்த நபியின் பிறந்த நாளை கொண்டாடியதை பார்த்து அவர்களை விட நபியை நேசிப்பதற்கு நாம் தகுதியானவர் அல்லவா என்று நபியின் பிறந்தநாளை ஒரு விழாவாக கொண்டாடி அதிலே அவர்களை பற்றி சில பேச்சுகளைப் பேசி விடுவதை கொண்டு நபியின் மீது அன்பு இருப்பதற்கு அடையாளமாக வைத்துக் கொள்கிறார்கள்.

இங்கே ஒரு சில விஷயங்களை கவனியுங்கள்; நபியின் மீது அன்பு வைப்பது ஒரு இபாதத், இது ஏதோ நமது விருப்பத்திற்கு விடப்பட்ட ஒரு விஷயமல்ல.விரும்பினால் அன்பு வைக்கலாம்; இல்லை என்றால் விட்டுவிடலாம் என்று.

கண்டிப்பாக அல்லாஹ்வை நம்பிக்கைக் கொண்ட ஒவ்வொரு முஃமினும், நபிக்கு நுபுவ்வத்தைக் கொண்டு சாட்சி சொன்ன ஒவ்வொரு முஃமினும் அவன் அல்லாஹ்வை நேசிக்க வேண்டும். அல்லாஹ்வின் தூதரை அதற்கடுத்து நேசித்தே ஆக வேண்டும்.

இந்த அன்புக்கு என்ன அடையாளம்? என்று அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா சொல்லி இருக்கிறான்? நபியை பின்பற்றுவது; அவர்களுடைய மார்க்கத்தை பின்பற்றுவது; அவர்கள் மீது ஸலவாத் சொல்வது; அவர்களுடைய இந்த தீனை பிற மக்களுக்கு எடுத்துச் சொல்வதிலே தனது உயிரை பொருளை தியாகம் செய்வது; அதற்காக சிரமப்படுவது இதை தான் அல்லாஹ் அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா அடையாளமாக ஆக்கி இருக்கின்றான்.

ரஸுல் (ஸல்) கண்ணியத்திற்குரிய அந்தத் தோழர்களைப் பார்த்து என்ன சொன்னார்கள்?

فَلْيُبْلِغِ الشَّاهِدُ الغَائِب

இங்கு வந்திருப்பவர் வராதவருக்கு இந்த மார்க்கத்தை எடுத்து சொல்லட்டும்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 1739.

அல்லாஹ் சொல்கிறான் பாருங்கள்;

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا أَنْصَارَ اللَّهِ كَمَا قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ لِلْحَوَارِيِّينَ مَنْ أَنْصَارِي إِلَى اللَّهِ قَالَ الْحَوَارِيُّونَ نَحْنُ أَنْصَارُ اللَّهِ

முஃமின்களே நீங்கள் அல்லாஹ்வின் உதவியாளராக மாறுங்கள். யார் கூறுவது? அல்லாஹ் கூறுகிறான்.

நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு உதவி புரிபவர்களாகி விடுங்கள். மர்யமுடைய மகன் ஈஸா, தன் தோழர்களை நோக்கி ‘‘அல்லாஹ்வுக்காக எனக்கு உதவி செய்பவர் யார்?'' என்று கேட்ட சமயத்தில், ‘‘நாங்கள் அல்லாஹ்வுக்காக உதவி செய்வோம்'' என்று அந்த சிஷ்யர்கள் கூறியவாறே, (நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்கு உதவி செய்பவர்களாகி விடுங்கள்.) (அல்குர்ஆன் 61 : 14)

அல்லாஹ்வின் மீது அவர்கள் வைத்திருந்த தேசத்திற்கு அடையாளம் என்று அல்லாஹ் எதை குறிப்பிடுகிறான்? அவர்கள் மார்க்கத்திற்கு செய்த உதவி. ஈஸா (அலை) அவர்களின் தூதுத்துவத்தை மக்களுக்கு கொண்டுச் செல்ல வேண்டும் என்பதற்கக தன்னை அர்ப்பணிக்கத்தயாரானார்களே அதை அல்லாஹ் சுட்டிக்காட்டுகின்றான்.

இதைதான் அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான். நமது வாய் வழியாக பிதற்றுவதையோ அல்லது சடங்குகளை செய்வதையோ அடையாளமாக ஆக்கவில்லை.

நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் நபியின் மீது அன்பு வைத்திருந்தார்களா இல்லையா? முழுமையான அன்பு வைத்திருந்தார்கள். அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா அந்த அன்பை அங்கீகரித்து வைத்திருந்தான்.

இந்த உம்மத்தில் யாரும் அந்த நபியை நேசிக்க முடியாத அளவிற்கு ஸஹாபாக்கள் நேசித்தார்கள். அபூபக்ரிலிருந்து சாதாரண சிறிய ஸஹாபாக்கள் என்று அந்த சமுகத்திலே பிறந்த குழந்தை கூட, அவர்களில் இருக்கின்ற வாலிப, வயோதிகர், பெண்கள் என்று வரலாற்றை படித்து பார்த்தால் அவர்களுடைய ஒவ்வொரு வரலாறும் நபியின் மீது அவர்கள் கொண்டிருந்த பாசத்தை நமக்கு எடுத்துச் சொல்லும்.

ஒரு கண் தெரியாத ஸஹாபி. அவர் ஒரு அடிமைப் பெண்ணை வைத்திருந்தார். அந்த அடிமை பெண்ணின் மூலமாக அவருக்கு குழந்தை இருந்தது. அந்த அடிமை பெண்ணை மிகவும் அவர் நேசித்தார். அந்த அடிமை பெண்ணும் அவருக்கு எல்லா வகைகளிலும் கண்தெரியாத அந்தத் தோழருக்கு அப்படிப்பட்ட உதவிகளை செய்து கொண்டிருந்தாள்.

ஆனால் அந்த தோழர் பல முறை அந்த அடிமை பெண்ணை உபதேசம் செய்து கொண்டே இருந்தார். நபியை திட்டாதே! நபியை திட்டாதே என்று. அந்த பெண் நபியை திட்டிக் கொண்டே இருந்தார். நபியை திட்டிக் கொண்டிருந்த ஒரே காரணத்திற்காக அந்த பெண்ணை அந்த தோழர் கொன்றுவிட்டு நபியிடம் வந்து விடுகிறார்.

அல்லாஹ்வின் தூதரே! எனக்கு குழந்தைகளை பெற்றுக்கொடுத்த எனக்கு உதவி செய்து கொண்டிருந்த அடிமை பெண் உங்களை ஏசிக் கொண்டிருந்தாள். நான் அவளுக்கு உபதேசம் செய்து கொண்டே இருந்தேன். அவளோ திருந்துவதாக இல்லை.

இன்றிரவு தூங்குவதற்கு முன் உங்களை ஏசிவிட்டு தூங்கினால் அவளை கொன்றுவிட்டேன் என்று ரஸுலுக்கு முன் வந்து நிற்கிறார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 4361, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

கண்ணியத்திற்குரியவர்களே! யோசித்துப் பாருங்கள்; தனக்கு தேவை இருந்தும் தனக்கு குழந்தைகளை பெற்றுக் கொடுத்த தாய் என்றும் பார்க்காமல் நபியை ஏசிய ஒரே காரணத்திற்காக ஒரு உயிரை கொலை செய்யக்கூடிய அளவிற்கு அந்த தோழர்களுடைய மனப்பக்குவம் இருந்து.

தன்னை ஏசுவதை தாங்கிக் கொண்டார்கள்.தனது தாயை பிள்ளைகளை ஏசுவதை தாங்கிக் கொண்டார்கள். ஆனால் நபியை ஏசுவதை மட்டும் அவர்களால் தாங்க முடியாது.

கண்ணியத்திற்குரிய நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாறிலே மதினாவின் வாழ்க்கையில் நபியை ஏசிய பலர் கொல்லப்பட்டார்கள். காரணம் என்ன? அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா அதைத் தான் அந்த நபியை ஏசுவதற்குரிய குற்றத்திற்குரிய தண்டனையாக ஆக்கி இருந்தான்.

இப்படி நபித்தோழர்களின் உதாரணத்தை நிறைய சொல்லலாம்.

ஜைத் இப்னு துஸன்னாவைப் பார்த்து அபூ சுஃப்யான் கேட்கிறார்; கொல்வதற்கு அவர் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறார். ஜைதே!”ஒரே ஒரு விஷயத்தை கேட்கிறேன். உன்னை நாங்கள் விட்டு விடுகிறோம். உனது இந்த இடத்திலே நபியை கொண்டு வந்து நிறுத்தி நாங்கள் அவரை கொலை செய்வது உனக்கு பிடித்தம் என்று மட்டும் சொல்லிவிடு!.” உன்னை நாங்கள் விட்டுவிடுகிறோம்.

ஜைத் இப்னு துஸன்னா சொல்கிறார்கள்; அபூ சுஃப்யான்! நபியை கொண்டு வந்து கொல்வதல்ல, நான் இந்த இடத்திலே கொல்லப்பட எனது நபியின் உடலில் அவர் இருக்கின்ற இடத்தில் ஒரு முள் தைப்பதை கூட என்னால் சகிக்க முடியாது என்று சொல்கிறார்கள் என்றால், நபியின் மீது வைத்திருந்த அன்பை பாருங்கள்.

(ஸீரா இப்னு ஹிஷாம்).

இப்படிப்பட்ட அன்பை பெற்றிருந்த அந்த ஸஹாபாக்கள் ரஸுல் (ஸல்) அவர்களுடைய பிறந்த நாளுக்காக ஏதாவது விழா எடுத்தார்களா? ஏதாவது கொண்டாடினார்களா? யோசித்துப் பாருங்கள்.

இது எதை காட்டுகிறது? ஈமான் என்பது நபியின் மீதுள்ள அன்பு என்பது இப்படி விழா கொண்டாடுவது அல்ல.அவரது சுன்னத்தை பின்பற்றுவதில் தான் உள்ளது.

இன்று மக்கள் என்ன செய்தார்கள்? விழா எடுப்பதை ஒரு அடையாளமாக ஆக்கிக் கொண்டு சுன்னத்தை விட்டுவிட்டார்கள். சுன்னத்தை புறக்கணித்து விட்டார்கள். மற்ற மாதங்களிலே நபிக்கு நாம் செலுத்த வேண்டிய கடமைகள் நபிக்கு நம்மீதுள்ள கடமைகளை மறந்துவிட்டார்கள்.

அதுபோன்று தான் இந்த சடங்குகளாக ஏற்படுத்திய விஷயங்களில் ஒன்று தான் மவ்லித் என்னும் பாடல் வரிகளை அதுவும் ஷிர்க்கும், குஃப்ரும் இறைநிராகரிப்பும் அல்லாஹ்வுக்கு பிடிக்காத வாசகங்களும் அல்லாஹ் உடைய தீனிலே பொய்யாக கற்பனை செய்யப்பட்ட அல்லாஹ்வின் அடிப்படைகளை தகர்க்கக்கூடிய கதைகளையும் கற்பனையாக எழுதிக்கொண்டு அந்த கவிதைகளையும் கதைகளையும் படிப்பதில் தான் மார்க்கமாக,

அதை தான் நபியின் மீதுள்ள பிரியத்தின் அடையாளமாக ஆக்கிக் கொண்டிருக்கிறார்களே எவ்வளவு வருந்ததக்க செய்தி என்று யோசித்துப்பாருங்கள்.

இன்று முஸ்லிம் சமுதாயத்தில் ஒரு பெருங்கூட்டம் இந்த ஷிர்க்கான –இணைவைப்பை செய்யக்கூடிய அல்லாஹ்வின் மார்க்கத்திற்கு மிக முரணான கதைகளை கற்பனைகளை வாசிப்பதிலே ஈடுபட்டு இருப்பதை பார்க்கிறோம்.

இதில் இன்னுமொரு கேவலம் என்ன தெரியுமா? அல்லாஹ் உடைய மஸ்ஜிதுகளிலே அதை நிறைவேற்றுகிறார்கள்.

وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا

மஸ்ஜிதுகள் அல்லாஹ்விற்கு சொந்தமானது அல்லாஹ்வை தவிர வேறு யாரையும் நீங்கள் அங்கு அழைக்காதீர்கள். (அல்குர்ஆன் 72 : 18)

குர்ஆன் ஓதப்பட்டு நபியுடைய சுன்னா படிக்கப்பட்டு ஒரு கல்விகூடமாக ஒரு வணக்கத்திற்குரிய இடமாக இருக்க வேண்டிய மஸ்ஜிது இன்று பெரும்பாலான இடங்களிலே இந்த சடங்குகள் நிறைவேற்றப்படும் இடமாக, அல்லாஹ்வுக்கு ஷிர்க் செய்யக்கூடிய இடமாக மாறியிருக்கிறது.

நமது குடும்பத்தில் யாராவது சிலர் அப்படி இருக்கலாம். உங்கள் நண்பர்களில் யாராவது அப்படியிருந்தால் இந்த விஷயத்தை தெரிந்து கொண்ட நீங்கள் அந்த குடும்ப மக்களுக்கு உங்கள் உறவினர்களுக்கு அதைப்பற்றிய எச்சரிக்கையை அது பற்றிய வழிகாட்டுதலை அவர்களுக்கு சொல்ல வேண்டும்.

இந்த இடத்தில் பேசி முடித்துவிடுவதால் மட்டும் நமது இந்த கடமை நீங்கிவிடாது. உங்களது வியாபாரத்தில் அல்லது உறவுகளில் உங்களுக்கு யார் நெருக்கமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு இந்த விஷயத்தை எடுத்துச் சொல்லுங்கள்.

நிச்சயமாக தீமையை கண்டிக்கவில்லை என்றால் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும் அந்த தீமைக்கு உடன்போன குற்றத்திற்கு நாம் ஆளாகி விடுவோம்.

இப்படி அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா ரஸுலின் மீது நாம் வைக்க வேண்டிய அன்பை நமக்கு இவ்வளவு தெளிவாக வைத்திருக்கிறான்.

அந்த ரஸுலை பின்பற்றுவது, நேசிப்பது, அந்த ரஸுலின் மீது ஸலவாத் சொல்வது, அந்த ரஸுலின் சுன்னத்தை பின்பற்றுவது, அவர்கள் எந்த அல்லாஹ் உடைய தீனுக்காக வாழ்ந்து மரணித்தார்களோ, உயிரை தியாகம் செய்தார்களோ, எந்த தீனுக்காக வேண்டி இரவு பகலாக கஷடப்பட்டார்களோ, அந்த தீனை நாமும் பின்பற்றுவதோடு படிப்பதோடு என் மூலமாக அல்லாஹ்வுடைய தீன் நபியுடைய சுன்னா பிற மக்களுக்கு செல்வதில் நான் என்ன பங்களித்திருக்கிறேன் என்று பார்ப்பது தான் நபியை நாம் நேசிப்பது.

அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா நபியுடைய நேசத்தை ஹிதாயத்தில் வைத்திருக்கிறான். நாமும் நேர்வழிப்பெற்று பிறரை அழைப்பதிலே வைத்திருக்கிறான்.

ரஸுல் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளை இடுவதை பாருங்கள்;

قُلْ هَذِهِ سَبِيلِي

நபியே! நீங்கள் சொல்லுங்கள்; இது எனது மார்க்கம் இந்த மார்க்கத்தை உங்களோடு நீங்கள் இணைத்துக் கொள்ளுங்கள். இந்த கட்டளை ரஸுல் (ஸல்) அவர்களுக்கு மட்டுமல்ல நமக்கும் அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் 12 : 108)

இது எனது மார்க்கம் என்ற உணர்வு வரவேண்டும். நாம் பின்பற்றுகின்ற இஸ்லாம் எனது மார்க்கம். இந்த குர்ஆன் எனது குர்ஆன். இந்த நபி எனது நபி. இந்த தீன் என்னுடைய தீன் என்று இந்த தீனின் மீது அக்கறை வர வேண்டும்.

அப்படி வந்தால் தான் இதற்கு நாம் முன்னுரிமை கொடுப்போம். வீட்டுக்கு, மனைவிக்கு, பிள்ளைகளுக்கு, தனது தொழிலுக்கு முன்னுரிமை என்று எல்லா முன்னுரிமையும் நேரத்தையும் அதற்குரிய ஹக்குகளையும் கொடுக்கின்றோமே.

என்ன காரணம்? எனது, என்னுடையது என்று சொல்கின்ற காரணத்தால். ஆனால் தீன் என்று வந்துவிட்டால் அது ஏதோ பொதுவுடைமை போன்று அதுக்கும் நமக்கும் சம்மந்தம் இல்லாததை போன்று ஆக்கிவிடுகின்றோம்.

நீங்கள் நபியை நேசிப்பதாக இருந்தால் இந்த தீனை நீங்கள் பின்பற்றி இந்த தீனின் பக்கம் மக்களை அழையுங்கள். அதைத்தான் நபி (ஸல்) அவர்கள் அலி (ரலி) அவர்களுக்கு கூறினார்கள்;

فَوَاللَّهِ لَأَنْ يُهْدَى بِكَ رَجُلٌ وَاحِدٌ خَيْرٌ لَكَ مِنْ حُمْرِ النَّعَمِ

எதிரிகளின் புறத்தில் தாக்குதல் நடக்கக்கூடிய கைபருடைய யுத்த கலத்தில் நபி (ஸல்) அலிக்கு சொல்கிறார்கள். அலியே! எதிரிகளை கொல்வது நம் நோக்கம் அல்ல.எதிரிகளை வீழ்த்துவது நம் நோக்கம் அல்ல.கனிமத்துகளை சேகரிப்பது நம் நோக்கம் அல்ல.

நம் நோக்கம் என்ன தெரியுமா? அல்லாஹ்வின் பக்கம் மக்களுக்கு வழிகாட்டுவது. அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பது.

அலியே உன் மூலமாக ஹிதாயத்தை ஒருவர் பெறுவது சிவந்த ஒட்டகங்கள் உமக்கு கிடைப்பதை விட சிறந்தது என்று (ஸல்) அவர்கள் அலிக்கு சொல்லி நீங்கள் யூதர்களை சந்திப்பீர்களேயானால் முதலாவதாக அல்லாஹ்வின் பக்கம் அவர்களை அழையுங்கள் என்று முதல் கடமையை உணர்த்தி (ஸல்) அனுப்புகிறார்கள்.

அறிவிப்பாளர் : சஹ்ல் இப்னு ஸஃத் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 2942.

இப்படிப்பட்ட உணர்வை நாம் பெற வேண்டும். அல்லாஹ்விடத்திலே அவனது அன்பை கேட்க வேண்டும். அவனது தூதருடைய அன்பை கேட்க வேண்டும்.

யா அல்லாஹ்! இந்த மார்க்கத்தை நீ விரும்புகின்ற விதத்திலே உன் தூதர் விரும்புகின்ற விதத்திலே பின்பற்றக்கூடிய தவ்ஃபீக்கைக் கொடு! சடங்குகளை விட்டும் மக்கள் ஏற்படுத்தி இருக்கிற நபியின் சுன்னாவுக்கு முரணான அத்தனை விஷயங்களையும் விட்டு விலகி மக்களை அதிலிருந்து விலக்கக்கூடிய ஒரு நல்ல வீரமுள்ள துணிவுள்ள முஸ்லிமாக என்னை ஆக்கு! என்று அல்லாஹ்விடத்திலே துஆச் செய்வோமாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ القَعْنَبِيُّ، حَدَّثَنَا عَبْدُ العَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: يَوْمَ خَيْبَرَ: «لَأُعْطِيَنَّ الرَّايَةَ رَجُلًا يَفْتَحُ اللَّهُ عَلَى يَدَيْهِ»، فَقَامُوا يَرْجُونَ لِذَلِكَ أَيُّهُمْ يُعْطَى، فَغَدَوْا وَكُلُّهُمْ يَرْجُو أَنْ يُعْطَى، فَقَالَ: «أَيْنَ عَلِيٌّ؟»، فَقِيلَ: يَشْتَكِي عَيْنَيْهِ، فَأَمَرَ، فَدُعِيَ لَهُ، فَبَصَقَ فِي عَيْنَيْهِ، فَبَرَأَ مَكَانَهُ حَتَّى كَأَنَّهُ لَمْ يَكُنْ بِهِ شَيْءٌ، فَقَالَ: نُقَاتِلُهُمْ حَتَّى يَكُونُوا مِثْلَنَا؟ فَقَالَ: «عَلَى رِسْلِكَ، حَتَّى تَنْزِلَ بِسَاحَتِهِمْ، ثُمَّ ادْعُهُمْ إِلَى الإِسْلاَمِ، وَأَخْبِرْهُمْ بِمَا يَجِبُ عَلَيْهِمْ، فَوَاللَّهِ لَأَنْ يُهْدَى بِكَ رَجُلٌ وَاحِدٌ خَيْرٌ لَكَ مِنْ حُمْرِ النَّعَمِ»)صحيح البخاري (2942 -

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/