HOME      Khutba      உள்ளத்தின் வாழ்வும் மரணமும்! | Tamil Bayan - 557   
 

உள்ளத்தின் வாழ்வும் மரணமும்! | Tamil Bayan - 557

           

உள்ளத்தின் வாழ்வும் மரணமும்! | Tamil Bayan - 557


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم

உள்ளத்தின் வாழ்வும் மரணமும்

إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள்: நம்பிக்0கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

 

யாருடைய உள்ளம் அல்லாஹ்வுடைய பயத்தால் எப்பொழுதும் பசுமையாக இருக்கிறதோ, அல்லாஹ்வுடைய நினைவால் எப்பொழுதும் பசுமையாக இருக்கிறதோ, அல்லாஹ்வுடைய அன்பாலும் அல்லாஹ்வுடைய அச்சத்தாலும் உயிர்பெற்று இருக்கிறதோ அந்த மனிதர்கள் தான் அல்லாஹ்விடத்தில் நெருக்கமானவர்கள்; அல்லாஹ்விற்கு விருப்பமானவர்கள்

அல்லாஹு சுப்ஹானஹுதஆலா உள்ளத்தால் இறையச்சம் உள்ளவர்களை நேசிக்கின்றேன் என்று குறிப்பிடுகிறான். அல்லாஹு ரப்புல் ஆலமீனின் நேசத்திற்குரியவர்களில் ஒரு கூட்டம் யார் என்றால்? யாருடைய உள்ளத்தில் அல்லாஹ்வுடைய தக்வா அல்லாஹ்வுடைய பயம் இருக்கிறதோ, அல்லாஹ்வுடைய பயத்தால் எப்பொழுதும் அவருடைய உள்ளம் அல்லாஹ்வை நினைவு கொள்வதை கொண்டும்,அல்லாஹ்வை நினைத்தவர்கள் ஆக மறுமையை வேண்டியவர்களாக இருக்கின்றார்களோ அவர்களை ரப்புல் ஆலமீன் குறிப்பிடுகின்றான்.

இன்று நாம் பல விஷயத்திற்கு முக்கியத்துவம் தருகிறோம். ஒவ்வொருவரும் தனது வாழ்க்கையிலேயே அவர் அவருடைய சூழ்நிலைகளுக்கு ஏற்ப அல்லது ஒரு விஷயத்திற்கு ஏற்ப அல்லது பல விஷயங்களுக்கு முக்கியத்துவம் தருகிறோம்.

ஆனால் நாம் இந்த வாழ்க்கையில் எதற்கெல்லாம் முக்கியத்துவம் தருகிறோமோ அதுவெல்லாம் நமக்கு நாளை மறுமையில் நன்மையாக அமையுமா? அது நம்முடைய கப்ருக்கு நன்மையாக அமையுமா என்றால் கூறமுடியாது. பெரும்பாலும் நம்முடைய அலட்சியம் எப்படி இருக்கிறது என்றால் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் எதற்கு முக்கியத்துவம் தந்தார்களோ அதை நாம் அலட்சியம் செய்து விடுகிறோம்.

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ أَنَّهُ قَالَ مَرَّ رَجُلٌ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لرَجُلٍ عِنْدَهُ جَالِسٍ مَا رَأْيُكَ فِي هَذَا فَقَالَ رَجُلٌ مِنْ أَشْرَافِ النَّاسِ هَذَا وَاللَّهِ حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ يُنْكَحَ وَإِنْ شَفَعَ أَنْ يُشَفَّعَ قَالَ فَسَكَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ مَرَّ رَجُلٌ آخَرُ فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا رَأْيُكَ فِي هَذَا فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَذَا رَجُلٌ مِنْ فُقَرَاءِ الْمُسْلِمِينَ هَذَا حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ لَا يُنْكَحَ وَإِنْ شَفَعَ أَنْ لَا يُشَفَّعَ وَإِنْ قَالَ أَنْ لَا يُسْمَعَ لِقَوْلِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا خَيْرٌ مِنْ مِلْءِ الْأَرْضِ مِثْلَ هَذَا (صحيح البخاري 5966 -)

ஒரு சமயம் அல்லாஹ்வின் தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மஸ்ஜிதில் சஹாபாக்களுக்கு அறிவுரை சொல்லிக் கொண்டிருந்தபோது ஒரு மனிதர் அவ்வழியாக கடந்து செல்கிறார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஸஹாபாக்களைப் பார்த்து கேட்டார்கள்; இதோ செல்கிறார் இந்த மனிதரை உங்களுக்கு தெரியுமா? இவர் உங்களில் எப்படி என்பதாக; அவரைப் பார்த்துவிட்டு சஹாபாக்கள் கூறினார்கள்,

அல்லாஹ்வின் தூதரே! இவர் ஒரு பெரிய மனிதர்; இவரை எல்லோருக்கும் தெரியும்; இவர் யார் இடத்திலாவது சென்று பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து கொடுத்துவிடுவார்கள்; இவர் ஏதாவது சிபாரிசு செய்தால் இவருடைய சிபாரிசை ஏற்றுக் கொள்வார்கள்; மக்களிடத்திலே மதிப்புமிக்க ஒரு மனிதர் என்பதாக அவரைப்பற்றி அந்தத் தோழர்கள் கருத்து கூறினார்கள். அல்லாஹ்வுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அமைதியாகிவிட்டார்கள்.

சிறிது நேரம் கழித்து அங்கே மற்றொரு மனிதர் செல்கிறார். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் முன்பு கேட்ட அதே கேள்வியை தன் தோழர்களிடம் கேட்கிறார்கள். தோழர்களே! இங்கே பாருங்கள்; அதோ செல்கிறார் அந்த மனிதரை உங்களுக்குத் தெரியுமா?அவர் உங்களில் எப்படி என்று; அப்பொழுது அந்த மனிதரை பார்த்துவிட்டு தோழர்கள் கூறினார்கள்; அல்லாஹ்வின் தூதரே! இவரை மக்கள் அறிய மாட்டார்கள்; இவர் யாரிடமாவது சென்று பெண் கேட்டால் திருமணம் முடித்து கொடுக்க மாட்டார்கள்; இவர் யாருக்காவது சென்று சிபாரிசு செய்தால் இவருடைய சிபாரிசை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று அவரைப் பற்றி கருத்து கூறினார்கள்.

இதைக்கேட்டதற்குப்பிறகு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் தங்களது தோழர்களுக்கு கூறினார்கள். தோழர்களே! முன்பு சென்றாரே மனிதர் அவரைப் போன்ற மனிதர்கள் இந்த பூமியில் நிறம்பி இருப்பதைவிட இப்பொழுது சென்றாரே இந்த மனிதர் அல்லாஹ்விடத்தில் மதிப்பு மிக்கவர்; யாரைப் பார்த்து இவ்வளவு குறைவாக நீங்கள் மதிப்பிட்டீர்களோ அவர் அல்லாஹ்விடத்தில் மதிப்பு மிக்கவர்.

அறிவிப்பாளர்: சஹ்ல் இப்னு சஃத் ரழியல்லாஹுஅன்ஹு, நூல்: புகாரிஎண்: 5966

இதில் அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் எதை கவனித்தார்கள்? எதற்கு மதிப்பிட்டார்கள்? மனிதர்கள் தான் அணிந்து இருக்கக்கூடிய ஆடைகளுக்கு அல்ல; தான் சொந்தமாக்ககூடிய செல்வங்களுக்கு அல்ல; மக்களுக்கு மத்தியில் அவருக்கு இருக்கக்கூடிய பெயருக்கும் புகழுக்கும் அல்ல; ஒரு மனிதன் மக்களுக்கு மத்தியில் பெயர் புகழோடு வாழலாம்; வசதி வாய்ப்புகளுடன் செல்வ செழிப்போடு

மற்ற செல்வாக்கோடு வாழலாம். ஆனால் அந்த மனிதர் அல்லாஹ்விடத்தில் அற்பமானவராக இருப்பார். சிலர் எந்தவிதமான செல்வாக்கும் இல்லாமல் சாதாரண மனிதர்களில் ஒருவராக வாழ்வார். ஆனால் அவரோ அல்லாஹ்விடத்தில் மதிப்பு மிக்கவராக இருப்பார். அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களும் உள்ளத்தை வைத்து மதிப்பிடுகிறார்கள்.

இந்த கல்பு இந்த உள்ளத்தில் என்ன இருக்கிறது என்பதைக் கொண்டு தான் அல்லாஹ்விடத்தில் மதிப்பு. இந்த உள்ளத்தில் அல்லாஹ்வுடைய பயமும் ஈமானும் இருந்தால் அந்த மனிதர் உலக மக்களால் மதிக்கப்படாதவராக இருந்தாலும் அல்லாஹ்விடத்தில் மிகவும் மதிப்புக்குரியவராக இருப்பார். யாருடைய உள்ளத்தில் அல்லாஹ்வுடைய பயம் அன்பு ஈமான் இல்லையோ அவர் உலக மக்களால் தன்னிடம் இருக்கக்கூடிய செல்வாக்கின் காரணமாக மதிப்பு மிக்கவராக இருந்தாலும் அல்லாஹ்விடத்தில் கேவலமானவராக இருப்பார்.

அல்லாஹு தஆலா அவனுடைய வேதத்திலே எத்தனை முறை இந்தக் கல்பு -உள்ளத்தை பற்றி திரும்பத் திரும்ப நமக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்கிறான். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் மாறி மாறிப் பல ஹதீஸ்களில் பல சம்பவங்களில் இந்தக் கல்பை பற்றிய நினைவூட்டல்களை நமக்கு கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

ஆனால் நமது வாழ்க்கையில் எத்தனையோ அட்டவணைகளை வைத்திருக்கிறோம்.முதலில் செய்ய வேண்டியது, இரண்டாவது செய்ய வேண்டியது, இறுதியில் செய்ய வேண்டியது, நாளை செய்ய வேண்டியது என்று.

நமது உள்ளத்திற்காகநேரம் ஒதுக்கி இருக்கிறோமா? இந்த உள்ளதிற்கானசில கேள்விகள் கேட்பதற்கு; இந்தக் கல்பு நோயுற்று இருக்கிறதா? ஆரோக்கியமாக இருக்கிறதா? இந்த கல்பிலே உயிரோட்டம் இருக்கிறதா அல்லது செத்துவிட்டதா என்று.

ஏன் தெரியுமா? எத்தனையோ மனிதர்கள் உடலால் உயிரால் வாழ்ந்து கொண்டு இருப்பார்கள். ஆனால் அவர்கள் உள்ளம் செத்து இருக்கும்; அவர்களுடைய உள்ளம் ஜனாசாவாக ஆகியிருக்கும். எத்தனையோ மனிதர்கள் உடலால் ஆரோக்கியமாக இருப்பார்கள்; உடல் திடகாத்திரம் உடையவர்களாக இருப்பார்கள். ஆனால் அவர்களுடைய உள்ளம் நோய் உள்ளதாக இருக்கும்.

உடல் ஆரோக்கியமாக இருந்தால் உள்ளமும் ஆரோக்கியமாக இருக்கும் என்ற அவசியமில்லை். உள்ளம் ஆரோக்கியமாக இருந்து உடல் பலவீனமாக இருந்தாலும் பிரச்சனை இல்லை. ஏனென்றால் உடல் ஆரோக்கியமாக இருந்தாலும் இல்லாவிட்டாலும் ஒருநாள் மரணம் வந்தே தீரும். நோயுற்ற உள்ளத்தோடு அவர் மரணித்துவிட்டால்.அவ்வளவுதான்; அவருடைய நிலைமை கப்ரில் இருந்து மோசமாக ஆகிவிடும்; இறுதிவரைதொடர்ந்து கொண்டே இருக்கும்.

உள்ளத்தோடு எத்தனை விஷயங்களை அல்லாஹ் சம்மந்தப்படுத்துகிறான்.

الَّذِينَآمَنُواوَتَطْمَئِنُّقُلُوبُهُمْبِذِكْرِاللَّهِأَلَابِذِكْرِاللَّهِتَطْمَئِنُّالْقُلُوبُ

(நேர் வழி பெறும்) அவர்கள் எத்தகையோரென்றால், அவர்கள் தாம் (முற்றிலும்) ஈமான் கொண்டவர்கள்; மேலும், அல்லாஹ்வை நினைவு கூர்வதால் அவர்களுடைய இதயங்கள் அமைதி பெறுகின்றன; அல்லாஹ்வை நினைவு கூர்வது கொண்டு தான் இதயங்கள் அமைதி பெறுகின்றன என்பதை அறிந்து கொள்க!(அல்குர்ஆன் : 13 : 28)

புத்திசாலிகள் யார்?பொய்யான தெய்வங்களை புறக்கணித்து உண்மையான இறைவனை ஈமான் கொண்டவர்கள். பொய்யான மயக்ககூடிய உலகத்தை அலட்சியம் செய்துவிட்டு  மறுமைக்கு முக்கியத்துவம் கொடுத்தவர்கள்;  தன்னுடைய விருப்பத்தை விட அல்லாஹ்வுடைய விருப்பத்திற்கு முக்கியத்துவம் தந்தவர்கள்.அவர்களைத் தான் அல்லாஹ் அல்லதீன ஆமனு -ஈமான் கொண்டவர்கள், நம்பிக்கை கொண்டவர்கள் என்று கூறுகிறான்.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை, மறுமையின் மீது நம்பிக்கை, அல்லாஹ்கொடுத்த வாக்கின் மீது நம்பிக்கை இவர்களைப் பற்றி அல்லாஹ் சொல்கிறான் அவர்கள் எத்தகையவர்கள் தெரியுமா? ஈமானுடைய அடையாளத்தை ரப்புல் ஆலமீன் கூறுகிறான். ஒவ்வொரு இடத்திலும் ஈமானுடைய அடையாளத்தை கூறுவது அவனுடைய சுன்னா –வழிமுறை ஆகும்.

குர்ஆனிலே ஈமானுடைய குணங்களை, ஈமானுடைய பண்புகளை, ஈமானுடைய அடையாளங்களை அல்லாஹு தஆலா கூறுவான். ஒரே இடத்தில் அத்தனை அடையாளங்களையும் அல்லாஹ் கூறி விடமாட்டான். அந்த இடத்திற்கு எது அவசியமாக உடனடியாக சொல்லப்படவேண்டுமோ அதை அல்லாஹு தஆலா கூறுவான்.

சகோதரர்களே! இந்த இடத்திலே ரப்புல் ஆலமீன் கூறுகிறான் உள்ளத்தைப் பற்றி. ஈமான் உள்ளவர்களின் உள்ளம் எப்படி இருக்கும்?

وَتَطْمَئِنُّقُلُوبُهُمْبِذِكْرِاللَّه

அல்லாஹ்வுடைய நினைவால் அவர்களுடைய கல்புகள் அவர்களுடைய உள்ளங்கள் நிம்மதி அடைந்து கொண்டிருக்கும்.

அவர்கள் வறுமையில் இருக்கலாம்; நோயில் இருக்கலாம்; பல சிக்கல் சிரமங்களில் இருக்கலாம்; ஏன் அநியாயக்காரர் உடைய சிறைச்சாலையில் கூட அவர் இருக்கலாம். யூசுப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இல்லையா? எத்தனையோ சஹாபாக்கள் கைது செய்யப்படவில்லையா?

எந்த நிலையில் இருந்தாலும் சரி, அவர்களின் சிந்தனையில் இருக்கக்கூடிய பயங்களும் அவர்களுடைய உள்ளத்தை தடுமாற செய்துவிடாது. காரணம் அவர்களுடைய உள்ளம் எப்பொழுதும் அல்லாஹ்வுடைய தொடர்பில், அல்லாஹ்வுடைய அந்த நினைவில் பசுமையாகவும் உறுதியாகவும் இருக்கும். ஆகவேதான் ரப்புல் ஆலமீன் இறைநிராகரிப்பை நிர்பந்தத்தினால் செய்துவிடக் கூடிய அந்த மனிதர்களைப் பற்றி சொல்லும் பொழுது

وَقَلْبُهُمُطْمَئِنٌّبِالْإِيمَانِ

ஒரு மனிதர் எதிரிகளுடைய நிர்பந்தத்தால் நிராகரி! இல்லையென்றால்  உன்னை கொன்றுவிடுவேன் என்று மிரட்டப்படும்போது. உண்மையான அச்சுறுத்தல் செய்யப்படும் பொழுது மனிதன் வாயினால் நிராகரிப்பு உடைய வார்த்தையைக் கூறி விடுகிறான். அப்பொழுது அல்லாஹ் சொல்கிறான் நான் உன்னை மன்னித்து விடுவேன். ஆனால் நிபந்தனை என்ன?அவனுடைய உள்ளம் ஈமானை கொண்டு நிம்மதி பெற்றதாக இருக்க வேண்டும்; கல்ப் அல்லாஹ்வுடைய ஈமானில் நிம்மதி உடையதாக அவனுடைய கல்பில் ஈமானிய தடுமாற்றம் வந்து விடக்கூடாது. சகோதரர்களே! இதைத்தான் அல்லாஹு தஆலா நமக்கு சுட்டிக் காட்டி இருக்கிறான்.(அல்குர்ஆன் 16: 106)

எவ்வளவுதான் பிரச்சனைகளிலே மனக் குழப்பங்களிலே இருந்தாலும் அல்லாஹ்வுடைய திக்ர் சுபஹானல்லாஹி வபிஹம்திஹி, லாயிலாஹ இல்லல்லாஹ், லாஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ், அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ் என்று அவன் கூறும் போது அவனுடைய உள்ளம் அப்படியே புத்துணர்ச்சி பெற்று கொண்டே இருக்கும். மழை போன்ற சோதனைகள் எல்லாம் கண்டிப்பாக ஒருநாள் நீங்கும்.

اِنَّ مَعَ الْعُسْرِ يُسْرًا ‏

நிச்சயமாக துன்பத்துடன் இன்பம் இருக்கிறது. (அல்குர்ஆன் : 94 : 6)

நிச்சயமாக சிரமத்திற்குப் பிறகு அல்லாஹ் எனக்கு லேசைத்தருவான்.

سَيَجْعَلُ اللّٰهُ بَعْدَ عُسْرٍ يُّسْرًا‏

இந்த மனிதருக்கு கஷ்டத்திற்கு பிறகு ஒரு லேசை விடுதலையை அல்லாஹ் கொண்டு வந்து தருவான்.(அல்குர்ஆன் 65 : 7)

சகோதரர்களே! இதுதான் மூமின்கள் உடைய உள்ளம்.

மேலும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறுவதை பாருங்கள்;

إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَى رَبِّهِمْ يَتَوَكَّلُونَ

உண்மையான முஃமின்கள் யார் என்றால், அல்லாஹ்(வின் திருநாமம் அவர்கள் முன்) கூறப்பட்டால், அவர்களுடைய இருதயங்கள் பயந்து நடுங்கிவிடும்; அவனுடைய வசனங்கள் அவர்களுக்கு ஓதிக்காண்பிக்கப்பட்டால் அவர்களுடைய ஈமான் (இன்னும்) அதிகரிக்கும்; இன்னும் தன் இறைவன் மீது அவர்கள் முற்றிலும் நம்பிக்கை வைப்பார்கள்.(அல்குர்ஆன் : 8:2)

அந்த ஈமான் உடையவர்கள் வசதியாக இருந்தாலும், வறுமையில் இருந்தாலும், அவர்களுடைய நிலைமை சாதகமாக இருந்தாலும், பாதகமான சூழ்நிலை இருந்தாலும் சரி அல்லாஹ் இருக்கிறான்; ரப்பு எனக்கு துணை இருக்கிறான் என்ற அந்த யக்கின் அந்த தவக்குலில் இருப்பார்கள். சகோதரர்களே இந்த இடத்திலும் அல்லாஹு தஆலா உண்மையான பயத்தை சொல்லும்பொழுது

وَجِلَتْ قُلُوْبُهُمْ

அவர்களுடைய உள்ளங்கள் அல்லாஹ்வுடைய பயத்தில் இருக்கும் என்று கூறுகிறான். இதேபோன்றுதான் ஸூரத்துல் ஹதீத் உடைய 16வது  வசனங்கள்,

أَلَمْيَأْنِلِلَّذِينَآمَنُواأَنْتَخْشَعَقُلُوبُهُمْلِذِكْرِاللَّهِ

ஈமான் கொண்டவர்களுக்கு  அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், அவன் இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? (அல்குர்ஆன் 56 : 17)

அவர்களுடைய உள்ளங்கள் அல்லாஹ்வுடைய பயத்தில் இருக்கும் என்று கூறுகிறான்.

இந்த வசனத்தை நாம் திரும்பத் திரும்ப ஓதவேண்டும். அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரலியல்லாஹு அன்ஹு கூறுகிறார்கள்; இந்த வசனம் எப்பொழுது இறங்கியது என்றால் நாங்கள் இஸ்லாத்தை ஏற்று நான்கு ஆண்டுகள் கழித்து இந்த வசனம் இறங்கியது இந்த வசனத்தில் அல்லாஹ் எப்படி கேட்கிறான்

أَلَمْ يَأْنِ لِلَّذِينَ آمَنُوا أَنْ تَخْشَعَ قُلُوبُهُمْ لِذِكْرِ اللَّهِ وَمَا نَزَلَ مِنَ الْحَقِّ وَلَا يَكُونُوا كَالَّذِينَ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلُ فَطَالَ عَلَيْهِمُ الْأَمَدُ فَقَسَتْ قُلُوبُهُمْ وَكَثِيرٌ مِنْهُمْ فَاسِقُونَ

ஈமான் கொண்டவர்களே! அவர்களுக்கு,  அவர்களுடைய இருதயங்கள் அல்லாஹ்வையும், இறங்கியுள்ள உண்மையான (வேதத்)தையும் நினைத்தால், அஞ்சி நடுங்கும் நேரம் வரவில்லையா? மேலும், அவர்கள்- முன்னால் வேதம் கொடுக்கப்பட்டவர்களைப் போல் ஆகிவிட வேண்டாம்; (ஏனெனில்) அவர்கள் மீது நீண்ட காலம் சென்ற பின் அவர்களுடைய இருதயங்கள் கடினமாகி விட்டன; அன்றியும், அவர்களில் பெரும்பாலோர் ஃபாஸிக்குகளாக - பாவிகளாக ஆகிவிட்டனர். (அல்குர்ஆன் : 57:16)

ஸஹாபாக்களைப் பார்த்து அல்லாஹு தஆலா கேட்கிறான். அதாவது ஒரு மூஃமின் அல்லாஹ்வை மறந்த நிலையில், அவனை நினைத்து அஞ்சாமல் அழாமல், அவனுடைய உள்ளத்தில் அந்த பயம் ஏற்படாமல், அவனுடைய வாழ்க்கை நகர்ந்தால் ரப்புல் ஆலமீன் சொல்கின்றான். அவனுடைய உள்ளம் இறுகி விட்டது அல்லது அவனுடைய உள்ளம் செத்துவிட்டது என்பதாக.

சஹாபாக்கள் சொல்கிறார்கள்; நாங்கள் ஈமானை ஏற்று 4ஆண்டுகள் தான் ஆனது, இதற்குள் ஈமானை கொண்டு இந்த அளவுக்கு கண்டிக்கிறான் என்றால், நம்மைப் பற்றி என்ன சொல்வது?

இந்த உள்ளத்தை பற்றி அறிஞர்கள் கூறும் பொழுது உள்ளம் மூன்று வகையாகப் பிரிக்கிறார்கள்.

1)            ஒன்று, القلب السليم -அல்கல்புஸ் ஸலீம் :

பாதுகாக்கப்பட்ட உள்ளம். அந்த உள்ளம் அல்லாஹ்வுடைய அன்பை மட்டுமே கொண்டிருக்கும்; அல்லாஹ்வுடைய பயத்தை மட்டுமே கொண்டிருக்கும்; அந்த உள்ளம் பாதுகாக்கப்பட்ட உள்ளம்; மார்க்கத்தால், ஈமானால், மறுமையின் நம்பிக்கையால் அந்த உள்ளம் செழிப்படைந்து இருக்கும். இந்த உலக சூழ்நிலைகள் எதுவும் அந்த உள்ளத்தை பதட்டத்தையோ தாக்கத்தையோ பாதிப்பை ஏற்படுத்தி விடாது.

2)            இரண்டாவது உள்ளம், القلب الميت-அல்கல்புல் மய்யித்:

இறந்து விட்ட உள்ளம். அந்த உள்ளத்திலே உயிர் இருக்காது. யாருடைய உள்ளம் அது? யார் தன்னுடைய ரப்பை அறியவில்லையோ, அல்லது தங்களது ரப்பை வணங்கவில்லையோ, தன்னுடைய மனஇச்சைகளோடு தன்னுடைய உலக ஆசைகளோடு இந்த  சிற்றின்பங்களோடு வாழ்ந்து கொண்டு இருக்கின்றார்களோ, அல்லாஹ்வுடைய பயம் அல்லாஹ்வுடைய பொருத்தம் எதுவும் அவர்களுக்கு நோக்கமில்லாமல் இருக்கிறதோ, இந்த உலகம் தான் என்று இருக்கிறார்களோ அத்தகைய மனிதர்களுக்கு அவர்களுடைய உள்ளம் இறந்துவிட்ட உள்ளம்.

3)            மூன்றாவதாக வகை உள்ளம், القلب المريضஅல்கல்புல் மரீழ்:

நோயுற்ற உள்ளம். இது பலவீனமான மூமின்கள் இடத்தில் இருக்கக்கூடியது. அவர்களிடத்தில் ஈமான் இருக்கிறது;அது சில நேரத்திற்கு விளக்காக எரியும். ஆனால் அவர்களுடைய பாவங்கள் அதிகமாகும் பொழுது அந்த ஒளி அணைந்து விடுகிறது. பாவங்கள் அதிகமாகும் பொழுது அந்த உள்ளம் பலவீனம் அடைந்து விடுகிறது. அது அந்த மனிதனுக்கு செய்ய வேண்டிய, கொடுக்க வேண்டிய வழிகாட்டுதலை கொடுக்க முடியாமல் தவறி விடுகிறது.

சகோதரர்களே! இந்த கல்ப் ஹயாத்தாக இருக்க வேண்டுமென்றால் இந்த கல்பிலே ஈமானிய உயிரோட்டம் வரவேண்டுமென்றால் அதற்கு சில காரணங்கள் இருக்கின்றன; அதற்கு சில அடிப்படைகள் இருக்கின்றன. நாம் யாரோடு பழகுகிறோம்? யாரோடு நம்முடைய நேரம் கழிகிறது என்பதை நாம் கண்டிப்பாக கவனித்தாக வேண்டும்.

يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَكُونُوا مَعَ الصَّادِقِينَ

ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்; மேலும் உண்மையாளர்களுடன் நீங்களும் ஆகிவிடுங்கள். (அல்குர்ஆன் : 9 : 119)

அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள்; அந்தத் தக்குவா உங்களிடததிலே வரவேண்டுமென்றால், தக்வா உங்கள் உள்ளத்திலே நீடித்து இருக்க வேண்டுமென்றால், தக்வாவுடைய வாழ்க்கை உங்களிடம் வரவேண்டும் என்றால் தக்வா உள்ளவர்களோடு வாழுங்கள்.

அன்புள்ள சகோதரர்களே! எத்தனையோ மனிதர்களை நாம் பார்த்திருக்கிறோம். அவர்கள் நல்லவர்களாக இருந்தார்கள். ஆனால் அவர்களுடைய கெட்ட தோழமை, அவர்களுடைய தீய நண்பர்கள் அவரை கெடுத்து விட்டார்கள்; பள்ளியிலிருந்து தூரமாக்கினார்கள்; ஹலாலில் இருந்து தூரமாக்கினார்கள்; செல்லக்கூடாத இடத்திற்கு கொண்டு சென்றார்கள்; இறுதியில் அவர்களுடைய வாழ்க்கை ஹலாலில் இருந்து ஹராமிற்க்கு அந்தத் தவறான பாதையிலேயே வந்துவிட்டது. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.

சகோதரர்களே_ தக்வா என்பது எழுத்துக்களால், வாசகங்களால் வாசிக்கக் கூடிய விஷயம் அல்ல. உள்ளச்சம் உடைய தக்வா உடைய அந்த மக்களோடு வாழ்வதன் மூலமாகத்தான் நடைமுறையாக நாம் தக்க வைக்க முடியும். பல கிதாபுகளை படிக்கலாம்; பல வசனங்களை படிக்கலாம்; அன்புள்ள சகோதரர்களே! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு வாழ்ந்து அவர்களுடைய வாழ்க்கையில் சஹாபாக்கள் தக்வாவை படித்தார்கள். ஸஹாபாக்களிடமிருந்து தாபியீன்கள் தக்வாவை படித்தார்கள்.

பாவங்களை கடந்து சென்றால் எப்படி கடந்து செல்வது?

وَإِذَامَرُّوابِاللَّغْوِمَرُّواكِرَامًا

(வீணான காரியம் நடைபெறும் இடத்திற்குச் செல்லாமலும்) ஒருக்கால் (அத்தகைய இடத்திற்குச்) செல்லும்படி ஏற்பட்டு விட்டபோதிலும் (அதில் சம்பந்தப்படாது) கண்ணியமான முறையில் (அதனைக் கடந்து) சென்று விடுவார்கள். (அல்குர்ஆன் : 25 : 72)

وَالَّذِينَ هُمْ عَنِ اللَّغْوِ مُعْرِضُونَ

இன்னும், அவர்கள் வீணான (பேச்சு, செயல் ஆகிய)வற்றை விட்டு விலகியிருப்பார்கள். (அல்குர்ஆன் : 23 : 3)

தாபியீன்களுக்கு சஹாபாக்கள், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களிடம் இருந்து எப்படி செயல்முறையாக மார்க்கத்தை படித்தார்களோ அதைப் போன்று அந்த சஹாபாக்கள் தாபியீன்களுக்கு வாழ்க்கையில் ஒவ்வொன்றையும் தக்வாவை வாழ்க்கையில் செயல்முறையாக கற்றுக்கொடுத்தார்கள்.

அன்புள்ள சகோதரர்களே! இன்று பாடமாக கற்பிக்கப்படுகிறது; செயல்முறையாக இல்லை. ஆகவே தான், நாம் நம்முடைய நண்பர்களில் யார் அதிகமாக ஹராம் ஹலால் பேணுகிறார்களோ, தொழுகையைப் பேணுவார்களோ, எவர்களுடைய பேச்சு நமக்கு மறுமையை நினைவூட்டுகிறார்களோ, யார் நமக்கு நல்ல விஷயங்களை நினைவூட்டுகிறார்களோ, தன்னிடத்தில் அலட்சியத்தை பார்க்கும்பொழுது யார் நமக்கு நினைவூட்டுகிறார்களோ இப்படியாக நம்முடைய நண்பர்களை ஆராய்ந்து அவர்களோடு நம்முடைய நட்பை வைத்துக் கொள்ள வேண்டும்.

சில நண்பர்கள் இருக்கிறார்கள்; மார்க்கத்தைப் பின்பற்றக்கூடியவர்களை பார்த்தால், உனக்கு என்னடா ஆயிருச்சு? இந்த வயசுலேயே இப்படி?

தொழுகைக்கு அவசரமாகப்  போயிட்டு இருப்பாங்க; இவ்வளவு அவசரமா போற? இன்னும் தொழுகைக்கு நேரம் இருக்கு. இப்படி ஒவ்வொரு விஷயத்திலும் மார்க்கத்தில் அவர்கள் பேணுகின்ற ஒவ்வொரு விஷயத்திலும் முட்டுக்கட்டையாக இருக்கக்கூடியவர்களும், அல்லது மார்க்கத்தைப் பேணும் பொழுது அதை ஒரு பிற்போக்குத்தனமாகவும் அதெல்லாம் இப்பொழுது அவசியமா என்று கேள்வி கேட்டு, தடையாக இருக்ககூடியவர்களும் நண்பர்களில் இருப்பார்கள்; மனைவிகளில் இருப்பார்கள்; பிள்ளைகளில் இருப்பார்கள்; உறவுகளில் இருப்பார்கள். சகோதரர்களே! அவர்களை  விட்டு நாம் கண்டிப்பாக தூரமாக இருக்க வேண்டும்.

அதுபோன்றுதான் அல்லாஹ்வுடைய நினைவூட்டல்கள், உபதேசங்கள் அதிகமாக கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும்.

وَّذَكِّرْ فَاِنَّ الذِّكْرٰى تَنْفَعُ الْمُؤْمِنِيْنَ‏

மேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும். (அல்குர்ஆன் : 51 : 55)

அல்லாஹ் சொல்கிறான் நபியே நீங்கள் மூமின்களுக்கு உபதேசம் செய்து கொண்டே இருங்கள். ஆகவே குர்ஆன் ஹதீஸ் உடைய உபதேசங்களை. அதிகமாக கேட்டுக்கொண்டே இருக்கவேண்டும். அந்த உபதேசங்களை கேட்டு உள்ளத்தில் அல்லாஹ்வுடைய அச்சத்தை ஏற்படுத்த வேண்டும்

இதைப் போன்றுதான் அல்லாஹ் சுபஹானல்லாஹ் முந்திய சமுதாய மக்களில் பாவிகளை குறித்தும் அவர்களுடைய தீய முடிவு குறித்தும் எச்சரிக்கை செய்து இருக்கிறானே அந்த வசனங்களை படித்து. அந்த வசனங்களில் சொல்லப்பட்ட சமுதாய மக்களின் முடிவு கலை குறித்து அதிகமாக நாம் சிந்தித்து கொள்ள வேண்டும்.அல்லாஹு ரப்புல் ஆலமீன் எப்படி கூறுகின்றான் பாருங்கள்.

فَكَاَيِّنْ مِّنْ قَرْيَةٍ اَهْلَكْنٰهَا وَهِىَ ظَالِمَةٌ فَهِىَ خَاوِيَةٌ عَلٰى عُرُوْشِهَا وَبِئْرٍ مُّعَطَّلَةٍ وَّقَصْرٍ مَّشِيْدٍ‏

அநியாயம் செய்த எத்தனையோ ஊ(ரா)ர்களை நாம் அழித்திருக்கிறோம்- அவற்றின் முகடுகள் மீது அவை விழுந்து கிடக்கின்றன; எத்தனையோ கிணறுகள் பாழடைந்து கிடக்கின்றன; எத்தனையோ வலுவான மாளிகைகள் (பாழ்பட்டுக் கிடக்கின்றன). (அல்குர்ஆன் : 22 : 45)

اَفَلَمْ يَسِيْرُوْا فِى الْاَرْضِ فَتَكُوْنَ لَهُمْ قُلُوْبٌ يَّعْقِلُوْنَ بِهَاۤ اَوْ اٰذَانٌ يَّسْمَعُوْنَ بِهَا‌  فَاِنَّهَا لَا تَعْمَى الْاَبْصَارُ وَلٰـكِنْ تَعْمَى الْـقُلُوْبُ الَّتِىْ فِى الصُّدُوْرِ‏

அவர்கள் பூமியில் பிரயாணம் செய்து (இவற்றைப்) பார்க்கவில்லையா? (அவ்வாறு பார்த்திருந்தால்) அவர்களுக்கு விளங்கிக் கொள்ளக்கூடிய உள்ளங்களும், (நல்லவற்றைச்) செவியேற்கும் காதுகளும் உண்டாகியிருக்கும், நிச்சயமாக (புறக்) கண்கள் குருடாகவில்லை; எனினும், நெஞ்சுக்குள் இருக்கும் இதயங்கள் (அகக் கண்கள்) தாம் குருடாகின்றன. (அல்குர்ஆன் : 22 : 46)

இதைக் கூறிவிட்டு அல்லாஹ் கூறுகிறான்; ஆனால் இவர்கள் இப்படி செய்வதில்லை; எத்தனையோ அழிந்து போன மனித சமுதாயத்தைப் பற்றி தெரிந்தும் கூட இவர்கள் சிந்திப்பதில்லை; எந்த அளவுக்கு நிலைமை மாறி விட்டது என்றால் அநியாயக்கார மக்கள் வாழ்ந்து சென்ற இடங்களுக்குச் சென்று அனாச்சாரம் செய்து மகிழக்கூடிய அளவிற்கு முஸ்லிம்கள் மூமின்களின் நிலை மோசமாகிவிட்டது. அல்லாஹ் பாதுகாப்பானாக!

அல்லாஹு ரப்புல் ஆலமீன் கூறுகிறான் இதற்கு காரணம் என்ன? அவர்களுடைய கண்கள் குருடாகவில்லை; அவர்களின் நெஞ்சங்களில் உள்ள கல்பு குருடாகி விட்டது; கல்பு செத்துப் போய்விட்டது; உள்ளம் உயிர் இல்லாமல் ஆகிவிட்டது என்பதாக. ஆகவே கண்ணியத்திற்குரியவர்களே நம்முடைய கல்பை ஹயாத் ஆக இருக்க வேண்டுமென்றால் நாம் யாரோடு பழகுகிறோம்? அல்லாஹ்வுடைய அச்சம் உள்ளவர்களோடு நமது நட்பு இருக்கிறதா? தொழுகையை பேணக் கூடியவர்கள், ஜகாத்தை கொடுக்கக் கூடியவர்கள், நோன்புகளை சரியான முறையில் நிறைவேற்றக்கூடியவர்கள் இப்படியாக அல்லாஹ்வுடைய சட்டங்களை பேணக்கூடியவர்களாக இருப்பவர்களோடு நமது நட்பு தொடர்பு இருக்கிறதா?என்பதை சிந்திக்க வேண்டும்.

அல்லாஹ்வுடைய உபதேசங்களை கேட்பது, அதுபோன்று அல்லாஹ்வுடைய படைப்புகளை சிந்தித்துப் பார்ப்பது; அல்லாஹ்வுடைய வல்லமைகளையும் அல்லாஹ்வுடைய ஞானங்களையும் அறிந்து உணர்வது; அதுபோன்று பாவிகளுடைய தீய முடிவைப் பற்றி குர்ஆனிலே படித்து, அந்த கெட்ட முடிவுகள் அவர்களுக்கு ஏன் ஏற்பட்டது? என்று சிந்திப்பது.

அதுபோன்றுதான் சகோதரர்களே! இந்த உள்ளம் இறந்து விடுவதற்கும், இந்த உள்ளத்துடைய உயிர் செத்து விடுவதற்கும் சில காரணங்கள் இருக்கிறது. அதற்கு காரணம் நமக்கு உண்மை, சத்தியம் வரும்பொழுது அதை நிராகரிப்பது. அன்பு சகோதரர்களே சத்தியத்தை புறக்கணிப்பது; அது உண்மை என்று தெரிந்தும் அந்த உண்மையை ஏற்றுக்கொள்ள மறுப்பது.

ரப்புல் ஆலமீன் சொல்கிறான்;

فَلَمَّازَاغُواأَزَاغَاللَّهُقُلُوبَهُمْ

(நேரானபாதையிலிருந்து) அவர்கள் விலகவே, அல்லாஹ்வும் அவர்களுடைய உள்ளங்களை (நேரானபாதையிலிருந்து) திருப்பிவிட்டான்.(அல்குர்ஆன்61 : 5)

فَلَمَّا جَاءَهُمْ بِالْبَيِّنَاتِ قَالُوا هَذَا سِحْرٌ مُبِينٌ

அத்தாட்சிகள் வந்தபிறகும் அவர்கள் அதை சூனியம் என்று கருதினார்கள்?.தெளிவான அத்தாட்சிகள் வந்தும் அதை விட்டு அவர்கள் விலகி விட்டார்கள்.(அல்குர்ஆன்61 : 6)

ثُمَّانْصَرَفُواصَرَفَاللَّهُقُلُوبَهُمْ

சத்தியம் அவர்களுக்கு முன்னால் வந்தது.அதை  ஏற்காமல் திரும்பிவிட்டார்கள்.அல்லாஹ்வும்  அவர்களுடைய உள்ளத்தை கோணல் ஆக்கிவிட்டான்.(அல்குர்ஆன் 9 : 127)

அதேபோன்றுதான் சகோதரர்களே!இந்த உள்ளத்தை மரணிப்பதற்கான காரணங்களில், உள்ளத்தில் அந்த ஈமான் இல்லாமல் போவதற்கான காரணங்களில் ஒன்று ஹராமான சம்பாத்தியத்தை அதிகரித்துக் கொள்வது. எது ஹலாலோ அதை மட்டும்தான் முஸ்லீம் செய்ய வேண்டும். கொஞ்சமாக இருக்கிறதே அல்லாஹ் அதில் பரகத் செய்வான். எதில் அதிகமாக இருக்கிறதோ அது ஹராமாக இருக்கும். சனிக்கிழமை வாசிகளுக்கு மீன் வந்ததைப் போன்று.

إِذْيَعْدُونَفِيالسَّبْتِإِذْتَأْتِيهِمْحِيتَانُهُمْيَوْمَسَبْتِهِمْشُرَّعًاوَيَوْمَلَايَسْبِتُونَلَاتَأْتِيهِم

ஏனென்றால், சனிக்கிழமையன்று(அக்கடலில்உள்ள) மீன்கள்அவர்கள் முன்வந்து(நீர்மட்டத்திற்குத்) தலைகளை நீட்டிக்கொண்டிருந்தன. சனிக்கிழமையல்லாத நாள்களில்அவர்களிடம் அவை வருவதில்லை. அவர்கள் பாவம் செய்துகொண்டிருந்ததன் காரணமாகஅவர்களை இவ்வாறு(மிகக்கடினமான) சோதனைக்கு உள்ளாக்கினோம்.(அல்குர்ஆன்7 : 163)

சனிக்கிழமைகளில் மீன் தளதளவென்று இருக்கும்; இன்று மீன் பிடித்தால் ஹராமாகும் என்று அல்லாஹ் கூறியிருக்கிறான்.

ஹராம் கவர்ச்சியாக இருக்கும்; ருசியாக இருக்கும்; அதிகமாக இருக்கும்; பெரும் வளர்ச்சி அடைவதாக இருக்கும்.

يَمْحَقُ اللّٰهُ الرِّبٰوا وَيُرْبِى الصَّدَقٰتِ‌

நிச்சயமாக அல்லாஹு தஆலா வட்டியை அழிப்பான்; தர்மங்களை நிலைத்திருக்கச் செய்வான். (அல்குர்ஆன் 2 : 276)

ஹராமான ஒவ்வொன்றையும் அல்லாஹ் அழிப்பான். அந்த கெட்ட முடிவை அல்லாஹு தஆலா கண்டிப்பாக காட்டுவான். ஹலாலான ஒவ்வொன்றையும் அல்லாஹ் வளர்ச்சி அடைய செய்வான்; அதன் நல்ல முடிவை அதை பேணக்கூடியவர்களுக்கு அல்லாஹ் காட்டுவான்.

அன்பு சகோதரர்களே! ஹராமை தின்பது, அதில் வாழ்வது அவர்களின் உள்ளத்தை இழக்கச் செய்துவிடுகிறது; இதனிடையே துவாக்கள் அங்கீகரிக்கப்படாமல் செய்துவிடுகிறது. இதுபோன்றுதான் பாவங்கள்.

وَلَمْ يُصِرُّوْا عَلٰى مَا فَعَلُوْا وَهُمْ يَعْلَمُوْنَ‏

இன்னும், அவர்கள் ஒரு மானக்கேடான காரியத்தைச் செய்து விட்டாலும் அல்லது தங்களுக் குத்தாங்களே தீங்கிழைத்துக் கொண்டாலும் உடனே அல்லாஹ்வை நினைத்து (அவனிடமே) தங்கள் பாவமன்னிப்பைத் தேடுவார்கள்.(அல்குர்ஆன் 3: 135)

பாவம் செய்தால் ஆகா செய்துவிட்டோமே என்று தனிமையில் அல்லாஹ்வுக்கு பயந்து, அழுது, இஸ்திஃபார் செய்து உள்ளத்தை பரிசுத்தப்படுத்தி கொள்ள வேண்டும் அப்படியில்லாமல் அந்தப் பாவத்தில் இன்பம் கண்டு கொண்டே இருந்தால் அல்லாஹு தஆலா அவனுடைய உள்ளத்தையும் மரணிக்கச் செய்து விடுகிறான்.

كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ

அப்படியல்ல: அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்தவை அவர்களுடைய இருதயங்கள் மீது துருவாகப் படிந்து விட்டன. (அல்குர்ஆன் : 83 : 14)

ஒரு பாவம் செய்தால் தௌபா செய்து கொள்ள வேண்டும்;அப்படி இல்லாமல் இருந்தால் அந்த உள்ளத்தில் இந்தப் பாவம் படிந்து படிந்து கருமையாக ஆகிவிடுகின்றது.

அதுபோன்றுதான் சகோதரர்களே! உள்ளத்தை மரணிக்கச் செய்கின்ற காரியங்களில் ஒன்று, ஹராமான விஷயத்தை பேசுவது, ஹராமான செய்திகளை கேட்பது, குறிப்பாக  இசைகளையும் பாடல்களையும் கேட்பது. இது ஷைத்தான் உடைய சப்தமாக இருக்கிறது.

وَاسْتَفْزِزْ مَنِ اسْتَطَعْتَ مِنْهُمْ بِصَوْتِكَ

அல்லாஹு தஆலா சைத்தானுக்கு சொல்லும்பொழுது ஷைத்தானே! நீ நாடியவர்களை உன்னுடைய சப்தத்தால் நீ வழிகெடுத்து கொள்; உன்னுடைய சப்தத்தால் அவர்கள் மீது ஆதிக்கத்தை செலுத்து என்று அல்லாஹு தஆலா கூறுகிறான்.(அல்குர்ஆன் 17 : 64)

ஷைத்தான் உடைய சப்தம் இசை என்பதாக அறிஞர்கள் கூறுகிறார்கள். அதுபோன்றுதான் சகோதரர்களே! நமது கண்களை ஹராமான விஷயத்தில் பார்ப்பதிலேயே பயன்படுத்துவது; இது மிகப்பெரிய தாக்கத்தை உள்ளத்தில்  ஏற்படுத்தக்கூடிய ஒன்று; உள்ளத்தை மரணிக்கக்கூடிய காரியங்களில் ஒன்று.

அல்லாஹ் கூறுகிறான்;

قُلْ لِّـلْمُؤْمِنِيْنَ يَغُـضُّوْا مِنْ اَبْصَارِهِمْ وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ‌  ذٰ لِكَ اَزْكٰى لَهُمْ‌  اِنَّ اللّٰهَ خَبِيْرٌ بِمَا يَصْنَـعُوْنَ‏

நபியே!மூமின்களுக்கு நம்பிக்கை கொண்ட ஆண்களுக்கு நீங்கள் சொல்லுங்கள். அடுத்த வசனத்தில்  ஈமான் கொண்ட பெண்களுக்கு நீங்கள் சொல்லுங்கள். என்று அல்லாஹ் சொல்கிறான்; இருவருக்கும் ஒரே விஷயத்தைச் சொல்கிறான்; என்ன அது? அவர்கள் தங்களது கண்களை ஹராமை பார்க்காமல் தாழ்த்திக் கொள்ளட்டும்.

وَيَحْفَظُوْا فُرُوْجَهُمْ‌

தங்களுடைய மர்மஸ்தானத்தை பாதுகாத்துக் கொள்ளட்டும் .இதுதான் அவர்களுடைய உள்ளம் சுத்தம் அடைவதற்கு மிகவும் நெருக்கமான வழி.(அல்குர்ஆன்24 : 30,31)

அவர்களுடைய உள்ளம் சுத்தம் அடைவதற்கு, உயிரோட்டம் அடைவதற்கு, தக்வாவால் நினைத்து அழக்கூடிய உள்ளமாக ஆவதற்கு, உள்ளம் அப்படியே பசுமையாக, மென்மையாக, அல்லாஹ்வுடைய அச்சத்தால் அழக்கூடிய உள்ளமாக  ஆவதற்கு இதுதான் மிகவும் நெருக்கமான வழி. சகோதரர்களே! நாம் அதிகமாக நமது உள்ளம் மென்மை அடைவதற்கான துவாவை கேட்போம்.

உள்ளம் இறுகி விடுவதில் இருந்து பாதுகாவல் தேட வேண்டும். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் பாதுகாப்புத் தேடிய விஷயங்களில் ஒன்று.

وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ

உன்னை பயப்படாத உள்ளத்திலிருந்து யா அல்லாஹ் உன்னிடம் பாதுகாவல் தேடுகிறேன் என்று துஆ கேட்டார்கள். (1)

அறிவிப்பாளர்: சைது இப்னு அர்கம் ரழியல்லாஹுஅன்ஹு, நூல்:முஸ்லிம் எண்4899 , அபுதாவூத் எண் 1324

எண்ணத்தை மென்மையாக்கும் படி அல்லாஹ்விடம் துஆ  கேட்டார்கள். சகோதரர்களே! இந்த விஷயத்தை நாமும் உணர்வதோடு நம்முடைய குடும்பத்தாருக்கும் உணர்த்தவேண்டும்; அல்லாஹ்வை பயந்து அல்லாஹ்வின் அச்சத்தாலும் பயத்தாலும் நினைவாலும் பசுமையான உள்ளம் கொண்ட சமுதாயமாக மாற வேண்டும். அல்லாஹ் அதற்க்கு வாய்ப்பளிப்பானாக!

ஆமீன்

குறிப்புகள் :

குறிப்பு 1).

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَإِسْحَقُ بْنُ إِبْرَاهِيمَ وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ وَاللَّفْظُ لِابْنِ نُمَيْرٍ قَالَ إِسْحَقُ أَخْبَرَنَا و قَالَ الْآخَرَانِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ عَاصِمٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الْحَارِثِ وَعَنْ أَبِي عُثْمَانَ النَّهْدِيِّ عَنْ زَيْدِ بْنِ أَرْقَمَ قَالَلَا أَقُولُ لَكُمْ إِلَّا كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ كَانَ يَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْعَجْزِ وَالْكَسَلِ وَالْجُبْنِ وَالْبُخْلِ وَالْهَرَمِ وَعَذَابِ الْقَبْرِ اللَّهُمَّ آتِ نَفْسِي تَقْوَاهَا وَزَكِّهَا أَنْتَ خَيْرُ مَنْ زَكَّاهَا أَنْتَ وَلِيُّهَا وَمَوْلَاهَا اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عِلْمٍ لَا يَنْفَعُ وَمِنْ قَلْبٍ لَا يَخْشَعُ وَمِنْ نَفْسٍ لَا تَشْبَعُ وَمِنْ دَعْوَةٍ لَا يُسْتَجَابُ لَهَا (صحيح مسلم- 4899)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/