அல்லாஹ்வை நம்பு! | Tamil Bayan - 552
بسم الله الرّحمن الرّحيم
அல்லாஹ்வை நம்பு!
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! முஸ்லிம் சமுதாய மக்களே! அல்லாஹ்வின் அச்சத்தை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக, அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்ற அல்லாஹ்வின் உபதேசத்தைக் கொண்டுஎனக்கும் உங்களுக்கும் இந்த ஜும்ஆவின் ஆரம்பத்தில் உபதேசம் செய்தவனாக. இந்த ஜும்ஆ உரையை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா ஈமானையும்,அத்தனை நல்ல நற்பண்புகளையும், தந்தருள்வானாக! குஃப்ர், ஷிர்க், நிஃபாக் எல்லா கெட்ட குணங்களை விட்டும் என்னையும், உங்களையும், நம் சமுதாய மக்களையும்அல்லாஹ் பாதுகாத்து அருள்வானாக! ஆமீன்!
அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வின் மீது உறுதியோடு, அல்லாஹுத்தஆலா எனக்கு உதவுவான், என்னை கைவிட மாட்டான், அவன் மீது நான் நம்பிக்கை வைத்திருக்கிறேன், அவன் எனக்கு நல்லதை செய்வான், அல்லாஹ் அல்லாஹுத்தஆலா எனக்கு துணை இருக்கிறான் என்ற அந்த ஈமானின் உறுதியை,அந்த ஈமானின் உயர்ந்த நிலையை, எனக்காகவும் உங்களுக்காகவும் அல்லாஹ்விடத்தில் வேண்டியவனாக இந்த உரையை ஆரம்பம் செய்கிறேன்.
இந்த உலக வாழ்க்கையில் அடியானுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து நிறைய அருட்கொடைகள் தேவை இருக்கின்றன. அல்லாஹ்வின் புறத்திலிருந்து இந்த அடியானுக்கு கருணை இல்லை என்றால், இந்த அடியான் எந்த ஒரு காரியத்தையும் சீராக செய்ய முடியாது.
ஆகவேதான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அல்லாஹ்விடத்தில் துஆ கேட்பார்கள்; யா அல்லாஹ்! என்னை நீ என்னிடமே ஒப்படைத்து விடாதே!
فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ
அல்லாஹ்வே!கண் இமைக்கும் நேரம் கூட என்னை என்னிடம் ஒப்படைத்து விடாதே! உனது வேலையை நீயே பார்த்துக்கொள், உனது காரியத்தை உன்னால் முடிந்தால் செய்து கொள், நான் பலவீனப்பட்டு விடுவேன். கண்சிமிட்டும் நொடிகூட, கண் சிமிட்டும் நேரம் அளவு கூட, யா அல்லாஹ்! நீ என்னை என்னிடம் சாட்டி விடாதே!
அறிவிப்பாளர் : அபூ பக்ரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூ தாவூத், எண் : 5090, தரம் : ஹசன் (அல்பானி)
ஒவ்வொரு நொடியிலும் அல்லாஹ்வுடைய அருள், அல்லாஹ்வுடைய உதவி, ஒரு அடியானுக்கு தேவை. இந்த அடியான் எப்பொழுதும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை உள்ளவனாக இருக்க வேண்டும்.
ஒரு நம்பிக்கை அல்லாஹு தஆலா வணக்கத்துக்குரியவன்; அவனுக்கு இணை துணை இல்லை. அவன் தான் படைத்தான். பரிபாளிக்கிறான். என்ற ஈமானுடைய நம்பிக்கை .
மற்ற ஒரு நம்பிக்கை. தவக்குலுடைய நம்பிக்கை, அல்லாஹ் எனக்கு போதுமானவன், நான் எனது காரியங்களை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டேன். அல்லாஹ் எனக்கு நல்லதை செய்வான். அல்லாஹுத்தஆலா என்னை தீயவற்றிலிருந்து தடுப்பான். எனது நோயை அல்லாஹ் குணப்படுத்துவான். எனது சிரமத்தை அல்லாஹ் நீக்குவான். எனது எதிரியிடமிருந்து அல்லாஹ் என்னை பாதுகாத்துக் கொள்வான்.
என்னுடைய சோதனையில் அல்லாஹ் எனக்கு கை கொடுப்பான். என்று அல்லாஹ்விடம் சார்ந்து, அல்லாஹ்விடம் எல்லா காரியங்களையும் ஒப்படைத்து, அல்லாஹ்வின் பக்கம் திரும்பி, தன்னுடைய அத்தனை விஷயங்களிலும் அல்லாஹ்வின் மீது உறுதி கொண்டவனாக, அல்லாஹுவை பற்றி பிடித்தவனாக இருக்க வேண்டும்.
சகோதரர்களே! இது ஈமானுடைய குணங்களில் மிகவும் முக்கியமான ஒரு குணம்.
إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُتَوَكِّلِينَ
அல்லாஹ்வை சார்ந்து இருப்பவர்களை நேசிப்பதாக அல்லாஹ் கூறுகின்றான். (அல்குர்ஆன் 3 : 159)
குர்ஆனுடைய பல வசனங்களை பார்த்து இருக்கிறோம். ஒன்று இருக்கிறது பொதுவாக அல்லாஹ்வை சார்ந்து இருத்தல். அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தவனாகவே வாழ்க்கையில் ஒவ்வொரு காரியத்தையும் செய்தல்.
இன்னொன்று இருக்கிறது.சில இக்கட்டான முக்கியமான தருணங்கள் வாழ்க்கையில் ஏற்படுவது உண்டு. எதிரிகள் சூழ்ந்து கொள்ளும்போது, அல்லது ஆபத்துகள் சூழ்ந்து கொள்ளும்போது, அல்லது வறுமை பஞ்சம் பசி பட்டினி, அல்லது பொருளாதார நஷ்டம், அல்லது வேறு ஏதாவது மனதிற்கு பயம் ஏற்படுகின்ற, அல்லது மனதிற்கு விருப்பமில்லாத, மனதிலே துக்கத்தை ஏற்படுத்தக்கூடிய, இப்படி ஏதாவது ஒரு ஆபத்துகள் சூழ்ந்து கொள்ளும் பொழுது. அந்த நேரத்திலே அல்லாஹ்வுடைய உதவி எனக்கு கண்டிப்பாக வரும், என்று அந்த தவக்குலில் உறுதியாக இருப்பது.
ஒன்று தவக்குல், மற்றொன்று அந்தத் தவக்குலில் உறுதியாக இருப்பது. நம்மில் சிலரும் கூட தவக்குல் செய்வார்கள். நான் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு இருக்கிறேன் என்று. அந்த இக்கட்டான தருணம் வரும்போது, அவ்வளவுதான் அல்லாஹ்வை மறந்துவிட்டு பதட்டப்பட ஆரம்பித்துவிடுவார்கள். குழம்ப ஆரம்பித்து விடுவார்கள்.
அல்லாஹ்வுடைய உதவி வரும் என்று நினைத்தேன், ஆனால் வரவில்லை என்று சொல்லிவிடுவார்கள். அல்லாஹ் பாதுகாப்பானாக!! அல்லாஹ்வை நம்பி இருந்தேன், அல்லாஹ் என்னை கைவிட்டு விட்டான் என்று சொல்வார்கள். நான் இவ்வளவு நம்பிக்கையில் இருந்தேன். இப்பொழுதும் நம்பிக்கையில்தான் இருக்கிறேன். ஆனால் அல்லாஹ்வுடைய உதவி வருமா? வராதா? என்று தெரியவில்லை. என்று அவர்கள் புலம்பிக்கொண்டு இருப்பார்கள். தடுமாற்றத்திலே இருப்பார்கள்.
சகோதரர்களே! அல்லாஹ் நம்மை இந்த நிலையிலிருந்து பாதுகாக்க வேண்டும், இப்படிப்பட்ட ஒரு நிலையில்தான் அல்லாஹ்வின் மீது மேலும் அவனுக்கு நம்பிக்கை அதிகம் வரவேண்டும். எனது ரப்பு இந்த இடத்தில் நான் கேட்ட உதவியை செய்யவில்லை என்றாலும், இதைவிட ஒரு பெரிய நன்மையை எனது ரப்பு எனக்கு வைத்திருக்கிறான். இதைவிட ஒரு சிறந்த முடிவை எனது ரப்பு எனக்கு வைத்திருக்கிறான். நான் அதைக் கொண்டு பொருந்திக்கொள்வேன்.
சகோதரர்களே! குர்ஆனுடைய வசனங்கள், ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நபிமொழிகள், ஸஹாபாக்கள், தாபியீன்கள், இவர்களுடைய வழிகாட்டல்கள், அவர்களுடைய வாழ்க்கை வரலாறை இதற்கு நாம் எடுத்து படித்துப் பார்க்க வேண்டும்.
ஃபிரவ்ன் உடைய சபையில் தவ்ஹீதின் பக்கம் அழைக்கின்ற ஓர் அடியான், ஃபிர்அவ்னுடைய சபையிலிருந்து எழுந்து மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு ஆதரவாக பேசுகிறார். அந்த தவ்ஹீதை உறுதிப்படுத்தியவராக பேசுகின்றார். ஃபிர்அவ்ன் எச்சரிக்கை செய்கிறான்.
ஆயிரக்கணக்கான மக்கள் மூசா அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களை நம்பிக்கை கொண்ட ஒரே காரணத்திற்காக, தன்னுடைய அந்த கட்டளையை மீறினார்கள் என்பதற்காக, மாறுகால் மாறுகை வெட்டி, அவர்களை கழுமரத்தில் ஏற்றி, துடிக்கத் துடிக்க அவர்களை கொன்று குவித்தான் என்றால்! எப்பேற்ப்பட்ட கல்நெஞ்சம் உடையவனாகவும், கடுமையாக வேதனை செய்பவனாகவும்,இருந்தான் என்பதை நீங்கள் புரியலாம். ஒருவரை கூட அவன் மன்னிக்கவில்லை.(அல்குர்ஆன் 20 : 71)
இத்தகைய எதிரிக்கு முன்னால் ஆட்சி, அதிகாரம், படைபலம், எல்லாம் அவனுக்கு ஆதரவாக இருக்கின்ற நேரத்தில், துணிந்து அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைத்தவராக அல்லாஹ்வின் பக்கம் அழைத்துவிட்டு, நல்லடியார் கூறியதை ரப்புல் ஆலமீன் தன் திருமறையில் கூறுகிறான்;
وَأُفَوِّضُ أَمْرِي إِلَى اللَّهِ إِنَّ اللَّهَ بَصِيرٌ بِالْعِبَادِ
நான் எனது காரியத்தை அல்லாஹ்விடம் ஒப்படைக்கிறேன்.அடியார்களை அல்லாஹ் உற்று நோக்குகிறான்.(அல்குர்ஆன் 40 : 44)
நல்லவர்களை எந்தத் தருணத்தில், எப்படி பாதுகாக்க வேண்டும்?என்பதைஅல்லாஹ் அறிந்தவன். எதிரியை எந்த நேரத்தில், எந்த தருணத்தில், அழிக்க வேண்டும் என்பதை அல்லாஹ் அறிந்தவன்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கும் அல்லாஹு தஆலா இப்படி சில வசனங்களை இறக்கினான். நபியே! நீங்கள் அவசரப்படாதீர்கள். உங்களுடைய வாழ்க்கையிலும் வேதனையை அவர்கள் சுவைக்க செய்யலாம். இல்லை என்றால் உங்களுடைய மரணத்திற்குப் பிறகும் சுவைக்கச் செய்யலாம். இல்லையென்றால் அவர்களுக்கு மரணத்தை கொடுத்து அவர்கள் மறுமையில் வருவார்கள் அப்பொழுது அவர்களை எப்படி செய்ய வேண்டுமோ செய்து கொள்வேன். (அல்குர்ஆன் 10:46,13:40,40:27)
அன்பு சகோதரர்களே! ஆகவே அல்லாஹ்வுடைய காரியத்தில் தலையிடுவதற்கு நமக்கு அனுமதி இல்லை. அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அவனிடம் சரண் அடைவது தான் அடியார்களுடைய குணமாக இருக்க வேண்டுமே தவிர, .இப்படித்தான் செய்ய வேண்டும், இப்படி செய்யக்கூடாது, என்று ரப்புக்கு கட்டளையிடக்கூடிய அதிகாரம் நமக்கு இல்லை.
فَوَقَاهُ اللَّهُ سَيِّئَاتِ مَا مَكَرُوا وَحَاقَ بِآلِ فِرْعَوْنَ سُوءُ الْعَذَابِ
ஆகவே, அவர்கள் செய்த சூழ்ச்சிகளின் தீங்குகளிலிருந்து அவரை அல்லாஹ் காப்பாற்றினான். ஃபிர்அவ்னுடைய மக்களைக் கடினமான வேதனை சூழ்ந்துகொண்டது.(அல்குர்ஆன் 40 : 45)
நமது சட்டைப்பையில் ஒரு ஆயிரம் ரூபாய் இருந்தால் அதைக்கொண்டு என்ன பொருள் வாங்க வேண்டும் என்று எவ்வளவு உறுதியோடு இருக்கிறோம். இப்படி சாதாரண, அற்ப வஸ்துவின் மீது மனிதர்களுக்கு நம்பிக்கை இருக்கிறது. அல்லாஹ்வுடைய உதவியின் மீது, அல்லாஹ் தனது அடியாருக்கு உதவுவான், நல்லவர்களை அவன் கைவிட மாட்டான் என்ற நப்பிக்கை குறைந்து விட்டது.
إِنَّ رَحْمَتَ اللَّهِ قَرِيبٌ مِنَ الْمُحْسِنِينَ
அல்லாஹ் உடைய கருணை நல்லவர்களுக்கு, சுத்தமான ஈமான் உள்ளவர்களுக்கு மிக நெருக்கத்தில் இருக்கிறது, என்ற அல்லாஹ்வின் வாக்குறுதியின் மீது இந்த நம்பிக்கை பலவீனப்பட்டு இருக்கிறது. (அல்குர்ஆன் 7 : 56)
كَتَبَ اللَّهُ لَأَغْلِبَنَّ أَنَا وَرُسُلِي إِنَّ اللَّهَ قَوِيٌّ عَزِيزٌ
நான் விதித்து விட்டேன்;நானும் என்னுடைய தூதர்களும் தான் வெற்றி பெறுவோம்என்று.அல்லாஹ்வுடைய இந்த வாக்குறுதியிலே நம்பிக்கை மக்களுக்கு பலவீனமாக இருக்கிறது (அல்குர்ஆன் 58 : 21)
وَكَانَ حَقًّا عَلَيْنَا نَصْرُ الْمُؤْمِنِينَ
முஃமின்களுக்கு உதவுவது நம்மீது கடமை என்று அல்லாஹ் கூறுகிறான். அந்த வாக்குறுதிகளில் நம்பிக்கை பலவீனமாக இருக்கிறது.(அல்குர்ஆன் 30 : 47)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تَنْصُرُوا اللَّهَ يَنْصُرْكُمْ وَيُثَبِّتْ أَقْدَامَكُمْ
நீங்கள் அல்லாஹ்விற்கு உதவினால், அல்லாஹ் உங்களுக்கு உதவுவான். உங்களது பாதங்களை பலப்படுத்துவான், என்ற அல்லாஹ்வின் வாக்குறுதியின் மீது நம்பிக்கை பலவீனமாக இருக்கிறது. (அல்குர்ஆன் 47:7)
وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
நீங்கள் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு, அல்லாஹ்வை சார்ந்து இருந்து, ஈமான் உங்களிடத்திலே உறுதியாக இருந்தால்! நீங்கள் ஏன் கோழையாக வேண்டும். நீங்கள் ஏன் பலவீனப்படவேண்டும். நீங்கள்தான் உயர்ந்தவர்கள். (அல்குர்ஆன் 3 : 139)
وَلَنْ يَجْعَلَ اللَّهُ لِلْكَافِرِينَ عَلَى الْمُؤْمِنِينَ سَبِيلًا
ஒருக்காலும் அல்லாஹுத்தஆலா உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் மீது காஃபிர்களுக்கு ஆதிக்கத்தை ஏற்படுத்த மாட்டான். உன்னை அல்லாஹ் ஓங்க வைப்பான், உதவி செய்வான், என்ற அல்லாஹ்வுடைய வாக்குறுதியின் மீது! நம்பிக்கை பலவீனமாக இருக்கிறது. நம்முடைய கஷ்டத்தில் எனக்கு உதவுவதற்கு அல்லாஹ் இருக்கின்றான், என்ற அந்த நம்பிக்கை பலவீனமாக இருக்கிறது. (அல்குர்ஆன் 4 : 141)
அன்பு சகோதரர்களே! நம்முடைய நல்லோர்களின் வரலாறை பாருங்கள், மூசா (அலை) அவர்களுடைய தாய் எத்துணை சோதனையான காலகட்டத்தில், நபி மூசா (அலை) அவர்களை பெற்று எடுக்கின்றார்கள். பிறக்கின்ற அத்துணை ஆண் குழந்தைகளையும் கொல்ல வேண்டும் என்ற கட்டளை.
ஒவ்வொரு வீட்டு வாசலிலும் அடியாட்களை வைத்திருக்கிறான். இஸ்ரவேலர்களின் வீடுகளிலே குழந்தை பிறக்கின்றதா? என்று. அல்லாஹ் அத்துணை பேர்களின் கண்களையும் மறைத்து மூசா (அலை) அவர்களுடைய தாயை கர்ப்பமடைய செய்தான். எப்பொழுதும் பிள்ளைகளை பெற்று எடுக்கின்ற அதே காலகட்டத்தில் தான், பத்து மாதகாலம் சுமந்து பிள்ளையை பெற்று எடுக்கிறார்கள்.
அல்லாஹ் மறைக்க நாடினால் யாராலும் வெளிப்படுத்த முடியாது. அல்லாஹ் வெளிப்படுத்த நாடினால் எந்த சக்தியாலும் மறைக்க முடியாது. பெற்று எடுக்கின்றார்கள்; பதற்றம் வருகிறது மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய தாய்க்கு, இவ்வளவு அழகான குழந்தை, இவ்வளவு சிறந்த ஒரு குழந்தை, இந்த குழந்தை ஃபிர்அவ்னுடைய கையால் கொல்லப்பட்டு விடுமோ! என்ற அச்சத்தில் பயப்படுகிறார்கள். அல்லாஹுத்தஆலா மூஸா (அலை) தாயின் உள்ளத்திலே அந்த இறை சிந்தனையை போடுகின்றான்.
وَأَوْحَيْنَا إِلَى أُمِّ مُوسَى أَنْ أَرْضِعِيهِ فَإِذَا خِفْتِ عَلَيْهِ فَأَلْقِيهِ فِي الْيَمِّ وَلَا تَخَافِي وَلَا تَحْزَنِي إِنَّا رَادُّوهُ إِلَيْكِ وَجَاعِلُوهُ مِنَ الْمُرْسَلِينَ
(ஆகவே, பலவீனமானவர்களில் மூஸாவை நாம் படைத்தோம். மூஸா பிறந்த சமயத்தில், பலவீனமான இவர்களுடைய மக்களில் பிறக்கும் ஆண் குழந்தைகளை ஃபிர்அவ்ன் கொலை செய்து கொண்டிருந்தான். ஆகவே மூஸாவின் தாய், தன் இக்குழந்தையையும் ஃபிர்அவ்ன் கொலை செய்து விடுவானோ என்று அஞ்சி நடுங்கினாள்.) ஆகவே, (அச்சமயம்) மூஸாவின் தாய்க்கு நாம் வஹ்யி மூலம் அறிவித்தோம்: (குழந்தையை உன்னிடமே வைத்துக் கொண்டு) ‘‘அவருக்குப் பால் கொடுத்து வா. (உன்னிடம் இருப்பதில்) அவரைப் பற்றி நீ பயந்தால், அவரை (பேழையில் வைத்து) ஆற்றில் எறிந்துவிடு. நீ அவரைப் பற்றிக் கவலைப்படாதே! பயப்படாதே! நிச்சயமாக நாம் அவரை உன்னிடமே கொண்டு வந்து சேர்த்து, அவரை (நம்) தூதர்களில் ஒருவராகவும் ஆக்குவோம்'' (என்று அறிவித்தோம்.) (அல்குர்ஆன் 28 : 7)
நினைத்துப் பாருங்கள்! மூசாவுடைய தாய்க்கு அல்லாஹ்வின் இந்த வாக்கின் மீது அவ்வளவு நம்பிக்கை வந்துவிட்டது. குழந்தையை கடலில் போட்டுவிட்டு அல்லாஹுத்தஆலா ஆறுதல் கூறுகிறான். கடலில் போடுங்கள் நான் கொண்டு வருவேன் என்று. ரப்பு உடைய கட்டளை அதை செயல்படுத்துவது தான் ஒரு அடியானின் கடமையே தவிர, அறிவைக் கொண்டு அங்கே யோசிப்பது அடியானின் கடமை அல்ல.
மனிதர்களின் செயல்களில் வேண்டுமானால் உங்கள் அறிவை புகுத்தி பார்க்கலாம். அல்லாஹ்வுடைய கட்டளை வந்துவிட்டால், அறிவுகளுக்கு எல்லாம் மேலான அல்லாஹ்வின் அறிவு. அறிவை படைத்தவன் உடைய ஞானம் அது. அவனுடைய கட்டளை! அவன் எதையும் மாற்றுவான். இப்ராஹீம் நபிக்கு நெருப்பை குளிர்ச்சியாக மாற்றினான். அங்கே இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம்,
யா அல்லாஹ்! என்னை நெருப்பில் போட போகிறார்களே, எரிந்து செத்து விடுவேனே! இந்த நெருப்பில் இருந்து என்னை பாதுகாத்துக் கொள் என்று சொல்லவில்லை. என்ன சொன்னார்கள்?அல்லாஹ் எனக்குப் போதுமானவன். இந்த நெருப்பில் இருந்து என்னை பாதுகாப்பான். (அல்குர்ஆன் 21:69)
அதுபோன்றுதான் கடலில் விடப்பட்ட மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களை அல்லாஹ் கரைக்கு கொண்டு வந்து சேர்க்கிறான். அதுவும் யாருடைய வீட்டிற்கு, ஃபிர்அவ்னுடைய வீட்டிற்கே. அல்லாஹ்வுடைய எதிரியின் வீட்டிற்கே கொண்டு சேர்க்கிறான். மிகச்சிறந்த வசதியான வளர்ப்பில் அவர்களை அல்லாஹுத்தஆலா வளர வைக்கிறான். அன்பு சகோதரர்களே.
فَرَدَدْنَاهُ إِلَى أُمِّهِ كَيْ تَقَرَّ عَيْنُهَا وَلَا تَحْزَنَ وَلِتَعْلَمَ أَنَّ وَعْدَ اللَّهِ حَقٌّ وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ
(அவர்கள் அனுமதிக்கவே, அவள் மூஸாவுடைய தாயை அழைத்தும் வந்து விட்டாள்.) இவ்வாறு நாம் அவரை அவருடைய தாயிடமே சேர்த்துத் தாயின் கண் குளிர்ந்திருக்கவும் அவள் கவலைப்படாதிருக்கவும் செய்து, அல்லாஹ்வுடைய வாக்குறுதி உண்மையானதுதான் என்று நிச்சயமாக அவள் அறிந்து கொள்ளும்படியும் செய்தோம். எனினும், அவர்களில் பெரும்பாலானவர்கள் (இதை) அறியமாட்டார்கள். (அல்குர்ஆன் 28 : 13)
கண்ணியத்திற்குரியவர்களே! இதுதான் யக்கீன்.அல்லாஹ்வுடைய வாக்குறுதி, அல்லாஹ்வுடைய வாக்கின் மீதான நம்பிக்கை.
அந்த நேரத்திலே மூஸா (அலை) தாய் நம்மைப் போன்று சாதாரணமானவர்களாக இருந்திருந்தால், இப்படி கேட்டிருப்பார்கள். பாதுகாப்பேன் என்று சொல்லி இதை விட ஆபத்தான கடலிலே போட சொல்கிறீர்களே! என்று. இது நம்மைப் போன்ற பலவீனமான ஈமான் உள்ளவர்கள் உடைய நிலை.
ரப்பு சொல்கிறான்! என்னுடைய கட்டளைக்கு கட்டுப்பட்டு செய்தார்கள்.
நான் அந்த மூஸாவை அந்தத் தாயிற்கே கொண்டு வந்து சேர்த்தோம்! அவளுடைய கண் குளிர்ச்சி அடைவதற்காக! அவளுடைய கவலையை போக்குவதற்காக. அல்லாஹ்வுடைய வாக்கு உண்மையானது. பளித்தே தீரும். ஆனால் மக்கள் அதிகமானவர்கள் அறிய மாட்டார்கள்.
فَلَمَّا تَرَاءَى الْجَمْعَانِ قَالَ أَصْحَابُ مُوسَى إِنَّا لَمُدْرَكُونَ
அடுத்து, மூசா அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்கள் சந்தித்த சோதனையை பாருங்கள். சூழ்ந்து கொண்டார்கள் எதிரிகள். பின்னால் இருந்து ஃபிர்அவனுடைய படை! முன்னால் மிகப்பெரிய செங்கடலோ, அல்லது நைல் நதியோ இருக்கிறது. மூசா அலைஹிஸ்ஸலாம் அவர்களுடன் இருந்த அந்த பனு இஸ்ராயில் மக்கள் மூஸாவை பார்த்து, மூசா! என்ன இது ஒரு இக்கட்டான தருணத்தில் கொண்டு வந்து விட்டுவிட்டீரே? நாங்கள் மாட்டிக் கொண்டோமே என்று கூறுகிறார்கள்.
மூசா அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் மிகப்பெரிய ஒரு ஈமானிய பாடத்தை, தவக்குல் உடைய பாடத்தை, யகீன் உடைய பாடத்தை, எங்கே வழிகள் அடைபடுமோ! எங்கே மனிதனுடைய சிந்தனைகளும் மனிதனுடைய உதவிகளும் இல்லாமல் போகுமோ! அந்த இடத்தில் அல்லாஹு தஆலா நேரடியாக அவன் உதவுவதற்கு இருக்கின்றான். அவனுடைய நல்லடியார்களுக்கு. இனி எனக்கு யாருடைய உதவியும் இல்லை. என்னுடைய ரப்பு உடைய உதவியை தவிர, என்ற ஒரு நிலைக்கு வரும் பொழுது ரப்பு உடைய உதவி நேரடியாக வரும்.
قَالَ كَلَّا إِنَّ مَعِيَ رَبِّي سَيَهْدِينِ
மூசா அலைஹிஸ்ஸலாம் சொல்கின்றார்கள்;
ஒருகாலும் நீங்கள் நினைப்பது போன்று அல்ல. எனது ரப்பு என்னை கைவிட மாட்டான். என்னோடு என் ரப்பு இருக்கிறான். அவன் எனக்கு இந்த இக்கட்டான தருணத்திலும்,தப்பிப்பதற்கு வழியே இல்லை, என்று நீங்கள் நினைக்கக்கூடிய இந்த தருணத்தில், நாம் தப்பிப்பதற்கு அல்லாஹ் ஒரு பாதையை காட்டுவான்.(அல்குர்ஆன் 26 : 61,62)
அடுத்து அல்லாஹ்வுடைய வஹி வருகிறது. சிந்தித்துப் பார்க்க வேண்டும். இந்த அறிவைக்கொண்டு மார்க்கத்தை அளக்கக்கூடியவர்கள், மார்க்கத்தில் அறிவியலை நிரூபிப்பதற்கு முயற்சிசெய்து, மார்க்கத்தின் அடிப்படையை மாற்றக் கூடியவர்கள், ஹதீஸ்களை மறுக்கக் கூடியவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அல்லாஹுத்தஆலா இந்த இடத்திலே மூஸாவே! உங்கள் கைத்தடியை ஃபிர்அவுன் பக்கம் தூக்கி எறியுங்கள். அது மலைப் பாம்பாக மாறி, அவர்களை எல்லாம் பயமுறுத்தி திரும்பி ஓட வைக்கும். நம்முடைய அறிவு சொல்லும் இப்படி செய்திருந்தால் என்ன?
அல்லாஹ்வுடைய கட்டளை,இந்த கம்பை கொண்டு கடலை அடியுங்கள் என்று.அறிவு என்ன சொல்கிறது?கடலிலே தடியை அடித்தால் என்ன பாதுகாப்பு கிடைக்கும்?பாம்பாக மாறுவதற்கு ஆற்றலுடைய இந்த தடியைஎதிரிகளை நோக்கி அல்லவா எறிய வேண்டும்!
இதுதான் நபிமார்களை பின்பற்றக்கூடியவர்களுக்கும், அறிவை பின்பற்றக் கூடியவர்களுக்கும், இடையே உள்ள வேறுபாடு. நபிமார்கள் அல்லாஹ்வின் கட்டளையை பின்பற்றக் கூடியவர்கள். அவர்கள் எந்த வார்த்தையும் கேட்கவில்லை. ஏன்? தடியை பாம்பாக மாற்றக்கூடியவனும் அல்லாஹ்! தடிக்கு அந்த சக்தி கிடையாது.
ஆகவே கடலில்இந்த தடியைக் கொண்டுஅல்லாஹ்வின் கட்டளையால் அடிக்கும் பொழுது, அல்லாஹ் பெரிய அற்புதத்தை காண்பிப்பான் என்று நம்பிக்கையோடு கடலில் அடித்தார்கள்.
அல்லாஹுத்தஆலா சொல்லிக்காட்டுகிறான்;
فَأَوْحَيْنَا إِلَى مُوسَى أَنِ اضْرِبْ بِعَصَاكَ الْبَحْرَ فَانْفَلَقَ فَكَانَ كُلُّ فِرْقٍ كَالطَّوْدِ الْعَظِيمِ
12பாதைகள், ஒவ்வொரு பாதையிலும் அடுத்த பாதையிலே செல்லக்கூடிய மக்களுக்கு தண்ணீர் வந்து குவிந்து விடாமல் பாதுகாக்கக்கூடியஒரு பெரிய மலைகளை போல, அந்த ஒவ்வொரு பாதைகளுக்கும் இடையிலே அந்த தண்ணீரை அல்லாஹுத்தஆலா உறையவைத்து, அவர்களுக்கு 12பாதைகளை ஏற்படுத்திக் கொடுத்தான். (அல்குர்ஆன் 26 : 63)
இது அல்லாஹ்வுடைய கட்டளை. அல்லாஹ் உடைய செயல். அல்லாஹ்வுடைய கட்டளையை அடியான் பின்பற்றும் பொழுது, அல்லாஹுத்தஆலா அந்த அற்புதங்களை அங்கே நிகழ்த்தி காண்பிக்கிறான்.
அடியானுக்கு தேவை என்ன? ஒன்று, அல்லாஹ் எனக்கு உதவுவான் என்று அல்லாஹ்வைச் சார்ந்து நம்பிக்கை கொண்டிருத்தல். இரண்டாவது, அல்லாஹ்வுடைய கட்டளையை செயல்படுத்த வேண்டும்.
நாம் என்ன செய்வோம்? ஒன்று அப்படி இருந்தால், இப்படி இருக்காது. இப்படி இருந்தால், அப்படி இருக்காது. நம்பிக்கை இருந்தால், அல்லாஹ்வின் கட்டளையை செயல்படுத்துவதை குறை உள்ளவர்களாக இருப்போம். அல்லாஹ்வின் கட்டளைகளை செயல்படுத்திக் கொண்டிருந்தால், நம்பிக்கை தடுமாறிக் கொண்டிருக்கும்.
தொழுது கொண்டிருக்கும் பொழுது யாராவது பிடித்துக் கொண்டு போய் விடுவார்களோ? நம் வியாபாரம் எல்லாம் போய்விடுமோ? கடையை பூட்டி விட்டு வந்து விட்டேன் வியாபாரம் நஷ்டம் ஆகிவிடுமோ?
இபாதத்தில் இருப்பான்;அவ நம்பிக்கையிலே இருப்பான். அல்லது நம்பிக்கை இருக்கும்;இபாதத்தை விட்டுவிட்டு இருப்பான். பேச்சிலே நம்பிக்கை இருக்கும் அல்லது வாய் அளவிலே நம்பிக்கை இருக்கும். இபாதத் இருக்காது.
இப்ராஹிம் அலைஹிஸ் ஸலாம் அவர்களுடைய மனைவி சாராவை, மிஸ்ர் உடைய மன்னன் பிடித்துச் சென்று விட்டான். இப்ராஹீம் அலைஹிஸ்லாம் அவர்கள் என்ன செய்தார்கள்?
ஸஹீஹ் முஸ்லிம் கிதாபை எடுத்து படித்துப்பாருங்கள்; நபிமார்களின் வரலாறுகளை படித்துப்பாருங்கள்.
மன்னரின் படை பிடித்துச் சென்று விட்டார்கள். சொன்னார்கள்! சாரா (அலை) தைரியமாக செல்லுங்கள் அல்லாஹ் இருக்கின்றான். இவர்கள் என்ன செய்தார்கள் இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம், ஏதாவது ஒன்று சதி செய்து அந்த படைகளை தாக்குதல் செய்யலாம். இப்ராஹிம் வலிமை உள்ளவர்கள் இல்லையா? மலக்குமார்களை சந்தித்து பார்த்து பேசக்கூடிய நபி சாதாரண மனிதர்களை விட பல மடங்கு உடல் வலிமை உள்ளவர்கள். இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தனது வலிமையின் மீது நம்பிக்கை வைக்கவில்லை. அல்லாஹ்வுடைய வல்லமையின் மீது நம்பிக்கை வைத்தார்கள். தொழுகையில் தக்பீர் கட்டிவிட்டார்கள். அல்லாஹு அக்பர்!
அல்லாஹ்வுடைய வேத வசனங்களை ஓதுகிறார்கள். அல்லாஹ்விடத்தில் தொழுகையில் துஆ கேட்கிறார்கள்;யா அல்லாஹ்! என் மனைவியை பாதுகாக்க நீயே போதுமானவன், எப்பொழுது தொழுகையை முடிக்கிறார்கள், சாரா அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் பாதுகாப்பாக திரும்ப வந்து, கணவரே! நான் திரும்ப வந்துவிட்டேன்! என்று சொல்கின்ற வரை தொழுகையிலேயே இருக்கிறார்கள். அல்லாஹ் பாதுகாத்தானா இல்லையா? நம்பிக்கையும் வேண்டும்! துஆவும் வேண்டும்! இபாதத்தும் வேண்டும்!
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2371.
இமாம் ஷகீக் ஃபலக் ரஹிமஹுல்லாஹ் ஹிஜிரி 194-ல் ஷஹீதான ஒரு பெரிய தபுஉ தாபியீன்களில் ஒருவர். அவர்கள் இந்த யக்கினை பற்றி, சொன்னார்கள்;
أن لا تسعى في طمع، ولا تتكلم في طمع، ولا ترجو دون الله سواه، ولا تخاف دون الله سواه، ولا تخشى من شيء سواه
நீ ஒரு பேராசையோடு எதையும் முயற்சி செய்யாதே! நீ எதையும் அடைய வேண்டும் என்ற பேராசையோடு நீ பேசாதே! அல்லாஹ்வைத்தவிர வேறு எதையும் ஆதரவு வைக்காதே!
சிலர் ஏதாவது ஒன்று கிடைக்க வேண்டுமென்றால் தான் பேசுவார்கள். ஏதாவது ஒரு தேவைக்காகவே எதையும் செய்வார்கள். உறவினர்களோடு பழகினாலும் கூட இவரால் ஒரு பைசா லாபம் இருக்கிறதா என்று பார்ப்பார்கள். சலாம் சொல்வதாக இருந்தாலும் கூட இவரால் நமக்கு என்ன கிடைக்கும் என்று பார்ப்பார்கள். இப்படி அல்லாஹ்வைத்தவிர படைப்பினங்கள் மீது எப்பொழுதும் ஆசையை வைப்பது, அவர்கள் கரத்தில் உள்ளதின் மீது ஆசைவைப்பது, அவர்களால் நமக்கு ஏதும் ஆதாயம் கிடைக்குமா? என்று ஆதரவு வைப்பது.
மேலும் சொன்னார்கள்;
அல்லாஹ்வைத் தவிர வேறு யாரையும் பயப்படாதே! அல்லாஹ்வைத் தவிர வேறு எதைப் பார்த்தும் அஞ்சாதே! அல்லாஹ்வின் வணக்க வழிபாட்டை தவிர, பாவத்தை விட்டு விலகுவது, நன்மைகளை செய்வது, இதைத்தவிர, உன்னுடைய எந்தவிதமான அசைவும் இருக்க வேண்டாம்.
இது அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளக்கூடிய அந்த முஃமீன்கள் உடைய செயல்பாடாக இருக்க வேண்டும்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பாருங்கள்;குகையிலே மாட்டிக் கொண்டார்கள். தப்பித்து ஓடுகிறார்கள். இங்கே பல படிப்பினைகள் பாடங்கள் இருக்கின்றன. அல்லாஹ் பாதுகாப்பான் என்பதற்காக வீட்டிலேயே உட்கார்ந்து இருக்கவில்லை. அல்லது நடுரோட்டில் உட்கார்ந்து கொண்டு அல்லாஹ் என்னை பாதுகாப்பான் என்று கூறவில்லை அவர்கள்.
இன்று சிலர் தக்வாவை, தவக்குலை, தவறாக பேசுவது போன்று அவர்கள் பேசவில்லை. என்ன பாதுகாப்போ அதை செய்தார்கள். தப்பித்தார்கள். குகையிலே பதுங்கினார்கள். அப்பொழுது அந்த நேரத்திலே அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு ரசூலுல்லாஹ் இடத்திலே சொல்கிறார்கள்;யா ரசூலல்லாஹ்! அவர்களில் யாராவது குனிந்து பார்த்தாலே போதும், நம்மை பார்த்து விடுவார்களே! ஏனென்றால் சவுர் மலையின் குகை கிழே இருக்கும், மேலே செல்லும் பொழுது யாராவது குனிந்து பார்த்தால் அந்த வலது பக்கத்திலே குகை இருப்பதைப் பார்க்கலாம். குகைக்குள் இருப்பவர்களையும் பார்த்துவிடலாம்.
சகோதரர்களே! ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்;
حَدَّثَنِي أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الغَارِ فَرَأَيْتُ آثَارَ المُشْرِكِينَ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، لَوْ أَنَّ أَحَدَهُمْ رَفَعَ قَدَمَهُ رَآنَا، قَالَ: «مَا ظَنُّكَ بِاثْنَيْنِ اللَّهُ ثَالِثُهُمَا»(صحيح البخاري 4663 -)
அபூபக்ரே! அந்த இருவரில் மூன்றாவதாக அல்லாஹ் இருக்கின்றானே!அவர்களைப் பற்றி உன்னுடைய கருத்து என்ன? உன்னுடைய எண்ணம் என்ன?
சுபஹானல்லாஹ்! அல்லாஹு தஆலா உதவி செய்தான். அல்லாஹ் பாதுகாத்தான். எப்படி மறைக்க வேண்டுமோ மறைத்தான்.
சூரத்து தவ்பாவுடைய நாற்பதாவது வசனத்திலேஅல்லாஹ் சொல்லிக் காட்டுகிறான்;
إِلَّا تَنْصُرُوهُ فَقَدْ نَصَرَهُ اللَّهُ إِذْ أَخْرَجَهُ الَّذِينَ كَفَرُوا ثَانِيَ اثْنَيْنِ إِذْ هُمَا فِي الْغَارِ إِذْ يَقُولُ لِصَاحِبِهِ لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا فَأَنْزَلَ اللَّهُ سَكِينَتَهُ عَلَيْهِ وَأَيَّدَهُ بِجُنُودٍ لَمْ تَرَوْهَا وَجَعَلَ كَلِمَةَ الَّذِينَ كَفَرُوا السُّفْلَى وَكَلِمَةُ اللَّهِ هِيَ الْعُلْيَا وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ
(நம் தூதருக்கு) நீங்கள் உதவி செய்யாவிட்டால் (அதனால் அவருக்கு ஏதும் நஷ்டம் ஏற்பட்டு விடாது. ஏனென்றால்) நிராகரிப்பவர்கள் அவரை (ஊரைவிட்டு) வெளியேற்றிய சமயத்தில் நிச்சயமாக அல்லாஹ் அவருக்கு உதவிசெய்தே இருக்கிறான். (மலைக்) குகையில் இருந்த இருவரில் ஒருவராக அவர் இருந்த (போது எதிரிகள் சூழ்ந்துகொண்ட) சமயத்தில் தன்னுடன் (குகையில்) இருந்த தோழ(ராகிய அபூபக்)ரை நோக்கி ‘‘நீர் கவலைப்படாதீர்! நிச்சயமாக அல்லாஹ் நம்முடன் இருக்கிறான்'' என்று கூறியபோதும் அல்லாஹ் அவருக்குத் தன் புறத்திலிருந்து மனநிம்மதியை அளித்தான். (மற்ற போர் சமயங்களிலும்) நீங்கள் காணமுடியாத படைகளைக் கொண்டு அவருக்கு உதவி செய்து நிராகரிப்பவர்களின் வார்த்தையை (மார்க்கத்தை) தாழ்த்தினான். ஏனென்றால், அல்லாஹ்வின் வார்த்தை (மார்க்கம்)தான் மிக உயர்வானது. இன்னும், அல்லாஹ் (அனைத்தையும்) மிகைத்தவன், ஞானமுடையவன் ஆவான். (அல்குர்ஆன் 9 : 40)
இந்த ஒரு யக்கீனைரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஸஹாபாக்களுக்கு ஊட்டினார்கள். படித்துக்கொடுத்தார்கள். வாழ்க்கையில் அந்த யக்கீனை எதார்த்தமாக அவர்களுக்கு நடைமுறையில் கொண்டுவந்து நிறுத்தி கொடுத்தார்கள்.
அஹ்சாப் போரில் பயங்கரமானஒரு இக்கட்டான நிலை. இதற்கு முன் உஹத் போரிலே ஏற்படாத ஆபத்துகளை விட ஒரு பெரிய இக்கட்டான நிலை.
அந்த நேரத்தில் முஃமின்களை பற்றி, சஹாபாக்களை பற்றி, ரப்பு சொல்லக்கூடிய வசனங்களைப் பாருங்கள்.
وَلَمَّا رَأَى الْمُؤْمِنُونَ الْأَحْزَابَ قَالُوا هَذَا مَا وَعَدَنَا اللَّهُ وَرَسُولُهُ وَصَدَقَ اللَّهُ وَرَسُولُهُ وَمَا زَادَهُمْ إِلَّا إِيمَانًا وَتَسْلِيمًا
நம்பிக்கையாளர்கள் (எதிரியின்) ராணுவங்களைக் கண்ட பொழுது ‘‘(இதுதான்) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையையே கூறினார்கள்'' என்று சொன்னார்கள். தவிர (இவை அனைத்தும்) அவர்களுடைய நம்பிக்கையையும் ஏற்று கீழ்ப்படிவதையும் தவிர வேறொன்றையும் அவர்களுக்கு அதிகப்படுத்திவிடவில்லை. (அல்குர்ஆன் 33 : 22)
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்தோழர்களின் மீது கருணை காட்டி, நாம் இங்கு வந்திருக்கக்கூடியவர்களில் குறைஷிகளை தவிர, மற்றவர்களை அழைத்து நாம் ஏதாவது சமரசம் செய்து அனுப்பி விடுவோமே! என்று கேட்ட பொழுது, அன்சாரிகள் சொன்னார்கள்;அல்லாஹ்வின் தூதரே! எங்கள் உயிர்கள் மீது இரக்கப்பட்டு நீங்கள் செய்வதாக இருந்தால் அப்படி செய்ய வேண்டாம்.
ஏன்?மதினாவில் பேரித்தம் பழங்களை இதற்கு முன்னால் யாராவது சுவைக்க வேண்டுமென்றால் ஒன்று விருந்தாளியாக வந்து சாப்பிட்டு இருக்க வேண்டும். அல்லது எங்களிடம் அன்பளிப்பாக பெற்று சுவைத்திருக்க வேண்டும். அல்லது எங்களிடம் இருந்து விலைக்கு வாங்கி சுவைத்திருக்க வேண்டும். அப்படி இருக்கின்றபோது, இஸ்லாமை அல்லாஹ் கொடுத்ததற்கு பிறகு நாங்கள் பயப்பட மாட்டோம் அல்லாஹ்வின் தூதரே!
அவர்களுடைய அந்த நம்பிக்கைக்கு ஏற்ப அல்லாஹ்தஆலா உதவினான்.
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ إِذْ جَاءَتْكُمْ جُنُودٌ فَأَرْسَلْنَا عَلَيْهِمْ رِيحًا وَجُنُودًا لَمْ تَرَوْهَا وَكَانَ اللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرًا
நம்பிக்கையாளர்களே! உங்கள் மீது அல்லாஹ் புரிந்திருக்கும் அருட்கொடைகளை நினைத்துப் பாருங்கள். உங்கள்மீது (எதிரிகளின்) படைகள் (அணியணியாக) வந்த சமயத்தில் (புயல்) காற்றையும் உங்கள் கண்ணுக்குப் புலப்படாத படைகளையும் அவர்கள் மீது நாம் ஏவினோம். (அச்சமயம்) நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் உற்று நோக்குபவனாகவே இருந்தான். (அல்குர்ஆன் 33 : 9)
இன்று நாம் என்ன சொல்கிறோம்?முதலில் அல்லாஹ்வுடைய உதவி வரட்டும், பிறகு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வரும் என்று கூறுகிறார்கள்.
சகோதரர்களே!அத்தனை வரலாறுகளையும் நீங்கள் எடுத்துப் படித்துப் பாருங்கள். ரசூல் சல்லல்லாஹு அலைஹி வசல்லம் உடைய வாழ்க்கையில் அந்த சோதனைக்கு பிறகே அல்லாஹுத்தஆலா உதவியை இறக்கினான்.
الم (1) أَحَسِبَ النَّاسُ أَنْ يُتْرَكُوا أَنْ يَقُولُوا آمَنَّا وَهُمْ لَا يُفْتَنُونَ (2) وَلَقَدْ فَتَنَّا الَّذِينَ مِنْ قَبْلِهِمْ فَلَيَعْلَمَنَّ اللَّهُ الَّذِينَ صَدَقُوا وَلَيَعْلَمَنَّ الْكَاذِبِينَ
அலிஃப் லாம் மீம்.மனிதர்கள் ‘‘நாங்கள் நம்பிக்கை கொண்டோம்'' என்று கூறினால் (மட்டும் போதுமானது, அதைப் பற்றி) அவர்கள் சோதிக்கப்படாமல் விட்டு விடப்படுவார்கள் என்று எண்ணிக் கொண்டிருக்கின்றனரா?
இவர்களுக்கு முன்னிருந்தவர்களை எல்லாம் நிச்சயமாக நாம் சோதித்தே இருக்கிறோம். ஆகவே, (நம்பிக்கை கொண்டோம் என்று கூறுகின்ற) இவர்களில் உண்மை சொல்பவர்கள் எவர்கள் என்பதை நிச்சயமாக அல்லாஹ் (சோதித்து) அறிந்து கொள்வான். (அவ்வாறே இதில்) பொய் சொல்பவர்கள் எவர்கள் என்பதையும் நிச்சயமாக அவன் (சோதித்து) அறிந்து கொள்வான்.(அல்குர்ஆன் 29 : 1-3)
أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ
(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற (கஷ்டமான) நிலைமை உங்களுக்கு வராமலே நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டீர்களோ? (உங்களைப் போல) நம்பிக்கை கொண்ட அவர்களையும் அவர்களுடைய தூதரையும், வாட்டும் வறுமையிலும், நோயிலும் பீடித்து (அவர்கள் வருந்தித் தங்கள் கஷ்டங்களை நீக்கி வைக்க) ‘‘அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது (வரும்? எப்பொழுது வரும்?)'' என்று கேட்டதற்கு ‘‘அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக (இதோ) சமீபத்திலிருக்கிறது'' என்று (நாம் ஆறுதல்) கூறும் வரை அவர்கள் ஆட்டிவைக்கப்பட்டார்கள். (அல்குர்ஆன் 2 : 214)
அன்பு சகோதரர்களே!அல்லாஹ்வுடைய உதவியை பெறுவதாக இருந்தால் முஃமின்கள் இந்த யக்கினுக்கு உரியவர்களாக இருக்க வேண்டும். இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இந்த பாடத்தை தான் சொன்னார்கள்;
احْفَظِ اللَّهَ يَحْفَظْكَ، احْفَظِ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ
இப்னு அப்பாஸ்! அல்லாஹ்வுடைய சட்டங்களை பாதுகாத்துக் கொள். அல்லாஹ் உன்னை பாதுகாப்பான்.இப்னு அப்பாஸ் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பேணிக் கொள். அல்லாஹ்வுடைய உதவி எப்போதும் உனக்கு முன்னால் இருக்கும்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 2516, தரம் : ஸஹீஹ்.
அல்லாஹ்வுடைய மார்க்கத்தை மீறி, அல்லாஹ்வுடைய சட்டங்களை மீறி, இன்று இவர்கள் உதவிகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். அல்லாஹ்வுடைய உதவி என்பது மிகப்பெரிய ஒன்று.
இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களுடைய யக்கீனை, தவக்குலைநினைத்துப் பாருங்கள். பாலைவனத்திலே எந்த ஒரு புற்பூண்டு இல்லாத, குடிக்கக்கூட தண்ணீர் இல்லாத அந்த பாலைவனத்திலே விடுகின்றார்கள். அல்லாஹ்வுடைய கட்டளையை ஏற்று.
இதன் மூலம் பெற வேண்டிய பாடம் என்ன? முதலில் அல்லாஹ் கட்டளையிட்டதை செய்! அதை உன்னுடைய அறிவில் அனுபவத்தில் போட்டு பார்க்காதே. அந்த கட்டளையை நிறைவேற்று.அல்லாஹ் உதவுவான் என்ற நம்பிக்கையோடு இப்ராஹிம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் செய்தார்கள்.
மனைவியார் கேட்கிறார்கள்; இப்ராஹீமே! அல்லாஹ்வா உங்களுக்கு கட்டளையிட்டான் என்று. இப்ராஹிம் (அலை) அவர்கள் ஆம் என்று சொன்னார்கள். அப்பொழுது அந்த ஹாஜரா அலைஹாஸ்ஸலாம் நம்முடைய தாய் கூறிய அந்த வார்த்தையை பாருங்கள். கண்டிப்பாக அல்லாஹ் எங்களை வீணாக்கி விட மாட்டான். நாங்கள் பாழாகும் படி அல்லாஹ் விட்டு விட மாட்டான்.
அல்லாஹு தஆலா பாதுகாத்தானா? இல்லையா? அந்த யக்கின், கட்டளை, அதை செயல்படுத்துவது, பிறகு பொறுமையாக இருப்பது, அல்லாஹ்வுடைய உதவி அடுத்துவரும்.
(அல்குர்ஆன் 14:37), அல்பிதாயா பன்னிஹாயா-இப்னு கசீர்.
ஆமிர் இப்னு கைஸ் என்ற மிகப்பெரிய தாபியீன்களில் ஒருவர். தாங்கள் வாழ்க்கையில் தான் கற்றுக் கொண்டதை பற்றி அவர்கள் சொல்கிறார்கள் பாருங்கள்;
மூன்று வசனங்கள். குர்ஆனில் அந்த மூன்று வசனங்களை நான் படித்து, உணர்ந்து, என்னை நானே வெற்றி கொண்டேன். அந்த மூன்று குர்ஆன் வசனங்களை ஓதி உணர்ந்தேன். படித்தேன், சிந்தித்தேன், எனக்கு எதிராக அந்த வசனங்களில் அந்த கருத்துக்களை சிந்தித்தேன்.என்னுடைய நஃப்சின் மீது எனக்கு அந்த ஒரு வெற்றி கிடைத்தது.
முதலாவது வசனம், ரப்பு கூறுகிறான்;
وَإِنْ يَمْسَسْكَ اللَّهُ بِضُرٍّ فَلَا كَاشِفَ لَهُ إِلَّا هُوَ وَإِنْ يَمْسَسْكَ بِخَيْرٍ فَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ
அல்லாஹ் உங்களுக்கு ஒரு தீங்கை கொடுத்தால், அந்த தீங்கை அவனைத் தவிர வேறு யாரும் நீக்க முடியாது. அவன் உங்களுக்கு ஒரு நன்மையை செய்தால், அவன் எல்லா வஸ்துக்களின் மீதும் பேராற்றலுடையவன். (அல்குர்ஆன் 6 : 17)
இரண்டாவது வசனம், சூரத்துல் பகரா உடைய 152ஆவது வசனம். அல்லாஹ்! கூறுகிறான்,
فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ وَاشْكُرُوا لِي وَلَا تَكْفُرُونِ
ஆகவே, நீங்கள் என்னை நினைத்துக் கொண்டேயிருங்கள். நானும் உங்களை நினைத்து (அருள் புரிந்து) வருவேன். நீங்கள் எனக்கு நன்றி செலுத்தி வாருங்கள்; எனக்கு மாறு செய்யாதீர்கள். (அல்குர்ஆன் 2:152)
இந்த வசனத்தை சிந்தித்தேன். எனவே எப்பொழுதும் அல்லாஹ்வை நினைவு கூறுவதில் நான் ஈடுபட்டேன். வஸ்துக்களைப் பற்றி, உலக விஷயங்களைப் பற்றி, உலகப் பொருட்களை பற்றி, பேசுவதை விட்டு நான் ஒதுங்கிக் கொண்டேன்.
மூன்றாவது வசனம், சூரா ஹூதுடைய ஆறாவது வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்;
وَمَا مِنْ دَابَّةٍ فِي الْأَرْضِ إِلَّا عَلَى اللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِي كِتَابٍ مُبِينٍ
உணவளிக்க அல்லாஹ் பொறுப்பேற்றுக் கொள்ளாத உயிரினம் ஒன்றுமே பூமியில் இல்லை. அவை (உயிருடன்) வாழுகின்ற இடத்தையும், அவை (இறந்து) அடங்கும் இடத்தையும் அவன் அறிந்தே இருக்கிறான். இவை அனைத்தும் (லவ்ஹுல் மஹ்பூள் என்னும்) தெளிவான (அவனுடைய) பதிவுப் புத்தகத்தில் பதிவாகி இருக்கின்றன. (அல்குர்ஆன் 11 : 6)
இந்த வசனத்தை ஓதிய உடன்,நான் எனக்கு நம்பிக்கையை கொண்டு வந்தேன். என்னுடைய ரிஸ்க் அல்லாஹ்விடம் இருந்து வருகிறது. இவரிடமிருந்து, அவரிடமிருந்து, இதிலிருந்து,அதிலிருந்து, அங்கிருந்து இங்கிருந்து, இல்லை! என்னுடைய ரிஸ்க் அல்லாஹ்வின் புறத்திலிருந்து வருகிறது. எனக்கு அல்லாஹ் விதித்ததைஎன்னை தவிர வேறு யாரும் எடுக்க முடியாது. எனக்கு அல்லாஹ் எதை முடிவு செய்தானோ அதை வேறு யாரும் எடுக்க முடியாது.
இப்ராஹீம் இப்னு அத்ஹம் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்ற இன்னொரு ஒரு நுணுக்கமான அந்த ஞானத்தை பாருங்கள். அவர்களிடத்தில் கேட்கப்பட்டது. இந்த உலகத்தில் இப்படி பற்றற்ற முறையில் இருக்கிறீர்களே!
-நம்மைப் பொறுத்தவரை எப்போதுமே பதற்றத்திலே! ஒரு பரிதாபமான நிலையிலே! அடுத்து என்ன நடக்குமோ? அடுத்து நாம் எப்படி வாழ்வோமோ? இப்படியான ஒரு பதட்டத்திலே இருக்கின்றோம் அல்லவா!-
அவர்களிடத்திலே கேட்கப்படுகிறது; நீங்கள் இந்த உலக விஷயங்களைப் பொறுத்து.இவ்வளவு ஒரு அமைதியாக இருக்கின்றீர்களே?அவர் சொன்ன ஒரே வார்த்தை; எனக்கு அல்லாஹ் விதித்த ரிஸ்க்கை, என்னைத் தவிர வேறு யாரும் எடுக்க முடியாது. என்னுடைய ரிஸ்க்கை யாரும் பறிக்க முடியாது. என்று நான் உறுதியாக நம்பிக்கை கொண்டேன். எனவே எனது உள்ளத்திற்கு நிம்மதி வந்துவிட்டது.
ரபிஃ இப்னு ஹைய்சம் ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள்;
அல்லாஹுத்தஆலா தன்னிடத்திலே அவன் முடிவு செய்து விட்டான். யார் அல்லாஹ்வின் மீது தவக்குல் வைப்பானோ, அவனை அல்லாஹ்! பாதுகாப்பான்.
யார் அல்லாஹ்வின் மீது உறுதியான ஈமான் கொண்டானோகண்டிப்பாக அல்லாஹ்தஆலா அவனை வழி கெட விடமாட்டான். அவருக்கு நேர்வழி கொடுப்பான்.
மூன்றாவதாக, யார் அல்லாஹ்விற்கு கடன் கொடுப்பாரோ -அதாவது தர்மம் செய்வாரோ-அதற்குரிய கூலியை அல்லாஹ் கண்டிப்பாக கொடுப்பான்.
யார் அல்லாஹ்வின் மீது உறுதி கொண்டாரோ அவரை அல்லாஹுத்தஆலா கண்டிப்பாக அவரை பாதுகாப்பான்.
யார் அல்லாஹ்வை அழைப்பார்களோஅவர்களுக்கு அல்லாஹுத்தஆலா கண்டிப்பாக பதில் கொடுப்பான். இதுவெல்லாம் குர்ஆனிலே சொல்லப்பட்ட விஷயம்.
சூரா தகாபுன் உடைய பதினோராவது வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்;
مَا أَصَابَ مِنْ مُصِيبَةٍ إِلَّا بِإِذْنِ اللَّهِ وَمَنْ يُؤْمِنْ بِاللَّهِ يَهْدِ قَلْبَهُ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ
அல்லாஹ்வுடைய அனுமதியின்றி ஒரு தீங்கும் (எவரையும்) வந்தடையாது. ஆகவே, எவர் அல்லாஹ்வை நம்பிக்கைகொள்கிறாரோ, அவருடைய உள்ளத்தை(ச் சகிப்பு, பொறுமை என்ற) நேரான வழியில் நடத்துகிறான். அல்லாஹ் அனைத்தையும் நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 64 : 11)
சூரா தலாக் உடைய மூன்றாவது வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்;
وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا
மேலும், அவர்கள் எதிர்பார்க்காத வகையில் அவர்களுக்கு வேண்டிய வசதிகளை அளிப்பான். எவர்கள் அல்லாஹ்வை முற்றிலும் நம்புகிறார்களோ, அவர்களுக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தைச் செய்தே முடிப்பான். ஆயினும், அல்லாஹ் ஒவ்வொன்றிற்கும் (ஒரு காலத்தையும்) அளவையும் ஏற்படுத்திவிட்டான். (அதன்படியே நடைபெறும்.) (அல்குர்ஆன் 65 : 3)
சூரா தாஹாபுனுடைய 17ஆவது வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்;
إِنْ تُقْرِضُوا اللَّهَ قَرْضًا حَسَنًا يُضَاعِفْهُ لَكُمْ وَيَغْفِرْ لَكُمْ وَاللَّهُ شَكُورٌ حَلِيمٌ
அழகான முறையில் அல்லாஹ்வுக்கு நீங்கள் கடன் கொடுத்தால், அதை உங்களுக்கு இரு மடங்காக்கி வைப்பதுடன், உங்கள் குற்றங்களையும் மன்னித்து விடுகிறான். அல்லாஹ் (நன்றியை) அங்கீகரிப்பவனும் மிக்க சகிப்பவனும் ஆவான். (அல்குர்ஆன் 64 : 17)
அடியான் பயப்படுகிறான்;நாம் தர்மம் கொடுக்கும் பொழுது நமக்கு குறைந்துவிடுமோ? நமக்கு இல்லாமல் போய் விடுமோ? என்று. ரப்பு சொல்கிறான், நீ அழகிய கடனாக அல்லாஹ்விற்காக தர்மம் கொடுக்கின்ற பொழுது பன்மடங்காக நான் உனக்கு கொடுப்பேன் என்று.
சூரா ஆல இம்ரான் உடைய 101வது வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்;
وَكَيْفَ تَكْفُرُونَ وَأَنْتُمْ تُتْلَى عَلَيْكُمْ آيَاتُ اللَّهِ وَفِيكُمْ رَسُولُهُ وَمَنْ يَعْتَصِمْ بِاللَّهِ فَقَدْ هُدِيَ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ
நீங்கள் எப்படி (அல்லாஹ்வை) நிராகரிப்பவர்களாக ஆகிவிட முடியும்? உங்கள் மத்தியில் அல்லாஹ்வுடைய தூதர் இருக்கிறார். அவனுடைய வசனங்கள் உங்களுக்கு ஓதிக் காண்பிக்கப்படுகின்றன. ஆகவே, எவர் அல்லாஹ்வை (அவனது மார்க்கத்தை) பலமாகப் பற்றிக் கொள்கிறாரோ அவர் நிச்சயமாக நேரான பாதையில் செலுத்தப்பட்டுவிட்டார். (அல்குர்ஆன் 3 : 101)
சூரா பகரா உடைய 186ஆவது வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்;
وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ
(நபியே!) உம்மிடம் என் அடியார்கள் என்னைப் பற்றிக் கேட்டால் (அதற்கு நீர் கூறுவீராக:) ‘‘நிச்சயமாக நான் உங்களுக்கு சமீபமானவன். (எவரும்) என்னை அழைத்தால் அந்த அழைப்பாளரின் அழைப்புக்கு விடையளிப்பேன்.'' ஆதலால், அவர்கள் என்னிடமே பிரார்த்தனை செய்யவும்; என்னையே நம்பிக்கை கொள்ளவும். (அதனால்) அவர்கள் நேர்வழி அடைவார்கள். (அல்குர்ஆன் 2 : 186)
ஆகவே கண்ணியத்திற்குரியவர்களே!இந்த உலகத்திலே நமக்கு யாரும் இல்லை, நாம் இந்த உலகத்திலேயே அழிந்து விடுவோமோ? நாம் அப்படி ஆகி விடுவோமோ? இப்படி ஆகி விடுவோமோ? என்ற கோழைத்தனத்திற்கோ பயந்து சாகுவதற்கோ முஸ்லிம்களுக்கு எந்த விதத்திலும் அனுமதி இல்லை. ச
அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டுஅல்லாஹ்வின் மார்க்கத்தில் மேலும் உறுதியாக இருக்கின்ற வரை அல்லாஹ்வுடைய உதவி நமக்கு இருந்துகொண்டிருக்கும். இந்த உலகத்திலே யார் நினைத்தாலும் சரி, நம்மை அழித்து விட முடியாது. எந்த தீங்கையும் செய்துவிட முடியாது. அல்லாஹ் நாடினால் தவிர. அந்த ஒரு உறுதியான நம்பிக்கையை நாம் கொண்டுவந்து வரக்கூடிய நம் தலைமுறைக்கும் யக்கினையும், தவக்குலையும், அல்லாஹ்வின் மீது உண்டான உறுதியான ஈமானையும் கற்றுக் கொடுப்போமாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، قَالَا: حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو، عَنْ عَبْدِ الْجَلِيلِ بْنِ عَطِيَّةَ، عَنْ جَعْفَرِ بْنِ مَيْمُونٍ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ، أَنَّهُ قَالَ لِأَبِيهِ: يَا أَبَتِ إِنِّي أَسْمَعُكَ تَدْعُو كُلَّ غَدَاةٍ «اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي، اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي، اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، تُعِيدُهَا ثَلَاثًا، حِينَ تُصْبِحُ، وَثَلَاثًا حِينَ تُمْسِي»، فَقَالَ: إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِهِنَّ فَأَنَا أُحِبُّ أَنْ أَسْتَنَّ بِسُنَّتِهِ، قَالَ عَبَّاسٌ فِيهِ: وَتَقُولُ: «اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الْكُفْرِ، وَالْفَقْرِ، اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ تُعِيدُهَا ثَلَاثًا حِينَ تُصْبِحُ، وَثَلَاثًا حِينَ تُمْسِي، فَتَدْعُو بِهِنَّ» فَأُحِبُّ أَنْ أَسْتَنَّ بِسُنَّتِهِ قَالَ: وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: دَعَوَاتُ الْمَكْرُوبِ «اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو، فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ، لَا إِلَهَ إِلَّا أَنْتَ، وَبَعْضُهُمْ يَزِيدُ عَلَى صَاحِبِهِ» (سنن أبي داود- 5090) [حكم الألباني] : حسن الإسناد
குறிப்பு 2)
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِ قَالَ: أَخْبَرَنَا لَيْثُ بْنُ سَعْدٍ، وَابْنُ لَهِيعَةَ، عَنْ قَيْسِ بْنِ الحَجَّاجِ، ح وحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: أَخْبَرَنَا أَبُو الوَلِيدِ قَالَ: حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ قَالَ: حَدَّثَنِي قَيْسُ بْنُ الحَجَّاجِ، المَعْنَى وَاحِدٌ، عَنْ حَنَشٍ الصَّنْعَانِيِّ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: كُنْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا، فَقَالَ: «يَا غُلَامُ إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ، احْفَظِ اللَّهَ يَحْفَظْكَ، احْفَظِ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ، إِذَا سَأَلْتَ فَاسْأَلِ اللَّهَ، وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ، وَاعْلَمْ أَنَّ الأُمَّةَ لَوْ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ، وَلَوْ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ، رُفِعَتِ الأَقْلَامُ وَجَفَّتْ الصُّحُفُ» هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ"(سنن الترمذي 2516 -) حكم الألباني : صحيح
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/