HOME      Khutba      தேவையற்றதை விடு! | Tamil Bayan - 548   
 

தேவையற்றதை விடு! | Tamil Bayan - 548

           

தேவையற்றதை விடு! | Tamil Bayan - 548


بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
 
தேவையற்றதை விட்டுவிடு
 
மதிப்பிற்குரிய சகோதரர்களே! அல்லாஹ்வை பயந்து வாழுமாறு அல்லாஹ்வுடைய தக்வாவை எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக அல்லாஹ்வின் மார்க்க சட்ட வரம்புகளை பேணி வாழும்படி எனக்கும்  உங்களுக்கும்  உபதேசித்தவனாக அல்லாஹ்வுடைய வேதத்தையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடைய சுன்னாவையும் பற்றிப்  பிடித்து, எந்த அமல்கள் நமக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையாக இருக்குமோ,  நமக்கு தேவை உள்ளதாக இருக்குமோ  நம்முடைய இம்மை மறுமை ஈடேற்றத்திற்கு காரணமாக இருக்குமோ அந்த அமல்களில் நம்முடைய நேரங்களை கழிப்பவர்களாக ஈடுபடக்கூடியவர்களாக இந்த துன்யாவிற்கும்  ஆகிரத்திற்க்கும்  தேவையில்லாத வீணான வெட்டியான எல்லா  காரியங்களை விட்டும் சொல்களை விட்டும் செயல்களை விட்டும் அல்லாஹு  தஆலா எங்களையும் உங்களையும் பாதுகாத்து அருள் புரிய வேண்டுமென்று அல்லாஹ்விடத்தில் துஆ செய்தவனாக  ஆரம்பம் செய்கிறேன். 
 
மதிப்பிற்குரிய சகோதரர்களே! அல்லாஹு  தஆலா நமக்கு கொடுத்திருக்கக்கூடிய  மார்க்கம், இந்த மார்க்கத்தை ஒவ்வொரு வழிகாட்டுதல்களும் நம்மை பக்குவப்படுத்தக்  கூடியதாக நம்மை பன்படுத்தக்கூடியதாக இருக்கும். 
 
ஒருவர் இந்த மார்க்கத்தை பின்பற்றி நடக்கின்றார் என்றால் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிகாட்டுதல்களை கற்று அதன்படி தன்னை மாற்றிக் கொள்கிறார் என்றால் அந்த மனிதர் ஒரு சிறந்தவர் மட்டுமல்ல, ஒரு மேன்மையானவர் மட்டுமல்ல, தன்னுடைய வாழ்க்கையை எப்படி வாழவேண்டும் என்று கற்றுக்  கொண்டு தன்னை அல்லாஹ்வுடைய பொருத்தத்திற்கும்  மறுமையில் இருக்கக்கூடிய சொர்க்கத்திற்கும் தகுதி உள்ளவராக ஆக்கிக்கொண்டார். 
 
அன்பு சகோதரர்களே, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய  ஒவ்வொரு நபிமொழியும் அப்படிப்பட்டது. தங்க எழுத்துகளால்  எழுதி வாழ்நாள் முழுவதும் அவற்றை நிறுத்து  வைத்து ஒவ்வொரு செயலிலும் அதை பார்த்து பார்த்து அந்த ஹதீஸ் என்ற தராசிலே நம்முடைய செயலை நிறுத்துப்  பார்த்து அல்லது அந்த உரைகளில் நம்முடைய செயல்களை உரசிப் பார்த்து நாம் நம்முடைய  செயல்களை  வாழ்க்கையை  திருத்திக்கொள்வோமேயானால் அல்லாஹு அக்பர் அல்லாஹுவுக்கு பொருத்தமானவர்களாக வாழலாம்.
 
சஹாபாக்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் வாழ்ந்தார்கள் என்றால் இந்த காலத்திலும் அந்த சஹாபாக்கள் உடைய நன்மையை  பெற்றவர்கள்.  ஆனால் நபியை  மட்டும்  பார்த்திருக்க மாட்டார். 
 
அந்த சஹாபாக்கள் உடைய உயர்ந்த தன்மைகளை பெற்றவர்களாக இந்த காலத்திலும்  வாழலாம் நபியவர்களுடைய வழிகாட்டுதல்களை  நாம் பின்பற்றிவிட்டால். சஹாபாக்கள் சஹாபாக்கள் என்று நாம் புகழ்வதற்கு போற்றுவதற்கு என்ன காரணம்? அவர்கள் நபியை பார்த்தார்கள் என்பது மட்டுமல்ல. 
 
நபியைப்  பார்த்து நபியின் வழிகாட்டுதல்படி தங்களை மாற்றிக் கொண்டார்கள்.
 
நபி உடைய வழிகாட்டுதல்களைக் கற்று ஒவ்வொரு சொல்லையும் செயலையும் அந்த வழிகாட்டுதல்களுக்கு ஏற்ப அவர்கள் அமைத்துக்கொண்டர்கள்.  
 
அத்தகைய மிக முக்கியமான ஒரு வழிகாட்டுதலை தான்  இந்த ஜும்மாவில்  நாம் கற்றுக் கொள்ள இருக்கிறோம். 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய நபி மொழியை இமாம் திர்மிதி ரஹிமஹுல்லாஹ்  பதிவு செய்கிறார். 
 
وَعَنْ أَبِي هُرَيْرَةَ ‏- رضى الله عنه ‏- قَالَ: قَالَ رَسُولُ اَللَّهِ ‏- صلى الله عليه وسلم ‏-{ مِنْ حُسْنِ إِسْلَامِ اَلْمَرْءِ, تَرْكُهُ مَا لَا يَعْنِيهِ } رَوَاهُ اَلتِّرْمِذِيُّ, وَقَالَ حَسَنٌ.
 
ஒரு மனிதனுடைய இஸ்லாம் அழகாக இருக்கிறது. இதனுடைய அர்த்தம்? அந்த மனிதன் இஸ்லாமை அழகிய முறையில் பின்பற்றுகிறார் என்று பொருள். 
 
அறிவிப்பாளர்: அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி எண்: 2239
 
இஸ்லாம் அழகானது இஸ்லாமில்  எந்த ஒரு அசிங்கமும் இல்லை. இஸ்லாமிய  மார்க்கத்தில் எந்த குறையும் இல்லை. அந்த மனிதருடைய இஸ்லாமிலே அதாவது அவர் மார்க்கத்தை பின்பற்றுவதிலே அந்த மனிதன் அழகானவராக, ஆடையில் அழகாக இருப்பது பெரிதல்ல. தோற்றத்தில் அழகாக இருப்பது பெரிதல்ல. இவ்வுலகில் அழகாக இருக்கும் ஆண்கள் பெண்கள் மறுமையில் நரக நெருப்பில் நெருப்பு கங்குகளாக மாறிவிடுவார்கள். 
 
ஒரு  மனிதனுடைய இஸ்லாம் அழகாக இருக்கவேண்டும். யாருடைய இஸ்லாம்  அழகாகி விட்டதோ அவர்கள் இந்த உலகத்தில் தோற்றத்தால், உடையால் அழகற்றவராக  இருந்தாலும் நாளை மறுமையில் அல்லாஹ் அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பும்போது பதினான்காம் இரவு பௌர்ணமி இரவு சந்திரனைவிட பிரகாசமாக  அழகாக அவர்களை அனுப்புவான். 
 
மின்னக்கூடிய  நட்சத்திரங்களை விட பிரகாசமான முகத்தைக் கொடுத்து அவர்களை அனுப்புவான். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லக்கூடிய இந்த நபிமொழியை பாருங்கள். 
 
مِنْ حُسْنِ إِسْلاَمِ الْمَرْءِ تَرْكُهُ مَا لاَ يَعْنِيهِ
 
ஒரு மனிதனுடைய மார்க்கம் அதன் பற்றுடைய அழகின் அடையாளம் ஒரு மனிதன் மார்க்கத்தை சரியாக பேணுகிறான் என்பதன் அடையாளம் என்னவென்றால் அவன் விட்டு விட்டு விட வேண்டும். எதை ?எது அவனுக்கு தேவையில்லையோ. 
 
தனக்கு எது சம்பந்தம் இல்லையோ அதை விட்டுவிட வேண்டும். இது ஒரு முஸ்லிமுடைய இஸ்லாமிய பற்று சரியாக இருக்கிறது அவன் வாழ்க்கை சரியான பாதையில் தான் செல்கிறது, அவன் தேவையான காரியங்களில் தான் தன் வாழ்க்கையை கழித்துக்  கொண்டு இருக்கிறான் என்பதற்கு அடையாளம். 
 
ஒருவன் தேவையுள்ளதை செய்தால் தேவை இல்லாததை செய்ய அவனுக்கு நேரமில்லை. ஒருவன் தேவையில்லாததை வெட்டியாக செய்கிறான் என்றால் அவன் எத்தனையோ அவசியமான கட்டாயமான காரியங்களை வீணாக்கி கொண்டிருக்கிறான் என்று பொருள். 
 
இந்த ஹதீஸ் நமக்கு உணர்த்துவது என்னவென்றால் மார்க்கத்தில் முஹ்ஸினும் இருக்கிறார் முஸீஃ   இருக்கிறார். 
 
முஹ்ஸின் என்றால் மார்க்கத்தை அழகான  முறையில்  பின்பற்றுபவர். முஸீஃ என்றால் மார்க்கத்தை தவறாக பின்பற்றுபவர். 
 
முஹ்ஸின் யார்? யார் இஸ்லாமிய மார்க்கத்தில் தனக்கு தேவையான தன்னுடைய உள்ரங்கமான வெளிரங்கமான அதை சீர் செய்வதில் தமக்கு இம்மை மறுமையில் பயன் தரக்கூடிய காரியங்களில் ஈடுபடுபவர் தான் . 
 
முஸீஃ கெட்டவர் யார்? யார்  தமக்குத் தேவையில்லாத காரியங்களில் ஈடுபடுகின்றார்களோ  அவர் முஸீஃ. 
 
இதை கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், மது குடிப்பவர்களை, தவறாக நடந்து கொள்பவர்களை,  பொய் சொல்பவர்களை  திருடக்கூடியவர்களை இவர்களை எல்லாம் கெட்டவர்கள் என லிஸ்ட் வைத்திருக்கிறோம். 
 
 
 
ஹதீஸ் என்ன சொல்கிறது? தேவையில்லாததை, உனக்கு சம்பந்தமில்லாததை  செய்தால் நீர் இந்த பட்டியலில் வந்து விடுவீர். 
 
அல் முஸீஃ, எது உனக்குத்  தொடர்பு இல்லையோ அதைப் பற்றிப் பேசுவது அதில் உனது  நேரத்தைக் கழிப்பது நீ உனது மார்க்கத்தை கறைபடிய வைக்கிறாய். 
 
உன்னுடைய இம்மையை அல்லது மறுமையை நீ வீணடித்துக் கொள்கிறாய். 
 
குறிப்பாக, இன்று மக்கள் எப்படி என்றால் தன்னை மறந்து விடுவார்கள். ஒன்று  இருக்கிறது ஒருவரை பார்க்கிறீர்கள் அவருடைய உடம்பில் உடை இல்லை அவருக்கு ஒரு உடை வாங்கி கொடுத்தீர்கள். ஒருவரை பார்க்கிறீர்கள் பசி உள்ளவராக தெரிகிறார் உணவு வாங்கி தந்தீர்கள். 
 
ஒருவரை பார்த்தீர்கள் சிரமப்படுவதாக அவருடைய கடன் கஷ்டத்தை அடைப்பதற்கு நீங்கள் முயற்சி செய்கிறீர்கள், அது நன்மை. அது உங்களுடைய காரியம், ஆகிரத்துடைய காரியம், உங்களை சொர்க்கத்தில் சேர்க்கக்  கூடிய காரியம். 
 
ஒருவர் அழுது கொண்டிருக்கிறார்,  ஆறுதல் சொல்கிறீர்கள். ஒருவர் கவலையோடு இருக்கிறார், அவருக்கு நீங்கள் நற்செய்தி சொல்கிறீர்கள். இது உங்கள் சம்பந்தப்பட்டது. 
 
நாம் என்ன நினைக்கிறோம், இது அவர் சம்பந்தப்பட்டது என்று. நீங்கள் பிறருக்கு செய்யக்கூடிய உதவி நீங்கள் உங்களை  நரகத்தில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு உண்டான கேடயம். 
 
நபி (ஸல்) அவர்கள்  நல்லறங்களை புண்ணியங்களை தர்மம் செய்வதை நமக்கு கற்றுக் கொடுத்துள்ளார்கள். 
 
இங்கே நாம் குறிப்பிடுவது என்னவென்றால் ஒரு மனிதனை பார்க்கிறீர்கள் சில நாட்களாக பார்க்க வில்லை, நாம் விசாரிப்பதோடு முடித்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற பேச்சுக்களை விட்டுவிட வேண்டும் இதுதான் நமக்கு  ஹதீஸிலே மிக அழகாக அழுத்தமாக குறிப்பிடப்படுகிறது. 
 
நாம், எது தேவையோ அதைக் கேட்பதில்லை. ஒருவர் வீட்டுக்கு சென்றால் உங்களுக்கு கஷ்டம் இருக்கா? நான் உதவி செய்யட்டுமா? உங்களுக்கு கடன் இருக்கா? நான் அடைக்கட்டுமா என்று இதையெல்லாம் கேட்க மாட்டார்கள். முட்டாள்தனமான மடத்தனமான சில தேவையற்ற பேச்சுக்களை பேசுவார்கள்.
 
அறிஞர்கள் சிலர் சொல்கிறார்கள், பிறருடைய வாழ்க்கையில் தீனிலே துன்யாவிலே எது நமக்கு சம்பந்தம் இல்லையோ அதனுடைய விவரங்களை அடுக்கிக் கொண்டு பேசுவது. அது போன்ற தேவையற்ற விஷயங்கள்  நம்முடைய நேரத்தை வீணடிக்கக் கூடியது. நம் உள்ளத்தைக் கெடுக்கக் கூடியது யாரிடம் கேட்கிறாயோ  அவருக்கு  பல சங்கடங்களை ஏற்படுத்தக்கூடியது. 
 
எந்த அளவுக்கு என்றால் ஒருவரை பார்த்து, ரமலான் மாதத்தில் கூட நோன்பா என்று கேட்கிறோம். இது தேவையற்ற பேச்சு. 
 
ஏன் தெரியுமா? ரமலான்  மாதம், ஒரு முஸ்லிமைப்  பார்த்து கேட்கக் கூடிய கேள்வி. இதுவே தவறு.
 
இரண்டாவது அவருக்கு ஏதாவது நோய் இருந்து, அல்லாஹ் அனுமதித்த ஒரு காரணம்  இருந்து அவர் நோன்பு வைக்காமல் இருந்திருந்தால்  இப்போது நீங்கள் கேட்கக் கூடிய அந்த கேள்வியினால் சங்கடப்பட்டு என்ன செய்வது என்று தெரியாமல் அவர் நோன்பு என்று சொல்லிவிடுகிறார்  என்று வைத்துக்கொள்வோம். ஒரு முஃமினை வேண்டுமென்றே பொய் சொல்ல தள்ளியது யாருடைய பாவம்  என்று யோசித்துப்  பாருங்கள். 
 
இல்லை அவர்  தான் நோன்பு இல்லை என்று அவர் சொன்னால் உடனே அவருக்கு பயான் பன்ன  ஆரம்பித்து விடுவார்கள்.  ரமலானில் நோன்பு வைக்கவில்லையா? உங்களுக்கு சளி தானே காய்ச்சல் தானே? இதுக்கெல்லாமா நோன்பை விடுவது? என்று அல்லாஹ் நோய்க்கு அவருக்கு அனுமதி அளித்திருக்கிறான். அதனால் அவர் நோன்பை விடுகிறார். 
 
நம்முடைய கண்ணியத்திற்கு உரிய சான்றோர் இந்த விஷயத்தில் தங்களை சுயபரிசோதனை செய்தார்கள். எந்த அளவுக்கு இதிலே கருத்தாக இருந்தார்கள். 
 
இந்த ஹதீஸை அவர்கள் எப்படி புரிந்தார்கள்? என்பதைப்  பாருங்கள். இமாம் தாரகுத்னி  ஹதீஸ்களை உடைய முக்கிய  அறிஞர், அவர்கள் சொல்கிறார்கள். 
 
நாங்கள் இஸ்லாமிய மார்க்கத்தின் சட்டங்களின் அடிப்படைகளை சொல்லக்கூடிய ஹதீஸ்களைத் தொகுத்த போது நான்கு ஹதீஸ் அடிப்படையாக இருக்கும். 
 
إِنَّمَا الأَعْمَالُ بِالنِّيَّاتِ
 
அமல்களெல்லாம் எண்ணங்களைக்  கொண்டு என்று ஒரு ஹதீஸ். 
 
இரண்டாவது இந்த ஹதீஸ் 
 
مِنْ حُسْنِ إِسْلاَمِ الْمَرْءِ تَرْكُهُ مَا لاَ يَعْنِيهِ
 
ஒரு முஸ்லிமுடைய அழகிய இஸ்லாமிய பற்றின் அடையாளம் தேவை இல்லாத காரியங்களை விட்டுவிடுவது. திர்மிதி 2239
 
 الْحَلَالُ بَيِّنٌ، وَالْحَرَامُ بَيِّنٌ، وَبَيْنَهُمَا مُشْتَبِهَاتٌ لَا يَعْلَمُهَا كَثِيرٌ مِنَ النَّاسِ، فَمَنِ اتَّقَى الشُّبُهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ، وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ وَقَعَ فِي الْحَرَامِ  
 
ஹலால் தெளிவானது ஹராமும் தெளிவானது இந்த இரண்டுக்கும் இடையில் சந்தேகமான சில விஷயங்கள் இருக்கின்றன. யார் அந்த சந்தேகமான விஷயங்களை விட்டு விலகி கொள்வாரோ அவர் மார்க்கத்தை பாதுகாத்துக் கொண்டார். யார் அந்த சந்தேகமான காரியங்களை ஈடுபடுவரோ அவர்  ஹராமிலே ஈடுபட வாய்ப்பு இருக்கிறது.(1)
 
அறிவிப்பாளர்: நுஃமான் இப்னு பஷீர் ரழியல்லாஹு, அன்ஹு, நூல்: இப்னு மாஜா, எண்: 3984
 
4. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய அறிவுரை 
 
ازْهَدْ فِي الدُّنْيَا يُحِبَّكَ اللَّهُ
 
நீ உலகத்தில் பற்றறவனாக இரு அல்லாஹ் உன்னை நேசிப்பான். (2)
 
அறிவிப்பாளர்: சஹ்ல் இப்னு சஃத் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: இப்னு மாஜா, எண்: 4102
 
இந்த நான்கு ஹதீஸ்களின் மார்க்கத்தின் அடிப்படையாக நாங்கள் பார்க்கிறோம் என்று அவர்கள் சொன்னார்கள். 
 
அதிலே நமக்கு தேவையில்லாததை விட்டு  நாம் விலகியிருப்பது.  சொல்லால் செயலால் மற்றும் நம்  வாழ்க்கையின் அனைத்து விஷயங்களில் இருந்தும். 
 
அபூ துஜானா( ரலி) அன்ஹு என்ற ஒரு சாஹாபியை கேள்விப்பட்டிருப்பீர்கள். 
 
உஹது போரில்  பெரிய தியாகங்களை செய்து யமாமாவில் நடந்த முஸைலமா  போரிலே ஷஹீதான சஹாபி துஜானா( ரலி). 
 
அவர் மௌத்துடைய நேரத்தில் அவர்களுடைய தோழர்கள்  அவர்களை சந்திக்க வந்து ஸலாம் சொல்லி ஆறுதல் கூறிக் கொண்டிருக்கும் போது  
 
அபூ துஜானா (ரலி) உடைய முகத்தை பார்க்கிறார்கள். 
 
يتهلل முகம் இலகிக்கொண்டிருக்கிறது. பிரகாசித்துக்கொண்டிருக்கிறது. 
 
அல்லாஹ் நமக்கு அந்த நசீபை  தருவானாக. 
 
அவர் முகம் அப்படியே இலங்கி கொண்டு இருக்கிறது பிரகாசித்துக் கொண்டிருக்கிறது. பொன்  சிரிப்பால், முகத்தில் அந்தத் தெளிவினால்  இலங்கி இருந்தது. 
 
அப்பொழுது கேட்டார்கள், அபூ துஜானா இந்த நேரத்திலே இவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்று. அப்பொழுது அவர் என்ன வார்த்தை சொன்னார் தெரியுமா?
 
ما من عمل اوثق عندي من خصلتين
 
இரண்டு குணங்களை அல்லாஹ் எனக்கு கொடுத்து இருக்கிறான், அந்த குணங்கள் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. அல்லாஹ் என்னை பாதுகாப்பான் என்று. 
 
(அஸ்ஸம்து ஆசிரியர் இப்னு அபீ துன்யா)   
 
அமல்களை விட பல  நேரங்களில் குணங்கள்  ஒரு மனிதனை  அல்லாஹ்வுக்கு விருப்பமானதாக  ஆக்கிவிடும். 
 
அமல் எவ்வளவு செய்தாலும் குணம் கெட்டு இருந்தால் பெரிய நஷ்டவாளி ஆகிவிடுவான். 
 
ஆகவேதான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் நாளை மறுமையில் அமல்களுடைய எடை போடப்படும்போது நல்ல அமல்களுடைய தட்டை கனமாக்க அமல்கள் தேவை. 
 
பாவங்கள் ஒருபக்கம் வைக்கப்படும், நல்லமல்கள் தராசின் இன்னொரு  தட்டில் வைக்கப்படும். 
 
நல்ல அமல்களுடைய தட்டை கணக்க வைக்க வேண்டுமென்றால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். அமல்களைவிட நற்குணங்கள் மிக அழகாக அழுத்தமாக கனக்க செய்யும் என்று. 
 
அபூதாவூத் :4166
 
அமல்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கக் கூடிய எத்தனையோ பேர்  தங்களுடைய குணங்களை அசிங்கப்படுத்தி வைத்திருக்கிறார்கள். 
 
அஹ்லாக்கை கெடுத்து வைத்திருக்கிறார்கள். பொய் பேசுவது, புறம் பேசுவது, காயப்படுத்துவது, ஏமாற்றுவது, இரக்கமற்ற தன்மை, உள்ளத்தில் ஈரமற்ற தன்மை இன்னும் எத்தனையோ தீய குணங்களை நாம்  சொல்லலாம். எல்லாம் ஒரு மனிதனை அல்லாஹ்வுடைய சன்னிதானத்தில் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சபையிலே அவனை பின்னுக்குத் தள்ளிவிடும்.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்;
 
إِنَّ مِنْ أَحَبِّكُمْ إِلَيَّ وَأَقْرَبِكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ القِيَامَةِ أَحَاسِنَكُمْ أَخْلَاقًا 
 
நாளை மறுமையில் எனக்கு மிக நெருக்கமாக இருப்பார்கள் உங்களில் மிக அழகிய குணமுடையவர்கள்.(3)
 
திர்மிதி:1941
 
அபூதுஜானா (ரலி) அவர்களுடைய இந்த கூற்று  ஹதீஸ்களை நமக்கு நினைவூட்டுகிறது. அவர்கள் சொன்னார்கள், இரண்டு குணங்கள் என்னிடத்தில் உள்ளது. எத்தனை  ஜிஹாது செய்திருக்கிறார்கள். 
 
உஹதுப்  போரிலிருந்து  எந்த ஜிஹாதையும் அபூ துஜானா (ரலி) அவர்கள் தவற விடவில்லை. அதையெல்லாம் இங்கு நினைவு கூறவில்லை. சொன்னார்கள் இரண்டு குணங்கள்.
 
ஒன்று என்ன தெரியுமா?
 
كنت لا اتكلم في ما لا يعنيني
 
எனக்கு தேவை இல்லாததை நான் பேசியது இல்லை என் வாழ் நாளில் அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும் நம் வாழ்க்கை எடுத்துப் பார்த்தால் வாழ்நாளெல்லாம் தேவையில்லாததை பேசியது தான் மிச்சம் போயிருக்கும். 
 
சல்லடையில் சலித்து பார்த்தால் நாம் எதை பேசியிருக்கிறோம் என்ன செய்து இருக்கிறோம் என்று சல்லடையில் தங்கக்கூடியது எதுவென்றால்  தேவை இல்லாததை பேசியது செய்தது தான்.  அல்லாஹ் பாதுகாப்பானாக. 
 
அபூ துஜானா (ரலி) அவர்கள் சொல்கிறார்கள், எனக்கு தேவை இல்லாததை பேசியதில்லை. அடுத்து சொல்கிறார்கள். 
 
و كان قلبي سليما للمسلمين
 
முஸ்லிம்களின் விஷயத்தில் உள்ளத்தை எப்போதும் நான் பாதுகாத்துக் கொண்டே இருப்பேன். 
 
முஸ்லிமைப் பற்றி எந்தவிதமான வஞ்சகத்தையோ கெட்ட எண்ணங்களையோ  நான் என் உள்ளத்தில் வைத்துக்கொள்ளவில்லை. 
 
இது குறித்து மற்றொரு ஹதீஸைப் பார்க்கும் போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சபையிலே ஒரு மனிதர் வருகிறார். 
 
அவன் வருவதற்கு முன்பாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் இன்னும் கொஞ்ச நேரத்தில் ஒருவர் வருவார் சொர்க்கவாசியாக சாதாரணமான ஒரு மனிதர் தோழர்களிளே பிரபலமில்லாத ஒருவர் வந்தார். ஒளு செய்த தண்ணீர் அவர் முகத்திலிருந்து வடிந்தது.
 
தனது காலணியை கழட்டி ஒரு ஓரத்தில் வைத்தார்  இரண்டு ரக்அத்துகள் தொழுதார். மஜ்லிஸை கடந்து சென்ற போது ஸலாம் கூறி விட்டு சென்றார். 
 
இரண்டாவது நாள் ஒரு மனிதர் வருவார் சொர்க்கவாசி ஆக, அதே மனிதர் தான் வந்தார் நேற்று செய்த அதே காரியத்தை செய்தார். 
 
மூன்றாவது நாளும் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள் இப்போது  ஒரு மனிதர் வருவார்  சொர்க்கவாசியாக. அவர் தான் வந்தார் அவர் தொழுது விட்டு சென்ற போது அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்  அவர்களால் பொறுக்கமுடிய வில்லை. நபி (ஸல்)  அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய சபை முடிந்ததும் அவர் பின்னால் ஓடி விட்டார்கள். அந்த மனிதருடைய வீட்டை நோக்கி சென்றார்கள். சகோதரனே எனக்கும்  எங்க வாப்பாவுக்கும் கொஞ்சம் பிரச்சனையாக இருக்குது. நான் ஒரு 2 நாள் உங்க வீட்டில் வந்து தங்கிக் கொள்ள ஆசை படுகிறேன் என்றேன். 
 
சரி பரவாயில்லை தங்கிக் கொள்ளுங்கள் என்றார் . அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்  ஒவ்வொரு நாளும் இஷா தொழுகைக்கு பின் அவர் வீட்டிலேயே சென்று தங்கி விடுவார்கள். அப்படி என்ன ரகசியமாக இபாதத்  செய்கிறார் என்று பார்ப்பதற்காக. விட்டாளி அவர்  தூங்கிவிட்டார். ஆனால் அப்துல்லாஹ் இப்னு அமர் தூங்கவில்லை. அவர் எப்பொழுது தூங்குகிறார். அவர் என்ன அமல் செய்கிறார்.என்ன  துஆ கேட்கிறார் என்று பார்ப்பதற்காக தூங்காமல் இருக்கிறார். 
 
சுபுஹுக்கு பாங்கு சொல்லக்கூடிய நேரத்தில்தான் அவர் எழுந்திருக்கிறார். வாங்க தொழுகைக்கு போவோம் என்று அழைக்கிறார். 
 
இரவிலேயே அவர் விழித்தால் சுப்ஹானல்லாஹ் அல்ஹம்துலில்லாஹ் என்ற திக்ர் ஓதக்கூடிய சத்தம் தான் கேட்டது. நாலாவது நாள் இஷா தொழுகைக்கு பிறகு நான் என் வீட்டிற்கு செல்கிறேன் என்று சொன்னார். 
 
அதற்கு அவர் சஹாபி கேட்டார் உங்களுக்கும் உங்க வாப்பாக்கும் இடையில் சமாதானம் ஆயிடுச்சா? முஹப்பத் ஆயீட்டிங்களா? என்று கேட்டார். அப்போது அப்துல்லாஹ் இப்னு அமர்  ரலி அவர்கள் சொன்னார்கள். அதெல்லாம் ஒன்றும் கிடையாது என்று. என்ன சொல்கிறீர்கள் அப்படித் தானே சொன்னீர்கள் என்று கேட்கிறார். 
 
இல்லை வேறு ஒரு வேலைக்காக நான் வந்தேன் என்றார். அப்போது அந்த தோழர் கேட்கிறார் அது என்ன வேலை என்று. அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்  ரலி சொல்கிறார். மூன்று நாள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுடைய மஜ்லிஸிலே இருந்தபோது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் சொர்க்கவாசி வருவார் என்று. மூன்று நாளும் நீங்கள் தான் வந்தீர்கள். 
 
அப்படி என்ன விசேஷமான அமல் உங்கள் இடத்தில் இருக்கின்றது என்பதை தெரிந்து கொள்வதற்காகத்தான்  நான் உங்களோடு இரவில் தங்கினேன் என்று கூறிய போது அந்த மனிதர் கூறினார். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூற நீங்கள் கேட்டீர்களா  என்று கேட்டு உறுதி செய்ததற்குப் பிறகு, அப்படி என்றால் நண்பனே நீ பார்த்ததை விட அதிகமான அமல் என்னிடத்திலே ஏதும் இல்லை. ஆனால் நான் ஒரு விஷயத்தில் உறுதியாக இருக்கிறேன்.
 
அது என்ன தெரியுமா? இரவில் நான் தூங்கும் போது எல்லா முஸ்லிம்களையும் மன்னித்து விட்டு தூங்குவேன். எந்த ஒரு முஸ்லிம் விஷயத்திலும்  என் உள்ளத்தில் குரோதத்தையும் காழ்ப்புணர்ச்சியையும் நான் வைத்துக் கொள்ளவில்லை. 
 
என்னிடத்தில் சொல்வதற்கு ஒன்று இருக்குமேயானால் அது இதுவாகத்தான் இருக்கும். என்று அவர் கூறிய உடனே அப்துல்லாஹ் இப்னு அம்ர் இப்னு ஆஸ்  ரலி சொன்னார்கள்.. இதுதான் இதுதான் எங்களால்  அடைய முடியாததை நீங்கள் அடைந்தீர்கள். அல்லாஹ்வின் தூதர் ஸல்  அவர்கள் இந்த நற்செய்தியை உங்களுக்கு  கூறினார்கள் என்று அந்த தோழரிடம் சொன்னார்கள். 
 
முஸ்னத் அஹ்மத் :12236
 
இப்படி நம் வாழ்க்கையில் பல தருணங்களில் நாம் நினைத்துப் பார்க்க வேண்டும். எதைச் செய்கிறோம்? எதை பேசுகிறோம்? இது நமக்கு தேவையா? இது இவர் இடத்திலே நாம் பேச வேண்டுமா? நாம் எதைப் பேசுகிறோம் என்பதை பார்க்க வேண்டும் யாரிடம் பேசுகிறோம் நோக்கமென்ன இவற்றையெல்லாம் ஆராய்ந்து பேச வேண்டும். 
 
நம்முடைய சலஃப்களில் ஒருவருக்கு அவருடைய மனைவிக்கு இடையில் ஒரு சிறிய பிரச்சனை ஏற்பட்ட போது தனது மனைவியை தலாக் விட்டு விடலாம் என்று ஆலோசிக்கும் போது ஒருவர் வருகிறார். அப்போது அந்த அறிஞர் இடம் கேட்கிறார்கள் உங்கள் மனைவியை தலாக் விட போகிறீர்களாமே ஏன் தலாக் விடப் போகிறீர்கள்?
 
அப்பொழுது அவர் சொல்கிறார்கள் ஒரு நல்ல மனிதர் யார் என்றால் தன்னுடைய மனைவியின் குறையை வெளியில் சொல்ல மாட்டார்.
 
انا لا اهتك ستر زوجتي
 
என் மனைவியின் குறையை வெளியே சொல்ல மாட்டேன் தலாக் விட்டு விட்டார். தலாக் விட்டதற்க்குப்  பிறகு இப்போதுதான் உங்கள் மனைவி இல்லையே அவர்களை ஏன் தலாக் விட்டீர்கள் என சொல்லலாமே அப்போது அவர்கள் சொன்னார்கள் அவள் இப்பொழுது அந்நியப்பெண்ணாக  ஆகிவிட்டால் இப்பொழுது எப்படி அவளைப்பற்றி சொல்வேன். என்று கூறிவிட்டு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஹதீஸை கேட்கவில்லையா ஒரு முஸ்லிமுடைய அழகிய குணம் தேவை இல்லாததை பேசாமல் இருப்பது. எந்த அளவுக்கு பேணுதலாக இருந்திருக்கிறார். 
 
வாழ்க்கையில் எதையெல்லாம் நாம் சாதாரணமாக நினைத்து மணிக்கணக்காக வாழ்க்கையை வீணடித்துக் கொண்டு இருக்கிறோமோ அப்படி ஒவ்வொரு விஷயங்களையும் ஆராய்ந்து ஆராய்ந்து தன் வாழ்க்கையை எப்படி அல்லாஹ்விற்கு பொருத்தமாக  ஆக்கியிருக்கிறார்கள். சொர்க்க வாழ்க்கையை மாற்றி இருக்கிறார்கள்.
 
யஃலா இப்னு  அபீத்  ரஹிமஹுல்லாஹ் அறிவிக்கிறார்கள். அதாவது அவர்கள் ஆசிரியர் முஹம்மது இப்னு சூக்காவிடம் சொல்லும்போது சொல்கிறார்கள். அதாவது அதா இப்னு அபி  ரபாஹ் என்கிற பெரிய தாபியி எங்களுக்கு ஒரு செய்தியைச் சொன்னார்கள். 
 
இந்த செய்தி உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்று தன் மாணவர்களுக்கு விசேஷ அறிவுரையும் சொன்னார்கள். அதா இப்னு அபீ ரபாஹ் தங்களுடைய மாணவர்களுக்கு தாபியி சொல்கிறார்கள். 
 
ان من كان قبلكم كانوا يكرهون فضول الكلام و كانوا يعدون فضوله 
 
உங்களுக்கு முன்னால் வாழ்ந்தவர்கள் தேவையற்ற பேச்சுக்களை அவர்கள் வெறுப்பவர்கள் ஆக இருந்தார்கள். இது தான் நமக்கும் அவர்களுக்கும் உள்ள இடைவெளி. 
 
தேவையற்ற பேச்சு என்றால் என்ன? நேரங்களை எல்லாம் வீணடித்து விட்டு அவரும் அமல் செய்யாமல் மற்றவரையும் அமல் செய்யவிடாமல் நேரங்களை  வீணாக்கி தேவையில்லாததை பேசிவிட்டு இது நமக்கு தேவையா! என்று சொல்லி எழுந்து செல்வார்.
 
நம்முடைய சஹாபாக்கள் தேவையற்ற பேச்சுக்கள்  என்று எதை கவனித்தார்கள் என்றால்,
 
ما عدا كتاب الله ان تقرءه او تأمر بمعروف او تنهي عن منكر  او تنطق بحاجتك في معيشتك التي لا بد منها 
 
ஒன்று நீங்கள் குர்ஆனை ஓதுங்கள் அது தேவையான பேச்சு.  பிமாஉ அல்லது மக்களுக்கு நல்லதைச் சொல்லி கொடுங்கள் அது தேவையான பேச்சு. அல்லது தீமையை நீங்கள் தடுங்கள் அது தேவையான பேச்சு. அல்லது உங்களுடைய கொடுக்கல் வாங்கல் வியாபாரம் தொழில் துறையில் நீங்கள் கண்டிப்பாக பேசி ஆக வேண்டுமோ விலை குறைப்பது இப்படி வாழ்க்கை, தொழில் துறைகள், உங்களுக்கு அவசியமான பேச்சு. இதுதான் அவசியமான பேச்சு இதைத் தவிர மற்ற எல்லாம் வீண் பேச்சுகள் என்று கூறிவிட்டு சொல்கிறார் நான் உங்களுக்கு வித்தியாசமாக இருக்கிறதா? நீங்கள் அல்லாஹ்வுடைய வேதத்தை பின்பற்றவில்லையா!? 
 
وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ (10) كِرَامًا كَاتِبِينَ  82:10,11
 
உங்களுக்கு மேல் உங்களை கண்காணிப்பதற்காக உங்களை சுற்றி பாதுகாக்கக் கூடிய கண்ணியமான மலக்குகள் இருக்கின்றார்கள் அவர்கள் நீங்கள் சொல்வதை பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். (அல்குர்ஆன் 82 : 10,11)
 
மேலும் சூரா காஃப் உடைய வசனத்தை ஓதிக்காட்டினார்கள்.
 
إِذْ يَتَلَقَّى الْمُتَلَقِّيَانِ عَنِ الْيَمِينِ وَعَنِ الشِّمَالِ قَعِيدٌ   50:17
 
நாளை மறுமையில் வலது பக்கத்தில் நிர்ணயிக்கப்பட்ட மலக்கும் வருவார், இடது பக்கம் உள்ள மலக்கும் வருவார். அந்ந ஏடுகள் விரிக்கப்படும். (அல்குர்ஆன் 50 : 17)
 
படித்துப்பார் நீ செய்ததை, செய்தது மட்டுமல்ல நீ பேசுவது எல்லாம் இதில் பதியப்பட்டிருக்கிறது. 
 
مَا يَلْفِظُ مِنْ قَوْلٍ إِلَّا لَدَيْهِ رَقِيبٌ عَتِيدٌ     50:18
 
(மனிதன்) எதைக் கூறியபோதிலும் அதை எழுதக் காத்துக் கொண்டிருக்கும் ஒருவர் அவனிடம் இல்லாமலில்லை. (அவன் வாயிலிருந்து புறப்படும் ஒவ்வொரு வார்த்தையும் உடனுக்குடன் பதியப்படுகிறது.) (அல்குர்ஆன் 50 : 18)
 
இந்த பேச்சுகள் கூட அங்கே பதியப்படுகின்றது.  செயல்கள் மட்டுமல்ல. 
 
இதைக் கூறிவிட்டு அதா இப்னு அபீ ரபாஹ் கேட்கிறார்கள்.  
 
أما يستحي أحدكم أن لو نشرت عليه صحيفته التي املى صدر نهاره واكثر ما فيها ليس من امر دينه ولا دنياه 
 
நீங்கள் வெட்கப்பட வேண்டாமா! நாளை மறுமையில் உங்களுடைய ஏடுகள் விரிக்கப்படும் போது நீங்கள் உங்களுடைய நாளின் ஆரம்பத்தில் அதன்  இறுதியில் என்ன செய்தீர்கள் என்பதை பதிவு செய்யப்பட்டிருப்பதை  படிக்கும் போது அதனுடைய பெரும்பாலான செய்திகள் உங்களுடைய தீனுக்கும் துன்யாவுக்கும்  தேவையில்லாதது. நீங்கள் செய்ததை பதிவு செய்யப்பட்டிருக்க  அதை படிக்கும்போது அங்கே உங்களுக்கு வெட்கமாக இருக்காதா இப்படியா நம் நேரத்தை வீணாக்கி வந்தோம் என்று. இப்படியா நம் வாழ்க்கையை கழித்தோம். என்று எந்த நன்மையும் இல்லையே இப்படிப்பட்ட செயலை நாம் செய்து வந்தோம் என்று
 
நீங்கள் கொஞ்சம் வெட்கப்பட வேண்டாமா நாளை மறுமையில் உங்களுக்கு புத்தகத்தைப் படித்துப் பார்க்கும் போது தேவையற்ற விஷயங்கள் இருந்தால் எதை கொண்டு நீங்கள் சொர்க்கத்தை ஆசைப்படுவீர்கள்.
 
இமாம் ஹஸன் பஸரி ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய கூற்று இன்னும் நமக்கு அச்சத்தை கொடுக்கக்கூடிய கூற்று அவர்கள் சொல்கிறார்கள். 
 
علامة إعراض الله تعالى عن العبد أن يجعل شغله فيما لا يعنيه
 
ஒரு அடியானை அல்லாஹு தஆலா விட்டுவிட்டான் கருணையின் பார்வையை ரஹ்மத்துடைய பார்வையை ஒரு அடியானை விட்டு அல்லாஹ் திருப்பி விட்டான் என்பதற்காக அந்த மனிதனை அல்லாஹ் உனக்கு தேவையில்லாததில்  ஈடுபட விடுவான். 
 
இமாம் துன்னூன் மிஸ்ரி ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள்.
 
من تكلم في ما لا يعني ضيع ما يعني
 
எவன் ஒரு மனிதன் தேவையில்லாததை செய்வதற்கு ஈடுபடுகிறானோ  அவன் தேவையானதை கண்டிப்பாக வீணாக்கி இருப்பான். 
 
இமாம் முவர்ரிக் அஜிஸி  ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள். 
 
امر اطلبه شديدا لم اقدر عليه
 
நான் ஏறக்குறைய பத்து வருடங்களாக ஒரு காரியத்தை ஒரு பக்குவத்தை அடைவதற்காக முயற்சி செய்கிறேன். 
 
ஆனால் இன்னும் எனக்கு அந்தப் பக்குவம் ஏற்பட வில்லை. ஆனால் நான் விடமாட்டேன் இன்னும் முயற்சி செய்துகொண்டே இருப்பேன் என்று கூறிவிட்டு அவர்களிடத்தில் கேட்கப்படுகிறது என்ன அப்படிபட்ட விஷயம் பத்து வருடங்களாக ஒரு செயலை பக்குவப்படுத்திக் கொள்வதற்கு செய்கிறீர்களே அது என்னவென்று அதற்கு அவர்கள் சொன்னார்கள்.
 
الصمت في ما لا يعني 
 
எனக்கு தேவை இல்லாத விஷயத்தை விட்டு விடுவது. 
 
எனக்கு தேவை இல்லாத விஷயத்தை பேசாமல் வாய்மூடி இருப்பதற்காக பத்து வருடமாக என்னை கட்டுப்படுத்த முயற்சி செய்கிறேன் ஆனால் இன்னும் என்னால் முடியவில்லை ஆனால் நான் விடமாட்டேன் 
 
ஒரு மனிதன் எப்படி தேவையில்லாத விஷயங்களை விட்டு தன்னை பாதுகாக்க முடியும் என்று சொன்னால் தனக்கு தேவையான காரியங்களில் தன்னுடைய நேரங்களில் அவன் ஈடுபடுத்த வேண்டும். 
 
குறிப்பாக அல்லாஹ்விடத்தில் துஆ செய்வது,எதற்காக? தேவையில்லாத காரியத்தில் இருந்து என்னை பாதுகாப்பாயாக என்று அல்லாஹ்விடம் துஆ  செய்ய வேண்டும். அல்லாஹ்விடத்தில் கேட்க வேண்டும்.
 
இரண்டாவதாக அந்த மனிதன்  
 
استفراغ الوضع في معرفة ما يعني المرء 
 
எது தனக்குத் தேவை உள்ளது என்பதை அறிய வேண்டும். எது தேவை எது தேவை இல்லாதது என்பதை அறியவில்லையோ எப்படி தேவையானதை செய்வான் தேவையில்லாததை விடுவான். 
 
ஆகவே தனது தேவையை அறியவேண்டும்.
 
மூன்றாவது தொடர்ந்து தன்னை  சுய பரிசோதனை செய்து கொண்டே இருக்க வேண்டும். தன்னைத் தானே நம்மை நாமே நாம் என்ன பேசினோம் யாரிடம் பேசினால் எதற்காக பேசுவோம் என்று சுய பரிசோதனை செய்யவேண்டும். 
 
நான்காவது, நல்லவர்கள் இடத்திலேயே பழகுவது. நாம் சொல்வோம் அல்லவா உருப்படியானவர்கள் இடத்தில்.  யார் வெட்டியாக நேரங்களைச் செலவு பன்னுகிறானோ அப்படிப்பட்டவர்களிடன்  பழக்கத்தை விட்டும் நாம் தூரமாக இருக்க வேண்டும்.
 
احياء روح التناصح بين المؤمنين بتنبيه بعضهم بعضا 
 
நாம் மட்டும் இல்லை மற்றவர்கள் விஷயத்தில் ஒருவர் பேசும்போது இது நமக்குத் தேவையில்லாத பேச்சு இதை நாம் விட்டுவிட வேண்டும். 
 
ஒருவரை பார்க்கிறார் புறம் பேசுபவறாக ஒருவரை பார்க்கிறார்  கோள் சொல்வதாக ஒருவரை பார்க்கிறார் பொய் பேசுகிறார் அல்லது கொஞ்சம் அதிகமாக பேசுகிறார் என்று. அந்த நேரத்தில் அழகான முறையில் நல்ல அறிவுரை சொல்வது இது போன்று நாம் பிறருக்கு நினைவூட்டும் போது அது நமக்கு நினைவூட்டலாக அமையும். 
 
அல்லாஹ்வுடைய  குர்ஆனில் நம்முடைய நேரத்தை அதிகமாகச் செலவழிப்பது. குர்ஆனை ஓதுவது. மனப்பாடம் செய்வது. அதனுடைய கருத்துக்களை சிந்திப்பது. 
 
அடுத்து நம்முடைய ஓய்வு நேரங்களில் உலக வேலைகல் போக தனிமையிலேயே ஆகிரத்தைப் பற்றி சிந்திப்பது. 
 
நம்முடைய மறுமையைப் பற்றி சிந்திப்பது, இப்படிப்பட்ட காரியங்களில் நாம் நம்முடைய நேரங்களை அதிகப்படுத்தும் போது மார்க்க கல்வியில் நம்முடைய நேரத்தை அதிகப்படுத்தும் போது நல்ல இல்மை  தேடுவதிலேயே நம்முடைய நேரத்தை அதிகப்படுத்தும் போது வீணான காரியங்களில் நாம் நம்மை பாதுகாத்துக் கொள்ளலாம். 
 
அல்லாஹு தஆலா எனக்கு உங்களுக்கும் அழகிய ஈமானுடைய வாய்ப்பை தந்தருள் புரிவானாக. நம்முடைய வாழ்க்கையில் தேவையான அமல்களை செய்து அல்லாஹ்விற்கு பிடித்தமான அமல் செய்து நாம் மறுமையில் சொர்க்கத்திற்கு உரியவர்களாக அல்லாஹ்வின் பொருத்தத்திற்கு உரியவர்களாக நாம் ஆகுவோமாக. 
 
தேவையற்ற செயல்களிலே நம்முடைய நேரத்தை வீணாக்கி நஷ்டம் அடைவதை விட்டும் அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும் பாதுகாத்து அருள்வானாக, 
 
ஆமீன்
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1).
 
حَدَّثَنَا عَمْرُو بْنُ رَافِعٍ قَالَ: حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ، عَنْ زَكَرِيَّا بْنِ أَبِي زَائِدَةَ، عَنِ الشَّعْبِيِّ، قَالَ: سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ، يَقُولُ عَلَى الْمِنْبَرِ، وَأَهْوَى بِإِصْبَعَيْهِ إِلَى أُذُنَيْهِ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: «الْحَلَالُ بَيِّنٌ، وَالْحَرَامُ بَيِّنٌ، وَبَيْنَهُمَا مُشْتَبِهَاتٌ لَا يَعْلَمُهَا كَثِيرٌ مِنَ النَّاسِ، فَمَنِ اتَّقَى الشُّبُهَاتِ اسْتَبْرَأَ لِدِينِهِ وَعِرْضِهِ، وَمَنْ وَقَعَ فِي الشُّبُهَاتِ وَقَعَ فِي الْحَرَامِ، كَالرَّاعِي يَرْعَى حَوْلَ الْحِمَى، يُوشِكُ أَنْ يَرْتَعَ فِيهِ، أَلَا وَإِنَّ لِكُلِّ مَلِكٍ حِمَى، أَلَا وَإِنَّ حِمَى اللَّهِ مَحَارِمُهُ، أَلَا وَإِنَّ فِي الْجَسَدِ مُضْغَةً، إِذَا صَلُحَتْ صَلُحَ الْجَسَدُ كُلُّهُ، وَإِذَا فَسَدَتْ، فَسَدَ الْجَسَدُ كُلُّهُ، أَلَا وَهِيَ الْقَلْبُ» (سنن ابن ماجه 3984 -)
 
குறிப்பு 2).
 
حَدَّثَنَا أَبُو عُبَيْدَةَ بْنُ أَبِي السَّفَرِ قَالَ: حَدَّثَنَا شِهَابُ بْنُ عَبَّادٍ قَالَ: حَدَّثَنَا خَالِدُ بْنُ عَمْرٍو الْقُرَشِيُّ، عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ، عَنْ أَبِي حَازِمٍ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، قَالَ: أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ دُلَّنِي عَلَى عَمَلٍ إِذَا أَنَا عَمِلْتُهُ أَحَبَّنِي اللَّهُ وَأَحَبَّنِي النَّاسُ؟ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «ازْهَدْ فِي الدُّنْيَا يُحِبَّكَ اللَّهُ، وَازْهَدْ فِيمَا فِي أَيْدِي النَّاسِ يُحِبُّكَ النَّاسُ» )ابن ماجة-4102 (
 
குறிப்பு 3).
 
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ الحَسَنِ بْنِ خِرَاشٍ البَغْدَادِيُّ قَالَ: حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلَالٍ قَالَ: حَدَّثَنَا مُبَارَكُ بْنُ فَضَالَةَ قَالَ: حَدَّثَنِي عَبْدُ رَبِّهِ بْنُ سَعِيدٍ، عَنْ مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِنَّ مِنْ أَحَبِّكُمْ إِلَيَّ وَأَقْرَبِكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ القِيَامَةِ أَحَاسِنَكُمْ أَخْلَاقًا، وَإِنَّ أَبْغَضَكُمْ إِلَيَّ وَأَبْعَدَكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ القِيَامَةِ الثَّرْثَارُونَ وَالمُتَشَدِّقُونَ وَالمُتَفَيْهِقُونَ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، قَدْ عَلِمْنَا الثَّرْثَارُونَ وَالمُتَشَدِّقُونَ فَمَا المُتَفَيْهِقُونَ؟ قَالَ: «المُتَكَبِّرُونَ»: وَفِي البَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ وَهَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ مِنْ هَذَا الوَجْهِ وَرَوَى بَعْضُهُمْ هَذَا الحَدِيثَ، عَنِ المُبَارَكِ بْنِ فَضَالَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ المُنْكَدِرِ، عَنْ جَابِرٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَمْ يَذْكُرْ فِيهِ عَنْ عَبْدِ رَبِّهِ بْنِ سَعِيدٍ وَهَذَا أَصَحُّ وَالثَّرْثَارُ: هُوَ الكَثِيرُ الكَلَامِ، وَالمُتَشَدِّقُ الَّذِي يَتَطَاوَلُ عَلَى النَّاسِ فِي الكَلَامِ وَيَبْذُو عَلَيْهِمْ (سنن الترمذي-32018)
 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/