சுய பரிசோதனை ஏன்? | Tamil Bayan - 546
بسم الله الرحمن الرّحيم
சுய பரிசோதனை ஏன்?
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும். அல்லாஹ் கூறுகின்றான்:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
அன்பு சகோதரர்களே! இந்த உலக வாழ்க்கையில் நாம் செய்ய வேண்டிய எத்தனையோ முக்கியமான காரியங்கள் இருக்கின்றது. அந்த முக்கியமான காரியங்களில் மிக முக்கியமான ஒன்று (محاسبة النفس)முஹாசபத்துன் நஃப்ஸ்.
ஒரு மனிதன் தன்னைத் தானே சுய பரிசோதனை செய்து கொள்வது, தன்னைத் தானே அவன் விசாரித்துக் கொள்வது, ஒரு மனிதன் தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொள்வது, ஏன் செய்தாய்? ஏன் செய்யவில்லை? ஏன் காலதாமதம் செய்தாய்? ஏன் அலட்சியம் செய்கிறாய்? இப்படியாக தன்னை தானே சரி செய்து கொள்வதற்காக தன்னுடைய அமல்களை குறித்து தனது நஃப்ஸிடத்திலே கேள்வி கேட்பது.
இந்த முஹாசபத்துன் நஃப்ஸ் மிக முக்கியமான ஒன்று. குர்ஆன் வலியுறுத்தக் கூடிய ஒன்று. ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நபிமொழி வலியுறுத்தக் கூடிய ஒன்று. நம்முடைய கண்ணியத்திற்குரிய ஸஹாபாக்கள் தாபியீன்கள் செய்த ஒன்றுதான் இந்த முஹாசபத்துன் நஃப்ஸ்.
தன்னை தானே பரிசோதனை செய்வது. நான் எப்படி இருக்கிறேன்? அல்லாஹ்வை வணங்குவதில், பாவங்களை விட்டு விலகுவதில், நன்மைகளை செய்வதில், தீமைகளை விட்டு விலகுவதில், நான் எந்த அளவு இருக்கின்றேன்?
அன்பானவர்களே!! இந்த பரிசோதனை செய்யவில்லை என்றால் மறுமை வாழ்வு மிக சிரமத்திற்கு ஆளாகிவிடும்.
இந்த பரிசோதனை பற்றி இமாம் அபுல் ஹசன் அலி இப்னு முஹம்மது அவர்கள் கூறுவதை கவனியுங்கள்
محاسبة النفس أن يتصفح الإنسان في ليله ما صدر من أفعاله نهارَه، فإن كان محمودًا أمضاه، وأتبعه بما شاكله، وضاهاه، وإن كان مذمومًا استدركه إن أمكن، وانتهى عن مثله في المستقبل (أدب الدنيا والدين ص360-361(
ஒரு மனிதன் பகலில் தான் என்ன செய்தோம் என்பதை இரவில் அவன் அலசி ஆராய வேண்டும்;சிந்தித்துப் பார்க்கவேண்டும். காலை எழுந்ததில் இருந்து இந்த இரவு நேரம் வரை நான் என்ன செய்தேன்.
ஒரு மனிதன் தன்னுடைய பகலெல்லாம் தான் செய்த செயல்களை இரவிலே கண்டிப்பாக சிந்தித்து பார்க்கவேண்டும். இன்று விழித்ததிலிருந்து நான் என்ன செய்தேன்? எங்கு சென்றேன்?யாரிடம் பேசினேன்?எதை பேசினேன்?தொழுகையில் எப்படி இருந்தேன்?திக்ரிலே எப்படி இருந்தேன்?கொடுக்கல் வாங்கலிலே எப்படி இருந்தேன்? இப்படி ஒவ்வொன்றாக அவன் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நல்ல காரியமாக இருந்தால், செய்தது நல்லதாக இருந்தால் அதை தொடர்ந்து செய்வதற்கு உறுதி எடுக்க வேண்டும். நான் செய்ததிலே தவறு இருந்தால், முடிந்தால் உடனடியாக அதை நிவர்த்தி செய்ய வேண்டும்.முடியவில்லையா?நிகழ்ந்துவிட்டதா?அந்தத் தவறுக்காக வேண்டிதனியாக நல்ல அமல்கள் செய்ய வேண்டும்.
ஏனென்றால் ரப்புல் ஆலமீன் கூறுகிறான்;
إِنَّ الْحَسَنَاتِ يُذْهِبْنَ السَّيِّئَاتِ
நிச்சயமாக நன்மைகள் பாவங்களைப் போக்கிவிடும்.(அல்குர்ஆன் 11 : 114)
காலையில் நாம் யாரையாவது பற்றி புறம் பேசியிருந்தாலோ, திட்டியிருந்தாலோ, முடிந்தால் உடனடியாக அவர்களிடத்திலே மன்னிப்பு கேட்ட வேண்டும்.
பிறகு ஒரு நன்மையை செய்து அந்த பாவத்தை அழிக்க முயற்சிக்க வேண்டும். நன்மைகள், நாம் செய்யக்கூடிய நல்ல அமல்கள், நாம் செய்யக் கூடிய சிறு பாவங்களை போக்கி விடுகின்றன;அழித்து விடுகின்றன.
அன்பு சகோதரர்களே! இனி வரக்கூடிய காலங்களில் இத்தகைய தவறை நான் செய்யமாட்டேன் என்று மனதில் உறுதி கொண்டு வர வேண்டும். இதைத்தான் முஹாஸபா என்று சொல்வார்கள். ஒரு மனிதன் தன்னைத் தானே கேள்வி கேட்டுக் கொள்வது; தன்னைத்தானே பரிசோதனைக்குள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருவது.
அல்லாஹு தஆலா நாளை மறுமையில் விசாரிக்க ஆரம்பித்து விட்டால், ரப்புல் ஆலமீன், அவனுக்கு முன்னால் நாம் விசாரணைக்கு நின்று விட்டால், அப்போது வருந்தி எந்த பலனும் இல்லை.
மறுமை உடைய அந்த காட்சியை பற்றி அல்லாஹு தஆலா ஸூரத்துல் முஜாதலாவில் ஆறாவது வசனத்தில் கூறுவதை கவனியுங்கள்;
يَوْمَ يَبْعَثُهُمُ اللَّهُ جَمِيعًا فَيُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوا أَحْصَاهُ اللَّهُ وَنَسُوهُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ
அவர்கள் அனைவரையும் அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்பும் நாளில், அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அறிவிப்பான். அதை அவர்கள் மறந்துவிட்டபோதிலும், அவற்றை அல்லாஹ் சேகரித்து வைக்கிறான். (அவர்கள் செய்யும்) அனைத்திற்கும் அல்லாஹ் (நன்கறிந்த) சாட்சியாளன் ஆவான்.(அல்குர்ஆன் 58 : 6)
அந்த மஹ்ஷருடைய நாள், அல்லாஹு தஆலா எல்லோரையும் ஒன்று சேர்த்து விடுவான். ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களிலிருந்து இறுதி மனிதன் வரைஅனைவரும் அல்லாஹ்விற்கு முன்னால் நிற்பார்கள்.யோசித்துப் பாருங்கள்.
நாலு பேருக்கு முன்னால் நாம் குற்றவாளி என்று சொல்லப்பட்டாலே எவ்வளவு பெரிய தலை குனிவு?! நம்முடைய நண்பர்களுக்கு முன்னால், தாய் தந்தையருக்கு முன்னால், கணவன் மனைவிக்கு முன்னால், மனைவி கணவருக்கு முன்னால், பிள்ளைகளுக்கு முன்னால், தன்னுடைய தெருவாழ் மக்களுக்கு முன்னால், தான் ஒரு பாவி, குற்றவாளி, தவறு செய்தவன் என்று அறிவிக்கப்பட்டால் எவ்வளவு பெரிய கேவலமாக இருக்கும்?!
يَوْمَ يَقُومُ النَّاسُ لِرَبِّ الْعَالَمِينَ
அந்நாளில், மனிதர்கள் அனைவருமே உலகத்தாரின் இறைவன் முன் (விசாரணைக்காக) நின்று கொண்டிருப்பார்கள்.(அல்குர்ஆன் 83 : 6)
உலக மக்களெல்லாம் ரப்புல் ஆலமீனுக்கு முன்னால் நிற்கக்கூடிய நாள். அந்த நாளில் நம்மில் ஒருவரை பற்றி இவன் பாவம் செய்தவன், ஏமாற்றியவன், திருடியவன், பொய் கூறியவன், அல்லாஹ்வுடைய ஹக்குகளில் மோசடி செய்தவன், அடியார்களுடைய ஹக்குகளில் வரம்பு மீறியவன் என்று அழைக்கப்பட்டால் எவ்வளவு பெரிய கேவலமாக இருக்கும்?எவ்வளவு பெரிய அவமானமாக இருக்கும்? நல்லவர்கள் அல்லாஹ்விடத்தில் எப்படி துஆ செய்வார்கள்;
وَلَا تُخْزِنَا يَوْمَ الْقِيَامَةِ
யா அல்லாஹ்! மறுமை நாளில் எங்களை இழிவு படுத்தி விடாதே! (அல்குர்ஆன் 3 : 194)
நல்லவர்கள் உடைய துஆவாக அல்லாஹ் சொல்கின்றான். அல்லாஹ்விடத்தில் கேட்பார்கள்;யா அல்லாஹ்! மறுமையில் எங்களுக்கு அவமானம் வேண்டாம், மறுமையில் எங்களுக்கு கேவலம் வேண்டாம்.
மேலும் அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கூறுகிறான்;
يَوْمَ يَبْعَثُهُمُ اللَّهُ جَمِيعًا فَيُنَبِّئُهُمْ بِمَا عَمِلُوا أَحْصَاهُ اللَّهُ وَنَسُوهُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ
அவர்கள் அனைவரையும் அல்லாஹ் (உயிர் கொடுத்து) எழுப்பும் நாளில், அவர்கள் செய்தவற்றைப் பற்றி அவர்களுக்கு அறிவிப்பான். அதை அவர்கள் மறந்துவிட்டபோதிலும், அவற்றை அல்லாஹ் சேகரித்து வைக்கிறான். (அவர்கள் செய்யும்) அனைத்திற்கும் அல்லாஹ் (நன்கறிந்த) சாட்சியாளன் ஆவான்.(அல்குர்ஆன் 58 : 6)
வசனத்தின் கருத்து : அந்த நாளில் அல்லாஹு தஆலா சொல்வான்; ஒவ்வொரு மனிதனையும் அழைத்து விசாரித்து அவர்கள் செய்ததை அவர்களுக்கு அறிவிப்பான். அல்லாஹு தஆலா அனைத்தையும் கணக்கில் வைத்திருப்பான். மக்கள் மறந்திருப்பார்கள். தவறு செய்தவன், பாவம் செய்தவன், ஏமாற்றியவன், திருடியவன் வஞ்சகம் செய்தவன், மோசடி செய்தவன், உறவுகளைத் துண்டித்தவன் இப்படிப் பல பாவங்களில் இருக்கின்ற மனிதர்கள் அவர்கள் தாங்கள் செய்த பாவங்களை மறந்திருக்கலாம். அல்லாஹ் மறக்க மாட்டான்.
وَمَا كَانَ رَبُّكَ نَسِيًّا
அல்லாஹ் எதையும் மறக்கக் கூடியவன் இல்லை. (அல்குர்ஆன் 19 : 64)
وَكُلَّ شَيْءٍ أَحْصَيْنَاهُ فِي إِمَامٍ مُبِينٍ
எல்லாவற்றையும் அல்லாஹு தஆலா பதிவு புத்தகத்தில் பதிவு செய்து வைத்திருக்கிறான்.(அல்குர்ஆன் 36:12)
وَكُلُّ صَغِيرٍ وَكَبِيرٍ مُسْتَطَرٌ
சிறியது பெரியது எல்லாம் எழுதப்பட்டிருக்கிறது. (அல்குர்ஆன் 54:53)
وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ (10) كِرَامًا كَاتِبِينَ (11) يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ
உங்கள் மீது கண்ணியமான மலக்குகள் நிர்ணயக்கப்பட்டிருக்கிறார்கள். நீங்கள் செய்வதை அவர்கள் அறிந்து பதிவு செய்துவிடுகிறார்கள். ஒவ்வொரு வார்த்தையும் தனித்தனியாக ஒவ்வொரு செயலும் தனித்தனியாக பதிவு செய்யப்படுகிறது.(அல்குர்ஆன் 82 : 10-12)
أَحْصَاهُ اللَّهُ وَنَسُوهُ وَاللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ شَهِيدٌ
அல்லாஹ் அனைத்தையும் மறக்காமல் கணக்கில் எடுத்து வைத்திருப்பான்; பதிவு செய்து வைத்திருப்பான். மக்கள் மறந்திருப்பார்கள்.அல்லாஹு தஆலா நீங்கள் செய்யக்கூடிய எல்லா காரியங்களையும் நீங்கள் செய்யக்கூடிய எல்லா செயல்களையும் அவன் கவனித்துக் கொண்டிருக்கிறான்.(அல்குர்ஆன் 58:6)
شهيد-ஷஹீத் அவன் பார்த்துக் கொண்டிருக்கிறான். حفيظ–ஹஃபீழ் அவன் அந்த செயல்களை பாதுகாத்துக் கொண்டிருக்கிறான்.
இந்த வசனம் எவ்வளவு பெரிய அச்சத்தைக் கொடுக்க கூடியது வசனம்!
அந்த நாளில் நாம் இப்போது மறந்துவிட்ட பாவங்களை அல்லாஹ் வெளிப்படுத்தினால் அதற்கு தவ்பாயில்லாமல் சென்றால் என்ன நிலைமையாகும்? யோசித்துப் பாருங்கள் நாம் அன்றாடம் ஓதக்கூடிய அத்தியாயங்களில் ஒன்று.
يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِيُرَوْا أَعْمَالَهُمْ
அந்நாளில் மனிதர்கள், (நன்மையோ தீமையோ) தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக(ப் பல பிரிவுகளாகப் பிரிந்து) கூட்டம் கூட்டமாக (விசாரணைக்காக) வருவார்கள்.(அல்குர்ஆன் 99 : 6)
மக்கள் பல கூட்டங்களாக வருவார்கள். அல்லாஹு தஆலா நம்மை நல்லவர்களின் கூட்டத்திலே ஆக்கி வைப்பானாக!! நம்முடைய நல்ல அமல்களை கொண்டு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்மை அங்கே ஒன்று சேர்ப்பானாக!!
நோன்பாளிகள், தொழுகையாளிகள், அல்லாஹ்வின் பாதையில் போராடிய முஜாஹித்கள், சதக்கா கொடுத்தவர்கள் இப்படியாக யாரிடத்தில் எந்த நல்ல அமல்கள் அதிகமாக இருந்ததோ அதற்கேற்ப அந்த நல்லவர்கள் அங்கே ஒருங்கிணைக்கப்படுவார்கள்.
அதுபோன்று யாரிடத்தில் எந்த பாவம் அதிகமாக இருந்ததோ அந்த பாவத்திற்கு ஏற்ப அவர்கள் பிரிக்கப்பட்டு அவர்களும் பாவிகளும் தனித்தனியாக அவர்கள் ஒன்று சேர்க்கப்படுவார்கள்.
وَامْتَازُوا الْيَوْمَ أَيُّهَا الْمُجْرِمُونَ
குற்றவாளிகளே! பாவிகளே!நீங்கள் எல்லாம் தனித்தனியாக பிரிந்து விடுங்கள். (அல்குர்ஆன் 36:59)
يَوْمَئِذٍ يَصْدُرُ النَّاسُ أَشْتَاتًا لِيُرَوْا أَعْمَالَهُمْ (6) فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ (7) وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ
அந்நாளில் மனிதர்கள், (நன்மையோ தீமையோ) தாங்கள் செய்த செயல்களைக் காண்பதற்காக(ப் பல பிரிவுகளாகப் பிரிந்து) கூட்டம் கூட்டமாக (விசாரணைக்காக) வருவார்கள்.
ஆகவே, எவர் ஓர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர், (அங்கு) அதையும் கண்டுகொள்வார்.
(அவ்வாறே) எவன் ஓர் அணுவளவு தீமை செய்திருந்தானோ, அதையும் அவன் (அங்கு) கண்டு கொள்வான். (அல்குர்ஆன் 99 : 8)
அன்பு சகோதரர்களே! அங்கே உறவுகள் பலனளிக்காது;அங்கே செல்வங்கள் பலனளிக்காது;நட்புகள் பலனளிக்காது.
الْأَخِلَّاءُ يَوْمَئِذٍ بَعْضُهُمْ لِبَعْضٍ عَدُوٌّ إِلَّا الْمُتَّقِينَ
அந்நாளில் நண்பர்கள் சிலர் சிலருக்கு எதிரியாகி விடுவர். ஆனால், இறை அச்சமுடையவர்களைத் தவிர.(அல்குர்ஆன் 43 : 67)
இங்கே உற்றத் தோழனாக இருந்தவன்அங்கு எதிரியாக மாறி விடுவான். இங்கே எந்த நண்பன் வழிகெடுத்தானோஅங்கே அவன் எதிரியாக ஆகிவிடுவான். ஏன்உறவுகளே விரண்டு ஓடக்கூடிய நிலை தான் அன்றைய நாளில் இருக்கும்.
يَوْمَ يَفِرُّ الْمَرْءُ مِنْ أَخِيهِ (34) وَأُمِّهِ وَأَبِيهِ (35) وَصَاحِبَتِهِ وَبَنِيهِ (36) لِكُلِّ امْرِئٍ مِنْهُمْ يَوْمَئِذٍ شَأْنٌ يُغْنِيهِ
அந்நாளில் மனிதன் தன் சகோதரனை விட்டும் வெருண்டோடுவான், தன் தாயை விட்டும், தன் தந்தையை விட்டும், தன் மனைவியை விட்டும், தன் பிள்ளைகளை விட்டும் (ஓடுவான்).
அந்நாளில், அவர்களில் ஒவ்வொரு மனிதனுக்கும், மற்றவர்களைக் கவனிக்க முடியாதவாறு சொந்தக் கவலை ஏற்பட்டுவிடும்.(அல்குர்ஆன் 80:34-37)
நபிமார்களே யா நஃப்ஸி, யா நஃப்ஸி என்று சொல்லிக்கொண்டு இருக்கும்போது சாதாரண மனிதர்கள் நம்மைப் போன்றவர்களுடைய நிலைகளை கொஞ்சம் யோசித்துப் பாருங்கள்.
இந்த உலகத்தில் இரண்டு ரக்அத் தொழுகைகளையாவது சரியாக நாம் மன ஓர்மையோடு இதுநாள்வரை தொழுது இருக்கிறோமா? இரண்டு ரக்ஆத் தொழுகைகளையாவது சரியாக உள ஓர்மையோடு சரியான முறையில் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லிக்கொடுத்த முறையில் ஒது செய்துவிட்டு அந்த சுன்னத்துகளைப் பேணி எந்த விதமான தவறான எண்ணங்களும் வராமல் ஆகுமான எண்ணங்களும் வராமல் ஆகுமான எண்ணங்களும் வராமல்,பாவங்களை நினைக்காமல்,
لاَ يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ
ஊசலாட்டங்கள் இல்லாமல். தொழும் தொழுகை பாவங்களை மன்னிக்கும் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹ் சொல்கிறார்கள்.(1)
அறிவிப்பாளர் : உஸ்மான் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 164.
அந்த நாளில் அல்லாஹு தஆலா உடைய நியதி எப்படி இருக்கும்? நீங்கள் ஒரு அணு அளவு நன்மை செய்தாலும் அதையும் பார்ப்பீர்கள். ஒரு அணு அளவு தீமை செய்தாலும் அதையும் நீங்கள் பார்ப்பீர்கள்.
அன்பானவர்களே! எந்த ஒன்றும் மறைந்து விடாது. எந்த ஒன்றும் தவறி விடாது. யாரும் அல்லாஹ் உடைய அந்த மறுமை நாளில் அவனுடைய மைதானத்தில் இருந்து தப்பித்து ஓட முடியாது. அங்கே அமல்கள் கொண்டுவரப்படும்.
மனிதனும் அவன் செய்த அமல்களும் மட்டும் தான் அங்கு இருக்கும். அல்லாஹுதஆலா சொல்வதை பாருங்கள்.
يَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَا عَمِلَتْ مِنْ خَيْرٍ مُحْضَرًا وَمَا عَمِلَتْ مِنْ سُوءٍ تَوَدُّ لَوْ أَنَّ بَيْنَهَا وَبَيْنَهُ أَمَدًا بَعِيدًا وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسَهُ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ
ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்த நன்மைகளையும், தான் செய்த தீமைகளையும் தனக்கு முன் காணும் நாளில் (துக்கித்து) தனக்கும், தான் செய்த தீமைகளுக்கும் இடையில் நீண்ட தூரம் இருந்திருக்க வேண்டுமே? என்று விரும்பும். ஆகவே, அல்லாஹ் உங்களுக்குத் தன்னைப்பற்றி (அச்சமூட்டி) எச்சரிக்கை செய்கிறான். (ஏனென்றால்,) அல்லாஹ் (தன்) அடியார்களிடம் மிக்க இரக்கமுடையவன் ஆவான்.(அல்குர்ஆன் 3 : 30)
வசனத்தின் கருத்து : ரப்பு சொல்கிறான்;அந்த நாளில் ஒவ்வொரு ஆன்மாவும் தான் செய்த நன்மைகளை தனக்கு முன்னால் பார்ப்பார்கள்;பெற்றுக்கொள்வார்கள்.
பயப்பட வேண்டாம்; நீங்கள் செய்த சிறிய தர்மமாக இருக்கட்டும். ஏன் நீங்கள் உள்ளத்தில் நினைத்த ஒரு நல்ல எண்ணம் ஆக இருந்தாலும் கூட, அந்த நல்ல எண்ணத்திற்கும் அல்லாஹு தஆலா அங்கு கூலியைக் கொண்டு வருவான்.
நம்முடைய ரப்பு எவ்வளவு பெரிய கரீம் தெரியுமா? எவ்வளவு பெரிய கொடை வள்ளல்,தயாளன் தெரியுமா? பாவம் செய்ய வேண்டும் என்று நினைத்தால் அதை செய்யாதவரை எழுத விடமாட்டான்.
வானவர்கள் சொல்வார்கள்; யா அல்லாஹ்! இந்த அடியான் பாவம் செய்ய வேண்டும் என்று எண்ணுகிறானே?எழுதாதீர்கள்.பாவத்தின் பக்கம் செல்கிறானே? எழுதாதீர்கள். செய்தால் ஒரே ஒரு பாவத்தை மட்டும் எழுதுங்கள். செய்த பாவத்தை மட்டும் எழுதுங்கள்.
நன்மை செய்ய வேண்டும் என்று எண்ணாவிட்டால் உடனே அல்லாஹ்வுடைய கட்டளை எழுதுங்கள் என்று.செய்துவிட்டால் ஒன்றை பத்து மடங்காக அல்லாஹு தஆலா எழுதச்சொல்கிறான். செய்துவிட்டால் ஒரு நன்மைக்கு பத்து மடங்காக அல்லாஹ் எழுதச்சொல்கிறான்.
இன்னும் சில அறிவிப்புகளில் வருகிறது. பாவம் செய்து விட்டாலும் கூட அல்லாஹு தஆலா அந்த வானவர்களுக்கு கட்டளை இடுகின்றான். தாமதியுங்கள். அவன் தவ்பாச் செய்யலாம்.தாமதியுங்கள் அவன் பாவ மன்னிப்பு கேட்கலாம்.
عَنْ أَبِي مُوسَى، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «إِنَّ اللهَ عَزَّ وَجَلَّ يَبْسُطُ يَدَهُ بِاللَّيْلِ لِيَتُوبَ مُسِيءُ النَّهَارِ، وَيَبْسُطُ يَدَهُ بِالنَّهَارِ لِيَتُوبَ مُسِيءُ اللَّيْلِ، حَتَّى تَطْلُعَ الشَّمْسُ مِنْ مَغْرِبِهَا»(صحيح مسلم-(2759
இரவில் அல்லாஹ் தன்னுடைய கரத்தை விரிக்கின்றான். பகலில் பாவம் செய்தவர்கள் மன்னிப்பு கேட்பதற்காக. இரவிலே பாவம் செய்தவன் தவ்பா கேட்பதற்காக ரப்புல் ஆலமீன் தன்னுடைய கரத்தை பகலில் விரிக்கின்றான்.
அறிவிப்பாளர் : அபூ மூசா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : எண் : முஸ்லிம்2759.
வாருங்கள்!ரப்புல் ஆலமீன் சொல்லக்கூடிய ஒரு ஹதீஸ் அல்லாஹ்வுடைய தூதர் கூறினார்கள்;
يَا عِبَادِي إِنَّكُمْ تُخْطِئُونَ بِاللَّيْلِ وَالنَّهَارِ، وَأَنَا أَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا، فَاسْتَغْفِرُونِي أَغْفِرْ لَكُمْ
எவ்வளவு பெரிய கஃப்பார்,கஃபூர் அன்பானவர்களே! ரப்பு சொல்லுகிறான் எனது அடியார்களே நீங்கள் இரவிலும், பகலிலும் பாவம் செய்கிறீர்கள். நான் பாவங்களை மன்னிக்கிறேன். என்னிடத்திலே மன்னிப்பு கேளுங்கள் நான் மன்னித்து விடுகிறேன் .(2)
அறிவிப்பாளர் : அபூ தர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம்,எண் : 2577.
அன்பு சகோதரர்களே! அல்லாஹு தஆலா மறுமையின் காட்சியைப் பற்றி கூறுகின்றான்;
يَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَا عَمِلَتْ مِنْ خَيْرٍ مُحْضَرًا وَمَا عَمِلَتْ مِنْ سُوءٍ
ஒவ்வோர் ஆத்மாவும் தான் செய்த நன்மைகளையும், தான் செய்த தீமைகளையும் தனக்கு முன் காணும்.(அல்குர்ஆன் 3 : 30)
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மஹ்ஷர் உடைய அந்த ஒரு காட்சியைப் பற்றி சொல்லும் பொழுது நாளை மறுமையிலே அந்த மனிதர் கொண்டு வரப்படும் போது,
فَيَنْظُرُ أَيْمَنَ مِنْهُ فَلاَ يَرَى إِلَّا مَا قَدَّمَ مِنْ عَمَلِهِ، وَيَنْظُرُ أَشْأَمَ مِنْهُ فَلاَ يَرَى إِلَّا مَا قَدَّمَ، وَيَنْظُرُ بَيْنَ يَدَيْهِ فَلاَ يَرَى إِلَّا النَّارَ تِلْقَاءَ وَجْهِهِ
மனிதன் நாளை மறுமையில் வரும் போது அவன் வலது பக்கம் திரும்பிப் பார்த்தாலும் சரி, இடது பக்கம் திரும்பி பார்த்தாலும் சரி, முன்னால் பார்த்தாலும் சரி, பின்னால் பார்த்தாலும் சரி,அவன் செய்து வந்த அமல்கள் தான் அங்கே இருக்கும்.(3)
அறிவிப்பாளர் : அதீ இப்னு ஹாதிம் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 7512.
அன்பு சகோதரர்களே! சம்பாதித்த செல்வங்கள், கட்டிய வீடு எல்லாம் இந்த உலகத்தோடு முடிந்தது. அமல்கள் மட்டும்தான் மனிதனோடு வரும். யார் பாவங்கள் செய்தார்களோரப்பு சொல்கிறான்;
تَوَدُّ لَوْ أَنَّ بَيْنَهَا وَبَيْنَهُ أَمَدًا بَعِيدًا وَيُحَذِّرُكُمُ اللَّهُ نَفْسَهُ وَاللَّهُ رَءُوفٌ بِالْعِبَادِ
அவனுக்கும் அந்த பாவங்களுக்கும் இடையில் நீண்ட ஒரு இடைவெளி பாவத்தை விட்டு, இந்த அமல்களை விட்டு, நான் வெகு தூரம் ஓடி விட வேண்டுமே என்பதாக அவன் ஆசைப்படுவான்.அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கை செய்கிறான் (அல்குர்ஆன் 3 : 30)
அல்லாஹ்வுடைய தண்டனை எவ்வளவு பயங்கரமானது? அல்லாஹ் தன்னைப்பற்றி எச்சரிக்கிறான் என்றால் அல்லாஹ்வுடைய கோபத்தை, அல்லாஹ்வுடைய வெறுப்பை குறித்து அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்.
அல்லாஹ்வுடைய தண்டனை எவ்வளவு பயங்கரமானதோஅது போன்று தான் அல்லாஹ்வுடைய கோபமும், அல்லாஹ்வுடைய வெறுப்பும்தாங்கிக்கொள்ள முடியாத ஒன்று.அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்விடத்திலே துஆ கேட்கும் போது,
اللهُمَّ أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ
யா அல்லாஹ்! உன்னுடைய பொருத்தத்தைக் கொண்டுஉன்னுடைய கோபத்திலிருந்து பாதுகாவல் தேடுகிறேன். (4)
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : புகாரி, எண் : 486.
நண்பர்கள் கோபித்து கொண்டால், தன்னுடைய எஜமானர் கோபித்துக் கொண்டால், தன்னுடைய மனைவி கோபித்துக் கொண்டால், தன்னுடைய உற்றார் உறவினர் கோபித்துக் கொண்டால், என்னை வெறுத்து விட்டால், என்னுடைய மக்கள் என்னை வெறுத்து விட்டால், என்னுடைய ஜமாத் என்னை ஒதுக்கி விட்டால் அதெல்லாம் இன்று பலருக்கும் மிகப் பெரிய ஒன்றாக தெரிகிறது.
ரப்பு கோபித்துக் கொண்டால், ரப்பு வெறுப்படைந்தால், அது ஒன்றும் அவர்களுக்கு பெரியது இல்லை. அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!
அல்லாஹ்வுடைய பொருத்தத்தை, அந்த பொருத்தத்தின் மதிப்பை உணர்ந்தவர்களுக்கு தெரியும், நாளை மறுமையில் மஹ்ஷர் மைதானத்தில் எந்த தண்டனைகளும் ஆதாரமாய் இருக்காது.
அப்போது, ஒரு குறிப்பிட்ட சிலருக்கு தவிர, பொதுவாக எல்லோரும் அந்த விசாரணையை எதிர்பார்த்து தான் இருப்பார்கள். ஆனால், நீங்கள் புகாரி உடைய ஹதீஸிலும் , முஸ்லிமுடைய ஹதீஸிலும் படிக்கலாம் ஒவ்வொரு நபியும் பயந்து நடுங்கிக் கொண்டிருப்பார்கள். மக்கள் எல்லாம் ஆதம் (அலை) இடத்திலே ஓடினால் அவர் விரட்டுவார். என்னிடத்தில் வராதீர்கள் என்று.என்ன சொல்வார்கள் தெரியுமா?
إِنَّ رَبِّي قَدْ غَضِبَ اليَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ، وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ
ஆதம் சொல்வார்கள்; என்னுடைய ரப்பு இன்றைய தினத்தில் கோவமாக இருக்கின்றான்.இதற்கு முன்பும் அப்படி கோவப்பட்டதும் இல்லை.இதற்கு பின்பும் அவன் அப்படி கோவப்பட மாட்டான்.இந்த கோபத்தில் எனது நிலை என்னவாகுமோ என்று நான் பயந்து இருக்கும்போது உங்களைப்பற்றி நான் எப்படி அவனிடத்தில் பேசுவது
நீங்கள் நூஹ் இடத்திலே செல்லுங்கள். அவரும் அதே வார்த்தையை சொல்வார்.
إِنَّ رَبِّي قَدْ غَضِبَ اليَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ، وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ
நூஹ் சொல்வார்; நீங்கள் இப்ராஹிம் இடத்திலே செல்லுங்கள் என்று. இப்ராஹிம் இடத்திலே சென்றால் ஹலீலுல்லாஹ் அவரும் அதை தான் சொல்வார்.
إِنَّ رَبِّي قَدْ غَضِبَ اليَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ، وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ
அவர் சொல்வார்; என்னால் முடியாது மூஸாவிடத்தில் செல்லுங்கள் என்று. மூஸா இடத்திலேயே சென்றால் அவரும் அதை தான் சொல்லுவார் .
إِنَّ رَبِّي قَدْ غَضِبَ اليَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ، وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ
சொல்லிவிட்டு அவர் சொல்லுவார்; ஈஸாவிடத்திலே செல்லுங்கள் என்று. அங்கே சென்றால், அவரும் இதே தான் சொல்லுவார்
إِنَّ رَبِّي قَدْ غَضِبَ اليَوْمَ غَضَبًا لَمْ يَغْضَبْ قَبْلَهُ مِثْلَهُ، وَلَنْ يَغْضَبَ بَعْدَهُ مِثْلَهُ
பிறகு முஹம்மது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் வந்தால் அவர்களும் அதே சொல்வார்கள். ஆனால் வித்தியாசம் என்ன அவர்கள் அல்லாஹ்விடத்தில் அனுமதி கேட்பார்கள்.
ஜன்னத்துல் ஃபிர்தௌஸ் அவர்களுக்காக திறக்கப்படும். அல்லாஹ்வுடைய அர்ஷுக்கு கீழே அவர்கள் செல்வார்கள். நான் ஸுஜுதிலே விழுந்து விடுவேன்.
எனக்கு அல்லாஹ் அவனை புகழக்கூடிய வார்த்தைகளை கொடுப்பான். நான் அல்லாஹ்வை புகழ்வேன்; புகழ்வேன்.அல்லாஹ்வுடைய கோபம் தணியும்.
அல்லாஹ் சொல்வான்; நபியே! நீங்கள் தலையை உயர்த்துங்கள்; கேளுங்கள் கொடுக்கப்படும்; சிபாரிசு செய்யுங்கள்;சிபாரிசு ஏற்றுக்கொள்ளப்படும்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 4712.
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வுடைய கோபம் எவ்வளவு பயங்கரமானது. நரகத்தின் தண்டனைகளை எல்லாம் ஒருபக்கம் வைத்தாலும், அல்லாஹ்வுடைய கோபம் அதைவிட பயங்கரமாக இருக்கும். சொர்க்கத்தின் இன்பங்களை எல்லாம் ஒரு பக்கம் வைத்தாலும், அல்லாஹ்வுடைய பொருத்தம் சொர்க்க இன்பங்களிலே மிகப்பெரிய இன்பம்.
மறுமையிலே அடியார்கள் சொர்க்கத்திலே இருக்கும் போது, அல்லாஹு தஆலா அந்த அடியார்களைப் பார்த்து கேட்பான்;
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ اللَّهَ يَقُولُ لِأَهْلِ الْجَنَّةِ: يَا أَهْلَ الْجَنَّةِ، فَيَقُولُونَ: لَبَّيْكَ رَبَّنَا وَسَعْدَيْكَ، فَيَقُولُ: هَلْ رَضِيتُمْ؟ فَيَقُولُونَ: وَمَا لَنَا لَا نَرْضَى وَقَدْ أَعْطَيْتَنَا مَا لَمْ تُعْطِ أَحَدًا مِنْ خَلْقِكَ، فَيَقُولُ: أَنَا أُعْطِيكُمْ أَفْضَلَ مِنْ ذَلِكَ، قَالُوا: يَا رَبَّنَا، فَأَيُّ شَيْءٍ أَفْضَلُ مِنْ ذَلِكَ؟ قَالَ: أُحِلُّ عَلَيْكُمْ رِضْوَانِي، فَلَا أَسْخَطُ أَبَدًا")مسند أحمد(11835
நீங்கள் சந்தோஷமாக இருக்கின்றீர்களா?நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்களா? என்று. சொர்க்கவாசிகள் சொல்வார்கள்;ரப்பே! ரஹ்மானே! நாங்கள் எப்படி சந்தோஷப்படாமல், மகிழ்ச்சி அடையாமல், திருப்தி அடையாமல் இருக்க முடியும்?!
அப்போது அல்லாஹ் கூறுவான்;உங்களுக்காக நான் ஒன்றை வைத்திருக்கிறேன். அதை நான் உங்களுக்கு கொடுக்க போகின்றேன். சொர்க்கவாசிகள் சொல்வார்கள்;யா அல்லாஹ்!எங்களை நீ நரகத்திலிருந்து விடுதலை செய்தாய்; இந்த சொர்கத்தில் எங்களைத் தங்க வைத்தாய். நாங்கள் விரும்பக்கூடிய எங்களுக்கு கண் குளிர்ச்சியான நிஃமத்துகளை எல்லாம் கொடுத்தாய். இதற்கு மேலும் ஒரு நிஃமத் இருக்கின்றதா?அல்லாஹு தஆலா அந்த நேரத்தில் தன்னுடைய அந்த அடியார்களை பார்த்து சொல்வான்;
என் அடியார்களே! இன்றைய தினம் நான் உங்களை பொருந்தி கொண்டேன். அல்லாஹு அக்பர். அல்லாஹு தஆலா நமக்கு அந்த பொருத்தத்தை தருவானாக!!
அறிவிப்பாளர் : அபூ சயீத் அல்குத்ரி ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 11835.
ஆகவே தான் நம்முடைய நல்லவர்கள் செய்த துஆக்களில் ஒன்று.
اللهم اجعل خير ايامنا يوم نلقاك وانت عنا راض
யா அல்லாஹ்!எங்களுடைய நாள்களிலே சிறந்த நாளாகஉன்னை சந்திக்கின்ற நாளை வைப்பாயாக!நாங்கள் உன்னை சந்திக்கும் போது, நீ எங்களை பொருந்தி கொண்ட நிலையில்நாங்கள் உன்னை சந்திக்க வேண்டும்.
அல்லாஹு தஆலா சொல்வான்; அடியார்களே! எனது பொருத்தத்தை உங்கள் மீது இறக்கி விட்டேன்; இனிமேல் நான் உங்கள் மீது கோபப்பட மாட்டேன். அல்லாஹு அக்பர்!
அல்லாஹ்வுடைய இந்த பொருத்தம் கிடைத்த மகிழ்ச்சியில் சொர்க்கவாசிகள் எத்தனை ஆயிரம் ஆண்டுகளை இந்த இன்பத்தில் கழிக்கின்றார்கள்.
அன்பு சகோதரர்களே!அல்லாஹ்வுடைய அந்த பொருத்தம் அதைத் தான் அல்லாஹ் நமக்கு ஆர்வமூட்டிச் சொல்கிறான். அல்லாஹ்வுடைய கோபம், அல்லாஹ்வுடைய தண்டனை அதை அல்லாஹு தஆலா நமக்கு எச்சரித்தும் சொல்கின்றான்.
சூரத்துல் பகராவில் ரப்புல் ஆலமீன் கூறுவதை பாருங்கள்;
وَاتَّقُوا يَوْمًا تُرْجَعُونَ فِيهِ إِلَى اللَّهِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ
மக்களே! அந்த ஒரு நாளை பயந்து கொள்ளுங்கள் அல்லாஹ்விடத்திலே நீங்கள் எல்லாம் கொண்டு வரப்படுவீர்கள். அந்த நாளில் ஒவ்வொரு ஆன்மாவும் அதற்குரிய விசாரணை பரிபூரணமாக செய்யப்படும். முழுமையாக அங்கே கேள்வி கணக்கு கேட்டு முழுமையாக கூலி கொடுக்கப்படும். எது அவர்கள் செய்தார்களோஅதற்குக்கூறிய கூலி அவர்களுக்கு கொடுக்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.(அல்குர்ஆன் 2 : 281)
இது போன்ற நூற்றுக்கணக்கான வசனங்களையும், ஆயிரக்கணக்கான நபிமொழிகளையும்ஒரு முஸ்லிம் அறிந்ததற்கு பிறகு தன்னைப்பற்றி இந்த உலகத்திலே அவன் சுய பரிசோதனை செய்து தன்னுடைய அமல்களை சரி செய்து கொள்ளவில்லை என்றால், பிறகு எவ்வளவு பெரிய கைசேதம்,எவ்வளவு பெரிய நஷ்டத்தை அவன் சந்திக்கப் போகிறான் என்பதை உணர்ந்து பாருங்கள்?!
நம்முடைய சலஃப்களைப் பற்றி பார்போம்; சஹாபாக்கள், தாபியீன்கள் எவ்வளவு இது விஷயத்திலே கவனமாக இருந்தார்கள்? எதை செய்வதற்கு அவர்கள் தவறினாலும் கூட அதாவது தங்களுடைய சாதாரண அன்றாட காரியங்களில், அமல்களில் அல்ல. இந்த சுய பரிசோதனைக்கு அவர்கள் அவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து செய்துகொண்டிருந்தார்கள்.
தாபியீன்களில் ஒரு பெரிய தாபியீன் வஹப் இப்னு முனப்பிஹ் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் கூறுகின்றார்கள்; நான் முந்தைய வேதங்களிலிருந்து படித்த தாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களுடைய நாணத்திலிருத்து படித்ததில்லே நான் ஒன்றை பார்த்தேன் சொல்லுகின்றார்கள்;
{حَقٌّ عَلَى الْعَاقِلِ أَنْ تَكُونَ لَهُ أَرْبَعُ سَاعَاتٍ: سَاعَةٌ يُنَاجِي فِيهَا رَبَّهُ وَسَاعَةٌ يُحَاسِبُ فِيهَا نَفْسَهُ وَسَاعَةٌ يَخْلُو فِيهَا بِأَصْحَابِهِ الَّذِينَ يُخْبِرُونَهُ بِعُيُوبِهِ وَيُحَدِّثُونَهُ عَنْ ذَاتِ نَفْسِهِ وَسَاعَةٌ يَخْلُو فِيهَا بِلَذَّتِهِ فِيمَا يَحِلُّ وَيَجْمُلُ؛ فَإِنَّ فِي هَذِهِ السَّاعَةِ عَوْنًا عَلَى تِلْكَ السَّاعَاتِ}
அன்பானவர்களே! நான்கு விதமாக தங்களுடைய நேரங்களை ஒதுக்கி கொள்ளச் சொல்கிறான் நான்கு விதமாக தங்களுடைய வாழ்க்கையை அமைத்துக்கொள்ள சொல்கிறார்கள். ஒவ்வொரு நாளும் அமைத்துக் கொண்டாலும் சரி.
சொல்லுகிறார்கள்;உங்களுக்கு என்று ஒரு நேரத்தை ஒதுக்குங்கள்; அந்த நேரத்தில் நீங்கள் அல்லாஹ்விடத்திலே பேச வேண்டும். ரப்போடு நீங்கள் தனிமையிலே இருக்க வேண்டும். துஆ கேட்பது, திக்ரு செய்வது, நஃபில் தொழுவது, இஸ்திஃபார் செய்வது, தவ்பா செய்வது, உங்களது தேவைகளை அல்லாஹ்விடத்திலே சொல்வது, நீங்கள் செய்த பாவங்களை அல்லாஹ்விடத்திலே சொல்லி மன்னிப்பு கேட்பது இப்படியாக ஒரு நேரத்தை ஒதுக்கிக் கொள்ளுங்கள்.
இரண்டாவது இன்னொரு நேரத்தை ஒதுக்குங்கள்;அதிலே நீங்கள் உங்களை சுயபரிசோதனை செய்யுங்கள். நீங்கள் உங்களை அன்றாட வாழ்க்கையிலே ஏன் செய்தாய்? எப்படி செய்தாய்? எங்கே சென்றாய்? யாரிடம் பேசினாய்? என்ன பேசினாய்?இப்படியாக ஒவ்வொன்றையும் குறித்து உங்களை சுய பரிசோதனை செய்து கொள்ளுங்கள்.
மூன்றாவது ஒரு நேரம் உங்களுக்கு இருக்கட்டும். அந்த நேரம் நல்ல நண்பர்களோடு கழியுங்கள்.யார் நல்ல நண்பர்கள்? யார் உங்களது குறைகளை சொல்வார்களோ, யார் உங்களிடத்தில் இருக்கக்கூடிய, உங்களது குறைகளை உங்களுக்கு நினைவூட்டி உங்களை திருத்துவார்களோ அத்தகைய நல்ல நண்பர்களுடன் நேரம் கொடுத்து, என்னிடத்தில் நீ என்ன தவறை பார்க்கிறாய்? அதை நான் திருத்திக்கொள்ள வேண்டும் என்று கூறுவார்.
அன்பு சகோதரர்களே! இது இன்று நமக்கு முடியுமா என்று சொல்லக்கூடிய அளவுக்கு சிரமத்திலே இருக்கின்றோம். காரணம் என்ன? பெருமை, தலைக்கனம் நமது தலையிலேயே உட்கார்ந்திருக்கிறது. நான் செய்வது தான் சரி;என்னை தவிர மற்றவர்கள் செய்வதெல்லாம் தப்பு. மார்க்க விஷயமாக இருக்கட்டும், உலக காரியங்களாக இருக்கட்டும். எப்படிப்பட்ட ஒரு ஆணவம்! அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்!
யாராவது நமது குறையை சுட்டிக்காட்டினால் நம்முடைய எதிரிகளில் முதல் பட்டியலிலே அவரைவைத்து விடுவோம்.இப்லீஸை இரண்டாவதாக வைத்துவிடுவோம். இப்லீஸை கூட, யஹூதிகளை கூட மற்ற எதிரிகளை எல்லாம் அடுத்து வைத்து விட்டு, யார் நேரடியாக வந்து நீங்கள் இதை செய்கிறீர்கள், இது சரியா? என்று கேட்டுவிட்டால் போதும் அவ்வளவுதான் அவர்தான் எதிரிகளில் முதல் எதிரி.
இங்கே நம்முடைய தாபியீன் சொல்கிறார்கள்; நீங்கள் ஒரு நண்பனோடு தனிமையில் அமருங்கள். அவன் உங்களுக்கு உங்களது தவறை நினைவூட்டி உங்களை திருத்தட்டும்.
நான்காவது ஒரு நேரம், ஹலாலை அனுபவிப்பதற்காக. எதை அல்லாஹ் அனுமதித்தானோ, எதில் உங்களுக்கு பாவங்கள் இல்லையோ, அத்தைகைய நல்ல இன்பங்களை, ஹலாலான இன்பங்களை, மனைவிகளோடு கழியுங்கள், பிள்ளைகளோடு கழியுங்கள், அல்லது உடல் ஆரோக்கியத்தை ஏற்படுத்தக்கூடிய விளையாட்டுகளில் இப்படியாக ஒரு நேரத்தை வைத்துக் கொள்ளுங்கள். இது முந்தைய மூன்று நேரங்களுக்கு உங்களுக்கு உதவியாக இருக்கும். உங்களது நஃப்ஸையும் கொஞ்சம் ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
மஜ்மூவுல் ஃபதாவா - இப்னு தைமிய்யா 2/368.
அன்பு சகோதரர்களே!! இத்தகைய ஒரு வழிகாட்டுதலின்படி நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்ளும்போது அதிலே ஒரு பகுதி இப்படி இருக்க வேண்டும். நம்மை முஹாஸபா செய்வதற்காக.
அன்பு சகோதரர்களே!! உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய ஒரு கூற்றைக் கூறி இந்த குத்பாவை நிறைவு செய்வோம்.
உமர் (ரலி) சொல்லுகிறார்கள் யாரைப்பற்றி ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சத்தியத்தை பேசக்கூடியவர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து அவருக்கு உதிப்புக் கொடுக்கப்படுகிறது என்று சொன்னார்களோ அவர்கள் சொல்கின்றார்கள்.
حَاسِبُوا أَنْفُسَكُمْ قَبْلَ أَنْ تُحَاسَبُوا ، وَزِنُوا أَنْفُسَكُمْ قَبْلَ أَنْ تُوزَنُوا ، فَإِنَّهُ أَهْوَنُ عَلَيْكُمْ فِي الْحِسَابِ غَدًا ، أَنْ تُحَاسِبُوا أَنْفُسَكُمُ الْيَوْمَ ، وَتَزَيَّنُوا لِلْعَرْضِ الأَكْبَرِ
உங்களிடத்திலே மறுமையில் விசாரிக்கப்படுவதற்க்கு முன்னால் நீங்கள் உங்களை விசாரித்துக் கொள்ளுங்கள். நாளை மறுமையிலே நீங்கள் நிறுத்தப்படுவதற்கு முன்னால். உங்களை நீங்கள் நிறுத்திக்கொள்ளுங்கள். இன்றே நீங்கள் உங்களை விசாரித்துக் கொள்வது, உங்களுக்கு ரொம்ப லேசு, ரொம்ப எளிதானது, நாளை மறுமையில் நீங்கள் விசாரிக்கப்படுவதை விட. நாளை மறுமையிலே அல்லாஹ்விற்கு முன்னால் கொண்டுவரப்படகூடிய நாளுக்காக இப்போதே நீங்கள் உங்களை அலங்கரித்துக் கொள்ளுங்கள். (5)
நூல் : திர்மிதி, எண் : 2459.
அன்பு சகோதரர்களே!! ஒரு பெரிய விழாவிற்கு செல்வதாக இருந்தால்,ஒரு பெரிய இடத்திருக்கு செல்வதாக இருந்தால் அடியான் எவ்வளவு அழகாகச் செல்கிறான். குழித்து, நல்லஆடைகளை அணிந்து, நறுமணம் பூசி, தன்னை எப்படியெல்லாம் அலங்கரித்துக் கொண்டு செல்கிறான்.
நாளை மறுமையில் அல்லாஹ்விற்க்கு முன்னால் நபிமார்கள் கூடுகின்ற இடத்திலே, ஷஹீதுகள், சித்தீக்குகள் கூடுகின்ற இடத்திலே நான் செல்ல வேண்டுமே! எவ்வளவு நல்ல அமல்களை கொண்டு அலங்கரித்து நாம் செல்ல வேண்டும். யோசித்துப் பாருங்கள்!
உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் இந்த கூற்றுக்கு பின்னால் ரப்புடைய வசனத்தை நினைவூட்டுகின்றார்கள்;
يَوْمَئِذٍ تُعْرَضُونَ لَا تَخْفَى مِنْكُمْ خَافِيَةٌ
அந்த நாளில் அல்லாஹ்விற்கு முன்னால் நீங்கள் கொண்டு வரப்படுவீர்கள். உங்களிடத்தில் எந்த ஒரு செயலும் அல்லாஹ்விற்கு மறைந்ததாக இருக்காது. (அல்குர்ஆன் 69 : 18)
இந்த வசனத்தைக் கூறி தங்களுடைய கூற்றை கலீஃபா உமர் ஃபாரூக் ரலியல்லாஹு அன்ஹு நிறைவு செய்கின்றார்கள்.
அன்பு சகோதரர்களே!! கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்!! இன்று காலையில் எழுந்ததிலிருந்து மாலை வரை ஓட்டம் ஓட்டம் ஓட்டம். நம்முடைய ரிஜ்கை விரட்டிக் கொண்டு சென்று கொண்டு இருக்கிறோம். மரணமும் நம்மை விரட்டிக் கொண்டிருக்கிறது.
எழுதப்பட்ட முடிவு,செய்யப்பட்ட ரிஜ்கை நாம் தேடி அலைந்து அலைந்து களைத்து விடுகின்றோம். நாம் எந்த நிலையில் இருக்கின்றோம்?
ஈமானோடு, இல்மிலே, தக்வாவிலே, அமலிலே, இபாதத்திலே, ஹராமை விட்டு விலகுவதில் நம்முடைய நிலை என்ன என்பதை நாம் சிந்திக்காமல் இருக்கின்றோம்.
சகோதரர்களே!! இந்த நிலையில் திடீரென்று மரணம் வந்துவிட்டால் அல்லாஹ் பாதுகாப்பானாக! அவனுடைய நிலைமை மிக மோசமாகிவிடும். எப்படியெல்லாம் நம்மை சுயபரிசோதனை செய்ய வேண்டும்.
இன்ஷா அல்லாஹ் அடுத்தடுத்த ஜும்மாக்களிலே பார்ப்போம். அல்லாஹ் ஸுப்ஹானஹு வதஆலா எனது பாவங்களையும், உங்களுடைய பாவங்களையும், முஸ்லிம்களுடைய பாவங்களையும் மன்னிக்க வேண்டும்.
இந்த உலகத்தில் நாம் நம்மை சுயபரிசோதனை செய்து நல்ல அமல்களை கொடுத்து அலங்கரித்து, தீய காரியங்கள், தீய செயல்கள், அனைத்தையும் விட்டு விலகி அல்லாஹ்வை நாம் சந்திக்கக் கூடிய நல்ல மக்களில் என்னையும் உங்களையும் அல்லாஹ் ஆக்கி அருள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا أَبُو اليَمَانِ، قَالَ: أَخْبَرَنَا شُعَيْبٌ، عَنِ الزُّهْرِيِّ، قَالَ: أَخْبَرَنِي عَطَاءُ بْنُ يَزِيدَ، عَنْ حُمْرَانَ، مَوْلَى عُثْمَانَ بْنِ عَفَّانَ أَنَّهُ رَأَى عُثْمَانَ بْنَ عَفَّانَ دَعَا بِوَضُوءٍ، فَأَفْرَغَ عَلَى يَدَيْهِ مِنْ إِنَائِهِ، فَغَسَلَهُمَا ثَلاَثَ مَرَّاتٍ، ثُمَّ أَدْخَلَ يَمِينَهُ فِي الوَضُوءِ، ثُمَّ تَمَضْمَضَ وَاسْتَنْشَقَ وَاسْتَنْثَرَ، ثُمَّ غَسَلَ وَجْهَهُ ثَلاَثًا وَيَدَيْهِ إِلَى المِرْفَقَيْنِ ثَلاَثًا، ثُمَّ مَسَحَ بِرَأْسِهِ، ثُمَّ غَسَلَ كُلَّ رِجْلٍ ثَلاَثًا، ثُمَّ قَالَ: رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَتَوَضَّأُ نَحْوَ وُضُوئِي هَذَا، وَقَالَ: «مَنْ تَوَضَّأَ نَحْوَ وُضُوئِي هَذَا، ثُمَّ صَلَّى رَكْعَتَيْنِ لاَ يُحَدِّثُ فِيهِمَا نَفْسَهُ، غَفَرَ اللَّهُ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ»(صحيح البخاري164 -)
குறிப்பு 2)
حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ بَهْرَامَ الدَّارِمِيُّ، حَدَّثَنَا مَرْوَانُ يَعْنِي ابْنَ مُحَمَّدٍ الدِّمَشْقِيَّ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ عَبْدِ الْعَزِيزِ، عَنْ رَبِيعَةَ بْنِ يَزِيدَ، عَنْ أَبِي إِدْرِيسَ الْخَوْلَانِيِّ، عَنْ أَبِي ذَرٍّ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فِيمَا رَوَى عَنِ اللهِ تَبَارَكَ وَتَعَالَى أَنَّهُ قَالَ: «يَا عِبَادِي إِنِّي حَرَّمْتُ الظُّلْمَ عَلَى نَفْسِي، وَجَعَلْتُهُ بَيْنَكُمْ مُحَرَّمًا، فَلَا تَظَالَمُوا، يَا عِبَادِي كُلُّكُمْ ضَالٌّ إِلَّا مَنْ هَدَيْتُهُ، فَاسْتَهْدُونِي أَهْدِكُمْ، يَا عِبَادِي كُلُّكُمْ جَائِعٌ، إِلَّا مَنْ أَطْعَمْتُهُ، فَاسْتَطْعِمُونِي أُطْعِمْكُمْ، يَا عِبَادِي كُلُّكُمْ عَارٍ، إِلَّا مَنْ كَسَوْتُهُ، فَاسْتَكْسُونِي أَكْسُكُمْ، يَا عِبَادِي إِنَّكُمْ تُخْطِئُونَ بِاللَّيْلِ وَالنَّهَارِ، وَأَنَا أَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا، فَاسْتَغْفِرُونِي أَغْفِرْ لَكُمْ، يَا عِبَادِي إِنَّكُمْ لَنْ تَبْلُغُوا ضَرِّي فَتَضُرُّونِي وَلَنْ تَبْلُغُوا نَفْعِي، فَتَنْفَعُونِي، يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَتْقَى قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مِنْكُمْ، مَا زَادَ ذَلِكَ فِي مُلْكِي شَيْئًا، يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ كَانُوا عَلَى أَفْجَرِ قَلْبِ رَجُلٍ وَاحِدٍ، مَا نَقَصَ ذَلِكَ مِنْ مُلْكِي شَيْئًا، يَا عِبَادِي لَوْ أَنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وَإِنْسَكُمْ وَجِنَّكُمْ قَامُوا فِي صَعِيدٍ وَاحِدٍ فَسَأَلُونِي فَأَعْطَيْتُ كُلَّ إِنْسَانٍ مَسْأَلَتَهُ، مَا نَقَصَ ذَلِكَ مِمَّا عِنْدِي إِلَّا كَمَا يَنْقُصُ الْمِخْيَطُ إِذَا أُدْخِلَ الْبَحْرَ، يَا عِبَادِي إِنَّمَا هِيَ أَعْمَالُكُمْ أُحْصِيهَا لَكُمْ، ثُمَّ أُوَفِّيكُمْ إِيَّاهَا، فَمَنْ وَجَدَ خَيْرًا، فَلْيَحْمَدِ اللهَ وَمَنْ وَجَدَ غَيْرَ ذَلِكَ، فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ» قَالَ سَعِيدٌ: كَانَ أَبُو إِدْرِيسَ الْخَوْلَانِيُّ، إِذَا حَدَّثَ بِهَذَا الْحَدِيثِ، جَثَا عَلَى رُكْبَتَيْهِ.(صحيح مسلم - (2577
குறிப்பு 3)
حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ، أَخْبَرَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنِ الأَعْمَشِ، عَنْ خَيْثَمَةَ، عَنْ عَدِيِّ بْنِ حَاتِمٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: مَا مِنْكُمْ أَحَدٌ إِلَّا سَيُكَلِّمُهُ رَبُّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَهُ تُرْجُمَانٌ، فَيَنْظُرُ أَيْمَنَ مِنْهُ فَلاَ يَرَى إِلَّا مَا قَدَّمَ مِنْ عَمَلِهِ، وَيَنْظُرُ أَشْأَمَ مِنْهُ فَلاَ يَرَى إِلَّا مَا قَدَّمَ، وَيَنْظُرُ بَيْنَ يَدَيْهِ فَلاَ يَرَى إِلَّا النَّارَ تِلْقَاءَ وَجْهِهِ، فَاتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ "، قَالَ الأَعْمَشُ: وَحَدَّثَنِي عَمْرُو بْنُ مُرَّةَ، عَنْ خَيْثَمَةَ، مِثْلَهُ، وَزَادَ فِيهِ: «وَلَوْ بِكَلِمَةٍ طَيِّبَةٍ»(صحيح البخاري7512 -)
குறிப்பு 4)
حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، حَدَّثَنَا أَبُو أُسَامَةَ، حَدَّثَنِي عُبَيْدُ اللهِ بْنُ عُمَرَ، عَنْ مُحَمَّدِ بْنِ يَحْيَى بْنِ حَبَّانَ، عَنِ الْأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ عَائِشَةَ، قَالَتْ: فَقَدْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً مِنَ الْفِرَاشِ فَالْتَمَسْتُهُ فَوَقَعَتْ يَدِي عَلَى بَطْنِ قَدَمَيْهِ وَهُوَ فِي الْمَسْجِدِ وَهُمَا مَنْصُوبَتَانِ وَهُوَ يَقُولُ: «اللهُمَّ أَعُوذُ بِرِضَاكَ مِنْ سَخَطِكَ، وَبِمُعَافَاتِكَ مِنْ عُقُوبَتِكَ، وَأَعُوذُ بِكَ مِنْكَ لَا أُحْصِي ثَنَاءً عَلَيْكَ أَنْتَ كَمَا أَثْنَيْتَ عَلَى نَفْسِكَ»(صحيح مسلم -(486
குறிப்பு 5)
حَدَّثَنَا سُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَ: حَدَّثَنَا عِيسَى بْنُ يُونُسَ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي مَرْيَمَ، ح وحَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ قَالَ: أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَوْنٍ قَالَ: أَخْبَرَنَا ابْنُ المُبَارَكِ، عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي مَرْيَمَ، عَنْ ضَمْرَةَ بْنِ حَبِيبٍ، عَنْ شَدَّادِ بْنِ أَوْسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الكَيِّسُ مَنْ دَانَ نَفْسَهُ وَعَمِلَ لِمَا بَعْدَ المَوْتِ، وَالعَاجِزُ مَنْ أَتْبَعَ نَفْسَهُ هَوَاهَا وَتَمَنَّى عَلَى اللَّهِ» هَذَا حَدِيثٌ حَسَنٌ «.» وَمَعْنَى قَوْلِهِ: مَنْ دَانَ نَفْسَهُ يَقُولُ حَاسَبَ نَفْسَهُ فِي الدُّنْيَا قَبْلَ أَنْ يُحَاسَبَ يَوْمَ القِيَامَةِ " وَيُرْوَى عَنْ عُمَرَ بْنِ الخَطَّابِ، قَالَ: " حَاسِبُوا أَنْفُسَكُمْ قَبْلَ أَنْ تُحَاسَبُوا، وَتَزَيَّنُوا لِلْعَرْضِ الأَكْبَرِ، وَإِنَّمَا يَخِفُّ الحِسَابُ يَوْمَ القِيَامَةِ عَلَى مَنْ حَاسَبَ نَفْسَهُ فِي الدُّنْيَا وَيُرْوَى عَنْ مَيْمُونِ بْنِ مِهْرَانَ، قَالَ: «لَا يَكُونُ العَبْدُ تَقِيًّا حَتَّى يُحَاسِبَ نَفْسَهُ كَمَا يُحَاسِبُ شَرِيكَهُ مِنْ أَيْنَ مَطْعَمُهُ وَمَلْبَسُهُ» (سنن الترمذي2459 ) [حكم الألباني] : ضعيف
இமாம் அல்பானி, இந்த ஹதீஸ் பலகீனமானது என்று கூறுகிறார்கள்.
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/