அல்லாஹ் தடுத்ததை விட்டும் பொறுமை காப்பது | Tamil Bayan - 535
بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيم
கலாச்சாரத்தில் சிறந்தது நபியின் கலாச்சாரம்
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
எல்லா புகழம் அல்லாஹ்விற்கே .அல்லாஹ்வை போற்றிப் புகழ்கிறோம். அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறோம். அவனையே சார்ந்திருக்கிறோம்.நம்முடைய செயல்களின் தீங்குகளை விட்டும். நம்முடைய நஃப்ஸுகளின் கெடுதிகளை விட்டும் அல்லாஹ்விடத்தில் பாதுகாவல் தேடுகிறோம். வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று சாட்சி சொல்கிறேன். மேலும் முஹம்மது நபி (ஸல்) அல்லாஹ்வுடைய அடியாராகவும்,தூதராகவும் இருக்கிறார்கள் என்று சாட்சி கூறுகிறேன். கண்ணியத்திற்குரியவர்களே அல்லாஹ் தன்னுடைய திருவேதம் அல்குர்ஆனிலே கூறுகிறான்,
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
நம்பிக்கையாளர்களே! அல்லாஹ்வை ஏக இறைவனை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் அந்த உண்மையான இறைவனாகிய அல்லாஹ்வை எப்படி பயப்பட வேண்டுமோ உண்மையான பயமாக அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். நீங்கள் முஸ்லிம்களாக இருக்கின்ற நிலையில் தவிர, அந்த ஒரே இறைவனுக்கு கீழ்படிந்தவர்களாக, கட்டுபட்டவர்களாக அவனுடைய மார்க்கமாகிய இஸ்லாமை ஏற்று அதன்படி நடந்தவர்களாகவே தவிர நீங்கள் மரணித்து விட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
அன்பானவர்களே! மேலும் அந்த அல்லாஹ் சொல்கிறான்.
يَا أَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللَّهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللَّهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
மக்களே!உங்களை படைத்த இறைவனை,ஒரே ஆன்மாவிலிருந்து உங்களை படைத்து பிறகு அதற்குரிய ஜோடியை படைத்து, அந்த இருவர் மூலமாக அநேக ஆண்களையும் பெண்களையும் இந்த பூமியிலே பரப்பிய உங்களது ரப்பை நீங்கள் பயந்து கொள்ளுங்கள். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். அவன் மூலமாகதான் நீங்கள் ஒருவரை ஒருவர் ஒரு விஷயத்தை கேட்டு அறிந்துகொள்கிறீர்கள். உங்கள் உறவினர்களையும் பேணிக் கொள்ளுங்கள்.நிச்சயமாக அல்லாஹ் உங்களை கண்கானிப்பவனாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4 : 1)
மேலும் நம்முடைய ரப் அல்லாஹ் கூறுகிறான்.
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا
முஃமின்களே!நீங்கள் அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள். நேர்மையான பேச்சை சரியான நீதமான ஒழுக்கமான பேச்சை நீங்கள் பேசுங்கள்.அல்லாஹ் உங்கள் காரியங்களை சீர் செய்வான்.உங்களை மன்னிப்பான்.யார் அல்லாஹ்விற்கும் அவருடைய தூதருக்கும் கீழ்படிந்து கட்டுபட்டு அவர்களுடைய கட்டளைகளுக்கு ஏற்ப அவர்கள் காட்டித்தந்த வழிமுறைகளுக்கு ஏற்ப நடந்து கொள்வாரோ அவர்தான் மகத்தான வெற்றி அடைந்தார். (அல்குர்ஆன் 33 : 70)
அன்பானவர்களே!அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) தனது உரையின் ஆரம்பத்தில் இந்த வசனங்களை கூறியதற்கு பிறகு சொல்வார்கள்;
فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
மக்களே!அறிந்து கொள்ளுங்கள் பேச்சுகளிலே சிறந்த பேச்சு மனிதர்கள் கூறக்கூடிய வார்த்தைகளில் மிகச் சிறந்தது அல்லாஹ்வின் உடைய வேதம். அதை விட சிறந்த ஒரு நூல் சிறந்த ஒரு வேதம் சிறந்த ஒரு வழிகாட்டுதல் இந்த உலகத்தில் இல்லை. மேலும் கலாச்சாரங்களில் வாழ்க்கை முறைகளில் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய கலாச்சாரம் ஆகும். அவர்கள் எதை நமக்கு சொல்லால் செயலால் அங்கீகாரத்தால் காண்பித்து வழிநடத்தி வழிகாட்டி சென்றிருக்கிறார்களோ அது தான் சிறந்த வழிமுறை.(1)
அறிவிப்பாளர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம், எண்:1435
வழிமுறைகளில் உலகத்தில் எத்தனை வாழ்க்கை கலைகளை கலாச்சாரங்களை மக்கள் உருவாக்கி கொண்டாலும் எந்தவொரு அழகிய எதார்த்தமான எளிமையான மிக சிறப்பான எல்லோருக்கும் பொருந்தும்படியான எந்த சமூகத்தைசேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி படிக்காத பாமரர்களாக இருந்தாலும் சரி படித்த அறிஞர்களாக இருந்தாலும் சரி ஏழைகளாக இருந்தாலும் சரி செல்வந்தர்களாக இருந்தாலும் சரி தொழிலாளிகளாக இருந்தாலும் சரி முதலாளிகளாக இருந்தாலும் சரி எல்லோருக்கும் பொருத்தமான நீதமான மிகச்சிறப்பான மனிதனின் கண்ணியத்தை அறிவை ஒழுக்கத்தை கட்டுப்பாட்டை பாதுகாக்கக்கூடிய சிறந்த ஒரு கலாச்சாரத்தை அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்)அல்லாஹ்வின் புறத்திலிருந்து நமக்கு வழங்கிவிட்டு சென்றிருக்கிறார்கள்.
அதுதான் கண்ணியத்திற்குரியவர்களே! கலாச்சாரங்களில் வாழ்க்கை அமைப்புகளில் மிகச்சிறந்த கலாச்சாரம். அடுத்து சொன்னார்கள் ரசூலுல்லாஹ்(ஸல்)
காரியங்களில் மிக மோசமானது மிக தீமையானது மிக கெடுதி விளைவிக்க கூடியது.
அவனுடைய இம்மை வாழ்க்கையையும் அவனுடைய மறுமை வாழ்க்கையையும் நாசமாக்ககூடியது.மனிதர்கள் எதை அல்லாஹ்வுடைய மார்க்கத்திலே தங்களது விருப்பங்களுக்கு ஏற்ப புதிது புதிதாக உருவாக்கிக்கொள்கிறார்களோ அந்த புதிய காரியங்கள். அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் வழிகாட்டாத நபித்தோழர்கள் அறியாத ஒரு விஷயத்தை யார் இந்த மார்க்கத்திற்குள் கொண்டுவருவார்களோ அது தான் மிக கெட்ட காரியம்.
மேலும் சொன்னார்கள். ரசூலுல்லாஹ் (ஸல்) புதிதாக உருவாக்கப்படக்கூடிய இந்த நூதன அனுஷ்டானங்கள் இந்தசடங்குகள் சம்பிரதாயங்கள் எல்லாம் பித்அத். அல்லாஹ்வின் புறத்திலிருந்து வெறுக்கப்பட்ட புதுமையான காரியங்கள். புதுமையான காரியங்களெல்லாம் வழிகேடுகள் தான்.
மேலும் எச்சரித்தார்கள் வழிகேடுகள் ஒரு மனிதனை நரகத்தில் தள்ளியே தீரும் என்பதாக. அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும்.
அன்பானவர்களே! இந்த மஸ்ஜிதுடைய முதல் குத்பா நிகழ்ச்சி அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) எந்த ஒரு அழகிய வழிகாட்டுதலை தங்களது பிரசங்கம் எல்லாவற்றிலும் கூறுவார்களோ அதற்குரிய ஒரு சிறிய தமிழாக்கத்தை தான் உங்களுக்கு நான் சொன்னேன். ஒன்றை நன்றாக கவனமாக கேட்டுக் கொள்ளுங்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) நம்மை ஒரே உம்மத்தாக விட்டு சென்றார்கள். ஒரே ரப்பை வணங்கும் படி நமக்கு கட்டளையிட்டார்கள். ஒரே கிப்லாவை முன்னோக்கும்படி நமக்கு கட்டளையிட்டார்கள். நமக்காக இறுதியாக அனுப்பப்பட்ட அந்த தூதர்(ஸல்) அவர்களும் ஒரே ஒருவர் தான்.நமக்கு மத்தியில் இனங்களால் , சமூகத்தால், மொழியால், கலாச்சாரத்தால், அரசியலால், இயக்கங்களால் எந்த ஒரு வகையிலும் பிரிவினை வந்துவிடக் கூடாது என்பதில் அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) மிக அழுத்தம் திருத்தமான வழிகாட்டுதலை கொடுத்திருக்கிறார்கள்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அல்குர்ஆனிலே மிக தெளிவாக நமக்கு வலியுறுத்தி இருக்கிறான். அல்லாஹ் சொல்கிறான்.
أَنْ أَقِيمُوا الدِّينَ وَلَا تَتَفَرَّقُوا فِيهِ
தீனை நிலைநிறுத்துங்கள்.அல்லாஹ்வுடைய இந்த மார்க்கத்திலே நீங்கள் குரூப்களாக,பிரிவுகளாக,கோஷ்டிகளாக பிரிந்து விடாதீர்கள் என்று.அல்லாஹ்வை வணங்கக்கூடிய நாம் ஒரே உம்மத்தாக வாழ்ந்து அல்லாஹ்வை சந்திக்கக்கூடியவர்களாக இருக்க வேண்டும். (அல்குர்ஆன் 43 : 13)
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நம்முடைய வெற்றியை நம்முடைய இம்மை மறுமை வாழ்க்கையின் மேன்மையை நம்முடைய ஏகத்துவத்திலும் அல்லாஹ் ஒருவனை வணங்கி வழிபட்டு அல்லாஹ்வுடைய தூதருக்கு மட்டும் கீழ்படிந்து நடந்து அதன்படி வாழ்க்கையை அமைத்து கொண்டு பிரிவினைகளை பாகுபாடுகளை ஒதுக்கி களைந்து தவிர்த்து அவற்றை விட்டு புறக்கணிப்பதிலே அல்லாஹ் வைத்திருக்கிறான். சமூகத்தை புறக்கணிப்பதில் அல்ல, நமது சமுதாய மக்களை புறக்கணிப்பதில் அல்ல, அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) பிரிந்து இருந்த சமுதாயங்களை ஒன்றிணைப்பதற்கான வந்தார்கள்.
சண்டை சச்சரவுகள் செய்து கொண்டிருந்த கோத்திரங்களாக கோஷ்டிகளாக இனங்களாக பிரிந்து ஒருவரை ஒருவர் வெட்டி சாய்த்து கொண்டிருந்த சீர்கெட்டிருந்த மனித குலத்தை நேர்படுத்தி,
وَاعْتَصِمُوا بِحَبْلِ اللَّهِ جَمِيعًا وَلَا تَفَرَّقُوا
அல்லாஹ்வின் வேதமான குர்ஆனை பற்றி பிடித்து ஒற்றுமையாக இருங்கள் நீங்கள் பிரித்துவிடாதீர்கள் என்ற ஒற்றுமையின் பக்கம் ஏகத்துவ ஒற்றுமையின் பக்கம் நபிவழியின் ஒற்றுமையின் பக்கம் இந்த உம்மத்தை ஒரே உம்மத்தாக விட்டு சென்றார்கள்.அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு சொல்லக்கூடிய வழி காட்டுதலை கொஞ்சம் கவனமாக கேளுங்கள். (அல்குர்ஆன் 3 : 103)
ரப்புல் ஆலமீன் சொல்கிறான்.
وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَنَازَعُوا فَتَفْشَلُوا وَتَذْهَبَ رِيحُكُمْ وَاصْبِرُوا إِنَّ اللَّهَ مَعَ الصَّابِرِينَ
அல்லாஹ்விற்கு கட்டுப்பட்டு நடங்கள். அல்லாஹ்வுடைய தூதருக்கு கட்டுப்பட்டு நடங்கள். நீங்கள் உங்களுக்குள் சண்டை சச்சரவுகள் பிணக்குகள் செய்து கொள்ளாதீர்கள். நீங்கள் கோழையாகி விடுவீர்கள். உங்களுடைய சக்தி ஆற்றல் வலிமைகளெல்லாம் சென்றுவிடும். உங்களுக்கு மத்தியில் ஏற்படக்கூடிய மனஸ்தாபங்களில் நீங்கள் பொறுமையாக இருங்கள். (அல்குர்ஆன் 8 : 46)
அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பின்பற்றி நடப்பதிலே நீங்கள் உறுதியாக இருங்கள். அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட முஃமின்களை பார்த்து அல்லாஹ் சொல்கிறான். அல்லாஹ்விற்கு கட்டுபடுங்கள். அல்லாஹ்வுடைய தூதருக்கு கட்டுப்படுங்கள்.
இந்த கட்டளை ஏனைய மக்களை விட நமக்கு மிக மிக முக்கியமான ஒன்று.ஏன் தெரியுமா இன்றைக்கு இஸ்லாமிய மார்க்கமும் அல்லாஹ் பாதுகாப்பானாக!
அந்த நிலைமையிலிருந்து நமக்கு ஈடேற்றத்தை பாதுகாப்பை கொடுத்து நேர்வழியில் நம்மை உறுதிப்படுத்துவானாக! இன்றைய முஸ்லிம்களின் பலர் இஸ்லாமிய மார்க்கத்தையும் ஏனைய மதங்களை போன்று ஒரு மதமாக ஆக்கிகொண்டு ஏனைய மதச்சடங்குகளை போன்று மன இச்சைகளுக்கு ஏற்ப கலாச்சாரங்களையும் இன்னும் பிற பிற விஷயங்களையெல்லாம் மார்க்கத்திற்குள் புகுத்தி தனி தனி ஜமாத்துகள் பிரித்து கொண்டு சண்டை சச்சரவுகள் செய்துகொண்டிருப்பதை பார்க்கிறோம்.
எந்த ஒரு காரியத்திற்கு அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் முக்கியத்துவம் தரவில்லையோ அந்த காரியத்திற்கு முக்கியத்துவம் தரப்படுகிறது. எதை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவரவருடைய விருப்பம் என்று விருப்பத்திற்கேற்ப விட்டார்களோ அவையெல்லாம் இன்று கட்டாய கடமையாக பின்பற்ற வேண்டிய மிகப்பெரிய சட்டங்களாக மாற்றப்பட்டு விட்டன. எதை அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் அவசியம் என்று கட்டாயம் என்று சமூகத்தின் அடையாளமென்று அடையாளம் காட்டினார்களோ அவையெல்லாம் இன்று குழிதோண்டி புதைக்கப்பட்டு கொண்டிருக்கிறது.புறக்கணிக்கப்படுகிறது.
அதில் செய்யப்படக்கூடிய அலட்சியங்களெல்லாம் மக்கள் சீரழிந்து கொண்டிருக்கிறார்கள்.
இவர்கள் ஏற்படுத்திய சடங்குகள் சம்பிரதாயங்களில் ஒரு கீரல் விழுவதை கூட இவர்களால் சகித்து கொள்ள முடியவில்லை. அல்லாஹ்வுடைய மார்க்கம் அல்லாஹ்வுடைய தீன் நபியுடைய அழகான சுன்னத்தான வழிமுறை நாசமானாலும் சரி, குழிதோண்டி புதைக்கப்பட்டாலும் சரி, பெரும் பாவத்தை அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் வெறுத்த நரக தண்டனை உண்டு என்று எச்சரிக்கை செய்த பெரும் பாவங்களை யார் செய்தாலும் சரி கண்டு கொள்ளாமல் இருக்கிறார்கள் .
ஏன், அப்படிபட்டவர்களில் பலர் அவர்களுடைய சமுதாயத்தின் தலைவர்களாகவும் இருக்கிறார்கள். மஸ்ஜித் உடைய தலைவர்களாகவும் மஸ்ஜிதுடைய முத்தவல்லி யாகவும் இருக்கிறார்கள் என்றால் இதைவிட கேவலம் கேடுகெட்ட நிலை என்னவாக இருக்க முடியும்.
அல்லாஹ்வுடைய தூதர் எச்சரிக்கை செய்தார்களே மறுமையின் அடையாளங்களிலே ஒன்று, மறுமை ஆகிரத்தினுடைய உலக முடிவு நாளின் அடையாளங்களில் ஒன்று, சமுதாயத்தின் தலைர்களாக பாவிகள் இருப்பார்கள் என்று. சமுதாயத்தின் வழிகாட்டிகளாகவும் சமூகத்தை வழிநடத்துவர்களாக மட்டமானவர்கள், கேவலமானவர்கள் இருப்பார்கள் என்று. தொழுகையை விடுவதை விட வாழ்நாளெல்லாம் ஐந்துநேர தொழுகையை புறக்கணித்து வாழ்வதை விட குஃப்ருக்கும் ஷிர்க்கிற்கும் பிறகு வேறு ஒரு பாவம் இருக்க முடியுமா? இன்றைய பல மஸ்ஜிதுனுடைய முத்தவல்லிகளின் நிலைகளை வைத்துப் பாருங்கள் ஜும்ஆவுடைய நாட்களை தவிர வேறு நாட்களிலே அவர்கள் பள்ளியின் பக்கம் வர மாட்டார்கள்.
எந்த ஒரு பாவத்தை குறித்து அல்லாஹ், இதை நீங்கள் விட்டு விலகவில்லை என்றால் அல்லாஹ்வுடனும் அல்லாஹ்வுடைய தூதருடனும் போர் செய்வதற்கு நீங்கள் அறிவிப்பு செய்துவிடுங்கள் என்று சொன்னானோ, (அல்குர்ஆன் 2 : 229) அந்த வட்டியை வாங்கக்கூடியவர்கள் அந்த வட்டியிலே வாழக்கூடியவர்களும் இன்றைய ஜமாத்துடைய பல இடங்களில் தலைவர்களாகவும், பொருப்பாளிகளாகவும் சமுதாயத்தின் வழிகாட்டிகளாகவும் இருப்பதை பார்த்துக் கொண்டிருக்கிறோம் .
ஏன் அல்லாஹ்வுடைய வேதனை இறங்காது? தண்டனை இறங்காது.? இசையும் ஆடலும் பாடலும் ஆபாசமும் அல்லாஹ்வுடைய மார்க்கத்திலே வேரோடு வெட்டிசாய்க்கப்பட்ட மிக பெரிய பாவங்கள். இன்று திருமணங்கள் என்ற பெயரில் அதுபோன்று நல்லோர்கள் அடங்கியிருக்கக்கூடிய அடக்கஸ்தலங்களில் அவர்களின் அருளை பெறுகிறோம் என்ற பெயரில் இத்தனை அசிங்கமான ஆபாசமான கலாச்சாரங்களை இந்த சமுதாய மக்கள் கூட்டம் கூட்டமாக நிறைவேற்றிக் கொண்டிருக்கிறார்களே அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக!
கொஞ்சம் யோசித்துப் பாருங்கள் நாம் அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் கீழ் படிந்து நடக்கிறோமா? இல்லை இப்லீஸ் ஷைத்தானுக்கு கீழ்படிந்து நடக்கிறோமா? இதைத்தானே அல்லாஹ் கேட்கிறான்.
أَلَمْ أَعْهَدْ إِلَيْكُمْ يَا بَنِي آدَمَ أَنْ لَا تَعْبُدُوا الشَّيْطَانَ إِنَّهُ لَكُمْ عَدُوٌّ مُبِينٌ (60) وَأَنِ اعْبُدُونِي هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ
ஆதமுடைய மக்களே!நான் உங்களிடத்திலே ஒப்பந்தம் வாங்கவில்லையா? ஷைத்தானை நீங்கள் வணங்காதீர்கள் என்னை மட்டுமே வணங்குங்கள்.இதுதான் நேரான வழி.(அல்குர்ஆன்36 : 60-61)
கொஞ்சம் யோசிக்கலாம் !இஸ்லாமிய மக்கள் யோசிக்கலாம் ! நான் எப்படி ஷைத்தானை வணங்குவேன்?நான் எப்படி அல்லாஹ்விற்கு மாறு செய்வேன் என்பதாக நான் எப்படி முஹம்மது (ஸல்) அல்லாஹ்வுடைய தூதர் என்று சொன்னதற்கு பிறகு இஸ்லாமிய மார்க்கத்திற்கு மாற்றமாக நடப்பேன் என்பதாக. ஆம் சகோதரர்களே நடந்துகொண்டு இருக்கிறார்கள். காரணம் என்ன அல்லாஹ்வுடைய மார்க்கத்தை அறியாத காரணத்தால் ஷிர்க்கை குஃப்ரை குஃப்ரு என்று புரியாத காரணத்தால். ஒரு முஸ்லீம் நான் அல்லாஹ்வை அழைப்பதை விட அப்துல் காதர் ஜீலானியை அழைத்தால் எனக்கு அவர் சீக்கிரமாக வந்து உதவி செய்வார் என்று. இதைவிட பெரிய குஃப்ரை இறை நிராகரிப்பை நீங்கள் அறியமுடியுமா? ஒரு முஸ்லிம் மஸ்ஜிதிலே வந்து இரண்டு ரக்அத் தொழுது அல்லாஹ்விடத்திலே துஆ செய்வதிலே ஒருவனுக்கு இருக்கக்கூடிய நம்பிக்கையைவிட பொதுவாக சொல்கிறேன்.
எல்லோரும் அல்ல. ஆனால் சமுதாயத்தில் ஒரு பெருங்கூட்டம் மஸ்ஜிதிலே வந்து இரண்டு ரக்அத்துகள் தொழுது அல்லாஹ்விடம் துஆ செய்து எனது ரப்பு கொடுப்பான், அல்லாஹ் கொடுப்பான்,காலதாமதமானாலும் எனக்கு கொடுப்பான். அல்லாஹ் தான் என் கடனை நிறைவேற்றுபவன். எனக்கு பிள்ளை சந்ததிகளை கொடுப்பவன், வருமானத்திலே பரக்கத் செய்பவன்.என்னுடைய ரப்புதான்.
إِنَّ الَّذِينَ قَالُوا رَبُّنَا اللَّهُ ثُمَّ اسْتَقَامُوا تَتَنَزَّلُ عَلَيْهِمُ الْمَلَائِكَةُ أَلَّا تَخَافُوا وَلَا تَحْزَنُوا وَأَبْشِرُوا بِالْجَنَّةِ الَّتِي كُنْتُمْ تُوعَدُونَ
எனினும், எவர்கள் எங்கள் இறைவன் அல்லாஹ்தான் என்றுகூறி, (அதன்மீது) உறுதியாக நிலைத்து இருந்தார்களோ அவர்களிடம் நிச்சயமாக வானவர்கள் வந்து (அவர்களைநோக்கி) ‘‘நீங்கள் (ஒன்றுக்கும்) பயப்படாதீர்கள்; கவலைப்படாதீர்கள். உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கத்தைக் கொண்டு சந்தோஷமடையுங்கள்'' என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 41 : 30),
யார் சொன்னார்களோ எங்களை படைத்து பரிபாலித்து வளர்த்த எங்களின் தேவைகளை நிறைவேற்றக்கூடிய ஒரே இரட்சகன் எங்களது அல்லாஹ்தான் என்று. அதிலே யார் உறுதியாக இருந்தார்களோ அப்படி சொல்ல வேண்டிய முஸ்லிம் அவன் சொல்கிறான் அவன் செய்கிறான். பள்ளிவாசலுக்கு செல்வதிலே அவனுக்கு திருப்தி இல்லை .ஒரு தர்ஹாவிற்கு சென்றுவிடுவோம் அங்கே ஒரு நேர்ச்சை செய்து விடுவோம்.
அங்கே உண்டியலிலே காசு போட்டு விடுவோம் அல்லாஹ்விடத்திலே சொல்லி வருவோம் நானோ பாவி எனது பிராத்தனைகளை அல்லாஹ் ஏற்பானா இந்த மகானிடம் சொன்னால் அவர் அல்லாஹ்விடம் சொல்வார்.இல்லை என்றாலும் அவர் கொடுப்பார் என்பதாக நம்பி இன்று நல்லோர்கள் இல்லையென்றாலும் அவராகவே அடங்கியிருக்கக்கூடிய அடக்கஸ்தலங்களிலே முஸ்லிமான ஆணும் பெண்ணும் கூட்டம் கூட்டமாக நாளுக்கு நாள் குழுமி கொண்டிருக்கிறார்கள்.
வெள்ளிக்கிழமைகளில் மஸ்ஜிதிலே இருக்கவேண்டிய கூட்டத்தை விட அன்றைய இரவில் வியாழக்கிழமை மாலையில் தர்ஹாக்கலிலே கூடக்கூடிய கூட்டம்தான் அதிகமாக இருக்கிறது. அல்லாஹ்வுடைய மஸ்ஜிதிலே வந்து தக்வாவை உணர வேண்டிய முஸ்லிம் கூட்டம், அல்லாஹ்வுடைய மஸ்ஜிதிலே வந்து ஈமானிய இறை நெருக்கத்தை உணர வேண்டிய முஸ்லிம்களில் பலர் தர்ஹாக்களிலே சென்று நெருக்கத்தை உணர்கிறார்கள்.ஒருவித பரவசத்தை அடைகிறார்கள். இதை சமுதாயம் பார்த்து அங்கிகரித்து கொண்டிருக்கிறதே!
செய்பவர்களுடைய நிலை படுமோசமான நிலை என்றால் சமுதாய தலைவர்களாகவும் சமுதாயத்தில் உள்ள பொது மக்களுமாகிய நாமும் இன்னும் படித்தவர்களும் இது தவறு என்று அறிந்து கொண்டவர்களும் கண்டுகொள்ளாமல் இருந்தால் இதைவிட பெரிய பாவம் சமூகத்தில் என்னவாக இருக்க முடியும் யோசித்து பாருங்கள். எனவே ரப்புசொல்கிறான் அல்லாஹ்விற்கு கட்டுப்படுங்கள். சண்டை சச்சரவுகள் செய்யாதீர்கள்.
சமுதாயத்திலே சண்டை சச்சரவு ஏன் வருகிறது? யோசித்துப் பாருங்கள் எப்போது அல்லாஹ்வுடைய மார்க்கத்திலே மனிதன் தன்னுடைய விருப்பத்தை நுழைக்கிறானோ மனிதன் தன்னுடைய சுய விருப்பத்தை நுழைக்கிறானோ அங்கு தனக்கென்று ஒரு ஜமாத்தை,கூட்டத்தை உருவாக்குகின்றான். அதை ஏற்றுக் கொண்டவர்களை தன்னுடைய கூட்டமாக, ஏற்காதவர்களை எதிரிகளாக பார்க்கிறான்.
கண்ணியத்திற்குரியவர்களே! முஸ்லிம் சமுதாயம் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று ஏவப்பட்டிருக்கிறதே தவிர அல்லாஹ்வின் தூதருக்கு மாறு செய்து அல்லாஹ் ரப்புல் ஆலமீனுக்கு மாறு செய்து தங்களுடைய தலைவர்களுக்கு கீழ்ப்படிய வேண்டும் என்ற கட்டளை நிர்ப்பந்தம் இந்த மார்க்கத்தில் இல்லை. அல்லாஹ்வின் தூதர் மிகத்தெளிவாக வழிகாட்டினார்கள்.
لَا طَاعَةَ فِي مَعْصِيَةٍ
படைத்த ரப்புக்கு மாறுசெய்யக்கூடிய விஷயத்திலே படைப்பினங்களில் யாரும் கீழ்ப்படியக் கூடாது. (3)
அறிவிப்பாளர்: அலீ ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 6716
ஒரு மனைவி கணவனுக்கு கட்டுப்படவேண்டும். பிள்ளைகள் பெற்றோருக்கு கட்டுப்படவேண்டும். ஒரு தொழிலாளி தன்னுடைய முதலாளிக்கு கட்டுப்பட வேண்டும்.சமூக மக்கள் தங்கள் தலைவருக்குக் கட்டுப்பட வேண்டும். எது விஷயத்தில் எந்த அளவிற்கு அவர்கள் அல்லாஹ்வுடைய பாவத்தை ஏவாத வரை அல்லாஹ்வுடைய சட்டத்தை மீறசொல்லாத வரை நபி உடைய கட்டளைக்கு மாற்றமாக நடந்து கொள்வதற்கு தூண்டாத வரை.
அன்பு சகோதரர்களே! இவ்வளவு தெளிவான வழிகாட்டுதல் கொடுக்கப்பட்டிருக்கும் போது அந்த வழிகாட்டுதலை எடுத்து நடந்த ஒரு சிறந்த சமுதாயம் சஹாபாக்களின் சமுதாயம் நமக்கு முன்னோடிகளாக கொடுக்கப்பட்டிருக்கும் பொழுது அந்த சமுதாயத்தில் இல்லாத சடங்குகளை சச்சரவுகளை குழப்பங்களை இன்று மார்க்கத்தில் புகுத்திக்கொண்டு அதற்கு ஒரு பெயரையும் வைத்து அதற்கு கட்டுப்பட வைக்கிறார்களே அது தான் மார்க்கம் இஸ்லாம் என்பதாக அடையாளப்படுத்துகின்றார்களே எவ்வளவு பெரிய கேவலம் யோசித்துப் பாருங்கள்.
அன்பிற்குரியவர்களே! சுன்னத் இது ரசூலுல்லாஹ் உடைய சுன்னதாக இருக்க வேண்டும். ஜமாஅத் இது சஹாபாக்களின் ஜமாஅத்தாக இருக்க வேண்டும்.அவர்கள் தான் சுன்னத் வல் ஜமாஅத். சுன்னத் வல் ஜமாஅத் யார்?யார் இந்த மார்க்கத்தை பரிசுத்தமாக பின்பற்றுகிறார்களோ நாங்கள் சடங்குகள் இல்லாமல் சம்பிரதாயங்கள் இல்லாமல் அந்நியர்களின் கலாச்சாரங்கள் இல்லாமல் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை அல்லாஹ்வுடைய தூதர் எப்படி கற்றுக் கொடுத்தார்களோ,சஹாபாக்கள் அபூ பக்ர் (ரலி) உமர் (ரலி) உஸ்மான் (ரலி) அலி (ரலி) அவர்களுக்குப் பின்னால் வந்த தாபியீன்கள் அவர்களுக்குப் பின்னால் வந்த சங்கைக்குரிய இமாம்கள் எப்படி இந்த மார்க்கத்தை கொள்கையாலும் செயலாலும் சுத்தமாக பின்பற்றினார்களோ அந்த அடிப்படையிலே பின்பற்றுவோம் என்று சொல்பவர்கள் தான் சுன்னத் வல் ஜமாஅத் சகோதரர்களே.
சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரை வைத்துக் கொள்வதால் ஒருகாலும் அவர்கள் சுன்னத் வல்ஜமாஅத் என்ற அந்தத் தகுதியை அவர்கள் அடைய முடியாது.எப்படி குடிப்பவன் தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டால், மது அருந்தக் கூடியவர் தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டால், வட்டி வாங்கக் கூடியவன் தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டால், விபச்சாரம் செய்யக் கூடியவன் தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொண்டால் அவன் எப்படி இஸ்லாமின் பெயரைக் கெடுக்கின்றானோ அதுபோன்றுதான் சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயரை வைத்துக் கொண்டு இந்த மார்க்கத்தில் நூதனச் சடங்குகளை சம்பிரதாயங்களை நுழைத்து அதிலே மக்களை நிர்பந்திக்கின்றார்களோ அவர்களுக்கும் சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயருக்கும் எந்த சம்மந்தமும் இல்லை.
சுன்னத் என்பவர்கள் யார்? ஜமாஅத் என்பவர்கள் யார்? யார் ரஸூலுல்லாஹ் உடைய ஹதீஸ்களை பின்பற்றுகிறார்களோ, யார் சஹாபாக்களின் அந்த ஜமாஅத்தை பின்பற்றுகிறார்களோ இவர்களை தான் ரப்புல் ஆலமீன் சொல்லுகிறான்.
وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ
முந்தியவர்கள் முதலாமாவர்கள்.யார் அவர்கள்? முஹாஜிர்கள் அன்சாரிகள். பிறகு நல்ல அமல்களிலே யார் இந்த முஹாஜிர்களையும் அன்சாரிகளையும் பின்பற்றி வழி நடக்கின்றார்களோ, கவனியுங்கள். நாம் பின்பற்றுவதற்கு தகுதியான கூட்டம். (அல்குர்ஆன் 9 : 100)
நாம் பின்பற்றுவதற்கு சரியான ஒரு முன்மாதிரியான ஜமாஅத் என்று அல்லாஹ் காண்பித்து இருக்கின்றானென்றால் அது அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் உருவாக்கிய ஜமாஅத்து தான் .லால் பேட்டையாக இருந்தாலும் சரி, அமெரிக்காவாக இருந்தாலும் சரி, ஆஸ்திரேலியாவாக இருந்தாலும் சரி உலகத்தின் எந்த நாட்டு மக்களாக இருந்தாலும் சரி அவர்கள் பின்பற்றவேண்டிய இஸ்லாம் எதை அல்லாஹ்வுடைய தூதரும் சஹாபாக்களும் வழிநடந்தர்களோ அந்த இஸ்லாம்தான் அன்பானவர்களே. அதில் தான் முரண்பட்ட கருத்துகள் இருக்காது. முரண்பட்ட கொள்கைகள் இருக்காது. அப்படிப்பட்ட சிறந்த கலாச்சாரத்தை தான் அல்லாஹ்வுடைய தூதரும் ஸஹாபாக்களும் பின்பற்றினார்கள்.
அல்லாஹ்வுடைய தூதர் (ஸல்) முந்தைய சமுதாயம் 72 கூட்டங்களாக பிரிந்தது. எனது மக்கள் 73 கூட்டங்களாக பிரியும் என்று சொல்லி அந்த 73 கூட்டங்களிலே 72 கூட்டங்கள் நரகத்திற்கு செல்வார்கள் என்று எச்சரிக்கை செய்தபோது தோழர்கள் கேட்டார்களே.அல்லாஹ்வின் தூதரே சொர்க்கத்திற்கு செல்லக்கூடிய ஒரு கூட்டத்தை எங்களுக்கு அடையாளப்படுத்துங்கள் என்று சொன்னபோது, நானும் என்னுடைய தோழர்களும் எந்த கொள்கைகயில், எந்த கலாச்சாரத்தில்,எந்த தீனில் இருக்கின்றோமோ அதன்மீது தங்களை அமைத்துக்கொள்கின்றார்களோ அவர்கள் தான் என்று அடையாளப் படுத்தினார்கள்.(3)
நூல்: இப்னு மாஜா3983திர்மிதி 2565
ஏன் அந்த சமூகத்தை நாம் திரும்பிப்பார்ப்பதில்லை. இன்று நம்முடைய சமூகத்தில் நடக்கக்கூடிய ஒவ்வொரு பிரச்சனைக்கும் அவர்களுடைய வாழ்க்கையிலே தீர்வு இருக்கிறது. ஒரு காரியத்தை செய்யுங்கள் என்று ஒரு கூட்டம் சொல்கின்றது, ஒரு கூட்டம் செய்யாதீர்கள் என்று சொல்கின்றது,
கேளுங்கள் அபூபக்கர் செய்தாரா? இதை உமர் பாரூக் செய்தாரா? உஸ்மான்செய்தாரா?.அலி செய்தாரா?சஹாபாக்கள் செய்தார்களா? செய்திருக்கின்றார்கள் என்றால் நாமும் செய்வதிலே எந்த ஆட்சேபனையும் இல்லை.கல்யாணத்துக்கு மாலை போட வேண்டுமா? தப்ஸீ அடிக்க வேண்டுமா? கச்சேரி வைக்க வேண்டுமா? மௌலூது கொண்டாட வேண்டுமா? என்ன செய்ய வேண்டும்?
நீங்கள் ஸஹாபாக்கள் செய்ததாக எங்களுக்கு ஆதாரத்தை காட்டுங்கள். நாங்கள் முதலாவதாக செய்வதற்கு தயாராக இருக்கிறோம்.எப்போது நீங்கள் ஸஹாபாக்கள் அதை செய்யவில்லை என்று சொல்கிறீர்களோ! நபித்தோழர்களின் காலத்தில் இந்த சம்பிரதாயங்கள் இல்லை என்று சொல்கிறீர்களோ? எந்த அதிகாரத்தை கொண்டு அதை மக்கள் மீது தினிக்கிறீர்கள்? அதை மார்க்கமாக நீங்கள் மக்களுக்கு வழிநடத்துகின்றீர்கள்?
அதை செய்தவர்களை சுன்னத் வல் ஜமாஅத் தாகவும், அதை செய்தவர்களை முஸ்லிம்களாகவும், அதை செய்யாதவர்வளை ஜமாஅத்தை விட்டு நீக்குகின்றீர்களே இந்த அதிகாரத்தை யார் உங்களுக்கு கொடுத்தது? யார் இந்த சடங்குகளை செய்கிறார்களோ! அவர்கள் மார்க்கத்தை விட்டு விலகினார்களா?அல்லது யார் இந்த சடங்குகளை செய்யவில்லையோ அவர்கள் மார்க்கத்தை விட்டு விலகினார்களா? அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள்.
عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ (سنن أبي داود-3512 )
யார் பிற மத சடங்குகளை செய்வார்களோ? பிற மத கலாச்சாரங்களை போன்று தங்களுடைய கலாச்சாரங்களை அமைத்து கொள்வார்களோ? பிற மத சம்பிரதாயங்களை பின்பற்றுகிறார்களோ? அவர்கள் அந்த சமூகத்தை சேர்ந்தவர்கள் என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர்: இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: அபூ தாவூத், எண்:3512
யாரை பார்த்து?
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ (صحيح البخاري 2499 -)
யார் என்னுடைய மார்க்கத்திலே, யார் நம்முடைய மார்க்கத்திலே கட்டளையிடாததை, நான் சொல்லாததை, செய்வார்களோ அது மறுக்கப்பட வேண்டியது என்று சொன்னார்கள்.
அறிவிப்பாளர்: ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல்: புகாரி, எண்:2499
மறுக்கப்பட வேண்டியது. நிராகரிக்கப்பட வேண்டியது எது? எதை மார்க்கத்தில் இவர்கள் உருவாக்கினார்களோ? மறுக்கப்பட வேண்டியவர்கள். ஒதுக்கி வைக்கப்பட வேண்டியவர்கள் யார்?யார் அல்லாஹ்வுடைய மார்க்கத்திலே ரசூலுடைய மார்க்கத்திலே இல்லாததை உருவாக்கினார்களோ அவர்கள் மறுக்கப்பட வேண்டியவர்கள். அவர்கள் ஒதுக்கி வைக்கப்பட வேண்டியவர்கள்.
ஆனால் அன்பு சகோதரர்களே! அறியாமை, மடமை இந்த சமூகத்தில் மலிந்து கிடக்கின்ற காரணத்தால் சுன்னத்தை பின்பற்றக் கூடியவர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள்.சுன்னத்துகளை நிலை நிறுத்தக்கூடிய வாலிபர்கள் இந்த சமுதாயத்தில் ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள்.
மஸ்ஜிதிலே நிக்காஹ் நடக்கிறது. மாலை போடவில்லை என்பதற்காக அவன் அந்த மஸ்ஜிதிலிருந்து வெளியேற்றப்படுகிறான்.அவனுக்கு திருமணம் நடத்தி வைக்கக்கூடாது என்பதற்காக சமுதாயமே ஒன்று சேர்ந்திருக்கிறது. இன்னொரு வாலிபன் வருகிறான் அதே மஜ்லிஸிலே உட்கார்ந்திருக்கிறான். அவனோ ஜும்ஆவை தவிர பெருநாளைத்தவிர எந்த தொழுகைக்கும் பள்ளிக்கு வராதவர். அவன் செய்யக்கூடிய வியாபாரம் ஹராமாக கூட இருக்கலாம். ஆனால் அவன் மாலை போட்டிருக்கிறான்.
அவனை முஸ்லிமாக வைத்து மஸ்ஜிதிலே திருமணம் நடத்தி வைக்கப்படுகிறது. மாலை போடவில்லை என்ற ஒரே காரணத்தால் மஸ்ஜிதிலிருந்து அவன் தூக்கி எறியப்படுகின்றான்.
என்ன ஒரு முரண்பாட்டை இந்த சமுதாயம் அளவுகோலாக வைத்திருக்கிறது யோசித்து பாருங்கள்.
இன்று நாம் கேள்விப்படுகிறோம். அல்லாஹ்வுடைய தீனுக்காக எந்த ஒரு கடமையை அல்லாஹு தஆலா நபிமார்களுக்கு முதல் கடமையாக ஆக்கினானோ தஃவாவுடைய கடமை. நபிமார்கள் இந்த உம்மத்திலே அனுப்பப்பட்ட போது அவர்களுக்குகொடுத்த முதல் கடமை நீங்கள் உங்கள் சமுதாய மக்களை அச்சமூட்டி எச்சரிக்கை செய்து அல்லாஹ்வின் பக்கம் அழையுங்கள் என்பதாக தான். (அல்குர்ஆன் 71:1, 7:188)
அங்கு ஒரு தஃவா பணிக்காக அல்லாஹ்வின் அடியார்களை அல்லாஹ்வின் பக்கம் அழைப்பதற்காக அல்லாஹ்வை வணங்க தெரியாத அல்லாஹ் என்றால் யார் என்று தெரியாமல் நம்மை சுற்றி வாழக்கூடய நூற்றுக்கணக்கான ,ஆயிரக்கணக்கான மக்களுக்கு அல்லாஹ்வின் மார்க்கத்தை எடுத்து சொல்லி அவர்களை அரவனைத்து அவர்களுக்கு அல்லாஹ்வுடைய தீனை கற்பிப்பதற்காக உருவாக்கப்பட்ட மஸ்ஜிதிற்கு செல்கிறார்கள்.
அங்கே செல்லாதீர்கள். அது சுன்னத் வல் ஜமாஅத்துடைய பள்ளி இல்லை என்று. எவ்வளவு ஒரு வேதனையான மனதிற்கு வலி தரக்கூடிய ஒரு காரியம் என்பதை யோசித்து பாருங்கள்.அல்லாஹ் அவனுடைய தூதருக்கு என்ன வேலை கொடுத்தான்.
ادْعُ إِلَى سَبِيلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ
நபியே!அல்லாஹ் உமக்கு கொடுத்த மார்க்கத்தின் பக்கம் மக்களை ஞானத்தோடு அழகிய உபதேசத்தோடு அழையுங்கள் என்று சொன்னானே. (அல்குர்ஆன் 16 : 125)
அல்லாஹ்வை பயந்து கொள்வதற்காக அவனுடைய மார்க்கத்தை நிலைநாட்டுவதற்காக தக்வாவுக்காக கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் அங்கே நீங்கள் நின்று தொழுவதற்காக அந்த பள்ளிவாசல்கள் தான் தகுதியான பள்ளிவாசல்கள் என்று அல்லாஹ் அடையாளம் காட்டியிருக்க அவனை மட்டுமே வணங்க வேண்டும்.ஷிர்க் செய்ய கூடாது. இணை வைத்தல் கூடாது . அது பெரும் பாவம்.
لَمَسْجِدٌ أُسِّسَ عَلَى التَّقْوَى مِنْ أَوَّلِ يَوْمٍ أَحَقُّ أَنْ تَقُومَ فِيهِ فِيهِ
ஆரம்பதினத்திலேயே (அல்லாஹ்வின்) பயத்தின் மீது (பரிசுத்தமான எண்ணத்துடன்) அமைக்கப்பட்ட மஸ்ஜிதுதான் நீர் நின்று தொழ(வும் தொழவைக்கவும்) மிகத் தகுதியுடையது. (அல்குர்ஆன் 9 : 108)
وَأَنَّ الْمَسَاجِدَ لِلَّهِ فَلَا تَدْعُوا مَعَ اللَّهِ أَحَدًا (18) وَأَنَّهُ لَمَّا قَامَ عَبْدُ اللَّهِ يَدْعُوهُ كَادُوا يَكُونُونَ عَلَيْهِ لِبَدًا (19) قُلْ إِنَّمَا أَدْعُو رَبِّي وَلَا أُشْرِكُ بِهِ أَحَدً
மஸ்ஜிதுகள் அல்லாஹ்விற்கு சொந்தமானது. அந்த மஸ்ஜிதிலே அல்லாஹ்வைத் தவிர யாரையும் அழைக்காதீர்கள்.
நபியே!அல்லாஹ்வுடைய மஸ்ஜிதிலே அல்லாஹ்வைத் தான் வணங்குவேன். அவனுக்கு இனை வைக்க கூடாது.மஸ்ஜித் அல்லாஹ்வை வணங்குவதற்குதான் என்று அல்லாஹ் வழிகாட்டியிருக்க.(அல்குர்ஆன்72 : 18-20)
அப்படிப்பட்ட ஒரு கொள்கைக்காக அப்படிப்பட்ட ஒரு மார்க்கத்திற்காக உருவாக்கப்பட்ட நிலைநாட்டப்பட்ட கட்டப்பட்ட மஸ்ஜிதிற்கு செல்ல வேண்டாம் என்று சமுதாயம் அறிவிப்பு செய்கிறதே மனதிற்கு வேதனை தரவில்லையா?வலி தரவில்லையா?அல்லாஹ்வுடைய மஸ்ஜிதிலே உட்கார்ந்து கொண்டு,அவர்கள் யா முஹைதீன்,யா அப்துல் காதர் ஜெய்லானி என்று அவர்கள் துஆ செய்து கொண்டிருக்கிறார்கள்.
அல்லாஹ்வுடைய மஸ்ஜிதிலே உட்கார்ந்துக்கொண்டு, இங்கே சூரத்துல் ஃபாத்திஹாவிலே
إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينُ
என்று கூறிவிட்டு,தொழுகை முடிந்தவுடன் தொழுகையிலெல்லாம் ரப்பு என்று சொல்லிவிட்டு தொழுகை முடிந்தவுடன் யா கௌஸ்,யா முஹைதீன்,யா அப்துல் காதர் ஜெய்லானி எங்களுக்கு விரைந்து வந்து உதவி செய்யுங்கள், என்பதாக அவர்கள் துஆ செய்திருக்க, அல்லாஹ் அல்லாதவர்களுடைய பெயரை கூறி அவர்களை அல்லாஹ்விற்கு சமமாக புகழ்ந்து கொண்டிருக்க அதற்காகவே அவர்கள் மஸ்ஜிதை நடத்திக்கொண்டிருக்க, எந்த மஸ்ஜித் இபாதத்துக்காக சுன்னத்துக்காக அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பதற்காக உருவாக்கப்பட்டதோ அந்த மஸ்ஜிதிலிருந்து மக்களை தடுக்கின்றார்கள் என்றால் நன்றாக புரிந்து கொள்ளுங்கள்.
இதை விட அல்லாஹ்விற்கும் அவனுடைய தூதருக்கும் வெறுப்பான செயல் எதுவாக இருக்க முடியும்? அல்லாஹ் அவர்களுக்கு நேர்வழி காட்டுவானாக! குறை சொல்ல வேண்டும் அல்லது அவர்களை சாட வேண்டும் என்பதற்காக சொல்லவில்லை. நமது சமுதாய மக்களுடைய இல்ம் கல்வியின்மை அல்லாஹ்வுடைய மார்க்கத்தை புரியாத அந்த அறியாமை எந்த மிகைத்துவிட்டது என்பதை நீங்கள் உணர்ந்து கொள்ள வேண்டும் என்பதற்காக நான் சுட்டிக்காட்டுகிறேன்.
அல்லாஹ்வுடைய இந்த மார்க்கத்திலே தஃவா என்பது அழைப்புப்பணி என்பது கட்டாய கடமையான ஒன்று. அல்லாஹு தஆலா தன்னுடைய நபிக்கும் அந்த நபியை உண்மையாக பின்பற்றக்கூடிய உண்மையான முஸ்லிமுடைய அடையாளமாக ரப்புல் ஆலமீன் சொல்வது என்ன?
قُلْ هَذِهِ سَبِيلِي أَدْعُو إِلَى اللَّهِ عَلَى بَصِيرَةٍ أَنَا وَمَنِ اتَّبَعَنِي وَسُبْحَانَ اللَّهِ وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ
நபியே நீங்கள் சொல்லுங்கள்.இதுதான் என்னுடைய மார்க்கம். அல்லாஹ்வின் பக்கம் நான் அழைக்கின்றேன். (அல்குர்ஆன் 12 : 108)
நபியினுடைய கடமை என்ன? நபி எப்படி அல்லாஹ்வை தொழ வேண்டும் என்று கட்டளையிடப்பட்டிருக்கின்றார்களோ அது போன்று அல்லாஹ்வின் பக்கம் அழைக்க வேண்டும் என்ற கட்டளையும் அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.நபியே சொல்லுங்கள் இது எனது மார்க்கம். நீங்கள் பின்பற்றக்கூடிய இந்த மார்க்கத்தை உங்களது சொந்தமாக உங்களுக்கு அல்லாஹ் கொடுத்திருக்கின்றான் என உணருங்கள். இது வேறு யாருக்கோ அந்நியருக்கோ அந்நியமாக இந்த மார்க்கத்தை பார்க்காதீர்கள் .
எனவே தான் ரப்புல் ஆலமீன் இன்றைய தினம் உங்களது மார்க்கத்தை உங்களுக்கு நிறைவு செய்து கொடுத்தேன். (அல்குர்ஆன் 5 : 3)
الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمُ الْإِسْلَامَ دِينًا
இந்த மார்க்கம் எனக்கு சொந்தமானது என்ற சொந்த உணர்வு வர வேண்டும். உங்கள் சொந்த வீடாக இருந்தால் நீங்கள் சொந்தமாக கட்டிய வீடாக இருந்தால் பராமரிக்காமல் இருப்பீர்களா? அந்த வீடு சிதிலமடைந்து பூச்சிகளும், புழுக்களும், விஷ ஜந்துகளும் குடியேரி விடுவதை விரும்புவீர்களா? அந்த வீடு பாழாகுவதை இடிந்து விழுவதை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியுமா? யோசித்து பாருங்கள்!.
இந்த தீனை எனது தீன் என்று ஒவ்வொருவரும் எண்ணாத காரணத்தினால்தான் அந்த தீனுக்கு அவரும் மாறு செய்கிறார். பாவம் செய்யக்கூடிய ரப்புக்கு மாறு செய்யக்கூடிய மக்களை பார்த்தும் உணர்வில்லாமல் செத்த பிணத்தை போன்று சூடு சொரனை இல்லாமல் இருக்கின்றோம். அல்லாஹ் பாதுகாப்பானாக.
நன்மையை ஏவி தீமையை தடுப்பது, நன்மையை பார்த்தால் அதை ஊக்குவிப்பது.தீமையை இச்சமூகத்திலே பார்த்தால் கரம்பிடித்து அதை தடுப்பது. இந்த சமூகத்தின் முதுகெலும்பு சகோதரர்களே..
كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ
ரப்பு சொல்கிறான் நீங்கள் சிறந்த சமுதாயம் ஏன் நீங்கள் நன்மையை ஏவுகிறீர்கள் தீமையை தடுக்கிறீர்கள். (அல்குர்ஆன் 3 : 110)
வேறு சமுதாயத்திலே இப்படிப்பட்ட ஒரு அடிப்படையே கிடையாது. யார் எதை செய்தாலும் யார் எதை சொன்னாலும் யார் எப்படி சென்றாலும் சரி. அவர்களுடைய மார்க்கம் கொள்கை சமயம் அதை ஏற்றுக் கொள்ளும். அல்லாஹ்வுடைய தீனிலே அப்படி கிடையாது.
இதை தான் அபூபக்ர் (ரலி)அவர்கள் சொன்னார்கள்.
او ينقص الدين وانا حي ؟
அபூபக்கர் உயிராக இருக்கின்ற நிலையில் இந்த மார்க்கத்தை யாராலும் சேதப்படுத்த முடியுமா? இந்த தீனை யாராலும் குறைக்க முடியுமா? யார் தொழுகையை ஏற்றுக்கொண்டு ஜகாத்தைக் கொடுக்கவில்லையோ அவர்களை வெட்டிசாய்ப்பேன் என்று சொன்னார்கள். (4)
நூல்: புகாரி:1312
சொன்னதை செய்தார்கள். தொழக்கூடிய நிலையிலே ஸஹாபாக்களின் போருக்கு சென்றபோது அவர்களுடைய படை சென்றபோது தொழுகையில் இருந்தார்கள் ஜகாத் கொடுக்காதவர்கள். அந்த மக்கள் தொழுது முடித்த பிறகு அவர்களிடத்திலே கேட்டார்கள். ஜகாத் கொடுக்கிறீர்களா அல்லது மறுக்கிறீர்களா?நாங்கள் ஜகாத்தை கொடுக்கமாட்டோம். ஆனால் தொழுகையை நிறை வேற்றுவோம் என்று சொன்னார்கள்.
ஸஹாபாக்களின் அந்த படை அவர்களை வெட்டி சாய்த்தது. அவர்களில் ஒருவரை கூட உயிரோடுவிட்டு வைக்கவில்லை.
இது அல்லாஹ்வுடைய தீன். அல்லாஹ்வுடைய மார்க்கம். இன்று இந்த மார்க்கத்தை ஏதோ அந்நியமாக நமக்கும், இதற்கும் சம்மந்தமில்லாத மார்க்கமாக விளங்கிக் கொண்டிருக்கிற மக்களை பார்க்கிறோம்.
அல்லாஹ்வுடைய ஃபர்ளான சட்டங்களை பாழாக்கக்கூடிய மக்களை பார்க்கிறோம்.
அல்லாஹ் பாதுகாப்பானாக.அல்லாஹ் சொல்லக்கூடிய அந்த அழகிய உபதேசங்களை யோசித்து பாருங்கள். பார்த்துக் கொண்டு சும்மா இருக்க முடியுமா யோசித்து பாருங்கள்.
وَمَنْ أَحْسَنُ قَوْلًا مِمَّنْ دَعَا إِلَى اللَّهِ وَعَمِلَ صَالِحًا وَقَالَ إِنَّنِي مِنَ الْمُسْلِمِينَ
அல்லாஹ்வின் பக்கம் அவனுடைய அடியார்களை அழைத்து தானும் நல்ல காரியங்களை செய்து முஸ்லிம்களில் ஒருவன் என்று சொல்லி க்கூடிய அழகிய மார்க்கமுடையவர் அழகிய பேச்சுடையவர் அழகிய வழிமுறையுடையவர் யார் இருக்க முடியும்? (அல்குர்ஆன் 41 : 33)
இன்று இந்த அழைப்புப் பணி விடுபட்ட காரணத்தால்
இருக்கக்கூடய முஸ்லிம்களும் உரிமையால் உணர்வால் மார்க்கப்பற்றால் செத்த பிணமாக இருப்பதை பார்க்கிறோம்.அல்லாஹ் பாதுகாப்பானாக.
அல்லாஹ்வுடைய தீனுடைய ஹயாத் இந்த மார்க்கத்தினுடைய புத்துணர்ச்சி இந்த மார்க்கத்தினுடைய சீரமைப்பு அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பதிலே உள்ளது.நன்மையை ஏவி தீமையை தடுப்பதிலேயே உள்ளது. யார் அல்லாஹ்வின் மார்க்கத்தை ஏற்று வருகிறார்களோ அவர்களை அரவணைப்பதிலே இருக்கிறது.
அவர்களுக்கு மார்க்கத்தை சொல்லிக் கொடுப்பதில் .அவர்களுக்கு தங்கள் உடல் பொருள் செல்வத்தை செலவழிப்பதிலே அவர்களுடைய கஷ்ட நஷ்டங்களிலே பங்களிப்பதிலே நம்முடைய புத்துணர்ச்சி ஈமானிய உணர்வுகள் நம்முடைய சமூகத்தின் பாதுகாப்பு நம்முடைய இம்மை மறுமையின் வெற்றி இருக்கிறது. இந்த ஒரு நோக்கத்துக்காக உருவாக்கப்பட்ட மஸ்ஜிதை நீங்கள் பலப்படுத்துங்கள். இதற்கு ஆதரவாக இருங்கள்.
இந்த மஸ்ஜிதிலே நீங்கள் உங்கள் பங்களிப்பை செலுத்துங்கள்.உங்களோடு சேர்ந்து தக்வா பணிகளிலே உங்களுடைய உடல் பொருள் நேரத்தை செலவிடுங்கள். அல்லாஹ் தஆலா எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வை வணங்ககூடிய அனைவருக்கும் அல்லாஹ்வுடைய தீனை மார்க்கத்தை ஏற்று நடந்து அதை பின்பற்றி மக்களை அவன் பக்கம் அழைக்கக்கூடிய பாக்கியத்தை நமக்கு தந்தருள் புரிவானாக.
அதே நிலையிலேயே சுபுஹானஹு வதஆலா நம்மை உறுதிப்படுத்தி இறுதி மூச்சுவரை நிலைத்திருக்க உதவி செய்வானாக. நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்பட்ட நிலையிலே அல்லாஹ் நம்மை பொருந்திக்கொண்ட நிலையிலே இந்த உலகத்தைவிட்டு பிரிந்து செல்லக்கூடிய பாக்கியத்தை அல்லாஹ்விடத்திலே எனக்கும் உங்களுக்கும் கேட்டு நிறைவு செய்கிறேன்.
குறிப்புகள் :
குறிப்பு 1).
و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا عَبْدُ الْوَهَّابِ بْنُ عَبْدِ الْمَجِيدِ عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَكَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَطَبَ احْمَرَّتْ عَيْنَاهُ وَعَلَا صَوْتُهُ وَاشْتَدَّ غَضَبُهُ حَتَّى كَأَنَّهُ مُنْذِرُ جَيْشٍ يَقُولُ صَبَّحَكُمْ وَمَسَّاكُمْ وَيَقُولُ بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ كَهَاتَيْنِ وَيَقْرُنُ بَيْنَ إِصْبَعَيْهِ السَّبَّابَةِ وَالْوُسْطَى وَيَقُولُ أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ ثُمَّ يَقُولُ أَنَا أَوْلَى بِكُلِّ مُؤْمِنٍ مِنْ نَفْسِهِ مَنْ تَرَكَ مَالًا فَلِأَهْلِهِ وَمَنْ تَرَكَ دَيْنًا أَوْ ضَيَاعًا فَإِلَيَّ وَعَلَيَّو حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلَالٍ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُا كَانَتْ خُطْبَةُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْجُمُعَةِ يَحْمَدُ اللَّهَوَيُثْنِي عَلَيْهِ ثُمَّ يَقُولُ عَلَى إِثْرِ ذَلِكَ وَقَدْ عَلَا صَوْتُهُ ثُمَّ سَاقَ الْحَدِيثَ بِمِثْلِهِ و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْسُفْيَانَ عَنْ جَعْفَرٍ عَنْ أَبِيهِ عَنْ جَابِرٍ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ النَّاسَ يَحْمَدُ اللَّهَ وَيُثْنِي عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ يَقُولُ مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَخَيْرُ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ ثُمَّ سَاقَ الْحَدِيثَ بِمِثْلِ حَدِيثِ الثَّقَفِيِّ) صحيح مسلم- (1435
குறிப்பு 2).
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا غُنْدَرٌ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ زُبَيْدٍ عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ عَنْ عَلِيٍّ رَضِيَ اللَّهُ عَنْهُأَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ جَيْشًا وَأَمَّرَ عَلَيْهِمْ رَجُلًا فَأَوْقَدَ نَارًا وَقَالَ ادْخُلُوهَا فَأَرَادُوا أَنْ يَدْخُلُوهَا وَقَالَ آخَرُونَ إِنَّمَا فَرَرْنَا مِنْهَا فَذَكَرُوا لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ لِلَّذِينَ أَرَادُوا أَنْ يَدْخُلُوهَا لَوْ دَخَلُوهَا لَمْ يَزَالُوا فِيهَا إِلَى يَوْمِ الْقِيَامَةِ وَقَالَ لِلْآخَرِينَ لَا طَاعَةَ فِي مَعْصِيَةٍ إِنَّمَا الطَّاعَةُ فِي الْمَعْرُوفِ (صحيح البخاري6716 -)
குறிப்பு 3).
حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ حَدَّثَنَا أَبُو دَاوُدَ الْحَفَرِيُّ عَنْ سُفْيَانَ الثَّوْرِيِّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زِيَادٍ الْأَفْرِيقِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيَأْتِيَنَّ عَلَى أُمَّتِي مَا أَتَى عَلَى بَنِي إِسْرَائِيلَ حَذْوَ النَّعْلِ بِالنَّعْلِ حَتَّى إِنْ كَانَ مِنْهُمْ مَنْ أَتَى أُمَّهُ عَلَانِيَةً لَكَانَ فِي أُمَّتِي مَنْ يَصْنَعُ ذَلِكَ وَإِنَّ بَنِي إِسْرَائِيلَ تَفَرَّقَتْ عَلَى ثِنْتَيْنِ وَسَبْعِينَ مِلَّةً وَتَفْتَرِقُ أُمَّتِي عَلَى ثَلَاثٍ وَسَبْعِينَ مِلَّةً كُلُّهُمْ فِي النَّارِ إِلَّا مِلَّةً وَاحِدَةً قَالُوا وَمَنْ هِيَ يَا رَسُولَ اللَّهِ قَالَ مَا أَنَا عَلَيْهِ وَأَصْحَابِي (سنن الترمذي- 2565)
குறிப்பு 4).
حَدَّثَنَا أَبُو الْيَمَانِ الْحَكَمُ بْنُ نَافِعٍ أَخْبَرَنَا شُعَيْبُ بْنُ أَبِي حَمْزَةَ عَنْ الزُّهْرِيِّ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ بْنِ مَسْعُودٍ أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ لَمَّا تُوُفِّيَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَكَانَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ وَكَفَرَ مَنْ كَفَرَ مِنْ الْعَرَبِ فَقَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ كَيْفَ تُقَاتِلُ النَّاسَ وَقَدْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أُمِرْتُ أَنْ أُقَاتِلَ النَّاسَ حَتَّى يَقُولُوا لَا إِلَهَ إِلَّا اللَّهُ فَمَنْ قَالَهَا فَقَدْ عَصَمَ مِنِّي مَالَهُ وَنَفْسَهُ إِلَّا بِحَقِّهِ وَحِسَابُهُ عَلَى اللَّهِ فَقَالَ وَاللَّهِ لَأُقَاتِلَنَّ مَنْ فَرَّقَ بَيْنَ الصَّلَاةِ وَالزَّكَاةِ فَإِنَّ الزَّكَاةَ حَقُّ الْمَالِ وَاللَّهِ لَوْ مَنَعُونِي عَنَاقًا كَانُوا يُؤَدُّونَهَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَاتَلْتُهُمْ عَلَى مَنْعِهَا قَالَ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ فَوَاللَّهِ مَا هُوَ إِلَّا أَنْ قَدْ شَرَحَ اللَّهُ صَدْرَ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ فَعَرَفْتُ أَنَّهُ الْحَقُّ صحيح البخاري-1312 -)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/