HOME      Khutba      துன்பங்களில் அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்குவோம்! | Tamil Bayan - 452   
 

துன்பங்களில் அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்குவோம்! | Tamil Bayan - 452

           

துன்பங்களில் அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்குவோம்! | Tamil Bayan - 452


بسم الله الرحمان الرحيم
 
துன்பங்களில் அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்கிடுவோம்.
 

إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான்:

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள்:  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த  உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள்: நம்பிக்0கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

 
 
அல்லாஹ்வின் நல்லடியார்களே, அல்லாஹ்வை பயந்து கொள்ளுமாறு எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்வின் அச்சத்தை நினைவூட்டியவனாக அல்லாஹ்வின் மார்க்கத்தை சட்ட வரம்புகளை பேணும்படி எனக்கும் உங்களுக்கும் உபதேசித்தவனாக இந்த ஜும்மா குத்பா ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹ் நமது பாவங்களை மன்னிப்பானாக நன்மைகளை அதிகரித்துக் கொள்வதற்கு அருள்புரிவானாக. எல்லாவிதமான தீமைகள் கெடுதல்கள் குழப்பங்களிலிருந்து அல்லாஹ் நம் அனைவரையும் பாதுகாப்பானாக.! ஆமீன். 
 
கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா இந்த காலங்களை அவனுடைய திட்டத்தின்படி மாற்றிக் கொண்டே வருகிறான். 
 
إِنْ يَمْسَسْكُمْ قَرْحٌ فَقَدْ مَسَّ الْقَوْمَ قَرْحٌ مِثْلُهُ وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ وَلِيَعْلَمَ اللَّهُ الَّذِينَ آمَنُوا وَيَتَّخِذَ مِنْكُمْ شُهَدَاءَ وَاللَّهُ لَا يُحِبُّ الظَّالِمِينَ
 
நீங்கள் (தோல்வியுற்றுக்) காயமடைந்தால் (அதன் காரணமாக தைரியம் இழக்காதீர்கள். ஏனென்றால்,) அந்த மக்களும் இதைப்போன்றே (தோல்வியுற்றுக்) காயமடைந்திருக்கின்றனர். இத்தகைய கஷ்டகாலம் மனிதர்களுக்கு இடையில் மாறிமாறி வரும்படி நாம்தான் செய்கிறோம். ஏனென்றால், உங்களில் உண்மையாகவே நம்பிக்கை கொண்டவர்கள் யாரென்று அல்லாஹ் அறி(வித்து விடு)வதற்காகவும், உங்களில் (மார்க்கத்திற்காக உயிரை அர்ப்பணம் செய்யும்) மாபெரும் தியாகியை அவன் எடுத்த(றிவிப்ப)தற்காகவுமே (இவ்வாறு செய்கிறான்). அநியாயக்காரர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 3 : 140)
 
 
 
ஒருவர் அரசராக இருப்பார் அவரையே அல்லாஹ் கைதியாக ஆக்குவதற்கு ஆற்றலுடையவன். எத்தனையோ மனிதர்களுக்கு தீர்ப்பு எழுதியவருக்கும் ஒருநாள் தீர்ப்பு எழுதப்படும். 
 
 
 
கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ் இந்த பூமியில் இதுவரை அவன் நடத்திக் கொண்டிருக்கிற இந்த வரலாற்று நிகழ்வுகள் மனிதனுக்கு படிப்பினை தருவதற்கு பாடம் போதிப்பதற்கு போதுமானது. 
 
مَا كَانَ عَلَى النَّبِيِّ مِنْ حَرَجٍ فِيمَا فَرَضَ اللَّهُ لَهُ سُنَّةَ اللَّهِ فِي الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلُ وَكَانَ أَمْرُ اللَّهِ قَدَرًا مَقْدُورًا
 
அல்லாஹ் தனக்கு சட்டமாக்கிய ஒரு காரியத்தை நிறைவேற்றுவது நபி மீது குற்றமாகாது. இதற்கு முன் உள்ளவர்களுக்கு (நபிமார்களுக்கு) அல்லாஹ் ஏற்படுத்திய வழியும் இதுவே. அல்லாஹ்வுடைய கட்டளைகள் முன்னதாகவே நிர்ணயிக்கப்பட்டு விடுகின்றன.
 
(அல்குர்ஆன் 33 : 38)
 
 
 
கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ் தன் திருமறையில் ,
 
لَا مُعَقِّبَ لِحُكْمِهِ
 
அவனுடைய சட்டத்தை அதிகாரத்தை யாரும் தள்ளிப்போட முடியாது. யாரும் மாற்ற முடியாது. யாரிடத்திலும் அதற்கு ஆற்றல் இல்லை. (அல்குர்ஆன் 13 : 41)
 
وَاللَّهُ غَالِبٌ عَلَى أَمْرِهِ
 
அல்லாஹ் தனது திட்டத்தின் மீது முற்றிலும் மிகைத்தவன். யாரும் அவனை தோற்கடிக்க முடியாது. அவனை பலவீனப்படுத்த முடியாது. (அல்குர்ஆன்12 : 21)
 
فَعَّالٌ لِمَا يُرِيدُ
 
தான் விரும்பியதையெல்லாம் செய்யக் கூடியவன். (அல்குர்ஆன் 85 : 16)
 
قَالَ رَبِّ أَنَّى يَكُونُ لِي غُلَامٌ وَقَدْ بَلَغَنِيَ الْكِبَرُ وَامْرَأَتِي عَاقِرٌ قَالَ كَذَلِكَ اللَّهُ يَفْعَلُ مَا يَشَاءُ
 
அவன் நாடியதை செய்துவிடுவான். அவன் ஒன்றை செய்ய நாடும்போது ஒன்றை உருவாக்க நாடும் போது அவனுக்கு காரணம் தேவையில்லை. அவனுக்கு முன் ஏற்பாடுகள் தேவை இல்லை. அவனுடைய சூழ்ச்சி மிக பயங்கரமானது. (அல்குர்ஆன் 3 : 40)
 
أَفَأَمِنُوا مَكْرَ اللَّهِ فَلَا يَأْمَنُ مَكْرَ اللَّهِ إِلَّا الْقَوْمُ الْخَاسِرُونَ
 
அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து அவர்கள் அச்சமற்று விட்டனரா? (முற்றிலும்) நஷ்டமடையக்கூடிய மக்களைத் தவிர எவரும் அல்லாஹ்வின் சூழ்ச்சிக்கு அச்சமற்று இருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 7 : 99)
 
 
 
அல்லாஹ்வுடைய சூழ்ச்சியை அல்லாஹ்வுடைய  திட்டங்களை பயந்து கொண்டு இருக்க வேண்டும். தன் விஷயத்திலும் சரி. தன் குடும்பத்தார்கள் விஷயத்திலும் சரி. தான் வாழ்கின்ற  அரசாங்கத்திலும் சரி. அல்லாஹ் எதை எப்போது எப்படி வேண்டுமானாலும் மாற்ற முடியும். நமக்கு சாதகமானவர்களை நமக்கு  பாதகமானவர்களாகவும் மாறலாம். நமக்கு எதிரானவர்கள் நண்பர்களாகவும் மாறலாம். 
 
 
 
நீங்கள் சிலரின் மூலமாக உங்களுக்கு நன்மை என்று நினைப்பீர்கள். அல்லாஹ் அதே நபரை உங்களுக்கு சூழ்ச்சியாளராகவும் மாற்றிவிடலாம்.  
 
 
 
அன்பானவர்களே! அல்லாஹ்விடம் மிகப் பெரியது. அடியானுக்கு என்ன அழகு? அல்லாஹ்வை பயந்து கொண்டே இருக்க வேண்டும். அல்லாஹ்வின் சூழ்ச்சியிலிருந்து ஒருவன் அச்சமற்றுவிடுகின்றான் என்றால் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து ஒருவன் அச்சமற்றுவிடுகின்றான் என்றால் அவன் நஷ்டவாளி. 
 
 
 
அல்லாஹ் இந்த பூமியில் ஆட்சியை கொடுத்தும். சோதிப்பான். ஆட்சியை பிடிங்கியும்  சோதிப்பான். கண்ணியத்தைக் கொடுத்தும்  சோதிப்பான்.இழிவை  கொடுத்தும் சோதிப்பான். செல்வத்தைக் கொடுத்தும் சோதிப்பான். வறுமையை கொடுத்தும் சோதிப்பான். சுகம் ஆரோக்கியம்  கொடுத்தும் சோதிப்பான். நோய் நொடிகளை கொண்டும் சோதிப்பான். 
 
 
 
கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ் நம்பிக்கை கொண்ட அடிமையை நம்பிக்கை கொண்ட இந்த உலகத்தில் எந்த ஒன்றானாலும்  சரி அல்லாஹ்வின் நாட்டப்படியே தவிர நடக்காது என்று ஈமான் உடையவர் அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்க வேண்டும். சூழ்நிலைகள் மாறும் போது சந்தர்ப்பங்கள்  பாதகமாக அமையும் போது குழப்பங்கள் உருவாகும் போது ஆபத்துகள் எதிர் நோக்கும் போது அந்த முஃமின் அந்த இறை விசுவாசிக்கு அல்லாஹ் ஒருவன் மட்டுமே கண்ணுக்கு முன்னால் இருக்க வேண்டும். 
 
 
 
ரப்பு, ஒருவனே எனக்கு அடைக்கலம் கொடுப்பவன். என்னை ஆதரிப்பவன். என்னை ரட்சிப்பவன். எனக்கு கை கொடுப்பவன். என்ற முழுமையான தகவல்கள் அந்த அடியானுக்கு தன்னை படைத்த ரப்பின் மீது இருக்க வேண்டும். இன்று நம்முடைய பிரச்சனை இதுதான். மறந்துவிடுகிறோம், பதற்றபடுகிறோம், குழப்பமடைகிறோம். திகில் அடைகிறோம். திகைத்து நிற்கிறோம். 
 
 
 
அல்லாஹ்வை நம்பாத ஒருவருடைய நிலை எப்படியோ அதே நிலைக்கு நம்முடைய பலவீனமான ஈமானால் இருக்கிறது. ஆனால் பலவீனமாக ஈமானாக இருக்கிறது. நம்பிக்கை இருக்கிறது, ஆனால் பலவீனமாக இருக்கிறது. அல்லாஹ்வை ஏற்றுக் கொள்கிறோம், ஆனால் பலவீனத்தோடு. நமது நம்பிக்கையில் பலவீனம். நம்முடைய உள்ளத்தின் ஆழத்தில் இருக்கின்ற இறை விசுவாசம். நமக்கு தவக்குளை அந்த இறை நம்பிக்கையை நமக்குத் தரக்கூடிய அளவுக்கு வலுவில்லாமல் இருக்கிறது. 
 
 
 
கண்ணியத்திற்குரியவர்களே! அல்லாஹ் சொல்வதைப் பாருங்கள். 
 
إِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوعًا (20) وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا
 
.ஏனென்றால், அவனை ஒரு தீங்கு அடைந்தால், (திடுக்கிட்டு) நடுங்குகிறான். அவனை ஒரு நன்மை அடைந்தாலோ, அதை (தர்மம் செய்யாது) தடுத்துக் கொள்கிறான். (அல்குர்ஆன் 70 : 20,21)
 
 
 
மனிதனின் நிலையை அல்லாஹ் வர்ணிக்கிறான். இந்த மனிதனுக்கு என்ன ஆனது. இவனுக்கு ஒரு தீமை ஏற்பட்டால், தீமை என்று அல்லாஹ் எதை சொல்கிறான் எதை மனிதனுக்கு பிடிக்காதோ எதை மனிதன் வெறுக்கிறானோ. தொழிலில் நஷ்டம், உடல் ஆரோக்கியத்தின் நோய்கள் இன்னும் இவனுடைய வாழ்க்கை நெருக்கடிக்கு ஆளாக்கக்கூடியது. இவனுடைய பொருளாதாரத்தில் இவனுக்கு நெருக்கடியை ஏற்படுத்தக்கூடிய இவனுடைய உலக வாழ்க்கையை, இவனுக்கு கசப்பாக பார்க்கக்கூடிய எதுவாக இருந்தாலும் சரி. அதுவெல்லாம்  இந்த தீமை என்ற வார்த்தைக்குள் வரும். 
 
 
 
மனிதனுக்கு தீமை ஏற்பட்டால் இவன் இப்படி திடு திடுக்கின்றானே, பதற்றப்படுகின்றானே, நடுநடுங்குகிறானே. என்ன பதற்றம்? பதற்றம் இருக்க வேண்டும். எந்த பதற்றம் அல்லாஹ் என்னுடைய தீமையால் என்னை சோதித்து விடாதே. அல்லாஹ்வின் தண்டனையை கொண்டு பதற்றம் இருக்க வேண்டும். அல்லாஹ்வின் கோபத்தை கொண்டு திடுக்கம் இருக்க வேண்டும். அல்லாஹ்வின் பிடியாக இருக்குமோ என்ற உணர்வு இருக்கவேண்டும். ஆனால் அது இருப்பதில்லை. 
 
 
 
எப்படிப்பட்ட அச்சம் ஆஹா இப்படி ஆகிவிட்டதே. என் நிலை என்னவாகும் நாளைக்கு நான் என்ன செய்வேன். எனது நிலை என்ன? எனது பிள்ளைகள் நிலை என்ன? எனது குடும்பத்தின் நிலை என்ன? எனது பொருளாதாரம் என்ன? எனது வியாபாரம் என்ன? எனது தொழில் என்ன? இப்படி அவனை  நம்பாமல் பயம் அல்லாஹ்வை மறந்து தான். அல்லாஹ் கூறுகிறான். 
 
 
 
மனிதனுக்கு தீங்கு ஏற்பட்டால் அவன் பதற்றப்பட்டவனாக, திடுக்கம் உள்ளவனாக, நடுநடுங்கியவனாக, குழப்பமடைந்தவனாக, திகைத்தவனாக ஆகிவிடுகிறான். 
 
 
 
அவனுக்கு செல்வம் கிடைத்தால் பொருளாதார வசதி ஏற்பட்டால் அதை தனக்கு மட்டும் என்று வைத்துக் கொள்கிறான். அல்லாஹ் இவருடைய வறுமையை போக்கி செல்வத்தை கொடுத்தால், இவனுடைய கஷ்டத்தை போக்கி பொருளாதார வசதியை கொடுத்தால், இந்த செல்வமெல்லாம் எனக்கு என்று சுகபோக வாழ்க்கையை வாழ்ந்து அல்லாஹ்வை மறந்து உரிமையை மறந்து ஒரு மமதையின் வாழ்க்கைக்கு சென்றுவிடுகிறான். 
 
 
 
கண்ணியத்திற்குரியவர்களே! இங்கு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சொல்லக்கூடிய முதல் வார்த்தை துக்கம் பயம் சூழ்நிலைகள் மாறும் போது, இப்போது நாம் சந்தித்து வருகின்ற காலங்களில் நமது நிலையை பற்றி நாம் சிந்திக்க வேண்டும். 
 
 
 
அன்பானவர்களே! இதற்கு முன்பும் இதை விட ஒரு பெரிய பெரிய பயங்கரமான சூழ்நிலைகள் எல்லாம், நெருக்கடிகள் எல்லாம், துன்பங்கள் எல்லாம், உலக மக்களுக்கு ஏற்படுகின்றது. அவற்றிலும் குறிப்பாக நம்பிக்கையாளர்களுக்கு முஃமின்களுக்கு ஏற்பட்டு இருக்கின்றன. அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவராக பூமியில் வாழ முடியாமல், அல்லாஹ் என்று சொல்ல முடியாமல் அல்லாஹ் என்று சொன்னால் அது ஒரு கொலை குற்றமாக கருதப்பட்ட முஃமீன்கள் எல்லாம் இந்த வரலாற்றில் சென்று இருக்கவில்லையா? 
 
 
 
குகைவாசிகளால் அல்லாஹ் என்று அவர்கள் நாட்டிலேயே சொல்லமுடியவில்லை. லா இலாஹ இல்லல்லாஹு என்று சொல்ல முடியவில்லை. ஊரில் வசிக்க முடியவில்லை. ஊரை விட்டு ஓடினார்கள். அல்லாஹ் என்று சொன்ன காரணத்தால், லாயிலாஹ இல்லல்லாஹு ஏற்றுக் கொண்ட காரணத்தால் 70000 முஃமீன்கள் நெருப்பில் எரிக்கப்பட்டனர்.
 
قُتِلَ أَصْحَابُ الْأُخْدُودِ
 
அகழுடையவர்கள் அழிக்கப்பட்டார்கள். (அல்குர்ஆன் 85 : 4)
 
وَمَا نَقَمُوا مِنْهُمْ إِلَّا أَنْ يُؤْمِنُوا بِاللَّهِ الْعَزِيزِ الْحَمِيدِ
 
(நம்பிக்கை கொண்ட) அவர்களில் ஒரு குற்றத்தையும் அவர்கள் காணவில்லை. எனினும், மிக்க புகழுடையவனும், (அனைவரையும்) மிகைத்தவனுமாகிய அல்லாஹ்வை அவர்கள் நம்பிக்கை கொண்டதையே அவர்கள் குற்றமாகக் கண்டனர். (அல்குர்ஆன் 85 : 8)
 
إِنَّ الَّذِينَ فَتَنُوا الْمُؤْمِنِينَ وَالْمُؤْمِنَاتِ ثُمَّ لَمْ يَتُوبُوا فَلَهُمْ عَذَابُ جَهَنَّمَ وَلَهُمْ عَذَابُ الْحَرِيقِ
 
ஆகவே, எவர்கள் நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் இவ்வாறு துன்புறுத்தி பின்னர், அதைப்பற்றி அவர்கள் (கைசேதப்பட்டு) மன்னிப்புக் கோரவும் இல்லையோ, அவர்களுக்கு நிச்சயமாக நரக வேதனை உண்டு. மேலும், (அவர்கள் நம்பிக்கையாளர்களை நெருப்பிட்டவாறு) அவர்களுக்கும் பொசுக்குகின்ற வேதனையுண்டு. (அல்குர்ஆன் 85 : 10)
 
 
 
முஃமீன்களை யார் வேதனை செய்தார்களோ, முஃமீன்களான பெண்களை யார் வேதனை செய்தார்களோ, பொதுவாக ஆண்களுக்கு பயன்படுத்துகின்ற வார்த்தைதான் குர்ஆனிலே  பெண்களுக்கும் பயன்படுத்துவான். சில இடங்களில் முஃமினான பெண்கள் என்றும் அல்லாஹ் விசேஷமாக சொல்வான்.  முதல் சொல்லக்கூடிய அந்த வார்த்தை ஈமானை ஏற்றுக்கொண்ட இனத்தவர்கள் எல்லோரையும் ஆண்கள் பெண்கள் என்று ஏற்றுக்கொண்டாலும், சில இடங்களில் அல்லாஹ் பெண்கள் என்ற வார்த்தையும் அவன் குறிப்பிட்டு சொல்வான். இந்த வார்த்தையின் பின்னணியில் மிகப்பெரிய ஒரு வரலாற்று சம்பவம் இருக்கிறது. 
 
 
 
முஃமீன்களான பெண்களையும், முஃமீன்களான ஆண்களையும் தண்டித்தவர்கள் பிறகு தனது தவறுக்காக திருந்தவில்லை அவர்கள் வருந்தவில்லை என்றால் அவர்களுக்கு நரகத்தின் வேதனை இருக்கிறது. நரகத்தில் அவர்களை சுட்டு பொசுக்கக்கூடிய வேதனை இருக்கிறது. 
 
حَتَّى جَاءَتْ امْرَأَةٌ وَمَعَهَا صَبِيٌّ لَهَا فَتَقَاعَسَتْ أَنْ تَقَعَ فِيهَا فَقَالَ لَهَا الْغُلَامُ يَا أُمَّهْ اصْبِرِي فَإِنَّكِ عَلَى الْحَقِّ
 
கண்ணியத்திற்குரியவர்களே, அது என்ன முஃமினான பெண்ணுடைய வரலாறு, இந்த வார்த்தைக்கு பின்னால் இருக்கிறது. ஒவ்வொருவராக அழைத்து வரப்பட்டு அல்லாஹ்வை நிராகரித்து இந்த மன்னனை இறைவனாக ஏற்றுக் கொள்கிறாயா? என்று கேட்கப்படுகிறது. அவர் சொல்கிறார் "இந்த மன்னனை நிராகரித்தேன் அல்லாஹ்வை ஏற்றுக்கொண்டேன்" என்று. அப்படியே தூக்கி நெருப்பிலே தள்ளப்படுகிறார். அகழ் நெருப்பிலே அவர் வீசி எறிய படுகிறார். 
 
 
 
இப்படியாக ஒருவர் பின் ஒருவராக வரும்போது, ஒரு கைக்குழந்தையோடு ஒரு பெண் ஒருவர் வருகிறாள். அவள்தான் கடைசியில் அந்த உம்மத்தில் மிஞ்சியவள் அந்த ஒரு பெண்தான். பச்சை குழந்தையோடு மார்பில் அணைத்த அந்த ஒரு பெண் வருகிறாள். அப்போது கேட்கப்படுகிறது அல்லாஹ்வை நிராகரிக்கிறாயா? ஏற்றுக் கொள்கிறாயா? என்று. இல்லை என்றால் இந்த நெருப்புதான். அந்த பெண்ணுக்கு தன் மீது பயமில்லை. 
 
தன்னைப் பற்றிய தடுமாற்றம் இல்லை. ஒன்றும் அறியா இந்த குழந்தை நான்  முஃமின் என்ற காரணத்தால் என்னோடு சேர்ந்து தண்டிக்கப்படுவது. அந்த குழந்தையை பார்த்து அந்த தாயின்  உள்ளத்திலே அவளுடைய நிலையை  சற்றே தடுமாற வைக்கிறது. 
 
 
 
அன்பானவர்களே! எந்த மூன்று குழந்தைகளை அல்லாஹ்  சிறுவர் பருவத்தில் இருக்கும்போது பேச வைத்தானோ அந்த மூன்று குழந்தைகளில் ஒரு குழந்தை தான் இந்த சம்பவத்தில் இருக்கக்கூடிய குழந்தை. 
 
 
 
அல்லாஹ், அந்த குழந்தைக்கு பேசக்கூடிய ஆற்றலை கொடுக்கின்றான். அந்த குழந்தை பேசுகிறது. "என் தாயே பொருத்துக்கொள், சகித்துக் கொள், நீ சத்தியத்தில் இருக்கிறாய்". அந்த குழந்தையோடு நெருப்பில் குதித்து விடுகிறார் அந்த தாய். முஸ்லிம் 3005 (1)
 
 
 
இப்படிப்பட்ட வரலாறுகளை எல்லாம் சந்தித்து தான் நாம் வந்திருக்கிறோம். முஃமினுடைய  ஒரு நிலை அவனுடைய நம்பிக்கை அல்லாஹ்வின் மீதே இருக்க வேண்டும். காலங்களின் சூழ்நிலைகளை மாற்ற கூடியவன், நாளை என்ன நடக்கும் என்பது அல்லாஹ்விடத்தில் இருக்கிறது. 
 
وَعِندَهُۥ مَفَاتِحُ ٱلْغَيْبِ لَا يَعْلَمُهَآ إِلَّا هُوَ وَيَعْلَمُ مَا فِى ٱلْبَرِّ وَٱلْبَحْرِ وَمَا تَسْقُطُ مِن وَرَقَةٍ إِلَّا يَعْلَمُهَا وَلَا حَبَّةٍ فِى ظُلُمَٰتِ ٱلْأَرْضِ وَلَا رَطْبٍ وَلَا يَابِسٍ إِلَّا فِى كِتَٰبٍ مُّبِينٍ
 
மறைவானவற்றின் சாவிகள் அல்லாஹ்விடத்தில் இருக்கிறது. அவனைத் தவிர வேறு யாரும் அதை அறிய மாட்டார்கள். கடலில் என்ன நடக்கும், தரையில் என்ன நடக்கும், அல்லாஹ் அறிந்தவன். ஒரு மரத்திலிருந்து இலை விழுந்தாலும் அல்லாஹ்வின் நாட்டம். அல்லாஹ்வின் இஷ்டம் இல்லாமல் விழுகாது. இந்த பூமியின் இருள்களில் இருக்கக்கூடிய ஒரு சின்ன விதையாக இருந்தாலும் சரி, ஈரமான அல்லது காய்ந்த எந்த பொருளாக இருந்தாலும் சரி அல்லாஹ்வின் தெளிவான பதிவு புத்தகத்தில் இல்லாமல் ஒன்றுமே நடப்பதில்லை. (அல்குர்ஆன் 6 : 59)
 
 
 
இந்த வசனம் நமக்கு எதை போதிக்கிறது? கால சூழ்நிலைகள் அல்லாஹ்வின் நாட்டம் இல்லாமல் மாறாது. நாம் நினைப்போம் இவர் மாற்றினார் அவர் மாற்றினார். இவர் கொண்டு வந்தார் அவர் கொண்டுவந்தார் என்று. அல்லாஹ் நாடாமல் எதுவும் நடக்காது. அல்லாஹ் நாடாமல் ஒரு மரத்தின் இலைகள் கீழே விழ முடியாது என்று சொன்னால், இந்த உலகத்தின் நிலையை அல்லாஹ் நாடாமல் வேறு யாரால் மாற்ற முடியும். 
 
 
 
மனிதன் தன்னுடைய செயலைப் பற்றிய சிந்திக்க கடமைப்பட்டு  இருக்கிறான். இன்று நாம் அல்லாஹ்வின் நிகழ்வுகளை குறித்து சிந்தித்து அதற்கு விமர்சனம் கூறி கொண்டிருக்கிறோம். நம்முடைய செயல்களுக்கு ஆயிரம் ஆயிரம் விமர்சனங்கள்  தேவையாக இருக்கிறது. ஆனால் நம்முடைய செயல்களை நாம் விமர்சனம் செய்வதில்லை அவருடைய செயலுக்கு விமர்சனம் கூறிக்கொண்டு இருக்கிறோம். 
 
 
 
அன்பானவர்களே! சூழ்நிலைகள் அல்லாஹ்வின் கையிலேயே இருக்கிறது. ஒரு முஃமின் அவனுடைய நம்பிக்கை அல்லாஹ்வுடைய கருத்தின் மீது அல்லாஹ்வுடைய திட்டத்தின் மீது இருக்க வேண்டும். ரப்பு சொல்லுகிறான்.
 
إِنَّ رَبَّكُمُ اللَّهُ الَّذِي خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ فِي سِتَّةِ أَيَّامٍ ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ يُدَبِّرُ الْأَمْرَ مَا مِنْ شَفِيعٍ إِلَّا مِنْ بَعْدِ إِذْنِهِ ذَلِكُمُ اللَّهُ رَبُّكُمْ فَاعْبُدُوهُ أَفَلَا تَذَكَّرُونَ
 
(மனிதர்களே!) உங்கள் இறைவனாகிய அந்த அல்லாஹ்தான் வானங்களையும், பூமியையும் ஆறு நாள்களில் படைத்து ‘அர்ஷின்' மீது (தன் மகிமைக்குத் தக்கவாறு) உயர்ந்துவிட்டான். (இவை சம்பந்தப்பட்ட) எல்லா காரியங்களையும் அவனே திட்டமிட்டு (நிர்வகித்து)ம் வருகிறான். அவனுடைய அனுமதியின்றி (உங்களுக்காக அவனிடம்) பரிந்து பேசுபவர் எவருமில்லை. அந்த அல்லாஹ்தான் உங்களைப் படைத்து வளர்த்து காக்கும் இறைவன். ஆகவே, அவன் ஒருவனையே நீங்கள் வணங்குங்கள். (நல்லுணர்ச்சி பெற இவற்றை) நீங்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? (அல்குர்ஆன் 10 : 3)
 
 
 
قُلْ مَنْ يَرْزُقُكُمْ مِنَ السَّمَاءِ وَالْأَرْضِ أَمَّنْ يَمْلِكُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَمَنْ يُخْرِجُ الْحَيَّ مِنَ الْمَيِّتِ وَيُخْرِجُ الْمَيِّتَ مِنَ الْحَيِّ وَمَنْ يُدَبِّرُ الْأَمْرَ فَسَيَقُولُونَ اللَّهُ فَقُلْ أَفَلَا تَتَّقُونَ
 
(நபியே!) நீர் (அவர்களை நோக்கி) ‘‘வானத்திலிருந்தும் பூமியில் இருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? (உங்கள்) செவிக்கும் பார்வைகளுக்கும் உரிமையாளன் யார்? இறந்தவற்றிலிருந்து உயிருள்ளவற்றையும், உயிருள்ள வற்றிலிருந்து இறந்தவற்றையும் வெளிப்படுத்துபவன் யார்? (உலகின்) எல்லாக் காரியங்களையும் திட்டமிட்டு நிர்வகித்து நிகழ்த்துபவன் யார்?'' என்று கேட்பீராக! அதற்கவர்கள் ‘‘அல்லாஹ்தான்'' என்று கூறுவார்கள். அவ்வாறாயின் (அவனுக்கு) நீங்கள் பயப்பட வேண்டாமா?'' என்று கேட்பீராக. (அல்குர்ஆன் 10 : 31)
 
 
 
) اللَّهُ الَّذِي رَفَعَ السَّمَاوَاتِ بِغَيْرِ عَمَدٍ تَرَوْنَهَا ثُمَّ اسْتَوَى عَلَى الْعَرْشِ وَسَخَّرَ الشَّمْسَ وَالْقَمَرَ كُلٌّ يَجْرِي لِأَجَلٍ مُسَمًّى يُدَبِّرُ الْأَمْرَ يُفَصِّلُ الْآيَاتِ لَعَلَّكُمْ بِلِقَاءِ رَبِّكُمْ تُوقِنُونَ
 
வானங்களை தூணின்றியே உயர்த்தியவன் அல்லாஹ்வே! அதை நீங்கள் (உங்கள் கண்களால்) காண்கிறீர்கள். அன்றி அர்ஷின் மீது அவன் (தன் மகிமைக்குத்தக்கவாறு) உயர்ந்து விட்டான். அவனே சூரியனையும் சந்திரனையும் தன் அதிகாரத்திற்குள் வைத்திருக்கிறான். (இவை) ஒவ்வொன்றும் (அவற்றிற்குக்) குறிப்பிட்ட கால திட்டப்படி நடந்து வருகிறது. (அவற்றில் நடைபெறும்) சகல காரியங்களையும் அவனே திட்டமிடுகிறான். நீங்கள் (இறந்த பின்னர் உயிர்பெற்று) உங்கள் இறைவனைச் சந்திப்பதை உறுதி கொள்வதற்காக (தன்) வசனங்களை (இவ்வாறு உங்களுக்கு) விவரித்து அறிவிக்கிறான். (அல்குர்ஆன் 13 : 2)
 
يُدَبِّرُ الْأَمْرَ مِنَ السَّمَاءِ إِلَى الْأَرْضِ ثُمَّ يَعْرُجُ إِلَيْهِ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ أَلْفَ سَنَةٍ مِمَّا تَعُدُّونَ
 
வானத்திலிருந்து பூமி வரையிலுமுள்ள எல்லா காரியங்களையும் அவனே ஒழுங்குபடுத்துகிறான். (ஒவ்வொன்றின் முடிவும்) ஒரு நாளன்று அவனிடமே சென்றுவிடும். அந்த (ஒரு) நாள் நீங்கள் எண்ணுகின்ற உங்கள் கணக்கின்படி ஆயிரம் ஆண்டுகளுக்குச் சமமாகும். (அல்குர்ஆன் 32 : 5)
 
 
 
ரப்பு பக்கம் திரும்பவேண்டும். அவனை அணுக வேண்டும். அவனை நெருங்க வேண்டும். யகீன் தவக்குல் அல்லாஹ்வின் மீது இருக்க வேண்டும். 
 
 
 
கண்ணியத்திற்குரியவர்களே! நாமே நமது வருங்காலத்தைப் பற்றி முடிவு செய்து கொண்டு இருக்கிறோம். நமது வருங்காலத்தைப் பற்றி நாம் திட்டமிட்டு கொண்டிருக்கிறோம். என்னுடைய வயோதிகத்தில் எனக்கு வருமானம் வருவதற்காக இந்த கட்டிடம். ஏன்? இன்னும் எத்தனையோ நபர்கள் வங்கிகளில் தன்னுடைய செல்வத்தை டெபாசிட் செய்து விட்டு எனது வருங்காலத்தில் இந்த தொகை எனக்கு பன்மடங்காகக் கிடைக்கும், அதை வைத்து என்னுடைய வயோதிகத்தை நான் போக்கிக் கொள்வேன். 
 
 
 
இன்னும் பலர் என்னுடைய பிள்ளையின் படிப்புக்காக வங்கிகளில் டெபாசிட் செய்து வைத்திருக்கிறேன். எனது பிள்ளைகளின் திருமணத்திற்காக டெபாசிட் செய்து வைத்திருக்கிறேன். என்னுடைய முதுமை  பருவத்திற்காக நான் வங்கியில் டெபாசிட் செய்து வைத்திருக்கிறேன், என்று சொல்லுகின்ற முஸ்லிம்கள் இல்லையா? 
 
 
 
இன்று அல்லாஹ் ஹராமாக்கியவற்றின்மீது அது தன்னுடைய முதுமைக்கு பலன் அளிக்கும் என்ற நம்பிக்கை வந்துவிட்டது. மனிதன் அவன் ஒரு திட்டமிடுகிறான். லைப் இன்சூரன்ஸ். மனிதன் தன்னுடைய வாழ்க்கைக்கு இன்சூரன்ஸ் செய்கிறான். நான் மரணித்து விட்டால் என்னுடைய பிள்ளைகள் எல்லாம் நடுத்தெருவில் வந்து விடுவார்களே. எனது மனைவி எல்லாம் நடுத்தெருவுக்கு வந்து விடுவார்களே. அவர்களுக்கு யார் உதவுவார்கள் என்பதற்காக. தனக்குத்தானே இன்சூரன்ஸ். 
 
 
 
உறுதிமானம் செய்துகொள்கிறான் . தன்னுடைய வாழ்க்கையை காத்துக் கொள்கிறான்.
 
இவர்களது  நம்பிக்கை என்ன இவர்களையும் இவர்களது குடும்பத்தாரையும் படைத்தவன் அல்லாஹ்வா அல்லது இவருக்கு இவன் திட்டமிடுகிறான். 
 
 
 
இந்த மனிதனுக்கு அல்லாஹ்வின் நம்பிக்கை கொஞ்சம் கொஞ்சமாக காபிர்களை போல ஒரு முஃமினுடைய உள்ளத்தில் ஒரு முஸ்லிமுடைய உள்ளத்திலும் அல்லாஹ்வின் நம்பிக்கை பலவீனமடைந்து கொண்டே போகிறது. 
 
 
 
எத்தனை முஸ்லிம்கள் வங்கிகளோடு தொடர்புகொண்டு வட்டி வியாபாரம் சய்கிறார்கள். இன்சூரன்ஸ் செய்கிறார்கள் வாழ்க்கை இன்சுரன்ஸ், லைஃப் இன்சுரன்ஸ் செய்கிறார்கள். இன்னும் எத்தனையோ, அவர்கள் வட்டிகளைச் சொல்லி பன்மடங்காக லாபங்களை ஆசையுட்டி சொல்லக்கூடிய அந்த திட்டங்கள் இன்று முஸ்லிம்களுடைய பங்களிப்பு காரணமாக, நீங்கள் நினைக்காதீர்கள், அதுவும் ஒரு கணிசமான அளவிற்கு உயர்ந்து வருவதை பார்க்கிறோம். 
 
 
 
ஒரு முஸ்லிம் தன்னுடைய வாழ்க்கையை தனது எதிர்காலத்திற்க்கு  தவக்குலை கொண்டு இன்சூரன்ஸ் செய்வான். அல்லாஹ்விடம் பாதுகாக்க முயற்சிப்பான். தவக்குலை அல்லாஹ்வைக் கொண்டு சார்ந்திருப்பது கொண்டு தான் என்னுடைய பிரச்சனை தீரும். நான் என்னை கொண்டு வாழவில்லை. அல்லாஹ்வைக் கொண்டு வாழ்கிறேன். 
 
 
 
எனது மனைவி மக்களை வாழ வைப்பவனும் அல்லாஹ் என்ற நம்பிக்கை வரவேண்டும். அஸ்பாபுகள், வியாபாரம், தொழில், படிப்பு, வேலை, உத்தியோகம் அது ஒரு காரணம்தான். இதுதான் என்னை வளர்க்கக்கூடிய வாழ வைக்கக் கூடிய ரப்பு என்று நினைத்து விட்டால் அவனை விட ஒரு முஷ்ரிக் யாருமில்லை. அல்லாஹ் பாதுகாப்பான். அவன் தொழுதும் பயனில்லை. நோன்பு வைத்தாலும் பயனில்லை .ஒரு முஷ்ரிக் இபாதத்தை அல்லாஹ் அல்லாதவருக்கு செய்கிறான். 
 
 
 
இவன் அல்லாஹ் மீது வைக்க வேண்டிய தவக்குலை அல்லாஹ் அல்லாதவர்கள் மீது வைக்கிறான். அல்லாஹ்வுக்கு செய்யவேண்டிய இபாதத்தை, சுஜூது, ருகூ அல்லது துஆவை அல்லாஹ் அல்லாதவருக்கு செய்கிறான். இவன் அல்லாஹ் மீது மட்டுமே வைக்க வேண்டிய. தவக்குலை அல்லாஹ் அல்லாதவர் மீது வைக்கிறான். வியாபாரத்தின் மீது, படிப்பின் மீது , தொழிலின் மீது வைக்கிறான்.
 
அல்லாஹ் கூறுகிறான்,
 
وَعَلَى اللَّهِ فَتَوَكَّلُوا إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
 
நீங்கள் முஃமின்களாக இருப்பீர்கள் என்றால் அல்லாஹ்வை சார்ந்து விடுங்கள் அல்லாஹ்வின் மீது தவக்குல் இருக்க வேண்டும். (அல்குர்ஆன் 5 : 23)
 
وَعَلَى ٱللَّهِ فَلْيَتَوَكَّلِ ٱلْمُؤْمِنُونَ
 
முஃமீன்கள் அல்லாஹ்வை மட்டுமே சார்ந்து இருக்க வேண்டும்  (அல்குர்ஆன் 3 : 122)
 
 
 
ஏன்? இஸ்லாமிய அரசாங்கமாக இருந்தாலும் கூட .முஸ்லிம்கள் இந்த அரசாங்கம் தான் நம்மை பாதுகாக்கிறது என்ற நம்பிக்கை அவர்களுக்கு இருக்கக்கூடாது .
 
 
 
கலீஃபா உமர் ஃபாரூக் (ரலி) அவர்களது வாழ்க்கையில்தான் எத்தனை படிப்பினை அல்லாஹ்வுடைய தூதர் நபி (ஸல் )அவர்கள் காலித் இப்னு வலீத் அவர்களை நியமித்தார்கள் .அபூபக்ரும்(ரலி) காலித் இப்னு வலீத் அவர்களை அமீராக நியமித்தார்கள். உமர் (ரலி) அவர்களுடைய காலத்திலும் படைத்தளபதியாக சென்றார்கள். மக்கள் பேச ஆரம்பித்தனர் ஹாலித் ஒரு போருக்கு சென்றால் தோல்வியா என்ற படைத்தளபதியாக இருப்பாரோ அந்த படுதோல்வியை சந்திக்கும் என்று பேச ஆரம்பித்தனர். 
 
 
 
கண்ணியத்திற்குரியவர்களே, ஷைத்தான் எப்படி எல்லாம் சதித் திட்டம் தீட்டுவான் என்று தெரியுமா? அவனுடைய திட்டங்களில் பெரிய திட்டம் ஒரு முஃமினுடைய ஈமானை களங்கப்படுத்த வேண்டும்.என்பதுதான். ஈமானை சேதப்படுத்த வேண்டியது, ஏன்? ஹுனைன் யுத்தத்தில் என்ன ஆனது?
 
 
 
12 ஆயிரம் முஸ்லிம்கள் போர் வீரர்கள், எதிரிகள் நாலாயிரம் பேர்கள். அஹ்ஜாப்ல் முஸ்லீம் 4000 பேர், எதிரிகள் 12 ஆயிரம் பேர்கள். 
 
 
 
பத்ருப் போரில் முஸ்லிம்கள் 313 பேர்கள் எதிரிகள் ஆயிரம் பேர்கள். உஹதில்  முஸ்லிம்கள் 700 பேர்கள் காபிர்கள் 3000 பேர்கள். நாம் அந்தப் போர் இந்தப் போரில் எல்லாம் குறைவாக இருந்தும் வெற்றியடைந்தோமே. இன்று காபிர்களை விட மூன்று மடங்கு நாம் இருக்கிறோம். நமக்கு ஏன் வெற்றி கிடைக்காது? என்று சொன்னார்கள். அல்லாஹ் தோல்வியை சந்திக்க வைத்தான். 
 
 
 
அல்லாஹ் கூறுகிறான்,
 
لَقَدْ نَصَرَكُمُ ٱللَّهُ فِى مَوَاطِنَ كَثِيرَةٍ وَيَوْمَ حُنَيْنٍ إِذْ أَعْجَبَتْكُمْ كَثْرَتُكُمْ فَلَمْ تُغْنِ عَنكُمْ شَيْـًٔا وَضَاقَتْ عَلَيْكُمُ ٱلْأَرْضُ بِمَا رَحُبَتْ ثُمَّ وَلَّيْتُم مُّدْبِرِينَ
 
பல போர்க்களங்களில் (உங்கள் எண்ணிக்கைக் குறைவாக இருந்தும்) நிச்சயமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக்கிறான். எனினும், ஹுனைன் போர் அன்று உங்களை பெருமையில் ஆழ்த்திக் கொண்டிருந்த உங்கள் அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு ஒரு பலனும் அளிக்கவில்லை. பூமி இவ்வளவு விசாலமாக இருந்தும் (அதுசமயம் அது) உங்களுக்கு மிக நெருக்கமாகி (குறுகி) விட்டது. நீங்கள் புறங்காட்டி ஓடவும் தலைப்பட்டீர்கள். (அல்குர்ஆன் 9 : 25)
 
 
 
உமர் (ரழி) அவர்களுடைய காலத்தில் மக்கள் இப்படி கொஞ்சம் கொஞ்சமாக பேசி இந்த செய்தியை எல்லா திசைகளிலும் பரவ ஆரம்பித்தன. ஹாலித் அவர்களுடைய யுத்தத்தில் கலந்து கொள்ள வேண்டுமே, வெற்றி நமக்குதான் என்று. உடனே உமர் பாரூக்(ரலி) அவர்கள் அபூ உபைதா(ரலி) அவர்களுக்கு ஒரு கடிதம் எழுதினார்கள். 
 
 
 
காலித்க்கு கடிதம் எழுதினார்கள். காலித்  இந்த கடிதம் கிடைத்தவுடன் அபூ உபைதா அவர்களிடம் பொறுப்பை ஒப்படைத்து விடுங்கள். நீர் இங்கு வாருங்கள். அபூ உபைதா விடம் சொன்னார்கள். காலிதிடம் பொறுப்பை வாங்கிக்கொள் என்றார்கள். 
 
 
 
உமர் ஃபாரூக் (ரலி) சொன்னார்கள், ஹாலிதே, மக்கள் சொல்கிறார்கள் நீங்கள் சென்றால் வெற்றி என்று. யாரால் எதையும் செய்யமுடியும். செய்பவன் அல்லாஹ் யாராலும் எதுவும் செய்ய முடியாது. செய்பவன் அல்லாஹ். வெற்றி அல்லாஹ்விற்கு. காலிதுக்கு அல்ல. 
 
 
 
நினைத்துப் பாருங்கள். எவ்வளவு பெரிய வரலாற்று உண்மையை, ஈமானின் படிப்பினையை நமக்கு உமர்( ரழி) அவர்கள். விட்டு சென்றிருக்கிறார்கள். ஒரு முஃமின் இடத்தில் எப்பொழுதும் இருக்க வேண்டியது. 
 
قُلْ مَنْ يُنَجِّيكُمْ مِنْ ظُلُمَاتِ الْبَرِّ وَالْبَحْرِ تَدْعُونَهُ تَضَرُّعًا وَخُفْيَةً لَئِنْ أَنْجَانَا مِنْ هَذِهِ لَنَكُونَنَّ مِنَ الشَّاكِرِينَ (63) قُلِ اللَّهُ يُنَجِّيكُمْ مِنْهَا وَمِنْ كُلِّ كَرْبٍ ثُمَّ أَنْتُمْ تُشْرِكُونَ
 
நீங்கள் ‘‘தரையிலும், கடலிலும் இருள்களில் சிக்கி (மிக சிரமத்திற்குள்ளாகிவிட்ட சமயத்தில்) எங்களை இதிலிருந்து பாதுகாத்துக் கொண்டால் நிச்சயமாக நாங்கள் நன்றி செலுத்துபவர்களாகி விடுவோம் என்று மறைவாகவும், பணிவாகவும் நீங்கள் பிரார்த்திக்கும் சமயத்தில் உங்களைப் பாதுகாப்பவன் யார்?'' என்று (நபியே!) நீர் (அவர்களைக்) கேட்டு,‘இதிலிருந்தும் மற்ற எல்லா துன்பங்களிலிருந்தும் உங்களை பாதுகாப்பவன் அல்லாஹ் தான். (இவ்வாறிருந்தும்) பின்னும் நீங்கள் (அவனுக்கு) இணை வைக்கிறீர்களே!'' என்று நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 6 : 63-64)
 
 
 
ஆபத்துக்கள் வந்தால் அல்லாஹ்விடத்திலேயே நீங்கள் பணிந்து பயந்து மறைவாக துஆ செய்கிறீர்களே.அல்லாஹ் இந்த கஷ்டத்திலிருந்து நீ எங்களை பாதுகாத்தால் நன்றி உள்ளவர்களாக இருப்போம் என்று. ஆனால் அல்லாஹ் உங்களைப் பாதுகாத்தால் இதுமட்டுமல்ல இன்னும் எவ்வளவு கஷ்டங்கள் ஏற்பட்டாலும் அல்லாஹ் பாதுகாத்தால் நீங்கள் அல்லாஹ்வை மறந்து அவனுக்கு இணை வைக்கிறீர்கள். 
 
 
 
அல்லாஹ்வுடைய நிஃமத்தை மறுக்கின்றான் அடியான். அப்போதுதான் சோதனையின் தொடக்கம் ஏற்படுகின்றது. அல்லாஹ் கூறுகிறான், 
 
وَإِذْ تَأَذَّنَ رَبُّكُمْ لَئِن شَكَرْتُمْ لَأَزِيدَنَّكُمْ وَلَئِن كَفَرْتُمْ إِنَّ عَذَابِى لَشَدِيدٌ
 
நபியே உங்களது இறைவன் இதை தனக்கு கட்டளையாக சட்டமாக ஆக்கிக்கொன்டான். நீங்கள் நன்றி செலுத்தினால் அவன் உங்களுக்கு அதிகப்படுத்துவான்  நீங்கள் அவனை நிராகரித்தால் அவருடைய தண்டனை பயங்கரமானது. (அல்குர்ஆன் 14 : 7)
 
وَيَسْتَعْجِلُونَكَ بِٱلسَّيِّئَةِ قَبْلَ ٱلْحَسَنَةِ وَقَدْ خَلَتْ مِن قَبْلِهِمُ ٱلْمَثُلَٰتُ وَإِنَّ رَبَّكَ لَذُو مَغْفِرَةٍ لِّلنَّاسِ عَلَىٰ ظُلْمِهِمْ وَإِنَّ رَبَّكَ لَشَدِيدُ ٱلْعِقَابِ
 
(நபியே!) நன்மை வருவதற்கு முன்னதாகவே தீங்கை வரவைத்துக்கொள்ள இவர்கள் உம்மிடம் அவசரப்படுகின்றனர். இத்தகைய பல விஷயங்கள் இவர்களுக்கு முன்னரும் நிச்சயமாக நிகழ்ந்தே இருக்கின்றன. நிச்சயமாக உமது இறைவன் மனிதர்களின் குற்றங்களை மன்னிப்பவனாக இருந்த போதிலும், நிச்சயமாக உமது இறைவன் வேதனை செய்வதிலும் மிகக் கடுமையானவன் ஆவான். (அல்குர்ஆன் 13 : 6)
 
 
 
உங்களுக்கு முன்பே அல்லாஹ்வின் தண்டனைகள் எத்தனையோ சென்றுவிடுகின்றன. எவ்வளவோ வரலாற்றுப் படிப்பினைகள் நிகழ்ந்திருக்கின்றன. ஆகவே ஒரு முஃமின் தன்னுடைய வரும் காலத்தை நினைத்து பயப்படுவதாக இருந்தால் அல்லாஹ்வை பயப்படவேண்டும். தனது வரும் காலத்திற்கு உறுதி எடுக்க வேண்டும் என்றால் அல்லாஹ்விடத்தில் கேட்கவேண்டும். அல்லாஹ்வை நம்ப வேண்டும் அல்லாஹ்வின் பக்கம் ஒதுங்க வேண்டும். 
 
 
 
அன்பானவர்களே! வாழ்வாதாரம் இருக்கிறது இந்த உலக வாழ்க்கையில் மனிதனுக்கு கிடைக்ககூடிய இந்த வாழ்வாதாரம் இது அல்லாஹ்வின் கையிலேயே இருக்கிறது.? ஏன் நம்முடைய அறிவில் இல்லை. நம்முடைய திறமையில் இல்லை. எத்தனையோ புத்திசாலிகள் பெரும் பெரும் புத்திசாலிகள் வாழ்க்கையில் கஷ்டப்படுவதை பார்க்கவில்லையா? எத்தனையோ முட்டாள்கள் வசதியாக வாழ்க்கை வாழ்வதை பார்க்கவில்லையா? 
 
ٱللَّهُ يَبْسُطُ ٱلرِّزْقَ لِمَن يَشَآءُ وَيَقْدِرُ وَفَرِحُوا۟ بِٱلْحَيَوٰةِ ٱلدُّنْيَا وَمَا ٱلْحَيَوٰةُ ٱلدُّنْيَا فِى ٱلْءَاخِرَةِ إِلَّا مَتَٰعٌ
 
வாழ்க்கையை விரிவாக விசாலமாக கொடுப்பவன் அல்லாஹ். அதை சுருக்கக்கூடியவனும் அல்லாஹ் தான் (அல்குர்ஆன் 13 : 26)
 
 
 
ஒரு முஃமினுடைய நம்பிக்கை இந்த ரிஸ்க் விஷயத்தில் எப்போது தடுமாறுகிறது. நான் என்னுடைய நாளைய உணவுக்கு என்ன செய்வேன். எனது பிள்ளைகள் என்ன ஆவார்கள். எனது மனைவி என்ன ஆவாள் என்று. அல்லாஹ்வை ரிஸ்க் அழிப்பவனாக அவன்  மறந்து விட்டு தன்னைத்தானே இவர்களுக்கு எல்லாம் தன்னுடைய அதிகாரியாக பொறுப்பாளராக நினைக்கிறானோ? கண்டிப்பாக அவனுக்கு எதை பயந்தாரோ அது நடக்கும். 
 
அலி (ரலி) அவர்கள் எவ்வளவு அழகாகச் சொல்கிறார்கள். யார் தன்னுடைய செல்வத்தை நம்புகிறானோ கண்டிப்பாக அவனது செல்வம் குறைந்து,  இல்லாமல் போய்விடும். அவன் ஒருநாள் ஏழையாக ஆவான். யார் தனது அறிவின் மீது தனது புத்திசாலித்தனத்தின் மீது நம்பிக்கை வைக்கிறானோ, கண்டிப்பாக அவன் ஒருநாள் புத்தி பேதலித்து விடுவான். யார் தனது ஆட்சி அதிகாரத்தின் மீது நம்பிக்கை வைத்தானோ அவனுடைய ஆட்சி அதிகாரம் ஒருநாள் நீங்கிவிடும். காலம் காலமாக ஆட்சி செய்தவர்கள். தங்களது பரம்பரை பரம்பரைக்கெல்லாம்  ஆட்சி எழுதி வைத்தவர்கள் அநியாயம் செய்த போது அக்கிரமம் செய்த போது கர்வமும் பெருமையும் மமதையும் அவர்களுக்கு தலைக்கேறிய போது அவர்களை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சோதிக்கவில்லையா. அவர்களுக்கு அல்லாஹ் சூழ்ச்சி செய்யவில்லையா. 
 
وَكَذَٰلِكَ نُوَلِّى بَعْضَ ٱلظَّٰلِمِينَ بَعْضًۢا بِمَا كَانُوا۟ يَكْسِبُونَ
 
இப்படித் தான் அநியாயக்காரர்கள் ஒருவரை வைத்து ஒருவருக்கு நாம் தண்டனை கொடுப்போம். முஸ்லிம்களுடைய ஆட்சி அதிகாரங்களில் எத்தனை பேர் தங்களது மோசமான மரணத்தை சந்தித்தார்கள். அநியாயத்தின் காரணமாக அக்கிரமத்தின்  காரணமாக. (அல்குர்ஆன் 6 : 129)
 
 
 
அல்லாஹ் பாதுகாப்பானாக. ஒரு முஃமினுடைய நம்பிக்கை, அல்லாஹ் ரிஸ்க் அளிப்பவன். ரப்பு சொல்கிறான் பாருங்கள். 
 
مَا أُرِيدُ مِنْهُمْ مِنْ رِزْقٍ وَمَا أُرِيدُ أَنْ يُطْعِمُونِ (57) إِنَّ اللَّهَ هُوَ الرَّزَّاقُ ذُو الْقُوَّةِ الْمَتِينُ
 
நான் உங்களிடத்திலே எனக்கு உணவு கேட்கவில்லை.  நீங்கள் உணவு அளிக்க வேண்டும் என்ற தேவை இல்லை. நிச்சயமாக அல்லாஹ்தான் உணவளிக்க கூடியவன். வலிமையுள்ளவன். உறுதி உள்ளவன். ஆற்றல் உள்ளவன். (அல்குர்ஆன் 51 : 57-58)
 
 
 
ஆகவே நம்முடைய வாழ்வாதாரங்கள் அல்லாஹ்வின் கையில் இருக்கிறது. மக்கள் செய்கின்ற சூழ்ச்சிகளால் அதிகாரங்கள் செய்கின்ற தந்திரங்களால் நம்முடைய வாழ்வாதாரத்தை அல்லாஹ் நாடாமல் யாரும் சீர்குலைத்து விடமுடியாது. அல்லாஹ்வின் மீது பரிபூரண நம்பிக்கை. 
 
وَمَا مِن دَآبَّةٍ فِى ٱلْأَرْضِ إِلَّا عَلَى ٱللَّهِ رِزْقُهَا وَيَعْلَمُ مُسْتَقَرَّهَا وَمُسْتَوْدَعَهَا كُلٌّ فِى كِتَٰبٍ مُّبِينٍ
 
இந்த பூமியில் இருக்கக்கூடிய எல்லா உயிரினங்களுக்கும் உணவளிப்பது அல்லாஹ்வின் மீது கடமையாக கட்டாயமாக்கப்பட்டது. இந்தப் படைப்புகள் எங்கே இதனுடைய தங்குமிடம் இருக்கும்? என்பதையெல்லாம் அல்லாஹ் அறிந்தவன். இவையெல்லாம் தெளிவான பதிவு புத்தகத்தில் இருக்கிறது. (அல்குர்ஆன் 11 : 6)
 
وَكَأَيِّن مِّن دَآبَّةٍ لَّا تَحْمِلُ رِزْقَهَا ٱللَّهُ يَرْزُقُهَا وَإِيَّاكُمْ وَهُوَ ٱلسَّمِيعُ ٱلْعَلِيمُ
 
எப்படி வாழ்வாதாரத்தைப் பற்றி கவலைப்படுகிறோம். அல்லாஹ் நமக்கு எப்படி ஆறுதல் சொல்கிறான் என்று பாருங்கள். முஃமீன்களே, நம்பிக்கையாளர்களே நீங்கள் பார்க்கவில்லையா? பூமியில் எத்தனையோ கால்நடைகள் சுற்றுகின்றன. அவற்றுக்கெல்லாம் உணவளிப்பது யார்? தனது முதுகிலே தனது உணவை சுமந்துகொண்டு அவர்கள் செல்கின்றனவா? அல்லாஹ் அவற்றுக்கும் உணவு அளிக்கிறான் உங்களுக்கும் உணவளிக்கிறான். அவன் நன்கு கேட்கக் கூடியவன். நன்கு அறிந்தவன். (அல்குர்ஆன் 29 : 60)
 
 
 
உங்களது செயல்களுக்கு ஏற்ப அவன் தனது முடிவை காட்டுகிறான். நாம் அல்லாஹ்வின் பக்கம் தேவையுள்ளவர்கள், இந்த அதிகாரிகள் பக்கம் அல்ல. இவர்களின் திட்டங்களின் பக்கம் அல்ல. இவர்களது உதவியின் பக்கம் அல்ல. எந்த அரசாங்கத்தின் பக்கமும் ஒரு முஃமின் தேவை உள்ளவனாக ஆகமாட்டான். அல்லாஹ்வின் பக்கத்தைத் தவிர. ரப்பு  தான் நாம் தேவை ஆகுவதற்கும் நாம் இறைஞ்சுவதற்கு, நாம் திரும்புவதற்கும் தகுதியானவன். 
 
يَٰٓأَيُّهَا ٱلنَّاسُ أَنتُمُ ٱلْفُقَرَآءُ إِلَى ٱللَّهِ وَٱللَّهُ هُوَ ٱلْغَنِىُّ ٱلْحَمِيدُ
 
மனிதர்களே! நீங்கள் அனைவரும் (எந்நேரத்திலும்) அல்லாஹ்வுடைய உதவி தேவைப்பட்டவர்களாகவே இருக்கிறீர்கள். அல்லாஹ்வோ  முற்றிலும் தேவையற்றவன், புகழுக்குரியவன் ஆவான். (அல்குர்ஆன் 35 : 15)
 
 
 
இந்த அரசாங்கம் யார்? இதுவும் அல்லாஹ்வின் பக்கம் தேவையுமல்ல. அரசாங்கம்,இவர்களின் அதிகாரிகள், ஆட்சியாளர்கள், அதிகாரிகள் இவர்கள் எல்லாம் அல்லாஹ்வின் பக்கம் தேவையுள்ளவர்கள். அல்லாஹ் இவர்களுடைய முடிவையும் வைத்திருக்கிறான். நம்முடைய முடிவையும் வைத்திருக்கிறான் .இவர்களால் தங்களுக்கு என்ன தேடிக்கொள்ள முடியும். எதை இவர்கள் தங்களுடையது என்பதாக உரிமை கொண்டாட முடியும். 
 
قُلِ ٱللَّهُمَّ مَٰلِكَ ٱلْمُلْكِ تُؤْتِى ٱلْمُلْكَ مَن تَشَآءُ وَتَنزِعُ ٱلْمُلْكَ مِمَّن تَشَآءُ وَتُعِزُّ مَن تَشَآءُ وَتُذِلُّ مَن تَشَآءُ بِيَدِكَ ٱلْخَيْرُ إِنَّكَ عَلَىٰ كُلِّ شَىْءٍ قَدِيرٌ
 
அல்லாஹ்வே! நீ நாடியவருக்கு நாடியவரிடமிருந்தே ஆட்சியை பிடுங்குவாய். நாடியவருக்கு கண்ணியத்தை கொடுப்பாய். நாடியவருக்கு இழிவை கொடுப்பாய். நன்மையெல்லாம் உனது கரத்தில் தான். (அல்குர்ஆன் 3 : 26)
 
 
 
ஆகவே நாம் சார்ந்திருப்பது நம்பிக்கை வைப்பது என்றால் நம்முடைய உள்ளத்தின் தேடல் ஒன்று இருக்குமானால் அது அல்லாஹ்வின் மீதே இருக்க வேண்டும். அல்லாஹ்வையே சார்ந்திருக்க வேண்டும். அல்லாஹ்விடத்தில் கேட்கவேண்டும். அவன் ஒவ்வொரு நாளும் ஒரு திட்டமிடுகின்றான். அல்லாஹ்வுடைய நாட்டம் இல்லாமல் எதுவும் இந்த பூமியில் நடக்க முடியாது. 
 
 
 
நம்முடைய செயல்களுக்கு ஏற்ப நம்முடைய சூழ்நிலைகளை மாற்றிக் கொண்டிருக்கிறான். அல்லாஹ்வை நாம் அழைக்கும் போது கண்டிப்பாக நம்முடைய துஆக்கள் வீணாகுவது இல்லை. அல்லாஹ்வின் பக்கம் நாம் திரும்பும் போது அல்லாஹ்விடம் நாம் கெஞ்சும் போது நம்முடைய துஆக்களை அல்லாஹ் வீணாக்குவது இல்லை. 
 
وَإِذَا مَسَّكُمُ ٱلضُّرُّ فِى ٱلْبَحْرِ ضَلَّ مَن تَدْعُونَ إِلَّآ إِيَّاهُ فَلَمَّا نَجَّىٰكُمْ إِلَى ٱلْبَرِّ أَعْرَضْتُمْ وَكَانَ ٱلْإِنسَٰنُ كَفُورًا
 
யாரை அழைக்க முடியும்? எந்த கஷ்டத்தில் யாரை அழைத்தாலும் யாரும் நமக்கு எந்த பதிலும் கொடுக்க மாட்டார்கள். ரப்பு ஒருவனை தவிர. இந்த மனிதன் சில நேரங்களில் அல்லாஹ்வின் அடியார்கள் மீது வரம்பு மீறுகிறான். அல்லாஹ் கொடுத்த ஆட்சி அதிகாரத்தை அல்லாஹ்வுடைய அடியார்கள் மீது அநியாயம் செய்வதற்கு அவன் காரணமாக ஆக்கிக் கொள்கிறான். இத்தகைய அநியாயக்காரர்கள் அல்லாஹ்வின் பிடியிலிருந்து தப்ப முடியாது. (அல்குர்ஆன் 17 : 67)
 
كَلَّا إِنَّ الْإِنْسَانَ لَيَطْغَى (6) أَنْ رَآهُ اسْتَغْنَى (7) إِنَّ إِلَى رَبِّكَ الرُّجْعَى
 
இந்த மனிதனுக்கு செல்வம் வந்துவிட்டால் அதிகாரம் வந்து விட்டால் இவன் அநியாயம் செய்ய முற்படுகிறான். ஆனால் இவன் அடக்குமுறைக்கு மக்களை ஆளாக்க நினைக்கிறான் பயப்பட வேண்டாம். உங்களது இறைவன் பக்கம் தான் எல்லோரும் திரும்ப வர வேண்டியது இருக்கிறது. அல்லாஹ் ரப்புல் ஆலமீன் உடைய பிடியிலிருந்து யாரும் தப்ப முடியாது. (அல்குர்ஆன் 96 : 6-8)
 
إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ
 
நிச்சயமாக உமது இறைவனின் பிடி மிக்க கடுமையானது. (அதிலிருந்து அவர்கள் தப்பவே முடியாது.) (அல்குர்ஆன் 85 : 12)
 
 
 
எத்தனையோ ஊர்மக்கள் தங்களது இறைவனின் கட்டளைகளை மீறினார்கள். தங்களது தூதருடைய கட்டளைகளை மீறினார்கள். அல்லாஹ்வை எதிர்க்க நினைத்தார்கள். 
 
وَقَالَ فِرْعَوْنُ يَٰهَٰمَٰنُ ٱبْنِ لِى صَرْحًا لَّعَلِّىٓ أَبْلُغُ ٱلْأَسْبَٰبَ
 
(இவ்வளவு உபதேசித்த பின்னரும்;) "ஹாமானே உயரமான ஒரு கோபுரத்தை எனக்காக நீ கட்டுவாயாக - நான் (மேலே செல்வதற்கான) பாதைகளைப் பெறும் பொருட்டு!
 
أَسْبَٰبَ ٱلسَّمَٰوَٰتِ فَأَطَّلِعَ إِلَىٰٓ إِلَٰهِ مُوسَىٰ وَإِنِّى لَأَظُنُّهُۥ كَٰذِبًا وَكَذَٰلِكَ زُيِّنَ لِفِرْعَوْنَ سُوٓءُ عَمَلِهِۦ وَصُدَّ عَنِ ٱلسَّبِيلِ وَمَا كَيْدُ فِرْعَوْنَ إِلَّا فِى تَبَابٍ
 
"(ஆம்) வானங்களின் பாதைகளை அடைந்து மூஸாவுடைய ஆண்டவனை நான் காண வேண்டும்; எனினும் அவர் பொய் சொல்லுகிறார் என்றே நிச்சயமாக நான் எண்ணுகிறேன்;" என ஃபிர்அவ்ன் கூறினான். இவ்வாறே ஃபிர்அவ்னுக்கு அவனுடைய தீய செயல்கள் அழகாக்கப்பட்டன இன்னும் (நேர்) வழியிலிருந்து அவன் தடுக்கப்பட்டான்; ஃபிர்அவ்னுடைய சதி அழிவில்லாமல் (வேறு எவ்விதமாகவும்) முடிய வில்லை. (அல்குர்ஆன் 40 : 36-37)
 
பிர்அவ்ன் சொன்னான். ஹாமான்  எனக்கு ஒரு பெரிய கோபுரத்தை கட்டு, நான் ஏறி சென்று மூசா சொல்வதைப்போல வானத்திலே அவனுடைய இறைவன் இருக்கிறானா என்று பார்த்து வர வேண்டும். ஹாமான் அதுபோன்று பெரிய கோபுரத்தை கட்டினான். பிர்அவ்ன் பார்த்துவிட்டு அப்படி எல்லாம் ஒன்றும் இல்லை மூசா பொய் சொல்கிறார் என்றான். 
 
 
 
நம்ரூத் சொன்னான், இப்ராஹிம் என்ன புதிதாக வானத்தில் ரப்பு இருக்கிறான் என்று சொல்கிறார். அந்த காலத்தில் பெரிய ராட்சச கழுகுகள் நான்கு கழுகுகளை நன்கு வளர்த்து அந்த நான்கு கழுகுகளையும் பழக்கப்படுத்தி அதிலேயே ஒரு தொட்டில் கட்டி அதில் அமர்ந்து கொண்டு கழுகுகளை பறக்க விட்டான். ஆகாயத்தில் சுற்றிவிட்டு,  இப்ராஹிம் சொல்வதைப் போன்று அங்கே எந்த கடவுளும் இல்லை என்று சொன்னான். அவர்களையெல்லாம் ரப்புல் ஆலமீன் வரலாற்றிலேயே எப்படி படிப்பினை ஆக்கினான் என்று பார்க்கவில்லையா? 
 
 
 
அல்லாஹ்வுடைய அடியார்கள் மீது யாரெல்லாம் அநியாயம் செய்வார்களோ அக்கிரமங்கள் செய்வார்களோ அல்லாஹ் அவர்களை விட மாட்டான். இந்த பூமியிலே இணை வைக்கின்ற தவறுக்கு கூட அல்லாஹ் ரப்புல் ஆலமீன் தண்டனையை தாமதப்படுத்தினாலும் அநியாயத்திற்கு உரிய தண்டனையை அல்லாஹ் இந்த பூமியில் காட்டாமல் இருக்க மாட்டான். ஆகவேதான் தன்னுடைய பாசறையில் தன்னுடைய கல்விக் கூடத்தில் தன்னுடைய அரவணைப்பிலேயே ஒழுக்கத்திலும் ஈமானையும் தடவையும் படித்த தோழர்களை மக்களுக்கு அதிகாரிகளாக பொறுப்பாளராக கவர்னராக ஆட்சியாளர்களாக அல்லாஹ்வுடைய தூதர் நபி (ஸல்) தங்களது கட்டுப்பாட்டுக்குள் வந்த தாங்கள் வெற்றி கொண்ட பகுதியில் அனுப்பியபோது, அந்த தோழர்களுக்கு சொன்னார்கள். 
 
عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مُعَاذًا إِلَى الْيَمَنِ فَقَالَ اتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّهَا لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ حِجَابٌ (صحيح البخاري 2268 -)
 
அநியாயம் இழைக்கப்பட்டவனுடைய துஆவை பயந்து கொள். அந்த துஆக்கும் அல்லாஹ்வுக்கும் இடையில் ஒரு தடை எதுவுமில்லை. 
 
 
 
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி, எண்: 2268
 
 
 
ஒரு காபிர் அநியாயம் இழைக்கப் பட்டாலும் கூட, அல்லாஹ் அவனுக்கு உதவி செய்வான். அநியாயம் செய்தவன் ஒரு முஸ்லிமாக இருந்தாலும். அந்த முஸ்லிம்களிடத்தில் அந்த காஃபிருக்காக அல்லாஹ் பலி தீர்ப்பான். இந்த அநியாயங்களை கண்டு நாம் இவர்களை குறை சொல்வதை விட்டுவிட்டு இவர்களை பேசுவதை விட்டு நம்முடைய செயல்களை பார்க்கிறோமா?
 
நாம் என்ன செய்தோம் நாம் அல்லாஹ்வுடைய சட்டங்களை எப்படி மீறி இருக்கிறோம். எப்போது மக்கள் அவர்களில் சிலர் சிலரின் மீது அநியாயம் செய்கிறார்களோ அந்த அனைத்து மக்கள் மீதும் அநியாயக்கார அரசனை அநியாயக்கார அதிகாரியை அல்லாஹ் வழங்குவான். இது அல்லாஹ்வுடைய நியதி. 
 
 
 
மக்கள் ஒருவன் மற்றொருவர் மீது இரக்கம் உள்ளவர்களாக கருணை உள்ளவராக பரஸ்பர அன்பு உடையவர்களாக புரிந்துணர்வு உள்ளவர்களாக இருந்தால் அவர்களைப் போன்ற நல்லவரை அல்லாஹ் அவர்களுக்கு ஆட்சியாளர்களாக ஆக்குவான். ஒருபக்கம்  ஆழ்ந்து நமது இந்திய சமுதாயத்தை பார்ப்போமேயானால்,  என் உலக மக்களையும் சந்திக்கும் பிரச்சனைகளை நாம் பார்ப்போமேயானால்
 
 
 
ஆட்சியாளர்களால் இவர்களுக்கு நிகழ்த்தப்படுகின்றன கொடுமைகளை விட இவர்களில் ஒருவர் மற்றொருவருக்கு கொடுக்கின்ற, செய்கின்ற அநியாயம் கொடுமை அதிகமாக இருக்கிறது. எத்தனை பேர் அண்டை வீட்டாரின் ஹக்குகளில் உரிமை மீறினார்கள்? எத்தனை பேர் தங்களுடைய பங்காளிகளின் ஹக்குகளில் உரிமை மீறினார்கள்? எத்தனை பேர் தங்களுடைய சகோதரனின் ஹக்குகளில் உரிமை மீறினார்கள்? தனது மனைவி பிள்ளைகள் தாய் தந்தை தனக்கு கீழே வேலை செய்ய கூடியவர்கள் என்று எத்தனைவிதமான அநியாயம், அக்கிரமம், உரிமை மீறுபவர்களை இன்று நம்முடைய வாழ்க்கையில் காண்கிறோம். 
 
 
 
அல்லாஹ் பாதுகாப்பானாக, மக்கள் எப்போது அவர்கள் அநியாயக்காரர்கள் ஆக மாறினார்களோ அவர்களைப் போன்று அவர்களைவிட அதிகமாக அநியாயம் செய்யக்கூடிய ஒரு அதிகாரியை அல்லாஹ் அவர்கள் மீது காட்டுவான். மக்கள் இதுவரை தங்களுக்கு மத்தியிலே பரஸ்பர  இரக்கம் கருணையைக் கொண்டு ஒருவர் ஒருவரை ஆதரிக்கக்கூடியவராக மாறமாட்டார்கள். அல்லாஹ் இந்த விதியை மாற்ற மாட்டான். ஆகவே நமக்கு எது ஏற்பட்டதோ கண்டிப்பாக அல்லாஹ்வின் திட்டத்தின்படி தான் ஏற்பட்டது. 
 
 
 
அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) அவர்கள் உனக்கு ஏற்பட்ட அந்த விதி அது உன்னை தவறி இருக்க முடியாது. எந்த நசீப்  உனக்கு தவறி விட்டதோ அது உனக்கு கிடைக்க முடியாது. 
 
وَاعْلَمْ أَنَّ الْأُمَّةَ لَوْ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ وَلَوْ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ
 
உலக மக்கள் எல்லாம் பாதிபேர் நன்மை தர நாடினாலும் அல்லாஹ் முடிவு செய்யாத நன்மை தர முடியாது. உலக மக்கள் எல்லாம் சேர்ந்து தீங்கு செய்ய நாடினாலும் அல்லாஹ் முடிவு செய்யாத ஒரு தீர்ப்பில் தரமுடியாது. (2) 
 
 
 
அறிவிப்பாளர்: இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல்: திர்மிதி எண்: 2440
 
அல்லாஹ்வின் தூதர் நபி (ஸல்) நமக்கு இத்தகைய அறிவுரைகளை சொல்கிறார்கள். 
 
مَآ أَصَابَ مِن مُّصِيبَةٍ فِى ٱلْأَرْضِ وَلَا فِىٓ أَنفُسِكُمْ إِلَّا فِى كِتَٰبٍ مِّن قَبْلِ أَن نَّبْرَأَهَآ إِنَّ ذَٰلِكَ عَلَى ٱللَّهِ يَسِيرٌ
 
பூமியிலோ, அல்லது உங்களிலோ சம்பவிக்கிற எந்தச் சம்பவமும் - அதனை நாம் உண்டாக்குவதற்கு முன்னரே (லவ்ஹுல் மஹ்ஃபூள்) ஏட்டில் இல்லாமலில்லை, நிச்சயமாக அது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதேயாகும். (அல்குர்ஆன் 57 : 22)
 
مَّآ أَصَابَكَ مِنْ حَسَنَةٍ فَمِنَ ٱللَّهِ وَمَآ أَصَابَكَ مِن سَيِّئَةٍ فَمِن نَّفْسِكَ وَأَرْسَلْنَٰكَ لِلنَّاسِ رَسُولًا وَكَفَىٰ بِٱللَّهِ شَهِيدًا
 
உனக்குக் கிடைக்கும் எந்த நன்மையும் அல்லாஹ்விடமிருந்தே கிடைக்கிறது. இன்னும், உனக்கு ஏதாவது ஒரு தீங்கு ஏற்பட்டால் அது உன்னால் தான் வந்தது. (நபியே!) நாம் உம்மை மனிதர்களுக்கு (இவற்றை எடுத்துக் கூறுவதற்காகத்) தூதராகவே அனுப்பியுள்ளோம் - (இதற்கு) அல்லாஹ்வே போதுமான சாட்சியாக இருக்கின்றான். (அல்குர்ஆன் 4 : 79)
 
 
 
நபியே, என்ன நெருக்கடி சோதனை ஏற்பட்டால் அது அவர்களால் ஏற்பட்டது, உங்கள் மூலமாக நிகழ்ந்த தவறினால் ஏற்பட்டது, எத்தனையோ பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். அல்லாஹ் எல்லா பாவங்களுக்கும் குற்றங்களுக்கும் தண்டிக்க நாடினால் இந்த பூமியிலே யாரும் நடக்க முடியாது என்று சொல்கிறான். 
 
 
 
நம்முடைய செயல்களுக்கு அல்லாஹ் சில சோதனைகளை கொடுக்கிறான். எத்தனையோ பெரிய காரியங்களை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். அல்லாஹ்வின் பக்கம் திரும்புவதைத் தவிர, அல்லாஹ்விடத்தில் இரவு நேரத்தில் அழுவதை தவிர, அல்லாஹ்விடத்தில் நமது குறைகளை பிரச்சனைகளை முறையிடுவதை  தவிர, ஒரு முஃமினுக்கு வேறுவழியில்லை என்று உறுதி கொள்ளுங்கள். நம்முடைய அமல்களை அதிகப்படுத்த வேண்டும். நம்முடைய குடும்பத்தாருக்கும் இந்த அறிவுரையை கூறவேண்டும். 
 
 
 
எத்தனை சோதனைகள்  அநியாயக்கார அரசர்கள் அநியாயக்கார அதிகாரிகள் மட்டுமா. அல்லாஹ் இந்த பூமியில் மூளைமுடுக்கில் எல்லாம் பூகம்பங்களை  காட்டிக்கொண்டே இருக்கிறான்.
 
 
 
அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கக்கூடிய இயற்கை பேரழிவுகள் நீங்கள் சிந்திக்க வேண்டாமா. அது நமக்கு வர எவ்வளவு தாமதமாக போகிறது. அல்லாஹ் அவனை நம்பிக்கை கொண்டவர்களை தான் ரசிப்பான். அவனுடைய மார்க்கத்தை அடிப்படையாக வைத்து சீர்திருத்தம் செய்பவர்களை அல்லாஹ் பாதுகாப்பான். அல்லாஹ்வின் பக்கம் திரும்புவோமாக. அல்லாஹ் நம்முடைய பாவங்களை மன்னித்து அருள்வானாக!
 
 
 
ஆமீன்
 
 
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1).
 
حَدَّثَنَا هَدَّابُ بْنُ خَالِدٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ حَدَّثَنَا ثَابِتٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ صُهَيْبٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كَانَ مَلِكٌ فِيمَنْ كَانَ قَبْلَكُمْ وَكَانَ لَهُ سَاحِرٌ فَلَمَّا كَبِرَ قَالَ لِلْمَلِكِ إِنِّي قَدْ كَبِرْتُ فَابْعَثْ إِلَيَّ غُلَامًا أُعَلِّمْهُ السِّحْرَ فَبَعَثَ إِلَيْهِ غُلَامًا يُعَلِّمُهُ فَكَانَ فِي طَرِيقِهِ إِذَا سَلَكَ رَاهِبٌ فَقَعَدَ إِلَيْهِ وَسَمِعَ كَلَامَهُ فَأَعْجَبَهُ فَكَانَ إِذَا أَتَى السَّاحِرَ مَرَّ بِالرَّاهِبِ وَقَعَدَ إِلَيْهِ فَإِذَا أَتَى السَّاحِرَ ضَرَبَهُ فَشَكَا ذَلِكَ إِلَى الرَّاهِبِ فَقَالَ إِذَا خَشِيتَ السَّاحِرَ فَقُلْ حَبَسَنِي أَهْلِي وَإِذَا خَشِيتَ أَهْلَكَ فَقُلْ حَبَسَنِي السَّاحِرُ فَبَيْنَمَا هُوَ كَذَلِكَ إِذْ أَتَى عَلَى دَابَّةٍ عَظِيمَةٍ قَدْ حَبَسَتْ النَّاسَ فَقَالَ الْيَوْمَ أَعْلَمُ آلسَّاحِرُ أَفْضَلُ أَمْ الرَّاهِبُ أَفْضَلُ فَأَخَذَ حَجَرًا فَقَالَ اللَّهُمَّ إِنْ كَانَ أَمْرُ الرَّاهِبِ أَحَبَّ إِلَيْكَ مِنْ أَمْرِ السَّاحِرِ فَاقْتُلْ هَذِهِ الدَّابَّةَ حَتَّى يَمْضِيَ النَّاسُ فَرَمَاهَا فَقَتَلَهَا وَمَضَى النَّاسُ فَأَتَى الرَّاهِبَ فَأَخْبَرَهُ فَقَالَ لَهُ الرَّاهِبُ أَيْ بُنَيَّ أَنْتَ الْيَوْمَ أَفْضَلُ مِنِّي قَدْ بَلَغَ مِنْ أَمْرِكَ مَا أَرَى وَإِنَّكَ سَتُبْتَلَى فَإِنْ ابْتُلِيتَ فَلَا تَدُلَّ عَلَيَّ وَكَانَ الْغُلَامُ يُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ وَيُدَاوِي النَّاسَ مِنْ سَائِرِ الْأَدْوَاءِ فَسَمِعَ جَلِيسٌ لِلْمَلِكِ كَانَ قَدْ عَمِيَ فَأَتَاهُ بِهَدَايَا كَثِيرَةٍ فَقَالَ مَا هَاهُنَا لَكَ أَجْمَعُ إِنْ أَنْتَ شَفَيْتَنِي فَقَالَ إِنِّي لَا أَشْفِي أَحَدًا إِنَّمَا يَشْفِي اللَّهُ فَإِنْ أَنْتَ آمَنْتَ بِاللَّهِ دَعَوْتُ اللَّهَ فَشَفَاكَ فَآمَنَ بِاللَّهِ فَشَفَاهُ اللَّهُ فَأَتَى الْمَلِكَ فَجَلَسَ إِلَيْهِ كَمَا كَانَ يَجْلِسُ فَقَالَ لَهُ الْمَلِكُ مَنْ رَدَّ عَلَيْكَ بَصَرَكَ قَالَ رَبِّي قَالَ وَلَكَ رَبٌّ غَيْرِي قَالَ رَبِّي وَرَبُّكَ اللَّهُ فَأَخَذَهُ فَلَمْ يَزَلْ يُعَذِّبُهُ حَتَّى دَلَّ عَلَى الْغُلَامِ فَجِيءَ بِالْغُلَامِ فَقَالَ لَهُ الْمَلِكُ أَيْ بُنَيَّ قَدْ بَلَغَ مِنْ سِحْرِكَ مَا تُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ وَتَفْعَلُ وَتَفْعَلُ فَقَالَ إِنِّي لَا أَشْفِي أَحَدًا إِنَّمَا يَشْفِي اللَّهُ فَأَخَذَهُ فَلَمْ يَزَلْ يُعَذِّبُهُ حَتَّى دَلَّ عَلَى الرَّاهِبِ فَجِيءَ بِالرَّاهِبِ فَقِيلَ لَهُ ارْجِعْ عَنْ دِينِكَ فَأَبَى فَدَعَا بِالْمِئْشَارِ فَوَضَعَ الْمِئْشَارَ فِي مَفْرِقِ رَأْسِهِ فَشَقَّهُ حَتَّى وَقَعَ شِقَّاهُ ثُمَّ جِيءَ بِجَلِيسِ الْمَلِكِ فَقِيلَ لَهُ ارْجِعْ عَنْ دِينِكَ فَأَبَى فَوَضَعَ الْمِئْشَارَ فِي مَفْرِقِ رَأْسِهِ فَشَقَّهُ بِهِ حَتَّى وَقَعَ شِقَّاهُ ثُمَّ جِيءَ بِالْغُلَامِ فَقِيلَ لَهُ ارْجِعْ عَنْ دِينِكَ فَأَبَى فَدَفَعَهُ إِلَى نَفَرٍ مِنْ أَصْحَابِهِ فَقَالَ اذْهَبُوا بِهِ إِلَى جَبَلِ كَذَا وَكَذَا فَاصْعَدُوا بِهِ الْجَبَلَ فَإِذَا بَلَغْتُمْ ذُرْوَتَهُ فَإِنْ رَجَعَ عَنْ دِينِهِ وَإِلَّا فَاطْرَحُوهُ فَذَهَبُوا بِهِ فَصَعِدُوا بِهِ الْجَبَلَ فَقَالَ اللَّهُمَّ اكْفِنِيهِمْ بِمَا شِئْتَ فَرَجَفَ بِهِمْ الْجَبَلُ فَسَقَطُوا وَجَاءَ يَمْشِي إِلَى الْمَلِكِ فَقَالَ لَهُ الْمَلِكُ مَا فَعَلَ أَصْحَابُكَ قَالَ كَفَانِيهِمُ اللَّهُ فَدَفَعَهُ إِلَى نَفَرٍ مِنْ أَصْحَابِهِ فَقَالَ اذْهَبُوا بِهِ فَاحْمِلُوهُ فِي قُرْقُورٍ فَتَوَسَّطُوا بِهِ الْبَحْرَ فَإِنْ رَجَعَ عَنْ دِينِهِ وَإِلَّا فَاقْذِفُوهُ فَذَهَبُوا بِهِ فَقَالَ اللَّهُمَّ اكْفِنِيهِمْ بِمَا شِئْتَ فَانْكَفَأَتْ بِهِمْ السَّفِينَةُ فَغَرِقُوا وَجَاءَ يَمْشِي إِلَى الْمَلِكِ فَقَالَ لَهُ الْمَلِكُ مَا فَعَلَ أَصْحَابُكَ قَالَ كَفَانِيهِمُ اللَّهُ فَقَالَ لِلْمَلِكِ إِنَّكَ لَسْتَ بِقَاتِلِي حَتَّى تَفْعَلَ مَا آمُرُكَ بِهِ قَالَ وَمَا هُوَ قَالَ تَجْمَعُ النَّاسَ فِي صَعِيدٍ وَاحِدٍ وَتَصْلُبُنِي عَلَى جِذْعٍ ثُمَّ خُذْ سَهْمًا مِنْ كِنَانَتِي ثُمَّ ضَعْ السَّهْمَ فِي كَبِدِ الْقَوْسِ ثُمَّ قُلْ بِاسْمِ اللَّهِ رَبِّ الْغُلَامِ ثُمَّ ارْمِنِي فَإِنَّكَ إِذَا فَعَلْتَ ذَلِكَ قَتَلْتَنِي فَجَمَعَ النَّاسَ فِي صَعِيدٍ وَاحِدٍ وَصَلَبَهُ عَلَى جِذْعٍ ثُمَّ أَخَذَ سَهْمًا مِنْ كِنَانَتِهِ ثُمَّ وَضَعَ السَّهْمَ فِي كَبْدِ الْقَوْسِ ثُمَّ قَالَ بِاسْمِ اللَّهِ رَبِّ الْغُلَامِ ثُمَّ رَمَاهُ فَوَقَعَ السَّهْمُ فِي صُدْغِهِ فَوَضَعَ يَدَهُ فِي صُدْغِهِ فِي مَوْضِعِ السَّهْمِ فَمَاتَ فَقَالَ النَّاسُ آمَنَّا بِرَبِّ الْغُلَامِ آمَنَّا بِرَبِّ الْغُلَامِ آمَنَّا بِرَبِّ الْغُلَامِ فَأُتِيَ الْمَلِكُ فَقِيلَ لَهُ أَرَأَيْتَ مَا كُنْتَ تَحْذَرُ قَدْ وَاللَّهِ نَزَلَ بِكَ حَذَرُكَ قَدْ آمَنَ النَّاسُ فَأَمَرَ بِالْأُخْدُودِ فِي أَفْوَاهِ السِّكَكِ فَخُدَّتْ وَأَضْرَمَ النِّيرَانَ وَقَالَ مَنْ لَمْ يَرْجِعْ عَنْ دِينِهِ فَأَحْمُوهُ فِيهَا أَوْ قِيلَ لَهُ اقْتَحِمْ فَفَعَلُوا حَتَّى جَاءَتْ امْرَأَةٌ وَمَعَهَا صَبِيٌّ لَهَا فَتَقَاعَسَتْ أَنْ تَقَعَ فِيهَا فَقَالَ لَهَا الْغُلَامُ يَا أُمَّهْ اصْبِرِي فَإِنَّكِ عَلَى الْحَقِّ (صحيح مسلم 5327 -)
 
குறிப்பு 2).
 
 حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مُحَمَّدِ بْنِ مُوسَى أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ أَخْبَرَنَا لَيْثُ بْنُ سَعْدٍ وَابْنُ لَهِيعَةَ عَنْ قَيْسِ بْنِ الْحَجَّاجِ قَالَ ح و حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَخْبَرَنَا أَبُو الْوَلِيدِ حَدَّثَنَا لَيْثُ بْنُ سَعْدٍ حَدَّثَنِي قَيْسُ بْنُ الْحَجَّاجِ الْمَعْنَى وَاحِدٌ عَنْ حَنَشٍ الصَّنْعَانِيِّ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ كُنْتُ خَلْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمًا فَقَالَ يَا غُلَامُ إِنِّي أُعَلِّمُكَ كَلِمَاتٍ احْفَظْ اللَّهَ يَحْفَظْكَ احْفَظْ اللَّهَ تَجِدْهُ تُجَاهَكَ إِذَا سَأَلْتَ فَاسْأَلْ اللَّهَ وَإِذَا اسْتَعَنْتَ فَاسْتَعِنْ بِاللَّهِ وَاعْلَمْ أَنَّ الْأُمَّةَ لَوْ اجْتَمَعَتْ عَلَى أَنْ يَنْفَعُوكَ بِشَيْءٍ لَمْ يَنْفَعُوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ لَكَ وَلَوْ اجْتَمَعُوا عَلَى أَنْ يَضُرُّوكَ بِشَيْءٍ لَمْ يَضُرُّوكَ إِلَّا بِشَيْءٍ قَدْ كَتَبَهُ اللَّهُ عَلَيْكَ رُفِعَتْ الْأَقْلَامُ وَجَفَّتْ الصُّحُفُ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيح (سنن الترمذي -2440)
 
 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/