HOME      Khutba      கவலைகளை களைவோம்! | Tamil Bayan - 639   
 

கவலைகளை களைவோம்! | Tamil Bayan - 639

           

கவலைகளை களைவோம்! | Tamil Bayan - 639


بسم الله الرحمن الرّحيم

கவலைகளைக் களைவோம்!

إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா எனக்கும்உங்களுக்கும் மன்னிப்பையும், கருணையையும், ஈருலக வாழ்வின் வெற்றியையும் தந்தருள்வானாக! அல்லாஹ்வை பொருந்திக் கொண்டு ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை பின்பற்றி வாழக்கூடிய தவ்ஃபீக்கை அல்லாஹு தஅலா எனக்கும் உங்களுக்கும் வழங்குவானாக!

நம்முடைய வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துன்பங்கள், துயரங்கள், கவலைகள், பிரச்சினைகள், குழப்பங்கள் அனைத்திலிருந்தும் அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா நமக்கு தெளிவான வழிகாட்டுதலைக் கொடுத்து அவற்றில் இருந்து நம்மை பாதுகாப்பானாக!ஆமீன்.

சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கு சென்ற பிறகு அல்லாஹ்வை அவர்கள் புகழக்கூடிய புகழ்ச்சிகளில் ஒன்றாக ரப்புல் ஆலமீன் குறிப்பிடுகின்றான்:

الْحَمْدُ لِلَّهِ الَّذِي أَذْهَبَ عَنَّا الْحَزَنَ

எங்களை விட்டும் எங்கள் கவலைகளைப் போக்கிய அல்லாஹ்விற்கே எல்லா புகழும். (அல்குர்ஆன் 35 : 34)

இந்த உலகம் கவலைகளால், துக்கங்களால், துயரங்களால், மனக்கஷ்டங்களால் சூழப்பட்டது. சொர்க்கத்தில் எந்த விதமான கஷ்டமும், துயரங்களும், மன நெருக்கடிகளும் அங்கே இருக்காது.

நரகவாசிகளுக்கு அல்லாஹு தஆலா கொடுக்கக்கூடிய தண்டனைகளில் நெருப்பின் தண்டனைஇன்னும் அங்கு இருக்கக்கூடிய முள் மரங்களையுடைய உணவின் தண்டனை இன்னும் வெளிரங்கமான இந்த தண்டனைகள் போக, அவர்கள் மீது மன சஞ்சலங்கள், கவலைகள் சாட்டப்பட்டு விடும்.

அது அவர்களுக்கு மிகப்பெரிய தண்டனையாக இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பார்த்து பேச மாட்டான். அவர்களது அழுகுரலை கேட்க மாட்டான். பிராத்தனைகள் அங்கீகரிக்கப்படாது என்று கூறப்பட்டு விடும்.

وَمَا دُعَاءُ الْكَافِرِينَ إِلَّا فِي ضَلَالٍ

நிராகரிப்பவர்கள் செய்யும் பிரார்த்தனை (இத்தகைய) வழிகேடாகவே இருக்கிறது. (அல்குர்ஆன் 13:14)

வசனத்தின் கருத்து : நீ எவ்வளவு தான் கூக்குரலிட்டாலும், அழுதாலும், புலம்பினாலும் உன்னுடைய பிரார்த்தனை இங்கு ஏற்கப்படாது. பிராத்தனை செய்ய வேண்டிய நேரத்தில் அல்லாஹ்வை நிராகரித்தாய், மறுத்தாய். எனவே இப்பொழுது உனக்கு துஆக்கள் அங்கீகாரிக்கப்படாது என்று அவர்களை அல்லாஹ் விரட்டி விடுவான்.

اخْسَئُوا فِيهَا وَلَا تُكَلِّمُونِ

நீங்கள் கேவலப்படுங்கள்; சிறுமைப்படுங்கள்;என்னை விட்டு தூரமாகி விடுங்கள். என்னிடத்தில் பேசாதீர்கள் என்று அல்லாஹு தஆலா தனக்கும், அவர்களுக்கும் இடையே திரையை வைத்து விடுவான். (அல்குர்ஆன் 23 : 108)

காஃபிர்கள் அல்லாஹ்வை பார்க்க முடியாது; பேச முடியாது;அல்லாஹ்வின் கருணையின் பார்வை அவர்கள் மீது படாது.

சொர்க்கத்தினுடைய இன்பங்களில் ஒன்று குறித்து ஹதீஸில் வருகிறது. அந்த சொர்க்கவாசிகள் சொர்க்கத்திற்கு செல்லும் போது அல்லாஹு தஅலா மலக்குகள் மூலமாக அவர்களுக்கு வாழ்த்துச் சொல்லி அனுப்புவான். அந்த வார்த்தைகளில் ஒன்று, இங்கு சொர்க்கத்தில் உங்களுக்கு கவலைகள் இருக்காது. இங்கு நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.(1)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2837.

சொர்க்கத்தினுடைய மகிழ்ச்சி தான் உண்மையான மகிழ்ச்சி. அல்லாஹு தஆலா கூறுகிறான்:

فَهُمْ فِي رَوْضَةٍ يُحْبَرُونَ

சொர்க்கவாசிகளும், அவர்களுடைய மனைவிகளும், அவர்களுடைய பிள்ளைகளும் சொர்க்கத்தில் முழுமையான மகிழ்ச்சி கொடுக்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 30:15)

இந்த உலகம் பிரச்சனைகளால் கவலைகளால் சூழப்பட்டது என்பதை நாம் புரிய வேண்டும். இந்த உலகத்தில் எப்போதும் நாம் சந்தோஷமாக, மகிழ்ச்சியாக இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கக் கூடாது.

கவலைகள் வரும். அந்த கவலைகளின் நேரத்தில் நாம் எப்படி இருக்க வேண்டும்? என்று அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் நமக்கு வழிகாட்டியிருக்கின்றார்கள்.

ரஸூல்மார்களுக்கு கவலைகள் வந்திருக்கிறது. மன நெருக்கடிக்கு அவர்கள் ஆளாகியிருக்கிரார்கள். மன சஞ்சலங்களுக்கு அவர்கள் ஆளாகியிருக்கிரார்கள். அல்லாஹ் ஆறுதல் கூறினான்.

وَلَا يَحْزُنْكَ قَوْلُهُمْ

நபியே, அவர்கள் உங்களைப் பற்றி இப்படி தரக்குறைவாக பேசுவது உங்களுக்கு மன சஞ்சலத்தைக் கொடுத்து விட வேண்டாம். உங்களை கவலையில் தள்ளிவிட வேண்டாம். (அல்குர்ஆன் 10 : 65)

நாம் எதிரிகளால் சோதிக்கப் படுவோம். நம்முடைய குடும்பத்தில் சோதிக்கப் படுவோம். நம்முடைய பெற்றோரால் சோதிக்கப் படுவோம். நம்முடைய பிள்ளைகளால் சோதிக்கப் படுவோம். நம்முடைய நண்பர்களால் சோதிக்கப் படுவோம். இப்படி சோதனைகள் கவலைகள் என்பது கண்டிப்பாக வரும்.

அல்லாஹ்வை கொண்டு நாம் ஆறுதல் பெறும் போது, நமது இரு கரங்களை அல்லாஹ்வை நோக்கி உயர்த்தும் போது, யாஅல்லாஹ்! என்னைப் படைத்த இறைவனே! என்று நாம் அழைக்கும் போது, அந்த ரப்பு நமக்கு அந்த துயரத்தை இலகுவாக்கி கொடுப்பான். நமக்கு அவன் ஆறுதலைக் கொடுப்பான். அல்லாஹ்வை தவிர வேறு யாரும் நம்முடைய உள்ளத்திற்கு தேவையான ஆறுதலைக் கொடுக்க முடியாது.

மனைவி சில நல்ல வார்த்தைகளைக் கூறலாம். அல்லது பிள்ளைகளில் சிலர் நமக்கு நல்ல ஆறுதல்களைக் கூறலாம். இப்படியாக மனிதர்களில் சிலர் ஆறுதல் கூறினாலும் எல்லாருடைய ஆறுதலுக்கும் மேலாக அல்லாஹ்வுடைய ஆறுதல் தேவை.

அல்லாஹ்வுடைய அழகிய பெயர்களில் ஒன்று الجبارஅல் ஜப்பார் -உடைந்த உள்ளங்களுக்கு, காயப்பட்ட இதயங்களுக்கு ஆறுதல் கொடுக்கக்கூடியவன். உண்மையான முழுமையான நிவாரணத்தை கொடுக்கக்கூடியவன்.

அல்லாஹ் ஒருவன் தான் கவலைகளை நம்முடைய உள்ளத்திலிருந்து போக்க முடியும். அவன் தான் நம்முடைய கவலைகளை மகிழ்ச்சியாக மாற்ற முடியும். மனிதர்களிடத்தில் முறையிட்டு எந்த பிரயோஜனமும் இருக்காது.

யஃகூப் (அலை) தன்னுடைய மகன் யூசுஃபை பற்றி வருந்திய சமயத்தில் மற்ற பிள்ளைகள் சொன்னார்கள்:

قَالُوا تَاللَّهِ تَفْتَأُ تَذْكُرُ يُوسُفَ حَتَّى تَكُونَ حَرَضًا أَوْ تَكُونَ مِنَ الْهَالِكِينَ

(இந்நிலைமையைக் கண்ட அவருடைய மக்கள் அவரை நோக்கி,) ‘‘அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீர் யூஸுஃபை நினைத்து இளைத்து (உருகி) இறந்துவிடும் வரை (அவருடைய எண்ணத்தை) விடமாட்டீர்'' என்று கடிந்து கூறினார்கள். (அல்குர்ஆன் 12 : 85)

அந்த பிள்ளைகள் தனது தகப்பனாரை கடின வார்த்தைகளைக் கொண்டு கூறினார்கள். எனவே அந்த பிள்ளைகளிடம் யஃகூப் (அலை) கூறினார்கள்.

إِنَّمَا أَشْكُو بَثِّي وَحُزْنِي إِلَى اللَّهِ وَأَعْلَمُ مِنَ اللَّهِ مَا لَا تَعْلَمُونَ

என்னுடைய துக்கத்தை, என்னுடைய கவலையை, என்னுடைய மன சஞ்சலத்தை அல்லாஹ்விடம் முறையிடுகிறேன். நீங்கள் அறியாததை அல்லாஹ்வின் விஷயத்தில் நான் அறிந்திருக்கிறேன். (அல்குர்ஆன் 12:86)

அல்லாஹு தஅலா நன்மை செய்பவர்களுடைய கூலியைப் பற்றி இப்படி கூறுகின்றான்:

إِنْ أَحْسَنْتُمْ أَحْسَنْتُمْ لِأَنْفُسِكُمْ

நீங்கள் நன்மை செய்தால் அந்த நன்மை உங்களுக்கு. உங்களுடைய நன்மைக்கு தகுந்த கூலியை தான் உங்களுக்கு அல்லாஹ் கொடுப்பான். (அல்குர்ஆன் 17:7)

هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ

(உங்களின்) நன்மைக்கு நன்மையைத் தவிர (வேறு) கூலி உண்டா? (அல்குர்ஆன் 55 : 60)

அல்லாஹ்விற்கு நாம் நம்முடைய வணக்க வழிபாடுகளை தூய்மைப் படுத்தியவர்களாக, ரப் உடைய திருமுகத்தை மட்டும் நாடியவராக, அல்லாஹ்வோடு உண்மையோடு நாம் நடந்து கொண்டால், வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வின் பொருத்தத்திற்கு மட்டும் செய்பவர்களாக இருந்தால் நம்முடைய பிராத்தனைகளை, துஆக்களை அல்லாஹ் ஒருபோதும் வீணாக்க மாட்டான்.

இறைத்தூதர்களின் துஆக்களை அல்லாஹ் ஒன்றன் பின் ஒன்றாக கூறிக் கூறி வந்து, அந்த துஆக்களின் இறுதியில் ரப்புல் ஆலமீன் கூறுகிறான்:

وَكَذَلِكَ نَجْزِي الْمُحْسِنِينَ

நன்மை செய்பவர்களுக்கு இவ்வாறே நாம் (நற்)கூலி அளிக்கிறோம்.(அல்குர்ஆன் 6:84)

யூனுஸை மீன் வயிற்றிலிருந்து, அய்யூபை நோய்நொடியிலிருந்து, யஃகூபை மனக்கவலையிலிருந்து, இப்ராஹீமை நெருப்பு குண்டத்திலிருந்து, மூஸா (அலை) அவர்களை அந்த நைல் நதியிலிருந்து, இன்னும் ஃபிர்அவ்னுடைய அந்த ஆபத்திலிருந்து அல்லாஹ் பாதுகாத்தான். இப்பேற்பட்ட இறைவனின் ரட்சிப்பு எல்லா நல்லவர்களுக்கும் பொதுவானது.

وَكَذَلِكَ نُنْجِي الْمُؤْمِنِينَ

அல்லாஹ்வை நம்பிக்கை கொள்ளக்கூடிய முஃமினை எல்லாம் இப்படி தான் நாம் பாதுகாப்போம் என்றுஅல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் 21:88)

அல்லாஹ்வின் அடியார்களே!இப்போது பிரச்சினை என்ன என்றால், நம்முடைய நம்பிக்கை பலவீனம், நம் மன உறுதியில் நமக்கு இருக்கக்கூடிய பலவீனம், துஆவில் நமக்கு இருக்கக்கூடிய பலவீனம், நமக்கும் அல்லாஹ்விற்கும் இருக்கக்கூடிய உறவில் பலவீனம்.

அல்லாஹு தஅலா எப்படி கேட்கிறான்?

أَمَّنْ يُجِيبُ الْمُضْطَرَّ إِذَا دَعَاهُ وَيَكْشِفُ السُّوءَ وَيَجْعَلُكُمْ خُلَفَاءَ الْأَرْضِ أَإِلَهٌ مَعَ اللَّهِ قَلِيلًا مَا تَذَكَّرُونَ

(சிரமத்தில் சிக்கித்) துடிதுடித்துக் கொண்டிருப்பவர்கள் அபயமிட்டழைத்தால் அவர்களுக்குப் பதில் கூறி, அவர்களுடைய சிரமங்களை நீக்குபவன் யார்? பூமியில் உங்களை பிரதிநிதிகளாக ஆக்கி வைத்தவன் யார்? (இத்தகைய) அல்லாஹ்வுடன் வணக்கத்திற்குரிய வேறொரு கடவுள் இருக்கிறானா? (இல்லவே இல்லை.) உங்களில் நல்லுணர்ச்சி பெறுபவர்கள் வெகு சொற்பமே. (அல்குர்ஆன் 27:62)

பலவீனம் நம்மிடத்தில் இருக்கின்றது. கேட்கின்ற நாம் கேட்கத் தெரியாதவர்களாக இருக்கின்றோம். ஏன்? நம்மில் பலர் கேட்காதவர்களாக இருக்கின்றோம்.

மேலும் அல்லாஹ் சொல்கின்றான்:

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ

(அல்குர்ஆன் 40:60)

உங்கள் இறைவன் கூறுகிறான்: ‘‘நீங்கள் (உங்களுக்கு வேண்டியவை அனைத்தையும்) என்னிடமே கேளுங்கள். நான் உங்கள் பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வேன்.

அபூபக்ர் (ரலி) கவலைப்பட்டார்கள்.அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள்:

لَا تَحْزَنْ إِنَّ اللَّهَ مَعَنَا

அபூபக்ரே! கவலைப்படாதீர், துக்கப்படாதீர், சஞ்சலப்படாதீர், அல்லாஹ் நம்மோடு இருக்கிறான். (அல்குர்ஆன் 9 : 40)

கவலைகள் வந்து கொண்டு தான் இருக்கும்.வாழ்க்கையில், கவலையில்லாத வாழ்க்கை கிடையாது. சோகம் இல்லாத வாழ்க்கை கிடையாது.

காலையில் திருமணம் நடந்தால் மாலையிலோ கண்டிப்பாக அங்கு ஒரு மரணம் நடந்தே ஆகும். உலக வாழ்க்கையின் நியதி அப்படித்தான். அல்லாஹு தஅலா சுற்றிக் கொண்டே வருவான்.

وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ

இத்தகைய கஷ்டகாலம் மனிதர்களுக்கு இடையில் மாறிமாறி வரும்படி நாம்தான் செய்கிறோம். (அல்குர்ஆன் 3:140)

அல்லாஹ்வின் அடியார்களே! ஈமானை நாம் படிக்க வேண்டும். அல்லாஹ்வோடு இருக்க வேண்டிய தொடர்பை நாம் படிக்க வேண்டும். துஆக்களை நாம் படிக்க வேண்டும்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கவலைப்படவில்லையா? தன்னுடைய மகனார் இப்ராஹிம் மரணத்தை நினைத்து ரஸூலுல்லாஹ் அழுதார்கள்.

இப்ராஹிம் உன்னுடைய பிரிவால் நான் அழுகின்றேன். உன்னுடைய பிரிவால் நான் கவலையில் வீழ்ந்து விட்டேன் என்று சொல்கிறார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம்,எண் : 2315.

அல்லாஹ்வின் அடியார்களே! இங்கே உள்ளம் தடுமாறாமல் இருக்க வேண்டும். எந்த உள்ளத்தில் ஈமான் இருக்குமோ? அல்லாஹ்வின் மீது, விதியின் மீது அசைக்க முடியாத நம்பிக்கை இருக்குமோ? அல்லாஹ்வை பொருந்திக் கொண்ட உள்ளமாக இருக்குமோ? அந்த உள்ளத்தை எந்த கவலைகளும் ஆட்டிவிடாது, அசைத்து விடாது, தடுமாறச் செய்து விடாது.

இங்கே பிரச்சினை நம்முடைய கல்ப். அவ்வளவு பலவீனமான கல்பாக இருக்கிறது. வெயில் காலங்களில், மழையில்லாத காலங்களில் மரங்களெல்லாம் பட்டுப்போய், இலையும் காய்ந்து போய் சின்ன ஒரு காற்று அடித்தாலும் விழுந்து விடும். அந்த அளவிற்கு தான் நம்முடைய உள்ளங்கள், அதாவது ஈமானுடைய நிலையிருக்கிறது.

சின்னச்சின்ன பிரச்சனைகளில், சிக்கல்களில் உள்ளம் தளர்ந்து விடுகின்றோம். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)முகம் திரும்பக்கூடியவர்கள் அதிகமானவர்கள். ஏந்திய கைகளை விட்டுவிடக்கூடியவர்கள். நம்பிக்கையில் உள்ளத்தை வேறொன்றின் பக்கம் திருப்பக்கூடியவர்கள்.

இப்படிபட்ட போலிகளையெல்லாம் இந்த கவலையின் நேரங்களில், சோதனைகளின் நேரங்களில் அல்லாஹ் ஒதுக்கி விடுகின்றான்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு அழகான வழிகாட்டுதல்களைச் சொல்லிக் காட்டுகின்றார்கள்.

இன்று, நம்மில் பலருக்கு உணவு உண்ணும் போது என்ன துஆ? உணவு உண்டதற்கு பிறகு என்ன துஆ? தூங்கி எழுந்தால் என்ன துஆ? என்றெல்லாம் அறிந்து வைத்திருப்பார்கள். படித்து வைத்திருப்பார்கள்;மனப்பாடம் செய்து வைத்திருப்பார்கள்.

அதுபோன்று, கவலைகளிலிருந்து பாதுகாப்பு தேட, கவலையின் போது மன ஆறுதல் பெற, துக்கத்தின் போது இந்த உள்ளத்தில் தடுமாற்றம் ஏற்படாமல் இருப்பதற்கு, அந்த துக்கங்களைத் துயரங்களை உள்ளத்திலிருந்து துடைத்து எறிவதற்கு அல்லாஹ்வுடைய தூதர் கற்றுக் கொடுத்த அழகான துஆக்கள் இருக்கின்றது.

அந்த துஆக்களை படித்து மனப்பாடம் செய்து, அவற்றுடைய பொருளை உணர்ந்து ஈமானோடு, யகீனோடு, இக்லாஸோடு அந்த துஆக்களை கேட்கும் போது கண்டிப்பாக அல்லாஹு தஆலா அந்த கவலைகளை துக்கங்களைப் போக்குவான்.

அந்த துஆக்களில் சில துஆக்களைப் பார்ப்போம்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் :

اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو

அல்லாஹ்வே! உன்னுடைய கருணையை மட்டும் தான் நான் ஆதரவு வைக்கின்றேன்.

فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ

ஒரு கண் சிமிட்டும் நேரம் கூட, நீ என்னை என் பக்கம் சாட்டிவிடாதே!

(நான் எனக்கு பொறுப்பேற்க முடியாது. எனது நன்மைக்கு நான் பொறுப்பேற்க முடியாது. என்னுடைய தீமைகளை என்னால் அகற்ற முடியாது.)

وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ

என்னுடைய எல்லா காரியத்தையும் நீ எனக்கு சீர்செய்து கொடு.

لَا إِلَهَ إِلَّا أَنْتَ

உன்னைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை.

அறிவிப்பாளர் : அபூ பக்ரா இப்னு அல் ஹாரிஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அபூதாவூத்,எண் : 5090, தரம் : ஹசன் (அல்பானி)

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் : இந்த துஆ,கவலைகளால், பிரச்சினைகளால் சூழப்பட்டு மன நெருக்கடிக்கு ஆளாகியுள்ள ஒருவனுக்குரிய துஆ ஆகும்.

அல்லாஹ்வுடைய ஈமானைப் பெற்ற நமக்கு (அல்ஹம்து லில்லாஹ்) அல்லாஹ் கொடுத்த மிகப்பெரிய நிஃமத் இது போன்று துஆக்கள்.

இஸ்லாமை ஏற்காதவர்களுக்கு, இஸ்லாமை அறியாதவர்களுக்குவழி தெரியாது. தங்கள் ரப்பிடத்தில் எப்படிகேட்பதென்று தெரியாது. அவர்களோ ரப்பு அல்லாதவர்களிடத்தில் கேட்டுக்கொண்டு இருந்தார்கள்.

எனவே தாங்கள் வணங்கிய கடவுள்கள் தங்களை கைவிட்டு விட்டன என்று சொல்லி இறுதியில் தங்கள் உயிரையே அந்த துக்கத்தில், துயரத்தில், சஞ்சலத்தில் மாய்த்துக் கொள்ளகின்ற நிலையை பார்க்கின்றோம்.

ஆனால், ஒரு முஃமின் அப்படி ஆக மாட்டான். ஏன்? எனது ரப்பு என்னைக் கைவிட மாட்டான். என்று உண்மையான ரப்பை உயிருள்ள ரப்பை அவன் நம்பிக்கை கொண்டுள்ளான்.

அல்லாஹ் சொல்கிறான்:

وَتَوَكَّلْ عَلَى الْحَيِّ الَّذِي لَا يَمُوتُ

நபியே உங்களது பொறுப்புகளை நீங்கள் அந்த இறைவனிடம் சாட்டிவிடுங்கள். யார் நித்திய ஜீவனோ? என்றுமே மரணிக்காதவனோ? அவனிடத்தில் நீங்கள் பொறுப்பு சாட்டுங்கள். அவனை சார்ந்திருங்கள். அவன் மீது நம்பிக்கை வைத்திருங்கள். (அல்குர்ஆன் 25:58)

மேலும் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதிகமதிகம் கேட்க கூடிய துஆக்களில் ஒன்று, வெளிரங்க வாசகத்தை பார்த்தால் அது துஆவைப் போன்று இருக்காது; அல்லாஹ்வின் துதி மொழிகளாக இருக்கும்.

ஆனால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மன நெருக்கடி ஏற்படும் போது, தனக்கு கஷ்டம் ஏற்படும் போது, இந்த வார்த்தைகளை அதிகம் சொல்வார்கள்:

«لاَ إِلَهَ إِلَّا اللَّهُ العَظِيمُ الحَلِيمُ، لاَ إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ العَرْشِ العَظِيمِ، لاَ إِلَهَ إِلَّا اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الأَرْضِ، وَرَبُّ العَرْشِ الكَرِيمِ»

மகத்துவம் மிக்க மிகப்பெரிய சகிப்பாளனாகிய அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறுயாருமில்லை.

ஏழு வானங்களுக்கு அதிபதியாகிய, பூமிக்கு அதிபதியாகிய, மகத்தான அர்ஷுக்கு அதிபதியாகிய அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறுயாருமில்லை.

இந்த துஆவை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மன சஞ்சலத்தில் ஓதுவார்கள். கஷ்டத்தில் ஓதுவார்கள்.

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 6346.

இன்று, தவ்ஹீதை அறியாத,ஈமானை அறியாத பலர், கஷ்டம் ஏற்பட்டால் தாயத்தை நோக்கி ஓடுகிறார்கள். தர்ஹாக்களை நோக்கி ஓடுகிறார்கள். யாராவது மந்திரிப்பவர் இருக்கின்றாரா? யாராவது ஏதாவது எழுதி கொடுக்க மாட்டார்களா?

அவர்களுக்கும், அல்லாஹ்வை நம்பாத இறைமறுப்பாளர்களுக்கும், அல்லது அல்லாஹ்விற்கு இணை வைக்கக்கூடிய முஷ்ரிக்குகளுக்கும் இடையில் என்ன வித்தியாசம் இருக்கிறது?!

அல்லாஹ் சொல்கிறான் :

فَفِرُّوا إِلَى اللَّهِ إِنِّي لَكُمْ مِنْهُ نَذِيرٌ مُبِينٌ

ஆகவே, (பாவத்திலிருந்து விலகி) அல்லாஹ்வின் பக்கம் வெகு தீவிரமாக நீங்கள் விரைந்து செல்லுங்கள். நிச்சயமாக நான் அவனைப் பற்றி உங்களுக்குப் பகிரங்கமாகவே அச்சமூட்டி எச்சரிக்கை செய்கிறேன். (அல்குர்ஆன் 51 : 50)

இவர்கள் எந்த நேரத்தில் அல்லாஹ்விடத்தில் ஓடி வர வேண்டுமோ? அந்த நேரத்தில் அல்லாஹ்வை விட்டு விட்டு கையாளாகாத பொருட்கள், கையாளாகாத வஷ்துக்கள் நோக்கி போகின்றார்கள்.

அது போன்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய துஆவில் ஒன்று :

பிரச்சினைகள் அதிகமாகி விட்டால், கஷ்டங்கள் கடினமாகிவிடும் போது இவ்வாறு கூறுவார்கள் :

«اللَّهُمَّ لَا سَهْلَ إِلَّا مَا جَعَلْتَهُ سَهْلًا، وَأَنْتَ تَجْعَلُ الْحَزْنَ سَهْلًا إِذَا شِئْتَ»

யாஅல்லாஹ்! நீ எதை லேசாக்கி வைக்கிறாயோ? அதை தவிர வேறு எதுவும் லேசாகிவிட முடியாது.(நீ நாடினால் கடினமான பூமியைக் கூட மென்மையான பூமியாக மாற்றி விட முடியும்.)என்னுடைய கஷ்டத்தை லேசாக்கி கொடு என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிராத்தனை செய்வார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : இப்னு ஹிப்பான்,எண் : 974, தரம் : ஸஹீஹ் (அல்பானி)

அதுபோன்று ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய துஆவில் ஒன்று :

«اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنَ الهَمِّ وَالحَزَنِ، وَالعَجْزِ وَالكَسَلِ، وَالبُخْلِ، وَالجُبْنِ، وَضَلَعِ الدَّيْنِ، وَغَلَبَةِ الرِّجَالِ»

யாஅல்லாஹ்! மன நெருக்கடியிலிருந்து, மனக்கவலையிலிருத்து பாதுகாப்பு தேடுகின்றேன்.

பலவீனத்திலிருந்து, சோம்பேறித்தனத்திலிருந்து பாதுகாவல் தேடுகின்றேன்.

கஞ்சத்தனத்திலிருந்து, கோழைத்தனத்திலிருந்து பாதுகாவல் தேடுகின்றேன்.

கடன்கள் அதிகமாகி விடுவதிலிருந்து,மனிதர்கள் என்னை மிகைப்பதிலிருந்து நான் பாதுகாவல் தேடுகின்றேன். அல்லாஹ்வுடைய தூதர் இந்த துஆவை அதிகம் அதிகம் செய்வார்கள்.

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6363.

இன்னும் ஒரு துஆவைப் பாருங்கள்.

ரொம்ப முக்கியமான துஆ, ரொம்ப பணிவான துஆ, அல்லாஹ்வின் பக்கம் தன்னுடைய முழு இயலாமையை வெளிப்படுத்தி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்ட துஆ. கவலைக்காக வேண்டியே, கஷ்டத்துக்காக வேண்டியே கேட்ட துஆ.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்வார்கள்:

اللَّهُمَّ إِنِّي عَبْدُكَ ابْنُ عَبْدِكَ ابْنُ أَمَتِكَ

அல்லாஹ்வே!நிச்சயமாக நான் உன்னுடைய அடிமை.உன்னுடைய அடிமையின் மகன்.உன்னுடைய அடிமை பெண்ணின் மகன்.

نَاصِيَتِي بِيَدِكَ

எனது நெற்றி முடி உன் கையில் இருக்கிறது.

مَاضٍ فِيَّ حُكْمُكَ

என்னில் உன்னுடைய தீர்ப்பு நிறைவேறியே ஆகும்.

عَدْلٌ فِيَّ قَضَاؤُكَ

நீ என் விஷயத்தில் அளித்த அத்தனை தீர்ப்புகளும் நீதமானது.

أَسْأَلُكَ بِكُلِّ اسْمٍ هُوَ لَكَ

உனக்கு உரித்தான எல்லா பெயர்களைக் கொண்டும் நான் உன்னிடத்தில் கேட்கின்றேன்.

سَمَّيْتَ بِهِ نَفْسَكَ

அந்த பெயர்களை நீ உனக்காக வைத்துக் கொண்டு இருக்கின்றாய்.

أَوْ عَلَّمْتَهُ أَحَدًا مِنْ خَلْقِكَ

உன்னுடைய அடியாருக்கு யார் ஒருவருக்கேனும் அந்த பெயர்களை நீ கற்றுக் கொடுத்திருக்கலாம்.

أَوْ أَنْزَلْتَهُ فِي كِتَابِكَ

அல்லது உனது வேதத்தில் அந்த பெயரை நீ இறக்கியிருக்கலாம்.

أَوِ اسْتَأْثَرْتَ بِهِ فِي عِلْمِ الْغَيْبِ عِنْدَكَ

அல்லது உனக்கென மறைவான ஞானத்தில் அந்த பெயரை நீ விஷேசமாக வைத்திருக்கலாம். அந்த பெயரின் பொருட்டால்' என் இறைவா! உன்னிடத்தில் கேட்கின்றேன்.

أَنْ تَجْعَلَ الْقُرْآنَ رَبِيعَ قَلْبِي

குர்ஆனை என்னுடைய உள்ளத்திற்கு வசந்தமாக ஆக்கிக்கொடு.

وَنُورَ بَصَرِي

என்னுடைய நெஞ்சத்திற்கு ஒளியாக ஆக்கிக் கொடு.

وَجِلَاءَ حُزْنِي، وَذَهَابَ هَمِّي

என்னுடைய கவலைகளெல்லாம் போக்கக்கூடியதாக, என்னுடைய துயரங்களெல்லாம் நீக்கக் கூடியதாக ஆக்கிக்கொடு.

இந்த துஆவை ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டு விட்டு, கற்றுக்கொடுத்து விட்டு சொன்னார்கள். யார் இந்த துஆவை ஓதுவாரோஅவருடைய கவலையை அல்லாஹ் போக்கி, அவருடைய துயரத்திற்கு பதிலாக மகிழ்ச்சியை அவருக்கு கொடுப்பான்.

ஸஹாபாக்கள் கேட்டார்கள்: ரஸூலுல்லாஹ்! இந்த துஆக்களை நாங்கள் கற்றுக்கொள்ள வேண்டுமா?

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்: ஆம்! நீங்கள் கற்றுக் கொ‌ள்ளு‌ங்க‌ள்.

யாரெல்லாம் இந்த துஆக்களை கேட்டார்களோஅவர்களும் இந்த துஆவை கற்றுக் கொள்ளட்டும் என்று.

அறிவிப்பாளர் : இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : இப்னு ஹிப்பான், எண் : 972.

இப்படி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிகாட்டுதல்களில், குர்ஆனுடைய வசனங்களில், நமக்கு நம்முடைய கவலைகளை போக்குவதற்கு, நம்முடைய துயரங்கள், சிரமங்களில் நாம் எப்படிபட்ட நிலைப்பாட்டில் இருக்க வேண்டும் என்பதற்குரிய அழகான வழிகாட்டுதல் இருக்கின்றது.

ஈமான் இருக்க வேண்டும். இக்லாஸ் இருக்க வேண்டும். துஆ இருக்க வேண்டும். அதிகமாக திக்ரு இருக்க வேண்டும். அதிகமான நஃபிலான வணக்க வழிபாடுகள் இருக்க வேண்டும்.

இவற்றை விட்டுவிட்டு வேறு எங்காவது நாம் திரும்பினோம் என்றால், ஷைத்தான் நம்மை பற்றிக்கொள்வான், கவ்விக் கொள்வான், வழிகேட்டில் தள்ளுவான். இல்லையென்றால் மிகப்பெரிய ஆபத்தில் தள்ளிவிடுவான்.

அல்லாஹ் பாதுகாப்பானாக! நம்முடைய நம்பிக்கை, நம்முடைய ஆதரவு, அல்லாஹ்வின் மீது மட்டும் தான் இருக்க வேண்டும். அல்லாஹ் தான் நம்முடைய துஆக்களை அங்கீகரித்து, நம்முடைய சிரமங்களைப் போக்கி, கவலைகளை போக்கி, நம்முடைய தேவைகளை நிறைவேற்றக்கூடியவன்.

அல்லாஹ் சுப்ஹானஹு தஆலா நம்முடைய இம்மை வாழ்க்கையையும், மறுமை வாழ்க்கையையும், அல்லாஹ்வுடைய வேத வழிகாட்டுதலுக்கும், ரஸூலுல்லாஹ்வின் சுன்னாவின் வழிகாட்டுதலுக்கும்ஏற்ப ஆக்கிக்கொடுத்து நம்முடைய பாவங்களை மன்னித்து, மறுமையின் மிகப்பெரிய கவலையிலிருந்து, மறுமையின் மிகப்பெரிய துக்கங்கள் துயரங்களிலிருந்து பாதுகாப்பானாக!

சொர்க்கத்தைக் கொண்டு அல்லாஹ் ரப்புல் ஆலமீன் நமக்கு இன்பத்தை, மகிழ்ச்சியை நிறைவுப்படுத்திக் கொடுப்பானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَعَبْدُ بْنُ حُمَيْدٍ - وَاللَّفْظُ لِإِسْحَاقَ - قَالَا: أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ، قَالَ: قَالَ الثَّوْرِيُّ: فَحَدَّثَنِي أَبُو إِسْحَاقَ، أَنَّ الْأَغَرَّ، حَدَّثَهُ عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ، وَأَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " يُنَادِي مُنَادٍ: إِنَّ لَكُمْ أَنْ تَصِحُّوا فَلَا تَسْقَمُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَحْيَوْا فَلَا تَمُوتُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَشِبُّوا فَلَا تَهْرَمُوا أَبَدًا، وَإِنَّ لَكُمْ أَنْ تَنْعَمُوا فَلَا تَبْأَسُوا أَبَدًا " فَذَلِكَ قَوْلُهُ عَزَّ وَجَلَّ: {وَنُودُوا أَنْ تِلْكُمُ الْجَنَّةُ أُورِثْتُمُوهَا بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ} [الأعراف: 43] (صحيح مسلم -2837)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/