ஷஅபான் அமல்களின் மாதம் | Tamil Bayan - 667
بسم الله الرحمن الرّحيم
ஷஅபான் அமல்களின் மாதம்
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றிப்புகழ்ந்தவனாக, அல்லாஹ்வின் தூதர் மீதும், அந்தத் தூதரின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும்ஸலவாத்தும் ஸலாமும் கூடியவனாக உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை உபதேசம் செய்தவனாக,
அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பின்பற்றி வாழும் படியும், மறுமைக்காக வாழும் படியும், அல்லாஹ்வுடைய சட்டத்தை பேணி வாழும் படியும், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை பேணும் படியும், உபதேசம் செய்தவனாகஇந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
அல்லாஹு தஅலா நம் அனைவருக்கும் உண்மையான தக்வாவை, உறுதியான ஈமானை நஸீபாக்குவானாக! நம்முடைய பாவங்களை அல்லாஹ் தஆலா மன்னிப்பானாக!
மரணத்திற்கு முன்னர் அதிகமதிகம் அமல்களை செய்து, மறுமையில் மிகப்பெரிய வெற்றியடைந்த நல்லோரில் என்னையும், உங்களையும் அல்லாஹு தஅலா ஆக்கி அருள்வானாக! ஆமீன்.
இன்னும் நம்முடைய வாழ்க்கையில் எத்தனை நாட்கள் மீதம் இருக்கின்றன? என்று நாம் அறிய மாட்டோம். எத்தனை ஆண்டுகள் என்று சொல்வது மிக தூரம். எத்தனை நாட்கள் அல்லது எத்தனை மணிநேரங்கள் என்று கூட நம்மால் சொல்ல முடியாது.
அந்த அளவு மரணத்தை நோக்கி நாம் பயணித்துக் கொண்டே இருக்கின்றோம். மரணம் நம்மை நோக்கி விரைவாக வந்து கொண்டே இருக்கின்றது.
மரணத்தில் இருந்து தப்பிப்பவர் யாரும் இல்லை. மரணத்திற்குப் பிறகு மண்ணறையிலும் விசாரணை இருக்கின்றது. பிறகு மஹ்ஷரிலும் மிகப்பெரிய விசாரணை இருக்கின்றது.
இந்த மரணம் திடீரென்று மனிதனை கவ்வி இழுத்துக் கொண்டு சென்று விடுகின்றது. திடீரென்று தான் இன்றைய காலங்களில் மரணம் வருவதை பார்க்கின்றோம். இது மறுமையின் அடையாளங்களில் ஒன்று என்று அறிவிப்புகளில் வருகின்றது.
நேற்று நம்மோடு பேசியவர், பழகியவர், பார்த்தவர் இன்று நம்மோடு இல்லை என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிகின்றோம்.
நம்முடைய கப்ருக்காகவும் மறுமை வாழ்க்கைக்காகவும் இந்த உலக வாழ்க்கையிலேயே அமல்கள் செய்து கொண்டால் தான்.
இப்போது நமக்கு நேரம் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அவகாசம் கொடுக்கப் பட்டிருக்கின்றது.
நம்முடைய உயிரை மலக்குல் மவ்த் பிடுங்கிக் கொண்டால் ஒரு சுப்ஹானல்லாஹ் என்ற திக்ரைகூட நம்மால் செய்ய முடியாது.
இன்று நமக்கு இருக்கின்ற ஓய்வு நேரங்களில் எத்தனையோ ஆயிரக்கணக்கான திக்ருகளை, தஸ்பீஹ்களை, துஆக்களை செய்து கொள்வதற்கு அல்லாஹ் நமக்கு வாய்ப்பு அளித்திருக்கின்றான்.
ஆனால் ரப்புல் ஆலமீன் கூறுவதைப் போல,
اقْتَرَبَ لِلنَّاسِ حِسَابُهُمْ وَهُمْ فِي غَفْلَةٍ مُعْرِضُونَ
மக்களை விசாரிக்கின்ற விசாரணை நாள் நெருங்கிக் கொண்டு தான் இருக்கின்றது. ஆனால் அவர்கள்தான் அலட்சியத்தில் மறதியில் இருக்கின்றார்கள். (அல்குர்ஆன் 21:1)
ரப்புல் ஆலமீன் நமக்கு உணர்த்துகின்றான். நமக்கு முன் படிப்பினைகளை விவரித்துக் கொண்டே செல்கின்றான்.
كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ وَإِنَّمَا تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ
எல்லா ஆன்மாக்களும் மரணத்தை சுவைத்தே ஆகவேண்டும். மறுமையில் உங்களுடைய செயலுக்குரிய கூலிகள் நிறைவாக கொடுக்கப்படும். (அல்குர்ஆன் 3:185)
மனிதன் தன்னுடைய நல் அமல்களுக்குரிய கூலிகளை மறுமையில்தான் அவன் நிறைவாக காண்பான். அதுபோல தன்னுடைய பாவத்திற்கான தண்டனையும் மறுமையில் தான் அவன் பார்க்க போகின்றான்.
அல்லாஹு தஅலா சில நேரங்களில் நன்மை செய்ததற்கான கூலியை இந்த உலகத்தில் கொடுப்பான். அதேபோல பாவிகளுக்கும் தண்டனை கிடைக்கும்.
وَلَنُذِيقَنَّهُمْ مِنَ الْعَذَابِ الْأَدْنَى دُونَ الْعَذَابِ الْأَكْبَرِ لَعَلَّهُمْ يَرْجِعُونَ
அவர்கள் (பாவங்களிலிருந்து) விலகிக் கொள்வதற்காக (மறுமையில் அவர்கள்) பெரிய வேதனையை அடைவதற்கு முன்பாகவே (இம்மையில்) சிறியதொரு வேதனையை அவர்கள் சுவைக்கும்படிச் செய்வோம். (அல்குர்ஆன் 32:21)
وَلَعَذَابُ الْآخِرَةِ أَشَدُّ وَأَبْقَى
மறுமையின் வேதனையோ மகா கடினமானதும் நிலையானதும் ஆகும். (அல்குர்ஆன் 20 : 127)
அல்லாஹ்வின் உண்மையான நிஃமத் பரிபூரணமான அருள் சொர்க்கத்தில் இருக்கின்றது.
அல்லாஹ்வின் உண்மையான நிரந்தரமான தண்டனை மறுமையில் தான் இருக்கின்றது.
இன்னொரு வசனத்தில் அல்லாஹ் சொல்கின்றான்:
وَلَعَذَابُ الْآخِرَةِ أَشَقُّ
மறுமையின் தண்டனை தான் மிக பயங்கரமானது.(அல்குர்ஆன் 13:34)
சகோதரர்களே! அடுத்து அல்லாஹு தஅலா நமக்கு கூறக்கூடிய அறிவுரையை கேளுங்கள்.
فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ
ஆகவே, (அந்நாளில்) எவர் (நரக) நெருப்பிலிருந்து அப்புறப்படுத்தப்பட்டு சொர்க்கத்தில் நுழைவிக்கப்படுகிறாரோ அவர் நிச்சயமாக பெரும் பாக்கியத்தை அடைந்துவிட்டார். இவ்வுலக வாழ்க்கை மயக்கக்கூடிய (அற்ப) இன்பத்தைத் தவிர வேறில்லை. (அல்குர்ஆன் 3 : 185)
உலக செல்வங்களைப் பெற்று மனிதன் எந்த பாக்கியத்தையும் அடைய முடியாது. பணக்காரன் செல்வந்தன் என்ற பெயரை தவிர.
உலக வஸ்துகளை கொண்டு, உலகத்தில் ஆடம்பரமான பொருட்களை கொண்டுமனிதன் தற்காலிக பெருமைதான் பெற்றுக் கொள்ள முடியுமே தவிர, உண்மையான மகிழ்ச்சி சொர்க்கத்தில் தான்.
தக்வா உள்ளவர்கள் சொர்க்கத்திற்கு அழைத்துச் செல்லப்படுவார்கள்.
அல்லாஹ் கூறுகின்றான் :
وَسِيقَ الَّذِينَ اتَّقَوْا رَبَّهُمْ إِلَى الْجَنَّةِ زُمَرًا حَتَّى إِذَا جَاءُوهَا وَفُتِحَتْ أَبْوَابُهَا وَقَالَ لَهُمْ خَزَنَتُهَا سَلَامٌ عَلَيْكُمْ طِبْتُمْ فَادْخُلُوهَا خَالِدِينَ
எவர்கள் தங்கள் இறைவனுக்குப் பயந்து நடந்து கொண்டிருந்தார்களோ அவர்கள் (அந்நாளில்) கூட்டம் கூட்டமாகச் சொர்க்கத்தின் பக்கம் அழைத்து வரப்படுவார்கள். அதன் சமீபமாக அவர்கள் வரும் சமயத்தில், அதன் வாயில்கள் திறக்கப்பட்டு, அதன் காவலாளர்கள் அவர்களை நோக்கி, ‘‘உங்கள் மீது ஸலாம் உண்டாவதாகுக! நீங்கள் பாக்கியவான்களாகி விட்டீர்கள். நீங்கள் இதில் நுழைந்து, என்றென்றும் இதில் தங்கிவிடுங்கள்'' என்று கூறுவார்கள். (அல்குர்ஆன் 39:73)
யாருக்கு அந்த சொர்க்கத்திற்கு உள்ளே நுழைவதற்கு அனுமதி கொடுக்கப்பட்டதோ, அவர் பாக்கியம் பெற்றார். உண்மையான பாக்கியம் என்ன? அவர் ஏழையாக இருக்கலாம். இந்த உலகத்தில் எத்தனையோ நாம் அறியாத சாதாரணமான மக்களாக இருக்கலாம். மக்கள் அறியப்படாத சாதாரணமான பாமரராக இருக்கலாம்.
ஆனால் தன்னுடைய ஈமானை கொண்டு தக்வாவை கொண்டு இபாதத்தை கொண்டு இக்லாஸை செய்து கொண்டு இஹ்ஸானை கொண்டு அல்லாஹ்வை நெருங்கியவராக இருப்பார்.
அவரிடத்தில் பணங்கள் இல்லாமல் இருக்கலாம். வசதியான வீடுகள் இல்லாமல் இருக்கலாம்.
ஒரு முறை அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலம் ஒரு சபையில் வீற்றிருக்கும் போது, அங்கே ஒரு மனிதர் கடந்து செல்கின்றார். அப்பொழுது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலம் அந்த மனிதரை சுட்டிக் காட்டி தோழர்கள் இடத்தில் கேட்கின்றார்கள். இவரைப் பற்றி நீங்கள் என்ன சொல்கின்றீர்கள்?
அல்லாஹ்வின் தூதரே! இவர் ஒரு ஏழை. யாரிடத்திலும் பெண் கேட்டால் பெண் கொடுக்க மாட்டார்கள். இவர் யாருக்காவது பரிந்து பேசினால் ஏற்றுக்கொள்ளமாட்டார்கள்.
இப்படியாக அவரை உலக ரீதியான தாழ்ந்த நிலையை மக்கள் சொல்லிக் காட்டுகிறார்கள்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அமைதியாகி விட்டார்கள்.
அதற்குப் பிறகு சிறிது நேரம் கழித்து இன்னொரு மனிதர் செல்கின்றார். அப்பொழுது அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலம் தோழர்களை பார்த்து கேட்கின்றார்கள்.
இதோ! இப்போது செல்கின்றாரே, இவரைப் பற்றி என்ன சொல்கின்றீர்கள்? அல்லாஹ்வின் தூதரே! இவர் யாரிடத்திலாவது பெண் கேட்டால் கொடுத்து விடுவார்கள். சிபாரிசு செய்தால் ஏற்றுக் கொள்வார்கள். இவருக்கு சபையில் இடம் கொடுக்கப்படும்.
என்று அவருடைய உலக வசதி, உலகப்புகழ்களைப் பற்றி மக்கள் எடுத்துச் சொல்கிறார்கள்.
நாமெல்லாம் படிப்பினை பெறக்கூடிய மிகப்பெரிய ஒரு விஷயத்தை அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள்.
இப்பொழுது இரண்டாவதாக சென்ற இந்த மனிதரைப் போன்று மனிதர்கள் பூமி எல்லாம் நிறைந்திருப்பதை விட முதலில் சென்ற அந்த ஒரு மனிதர் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர்.(1)
அறிவிப்பாளர் : சஹ்ல் இப்னு ஸஃத் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 6447.
அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரஸூலும் உள்ளத்தில் உள்ள ஈமானுக்கும், இக்லாஸுக்கும், யகீனுக்கும் எடை போடக்கூடியவர்கள்.
மனிதர்களாகிய நாம் அவர்களின் பொருளாதாரத்தை கொண்டு அவர்களின் கல்வியை கொண்டு எடை போடக் கூடியவர்கள். இப்படித்தான் ஏமாந்துபோய் கிடக்கின்றோம்.
அல்லாஹுத்தஆலா தொடர்ந்து சொல்கின்றான் :
உலக வாழ்க்கை உங்களை ஏமாற்றக் கூடிய உங்களை மயக்கக்கூடிய அற்ப வஸ்துவை தவிர வேறொன்றுமில்லை. (அல்குர்ஆன் 3:185)
உலக வஸ்துகள் எதுவாக இருந்தாலும் சரி, தங்கம், வெள்ளி, ஆடம்பரமான மாளிகை, நம்முடைய வாகனங்கள், உலக வஸ்துகள் எதுவாக இருந்தாலும் அது நம்மை மயக்கக்கூடிய அற்பமான ஒரு விஷயம்.
நாம் ஏன் இந்த விஷயத்தை நினைவூட்டுகிறோம் என்றால், வரக்கூடிய ரமலான் மற்றும் இந்த ஷஅபான் மாதம் அமல்களுக்கான மாதம். மறுமைக்கான மாதம். மறந்த நம்மை நினைவூட்டி கொள்வதற்கான மாதம்.
அலட்சியத்திலும் அனாவசியமான மற்ற உலக காரியங்களில் மூழ்கிக் கிடக்கும் நம்மை உணர்த்தி ஈமானின் பக்கம், மறுமையின் பக்கம், குர்ஆனின் பக்கம், நல்ல வணக்க வழிபாடுகள் பக்கம், நம்மை திருப்புவதற்கான மாதம்.
குறிப்பாக இந்த ஷஅபான் மாதம் ரமலானுக்கு முன்கூட்டி ஒரு தயாரிப்புக்கான மாதமாக அல்லாஹ் வழங்கி இருக்கின்றான்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலம் அவர்களின் அமல்களைப் பற்றி சென்ற குத்பாவிலும் பார்த்தோம். மீண்டும் அதை நினைவூட்டி நாம் நிறைய படிப்பினைகளை பாடங்களை பார்க்க வேண்டி இருக்கின்றது.
ஆயிஷா )ரலி(சொல்கின்றார்கள் :
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நோன்பு வைப்பார்கள், நோன்பு வைப்பார்கள் தொடர்ந்து ஒரு மாதத்தில் நோன்பு வைப்பார்கள். நாங்கள் சொல்வோம் இனி ரஸூலுல்லாஹ் இந்த மாதத்தில் நோன்பை விட மாட்டார்களா என்று. அப்படி நாங்கள் எண்ணுகின்ற போது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நோன்பை விட்டு விடுவார்கள். இனி இந்த மாதத்தில் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலம் அவர்கள் நோன்பு வைக்க மாட்டார்கள் போலும் என்று நாங்கள் நினைக்கும் போது நோன்பு வைத்து விடுவார்கள்.
இப்படியாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலம் அவர்களுடைய அமல்கள் இருக்கும்.ஆனால் எந்த ஒரு மாதத்திலும் ரசூலுல்லாஹ் முழுமையாக நோன்பு இருக்க மாட்டார்கள் ரமலான் மாதத்தை தவிர.
ஆனால் இந்த ஷஅபான் மாதம் வந்து விட்டால் ஏனைய மாதத்தை விட இந்த ஷஅபான் மாதத்தில் ரஸூலுல்லாஹ் அதிகமாக நோன்பு வைத்ததை நான் பார்த்தேன் என்று ஆயிஷா (ரலி)அறிவிக்க இமாம் புகாரி இமாம் முஸ்லிம் (ரஹி)பதிவு செய்கின்றார்கள். (2)
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : புகாரி, எண் : 1969.
சகோதரர்களே! இங்கு நம்முடைய அலட்சியத்தை பலவீனத்தை நாம் பார்க்கின்றோம். முடியாதவர்கள் குறைந்தபட்சம் இந்த ஷஅபான் மாதத்தில் திங்கள், வியாழனாவது நோன்பு நோற்கலாம். ஒரு வாரத்திற்கு இரண்டு நோன்புகள் என்றால் நான்கு வாரத்திற்கு 8நோன்பாவது கிடைக்கும்.
அதுபோக அவரவருடைய உடல் சக்திக்கு ஏற்ப, ஓய்வுக்கு ஏற்ப இன்னும் சில நோன்புகளை அதிகப்படுத்திக் கொண்டால் மிகப்பெரிய ஒரு வலிமை ஆன்மீக ஆற்றல் அவருக்கு கிடைக்கப்பெறும். ரமலான் உடைய நோன்பு அவருக்கு மிக இலகுவாக ஆகிவிடும்.
ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள் :
وَلَمْ أَرَهُ صَائِمًا مِنْ شَهْرٍ قَطُّ، أَكْثَرَ مِنْ صِيَامِهِ مِنْ شَعْبَانَ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ، كَانَ يَصُومُ شَعْبَانَ إِلَّا قَلِيلًا
ஷஅபானை தவிர ரஸூலுல்லாஹ் மற்ற மாதங்களில் அதிகமாக நோன்பு நோற்பதை நான் பார்க்கவில்லை. ஷஅபான் மாதத்தில் முழுமையாக ரஸூலுல்லாஹ் நோன்பு தோற்பார்கள்.
ஷஅபான் முழுவதும் நோன்பு இருப்பார்கள். சில நாட்களைத் தவிர, சந்தேகத்தின் நாட்களை தவிர.(3)
அறிவிப்பாளர்: ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹா, நூல்: முஸ்லிம்,எண்: 1156.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரமலானுக்கு முன்பாக இந்த ஷஅபான் மதத்தில் இவ்வளவு முக்கியத்துவம் கொடுத்து அந்த நோன்பை பேணினார்கள். அதற்கு அவர்களே காரணம் சொல்கிறார்கள் பாருங்கள்.
உஸாமா இப்னு ஜைத் (ரலி) அறிவிக்க இமாம் நசாயி பதிவு செய்கின்றார்கள்.
உஸாமா ரஸூலுல்லாஹ்விடத்தில் கேட்கின்றார்கள் :
ஷஅபான் மாதத்தில் நீங்கள் நோன்பு இருப்பதைப் போன்று மற்ற எந்த ஒரு மாதத்திலும் நீங்கள் நோன்பிருந்து நான் பார்த்ததில்லையே?
அதற்கு ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலம் சொன்னார்கள் :
«ذَلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبٍ وَرَمَضَانَ، وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الْأَعْمَالُ إِلَى رَبِّ الْعَالَمِينَ، فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ»
ரஜபுக்கும் ரமலானுக்கும் இடையில் வரும் இந்த ஷஅபான் மாதத்தில் மக்கள் அலட்சியம் செய்து விடுகின்றார்கள். இதை மக்கள் கவனிப்பதில்லை.
மேலும் இரண்டாவது காரணத்தை. சொன்னார்கள்:
அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்விடத்தில் அமல்கள் கொண்டு செல்லப்படுகின்றன; உயர்த்தப்படுகின்றன. எனவே என்னுடைய அமல்கள் நான் நோன்பிருக்கின்ற நிலையில் உயர்த்தப்பட வேண்டும் என்று நான் ஆசைப்படுகிறேன். (4)
அறிவிப்பாளர் : உஸாமா இப்னு ஜைத் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : நசாயி,எண் : 2357.
இரண்டு காரணங்களை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலம் சொன்னார்கள்.
அதைப்பற்றி ஒரு சிறிய விளக்கத்தை பார்ப்போம்.
ஒன்று,மக்கள் இந்த மாதத்தில் கவனக்குறைவாக இருந்து விடுகின்றார்கள்.
இதிலிருந்து அறிஞர்கள் நமக்கு விளக்கம் கூறுகின்றார்கள்:எப்பொழுதெல்லாம் மக்கள் அல்லாஹ்வை மறந்து அலட்சியத்தில் இருப்பார்களோ, அந்த நேரங்களில் நாம் தனித்து அல்லாஹ்வை வணங்குவது அந்த வணக்கம் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது.
மக்கள் எல்லாம் பாவத்தில் மறதியில் இருக்கும்போது அல்லாஹ்வை மறந்தவர்களாக, அல்லாஹ்வுடைய இபாதத்தை அலட்சியம் செய்தவர்களாக இருக்கும் போது, அந்த மறதியாளர்களுக்கு மத்தியில், அந்த அப்பாவிகளுக்கு மத்தியில், ஒரு அடியான் அல்லாஹ்வை நினைவு கூறுகின்றான் என்றால், அது அல்லாஹ்விற்கு மிகப் பிரியமானது.
இமாம் முஸ்லிம் (ரஹ்) ஒரு ஹதீஸை அறிவிக்கிறார்கள் :
மிக முக்கியமான ஹதீஸ்.
(குழப்பக் காலம் வந்துவிட்டால் மக்களெல்லாம் அதைப் பற்றியே பேசிக் கொண்டிருப்பார்கள்.
இப்பொழுது மக்களெல்லாம் எல்லாம் தேர்தலை பற்றியே பேசுவார்கள். இப்படி ஒவ்வொரு சம்பவங்கள் நடக்கும்போது அதை பற்றி மக்கள் பேசிக் கொண்டே இருப்பார்கள். அதில் ஈடுபட கலந்து கொள்ள அவர்கள் ஆசைப்படுவார்கள்.)
இப்படி குழப்பமான சண்டை சச்சரவுகள் நிறைந்த காலங்களில்,ஒரு மனிதர் அதிலெல்லாம் கலந்துகொள்ளாமல் அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளில் அவரை திணிக்கிறார் என்றால் அவர் என்னை நோக்கி என் பக்கம் ஹிஜ்ரத் செய்ததற்கு சமம் ஆவார்.(5)
அறிவிப்பாளர் : மஃகல் இப்னு யஸார் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2948.
அல்லாஹ் அக்பர்!ஒரு முஹாஜிர் ஸஹாபிக்கு கிடைத்த சிறப்பு அவருக்கு கிடைக்கும். ஃபித்னாவுடைய காலங்களில் தன்னுடைய நஃப்ஸை கட்டுப்படுத்தி அந்த நஃப்ஸை இபாதத்தில் நுழைய வைக்கின்றவர்என் பக்கம் ஹிஜ்ரத் செய்து வந்தவரைப் போல.
இன்னுமொரு ஹதீஸை பாருங்கள்:
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலம் அவர்கள் கூறுகின்றார்கள்.
«أَقْرَبُ مَا يَكُونُ الرَّبُّ مِنَ العَبْدِ فِي جَوْفِ اللَّيْلِ الآخِرِ، فَإِنْ اسْتَطَعْتَ أَنْ تَكُونَ مِمَّنْ يَذْكُرُ اللَّهَ فِي تِلْكَ السَّاعَةِ فَكُنْ»
அடியான் அல்லாஹ்விற்கு மிக நெருக்கமாக இருக்கின்ற நேரம் இரவினுடைய இரண்டாவது பகுதி.அந்த நேரத்தில் அல்லாஹ்வை நினைப்பவர்களில் நீ ஆக முடிந்தால் ஆகிவிடு என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலம் சொன்னார்கள்.
அறிவிப்பாளர் : அம்ர் இப்னு அபச ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி,எண் : 3579, தரம் : ஸஹீஹ் (அல்பானி)
நடு இரவிற்கு முன்பு அல்லது அந்த இரவின் கடைசி பகுதி வருவதற்கு முன்பு ஒன்று மனிதன் ஆழ்ந்த தூக்கத்தில் இருப்பான். அல்லது உலக மோகம் கொண்டவர்கள் ஆடல் பாடல் என்று பாவத்தில் மூழ்கி இருப்பார்கள்.
இப்படி இருக்கின்ற அந்த நேரத்தில் ஒரு அடியான் எழுந்து அல்லாஹ்வை வணங்குகிறான் என்றால், அல்லாஹ்விடத்தில் துஆ கேட்கின்றான் என்றால், அந்த அடியான் அல்லாஹ்விடத்தில் மிக நெருக்கமாகி விடுகிறான்.
அதுபோன்றுதான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறிய மற்றொரு ஹதீஸில் பார்க்கின்றோம். இமாம் அஹ்மத் பதிவு செய்கின்றார்கள்.
மூன்று நபர்களை பற்றி அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலம் சொன்னார்கள்:
அந்த மூன்று நபர்களை அல்லாஹு தஆலா விசேஷமாக நேசிக்கின்றான்.
அந்த மூன்று கூட்டத்தில் ஒரு கூட்டத்தாரை பற்றி ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலம் சொன்னார்கள்:
ஒரு கூட்டம் பயணத்தில் செல்கின்றார்கள். தொடர்ந்து பயணித்துக் கொண்டே செல்கின்றார்கள். தூங்கலாமே! கொஞ்சம் தூங்கினால் நன்றாக இருக்குமே, நமது உடலை கொஞ்சம் தரையில் சாய்த்தால் நன்றாக இருக்குமே! என்று தூக்கத்தின் மீது ஆசை ஏற்படுகின்றது. தேவை ஏற்படுகின்றது.
சரி எல்லோரும் தங்களது வாகனங்களில் இருந்து தங்குகிறார்கள். அப்பொழுது எல்லோரையும் தூங்க வைத்துவிட்டு, ஒரு மனிதர் மட்டும் தனித்து சென்று அல்லாஹ்வை தொழுகின்றார், வணங்குகின்றார். பிறகு அந்த மக்களை பயணத்துடைய நேரம் வந்தவுடன் எழுப்புகின்றார்.
இந்த மனிதர் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானவர்.(6)
அறிவிப்பாளர் : அபூ தர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னது அஹ்மது,எண் : 21340.
அதுபோன்றுதான் அல்லாஹு தஆலா ஹதீஸ் குதுஸியில் கூறுவதை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கின்றார்கள்:
أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي، وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي، فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي، وَإِنْ ذَكَرَنِي فِي مَلَإٍ ذَكَرْتُهُ فِي مَلَإٍ خَيْرٍ مِنْهُمْ،
எனது அடியானின் எண்ணத்திற்கு ஏற்ப நான் அவனுடன் நடந்து கொள்கின்றேன். அவன் என்னை நினைவு கூர்ந்தால் நான் அப்பொழுது அவன் அருகில் இருக்கின்றேன். அவன் என்னை அவனுடைய நஃப்ஸில் நினைவுகூர்ந்தால் நானும் அவனை என்னுடைய நஃப்ஸில் நினைவு கூறுவேன்.
அவன் என்னை ஒரு கூட்டத்தில் நினைவு கூர்ந்தால் அதனை விட சிறந்த ஒரு கூட்டத்தில் அவனை நான் நினைவு கூர்வேன்.(7)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 7405.
இப்படியாக மனிதர்கள் எல்லாம் தங்களுடைய விஷயத்தில் மூழ்கும்போது அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட அடியான், அல்லாஹ்வை நினைவு கூறுவதில் மூழ்கும்போது அந்த அடியானை அல்லாஹ் நேசிக்கின்றான்.
அதுபோன்று தான் இன்னும் ஒரு பிரபலமான ஹதீஸை பார்க்கின்றோம்.
அர்ஷுடைய நிழலில் 7வகையான மக்கள் இருப்பார்கள் என்று அல்லாஹ் உடைய தூதர் சொன்னார்கள், அவர்களில் ஒரு கூட்டம்,
وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا، فَفَاضَتْ عَيْنَاهُ
மக்களை விட்டு ஒதுங்கி தனிமையில் அல்லாஹ்வை நினைவுகூர்ந்து அவனுடைய இரண்டு கண்களும் கண்ணீரால் பீரிடுகின்றன அத்தகைய மனிதர் அர்ஷுடைய நிழலில் இருப்பார்.(8)
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 1423.
இத்தகைய ஹதீஸ்களை எல்லாம் நாம் பார்க்கும் போது மக்கள் அல்லாஹ்வை மறக்கின்ற நேரத்தில், தங்களுடைய சுய தேவைகளையும் உலக காரியங்களிலும் மூழ்கி இருக்கும் நேரத்தில் "ஒரு மனிதன் அல்லாஹ்வை வணங்கினான்" என்றால் அத்தகைய வணக்க வழிபாடு அல்லாஹ்விற்கு மிக பிடித்தமானது. அந்த மனிதன் அல்லாஹ்விற்கு மிகப் பிரியமானவன்.
ஆகவேதான் இந்த ஷஅபான் மாதத்தில் மக்களெல்லாம் அல்லாஹ்வை மறந்து இருக்கும் போது
ரமலான் வரட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியத்தில் இருக்கும்போது, இந்த ஷஅபானை யார் பயன்படுத்தி கொள்கிறாரோ,அவருக்கு இந்த சிறப்பை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.
இமாம் இப்னு ரஜப் (ரஹ்) கூறுகின்றார்கள்: ஷஅபானை பற்றி ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலம் கூறிய ஹதீஸிலிருந்து,மக்கள் எல்லாம் அல்லாஹ்வை மறந்து இருக்கின்ற நேரத்தில் நாம் அந்த நேரத்தை வணக்க வழிபாடுகளைக் கொண்டு சரிபார்க்க வேண்டும் என்பது இந்த ஹதீஸிலிருந்து நமக்கு தெரிய வருகிறது.
இப்படி செய்கின்றவர்கள் அல்லாஹ்விற்கு விருப்பமானவர்கள்; இந்த அமல் அல்லாஹ்விற்கு மிக பிரியமானது.
ஹுதைஃபா (ரலி) அவர்கள் கூறக்கூடிய ஒரு ஹதீஸை பார்க்கின்றோம்.
மக்கள் எந்த நேரத்தில் அலட்சியமாக இருப்பார்களோ, கவனமற்று இருப்பார்களோ, அப்பொழுது ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலம் அமலுக்கு கொடுத்த முக்கியத்துவத்தை பற்றி சொன்னார்கள்.
ஹுதைஃபா (ரலி) நான் ஒரு முறை ரஸூலுல்லாஹ்வோடு மக்ரிப் தொழுகை தொழுதேன். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலம் தொழுது முடித்து விட்டு பிறகு நஃபில் தொழுகையில் ஈடுபட்டார்கள். நஃபில் தொழுது கொண்டே இருந்தார்கள் இஷா தொழுகை வரை. இஷா தொழுகை முடித்த பிறகு வெளியேறினார்கள்.
அறிவிப்பாளர் : ஹுதைஃபாரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னது அஹ்மது, எண் : 23436.
இதிலிருந்து பல ஸஹாபாக்கள், தாபியீன்கள் மக்ரிப்பிற்கும் இஷா விற்கும் இடையே உள்ள நேரத்தை முழுமையாக வணக்க வழிபாட்டில் கழித்தார்கள் என்பதை நாம் பார்க்கின்றோம்.
காரணம் என்ன? இரவு தூங்க வேண்டியிருக்கின்றது. உணவிற்கான ஏற்பாடு அல்லது பகலிலுடைய வேலையை முடிக்க வேண்டும் என்று அதில் தீவிரம் காட்டிக் கொண்டு அந்த மக்ரிபிலிருந்து இஷாவுடைய நேரத்தை அலட்சியம் செய்து விடுகின்றார்கள்
குறிப்பாக அந்தந்த நேரங்களை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸ்ஸலம் வணக்க வழிபாட்டுக்கு கொடுத்தார்கள் என்பதை நாம் பார்க்கின்றோம்.
இந்த ஷஅபான் மாதம் நம் முன்னோர்கள் ஸலஃப் ஸாலிஹீன்களிடத்தில் மிகப்பெரிய முக்கியத்துவம் வாய்ந்ததை பார்க்கின்றோம். தாபியீன்களுடைய பல அறிவிப்புகளை பார்க்கின்றோம்.
ஸலமா இப்னு குஹைல் (ரஹி) ஹிஜ்ரி 47-ல் பிறந்து ஹிஜ்ரி 121-ல் இறந்த மிகப்பெரிய தாபியீன்களில் ஒருவர்.
அவர்கள் இந்த ஷஅபான் மாதத்தைப் பற்றி சொல்வார்கள்:
ஷஅபானுடைய மாதம் குர்ஆனை ஓதுகின்ற குர்ஆனை மனப்பாடம் செய்த மக்களுக்குரிய மாதம்.
ஷஅபானில் குர்ஆனை அதிகமாக ஓதி ரமலானில் குர்ஆனை ஓதுவதற்கு பயிற்சி எடுத்துக் கொள்வதற்கான நேரம்.
அதுபோன்று தாபியீன்களில் ஒருவர் இந்த மாதத்தை பற்றி சொல்லும்போது,
அதிகமாக குர்ஆன் ஓதக் கூடிய மாதம் என்று சொல்கின்றார்கள்.
இன்னொரு தாபியீ (ரஹ்) ஷஅபான் மாதம் வந்துவிட்டால் தன்னுடைய கடையை அடைத்து விட்டு குர்ஆன் ஓதுவதற்காக தன்னை முழுமையாக ஒதுக்கி விடுவார்கள்.
இன்னும் பல ஹதீஸ்களையும் சம்பவங்களையும் பார்க்கின்றோம். ரமலானுக்காக ஒரு முழு பயிற்சியாக இந்த ஷஅபான் மாதத்தை அல்லாஹ் கொடுத்திருக்கின்றதைப் பார்க்கிறோம்.
இந்த ஷஅபான் மதத்ததை நம்முடைய முன்னோர்கள் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஸஹாபாக்கள் தாபியீன்கள் எப்படி பயன்படுத்தினார்கள் என்று.
இன்று நம்மில் ஒவ்வொருவருக்கும் அவரவருடைய துன்யாவுடைய வேலைகள், பொருளாதார கடமைகள், குடும்ப சுமைகள் இருந்தாலும் கூட, நாம் அல்லாஹ்வை வணங்குவதற்காக ஒரு நேரத்தை ஒதுக்க வேண்டும் என்று முடிவு செய்தால் கண்டிப்பாக அல்லாஹ் ரப்புல் ஆலமீன் அதற்காக அதை லேசாக்கி கொடுப்பான்.
யார் அல்லாஹ்வை முன்னோக்க வேண்டும் என்று ஒரு அடி எடுத்து வைக்கின்றாரோ, அவருக்கு வணக்க வழிபாடுகளை அல்லாஹு தஆலா இலேசாக்கி கொடுப்பான்.
அல்லாஹ் ரப்புல் ஆலமீன் சொல்கின்றான் :
إِنَّ الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ وَأَخْبَتُوا إِلَى رَبِّهِمْ أُولَئِكَ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيهَا خَالِدُونَ
நிச்சயமாக எவர்கள் நம்பிக்கை கொண்டு, நற்செயல்களைச் செய்து தங்கள் இறைவனுக்கு மிக்க பணிவுடன் அடிபணிகின்றனரோ, அவர்கள் சொர்க்கவாசிகளே! அதில் அவர்கள் என்றென்றும் தங்கி விடுவார்கள். (அல்குர்ஆன் 11:23)
ஆகவே அல்லாஹ் நம்மிடத்தில் எதிர்பார்ப்பது, நல்லமல் செய்ய வேண்டும். அதிகம் செய்ய வேண்டும். அல்லாஹ்வின் பக்கம் நான் அதிகம் நெருங்க வேண்டும் என்ற அந்த நல்ல உள்ளத்தை நல்ல எண்ணத்தை அல்லாஹ் எதிர்பார்க்கிறான்.
அந்த நல்ல உள்ளத்திற்கு பிறகு முயற்சிகான வழிகளை நாம் தேடி இறைஞ்சும் போது கண்டிப்பாக அல்லாஹ் நமக்கு அதை லேசாக்கி கொடுப்பான்.
நமக்கு ஒரு துன்யா உடைய தேவை இருந்தால் நாம் அல்லாஹ்விடத்தில் எப்படி கேட்கின்றோம்?
அந்த செல்வத்தை கேட்டு, அந்தப் படிப்பை கேட்டு, அந்த பொருளாதாரத்தை கேட்டு, அந்த உலக தேவைகளைக் கேட்டு எவ்வளவு மன்றாடுகின்றோம்!
இந்த உலக தேவைக்கு எல்லாம் இவ்வளவு அல்லாஹ்விடத்தில் கேட்கக்கூடிய நாம், ஏன் அல்லாஹ்விடத்தில் வணக்க வழிபாடுகளை கேட்பதில்லை.
ஒரு நபி தொழுகைக்காக அல்லாஹ்விடத்தில் துஆ செய்கின்றார்:
رَبِّ اجْعَلْنِي مُقِيمَ الصَّلَاةِ وَمِنْ ذُرِّيَّتِي رَبَّنَا وَتَقَبَّلْ دُعَاءِ
என் இறைவனே! என்னையும், என் சந்ததிகளையும் (உன்னைத்) தொழுது வருபவர்களாக ஆக்கிவை. எங்கள் இறைவனே! என் பிரார்த்தனையை அங்கீகரித்துக் கொள்வாயாக! (அல்குர்ஆன் 14:40)
அதுபோன்று அல்லாஹ்வுடைய தூதர் என் இறைவா! உன்னை நான் நினைவு கூறுவதற்கு உனக்கு அழகிய முறையில் நன்றி செலுத்துவதற்கு உன்னை அழகிய முறையில் வணங்குவதற்கு எனக்கு உதவி செய்.
என்று ஒரு நபி அல்லாஹ்விடத்தில் மன்றாடும் போது, பலஹீனமான உள்ளம் உள்ள நாம் அமல்களில் அலட்சியம் செய்யக் கூடிய நாம், உலக இன்பங்களில் மூழ்கி மறுமையை மறக்கக்கூடிய நாம் இப்படியான துஆக்களை எவ்வளவு அதிகம் செய்ய வேண்டும் என்று நினைத்துப்பாருங்கள்.
அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா நம்முடைய மறதியைப் போக்குவானாக! வணக்க வழிபாடுகளில் உள்ளங்களை பறிகொடுத்த நல்லோரில் ஒருவனாக என்னை ஆக்குவானாக! நம்மை அனைவரையும் ஆக்குவானாக!
பாவங்களை விட்டு பாதுகாக்கப்பட்ட நல்லவர்களில் அல்லாஹ் ஆக்கி வைப்பானாக!
முழுமையாக பரிசுத்தமான தவ்பா செய்த நல்லவர்களில் அல்லாஹு தஆலா என்னையும் உங்களையும் நம்முடைய குடும்பத்தாரையும் ஆக்கி வைப்பானாக! ஆமீன்.
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، قَالَ: حَدَّثَنِي عَبْدُ العَزِيزِ بْنُ أَبِي حَازِمٍ، عَنْ أَبِيهِ، عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ السَّاعِدِيِّ، أَنَّهُ قَالَ: مَرَّ رَجُلٌ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لرَجُلٍ عِنْدَهُ جَالِسٍ: «مَا رَأْيُكَ فِي هَذَا» فَقَالَ: رَجُلٌ مِنْ أَشْرَافِ النَّاسِ، هَذَا وَاللَّهِ حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ يُنْكَحَ، وَإِنْ شَفَعَ أَنْ يُشَفَّعَ، قَالَ: فَسَكَتَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ مَرَّ رَجُلٌ آخَرُ، فَقَالَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا رَأْيُكَ فِي هَذَا» فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، هَذَا رَجُلٌ مِنْ فُقَرَاءِ المُسْلِمِينَ، هَذَا حَرِيٌّ إِنْ خَطَبَ أَنْ لاَ يُنْكَحَ، وَإِنْ شَفَعَ أَنْ لاَ يُشَفَّعَ، وَإِنْ قَالَ أَنْ لاَ يُسْمَعَ لِقَوْلِهِ، فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «هَذَا خَيْرٌ مِنْ مِلْءِ الأَرْضِ مِثْلَ هَذَا» (صحيح البخاري- 6447)
குறிப்பு 2)
حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يُوسُفَ، أَخْبَرَنَا مَالِكٌ، عَنْ أَبِي النَّضْرِ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ " يَصُومُ حَتَّى نَقُولَ: لاَ يُفْطِرُ، وَيُفْطِرُ حَتَّى نَقُولَ: لاَ يَصُومُ، فَمَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اسْتَكْمَلَ صِيَامَ شَهْرٍ إِلَّا رَمَضَانَ، وَمَا رَأَيْتُهُ أَكْثَرَ صِيَامًا مِنْهُ فِي شَعْبَانَ " (صحيح البخاري- 1969)
குறிப்பு 3)
وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، جَمِيعًا عَنِ ابْنِ عُيَيْنَةَ، قَالَ أَبُو بَكْرٍ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ أَبِي لَبِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، عَنْ صِيَامِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: " كَانَ يَصُومُ حَتَّى نَقُولَ: قَدْ صَامَ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ: قَدْ أَفْطَرَ، وَلَمْ أَرَهُ صَائِمًا مِنْ شَهْرٍ قَطُّ، أَكْثَرَ مِنْ صِيَامِهِ مِنْ شَعْبَانَ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ، كَانَ يَصُومُ شَعْبَانَ إِلَّا قَلِيلًا " (صحيح مسلم - 1156)
குறிப்பு 4)
أَخْبَرَنَا عَمْرُو بْنُ عَلِيٍّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ، قَالَ: حَدَّثَنَا ثَابِتُ بْنُ قَيْسٍ أَبُو الْغُصْنِ، شَيْخٌ مِنْ أَهْلِ الْمَدِينَةِ، قَالَ: حَدَّثَنِي أَبُو سَعِيدٍ الْمَقْبُرِيُّ، قَالَ: حَدَّثَنِي أُسَامَةُ بْنُ زَيْدٍ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، لَمْ أَرَكَ تَصُومُ شَهْرًا مِنَ الشُّهُورِ مَا تَصُومُ مِنْ شَعْبَانَ، قَالَ: «ذَلِكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ بَيْنَ رَجَبٍ وَرَمَضَانَ، وَهُوَ شَهْرٌ تُرْفَعُ فِيهِ الْأَعْمَالُ إِلَى رَبِّ الْعَالَمِينَ، فَأُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ» (سنن النسائي 2357 - ) [حكم الألباني] حسن
குறிப்பு 5)
حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ مُعَلَّى بْنِ زِيَادٍ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ مَعْقِلِ بْنِ يَسَارٍ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ح وَحَدَّثَنَاهُ قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، حَدَّثَنَا حَمَّادٌ، عَنِ الْمُعَلَّى بْنِ زِيَادٍ، رَدَّهُ إِلَى مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، رَدَّهُ إِلَى مَعْقِلِ بْنِ يَسَارٍ، رَدَّهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «الْعِبَادَةُ فِي الْهَرْجِ كَهِجْرَةٍ إِلَيَّ» (صحيح مسلم - 2948)
குறிப்பு 6)
حَدَّثَنَا إِسْمَاعِيلُ، حَدَّثَنَا الْجُرَيْرِيُّ، عَنْ أَبِي الْعَلَاءِ بْنِ الشِّخِّيرِ، عَنِ ابْنِ الْأَحْمَسِي، قَالَ: لَقِيتُ أَبَا ذَرٍّ، فَقُلْتُ لَهُ: بَلَغَنِي عَنْكَ أَنَّكَ تُحَدِّثُ حَدِيثًا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ. فَقَالَ: أَمَا إِنَّهُ لَا تَخَالُنِي أَكْذِبُ عَلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعْدَمَا سَمِعْتُهُ مِنْهُ، فَمَا الَّذِي بَلَغَكَ عَنِّي؟ قُلْتُ: بَلَغَنِي أَنَّكَ تَقُولُ: «ثَلَاثَةٌ يُحِبُّهُمُ اللَّهُ، وَثَلَاثَةٌ يَشْنَؤُهُمُ اللَّهُ» قَالَ: قُلْتُ: وَسَمِعْتَهُ. قُلْتُ: فَمَنْ هَؤُلَاءِ الَّذِينَ يُحِبُّ اللَّهُ؟ قَالَ: «الرَّجُلُ يَلْقَى الْعَدُوَّ فِي الْفِئَةِ فَيَنْصِبُ لَهُمْ نَحْرَهُ حَتَّى يُقْتَلَ، أَوْ يُفْتَحَ لِأَصْحَابِهِ، وَالْقَوْمُ يُسَافِرُونَ فَيَطُولُ سُرَاهُمْ حَتَّى يُحِبُّوا أَنْ يَمَسُّوا الْأَرْضَ، فَيَنْزِلُونَ فَيَتَنَحَّى أَحَدُهُمْ، فَيُصَلِّي حَتَّى يُوقِظَهُمْ لِرَحِيلِهِمْ، وَالرَّجُلُ [ص:269] يَكُونُ لَهُ الْجَارُ يُؤْذِيهِ جِوَارُهُ، فَيَصْبِرُ عَلَى أَذَاهُ حَتَّى يُفَرِّقَ بَيْنَهُمَا مَوْتٌ أَوْ ظَعْنٌ» قُلْتُ: وَمَنْ هَؤُلَاءِ الَّذِينَ يَشْنَؤُهُمُ اللَّهُ؟ قَالَ: " التَّاجِرُ الْحَلَّافُ، أَوْ قَالَ: الْبَائِعُ الْحَلَّافُ، وَالْبَخِيلُ الْمَنَّانُ، وَالْفَقِيرُ الْمُخْتَالُ ")مسند أحمد مخرجا-21340(
குறிப்பு 7)
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، سَمِعْتُ أَبَا صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يَقُولُ اللَّهُ تَعَالَى: أَنَا عِنْدَ ظَنِّ عَبْدِي بِي، وَأَنَا مَعَهُ إِذَا ذَكَرَنِي، فَإِنْ ذَكَرَنِي فِي نَفْسِهِ ذَكَرْتُهُ فِي نَفْسِي، وَإِنْ ذَكَرَنِي فِي مَلَإٍ ذَكَرْتُهُ فِي مَلَإٍ خَيْرٍ مِنْهُمْ، وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ بِشِبْرٍ تَقَرَّبْتُ إِلَيْهِ ذِرَاعًا، وَإِنْ تَقَرَّبَ إِلَيَّ ذِرَاعًا تَقَرَّبْتُ إِلَيْهِ بَاعًا، وَإِنْ أَتَانِي يَمْشِي أَتَيْتُهُ هَرْوَلَةً " (صحيح البخاري- 7405)
குறிப்பு 8)
حَدَّثَنَا مُسَدَّدٌ، حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ تَعَالَى فِي ظِلِّهِ يَوْمَ لاَ ظِلَّ إِلَّا ظِلُّهُ: إِمَامٌ عَدْلٌ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ اللَّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ، اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ دَعَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ بِصَدَقَةٍ فَأَخْفَاهَا حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا، فَفَاضَتْ عَيْنَاهُ"(صحيح البخاري 1423 -)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/