HOME      Lecture      இறுகிய உள்ளத்தை இலகுவாக்குவோம்! | Tamil Bayan - 683   
 

இறுகிய உள்ளத்தை இலகுவாக்குவோம்! | Tamil Bayan - 683

           

இறுகிய உள்ளத்தை இலகுவாக்குவோம்! | Tamil Bayan - 683


இறுகிய உள்ளத்தை இலகுவாக்குவோம்
 
தலைப்பு: இறுகிய உள்ளத்தை இலகுவாக்குவோம்
 
வரிசை : 683
 
இடம் : மஸ்ஜிதுல் இக்லாஸ், பெரம்பூர் சென்னை – 1
 
உரை : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 08-07-2021 | 28-11-1442
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹுதஆலா கூறுகிறான்:
 
كَلَّا بَلْ رَانَ عَلَى قُلُوبِهِمْ مَا كَانُوا يَكْسِبُونَ
 
அவ்வாறல்ல! மாறாக, அவர்கள் செய்து கொண்டிருந்த (தீய)வை அவர்களின் உள்ளங்கள் மீது கறையாகப் படிந்து மூடிவிட்டன. (அல்குர்ஆன் 83 : 14)
 
நம்முடைய உள்ளங்கள் நாம் செய்யக்கூடிய பாவங்களால் கரைபடிகின்றன நம்முடைய உள்ளங்கள் துரு பிடிக்கின்றன. எதனால்? நம்முடைய செயல்களினால். 
 
அதாவது பாவத்தை செய்வதனால் அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் விரும்பாததை செய்வதனால், அல்லாஹ்வுக்கும் அல்லாஹ்வின் தூதருக்கும் வெறுப்பதை செய்வதால், அதுமட்டுமல்ல அல்லாஹ்விற்கும் அல்லாஹ்வுடைய தூதருக்கும் விருப்பமானதை விடுவதால்,
 
அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் விரும்பிய காரியங்களை செய்வதால் உள்ளத்தில் ஒளி வருகின்றது. இப்பொழுது நம்முடைய உள்ளங்களை fresh ஆக்க இங்கு வந்துள்ளோம். பயான் கேட்க அல்ல.
 
கிதாப் ஈமானில் ஸஹீஹ் புகாரியில் அந்த ஈமான் கூடுதல் கொறைதல் என்கிற பாடத்தில் ஸஹாபாக்களை பற்றி எழுதுகிறார்கள். ஹலீஃபா உமருல் ஃபாருக்,முஆத் இப்னு ஜமல், அபூமூஸா அஷ்அரி (ரஹ்) அன்ஹு இப்படிப் பெரிய பெரிய ஸஹாபாக்கள் பெரும்பாலும் அவர்கள் சொல்லகூடிய வார்த்தையை
 
و قال البخاري في صحيحه : اجلس بنا نؤمن ساعة نزداد إيمانا
 
வாங்க உட்காருங்கள், வாங்க உட்காருவோம். நம்முடைய ஈமான் அதிகரிக்கட்டும்.
 
இப்னு உதுஹிப்பான் ரஹீ விளக்கம் எழுதி என்றார்கள். சரி வாங்க உட்காருங்கள் நம்முடைய ஈமான் அதிகரிக்கும் என்று சொன்னார்களே! என்ன செய்தார்கள் உட்கார்ந்து? அல்லாஹ்வைப் பற்றி பேசுவார்கள். 
 
نَبِّئْ عِبَادِي أَنِّي أَنَا الْغَفُورُ الرَّحِيمُ وَ أَنَّ عَذَابِي هُوَ الْعَذَابُ الْأَلِيم
 
(நபியே!) என் அடியார்களுக்கு அறிவிப்பீராக! “நிச்சயமாக நான்தான் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன்.” இன்னும் நிச்சயமாக என் தண்டனைதான் துன்புறுத்தக்கூடிய தண்டனை!” (அல்குர்ஆன் 15 : 49, 50)
 
அல்லாஹுதஆலா தன்னுடைய நபியிடத்தில் சொல்கின்றான் : நபியே! என்னை பற்றி என்னுடைய அடியான் இடத்திலே செய்தி சொல்லுங்கள்.) இதோடு சேர்த்து சேர்த்து இதையும் சொல்லுங்கள். என்னுடைய punishment very danger.
 
என்னுடைய தண்டனை ரொம்ப வலிமிக்கது very painful. அதையும் சேர்த்து என்னுடைய அடியானுக்கு சொல்லுங்கள் அல்லாஹ் அக்பர். சகோதரர்களே அல்லாஹ்வுடைய ஷிஃபத் ஹஃபூர், ரஹீம்
 
وَأَنَّ اللَّهَ شَدِيدُ الْعَذَابِ ,وأَنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ ,إِنَّ اللَّهَ سَرِيعُ الْحِسَابِ 
 
இந்த உலகம் நமக்கு பிடித்த மாதிரி வாழ்கின்றோமா அல்லாஹ்விற்கு பிடித்த மாதிரி வாழ்கின்றோமா? இதுதான் exam இதுதான் இம்திஹாஃப் அல்லாஹ்விற்கு பிடித்த மாதிரி வாழ்ந்து விட்டால். (அல்குர்ஆன் 15 : 49, 14 : 51, 2 : 165, 5 : 98)
 
غَفُورٌ رَحِيمٌ
 
(அல்குர்ஆன் 15:49)
 
قُلْ يَاعِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
 
வரம்பு மீறி பாவம் செய்த கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையிலிருந்து நீங்கள் நிராசையுடையவராக ஆகிவிடாதீர்கள். (அல்குர்ஆன் 39 : 53)
 
நீங்கள் நல்லவராக ஆகிவிட்டால், தவ்பா கேட்டால், மன்னிப்பு கேட்டால், கண்டிப்பாக எல்லா பாவங்களையும் அல்லாஹ் கழிவு விடுவான் போக்கி விடுவான், மன்னித்து விடுவான்.
 
நமக்குத் தேவை தொழுகை அது உண்மையான தர்பியத் தஸ்கிய்யாஹ். தொழுகையை சரிசெய்வதற்கு இன்று நாம் தொழுவதற்கு ஒரு தர்பியத் தஸ்கிய்யாத் தேவை இல்லையா சொல்லுங்கள். தொழுகை தொழுகையாக ஆக்குவதற்கு.
 
இப்பொழுது தொழுகை தொழுகின்ற மாதிரியாகவா இருக்கு? தொழுகை தொழுகின்ற மாதிரி இருக்கு. இந்த பக்கத்துல ஒரு மனிதனை இப்படி படுக்க வைக்கணும். அந்த பக்கத்துல ஒரு dead body போட்டு ரெண்டு பேருக்கும் ஒரு போர்வையை போத்தி விடுங்கள்.
 
ஏதாவது வித்தியாசம் தெரியுமா பார்ப்பதற்கு? வித்தியாசம் தெரியாது. அப்படித்தான் நமக்கும் இபாதத் இருக்கின்றது. இப்போ தூங்கிட்டு இருக்க மனிதனை தட்டி எழுப்பி விட்டால் எந்தித்து விடுவார். மரணித்த மையத்தை தட்டி எழுப்பினால் எந்திக்குமா? இப்போது நம்முடைய இபாதத் இப்படித்தான் இருக்கின்றது. இதில் அழுத்தம் வந்ததா? உள்ளத்தில் பயம் வந்ததா? அல்லாஹ் கூறுகிறான்:
 
قَدْ أَفْلَحَ الْمُؤْمِنُونَ الَّذِينَ هُمْ فِي صَلَاتِهِمْ خَاشِعُونَ
 
திட்டமாக நம்பிக்கையாளர்கள் வெற்றி பெற்று விட்டார்கள்.  அவர்கள் தங்கள் தொழுகையில் மிகுந்த பணிவுடன் உள்ளச்சமுள்ளவர்களாக இருப்பார்கள். (அல்குர்ஆன்29:1,2)
 
அல்லாஹ் சொன்னானே தொழுகின்றவருக்கு அல்லாஹ்வுடைய நியாபகம் வரும் என்றுஅல்லாஹ் சொல்கின்றானே!
 
وَإِنَّهَا لَكَبِيرَةٌ إِلَّا عَلَى الْخَاشِعِينَ الَّذِينَ يَظُنُّونَ أَنَّهُمْ مُلَاقُو رَبِّهِمْ وَأَنَّهُمْ إِلَيْهِ رَاجِعُونَ
 
இன்னும், நீங்கள் பொறுமையாக இருந்தும் தொழுதும் (அல்லாஹ்விடம்) உதவி கோருங்கள். இன்னும், நிச்சயமாக அது (-தொழுகை) பளுவானதுதான், உள்ளச்சமுடையோர் மீதே தவிர.
 
(உள்ளச்சமுடைய) அவர்கள் “நிச்சயமாக அவர்கள் தங்கள் இறைவனை சந்திப்பார்கள் என்றும் அவனிடமே நிச்சயமாக அவர்கள் திரும்புவார்கள்” என்றும் நம்புவார்கள். (அல்குர்ஆன் 2 : 45 , 46)
 
தக்பீர் கட்டும் பொழுது அந்த ஞாபகம் வந்ததா? ருகூவில் வந்ததா? சுஜூதில் வந்ததா? சுஜூதில் அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்களே! 
 
عن أبي هريرةَ أنَّ رسُولَ اللَّه ﷺ قَالَ: أقربُ مَا يَكونُ العبْدُ مِن ربِّهِ وَهَو ساجدٌ فَأَكثِرُوا الدُّعاءَ
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம் எண் : 744
 
அல்லாஹ்வுடன் மிகவும் நெருக்கமாக இருப்பது சுஜூதில் தான் துஆ கேட்டுக் கொள்ளுங்கள் என்று சொன்னார்களே ஞாபகம் வந்ததா?
 
(முஸ்னத் அஹ்மத் எண்:15333, அபூதாவூத் எண்:672) ஏன் நமக்கு அந்த சொர்க்க ஞாபகம் வரவில்லை? ஏன் நமக்கு அந்த நல்லது ஞாபகம் வரவில்லை? இன்னும் நாம் கடையில்தான் வைத்துவிட்டு வந்துள்ளோம் நம்முடைய கல்பை. கடையில் வைத்து விட்டு வந்த அந்த கல்பு நமக்கு சுஜூதில் தான் ஞாபகம் வருகின்றது.
 
எங்கெல்லாம் இந்த கல்பை தொலைத்தோமோ அதையெல்லாம் சுஜூதில் தக்பீர் கட்டும் பொழுது வந்து விடுகின்றது. அதுவும் இந்த லாக் டவுனில் கொரோனா காலங்களில் மக்களுக்கு ஒன்றுமே புரியவில்லை என்ன செய்வது என்று? 
 
நமக்கு நம்மை பார்த்தால் ஒரு வெறுப்பாக தெரிகின்றது. என்ன செய்வது யாரையும் பார்க்க முடியவில்லை ஒரு பாயானை கேட்க முடியவில்லை. ஆனால் சகோதரர்களே முஃமீனை பொருத்தவரை அவனுக்கு ஒரு போதும் இந்த நிலை இருக்காது, அவன் தன்னுடைய உள்ளத்தை அல்லாஹ்வோடு முடித்து போட்டு வைத்து விட்டான்.
 
இப்னு தைமியா ரஹீ அலை அவர்கள் எங்கே உட்கார்ந்தாலும் ஆயிரக்கணக்கான மாணவர்கள் அரசாங்கம் பார்த்தது கொண்டுபோய் ஜெயிலில் அடைத்து விட்டார்கள். மாணவர்களுக்கு கவலை.
 
இமாம் இப்னு தைமியா என்ன சொன்னார்கள்? நீ எனக்கு கவலை இல்லை ஏனென்றால் என்னுடைய சொர்க்கத்தை என்னிடத்தில் இருந்து அவர்களால் பறிக்க முடியாது. ஏன் அவர்கள் சுப்ஹு தொழுதார்கள் என்றால் இஸ்ராக் வரைக்கும் திக்ரிலே இருப்பார்கள்.
 
அப்பறம் நஃபில் திலாவத்துல் குர்ஆன் அந்த இமாம்களை பற்றி வருகின்றது ஒரு வாரத்தில் ஒரு ஹத்மா செய்கின்றவர்கள் அவர்கள் எல்லாம். இவ்வளவு ஓதி இவ்வளவு பயான் செய்து இவ்வளவு குர்ஆன் ஓதி இவ்வளவு கித்தாப் எழுதி சுப்ஹானல்லாஹ்.
 
சகோதரர்களே! இன்று நம்முடைய பிரச்சனை என்ன? இன்று நாம் நம்மை நாமே இழந்திருக்கின்றோம்.
 
وَلَا تَكُونُوا كَالَّذِينَ نَسُوا اللَّهَ فَأَنْسَاهُمْ أَنْفُسَهُمْ أُولَئِكَ هُمُ الْفَاسِقُونَ
 
அல்லாஹ்வை மறந்தவர்களைப் போல் ஆகிவிடாதீர்கள். அதனால் அவர்களுக்கு அவர்களையே அவன் மறக்கச் செய்துவிட்டான். அவர்கள்தான் பாவிகள் ஆவார்கள். (அல்குர்ஆன் 59 : 19)
 
அல்லாஹ்வுடன் நேரடியாக உள்ளத்தால் தொடர்பு. ஏனென்றால் அல்லாஹு தஆலா பேசுவது என்றால் நேரடி தொடர்பு கல்புடன் மட்டும்தான் பேசிக்கொண்டே இருப்பான் குர்ஆனிலே.
 
فَمَنْ يُرِدِ اللَّهُ أَنْ يَهْدِيَهُ يَشْرَحْ صَدْرَهُ لِلْإِسْلَامِ
 
ஆக, அல்லாஹ் எவரை நேர்வழி செலுத்த நாடுகிறானோ அவருடைய நெஞ்சை இஸ்லாமை ஏற்பதற்கு விரிவாக்குகிறான். (அல்குர்ஆன் 6:125(
 
وَمَنْ يُعَظِّمْ شَعَائِرَ اللَّهِ فَإِنَّهَا مِنْ تَقْوَى الْقُلُوبِ
 
இன்னும் எவர் அல்லாஹ்வின் அடையாளங்களை கண்ணியப்படுத்துவாரோ நிச்சயமாக அது உள்ளங்களின் இறையச்சத்திலிருந்து வெளிப்படக் கூடியதாகும். (அல்குர்ஆன் 22 : 32)
 
أَفَلَمْ يَسِيرُوا فِي الْأَرْضِ فَتَكُونَ لَهُمْ قُلُوبٌ يَعْقِلُونَ بِهَا أَوْ آذَانٌ يَسْمَعُونَ بِهَا فَإِنَّهَا لَا تَعْمَى الْأَبْصَارُ وَلَكِنْ تَعْمَى الْقُلُوبُ الَّتِي فِي الصُّدُورِ
 
ஆக, அவர்கள் (அழிக்கப்பட்டவர்கள்) பூமியில் பயணம் செய்து பார்க்க மாட்டார்களா? (அப்படி அவர்கள் செய்தால்) அவர்களுக்கு உள்ளங்கள் இருந்தால் அவற்றின் மூலம் சிந்தித்து புரிவார்கள். இன்னும், அவர்களுக்கு (நல்லுபதேசத்தை செவியுறும்) காதுகள் இருந்தால் அவர்கள் அவற்றின் மூலம் செவியுறுவார்கள். ஆக, நிச்சயமாக (கண்களின்) பார்வைகள் குருடாகுவதில்லை. (அல்குர்ஆன் 22:46)
 
பேசுவது எல்லாம் கல்ப்.
 
يَاأَيَّتُهَا النَّفْسُ الْمُطْمَئِنَّةُ
 
நிம்மதியடைந்த ஆன்மாவே! (அல்குர்ஆன் 89:27)
 
قُلْ إِنْ تُخْفُوا مَا فِي صُدُورِكُمْ
 
மேலும், அவர்களுடைய உள்ளங்கள் அல்லாஹ்வின் நினைவால் நிம்மதியடைகின்றன. அல்லாஹ்வின் நினைவினால் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன” என்பதை அறிந்து கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 13 : 28) 
 
கல்பை பற்றி தான் அல்லாஹு தஆலா பேசிக்கொண்டே இருப்பான். இந்தக் கல்பை pureஆ கரை படியாமல் வைத்துக்கொள்ளவேண்டும் அல்லாஹ்வோடு' கரை படியும் ஆனால் கழுவனும். 
 
اللهم باعد بيني وبين خطاياي كما باعدتَ بين المشرق والمغرب للَّهم نقني من الخطاباي كما ينقى الثوب الأبيض من الدنس اللهم طهرني بالثلج والبرد والماء البارد
 
ஏனென்றால் இந்த கல்பை பற்றி தான் சொல்கின்றார்கள். உள்ளத்தை சுத்தம் படுத்துவதை ஏற்படுத்தினால் தான் ஈமானுடைய இஸ்லாத்துடைய taste கிடைக்கும்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல்: புகாரி ,எண் : 702
 
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ ثَلَاثٌ مَنْ كُنَّ فِيهِ وَجَدَ حَلَاوَةَ الْإِيمَانِ أَنْ يَكُونَ اللَّهُ وَرَسُولُهُ أَحَبَّ إِلَيْهِ مِمَّا سِوَاهُمَا وَأَنْ يُحِبَّ الْمَرْءَ لَا يُحِبُّهُ إِلَّا لِلَّهِ وَأَنْ يَكْرَهَ أَنْ يَعُودَ فِي الْكُفْرِ كَمَا يَكْرَهُ أَنْ يُقْذَفَ فِي النَّارِ
 
இமாம் புகாரி பதிவு செய்கின்றார்கள் மூன்று விஷயங்கள் இருந்தால் ஈமானுடைய இனிமை தெரியும். Sweetness of Imaan.
 
அல்லாஹ்விற்கும் அல்லாஹ்வுடைய ரசூலுக்கும் விருப்பமாக ஆகிவிடுவது அனைத்தையும் விட. இபாதத் செய்யும்பொழுது இன்பமாக இருக்க வேண்டும். ஏனென்று சொன்னால்' பள்ளிவாசலில் சிறிது நேரம் உட்கார்ந்தால் நம்மால் முடியாது.
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 15, 20, 5581
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள். (புகாரி எண்:620,1334,6308) நிர்ப்பந்தம் இருந்தால் மட்டும் தான் பள்ளியை விட்டு வெளியே செல்ல வேண்டும். ஆனால் நாம் நிர்பந்தமாகவே பள்ளியில் உட்கார்ந்து இருக்கின்றோம்.
 
திக்ர் இபாதத் குர்ஆனை எடுத்து படியுங்கள் ஹதீஸை எடுத்துப் படியுங்கள் எவ்வளவு நேரம் தான் படிக்க முடியும்! ஃபோனை எடுத்து வாட்ஸ் அப்பில் நோண்டுங்கள் எவ்வளவு நேரந்தான் நோண்ட முடியும்.
 
அதில் உட்கார்ந்து பார்த்தால் யாருடையது மணிக்கணக்கில் பேசுகின்றார்கள். கொஞ்ச நேரம் குர்ஆன் ஓதுவது திக்ரு செய்வது என்றால் அப்பப்பா அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்.
 
நம்முடைய ஈமானை புதுப்பித்துக் கொண்டே இருக்க வேண்டும். அதனை பல படுத்துக் கொண்டே இருக்க வேண்டும் அதனைப் பற்றி பேசிக் கொண்டே இருக்க வேண்டும்.
 
அதனைப்பற்றிய நஸியத்துக்களை நமக்கும் சொல்ல வேண்டும் அதனைப் பற்றி பிறருக்கும் சொல்ல வேண்டும்.
 
நம்முடைய மனைவிக்கு, நம்முடைய பிள்ளைகளுக்கு சிறிது நேரம் சொல்ல வேண்டும். நமக்கு நாமே சிறிது நேரம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். 
 
وَهُمْ يَصْطَرِخُونَ فِيهَا رَبَّنَا أَخْرِجْنَا نَعْمَلْ صَالِحًا غَيْرَ الَّذِي كُنَّا نَعْمَلُ أَوَلَمْ نُعَمِّرْكُمْ مَا يَتَذَكَّرُ فِيهِ مَنْ تَذَكَّرَ وَجَاءَكُمُ النَّذِيرُ فَذُوقُوا فَمَا لِلظَّالِمِينَ مِنْ نَصِيرٍ
 
இன்னும், “எங்கள் இறைவா எங்களை வெளியேற்று! நாங்கள் செய்து கொண்டிருந்தது அல்லாமல் வேறு நல்ல அமல்களை செய்வோம்” என்று அவர்கள் அ(ந்த நரகத்)தில் கதறுவார்கள். “அறிவுரை பெறுபவர் அறிவுரை பெறுகின்ற காலம் வரை,
 
 நாம் உங்களுக்கு (உலகத்தில்) வாழ்க்கையளிக்கவில்லையா? இன்னும், உங்களிடம் அச்சமூட்டி எச்சரிப்பவர் வந்தார் அல்லவா? ஆகவே, (இந்த தண்டனையை) சுவையுங்கள்! அநியாயக்காரர்களுக்கு உதவியாளர் எவரும் இல்லை” (என்று அவர்களுக்கு பதில் கூறப்படும்).
 
அதாவது அறிவுரைகளை நினைவுகூர்ந்து கொள்வதற்காக! அல்லாஹுதஆலா சூரா அல் ஃபுர்கான் சொல்லும்பொழுது,
 
يَتَذَكَّرُ فِيهِ مَنْ تَذَكَّرَ
 
நாம் உங்களுக்கு (உலகத்தில்) வாழ்க்கையளிக்கவில்லையா? (அல்குர்ஆன் 35 : 37)
 
وَهُوَ الَّذِي جَعَلَ اللَّيْلَ وَالنَّهَارَ خِلْفَةً لِمَنْ أَرَادَ أَنْ يَذَّكَّرَ أَوْ أَرَادَ شُكُورًا
 
இன்னும், அவன்தான் இரவையும் பகலையும் (ஒன்றுக்கொன்று) பகரமாக (-ஒன்றுக்கு பின் ஒன்று மாறிவரக்கூடியதாக) அமைத்தான். ஏனெனில், நல்லறிவு பெற நாடுபவர் (இதன் மூலம்) நல்லறிவு பெறுவார்; அல்லது, நன்றி செலுத்த நாடுபவர் நன்றி செலுத்துவார் என்பதற்காக. (அல்குர்ஆன் 25 : 62)
 
அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளைப் பார்த்து உணர்வு பெற வேண்டும்.நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இரவில் எழுந்திருத்து ஒரு வசனம் சொன்னார்களே!
 
இந்த வசனங்கள் இறக்கப்பட்ட அதற்குப் பிறகு யார் அல்லாஹ்வுடைய அத்தாட்சிகளை பற்றி சிந்திக்கவில்லையோ (புகாரி எண்:4203, 5747) அவருக்கு நாசம் உண்டாகட்டும்.
 
إِنَّ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَاخْتِلَافِ اللَّيْلِ وَالنَّهَارِ لَآيَاتٍ لِأُولِي الْأَلْبَابِ, الَّذِينَ يَذْكُرُونَ اللَّهَ قِيَامًا وَقُعُودًا وَعَلَى جُنُوبِهِمْ وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكَ فَقِنَا عَذَابَ النَّارِ
 
நிச்சயமாக, வானங்களையும் பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு, பகல் மாறி மாறி வருவதிலும் நிறைவான அறிவுடையவர்களுக்கு திட்டமாக அத்தாட்சிகள் உள்ளன.
 
அவர்கள் நின்றவர்களாகவும், உட்கார்ந்தவர்களாகவும், தங்கள் விலாக்கள் மீது (படுத்தவர்களாகவு)ம் அல்லாஹ்வை (துதித்துப் புகழ்ந்து தொழுது) நினைவு கூர்வார்கள். இன்னும், வானங்கள்,
 
 பூமி படைக்கப்பட்டிருப்பதில் அவர்கள் சிந்திப்பார்கள். (இன்னும், அவர்கள் பிரார்த்திப்பார்கள்:) “எங்கள் இறைவா! நீ இதை வீணாக படைக்கவில்லை. உன்னைத் தூய்மைப்படுத்துகிறோம். ஆகவே, (நரக) நெருப்பின் தண்டனையிலிருந்து எங்களைக் காப்பாற்று!” (அல்குர்ஆன் 3:190,191) 
 
அல்லாஹ்வுடைய மகத்துவம் அப்படியே உள்ளத்தில் இறங்க வேண்டும். அல்லாஹ் என்று சொல்லும்போது அப்படியே மனதில் வைத்து ஒரு நிலைக்கு வர வேண்டும்.
 
إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ
 
அல்லாஹ் நினைவு கூரப்பட்டால் அவர்களுடைய உள்ளங்கள் நடுங்கும். (அல்குர்ஆன் 8 : 2)
 
அன்பு கலந்த முஹப்பத் கலந்த அல்லாஹ்வுடைய ஜலாலியத் அல்லாஹ் அவன் எப்பேர்ப்பட்டவன்.
 
وَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَهُ وَلِيٌّ مِنَ الذُّلِّ وَكَبِّرْهُ تَكْبِيرًا
 
இன்னும், (நபியே!) கூறுவீராக! “புகழனைத்தும் அல்லாஹ்விற்குரியதே! அவன் (யாரையும் தனக்கு) குழந்தையாக எடுக்கவில்லை. மேலும், ஆட்சியில் அவனுக்கு அறவே இணை இல்லை. இன்னும், பலவீனத்தினால் அவனுக்கு நண்பன் யாரும் அறவே இல்லை.” மேலும், (நபியே!) அவனை மிக மிகப் பெருமைப்படுத்துவீராக! (அல்குர்ஆன் 17 : 111) 
 
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அல்லாஹ்வுடைய பெருமையை பற்றி பேசிக்கொண்டே இருங்கள். அல்லாஹ்வுடைய பெருமையைப் பற்றி பேசிக்கொண்டே இருக்க வேண்டும். 
 
எவ்வளவு பெரிய லட்சக்கணக்கான செல்வந்தர்கள் அவர்களுடைய காசு பணம் குடும்பம் அவர்களுக்கே தெரியாது அவர்கள் மவுத்தாப் போனது ஆனால் மவுத்தா போய்விட்டார்கள். துன்யா ஒன்றும் கிடையாது. ஒன்றும் கிடையாது குப்பை.
 
அதை உள்ளத்தில் கொண்டுவரவேண்டும் அல்லாஹ் சொல்கின்றான் அல்லவா!
 
اعْلَمُوا أَنَّمَا الْحَيَاةُ الدُّنْيَا لَعِبٌ وَلَهْوٌ وَزِينَةٌ وَتَفَاخُرٌ بَيْنَكُمْ وَتَكَاثُرٌ فِي الْأَمْوَالِ وَالْأَوْلَادِ كَمَثَلِ غَيْثٍ أَعْجَبَ الْكُفَّارَ نَبَاتُهُ ثُمَّ يَهِيجُ فَتَرَاهُ مُصْفَرًّا ثُمَّ يَكُونُ حُطَامًا وَفِي الْآخِرَةِ عَذَابٌ شَدِيدٌ وَمَغْفِرَةٌ مِنَ اللَّهِ وَرِضْوَانٌ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ
 
அறிந்து கொள்ளுங்கள்! “உலக வாழ்க்கை எல்லாம் விளையாட்டும் வேடிக்கையும் அலங்காரமும் உங்களுக்கு மத்தியில் பெருமை அடிப்பதும் செல்வங்களிலும் பிள்ளைகளிலும் அதிகத்தின் போட்டியும்தான். (இவ்வாழ்க்கை) ஒரு மழையைப் போன்றுதான், அதன் விளைச்சல் விவசாயிகளை கவர்ந்தது. பிறகு, அது காய்ந்து விடுகிறது. ஆக, அதை நீர் மஞ்சளாக பார்க்கிறீர். பிறகு, அது குப்பையாக ஆகிவிடுகிறது. இன்னும், மறுமையில் (நிராகரிப்பாளர்களுக்கு) கடுமையான தண்டனையும் (நம்பிக்கையாளர்களுக்கு) அல்லாஹ்வின் புறத்தில் இருந்து மன்னிப்பும் திருப்பொருத்தமும் உண்டு. மயக்கக்கூடிய இன்பமாகவே தவிர உலக வாழ்க்கை இல்லை.” (அல்குர்ஆன் 57 : 20) 
 
இது ஒன்றும் இல்லை இது ஒரு விளையாட்டு இது just on show இது ஒரு வேடிக்கை.இது வெறும் கொஞ்ச நேரத்திற்கு மட்டும் தான் நீ பெரியவனா நான் பெரியவனா இது எல்லாம் கொஞ்ச நேரத்திற்கு தான்.
 
அதற்கு பிறகு ஒன்றும் கிடையாது காய்ந்த சருகு. பெரிய டவர் என்றாலும் ஒன்றும் கிடையாது. ஒரு சுனாமியின் மனிதனாக இருந்தாலும் மரணம் வந்தால் அவன் போய் விடுவான்.
 
பயந்து விடக்கூடாது எதற்கு சொல்கிறேன் என்றால் நமக்கு முஃமின் ஆகிய நமக்கு அல்லாஹ் ஒரு பெரிய இபாபத் என்ற ஒரு பாக்கியத்தை கொடுத்திருக்கின்றான். லாக்டவுன் ஆ குர்ஆன் ஓதுங்கள். துன்யாவை சம்பாதிக்க முடியவில்லை என்றால் ஆகிரத்தை சம்பாதியுங்கள்.
 
வேலைக்கு போக முடியவில்லை என்றால் உட்கார்ந்து ஓதிக் கொண்டே இருங்கள் அது ஹதீஸ் படித்துக் கொண்டே இருங்கள். திக்ரு எடுத்துக் கொண்டே இருங்கள். ஹதீஸை மனப்பாடம் பண்ணுங்கள். ஆயத்தை மனப்பாடம் பண்ணுங்கள். நமக்கு எந்த ஒரு வெறட்சியும் வராது. மக்கள் என்ன செய்கின்றார்கள்?
 
லாக் டவுன் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும். இதில் பாவங்களும் அதிகரித்துவிட்டன. மக்களுக்கு புரியவில்லை என்ன செய்வதுஎன்றபெரிய ஒரு முஸிபத்துதான் ஆனால் அந்த அனுபவத்தை அல்லாஹ்வைக் கொண்டு ஆறுதல் பெற்றோமேயானால் அல்லாஹ்வோடு ஒரு நேரத்தை ஒதுக்கி விட்டோமேயானால்
 
لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ
 
அறிவிப்பாளர் : பரா இப்னு ஆஸிப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி  எண் : 247, 239, 5836, 5838 குறிப்பு (1)
 
அல்லாஹ்விற்கு ஒதுக்கி விட்டோம் என்றால் அல்ஹம்துலில்லாஹ்.
 
شَرَعَ لَكُمْ مِنَ الدِّينِ مَا وَصَّى بِهِ نُوحًا وَالَّذِي أَوْحَيْنَا إِلَيْكَ وَمَا وَصَّيْنَا بِهِ إِبْرَاهِيمَ وَمُوسَى وَعِيسَى أَنْ أَقِيمُوا الدِّينَ وَلَا تَتَفَرَّقُوا فِيهِ كَبُرَ عَلَى الْمُشْرِكِينَ مَا تَدْعُوهُمْ إِلَيْهِ اللَّهُ يَجْتَبِي إِلَيْهِ مَنْ يَشَاءُ وَيَهْدِي إِلَيْهِ مَنْ يُنِيبُ
 
அவன் நூஹுக்கு எதை உபதேசித்தானோ அதையே உங்களுக்கும் இந்த மார்க்கத்தில் சட்டமாக்கினான். உமக்கு நாம் எதை வஹ்யி அறிவித்தோமோ, இன்னும் இப்ராஹீம், மூஸா, ஈஸாவிற்கு எதை நாம் உபதேசித்தோமோ அது, “இந்த மார்க்கத்தை நீங்கள் நிலை நிறுத்துங்கள்! அதில் நீங்கள் பிரிந்து விடாதீர்கள்!” என்பதாகும். இணைவைப்பவர்களுக்கு நீங்கள் எதன் பக்கம் அழைக்கிறீர்களோ அது மிக பாரமாக ஆகிவிட்டது. அல்லாஹ், தான் நாடுகிறவர்களை தன் பக்கம் தேர்ந்தெடுக்கிறான். (தன் பக்கம்) திரும்பக்கூடியவர்களுக்கு அவன் தன் பக்கம் (நெருங்குவதற்குரிய) நேர்வழி காட்டுகிறான். (அல்குர்ஆன் 42 :13) 
 
அல்லாஹ் என்ன சொல்கின்றான். என் பக்கம் ஒதுங்கி விடுங்கள் அல்லாஹ்விடம் ஒதுங்கிவிட்டால் முடிந்துவிட்டது. கல்பாலும், கல்பிலுள்ள எண்ணத்தாலும், உடலாலும் அல்லாஹ்விடம் ஒதுங்கி விட வேண்டும்.
 
தொழுகையில் திக்ரில் நோன்பில் நஃபிலான நோன்புகளில் திலாவத்தில் இதுதான் நம்முடைய உள்ளத்திற்கு தேவை. இந்த பியூரிட்டிநினைத்து பார்க்க வேண்டும் திரும்பத் திரும்ப என்னுடைய ஈமான் எந்த அளவில் இருக்கின்றது என்னுடைய ஈமான் எந்த அளவு இருக்கின்றது .
 
 
لَمَّا طُعِنَ عُمَرُ جَعَلَ يَأْلَمُ فَقَالَ لَهُ ابْنُ عَبَّاسٍ وَكَأَنَّهُ يُجَزِّعُهُ يَا أَمِيرَ الْمُؤْمِنِينَ وَلَئِنْ كَانَ ذَاكَ لَقَدْ صَحِبْتَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَحْسَنْتَ صُحْبَتَهُ ثُمَّ فَارَقْتَهُ وَهُوَ عَنْكَ رَاضٍ ثُمَّ صَحِبْتَ أَبَا بَكْرٍ فَأَحْسَنْتَ صُحْبَتَهُ ثُمَّ فَارَقْتَهُ وَهُوَ عَنْكَ رَاضٍ ثُمَّ صَحِبْتَ صَحَبَتَهُمْ فَأَحْسَنْتَ صُحْبَتَهُمْ وَلَئِنْ فَارَقْتَهُمْ لَتُفَارِقَنَّهُمْ وَهُمْ عَنْكَ رَاضُونَ قَالَ أَمَّا مَا ذَكَرْتَ مِنْ صُحْبَةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرِضَاهُ فَإِنَّمَا ذَاكَ مَنٌّ مِنْ اللَّهِ تَعَالَى مَنَّ بِهِ عَلَيَّ وَأَمَّا مَا ذَكَرْتَ مِنْ صُحْبَةِ أَبِي بَكْرٍ وَرِضَاهُ فَإِنَّمَا ذَاكَ مَنٌّ مِنْ اللَّهِ جَلَّ ذِكْرُهُ مَنَّ بِهِ عَلَيَّ وَأَمَّا مَا تَرَى مِنْ جَزَعِي فَهُوَ مِنْ أَجْلِكَ وَأَجْلِ أَصْحَابِكَ وَاللَّهِ لَوْ أَنَّ لِي طِلَاعَ الْأَرْضِ ذَهَبًا لَافْتَدَيْتُ بِهِ مِنْ عَذَابِ اللَّهِ عَزَّ وَجَلَّ قَبْلَ أَنْ أَرَاهُ
 
உமர் ஃபாரூக் அழுகின்றார் சொல்கின்றார்கள் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு  (புகாரி எண்:3416) உமரே நீங்கள் பத்ரில் கலந்து கொள்ளவில்லையா? உஹதில் கலந்துகொள்ளவில்லையா?
 
சொர்க்கவாசி என்று நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் உங்களுக்கு வாக்கு கொடுக்கவில்லையா? எல்லாம் கொடுத்தார்கள் தான் ஆனால் அவற்றுக்கெல்லாம் ஒரு நிபந்தனை இருக்கின்றது. அந்த நிபந்தனை என்னால் பூர்த்தியாகாமல் இருந்தால் என்ன ஆயிருக்கும்? எப்படி நினைத்துப் பார்த்து இருக்கிறார் பாருங்கள்.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் உங்களை சொர்க்கவாசல் சொர்க்கவாசி சொர்க்கவாசி என்று சொல்லி விட்டார்களே பின் நீங்கள் ஏன் அழுகிறீர்கள் உமரே எல்லாம் சரிதான், எல்லாம் ஒரு நிபந்தனை வைத்து நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சொல்லி இருந்தால் என் நிலை என்ன ஆயிருக்கும்? எதுவும் வேண்டாம் இந்த துன்யாவிலிருந்து போகும் போது.
 
எனக்கு நன்மையும் வேண்டாம் தீமையும் வேண்டாம் சமமாக இருக்கட்டும் அதான் எனக்கு வேண்டும். அதான் முஹாஸிபா அவர்களுடைய கன்னம் அவர்களுடைய மகனார் அப்துல்லாஹ் இப்னு உமர் எவ்ளோ பெரிய சஹாபி அவருடைய மடியில் இருக்கின்றது அப்துல்லாஹ் என்னுடைய தலையை கீழே வை என்று சொல்கின்றார்கள்.
 
அத்தா அமீருல் முஃமினீன் உங்கள் தலை கீழே இருந்தால் என்ன மடியில் இருந்தாலென்ன இருக்கட்டும் என்று சொல்கின்றார்கள். வேண்டாம் கீழே வைத்துவிடு எனக்கு தகுதி இல்லை என்கிறார்கள். வேண்டாம் கீழே வைத்து விடு அதான் முஹாஸிபா.
 
சகோதரர்களே எனக்கும் உங்களுக்கும் ஒரு நினைவூட்டல் நம்முடைய கல்புக்கும் தீனி போடுவோம் அதையும் டிரஸ் பண்ணுவோம். அதை கொஞ்சம் கழுவுவோம் தினமும் நாம் குளிக்கின்றோம்.
 
குர்ஆன் ஓதுவோம் அல்லாஹ்வைப் பற்றி என்ன சொல்கின்றான் ஈமானை பற்றி அமலைப் பற்றிய அக்லாக்கை பற்றி உங்களுடைய கல்பிலே வரக்கூடிய நல்ல விஷயங்களை நபிமார்களைப் பற்றி தாபியீன்களை பற்றிய வரலாற்றை படித்து பாருங்கள்.
 
இமாம் ஹஸன் பஸரீ சொல்கின்றார்கள் ஒரு நாள் காலையில் நீங்கள் எழுந்து உங்களுடைய உள்ளம் தூய்மையாக இருந்து உபதேசங்களை கேட்கும்படியாக இருந்தால் உங்களுக்கு நரகத்தைப் பற்றிக் கூறி இருப்பேன் என்று. எவ்வளவு பெரிய மஹான் தன்னுடைய மாணவர்களுக்கு முன்னாடி.
 
فَوَيْلٌ لِلْقَاسِيَةِ قُلُوبُهُمْ مِنْ ذِكْرِ اللَّهِ أُولَئِكَ فِي ضَلَالٍ مُبِينٍ
 
அத்தகையவர் உள்ளம் இறுகியவருக்கு சமமாவாரோ? அல்லாஹ்வின் நினைவை விட்டு உள்ளங்கள் இறுகியவர்களுக்கு நாசம் உண்டாகட்டும். அவர்கள் தெளிவான வழிகேட்டில் இருக்கிறார்கள். (அல்குர்ஆன் 39 : 22)
 
யாருடைய உள்ளம் இறுகிவிட்டதோ அல்லாஹ்வுடைய அச்சமில்லாமல் அந்த உள்ளத்திற்கு நாசம் உண்டாகட்டும். அல்லாஹ் சபிக்கின்றான்.
 
وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
 
(அல்குர்ஆன் 24:31)
 
நாம் இங்கு பயான் கேட்கின்றோம் கேட்டுவிட்டு வீட்டுக்கு சென்று நம்முடைய குர்ஆன் ஓதலில் திக்ரில் திலாவத்தில் என்ன குறை இருக்கின்றது என்று நம்முடைய அக்லாக்கிலே அமல்களிலே குடும்பத்தில் என்ன குறையிருக்கிறது என்று அதை சரி செய்து கொள்ள
 
وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَ الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
 
(அல்குர்ஆன் 24:31)
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறுப்பு(1) 
 
صحيح البخاري (1/ 58)
 
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ، قَالَ: أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ، قَالَ: أَخْبَرَنَا سُفْيَانُ، عَنْ مَنْصُورٍ، عَنْ سَعْدِ بْنِ عُبَيْدَةَ، عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا أَتَيْتَ مَضْجَعَكَ، فَتَوَضَّأْ وُضُوءَكَ لِلصَّلاَةِ، ثُمَّ اضْطَجِعْ عَلَى شِقِّكَ الأَيْمَنِ، ثُمَّ قُلْ: اللَّهُمَّ أَسْلَمْتُ وَجْهِي إِلَيْكَ، وَفَوَّضْتُ أَمْرِي إِلَيْكَ، وَأَلْجَأْتُ ظَهْرِي إِلَيْكَ، رَغْبَةً وَرَهْبَةً إِلَيْكَ، لاَ مَلْجَأَ وَلاَ مَنْجَا مِنْكَ إِلَّا إِلَيْكَ، اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ، وَبِنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ، فَإِنْ مُتَّ مِنْ لَيْلَتِكَ، فَأَنْتَ عَلَى [ص:59] الفِطْرَةِ، وَاجْعَلْهُنَّ آخِرَ مَا تَتَكَلَّمُ بِهِ ". قَالَ: فَرَدَّدْتُهَا عَلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَلَمَّا بَلَغْتُ: اللَّهُمَّ آمَنْتُ بِكِتَابِكَ الَّذِي أَنْزَلْتَ، قُلْتُ: وَرَسُولِكَ، قَالَ: «لاَ، وَنَبِيِّكَ الَّذِي أَرْسَلْتَ»
 
[تعليق مصطفى البغا]
 
244 (1/97) -[  ش أخرجه مسلم في الذكر والدعاء والتوبة باب ما يقول عند النوم وأخذ المضجع رقم 2710 (مضجعك) فراشك ومكان نومك. (ألجأت) أسندت. (رغبة) طمعا في ثوابك. (رهبة) خوفا من عقابك. (منجى) مخلص. (الفطرة) الدين القويم وهو الإسلام الذي يولد عليه كل مولود. (لا ونبيك) أي لا تقل ورسولك بل قل ونبيك كما علمتك وفيه إشارة إلى التزام الألفاظ الواردة في الأدعية والأذكار].
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/