HOME      Khutba      சோதனைகளை எளிதாக்க வழிகள்! அமர்வு 1 | Tamil Bayan - 682   
 

சோதனைகளை எளிதாக்க வழிகள்! அமர்வு 1 | Tamil Bayan - 682

           

சோதனைகளை எளிதாக்க வழிகள்! அமர்வு 1 | Tamil Bayan - 682


சோதனைகளை எளிதாக்க வழிகள்! அமர்வு 1

ஜுமுஆ குத்பா தலைப்பு : சோதனைகளை எளிதாக்க வழிகள்! அமர்வு 1

வரிசை : 682

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 09-07-2021 | 29-11-1442

بسم الله الرحمن الرّحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹ்வைப் போற்றி புகழ்ந்து, அல்லாஹ்வின் தூதர் மீதும், அவர்களின் குடும்பத்தார்மற்றும் தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக,

வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று சாட்சி கூறியவனாக,முஹம்மது நபி ஸல்லல்லாஹ் அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வுடைய தூதராக இருக்கிறார்கள் என்று சாட்சி கூறியவனாகஉங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்தில் நற்பாக்கியங்களை வேண்டியவனாக,

அல்குர்ஆன் வர்ணிக்கின்ற நல்ல குணங்களை நாம் பெறுவதற்கு அல்லாஹ் நமக்கு அருள் புரிய துஆ செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கின்றேன்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அவன் விரும்புகின்ற நல்லோர்களின் கூட்டத்தில் நம் அனைவரையும் ஒன்று சேர்ப்பானாக! ஆமீன்.

நம்முடைய காரியங்களை நேரான பாதையில் ஆக்கியருள்வானாக! நம்முடைய சோதனைகளையும் இலகுவாக்கி தருவானாக! சோதனைகளை தாங்கக்கூடிய யகீனையும் தந்தருள்வானாக! எல்லா சோதனைகளில் இருந்தும் அழகிய விடுதலையை அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா நம் அனைவருக்கும் தந்தருள்வானாக! ஆமீன்.

அல்லாஹ்வின் அடியார்களே! இந்த உலகத்தில் நாம் கண்டிப்பாக சோதனைகளை சந்திக்க வேண்டும் என்று பல வசனங்கள் மூலமாக பல ஹதீஸ்களின் மூலமாக சென்ற ஜும்ஆவில் பார்த்தோம்.

இந்த சோதனைகளைத் தாங்கிக் கொள்வதற்கு சகித்துக் கொள்வதற்கு நமக்கு என்ன தேவை? நாம் எப்படி அதற்காக தயாராக வேண்டும்? அந்த விஷயங்களை இந்த ஜும்ஆவில் பார்க்க இருக்கின்றோம்.

முதலாவதாக நாம் நம்மை தயார் படுத்த வேண்டும். நாம் நம்முடைய மனதை சோதனைகளை தாங்கக்கூடிய சக்தி பெற்றதாக உருவாக்க வேண்டும்.

நமக்கு நாமே உணர்த்திக் கொள்ள வேண்டும், கண்டிப்பாக இந்த உலகத்தில் சோதனை வந்தே தீரும் என்று.

இன்று நாம் மகிழ்ச்சியாக இருந்தால் நாளை கண்டிப்பாக ஒரு கவலையான செய்தி நமக்கு வரலாம். இன்று நாம் வியாபாரம் இலாபம் கொண்டதாக இருந்தால் நாளை அந்த வியாபாரம் நலிவடையவும் செய்யலாம்.

இப்படியாக இந்த உலகத்தில் உள்ள ஒவ்வொரு நிலைமைகள் மாறுவதை நாம் நம்முடைய உள்ளத்திற்கு நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும். இந்த உலகம் யாருக்கும் எப்போதும் ஒரே நிலையில் நீடித்து இருக்காது. கண்டிப்பாக மாற்றங்கள் நிகழும்.

ஒரு பக்கம் யா அல்லாஹ்! கெட்ட நிலையில் இருந்து வறுமையில் இருந்து பிறரிடம் தேவையாவதிலிருந்து என்னை நீ பாதுகாத்துக் கொள்வாயாக! நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்! என்று துஆ செய்வதோடு சோதனைகள் எனக்கும் வரலாம். யாரும் சோதனைகளை விட்டும் அப்பாற்பட்டவர்கள் அல்ல என்பதையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹு தஆலா தெளிவாக சொல்கின்றான் :

وَلَنَبْلُوَنَّكُمْ بِشَيْءٍ مِنَ الْخَوْفِ وَالْجُوعِ وَنَقْصٍ مِنَ الْأَمْوَالِ وَالْأَنْفُسِ وَالثَّمَرَاتِ وَبَشِّرِ الصَّابِرِينَ

(நம்பிக்கையாளர்களே!) பயம், பசி மேலும், பொருள்கள், உயிர்கள், கனிவர்க்கங்கள் ஆகியவற்றில் நஷ்டத்தைக் கொண்டு நிச்சயமாக நாம் உங்களைச் சோதிப்போம். (நபியே! இச்சோதனைகளால் ஏற்படும் கஷ்டங்களைச்) சகித்துக் கொண்டிருப்பவர்களுக்கு நற்செய்தி கூறுவீராக. (அல்குர்ஆன் 2 : 155)

أَمْ حَسِبْتُمْ أَنْ تَدْخُلُوا الْجَنَّةَ وَلَمَّا يَأْتِكُمْ مَثَلُ الَّذِينَ خَلَوْا مِنْ قَبْلِكُمْ مَسَّتْهُمُ الْبَأْسَاءُ وَالضَّرَّاءُ وَزُلْزِلُوا حَتَّى يَقُولَ الرَّسُولُ وَالَّذِينَ آمَنُوا مَعَهُ مَتَى نَصْرُ اللَّهِ أَلَا إِنَّ نَصْرَ اللَّهِ قَرِيبٌ

(நம்பிக்கையாளர்களே!) உங்களுக்கு முன் சென்றவர்களுக்கு ஏற்பட்டது போன்ற (கஷ்டமான) நிலைமை உங்களுக்கு வராமலே நீங்கள் சொர்க்கத்தில் நுழைந்து விடலாம் என்று நினைத்துக் கொண்டீர்களோ? (உங்களைப் போல) நம்பிக்கை கொண்ட அவர்களையும் அவர்களுடைய தூதரையும், வாட்டும் வறுமையிலும், நோயிலும் பீடித்து (அவர்கள் வருந்தித் தங்கள் கஷ்டங்களை நீக்கி வைக்க) ‘‘அல்லாஹ்வுடைய உதவி எப்பொழுது (வரும்? எப்பொழுது வரும்?)'' என்று கேட்டதற்கு ‘‘அல்லாஹ்வுடைய உதவி நிச்சயமாக (இதோ) சமீபத்திலிருக்கிறது'' என்று (நாம் ஆறுதல்) கூறும் வரை அவர்கள் ஆட்டிவைக்கப்பட்டார்கள். (அல்குர்ஆன்2 : 214)

இவ்வளவு அழுத்தமாக ரப்புல் ஆலமீன் கேட்பதில் இருந்து நாம் உணர வேண்டியது என்ன?

கண்டிப்பாக சோதனை வரும். மனமே நீ அதற்கு தயாராக இரு. உறுதியாக இரு என்று நாம் அந்த உள்ளத்தை திடப்படுத்திக் கொள்ள வேண்டும். உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும். பலப்படுத்திக் கொள்ள வேண்டும்.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:

وَمَثَلُ الدُّنْيَا إِلَّا كَرَاكِبٍ سَارَ فِي يَوْمٍ صَائِفٍ فَاسْتَظَلَّ تَحْتَ شَجَرَةٍ سَاعَةً مِنْ نَهَارٍ ثُمَّ رَاحَ وَتَرَكَهَا

இன்று உலக வாழ்க்கையில் எப்படி நாம் சோதனைகளுக்கு நம்மை தயார்படுத்திக் கொள்ள வேண்டும் என்றால் ஒரு பயணி கடுமையான வெயில் நேரத்தில் அவர் செல்கின்றார். ஓய்வு தேவைப் படுகின்றது, ஒரு நிழலுக்காக மரத்தின் அருகே செல்கின்றார். சிறிது நேரம் இருந்து விட்டு தனது பயணத்தைத் தொடர்கின்றார்.

இதுதான் மொத்த வாழ்க்கை என்று ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்கிறார்கள்.(1)

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 2608.

ஒரு வெயில் நேரத்தில் ஓய்வெடுப்பதற்காக ஒரு பயணி எவ்வளவு நேரம் ஒதுக்குகின்றானோஅதுதான் நம்முடைய மொத்த வாழ்க்கையும்.அந்த அளவு குறுகிய கால வாழ்க்கை.

அந்த ஓய்வெடுக்க கூடிய நேரத்தில் அங்கே இடம் சரி இல்லை,கொசு இருக்கின்றது, ஈ இருக்கின்றது என்று ஏதாவது பார்ப்பானா? தேவைக்கு அவன் ஓய்வெடுத்துக் கொண்டு சென்று கொண்டே இருப்பான்.

அப்படித்தான் இந்த உலக வாழ்க்கையில் ஏற்படக்கூடிய அந்த மாற்றங்கள் சூழ்நிலைகள் அவற்றை எல்லாம் பொறுத்துக் கொண்டு சகித்துக்கொண்டு அடுத்து நாம் மறுமையை நோக்கி பயணம் செய்து கொண்டே இருக்க வேண்டும். இந்த உலகத்தினுடைய மாற்றங்களைக் கொண்டு நாம் தடுமாறி விடக் கூடாது.

நம்முடைய முன்னோர்கள் சொல்வார்கள்; இந்த உலகத்தில் எந்த படைப்பும் நிரந்தரமாக இருக்காது. எல்லோருக்கும் முடியக்கூடிய ஒரு தவணையை அல்லாஹு தஆலா நிர்ணயித்து வைத்திருக்கின்றான்.

எல்லோருக்கும் அல்லாஹு தஆலா மாறக்கூடிய சூழ்நிலைகள் வைத்திருக்கின்றான். இதை நாம் நம்முடைய மனதிற்கு உணர்த்திக்கொண்டே இருக்கவேண்டும்.

கண்டிப்பாக இந்த உலகத்தில் இன்று மகிழ்ச்சியை சந்திப்பவர் நாளை துக்கத்தோடு இருப்பார், கவலையை சந்திப்பார். இன்று கவலையோடு இருப்பவர் நாளை மகிழ்ச்சியாக இருப்பார். இன்று ஏழையாக இருப்பவர் நாளை செல்வந்தர் ஆக மாறலாம். இன்று செல்வந்தராக இருப்பவர் நாளை ஏழையாக மாறலாம். எத்தனையோ பேரை நம்முடைய வாழ்க்கையில் குறுகிய காலத்தில் பார்த்து வருகின்றோம்.

ஆகவே இந்த உள்ளத்தை நாம் உறுதிப்படுத்த வேண்டும். உள்ளம் தடுமாறி விடக்கூடாது.

அல்லாஹு தஆலா சொல்கிறான்; இறை நம்பிக்கை அல்லாத மறுமை நம்பிக்கை அல்லாத மனிதனைப் பற்றி,

إِنَّ الْإِنْسَانَ خُلِقَ هَلُوعًا (19) إِذَا مَسَّهُ الشَّرُّ جَزُوعًا (20) وَإِذَا مَسَّهُ الْخَيْرُ مَنُوعًا

மெய்யாகவே மனிதன் பதற்றக்காரனாகவே படைக்கப்பட்டுள்ளான். ஏனென்றால், அவனை ஒரு தீங்கு அடைந்தால், (திடுக்கிட்டு) நடுங்குகிறான். அவனை ஒரு நன்மை அடைந்தாலோ, அதை (தர்மம் செய்யாது) தடுத்துக் கொள்கிறான். (அல்குர்ஆன் 70 : 19-21)

வசனத்தின் கருத்து : எப்பொழுதுமே ஒரே பதட்டத்தில் இருப்பார்கள். எனக்கு என்ன நடக்குமோ? எனக்கு என்ன ஆகுமோ? நாளை எப்படி இருக்குமோ? மாலை எப்படி இருக்குமோ? இப்படி ஒரு பதட்டம், எதை எடுத்தாலும் பதட்டம், மறுமையை நம்பாதவன் தான் இத்தகைய பயத்தில் பதட்டத்தில் இருப்பான்.

இந்த நிலை ஒரு முஃமினுக்கு இருக்கக் கூடாது. அவனுடைய உள்ளம் உறுதியாக இருக்க வேண்டும். அல்லாஹ்வை நோக்கியதாக இருக்கவேண்டும். அதுபோன்று அல்லாஹ்வினுடைய விதியின் மீது நம்முடைய நம்பிக்கையை அதிகப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும்.

அல்லாஹு தஆலா தனது நபிக்கு உணர்த்துகின்றான்.

قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ

(ஆகவே, நபியே! அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் நிச்சயமாக எங்களை அணுகாது. அவன் தான் எங்கள் இறைவன்'' என்று நீர் கூறுவீராக. நம்பிக்கையாளர்கள் அனைவரும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைக்கவும். (அல்குர்ஆன் 9 : 51)

சகோதரர்களே! இந்த தக்தீரை நினைக்கும்போது ஒரு முஃமினுடைய உள்ளம் மிகப் பெரிய ஒரு உறுதி கொள்கின்றது. தடுமாற்றத்தில் இருந்து குழம்புவதிலிருந்து சோதனைகளில் அப்படியே பதறிப் போய் நான் என்ன செய்வது என்று தெரியாமல் பித்துப்பிடித்த நிலையிலிருந்து அவன் அவனை பாதுகாத்துக் கொள்ள முடியும்.

இந்த விதியை நம்பாதவர்கள், மறுமையை நம்பாதவர்கள், உண்மையான அல்லாஹ்வை நம்பாதவர்கள் அவருடைய நிலை, அவர்களுக்கு தற்கொலையைத் தவிர வேறு நிலை இருக்காது.

விதியை நம்பாத காரணத்தால் இந்த உலகத்தைப் படைத்த அல்லாஹ்வை விரும்பாத காரணத்தால் காஃபிர்கள், சிலை வணங்கிகள், இணைவைப்பாளர்கள் அவர்களைப் பொறுத்தவரை பிரச்சனைக்கு என்ன தீர்வு, தற்கொலை ஒன்றுதான்.

ஆகவேதான் பார்க்கின்றோம். ஒவ்வொரு நாளும் இந்த சிலை வணங்கிகள், அல்லாஹ்வை நம்பாத இந்த காஃபிர்கள் தங்களுடைய உயிர்களை எப்படி எல்லாம் மாய்த்துக்கொள்கின்றார்கள் என்று.

ஒரு முஃமின் அப்படி அல்ல. அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்கள் கூறுகிறார்கள் :

إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ وَكَّلَ بِالرَّحِمِ مَلَكًا يَقُولُ يَا رَبِّ نُطْفَةٌ يَا رَبِّ عَلَقَةٌ يَا رَبِّ مُضْغَةٌ فَإِذَا أَرَادَ أَنْ يَقْضِيَ خَلْقَهُ قَالَ أَذَكَرٌ أَمْ أُنْثَى شَقِيٌّ أَمْ سَعِيدٌ فَمَا الرِّزْقُ وَالْأَجَلُ فَيُكْتَبُ فِي بَطْنِ أُمِّهِ

அல்லாஹு தஆலா ஒரு வானவரை ஏவுகின்றான். தாயினுடைய கர்ப்பத்தில் அந்த இந்திரியத் துளி சென்று விட்டால் அந்த வானவர் கேட்கின்றார்; யாஅல்லாஹ்! இந்திரியத் துளி வந்து விட்டது. என்ன செய்வது? தங்க வைக்கவா? அல்லது வெளியேற்றி விடவா? அல்லாஹ் தங்க வைக்க சொன்னால் தங்க வைப்பார். பிறகு அதை அலக்காவாக -இரத்தக் கட்டியாக, சதைத் துண்டாக, எலும்பாக இப்படியாக ஒவ்வொரு கட்டத்திலும் அவர் அனுமதி கேட்டுக் கொண்டே இருப்பார்.

அல்லாஹ் அனுமதி கொடுத்தால் அவர் அடுத்த கட்டத்தை தாண்டி விடுவார். பிறகு இப்படியாக 120நாட்கள்.

மூன்று 40நாட்கள் பரிபூரணம் ஆகி விட்ட பொழுது ருஹ் ஊத வேண்டும். அந்த நேரத்தில் அந்த வானவர் அல்லாஹ்விடத்தில் கேட்பார்; அல்லாஹ்வே! இவர் ஆணா? பெண்ணா? இவர் துர்பாக்கியம் உடையவரா? நற்பாக்கியம் பெற்றவரா?

இவருக்கு உலக வாழ்க்கையில் நிர்ணயிக்கப்பட்ட வாழ்வாதாரம் என்ன?இவருக்கு நீ கொடுக்கக்கூடிய ஆயுட்காலம் எவ்வளவு? இவற்றையெல்லாம் கேட்டு எழுதி விடுவார்.

அந்தத் தாயின் வயிற்றில் அவர் இருக்கும் பொழுது அந்த வானவர் அதை எழுதி விடுவார்.

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி,எண் : 307,6107.

சகோதரர்களே! இந்த உலகத்தில் நம்முடைய பெயர் குறிப்பிடாத ஒரு பருக்கை கூட நாம் சாப்பிட முடியாது. நமது பெயர் எழுதப்பட்ட ஒரு உணவு பருக்கை அது வேறு யாருக்கும் செல்லாது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்.

أنَّ نفسًا لَن تموتَ حتَّى تستكمِلَ أجلَها

தனது உணவை முழுமையாக அனுபவிக்காத வரை எந்த ஒரு உயிரினமும் இந்த உலகை விட்டு பிரியாது. (2)

அறிவிப்பாளர் : அபூ உமாமா அல்பாஹிலி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ, எண் : 2085

நம்முடைய ஸலஃப் ஸாலிஹ் அவர்களுடைய வரலாறை படிக்கின்றோம். இந்த உலகத்தில் எனக்கு எழுதப்பட்டது அதை என்னிடமிருந்து வேறு யாரும் தட்டிப் பறிக்க முடியாது என்று இருக்கும் பொழுது நான் ஏன் கவலைப்பட வேண்டும்? எனக்கு எழுதப் பட்டது எனக்கு கண்டிப்பாக கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கும் பொழுது நான் ஏன் இதை குறித்து கவலைப்படனும்?

அவருடைய கவலை எல்லாம் மறுமையாக இருந்தது. சொர்க்கமாக இருந்தது. இந்த தக்தீர் உடைய யகீன் நமக்கு வரவேண்டும்.

நம்முடைய வாழ்வாதாரம் முடிவு செய்யப்பட்டு விட்டது. படித்தவர்கள் எல்லாம் செல்வந்தர்கள் ஆகிவிட முடியுமா? படிக்காதவர்கள் எல்லாம் உணவுக்கு கஷ்டப்படுவார்கள் என்றா அர்த்தம்? இல்லை.

إِنَّ رَبَّكَ يَبْسُطُ الرِّزْقَ لِمَنْ يَشَاءُ وَيَقْدِرُ إِنَّهُ كَانَ بِعِبَادِهِ خَبِيرًا بَصِيرًا

நிச்சயமாக உமது இறைவன், தான் விரும்பியவர்களுக்கு விரிவாகக் கொடுக்கிறான்; (தான் விரும்பியவர்களுக்கு சுருக்கிக் குறைத்து) அளவாக கொடுக்கிறான். ஏனென்றால், நிச்சயமாக அவன், தன் அடியார்(களின் தன்மை)களை நன்கறிந்தவனாகவும், உற்று நோக்குபவனாகவும் இருக்கிறான். (ஆதலால், ஒவ்வொருவரின் தகுதிக்குத் தக்கவாறு கொடுக்கிறான்.) (அல்குர்ஆன் 17:30, 13:26)

வசனத்தின் கருத்து : நாடியவருக்கு வாழ்வாதாரத்தை அல்லாஹ் விசாலமாக கொடுப்பான்.நாடியவருக்கு அல்லாஹ் சுருக்கி கொடுப்பான். இந்த தக்தீரின் மீது நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.

என்னுடைய ஆயுள் காலம் முடிவு செய்யப்பட்டது. என்னுடைய வாழ்வாதாரம் முடிவு செய்யப்பட்டது. நான் ஏழையா? செல்வந்தனா? எல்லாம் முடிவு செய்யப்பட்டு விட்டது. அந்த முடிவை நோக்கி நாம் நகர்ந்து கொண்டிருக்கிறோம்.

ஆகவே எது நடக்குமோ அல்லாஹ்வின் நாட்டப்படி நடந்தது என்று விதியின் மீது நம்பிக்கை இருக்கும் பொழுது அடியான் ஒரு பொழுதும் பலவீனப்பட மாட்டான்.

அழகிய ஒரு சம்பவத்தை பாருங்கள். உம்மு ஹபீபா ரழியல்லாஹு அன்ஹா,ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவி.

அவர்களுடைய வீட்டில் நபி இருக்கும் பொழுது ஒரு துஆச் செய்தார்கள். யாஅல்லாஹ்! என்னுடைய கணவர் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு, அதேபோன்று என்னுடைய தந்தை அபூ சுஃப்யான் அவர்களுக்கு, என்னுடைய சகோதரர் முஆவியாவிற்கு நீ நீண்ட வாழ்க்கையை கொடு. அவர்களுக்கு நீ நீண்ட வாழ்க்கையை கொடுத்து எனக்கு நீ நன்மை செய்வாயாக! என்று.

இந்த வார்த்தையை கேட்டவுடன் பொதுவாக துஆ கேட்டால் ஆமீன் சொல்ல வேண்டும். இந்த துஆவை தனது மனைவி உம்மு ஹபீபா கேட்ட உடன் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதற்கு ஆமின் சொல்லவில்லை. என்ன சொன்னார்கள்?

فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ سَأَلْتِ اللَّهَ لِآجَالٍ مَضْرُوبَةٍ وَأَيَّامٍ مَعْدُودَةٍ وَأَرْزَاقٍ مَقْسُومَةٍ لَنْ يُعَجِّلَ شَيْئًا قَبْلَ حِلِّهِ أَوْ يُؤَخِّرَ شَيْئًا عَنْ حِلِّهِ وَلَوْ كُنْتِ سَأَلْتِ اللَّهَ أَنْ يُعِيذَكِ مِنْ عَذَابٍ فِي النَّارِ أَوْ عَذَابٍ فِي الْقَبْرِ كَانَ خَيْرًا وَأَفْضَلَ

உம்மு ஹபீபா! நீங்கள் அல்லாஹ்விடம் முடிவு செய்யப்பட்டு விட்ட ஒரு தவணையை கேட்டுள்ளீர்கள். எண்ணப்பட்டுள்ள நாட்களைப் பற்றி கேட்டுள்ளீர்கள். பங்கு வைக்கப்பட்ட முடிவு செய்யப்பட்ட வாழ்வாதாரத்தை பற்றி கேட்டு உள்ளீர்கள். அதனுடைய தவனை எதையும் அதற்குரிய நேரம் வரும் வரை அல்லாஹ் கொடுத்துவிட மாட்டான். தவணை வந்து விட்டதற்கு பிறகு அல்லாஹ் அதை தாமதப் படுத்த மாட்டான்.

உம்மு ஹபீபா! நீ அல்லாஹ்விடத்தில் இப்படி கேட்டிருக்கலாமே! கப்ருடைய அதாபில் இருந்து உன்னை பாதுகாப்பதற்கு. நரகத்திலிருந்து பாதுகாப்பதற்கு நீ துஆ கேட்டிருக்கலாமே. அது உனக்கு சிறந்தது. அது உனக்கு நன்மையானது. (3)

அறிவிப்பாளர் : உம்மு ஹபீபாரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்லிம்,எண் : 4814.

யாருக்காகவது துஆ செய்ய வேண்டுமென்றால் இந்த துஆவை செய்ய வேண்டும்.அல்லாஹ் உங்களுக்கு சொர்க்கத்தை தரட்டும்.

கப்ருடைய அதாபிலிருந்து பாதுகாக்கப்படும் இந்த துஆவை நீ கேட்டு இருக்கலாம். ஆனால் நீ எதைக் குறித்து கேட்டாயோ? அதுவெல்லாம் முன்பே முடிவு செய்யப்பட்டு விட்டது ஆயிற்றே.

இன்று நாம் பெரும்பாலும் நமக்கு நாம் பெற்றோர்கள் செய்யக் கூடியதாக இருந்தாலும் சரி, எனக்கு வேண்டப்பட்டவர்கள் செய்வதாக இருந்தாலும் சரி, எப்படி பழகி விட்டோம் என்றால்وஒருவர் நமக்கு துஆ கேட்பதாக இருந்தால் அல்லாஹ் உங்களுக்கு வாழ்க்கையை நீடித்துக் கொடுக்க வேண்டும் என்று தான்.

அல்லாஹ் முடிவு செய்து விட்டான்.

وَلِكُلِّ أُمَّةٍ أَجَلٌ فَإِذَا جَاءَ أَجَلُهُمْ لَا يَسْتَأْخِرُونَ سَاعَةً وَلَا يَسْتَقْدِمُونَ

ஒவ்வொரு வகுப்பாருக்கும் (அவர்கள் வாழவும், அழியவும்) ஒரு காலமுண்டு. அவர்களுடைய தவனைக் காலம் வரும் போது ஒரு வினாடி பிந்தவும் மாட்டார்கள்; முந்தவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 7:34, 10:49)

மேலும் அல்லாஹ் கூறுகிறான் :

وَمَا كَانَ لِنَفْسٍ أَنْ تَمُوتَ إِلَّا بِإِذْنِ اللَّهِ

எந்த ஒரு ஆன்மாவும் மரணிக்காது. அதற்கு முடிவு செய்யப்பட்டுள்ள நேரத்தை தவிர. (அல்குர்ஆன் 3:145)

வசனத்தின் கருத்து : எந்த ஒரு ஆத்மாவுக்கும் அனுமதி இல்லை. முடியாது. அவன் தற்கொலை செய்தாலும் சரி, கொல்லப்பட்டாலும் சரி, விபத்தில் இறந்தாலும் சரி, தானாக இறந்தாலும் சரி, மருத்துவமனையில் இறந்தாலும் சரி,நோயில் இறந்தாலும் சரி, சுகமான நிலையில் இறந்தாலும் சரி, எந்த நிலையில் இறந்தாலும் சரி, ஒவ்வொரு ஆன்மாவும் அதற்குரிய தவணையில் தான் இறக்கிறது.

இந்த யகீன் நமக்கு வரவேண்டும். இந்த நம்பிக்கை நமக்கு உறுதியாக வேண்டும்.

உபை இப்னு கஅப் ரழியல்லாஹு அன்ஹுஅவர்களிடத்தில் இப்னு ஜைனபி வருகின்றார். அதாவது விதியை குறித்து எனக்கு உள்ளத்தில் ஒரு விதமான சந்தேகமும் ஒருவிதமான தயக்கமும் வருகின்றது. நீங்கள் எனக்கு உபதேசம் செய்யுங்கள் என்று சொல்கிறார்.

உபை இப்னு கஅப் சொன்னார்கள் : புரிந்துகொள்! வானத்தில் உள்ளவர்களை பூமியில் உள்ளவர்களை அல்லாஹ் வேதனை செய்தாலும் அவன் வேதனை செய்வது நியாயம் தான், அநியாயம் அல்ல. அல்லாஹ் அவர்களுக்கு கருணை காட்டினால் அந்த கருணை அவர்கள் செய்த நன்மையை காட்டிலும் மிகப் பெரியது.

நீ உஹது மலை அளவிற்கு தங்கத்தை தர்மம் செய்து நன்மை செய்தாலும் நீ விதியை நம்பாத வரை உன்னுடைய ஈமான் ஏற்றுக் கொள்ளப்படாது.

நீ நம்பிக்கை கொள்ள வேண்டும்; எது உனக்கு கிடைக்க இருக்குமோ அது உனக்கு தவறாது. எது உனக்கு கிடைக்க வில்லையோ, எது உனக்கு தவற விடும் என்று நினைக்கிறாயோ அது உனக்கு கிடைக்காது. இதை நீ நம்பிக்கை கொள்ளாத வரை நீ முஃமின் அல்ல. இந்த நம்பிக்கை இல்லாமல் நீ மரணித்து விட்டால் நீ நரகத்தில் தான் நுழைவாய்.

பிறகு இப்னு ஜைனபி சொல்கின்றார்; நான் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹுஇடத்தில் வந்தேன். அவரிடத்தில் சொன்னேன்; எனக்கு உபதேசம் செய்யுங்கள். விதியை குறித்து எனக்கு சந்தேகம் அந்த சந்தேகத்தை அல்லாஹ் உங்கள் மூலமாக போக்குவான் என்று.

உபை இப்னு கஅப் என்ன உபதேசம் செய்தார்களோ அதே உபதேசத்தை அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹுசெய்தார்கள்.

பிறகு அவரிடத்தில் கேட்டுவிட்டு ஹுதைபா இப்னுல் யமான் இடத்தில் வந்தேன். அவரும் எனக்கு அதை உபதேசத்தை செய்தார். எதை உபை இப்னு கஅப் அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் செய்தார்களோ அதே உபதேசத்தை அவரும் செய்தார். பிறகு நான் ஜைத் இப்னு சாபித் அவர்களிடத்தில் வந்தேன். அவரிடத்தில் சொன்னேன் அவரும் எனக்கு அதே உபதேசத்தை கூறி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்தில் இருந்து ஹதீஸையும் எனக்கு அறிவித்தார். (4)

அறிவிப்பாளர் : உபை இப்னு கஅப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத் எண்: 4077, முஸ்னத் அஹ்மத் எண் : 20607)

ஆகவே அல்லாஹ்வின் அடியார்களே! சோதனைகள் கண்டிப்பாக வரும். அந்த சோதனைகளை நாம் தாங்கிக் கொள்வதற்கு, எதிர்கொள்வதற்கு, அந்த சோதனைகளில் உறுதியாக இருந்து அல்லாஹ்வுடைய பொருத்தத்தை பெறுவதற்கு, ஈமானை அதிகரித்துக் கொள்வதற்கு‍,அந்த சோதனையை நமது சொர்க்கத்திற்கு உண்டான காரணமாக ஆக்கிக் கொள்வதற்கு,

எப்படி தொழுகை சொர்க்கத்திற்குரிய காரணம், நோன்பு சொர்க்கத்திற்குரிய காரணம், ஹஜ் சொர்க்கத்திற்குரிய காரணம். அதுபோன்று அந்த சோதனையை சொர்க்கத்திற்குரிய காரணமாக ஆக்குவதற்கு நமக்குத் தேவை என்ன? அந்த சோதனையை நமக்கு வருவதற்கு முன்பே அந்த சோதனையை பற்றிய யகீன் நமக்கு இருக்க வேண்டும்.

நம்முடைய நப்ஸை தயார் படுத்தி இருக்க வேண்டும். விதியின் மீது நம்பிக்கை உறுதிப் படுத்தி இருக்க வேண்டும். அதன் மூலமாக அந்த சோதனையின் மூலமாக சொர்க்கத்திற்கான காரணமாக ஆக்கிவிடலாம். இன்னும் பல விஷயங்கள் இருக்கின்றன. அடுத்த ஜும்ஆக்களில் பார்ப்போம்.

அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா இடத்தில் எப்பொழுதும் துஆ செய்து கொண்டே இருக்க வேண்டும். யா அல்லாஹ்! என்னுடைய காரியத்தை எனக்கு லேசாக்கி கொடு.

மூஸா நபி கேட்டார்கள் ;

قَالَ رَبِّ اشْرَحْ لِي صَدْرِي (25) وَيَسِّرْ لِي أَمْرِي (26) وَاحْلُلْ عُقْدَةً مِنْ لِسَانِي (27) يَفْقَهُوا قَوْلِي

அவர் கூறினார் ‘‘என் இறைவனே! என் உள்ளத்தை(த் திடப்படுத்தி) விரிவாக்கு; (நான் செய்ய வேண்டிய) என் காரியங்களை எனக்குச் சுலபமாக்கி வை. என் நாவிலுள்ள (கொண்ணல்) முடிச்சை அவிழ்த்துவிடு; என் வார்த்தையை (மக்கள்) விளங்கிக் கொள்வார்கள். (அல்குர்ஆன் 20:25-28)

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கேட்டார்கள்.

யாஅல்லாஹ்! என் காரியங்கள் அனைத்தையும் நீ சீராக்கி கொடு என்று. (5)

அறிவிப்பாளர் : அபூ பக்ரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : அபூதாவூத் எண் : 4426, முஸ்னத் அஹ்மத் எண் :19535)

இந்த துஆக்களை கொண்டும், பொறுமையைக் கொண்டும் இந்த சோதனைகளை அழகிய முறையில் கடந்து செல்லலாம். அந்தச் சோதனைகளில் அல்லாஹ் விரும்புகின்ற வெற்றியாளர்களாக நாம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அல்லாஹ் நமக்கு வழிகாட்டி கொடுப்பான். அல்லாஹ் நமக்கு உதவி செய்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ وَأَبُو سَعِيدٍ وَعَفَّانُ قَالُوا حَدَّثَنَا ثَابِتٌ حَدَّثَنَا هِلَالٌ عَنْ عِكْرِمَةَ عَنِ ابْنِ عَبَّاسٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهِ عُمَرُ وَهُوَ عَلَى حَصِيرٍ قَدْ أَثَّرَ فِي جَنْبِهِ فَقَالَ يَا نَبِيَّ اللَّهِ لَوْ اتَّخَذْتَ فِرَاشًا أَوْثَرَ مِنْ هَذَا فَقَالَ مَا لِي وَلِلدُّنْيَا مَا مَثَلِي وَمَثَلُ الدُّنْيَا إِلَّا كَرَاكِبٍ سَارَ فِي يَوْمٍ صَائِفٍ فَاسْتَظَلَّ تَحْتَ شَجَرَةٍ سَاعَةً مِنْ نَهَارٍ ثُمَّ رَاحَ وَتَرَكَهَا (مسند أحمد 2608 -)

குறிப்பு 2)

إنَّ رُوحَ القُدُسِ نفثَ في رُوعِي ، أنَّ نفسًا لَن تموتَ حتَّى تستكمِلَ أجلَها ، وتستوعِبَ رزقَها ، فاتَّقوا اللهَ ، وأجمِلُوا في الطَّلَبِ ، ولا يَحمِلَنَّ أحدَكم استبطاءُ الرِّزقِ أن يطلُبَه بمَعصيةِ اللهِ ، فإنَّ اللهَ تعالى لا يُنالُ ما عندَه إلَّا بِطاعَتِهِ الراوي : أبو أمامة الباهلي | المحدث : الألباني | المصدر : صحيح الجامع الصفحة أو الرقم: 2085 | خلاصة حكم المحدث : صحيح

குறிப்பு 3)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ وَاللَّفْظُ لِأَبِي بَكْرٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ مِسْعَرٍ عَنْ عَلْقَمَةَ بْنِ مَرْثَدٍ عَنْ الْمُغِيرَةِ بْنِ عَبْدِ اللَّهِ الْيَشْكُرِيِّ عَنْ الْمَعْرُورِ بْنِ سُوَيْدٍ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَتْ أُمُّ حَبِيبَةَ زَوْجُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَاللَّهُمَّ أَمْتِعْنِي بِزَوْجِي رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَبِأَبِي أَبِي سُفْيَانَ وَبِأَخِي مُعَاوِيَةَ قَالَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ سَأَلْتِ اللَّهَ لِآجَالٍ مَضْرُوبَةٍ وَأَيَّامٍ مَعْدُودَةٍ وَأَرْزَاقٍ مَقْسُومَةٍ لَنْ يُعَجِّلَ شَيْئًا قَبْلَ حِلِّهِ أَوْ يُؤَخِّرَ شَيْئًا عَنْ حِلِّهِ وَلَوْ كُنْتِ سَأَلْتِ اللَّهَ أَنْ يُعِيذَكِ مِنْ عَذَابٍ فِي النَّارِ أَوْ عَذَابٍ فِي الْقَبْرِ كَانَ خَيْرًا وَأَفْضَلَ (صحيح مسلم 4814 -)

குறிப்பு 4)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ أَبِي سِنَانٍ عَنْ وَهْبِ بْنِ خَالِدٍ الْحِمْصِيِّ عَنْ ابْنِ الدَّيْلَمِيِّ قَالَ أَتَيْتُ أُبَيَّ بْنَ كَعْبٍ فَقُلْتُ لَهُ وَقَعَ فِي نَفْسِي شَيْءٌ مِنْ الْقَدَرِ فَحَدِّثْنِي بِشَيْءٍ لَعَلَّ اللَّهَ أَنْ يُذْهِبَهُ مِنْ قَلْبِي قَالَ لَوْ أَنَّ اللَّهَ عَذَّبَ أَهْلَ سَمَاوَاتِهِ وَأَهْلَ أَرْضِهِ عَذَّبَهُمْ وَهُوَ غَيْرُ ظَالِمٍ لَهُمْ وَلَوْ رَحِمَهُمْ كَانَتْ رَحْمَتُهُ خَيْرًا لَهُمْ مِنْ أَعْمَالِهِمْ وَلَوْ أَنْفَقْتَ مِثْلَ أُحُدٍ ذَهَبًا فِي سَبِيلِ اللَّهِ مَا قَبِلَهُ اللَّهُ مِنْكَ حَتَّى تُؤْمِنَ بِالْقَدَرِ وَتَعْلَمَ أَنَّ مَا أَصَابَكَ لَمْ يَكُنْ لِيُخْطِئَكَ وَأَنَّ مَا أَخْطَأَكَ لَمْ يَكُنْ لِيُصِيبَكَ وَلَوْ مُتَّ عَلَى غَيْرِ هَذَا لَدَخَلْتَ النَّارَ قَالَ ثُمَّ أَتَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ مَسْعُودٍ فَقَالَ مِثْلَ ذَلِكَ قَالَ ثُمَّ أَتَيْتُ حُذَيْفَةَ بْنَ الْيَمَانِ فَقَالَ مِثْلَ ذَلِكَ قَالَ ثُمَّ أَتَيْتُ زَيْدَ بْنَ ثَابِتٍ فَحَدَّثَنِي عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ ذَلِكَ (سنن أبي داود 4077 -)

குறிப்பு 5)

حَدَّثَنَا الْعَبَّاسُ بْنُ عَبْدِ الْعَظِيمِ وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى قَالَا حَدَّثَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ عَمْرٍو عَنْ عَبْدِ الْجَلِيلِ بْنِ عَطِيَّةَ عَنْ جَعْفَرِ بْنِ مَيْمُونٍ قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ أَنَّهُ قَالَ لِأَبِيهِ يَا أَبَتِ إِنِّي أَسْمَعُكَ تَدْعُو كُلَّ غَدَاةٍ اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ تُعِيدُهَا ثَلَاثًا حِينَ تُصْبِحُ وَثَلَاثًا حِينَ تُمْسِي فَقَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِهِنَّ فَأَنَا أُحِبُّ أَنْ أَسْتَنَّ بِسُنَّتِهِ قَالَ عَبَّاسٌ فِيهِ وَتَقُولُ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْكُفْرِ وَالْفَقْرِ اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ عَذَابِ الْقَبْرِ لَا إِلَهَ إِلَّا أَنْتَ تُعِيدُهَا ثَلَاثًا حِينَ تُصْبِحُ وَثَلَاثًا حِينَ تُمْسِي فَتَدْعُو بِهِنَّ فَأُحِبُّ أَنْ أَسْتَنَّ بِسُنَّتِهِ قَالَ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَعَوَاتُ الْمَكْرُوبِ اللَّهُمَّ رَحْمَتَكَ أَرْجُو فَلَا تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ وَأَصْلِحْ لِي شَأْنِي كُلَّهُ لَا إِلَهَ إِلَّا أَنْتَ (سنن أبي داود 4426 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/