HOME      Khutba      அநியாயத்தை அஞ்சுங்கள்!! | Tamil Bayan - 620   
 

அநியாயத்தை அஞ்சுங்கள்!! | Tamil Bayan - 620

           

அநியாயத்தை அஞ்சுங்கள்!! | Tamil Bayan - 620


அநியாயத்தை அஞ்சுங்கள்!

ஜுமுஆ குத்பா தலைப்பு : அநியாயத்தை அஞ்சுங்கள்!

வரிசை : 620

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 06-03-2020 | 11-07-1441

அல்லாஹு சுப்ஹானஹுதஆலாகூறுகின்றான்:

وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ

எவர்கள் அல்லாஹ்வை முற்றிலும் நம்புகிறார்களோ, அவர்களுக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன். (அல்குர்ஆன் 65 : 3)

وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا

வசனத்தின் கருத்து : யார் அல்லாஹ்வை பயந்து கொள்கிறார்களோ,யார் தக்வா உடைய வாழ்க்கையை வாழ்கிறார்களோ,அல்லாஹ் ஹலாலாக்கியதைக் கொண்டு தங்களுடைய வாழ்க்கையை பூர்த்தி செய்துகொண்டு அல்லாஹ் ஹராமாக்கிய சொல் செயல் குணங்கள் இச்சைகள் அனைத்திலிருந்தும் தங்களைப் பாதுகாத்துக் கொண்டு அல்லாஹ்வின் கட்டளைக்கு ஏற்ப யார் தங்களது வாழ்க்கையை மாற்றிக் கொள்கிறார்களோ ரப்புல் ஆலமீன் கண்டிப்பாக அவர்களுக்கு மஹ்ரஜை ஏற்படுத்துவான். (அல்குர்ஆன் 65 : 2)

மஹ்ரஜ் என்றால் வெளியேறக் கூடிய ஒரு இடம் வழி. அவர்களுக்கு எத்தகைய சோதனைகள் வந்தாலும் பிரச்சினைகள் வந்தாலும் குழப்பங்கள் வந்தாலும் ஆபத்துகள் வந்தாலும் இன்னும் அவர்களுடைய தீனிலோ துன்யாவிலோ அவர்களுக்கு சோதனையாக இருக்கின்ற எந்த ஒரு பெரிய சிறிய நிகழ்வுகள் ஏற்பட்டாலும் கண்டிப்பாக அல்லாஹுத்தஆலா அதிலிருந்து அவர்கள் பாதுகாப்பாக வெளியேறுவதற்கு உரிய வழியை ஏற்படுத்தி தருவான்.

அல்லாஹ்வுடைய வாக்கு உண்மையானது.

وَمَنْ أَصْدَقُ مِنَ اللَّهِ حَدِيثًا

அல்லாஹ்வை விட உண்மை பேசக்கூடியவர்கள் யார் இருக்க முடியும். (அல்குர்ஆன் 4 : 87)

இந்த அல்லாஹ்வினுடைய வாக்கின் மீது நமக்கு நம்பிக்கை இருக்க வேண்டும். அல்லாஹ்வுடைய தக்வா நம்மிடத்தில் இருக்குமேயானால் அந்த தக்வாவை கொண்டு வருவதற்காக நாம் நம்மை சுயபரிசோதனை செய்தால் நாம் செய்த பாவங்களுக்காக அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேட்டு அல்லாஹ்வின் பக்கம் திரும்பினால் கண்டிப்பாக சோதனையில் அல்லாஹுத்தஆலா நமக்கு உதவி செய்வான்.

ரப்புல் ஆலமீன் தொடர்ந்து கூறுகின்றான் :

அல்லாஹ்வை யார் சார்ந்து விடுகின்றார்களோ, தங்களுடைய காரியங்களை யார் அல்லாஹ்விடத்தில் ஒப்படைத்து விடுகிறார்களோ அவர்களுக்கு அல்லாஹ்வே போதுமானவன். (அல்குர்ஆன் 65 :2)

ஒன்று காரண காரியங்கள் நம்முடைய சக்திக்கு உட்பட்டவையாக இருந்து அல்லாஹுத்தஆலா அதற்குரிய வாய்ப்பை வசதியை நமக்கு ஏற்படுத்திக் கொடுத்திருந்தால் அந்த காரண காரியங்களை கையாண்டு கொண்டு அல்லாஹ்வின் மீது நாம் நம்பிக்கை வைப்பது.

இதைத்தான் ஒட்டகத்தைக் கட்டிப் போட்டுவிட்டு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பது என்று சொல்வார்கள்.

வீட்டை பூட்டி விட்டு அல்லாஹ்வின் மீது நம்பிக்கை வைப்பது என்று சொல்வார்கள்.

ஒரு முஃமினுக்கு சில நேரங்களில் அவனிடத்தில் எந்த காரணமும் கையாளுவதற்கு இருக்காது. அவன் தன்னை பாதுகாத்துக் கொள்வதற்கு தன்னுடைய உயிரை உடமையை பொருளை தனது குடும்பத்தை பாதுகாத்துக் கொள்வதற்கு அவனிடத்தில் எந்த ஆற்றலும் இருக்காது.

அப்போது அவனுக்கு முன்னால் அல்லாஹ் ஒருவன் தான் இருக்கின்றான்.

இப்போது நமக்கு வரக்கூடிய நம்பிக்கை,என்னுடைய ரப்பு என்னை கைவிடமாட்டான், எந்த சபபுகள் இல்லாமலும் அல்லாஹுத்தஆலா பாதுகாக்க போதுமானவன், நாம் அழிவாக பார்க்கக்கூடிய சபபை ரப்புல் ஆலமீன் பாதுகாப்பாகவும் மாற்றலாம் இப்ராஹீம் அலைஹிவசல்லம் அவர்களுக்கு அல்லாஹ் மாற்றியதை போன்று.

எந்த நெருப்பைக் கொண்டு இப்ராஹீம் அலைஹிவஸல்லம் அவர்களை அழிப்பதற்காக எரிப்பதற்காக அவர்கள் திட்டம் தீட்டினார்களோ அந்த நெருப்பைக் கொண்டே அல்லாஹுத்தஆலா அவர்களைப் பாதுகாத்தான்.

قُلْنَا يَا نَارُ كُونِي بَرْدًا وَسَلَامًا عَلَى إِبْرَاهِيمَ

(அவ்வாறே அவர்கள் இப்றாஹீமை நெருப்புக் கிடங்கில் எறியவே நெருப்பை நோக்கி) ‘‘நெருப்பே! நீ இப்றாஹீமுக்கு சுகம் தரும் விதத்தில் குளிர்ந்து விடு!'' என்று நாம் கூறினோம். (அல்குர்ஆன் 21: 69)

فَأَرَادُوا بِهِ كَيْدًا فَجَعَلْنَاهُمُ الْأَسْفَلِينَ

இப்ராஹீமிற்க்கு அவர்கள் ஒரு பெரும் சூழ்ச்சி செய்ய நாடினார்கள் கடைசியில் அவர்களே கேவலப்பட்டவர்களாக ஆகிவிட்டார்கள். யார் சூழ்ச்சி செய்ய நாடினார்களோ சதி செய்ய நாடினார்களோ அவர்களை மிகக் கேவலமாக நாம் ஆக்கி விட்டோம் என்று அல்லாஹ் கூறுகிறான். (அல்குர்ஆன் 37 : 98)

ரப்புல் ஆலமீன் பலவீனமானவன் அல்ல. அவன் அநீதி இழைக்கப்பட்ட பாவப்பட்ட மக்கள் கையேந்தும் போது அவர்களின் துஆவை ஒருபோதும் வெறுமன திருப்பி விட மாட்டான்.

ரப்புல் ஆலமீன் கூறுவதாக ஹதீஸ் குதுஸியில் பார்க்கின்றோம்.

அநீதி இழைக்கப்பட்டவனைப் பார்த்து சொல்கின்றான்:

لَأَنْصُرَنَّكِ وَلَوْ بَعْدَ حِينٍ

சத்தியமாக நான் உனக்கு உதவி செய்வேன், சிலகாலம் கழித்தாவது.

அல்லாஹ்வின் தூதர் முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மூன்று நபர்களின் துஆக்கள் வீணாகாது, அல்லாஹ்விற்கு முன்னால் அந்த துஆக்களுக்கு திரை இருக்காது தடுப்பு இருக்காது என்று சொன்னார்கள்.

அதில் ஒருவருடைய துஆ அநீதி இழைக்கப்பட்டவனின் துஆ. அவன் காஃபிராக இருந்தாலும் கூட அவனுடைய துஆ அல்லாஹ்விடத்தில் ஏற்றுக் கொள்ளப்படும்.(1)

அறிவிப்பாளர் : அபூஹுரைராரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி,எண் : 3598, நூல் : இப்னு மாஜா, எண் : 1742.

சஹாபாக்களை விட நபிமார்களுக்கு பிறகு இந்த உம்மத்தில் உயர்ந்தவர்கள் அந்தஸ்து பெற்றவர்கள் யார் இருக்க முடியும்?

தங்களுடைய ஒவ்வொரு தோழருக்கும் அவர்களை அதிகாரியாக ஆளுநராக ஜகாத்தை சதக்காவை வசூல் செய்கின்றவர்களாக ஒரு பொறுப்பாளராக நியமித்து அல்லாஹ்வின் தூதர் அனுப்பும்போது அவருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் சொன்ன அறிவுரைகளில் ஒன்று,

وَاتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَ اللَّهِ حِجَابٌ

அநீதி இழைக்கப்பட்டவன் உடைய அந்த துவாவை, உனக்கு எதிராக அவன் கையேந்துகின்ற அந்தக் கையேந்துதலை நீ பயந்து கொள்! அல்லாஹ்விற்கும் அதற்கும் இடையில் எந்த திரையும் இல்லை.(2)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரிஎண் : 2448.

இதை, தனக்கு நெருக்கமான அல்லாஹ்விற்கு நெருக்கமான உலகிலேயே ஈமானில் உயர்ந்திருந்த அந்த கூட்டத்திற்கு அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள். இதைத்தான் நம்முடைய மார்க்கம் நமக்கு கற்றுத் தந்திருக்கிறது.

அநீதி இழைக்கப்பட்டு இருக்கின்ற நிலையில் அந்த அநீதியில் இருந்து பாதுகாத்து கொள்வதற்கான எந்த ஒரு சூழ்நிலையும் இல்லாதபோது எங்கே செல்வது? யாருடைய வாசலை தட்டுவது? அல்லாஹ்வுடைய வாசலை தவிர.

யாரிடத்தில் முறையிடுவது? அல்லாஹ்விடத்தில் முறையிடுவதைத் தவிர, நம்முடைய அழுகைகள் கேட்கக் கூடியவன் யார்? அல்லாஹ்வைத் தவிர நம்முடைய உள்ளக் குமுறல்களை கேட்கக் கூடியவன் யார்? அல்லாஹ்வைத் தவிர,

பாதிக்கப்பட்ட அந்தப் பெண்கள், சிறுவர்கள், படுகொலை செய்யப்பட்ட அந்தக் குடும்பத்தார்கள் அவர்களில் எத்தனை பேருடைய அழுகையை நாம் கேட்டிருக்கின்றோம்! அவர்களில் எத்தனை பேருடைய நிகழ்வுகளை அவர்களுக்கு நடந்த கொடூரங்களை நாம் அறிந்திருக்கின்றோம்! நாம் அறியாதது இன்னும் அதிகம்.

உலகத்தில் நாம் அறியாதது இன்னும் அதிகம். அல்லாஹ் அதை அறிந்து இருக்கின்றான். அல்லாஹ்வுடைய வானவர்கள் அதைப் பதிவு செய்து கொண்டிருக்கின்றார்கள்.

ரப்புல் ஆலமீன் அதைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றான் :

وَلَا تَحْسَبَنَّ اللَّهَ غَافِلًا عَمَّا يَعْمَلُ الظَّالِمُونَ إِنَّمَا يُؤَخِّرُهُمْ لِيَوْمٍ تَشْخَصُ فِيهِ الْأَبْصَارُ

(நபியே!) இவ்வக்கிரமக்காரர்களின் செயலைப் பற்றி அல்லாஹ் பராமுகமாய் இருக்கிறான் என நீர் எண்ண வேண்டாம். அவர்களை (வேதனையைக் கொண்டு உடனுக்குடன் பிடிக்காது) தாமதப்படுத்தி வருவதெல்லாம், திறந்த கண் திறந்தவாறே இருந்து விடக்கூடிய (கொடிய தொரு மறுமை) நாள் வரும் வரைதான்! (அல்குர்ஆன் 14 :42)

யாசீர் ரழியல்லாஹு அன்ஹுகொல்லப்படுகின்றார்கள்;சுமையா கொல்லப்படுகின்றார்கள்;ரசூலுல்லாஹ் உடைய கண்ணுக்கு நேராக பிலால் கடும் துன்பத்திற்கு ஆளாகிறார்கள்.

இப்படியாக பலவீனப்பட்ட தோழர்களின் எண்ணிக்கை வரிசை அப்படியே சென்று கொண்டே இருக்கின்றது.

அல்லாஹ்வுடைய தூதருக்கு எப்படி இருக்கும் நினைத்து பாருங்கள்!

தனக்கு முன்னால் தன்னை ஈமான் கொண்ட,அல்லாஹ் ஒருவன் என்று கூறிய அந்த மக்கள் இப்படி துன்புறுத்தப்பட்டு கொண்டிருக்கின்றார்களே!அவர்களுக்கு இத்தகைய கொடுமைகள் நிகழ்கின்றனவே!

ஒரு பெண்ணை அதுவும் வயது முதிர்ந்த பெண்ணை எந்தக் குற்றமும் அவள் செய்யவில்லை,அல்லாஹ் என் ரப்பு என்று கூறியதைத் தவிர.அதற்காக அவர்களுடைய பிறப்பு உறுப்பில் அபூஜஹல் ஈட்டியால் குத்திக் கொலை செய்கின்றான் என்றால் துடிக்கத் துடிக்க ௭த்தகைய கொடூரம் இருந்திருக்கும் யோசித்துப் பாருங்கள்!

நூல் : அர்ரஹீக் அல்மக்தூம்

அந்த நேரத்தில் அல்லாஹு சுப்ஹானஹு தஆலாநம்முடைய நபிக்கு இந்த வசனத்தை  இறக்கினான். (அல்குர்ஆன் 14 :42)

இந்த அநியாயக்காரர்கள் தங்களுடைய ஆட்சியினால், தங்களுடைய அதிகார பலத்தால், தங்களுடைய பெரும்பான்மையின் பலத்தால் சட்டத்தையும் காவலையும் தங்கள் கைக்குள் வைத்து இருக்கின்ற இருமாப்பினால் உலகத்தின் பிடியில் இருந்து தப்பித்து விடலாம். ரப்பிடம் இவர்கள் எப்படி தப்புவார்கள்? அல்லாஹ்வுடைய மறுமையின் பிடியிலிருந்து இவர்கள் எப்படி தப்புவார்கள்?

يَوْمَ يُدَعُّونَ إِلَى نَارِ جَهَنَّمَ دَعًّا

மலக்குகள் இந்த அநியாயக்காரர்களை நரகத்தை நோக்கி அடித்து விரட்டுவார்கள். (அல்குர்ஆன் 52:13)

 

அப்போது இவர்களை பாதுகாப்பதற்கு யார் இருப்பார்கள்?

அல்குர்ஆன் உடைய பக்கங்களைத் திறந்து பாருங்கள்!

وَمَا لِلظَّالِمِينَ مِنْ أَنْصَارٍ

அநியாயம் செய்யக் கூடிய அக்கிரமக்காரர்களுக்கு மறுமையில் உதவி செய்யக் கூடியவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 2 :270 ,3 :192, 5 : 72)

ஒருபக்கம் இவர்களுடைய நிராகரிப்பு, இணைவைப்பு அத்தோடு சேர்ந்து அடியார்களுக்கு அவர்கள் செய்யக்கூடிய அநியாயங்களுக்கு நாளை மறுமையில் இவர்களுடைய இணைவைத்தலோடு சேர்த்து பன்மடங்கு வேதனைகளை அல்லாஹுத்தஆலா அவர்களுக்கு கொடுப்பான்.

ஒரு சாதாரண காஃபிருக்கு ஒரு முஷ்ரிக்கு கொடுக்கப்படுகின்ற நரக தண்டனையை விட மிகப் பயங்கரமான தண்டனை அநியாயக்காரர்களுக்கு உண்டு.

ரப்புல் ஆலமீன் கூறுகிறான் :

وَقَدْ خَابَ مَنْ حَمَلَ ظُلْمًا

எவன் அநியாயத்தைச் சுமந்து கொண்டானோ அவன் நஷ்டம் அடைந்தே தீருவான். (அல்குர்ஆன் 20 : 111)

அல்லாஹு சுப்ஹானஹு தஆலாஒருபோதும் அநியாயக்காரர்களின் செயல்களை பார்க்காமல் இருக்கின்றான் அல்லது அவர்களுக்கு அல்லாஹுத்தஆலா அவனது தண்டனையை இறக்க மாட்டான் என்று எண்ணிவிட வேண்டாம்.அவனிடத்தில் ஒரு அவகாசம் இருக்கும்,ஒரு கால தவணை இருக்கும்.

அல்லாஹ்விற்கு பிடிக்காத ஒன்று,அல்லாஹ்வை கோபப்படுத்த கூடிய மிகப்பெரிய செயல்களில் ஒன்றுதான்,ஒரு அரசன் ஒரு அதிகாரி ஆட்சி செலுத்துபவன் தன்னுடைய மக்களுக்கு அநீதி இழைப்பது;அவர்களை தண்டிப்பது;அவர்களுக்கு வேதனைகளை கொடுப்பது;அவர்களை இம்சிப்பது.

ஹதீஸ் குத்ஸியில் அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் கூறுகின்றார்கள்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَا عِبَادِي إِنِّي حَرَّمْتُ الظُّلْمَ عَلَى نَفْسِي وَجَعَلْتُهُ بَيْنَكُمْ مُحَرَّمًا فَلَا تَظَالَمُوا

என் அடியார்களே!அநீதி செய்வதை நான் எனக்கு தடுத்து கொண்டேன்;எனக்கு நானே ஹராமாக்கி கொண்டேன்.அதை உங்களுக்கும் தடுத்து விட்டேன். எனவே நீங்கள் அநீதம் செய்யாதீர்கள்.

அறிவிப்பாளர் : அபூதர்ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம்,எண் : 2577.

அல்லாஹ் அக்பர்! அல்லாஹ் எதை செய்தாலும் அது அநியாயமாக ஆகாது. படைப்புகள் அவனுடைய படைப்பு. அவனுக்கு மேல் யாருமில்லை. அவனே எல்லோருக்கும் மேல். அவனுடைய செயலை ஏன் என்று யாரும் கேட்க முடியாது.

அவன் எதைச்செய்தாலும் தான் படைத்ததில் தனது உரிமைக்கு உட்பட்டதில் அவன் செய்கின்றான்.

அல்லாஹுத்தஆலா அடியார்களுக்கு அநியாயத்தை விரும்பமாட்டான். இறை நிராகரிப்பு செய்தாலும்கூட, ஷிர்க் செய்தாலும்கூட, அல்லாஹ்விற்கு குழந்தை இருக்கின்றது என்று கூறினாலும் கூட, அதற்குரிய தண்டனையை மறுமையில் அல்லாஹ் வைத்திருக்கின்றானே தவிர இந்த உலகத்தில் ரப்புல் ஆலமீன் என்ன கொடுக்க வேண்டுமோ அதைக் கொடுப்பான்.

وَمَا اللَّهُ يُرِيدُ ظُلْمًا لِلْعِبَادِ

அல்லாஹ் தன் அடியார்களுக்கு அநியாயம் செய்ய விரும்பமாட்டான். (அல்குர்ஆன் 40 : 31)

كُلًّا نُمِدُّ هَؤُلَاءِ وَهَؤُلَاءِ مِنْ عَطَاءِ رَبِّكَ وَمَا كَانَ عَطَاءُ رَبِّكَ مَحْظُورًا

நாம் நம்மை நம்பிக்கை கொண்டவர்களுக்கும் கொடுப்போம்;நம்மை நிராகரிப்பவர்களுக்கும் கொடுப்போம். அல்லாஹ்வுடைய உலக அருள் யாருக்கும் தடுக்கப்பட்டது அல்ல. (அல்குர்ஆன் 17 : 20)

எனவேதான் அல்லாஹுத்தஆலா அவனை ரஹ்மான் என்று புகழ்ந்து கொள்கின்றான். நாம் அவனை ரஹ்மான் என்று அழைக்கின்றோம். இந்த உலகத்தில் அவனுடைய அருள் அவனுடைய கருணை எல்லோருக்கும் பொதுவானது.

சூரியனின் வெளிச்சத்தைக் கொண்டு அவனை ஏற்றுக்கொண்ட முஸ்லிம்கள் பயன் பெறுவதை போன்று,அவனை நிராகரிக்கின்ற காஃபிர்களும் பயன் பெறுகின்றார்கள். அல்லாஹ் படைத்த தண்ணீரைக் கொண்டு உணவுகளைக் கொண்டு அவனை ஏற்றுக்கொண்ட மூஃமின்கள் பயன்படுவதை போன்று அல்லாஹ்வை நிராகரிக்கக் கூடியவர்களும் அதன் மூலமாக பயன் பெறுகிறார்கள். அல்லாஹுத்தஆலா இந்த உலகத்தை அப்படித்தான் வைத்திருக்கின்றான்.

நாளை மறுமை என்று வந்து விடும் போது அவனை நம்பிக்கை கொண்டவர்களுக்கு சமமாக ஒருபோதும் நிராகரிப்பவர்களை ஆக்கிவிட மாட்டான்,

أَفَنَجْعَلُ الْمُسْلِمِينَ كَالْمُجْرِمِينَ

(நமக்கு) முற்றிலும் வழிபடும் முஸ்லிம்களை (பாவம் செய்யும்) குற்றவாளிகளைப் போல் நாம் ஆக்கி விடுவோமா?(அல்குர்ஆன் 68 : 35)

வசனத்தின் கருத்து : ரப்புல் ஆலமீன் கேட்கின்றான்: நம்மை ஏற்றுக் கொண்ட நமக்கு பணிந்த முஸ்லிம்களை குற்றவாளிகளுக்கு சமமாக ஆக்கி விடுவோமா? தக்வா உள்ளவர்களை பாவிகளுக்கு சமமாக நாம் ஆக்கி விடுவோமா?

மறுமை என்பது அல்லாஹ்விடத்தில் அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களுக்கு மட்டும்தான். அல்லாஹ்வுடைய மன்னிப்பு அங்கே அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டவர்களுக்கு மட்டும்தான். அல்லாஹ்வுடைய ரஹ்மத் அவனை ஏற்றுக் கொண்டவர்களுக்கு மட்டும்தான்.

யார் அவனை நிராகரித்தார்களோ அல்லாஹ்வுடைய அடியார்களுக்கு அநீதி இழைத்தவர்களோ அவர்களுக்கு அல்லாஹ்வினுடைய பிடி மிக பயங்கரமாக இருக்கும்.

إِنَّ بَطْشَ رَبِّكَ لَشَدِيدٌ

நபியே! உங்களுடைய ரப்புடைய பிடி மிகக் கடுமையாக இருக்கும். (அல்குர்ஆன் 85 : 12)

சகோதரர்களே! அநீதி என்பது ஒரு அரசன் அல்லது ஒரு அதிகாரி மக்களுக்கு செய்வது மட்டுமல்ல. அதற்கு கீழ் எத்தனையோ வகைகள் இருக்கின்றன.

ஒரு சகோதரன் தனக்குக் கீழுள்ள சகோதரர்களுக்கு கொடுக்கவேண்டிய ஹக்குகளை கொடுக்கவில்லை என்றால் அவர்களின் பொருளை பராமரிக்கவில்லை என்றால் அதுவும் ஒரு அநீதி.

கணவன் மனைவிக்கு கொடுக்க வேண்டிய ஹக்குகளை கொடுக்கவில்லை என்றால் அதுவும் ஒரு அநீதி.

பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டிய ஹக்குகள், அவர்களை எப்படி வளர்க்க வேண்டுமோ அப்படி வளர்க்க வில்லை என்றால் அதுவும் ஒரு அநீதி.

வயதான பெற்றோர்களை பிள்ளைகள் பராமரிக்கவில்லை என்றால் அவர்களை சுயமாக நீங்களே சம்பாதித்து உங்களைப் பேணிக் கொள்ளுங்கள் என்று கண்டும் காணாமலும் விட்டுவிட்டால் அதுவும் ஒரு பெரிய அநீதி.

பொறுப்பாளர்கள் தங்களது பொறுப்புக்கு கீழ் உள்ளவர்களை பராமரிக்கவில்லை என்றால் அதுவும் அநீதி.

ஒரு தொழில் உடைய நிறுவனர் தன்னிடத்தில் பணியாற்றக்கூடியவர்களின் ஹக்குகளை பேணவில்லை என்றால் அதுவும் அநீதி.

வேலை செய்பவர்கள் பணி செய்பவர்கள் தங்களுடைய உரிமையாளர் உடைய ஹக்குகளைப் பேணவில்லை என்றால் அதுவும் ஒரு அநீதி.

அநீதி என்பது மிகப்பெரிய நீண்ட ஒரு பட்டியலைக் கொண்டது. அல்லாஹு சுப்ஹானஹு தஆலாஎந்த வகையான அநீதிக்கும் அவன் மன்னிப்பு வைத்திருப்பது கிடையாது. எதுவரை அநீதி இழைத்தவன் அல்லாஹ்விடத்தில் மன்னிப்பு கேட்டு யாருக்கு அநீதி இழைத்தானோ அவர்களிடத்தில் மன்னிப்பு கேட்டு அவர்கள் மன்னித்தால் தவிர.

சாதாரணமான பிரச்சனையில்லை சகோதரர்களே

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுவதைப் பாருங்கள்!

அநியாயம் மூன்று வகை. ஒரு அநியாயம், அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான். அதுதான் இணைவைத்தல்.

அதிலிருந்து விலகி ஈமானை ஏற்று தவ்பா செய்த நிலையில் இருந்தாலே தவிர. ஷிர்க் உடைய நிலையில் மரணித்து விட்டான் என்றால் அவனுக்கு மன்னிப்பே கிடையாது.

مَنْ يُشْرِكْ بِاللَّهِ فَقَدْ حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ وَمَأْوَاهُ النَّارُ

யார் அல்லாஹ்வுக்கு இணைவைத்து விட்டானோ அவனுக்கு அல்லாஹ் சொர்க்கத்தை ஹராமாக்கி விட்டான். அவருடைய தங்குமிடம் நரகம்தான். (அல்குர்ஆன் 5 : 72)

ஷிர்க் செய்பவர்கள் சொர்க்கத்தை நினைத்துப் பார்க்க முடியாது. அவர்களுடைய நிரந்தர தங்குமிடம் நரகமாகிவிடும்.

அடுத்ததாக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : சில அநியாயம் இருக்கின்றது. அதை அல்லாஹ் மன்னிக்கலாம்.

அதாவது அல்லாஹ்விற்கு அல்லாஹ்வுடைய ஹக்குகளில் அடியார்கள் செய்யக்கூடிய அநியாயம்.

அல்லாஹுத்தஆலா அந்த அநியாயத்தை சில நன்மைகளால் மன்னிப்பான். அவனுடைய விசேஷ அருளினால் அல்லாஹ் மன்னிப்பான்.

மூன்றாவது வகை அநியாயம், அல்லாஹ் அதை விட்டுக் கொடுக்கவே மாட்டான். அல்லாஹுத்தஆலா அதில் பாரபட்சம் காட்ட மாட்டான். அதில் யாரிடமும் சமரசம் செய்து கொள்ள மாட்டான்.

அதுதான் அடியார்களில் சிலர் சிலருக்கு செய்யக்கூடிய அநியாயம். நாளை மறுமையில் அநீதி இழைக்கப்பட்டவருக்கு அவருடைய ஹக்குகள் முழுமையாக கொடுக்கப்படுகின்ற வரை அந்த அநீதி செய்தவன் அல்லாஹ்விடம் இருந்து தப்பிக்க முடியாது. (3)

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக்ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸன்னஃப் அப்துர்ரசாக், எண் : 20276, தரம் : பலகீனமானது (அல்பானி)

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறிய ஹதீசை ஸஹீஹ் முஸ்லிமில் பார்க்கின்றோம் 

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள் : ஒருவர் ஒரு முஸ்லிமுடைய உரிமையை பொய் சத்தியம் செய்து வாதிட்டு பறித்து கொள்கின்றான். பாதிக்கப்பட்டவர் அந்த உரிமையாளரிடத்தில் அதற்குரிய சான்று போதிய ஆதாரம் இல்லாத காரணத்தால் பொய் சத்தியம் செய்து என்னுடையது தான் என்று ஒருவர் அதை தனக்கு உரியதாக ஆக்கிக் கொள்கிறார்.

அப்படி எடுத்துக் கொண்டால் கண்டிப்பாக அல்லாஹ் அவருக்கு நரகத்தை விதித்து விட்டான். அவர் மீது சொர்க்கத்தை அல்லாஹ் ஹராமாக்கி விட்டான்.

இந்த ஹதீசை கேட்ட உடனே ஒரு நபித்தோழர் அல்லாஹ்வின் தூதரிடத்தில் பயந்து நடுங்கியவராக வருகிறார்கள். யா ரசூலல்லாஹ்! ஒரு அற்பமான சிறிய பொருளாக இருந்தாலும் கூடவா?

அல்லாஹ்வுடைய தூதரின் ஆழமான அழுத்தமான அந்த வார்த்தையை கவனியுங்கள்!

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் :

وَإِنْ قَضِيبًا مِنْ أَرَاكٍ

பல் துலக்கக்கூடிய குச்சியாக இருந்தாலும் சரியே. அந்த குச்சியாக இருந்தாலும் கூட அதை இன்னொருவரிடமிருந்து அநியாயமாக எடுத்துக்கொண்டால் அவருக்கு அல்லாஹுத்தஆலா நரகத்தை அவர் மீது கடமையாக் சொர்க்கத்தை தடைசெய்து விட்டான்.(4)

அறிவிப்பாளர் : அபூ உமாமாரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம்,எண் : 370

இங்கு ஒரு சம்பவத்தை நாம் நினைவு கூற வேண்டும். முஹத்திஸ்களின் அமீர் என்று போற்றப்பட்ட தபவுத்தாபியீன்களின் ஒருவராகிய அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் ஈராக் நாட்டை சேர்ந்தவர்கள்.

சிரியா தேசம் சென்று அங்கிருக்கின்ற முஹத்திஸ்கள் இடத்தில் பாடம் படித்துவிட்டு திரும்புகிறார்கள். தன்னுடைய பையை பிரிக்கும் போது அதில் எழுதக்கூடிய சிறிய குச்சி ஒன்று இருக்கிறது.

அப்போதுதான் ஞாபகம் வருகிறது. வகுப்பில் உட்கார்ந்து இருக்கும்போது தன்னுடைய குச்சி உடைந்து விட்ட காரணத்தால் தனக்கு அருகில் இருந்த ஒருவரிடம் இருந்து எழுதுகோலை இரவலாக வாங்கினார்கள். அதை அவர்கள் திரும்பி கொடுக்கவில்லை. மறந்துவிட்டார்கள். வகுப்பு முடிந்து மாணவர்கள் கலைந்து விடுகிறார்கள்.

இந்த நிலையில் அப்துல்லாஹ் இப்னு முபாரக் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் அந்தக் குச்சியை எடுத்துக் கொண்டு ஈராக்கிலிருந்து சிரியா தேசம் சென்றார்கள். அந்த மஸ்ஜிதை தேடிச் சென்று அந்தக் குச்சியை யாரிடம் இருந்து பெற்றார்களோ அவர்களை தேடிக் கண்டுபிடித்து அவர்களிடம் மன்னிப்பு கேட்டு குச்சியை கொடுத்துவிட்டு திரும்ப அவர்கள் ஈராக் வருகிறார்கள்.

இது ஈமான். ஆனால் இன்று மக்களைப் பாருங்கள்! என்னென்ன விதமான அநியாயங்களை அக்கிரமங்களை செய்கின்றார்கள். எல்லாவற்றையும் செய்துவிட்டு அல்லாஹ் மன்னிப்பான் என்று சொல்கிறார்கள்.

இவர்களைப் பற்றித்தான் நம்முடைய ஸலஃபுகள் சொல்வார்கள் : உண்மையில் அல்லாஹ்வை ஆதரவு வைப்பவன் யார் தெரியுமா? நன்மை செய்துகொண்டு என்னுடைய நன்மை நிராகரிக்கப்பட்டு விடுமோ? என்று பயப்படுபவன்.

சிறிய பாவம் செய்தாலும் இந்த பாவத்தால் அல்லாஹ் என்னை தண்டித்து விடுவானோ? அல்லாஹ் என்னை மன்னிக்க வேண்டுமே என்று நம்பக்கூடியர்தான் அல்லாஹ்வை ஆதரவு வைப்பவன்.

யாருடைய உள்ளத்தில் ஈமான் இல்லையோ? நிஃபாக் இருக்குமோ அவர்கள்தான் பாவங்களை செய்து கொண்டு அல்லாஹ் மன்னிப்பான் என்று தங்களைத் தாங்களே ஏமாற்றிக் கொண்டவர்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் நிகழ்ந்த ஒரு நிகழ்வை பார்க்கின்றோம்.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுக்கு ஒரு அடிமை இருந்தார்கள். ஜிஹாதில் அந்த அடிமை மரணித்துவிட்டார்கள். அப்போது தோழர்கள் மிக மகிழ்ச்சியாக பேசிக்கொண்டார்கள் : ஆஹா என்ன மகிழ்ச்சி! இவருக்கு சொர்க்கம் என்று சொன்னார்கள்.

ஒரு பக்கம் அல்லாஹ்வின் தூதரின் அடிமை, இன்னொரு பக்கம் போரில் இறந்து இருக்கிறார்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் இந்த வார்த்தையைக் கேட்டவுடன் தங்களுடைய தோழர்களுக்கு சொன்னார்கள் :

இல்லை, நீங்கள் நினைப்பது போல் இல்லை. அவர் நரகத்தில் இருக்கிறார் என்று.

சஹாபாக்கள் பயந்து விட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் : அவர் போரில் பங்கு வைப்பதற்கு முன்னால் எந்தப் போர்வையை அவர் யாருக்கும் தெரியாமல் பதுக்கி கொண்டாரோ அது அவருடைய கப்ரில் நெருப்பாக எரிந்து கொண்டு இருக்கிறது.

அவருடைய பையை பிரித்து பார்க்கிறார்கள். அந்த போர்வை இருக்கிறது. அது அதிகமாக இரண்டு அல்லது மூன்று திர்ஹம் தான் மதிப்புடையதாக இருக்கும். (5)

அறிவிப்பாளர் : அபூஹுரைராரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரிஎண் : 6707

சகோதரர்களே! அல்லாஹ்விடத்தில் பாதிப்பை ஏற்படுத்தியது எந்த அளவு என்று பார்க்கப்படாது. அல்லாஹ்விடத்தில் நீ செய்த அநியாயத்தின் அளவு பார்க்க படாது. அது சிறியதாக இருந்தாலும் சரி, பெரியதாக இருந்தாலும் சரி, அநியாயம் அநியாயம்தான். அதற்குரிய தண்டனையை அல்லாஹு ரப்புல் ஆலமீன் வைத்திருக்கின்றான்.

அல்லாஹ்வை வணங்கிய ஒரு முஃமினான பெண்ணை பற்றி அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள் :

இஸ்ரவேலர்களில் ஒரு பெண் இருந்தாள். நல்ல வணக்கசாலி. நல்ல அமல்கள் இருந்தன. ஆனால், அல்லாஹுத்தஆலா அந்தப்பெண்ணை நரகத்தில் போட்டான். ஒரு பூனையை பிடித்து கட்டி வைத்து விட்டாள். அந்தப் பூனைக்கு அவளும் உணவளிக்கவில்லை. அதற்குரிய உணவுகளை அது தேடிக் கொள்ளும்படி அந்தப் பூனையை அவிழ்த்து விடவும் இல்லை. (6)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு உமர்ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரிஎண் : 3318.

அல்லாஹ்வுடைய அந்த உயிரினங்களில் சாதாரண ஒரு பூனைக்கு செய்த அநியாயத்திற்கு அல்லாஹு ரப்புல் ஆலமீன் இத்தகைய ஒரு தண்டனையை வைத்திருக்கிறான் என்றால் மனிதர்களுடைய உயிர்களை அல்லாஹ்வின் அடியார்களின் உயிர்களை இப்படி கொத்துக் கொத்தாக கொள்ளக்கூடியவர்கள், அவர்களை துடிக்க துடிக்க கொள்ளக்கூடியவர்கள், அவர்களை படுகொலை செய்பவர்கள், அவர்களில் ஆண்கள் பெண்கள் சிறியவர்கள் பலவீனமானவர்கள் முதியவர்கள் என்று பார்க்காமல் கொடூர கொலைகளை செய்து அதில் இன்பம் காணக்கூடிய இவர்களை அல்லாஹ் கண்டும் காணாமல் விட்டு விடுவான் என்று நாம் எப்படி என்ன முடியும்?

அல்லாஹ் மறுமையில் இவர்களுக்கு கொடுக்கக்கூடிய தண்டனைகளை கொண்டு கண்டிப்பாக அல்லாஹுத்தஆலா நம்மை மகிழ்விப்பான்; சந்தோஷப்படுத்துவான்.

இதை அல்லாஹுத்தஆலா அவனுடைய நபிக்கு கூறிய அறிவுரை.

நபியே இந்த அநியாயக்காரர்களுக்கு உங்களுடைய வாழ்க்கையிலும் அவர்களுக்கு வேதனை கொடுப்போம். இல்லை என்றால் நீங்கள் மறைந்ததற்கு பிறகு கொடுப்போம். இல்லை என்றால் உங்களுக்கு மரணம் வந்ததற்குப் பிறகு அவர்களுக்கும் மரணம் வந்ததற்குப் பிறகு மறுமையில் சேர்த்துவைத்து கொடுப்போம் என்று அல்லாஹ் சொல்கின்றான்.

وَإِمَّا نُرِيَنَّكَ بَعْضَ الَّذِي نَعِدُهُمْ أَوْ نَتَوَفَّيَنَّكَ فَإِلَيْنَا مَرْجِعُهُمْ ثُمَّ اللَّهُ شَهِيدٌ عَلَى مَا يَفْعَلُونَ

 (நபியே!) நாம் அவர்களுக்கு வாக்களித்திருக்கும் (வேதனைகளில்) சிலவற்றை (உமது வாழ்க்கை காலத்திலேயே) நீர் பார்க்கும்படிச் செய்வோம்; அல்லது (அவை வருவதற்கு முன்னர்) நாம் உம்மைக் கைப்பற்றிக் கொள்வோம். எவ்வாறாயினும் அவர்கள் நம்மிடம்தான் திரும்ப வரவேண்டியதிருக்கிறது. அல்லாஹ் அவர்கள் செய்பவற்றைப் பார்(த்துக் கொண்டே இரு)க்கிறான். (அல்குர்ஆன்  10-46,13-40,40- 77)

இவர்கள் ஒருபோதும் அல்லாஹ்வின் வேதனையிலிருந்து பிடியிலிருந்து தப்பிக்க முடியாது. உலகத்தின் கேமராக்களை இவர்கள் உடைத்து விடலாம். உலகத்தின் கோர்ட்டுகளை இவர்கள் ஏமாற்றி விடலாம். உலகத்தின் சக்திகளை எல்லாம் இவர்கள் தங்கள் பக்கம் திருப்பிக் கொள்ளலாம். வரலாறுகளை அழித்துவிடலாம். என்ன வேண்டுமானாலும் செய்யலாம்.

ஆனால் ரப்புல் ஆலமீன் பிடித்த வந்துவிட்டால் உலகத்திலும் சரி அவனுடைய பிடி பயங்கரமாக தான் இருக்கும் .

அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வினுடைய அடியார்களுக்கு அநியாயம் செய்த மக்களை எப்படி எல்லாம் அல்லாஹுத்தஆலா அழித்துக் கொண்டிருக்கிறான்! அவர்களுடைய நிலைகளை எப்படி சின்னாபின்னமாக்கி கொண்டிருக்கின்றான்! அவர்களை எப்படி தடுமாற வைத்துக் கொண்டு இருக்கின்றான்!

அல்லாஹுத்தஆலா நிச்சயமாக பொறுமையாளன். அல்லாஹுத்தஆலா ஒரு தவணை வைத்திருக்கின்றான்.

அல்லாஹ்வுடைய அடியாராகிய நம்முடைய கடமை என்னவென்றால் அல்லாஹ்விடத்தில் முறையிடுவது. அல்லாஹ்விடத்தில் நம்முடைய பலவீனத்தை சொல்வது. அல்லாஹ்விடத்தில் கைஏந்துவது.

அவனிடத்தில் ஏந்தப்படக்கூடிய பிராத்தனைகளை இறவின் நடுநிசியில் அந்த துஆக்கள் கண்டிப்பாக அதற்குரிய பதில் வரும். அந்த துஆக்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

அல்லாஹ் நம்மைச் சோதிக்கிறான் என்றால் நம்முடைய ஈமானுக்கு அது சோதனையாக இருக்கலாம். நம்முடைய பொறுமைக்கு சோதனையாக இருக்கலாம். அல்லாஹ்வின் மீதான தவக்குலுக்கு சோதனையாக இருக்கலாம்.

அல்லாஹ்வினுடைய மார்க்கத்தில் எந்த அளவு உண்மையாக இருக்கின்றோம் என்பதற்குரிய சோதனையாக இருக்கலாம். நம்முடைய ஈமானை நம்முடைய தரஜாவை உயர்த்துவதற்கு நம்முடைய பாவங்களை மன்னிப்பதற்கு உரிய சோதனையாக இருக்கலாம்.

ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அவனுக்கு ஒரு முள் தைத்தால் கூடஅல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள் :

ஒரு பாவத்தை அல்லாஹ் மன்னிக்கின்றான். அவனுக்கு ஒரு நன்மையை அல்லாஹ் எழுதி விடுகின்றான். அவனுக்கு ஒரு தரஜாவை அல்லாஹ் உயர்த்துகிறான். (7)

அறிவிப்பாளர் : ஆயிஷாரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்லிம்,எண் : 6727.

மேலும் நப ஸல் அவர்கள் கூறினார்கள் :

عَجَبًالِأَمْرِ الْمُؤْمِنِ إِنَّ أَمْرَهُ كُلَّهُ خَيْرٌ وَلَيْسَ ذَاكَ لِأَحَدٍ إِلَّا لِلْمُؤْمِنِ إِنْ أَصَابَتْهُ سَرَّاءُ شَكَرَ فَكَانَ خَيْرًا لَهُ وَإِنْ أَصَابَتْهُ ضَرَّاءُ صَبَرَ فَكَانَ خَيْرًا لَهُ

முஃமினுடைய காரியத்தை நினைத்தால் அவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது! அருட்கொடைகள் வந்தால் அல்லாஹ்விற்கு அவன் நன்றி செலுத்துகிறான். அதுவும் அவனுக்கு நன்மையாக ஆகிவிடுகின்றது. சோதனைகள் வந்தால் பொறுமையாக இருக்கின்றான். அதுவும் அவனுக்கு நன்மையாக ஆகிவிடுகின்றது. இத்தகைய பாக்கியம் முஃமினை தவிர வேறு யாருக்கும் இருக்காது.

அறிவிப்பாளர் : ஸுஹைப் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 7692.

ஒரு எறும்பு கடித்தால் கூட, ஒரு முள் தைத்தால் கூட நம்முடைய பாவங்களை அல்லாஹுத்தஆலா மன்னிக்கிறான் என்றால் நம்முடைய தரஜாக்களை அல்லாஹுத்தஆலா உயர்த்துகிறான் என்றால் இந்த அநியாயக்கார காஃபிர்கள் மனித உயிர்களின் ரத்தகளை குடித்து தங்களுடைய தாகத்தைத் தீர்த்துக் கொள்ள வேண்டும்  என்ற வெறி பிடித்த இந்த மக்கள் நம்முடைய அப்பாவிகளை கொல்லும் போது எப்படி துடிதுடித்து கொன்றார்கள்! எப்படி துடிதுடித்து எரித்திருக்கிறார்கள்! சிறுவர்கள் பெண்கள் என்றும் பார்க்காமல்.

இதுவெல்லாம் கண்டிப்பாக தூரத்தில் இருந்து பார்க்கக்கூடிய நமக்கும் ஒரு சோதனை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு அல்லாஹு தஆலா அவர்களுடைய உலகம் போனாலும் சரி அவர்களின் மறுமையை அல்லாஹ் சிறப்பாக்கி தருவான். அவர்களுடைய பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான். மறுமையில் உயர்ந்த அந்தஸ்துகளை அல்லாஹ் ரப்புல் ஆலமீன் கொடுப்பான்.

அன்பு சகோதரர்களே! குர்ஆனுடைய வசனத்தை ஓதிப் பாருங்கள்!

فَرِحِينَ بِمَا آتَاهُمُ اللَّهُ مِنْ فَضْلِهِ وَيَسْتَبْشِرُونَ بِالَّذِينَ لَمْ يَلْحَقُوا بِهِمْ مِنْ خَلْفِهِمْ أَلَّا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

அல்லாஹ் தன் அருளால் (வீரமரணம் எய்திய) அவர்களுக்கு அளித்தவற்றைக் கொண்டு ஆனந்தமடைகிறார்கள். இன்னும், தங்களுடன் சேராமல் தங்களுக்குப் பின் (இவ்வுலகில் உயிரோடு) இருப்பவர்களைப் பற்றி ‘‘அவர்களுக்கு எவ்வித பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள்'' என்று மகிழ்ச்சியடைகின்றனர். (அல்குர்ஆன் 3 : 170)

அல்லாஹு சுப்ஹானஹு தஆலா உடைய திட்டம் என்பது அவனுடைய விதி என்பது நம்முடைய அறிவிற்கு அப்பாற்பட்ட ஒன்று.

ஒரு தீமையிலும் அல்லாஹுத்தஆலா சில நன்மைகளை ஏற்படுத்தி தருவான். இப்படித்தான் ஒவ்வொரு சோதனையிலும்.

யா அல்லாஹ் இதிலிருந்து எங்களுக்கு நன்மையை கொடு!இதிலிருந்து ஈமானிய படிப்பினை பாடத்தைக் கொடுத்து உங்களுடைய அடியாராக எங்களை ஏற்றுக் கொள்!என்று அல்லாஹ்விடத்தில் துஆ செய்து, அல்லாஹ்விடத்தில் இருந்து தான் நமக்குரிய பாதுகாப்பை தீர்வை நாம் எதிர்பார்த்து கையேந்தி கொண்டிருக்கவேண்டும்.

அதே நிலையில் நம்முடைய அமல்களை நம்முடைய ஒவ்வொரு காரியங்களை அல்லாஹ்வுடைய வேதத்திற்கு ஏற்ப, நபியின் உடைய சுன்னாவிற்கு ஏற்ப சீர்திருத்தி நன்மையை ஏவி தீமையைத் தடுக்கக்கூடிய இந்த உயர்ந்த செயலை செய்வது.

எதன்மூலமாக அல்லாஹுத்தஆலா உதவி செய்கின்றானோ? எதை விடுவதை அல்லாஹ் கடுமையாக சோதிக்கின்றானோ அந்தக் காரியத்தை விட்டுவிடாமல் நாம் தொடர்ந்து செயல்படுத்த வேண்டும்.

அல்லாஹு சுப்ஹானஹு தஆலாநம்மில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவனுடைய பேரருளை செய்தருள்வானாக! நம்மில் படுகொலை செய்யப்பட்ட மக்களுக்கு அவர்களுக்கு சிறந்த இடத்தை சொர்க்கத்தில் ஏற்படுத்தி தருவானாக! அவர்களுடைய குடும்பத்தார்களுக்கு அல்லாஹ் உதவி செய்வானாக! பாதிக்கப்பட்ட ஒவ்வொரு குடும்பத்திற்கும் அவர்கள் இழந்ததை விட சிறந்ததை இம்மையிலும் மறுமையிலும் தந்தருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سَعْدَانَ الْجُهَنِيِّ عَنْ سَعْدٍ أَبِي مُجَاهِدٍ الطَّائِيِّ وَكَانَ ثِقَةً عَنْ أَبِي مُدِلَّةَ وَكَانَ ثِقَةً عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثَلَاثَةٌ لَا تُرَدُّ دَعْوَتُهُمْ الْإِمَامُ الْعَادِلُ وَالصَّائِمُ حَتَّى يُفْطِرَ وَدَعْوَةُ الْمَظْلُومِ يَرْفَعُهَا اللَّهُ دُونَ الْغَمَامِ يَوْمَ الْقِيَامَةِ وَتُفْتَحُ لَهَا أَبْوَابُ السَّمَاءِ وَيَقُولُ بِعِزَّتِي لَأَنْصُرَنَّكِ وَلَوْ بَعْدَ حِينٍ (سنن ابن ماجه 1742 -)

குறிப்பு 2)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مُقَاتِلٍ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ عَنْ أَبِي مَعْبَدٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِمُعَاذِ بْنِ جَبَلٍ حِينَ بَعَثَهُ إِلَى الْيَمَنِ إِنَّكَ سَتَأْتِي قَوْمًا أَهْلَ كِتَابٍ فَإِذَا جِئْتَهُمْ فَادْعُهُمْ إِلَى أَنْ يَشْهَدُوا أَنْ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَأَنَّ مُحَمَّدًا رَسُولُ اللَّهِ فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ خَمْسَ صَلَوَاتٍ فِي كُلِّ يَوْمٍ وَلَيْلَةٍ فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ فَأَخْبِرْهُمْ أَنَّ اللَّهَ قَدْ فَرَضَ عَلَيْهِمْ صَدَقَةً تُؤْخَذُ مِنْ أَغْنِيَائِهِمْ فَتُرَدُّ عَلَى فُقَرَائِهِمْ فَإِنْ هُمْ أَطَاعُوا لَكَ بِذَلِكَ فَإِيَّاكَ وَكَرَائِمَ أَمْوَالِهِمْ وَاتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّهُ لَيْسَ بَيْنَهُ وَبَيْنَ اللَّهِ حِجَابٌ (صحيح البخاري 1401 -)

குறிப்பு 3)

(20276) - أخبرنا معمر عن قتادة أو الحسن - أو كليهما - قال : الظلم ثلاثة : ظلم لا يغفر ، وظلم لا يترك ، وظلم يغفر ، فأما الظلم الذي لا يغفر فالشرك بالله ، وأما الظلم الذي لا يترك فظلم الناس بعضهم بعضا ، وأما الظلم الذي يغفر فظلم العبد نفسه فيما بينه وبين ربه.

المحدث : شعيب الأرناؤوط |  خلاصة حكم المحدث : إسناده ضعيف| المحدث : الذهبي | | خلاصة حكم المحدث : منكر| المحدث : الألباني |  خلاصة حكم المحدث : ضعيف

குறிப்பு 4)

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِيُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَعِيلَ بْنِ جَعْفَرٍ قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ قَالَ أَخْبَرَنَا الْعَلَاءُ وَهُوَ ابْنُ عَبْدِ الرَّحْمَنِ مَوْلَى الْحُرَقَةِ عَنْ مَعْبَدِ بْنِ كَعْبٍ السَّلَمِيِّ عَنْ أَخِيهِ عَبْدِ اللَّهِ بْنِ كَعْبٍ عَنْ أَبِي أُمَامَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ اقْتَطَعَ حَقَّ امْرِئٍ مُسْلِمٍ بِيَمِينِهِ فَقَدْ أَوْجَبَ اللَّهُ لَهُ النَّارَ وَحَرَّمَ عَلَيْهِ الْجَنَّةَ فَقَالَ لَهُ رَجُلٌ وَإِنْ كَانَ شَيْئًا يَسِيرًا يَا رَسُولَ اللَّهِ قَالَ وَإِنْ قَضِيبًا مِنْ أَرَاكٍ (صحيح مسلم 196 -)

குறிப்பு 5)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَمْرٍو عَنْ سَالِمِ بْنِ أَبِي الْجَعْدِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ كَانَ عَلَى ثَقَلِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلٌ يُقَالُ لَهُ كِرْكِرَةُ فَمَاتَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هُوَ فِي النَّارِ فَذَهَبُوا يَنْظُرُونَ إِلَيْهِ فَوَجَدُوا عَبَاءَةً قَدْ غَلَّهَا (صحيح البخاري2845 -)

குறிப்பு 6)

حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ حَدَّثَنِي مَالِكٌ عَنْ نَافِعٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ عُذِّبَتْ امْرَأَةٌ فِي هِرَّةٍ حَبَسَتْهَا حَتَّى مَاتَتْ جُوعًا فَدَخَلَتْ فِيهَا النَّارَ قَالَ فَقَالَ وَاللَّهُ أَعْلَمُ لَا أَنْتِ أَطْعَمْتِهَا وَلَا سَقَيْتِهَا حِينَ حَبَسْتِيهَا وَلَا أَنْتِ أَرْسَلْتِهَا فَأَكَلَتْ مِنْ خَشَاشِ الْأَرْضِ (صحيح البخاري 2192 -)

குறிப்பு 7)

حَدَّثَنَا أَبُو الطَّاهِرِ أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ أَخْبَرَنِي مَالِكُ بْنُ أَنَسٍ عَنْ يَزِيدَ بْنِ خُصَيْفَةَ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ عَائِشَةَ زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يُصِيبُ الْمُؤْمِنَ مِنْ مُصِيبَةٍ حَتَّى الشَّوْكَةِ إِلَّا قُصَّ بِهَا مِنْ خَطَايَاهُ أَوْ كُفِّرَ بِهَا مِنْ خَطَايَاهُ لَا يَدْرِي يَزِيدُ أَيَّتُهُمَا قَالَ عُرْوَةُ (صحيح مسلم 4668 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/