HOME      Khutba      சோதனைகளை எளிதாக்க வழிகள்! அமர்வு 3 | Tamil Bayan - 682   
 

சோதனைகளை எளிதாக்க வழிகள்! அமர்வு 3 | Tamil Bayan - 682

           

சோதனைகளை எளிதாக்க வழிகள்! அமர்வு 3 | Tamil Bayan - 682


சோதனைகளை எளிதாக்க வழிகள்! அமர்வு 3

ஜுமுஆ குத்பா தலைப்பு : சோதனைகளை எளிதாக்க வழிகள்! அமர்வு 3

வரிசை : 682

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 23-07-2021 | 13-12-1442

بسم الله الرحمن الرّحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் :  நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு தஆலாவை பயந்து கொள்ளுமாறு, அல்லாஹ்வுடைய மார்க்க சட்டங்களை பேணி வாழுமாறு, எனக்கும் உங்களுக்கும் உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கின்றேன்.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! நம்முடைய சோதனைகளை எளிதாக்குவானாக!

சொர்க்கம் செல்லக்கூடிய பாதையில் அல்லாஹு தஆலா நம் அனைவரையும் வழி சேர்ப்பானாக!

சோதனைகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை. சோதனைகளை சந்தித்து,அழகிய முறையில் அந்த சோதனைகளில் பொறுமையாக இருந்து,அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் உறுதியாக இருந்து,நாம் நம்மை சரியான உறுதியான நிலையில் நிறுத்திக் கொள்ளும்போதுதான் இம்மை மறுமை என்ற அந்த சரியான நிலையை அடைய முடியும்.

தொடர்ந்து சில ஜும்ஆக்களில், சோதனையை எப்படி எதிர்கொள்வது? சோதனைகள் நமக்கு எப்போது இலகுவாக ஆகிவிடும்? என்பதைப் பற்றி பல வழிகளை மார்க்க அறிஞர்கள் கூறியிருப்பதிலிருந்து சில முக்கியமான கருத்துக்களையும் வழிமுறைகளையும் நாம் பார்த்து வருகின்றோம்.

அதில் ஒன்று தான், நமக்கு சோதனைகள் ஏற்படும் பொழுது இந்த சோதனையால் எனக்கு இழப்பு இல்லை;செல்வம் அல்லது வேறு ஏதாவது உயிர்,பொருள்களில் இருந்து நமக்கு இழப்புகள் தெரிந்தாலும் இந்த சோதனை எனக்கு மறுமையில் முழுமையான நன்மையாக கிடைக்கும்;

அல்லாஹ்வுடைய கருணையோடு அல்லாஹ்வுடைய அன்போடு என்னை சமீபமாக ஆக்கி வைக்க கூடிய ஒரு அருள் நிறைந்த வாசல் என்று நமக்கு வரக்கூடிய சோதனைகளை நாம் பார்க்க வேண்டும்.

ஸஅத் இப்னு அபீ வக்காஸ் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் ரசூலுல்லாஹ் அவர்களிடத்தில் கேட்கின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! மக்களில் கடுமையான சோதனைக்கு ஆளாகக் கூடியவர்கள் யார்?என்று.அதற்கு ரசூல் பதில் சொன்னார்கள்:முதலில் நபிமார்கள், பிறகு அவர்களைப் போன்றவர்கள். பிறகு அவர்களைப் போன்றவர்கள். அதாவது இந்த நபிமார்களைப் போன்று ஈமானில், தக்வாவில் உறுதியாக இருக்கக் கூடியவர்கள்.

يُبْتَلَى الرَّجُلُ عَلَى حَسَبِ دِينِهِ فَإِنْ كَانَ فِي دِينِهِ صَلَابَةٌ زِيدَ فِي بَلَائِهِ وَإِنْ كَانَ فِي دِينِهِ رِقَّةٌ خُفِّفَ عَنْهُ

தன்னுடைய மார்க்கப்பற்றுக்கு ஏற்ப அடியான் சோதிக்கப்படுகின்றான். மார்க்கத்தில் அவன் உறுதியாக இருந்தால் சோதனை அவனுக்கு அதிகமாக இருக்கும். மார்க்கத்தில் பலவீனம் இருந்தால் அதற்கேற்ப அவன் சோதிக்கப்படுகின்றான்.

அறிவிப்பாளர் : ஸஅத் இப்னு அபீ வக்காஸ்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னது அஹ்மத்,எண் : 1400,1412.

இதற்கு நம்முடைய நடைமுறை வாழ்க்கையில் உதாரணம் எப்படி என்றால்,ஒருவர் ஜமாத்தோடு தொழுகையை ஒழுங்காக தொழுவார். நோன்பு வைப்பார். ஹலால், ஹராம் அனைத்தையும் பேணி நடப்பார். ஆனால் கஷ்டத்தில் சிரமத்தில் இருப்பார்.

இன்னொரு பக்கத்தில் ஒருவரிடம் பேணுதல் இருக்காது. வணக்க வழிபாடுகளில் அந்த அளவு ஈடுபாடு இருக்காது.

இப்பொழுது, அல்லாஹ்வுடைய தீனில் உறுதியாக நான் இருக்கின்றேனே, எனக்கு சோதனை அதிகமாக இருக்கின்றது. ஆனால் எனக்கு தெரிந்த இந்த நபர் தொழுகையில் அலட்சியம் இருக்கின்றது. ஹலால் ஹராமில் பேணுதல் கிடையாது‌. அவர் நன்றாகத்தானே வாழ்கின்றார். அவருக்கு எதுவும் ஏற்படவில்லையே.!

சோதனைகள் எல்லாம் என்னை நோக்கி வந்து கொண்டே இருக்கின்றது. இப்படி எல்லாம் எண்ணத் தோன்றும்.

இப்படிப்பட்டவர்களுக்கு தான் அல்லாஹ்வின் தூதர் அவர்களால் கூறப்பட்ட செய்தி; அல்லாஹு தஆலா இப்படி உங்களை சோதிக்கின்றான் என்றால் உங்களுடைய மார்க்கம் உறுதியாக இருக்கின்றது. உங்களுடைய ஈமான் உறுதியாக இருக்கின்றது. அல்லாஹ்விடத்தில் நீங்கள் நெருக்கமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

அல்லாஹ்வுடைய தூதர் இறுதியாக சொன்ன வார்த்தையை பாருங்கள். அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா உடைய அருளால் நம்முடைய ஆறுதலுக்கு இதைவிட ஒரு அழகான ஆறுதல் தேவை இல்லை.

وَمَا يَزَالُ الْبَلَاءُ بِالْعَبْدِ حَتَّى يَمْشِيَ عَلَى ظَهْرِ الْأَرْضِ لَيْسَ عَلَيْهِ خَطِيئَةٌ

அடியானுக்கு சோதனை தொடர்ந்து வந்து கொண்டே இருக்கின்றது. ஒரு சோதனைக்கு பிறகு ஒரு சோதனையாக சிக்கி புரண்டு உருண்டு கொண்டே இருக்கின்றான். கடைசியாக அவன் இந்த பூமியில் நடமாடுவான், அவன் மீது எந்த ஒரு பாவமும் குற்றமும் இருக்காது.

அறிவிப்பாளர் : ஸஅத் இப்னு அபீ வக்காஸ்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னது அஹ்மத்,எண் : 1400,1412

இந்த சோதனைகள் அவனுடைய பாவங்களை போக்கி விட்டன. இந்த சோதனைகளால் அல்லாஹு தஆலா அந்த பாவங்களில் இருந்து அவனை மொத்தமாக கழுவி விட்டான்.

அவனுடைய இஸ்திக்ஃபார் கூட ஒரு சில நேரங்களில் ஏற்றுக் கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் அவனுக்கு ஏற்பட்ட சோதனைகளில் அவன் அழகிய முறையில் பொறுமையாக இருந்தது அவனை பாவங்களிலிருந்து சுத்தமாக்கி விட்டது.

இறுதியாக அவன் மரணிக்கும் போது அவனுடைய நன்மைகளுடைய ஏடுகள் மட்டும் நிரம்பியிருக்கும். பாவங்கள் உடைய ஏடுகள் அப்படியே காலியாகி இருக்கும்.

இது எவ்வளவு பெரிய உயர்ந்த சிறப்பு என்று பாருங்கள். அல்லாஹ்வுடைய தூதர் மற்றுமொரு ஹதீஸில் சொன்னார்கள் :

مَنْ يُرِدْ اللَّهُ بِهِ خَيْرًا يُصِبْ مِنْهُ

அல்லாஹு தஆலா ஒருவருக்கு நன்மையை நாடினால் அவரை சோதிக்கின்றான்.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : 5213.

மேலும் அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் சொன்னார்கள் :

அல்லாஹ் ஒரு கூட்டத்தாரை நேசித்தால் அவர்களை சோதிப்பான். (1)

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : இப்னு மாஜா,எண் : 4021.

இதன் மூலம் அல்லாஹு தஆலா அவர்களை சோதிக்கின்றான். அவர்களைச் சுத்தப்படுத்துகின்றான். அவர்களின் ஈமானை உயர்த்துகிறான்.

இப்படியாக ஒரு சோதனை நம்மை அடையும் போது அதை அழகிய முறையில் கடந்தால் அது நமக்கு எளிதாக இருக்கும்.

அதுபோன்றுதான் இந்த சோதனைக்கு பிறகு நமக்கு கிடைக்கக்கூடிய நற்கூலிகள் வெகுமதிகள் அல்லாஹ்விடத்தில் என்ன? என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் கூறிய ஒரு ஹதீஸைப் பாருங்கள்.

عِظَمُ الْجَزَاءِ مَعَ عِظَمِ الْبَلَاءِ

உங்களுக்கு அல்லாஹ்விடத்தில் மகத்தான பெரிய கூலி கிடைக்க வேண்டுமா? அந்தப் பெரிய கூலி பெரிய சோதனையோடு இருக்கின்றது.(2)

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : இப்னு மாஜா,எண் : 4021.

அல்லாஹ்வுடைய தூதர் நபிமார்களிலேயே சிறந்தவர்கள். நபிமார்களுக்கு இமாம்.அவர்கள் சொன்னார்கள் :

எந்த நபிக்கும் கொடுக்கப்படாத தொந்தரவு எனக்குக் கொடுக்கப்பட்டது. எந்த நபிக்கும் கொடுக்கப்படாத அச்சுறுத்தல் எனக்குக் கொடுக்கப்பட்டது. (3)

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : இப்னு மாஜா எண் : 148, முஸ்னது அஹ்மத் எண் :13543.

அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் அவர்களுடைய அந்தஸ்துகளுக்கு ஏற்ப அவர்கள் சோதிக்கப்பட்டார்கள்.

அல்லாஹ்வின் அடியார்களே! நாம் நம்முடைய நிலமையை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அல்லாஹு தஆலா ஒரு வசனத்தை இறக்கினான்.

لَيْسَ بِأَمَانِيِّكُمْ وَلَا أَمَانِيِّ أَهْلِ الْكِتَابِ مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ وَلَا يَجِدْ لَهُ مِنْ دُونِ اللَّهِ وَلِيًّا وَلَا نَصِيرًا

(நம்பிக்கையாளர்களே! மறுமையில்) உங்கள் விருப்பப்படியோ, வேதத்தையுடை யவர்களின் விருப்பப்படியோ (காரியம் நடப்பது) இல்லை. ஆயினும், எவன் பாவம் செய்கிறானோ அவன் அதற்குரிய தண்டனையை அடைந்தே தீருவான். அவன் அல்லாஹ்வையன்றி தனக்கு உதவி செய்பவரையோ அல்லது துணை புரிபவரையோ (அங்கு) காணமாட்டான். (அல்குர்ஆன் 4 : 123)

இஸ்ரவேலர்கள்,நாங்கள் நபிமார்களுடைய சந்ததிகள்; நாங்கள் என்ன தப்பு செய்தாலும் அல்லாஹ் எங்களை கேட்க மாட்டான் என்று கூறி அவர்கள் பெருமைப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அதனால் பாவம் செய்வதில் திரிந்து கொண்டிருந்தார்கள்.

அல்லாஹு தஆலா முஸ்லிம்களாகிய நமக்கும் எச்சரிக்கை செய்கின்றான். நீங்கள் இறுதி நபியின் சமுதாயமாக இருக்கலாம். அவர்களுடைய உம்மத்தாக இருப்பதால் மட்டுமே நீங்கள் அல்லாஹ்விடத்தில் நெருக்கமாகி விட முடியாது.

உங்களுடைய அமலை அல்லாஹ் பார்ப்பான். உங்களுடைய செயல்கள் அல்லாஹ்விடத்தில் மதிப்பிடப்படும். அல்லாஹ் எச்சரிக்கை செய்கின்றான்.

யார் தப்பு செய்தாலும் அதற்குரிய தண்டனை அவர்களுக்கு கொடுக்கப்படும். (அல்குர்ஆன் 4:123)

இவ்வளவு அழுத்தமான எச்சரிக்கை.

இன்னும் அல்லாஹு தஆலா சில இடங்களில் எச்சரிக்கை செய்கின்றான். நபியாக இருந்தாலும் கூட தவறு செய்வதற்கு மோசடி  செய்வதற்கு அவருக்கு அனுமதி இல்லை.

وَمَا كَانَ لِنَبِيٍّ أَنْ يَغُلَّ وَمَنْ يَغْلُلْ يَأْتِ بِمَا غَلَّ يَوْمَ الْقِيَامَةِ ثُمَّ تُوَفَّى كُلُّ نَفْسٍ مَا كَسَبَتْ وَهُمْ لَا يُظْلَمُونَ

மோசம் செய்வது எந்த நபிக்கும் தகுதியன்று. எவரேனும் மோசம் செய்தால் அவர் அந்த மோசம் செய்த பொருளையும் மறுமையில் (தம்முடன்) கொண்டுவர வேண்டியதாகும். பின்னர் ஒவ்வோர் ஆத்மாவுக்கும் அது செய்த செயலுக்கு(ரிய பலனை) முழுமையாக அளிக்கப்படும். அவை அநீதி செய்யப்பட மாட்டாது.(அல்குர்ஆன் 3 : 161)

இவ்வளவு தீர்க்கமான எச்சரிக்கை குர்ஆனில் மட்டும்தான் பார்க்க முடியும். இந்த வசனம் இறங்கிய பிறகு அபூபக்ர் ரலியல்லாஹு அன்ஹு ரசூலுல்லாஹ் இடத்தில் பயந்தவர்களாக நடுங்கியவர்களாக ஓடி வருகின்றார்கள்.

அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் செய்யக்கூடிய ஒவ்வொரு தப்புக்கும் எங்களுக்கு தண்டனை உண்டா? ரசூலுல்லாஹ் அபூபக்ரிடத்தில் சொன்னார்கள்;

غَفَرَ اللَّهُ لَكَ يَا أَبَا بَكْرٍ أَلَسْتَ تَمْرَضُ أَلَسْتَ تَنْصَبُ أَلَسْتَ تَحْزَنُ أَلَسْتَ تُصِيبُكَ اللَّأْوَاءُ قَالَ بَلَى قَالَ فَهُوَ مَا تُجْزَوْنَ بِهِ

அபூபக்ரே,அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக! அபூபக்ரே!உங்களுக்கு களைப்பு ஏற்படுகிறது அல்லவா? வியாபாரத்தில் ஹலாலான உழைப்பை தேடி அலையும் பொழுது உங்களுக்கு உடல் சோர்வு, உடல் வலி ஏற்படுகிறது அல்லவா? அல்லது உங்கள் குடும்பத்தில் ஏதாவது சிக்கல்கள், தடங்கல்கள் ஏற்படும் போது உங்களுக்கு மன கவலை ஏற்படுகின்றது அல்லவா?

அபூபக்ர் சொன்னார்கள்; அல்லாஹ்வின் துதரே! ஏன் ஏற்படவில்லை,ஏற்படுகின்றது.

சொன்னார்கள்; அதுவெல்லாம் இந்த உலகத்தில் நீங்கள் செய்யக்கூடிய குற்றங்களுக்கு, தவறுகளுக்கு அல்லாஹ் கொடுக்கக்கூடிய தண்டனை.

ஒரு முஃமினுக்கு இத்தகைய சோதனைகளால் அவனுக்கு தண்டனை கொடுத்து அல்லாஹு தஆலா அவனை மன்னித்து விடுகின்றான் என்று ஆறுதல் கூறினார்கள். (4)

அறிவிப்பாளர் : அபூபக்ர் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னது அஹ்மத்,எண் : 65.

இந்த சோதனை நேரத்தில் நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் என்ன? வெகுமதிகள் என்ன? என்று நாம் நினைத்து பார்க்க வேண்டும்.

பிரபலமான ஒரு ஹதீஸ். ரசூலுல்லாஹ் அவர்களுடைய காலத்தில் ஒரு பெண்ணிற்கு வலிப்பு நோய் இருந்தது. அந்தப் பெண் ரசூலுல்லாஹ் அவர்களிடத்தில் வந்து அல்லாஹ்வின் தூதரே! எனக்காக துஆ செய்யுங்கள். எனக்கு வலிப்பு நோய் காரணமாக ஒருவிதமான மயக்கம் ஏற்படுகின்றது.

அந்த நேரத்தில் என்னுடைய ஆடை கலைந்து விடுகின்றது. நீங்கள் எனக்காக அல்லாஹ்விடத்தில் துஆ செய்யுங்கள்.

ரசூலுல்லாஹ் அவர்கள் சொன்னார்கள்; நீ விரும்பினால் பொறுமையாக இருந்து சொர்க்கத்தை அடைந்து கொள்ளலாம். நீ விரும்பினால் இந்த வலிப்பு நோயிலிருந்து நீ குணமாவதற்கு நான் அல்லாஹ்விடத்தில் துஆ செய்கிறேன்.

அப்போது அந்தப் பெண் சொன்னார்கள்; அல்லாஹ்வின் தூதரே! நான் பொறுமையாக இருக்கின்றேன். என்னுடைய ஆடை விலகாமல் இருப்பதற்கு நீங்கள் துஆ செய்யுங்கள். அல்லாஹ்வுடைய தூதர் அந்தப் பெண்ணுடைய ஆடையில் நீங்காமல் இருப்பதற்கு துஆ செய்தார்கள்.

இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹு, அந்த பெண்ணைப் பார்க்கும் நேரத்திலெல்லாம் சொர்க்கத்தின் பெண்ணை நான் உங்களுக்கு காட்டட்டுமா? என்று கூறி தன்னுடைய மாணவர்களுக்கு அந்தப் பெண் இவர் தான் என்று கூறுவார்கள். (5)

அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 5220.

சகோதரர்களே! ரசூலுல்லாஹ் அவர்களுடைய காலத்தில் வாழ்ந்த தோழர்கள், பெண்களுடைய மன நிலையைப் பாருங்கள்.

ஒரு பெண்ணுக்கு எவ்வளவு பெரிய கஷ்டமாக இருக்கும்! இருந்தாலும் இந்த கஷ்டத்தினால் எனக்கு சொர்க்கம் கிடைக்குமேயானால் இந்த கஷ்டம் எனக்கு ஒரு பெரிய கஷ்டமாக இருக்காது என்று நினைக்கக்கூடிய அந்தத் திடகாத்திரமான உள்ளம் அவர்களிடத்தில் இருந்தது. அந்த உள்ளம் நம்மிடத்தில் இருக்க வேண்டும்.

அதுபோன்றுதான் அல்லாஹ்வுடைய தூதர் அவர்களின் மற்றுமொரு ஹதீஸைப் பாருங்கள். அல்லாஹ் கூறுவதாக கூறினார்கள்.

إِذَا ابْتَلَيْتُ عَبْدِي بِحَبِيبَتَيْهِ فَصَبَرَ عَوَّضْتُهُ مِنْهُمَا الْجَنَّةَ يُرِيدُ عَيْنَيْهِ

நான் என்னுடைய அடியானை அவனுடைய இரண்டு கண்களை எடுத்து சோதித்தால்,அதை அவன் பொறுத்துக் கொண்டால்,அதற்கு பகரமாக சொர்க்கத்தை தருகின்றேன்.

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 5221.

இந்த உலகத்தில் சோதனைகளில் நாம் பொறுமையாக இருந்தால் அதற்கு கூலி கண்டிப்பாக அல்லாஹ்விடத்தில் சொர்க்கம் என்று அடியான் உறுதி கொள்ளும் போது அந்த சோதனை அவனுக்கு ஒன்றுமே இல்லாமல் ஆகி விடுகின்றது.

அதுபோன்றுதான் மற்றும் ஒரு ஹதீஸில் வருகின்றது. அல்லாஹு தஆலா கூறுவதாக,

مَا لِعَبْدِي الْمُؤْمِنِ عِنْدِي جَزَاءٌ إِذَا قَبَضْتُ صَفِيَّهُ مِنْ أَهْلِ الدُّنْيَا ثُمَّ احْتَسَبَهُ إِلَّا الْجَنَّةُ

என்னுடைய அடியானின் மிக நெருக்கமான பிரியமான ஒருவரின் உயிரை நான் கைப்பற்றி விடுகிறேன். அந்த நேரத்தில் அவன் பொறுமையாக இருந்துوஅல்லாஹ்விடத்தில் கூலியை எதிர்பார்த்தால் அந்த மனிதருக்கு சொர்க்கத்தைத் தவிர வேறு கூலி இல்லை.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி, எண் : :5944.

தாய் தந்தை இறப்பு, அல்லது தாய் தந்தைகளுக்கு பிள்ளைகளின் இறப்பு,மனைவிக்கு கணவனின் இறப்பு, கணவனுக்கு மனைவியின் இறப்பு,உற்ற நண்பனுக்கு நண்பன் இறப்பு,இந்த நேரத்தில் அல்லாஹ்வுக்காக பொறுத்துக் கொள்வது. அந்தப் பொறுமைக்கு அல்லாஹு தஆலா உடனே சொர்க்கத்தை கூலியாக கொடுக்கின்றான்.

இப்படி எத்தனை ஹதீஸ்களை பார்க்கின்றோம். ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம்  அவர்களிடத்தில் ஒரு பெண்மணி வருகின்றார். கையில் ஒரு குழந்தை இருக்கின்றது. அந்த குழந்தையும் ஒரு கடினமான நோயில் இருக்கின்றது.

அல்லாஹ்வின் தூதரே! இதற்கு முன்னால் எனக்கு மூன்று குழந்தைகள் பிறந்து இறந்து விட்டார்கள். இப்பொழுது இந்தக் குழந்தையும் உடல் சுகமில்லாமல் இருக்கின்றது. அல்லாஹ்வின் தூதரே! இந்த குழந்தைக்கு நீங்கள் துஆ கேளுங்கள் என்று.

ரசூலுல்லாஹ் கேட்கின்றார்கள்.; 3குழந்தையை நீ அடக்கம் செய்து விட்டாயா?என்று.அந்தப் பெண்மணி சொல்கின்றார்; ஆம் அல்லாஹ்வின் தூதரே.

இந்த நேரத்தில் அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் கூறிய ஆறுதலைப் பாருங்கள்.பாதுகாப்பான ஒரு தடுப்பைக் கொண்டு நரக நெருப்பிலிருந்து நீ பாதுகாப்பு பெற்று விட்டாய் என்று. (6)

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம்,எண் : 4770.

இந்த உலகத்தில் முஃமினுக்கு எந்த அளவு பெரிய சோதனையாக இருக்கின்றதோ? அது மறுமையில் அவனுக்கு மிகப்பெரிய வெகுமதியாக மாறிவிடும்.

மூன்று குழந்தைகளை இழந்து விட்ட அந்தப் பெண்மணிக்கு அல்லாஹ்வின் தூதர் சொன்னார்கள். நரக நெருப்பை கொண்டு பாதுகாப்பான தடவிக்கொண்டு நீ பாதுகாப்புப் பெற்று விட்டாய்.

மேலும் சொன்னார்கள் :

யாருக்கு மூன்று குழந்தைகள் இறந்து விடுமோ, அவர்கள் பருவ வயதை அடைவதற்கு முன், அந்தக் குழந்தைகள் அவர்களுடைய பெற்றோர்களுக்கு நரக நெருப்பிலிருந்து பாதுகாக்கும் பாதுகாப்பாக இருப்பார்கள்.

அப்போது அபூதர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! எனக்கு இரண்டு குழந்தைகள் இறந்திருக்கின்றார்கள். அப்பொழுது ரசூலுல்லாஹ் சொன்னார்கள்; இரண்டு குழந்தையாக இறந்தாலும் நன்மை உண்டு.

அப்பொழுது அங்கிருந்த அபூ முன்திர் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கேட்கின்றார்கள். ஒரு குழந்தை இறந்தாலுமா?என்று.அல்லாஹ்வுடைய தூதர் சொன்னார்கள்; ஆம் ஒரு குழந்தை இறந்தாலும் சரி.(7)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னது அஹ்மத், எண் : 4087.

அந்த இழப்பு என்பது அந்தப் பெற்றோர்களுக்கு தான் தெரியும். பருவ வயதை அடையாத சின்ன குழந்தை பிறந்த உடனே அல்லது பிறந்து சில மாதங்களில் இறக்கும் பொழுது அந்தப் பெற்றோர்கள் படக்கூடிய மன வேதனை கடுமையானது.

அதற்கு அவர்கள் பொறுமையாக இருந்தார்களேயானால் கண்டிப்பாக அல்லாஹு தஆலா அந்த குழந்தையை அவர்களுக்கு நரகத்திலிருந்து பாதுகாக்கக்கூடிய கேடயமாக ஆக்கிவிடுகின்றான்.

அதுமட்டுமா? முஸ்லிம்களுடைய சோதனை உடைய வெகுமதிகளைப் பாருங்கள்.

அல்லாஹ்வின் தூதர் அவர்கள் சொன்னார்கள்:

குழந்தை முழுமையடையாமல் குறை பிரசவத்தில் பிறந்து விட்டாலும்,தன்னுடைய தாயின் தொப்புள் கொடியை இழுத்துக் கொண்டு அந்த குழந்தை சொர்க்கத்திற்கு செல்லும்.அந்தத் தாய் பொறுமையாக இருந்து அல்லாஹ்விடத்தில் நன்மை எதிர்பார்ப்பாலேயானால். (8)

அறிவிப்பாளர் : முஆத் இப்னு ஜபல் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : இப்னு மாஜா,எண் : 1598.

இதுபோன்ற தரஜாக்களை நாம் எதிர்பார்த்து அல்லாஹ்விடத்தில் ஆதரவு வைக்க வேண்டும்.

மற்றுமொரு ஹதீஸில் ரசூலுல்லாஹ் சொன்னார்கள்:

مَا يُصِيبُ الْمُسْلِمَ مِنْ نَصَبٍ وَلَا وَصَبٍ وَلَا هَمٍّ وَلَا حُزْنٍ وَلَا أَذًى وَلَا غَمٍّ حَتَّى الشَّوْكَةِ يُشَاكُهَا إِلَّا كَفَّرَ اللَّهُ بِهَا مِنْ خَطَايَاهُ

ஒரு முஸ்லிமுக்கு கவலை, களைப்பு, மன துக்கம் ஏற்பட்டால், எந்த ஒரு துக்கம் ஏற்பட்டாலும் சரி, ஏன் ஒரு முள் குத்தினாலும் சரி, அல்லாஹ் அவருடைய பாவங்களை மன்னித்து விடுகின்றான். அல்லாஹுதஆலா உன்னுடைய குற்றங்களை போக்கி விடுகின்றான்.

முஃமினான ஆண்களுக்கும் முஃமினான பெண்களுக்கும் அவர்களுடைய உயிரில் அவர்களுடைய குடும்பத்தில் அவர்களுடைய பிள்ளைகளில் அவர்களுடைய செல்வத்தில் சோதனைகள் ஏற்பட்டுக் கொண்டே இருக்கும். நாளை மறுமையில் அல்லாஹ்வை அவர்கள் சந்திக்கும் போது அவர்கள் மீது எந்த பாவமும் இருக்காது. எந்த குற்றமும் இருக்காது.

அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : புகாரி,எண் : 5210.

இவையெல்லாம் அல்லாஹ்வின் தூதர் அவர்கள் கூறிய அழகிய பரிகாரம்.

அல்லாஹ்விடத்தில் நாம் நன்மைகளை ஆதரவு வைக்க வேண்டும். இந்த சோதனையால் எனக்கு அல்லாஹ்விடத்தில் நெருக்கம் ஏற்பட வேண்டுமென்றால் இந்த சோதனை எனக்கு நன்மையாக வேண்டும் என்றால் சோதனை குறித்து ரசூலுல்லாஹ் என்ன நற்செய்தியை கூறியுள்ளார்களோ?அவற்றை நாம் ஆதரவு வைக்க வேண்டும்.

ஒரு மனிதனை பிரியப் படுவதால் அல்லாஹ் சோதிப்பான். ஒரு மனிதன் தன்னைவிட்டு தூரமாக வேண்டும் என்பதால் அல்லாஹ் சோதிக்கவில்லை. ஒரு மனிதனை தன்னை நெருக்கமாக வைப்பதற்காக அல்லாஹ் சோதிக்கின்றான்.

இந்த சோதனைகளுக்குப் பிறகு அல்லாஹ் எனக்கு உயர்வான கூலிகளை கொடுக்க இருக்கின்றான் என்று குர்ஆனுடைய ஆயத்துக்கள் ரசூலுல்லாஹ் அவர்களுடைய ஹதீஸ்களைப் படித்து அந்த நன்மைகளை ஆதரவு வைக்க வேண்டும்.

அடுத்து முக்கியமான ஒன்று, இந்த சோதனைகளை நாம் எப்பொழுதும் நினைத்துப் பார்த்துக் கொண்டே இருக்கக் கூடாது. எனக்கு இப்படி ஆகிவிட்டது! எனக்கு அப்படி ஆகிவிட்டது! என்று கடந்த காலங்களில் நடந்ததை நினைத்துப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது.

அது மனிதனுடைய உள்ளத்தில் ஒரு பலவீனத்தை ஏற்படுத்தலாம். அல்லது விதியின் மீது ஒரு அதிருப்தியை ஏற்படுத்தலாம். அல்லது அவனை அமல்களில் சோர்வடையச் செய்து விடலாம். ஆகவே அந்த சோதனைகளை திரும்பத் திரும்ப நினைத்துக் கொண்டே இருக்கக்கூடாது.

அதுபோன்று, தனிமையில் இருந்து அந்த சிந்தனைகள் சிதறுவதற்கு நாம் இடமளிக்கக் கூடாது.

அதுபோன்று, சோதனைகளை குறித்து பிறரிடத்தில் எப்பொழுதுமே புலம்பிக் கொண்டே இருப்பது கூடாது.

ஆகவே, அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹ்வுடைய குர்ஆனும் ரசூல் கூறிய ஹதீஸும் நமக்கு அழகிய வழிகாட்டுதல்களை கொடுத்திருக்கின்றது. இந்த உலகத்தினுடைய சோதனைகளில் நாம் அழகிய முறையில் இருக்க வேண்டும். பொறுமையாக இருக்க வேண்டும். அல்லாஹ்வைப் புகழ வேண்டும்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் என்று ஓத வேண்டும். யா அல்லாஹ்! இந்த சோதனையிலிருந்து எனக்கு அழகிய பிரதிபலனை கொடு. இந்த சோதனையிலிருந்து எனக்கு அழகிய விடுதலையை கொடு. இந்த சோதனையை எனக்கு இலகுவாக்கி கொடு என்று அல்லாஹ்விடத்தில் துஆ செய்ய வேண்டும்.

அல்லாஹ்விடத்தில் இப்படி துஆ கேட்கும் பொழுதும், பொறுமையாக இருக்கும் பொழுதும், நன்மைகளை அடைவதோடு அல்லாஹ்வின் நெருக்கத்தையும் நாம் அடைந்து கொள்கின்றோம். மறுமையில் அல்லாஹ்வுடைய மிகப்பெரிய சொர்க்கத்தை அடைந்து கொள்ளக் கூடிய நற்பாக்கியத்தை நாம் அடைந்து கொள்கின்றோம்.

சொர்க்கத்தில் கேள்வி கணக்கு இல்லாமல் விசாரணை இல்லாமல் விரைவாக சொர்க்கம் செல்லக் கூடியவர்கள் பொறுமையாளர்கள். (அல்குர்ஆன் 39:10)

அந்தப் பொறுமையாளருடைய கூட்டத்தில் அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா என்னையும் உங்களையும் ஆக்கி அருள்வானாக! அல்லாஹ் நம்முடைய சோதனைகளை இலகுவாக்கி கொடுத்து நம்மீது தாங்க முடியாத சோதனைகளை கொடுத்து விடாமல் நம்மை பாதுகாப்பானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ عَنْ مُصْعَبِ بْنِ سَعْدٍ عَنْ أَبِيهِ قَالَقُلْتُ يَا رَسُولَ اللَّهِ أَيُّ النَّاسِ أَشَدُّ بَلَاءً قَالَ الْأَنْبِيَاءُ ثُمَّ الصَّالِحُونَ ثُمَّ الْأَمْثَلُ فَالْأَمْثَلُ مِنْ النَّاسِ يُبْتَلَى الرَّجُلُ عَلَى حَسَبِ دِينِهِ فَإِنْ كَانَ فِي دِينِهِ صَلَابَةٌ زِيدَ فِي بَلَائِهِ وَإِنْ كَانَ فِي دِينِهِ رِقَّةٌ خُفِّفَ عَنْهُ وَمَا يَزَالُ الْبَلَاءُ بِالْعَبْدِ حَتَّى يَمْشِيَ عَلَى ظَهْرِ الْأَرْضِ لَيْسَ عَلَيْهِ خَطِيئَةٌ (مسند أحمد 1400 -)

குறிப்பு 2)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ أَنْبَأَنَا اللَّيْثُ بْنُ سَعْدٍ عَنْ يَزِيدَ بْنِ أَبِي حَبِيبٍ عَنْ سَعْدِ بْنِ سِنَانٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ عِظَمُ الْجَزَاءِ مَعَ عِظَمِ الْبَلَاءِ وَإِنَّ اللَّهَ إِذَا أَحَبَّ قَوْمًا ابْتَلَاهُمْ فَمَنْ رَضِيَ فَلَهُ الرِّضَا وَمَنْ سَخِطَ فَلَهُ السُّخْطُ (سنن ابن ماجه 4021 -)

குறிப்பு 3)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ عَنْ ثَابِتٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقَدْ أُوذِيتُ فِي اللَّهِ وَمَا يُؤْذَى أَحَدٌ وَلَقَدْ أُخِفْتُ فِي اللَّهِ وَمَا يُخَافُ أَحَدٌ وَلَقَدْ أَتَتْ عَلَيَّ ثَالِثَةٌ وَمَا لِي وَلِبِلَالٍ طَعَامٌ يَأْكُلُهُ ذُو كَبِدٍ إِلَّا مَا وَارَى إِبِطُ بِلَالٍ (سنن ابن ماجه 148 -)

குறிப்பு 4)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ نُمَيْرٍ قَالَ أَخْبَرَنَا إِسْمَاعِيلُ عَنْ أَبِي بَكْرِ بْنِ أَبِي زُهَيْرٍ قَالَ أُخْبِرْتُ أَنَّ أَبَا بَكْرٍ قَالَ يَا رَسُولَ اللَّهِ كَيْفَ الصَّلَاحُ بَعْدَ هَذِهِ الْآيَةِ }لَيْسَ بِأَمَانِيِّكُمْ وَلَا أَمَانِيِّ أَهْلِ الْكِتَابِ مَنْ يَعْمَلْ سُوءًا يُجْزَ بِهِ{فَكُلَّ سُوءٍ عَمِلْنَا جُزِينَا بِهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غَفَرَ اللَّهُ لَكَ يَا أَبَا بَكْرٍ أَلَسْتَ تَمْرَضُ أَلَسْتَ تَنْصَبُ أَلَسْتَ تَحْزَنُ أَلَسْتَ تُصِيبُكَ اللَّأْوَاءُ قَالَ بَلَى قَالَ فَهُوَ مَا تُجْزَوْنَ بِهِ (مسند أحمد 65 -)

குறிப்பு 5)

حَدَّثَنَا مُسَدَّدٌ حَدَّثَنَا يَحْيَى عَنْ عِمْرَانَ أَبِي بَكْرٍ قَالَ حَدَّثَنِي عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ قَالَ قَالَ لِي ابْنُ عَبَّاسٍ أَلَا أُرِيكَ امْرَأَةً مِنْ أَهْلِ الْجَنَّةِ قُلْتُ بَلَى قَالَ هَذِهِ الْمَرْأَةُ السَّوْدَاءُ أَتَتْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ إِنِّي أُصْرَعُ وَإِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي قَالَ إِنْ شِئْتِ صَبَرْتِ وَلَكِ الْجَنَّةُ وَإِنْ شِئْتِ دَعَوْتُ اللَّهَ أَنْ يُعَافِيَكِ فَقَالَتْ أَصْبِرُ فَقَالَتْ إِنِّي أَتَكَشَّفُ فَادْعُ اللَّهَ لِي أَنْ لَا أَتَكَشَّفَ فَدَعَا لَهَا حَدَّثَنَا مُحَمَّدٌ أَخْبَرَنَا مَخْلَدٌ عَنْ ابْنِ جُرَيْجٍ أَخْبَرَنِي عَطَاءٌ أَنَّهُ رَأَى أُمَّ زُفَرَ تِلْكَ امْرَأَةً طَوِيلَةً سَوْدَاءَ عَلَى سِتْرِ الْكَعْبَةِ (صحيح البخاري 5220 -)

குறிப்பு6)

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَمُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ نُمَيْرٍ وَأَبُو سَعِيدٍ الْأَشَجُّ وَاللَّفْظُ لِأَبِي بَكْرٍ قَالُوا حَدَّثَنَا حَفْصٌ يَعْنُونَ ابْنَ غِيَاثٍ ح و حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ حَدَّثَنَا أَبِي عَنْ جَدِّهِ طَلْقِ بْنِ مُعَاوِيَةَ عَنْ أَبِي زُرْعَةَ بْنِ عَمْرِو بْنِ جَرِيرٍ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ أَتَتْ امْرَأَةٌ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِصَبِيٍّ لَهَا فَقَالَتْ يَا نَبِيَّ اللَّهِ ادْعُ اللَّهَ لَهُ فَلَقَدْ دَفَنْتُ ثَلَاثَةً قَالَ دَفَنْتِ ثَلَاثَةً قَالَتْ نَعَمْ قَالَ لَقَدْ احْتَظَرْتِ بِحِظَارٍ شَدِيدٍ مِنْ النَّارِ قَالَ عُمَرُ مِنْ بَيْنِهِمْ عَنْ جَدِّهِ و قَالَ الْبَاقُونَ عَنْ طَلْقٍ وَلَمْ يَذْكُرُوا الْجَدَّ

குறிப்பு7)

حَدَّثَنَا يَزِيدُ يَعْنِي ابْنَ هَارُونَ أَخْبَرَنَا الْعَوَّامُ حَدَّثَنِي أَبُو مُحَمَّدٍ مَوْلَى عُمَرَ بْنِ الْخَطَّابِ عَنْ أَبِي عُبَيْدَةَ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيُّمَا مُسْلِمَيْنِ مَضَى لَهُمَا ثَلَاثَةٌ مِنْ أَوْلَادِهِمَا لَمْ يَبْلُغُوا حِنْثًا كَانُوا لَهُمَا حِصْنًا حَصِينًا مِنْ النَّارِ قَالَ فَقَالَ أَبُو ذَرٍّ مَضَى لِي اثْنَانِ يَا رَسُولَ اللَّهِ قَالَ وَاثْنَانِ قَالَ فَقَالَ أُبَيٌّ أَبُو الْمُنْذِرِ سَيِّدُ الْقُرَّاءِ مَضَى لِي وَاحِدٌ يَا رَسُولَ اللَّهِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَوَاحِدٌ وَذَلِكَ فِي الصَّدْمَةِ الْأُولَى (مسند أحمد 4087 -)

குறிப்பு8)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ هَاشِمِ بْنِ مَرْزُوقٍ حَدَّثَنَا عَبِيدَةُ بْنُ حُمَيْدٍ حَدَّثَنَا يَحْيَى بْنُ عُبَيْدِ اللَّهِ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ مُسْلِمٍ الْحَضْرَمِيِّ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَالَّذِي نَفْسِي بِيَدِهِ إِنَّ السِّقْطَ لَيَجُرُّ أُمَّهُ بِسَرَرِهِ إِلَى الْجَنَّةِ إِذَا احْتَسَبَتْهُ (سنن ابن ماجه 1598 -)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/