குபைபாக இரு! | Tamil Bayan - 618
بسم الله الرحمن الرّحيم
குபைபாக இரு!
إنَّ الْحَمْدَ لِلهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான்:
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள்: நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள்: நம்பிக்0கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
அல்லாஹு சுப்ஹானஹுதஆலாஅவனுடைய அழகிய திருப்பெயர்களில் ஒன்று العزيز-அல் அஜீஸ். அவன் மிகமிக கண்ணியத்திற்கு உரியவன். அவன் தனது கண்ணியத்தால் அனைவரையும் மிகைத்தவன். யாரும் அவனை மிகைக்க முடியாது.எல்லோரும் அவனுக்கு பணிந்தே ஆகவேண்டும். அவன் யாருக்கும் பணிய வேண்டிய அவசியமில்லை.
சூரத்துல் இஸ்ரா உடைய இறுதி வசனத்தில் ரப்புல் ஆலமீன் தன்னுடைய வல்லமையை,தன்னுடைய புகழை,தன்னுடைய பேராற்றலை இப்படி குறிப்பிடுகின்றான்;
وَقُلِ الْحَمْدُ لِلَّهِ الَّذِي لَمْ يَتَّخِذْ وَلَدًا وَلَمْ يَكُنْ لَهُ شَرِيكٌ فِي الْمُلْكِ وَلَمْ يَكُنْ لَهُ وَلِيٌّ مِنَ الذُّلِّ وَكَبِّرْهُ تَكْبِيرًا
(நபியே!) கூறுவீராக: ‘‘புகழ் அனைத்தும் அல்லாஹ்வுக்குரியதே! அவனுக்கு ஒரு சந்ததியுமில்லை. அவனுடைய ஆட்சியில் அவனுக்குக் கூட்டாளி ஒருவருமில்லை. அவனுக்கு பலவீனம் இல்லை என்பதால் அவனுக்கு உதவியாளன் ஒருவனுமில்லை.'' ஆகவே, அவனை மிக மிகப் பெருமைப்படுத்திக் கூறுவீராக! (அல்குர்ஆன் 17 :111)
வசனத்தின் கருத்து : நபியே! நீங்கள் புகழ்ந்து கூறுங்கள்;உங்களுடைய ரப்பை துதித்துப் போற்றுங்கள்;எல்லா புகழும் எல்லா காலங்களிலும் எல்லா இடங்களிலும் எல்லா நேரங்களிலும் அல்லாஹ் ஒருவனுக்கே. அல்ஹம்துலில்லாஹ்!
அவன் யாரையும் தனக்கு சந்ததிகளாக பிள்ளைகளாக எடுத்துக்கொள்ளவில்லை. அல்லாஹ்விற்கு அந்த தேவை இல்லை. அல்லாஹ்வுடைய ஆட்சியில் வானம் பூமி இப்படி இந்தப் பிரபஞ்சத்தை யாருடைய உதவியும் இல்லாமல் அவன் தன்னுடைய அறிவால் ஞானத்தால் தன்னுடைய திட்டமிடுதலால் மிக அழகிய முறையில் படைத்தானோ அப்படித்தான் அல்லாஹு ரப்புல் ஆலமீன் தன்னுடைய அறிவால் தன்னுடைய ஞானத்தால் தன்னுடைய திட்டமிடுதலால் அவன் தனியாக இவற்றை நிர்வகித்து வருகின்றான். யாரும் இதில் அவனுக்கு உதவியாளன் இல்லை.
அல்லாஹ்வுடைய ஆட்சியில் யாரும் அவனுக்குப் பங்காளி இல்லை. தனித்து படைத்தான். தனித்தே இயக்கிக் கொண்டு இருக்கின்றான். இவற்றை அழிப்பதும் அவன் அவனுடைய கட்டளையைக் கொண்டு யாருடைய உதவியும் இல்லாமல் அழித்துவிடுவான். அழிக்க நினைக்கும் போது.
அடுத்து சொல்கின்றான்;
அல்லாஹு தஆலா பலவீனப்பட்டு விட்டான் என்பதற்காக அவனுக்கு யாரும் நண்பர் இல்லை.
அல்லாஹ்விற்கு நண்பர்கள் இருக்கின்றார்கள்.அவர்கள் அல்லாஹ்வின் அன்பினால் அல்லாஹ்வை நேசிக்கின்றார்கள்.அல்லாஹ் அவர்களை நேசிக்கின்றான் என்ற அடிப்படையில் அன்பின் அடிப்படையில் அல்லாஹு தஆலா தனக்கு நண்பர்களை நேசர்களை வைத்திருக்கிறானே தவிர தணக்கு பலவீனம் ஏற்பட்டால் இவர்கள் உதவுவார்கள் என்பதற்காக அல்லாஹ்விற்கு எந்த நண்பரும் இல்லை.
இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கின்ற ஒரு ஹதீஸ். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறுகிறார்கள்;
அல்லாஹு தஆலாவை விட புகழை விரும்பக் கூடியவர் யாரும் இல்லை.அல்லாஹு தஆலா தான் புகழப்படுவதை விரும்புகின்றான். (1)
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, ௭ண் : 7403.
அடியார்கள் சதா அவனைப் புகழ்வதையும் துதித்துக் கொண்டு இருப்பதையும் அவனுடைய பெருமையை பேசுவதையும் அவன் விரும்புகின்றான். அல்லாஹ்வுடைய அடியார்களாகிய நாம்,அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டிருக்கக்கூடிய நாம் நமது உள்ளத்தில் பணிவு உள்ளவர்களாக இருக்கின்ற அதே நேரத்தில் அல்லாஹ்வுடைய கண்ணியம் நமக்கு கொடுக்கப்பட்டு உள்ளது. அல்லாஹு சுப்ஹானஹுதஆலாஅவனுடைய கண்ணியத்தால் நம்மை கண்ணியப்படுத்தி வைத்திருக்கின்றான்.
அல்லாஹு தஆலா கூறுகின்றான்;
وَلِلَّهِ الْعِزَّةُ وَلِرَسُولِهِ وَلِلْمُؤْمِنِينَ
கண்ணியம்,மதிப்பு,மரியாதை,உயர்வு,அந்தஸ்து அல்லாஹ்விற்கு உரியது.பிறகு அல்லாஹ்வுடைய தூதருக்கு உரியது.பிறகு அவனை நம்பிக்கை கொண்ட முஃமின்களுக்கு உரியது. (அல்குர்ஆன் 63 : 8)
அல்லாஹு தஆலா இந்த தூய திரு கலிமாவை கொண்டு,வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்ற அந்த தவ்ஹீது உடைய திருவாக்கியத்தை கொண்டு நம்மை கண்ணியப்படுத்தி இருக்கின்றான்.
மக்களெல்லாம் பிற தெய்வங்களை படைப்புகளை வணங்கி தங்களைக் கேவலப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். படைத்த அல்லாஹ்வைத் தவிர படைப்புகளுக்கு முன்னால் தலைகுனிந்து அந்தப் படைப்புகளை வணங்கி,அந்தப் படைப்புகளுக்கு முன்னால் தங்களது பயத்தை பணிவை ஆதரவை வெளிப்படுத்தி தங்களைத் தாங்களே கேவலப் படுத்திக் கொண்டிருக்கும் போது, தங்களைத் தாங்களே முட்டாளாக்கி கொண்டிருக்கும்போது,
அல்லாஹு சுப்ஹானஹுதஆலா முஃமின்களாகிய நம்மை,இந்த கலிமாவை ஏற்றுக் கொண்ட நம்மை கலிமாவை கொண்டு கண்ணியப்படுத்தி இருக்கின்றான். அல்லாஹு தஆலா நம்மை அறிவாளிகளாக புத்திசாலிகளாக சுய மரியாதை உடையவர்களாக ஆக்கி வைத்திருக்கின்றான்.
ரப்புல் ஆலமீன் கேட்கின்றான்;
وَمَنْ يَرْغَبُ عَنْ مِلَّةِ إِبْرَاهِيمَ إِلَّا مَنْ سَفِهَ نَفْسَهُ
இப்ராஹிம் உடைய தவ்ஹீது கொள்கையை புறக்கணிப்பவன் ஒரு சர்வ முட்டாளாகத்தான் இருக்க முடியும். மிகப்பெரிய மடையனாகத்தான் இருக்க முடியும். தன்னைத் தானே அறிவிலியாக ஆக்கிக் கொண்டவனைத் தவிர வேறு யாரும் வேறு யாரும் இப்ராஹீமுடைய கொள்கையை புறக்கணிக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 2 : 130)
சகோதரர்களே இந்த கலிமாவை கொண்டு,இந்த தீனுல் இஸ்லாமை கொண்டு அல்லாஹு தஆலா நம்மை கண்ணியப்படுத்தி இருக்கின்றான். இந்த கலிமா கண்ணியத்தின் உடைய கலிமா. இந்த இஸ்லாம் கண்ணியத்தின் உடைய மார்க்கம். உயர்வு உடைய மார்க்கம். மதிப்புடைய மார்க்கம். அடிமைகளை சுதந்திரமானவர்களுக்கு சமமாக நிறுத்திய மார்க்கம் இது.
அல்லாஹ்விற்கு முன்னால் மனிதர்களெல்லாம் சமம். மனிதர்களுக்கு மத்தியில் தக்வாவை தவிர வேறு எந்த ஏற்றத்தாழ்வும் இல்லை என்று ஈமானைக் கொண்டு, இஸ்லாமைக் கொண்டு கண்ணியப்படுத்திய மார்க்கம். அல்லாஹு தஆலா நமக்கு கொடுத்திருக்கக் கூடிய மார்க்கம்.
يَاأَيُّهَا النَّاسُ إِنَّا خَلَقْنَاكُمْ مِنْ ذَكَرٍ وَأُنْثَى وَجَعَلْنَاكُمْ شُعُوبًا وَقَبَائِلَ لِتَعَارَفُوا إِنَّ أَكْرَمَكُمْ عِنْدَ اللَّهِ أَتْقَاكُمْ إِنَّ اللَّهَ عَلِيمٌ خَبِيرٌ
மக்களே!உங்களை குலங்களாக கோத்திரங்களாக நாம் மாத்தியிருகின்றோம்.நீங்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொள்வதற்காக,இனம் கண்டு கொள்வதற்காக.ஆனால் உங்களுடைய கண்ணியம்,மதிப்பு,மரியாதை,சமூக அந்தஸ்து அல்லாஹ்வுடைய தக்வாவை கொண்டுதான். (அல்குர்ஆன் 49 : 13)
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதை நமக்குத் தெளிவு படுத்தினார்கள். நம் உள்ளங்களில் ஆழப்பதிய வைத்தார்கள்.
لَا فَضْلَ لِعَرَبِيٍّ عَلَى عَجَمِيٍّ، وَلَا لِعَجَمِيٍّ عَلَى عَرَبِيٍّ، وَلَا أَحْمَرَ عَلَى أَسْوَدَ، وَلَا أَسْوَدَ عَلَى أَحْمَرَ، إِلَّا بِالتَّقْوَى
ஒரு அரபி மற்றவரை பார்க்கிலும் பெருமை பேசக்கூடாது. தன்னை மேன்மைப்படுத்தி கொள்ளக்கூடாது. மற்றவர்கள் ஒரு அரபியரைப் பார்த்து தங்களை மேன்மைப்படுத்தி கொள்ளக்கூடாது. ஒரு வெள்ளைக்காரர் ஒரு கருப்பரை பார்த்து பெருமை பேசக்கூடாது. ஒரு கருப்பர் ஒரு வெள்ளையரை பார்த்து பெருமை பேசக்கூடாது. மேன்மை சிறப்பு என்பது அல்லாஹ்வுடைய தக்வாவை கொண்டுதான்.
அறிவிப்பாளர் அபூ நழ்ரா ரலியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னது அஹ்மது, எண் : 22698.
மேலும் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள் ;
النَّاسُ كُلُّهُمْ بَنُو آدَمَ وَآدَمُ خُلِقَ مِنْ تُرَابٍ
நீங்கள் எல்லாம் ஆதமில் இருந்து வந்தவர்கள். ஆதம் மண்ணிலிருந்து வந்தவர்.
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 3955, தரம் : ஹசன்(அல்பானி)
சகோதரர்களே! அல்லாஹு சுப்ஹானஹுதஆலாநமக்கு அத்தகைய உயர்வான கண்ணியமிக்க மார்க்கம் இஸ்லாமை கொடுத்திருக்கின்றான். படிப்பால் நாம் குறைவாக இருக்கலாம்.இந்த உலகத்தில் அல்லது நாம் வாழக்கூடிய நம் நாட்டில் எண்ணிக்கையில் குறைவானவர்களாக இருக்கலாம். அல்லது பதவிகளில் நாம் குறைவானவர்களாக இருக்கலாம்.வேறு எந்த விஷயத்தில் வேண்டுமானாலும் நாம் குறைவானவர்களாக இருக்கலாம். ஆனால் அல்லாஹ்வுடைய இந்த மார்க்கத்தால் நாம் மிக கண்ணியமானவர்கள். அல்லாஹ் நமக்கு கொடுத்திருக்கக்கூடிய மார்க்கம் மிக கண்ணியமான மார்க்கம்.
அந்த மார்க்கத்தின் கண்ணியத்தை உள்ளத்தில் நாம் உணர வேண்டும். ஒரு முஸ்லிம் பிற மக்களுக்கு முன்னால் தன்னை தாழ்ந்தவனாக உணர்ந்து கொள்ளக் கூடாது. தன்னைத் தாழ்த்திக் கொள்ளக் கூடாது.
இஸ்லாமை ஏற்றுக்கொண்ட, அல்லாஹ்வுக்கு முன்னால் பணிந்த, படைத்த ரப்பை தன்னுடைய ரப்பாக ஏற்றுக்கொண்ட ஒருவனுக்கு முன்னால் தான் ஒரு முஸ்லிம் பணிவாக இருக்க முடியுமே தவிர படைத்த இறைவனை நிராகரிக்கின்ற,படைத்த இறைவனோடு போர் செய்கின்ற,படைத்த இறைவனை மறுக்கக் கூடிய ஒருவனுக்கு முன்னால் அவன் எவ்வளவுதான் பெரிய ஆட்சியாளனாக,மிகப்பெரிய வல்லமை உள்ளவனாக,பெரிய மன்னனாக இருந்தாலும் சரி,அவனுக்கு முன்னால் தலைசாய்க்கவோ,பணியவோ,அவனுக்கு முன்னால் இறங்கி வரவோ முடியாது. இது முஸ்லிம்களுடைய அடையாளம் அல்ல.
அல்லாஹு ரப்புல் ஆலமீன் குர்ஆனில் சொல்லக்கூடிய வசனங்களைப் பாருங்கள்; கண்ணியத்திற்குரிய ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் உருவாக்கிய அந்த சஹாபாக்களின் சமுதாயத்தைப் பாருங்கள்;
மக்காவிலே பலவீனப்பட்டு இருந்தார்கள்; சிறுபான்மையினராக இருந்தார்கள்; ஒடுக்கப்பட்டு இருந்தார்கள்;மிகப்பெரிய இன்னல்களுக்கும் சிரமங்களுக்கும் ஆளாகி இருந்தார்கள்.
ஆனால் அதே நேரத்தில் அவர்கள் மார்க்கத்தை விட்டுக்கொடுக்கவில்லை.தான் முஸ்லிம் என்பதை வெளிப்படுத்துவதில்,நான் அல்லாஹ்வை ரப்பாக ஏற்றுக் கொண்டு இருக்கிறேன், நான் அல்லாஹ்வை வணங்குவேன் என்று துணிந்து சொல்வதில் அவர்கள் ஒருபோதும் இறங்கி வந்தது இல்லை.
பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய சம்பவத்தை கொஞ்சம் நினைத்து பாருங்கள்.உமையா இப்னு கலஃப் உடைய அடிமையாக இருந்தார்கள்.நன்றாக தெரியும்;இந்த உம்மையா எப்பேற்ப்பட்ட எதிரி என்று. அல்லாஹ்வுடைய தூதரையும் முஸ்லிம்களையும் வம்புக்கு இழுப்பதில் அவர்களுக்கு தொந்தரவு கொடுப்பதில் அப்போது உமையாவை மிஞ்சி வேறு யாருமில்லை. அபூஜஹலோ அபூலஹபோ இருந்திருக்கலாம். ஆனால் இந்த மூவரும் ஒரே தரத்தில் இருந்தார்கள். அவர்களின் அடிமை தான் பிலால் ரலியல்லாஹு அன்ஹு.
நன்றாக தெரியும்;நான் இப்போது லா யிலாஹ இல்லல்லாஹ் என்று கூறினால் என்ன நடக்கும் என்று. இங்குதான் பிலால் உடைய சுயமரியாதையை பார்க்கின்றோம். பிலால் உடைய உள்ளத்தில் இருந்த வீரத்தை பார்க்கின்றோம். பிலால் உடைய உள்ளத்தில் இருந்த ஈமானின் கண்ணியத்தைப் பார்க்கின்றோம்.
லா யிலாஹ இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் என்ற தூய திரு கலிமாவை தன்னுடைய எஜமானனுக்கு முன்னால் உரக்க சொல்கின்றார்கள். உமையா இப்னு கலப் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை கட்டியவர்களாக மக்காவின் பாலைவன வெயிலுக்கு இழுத்து செல்கின்றான். அவர்களைப் படுக்க வைத்து அவர்களின் நெஞ்சில் மேல் பாறாங்கல்லை வைத்து இதே நிலையிலே இருக்க வேண்டும். ஒன்று நீ சாக வேண்டும். இல்லை என்றால் முஹம்மதை நிராகரிக்க வேண்டும். இல்லை என்றால் லாத் உஸ்ஸா கடவுள்களை வணங்க வேண்டும்.
நினைத்துப்பாருங்கள்! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அழுதார்கள். ஆனால் உதவி செய்யக் கூடிய நிலையில் இல்லை. மேலும் சில தோழர்கள் இருந்தார்கள். அந்த உம்மையா என்ற அநியாயக்காரரிடமிருந்து பிலாலை காப்பாற்றக் கூடிய நிலையில் இல்லை. இத்தனை இன்னல்களுக்கு இடையில் அந்த பிலால் உடைய உரத்த குரலை பாருங்கள்.
அஹத் அஹத்! அல்லாஹ் ஒருவன்! அல்லாஹ் ஒருவன்! இதே வார்த்தையை சொல்லி கொண்டே இருந்தார்கள். உமையா உடைய கோபம் அதிகரித்தது.
பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கழுத்தில் சங்கிலியை வைத்து கட்டி சிறுவர்களுடைய கையில் கொடுக்கின்றான். அந்த சிறுவர்கள் பிலால் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை இழுத்துச் செல்கிறார்கள். கற்களால் அடிக்கின்றார்கள். பிலால் ரலியல்லாஹு அன்ஹு ஒரே வார்த்தையை சொல்லிக் கொண்டே இருக்கின்றார்கள்.
ரப்பியல்லாஹ் -அஹதுன் அஹதுன் என்னுடைய ரப்பு அல்லாஹ்; அவன் ஒருவன்; அவன் ஒருவன் என்ற தூய திருவாசகத்தை கலிமாவை சொல்லிக் கொண்டே வந்தார்கள். அந்த பிலாலை மக்கள் அடித்துக்கொண்டே செல்கின்றார்கள்.
நூல் : அர்ரஹீக் அல்மக்தூம்.
பிலால் ரலியல்லாஹு அன்ஹு கூறியதாக இமாம் ஷஃப்ரஹிமஹுல்லாஹ் கூறுகின்றார்கள்; இதைவிட ஒரு வார்த்தை இந்த காஃபிர்களை கோபமூட்டும் என்று தெரிந்திருந்தால் அந்த வார்த்தையை நான் சொல்லியிருப்பேன்.
அறிவிப்பாளர் அபூநழ்ரா ரலியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னது அஹ்மது, எண் : 22391.
சகோதரர்களே! இதுதான் கண்ணியம்; இதுதான் இஸ்லாம் கொடுத்த கண்ணியம்; ஈமான் கொடுத்த கண்ணியம்; இந்த கண்ணியத்தை யாரிடத்திலும் நாம் விலைபேசி விடமுடியாது. இதிலே யாரிடத்திலும் நாம் சமரசம் செய்து விடமுடியாது.
ஆட்சியை விட்டு விடலாம். அதிகாரத்தை விட்டுவிடலாம். நம்முடைய வாழ்க்கை வசதிகள் எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுக்கலாம். ஆனால் அல்லாஹ்வுடைய தீனை அல்லாஹ்வுடைய மார்க்கத்தை யாருக்கும் எதற்காகவும் விட்டுக் கொடுக்க முடியாது.
அல்லாஹ் நமக்கு இந்த மார்க்கத்தில் தான் கண்ணியம் வைத்திருக்கின்றான். இந்த உலகத்தில் எதுவாக இருந்தாலும் சரி,அல்லாஹ்வுடைய தீனோடு அல்லாஹ்வுடைய மார்க்கத்தோடு எனக்கு கிடைத்தால் அல்ஹம்துலில்லாஹ்.
இல்லை என்றால் எனக்கு அல்லாஹ்வுடைய மார்க்கம் தான்.ஒட்டுமொத்த துன்யாவே முஃமின்களுக்கு சிறைச்சாலை.ஒட்டுமொத்த உலகமே முஃமின்களுக்கு சோதனை.
الَّذِي خَلَقَ الْمَوْتَ وَالْحَيَاةَ لِيَبْلُوَكُمْ أَيُّكُمْ أَحْسَنُ عَمَلًا
உங்களில் மிகத்தூய்மையான அமல் செய்பவர்கள் யார் என்று சோதிப்பதற்காகவே, அவன் மரணத்தையும், வாழ்க்கையையும் படைத்திருக்கிறான். அவன் (அனைவரையும்) மிகைத்தவன்; மிக மன்னிப்புடையவன் ஆவான். (அல்குர்ஆன் 67 : 2)
إِنَّا خَلَقْنَا الْإِنْسَانَ مِنْ نُطْفَةٍ أَمْشَاجٍ نَبْتَلِيهِ فَجَعَلْنَاهُ سَمِيعًا بَصِيرًا (2) إِنَّا هَدَيْنَاهُ السَّبِيلَ إِمَّا شَاكِرًا وَإِمَّا كَفُورًا
(பின்னர் ஆண், பெண்) கலந்த ஓர் இந்திரியத் துளியைக் கொண்டு நிச்சயமாக நாம்தான் மனிதனைப் படைத்தோம். அவனை நாம் சோதிப்பதற்காகவே, செவியுடையவனாகவும் பார்வையுடையவனாகவும் அவனை ஆக்கினோம்.
பின்னர், நிச்சயமாக நாம் அவனுக்கு நேரான வழியையும் அறிவித்தோம். எனினும், (அதைப் பின்பற்றி நமக்கு) நன்றி செலுத்துபவர்களும் இருக்கின்றனர். (அதை) நிராகரித்துவிடுபவர்களும் இருக்கின்றனர். (அல்குர்ஆன் 76 : 2, 3)
சகோதரர்களே!அல்லாஹு தஆலா முஃமின்களை சோதிப்பான் ஆனால் அந்த சோதனைகளை எல்லாம் முஃமின்கள் எல்லாம் அல்லாஹ்வுடைய தீனை முன்னிறுத்த வேண்டும்;அல்லாஹ்வுடைய மார்க்கத்தை முன்னிறுத்த வேண்டும்;அல்லாஹ்வுடைய மார்க்கம் அடையாளங்களை முன்னிறுத்த வேண்டும்;அதுதான் அவர்களுடைய உண்மையான கண்ணியம்.
ரப்புல் ஆலமீன் சூரத்துல் மாயிதா உடைய 54 -வது வசனத்தில் கூறுவதைப் பாருங்கள்;
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا مَنْ يَرْتَدَّ مِنْكُمْ عَنْ دِينِهِ فَسَوْفَ يَأْتِي اللَّهُ بِقَوْمٍ يُحِبُّهُمْ وَيُحِبُّونَهُ أَذِلَّةٍ عَلَى الْمُؤْمِنِينَ أَعِزَّةٍ عَلَى الْكَافِرِينَ يُجَاهِدُونَ فِي سَبِيلِ اللَّهِ وَلَا يَخَافُونَ لَوْمَةَ لَائِمٍ ذَلِكَ فَضْلُ اللَّهِ يُؤْتِيهِ مَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ
நம்பிக்கையாளர்களே! உங்களில் எவரேனும் தங்கள் மார்க்கத்தில் இருந்து மாறிவிட்டால் (அதனால் அல்லாஹ்வுக்கு நஷ்டமொன்றுமில்லை. உங்களைப் போக்கி) வேறு மக்களை அல்லாஹ் கொண்டு வருவான். அவன் அவர்களை நேசிப்பான்; அவர்களும் அவனை நேசிப்பார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டவர்களிடம் பணிவாக நடந்துகொள்வார்கள்; நிராகரிப்பவர்களிடம் கண்டிப்புடையவர்களாக இருப்பார்கள்; அல்லாஹ்வின் பாதையில் போர் புரிவார்கள். பழிப்பவனின் பழிப்பை அவர்கள் அஞ்சமாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருளாகும். அவன் விரும்பியவர்களுக்குத்தான் இதை அளிக்கிறான். அல்லாஹ் மிக விசாலமானவன், (அனைத்தையும்) நன்கறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 5 : 54)
வசனத்தின் கருத்து : அல்லாஹு தஆலா யாரை பார்த்து இறக்கிய வசனம் எந்த நேரத்திலே இறக்கிய வசனம் எந்த சமூகத்தை பார்த்து ரப்புல் ஆலமீன் பேசுகின்றான்;
அபூபக்ரும், உமரும், உஸ்மானும், அலியும், இப்னு மஸ்ஊதும், அந்த ஹுனஃபாக்களும், அஷ்ரத்துல் முபஷ்ஷராக்களும், பதிரிகளும், உஹதிகளும், அஹ்லுல் பைஆவும் இருந்த அந்த சமுதாயத்தைப் பார்த்து பேசுகின்றான். அல்லாஹு ரப்புல் ஆலமீன் எச்சரிக்கின்றான்.
எப்படிப்பட்ட பலவீனம் உங்களுக்கு தெரியும்;ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய மக்காவுடைய பதிமூன்று ஆண்டு வாழ்க்கை அவர்களால் இஸ்லாமை வெளிப்படுத்த முடியவில்லை. தொழுகையை ஜமாஅத்தாக அல்லாஹ்வுடைய மஸ்ஜிதில் நிறைவேற்ற முடியவில்லை. அவர்கள் ஜமாஅத்தாகத் தொழ வேண்டிய கட்டாயம் ஏற்பட்டபோது பாலைவனங்களுக்கு செல்வார்கள்; மலைகளுக்கு பின்னால் செல்வார்கள்; ஒளிந்து ஒளிந்து தான் தொழ முடியும்.
மதினாவிற்கு வந்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு ஆட்சியை கொடுத்தான். ஆனால் அந்த மதீனாவிலும் அவர்கள் ஒரு குறிப்பிட்ட எண்ணிக்கையில் இருந்தார்கள். மதீனாவைச் சுற்றியுள்ள மக்களெல்லாம் முஷ்ரிக்குகளுக்கு ஆதரவாக இருந்தார்கள்.
எந்த நேரத்திலும் முஷ்ரிக்குகளோ அவர்களுக்கு ஆதரவாளர்களோ அல்லது ரோமர்களோ பாரசீகர்களோ அவர்களுக்கு எதிராக படை எடுத்து அவர்களை முற்றிலும் அழித்து விடலாம் என்ற அச்சுறுத்தலுக்குள்தான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்கா உடைய 10ஆண்டுகால வாழ்க்கையை கழித்தார்கள்.
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மதினாவில் இரவில் தூங்கினால் அவர்களைப் பாதுகாப்பதற்காக ஒன்று இரண்டு நபித்தோழர்கள் எப்போதுமே ரசூலுல்லாஹ் உடைய வீட்டில் இருப்பார்கள். அந்த அளவிற்கு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்களுடைய உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தது.
அல்லாஹு ரப்புல் ஆலமீன் நபிக்கு வசனம் இறக்கினான்;
وَاللَّهُ يَعْصِمُكَ مِنَ النَّاسِ
நபியே இந்த மக்களை விட்டு அவர்களுடைய கெடுதியை விட்டு அவர்களுடைய தாக்குதலை விட்டு உங்களை அல்லாஹ் பாதுகாப்பான். (அல்குர்ஆன் 5 : 67)
என்று இந்த வசனம் இறங்குகின்ற வரை நபித்தோழர்கள் இரவு பகலாக ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி அவர்களைப் பாதுகாத்தவர்களாக நபித்தோழர்கள் இருந்தார்கள்.
இந்த வசனம் இறங்கியதற்கு பிறகு அல்லாஹ் என்னை பாதுகாத்துக் கொண்டான். நீங்கள் செல்லலாம் என்று கூறியதற்கு பிறகுதான் சஹாபாக்கள் தனிப்பட்ட முறையில் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பாதுகாப்பதை விட்டார்கள்.
அர்ரஹீக் அல்மக்தூம்
சகோதரர்களே! எந்த அளவிற்கு உயிர் பயத்திற்கு உயிர் அச்சத்திற்கு நடுவிலே அந்த சஹாபாக்கள் மதினாவில் வாழ்ந்தார்கள். பாருங்கள்; ஏதாவது ஒரு திடுக்கிட்ட சம்பவம் ஏற்பட்டு அல்லது திடுக்கமான ஒரு சம்பவம் அல்லது ஒரு சப்தம் வந்தாலே சஹாபாக்கள் பேசுவார்கள்; ரோமர்கள் படையெடுத்து வந்து விட்டார்களோ?! என்று கேட்கக் கூடிய அளவிற்கு மதினாவை சுற்றி பயம் இருந்தது.
அறிவிப்பாளர் : உமர் இப்னு கத்தாப் ரலியல்லாஹு அன்ஹு நூல் : புகாரி, எண் : 89,2468.
அல்லாஹு ரப்புல் ஆலமீன் அங்கே வசனத்தை இறக்குகிறான் பாருங்கள்; இந்த பயம் உங்களை மார்க்கத்திலிருந்து பிறழ செய்து விட வேண்டாம்; உங்களை மார்க்கத்திலிருந்து தடுமாற செய்துவிட வேண்டாம்; இந்த பயத்தால் காஃபிர்களுக்கு முன்னால் நீங்கள் பணிந்து விடுவதற்கு நெருங்கி விட வேண்டாம்.
(அல்குர்ஆன் 5 : 54)
அல்லாஹு ரப்புல் ஆலமீன் கூறுவதைப் பாருங்கள்; முஃமின்களே!உங்களில் யாராவது தன்னுடைய தீனீலிருந்து விலகி விட்டால் உங்களில் யாராவது தன்னுடைய மார்க்கத்திலிருந்து விலகி விட்டால் என்பதற்கு என்ன அர்த்தம்?
முற்றிலுமாக மார்க்கமே வேண்டாம் என்று சொல்லி இஸ்லாமே வேண்டாம் என்று சொல்லி அல்லாஹ்வை நிராகரிப்பது மட்டும் அல்ல முர்தத் என்பது. முர்தத் என்பவன் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை மறுத்தவன் மட்டுமல்ல.அல்லாஹ் ரப்புல் ஆலமீன் இந்த தீனுடைய அர்கான்களாக கட்டாய தூண்களாக எதை ஆக்கினானோ இந்த மார்க்கத்தின் அடையாளச் சின்னங்களாக எதை ஆக்கினானோ அந்த ஒன்றை இறை மறுப்பாளர்களுக்காக வேண்டி மாற்றிக் கொள்வது.அதிலே சமரசம் செய்து கொள்வது.
இந்த கலிமாவை சொன்ன நம்முடைய சமுதாய மக்கள் எத்தனை பேர் துன்புறுத்தப்படுகிறார்கள். ஒரு நாட்டில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிகிறார்கள்; நீளமான தாடிகளை வைத்திருக்கிறார்கள் என்பதற்காகவே அவர்கள் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கப்பட்டு இருக்கின்றார்கள். குர்ஆன் ஓதுகின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காக அவர்கள் முஸ்லிம்களாக வாழ்கின்றார்கள் என்ற ஒரே காரணத்திற்காகவே அந்த ஆட்சியாளர்கள் அதிகாரிகளால் அவர்கள் அடக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.
இப்படிப் பட்ட துன்பங்கள் இந்த சிரமங்கள் இன்னும் வார்த்தைகளால் சொல்ல முடியாத மிகப்பெரிய அநியாயங்கள் எல்லாம் நம்முடைய அந்த சகோதரர்களை அவர்களுடைய மார்க்கத்திலிருந்து தடம்புரள செய்யவில்லை. அவர்களுடைய பெண்கள் ஹிஜாபை கலட்டி விடவில்லை; அவர்களுடைய ஆண்கள் தங்களுடைய தாடிகளை சிரைத்துக் கொள்ளவில்லை; அவர்களுடைய பிள்ளைகளுக்கு குர்ஆன் போதிப்பதை நிறுத்தி விடவில்லை.
அன்பு சகோதரர்களே! இன்று நம்முடைய நிலைமையை கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்;
நம்மில் பலருக்கோ சிலருக்கோ ஈமான் எப்படி தடுமாறுகிறது என்பதைக் கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்; அல்லாஹ்வுடைய தீன் இதிலே நமக்கு எந்த சமரசமும் செய்து விடமுடியாது. தீனில் ஒரு விஷயத்தில் சமரசம் செய்வதும் சரி, மொத்த தீனை விடுவதும் சரி, அல்லாஹ்வுடைய மார்க்க சட்டங்களில் அடையாளச் சின்னங்களில் ஒன்றை இறைமறுப்பாளர்கள் விடுவதும் சரி, ஒட்டுமொத்த மார்க்கத்தை விடுவதும் சரி, அல்லாஹு தஆலா எச்சரிக்கை செய்கின்றான்;
உஹதுடைய மைதானத்திலிருந்து ஓடிய சிலரை பார்த்து அல்லாஹ் எச்சரிக்கை செய்கிறான்;
وَمَنْ يَنْقَلِبْ عَلَى عَقِبَيْهِ فَلَنْ يَضُرَّ اللَّهَ شَيْئًا
(அவ்வாறு) எவரேனும் புறங்காட்டிச் சென்றுவிட்டால் அதனால் அவன் அல்லாஹ்வுக்கு ஒன்றும் நஷ்டம் உண்டாக்கிவிட மாட்டான். (அல்குர்ஆன் 3 : 144)
ரப்பு கேட்கின்றான்;
வசனத்தின் கருத்து : நீங்கள் இந்த மார்க்கத்திற்காக தியாகம் செய்யவில்லை என்றால் உங்களது உயிரை பொருளை இந்த மார்க்கத்திற்கு கொடுக்கவில்லை என்றால் அல்லாஹ்விற்கா நஷ்டம்? அல்லாஹ் ஒரு கூட்டத்தைக் கொண்டு வருவான். அல்லாஹ் அவர்களை நேசிப்பான். அவர்களும் அல்லாஹ்வை நேசிப்பார்கள். அவர்கள் முஃமின்களுக்கு இறங்கி வருவார்கள். காஃபிர்களுக்கு முன்னால் ஒரு போதும் தலை சாய்க்க மாட்டார்கள். காஃபிர்களிடத்தில் மிகவும் சரியாக கடுமையாக நடந்து கொள்வார்கள். (அல்குர்ஆன் 5 : 54)
அல்லாஹ்வுடைய மார்க்கத்தை நிராகரித்து நம்மை நிராகரிப்பில் தள்ளுவதற்காக நம்முடைய எதிரிகளாக இருக்கக்கூடியவர்களுக்கு முன்னால் அவர்கள் பணிய மாட்டார்கள். மாறாக அல்லாஹ்வின் மார்க்கத்திற்காக அவர்கள் போர் செய்வார்கள். அல்லாஹ்வுடைய மார்க்கத்தை, மார்க்க சட்டங்களை, மார்க்க அடையாளங்களை, அல்லாஹ்வுடைய நபியின் சுன்னத்துகளைப் பேணிக் கொள்வதில் பழிப்பவரின் பழிப்பை பயப்படமாட்டார்கள்.(அல்குர்ஆன் 5 : 54)
அன்பு சகோதரர்களே! அல்லாஹ் நம்மை பாதுகாக்க வேண்டும். அல்லாஹ் நம்முடைய ஈமானைப் பலப்படுத்த வேண்டும். இன்று நம்முடைய நிலை என்னவென்றால் இதை செய்தால் அவர்கள் பார்த்து என்ன சொல்வார்களோ. எப்படி இன்று மார்க்கம் தேடப் படுகின்றது என்றால் நாம் ஒன்றை செய்தால் அதை யூதர்கள் பழிக்கக்கூடாது, கிறிஸ்துவர்கள் பழிக்கக்கூடாது, சிலை வணங்கிகள் பழிக்கக்கூடாது.
யாரும் குறை சொல்லாத ஒன்று மார்க்கத்தில் இருக்கிறதா நான் அதை செய்வேன். யாராவது எனது மார்க்கத்தில் ஒன்றை குறை சொல்கிறார்கள் உடனே அதை அப்படியே நழுவவிட்டு விடுவது; அதிலிருந்து நழுவி கொள்வது.
சகோதரர்களே! காஃபிர்களுக்கு அல்லாஹ்வையும் பிடிக்காது; அல்லாஹ்வின் தூதரையும் பிடிக்காது; மார்க்கத்தையும் பிடிக்காது. அவர்களை இந்த மார்க்கத்தில் எதை பிடிப்பார்கள்?
அவர்கள் அல்லாஹ்வை வெறுக்கிறார்கள். அல்லாஹ்வின் ரஸூலை வெறுக்கிறார்கள். அவர்களுக்கு மார்க்கத்தில் பிடித்தது இருந்தால் நான் பின்பற்றுவேன் என்றால் (அல்லாஹ் பாதுகாக்க வேண்டும்!) அல்லாஹ்வுடைய தீனை யாருக்காக எதற்காக பின்பற்றுவது? அல்லாஹ்வுடைய தீனை அல்லாஹ்விற்காக மறுமைக்காக சொர்க்கத்திற்காக பின்பற்ற வேண்டும்.
காஃபிர்களை திருப்திப்படுத்த நினைக்கின்றார்கள். அல்லாஹ் என்ன சொல்கிறான் தெரியுமா?
நீங்கள் யாரை திருப்திப்படுத்த நினைக்கின்றீர்கள் இறைமறுப்பாளரையா?சிலை வணங்கிகளையா? அல்லாஹ்வுடைய மார்க்கத்தை நிராகரிக்கக்கூடியவர்களையா? அல்லாஹ்வுடைய தீனை அல்லாஹ்வுடைய நபியோடு போரை வெளிப்படையாக பிரகடனப்படுத்தியவர்களுடனா?
அல்லாஹ் சொல்கின்றான்;
وَاللَّهُ وَرَسُولُهُ أَحَقُّ أَنْ يُرْضُوهُ
முஃமின்களே!நீங்கள் திருப்திப் படுத்த வேண்டுமா அல்லாஹ்வை திருப்திப் படுத்துங்கள்; அல்லாஹ்வுடைய தூதரை திருப்திப் படுத்துங்கள்.(அல்குர்ஆன் 9 : 62)
இன்று முஸ்லிம்களில் பலருக்கு முஸ்லிம்களோடு இணக்கம் வைப்பதைவிட முஸ்லிமல்லாதவர்களோடு இணக்கம் வைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்கள். முஸ்லிம்களுக்கு முன்னால் பணிவதை விட மாற்றார்களுக்கு முன்னால் பனிவதில் அதிக முனைப்பு காட்டுகிறார்கள்.
ஒரு முஸ்லிம் அப்படி இருக்க மாட்டான். பிற மக்கள் அல்லாஹ்வுடைய தீனீல் நம்மை எதிர்க்கவில்லை என்றால், நம்முடைய தீனில் நமக்கு தொந்தரவு தரவில்லை என்றால், அல்லாஹ்வுடைய தீனை ஏற்றுக்கொண்ட ஒரே காரணத்திற்காக இந்த ஊரில் இருந்து வெளியேற வேண்டும் என்று கூறவில்லை என்றால், நம்மோடு இணங்கிச் என்றால் அவர்களை விட அவர்களுக்கு நாம் இணக்கமாக இருப்போம்.அவர்கள் விரும்புவதை விட அவர்களுக்கு நாம் நன்மை செய்வோம்.அதைத்தான் நமக்கு நம் மார்க்கம் கற்றுத்தருகிறது.
وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ أَنْ صَدُّوكُمْ عَنِ الْمَسْجِدِ الْحَرَامِ أَنْ تَعْتَدُوا
கண்ணியமான மஸ்ஜிதை விட்டு உங்களைத் தடுத்த வகுப்பார் மீது (உங்களுக்கு)ள்ள துவேஷம் (அவர்கள்மீது) நீங்கள் வரம்பு மீறும்படி உங்களைத் தூண்டாதிருக்கவும். (அல்குர்ஆன் 5: 2)
அல்லாஹ்வுடைய பள்ளியிலிருந்து உங்களைத் தடுத்த காரணத்தால் அந்த மக்கள் மீது நீங்கள் வரம்பு மீறாதீர்கள்.ஒரு முஸ்லிம் வரம்பு மீறியவனாக இருக்க மாட்டான். மதத்தால் கொள்கையால் கோட்பாடுகளால் வேறுபட்ட காரணத்தால் பிற மக்களோடு கால் புணர்ச்சி காட்டுவதில் அல்லாஹ்வுடைய தீனில் அணுவளவும் இடமில்லை. பொதுவான காரியங்களில் அல்லாஹ் சொல்கின்றான்;
அடுத்த வசனத்தின் தொடர்ச்சியில் அல்லாஹ் கூறுகின்றான்;
وَتَعَاوَنُوا عَلَى الْبِرِّ وَالتَّقْوَى وَلَا تَعَاوَنُوا عَلَى الْإِثْمِ وَالْعُدْوَانِ
அவர்கள் பொதுவான காரியங்களில்,சமூகப் பணிகளில் நன்மை செய்ய வந்தால் வந்தால் தக்வா -அல்லாஹ்வுடைய மார்க்கத்திற்கு உட்பட்ட காரியங்களில்,பொது காரியங்களில் வந்தால் அவர்களோடு நீங்கள் பங்களிப்பதில் எந்த குற்றமும் இல்லை.ஆனால் பாவமான விஷயங்களில் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை மீறுவதில் அல்லது அடியாருடைய ஹக்குகளை மீறுவதில் அவர்களுக்கு நீங்கள் துணை போகாதீர்கள். (அல்குர்ஆன் 5 : 2)
பல ஜும்ஆக்களில் கூட நாம் பார்த்து இருக்கின்றோம். என்ன நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள்? சமய ஒற்றுமை சமூக ஒற்றுமை என்றால் அவர்களுடைய மத சடங்குகளை நாம் அங்கீகரித்து கொள்வது அல்ல. நாம் அதை செய்வது அல்ல.
இன்று சமுதாய ஒற்றுமை என்று அவர்களுடைய மத திருவிழாக்களில் அவர்கள் கொண்டாடக்கூடிய அந்த சிலைகளை நாங்களும் கொண்டாடுகின்றோம் என்று, அதற்கு நாங்களும் வரவேற்பு தருகிறோம் என்று, அதை நாங்களும் சுமந்து செல்வோம் என்று, இது சமூக ஒற்றுமைக்கு உதாரணம் என்று, சமய நல்லிணக்கத்திற்கு உதாரணம் என்று சிலர் பேசுகிறார்களே இது அவர்களுடைய மார்க்க அறியாமையினால் ஆகும்.
இதை செய்தவன் தவ்பா செய்து லா யிலாஹ இல்லல்லாஹ் கூறி தன்னுடைய மார்க்கத்தை புதுப்பித்துக் கொள்ளவில்லை என்றால் அவன் முர்த்ததாக கருதப்படுவான். அப்படிப்பட்டவர்கள் இறந்துவிட்டால் நாம் ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாது. அவர்கள் இஸ்லாமிய மார்க்கத்தை விட்டு வெளியேறியவர்கள்.
சகோதரர்களே! நாம் நமது மார்க்கத்தில் உறுதியாக இருப்பதற்கு இன்னொரு அர்த்தமல்ல,மற்றவர்களோடு சண்டை செய்வது.
அல்லாஹ்வுடைய தூதரை விட இணக்கம் கண்டவர்கள் வேறு யார் இருக்க முடியும்? எத்தனை துன்பங்கள் எத்தனை பிரச்சனைகள் ஒவ்வொரு நேரத்திலும் இணங்கி வாழ்ந்தார்கள். இணங்கி வாழ அல்லாஹ் அவர்களுக்கு கற்றுக் கொடுத்தான்.
போரை அவர்கள் தான் தூண்டினார்கள்; சண்டையை அவர்கள்தான் ஆரம்பித்தார்கள்; சண்டைக்கு இழுத்தார்கள். சண்டையில் தோற்று விடுவோம் என்ற பயத்தில் அவர்கள் ஒப்பந்தத்திற்கு வருகிறார்கள்.
அல்லாஹ் சொல்கின்றான்;
وَإِنْ جَنَحُوا لِلسَّلْمِ فَاجْنَحْ لَهَا
(நபியே) அவர்கள் சமாதானத்திற்கு இணங்கிவந்தால், நீரும் அதன் பக்கம் இணங்கிவருவீராக. (அல்குர்ஆன் 8 : 61)
சிலருக்கு சந்தேகம் வருகிறது. இப்போது பலவீனத்தால் சமாதான ஒப்பந்தம் செய்கிறார்கள். பிறகு பலம் வந்து விட்டால் நம்மை எதிர்ப்பார்களே?
அல்லாஹ் சொல்கின்றான்;
وَإِنْ يُرِيدُوا أَنْ يَخْدَعُوكَ فَإِنَّ حَسْبَكَ اللَّهُ هُوَ الَّذِي أَيَّدَكَ بِنَصْرِهِ وَبِالْمُؤْمِنِينَ
(நபியே!) அவர்கள் உமக்கு சதி செய்யக் கருதினால் (உம்மைப் பாதுகாக்க) நிச்சயமாக அல்லாஹ் உமக்குப் போதுமானவனாக இருக்கிறான். அவன்தான் உம்மை தன் உதவியைக் கொண்டும் நம்பிக்கையாளர்களைக் கொண்டும் பலப்படுத்தினான். (அல்குர்ஆன் 8 : 62)
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் உயிர்களை சமூக மக்களை பாதுகாப்பது மிகப்பெரிய சமூக அம்சம்.
அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்; இந்த முஃமின்களை பொருத்தவரை அல்லாஹ்வுடைய தீனில் சமரசம் செய்ய மாட்டார்கள்.
உலகமே சேர்ந்து பழித்தாலும் சரி, அவர்களுக்கு எந்த பயமும் இருக்காது. தாடியால் பழிப்பவர்கள் எத்தனை பேர்? முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்தால் அதைப் பழிப்பவர்கள் எத்தனை பேர்?
இந்த மாற்றார்களைப் பொறுத்தவரை எப்படி என்றால் அவர்களுடைய இஸ்லாமின் மீது உண்டான பயம் எதையெடுத்தாலும் தெரியும். முஸ்லிம் பெண்கள் ஹிஜாப் அணிந்தால் பிடிக்காது. முஸ்லிம்கள் தாடி வைத்தால் பிடிக்காது. முஸ்லிம்கள் ஒழுக்கமாக ஆடை அணிந்தால் பிடிக்காது.
ஆனால் இதுபோன்ற ஆடை இதுபோன்ற கலாச்சாரம் மற்றவர்களிடத்தில் இருக்கும். அதை ஃபேஷனாக எடுத்துக் கொள்வார்கள். அதை மார்க்கப்பற்றாக எடுத்துக் கொள்வார்கள். அதைக் ட்ரடிசன் -பழங்கால தொன்றுதொட்டு வரக்கூடிய வழக்கம் என்று எடுத்துக் கொள்வார்கள்.
ஆனால் அதையே முஸ்லிம்கள் இஸ்லாமின் பெயரால் அல்லாஹ்வுடைய தீனின் பெயரால் செய்தால் அது அவர்களுக்கு உள்ளத்தை உறுத்திக் கொண்டே இருக்கும். இதற்கெல்லாம் முஸ்லிம்கள் அஞ்சமாட்டார்கள்.
இது அல்லாஹ்வுடைய அருள். அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் நிலைத்து இருப்பது அல்லாஹ்வுடைய அருள். அல்லாஹ் நாடியவர்களுக்கு அதை கொடுக்கின்றான். அல்லாஹ் விசாலமானவன்; நன்கு அறிந்தவன்.(அல்குர்ஆன் 5 : 54)
அன்பு சகோதரர்களே! அல்லாஹ் நமக்கு ஆறுதல் சொல்கின்றான்; உஹது போர்க்களத்தில் ஸஹாபாக்களுக்கு ஆறுதல் கூறிய அதே ஆறுதல் குர்ஆனில் இன்றும் ஓதப்பட்டு கொண்டிருக்கிறது.
சூரா ஆல இம்ரான் உடைய 139-ஆவது வசனத்தைப் படியுங்கள்; ரப்பு கூறுகின்றான்;
وَلَا تَهِنُوا وَلَا تَحْزَنُوا وَأَنْتُمُ الْأَعْلَوْنَ إِنْ كُنْتُمْ مُؤْمِنِينَ
நீங்கள் கோழை ஆகிவிடாதீர்கள்;நீங்கள் தைரியம் இழந்து விடாதீர்கள்;நீங்கள் கவலைப்படாதீர்கள்;நப்மிக்கை கொண்டிருந்தால் நீங்கள்தான் மிக உயர்ந்தவர்கள். (அல்குர்ஆன் 3 : 139)
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! அல்லாஹு சுப்ஹானஹுதஆலாநமக்கு உபதேசம் செய்கின்றான்.முஃமினே உனக்கு கண்ணியம் வேண்டுமா? உனக்கு உயர்வு வேண்டுமா? நீ தலை நிமிர்ந்து நடக்க வேண்டுமா? என் பக்கம் வா! என்னுடைய மார்க்கத்தைப் பற்றிப் பிடி! என்னுடைய மார்க்கத்தில் உறுதியாக இரு!
ரப்பு சொல்வதைப் பாருங்கள்; சூரா பாத்திர் உடைய பத்தாவது வசனத்தைப் படித்துப் பாருங்கள்;
مَنْ كَانَ يُرِيدُ الْعِزَّةَ فَلِلَّهِ الْعِزَّةُ جَمِيعًا
எவன் கண்ணியத்தையும், சிறப்பையும் விரும்புகிறானோ, (அவன் அல்லாஹ்வுக்கு வழிப்பட்டு நடக்கவும். ஏனென்றால்) கண்ணியங்கள் அனைத்துமே அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை. (அல்குர்ஆன் 35 : 10)
முஃமின்களே! உங்களுக்கு கண்ணியம் வேண்டுமா? உயர்வு வேண்டுமா? பிற சமூகத்தை பார்க்கிலும் நீங்கள் ஓங்கி தலைநிமிர்ந்து உயர்வாக மதிப்போடு நடக்க வேண்டுமா? அல்லாஹ்விடம் கண்ணியம் இருக்கிறது. கண்ணியம் எல்லாம் அல்லாஹ்விற்கு சொந்தமானது.
அல்லாஹ்விற்கு சொந்தமான அந்த கண்ணியத்தை எப்படி பெறுவது? அல்லாஹ்வுடைய கட்டளைகளை அல்லாஹ்வுடைய சட்டங்களை நிறைவேற்றுவது கொண்டு. அல்லாஹ்விற்கு முன்னால் பணிவதைக் கொண்டு. நான் அல்லாஹ்வின் அடிமை, இஸ்லாம் எனது மார்க்கம், நான் முஸ்லிம் என்பதை மிக பெருமையோடு அல்லாஹ்வின் நிஃமத்தாக ஏற்றுக்கொள்வதைக் கொண்டு.
قُلْ بِفَضْلِ اللَّهِ وَبِرَحْمَتِهِ فَبِذَلِكَ فَلْيَفْرَحُوا هُوَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ
நீங்கள் சேர்க்கக்கூடிய செல்வத்தை விட, எந்த இடத்திற்கு எந்த ஆட்சி அதிகாரத்திற்காக எந்த செல்வத்திற்காக இவர்கள் பெருமை அடிக்கின்றார்களோ நபியே சொல்லுங்கள் இஸ்லாம்,மார்க்கம்,குர்ஆன் இதுதான் மிகச் சிறந்தது.இதைக் கொண்டு அவர்கள் பெருமைப் பேசட்டும்.(அல்குர்ஆன் 10 : 58)
அன்பு சகோதரர்களே! கொஞ்சம் நினைத்துப் பாருங்கள்; குபைப் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்களுடைய அந்த நிலைமையை நினைத்துப் பாருங்கள்;கைது செய்யப்படுகிறார்கள்.
காஃபிர்கள் எல்லாம் அவர்களை கொல்வதற்காக ஒரு நாளை நிர்ணயம் செய்து,அவர்களைக் கட்டிக் கொண்டு வந்து ஹரமுக்கு அருகில் ஒரு பலகையில் நிறுத்தி வைக்கிறார்கள். அவர்களை கட்ட வைத்து இருக்கிறார்கள். அப்போது கேட்கப்படுகிறது;
இந்த இடத்தில் முஹம்மது இருப்பதை நீ விரும்புகிறாயா? என்று. சகோதரர்களே! மிக கண்ணியத்தோடு மிக உயர்வோடு அதை அவர்கள் மறுக்கிறார்கள். எதிர்த்துப் பேசுகிறார்கள்.பிறகு கூறுகிறார்கள்;
நான் தொழுவதற்காக எனக்கு அனுமதி கொடுங்கள் என்று.மிக கண்ணியத்தோடு இரண்டு ரக்அத்தை தொழுகிறார்கள்.பிறகு சொல்கிறார்கள்;மரண பயம் எனக்கு இருப்பதால்தான் இந்த தொழுகையை நீட்டுகிறேன்,அதிகப்படுத்தி இருக்கிறேன் என்று நீங்கள் எண்ணி இருக்காவிட்டால் என்ன மாட்டீர்கள் என்றால் இந்தத் தொழுகையை நீட்டி இருப்பேன். அதிகப்படுத்தி இருப்பேன்.
அந்த நேரத்தில் குபைப் ரலியல்லாஹு அன்ஹு துஆ செய்தார்கள்;
اللَّهُمَّ أَحْصِهِمْ عَدَدًا، وَاقْتُلْهُمْ بَدَدًا، وَلَا تُبْقِ مِنْهُمْ أَحَدًا
யா அல்லாஹ்! இவர்களை எண்ணிக்கொள்! எங்களை எங்களது தோழர்களை எப்படி பிரித்து பிரித்து கொன்றார்களோ இவர்களையும் அப்படியே கொள். இவர்களில் யாரையும் விட்டு விடாதே! இவர்களில் யார் திருந்தி அல்லாஹ்வின் பக்கம் வந்தார்களோ அவர்களைத் தவிர.
அந்த ஒருசிலரைத்தவிர அல்லாஹ்வுடைய அடியார்களைக் கொண்ட அந்த காஃபிர்கள் அனைவருடைய விஷயத்திலும் குபைப் உடைய துஆவை அல்லாஹ் ஏற்றுக்கொண்டான். அந்தக் காஃபிர்கள் எல்லா போர்களிலும் மற்ற நேரங்களிலும் எப்படி இந்த தோழர்களை துடிதுடிக்க கொன்றார்களோ அதுபோன்று அவர்கள் கொல்லப்பட்டார்கள்.
இங்கு நாம் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் குபைப் ரழியல்லாஹுஅன்ஹுஅந்தப் பலகையில் கட்டி வைக்கப்பட்டு எல்லாருடைய வாளும் அம்புகளும் ஈட்டிகளும் குபைபை குறிவைத்துகொண்டிருக்கிறது.
எவ்வளவு தலைநிமிர்ந்து கண்ணியமாக மனஅமைதியோடு அவர் சொல்லக்கூடிய வாக்கியத்தைப் பாருங்கள்;
فَلَسْتُ أُبَالِي حِينَ أُقْتَلُ مُسْلِمًا
நான் முஸ்லிமாக கொல்லப்படும் போது எனக்கு என்ன கவலை! நான் முஸ்லிமாக கொல்லப்படும்போது எதை நினைத்து நான் கவலைபடுவேன்! எனக்கு எந்த பொருட்டும் கிடையாது.
அன்பு சகோதரர்களே! நினைத்துப் பாருங்கள்; அவர்களுடைய சோதனையை விடவா நமக்கு பெரிய சோதனை இந்த உலகத்தில் வந்துவிடப்போகிறது?! நாம் பலவீனமானவர்கள் என்பதை அல்லாஹ் அறிந்தவன்.
لَا يُكَلِّفُ اللَّهُ نَفْسًا إِلَّا وُسْعَهَا
எந்த ஒரு ஆத்மாவையும் அதனுடைய சக்திக்கு மேல் அல்லாஹ் சோதனைக்குட்படுத்தப் பட மாட்டான். (அல்குர்ஆன் 2 : 286)
மேலும் குபைப் ரழியல்லாஹுஅன்ஹு அவர்கள் சொன்னார்கள் ;
عَلَى أَيِّ جَنْبٍ كَانَ لِلَّهِ مَصْرَعِي
நான் எப்படி எந்த இடத்தில் எந்த விதத்தில் கொல்லப்பட்டால் என்ன! அல்லாஹ்விற்காக கொல்லப்படுகிறேன்.
ஒரே ஒருத்தன் ஒரே முறையில் வாளால் கழுத்தை வெட்டினால் என்ன! அல்லது நெஞ்சிலே வாளை சொருகினால் என்ன! அல்லது முதுகில் ஈட்டியால் குத்தினால் என்ன! அல்லது நூறு பேர் சேர்ந்து வாளால் என்னை வெட்டினால் என்ன! ஆயிரம் பேர் சேர்ந்து அம்பால் என்னை எறிந்தால் என்ன! நான் எப்படி கொல்லப்பட்டால் என்ன! அல்லாஹ்விற்காக கொல்லப்பட்டேன்.
எப்பேற்ப்பட்ட ஈமான் என்று பாருங்கள்;
وَذَلِكَ فِي ذَاتِ الْإِلَهِ وَإِنْ يَشَأْ ...يُبَارِكْ عَلَى أَوْصَالِ شِلْوٍ مُمَزَّعِ
நான் என்னுடைய ரப்புக்காக இந்த தியாகத்தை செய்கின்றேன். அல்லாஹு தஆலா என்னுடைய உடலில் பரக்கத் செய்வான். என்னை கொன்று விடுவார்கள். அக்குவேறு ஆணிவேராக என்னை பிரித்து விடுவார்கள். அல்லாஹு தஆலா பிரிந்துபோன சிதைந்துபோன உடம்பில் நரம்புகளில் அல்லாஹ் பரக்கத் செய்வான்.
நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 7928, 22391.
சகோதரர்களே!இது ஈமான்!இது கண்ணியம்! அப்படிப்பட்ட கண்ணியத்தை தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹிவசல்லம் அவர்களும் சஹாபாக்களும் நமக்கு போதித்து இருக்கின்றார்கள் தவிர பயத்தை அல்ல. கோழைத்தனத்தை அல்ல. சிதறுவதை அல்ல. தைரியம் இழப்பதை அல்ல.
அல்லாஹ்வுடைய அடியார்களே! அல்லாஹு தஆலா இந்த உலகத்தில் நமக்கு கண்ணியத்தைக் கொடுப்பான். மறுமை உடைய மிகப்பெரிய கண்ணியம் இருக்கிறதே சொர்க்கத்தைக் கொண்டு. அஸ்ஹாபுல் யமீன் என்ற அந்த வலது பக்கம் உள்ளவர்கள் அல்லாஹ்விற்கு நெருக்கமானவர்கள் என்று
சகோதரர்களே! அந்த கண்ணியமும் இதைவிட மிகப் பெரிய கண்ணியம் ரப்புல் ஆலமீன் சொல்வதைப் பாருங்கள்;
أُولَئِكَ يُجْزَوْنَ الْغُرْفَةَ بِمَا صَبَرُوا وَيُلَقَّوْنَ فِيهَا تَحِيَّةً وَسَلَامًا
ஆகிய இத்தகையவர்களுக்கு, அவர்கள் (பல நல்ல காரியங்களைச் செய்திருப்பதுடன் அவற்றைச் செய்யும்போது ஏற்பட்ட) சிரமங்களைச் சகித்துக் கொண்டதன் காரணமாக உயர்ந்த மாளிகைகள் (மறுமையில்) கொடுக்கப்படும். ‘‘ஸலாம் (உண்டாவதாக)'' என்று போற்றி அதில் அவர்கள் வரவேற்கப்படுவார்கள். (அல்குர்ஆன் 25 : 75)
அன்பு சகோதரர்களே! அல்லாஹு சுப்ஹானஹுதஆலாஅந்த உயர்ந்த கண்ணியத்தை தேடக்கூடியவர்களாக அந்த கண்ணியத்தை முன்னிறுத்தி மார்க்கத்தை பற்றிப்பிடித்து வாழக்கூடியவர்களாக நம்மை ஆக்கியருள்வானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
حَدَّثَنَا عُمَرُ بْنُ حَفْصِ بْنِ غِيَاثٍ، حَدَّثَنَا أَبِي، حَدَّثَنَا الأَعْمَشُ، عَنْ شَقِيقٍ، عَنْ عَبْدِ اللَّهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «مَا مِنْ أَحَدٍ أَغْيَرُ مِنَ اللَّهِ، مِنْ أَجْلِ ذَلِكَ حَرَّمَ الفَوَاحِشَ، وَمَا أَحَدٌ أَحَبَّ إِلَيْهِ المَدْحُ مِنَ اللَّهِ»(صحيح البخاري 7403 -)
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 25247866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/