HOME      Khutba      691 - சுன்னாவைப் பின்பற்று பித்அத்தை விட்டு விலகு! அமர்வு 3 | Tamil Bayan   
 

691 - சுன்னாவைப் பின்பற்று பித்அத்தை விட்டு விலகு! அமர்வு 3 | Tamil Bayan

           

691 - சுன்னாவைப் பின்பற்று பித்அத்தை விட்டு விலகு! அமர்வு 3 | Tamil Bayan


சுன்னாவைப் பின்பற்று பித்அத்தை விட்டு விலகு!

ஜுமுஆ குத்பா தலைப்பு : சுன்னாவைப் பின்பற்று பித்அத்தை விட்டு விலகு! (அமர்வு 3-3)

வரிசை : 691

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 31-12-2021 | 27-05-1443

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

மதிப்பிற்கும்கண்ணியத்திற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே!உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றிப் புகழ்ந்தும், அல்லாஹ்வுடைய தூதர் முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களுடைய குடும்பத்தார் தோழர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக,

உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தைநினைவூட்டியவனாக, அல்லாஹ்வை பயந்து வாழுமாறும், அல்லாஹ்வுடைய சட்டத்தை பேணி வாழுமாறும், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை பற்றிப் பிடிக்கும் படியும் உபதேசம் செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கின்றேன்.

மார்க்கத்தை சரியான முறையில் புரிந்துபின்பற்றுவதற்கும், பித்அத்துக்கள்-அனாச்சாரங்கள் போன்ற எல்லா விதமான வழிகேட்டிலிருந்தும் விலகி,ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் போதித்த தூய்மையான மார்க்கத்தை பின்பற்றி வாழ்வதற்கும் அல்லாஹ் நமக்கு அருள் புரிவானாக! ஆமீன்.

தொடர்ந்து இரண்டு வாரங்களாக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை எப்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றுக்கொடுத்தார்களோ, அதே முறையில் பின்பற்றுவதற்கான அவசியத்தையும்,அதுபோன்று, பித்அத்துக்கள் என்ற சடங்குகள் சம்பிரதாயங்களை விட்டு நாம் எந்த அளவு விலகி இருப்பது அவசியம் என்பதைப் பற்றியும் பார்த்து வந்தோம்.

அதனுடைய தொடரில் இன்னும் சில விஷயங்களை இங்கு நாம் பார்க்க இருக்கின்றோம்.

பித்அத்துக்கள் -அனாச்சாரங்கள்அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் கற்பிக்காத, சஹாபாக்கள் உடைய வாழ்க்கையில் இல்லாத நூதன செயல்பாடுகள் அனுஷ்டானங்கள் இவையெல்லாம் பித்அத்துக்கள் என்று மார்க்கத்தில் அறியப்படுகின்றன.

அல்கபாயிர் -பெரும் பாவம் என்பது வேறு. விபச்சாரம் செய்வது, பொய் பேசுவது, வட்டி வாங்குவது, திருடுவது இவை எல்லாம் பெரும்பாவங்களில் வரும்.

பித்அத் என்பது இந்த பெரும்பாவங்களில் வராது. அப்படி என்றால் சிறிய பாவமா? என்றால் அதுவும் இல்லை.

ஒரு எண்ணிக்கைக்கு சொல்கின்றேன்; லட்சம் பெரும் பாவங்களை விட ஒரு பித்அத் அல்லாஹ்விடத்தில் அவனுடைய கோபத்தாலும், தண்டனையாலும் கடுமையானது.

பித்அத் என்பது, பார்ப்பதற்கு ஒரு நல்ல அமலாக இருக்கும். பார்ப்பதற்கு ஒரு இபாதத்தாக இருக்கும்.

தொழுவது, நோன்பு வைப்பது, தர்மம் செய்வது, திக்ரு செய்வது. இப்படி பார்ப்பதற்கு நல்ல அமலாக, இறையச்சம் இருப்பதாக, ஒரு இபாதத்தாக அது இருக்கும். நன்மையை நாடி செய்யப்படும்.

ஆனால், அது அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவில் இல்லாததாக இருக்கும். அவர்கள் வழிகாட்டாததாக இருக்கும்.

கண்ணியத்திற்குரிய ஸஹாபாக்கள் உடைய சுன்னாவில் இருந்து புரியாததாக இருக்கும். பார்ப்பதற்கு இபாதத்தாக இருக்கும். வணக்க வழிபாடாக இருக்கும். அதை செய்யும் போது பலருக்கு பரவசம் ஏற்படும். அவர்கள் தக்வாவோடு, இறையச்சத்தோடு, அப்படியே அழுகையோடு, உள்ளச்சத்தோடு,உள்ளுணர்வோடு அவர்கள் செய்வதாகத் தோன்றும்.

ஆனால், லட்சக்கணக்கான விபச்சாரத்தை விட, திருட்டை விட, பொய்யை விட அல்லாஹ்விடத்தில் அவனுடைய கோபத்தாலும், தண்டனையாலும் பயங்கரமானது, கீழ் தரமானது, அல்லாஹ்விற்கு இணை வைத்தலுக்கு அடுத்து, இறை நிராகரிப்புக்கு அடுத்து மிக மோசமான கேவலமான பாவம் இந்த பித்அத் என்பது.

ஆனால், மக்களுக்கு புரிவதில்லை. விபச்சாரத்தை பாவமாக பார்க்கின்ற மக்கள், பொய், திருட்டை இன்னும் கொலை, கொள்ளையை பாவமாக பார்க்கின்ற பலர், பித்அத் என்பதை ஒரு பாவமாகவே பார்ப்பதில்லை.

இந்த மார்க்கத்தில் ஷிர்க் எப்படி தடுக்கப்பட்டதோ, குஃப்ர் எப்படி தடுக்கப்பட்டதோ அதுபோன்றுதான் பித்அத்தை குறித்து அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் நமக்கு எச்சரித்துக் கொண்டே இருக்கின்றார்கள்.

அல்லாஹு சுப்ஹானஹு வதஆலா கேட்கக்கூடிய ஒரு வசனத்தைப் பாருங்கள். ரப்புல் ஆலமீன் பித்அத்துக்கள் செய்பவர்களை, அனாச்சாரம் செய்பவர்களை பார்த்து கேள்வி கேட்கின்றான்.

أَمْ لَهُمْ شُرَكَاءُ شَرَعُوا لَهُمْ مِنَ الدِّينِ مَا لَمْ يَأْذَنْ بِهِ اللَّهُ وَلَوْلَا كَلِمَةُ الْفَصْلِ لَقُضِيَ بَيْنَهُمْ وَإِنَّ الظَّالِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ

அல்லாஹ் அனுமதிக்காத எதையும் அவர்களுக்கு மார்க்கமாக்கி வைக்கக்கூடிய தெய்வங்களும் அவர்களுக்கு இருக்கின்றனவா? (ஒவ்வொரு செயலுக்கும் தக்க) கூலி கொடுப்பது மறுமையில்தான் என்று இறைவனுடைய தீர்மானம் ஏற்பட்டிருக்காவிடில், (இதுவரை) அவர்களுடைய காரியம் முடிவு பெற்றேயிருக்கும். நிச்சயமாக (இத்தகைய) அநியாயக்காரர்களுக்கு மிக்க துன்புறுத்தும் வேதனை உண்டு. (அல்குர்ஆன் 42 : 21)

இந்த வசனத்தில் உள்ள கருத்து என்ன? யார் ஒருவர், அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய ரசூலும் கற்பிக்காத ஒன்றை இன்னொருத்தர் சொல்லிக் கொடுத்தார் என்று இபாதத்தாக செய்வாரோ, அவர் அந்த இபாதத்தை சொல்லிக்கொடுத்தவரை இறைவனாக, கடவுளாக ஆக்கிவிட்டார். அல்லாஹு அக்பர்.

எவ்வளவு ஆபத்தான ஒன்று என்று யோசித்துப் பாருங்கள். உண்மையில் இந்த பித்அத் என்பது மோசமானது.அல்லாஹ்விற்கு வெறுப்பானது. அல்லாஹ்வை விட்டு நம்மை தூர படுத்தக் கூடியது. ஷைத்தானுக்கு அந்தப் பித்அத் செய்யக் கூடியவர்களை மிக நெருக்கமாக்கி வைக்கக் கூடியது.

முஸ்லிம்களின் ஒற்றுமையை பிரிக்கக்கூடியது. அமல்களை நாசமாக்கக் கூடியது. ஷைத்தானுக்கு மிகவும் விருப்பத்தை தரக்கூடியது.

இப்படிப்பட்ட நிலையில் பித்அத் திரும்புவதற்கு காரணம் என்ன தெரியுமா? யார் பித்அத் செய்கின்றார்களோ அவர்களுடைய அந்த நிலை என்னவென்று மார்க்க அறிஞர்கள் விளக்கும் போது, அவர்கள் செயலால் சொல்வது என்னவென்றால், இந்த மார்க்கம் இன்னும் முழுமையாக வில்லை.

இன்னன்ன அமல்களை செய்வதால், இன்னன்ன திக்ருகளை செய்வதால், நாங்கள் மார்க்கத்தில் நிறைவை அடைகின்றோம். அல்லாஹ்வுடைய தூதர் இந்த மார்க்கத்தை நிறைவு செய்தார்களா? இல்லையா?

அல்லாஹு தஆலா அல்லாஹ்வுடைய தூதர் அவருடைய வாழ்நாளில் இந்த மார்க்கத்தை முழுமைப்படுத்தி கொடுத்துவிட்டானா? இல்லையா?கண்டிப்பாக அல்லாஹு தஆலா கொடுத்துவிட்டான்.

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு எடுத்து கூறி நிறைவு செய்து விட்டார்கள்.

அப்படி என்றால், அவர்கள் காண்பிக்காத ஒன்றை, அவர்கள் செய்யாத ஒன்றை, அல்லாஹ்விற்கு நெருக்கமானதாக, அல்லாஹ்விற்கு பிடிக்கும் என்று இணைத்து ஒருவன் செய்வானே என்றால் அல்லாஹு தஆலா அதை நமக்கு பித்அத் என்று சொல்கின்றான்.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு எடுத்து வைக்கவில்லை; அவர்கள் மறந்துவிட்டார்கள். அல்லது அவர்களுக்கு அந்த நன்மை தவறிவிட்டது என்று அவன் சொல்ல வருகின்றான்.

எவ்வளவு ஆபத்தான ஒன்று பாருங்கள்! அல்லாஹ்வின் மீதும் அல்லாஹ்வுடைய தூதரின் மீதும் இது ஒரு ஆட்சேபிக்கின்ற நிலையாகும்.

அல்லது அல்லாஹ்வுடைய தூதர் அல்லாஹ்வுடைய தீனை சரியாக புரியவில்லை. ஒரு நல்ல அமலை சொல்லிக் கொடுக்காமல் சென்று விட்டார்கள். அல்லது ஒரு நல்ல அமலை தானும் செய்யாமல், அதை மற்றவர்களுக்கும் சொல்லாமல் மறைத்து விட்டு சென்று விட்டார்கள்.

எப்படி பார்த்தாலும் சரி, இந்த பித்அத் என்பது, இது அல்லாஹ்வின் மீதும், அவனுடைய தூதரின் மீதும் மிகப்பெரிய ஒரு அவப்பெயரை மிகப்பெரிய ஒரு குற்றச்சாட்டை வைக்கின்ற ஒரு நிலைப்பாடாக இருக்கும்.

சொர்க்கத்தின் பாதையைக் காட்டி தருவதற்குதான் அல்லாஹு தஆலா நமக்கு தீனை கொடுத்துள்ளான்.

நம்முடைய அறிவுக்கு ஏற்ப நீங்கள் அல்லாஹ்வை வணங்குங்கள் என்று சொல்லப்பட்டு இருந்தால் தீனே தேவை இருக்காதே?

உங்களுடைய அறிவிற்கு ஏற்ப, உங்களுடைய விருப்பத்திற்கு ஏற்ப நீங்கள் எதையெல்லாம் அழகாக நன்மையாக கருதுகின்றீர்களோ, அதையெல்லாம் நீங்கள் செய்யுங்கள் என்று நம்முடைய அறிவுக்கு இந்த மார்க்கம் திறந்து விடப்பட்டு இருந்தால் எதற்காக குர்ஆன் இறக்கப்பட வேண்டும்? எதற்காக தூதர் இறக்கப்படவேண்டும்?

எதற்காக அல்லாஹ் இப்படி சொல்ல வேண்டும்? அல்லாஹ்விற்கு கீழ்படியுங்கள் தூதருக்கும் கீழ்படியுங்கள்.

நீங்கள் தூதரைப் பின்பற்றுங்கள். தூதர் உங்களுக்கு அழகிய முன்மாதிரி. அல்லாஹ்வின் தூதரில் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கின்றது. (அல்குர்ஆன் கருத்து : 3 : 31,32, 33: 21)

என்றெல்லாம் அல்லாஹ் ஏன் சொல்ல வேண்டும்? அப்படி அல்லாஹ் கட்டளையிட்டிருந்தால், அது உண்மை என்றால், அதற்குப் பிறகும் ஒருவன் இந்த மார்க்கத்தில் நூதன அனுஷ்டானங்களை, இபாதத்துகளை, திக்ருகளை, நோன்புகளை கடைபிடிக்கின்றான் என்றால், அவன் என்ன சொல்ல வருகிறான்?

அல்லாஹ் மறந்து விட்டான் என்று சொல்ல வருகின்றானா? அல்லது அல்லாஹ் கூறி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் இந்த மார்க்கத்தில் புரியவில்லை என்று சொல்ல வருகின்றானா?

அல்லது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் மார்க்கத்தில் மறைத்துவிட்டார்கள், அல்லது மறந்து விட்டார்கள் என்று சொல்ல வருகின்றானரா?

கொஞ்சம் சிந்தித்துப் பார்க்கவேண்டும்! இந்த மார்க்கம் நம்முடைய விருப்பம் அல்ல. அல்லாஹ்வுடைய விருப்பம். ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறை இந்த மார்க்கம்.

சகோதரர்களே! நமக்கு முன்னால் இரண்டு பாதை இருக்கின்றன. ஒன்று, நேர்வழிப் பாதை. அல்லாஹ் சொல்கின்றான்:

فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ

என்னிடமிருந்து உங்களுக்கு (என் தூதர்கள் மூலம்) நேர்வழி நிச்சயமாக வரும். (உங்களில்) எவர்கள் என் நேர்வழியைப் பின்பற்றுகிறார்களோ அவர்களுக்கு ஒரு பயமுமில்லை; அவர்கள் துக்கப்படவும் மாட்டார்கள். (அல்குர்ஆன்2 : 38)

நேர்வழி என்பது, அல்லாஹ்வின் புறத்திலிருந்து கிடைப்பது. நேர்வழி என்பது அல்லாஹ்வுடைய தூதரிடமிருந்து நமக்கு கற்பிக்கப்பட வேண்டும்.

இன்னொன்று இருக்கிறது; அது நம்முடைய விருப்பத்தின் வழிகள். ஒவ்வொரு நாட்டவருக்கும் ஒவ்வொரு கலாச்சாரத்திற்கும் ஒவ்வொரு விருப்பம் இருக்கலாம்.

இங்கு விருப்பம் மார்க்கமாக ஆகாது. அல்லாஹ்விடமிருந்து வந்தது, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடமிருந்து கற்பிக்கப்பட்டது மட்டும் தான் மார்க்கம்.

அல்லாஹு தஆலா ஸூரத்துல் கஸஸ் உடைய 50 -வது வசனத்தில் மிகத் தெளிவாக நமக்கு புரிய வைக்கின்றான்.

فَإِنْ لَمْ يَسْتَجِيبُوا لَكَ فَاعْلَمْ أَنَّمَا يَتَّبِعُونَ أَهْوَاءَهُمْ وَمَنْ أَضَلُّ مِمَّنِ اتَّبَعَ هَوَاهُ بِغَيْرِ هُدًى مِنَ اللَّهِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ

உமக்கு அவர்கள் பதில் சொல்லாவிடில், நிச்சயமாக அவர்கள் தங்கள் சரீர இச்சையையே பின்பற்றுகிறார்கள் என்று உறுதியாக நீர் அறிந்து கொள்வீராக. அல்லாஹ்வுடைய நேரான வழியை தவிர்த்து விட்டுத் தன் சரீர இச்சையைப் பின்பற்றுபவனை விட வழிகெட்டவன் எவனுமுண்டோ! நிச்சயமாக அல்லாஹ் (இத்தகைய) அநியாயக்கார மக்களை நேரான வழியில் செலுத்துவதில்லை. (அல்குர்ஆன் 28 : 50)

வசனத்தின் கருத்து : உம்முடைய பேச்சை அவர்கள் கேட்கவில்லை என்றால் என்ன? நீங்கள் அவர்களை இப்படி வணங்குங்கள் என்று சொல்கின்றீர்கள். அவன் சொல்கின்றான்; நான் இப்படியும் வணங்குவேன். இதற்கு மேலும் வணங்குவேன் என்று.

ஃபர்ளு தொழுகையை நீங்கள் இவ்வாறு தான் கற்றுக் கொடுத்துள்ளீர்கள். ஆனால், நாங்கள் இதற்கு முன்னாடியும் பின்னாடியும் கொஞ்சம் சேர்த்துக் கொள்வோம்.

உம்மு மக்தூம் அவர்கள் கனவில் பார்த்த அதானும் இதுதான். பிலால் அவர்களுக்கு கற்றுக் கொடுத்த அதானும் இதுதான். இப்னு உம்மி மக்தூம் அவர்களுக்கு நீங்கள் கற்றுக் கொடுத்த அதான் இதுதான். ரசூலுல்லாஹ் காலத்தில் சொல்லப்பட்ட அதான் இதுதான். மக்காவில் கஅபாவில் சொல்லப்பட்ட அதான் இதுதான்.

ஆனால், நாங்கள் அதற்குப் பின்னாடி கொஞ்சம் ஸலவாத்தை சேர்த்துக் கொள்வோம். அல்லாஹ்வுடைய பேருக்கு பின்னாடி சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி சேர்த்துக் கொள்வோம்.

இகாமத் இதுதான். ஹதீஸில் இது தான் இருக்கின்றது. ஆனால், நாங்கள் கொஞ்சம் முஹப்பத்தில் சேர்த்துக் கொள்வோம்.

தொழுகை இதுதான். இப்படித்தான் இருக்கின்றது. ஆனால், நாங்கள் கொஞ்சம் முஹப்பத்தில் சேர்த்துக் கொள்வோம்.

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் கற்றுக் கொடுத்ததை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால், இது தான் சுன்னத் என்று தெரிகின்றது, இந்த சுன்னத்தை நாங்கள் கொஞ்சம் அதிகப்படுத்துவோம்.

பித்அத் செய்பவர்கள் என்ன சொல்கிறார்கள்? நாங்கள் சுன்னத்தை குறைக்கவா செய்தோம்? கொஞ்சம் கூட்டி இருக்கின்றோம்.

ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் ஒன்று சொல்லிக் கொடுத்தால் நாங்கள் ஒன்பது செய்வோம்.

உதாரணத்திற்கு, பெருநாள் தொழுகைக்கு முன் தக்பீர் ஓத வேண்டும். எப்படி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓதினார்கள்? எப்படி சஹாபாக்கள் ஓதினார்கள்?

" وَكَانَ يُكَبِّرُ: اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ "

இமாமும் பின்னால் தொழுபவர்களும் சேர்ந்து ஒரு முறை. (1)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : அல்முஃஜமுல் கபீர் லித்தப்ரானி, எண் :9538.

இதை நீங்கள் ஒருமுறை ஓதுங்கள். நாங்கள் மூன்று முறை ஓதுவோம்.

ஒளு,மூன்று முறை செய்வது சுன்னத்.ஒரு முறை செய்வது ஃபர்ளு. ஏன்?நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்தார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் 3முறை செய்து காட்டி,இதை சுன்னா என்று சொன்னார்கள். (2)

அறிவிப்பாளர் : அம்ர் இப்னு ஷுஐப் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : இப்னு மாஜா, எண் :422.

இங்கு பெருநாள் உடைய தினத்தில் ஒரு முறை தான் சுன்னா. அங்கு திக்ரு ஃபர்ளு என்பது கிடையாது. அங்கு தக்பீர் என்பது சுன்னா.அதை ஒரு முறை தான் ஓத வேண்டும். அதைத்தான் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாழ்நாள் எல்லாம் செய்தார்கள் பின்னாலும் செய்தார்கள்.

பின்னால் வந்தவர்கள் என்ன செய்தார்கள் என்றால், நாங்கள் மூன்று முறை செய்வோம்.

அது எப்படி? இமாம் ஒருமுறை, அதற்கு பின்னால் முக்ததீ ஒரு முறை. பிறகு இமாம் ஒரு முறை அதற்கு பின்னால் முக்ததீ ஒரு முறை. பிறகு இமாம் ஒருமுறை அதற்கு பின்னால் முக்ததீ ஒரு முறை. இப்படியாக ஆறு தடவை ஆகிவிட்டது.

இப்போது நீங்கள் அந்த வசனத்தை எடுத்துப் பாருங்கள். அது உங்களுக்கு புரிய வரும். (அல்குர்ஆன் 28 : 50)

அதுபோன்று, இன்னொரு உதாரணம். நீங்கள் ஒரு பயணம் செல்ல வேண்டும். எங்கு நீங்கள் சென்றாலும் அல்லாஹ்வுடைய தூதர் சொல்லிக்கொடுத்தைத்தான் நாம் செய்ய வேண்டும்.

بِسْمِ اللَّهِ، تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ

வீட்டை விட்டு வெளியே செல்லும் போது இந்த துஆவை ஓதும்படி நமக்கு கற்றுக் கொடுத்தார்கள்.(3)

அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் :3426.

ஆனால், இவர்கள் எங்களுக்கு அது பத்தாது. நாங்கள் ஒரு இமாமை கூட்டி வந்து, அல் ஃபாத்திஹா ஓதி துஆ ஓதினால் தான் எங்களுக்குத் திருப்தி.

நாங்கள் என்ன செய்துவிட்டோம்? இமாமை கூட்டிவந்து அவருக்கு காசு கொடுப்பது தப்பா?அவர் ஃபாத்திஹா சூராவை ஓதினாரே, அந்த ஃபாத்திஹா சூரா தப்பா? அவர் எங்களுக்காக துஆ ஓதினாரே, துஆ ஓதினது தப்பா?

கேள்விகள் இதுதான். பித்அத்வாதிகளுக்கு ஷைத்தான் எப்படி இங்கு அலங்கரிக்கின்றான் பாருங்கள். அல்லாஹ்வுடைய வார்த்தை அவர்களுக்கு எப்படி உண்மை ஆகின்றது?

அல்லாஹ் என்ன சொல்கின்றான்? நீங்கள் சொல்வதை அவர்கள் கேட்கவில்லை என்றால், அல்லாஹ் தெளிவாக சொல்லிவிட்டான். நபியே! நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் அவர்கள் தங்களது மன விருப்பத்தையே செய்கின்றார்கள். (அல்குர்ஆன் 28 : 50)

ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் திக்ரு சொல்லிக் கொடுத்தார்கள். ஹதீஸ் நூல்களை எடுத்துக் கொள்ளுங்கள். ஸஹாபாக்கள் காலத்தில் உள்ள ஹதீஸ்களிலிருந்து, தாபியீன்கள் உடைய ஹதீஸ் நூல்கள் வரை நூற்றுக்கணக்கான ஹதீஸ் நூல்களை எடுத்துக் கொள்ளுங்கள்.

திக்ரு தஸ்பீஹ் என்று எடுத்துக் கொண்டால், லாயிலாஹா இல்லல்லாஹ் என்று வருகின்றது. சுப்ஹானல்லாஹ் அல்ஹம்து லில்லாஹ் அல்லாஹு அக்பர் என்று வருகின்றது. (4)

அறிவிப்பாளர் : ஜாபிர் இப்னு அப்தில்லாஹ் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : திர்மிதி, எண் :3383.

இந்த திக்ரு எல்லாம் முப்பத்தி மூன்று தடவை,அல்லது நூறு தடவை என்று சாதாரணமாக செய்துவிட்டு, இதெல்லாம் சாதாரண திக்ரு, நாங்கள் விசேஷமாக செய்வோம் என்று சொல்கிறார்கள்.

அவர்களுடைய திக்ரு என்ன?வெறும் இல்லல்லாஹ் இல்லல்லாஹ் என்று சொல்வார்கள்.  அதற்கு பிறகு, இன்னும் கொஞ்சம் அந்த இல்லல்லாஹ் சுருக்கி, அல்லாஹு அல்லாஹு அல்லாஹு.

அப்புறம் இன்னும் கொஞ்சம் அதையும் சுருக்கி, ஹு ஹு ஹு என்று.

அஸ்தஃபிருல்லாஹ்! இது மார்க்கமா? அல்லது விளையாட்டா? அல்லாஹ் சொல்கின்றான்:முஃமின்களே!அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள் என்று. அந்த திக்ருகள் என்னென்ன என்று ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு கற்றுக் கொடுக்கின்றார்கள்.

லா இலாஹ இல்லல்லாஹ் என்று சொல்லுங்கள். வானங்கள் பூமிகள் அவை இரண்டுக்கும் இடையில் உள்ள இடத்தை அவை நிரப்பி விடுகின்றன. சுப்ஹானல்லாஹ் சொல்லுங்கள். அல்ஹம்துலில்லாஹ் சொல்லுங்கள். மீசான் திராசை அவை நிரப்பி விடுகின்றன.(5)

அறிவிப்பாளர் : அபூ மாலிக் அல்அஷ்அரி ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் :223.

எங்கேயாவது ஒரு ஹதீஸில், அல்லது, இன்னும் கீழே இறங்கி வருவோம். ஒரு ஸஹாபியுடைய அமலில் இப்படி ஒரு திக்கிரை அவர் செய்தார் என்று சொல்ல முடியுமா? இப்படி சொல்லிக் கொடுத்த திக்ருகளில் எல்லாம் அவர்களுக்கு திருப்தி கிடையாது.

லாயிலாஹ இல்லல்லாஹ் திருப்தி இல்லை. சுப்ஹானல்லாஹ் திருப்தி இல்லை. இப்போ அவர்களுடைய திருப்தி எல்லாம் ஹு ஹு ஹு என்று இரவெல்லாம் கத்துவதில், கதறுவதில் அல்லது அல்லாஹு அல்லாஹு அல்லாஹு என்ற வார்த்தையை கூறுவதில் மட்டும் இருக்கிறது.

எவ்வளவு கண்ணியமான அந்த வார்த்தையை அல்லாஹு தஆலாவை அப்படிப் புகழ்ந்து தான் நாம் நினைவு கூற வேண்டுமே தவிர, அல்லாஹ் என்ற பெயரை தனியாக சொல்வது திக்ரு அல்ல.

அல்லாஹ் சொல்கின்றான், அல்லாஹ் கட்டளையிட்டு இருக்கின்றான் என்று பயன்படுத்தலாமே தவிர, திக்ர் என்று வந்தால் அங்கே அல்லாஹ்வுடைய ஒரு உயர்வு சேர்க்கப்பட வேண்டும். அல்லாஹ்வுடைய புகழ் சேர்க்கப்பட வேண்டும்.

அப்போதுதான், அது திக்ராக ஆகும். இல்லையென்றால் அல்லாஹ்வை அவமானப்படுத்துவது கேவலப்படுத்துவது என்பதாகும்.

உதாரணத்திற்கு, உங்களுடைய பெயர் அப்துல்லாஹ். உங்களை ஒருவர் அப்துல்லாஹ்! அப்துல்லாஹ்! என்று கூறினால், உனக்கு என்ன வேணும்? எதற்கு கூப்பிடுற? என்று கேட்போம்.இது, ஒரு சாதாரண ஒரு அறிவு.ஒருவருடைய பெயரை கூப்பிட்டால் அவர் திரும்பி பார்ப்பார் என்று.

அல்லாஹ்வுடைய பெயரை அவனுடைய உயர்வையைக் கொண்டு நினைவு கூறுங்கள் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றுக் கொடுத்திருக்க, அந்த வழியில் திருப்தி இல்லை.

இதைப்பற்றித்தான் அல்லாஹ் சொல்கின்றான்: அவர்கள் தங்களுடைய மனோ இச்சையை பின்பற்றுகின்றார்கள். அல்லாஹ்வுடைய நேர்வழி இல்லாமல் தனது விருப்பத்தை நிறைவேற்றுபவனை விட மிகப்பெரிய வழிகேடன் யார் இருக்க முடியும்?(அல்குர்ஆன் 28 : 50)

பித்அத்துகளின் அடிப்படையில் அமல்கள் செய்பவர்களைப் பார்த்து அல்லாஹ் கொடுக்கக்கூடிய பட்டப்பெயர்,வழிகேடர்களிலேயே மிகப்பெரிய வழிகேடர் என்று அல்லாஹ் பெயர் வைக்கின்றான்.

இந்த பித்அத் செய்பவர்களுக்கு முன்னால் ஸஹீஹான ஹதீஸ்களை சொன்னால் செத்துப் போன பாம்பு போன்று இருப்பார்கள். மார்க்கத்தின் உடைய அமல்கள் குர்ஆனில் ஹதீஸில் வந்துள்ளது போன்று சொல்லுங்கள் எந்த மாற்றமும் இருக்காது.

ஆனால், அதே நேரத்தில் பொய்யான கட்டுக் கதைகள், பொய்யான ஹதீஸ்களை சொல்லுங்கள். அப்படியே உணர்ச்சி பொங்கி,அப்படியே பரவசம் அடைந்து விடுவார்கள்.

நபி அவர்களுடைய அற்புதங்களை சொல்லுங்கள். அப்படியே அமைதியாகி விடுவார்கள். ஆனால், அதே நேரத்தில், அவ்லியாக்களுடைய வாழ்க்கையில் நடக்காத, முற்றிலும் அவர்களுடைய வாழ்க்கைக்கு பலநூறு ஆண்டுகளுக்குப் பின்னால் வந்த கட்டுக் கதையை சொல்லுங்கள். அப்படியே பரவசம் பொங்கும்.

உதாரணத்திற்கு, அப்துல் காதர் ஜெய்லானி அவர்கள் பயான் செய்து கொண்டிருந்தார்களாம். அப்போது, மழை வந்துவிட்டதாம். வானத்தைப் பார்த்தார்கள், அல்லாஹ்விடத்தில் பேசினார்களாம்;

அல்லாஹ்! நான் உன்னை பற்றி பேசுவதற்கு மக்களை கூப்பிட்டு வைத்துள்ளேன். நீ மழையை அனுப்பி எல்லோரையும் துரத்தி விடுகின்றாயா? மழையே! நீ நில் என்று சொன்னார்களாம். மழை நின்று விட்டதாம்.

இந்த சம்பவங்களை சொன்னால், அப்படியே மஜ்லீஸில் உள்ளவர்கள் துடிப்பார்களாம். பக்தி அப்படியே டிகிரி கணக்கில் எகிறும்‌.

அதுபோன்று, இன்னொரு சம்பவம். அப்துல் காதர் ஜெய்லானி காலையில் உட்கார்ந்திருந்தார்கள். ஒரு பெண்மணி அழுது கொண்டே வந்தார்களாம். காரணம் கேட்டதற்கு, என் புள்ள மவுத்தாப் போச்சு என்று சொல்கிறாள்.

அதற்கு, அப்துல் காதர் ஜெய்லானி திரும்பப் போ என்று சொன்னார்களாம். எனவே, அவர்கள் திரும்ப வீட்டுக்கு வந்தாங்களாம். புள்ள ஹயாத் ஆகிருச்சு. புள்ள மட்டும் ஹயாத் இல்லை. அன்னைக்கு அந்த ஊரில் மவ்தா போன எல்லோருமே ஹயாத் ஆகிவிட்டார்களாம்.

மலக்குல் மௌத், இன்றைக்கு என்னிடத்தில் அனுமதி கேட்காமல் எல்லோருடைய ரூஹையும் வாங்கிக் கொண்டு பையில் போட்டு சென்றார்கள். என்னிடம் அனுமதி கேட்காமல் எப்படி நீங்கள் இவ்வாறு செய்யலாம் என்று, நான் பையை வாங்கி பிரித்துவிட்டேன். எல்லோருடைய ரூஹும் அவர்களிடத்தில் போய் சேர்ந்துவிட்டது. அஸ்தஃபிருல்லாஹ்!

இவர்கள் அல்லாஹ்வை நிராகரிக்க விரும்புகின்றார்களா? அல்லாஹ்வுடைய ஏற்பாட்டை நிராகரிக்க நினைக்கிறார்களா? அல்லது தாம் நம்பி இருக்கின்ற ஒரு வலியை உயர்த்த நினைக்கிறார்களா?

இதுதான் பித்அத்தின் நிலை. பித்அத் வாதிகளுக்கு சுன்னாவை வெறுப்பது தான் தெரியும். ஹதீஸ்களை மறுப்பது தான் தெரியும். பொய்யான கற்பனைகள் கட்டுக்கதைகள் தான் அவர்களுக்கு வரும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.

«مَا أَحْدَثَ قَوْمٌ بِدْعَةً إِلَّا رُفِعَ مِثْلُهَا مِنَ السُّنَّةِ»

ஒரு கூட்டம் பித்அத்தை விரும்பினால் அவர்களிடத்தில் உள்ள சுன்னா விடுபட்டு விடும். ஒரு நபிக்கு பிறகு ஒரு உம்மத் பித்அத்தை உருவாக்கினால் அந்த உம்மத் சுன்னத்தை வீணாக்காமல் இருக்காது.(6)

அறிவிப்பாளர் : குழைஃப் இப்னு அல்ஹாரிஸ் அஸ்ஸுமாலி ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் :16970.

பித்அத்தை உருவாக்க கூடியவர்கள் சுன்னத்தை வீணாக்கி விடுவார்கள். நம்முடைய முன்னோர்கள் இந்த பித்அத்களை கண்டிப்பதில் கவனமாக இருந்தார்கள்.

ஷைத்தான் எப்படி மக்களிடத்தில் வருவான்? இமாம் மாலிக் ரஹிமஹுல்லாஹ்அவர்கள் ஹஜ் உடைய பாடங்களை சட்டங்களை நடத்தி வருகின்றார்கள்.

அப்போது ஒருவர் எழுந்து கேட்கின்றார்:இமாம் மாலிக் அவர்களே!நான் எங்கிருந்து இஹ்ராம் கட்டுவது? அப்போது இமாம் மாலிக் அவர்கள் அவருடைய ஊரை கேட்டு விட்டு நீ இந்த இடத்தில் இருந்து வருபவராக இருந்தால்,ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நீ இந்த மீகாதில் இஹ்ராம் கட்ட வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். எனவே,நீ அந்த இடத்திலிருந்து இஹ்ராம் கட்டு என்று சொன்னார்கள்.

அதற்கு அவர் சொல்கின்றார்:நான் கொஞ்சம் முன்னாடி இருந்தே இஹ்ராம் கட்டி விட்டு வந்தால்என்ன? என்று கேட்கிறார்.

இன்று மக்களும் அப்படித்தான் பேணுதல் என்று பெயரில் செய்கிறார்கள். நபிக்கும் ஸஹாபாக்களுக்கும் இல்லாத பேணுதலா?

இமாம் மாலிக் சொல்கிறார்கள் : எனக்கு அது பிடிக்கவில்லை. நான் அதை தப்பு என்று நினைக்கின்றேன். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்கின்ற மிக்காத்தை விட்டு விட்டு அதற்கு முன்னாடி இஹ்ராம் கட்டுவது என்னுடைய கருத்து அல்ல. நான் அதை ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்று சொல்லி.

கேள்வி கேட்டவருக்கு கோபம் வந்து விட்டது. அதுல என்ன தப்பு இருக்கு?

இப்போது நீங்கள் பித்அத் வாதிகளிடம் போய், ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்தது போல் இது இல்லை என்று சொன்னால், அதுல என்ன தப்பு இருக்கு? என்று கேட்பார்கள்.

தப்பு எது? அல்லாஹ்வுடைய தூதர் சொல்லிக் கொடுக்காததை நீ செய்வது தப்பு.

இமாம் மாலிக் சொன்னார்கள்: நீ அந்த மாதிரி செய்ய ஆரம்பித்தால் உனக்கு குழப்பம் வந்துவிடும் என்று நான் பயப்படுகிறேன்.

அதற்கு அந்த மனிதர் கேட்கின்றார்: இமாம் அவர்களே!இஹ்ராம் கட்டுவது ஒரு நன்மை. மீகாதிலிருந்து கட்டுவது ஒரு நன்மை.அதைக் கொஞ்சம் நான் கூட்டி செய்கின்றேன்.அதில் என்ன தப்பு இருக்கிறது?

இமாம் மாலிக் அவர்கள் குர்ஆனின் வசனத்தை ஓதிக் காட்டினார்கள்:

فَلْيَحْذَرِ الَّذِينَ يُخَالِفُونَ عَنْ أَمْرِهِ أَنْ تُصِيبَهُمْ فِتْنَةٌ أَوْ يُصِيبَهُمْ عَذَابٌ أَلِيمٌ

ஆகவே, எவர்கள் (தூதராகிய) அவருடைய கட்டளைக்கு மாறுசெய்கிறார்களோ அவர்கள் தங்களுக்கு ஒரு ஆபத்தோ அல்லது துன்புறுத்தும் வேதனையோ வந்தடையும் என்பதைப் பற்றிப் பயந்து கொண்டிருக்கவும். (அல்குர்ஆன் 24 : 63)

மேலும், இமாம் மாலிக் அவர்கள் சொன்னார்கள்: எந்த சிறப்பை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அடையவில்லையோ அந்த சிறப்பை நீ அடைந்து கொள்ள விரும்புகிறாய் என்றா சொல்ல வருகிறாய்?

அல்லாஹ்வின் அடியார்களே! இந்த பித்அத்வாதிகளின் நிலையைப் பற்றி அல்லாஹ் சொல்கிறான்:

وُجُوهٌ يَوْمَئِذٍ خَاشِعَةٌ (2) عَامِلَةٌ نَاصِبَةٌ (3) تَصْلَى نَارًا حَامِيَةً

அந்நாளில், சில முகங்கள் இழிவடைந்து இருக்கும். அவை (தவறான வழியில்) அமல் செய்து (அதிலேயே) நிலைத்திருந்தவை. கொழுந்துவிட்டு எரியும் நெருப்பிற்கே அவை செல்லும். (அல்குர்ஆன் 88 : 2-4)

இந்த வசனத்திற்கு இமாம் இப்னு கசீர் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் விளக்கம் சொல்கிறார்கள்: உண்மையான வழியில் அல்லாது வேறு பாதையில் சென்று அல்லாஹ்வை வணங்கியவனைப் பற்றி இது சொல்லப்படும்.

இமாம் ஹசன் பசரி ரஹிமஹுல்லாஹ் சொல்கிறார்கள்:அல்லாஹு தஆலா பித்அத் செய்தவனிடமிருந்து அவனுடைய அமல்களை ஏற்றுக்கொள்ள மாட்டான். அவனுடைய நோன்பை, அவனுடைய தொழுகையை, அவனது ஹஜ்ஜை, அவனது ஸதக்காவை அவர்கள் பித்அத்களை விட்டு வெளியேறி தவ்பா செய்யும் வரை ஏற்றுக் கொள்ள மாட்டான்.

கண்ணியத்திற்குரியவர்களே!பித்அத்தை சாதாரணமாக நினைத்துவிட கூடாது. அது ஆபத்தானது மிக பயங்கரமானது.

அல்லாஹ்வுடைய தூதர் எதை சொல்லிக் கொடுத்தார்களோ அதைக் கொண்டு நான் திருப்தி அடைய வேண்டும். அந்த அமல் தான் அல்லாஹ்வுடைய அன்பை, அல்லாஹ்வுடைய பொருத்தத்தை நமக்கு தேடித் தரக் கூடியது.

அல்லாஹ் சுப்ஹானஹு வதஆலா அந்த நல்ல பாக்கியத்தை எனக்கும் உங்களுக்கும் தந்து, ஒவ்வொரு பித்அத்துகளிலிருந்தும்நம்மை பாதுகாத்து அருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ النَّضْرِ الْأَزْدِيُّ، ثنا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو، ثنا زُهَيْرٌ، ثنا أَبُو إِسْحَاقَ، عَنْ أَصْحَابِ عَبْدِ اللهِ، عَنْ عَبْدِ اللهِ، أَنَّهُ: «كَانَ يُكَبِّرُ صَلَاةَ الْغَدَاةِ مِنْ يَوْمِ عَرَفَةَ، وَيَقْطَعُ صَلَاةَ الْعَصْرِ مِنْ يَوْمِ النَّحْرِ، يُكَبِّرُ إِذَا صَلَّى الْعَصْرَ» ، قَالَ: " وَكَانَ يُكَبِّرُ: اللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ، لَا إِلَهَ إِلَّا اللهُ، وَاللهُ أَكْبَرُ اللهُ أَكْبَرُ وَلِلَّهِ الْحَمْدُ " (المعجم الكبير للطبراني- 9538)

குறிப்பு 2)

حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ قَالَ: حَدَّثَنَا خَالِي يَعْلَى، عَنْ سُفْيَانَ، عَنْ مُوسَى بْنِ أَبِي عَائِشَةَ، عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ جَاءَ أَعْرَابِيٌّ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلَهُ عَنِ الْوُضُوءِ، فَأَرَاهُ ثَلَاثًا ثَلَاثًا، ثُمَّ قَالَ: «هَذَا الْوُضُوءُ، فَمَنْ زَادَ عَلَى هَذَا فَقَدْ أَسَاءَ، أَوْ تَعَدَّى، أَوْ ظَلَمَ» (سنن ابن ماجه- 422) [حكم الألباني]حسن صحيح

குறிப்பு 3)

حَدَّثَنَا سَعِيدُ بْنُ يَحْيَى بْنِ سَعِيدٍ الأُمَوِيُّ قَالَ: حَدَّثَنَا أَبِي قَالَ: حَدَّثَنَا ابْنُ جُرَيْجٍ، عَنْ إِسْحَاقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ قَالَ - يَعْنِي - إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ: بِسْمِ اللَّهِ، تَوَكَّلْتُ عَلَى اللَّهِ، لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ، يُقَالُ لَهُ: كُفِيتَ، وَوُقِيتَ، وَتَنَحَّى عَنْهُ الشَّيْطَانُ ": «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الوَجْهِ» (سنن الترمذي ت شاكر 3426) [حكم الألباني] : صحيح

குறிப்பு 4)

حَدَّثَنَا يَحْيَى بْنُ حَبِيبِ بْنِ عَرَبِيٍّ قَالَ: حَدَّثَنَا مُوسَى بْنُ إِبْرَاهِيمَ بْنِ كَثِيرٍ الأَنْصَارِيُّ، قَالَ: سَمِعْتُ طَلْحَةَ بْنَ خِرَاشٍ، قَالَ: سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «أَفْضَلُ الذِّكْرِ لَا إِلَهَ إِلَّا اللَّهُ، وَأَفْضَلُ الدُّعَاءِ الحَمْدُ لِلَّهِ»: «هَذَا حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ مُوسَى بْنِ إِبْرَاهِيمَ» وَقَدْ رَوَى عَلِيُّ بْنُ المَدِينِيِّ، وَغَيْرُ وَاحِدٍ عَنْ مُوسَى بْنِ إِبْرَاهِيمَ، هَذَا الحَدِيثَ (سنن الترمذي- 3383) [حكم الألباني] : حسن

குறிப்பு 5)

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلَالٍ، حَدَّثَنَا أَبَانُ، حَدَّثَنَا يَحْيَى، أَنَّ زَيْدًا، حَدَّثَهُ أَنَّ أَبَا سَلَّامٍ، حَدَّثَهُ عَنْ أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الطُّهُورُ شَطْرُ الْإِيمَانِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَأُ الْمِيزَانَ، وَسُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَآَنِ - أَوْ تَمْلَأُ - مَا بَيْنَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، وَالصَّلَاةُ نُورٌ، وَالصَّدَقَةُ بُرْهَانٌ وَالصَّبْرُ ضِيَاءٌ، وَالْقُرْآنُ حُجَّةٌ لَكَ أَوْ عَلَيْكَ، كُلُّ النَّاسِ يَغْدُو فَبَايِعٌ نَفْسَهُ فَمُعْتِقُهَا أَوْ مُوبِقُهَا» (صحيح مسلم 1 - (223)

குறிப்பு 6)

حَدَّثَنَا سُرَيْجُ بْنُ النُّعْمَانِ، قَالَ: حَدَّثَنَا بَقِيَّةُ، عَنْ أَبِي بَكْرِ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ حَبِيبِ بْنِ عُبَيْدٍ الرَّحَبِيِّ، عَنْ غُضَيْفِ بْنِ الْحَارِثِ الثُّمَالِيِّ، قَالَ: بَعَثَ إِلَيَّ عَبْدُ الْمَلِكِ بْنُ مَرْوَانَ، فَقَالَ: يَا أَبَا أَسْمَاءَ، إِنَّا قَدْ جَمَعْنَا النَّاسَ عَلَى أَمْرَيْنِ، قَالَ: وَمَا هُمَا؟ قَالَ: رَفْعُ الْأَيْدِي عَلَى الْمَنَابِرِ يَوْمَ الْجُمُعَةِ، وَالْقَصَصُ بَعْدَ الصُّبْحِ وَالْعَصْرِ، فَقَالَ: أَمَا إِنَّهُمَا أَمْثَلُ [ص:173] بِدْعَتِكُمْ عِنْدِي، وَلَسْتُ مُجِيبَكَ إِلَى شَيْءٍ مِنْهُمَا قَالَ: لِمَ؟ قَالَ: لِأَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «مَا أَحْدَثَ قَوْمٌ بِدْعَةً إِلَّا رُفِعَ مِثْلُهَا مِنَ السُّنَّةِ» فَتَمَسُّكٌ بِسُنَّةٍ خَيْرٌ مِنْ إِحْدَاثِ بِدْعَةٍ (مسند أحمد- 16970)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/