HOME      Khutba      691 - சுன்னாவைப் பின்பற்று பித்அத்தை விட்டு விலகு! அமர்வு 2 | Tamil Bayan   
 

691 - சுன்னாவைப் பின்பற்று பித்அத்தை விட்டு விலகு! அமர்வு 2 | Tamil Bayan

           

691 - சுன்னாவைப் பின்பற்று பித்அத்தை விட்டு விலகு! அமர்வு 2 | Tamil Bayan


சுன்னாவைப் பின்பற்று பித்அத்தை விட்டு விலகு!

ஜுமுஆ குத்பா தலைப்பு : சுன்னாவைப் பின்பற்று பித்அத்தை விட்டு விலகு!அமர்வு -2

வரிசை : 691

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 24-12-2021 | 20-05-1443

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹ்வை போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹ்வின் தூதர் மீதும், அவர்களின் குடும்பத்தார் மீதும், தோழர்கள் மீதும், ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக. இந்த ஜும்ஆவின் குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நம் அனைவருக்கும் உறுதியாகி ஈமானை தருவானாக! இறுதி மூச்சு வரை அல்லாஹ்வை வணங்கி வழிபட்டு, அல்லாஹ்வுடைய வேத சட்டங்களின் படியும், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிகாட்டுதல்படி, சுன்னாவின் படிவாழ்ந்து, அல்லாஹ்வை சந்திக்கிற நற்பாக்கியத்தைத் தந்தருள்வானாக! ஆமின்.

சென்ற ஜும்ஆவில் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய சுன்னாவைப் பற்றி பிடித்திருப்பது, பித்அத்தை விட்டு விலகி இருப்பது குறித்து சில விஷயங்களைப் பார்த்தோம். அதனுடைய தொடரைத்தான் இன்ஷா அல்லாஹ் இந்த ஜும்ஆவிலும் பார்க்க இருக்கிறோம்.

அல்லாஹ்வுடைய மார்க்கம் மிக நுணுக்கமானது. மிக நுட்பமானது. இந்த மார்க்கத்தோடு நமக்கு இருக்கக்கூடிய தொடர்பு என்பது மிகவும் நுணுக்கமானது.

எப்படி இந்த மார்க்கம் இறக்கப்பட்டதோ, எப்படி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் போதித்தார்களோ, அதைத் தெரிந்து கற்று, நாம் அதன்படிதான் அமல் செய்ய வேண்டும்.

இதற்கு மாற்றமாக, கற்பனையின் அடிப்படையில், யூகங்களின் அடிப்படையில், முன்னோர்களின் சடங்குகள் சம்பிரதாயங்களின்அடிப்படையில், நம்முடைய சிற்றறிவு சொல்லக்கூடியஅந்தப் தூண்டுதலின் அடிப்படையில்நமது அணுகுமுறை இருக்கவே கூடாது.

நம்முடைய பின்பற்றுதல் என்பது ஆதாரத்தின் அடிப்படையில் இருக்க வேண்டும். ஆதாரத்தைத் தவிர, எந்தக் கற்பனையும், சித்தாந்தத்தையும், யூகத்தையும்இந்த மார்க்கத்தில் புகுத்துவதற்குஅனுமதி இல்லை.

அல்லாஹு தஆலா அவனளவில் நம்மை கொண்டு போய் சேர்ப்பதற்கு, அவன் படைத்த பெரிய இன்ப லோகம் ஆகிய சொர்க்கத்தில்நம்மை கொண்டு போய் சேர்ப்பதற்கு ஒரே ஒரு வழியைதான் அல்லாஹ் கொடுத்து இருக்கிறானே தவிர, பல வழிகளை அல்ல.

ஸூரத்துல் அன்ஆம் உடைய 153-வது வசனத்தில்அல்லாஹ்கூறுவதை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓதி காட்டுகிறார்கள்.

அதோடு சேர்ந்து ஒரு விளக்கத்தையும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு போதிக்கிறார்கள்.

அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் ரழியல்லாஹுஅன்ஹுஅறிவிக்கிறார்கள்:

خَطَّ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطًّا [ص:208]، ثُمَّ قَالَ: «هَذَا سَبِيلُ اللَّهِ» ، ثُمَّ خَطَّ خُطُوطًا عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ، ثُمَّ قَالَ: " هَذِهِ سُبُلٌ - قَالَ يَزِيدُ: مُتَفَرِّقَةٌ - عَلَى كُلِّ سَبِيلٍ مِنْهَا شَيْطَانٌ يَدْعُو إِلَيْهِ "

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நேராக ஒரு கோட்டை கிழித்தார்கள். இந்த நேர்கோடு அல்லாஹ்வுடைய பாதை ஆகும்.

(அதாவது, இதில் நடப்பவர் அல்லாஹ்வை சென்று அடைவார். அல்லாஹ்வுடைய பொருத்தத்தை பெற்றுக் கொள்வார். அல்லாஹ்வுடைய சொர்க்கத்தில் சேருவார்.)

பிறகு, அந்த கோட்டை சுற்றி அந்த கோட்டின் வலது புறத்திலும், அந்த கோட்டுடைய இடது பக்கத்திலும், சில சிறிய சிறிய கோடுகளை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வரைந்தார்கள்.

இவையெல்லாம் இஸ்லாமை விட்டு பிரிந்துசென்ற, விலகிச் சென்ற பலவழிகள். பல பாதைகள். இந்த ஒவ்வொரு பாதையிலும் ஷைத்தான் இருக்கிறான்.(1)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத்,எண் : 4142.

 (அவர் பார்ப்பதற்கு ஆலிமாக இருக்கலாம். சிந்தனைவாதியாக இருக்கலாம். பெரிய தாடி பெரிய தலைப்பாகை உடையவராக இருக்கலாம். இன்னும், அவருடைய மார்க்கப்பற்றாலும், அவருடைய தக்வாவாலும், அவருடைய பேச்சாலும், நாம் ஏமாந்து விடக்கூடிய அளவுக்கு, பெரிய ஞானத்தையும் தத்துவத்தையும்ஆழ்ந்த கருத்துகளையும் சொல்பவராக நமக்குத் தெரியலாம்.

ஆனால், பிரிந்து சென்ற பாதையில் இருப்பவர் எவரும், அவர் அல்லாஹ்வின் புறத்திலிருந்து, ரஸூலின் புறத்திலிருந்து நமக்கு அங்கீகரிக்கப்பட்ட வழிகாட்டி இல்லை.

மாறாக, அவர் அல்லாஹ்வின் புறத்திலிருந்தும், ரஸூலின் புறத்திலிருந்தும்நமக்கு எச்சரிக்கப்பட்ட வழிகேடு என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

யார்,குர்ஆன் சுன்னாவிலிருந்து, அதில் சுய கருத்துக்களை புகுத்தாமல், நுழைக்காமல், சுயசிந்தனைகளை கொண்டு அதற்கு விளக்கம் கூறாமல், நமக்கு எடுத்து சொல்கிறார்களோஅவர்கள் நம்முடைய வழிகாட்டி.

அதிலிருந்து விலகிச் சென்று, குர்ஆன் இப்படி, ஆனால் இதற்கு கருத்து இப்படி, ஹதீஸ் இப்படி,ஆனால் இதனுடைய விளக்கம் இப்படி என்றுகூறி,ஹதீஸில் இல்லைதான்,இருந்தாலும் என்பதாக, அல்லது எனக்கு கனவில் வந்தது,எனது சிந்தனையில் தோன்றியது,எனக்கு என்னுடைய ஷேக் சொல்லிக் கொடுத்தார்,அவருக்கு அவருடைய ஷேக் சொல்லிக் கொடுத்தார்.

இப்படியாக உள்ளத்திற்கு உள்ளம் இந்த விளக்கம் கல்வி வருகிறது என்றெல்லாம் யார் போதிப்பார்களோ, அவர்கள் இஸ்லாமின் வழிகாட்டிகள் அல்ல.

இஸ்லாமின் பாதைகளில் இருந்து விலகிச் சென்று, மாற்று பாதைகளில் அமர்ந்துகொண்டு, இந்த உம்மத்துகளை வழி கெடுக்கக்கூடிய ஷைத்தான்கள் என்று புரிந்துகொள்ள வேண்டும்.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எளிமையாக அழகாகநாம் புரியும்படி நமக்குச் சொன்னார்கள்!

இந்த ஒரு கோட்டிலிருந்துவலது பக்கம், இடது பக்கம்கிழித்தார்கள். இது எல்லாம் பிரிந்து சென்ற பாதைகள். இந்த ஒவ்வொரு பாதையிலும் ஷைத்தான் இருக்கின்றான்.

மக்கள் அவர்களை அழைப்பார்கள். தன்னுடைய தலைவர் என்று அழைக்கலாம். தங்களுடைய அண்ணன் என்று அழைக்கலாம். தங்களுடைய சிந்தனைவாதி என்று அழைக்கலாம். திறமையாளர் என்று அழைக்கலாம்.

மூத்த அறிஞர் என்று அழைக்கலாம். மக்கள் என்ன பெயர் வேண்டுமானாலும் வைத்து கொள்ளலாம். ஒவ்வொருவரும் தங்களுடைய இமாமை புகழ கூடியவர்கள் தான்.

ஆனால், அந்த இமாம் அல்லாஹ்வால் அல்லாஹ்வுடைய தூதரால்அங்கீகரிக்கப்பட்டவரா? பிரிந்து சென்ற பாதையில் இருப்பவர் எவரும்அல்லாஹ்வினால் அங்கீகரிக்கப்பட்டவரல்ல.

அவருக்கு அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் சொல்லக்கூடிய பெயர் ஷைத்தான்.

நாம் இந்த இடத்தில்சில விஷயங்களை சிந்தித்துப் பார்க்க வேண்டும். தரீகத்தின் பெயர்களால், ஸூஃபித்துவத்தின் பெயர்களால், மக்களுக்கு நூதன இபாதத்துகளை, நூதனமான அனுஷ்டானங்களை, சடங்குகளை எல்லாம் கற்றுக் கொடுத்து, சுன்னாவான வணக்க வழிபாடுகளில் இருந்துமக்களை திசை திருப்பிக் கொண்டிருக்கிறார்கள்.

இன்னொரு பக்கம், இந்த உம்மத்தை மீட்டெடுப்பதற்கு, இந்த உம்மத்தை நேர் வழிக்கு கொண்டு வருவதற்கு, ரஸூலுல்லாஹ்வின் பக்கம் வர சொன்னோமே, அல்லாஹ்வின் தூதரின் பக்கம் இந்த உம்மத்தை அழைத்தோமே.

அப்படி அழைத்ததற்கு பிறகு, அந்த உம்மத் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ன சொன்னார்கள்? ஸஹாபாக்கள் என்ன செய்தார்கள்? என்று கேட்டு வரும் போது, நம்மை தேடி வரும்போது, ஹதீஸ் இப்படியிருந்தாலும், இந்த ஹதீஸை ஏற்றுக்கொள்ள வேண்டாம்.

காரணம், இது குர்ஆனுக்கு முரண்படுகிறது. இந்த ஹதீஸ் இஸ்லாமிய அடிப்படைக்கு முரண்படுகிறது. ஸஹாபாக்களை ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஸஹாபாக்களும் பல வழிகேடுகளை செய்திருக்கிறார்கள் என்று மீண்டும் ஒரு வழி கேட்டுக்கு, மீண்டும் ஒரு நரக படுகுழிக்குஇந்த உம்மத்தை அழைக்கிற அழைப்பாளர்கள் சிந்திக்க வேண்டாமா? அவர்கள் அல்லாஹ்வை பயப்பட வேண்டாமா?)

ஹதீஸின் தொடர் : பிறகு, ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓதிக்காட்டினார்கள்.

وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ

‘‘நிச்சயமாக இதுதான் என் நேரான வழியாகும். அதையே நீங்கள் பின்பற்றுங்கள்; மற்ற வழிகளைப் பின்பற்றாதீர்கள். அவை அல்லாஹ்வுடைய வழியிலிருந்து உங்களைப் பிரித்துவிடும். நீங்கள் இறையச்சமுடையவர்களாக ஆவதற்காக (உங்கள் இறைவன்) இவற்றை உங்களுக்கு உபதேசிக்கிறான்'' (என்று கூறுங்கள்). (அல்குர்ஆன் 6 : 153)

அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத்ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத்,எண் : 4142.

கண்ணியத்திற்குரியவர்களே! இங்கே நாம் இன்னொரு விஷயத்தைப் புரிந்து செல்ல வேண்டும்.

இன்று,மக்கள் பெரும்பாலும். சடங்குகளையும், நூதன அனுஷ்டானங்களையும், மார்க்கத்தில் சொல்லப்படாத பித்அத்துகளையும்மார்க்கத்தில் சொல்லப்படாத இபாதத்துகளையும்அனாச்சாரங்கள் என்று புரிந்து கொண்டு, அவற்றை விட்டு விலகி இருக்கிறகுர்ஆன் சுன்னாவின் பிடிப்பாளர்கள்பலர், இன்னொரு வழிகேட்டை புரியாமல் இருக்கிறார்கள்.

எப்படி மார்க்கத்தில் ஒன்றை அதிகப்படுத்துவது பித்அத்தோஅதுபோன்று மார்க்கத்தில் சொல்லப்பட்ட ஆதாரத்தை மாற்றுவதும் பித்அத் ஆகும்.

மார்க்கத்தில் சொல்லப்பட்ட ஸஹீஹான சுன்னாவை ஏற்காமல் அதில் தஃவீல் செய்வதும், அதில் தம்முடைய கருத்துக்களை புகுத்துவதும் பித்அத் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய சுன்னாவை அப்படியே ஏற்றுக் கொள்வதுதான் நமது பாதுகாப்புக்குண்டான வழி.

அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா இந்த தீனிலிருந்து பிரிந்தவர்கள், எந்த வழியில் பிரிந்து சென்றாலும் சரி, அவர்களை அல்லாஹ் பழிக்கிறானே. அவருடைய செயல்களைச் சொல்களை, அல்லாஹ் பழிக்கின்றான்.அது வெறும் இபாதத்களோடு மட்டும் நின்று விடுவது கிடையாது.

சிந்தனை ரீதியான,அறிவு தர்க்கம் ரீதியானபிரிவினை என்பதும்மிகப்பெரிய வழிகேடு. ஆரம்ப காலங்களில் உருவாகியஹவாரிஜ்கள், முஃதஸிலாக்கள் உடைய வழிகேடு என்பது, அமல்கள் ரீதியாக இருக்கவில்லை. மாறாக, சிந்தனை ரீதியாக இருந்தது என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

தர்க்கம் ரீதியாக, குதர்கத்தின் வழியாக, தத்துவங்கள் வாயிலாகத்தான் இவர்களுடைய பித்அத்கள் இருந்தன.

சூஃபிகள் இன்னும் அவர்களை சார்ந்த தரீக்காவாதிகள் இபாதத்களில் மக்களுக்கு பித்அத்தை உண்டாக்கினார்கள் என்றால்,இந்த ஹவாரிஜ்கள், முஃதஸிலாக்கள், கதரிய்யாக்கள், முர்ஜியாக்கள் இன்னும் இவர்கள் உடைய வழியில் வந்தவர்கள் எல்லாம், தர்க்க ரீதியாக, தத்துவங்களாக மக்களுக்கு போதித்து வழி கெடுத்தார்கள்.

அல்லாஹ்வின் அடியார்களே!எது எப்படி இருந்தாலும் சரி, இந்த மார்க்கத்தில்அல்லாஹ்வுடையரஸூல் உடையவழிகாட்டுதல் இல்லாத, அவர்களுடைய தெளிவான கூற்றுகள் இல்லாதஎதுவும் சரி, அது இபாதத் ரீதியாக இருந்தாலும் சரி, அல்லது தத்துவரீதியாக, கருத்து ரீதியாக, சிந்தனை ரீதியாக, இருந்தாலும் சரி, அது பித்அத் வழிகேடு என்பதை மறுத்து விட கூடாது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எவ்வளவு தெளிவாக நமக்கு பாடம் எடுத்தார்கள்.

«مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا، فَهُوَ رَدٌّ»

யார் ஒரு காரியத்தைச் செய்கிறார். அதற்கு நம்முடைய கட்டளை, வழிகாட்டுதல் இல்லை என்றால். அது மறுக்கப்பட்டு விட்டது.

அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : முஸ்னத் அஹ்மத்,எண் : 25472.

சிலர் சொல்வார்கள்; உலகமெல்லாம் செய்கிறார்களே, உலகத்தில் பல நாடுகளில் பரவி இருக்கிறதே. உலக முஸ்லிம்களில் பலர் அதை பின்பற்றுகிறார்களே என்று.

அல்லாஹ்வின் அடியார்களே!வழிகேடுகளை செய்பவர்கள் இன்னும் அதைப் பின்பற்றக் கூடியவர்கள்அதிகமானவர்களாக இருப்பதால் அதுஅல்லாஹ்விடத்தில்அங்கீகரிக்கப்பட்டதாக ஆகாது.

அல்லாஹ்விடத்தில் அங்கீகரிக்கப்பட்டது ஒன்றே ஒன்றுதான். அல்லாஹ் கூறுகிறான்:

قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ

(நபியே! மனிதர்களை நோக்கி) கூறுவீராக: ‘‘நீங்கள் மெய்யாகவே அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். உங்களை அல்லாஹ் நேசிப்பான். உங்கள் பாவங்களையும் அவன் மன்னித்து விடுவான். அல்லாஹ் மிக அதிகம் மன்னிப்பவன், பெரும் கருணையாளன் ஆவான்.'' (அல்குர்ஆன் 3:31)

இந்த நபியை பின்பற்றி தான் உங்களுடைய கொள்கை,உங்களுடைய கலாச்சாரம் இருக்க வேண்டும். இந்த நபியைப் பின்பற்றி தான்உங்களுடைய இபாதத்,உங்களுடைய வாழ்க்கை இருக்க வேண்டும்.

அப்படி இருந்தால், நீங்கள் என்னை நேசிக்கிறீர்கள்;என்னுடைய நேசத்திற்காக தான் இந்த உலகில் வாழ்கிறீர்கள்;எனது நேசத்தின் அடிப்படையில்தான்எனது இந்த அமல்களை செய்கிறீர்கள் என்பது உண்மை.

அப்படி அது உண்மையாகி விட்டால், அல்லாஹ் அடுத்து உங்களுக்கு கொடுக்கக்கூடிய வெகுமதி, அல்லாஹ் உங்களை நேசிப்பான்.அல்லாஹ் உங்களை மன்னிப்பான். (அல்குர்ஆன் 3:31)

எவ்வளவு தெளிவான வழிகாட்டுதல் பாருங்கள். இன்று, எங்களுக்கு நோக்கம் அல்லாஹ்வுடைய மன்னிப்பு என்று சொல்கிறார்களே?

ஆனால் ரஸூலை பின்பற்றுங்கள் என்று அவர்கள் அழைக்கப்பட்டால், ஒரு கூட்டம் இந்த பக்கம் விலகிச் செல்கிறார்கள். ஒரு கூட்டம் அந்த பக்கம் விலகிச் செல்கிறார்கள். ஒரு கூட்டம் சரிதான், ஹதீஸில் இருக்கிறதுதான், ஆனால், அது தத்துவத்தில் இடிக்கிறதே என்று சொல்கிறார்கள்.

ஒன்றை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ளுங்கள். இவர்கள் ஸஹீஹான ஹதீஸை மறுக்க வில்லை. மாறாக அந்த ஸஹீஹான ஹதீஸை கூறிய நபியை மறுக்கிறார்கள். நபியை மறுப்பதன் இன்னொரு வெளிப்பாடு தான்,அவர்களுடைய ஸஹீஹான ஹதீஸ்களுக்குவிஞ்ஞானத்தை கூறி மறுப்பது.

நபியை இவர் நபி தானா?என்று சந்தேகப்படக் கூடியஇன்னொரு வெளிப்பாடு தான், அவர்களுடைய ஸஹீஹான ஹதீஸ்களை சந்தேகப்படுவது. அது மார்க்கமாக இருக்குமா? என்று.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:

«مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ، فَهُوَ رَدٌّ»

இந்த மார்க்கத்தில் அதில் இல்லாததை யார் கொண்டு வருவார்களோஅது மறுக்கப்பட்டது.

அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹுஅன்ஹா, நூல் : புகாரி,எண் : 2697.

இந்த ஹதீஸை ஆதாரமாக வைத்து, சூஃபிகளும்தரீக்காவாதிகளும் செய்த பித்அத்களை, அவர்கள் சொல்லிக் கொடுத்த நூதன அனுஷ்டானங்களை எல்லாம்வழிகேடு என்று கூறி மக்களுக்கு அடையாளப்படுத்தினோமே,மக்களுக்கு நேர்வழியின் பக்கம் அழைப்பு கொடுத்தோமே, மக்கள் அந்த நேர்வழிக்கு வந்ததற்குப் பிறகு, நமது சிந்தனையை அந்த மக்களுக்கு புகுத்துகிறோமே! அவர்களுடைய அறிவை மழுங்கடிக்குரோமே!

நான் ஹதீஸை புரிவது போன்று நீ புரி என்று, தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை, இந்த உம்மத்துக்கு எல்லாம் ஏற்பட்ட சந்தேகமாக, ஹதீஸில் தனக்கு ஏற்பட்ட தடுமாற்றத்தை, குழப்பத்தை, இந்த உம்மத்துக்குஎல்லாம் ஏற்பட்ட தடுமாற்றமாக கூறி, அறிவு இதை ஏற்றுக் கொள்வதா?அறிவியல் ஒத்துக் கொள்ளுமா? என்றுஉம்மத்தின் மீது பழிபோட்டு, உம்மத் உடைய அறிவின் மீது பழி போட்டு, ஹதீஸை மறுப்பதற்கும், ஸஹீஹான ஹதீஸ்கள் என்று தெளிவானதற்கு பிறகும், அதைக் கேலி செய்வதற்கு, கிண்டல் செய்வதற்கு, மறுப்பதற்குஅந்த உம்மத்துக்கு ஒரு வழியை ஏற்படுத்திக் கொடுத்து இருக்கிறீர்களே! இது எவ்வளவு பெரிய வழிகேடு!

முந்திய வழிகேட்டை விட, இது ஆபத்தான வழிகேடு. காரணம், முந்திய வழிகேட்டில் உள்ளவனை திருத்தி விடலாம். அவனுக்கு கொஞ்சம் கொஞ்சமாக புரிய வைத்துவிடலாம். ஆனால், இந்த வழிகேட்டில் யார் வந்து விழுந்தானோ, அவனுக்கு அங்கே மார்க்கத்தை விட, அறிவு பெரியதாக ஆகிவிடுகிறது. ஷைத்தானை போல.

ஷைத்தானுக்கு தன்னுடைய ரப்புடைய கட்டளையை விட, எந்த ரப்பு தன்னை வானத்தில் வைத்திருந்தானோ, மலக்குகளோடு வைத்திருந்தானோ, தன்னை உயர்ந்த கண்ணியமான ஸ்தானத்தில்வைத்திருந்தானோ, அந்த ரப்புடைய கட்டளையை விட, இப்லீஸுக்கு தன்னுடைய அறிவு, தன்னுடைய சிந்தனை தான் பெரியதாக ஆகிவிட்டது.

எனவே, ரப்பையே எதிர்த்துப் பேசினான்.

قَالَ أَنَا خَيْرٌ مِنْهُ خَلَقْتَنِي مِنْ نَارٍ وَخَلَقْتَهُ مِنْ طِينٍ

அதற்கவன், ‘‘அவரைவிட நானே மேலானவன். என்னை நீயே நெருப்பால் படைத்தாய்; அவரை களிமண்ணால் படைத்தாய்'' என்றான்.(அல்குர்ஆன் 38:76)

قَالَ أَأَسْجُدُ لِمَنْ خَلَقْتَ طِينًا

அவனோ ‘‘நீ மண்ணால் படைத்தவனுக்கு நான் சிரம் பணிவதா?'' என்று கேட்டான். (அல்குர்ஆன் 17:61)

எத்தகைய விபரீதமான ஒரு நிலை!ஒரு முஸ்லிமுக்கு பெருமையை சொல்லிக் கொடுக்கிற நிலை. ஹதீஸ் என்றால் பணிய வேண்டும் என்று மார்க்கம் சொல்லிக்கொடுக்க, ஹதீஸ் என்றால் எதிர்த்து நிற்க வேண்டும் என்ற ஒரு நிலைக்கு மனிதன் தள்ளப்பட்டிருக்கிறான் என்றால்,குர்ஆன் சுன்னாவை கூறியவன் ஹதீஸ் என்றால்எதிர்க்க வேண்டும், அதில் சிந்திக்க வேண்டும், குதர்க்கம் செய்யவேண்டும் என்ற நிலைக்கு வந்திருக்கிறான் என்றால், இது எவ்வளவு பெரிய வழிகேடு என்பதை புரிந்துகொள்ளுங்கள்.

ஆகவே. பித்அத்கள் என்று சொல்லும் போது, அமல் சார்ந்த பித்அத்களை புரிகின்ற அதே நேரத்தில், சிந்தனை சார்ந்த, தர்க்கம் சார்ந்த, தத்துவம் சார்ந்த பித்அத்களையும் புரிய வேண்டும்.

ஐந்தாம் கலீஃபா உமர் இப்னு அப்துல் அஸீஸ் ரஹீமஹுல்லாஹ் தங்களது கூற்றில் இதை அழகாக நமக்குச் சொல்லித் தருகிறார்கள்.

«سَنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَوُلَاةُ الْأَمْرِ مِنْ بَعْدِهِ سُنُنًا، الْأَخْذُ بِهَا تَصْدِيقٌ لِكِتَابِ اللَّهِ، وَاسْتِكَمْالٌ لِطَاعَةِ اللَّهِ، وَقُوَّةٌ عَلَى دِينِ اللَّهِ، وَمَنْ عَمِلَ بِهَا مُهْتَدٍ، وَمَنْ اسْتَنْصَرَ بِهَا مَنْصُورٌ، وَمَنْ خَالَفَهَا اتَّبَعَ غَيْرَ سَبِيلِ الْمُؤْمِنِينَ، وَوَلَّاهُ اللَّهُ مَا تَوَلَّى»

ரஸூலுல்லாஹ் உடைய கலீஃபாக்கள். ரஸூலுல்லாஹ்விற்குப் பிறகுநமக்கு சுன்னத்துகளை, வழிமுறைகளை, வழிகாட்டுதல்களைகொடுத்திருக்கிறார்கள்.

சுன்னா என்றால், ஸஹாபாக்களில் இருந்து, கலீஃபாக்களில் இருந்துபிரித்துப் பார்க்க வேண்டுமென்றபுதிய தத்துவ வழிகேட்டை இந்த உம்மத்தின் ஆழத்தில் பதிய வைத்திருக்கிறார்களே, அந்த வழிகேடல்களை புரியவேண்டும்.

ரஸூலுல்லாஹ் உடைய இந்த தீனில், ஸஹாபாக்களிடத்தில், தாபியீன்களிடத்தில் சுன்னா என்பது, கலீபாக்கள் உடைய புரிதலுடன் தான் புரியபட்டதே தவிர, ஸஹாபாக்களிடமிருந்து பிரித்து சுன்னா புரிய படவில்லை.

பித்அத்களை -அனாச்சாரங்களை கண்டிக்கின்ற,மக்களை நேர்வழி பக்கம் அழைக்கின்றஒவ்வொரு தாபியீன்களும் இந்த விளக்கத்தை தான் உறுதி செய்கிறார்கள்.

அவர்கள் சொல்கிறார்கள்: ரஸூலுல்லாஹ்வும். கலீஃபாக்களும்என்ன சுன்னாக்களை நமக்கு கற்றுக் கொடுத்தார்களோஅதைப்பற்றிப் பிடிப்பது,அல்லாஹ்வின் வேதத்தை பற்றி பிடிப்பதாகும்.

இன்று,கலீஃபாக்களின் கருத்துக்கள் என்றால், மக்களை அதிலிருந்து விலக்குவதற்கு ஏன் முயற்சி செய்கிறார்கள் என்றால், ஸஹாபாக்களை விட்டு பிரித்தால்தான், இந்த மக்களை தங்களுடைய முகல்லிதாக -ஃபோலவர்ஸ் ஆக மாற்ற முடியும்.

அதுதான் அங்கே நோக்கம். அப்போதுதான் அவர்கள் சிந்திக்காத, முட்டாள்களாக, முரடர்களாக இருப்பார்கள்.

அடுத்து சொன்னார்கள்:அந்த சுன்னாவை பின்பற்றுவது தான்,அல்லாஹ்வை கீழ் படிவதற்கான சரியான வழியாகும். அல்லாஹ்வுடைய மார்க்கத்தை பின்பற்றுவதற்கு நமக்கு வலிமையை கொடுக்கும். யாருக்கும் அந்த சுன்னாக்களில் மாற்றம் செய்வதற்கு அனுமதி இல்லை.அந்த சுன்னாக்களுக்கு மாற்றமான கருத்தை பற்றி சிந்திப்பதற்கு இடமில்லை.

எப்போது ஒரு கருத்து ரஸூலுல்லாஹ்வுடைய வழிகாட்டுதலுக்கோ, அல்லது கலீஃபாக்கள் உடைய சுன்னாவுக்கோ, அது அவற்றிலிருந்து விலகி இருக்கிறதோ, அது சரியாக இருக்கலாமோ?அதை புரிந்து பார்க்கலாமா?அதைக் கற்று தான் பார்ப்போமா?என்று அதை சிந்திப்பதற்கு அனுமதி கிடையாது.

எப்போது சுன்னாவிற்கு விலகி சென்று விட்டதோ, அது வழிகேடு தான். நன்மை இருப்பதற்கும், நேர்மை இருப்பதற்கும்எப்போதுமே அங்கே வழியில்லை.

மேலும் சொன்னார்கள்: யார் அந்த சுன்னாகளை பின்பற்றுவார்களோ, அவர் நேர்வழி பெற்றவர். யார் அந்த சுன்னாவிற்கு மாற்றமாக நடப்பாரோ, மூஃமின்கள் அல்லாத பாதையில் அல்லாது வேறு பாதையில் செல்வாரோ, அவர் எப்படி திரும்பினாரோ,அப்படியே அல்லாஹ் அவர்களைத் திருப்பி விடுவான்.

இன்று, இரண்டு விதமானவழி கேடுகளையும் நாம் பார்க்கிறோம். முழுமையடைந்த இந்த மார்க்கம், அரஃபா மைதானத்தில் இந்த தீனை உங்களுக்கு நிறைவு செய்தேன் என்று சொல்லப்பட்ட இந்த மார்க்கத்தில், நாளுக்கு நாள் புதிய புதிய இபாதத்கள்.

பிறகு, இந்தப் பக்கம் வந்தால், நாளுக்கு நாள் புதிய புதிய சிந்தனைகள். நாளுக்கு நாள் ஹதீஸ்களின் மறுப்புகளில் புதிய புதிய விளக்கங்கள்.

அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா கூறியதைப் போல, அந்த சுன்னா அல்லாத ஒன்றை யார் பின்பற்றுவாரோ, முஃமின்களுடைய பாதையை அல்லாத வேறு வழியை யார் பின்பற்றுவாரோ, அவர் திரும்பிய பாதையில் அவர் சென்று கொண்டிருப்பார்.

அல்லாஹ் அவர்களை திருப்பி விடுவான். அல்லாஹ் நரக நெருப்பில் அவரை பொசுக்குவான். அது மீளும் இடங்களில் மிகக் கெட்ட இடமாகும்.

அல்லாஹ்வின் அடியார்களே!இன்னும் பல விளக்கங்கள் இருக்கின்றன. பித்அத்களை குறித்து இன்ஷா அல்லாஹ் அடுத்த ஜும்ஆக்களில் நாம் அறிவோமாக!

இதற்கெல்லாம் முக்கியமான அடிப்படை, இல்மாக இருக்கவேண்டும். மார்க்கத்தை ஆதாரத்தோடு, அடிப்படைகளோடு கற்க வேண்டும்.

சுன்னா என்ன? என்பதை அதனுடைய ஆதாரங்களோடு, கலப்படமில்லாமல், சுயசிந்தனைகளை புகுத்தாமல், ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கற்றுக்கொடுத்தஅந்த சுன்னாவை அழகிய முறையில், தெளிவான முறையில், தக்வாவோடு, இபாதத்தோடு, அவற்றைக் கொண்டு அமல் செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் கற்றுக் கொள்ள வேண்டும்.

அப்படி நாம் அல்லாஹ்விடத்தில் நேர் வழியைத் தேடி கற்கும் போது, கண்டிப்பாக நம்முடைய உள்ளத்திற்கு அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா ஹிதாயத்தை கொடுப்பான். தன் பக்கம் திரும்பியவர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்டுவதற்குஅவன் பொருப்பெடுத்து இருக்கிறான்.

ஆகவே, நம்முடைய உள்ளத்தை குழப்பங்களிலிருந்தும், ஃபித்னாக்களிலிருந்தும், பரிசுத்தப்படுத்தி அல்லாஹ்வின் பக்கம் தூய்மையான உள்ளங்களோடு முன்னோக்குவோமாக!

அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா, நமக்கு நேர்வழி காட்டப் போதுமானவன். வழிகேடுகளில் இருந்தும், குழப்பங்களில் இருந்தும்நம்மை பாதுகாக்க அல்லாஹ்வே போதுமானவன்.

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِيٍّ، وَحَدَّثَنَا يَزِيدُ، أَخْبَرَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ عَاصِمِ بْنِ أَبِي النَّجُودِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ مَسْعُودٍ، قَالَ: خَطَّ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ خَطًّا [ص:208]، ثُمَّ قَالَ: «هَذَا سَبِيلُ اللَّهِ» ، ثُمَّ خَطَّ خُطُوطًا عَنْ يَمِينِهِ وَعَنْ شِمَالِهِ، ثُمَّ قَالَ: " هَذِهِ سُبُلٌ - قَالَ يَزِيدُ: مُتَفَرِّقَةٌ - عَلَى كُلِّ سَبِيلٍ مِنْهَا شَيْطَانٌ يَدْعُو إِلَيْهِ "، ثُمَّ قَرَأَ: (وَإِنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ، فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ) (مسند أحمد مخرجا- 4142)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/