HOME      Khutba      ஹிஜாப் எதிர்ப்பு பாடமும் படிப்பினையும் | Tamil Bayan | 693   
 

ஹிஜாப் எதிர்ப்பு பாடமும் படிப்பினையும் | Tamil Bayan | 693

           

ஹிஜாப் எதிர்ப்பு பாடமும் படிப்பினையும் | Tamil Bayan | 693


ஹிஜாப் எதிர்ப்பு பாடமும் படிப்பினையும்

ஜுமுஆ குத்பா தலைப்பு : ஹிஜாப் எதிர்ப்பு பாடமும் படிப்பினையும்

வரிசை : 682

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 11-02-2022 | 10-07-1443

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றி புகழ்ந்தவனாக அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்த தூதரின் கண்ணியத்திற்குரிய குடும்பத்தார்  தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக,

வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை,முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ்வுடைய அடியாரும் தூதருமாவார் என்று சாட்சி கூறியவனாக, அல்லாஹ்வுடைய மார்க்கம் தான் சட்டத்தாலும் ஒழுக்கத்தாலும்  நீதமானது  நேர்மையானது என்று எனக்கும் உங்களுக்கும் நினைவூட்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹு சுப்ஹானஹு தஆலா அவனுடைய மார்க்கத்தை முறையாக சரியாக பின்பற்றுவதற்கு நமக்கு அருள்புரிவானாக! நம்மிடம் இருந்து ஏற்படக்கூடிய குறைகளை குற்றங்களை தவறுகளை மன்னித்தருள்வானாக!

அல்லாஹ்வுடைய மார்க்கத்தில் உறுதியாக இருந்து, அல்லாஹ்வை சந்திக்க கூடிய நற்பாக்கியத்தைத் எனக்கும் உங்களுக்கும் மற்றும் எல்லாம் மூஃமின்களுக்கும் தந்தருள்வானாக! ஆமீன்

அல்லாஹ்வின் அடியார்களே! கண்ணியத்திற்குரிய  ரப் ஆகிய அல்லாஹு தஆலா    நமக்கு  அவனுடைய திரு வேதம் அல்குர்ஆனில் உபதேசங்களை நினைவூட்டிக் கொண்டே இருக்கிறான். அந்த உபதேசங்களில் ஒன்றுதான், மூன்றாவது அத்தியாயத்தின் 186-ஆவது வசனத்தில் அவன் சொல்கிற ஒரு முக்கியமான உபதேசம்.

அல்லாஹ் சொல்கிறான்:

لَـتُبْلَوُنَّ فِىْۤ اَمْوَالِكُمْ وَاَنْفُسِكُمْ وَلَـتَسْمَعُنَّ مِنَ الَّذِيْنَ اُوْتُوا الْكِتٰبَ مِنْ قَبْلِكُمْ وَمِنَ الَّذِيْنَ اَشْرَكُوْۤا اَذًى كَثِيْـرًا وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا فَاِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ‏

(நம்பிக்கையாளர்களே!) உங்கள் பொருள்களிலும், உங்கள் ஆத்மாக்களிலும் (நஷ்டம் இழைக்கப்படுவதன் மூலம்) நிச்சயமாக நீங்கள் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன்னர் வேதம் கொடுக்கப்பட்டவர்களாலும், இணைவைத்து வணங்குபவர்களாலும், பல வசை மொழிகளை நிச்சயமாக நீங்கள் செவியுறுவீர்கள். (ஆகவே, இத்தகைய சிரமங்களை) நீங்கள் பொறுமையுடன் சகித்தவர்களாகவும், அல்லாஹ்வை பயந்தவர்களாகவும் வாழ்ந்துவந்தால் (நீங்கள் வெற்றியடைவீர்கள்) நிச்சயமாக இதுதான் வீரச்செயலாக இருக்கும்.(அல்குர்ஆன் 3:186)

இந்த பூமியில் ஒரு மூஃமின் கொல்லப்பட்டால், அவனுடைய உடலுக்கோ உயிருக்கோ சோகம் விளைவிக்கப்பட்டால்  சோதனையில் அவன் மட்டும் முதலாமவன் இல்லை.

அல்லாஹு தஆலா தன்னுடைய நபியைப் பார்த்து இப்படி சொல்கிறான்:

وَلَقَدْ كُذِّبَتْ رُسُلٌ مِّنْ قَبْلِكَ فَصَبَرُوْا عَلٰى مَا كُذِّبُوْا وَاُوْذُوْا حَتّٰٓى اَتٰٮهُمْ نَصْرُنَا

உங்களுக்கு முன்னிருந்த (நமது பல) தூதர்களும் (இவ்வாறு) பொய்யரெனவே கூறப்பட்டனர். அவர்களுக்கு நம் உதவி வரும் வரை அவர்கள் பொய்யரெனத் துன்புறுத்தப்பட்டதை அவர்கள் (உறுதியோடு) பொறுத்துக் கொண்டிருந்தனர். (ஆகவே, நபியே! நீரும் அவ்வாறே பொறுத்திருப்பீராக.) அல்லாஹ்வுடைய வாக்குகளை எவராலும் மாற்ற முடியாது. (உமக்கு முன்னிருந்த நம்) தூதர்களின் (இத்தகைய) செய்திகள் நிச்சயமாக உம்மிடம் வந்தே இருக்கின்றன.(அல்குர்ஆன் 6:34)

இந்த பூமியில் முஃமினான சமுதாயமாகிய நமக்கு தொந்தரவு கொடுக்கப்பட்டால், நம்முடைய மார்க்கத்தில் நமக்கு இடையூறுகள் கொடுக்கப்பட்டால் இதில் நாம் மட்டும் முதலாமவர்கள், நாம்தான்  இதை சந்திக்கிறோம் என்பதாக எண்ணிவிடாதீர்கள்.

நமக்கு முன்னால் ஈமானை கொண்டு இஸ்லாமை கொண்டு முந்திச் சென்ற நம்முடைய முஃமினான முஸ்லிமான சகோதரர்களும்  இணைவைப்பாளர்கள்   புறத்திலிருந்து இத்தகைய நெருக்கடிகளை தொந்தரவுகளை அவர்கள் சந்தித்திருக்கிறார்கள்.

அதில் அவர்கள் சகித்துக் கொண்டார்கள்.  பொறுமையாக இருந்தார்கள். அல்லாஹ் அவர்களுக்கு வெற்றியை கொடுத்தான்.

இந்த இடத்தில் ஒன்றை நாம் புரியவேண்டும். குர்ஆனில் ஒரு முஃமின் படிப்பினை பாடம் பெறுகின்ற கண்ணோட்டத்தோடு பார்ப்பாரேயானால் ஒவ்வொரு வசனமும் அவருடைய அன்றைய பிரச்சனைக்குள்ள தீர்வாக அழகிய உபதேசமாக பார்ப்பார்.

ஆனால், நாம் குர்ஆனை திறப்பதில்லை. அதுதான் பிரச்சனை. நம்மில் ஒரு கூட்டம் இருந்தார்கள். இன்றும் இருக்கிறார்கள். கடை திறக்கும்போது அல்லது மையத் வீட்டில் அல்லது வேறு ஏதாவது விஷேஷங்களில் அல்லது துக்கங்களில்  பரக்கத்தை  நாடி மட்டும்  குர்ஆனை வாடகைக்காக திறந்தவர்கள்.

அல்லாஹ் கூறுகிறான்:

وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْاٰنَ لِلذِّكْرِ فَهَلْ مِنْ مُّدَّكِرٍ‏

படிப்பினை பெறுவதற்காக நல்லுணர்வு பெறுவதற்காக இந்த குர்ஆனை திட்டமாக நாம் லேசாக்கி வைத்திருக்கிறோம். உபதேசம் பெறக்கூடியவர்கள் யார் இருக்கிறார்கள்? (அல்குர்ஆன் 54:22)

என்று அல்லாஹு தஆலா ஒரே அத்தியாயத்தில் மூன்று முறை கேட்கிறானே! எனக்கு இந்த குர்ஆன் இந்த பிரச்சனையில் என்ன வழிகாட்டுகிறது? அது குறித்த வசனம் வழிகாட்டுதல் சட்டம் இந்த குர்ஆனில் என்ன என்று நாம் தேடுகிறோமா?

ரப்பு சொல்கிறான்: வசனத்தின் கருத்து: (அல்குர்ஆன் 3:186)

முஃமின்களே! கண்டிப்பாக நீங்கள் செவியுற்று தான் ஆவீர்கள். நீங்கள் இப்படிப்பட்ட விஷயங்களைக் கேட்டுதான் ஆக வேண்டும் என்ற ஒரு நிலை வரும்.

அது, உங்களுக்கு முன்னால் வேதம் கொடுக்கப்பட்டார்களே யூதர்கள் நசராக்கள்  அவர்கள் புறத்திலிருந்து நீங்கள் கேட்க நேரிடும்.

இன்னும், அல்லாஹ்விற்கு இணை வைப்பவர்களில் இரண்டுவிதமான கூட்டம் இருக்கிறார்கள். ஒரு கூட்டம் சடங்குகளாக இணை வைத்துக்கொண்டு அப்படியே செல்பவர்கள். இன்னொரு கூட்டம், இணை வைத்தலில் முரண்டு பிடிக்கக் கூடிய, அந்த இணைவைத்தலை தவறு என்று சொல்லக்கூடிய இஸ்லாமிய மார்க்கத்தையும் முஸ்லிம்களையும் பகைவர்களாக கருதக்கூடிய இணைவைப்பாளர்கள்.

மக்காவில் இருந்தவர்களை போன்று. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் உள்ள  குறைஷிகளை போல.

இணைவைப்பவர்களில் இரண்டுவிதமான கூட்டத்தார்கள்  நபி ஸல்லல்லாஹு அலைஹி வசல்லம் உடைய காலத்தில் இருந்தார்கள். ஒரு கூட்டம் மக்காவில் வாழ்ந்த முஷ்ரிக்குகள். அவர்களை நினைத்துப் பாருங்கள்.

இன்னொரு கூட்டம், மதீனாவில் வாழ்ந்த முஷ்ரிக்குகள். அவர்கள் எப்படி என்றால், சிலை வணங்கினார்கள். ஆனால் அந்த சிலை வணக்கத்தில் திமிர் பிடித்தவர்கள் அல்ல. முரண்டு பிடித்தவர்கள் அல்ல.

மக்காவில் வாழ்ந்த  முஷ்ரிக்குகள்  எப்படி என்றால், அந்த சிலை வணக்கத்தை கொண்டு பிழைப்பு நடத்திக் கொண்டிருந்தவர்கள். அந்த சிலை வணக்கத்தை கொண்டு அரபு சமுதாயத்திற்கே  நாங்கள் தான் தலைவர்கள், எங்களை மீறி இந்த அரபு சமுதாயம் எதையும் செய்துவிடக்கூடாது, எந்த சீர்திருத்தத்தையும் பெற்று விடக்கூடாது, அறிவில் தலைமைத்துவத்தில் சமுதாய வழிகாட்டுதலில் நாங்கள் தான் முன்னோடிகள் என்று இந்த சிலை வணக்கத்தை கொண்டு அரபு சமுதாயத்தின் பொருளாதாரத்தையும் அரபு சமுதாயத்தின் தலைமைத்துவத்தையும் தங்களுக்கென்று உரிமையாக்கிக் கொண்டிருந்தவர்கள்.

அத்தகைய முஷ்ரிக்குகள் தான் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு சண்டை செய்தவர்கள். நபியை நபியின் ஊரிலிருந்து வெளியேற்றியவர்கள். நபியை சூனியக்காரர் என்றும் பைத்தியக்காரர் என்றும் மதம் மாறியவர் என்றும் தங்களுடைய முன்னோர்களின் கொள்கைகளை மாற்ற வந்த புதுமையாளர் என்றும் குறை கூறி ஏசி தொந்தரவு கொடுத்தவர்கள்.

ஒரு முறையா? இரு முறையா? நூற்றுக்கணக்கான முறை தன்னுடைய நபிக்கே ஆறுதலாக வசனங்களை இறக்கி இறக்கி நபியின் உள்ளத்தை அல்லாஹு தஆலா பலப்படுத்தினான்.

فَلَا يَحْزُنْكَ قَوْلُهُمْۘ اِنَّا نَـعْلَمُ مَا يُسِرُّوْنَ وَمَا يُعْلِنُوْنَ‏

(நபியே! ‘நீர் பொய்யர்' என) அவர்கள் உம்மைப் பற்றிக் கூறுவது உம்மைக் கவலைக்குள்ளாக்க வேண்டாம். நிச்சயமாக நாம் அவர்கள் (தங்கள் மனதில்) மறைத்துக் கொள்வதையும் (அதற்கு மாறாக) அவர்கள் வெளியிடுவதையும் நன்கறிவோம்.(அல்குர்ஆன் 36:76)

குர்ஆனில் இப்படி ஒரு வசனம் இறக்கப்படுகிறது என்றால் எத்தகைய பேச்சுகளை ஏச்சுகளை அந்த குறைஷிகள் செய்திருப்பார்கள்?!

அல்லாஹ்வை மீறி அவர்களால் என்ன செய்துவிட முடியும்?என்ன சாதித்துவிட முடியும்?

وَيَأْبَى اللَّهُ إِلَّا أَنْ يُتِمَّ نُورَهُ

அல்லாஹ் முடிவு செய்துவிட்டான், அவனுடைய ஒளியை (இஸ்லாமை) பூரணப்படுத்தியே தீருவேன் என்று. (அல்குர்ஆன் 9 : 32)

هُوَ الَّذِىْۤ اَرْسَلَ رَسُوْلَهٗبِالْهُدٰى وَدِيْنِ الْحَـقِّ لِيُظْهِرَهٗعَلَى الدِّيْنِ كُلِّهٖۙ وَلَوْ كَرِهَ الْمُشْرِكُوْنَ‏

அவன்தான் தன் தூதரை நேரான வழியைக் கொண்டும், சத்திய மார்க்கத்தைக் கொண்டும் அனுப்பிவைத்தான். இணைவைத்து வணங்குபவர்கள் (அதை) வெறுத்தபோதிலும் (உலகிலுள்ள) எல்லா மார்க்கங்களையும் அந்த சத்திய மார்க்க(மான இஸ்லா)ம் வென்றுவிடும்படி அவன் செய்வான். (அல்குர்ஆன் 9:33)

இது நடக்கும். முந்திய காலத்தில் நடந்தது. இப்போது நடக்காது என்று இல்லை. அல்லாஹு தஆலாவுக்கு நாம் நன்றி செலுத்த வேண்டும்.

ஒரு முஸ்லிம் நாட்டில்  முஸ்லிமாக வாழ்பவர்களை விட அல்லாஹுத்தஆலா நம்முடைய ஈமானை இஸ்லாமை இதுபோன்ற சூழ்நிலைகளால் இது போன்ற சோதனைகளை எதிர் கொள்வதால் நம்முடைய ஈமானை அல்லாஹ் வலுப்படுத்தகின்றான். 

அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்த வேண்டும். இத்தகைய சோதனைகளில் ஒரு மூஃமின் மூஃமினாக இருப்பது, ஒரு முஸ்லிம் முஸ்லிமாக இருப்பது.

அல்லாஹ்விற்கு நன்றி உள்ளவர்களாகவும் ஈமானில் உறுதியானவர்களாகவும் இருக்கக் கூடிய நேரம் இது. பலவீனப் படக்கூடிய நேரமல்ல. சோர்ந்து விடக் கூடிய நேரம் அல்ல. சோதனைகளில் பின்வாங்கக் கூடிய நேரம் அல்ல. முன்னேறக் கூடிய நேரம் இது.

இன்று, ஐரோப்பிய உலகம் எல்லாம் ஒன்று சேர்ந்து தங்களுடைய அன்றாட நாளிதழ்கள் பத்திரிகைகள் டிவி சேனல்கள் அவர்களுடைய மற்ற மற்ற பொது தொலைத்தொடர்புகள் அனைத்தின் மூலமாகவும் இஸ்லாமின் மீது வெறுப்பு பிரச்சாரம் செய்து கொண்டே இருக்கிறார்கள்.

இன்று, உலக முஸ்லிம்கள் எல்லாம் இஸ்லாமின் வளர்ச்சிக்காக இஸ்லாமை பரப்புவதற்காக செலவு செய்யக்கூடிய செலவினங்களை விட இஸ்லாமை அழிப்பதற்காக இஸ்லாமிய எதிரிகள் அதிகம் செலவு செய்கிறார்கள்.

அந்த செலவிலிருந்து லட்சத்தில் ஒன்றைக் கூட நாம் செலவு செய்யவில்லை. ஆனாலும் அல்லாஹ் அவனுடைய மார்க்கத்தை பரப்பிக் கொண்டிருக்கின்றான். எந்த எதிர்ப்புக்காக எந்த வெறுப்புக்காக அவர்கள் செலவு செய்கிறார்களோ அதையே அல்லாஹு தஆலா திருப்பி விடுகிறான்.

ரப்புல் ஆலமீன் குர்ஆனில் சொல்கிறான்:

فَسَيُنْفِقُوْنَهَا ثُمَّ تَكُوْنُ عَلَيْهِمْ حَسْرَةً ثُمَّ يُغْلَبُوْنَ 

அவர்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்தை அழிப்பதற்காக செலவு செய்கிறார்கள். அதுவே அவர்களுக்கு துக்கமாக மாறும். அவர்கள் கண்டிப்பாக தோற்கடிக்கப் படுவார்கள். (அல்குர்ஆன் 8:36)

இஸ்லாமைப் பற்றி அவர்கள் பொய் பிரச்சாரம் செய்ய செய்ய அல்லாஹு தஆலா மக்களின் உள்ளங்களில் போடுகிறான், அப்படி என்ன இஸ்லாமில் சொல்லப் பட்டிருக்கின்றது என்று அவர்கள் குர்ஆனை திறக்கிறார்கள், புரிகிறார்கள், இந்த மார்க்கத்தை தழுவுகிறார்கள்.

இன்று, இந்த ஹிஜாபுக்கு எதிராக அவர்கள் செய்த இந்த தீய சதித்திட்டத்தை அல்லாஹ் எப்படி மாற்றுகிறான் பாருங்கள்.

நம்மில் யார் இந்த ஹிஜாப் விஷயத்தில் பலவீனமாக இருந்தார்களோ நமது பெண்கள் அல்லாஹு தஆலா அவர்களுக்கு இதன் மூலமாக ஒரு விழிப்புணர்வை ஏற்படுத்தி இருக்கிறான். நம்முடைய ஆண்களுக்கு இந்த ஹிஜாப் விஷயத்தில் அல்லாஹ் ஒரு கவனத்தை ஏற்படுத்தி இருக்கிறான்.

அது மட்டுமல்ல, இன்று எத்தனை நடுநிலையாளர்கள் தங்களது சிந்தனையில் சுதந்திரமானவர்கள் சிலை வணங்கிகளின் புரோகிதர்களுக்கு அடிமையாகாத நடுநிலைவாதிகள் இந்த ஹிஜாபில் என்ன இருக்கின்றது? ஏன் முஸ்லிம்கள் ஹிஜாபில் இவ்வளவு உறுதியாக இருக்கிறார்கள்? என்று சிந்தித்து நமக்காக பேசக்கூடிய நூற்றுக்கணக்கானவர்களை அல்லாஹ் ஏற்படுத்தி இருக்கிறான்.

அதுமட்டுமல்ல,இதுவே அவர்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை தழுவுவதற்குண்டான ஒரு வழியாக அல்லாஹ் அதை ஆக்குவான், நாம் அல்லாஹ்வின் வேதத்தின் படி நடந்தால், நாம் அல்லாஹ்வுடைய தீனில் இப்படிப்பட்ட காலகட்டங்களில் நாம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று ரப் சொல்லி இருக்கின்றானோ அந்த வழிகாட்டுதலை தேடி அறிந்து புரிந்து செயல்படுத்தினால் கண்டிப்பாக இந்த சதியை இந்த சூழ்ச்சியை இந்த கெட்ட திட்டத்தை ஹிதாயத்திற்கு காரணமாக அல்லாஹ் மாற்றுவான்.

ஹுதைபிய்யா உடன்படிக்கையை இஸ்லாம் தோற்றுவிட்டது என்று சிலர் நினைத்தார்கள். முஸ்லிம்கள் பலவீனப்பட்டு பயந்துபோய் உடன்படிக்கை செய்து ஓடுகிறார்கள் என்று நினைத்தார்கள். அதே உடன்படிக்கையை அல்லாஹ் வெற்றியாக மாற்றினான்.

اِنَّا فَتَحْنَا لَكَ فَتْحًا مُّبِيْنًا ‏

மிகப்பெரிய தெளிவான வெற்றியை நபியே நாம் உங்களுக்கு கொடுத்துவிட்டோம் என்று அல்லாஹ் சொன்னான்.(அல்குர்ஆன் 48 : 1)

செய்ய வேண்டிய வேலை என்ன என்று புரிந்து கொள்ள வேண்டும். அல்லாஹ் சொல்லிக் காட்டுகின்றான்:

நபியே! மூமின்களே! கண்டிப்பாக உங்களுக்கு முன்னால் வேதம் கொடுக்கப்பட்டவர்களிடம் இருந்தும் இணைவைப்பாளர்களிடமிருந்தும் அதிகமான தொந்தரவு பேச்சுக்களை அதிகமான மனவேதனையை கொடுக்கக் கூடிய ஏராளமான பேச்சுகளை நீங்கள் செவியேற்று கொண்டே இருப்பீர்கள். (அல்குர்ஆன் 3:186)

இது நடந்து கொண்டே இருக்கும். தொடர்ந்து கொண்டே இருக்கும். இன்று நமக்கு இறக்கப்பட்டதை போல் அல்லவா இந்த வசனம் இருக்கின்றது.

பிறகு ரப்புல் ஆலமீன் இரண்டே விஷயத்தை சொல்கிறான்:

وَاِنْ تَصْبِرُوْا وَتَتَّقُوْا فَاِنَّ ذٰلِكَ مِنْ عَزْمِ الْاُمُوْرِ‏

நீங்கள் மார்க்கத்தில் உறுதியாக இருந்தால் நீங்கள் சகித்துக் கொண்டு மன உறுதியோடு நீங்கள் இருந்தால் இதுதான் வீரம் என்று அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் 3:186)

அவர்கள் உங்களை எதிர்க்க எதிர்க்க அவர்கள் உங்களுடைய மார்க்கத்தை குறை சொல்ல சொல்ல உங்களுக்கு அல்லாஹ்வுடைய தீனின் மீது பற்று அதிகமாக வேண்டும். பிடிப்பு அதிகமாக வேண்டும்.

அல்லாஹ்வுடைய மார்க்கத்தை இன்னும் நாம்  கற்று, இதை இன்னும் உறுதியாக பின்பற்றுவேன், இதை பின்பற்றுவது மட்டுமல்ல, இதைப் பற்றி மக்களுக்கு பிரச்சாரம் செய்வேன், எடுத்துச் சொல்வேன் என்று உறுதி வரும் போது அது வெற்றிக்கான வீரம் என்று அர்த்தம்.

கொஞ்ச காலம் இருந்தது. இதற்கு முன்பு ஒரு புரளி கிளம்பிய பொழுது, ஒரு பொய் பிரச்சாரம் கிளம்பிய பொழுது, நம்மில் பலர் தாடி வைத்தால் தீவிரவாதி பயங்கரவாதி என்று சொல்லப்பட்டதால் தாடியை சிரைத்துக் கொண்டு சென்றார்கள்.

தாடி வைத்தால் ஏம்பா தாடி வைக்கிற? ஏர்போர்ட்ல போனா உனக்கு கஷ்டம்,அங்க போய் இமிக்ரேஷன்ல போனா உனக்கு கஷ்டம், பல பேர் பயந்துபோய் தாடியை எடுத்து விட்டார்கள்.

அதேபோல ஹிஜாப் -முகத்திரை போடுவது. போட்டால் பிரச்சனை வரும், எனவே எடுத்துவிடுவோம்.

இங்கே இவன் தோற்பது மட்டுமல்ல, இழிவு அடைவான்; கேவலம் அடைவான்; அல்லாஹ் எதிரியை ஒன்றுக்கு பன்மடங்காக சாற்றி விடுவான்.

ரப் சொல்கிறான்: இந்த மார்க்கத்தில் நீ எதிர்க்கப்படும் போதெல்லாம் சோதனைக்கு உள்ளாக்கப் படும்போதெல்லாம் நீங்கள் உறுதியாக பலமாக சகித்துக் கொண்டே இந்த மார்க்கத்தில் நீங்கள் பொறுமையாக இருந்தால் இன்னும் பேணுதலாக அல்லாஹ்வை அஞ்சி நீங்கள் நடந்து கொண்டால்இதுதான் வீரம் என்று அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் 3:186)

இதே இந்த சூராவின் 110, 111-வது வசனத்தில் ரப்புல் ஆலமீன் சொல்லக்கூடியதை நாம் கண்டிப்பாக படிக்க வேண்டும்.

அல்லாஹ் சொல்கிறான்:

كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ

(நம்பிக்கையாளர்களே!) நீங்கள்தான், மனிதர்களில் தோன்றிய வகுப்பார்களிலெல்லாம் மிக்க மேன்மையானவர்கள். (ஏனென்றால்,) நீங்கள் (மனிதர்களை நன்மையான) காரியங்களை(ச் செய்யும்படி) ஏவி, பாவமான காரியங்களிலிருந்து (அவர்களை) விலக்கி, மெய்யாகவே அல்லாஹ்வை நம்பிக்கைக் கொள்கிறீர்கள்.(அல்குர்ஆன் 3:110)

வசனத்தின் விளக்கம் : நன்மை என்றால், சிலை வணங்கக்கூடியவனை தவ்ஹீதின் பக்கம் அழைப்பது. தீமையிலிருந்து தடுப்பது என்றால், அல்லாஹ் அல்லாத ஒரு படைப்பை வணங்கக்கூடியவனை அதிலிருந்து அவனை விலக்கி நேர்வழியின் பக்கம் அழைப்பது.

எந்த தப்ஸீர் வேணாலும் படிச்சு பாருங்க, இதுதான் அங்கே இருக்கும். மூஃமின்களுக்கு தொழுகையை ஏவுவது, ஜகாத்தை ஏவுவது என்பது இது ஒரு தனி நல்ல அமல். இது சீர்திருத்த ஒரு நல்ல அமல்.

ஆனால், அல்லாஹு தஆலா நன்மையை ஏவுவது தீமையை தடுத்தல் என்று தவ்ஹீதை ஏவுவதை ஷிர்க்கை தடுப்பதை அல்லாஹ் சொல்கிறான்.

இதற்குப் பிறகு ரப் சொல்கிறான்:

لَنْ يَضُرُّوكُمْ إِلَّا أَذًى وَإِنْ يُقَاتِلُوكُمْ يُوَلُّوكُمُ الْأَدْبَارَ ثُمَّ لَا يُنْصَرُونَ

(நம்பிக்கையாளர்களே!) இவர்கள் ஒரு சொற்பச் சிரமத்தைத் தவிர (அதிகமாக) உங்களுக்கு (ஏதும்) தீங்கு செய்திடமுடியாது. உங்களை எதிர்த்து அவர்கள் போர்புரிய முற்பட்டாலோ புறங்காட்டியே ஓடுவார்கள். பின்னர் அவர்கள் (சென்ற இடத்திலும்) எவருடைய உதவியும் பெறமாட்டார்கள். (அல்குர்ஆன் 3 : 111)

இது பயப்படக்கூடிய நேரமல்ல. தடுமாறக் கூடிய நேரமல்ல. அல்லாஹ்வுடைய தீனில் முன்னேறக் கூடிய உறுதியாக இருக்கக் கூடிய நேரம்.

 அல்லாஹ் நபித்தோழர்களின் ஈமானைப் பற்றி நமக்கு சொல்கிறான்:

وَلَمَّا رَاَ الْمُؤْمِنُوْنَ الْاَحْزَابَ ۙ قَالُوْا هٰذَا مَا وَعَدَنَا اللّٰهُ وَرَسُوْلُهٗوَ صَدَقَ اللّٰهُ وَرَسُوْلُهٗوَمَا زَادَهُمْ اِلَّاۤ اِيْمَانًـا وَّتَسْلِيْمًا ‏

நம்பிக்கையாளர்கள் (எதிரியின்) ராணுவங்களைக் கண்ட பொழுது ‘‘(இதுதான்) அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உண்மையையே கூறினார்கள்'' என்று சொன்னார்கள். தவிர (இவை அனைத்தும்) அவர்களுடைய நம்பிக்கையையும் ஏற்று கீழ்ப்படிவதையும் தவிர வேறொன்றையும் அவர்களுக்கு அதிகப்படுத்திவிடவில்லை. (அல்குர்ஆன் 33:22)

சகோதரர்களே!பொறுமையாக இருக்க வேண்டும்.நிதானத்தை இழந்து விடக்கூடாது.என்ன செய்ய வேண்டுமென்பதை அல்லாஹ்வுடைய வேத வழிகாட்டுதலின்படி ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிகாட்டுதலின்படி சேர்ந்து செய்ய வேண்டும்.

இன்னும் நாம் கண்டிப்பாக அல்லாஹ்விடத்தில் துஆ செய்ய கடமைப்பட்டிருக்கிறோம். யா அல்லாஹ்! எங்களுக்கு ஏற்படக்கூடிய இந்த சோதனைகளில் எங்களுக்கு நீ வெற்றியை உன்உதவியை தருவாயாக!

அவர்களுக்கு எதிராக சூழ்ச்சி செய்து, இந்த சதித் திட்டங்களை அவர்களுக்கு எதிராகவே நீ திருப்பி விடு! என்று கேட்க வேண்டும்.

எந்தப் பொய் பிரச்சாரங்களை கொண்டு முஸ்லிம்களை பலவீனப்படுத்தி இஸ்லாமை அழிக்க வேண்டும் என்று நினைக்கிறார்களோ அதே பொய் பிரச்சாரங்களை அவர்களுக்கு எதிராகவே அல்லாஹ் திருப்பி விடுவான்.

அல்லாஹுத்தஆலா நமக்கு உதவியாளர்களை கண்டிப்பாக ஏற்படுத்துவான். அல்லாஹ்வைவிட நமக்கு போதுமானவர் வேறு யாருமில்லை; நமக்கு உதவியாளர் வேறு யாருமில்லை.

அல்லாஹ் சொல்கிறான்:

وَهُوَ خَيْرُ النّٰصِرِيْنَ‏

அவன் உதவி செய்பவர்களில் மிகச் சிறந்தவன். (அல்குர்ஆன் 3:150)

نِعْمَ الْمَوْلٰى وَنِعْمَ النَّصِيْرُ‏

அவன் சிறந்த பாதுகாவலன்; அவன் சிறந்த உதவியாளன். (அல்குர்ஆன் 8 : 40)

அல்லாஹு சுப்ஹானஹு தஆலா நம்முடைய தீன் துன்யா உடைய கஷ்டங்களை நீக்கி, இம்மை மறுமையின் வெற்றியை தந்தருள்வானாக! மூஃமின்கள் எங்கெல்லாம் சோதிக்க படுகிறார்களோ அவர்களுக்கு ஈமானிய உறுதியை தந்தருள்வானாக! அவர்களுக்கு உதவக் கூடிய உதவியாளர்களை ஏற்படுத்தி அருள்வானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/