HOME      Khutba      ஹிஜாப் அவசியம் - ஒழுக்கம் | Tamil Bayan - 696   
 

ஹிஜாப் அவசியம் - ஒழுக்கம் | Tamil Bayan - 696

           

ஹிஜாப் அவசியம் - ஒழுக்கம் | Tamil Bayan - 696


ஹிஜாப் அவசியம் -  ஒழுக்கம்

ஜுமுஆ குத்பா தலைப்பு : ஹிஜாப் அவசியம் -  ஒழுக்கம்

வரிசை : 696

இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1

கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்

நாள் : 18-02-2022 | 17-07-1443

بسم الله الرحمن الرحيم

إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ

நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.

பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.

அல்லாஹ் கூறுகின்றான் :

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)

يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا

பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)

மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே!அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலாவை பயந்து கொள்ளுமாறு, அல்லாஹ்வின் அச்சத்தை முன்னிறுத்தி வாழுமாறு, அல்லாஹ்வுடைய வேதமாகிய குர்ஆனையும். ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவையும், கண்ணியத்திற்குரிய ஸஹாபாக்கள் உடைய வழிமுறையையும்பின்பற்றி,

இந்த உலக வாழ்க்கையைசிறப்பான வாழ்க்கையாக அமைத்துக் கொள்ளும்படிஎனக்கும் உங்களுக்கும் உபதேசம் செய்தவனாகஇந்த குத்துபாவை ஆரம்பம் செய்கிறேன்.

அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா இந்த மார்க்கத்தில் நமக்கு இரண்டு விதமான சோதனைகளை வைத்திருக்கிறான். ஒன்று, சில கட்டளைகளை நம்மீது அல்லாஹு தஆலா கடமையாக்கி இருக்கிறான். இந்தக் கட்டளைகளை சொல்லப்பட்ட அதே முறையில் அதே ஒழுக்கத்தோடுநாம் பின்பற்றி நடக்கிறோமா? என்று அல்லாஹு தஆலா நம்மை சோதிப்பான்.

பிறகு அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா சில தடைகளை (நம்மீது ஹராமாக்கப்பட்ட தடுக்கப்பட்ட செயல்களை) வைத்திருக்கிறான். அவற்றில் அல்லாஹு தஆலா நம்மைச் சோதிக்கிறான். அவற்றை விட்டு நாம் விலகி இருக்கிறோமா? என்று அல்லாஹு தஆலா நம்மை சோதிப்பான்.

இந்த இரண்டு விதமான சோதனைகள் கண்டிப்பாக ஒவ்வொருவருக்கும் உண்டு. நன்மைகளை செய்வது பாவங்களை விட்டு விலகி இருப்பது.

ஏவப்பட்ட காரியங்களை எந்த அளவு முடியுமோ அதை நாம் செய்தே ஆக வேண்டும். நமக்கு தடுக்கப்பட்ட காரியங்கள் எதுவாக இருந்தாலும் சரி, அவற்றை விட்டு நாம் விலகி இருக்க வேண்டும்.

இந்த இரண்டு விதமான சோதனைகளில், ஒரு அடியான் அல்லாஹ்வுடைய பயத்தை முன்னிறுத்தி, மறுமையின் விசாரணையை முன்னிறுத்தி கடக்க வேண்டும்.

பழிப்பவர்களின் பழிப்பை பயப்படாமல், நான் இதை செய்தால் என் சமுதாயம் என்ன சொல்லும்? நான் இதை செய்யாமல் விட்டால் என் சமுதாயம் என்ன சொல்லும்? என்பதை எல்லாம் பொருட்படுத்தாமல், என்னுடைய ரப்புடைய பொருத்தம் என்ன?

என்னுடைய ரப்பு என்னிடத்தில் என்ன விரும்புகிறான்? எனக்கு கொடுக்கப்பட்ட சட்டம் என்ன? என்பதை மட்டுமே கவனித்து, ஒரு மனிதன் அல்லாஹ்வுக்கு மட்டுமே பயந்து  வாழ்வானேயானால் அவன் வெற்றியாளன். அவர் அல்லாஹ்விடத்தில் உயர்ந்தவன்.

அல்லாஹ் சொல்கிறான்:

اِنَّ اَكْرَمَكُمْ عِنْدَ اللّٰهِ اَ تْقٰٮكُمْ‌

உங்களில் அல்லாஹ்விடத்தில் மிகவும் கண்ணியத்திற்குரியவர், உங்களில் யார் அதிகம் அல்லாஹ்வை பயந்து கொள்கிறார்களோஅவர்கள் தான். (அல்குர்ஆன் 49 : 13)

அல்லாஹ்வுடைய பயம் என்பதற்கு மார்க்க அறிஞர்கள் குர்ஆனிலிருந்துஹதீஸிலிருந்துஅல்லாஹ் ஏவியதை செய்வது, அல்லாஹ் தடுத்ததை விட்டு விலகுவது. இதுதான் தக்வா என்று கூறுகிறார்கள்.

தக்வா என்பது ஒரு குறிப்பிட்ட ஆடையில் உள்ள விஷயம் அல்ல. தக்வா என்பது ஒரு குறிப்பிட்ட தோற்றத்தில் உள்ள விஷயம் அல்ல. அல்லது சில பேச்சுகளில் உள்ள விஷயம் அல்ல.

சிலபேரிடத்தில் நீங்கள் பேசினால், பேச்சுக்குப் பேச்சு இன்ஷா அல்லாஹ், அல்ஹம்துலில்லாஹ் மாஷா அல்லாஹ். அல்லாஹு அக்பர் என்று சொல்வார்கள்.

இப்படிப் பேசுவது ஒரு சிரமம் அல்ல. இந்தப் பேச்சில் இருந்து அல்லாஹ்வை உச்சரிக்கும் பொழுது,அல்லாஹுவை நினைவு கூறும் பொழுது, உள்ளத்தில் எந்த அளவு பயம் இருக்கிறது?

உள்ளத்தில் பயத்தோடு அவன் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், கண்டிப்பாக அல்லாஹ்வின் சட்டங்களை அவன் மீற மாட்டான்.

அது தனக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும் சரியே, தனது குடும்பத்துக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும் சரியே, அவர் நேர்மை தவற மாட்டார். ஒழுக்கம் தவறமாட்டார். அவர் வாக்கு தவற மாட்டார். நம்பிக்கையில் துரோகம் செய்யமாட்டார். ஒப்பந்தங்களுக்கு மோசடி செய்ய மாட்டார். யாருடைய உரிமைகளையும் மீற மாட்டார்.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களுக்கு இத்தகைய ஒரு இறையச்சத்தை தான் சொல்லிக் கொடுத்தார்களே தவிர, இன்று நாம் விளங்கி இருக்கக் கூடியஇந்த இறையச்சம்  அல்ல.

நாம் விளங்கி இருக்கக் கூடிய இறையச்சம் என்பது பேச்சில் அல்லது சில தோற்றத்தில்,  அல்லது சில செயல்பாடுகளில் மட்டும் இருக்கிறது.

பிறகு பொருளாதாரம் என்று வந்துவிட்டால், மார்க்கத்தின் சட்ட திட்டங்கள் என்று வந்துவிட்டால், அவற்றையெல்லாம் ஒரு ஓரத்தில் கொண்டுபோய் வையுங்கள் என்பதாக நம்மில் சிலர் சொல்கிறார்கள். இதுவல்ல மார்க்கம் சொல்லக்கூடிய தக்வா.

இன்று, ஹிஜாபை குறித்துமிகப்பெரிய சர்ச்சை மக்களுக்கு மத்தியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிற இந்த நேரத்தில். ஹிஜாப் என்றால் என்ன என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

ஹிஜாப் என்பது ஏதோ ஒரு கருப்பு நிற ஆடையை போர்த்திக் கொண்டு, பிறகு எப்படி வேண்டுமானாலும் நிற்க்கலாம் என்ற, இன்றைய காலத்தில் உள்ள நமது பெண்கள் இருப்பதைப் போன்று என்று எண்ணிவிடக்கூடாது.

நமது பெண்கள் என்றால், நம்முடைய பொறுப்பின் கீழ் நம்முடைய குடும்பத்தில் உள்ளவர்கள்.

இன்று ஒரு பெண் தப்பு செய்கிறாள் என்றால், கண்டிப்பாக அவள் தந்தையின் வளர்ப்பில் இருப்பாள். அல்லது கணவரின் பொறுப்பில் இருப்பாள். அல்லது ஒரு சகோதரனின் அரவணைப்பில் இருப்பாள்.

என்னைப் பொருத்தவரை, பெண்களை மட்டுமே ஒழுக்க விஷயங்களில், ஹிஜாப் விஷயத்தில்குறை கூறுவது என்பது தவறான ஒன்று.

அதில் ஆண்களுக்கும் பங்கு இருக்கிறது.

اَلرِّجَالُقَوَّامُوْنَعَلَىالنِّسَآءِ

ஆண்கள் பெண்களை நிர்வகிக்கக் கூடியவர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். (அல்குர்ஆன் 4:34)

يٰۤاَيُّهَاالَّذِيْنَاٰمَنُوْاقُوْۤااَنْفُسَكُمْوَاَهْلِيْكُمْنَارًا

மூஃமின்களே!உங்களையும் உங்கள் குடும்பத்தாரையும் நரக நெருப்பிலிருந்து பாதுகாத்துக் கொள்ளுங்கள். (அல்குர்ஆன் 66:6)

وَاْمُرْاَهْلَكَبِالصَّلٰوةِوَاصْطَبِرْعَلَيْهَا‌

(நபியே!) தொழுது வருமாறு நீர் உமது குடும்பத்தினரை ஏவுவீராக. நீரும் அதன் மீது உறுதியாக இருப்பீராக. (அல்குர்ஆன் 20 : 132)

மேலும், அல்லாஹ் சொல்கிறான்.

يَاأَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ

நபியே! நீர் உமது மனைவிகளுக்கும், உமது மகள்களுக்கும், நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை (தங்கள் முகங்களில் போட்டு) இறக்கிக் கொள்ளும்படி நீர் கூறுவீராக. (அல்குர்ஆன் 33:59)

ஒரு பெண் ஹிஜாபை சரியாக முறையாக அணிந்து செல்கிறாளா?அவள் படிக்கக்கூடிய இடத்தில் ஹிஜாபை பேணுகிறாளா? அவள் வேலை செய்ய கூடிய இடத்தில் ஹிஜாபை பேணுகிறாளா?என்பதை கண்காணித்து, விசாரித்து,அவளுக்குத் தேவையான ஒழுக்கத்தை இறையச்சத்தை, மார்க்க போதனையை,அதற்கு தேவையான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பது அவர்களை நிர்வகிக்க கூடிய ஆண்களாகிய நம் மீது கடமை.

ஒரு பெண்ணால் ஹிஜாப் அணிய முடியவில்லை என்றால், ஒரு பெண் ஹிஜாபை கழட்டுகிறாள் என்றால், முதலில் அந்தப் பெண் குற்றவாளியாக ஆகுவதற்கு முன்பாக, அந்தப் பெண் யாருடைய வளர்ப்பில் யாருடைய பொறுப்பில் இருக்கிறாளோ, அந்த பொறுப்பாளி அந்த வளர்ப்பாளர் அந்த குற்றத்தில் முதல் குற்றவாளியாக மார்க்கத்தில் எடுத்துக்கொள்ளபடுவார்.

அவர் அந்தப் பெண்ணுக்கு ஒழுங்கான முறையில் தர்பியத்தைஒழுக்கத்தை கொடுக்கவில்லை. அந்தப் பெண்ணுக்கு ஹிஜாபை குறித்து கற்றுக்கொடுக்க வேண்டிய சட்டங்களை அவர் கற்றுக் கொடுக்கவில்லை. ஆர்வமூட்டவில்லை. எச்சரிக்கவில்லை.

மார்க்கத்தின் மீது உண்டான அந்த பிடிப்பை அவர் கொடுக்காத காரணத்தால், அந்தப் பெண்ணிடத்தில் இந்த பலவீனம் ஏற்படுகிறது.

அல்லாஹு தஆலா நபியைப் பார்த்து சொல்கிறான்:

يَاأَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا

33 : 59. நபியே! நீர் உமது மனைவிகளுக்கும், உமது மகள்களுக்கும், நம்பிக்கையாளர்களின் பெண்களுக்கும், அவர்கள் தங்கள் தலை முந்தானைகளை (தங்கள் முகங்களில் போட்டு) இறக்கிக் கொள்ளும்படி நீர் கூறுவீராக. அதனால், அவர்கள் கண்ணியமானவர்கள் என அறியப்பட்டு, எவருடைய துன்பத்திற்கும் அவர்கள் உள்ளாகாதிருப்பதற்கு இதுசுலபமான வழியாகும். அல்லாஹ் மிக்க மன்னிப்பவனாக, மகா கருணையாளனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 33:59)

இந்த வசனமும் சரி,அடுத்து சூரா நூரில் முப்பத்தி ஒன்றாவது வசனம், அது போன்று 60-வது வசனம், சூரா அஹ்ஜாப் உடைய 53, 59வது வசனம் இந்த வசனங்களிலும் அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா, முஃமினான பெண்களின் ஹிஜாப் எப்படி இருக்க வேண்டும்? ஹிஜாபை கழட்டி ஆண்களுக்கு முன்னால் அவர்கள் வருவது என்றால், அத்தகைய ஆண்களுடைய பட்டியல் என்ன? என்பதையும் அல்லாஹு தஆலா குறிப்பிடுகின்றான்.

அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா சொல்லக்கூடிய அந்த சட்டங்களில் ஒன்று, அவர்கள் தங்களுடைய முந்தானைகளை,அவர்கள் தங்களுடைய துப்பட்டாக்களை கொண்டுதங்கள் மீது போர்த்தி கொள்ளட்டும் என்று அல்லாஹ் சொல்கிறான்.

அதற்கு ஸஹாபாக்கள் உடைய விளக்கம் என்ன? தாபியீன்கள் உடைய விளக்கம் என்ன? என்பதை செய்முறையோடு செய்து காட்டுகிறார்கள்.

அந்த துப்பட்டாவை எடுத்து, தலைக்கு மேலிருந்து அவர்கள் தொங்கவிட்டு, முகத்தையும் நெஞ்சையும் மறைத்தவர்களாக, மேல் ஆடை ஒன்றிருக்கிறது, ஹிஜாபுடைய ஆடை அதற்கு மேல் ஒரு போர்வையை கொண்டுஇப்படிப் போர்த்துவது என்று.

குர்ஆனுடைய விளக்கத்திலும் சரி, குர்ஆனுக்கு விளக்க உரையாக கூறிய ஸஹாபாக்கள், தாபியீன்கள், தபஉ தாபியீன்கள், அத்தனை இமாம்களுடைய விளக்கத்திலும் சரி, முகத்தோடு சேர்த்து மறைக்கப்பட்டது தான் ஹிஜாப் என்று சொல்கிறார்கள்.

இதற்கு பல ஹதீஸ்கள் இருக்கின்றன. பிற்காலத்தில் வந்த சில அறிஞர்கள், முகத்தை மறைப்பது கட்டாயமா? இல்லையா? முகத்தை மறைக்க வேண்டும் என்பது கட்டாயமா? அல்லது முகத்தை மறைக்க வேண்டும் என்பது விரும்பத்தக்கதா? சிலர் கருத்து வேறுபாடு கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், ஒரு முக்கியமான விஷயத்தை நீங்கள் புரிய வேண்டும். முகத்தை மறைப்பது ஹராம் என்று சொல்லக்கூடிய ஒரே முட்டாள் இஸ்லாமிய வரலாற்றில் உருவாகி இருக்கிறான் என்றால்,  பீஜே என்ற முட்டாள் தான்.

முகத்திரை அணியக்கூடாது. முகத்திரை அணிந்து சென்ற பெண்களிடமிருந்து, அவர்களுடைய முகத்திரையை பிடுங்கி இழுப்பது, அது ஒரு மார்க்க கடமை என்று சொல்லக்கூடிய அளவிற்கு. அவருடைய அடாவடித்தனமும் அவர்களுடைய அராஜகமும் இருக்கிறது என்றால், அது அவரைப் பின்பற்றக் கூடிய ஜமாத் தான்.

முகத்தை மறைப்பது ஃபர்ளா? அல்லது முஸ்தஹஃப்பா? இப்படி வேண்டுமானால் மார்க்க அறிஞர்களிடம் கருத்து வேற்றுமை இருக்கிறது.

முஸ்தஹப் என்று சொல்லக்கூடிய அறிஞர்கள் கூட, முகத்தை மறைக்க தேவையில்லை என்று சொல்லக்கூடிய அறிஞர்கள் கூட, முகத்தை மறைத்துக் செல்வது தான் விரும்பத்தக்கது; அதுதான் தங்களை ஃபித்னாவில் இருந்து பாதுகாத்துக் கொள்வதற்கு ஏற்கத்தக்கது; பேணுதல் ஆனது;  அது சிறந்தது என்று சொல்லியிருக்கிறார்களே தவிர,

முகத்தை மறைத்து செல்வது ஹராம். அது பாவம் என்று சொல்லக்கூடிய அளவுக்கு வழிகேட்டின் உச்சத்தில் இந்த ஜமாத் சென்றிருக்கிறது. இதை நீங்கள் தெரிந்து கொள்வதற்கு அவசியம் என்பதால் இங்கு சொல்கிறேன்.

ஹிஜாப் என்பது முழு உடலையும் மறைத்ததாக இருக்கவேண்டும். ஒரு பெண் அந்நிய ஆணிடத்தில் தன் முகத்தை காட்டுவது என்றால், நிர்ப்பந்தமான (மருத்துவமோ. அல்லது சாட்சி கூற வேண்டிய ஒரு நிர்ப்பந்தமோ) சூழ்நிலைகளை தவிர, எந்த நேரத்திலும் தன்னுடைய முகத்தை அந்நிய ஆண்களுக்கு முன்னால் காட்டக்கூடாது என்பதில் முந்திய மார்க்க அறிஞர்கள் இடத்தில், ஸஹாபாக்கள், தாபியீன்களிடத்தில் இருவேறுபட்ட கருத்து கிடையாது.

ஹிஜாப் என்பது நம்முடைய முழு உடலையும் மறைத்ததாக இருக்க வேண்டும். அப்படிப்பட்ட ஹிஜாபை  நம்முடைய பெண்களுக்கு நாம் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறோமா?என்பதை ஆண்களாகிய நாம் ஊர்ஜிதப்படுத்த வேண்டும்.

இரண்டாவது, அந்த ஹிஜாப் என்பது ஒரு அலங்காரமான ஆடையாக இருக்கக் கூடாது. ஹிஜாப் என்பது அது ஒரு போர்வையாகதுப்பட்டாவாக இருக்க வேண்டும்.

அந்த காலத்தில் தஞ்சாவூர் ஜில்லாவில் இருந்தவர்களுக்கு தெரியும். வெள்ளை நிறத்தில் ஒரு பெரிய துப்பட்டாவை கொண்டு, அவர்கள் தங்களை முழுமையாக மறைத்துக் கொண்டு, தூரத்தில் இருந்து பார்த்தால் சிறிய ஓட்டை போல் தெரியும்.

கிட்டத்தட்ட பதினாறு முழம் இருக்கும். அதை அப்படியே போர்த்தி அவர்கள் அப்படியே முழுமையாக மூடப்பட்டு இருப்பார்கள்.

இந்த ஹிஜாபுடைய ஆடை ஒரு அலங்காரமான கவர்ச்சியான ஆடையாக இருக்கக்கூடாது. கவர்ச்சியான ஆடை என்றால், எதை பார்ப்பதால் மீண்டும் ஒரு முறைபார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்படுகிறதோ அது அலங்காரம், அது கவர்ச்சியான ஆடை.

எதைப் பார்ப்பதால் அப்படி ஒரு எண்ணம் ஏற்படவில்லை. அதைப் பார்ப்பதால் மீண்டும் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் தூண்ட வில்லையோஅது ஒரு சாதாரணமான ஆடை.

இப்னு மஸ்வூத் ரழியல்லாஹுஅன்ஹுஅவர்கள் சொல்கின்றார்கள்:

ஹிஜாப் என்பது மேல் போர்த்தக் கூடிய பெரிய ஆடைகளைபோல இருக்க வேண்டும்.

அதாவது,அதுவே ஒரு அலங்காரமான ஆடையாக இருக்கக் கூடாது. அவர்கள் உள்ளே போட்டு இருக்கக்கூடிய அலங்காரங்களை வெளிப்படுத்த கூடியதாகவும் அது இருக்கக் கூடாது.

அல்லாஹு ஸுப்ஹானஹுவதஆலா முஃமினான பெண்களுக்கு சொல்லும் பொழுது,

وَلَا يُبْدِيْنَ زِيْنَتَهُنَّ

அவர்கள் தங்களது அலங்காரங்களை வெளிப்படுத்த வேண்டாம் என்று சொல்கிறான். (அல்குர்ஆன் 24:  31)

அலங்காரங்கள் என்றால், அவர்கள் மேல் அணிந்திருக்கக்கூடியநகைகள் அணிகலன்கள். வீட்டில் கணவனுக்காக குடும்பத்தாருக்கு மத்தியில்அணிந்திருக்கக் கூடிய அழகான ஆடைகள். இந்த ஆடைகளை எல்லாம் அவர்கள் வெளிப்படுத்த கூடாது. அவர்கள் வெளியே செல்லும் பொழுது, அதற்கு மேல் ஒரு போர்வையைப் போர்த்திக் கொள்ள வேண்டும்.

மேலும்,அல்லாஹு தஆலா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய மனைவிமார்களுக்கு கட்டளையிடுகின்றான்.

وَقَرْنَ فِىْ بُيُوْتِكُنَّ وَلَا تَبَـرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ

(நபியுடைய மனைவிகளே!) நீங்கள் உங்கள் (வீடுகளில் இருந்து வெளிச் சென்று திரியாது) வீடுகளுக்குள்ளாகவே தங்கி இருங்கள். முன்னிருந்த அறியாத மக்கள் (தங்களை அலங்கரித்துக் கொண்டு வெளியில் சென்று) திரிந்து கொண்டிருந்ததைப் போல் நீங்களும் திரியாதீர்கள். (அல்குர்ஆன் 33 : 33)

இதன் மூலம் அல்லாஹு தஆலா என்ன சொல்ல வருகிறான் என்றால்,உங்களுடைய இருப்பிடம் வீடாக இருக்கட்டும். அவசியமான ஒரு தேவை இருந்தால் வெளியேறுவதற்கு மார்க்கம் அனுமதி கொடுத்திருக்கிறது.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களோடு பெண்கள் பயணத்தில் சென்றிருக்கிறார்கள். ஜிஹாதுக்கு சென்றிருக்கிறார்கள். ஹஜ்ஜுக்கு சென்றிருக்கிறார்கள். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய மஸ்ஜிதில் தொழுவதற்காக வந்திருக்கிறார்கள்.

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பயான்களை கேட்பதற்காக வந்திருக்கிறார்கள். ஜிஹாதில் காய பட்டவர்களுக்கு உதவி செய்வதற்காக, மருத்துவ உதவி செய்வதற்காக, வேறு சில உதவிகள் செய்வதற்காகஅவர்கள் சென்றிருக்கிறார்கள்.

பார்க்க : அர்ரஹீக் அல்மக்தூம்.

இப்படி அவசியமான அத்தியாவசியமான தேவைகளை முன்னிட்டு,  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய மனைவிமார்கள், பெண்கள் வெளியே சென்றிருக்கிறார்களே தவிர, அவர்கள் அனாவசியமாக வீட்டை விட்டு வெளியேறியது இல்லை.

ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:

ثلاثةٌ لا تَسألُ عنهمْ : رجلٌ فارَقَ الجماعةَ و عَصَى إمامَهُ و ماتَ عاصِيًا ، و أمَةٌ أو عبد ٌآبِقٌ من سَيِّدِهِ فماتَ ، وامْرأةٌ غابَ عنْها زوجُها و قدْ كفاها مُؤنةَ الدنيا فتبرَّجَتْ بَعدَهُ ؛ فلا تَسألْ عنْهمْ

மூன்று நபர்களைப் பற்றிநீ கேட்காதே, அவர்கள் அல்லாஹ்வால் புறக்கணிக்கப்பட்டவர்கள்.  அல்லாஹ்வுடைய கோபத்திற்கு ஆளானவர்கள்.

முதலாமவர்,யார் முஸ்லிம்களுடைய ஜமாத்தை விட்டு விலகிச் சென்றாரோ, இமாமுக்கு மாறு செய்து அதே நிலையில் இறந்தாரோ அவர்.

இரண்டாமவர், தன்னுடைய எஜமானை விட்டு ஓடி அடிமை அல்லது அடிமைப் பெண். அதே நிலையில் அவரும் இறந்து விடுகிறார்.

மூன்றாவது, எந்த ஒரு பெண்ணுக்கு கணவன் தேவையான வாழ்வாதாரத்தை, செலவுகளை தேவையான வசதிகளை எல்லாம் செய்து கொடுத்துவிட்டு, அந்தக் கணவன் வெளியே சென்றிருக்க, இந்தப் பெண் அந்த வீட்டை விட்டு வெளியே செல்கிறாள்.

இந்த மூன்று பேரைப் பற்றி நீ கேட்க வேண்டியதே கிடையாது. அதாவது அவர்கள் அல்லாஹ்வுடைய கோபத்தில் சென்று விட்டார்கள்.

அறிவிப்பாளர் : ஃபழாளா பின் உபைத் ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : ஸஹீஹுல் ஜாமிஃ, எண் : 3058.

ஆகவே,குறிப்பாக இந்த ஹிஜாப் உடைய ஆடை என்பது ஒரு அலங்காரமாக இருக்கக் கூடாது. வெளியே சொல்லக் கூடிய பெண் கண்டிப்பாக. தன்னுடைய அலங்காரங்களை மறைத்து செல்வதற்கு உண்டான உடையாக இருக்க வேண்டும்.

மூன்றாவதாக அறிஞர்கள் சொல்கிறார்கள்:அந்த ஹிஜாப் உடைய ஆடை என்பது,மிகவும் மென்மையானதாகமெல்லியதாக இருக்கக் கூடாது.

அதாவது உள்ளே அணிந்திருக்கக் கூடிய ஆடைகளை அலங்காரங்களை வெளிப்படுத்தக் கூடியதாக அல்லது உடலோடு ஒட்டிக் கொண்டு, உடல் உறுப்புகளை பிரித்துக் காட்டக் கூடியதாக இருக்கக் கூடாது.

அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூறியிருக்கிற எச்சரிக்கையை நாம் படிக்க வேண்டும்.

نِسَاؤُهُمْ كَاسِيَاتٌ عَارِيَاتٌ، عَلَى رُءُوسِهِمْ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْعِجَافِ، الْعَنُوهُنَّ، فَإِنَّهُنَّ مَلْعُونَاتٌ

இந்த உம்மத்தின் இறுதி காலத்தில்சில பெண்கள் வருவார்கள். அவர்கள் ஆடை அணிந்து இருப்பார்கள். ஆனால் நிர்வாணமானவர்கள். (அல்லாஹ் பாதுகாப்பானாக!)

மேலும்,அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்தப் பெண்களின் கொண்டைகளைப் பற்றி கூட சொன்னார்கள்.

தலையின் மீது உயர்ந்து ஒட்டகத்தின் திமில்களைப் போன்றுதலை உடையவர்களாக இருப்பார்கள். அவர்களை நீங்கள் சபியுங்கள். அவர்கள் சபிக்கப்பட்டவர்கள் என்று. (1)

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1680,   முஸ்னத் அஹ்மத் எண் 7083.

இன்னுமொரு அறிவிப்பில் வருகிறது. ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்.

لَا يَدْخُلْنَ الْجَنَّةَ، وَلَا يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا

அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். அதனுடைய நறுமணத்தை கூட அவர்கள் நுகர மாட்டார்கள். அதனுடைய நறுமணமோ இவ்வளவு இவ்வளவு தூரத்தில் இருந்து கிடைக்கக்கூடிய ஒன்று.

அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹுஅன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1680,   முஸ்னத் அஹ்மத் எண் 7083.

இன்னும் சில ஒழுக்கங்கள் இருக்கின்றன.  இன்ஷா அல்லாஹ் அடுத்த ஜும்ஆவில் பார்ப்போம்.

குறிப்பாக நாம் தெரிந்து கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம்,பெண்களுடைய ஹிஜாப் என்பது,அவர்களுக்கு மட்டும் உள்ள சட்டமல்ல. அவர்களுக்கு அந்த சட்டத்தை கற்றுக் கொடுத்து, அவர்களை அந்த ஹிஜாபை பேண வைப்பது ஆண்களாகிய நம்முடைய கடமை.

ஹிஜாபுக்கு உண்டான சூழ்நிலையை உருவாக்கிக் கொடுப்பது. ஹிஜாபுக்கு உண்டான அந்த ஆர்வத்தை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பது.

பிறகு,அந்த ஹிஜாப் எப்படி இருக்க வேண்டும்?என்ற அறிவுரையை அவர்களுக்கு வழங்கி. அதுபோன்ற ஹிஜாபை அவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுப்பதுஆண்களாகிய நம்முடைய கடமை.

இதில் ஆண்கள் அலட்சியம் செய்வார்களேயானால், அவர்கள் முதலில் அல்லாஹ்விடத்தில் குற்றவாளியாக இருப்பார்கள்.

அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நம் அனைவருடைய பாவங்களை மன்னித்து, நமக்கும் நம்முடைய பெண்கள் சமுதாயத்திற்கும்ஒழுக்கத்தையும் தக்வாவையும் பேணுவதற்கு, அல்லாஹ்வுடைய ஒவ்வொரு சட்டத்தையும் எடுத்து நடப்பதற்குஅருள் புரிவானாக!

ஆமீன்

أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 

குறிப்புகள் :

குறிப்பு 1)

حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا جَرِيرٌ، عَنْ سُهَيْلٍ، عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا، قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ، وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ، رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ، لَا يَدْخُلْنَ الْجَنَّةَ، وَلَا يَجِدْنَ رِيحَهَا، وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا» (صحيح مسلم (3/ 1680)

حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ يَزِيدَ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَيَّاشِ بْنِ عَبَّاسٍ الْقِتْبَانِيُّ، قَالَ: سَمِعْتُ أَبِي، يَقُولُ: سَمِعْتُ عِيسَى بْنَ هِلَالٍ الصَّدَفِيَّ، وَأَبَا عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيَّ، يَقُولَانِ: سَمِعْنَا عَبْدَ اللَّهِ بْنَ عَمْرٍو، يَقُولُ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «سَيَكُونُ فِي آخِرِ أُمَّتِي رِجَالٌ يَرْكَبُونَ عَلَى سُرُوجٍ، كَأَشْبَاهِ الرِّحَالِ، يَنْزِلُونَ عَلَى أَبْوَابِ الْمَسْجِدِ، نِسَاؤُهُمْ كَاسِيَاتٌ عَارِيَاتٌ، عَلَى رُءُوسِهِمْ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْعِجَافِ، الْعَنُوهُنَّ، فَإِنَّهُنَّ مَلْعُونَاتٌ، لَوْ كَانَتْ وَرَاءَكُمْ أُمَّةٌ مِنَ الْأُمَمِ لَخَدَمْنَ نِسَاؤُكُمْ نِسَاءَهُمْ، كَمَا يَخْدِمْنَكُمْ نِسَاءُ الْأُمَمِ قَبْلَكُمْ» (مسند أحمد مخرجا 7083)

DARUL HUDA

211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.

muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044

Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/

Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber

Website: http://www.darulhuda.net/