HOME      Khutba      இறுதி பத்தும் இரவு இபாதத்தும் | Tamil Bayan - 711   
 

இறுதி பத்தும் இரவு இபாதத்தும் | Tamil Bayan - 711

           

இறுதி பத்தும் இரவு இபாதத்தும் | Tamil Bayan - 711


இறுதி பத்தும் இரவு இபாதத்தும்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : இறுதி பத்தும் இரவு இபாதத்தும்
 
வரிசை : 711
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா தாருல் ஹுதா மண்ணடி சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 22-04-2022 | 20-09-1443 
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றிப் புகழ்ந்தவனாக, அல்லாஹ்வின் தூதர் மீதும் அந்தத் தூதரின் பாசத்திற்குரிய குடும்பத்தார் மற்றும் கண்ணியத்துக்குரிய தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் ஸலாமும் என்றும் நிலவட்டும் என்று துஆ செய்தவனாக! 
 
எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பை வேண்டியவனாக, இந்த துன்யாவின் நல்ல முடிவை அல்லாஹ்வுடைய வணக்க வழிபாடுகளோடு சேர்ந்த நல்ல வாழ்க்கையை வேண்டியவனாகவும், மறுமையில் அல்லாஹ்விற்கு முன்னால் நிற்கும் பொழுது பாவங்கள் மன்னிக்கப்பட்டவர்களாக, செயல் ஏடுகள் வலதுகரத்தில் கொடுக்கப் பட்டவர்களாக! 
 
யாரைப் பார்த்து அல்லாஹு தஆலா அல்லாஹ்வுடைய பாதுகாப்போடு நிம்மதி பெற்றவர்களாக சொர்க்கத்தில் நுழையுங்கள் என்று அல்லாஹ் கூறுவானோ அந்த நல்ல மக்களோடு என்னையும் உங்களையும் ஆக்கி வைக்க வேண்டும் என்று அல்லாஹ்விடத்தில் துஆ செய்தவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலாவை பயந்து கொள்வது, தக்வா உடைய வாழ்க்கையை கடைபிடிப்பது, நிச்சயமாக நம்முடைய இம்மை வாழ்க்கை கண்ணியத்திற்கும் உயர்விற்கும் அதுபோன்று மறுமை வாழ்க்கையின் உயர்வுக்கும் கண்ணியத்திற்கும் வெற்றிக்கும் காரணமாக இருக்கும்.
 
நாளை மறுமையில் மக்களெல்லாம் நஷ்டவாளிகளாக கேவலப்பட்டவர்களாக நரகில் செல்லும் போது, யார் அல்லாஹ்வை பயந்தவர்களாக அல்லாஹ் உடைய தக்வாவை அடிப்படையாக வைத்து இந்த உலகத்தில் வாழ்ந்தார்களோ அவர்கள் சொர்க்கத்திற்கு சமீபமாக்க பட்டு அவர்கள் மிக இலகுவாக சொர்க்கம் செல்வார்கள்.
 
அல்லாஹு தஆலா கூறுகிறான்:
 
وَاُزْلِفَتِ الْجَـنَّةُ لِلْمُتَّقِيْنَ
 
தக்வா உள்ளவர்களுக்கு சொர்க்கம் மிகவும் சமீபமாக கொண்டுவரப்படும். (அல்குர்ஆன் 50 : 31)
 
ஆகவே, இந்த ரமலானுடைய மாதம் அந்த தக்வாவை நமக்குள் கொண்டு வருவதற்காக அந்த தக்வாவுடைய பாடங்களைப் படித்துக் கொள்வதற்காக மிகவும் ஒரு பொருத்தமான மிகவும் சரியான மாதம். அல்லாஹு தஆலா இந்த நோன்பின் மூலமாக நம்மிடையே எதிர்பார்ப்பது அந்த தக்வாவை தான்.
 
தக்வா என்றால் என்ன? அல்லாஹ்வுடைய கட்டளைகளை அல்லாஹ்வுடைய ஏவல்களை எல்லா சூழ்நிலைகளிலும் நிறைவேற்றுவது. அல்லாஹ் ஏவிய கட்டளைகளை நிறைவேற்றுவது. அல்லாஹ் தடுத்த பாவங்களை விட்டு விட வேண்டும். 
 
ஷிர்கில் இருந்து குஃப்ரில் இருந்து நயவஞ்சகத்திலிருந்து பெரும்பாவங்கள் சிறு பாவங்கள் என்று ஒவ்வொரு பாவத்தையும் அது பாவம் என்று அறிந்து அல்லாஹ்வுக்காக வெறுத்து அந்த பாவத்தை விட்டு விலகி வாழ்வது.
 
அல்லாஹ்வுடைய அச்சத்திற்காக நரகத்தை பயந்தவர்களாக நாளை மறுமையில் அல்லாஹ் எனக்கு சொர்க்கத்தைக் கொடுக்கவேண்டும் என்று எதிர்பார்த்தவர்களாக இதற்கு தக்வா என்று சொல்லப்படும்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா இந்த நோன்பின் மூலமாக அந்த உயர்ந்த தக்வாவைத்தான் நம்மிடத்தில் எதிர்பார்க்கிறான். 
 
அல்லாஹு தஆலா கூறுகிறான்:
 
يٰٓـاَيُّهَا الَّذِيْنَ اٰمَنُوْا كُتِبَ عَلَيْکُمُ الصِّيَامُ کَمَا كُتِبَ عَلَى الَّذِيْنَ مِنْ قَبْلِکُمْ لَعَلَّكُمْ تَتَّقُوْنَۙ‏
 
முஃமின்களே! உங்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது. முன் சென்றவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போன்று. நீங்கள் இறையச்சம் உள்ளவர்களாக தக்வா உள்ளவர்களாக ஆக வேண்டும். என்பதற்காக. (அல்குர்ஆன் 2 : 183)
 
ஒவ்வொரு ஆண்டும் இந்த ரமலானை எதிர்பார்த்து இருக்கிறோம். அது போன்று இந்த ஆண்டும் ரமலானை எதிர்பார்த்து இருந்தோம். ரமலான் வந்தது.
 
இந்த ரமலானுடைய 20 நாட்கள் நம்மை விட்டு மிக விரைவாக கடந்து சென்று விட்டன. இன்னும் 10 நாட்கள் தான். இந்த பத்து நாட்கள் என்பது, மொத்த ரமலான் மாதத்தின் உடைய மிக முக்கியமான பகுதி. கடைசியில் இருக்கக்கூடிய இந்த பத்து நாட்கள் ரமலான் மாதத்தின் இந்த முப்பது நாட்களின் மிக முக்கியமான பகுதி. 
 
ஒன்று, யார் இந்த முடிந்துவிட்ட நாட்களை வணக்க வழிபாடுகளோடு அந்த ஈமானிய சூழ்நிலையில் அல்லாஹ்வுடைய அந்த வணக்கத்தோடு திக்ருகளோடு இபாதத்தோடு கழித்தார்களோ அவர்கள் இந்த பத்து நாட்களில் அலட்சியம் செய்து விடக்கூடாது. கவனக்குறைவாக இருந்து விடக்கூடாது.
 
இந்த இருபது நாளில் எந்த அளவு சிரமத்தை எடுத்தார்களோ எந்த அளவு கடின முயற்சி செய்தார்களோ கவனம் செலுத்தினார்களோ அதைவிட பன்மடங்கு இந்த கடைசி பத்தில் இறுதி பத்தில் கண்டிப்பாக அவர்கள் எடுத்தாக வேண்டும்.
 
யார் இந்த 20 நாட்களில் இந்த உலக வாழ்க்கையை மிகைப்படுத்தி அதிகப்படுத்தி வணக்க வழிபாடுகளில் குறைவு செய்து விட்டார்களோ அவர்களுக்கும் அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா ஒரு நிவர்த்தியை ஒரு பரிகாரத்தை இந்த கடைசி பத்தில் வைத்திருக்கிறான். 
 
யாரால் இந்த இருபது நாட்களில் சரியாக வணக்க வழிபாடுகள் செய்ய முடியாமல் அல்லது குறைவாக வணக்க வழிபாடுகள் செய்து விட்டார்களோ அவர்களும் கைது சேத படவேண்டாம். அவர்களுக்கும் அல்ஹம்துலில்லாஹ் எஞ்சி இருக்கக்கூடிய அந்த பத்து நாட்கள் இருக்கின்றன, பயன்படுத்திக் கொள்வதற்கு.
 
இந்த கடைசி பத்தை எப்படி பயன்படுத்துவது? ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த கடைசி பத்தை குறித்து எவ்வளவு அழகிய அழுத்தமான மிகவும் முக்கியத்துவம் கொடுத்த அறிவுரைகளை நமக்கு வழங்கியிருக்கிறார்கள் பாருங்கள்.
 
குறிப்பாகவே ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரமலான் மாதம் வருவதற்கு முன்பாகவே ரமலானை குறித்து அறிவுரை ரமலானை குறித்து உபதேசம் செய்யும்போது இந்த கடைசி பத்தையும் இந்தக் கடைசிப் பத்தில் இருக்கக்கூடிய மிக உயர்வான லைலத்துல் கத்ரை பற்றியும் மிக அழுத்தமாக ஸஹாபாக்களுக்கு வலியுறுத்தி இருக்கின்றார்கள். 
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களுடைய தோழர்களுக்கு சொல்வார்கள்:
 
أَتَاكُمْ رَمَضَانُ
 
ரமலான் வரப்போகிறது. (1)
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : நசாயி, எண் : 2106.
 
ரமலான் வருவதற்கு முன்பே அந்த ரமலானின் அமல்கள் நினைவில் இருக்க வேண்டும். இபாதத்களை பற்றிய சிந்தனை இருக்க வேண்டும். குர்ஆன் திலாவத் உடைய ஆர்வம் இருக்க வேண்டும். சதக்கா உடைய ஆர்வம் இருக்க வேண்டும். 
 
இதை உணர்த்துவதற்காக இந்த ரமலான் மாதம் வருவதற்கு முன்பே அந்த ரமலானுடைய வருகையைப் பற்றி ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களது தோழர்களுக்கு உணர்த்துவார்கள்.
 
ஒரு முஸ்லிமைப் பொறுத்தவரை அவருடைய வாழ்க்கையே இபாதத்துக்காக தான். அல்லாஹ்வை வணங்குவது தான் வாழ்க்கை உடைய அடிப்படை. நம்முடைய வாழ்க்கையின் குறிக்கோள். 
 
என்னுடைய ரப்பை வணங்குவது, கடமையான ஃபர்ளான வணக்க வழிபாடுகளை கொண்டும் பிறகு அல்லாஹ்வும் அல்லாஹ்வுடைய தூதரும் வழிகாட்டி கொடுத்த உபரியான வணக்க வழிபாடுகளை கொண்டும். 
 
அது தொழுகையாக இருக்கலாம். நபிலான நோன்புகளாக இருக்கலாம். நபிலான தானதர்மங்களாக இருக்கலாம். அல்லது பிற மக்களுக்கு செய்யக்கூடிய இஹ்ஸான் என்ற நல்லுதவி நல்லுபகாரமாகவும் இருக்கலாம். 
 
இப்படி வணக்க வழிபாட்டின் வகைகளைக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையை முழுமையாக ஈடுபடுத்தி வைப்பது. தன்னுடைய வணக்க வழிபாடுகளை அடிப்படையாக வைத்து தன்னுடைய துன்யா வாழ்க்கையை அமைத்துக் கொள்வது. இதுதான் ஒரு முஸ்லிமுடைய லட்சியம். 
 
இன்று, நாம் எப்படி மாறி விட்டோம் என்றால், நம்முடைய துன்யாவுடைய வேலைகளுக்கு ஏற்ப வணக்க வழிபாடுகளை மாற்றிக் கொள்பவர்களாக இருக்கிறோம். நம்முடைய வியாபாரத்திற்கு ஏற்ப நம்முடைய வணக்க வழிபாடுகளை குறைத்துக் கொள்கிறோம். நம்முடைய வணக்க வழிபாடுகளை விட்டுவிடுகிறோம். 
 
அல்லாஹ் சொல்கிறான்:
 
وَلَـلدَّارُ الْاٰخِرَةُ خَيْرٌ لِّـلَّذِيْنَ يَتَّقُوْنَ‌ اَفَلَا تَعْقِلُوْنَ‏
 
இவ்வுலக வாழ்க்கை விளையாட்டும் கேளிக்கையுமே தவிர வேறில்லை! எனினும் இறையச்சமுடையவர்களுக்கு நிச்சயமாக மறுமையின் வாழ்க்கையே மிக மேலானது. (இவ்வளவுகூட) நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? (அல்குர்ஆன் 6 : 32)
 
எந்த துன்யாவில் அழிந்து விடுவீர்களோ எந்த துனாயாவில் இறந்து பிரிந்து விடுவீர்களோ எந்த துன்யாவில் நீங்கள் அனுபவிக்கக்கூடிய அந்த இன்பங்கள் அந்த சுகங்கள் எல்லாமே சொற்பமான அளவு தான்.
 
ஒரு மனிதனின் சிறு பிராயம் அவனுக்கு விளையாட்டில் படிப்பில் கழிகிறது. பிறகு வாலிபம் கஷ்டப்பட்டு பொருளாதாரத்தை தேடுகிறான். பிறகு, அவன் தான் தேடிய பொருளாதாரத்தைக் கொண்டு வாழ்க்கை வசதியைக் கொண்டு இந்தத் துன்யாவை அனுபவிக்க வேண்டும், இந்த வசதிகளை அனுபவிக்க வேண்டும் என்று அவன் முயற்சி செய்யும் போது மரணம் வயோதிகம் அவனுக்கு சமீபமாக வந்துவிடுகிறது.
 
வயோதிகம் வந்துவிட்டால் உங்களுக்கு நன்றாக தெரியும். எந்த இன்பங்களெல்லாம் நாம் வாழவேண்டும் என்று இளமையில் தேடி அவற்றை இழந்து செல்வத்தை சம்பாதித்து, பிறகு இந்த சுகங்களை வசதிகளை அனுபவிக்கலாம் என்று தேடினானோ அந்த சுகங்கள் இன்பங்களில் பலவற்றை வயோதிகத்தில் அவனால் அடைய முடியாது. அனுபவிக்க முடியாது. அதற்குப் பிறகு என்ன இருக்கிறது?
 
மரணம் நம்மை எதிர்பார்த்துக் கொண்டு நம்முடைய கதவைத் தட்டிக் கொண்டே இருக்கும். ஒவ்வொரு இரவும் அல்லது ஒவ்வொரு பகலும். அடுத்து நமக்கு இன்னொரு பகல் கிடைக்குமா? இன்னொரு இரவு கிடைக்குமா? என்ற சந்தேகம் தான். 
 
இப்படிப்பட்ட மிகவும் சொற்பமான அந்த வாழ்க்கைக்காக மனிதனுடைய திட்டங்களை பாருங்கள். அவனுடைய ஏற்பாடுகளை பாருங்கள். அவனுடைய உழைப்புகளைப் பாருங்கள். 
 
ஆனால், மறுமை சிறந்தது, மறுமை நீடித்து நிரந்தரமாக இருக்க கூடியது என்று எந்த மறுமையை குறித்து நூற்றுக் கணக்கான வசனங்களில் அல்லாஹு தஆலா மீண்டும் மீண்டும் உணர்த்துகிறானோ அந்த மறுமைக்காக நாம் சேமித்து வைத்திருக்க கூடிய அமலை அந்த மறுமைக்காக நாம் தயாரித்து வைத்திருக்கக்கூடிய அந்த தயாரிப்புகளை கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்.
 
ஆகவேதான், அல்லாஹு தஆலா கேட்கிறான்:
 
இவ்வளவு உங்களுக்கு உபதேசங்கள் செய்யப்பட்டதற்கு பிறகும் உங்களுக்கு புத்தி வராதா? நீங்கள் புரிய மாட்டீர்களா ? உங்களுக்கு அறிவில்லையா? நீங்கள் ஏன் இதை விளங்க முயற்சிப்பதில்லை.
 
இப்படி வாழ்க்கையே வணக்க வழிபாட்டுக்காக மாற்றவேண்டும். நம்முடைய குடும்ப வாழ்க்கையை நம்முடைய வியாபாரத்தை நம்முடைய தொழிலை நம்முடைய உறவுகளை எல்லாம் மறுசீரமைப்பு செய்ய வேண்டும், நம்முடைய இபாதத்துக்காக.
 
எப்படிப் புரட்டிப் போட்டு வைத்திருக்கிறோம் என்றால், உலகத்தினுடைய வேலைகள் உலகத்தினுடைய தொடர்புகள் எல்லாவற்றையும் எந்த குறையும் இல்லாமல் நிறைவேற்றியதற்கு பிறகு, பல தலைமுறைகளுக்கு சம்பாதித்து அதற்குப் பிறகு மறுமைக்கான அமல்களில் கவனம் செலுத்தலாம், மறுமையைப் பற்றி சிந்திக்கலாம் என்று அற்ப அமல்களை கொண்டு திருப்தி அடைந்தவர்களாக, ஒரு ஐந்து நேரத் தொழுகைகளைக் கூட சரியாக நிறைவேற்ற முடியாமல் மறுமையை மறந்தவர்களாக இருக்கிறோம்.
 
இந்த ரமலானுடைய மாதம் மறதியை போக்குவதற்கான மாதம். ஆகவேதான், ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த ரமலானில் இபாதத்துக்காக உங்களை மாற்றக்கூடிய நீங்கள் இந்த ரமலானில் வணக்க வழிபாட்டுக்காக, குர்ஆனோடு உங்களுடைய தொடர்பை ஏற்படுத்துவதற்காக, இரவு வணக்கத்தோடு உங்களுடைய தொடர்பை ஏற்படுத்துவதற்காக, தக்வா உடைய வாழ்க்கையை மேற்கொண்டு இறையச்சமுடைய வாழ்க்கையை மேற்கொண்டு உங்களுடைய வாழ்க்கையை சரி செய்து கொள்வதற்கு உண்டான நேரமாக நீங்கள் ஆக்கிக்கொள்ள வேண்டுமே! அந்த ரமலான் உங்களுக்கு வரப்போகிறது.
 
பிறகு, ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
شَهْرٌ مُبَارَكٌ
 
இந்த ரமலான் ஒரு பரக்கத்தான மாதம். 
 
எதைக்கொண்டு பரக்கத்? குர்ஆனை ஓதுவது கொண்டு. காசு பணத்தைக் கொண்டு அல்ல. எங்கே குர்ஆனில் ஹதீஸில் பரக்கத் என்று சொல்லப்படுகிறதோ அங்கு அமல்களை குறிக்கிறது முதலாவதாக. இறை வணக்க வழிபாடுகளை குறிக்கிறது. அந்த இறை வணக்க வழிபாடுகளின் மூலமாக அல்லாஹ்வின் புறத்திலிருந்து இறங்கக்கூடிய மன்னிப்புகளையும் வணக்கங்களையும் குறிக்கிறது.
 
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் இறந்துவிட்டார்கள். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இறந்துவிட்டார்கள். அவர்களுடைய குடும்பத்தார்கள் இறந்துவிட்டார்கள். ஆனால் இன்றும் அவர்களுடைய பரக்கத்திற்காக துஆ செய்து கொண்டிருக்கிறோம். 
 
அதுக்கு என்ன பரக்கத்தை குறிக்கிறது? அவர்களுடைய மன்னிப்பை குறிக்கிறது. மறுமையின் உடைய அந்தஸ்துகள் உயர்த்துவதை குறிக்கிறது. அல்லாஹ்விடம் அவர்களுடைய நெருக்கம் அதிகமாகுவதை குறிக்கிறது
 
பரக்கத்தின் உடைய ஒரு பகுதிதான் பொருளாதாரத்தின் அபிவிருத்தியை விஸ்தீரணத்தை ஏற்படுத்துவது. நம்முடைய சிந்தனை எப்படி ஆகிவிட்டது என்றால், பரக்கத் என்றாலே பொருளாதாரத்தின் விஸ்தீரணம் பொருளாதார அபிவிருத்தி தான் என்று மாறிவிட்டது.
 
பரக்கத் என்பதன் முதல் அர்த்தம், அல்லாஹ்வுடைய அருள்கள், வணக்க வழிபாடுகளின் மூலமாக அந்த இறையச்சத்தின் மூலமாக அல்லாஹ் அடியான் மீது பொழியக் கூடிய அந்த விசேஷமான கருணைகள்.
 
அந்தப் பரக்கத்களை அடைந்து கொள்வதற்கு உண்டான மாதம்தான். இந்த ரமலானுடைய மாதம். தொழுகையின் மூலமாக நோன்பின் மூலமாக ஸதக்காவின் மூலமாக இரவு வணக்கத்தின் மூலமாக.
 
மேலும், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
فَرَضَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْكُمْ صِيَامَهُ، تُفْتَحُ فِيهِ أَبْوَابُ السَّمَاءِ، وَتُغْلَقُ فِيهِ أَبْوَابُ الْجَحِيمِ، وَتُغَلُّ فِيهِ مَرَدَةُ الشَّيَاطِينِ
 
இதில் நோன்பு நோற்பதை அல்லாஹ் கடமையாக்கினான். வானத்தின் கதவுகள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாசல்கள் பூட்டப்படுகின்றன. சைத்தான்களில் இருக்கக்கூடிய அந்த வரம்பு மீறிய சைத்தான்கள் விலங்கிட படுகிறார்கள் என்று கூறிவிட்டு இந்த கடைசி பத்தை பற்றி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விளக்கினார்கள்:
 
لِلَّهِ فِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ، مَنْ حُرِمَ خَيْرَهَا فَقَدْ حُرِمَ
 
இந்த ரமலான் மாதத்தில் அல்லாஹ்விற்கு என்று விசேஷமாக ஒரு இரவு இருக்கிறது. அது ஆயிரம் மாதங்களை விட சிறந்தது. யார் அந்த இரவினுடைய நன்மை கிடைக்கப் பெறாமல் போய் விட்டாரோ (அல்லாஹ் பாதுகாப்பானாக!) அவன் மஹ்ரூம் -அபாக்கியவனாக அல்லாஹ்வுடைய அருளை இழந்தவனாக ஆகிவிட்டான். (1)
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : நசாயி, எண் : 2106.
 
ஆகவேதான், ஆரம்பத்தில் கூறினோம். முதல் இரண்டு பத்துகளில் அமல்களில் கவனம் செலுத்தியவர்கள், நாம் இரண்டு பத்தில் நல்ல அமல் செய்தோம், இனி பெருநாள் வரப்போகிறது, அங்கே உறவுகளை சந்திக்க வேண்டும், அது போன்று சில கடைவீதிக்கு செல்ல வேண்டும் என்றெல்லாம் ஈடுபட்டு இந்த இரவுகளை வீணாக்கி விட வேண்டாம்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வாழ்நாளெல்லாம் இபாதத்தில் கழித்தவர்கள். அதாவது மொத்த வாழ்க்கையையே இபாதத்துக்கும் அடியார்களுக்கு பணிவிடை செய்வதற்குமே அமைத்துக்கொண்டவர்கள் இந்த ரமலானுடைய இறுதிப் பத்து வந்துவிட்டால் அவர்களை குறித்து ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா கூறுகிறார்கள்:
 
«إِذَا دَخَلَ الْعَشْرُ، أَحْيَا اللَّيْلَ، وَأَيْقَظَ أَهْلَهُ، وَجَدَّ وَشَدَّ الْمِئْزَرَ»
 
ரமலானுடைய இறுதிப் பத்து வந்துவிட்டால் அந்தக் கடைசி பத்தின் அனைத்து இரவுகளையும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் விழித்திருந்து வணங்குவார்கள். தன் குடும்பத்தார்களையும் ஏவி விடுவார்கள். தன்னுடைய கச்சயை தன்னுடைய கீழாடையை இறுக்கக் கட்டிக் கொள்வார்கள்.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்லிம், எண் : 1174.
 
அதுமட்டுமா, இந்த லைலத்துல் கத்ரை தேடி மஸ்ஜிதுக்கு இஃத்திகாஃப்க்கு வந்துவிடுவார்கள். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் லைலத்துல் கத்ரை அடைய வேண்டுமென்று அவர்களுக்கு இருந்த பேராசை. அவர்கள் மொத்தமாக தம் குடும்பத்தார்களை விட்டு விலகி ஒதுக்கி அல்லாஹ்வுடைய மஸ்ஜிதிலேயே அடைக்கலமாகி விடுவார்கள்.
 
ஒரு தடவை முதல் பத்தில் இஃதிகாஃப் இருந்தார்கள். பிறகு ரஸூலுல்லாஹ்வை தொடர்ந்து ஸஹாபாக்கள் இருந்தார்கள். பிறகு இரண்டாவது பத்தில் இருந்தார்கள். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள். யார் என்னோடு இத்தனை நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் மீண்டும் இறுதி பத்தில் என்னுடன் இணைந்து இஃதிகாஃப் இருக்கட்டும்.
 
அந்த லைலத்துல் கத்ர் எனக்கு காண்பிக்கப்பட்டது. பிறகு எனக்கு அது மறக்கடிக்கப்பட்டு விட்டது. யார் லைலத்துல் கத்ரை தேடுவார்களோ அவர்கள் இறுதிப் பத்தில் தேடிக் கொள்ளட்டும். (2)
 
அறிவிப்பாளர் : அபூசயீத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1167.
 
என்று அந்த மாதம் முழுவதும் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இஃதிகாஃபில் கழித்து, அடுத்து வரக்கூடிய மாதங்களில் நாம் ரமளானின் கடைசிப் பத்தில் ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் லைலத்துல் கத்ரை தேடி இஃதிகாஃப் இருப்பவர்களாக இருந்தார்கள்.
 
அவர்கள் மட்டுமல்ல ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா சொல்கின்றார்கள். ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய மனைவிமார்களும் இந்த லைலத்துல் கத்ரை தேடி மஸ்ஜிதில் இஃதிகாஃப் இருப்பவர்களாக இருந்தார்கள். ரஸூலுல்லாஹ் உடைய வாழ்க்கையிலும் ரஸூலுல்லாஹ் உடைய மரணத்திற்குப் பிறகும்.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 2026.
 
கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். எந்த அளவு மிக முக்கியமான அந்தப் பகுதியில் இருக்கிறோம் என்று. ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மீண்டும் சொன்னார்கள்.
 
مَنْ قَامَ لَيْلَةَ الْقَدْرِ إِيمَانًا وَاحْتِسَابًا غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
 
யார், இந்த லைலத்துல் கத்ருடைய இரவில் இரவில் நின்று வணங்குவாரோ அவருடைய முந்தைய பாவங்கள் எல்லாம் மன்னிக்கப்பட்டுவிடும். 
 
அறிவிப்பாளர் : அபூஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1901.
 
அவருடைய இரவு வணக்கம் எப்படி இருக்க வேண்டும்.
 
إِيمَانًا وَاحْتِسَابًا -ஈமானில் உறுதி உடையவராக அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொண்டவராக சொர்க்கத்தை ஆசை வைத்தவராக.
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இத்தகைய அழகிய வழிகாட்டுதல்களை நமக்கு கொடுத்து இருக்கிறார்கள். இந்த லைலத்துல் கத்ரை இந்த கடைசி பத்தில் முழுவதுமாக தேட வேண்டும்.
 
ஏனென்றால், ஸஹீஹான ஹதீஸ்களை பார்க்கும் பொழுது சில ஹதீஸ்களில் ஒற்றைப்படைகளில் தேடுங்கள் என்று சொன்னார்கள். 
 
«تَحَرَّوْا لَيْلَةَ القَدْرِ فِي الوِتْرِ، مِنَ العَشْرِ الأَوَاخِرِ مِنْ رَمَضَانَ»
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 2017.
 
ஆரம்பத்திலிருந்து 21,23,25,29 இன்னும் சில ஸஹீஹான ஹதீஸ்களை பார்க்கும்போது இந்த ஒற்றைபடை என்பது பின்னால் இருந்து கணக்கிடப்பட கூடியதாக இருக்கிறது.
 
فِي تَاسِعَةٍ تَبْقَى، فِي سَابِعَةٍ تَبْقَى،
 
அப்படிப் பார்க்கும்போது இரட்டைப்படை இரவுகள் அங்கே வரும். 22,24 அதாவது ஒற்றைப்படையை ஆரம்பத்திலிருந்து கவனித்தால் இருபத்தி ஒன்று இருபத்தி மூன்று என்று வரும்.
 
இன்னும் சில ஸஹீஹான ஹதீஸ்களை பார்க்கும் பொழுது மீதம் இருக்கக்கூடிய ஒன்பதாவது இரவில், மீதம் இருக்கக்கூடிய ஏழாவது இரவில். 
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2021.
 
அப்படிப் பார்க்கும் பொழுது ரமலானுடைய மாதம் முப்பதில் முடியுமேயானால் இரட்டைப்படை இரவுகளுக்கும் லைலத்துல் கத்ருடைய இரவு வருவதற்கு அங்கே வாய்ப்பு இருக்கிறது. 
 
ஆகவேதான் இந்த மொத்த இரவுகளையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எல்லா இரவுகளிலும் வணக்க வழிபாடுகளில் நின்று வணங்குவது, குர்ஆன் ஓதுவது, திக்ரு செய்வது, இஸ்திக்ஃபார் செய்வது என்று யார் இந்த பத்து இரவுகளிலும் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுகின்றார்களோ கண்டிப்பாக இந்த லைலத்துல் கத்ர் உடைய இரவை அடைவதற்கான வாய்ப்பை பெறுவார்கள்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா இடத்தில் நாம் துஆ செய்வோமாக! அல்லாஹு தஆலா அந்த லைலத்துல் கத்ர் உடைய இரவை அடைவதற்குண்டான பாக்கியத்தை நமக்கு தருவானாக! அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய இந்த ஒரு வழிகாட்டலை மிக முக்கியமாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
மற்ற நேரங்களில் இரவுத்தொழுகைகளில் ரஸூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தம் மனைவிமார்களை சிரமப்படுத்த மாட்டார்கள். மனைவிமார்களில் யார் விருப்பப்பட்டாரோ எந்த நேரத்தில் விருப்பப்பட்டாரோ எழுந்து அவர்கள் தொழுவார்கள். 
 
ஆனால், இந்த கடைசி பத்து வந்துவிட்டால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களுடைய மனைவிமார்களையும் கட்டாயமாக வணக்க வழிபாடுகளில் ஈடுபடுத்துவார்கள். அதைத்தான் ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா சொல்கிறார்கள். தங்களுடைய மனைவிமார்களையும் அவர்கள் விழித்திருக்க செய்வார்கள் என்று.
 
தொழுகை இல்லாத பெண்கள் என்ன செய்வது? சகோதரர்களே, சகோதரிகளே! தொழுகை என்ற வணக்கம் தான் அங்கே மன்னிக்கப்பட்டதே தவிர, குர்ஆன் ஓதலாம்; திக்ர் செய்யலாம்; இஸ்திக்ஃபார் செய்யலாம்; அல்லாஹ்வை தஸ்பீஹ் செய்யலாம். இந்த இபாதத்களின் மூலமாகவும் அவர்கள் லைலத்துல் கத்ரை கண்டிப்பாக அல்லாஹ்வின் அருளால் அடைந்து கொள்ளலாம்.
 
எனவேதான், ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்கள் குடும்பத்தார்களில் யார் தூங்கிக் கொண்டிருந்தார்களோ தொழுகை இல்லை என்ற காரணத்தினால் அவர்களையும் எழுப்பிவிட்டு நீங்கள் வேறு வேறு இபாதத்களில் ஈடுபடுங்கள் என்று அவர்களை ஈடுபடுத்தினார்கள்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நமக்கும் நமது குடும்பத்தார்களுக்கும் அல்லாஹ்வை வணங்க கூடிய இந்த ரமலானை சரியான முறையில் கழிக்கக்கூடிய லைலத்துல் கத்ரை அடைய கூடிய நற்பாக்கியத்தை தந்தருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم 
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
أَخْبَرَنَا بِشْرُ بْنُ هِلَالٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَاكُمْ رَمَضَانُ شَهْرٌ مُبَارَكٌ فَرَضَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْكُمْ صِيَامَهُ، تُفْتَحُ فِيهِ أَبْوَابُ السَّمَاءِ، وَتُغْلَقُ فِيهِ أَبْوَابُ الْجَحِيمِ، وَتُغَلُّ فِيهِ مَرَدَةُ الشَّيَاطِينِ، لِلَّهِ فِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ، مَنْ حُرِمَ خَيْرَهَا فَقَدْ حُرِمَ» (سنن النسائي -2106)
 
[حكم الألباني] صحيح
 
குறிப்பு 2)
 
وحَدَّثَنِي مُحَمَّدُ بْنُ عَبْدِ الْأَعْلَى، حَدَّثَنَا الْمُعْتَمِرُ، حَدَّثَنَا عُمَارَةُ بْنُ غَزِيَّةَ الْأَنْصَارِيُّ، قَالَ: سَمِعْتُ مُحَمَّدَ بْنَ إِبْرَاهِيمَ، يُحَدِّثُ عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللهُ عَنْهُ، قَالَ: إِنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ اعْتَكَفَ الْعَشْرَ الْأَوَّلَ مِنْ رَمَضَانَ، ثُمَّ اعْتَكَفَ الْعَشْرَ الْأَوْسَطَ، فِي قُبَّةٍ تُرْكِيَّةٍ عَلَى سُدَّتِهَا حَصِيرٌ، قَالَ: فَأَخَذَ الْحَصِيرَ بِيَدِهِ فَنَحَّاهَا فِي نَاحِيَةِ الْقُبَّةِ، ثُمَّ أَطْلَعَ رَأْسَهُ فَكَلَّمَ النَّاسَ، فَدَنَوْا مِنْهُ، فَقَالَ: " إِنِّي اعْتَكَفْتُ الْعَشْرَ الْأَوَّلَ، أَلْتَمِسُ هَذِهِ اللَّيْلَةَ، ثُمَّ اعْتَكَفْتُ الْعَشْرَ الْأَوْسَطَ، ثُمَّ أُتِيتُ، فَقِيلَ لِي: إِنَّهَا فِي الْعَشْرِ الْأَوَاخِرِ، فَمَنْ أَحَبَّ مِنْكُمْ أَنْ يَعْتَكِفَ فَلْيَعْتَكِفْ " فَاعْتَكَفَ النَّاسُ مَعَهُ، قَالَ: «وَإِنِّي أُرِيتُهَا لَيْلَةَ وِتْرٍ، وَإِنِّي أَسْجُدُ صَبِيحَتَهَا فِي طِينٍ وَمَاءٍ» فَأَصْبَحَ مِنْ لَيْلَةِ إِحْدَى وَعِشْرِينَ، وَقَدْ قَامَ إِلَى الصُّبْحِ، فَمَطَرَتِ السَّمَاءُ، فَوَكَفَ الْمَسْجِدُ، فَأَبْصَرْتُ الطِّينَ وَالْمَاءَ، فَخَرَجَ حِينَ فَرَغَ مِنْ صَلَاةِ الصُّبْحِ، وَجَبِينُهُ وَرَوْثَةُ أَنْفِهِ فِيهِمَا الطِّينُ وَالْمَاءُ، وَإِذَا هِيَ لَيْلَةُ إِحْدَى وَعِشْرِينَ مِنَ الْعَشْرِ الْأَوَاخِرِ (صحيح مسلم  -1167)
 
DARUL HUDA
 
211(102) FIRST FLOOR LINGHI STREET MANNADY CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com 044 2524 7866 9840174121 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/