HOME      Khutba      சோதனையில் முஸ்லிமின் குணம்! அமர்வு 2 | Tamil Bayan - 717   
 

சோதனையில் முஸ்லிமின் குணம்! அமர்வு 2 | Tamil Bayan - 717

           

சோதனையில் முஸ்லிமின் குணம்! அமர்வு 2 | Tamil Bayan - 717


சோதனையில் முஸ்லிமின் குணம்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : சோதனையில் முஸ்லிமின் குணம் (அமர்வு - 2)
 
வரிசை : 717
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 03-06-2022 | 04-11-1443
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றிப் புகழ்ந்தவனாக, அல்லாஹ்வின் தூதர் மீதும், அந்தத் தூதரின் பாசத்திற்குரிய குடும்பத்தார் மற்றும் கண்ணியத்துக்குரிய தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக!
 
உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் அச்சத்தை அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். 
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நம்முடைய பாவங்களை மன்னித்தருள்வானாக. அவனை ஏற்றுக்கொண்ட புரிந்து கொண்ட அவனுடைய நல்லடியார்களில் என்னையும் உங்களையும் நம்முடைய தாய் தந்தையரையும் ஆக்கி அருள்வானாக! ஆமீன்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா தன்னுடைய அடியார்களோடு அவன் எப்படி நடந்து கொள்ள விரும்புகிறானோ அப்படி நடந்து கொள்கிறான். தன்னுடைய அடியார்களுக்கு என்ன செய்ய வேண்டும் என்று அவன் நாடுகிறானோ, அதை அவன் செய்கிறான். 
 
அல்லாஹு தஆலா நமக்கு நன்மையைத்தான் நாடுவான். எனக்கு அல்லாஹு தஆலா நல்லதைத்தான் தேர்ந்தெடுப்பான். அல்லாஹ் எனக்கு செய்தது நல்லது தான் என்று ஒவ்வொரு அடியானும் அல்லாஹ்வின் மீது அழகிய எண்ணத்தை அழகிய வெளிப்பாட்டை எடுக்க வேண்டும். 
 
அல்லாஹ்விற்கு நம்மீது அனுமதி இருக்கிறது; நம் மீது அதிகாரம் எடுப்படுவதற்கு கோபப்படுவதற்கு. அல்லாஹ்வுடைய கோபத்திலிருந்தும் அதிருப்தியில் இருந்தும் நாம் பாதுகாப்புத் தேடுவோமாக!
 
ஆனால், நமக்கு எந்த தகுதியும் இல்லை, அதிகாரமும் இல்லை; அல்லாஹ்வின் மீது கோபப்படுவதற்கு. அல்லாஹ்வுடைய செயல்களில் ஒன்றில், அல்லாஹ்வுடைய விதிகளில் ஒன்றில் அல்லாஹ்வின் மீது அதிருப்தி கொள்வதற்கு நமக்கு தகுதியும் இல்லை. உரிமையும் இல்லை.
 
அல்லாஹ்வையும் அவனுடைய செயல்களையும் பொருந்திக் கொள்வது தான். அடிமைகளாக அடியார்களாக இருக்கக்கூடிய நம்முடைய அடிமைத்தனத்திற்கு அழகு ஆகும்.
 
யார் அந்த ரப்பை ஏற்றுக் கொண்டார்களோ நம்பிக்கை கொண்டவர்களோ அவர்களுக்குத் தான் அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா இந்த நேர்வழியை தருகிறான். நல்ல பண்பை நல்ல நற்குணத்தை தருகிறான்.
 
யார், அந்த உண்மையான ஏக இறைவனை நம்பிக்கை கொள்ளவில்லையோ, அவனை வணங்க வில்லையோ, அவர்கள் எப்படி என்றால், அவர்கள் இறைவன் மீது அதிருப்தி கொள்வார்கள். இறைவனை ஏசுவார்கள். இறைவன் மீது அதிகாரம் செலுத்துவார்கள். 
 
அது ஒன்றே போதுமானது; அவர்களுடைய வழிகேட்டிற்க்கும், அவர்கள் மீது அல்லாஹ்வுடைய சாபங்கள் அல்லாஹ் உடைய துற்பாக்கியங்கள் இறங்குவதற்கு. அல்லாஹு தஆலா அந்த நிலையிலிருந்து நம்மை பாதுகாப்பானாக!
 
இந்த சோதனைகள் உலகத்தில் தொடர்ந்து வந்து கொண்டுதான் இருக்கும். அல்லாஹ் கூறுகிறான்:
 
وَتِلْكَ الْأَيَّامُ نُدَاوِلُهَا بَيْنَ النَّاسِ
 
அந்த சோதனையின் நாட்களை மக்களுக்கு மத்தியில் நாம் சுழற்றிக் கொண்டே இருப்போம். (அல்குர்ஆன் 3 : 140)
 
சோதிக்கப்படாமல் யாரும் இருக்க மாட்டார்கள். சிலருக்கு குடும்பத்தில் சோதனை இருக்கலாம். சிலருக்கு வாழ்வாதாரத்தில் சோதனை இருக்கலாம். சிலருக்கு அவருடைய உடல் ஆரோக்கியத்தில் சோதனை இருக்கலாம். சிலருக்கு ஆட்சியாளர்களின் மூலமாக சோதனை இருக்கலாம். இப்படி சோதனைகள் பல வழிகளில் வந்துகொண்டேதான் இருக்கும்.
 
அல்லாஹு தஆலா கூறுகிறான்:
 
كُلُّ نَفْسٍ ذَائِقَةُ الْمَوْتِ وَنَبْلُوكُمْ بِالشَّرِّ وَالْخَيْرِ فِتْنَةً وَإِلَيْنَا تُرْجَعُونَ
 
ஒவ்வோர் ஆத்மாவும் மரணத்தைச் சுவைத்தே தீரும். நன்மை, தீமை செய்யக்கூடிய நிலைமையில் உங்களை (வைத்து) நாம் சோதிப்போம். பின்னர் நீங்கள் நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள். (அல்குர்ஆன் 21 : 35) 
 
வசனத்தின் கருத்து : செல்வத்தைக் கொடுத்தும் சோதிப்போம். வறுமையை கொடுத்தும் சோதிப்போம். உங்களை நல்ல நிலையில் வைத்தும் சோதிப்போம். உங்களை கஷ்ட நிலையில் வைத்தும் சோதிப்போம்.
 
நீங்கள் விரும்பியதை கொடுத்தும் சோதிப்போம். நீங்கள் விரும்பாததை உங்களுக்கு கொடுத்தும் சோதிப்போம். நீங்கள் விரும்பியதை உங்களிடமிருந்து பிடுங்கியும் சோதிப்போம். நீங்கள் விரும்பாததை உங்களிடம் கொடுத்தும் சோதிப்போம்.
 
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
 
وَجَعَلْنَا بَعْضَكُمْ لِبَعْضٍ فِتْنَةً أَتَصْبِرُونَ وَكَانَ رَبُّكَ بَصِيرًا
 
எனினும், உங்களில் சிலரை சிலருக்குச் சோதனையாக ஆக்கி வைத்தோம். ஆகவே, (நம்பிக்கையாளர்களே! இந்நிராகரிப்பவர்கள் உங்களை துன்புறுத்துவதை) நீங்களும் சகித்துக் கொண்டிருங்கள். (நபியே!) உமது இறைவன் (அனைத்தையும்) உற்று நோக்கியவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 25 : 20)
 
சில நேரங்களில் மனைவிக்கு கணவன் பிரச்சனையாக ஆகிவிடுவார். கணவனுக்கு மனைவி பிரச்சனையாக அமைந்து விடுவார். பிள்ளைகளுக்கு பெற்றோர் பிரச்சனையாக, பெற்றோர்களுக்கு பிள்ளைகள் பிரச்சனையாக, ஒரு நண்பனுக்கு இன்னொரு நண்பன் பிரச்சினையாக, ஆட்சியாளர்களுக்கு மக்கள் பிரச்சனையாக, மக்களுக்கு ஆட்சியாளர்கள் பிரச்சினையாக.
 
என்ன அல்லாஹ் விரும்புகிறான்? நீங்கள் பொறுப்பீர்களா? நீங்கள் பொறுமையாக இருப்பீர்களா? நீங்கள் சகித்துக்கொண்டு, ஈமானோடு, மன உறுதியோடு, இஸ்லாமிலிருந்து, அந்த குழப்பம் கலந்த சோதனையிலிருந்து எப்படி நீங்கள் விடுதலையை தேடுவீர்கள்? அல்லாஹு தஆலா ஏற்படுத்திய அந்த மார்க்க முறையின்படியா? அல்லது உங்களுடைய மன இச்சைக்கு ஏற்பவா?
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنَّ مِنْ أَزْوَاجِكُمْ وَأَوْلَادِكُمْ عَدُوًّا لَكُمْ فَاحْذَرُوهُمْ وَإِنْ تَعْفُوا وَتَصْفَحُوا وَتَغْفِرُوا فَإِنَّ اللَّهَ غَفُورٌ رَحِيمٌ (14) إِنَّمَا أَمْوَالُكُمْ وَأَوْلَادُكُمْ فِتْنَةٌ وَاللَّهُ عِنْدَهُ أَجْرٌ عَظِيمٌ
 
நம்பிக்கையாளர்களே! உங்கள் மனைவிகளிலும், உங்கள் சந்ததிகளிலும் நிச்சயமாக உங்களுக்கு எதிரிகள் இருக்கின்றனர். ஆகவே, அவர்களைப் பற்றி நீங்கள் எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். அவர்(களின் குற்றங்)களை நீங்கள் சகித்துப் புறக்கணித்து மன்னித்து வந்தால், நிச்சயமாக அல்லாஹ் மிக மன்னிப்பவனும், மகா கருணையுடையவனும் ஆவான். (ஆகவே, உங்கள் குற்றங்களையும் அவ்வாறே மன்னித்துவிடுவான்.)
 
உங்கள் பொருள்களும், உங்கள் சந்ததிகளும் (உங்களுக்கு) ஒரு சோதனையாகவே உள்ளன. (இச்சோதனையில், நீங்கள் தேர்ச்சி பெற்றால் உங்களுக்கு) அல்லாஹ்விடத்தில் மகத்தான கூலி இருக்கிறது. (அல்குர்ஆன் 64 : 14,15)
 
இப்படி இந்த சோதனை என்பது, பல வடிவங்களில் உள்ளது. பல நிறங்களை உடையது. காலையில் ஒரு சோதனை இருக்கலாம். மாலையில் ஒரு சோதனை இருக்கலாம்.
 
ஆனால், இங்கே வெற்றிக்குரிய பாதை என்ன என்பதை பார்க்க வேண்டும். முந்திய அமர்வில் பார்த்தோம்.
 
ஒரு அடியான் சோதனையில் இருக்கும்போது பொறுமையை காத்து இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் என்று ஓதி, அல்லாஹ்வின் பக்கம் திரும்புவது. 
 
இந்த சோதனையிலிருந்து எனக்கு அழகிய விடுதலையை கொடு, எனக்கு இந்த சோதனைக்காக நன்மையை கொடு என்று அல்லாஹ்விடத்தில் கேட்க வேண்டும்.
 
தொழுகையின் மூலமாக நன்மையை எதிர்பார்ப்பது போன்று, நோன்பின் மூலமாக ஸக்காத் ஹஜ் வணக்க வழிபாட்டின் மூலமாக நன்மையை எதிர்பார்ப்பது போன்று, நமக்கு ஒரு இன்னல் துன்பம் சிரமம் வந்துவிட்டால், யா அல்லாஹ்! இந்த சோதனையை, இந்த இன்னலை, இந்த துன்பத்தை, இந்த வலியை உனக்காக நான் பொறுத்துக் கொண்டேன். எனக்கு இதில் நன்மையை கொடு.
 
அழகான ஒரு துஆவை ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு கற்றுக் கொடுத்திருக்கிறார்கள்.
 
அல்லாஹ்! உன் புறத்திலிருந்து எனக்கு ஏற்பட்ட சோதனையை பொறுத்துக் கொண்டேன். நான் உன்னை குறை சொல்லவில்லை. நான் இழந்ததை விட சிறந்த பரிகாரத்தை சிறந்த பிரதிபலனை எனக்கு நீ ஏற்படுத்திக் கொடு. (1)
 
அறிவிப்பாளர் : உம்மு சலமா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்லிம், எண் : 918.
 
சோதனையைக் கொடுத்த அல்லாஹ் தான், அந்த சோதனையை அழகிய முறையில் நீக்குவதற்கு ஆற்றல் பெற்றவன். மனிதன் சில நேரங்களில் சோதனையை நீக்கிக் கொள்வதில் அவசரப் படுகிறான். வருத்தப்பட்டு தவறான முடிவு எடுத்து விடுகிறான். 
 
அவருடைய பார்வையில் வேண்டுமானால் சோதனை நீங்கியதாக இருக்கலாம். ஆனால், அவன் பொருத்திருப்பானேயானால், கொஞ்சநாள் சகித்துக் கொண்டு அல்லாஹ்வின் புறத்திலிருந்து அந்தத் தீர்வை எதிர்பார்த்து இருப்பானேயானால், அல்லாஹ் அந்த பிரச்சினையைத் தீர்த்து இருப்பதோ, அல்லாஹ் அந்த பிரச்சினையில் இருந்து அவனை பாதுகாப்பதோ, மிக அழகிய முறையில் இருக்கும். இழப்புகள் குறைவாகவும், நன்மைகள் அதிகமாகவும் இருக்கும்.
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
وَمَنْ يَتَّقِ اللَّهَ يَجْعَلْ لَهُ مَخْرَجًا (2) وَيَرْزُقْهُ مِنْ حَيْثُ لَا يَحْتَسِبُ وَمَنْ يَتَوَكَّلْ عَلَى اللَّهِ فَهُوَ حَسْبُهُ إِنَّ اللَّهَ بَالِغُ أَمْرِهِ قَدْ جَعَلَ اللَّهُ لِكُلِّ شَيْءٍ قَدْرًا
 
எவர்கள் அல்லாஹ்வுக்குப் பயந்து நடக்கிறார்களோ, அவர்களுக்கு (இத்தகைய விவகாரங்களிலிருந்து) ஒரு (நல்ல தீர்வுபெற) வழியை ஏற்படுத்தித் தருவான்.
 
மேலும், அவர்கள் எதிர்பார்க்காத வகையில் அவர்களுக்கு வேண்டிய வசதிகளை அளிப்பான். எவர்கள் அல்லாஹ்வை முற்றிலும் நம்புகிறார்களோ, அவர்களுக்கு அவனே (முற்றிலும்) போதுமானவன். நிச்சயமாக அல்லாஹ் தன் காரியத்தைச் செய்தே முடிப்பான். ஆயினும், அல்லாஹ் ஒவ்வொன்றிற்கும் (ஒரு காலத்தையும்) அளவையும் ஏற்படுத்திவிட்டான். (அதன்படியே நடைபெறும்.) (அல்குர்ஆன் 65 : 2,3)
 
இந்த இடத்தில்தான் ஈமான் இஸ்லாம் இதை கற்றுக் கொடுக்கிறது. எந்த ஒரு சோதனை ஏற்பட்டாலும் சரி, எந்தப் பிரச்சினை ஏற்பட்டாலும் சரி, உடனே நாம் நம்முடைய மனதுக்கு எப்படி ஆறுதல் கொடுக்க வேண்டும்?
 
என்னுடைய இந்த பிரச்சனை இந்த அளவோடு நின்று விட்டதே, அல்லாஹ் நாடியிருந்தால் என்னுடைய கஷ்டத்தை பிரச்சனையை சிரமத்தை இதை விட பெரியதாக ஆக்கியிருக்கலாம். என்னை விட பெரிய அளவில் சோதிக்கப்பட்டவர்கள் பலர் இருக்கிறார்களே! என்று தனக்கு நிகழ்ந்த அந்த பிரச்சனையை தனக்கு ஏற்பட்ட அந்த இழப்பை சிறியதாக பார்க்க வேண்டும். 
 
அல்ஹம்து லில்லாஹ்! இத்தோடு இந்த பிரச்சனை நின்று விட்டதே. அல்லாஹ் எனக்கு இதைத்தான் கொடுத்தானே என்று அவன் அமைதி காக்க வேண்டும். அதை ஏற்றுக்கொள்ள வேண்டும். 
 
தனக்கு ஏற்பட்ட சோதனையை முடிந்த அளவு மறைக்க வேண்டும். முடிந்த அளவு அந்த பிரச்சினையை பிறர் இடத்திலிருந்து மறைக்க வேண்டும். அல்லாஹ்விடத்தில் முறையிடலாம். அடியார்களிடத்தில் சொல்லித் திரிந்து கொண்டு, அல்லாஹ்வை குறை பேசுவது போல, அவரது இடத்திலிருந்து பரிதாபத்தை எதிர் பார்ப்பதுபோல அடியான் அலையக்கூடாது.
 
அறிஞர்கள் சொல்கின்றார்கள்: அல்லாஹ்வின் நல்லடியார்கள் யார் என்றால், ஈமானுடைய உயர்ந்த தரம் என்ன என்றால், தனக்கு விருப்பமான செல்வமோ, சுகமோ, அந்த வசதி வரும்பொழுது, முகமலர்ச்சியோடு அதை வரவேற்பதை விட, சோதனைகளை முகமலர்ச்சியோடு வரவேற்பது. கஷ்டங்களை சிரமங்களை முகமலர்ச்சியோடு வரவேற்பது. அது அல்லாஹ்விற்கு இருக்கக்கூடிய நல்லடியார்கள் உடைய விசேஷமான பண்பாகும்.
 
யாருடைய உள்ளம் உலக மோகத்திலிருந்து, உலக ஆசையிலிருந்து விடுபட்டு, சுத்தமாக இருக்கிறதோ, அவர்களுக்கு தான் இந்த பாக்கியம் கிடைக்கும்.
 
அல்லாஹு தஆலா காஃபிர்களை பற்றி சொல்கிறான்:
 
فَأَمَّا الْإِنْسَانُ إِذَا مَا ابْتَلَاهُ رَبُّهُ فَأَكْرَمَهُ وَنَعَّمَهُ فَيَقُولُ رَبِّي أَكْرَمَنِ (15) وَأَمَّا إِذَا مَا ابْتَلَاهُ فَقَدَرَ عَلَيْهِ رِزْقَهُ فَيَقُولُ رَبِّي أَهَانَنِ
 
ஆகவே, இறைவன் மனிதனைச் சோதித்து அவனுக்கு அருள்புரிந்து அவனை மேன்மையாக்கினால், என் இறைவன் என்னைக் கண்ணியப்படுத்தினான் என்று (பெருமையாகக்) கூறுகிறான். ஆயினும், (இறைவன்) அவனைச் சோதித்து அவனுடைய பொருளை அவனுக்குக் குறைத்துவிட்டால், எனது இறைவன் என்னை இழிவுபடுத்தி விட்டான் என்று (குறை) கூறுகிறான். (அல்குர்ஆன் 89 : 15,16) 
 
இது, அல்லாஹ்வை மறுமையை நம்பாத இறைமறுப்பாளர்கள் உடைய நிலை. ஒரு முஃமின் எப்படி இருக்க வேண்டும்?
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
قُلْ لَنْ يُصِيبَنَا إِلَّا مَا كَتَبَ اللَّهُ لَنَا هُوَ مَوْلَانَا وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ
 
 (ஆகவே, நபியே! அவர்களை நோக்கி) ‘‘அல்லாஹ் எங்களுக்கு விதித்ததைத் தவிர வேறொன்றும் நிச்சயமாக எங்களை அணுகாது. அவன் தான் எங்கள் இறைவன்'' என்று நீர் கூறுவீராக. நம்பிக்கையாளர்கள் அனைவரும் அல்லாஹ்விடமே பொறுப்பை ஒப்படைக்கவும். (அல்குர்ஆன் 9 : 51)
 
எனவே, எங்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து எது வந்ததோ, அல்ஹம்து லில்லாஹ்! அதை நாங்கள் பொருந்திக் கொண்டோம் என்று சொல்லக் கூடியவர்கள் இந்த முஃமினான நல்லடியார்கள்.
 
அதுபோன்றுதான், இந்த சோதனைகளில் ஒன்று, இறை நம்பிக்கையாளர் இந்த விதியின் மீது அவருக்கு இருக்கக்கூடிய நம்பிக்கை மிக பலமாக இருக்க வேண்டும். எந்த நிலையிலும் நிலைகுலையாமல், தடுமாறி விடாமல், பொறுமையை கடைப்பிடிக்க வேண்டுமே தவிர, பதற்றத்தையோ, அல்லாஹ்வை ஏசுவதையோ அவர் செய்து விடக்கூடாது.
 
சோதனைகள் அதிகரிக்க, அதிகரிக்க அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்குதல் அதிகரிக்க வேண்டும். அல்லாஹ்விடத்தில் துஆ செய்வது அதிகரிக்க வேண்டும். அல்லாஹ்விடத்தில் மன்றாடுவது அதிகரிக்க வேண்டும். 
 
எந்த இடத்திலும் சஞ்சலபடுவதோ கோபிப்பதோ அல்லாஹ்வை ஏசுவதோ அவரிடமிருந்து நிகழ்ந்து விடக்கூடாது. 
 
அல்லாஹு தஆலா சொல்லக்கூடிய அழகிய அறிவுரையைப் பாருங்கள்.
 
مَا أَصَابَ مِنْ مُصِيبَةٍ فِي الْأَرْضِ وَلَا فِي أَنْفُسِكُمْ إِلَّا فِي كِتَابٍ مِنْ قَبْلِ أَنْ نَبْرَأَهَا إِنَّ ذَلِكَ عَلَى اللَّهِ يَسِيرٌ (22) لِكَيْلَا تَأْسَوْا عَلَى مَا فَاتَكُمْ وَلَا تَفْرَحُوا بِمَا آتَاكُمْ وَاللَّهُ لَا يُحِبُّ كُلَّ مُخْتَالٍ فَخُورٍ
 
 
(பொதுவாக) பூமியிலோ அல்லது (குறிப்பாக) உங்களுக்கோ ஏற்படக்கூடிய எந்தச் சிரமமும், (நஷ்டமும்) அது ஏற்படுவதற்கு முன்னதாகவே (லவ்ஹுல் மஹ்ஃபூள் என்னும்) பதிவுப் புத்தகத்தில் பதிவு செய்யப்படாமல் இல்லை. நிச்சயமாக இது அல்லாஹ்வுக்கு மிக எளிதானதே! உங்களை விட்டும் தவறிப்போனதைப் பற்றி நீங்கள் கவலை கொள்ளாதிருக்கவும் (அல்லாஹ்) உங்களுக்குக் கொடுத்ததைப் பற்றி நீங்கள் கர்வம் கொள்ளாதிருக்கவும். (இதை உங்களுக்கு அறிவிக்கிறான்). அல்லாஹ், கர்வம் கொள்பவர்களையும் பெருமையடிப்பவர்களையும் நேசிப்பதில்லை. (அல்குர்ஆன் 57 : 22, 23)
 
அடுத்து, இந்த சோதனையில் அழகிய முறையில் பொறுமையாக இருந்து, அல்லாஹ்வின் மீது நல்லெண்ணம் வைப்பவர்களை அல்லாஹு தஆலா நேசிக்கிறான். 
 
ஒரு மனிதர் அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இடத்தில் வந்தார். அல்லாஹ்வுடைய தூதரே! எனக்கு ஒரு உபதேசம் செய்யுங்கள். அந்த உபதேசம் சுருக்கமாக இருக்க வேண்டும். நீண்ட பெரிய உபதேசமாக இருக்க வேண்டாம்.
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவருடைய நிலைமையைப் பார்த்து புரிந்து அவருக்கு சொன்னார்கள். 
 
«لَا تَتَّهِمِ اللَّهَ فِي شَيْءٍ قَضَى لَكَ بِهِ»
 
அல்லாஹ் உனக்கு எதை விதித்தானோ, அல்லாஹ் உனக்கு எதை முடிவு செய்தானோ அது விஷயத்தில் அல்லாஹ்வை நீ சந்தேகப் படாதே. அல்லாஹ்வின் மீது பழி போடாதே. (2)
 
அறிவிப்பாளர் : உபாதா இப்னு சாமித் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 22712.
 
எனக்கு இதுல என்ன நன்மை இருக்கிறது? இதை ஏன் அல்லாஹ் எனக்கு கொடுத்தான்? நான் கேட்டது ஒன்னு, அல்லாஹ் கொடுத்தது ஒன்னு, இதனால் தனக்கு என்ன ஆகப்போகிறது? நான் என்ன அவனுக்கு குறை செய்தேன்? அவன் எனக்கு இதைக் கொடுத்து சோதிக்கிறானே! என்றெல்லாம் அல்லாஹ்வைத் திட்டிவிடாதே. அல்லாஹ்வின் மீது சந்தேகப்பட்டு விடாதே. அல்லாஹ்வின் மீது பழி போட்டு விடாதே.
 
அறிஞர்கள் சொல்கிறார்கள்: துஆ உடைய வசனங்களின் கருத்து இது. அல்லாஹு தஆலா நீதமானவன். யாருக்கும் அநியாயம் செய்ய மாட்டானே. அவன் அனைத்தையும் அறிந்தவன் ஆயிற்றே. அவனுக்கு மறதி இல்லை. அவனிடத்தில் எந்த விதமான தவறும் ஏற்பட்டுவிடாது. தவறுகள் உடையவன் மனிதன்.
 
அல்லாஹ் மகா ஞானவான். மிக்க ஞானம் உடையவன். அவனுடைய செயல்கள் எல்லாம் ஞானத்தின் அடிப்படையில் இருக்கக் கூடியவை. அல்லாஹ் எதை செய்தாலும் ஒரு ஞானத்தின், ஒரு அழகிய திட்டத்தின் அடிப்படையில் தான் செய்வான். அவன் கொடுத்ததும் அவனுக்குரியது. அவன் நம்மிடமிருந்து எதை எடுத்தானோ அதுவும் அவனுக்குரியது.
 
அவன் எதைச் செய்கிறானோ, அதை அவனிடத்தில் யாரும் கேள்வி கேட்க முடியாது. மனிதர்கள்தான் அவர்களுடைய செயல்களுக்கு விசாரிக்கப்படுவார்கள். அவன் எதை நாடுகிறானோ அதை செய்து முடிப்பான். தான் நாடியதை செய்வதற்கு ஆற்றல் பெற்றவன். ஆட்சியும் அதிகாரமும் அவனுக்கே உரியது.
 
இப்படி இருக்கும் பொழுது, சோதனையில் இருக்கும் பொழுது நாம் என்ன செய்ய வேண்டும்? நம்முடைய ரப்பை திருப்திப்படுத்தக் கூடிய அந்த பேச்சுகளையும், அந்த செயல்களை மட்டும் தான் நாம் பேசவேண்டும்; செய்ய வேண்டும். 
 
எந்தப் பேச்சினால், எந்த செயல்களினால் அல்லாஹ்விடத்தில் நமக்கு நற்கூலி கிடைக்குமோ, நம்முடைய கண்ணியம் உயருமோ அதைத்தான் நாம் பேச வேண்டுமே, சொல்ல வேண்டுமே தவிர, அல்லாஹ்வுடைய பார்வையில் எந்த பேச்சு நம்மை தரம் தாழ்த்தி விடுமோ, மட்டம் தட்டி விடுமோ, ஈமானுடைய அந்த வளையத்தில் இருந்து, (அல்லாஹ் நம்மைப் பாதுகாக்க வேண்டும்) குஃப்ரின் பக்கம் வெளியேற்றிவிடுமோ, அத்தகைய வார்த்தைகளை சொல்வதிலிருந்து, பேசுவதிலிருந்து நாம் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
 
அதுபோன்று, குறிப்பாக சோதனைகளின் நேரங்களில் நாம் நமக்கு எதிராகவே துஆ செய்து விடக்கூடாது.
 
ரஸூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், அபூ ஸலமா ரளியல்லாஹு அன்ஹு அவர்கள் மவுத் ஆகும்பொழுது, அவர்கள் மீது அவ்வளவு பாசம் வைத்திருந்த உம்மு ஸலமா ரளியல்லாஹு அன்ஹா விற்கு சொன்னார்கள்:
 
«إِذَا حَضَرْتُمُ الْمَيِّتَ فَقُولُوا خَيْرًا، فَإِنَّ الْمَلَائِكَةَ يُؤَمِّنُونَ عَلَى مَا تَقُولُونَ»
 
நீங்கள் உங்களுக்கு எதிராக துஆ கேட்டு விடாதீர்கள். உங்களுக்கு துஆ கேட்பதாக இருந்தால், உங்களுக்கு நன்மையை வேண்டி துஆ கேளுங்கள்; நீங்கள் சொல்லக்கூடிய துஆக்களுக்கு மலக்குகள் ஆமின் சொல்கிறார்கள். (3)
 
அறிவிப்பாளர் : உம்மு ஸலமா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : அபூதாவூத், எண் : 3115.
 
பல நேரங்களில் நாம் பார்க்கிறோம்; நமக்கு வந்த சோதனை, அந்த சோதனையின் சிறிய அளவிலேயே இருந்து, அதோடு முடியக்கூடிய சோதனையை, இந்த மனிதன் செய்யக்கூடிய அந்த கெட்ட துஆவின் மூலமாக, தனக்கு எதிராகவே கேட்கக்கூடிய அந்த துஆக்களின் மூலமாக, இவனே அந்த சோதனையை பெரிதாக்கிக் கொள்கிறான். இவனே மேலும் மேலும் அந்த குழப்பத்தில் தன்னைத் தள்ளிக் கொள்கிறான். அல்லாஹ் பாதுகாப்பானாக!
 
இந்த உலகத்தின் சோதனை என்பது, மிக அற்பமானது; மிகக் குறைவானது. காலத்தை நினைத்துப் பார்க்க வேண்டும். எவ்வளவு காலம் இந்த உலகத்தில் இந்த சோதனையில் சிக்க போகிறோம்? அப்படி இதற்கு பின்னர் என்ன இருக்கிறது?
 
நிச்சயமாக மறுமையின் வாழ்க்கையே நிரந்தரமானது. இந்த சோதனையில் சிறிது நாம் பொறுமை காத்தால், அல்லாஹு தஆலா நிரந்தரமான மறுமை வாழ்க்கையில், உயர்ந்த அந்த சொர்க்க வாழ்க்கையில், நம்மை மகிழ்ச்சியாக சந்தோஷமாக வைத்திருப்பான் என்று அடியான் நினைத்துப் பார்க்க வேண்டும்.
 
இந்த உலகத்தில் சோதனை எவ்வளவு தான் பெரிதாக தெரிந்தாலும் சரி, மவுத்தோடு முடிந்துவிடும்.
 
அய்யூப் அலைஹிஸ்ஸலாம் 18 ஆண்டுகாலமாக கொடிய நோய்வாய்ப்பட்டு அவதிப்பட்டதை கூட, அவர்கள் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. அல்லாஹ் இடத்தில் அதை ஒரு சாதாரணமாக எடுத்துக்கொண்டார்கள். 
 
அல்லாஹ்வின் மீது எந்த குறையும் சொல்லாமல், எப்பொழுது இறுதியாக திக்ர் செய்ய முடியாத நிலைக்கு ஆளானார்களோ, அப்பொழுது அல்லாஹ்விடத்தில் கேட்டார்கள். அதுவும் எவ்வளவு அழகான துஆ செய்கிறார்கள் பாருங்கள்.
 
இன்று, நாம் நன்மைகளை நம் பக்கம் சேர்த்துக் கொள்வோம். கெட்டதையும் தீயதையும் அல்லாஹ்வின் பக்கம் சேர்ப்போம். 
 
யா அல்லாஹ்! என்னை இப்படி தள்ளி விட்டாயே. என்னை சிக்களில் இப்படி சிக்க வைத்து விட்டாயே. எனக்கு கஷ்டத்தைக் கொடுத்து விட்டாயே. எனக்கு காய்ச்சலை கொடுத்து விட்டாயே. 
 
நபிமார்களின் அந்த பிரார்த்தனைகளை குர்ஆனிலிருந்து படித்துப் பாருங்கள். ஹதீஸிலிருந்து படித்துப்பாருங்கள்.
 
இப்ராஹீம் அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள்:
 
وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ
 
நான் நோயுற்றால் அவன் என்னை குணப்படுத்துவான். (அல்குர்ஆன் 26 : 80)
 
நோய் என்று வரும்பொழுது அதை தன்பக்கம் சேர்க்கிறார்கள். அதுபோன்று தான் அய்யூப் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விடத்தில் சொல்கின்றார்கள்:
 
وَأَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الضُّرُّ وَأَنْتَ أَرْحَمُ الرَّاحِمِينَ (83) فَاسْتَجَبْنَا لَهُ فَكَشَفْنَا مَا بِهِ مِنْ ضُرٍّ وَآتَيْنَاهُ أَهْلَهُ وَمِثْلَهُمْ مَعَهُمْ رَحْمَةً مِنْ عِنْدِنَا وَذِكْرَى لِلْعَابِدِينَ
 
ஐயூபையும் (நாம் நம் தூதராக அனுப்பிவைத்தோம்). அவர் தன் இறைவனை நோக்கி ‘‘நிச்சயமாக நோய் என்னைப் பிடித்துக் கொண்டது. (அதை நீ நீக்கி விடு.) நீயோ கருணையாளர்களிலெல்லாம் மகா கருணையாளன்'' என்று பிரார்த்தனை செய்தார்.
 
ஆகவே, நாம் அவருடைய பிரார்த்தனையை அங்கீகரித்து, அவரைப் பீடித்திருந்த நோயையும் நீக்கி, அவருடைய குடும்பத்தையும் நாம் அவருக்கு அளித்து, நம் அருளால் மேலும் அதைப் போன்ற தொகையினரையும் அவருக்குக் (குடும்பமாகக்) கொடுத்தோம். இது (எனக்குப் பயந்து) என்னை வணங்குபவர்களுக்கு(ம் என்னிடம் பிரார்த்தனை செய்பவர்களுக்கும்) நல்லுணர்ச்சி ஊட்டக்கூடியதாக இருக்கிறது. (அல்குர்ஆன் 21 : 83, 84)
 
அவருடைய அத்தனை நோய்களையும் நாம் அவருக்கு குணப்படுத்தினோம். உடல் ஆரோக்கியத்தை கொடுத்தோம். மீண்டும் அவருடைய குடும்பத்தை மீட்டுக் கொடுத்தோம். அதுபோன்று, மேலும் அவருக்கு ஒரு குடும்பத்தை கொடுத்தோம் என்று அல்லாஹுதஆலா நற்செய்தி கூறுகின்றான்.
 
ஆகவே, சோதனையின் காலங்களில் பொறுமையாக இருக்க வேண்டும். நமக்கு எதிராக நாமே துஆ செய்து விடக்கூடாது. அழகிய துஆக்களை கடைப்பிடிக்க வேண்டும்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா எனக்கும் உங்களுக்கும் அல்லாஹ் விரும்பக்கூடிய அந்த குணங்களையும் நற்பண்புகளையும் தந்தருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ، وَقُتَيْبَةُ، وَابْنُ حُجْرٍ، جَمِيعًا عَنْ إِسْمَاعِيلَ بْنِ جَعْفَرٍ، قَالَ ابْنُ أَيُّوبَ: حَدَّثَنَا إِسْمَاعِيلُ، أَخْبَرَنِي سَعْدُ بْنُ سَعِيدٍ، عَنْ عُمَرَ بْنِ كَثِيرِ بْنِ أَفْلَحَ، عَنْ ابْنَ سَفِينَةَ، عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّهَا قَالَتْ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، يَقُولُ: " مَا مِنْ مُسْلِمٍ تُصِيبُهُ مُصِيبَةٌ، فَيَقُولُ مَا أَمَرَهُ اللهُ: {إِنَّا لِلَّهِ وَإِنَّا إِلَيْهِ رَاجِعُونَ} [البقرة: 156]، اللهُمَّ أْجُرْنِي فِي مُصِيبَتِي، وَأَخْلِفْ لِي خَيْرًا مِنْهَا، إِلَّا أَخْلَفَ اللهُ لَهُ خَيْرًا مِنْهَا "، قَالَتْ: فَلَمَّا مَاتَ أَبُو سَلَمَةَ، قُلْتُ: أَيُّ الْمُسْلِمِينَ خَيْرٌ مِنْ أَبِي سَلَمَةَ؟ أَوَّلُ بَيْتٍ هَاجَرَ إِلَى رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثُمَّ إِنِّي قُلْتُهَا، فَأَخْلَفَ اللهُ لِي رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَتْ: أَرْسَلَ إِلَيَّ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ حَاطِبَ بْنَ أَبِي بَلْتَعَةَ يَخْطُبُنِي لَهُ، فَقُلْتُ: إِنَّ لِي بِنْتًا وَأَنَا غَيُورٌ، فَقَالَ: «أَمَّا ابْنَتُهَا فَنَدْعُو اللهَ أَنْ يُغْنِيَهَا عَنْهَا، وَأَدْعُو اللهَ أَنْ يَذْهَبَ بِالْغَيْرَةِ» (صحيح مسلم- 918)
 
குறிப்பு 2)
 
حَدَّثَنَا حَسَنٌ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، حَدَّثَنَا الْحَارِثُ بْنُ يَزِيدَ، عَنْ عَلِيِّ بْنِ رَبَاحٍ أَنَّهُ: سَمِعَ جُنَادَةَ بْنَ أَبِي أُمَيَّةَ يَقُولُ سَمِعْتُ عُبَادَةَ بْنَ الصَّامِتِ يَقُولُ: إِنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: يَا نَبِيَّ اللَّهِ، أَيُّ الْعَمَلِ أَفْضَلُ؟ قَالَ: «الْإِيمَانُ بِاللَّهِ وَتَصْدِيقٌ بِهِ وَجِهَادٌ فِي سَبِيلِهِ» . قَالَ: أُرِيدُ أَهْوَنَ مِنْ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ: «السَّمَاحَةُ وَالصَّبْرُ» . قَالَ: أُرِيدُ أَهْوَنَ مِنْ ذَلِكَ يَا رَسُولَ اللَّهِ. قَالَ: «لَا تَتَّهِمِ اللَّهَ فِي شَيْءٍ قَضَى لَكَ بِهِ» (مسند أحمد مخرجا- 22717)
 
குறிப்பு 3)
 
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ، أَخْبَرَنَا سُفْيَانُ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي وَائِلٍ، عَنْ أُمِّ سَلَمَةَ، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِذَا حَضَرْتُمُ الْمَيِّتَ فَقُولُوا خَيْرًا، فَإِنَّ الْمَلَائِكَةَ يُؤَمِّنُونَ عَلَى مَا تَقُولُونَ» فَلَمَّا مَاتَ أَبُو سَلَمَةَ، قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ، مَا أَقُولُ؟ قَالَ: «قُولِي اللَّهُمَّ اغْفِرْ لَهُ وَأَعْقِبْنَا عُقْبَى صَالِحَةً» قَالَتْ: فَأَعْقَبَنِي اللَّهُ تَعَالَى بِهِ مُحَمَّدًا صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ (سنن أبي داود- 3115) [حكم الألباني] : صحيح
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/