தலைப்பு : ரமழானுக்கு தயாராகுவோம்
தலைப்பு : ரமழானுக்கு தயாராகுவோம்
வரிசை : 701
இடம் : மஸ்ஜிதே அஹ்லே ஹதீஸ், ஆலந்தூர்
உரை : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : -13-03-2022 | 10-8-1443
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
மதிப்பிற்கும் கண்ணியத்திற்கும் உரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அகிலங்களின் இறைவன் அல்லாஹுத்தஆலாவை போற்றி புகழ்ந்தவனாக அல்லாஹ்வுடைய கண்ணியத்திற்குரிய தூதர் முஹம்மத் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மீதும் அவர்களுடைய பாசத்திற்குரிய குடும்பத்தார் பிரியத்திற்குரிய தோழர்கள் மீதும்,
ஸலவாத்தும் ஸலாமும் கூறியவனாக உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்விடத்திலே ஹிதாயத்தை வேண்டியவனாக நேர் வழியை வேண்டியவனாக அல்லாஹ்வுடைய வேதத்தின் படியும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் சுன்னாவின் படியும் வழி நடக்கின்ற அவற்றை பின்பற்றி நடக்கின்ற பாக்கியத்தை வேண்டியவனாக இந்த அமர்வை ஆரம்பம் செய்கிறேன்.
அல்ஹம்துலில்லாஹ் அன்பிற்குரிய சகோதரர்களே! அல்லாஹ்வுடைய அருளால் நாமெல்லாம் ரமலான் மாதத்தை எதிர்பார்த்து இருக்கிறோம். இங்கு ஒன்றை நாம் நினைவில் வைக்க வேண்டும் நம்மில் எத்தனை பேருக்கு அது அடையக்கூடிய பாக்கியம் இருக்கிறதோ அதை அல்லாஹ் அறிந்தவன். சென்ற ரமலானில் இருந்தவர்கள் இப்போது நம்மில் அவர்களில் பலர் இல்லை இன்னும், இந்த ரமலான் வருவதற்குள் யார் யாரெல்லாம் அல்லாஹ்விடத்திலே செல்வார்களோ அல்லாஹ் அறிந்தவன்.
அன்பிற்குரிய சகோதரர்களே! ரமலான் கிடைக்க வேண்டும் என்று ஆசைப்படுவது அதற்காக அல்லாஹ்விடத்தில் துவா செய்வது அதை ஆசையோடு எதிர்பார்த்து இருப்பது இது ஈமானுடைய அடையாளங்களில் ஒன்றாகும். வணக்க வழிபாடுகளில் இபாதத்துகளில் உண்மையான ஆர்வம் உள்ளவர்களுடைய அடையாளமாகும்.
நம்முடைய சிறப்பிற்குரிய சான்றோர்கள் ஸலஃபுகளைப் பற்றி நாம் அவர்களுடைய வரலாறுகளில் படிக்கிறோம் ஆறு மாதங்கள் ரமலானுக்காக துவா செய்து கொண்டிருப்பார்கள். யா அல்லாஹ் எங்களுக்கு ரமலான் ரமலானே நாம் அடைய வேண்டும் ரமலான் எங்களுக்கு கிடைக்க வேண்டும் என்று 6 மாதங்கள் ரமலானுக்காக துஆ செய்வார்கள். அடுத்து ஆறு மாதங்கள் ரமலான் முடிந்தவுடன் யா அல்லாஹ் ரமலானிலே நாங்கள் செய்த அமலை ஏற்றுக் கொள்வாயாக என்று அந்த ரமலானுடைய அமல்களுக்காக அந்த அமல்கள் ஏற்றுக் கொள்ளப்படுவதற்காக துவா செய்வார்கள்.
இங்கே அன்பு சகோதரர்களே இரண்டு விதமான வாழ்க்கை உலகத்திலே இருக்கிறது. ஒன்று மறுமைக்கான வாழ்க்கை, ஆகிரத்துக்கான வாழ்க்கை, இரண்டாவது வாழ்க்கை இந்த உலகத்தை மட்டுமே குறிக்கோளாக வைத்து, எல்லையாக வைத்து இதற்காகவே வாழ்கின்ற வாழ்க்கை.
இந்த இரண்டாவது வாழ்க்கையில் வாழ்பவர்களுக்கு இப்போது நாம் பேசிய பேசக்கூடிய பேச்சுக்கள் எதுவுமே புரியாது. என்ன ரமலானுக்காக ஆறு மாதம் துவா செஞ்சுக்கிட்டு இருக்கிறது அது என்ன ரமலான் முடிஞ்ச பிறகு ஆறு மாசம் ரமலானுடைய அமல்களுக்காக துவா செய்றது இது அவர்களுக்கு புரியாது. யாருக்கு புரியும்? யார் மறுமைக்காக வாழ்கிறார்களோ
إِنَّآ أَخْلَصْنَٰهُم بِخَالِصَةٍ ذِكْرَى ٱلدَّارِ
நிச்சயமாக நாம் “மறுமையை அதிகம் நினைத்தல் (அதற்காக அமல் செய்தல்)” என்ற சிறப்பைக் கொண்டு அவர்களை விசேஷமாக தேர்ந்தெடுத்தோம். (அவர்களும் அல்லாஹ்வை, மறுமையை நினைவு கூர்ந்தவர்களாக இருந்ததுடன் மக்களுக்கும் அதை நினைவூட்டுபவர்களாக இருந்தார்கள்.) (அல்குர்ஆன் 38 : 46)
அல்லாஹுத்தஆலா இப்ராஹீம் நபி, இஸ்மாயில் நபி, இஸ்ஹாக், நபி யாகூப் நபி அலைஹிமுஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களைப் பற்றி எல்லாம் சொல்லும் பொழுது நிச்சயமாக நாம் இவர்களை மறுமைக்காகவே தேர்ந்தெடுத்தோம் என்று சொல்கிறான்.
யாரை நபிமார்களை குறிப்பாக இந்த நபிமார்களை அல்லாஹ் கூறி இவர்களை எல்லாம் மறுமைக்காகவே மிக விசேஷமாக சிறப்பாக நாம் தேர்ந்தெடுத்து மறுமைக்குரியவர்களாக இவர்களை பரிசுத்தம் ஆக்கினோம்.
சகோதரர்களே! அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் தங்களுடைய பிரசங்கங்களிலே சொல்வதை ஹதீஸ் நூல்களிலே பார்க்கிறோம் இந்த உலகத்தைப் பற்றி அலி ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் கூறக்கூடிய உபதேசங்களில் ஒன்று
وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ، وَأُدْخِلَ الجَنَّةَ فَقَدْ فَازَ، وَمَا الحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الغُرُورِ} [آل عمران: 185] وَقَوْلِهِ: {ذَرْهُمْ يَأْكُلُوا وَيَتَمَتَّعُوا، وَيُلْهِهِمُ الأَمَلُ فَسَوْفَ يَعْلَمُونَ} [الحجر: 3] وَقَالَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ: «ارْتَحَلَتِ الدُّنْيَا مُدْبِرَةً، وَارْتَحَلَتِ الآخِرَةُ مُقْبِلَةً، وَلِكُلِّ وَاحِدَةٍ مِنْهُمَا بَنُونَ، فَكُونُوا مِنْ أَبْنَاءِ الآخِرَةِ، وَلاَ تَكُونُوا مِنْ أَبْنَاءِ الدُّنْيَا، فَإِنَّ اليَوْمَ عَمَلٌ وَلاَ حِسَابَ، وَغَدًا حِسَابٌ وَلاَ عَمَلٌ» {بِمُزَحْزِحِهِ} [البقرة: 96]: «بِمُبَاعِدِهِ» تعليق مصطفى البغا] ش (زحزح) أبعد ونحي. (فاز) نجا وربح. (متاع الغرور) متعة يتمتع بها لأمد قليل وهي أي - الدنيا - تخدع من تعلق بها واستكان إليها. (ذرهم) اتركهم ودعهم. (يتمتعوا) بملذات الدنيا. (يلههم الأمل) يشغلهم عن عمل الآخرة والتوبة إلى الله عز وجل ما يأملونه من البقاء في الدنيا وما ترغبه نفوسهم من طول عمر وزيادة غنى ونحو ذلك. (مدبرة) بما فيها من ملذات (مقبلة) بما فيها من أهوال وحشر وحساب ونعيم خالد أو جحيم مقيم (بنون) متعلقون بها تعلق الأبناء بالآباء راغبون فيها ومقبلون عليها لا يلتفتون إلى غيرها. (اليوم) في الدنيا. (غدا) في الآخرة]
இந்த துனியா பின்னோக்கி சென்று கொண்டே இருக்கின்றது, மறுமை முன்னோக்கி வந்து கொண்டே இருக்கின்றது. துன்யாவுக்கும் பிள்ளைகள் இருக்கின்றார்கள் மறுமைக்கும் பிள்ளைகள் இருக்கின்றார்கள். நீங்கள் மறுமையுடைய பிள்ளைகளில் இருங்கள் ஆகிவிடுங்கள். துனியாவுடைய பிள்ளைகளில் ஆகி விடாதீர்கள். நீங்கள் மறுமையுடைய பிள்ளைகளாக இருங்கள் துன்யாவுடைய பிள்ளைகளாக ஆகிவிடாதீர்கள்.
கூற்று : அலி ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : (8/ 89) (குறிப்பு 1)
சகோதரர்களே இந்த ரமலான் மவுஸிமுல் கைராத் நன்மைகளுக்கான, நற் கர்மங்களுக்கான, தர்மங்களுக்கான, மூசிமுள் குர்பாத் அல்லாஹ்வின் பக்கம் நம்மை நெருக்கமாக்கி வைக்க கூடிய அமல்களை கொள்ளையடிப்பதற்காக சேகரித்துக் கொள்வதற்காக அல்லாஹ் வழங்கிய மிகப்பெரிய ஒரு சீசன்.
ஒரு விசேஷமான காலம் இது அமல்களுக்காகவே அல்லாஹுத்தஆலா இந்த மாதத்தை தேர்ந்தெடுத்தான். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த ரமலானை எப்படி எதிர்பார்த்தார்கள்? இந்த ரமலானுக்காக எப்படி ஏங்கினார்கள்? ரமளானை குறித்து தங்கள் தோழர்களுக்கு எத்தகைய விழிப்புணர்வை அந்த எதிர்பார்ப்பை கொடுத்தார்கள். அன்பு சகோதரர்களை ஹதீஸ் நூல்களிலே நாம் பார்க்கிறோம்.
687 - حَدَّثَنَا مُسْلِمُ بْنُ حَجَّاجٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحْصُوا هِلَالَ شَعْبَانَ لِرَمَضَانَ»: «حَدِيثُ أَبِي هُرَيْرَةَ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِثْلَ هَذَا إِلَّا مِنْ حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ»، وَالصَّحِيحُ مَا رُوِيَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَقَدَّمُوا شَهْرَ رَمَضَانَ بِيَوْمٍ وَلَا يَوْمَيْنِ»، وَهَكَذَا رُوِيَ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَ حَدِيثِ مُحَمَّدِ بْنِ عَمْرٍو اللَّيْثِيِّ
அல்லாஹ்வுடைய தூதர் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மற்ற எல்லா மாதத்தின் உடைய பிறைகள் அவற்றை கேட்டு தெரிந்து கொள்வார்கள். ஆனால் இந்த ரமலானுக்காக நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முன்கூட்டியே ஷாபானுடைய பிறையிலிருந்தே மிக உஷாராக கவனமாக இருப்பார்கள். ஷாபானுடைய பிறையை எண்ண ஆரம்பித்து விடுங்கள் ரமலானுக்காக
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : திர்மிதி, எண் : 687 (குறிப்பு 2)
உங்களுக்கு ரொம்ப பிரியமான ஒருத்தர் அப்படி யாரும் இந்த துனியாவுல இருக்கிறாங்கன்னா பெரிய அன்புள்ளா ஒரு காலத்தில இருந்துச்சு இப்போ எல்லாருக்கும் பிரியம்னா இதுதான் எல்லாருக்கும் பிரியம்னா என்ன? அத்தாவை தேடக்கூடிய பிள்ளைகள் இல்லை, பிள்ளைகளைத் தேடக்கூடிய தந்தை இல்லை, கணவனை தேடக்கூடிய மனைவி இல்லை, மனைவியை தேடக்கூடிய கணவன் இல்லை, நண்பனை தேடக்கூடிய நண்பன் இல்லை, உறவுகளை தேடக்கூடிய உறவுகள் இல்லை, எல்லோருக்கும் ஒரு தேடல் இருக்கிறது செல்போன் அவ்வளவுதான்.
எல்லாரும் இதுக்குள்ள சிறைப்பட்டிருக்கிறோம். என்ன பத்தி சொல்றேன் எதெல்லாம் உங்களுக்கு கோவம் வருதோ அல்லது உங்களுக்கு கஷ்டமா இருக்கு அதெல்லாம் என்ன பத்தி சொல்றேனு எடுத்துக்கோங்க எதெல்லாம் உங்களுக்கு சந்தோஷமா இருக்கோ வாழ்த்தாயிருக்கோம் அது எல்லாம் உங்கள பத்தி சொல்றேனு எடுத்துக்கோங்க
புரியுதா நமக்குள்ள ஒரு ஒப்பந்தம். சரியா திட்டுவதெல்லாம் நான் என்ன திட்றேன். வாழ்த்துவதெல்லாம் உங்கள வாழ்த்துறேன். அதனால தைரியமா கேளுங்க சரியா. நம்ம எதுக்கு உள்ளார சிறைப்பட்டு இருக்கிறோ முன்னாடியெல்லாம் காலையிலிருந்து பிள்ளைகள் தந்தையினுடைய இரவு வருகைக்காக காத்திருப்பார்கள்.
அல்லாஹு அக்பர் அந்த பிரியமும் அன்பும் யார் மீது இருக்கிறதோ அவருடைய வருகைக்காக நாம் காத்திருப்பது உண்டு. யாராவது வந்து கதவு தட்டினால் உடனே அவங்களா தான் இருக்கும்ன்னு சொல்லி.
சகோதரர்களே! ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய முஹப்பத் ரமலான் மீது எவ்வளவு இருந்தது என்பதை இந்த ஒரு ஹதீஸில் இருந்தே புரியலாம். ஷாபானை நீங்கள் எண்ணிக்கொண்டே இருங்கள் இன்னிக்கு முடிஞ்சிடுச்சு நாலு அடுத்து ஐந்து ஒவ்வொரு நாளும் ரமலானுக்காக.
சரி அடுத்து ஷாபானுடைய 29 வந்தவுடன் பிறையைத் தேடுங்கள் என்று சொன்னார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறையைப் பார்க்க முயற்சி செய்யுங்கள். எந்த பிறையை ரமலானுடைய பிறையை பார்க்க முயற்சி செய்யுங்கள் தேடுங்கள் என்று.
மக்கள் ரமலானுடைய பிறையை தேடுவார்கள். எல்லோரும் முயற்சி செய்வார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ரமலானுடைய பிறையை தேடுவார்கள் பார்க்க முயற்சிப்பார்கள். எவ்வளவு ஒரு முஹபத் பாருங்க
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த ரமலான் மாதத்திற்காக ஷாபானுடைய பிறையை நீங்கள் பார்க்க ஆரம்பித்து விடுங்கள் என்று அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கட்டளையிட்டார்கள்.
2342 - حَدَّثَنَا مَحْمُودُ بْنُ خَالِدٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ السَّمْرَقَنْدِيُّ، وَأَنَا لِحَدِيثِهِ، أَتْقَنُ قَالَا: حَدَّثَنَا مَرْوَانُ هُوَ ابْنُ مُحَمَّدٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ وَهْبٍ، عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ سَالِمٍ، عَنْ أَبِي بَكْرِ بْنِ نَافِعٍ، عَنْ أَبِيهِ، عَنِ ابْنِ عُمَرَ قَالَ: «تَرَائِى النَّاسُ الْهِلَالَ،» فَأَخْبَرْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، أَنِّي رَأَيْتُهُ فَصَامَهُ، وَأَمَرَ النَّاسَ بِصِيَامِهِ "
மக்கள் எல்லாம் பிறைப்பார்க்க முயற்சித்தார்கள் தேடினார்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடத்திலே நான் வந்து கூறினேன் அல்லாஹ்வின் தூதரே! நான் அந்தப் பிறையை பார்த்தேன் என்று. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏற்றுக்கொண்டு நோன்பு நோற்கும் படி கட்டளை இட்டார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரமலான் மீது அவர்கள் வைத்திருந்த அந்த அன்பை பார்க்கிறோம்.
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : அபூ தாவூத், எண் : 2342
ஷபானுடைய அந்தப் பிறை 29 வந்துவிட்டால் நீங்கள் பிறையைத் தேடுங்கள் பிறை தெரிந்து விட்டால் நோன்பை ஆரம்பித்து விடுங்கள். பிறை தெரியாவிட்டால் மாதத்தை 30 ஆக பூர்த்தி செய்யுங்கள். ரமலானுடைய சட்டங்களிலே முதல் சட்டம் பிறையை பார்ப்பது.
2124 أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُثْمَانَ أَبُو الْجَوْزَاءِ، وَهُوَ ثِقَةٌ بَصْرِيٌّ، أَخُو أَبِي الْعَالِيَةِ، قَالَ: أَنْبَأَنَا حِبَّانُ بْنُ هِلَالٍ، قَالَ: حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ، عَنْ عَمْرِو بْنِ دِينَارٍ، عَنْ ابْنِ عَبَّاسٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا الْعِدَّةَ ثَلَاثِينَ
பிறை பார்த்து தான் ரமலானுடைய மாதத்தை ஆரம்பிக்க வேண்டும் அல்லது, ஷாபான் மாதம் 30 ஆக பூர்த்தி செய்ய பட வேண்டும். இதுதான் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னா. இதுதான் நான்கு கலீபாக்கள் உடைய இஜ்மா யோகோபித்த முடிவு. யார் இதற்கு மாறு செய்வாரோ தனது அறிவை புகுத்தி வியாக்கியாரம் கொடுத்து இந்த வழிமுறையை மாற்றுவாரோ அவர் மார்க்கத்தில் மிகப்பெரிய பித்அதை செய்து விட்டார்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : நசாயி, எண் : 2124
நீங்க ஹதீஸ் நூல்களை படிங்க எங்கெல்லாம் ஹதீஸ்கலை அறிஞர்கள் ஃபிக்ஹ்கலை அறிஞர்கள் ரமலான் உடைய பாடத்தை அங்கே பதிவு செய்கிறார்களோ அதனுடைய தொடக்கமாக ஹதீஸ் கலை அறிஞர்கள் பெரிய அறிஞர்களிலிருந்து சிறு அறிஞர்கள் வரை எல்லோரும் அவர்கள் வைக்கக்கூடிய ஹதீஸ்கள் என்ன? எல்லோருடைய ஹதீஸ்களும் இதே கருத்தைதான் உங்களுக்கு வலியுறுத்தும். கருத்தை வலியுறுத்தும்?
1907 - حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مَسْلَمَةَ، حَدَّثَنَا مَالِكٌ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ لَيْلَةً، فَلاَ تَصُومُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا العِدَّةَ ثَلاَثِينَ»
மாதம் 29 தான் பிரையைப் பார்க்கின்ற வரை நோன்பை ஆரம்பிக்காதீர்கள் பிறை உங்களுக்கு தெரியவில்லை என்றால், மாசம் 29 ஆனா பிறை தெரியல அந்த மாதத்தின் உடைய எண்ணிக்கையை 30 ஆக நிறைவு செய்யுங்கள்.
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 1907
சகோதரர்களே இந்த இடத்தில் எந்த கால்குலேஷன் கும் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எந்த கணக்குகளுக்கும் இங்கு வழி வைக்கவில்லை. ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தெரியாத குர்ஆன் வசனத்தெல்லாம் ஓதக்கூடிய அளவுக்கு இந்த உம்மத்தில் சில முல்ஹீதுகளுக்கு தைரியம் வந்துடுச்சு,
எப்படி குர்ஆனுடைய வசனத்தை எடுத்துக் கூறி ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி சொல்லாத விளக்கத்தை அதற்கு கொடுத்து ஹதீஸ்களை நிராகரிக்கின்ற, ஹதீஸ்களை மறுக்கின்ற ஒரு கூட்டத்தை இன்று உருவாக்கி வைத்திருக்கிறார்கள்.
சகோதரர்களே இவர்களுடைய நோன்பில் இருந்து இவர்கள் அடையப் போவது ஒன்றுமே இல்லை. ஒரு விஷயத்தை நல்ல புரிந்து கொள்ளுங்கள் மண்டையிலே புரிய வைக்கணும், இந்த மண்ட புரியறதுக்கு மறுத்தால் சுத்தியால அடிச்சாவது இந்த மண்டைக்கு புரிய வைக்கணும்.
அது என்ன புரியுதல், இபாதத் வணக்கம் என்பது ஊ விருப்பத்தின் படி நீ செய்வதல்ல. இபாதத்என்பது அல்லாஹ்வுடைய விருப்பத்திற்காக, அல்லாஹ்வுடைய நபி காட்டி தந்த அடிப்படையில் செய்வதுதான் இபாதத். இல்லனா இபாதத் கிடையாது தூக்கி எறிஞ்சிடுவான் அல்லாஹு தஆலா முகம் குப்புற கண்டிப்பா நரகத்தில் அல்லாஹ் தள்ளுவா உன்னுடைய திருப்திக்காக, உன்னுடைய அறிவின் அடிப்படையில் செய்வது இபாதத் அல்ல, இபாதத் ஆகாது அந்த இபாதத்தை அல்லாஹ் ஒத்துக்கொள்ளவே மாட்டான்.
இபாதத் என்பது அல்லாஹ்வுடைய விருப்பத்திற்காக அல்லாஹ்வுடைய நபி காட்டிய அடிப்படையில் எதை நீ செய்வாயோ அது அல்லாஹ்வுக்கு பிடிக்கும் அது ஒரு சிறிய திக்ராக இருந்தாலும் சரி, சிறிய அற்பமான ஒரு அமலாக இருந்தாலும் சரி, அல்லாஹ் நீ அந்த அமலை செய்ததற்காக உனக்கு சொர்க்கத்தை கொடுப்பான். நீ மலையளவு உன்னுடைய அறிவின் படி உன்னுடைய திருப்தியின் படி நீ அமலை கொண்டு வருகிறாய் என்றால் ,அல்லாஹ் அந்த அமலை ஏத்தும் பாக்க மாட்டான் தூக்கி எறிந்து விடுவான்.
அப்படி என்றால் நசராக்கால் இடத்திலே லட்சக்கணக்கான அமல்கள் இருக்கின்றன மஜூசிகள் இடத்திலே மிகப்பெரிய அமல்கள் இருக்கின்றன ஆனால் அல்லாஹ் எந்த அமல்களையும் ஏற்றுக் கொள்ள மாட்டான். எது ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவின் படி அமைந்தோ அது மட்டும் தான் ஏற்றுக் கொள்ளப்படும்.
قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
(நபியே!) கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வின் மீது அன்பு வைப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்கள் மீது அன்பு வைப்பான்; இன்னும், உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.’’ (அல்குர்ஆன் 3 : 31)
حَدَّثَنَا عَبْدُ الرَّحْمَنِ، حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ، سَمِعَ الْقَاسِمَ، قَالَ: سَمِعْتُ عَائِشَةَ، تَقُولُ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا، فَهُوَ رَدٌّ , 2697حَدَّثَنَا يَعْقُوبُ، حَدَّثَنَا إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ، عَنْ أَبِيهِ، عَنِ القَاسِمِ بْنِ مُحَمَّدٍ، عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا، قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ، فَهُوَ رَدٌّ» رَوَاهُ عَبْدُ اللَّهِ بْنُ جَعْفَرٍ المَخْرَمِيُّ، وَعَبْدُ الوَاحِدِ بْنُ أَبِي عَوْنٍ، عَنْ سَعْدِ بْنِ إِبْرَاهِيمَ
உனக்கு அல்லாஹ்வுடைய முஹப்பத் வேண்டும் என்றால் நபியை பின்பற்றி அல்லாஹ்வை இபாதத் செய் நபியை பின்பற்றி அல்லாஹ்வை இபாதத்தை செய். நபியை பின்பற்றாமல் நீ என்ன இபாதத் செய்தாலும் சரி அதற்காக நீ எவ்வளவு அறிவை நீ செலவு செய்தாலும் சரி, எவ்வளவு சிரமப்பட்டாலும் சரி அல்லாஹ் அதை தூக்கி எறிந்து விடுவான். தூக்கி எறியப்பட்டது, மறுக்கப்பட்டது.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்னது அஹ்மத், புகாரி, எண் : 2547, 2697
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَوْ قَالَ: قَالَ أَبُو القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ غُبِّيَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلاَثِينَ
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இவ்வளவு அழகா சொல்றாங்க. பிறையைப் பார்க்கும்போது நோன்பை ஆரம்பிங்கள், பிறையை பார்க்கும் போது நோன்பு ஆரம்பிங்கள்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 1909
رأیت ک عالما உன்னை நான் அறிஞராகப் பார்க்கிறேன் என்ன அர்த்தம் இது இந்த அறிவால் உன்னை அறிஞராக விளங்கிக் கொண்டேன், புரிந்து கொண்டேன். வெறும் رایتک இங்க என்ன அர்த்தம் உன்னை நான் கண்ணால் பார்த்தேன். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த ரமலானை குறித்து, பிறையைக் குறித்து சொல்லும் போது ஒரு அங்க மஃப்ஊல் தான் சொல்றாங்க.
- (1080) وحَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا إِسْمَاعِيلُ، عَنْ أَيُّوبَ، عَنْ نَافِعٍ، عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللهُ عَنْهُمَا، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّمَا الشَّهْرُ تِسْعٌ وَعِشْرُونَ فَلَا تَصُومُوا حَتَّى تَرَوْهُ، وَلَا تُفْطِرُوا حَتَّى تَرَوْهُ، فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَاقْدِرُوا لَهُ»
அறிவிப்பாளர் : இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : முஸ்லிம், எண் : 1080
அதை பார்க்கின்ற வரை, பார்க்கின்ற வரை, கண்ணால பார்க்கிற வரை. அப்பாஹ் தக்குவா ரொம்ப முத்தி போகிவிட்டது. நீங்க பிறையை கண்ணால பாக்கணும் ,கண்ணால பாக்கணும்னு மாசத்துடைய தலப்பிறைய தவற விட்டீங்க, உங்களுக்கு தல நோம்பே தவறிப் போயிடுது பெருநாள் அன்னிக்கு நோம்பு வைக்குறிங்க ஹராம் பன்னுறிங்க.
إِنَّمَا النَّسِيءُ زِيَادَةٌ فِي الْكُفْرِ يُضَلُّ بِهِ الَّذِينَ كَفَرُوا يُحِلُّونَهُ عَامًا وَيُحَرِّمُونَهُ عَامًا لِيُوَاطِئُوا عِدَّةَ مَا حَرَّمَ اللَّهُ فَيُحِلُّوا مَا حَرَّمَ اللَّهُ زُيِّنَ لَهُمْ سُوءُ أَعْمَالِهِمْ وَاللَّهُ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ
(புனித மாதங்களை அவற்றின் காலத்திலிருந்து) பிற்படுத்துவதெல்லாம் நிராகரிப்பில் அதிகப்படுத்துவதாகும். அதன்மூலம் நிராகரிப்பவர்கள் வழி கெடுக்கப்படுகிறார்கள். ஓர் ஆண்டில் (புனித மாதமாகிய) அதை ஆகுமாக்குகிறார்கள். இன்னும், (வேறு) ஓர் ஆண்டில் அதை (புனிதம் என) தடை செய்து கொள்கிறார்கள். காரணம், அல்லாஹ் தடை செய்த (புனித மாதங்களின்) எண்ணிக்கைக்கு அவர்கள் ஒத்துவந்து, பிறகு, அல்லாஹ் தடை செய்ததை அவர்கள் ஆகுமாக்கிக் கொள்ள வேண்டும் என்பதாகும். அவர்களுடைய தீயச் செயல்கள் அவர்களுக்கு அலங்கரிக்கப்பட்டன. இன்னும், அல்லாஹ் நிராகரிப்பாளர்களான மக்களை நேர்வழி செலுத்தமாட்டான். (அல்குர்ஆன் 9 : 37)
ஆயத்து ஓதி நஸீ செய்கிறீங்க. நீங்க மாசத்தை முன்னும், பின்னும் ஆக்கிட்டீங்க, ஹராம் செஞ்சிட்டிங்க, ஒரு பயம் வேணா, சரி இது எங்களுடைய இஜித்திஹாது நாங்கள் ஆராய்ந்து பன்றோம், நாங்க இப்படித்தான் போறோம், நீ வழிகேட்டில் தான் போவேனா போய் தொல சாவு. சொல்லு வருகிறது என்ன தெரியுமா? சொல்ல வர ஒட்டுமொத்த இந்த உம்மத்தை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய காலத்தில் இருந்து இன்று வரை உள்ள ஒட்டு மொத்த உம்மத்தை வழிகேட்டிலேயே தள்ளுகிறாய்.
உனக்கு எவ்வளவு பெரிய துணிவு வந்தது தப்பு செய்தவன் கூட பயந்து தப்பு செஞ்சா அல்லாஹ் மன்னிப்பான். அவனுக்கு தவ்பாவுடைய வாசலை திறந்து கொடுப்பான். இந்த தப்பை திமிரோடு செய்வது, துணிவோடு செய்வது, ஆணவத்தோடு செய்வது,
நஸீ என்றால் என்ன? புனித மாதத்தை இடம் மாற்றுவது. ஒரு மாசத்த அப்படியே சேஞ்ச் பண்ணுறது. அந்த மாசத்துல வேற ஒரு ஹலாலான மாசத்தை கொண்டு வந்து வைக்கிறது. புரியுதுங்களா அதுதான் நஸீ.
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்திலேயே ஐயா முள் ஜாஹிலியா முஷ்ரிக்குகள் செய்துவந்தார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹிஜ்ரி ஒன்பதுல ஹஜ்ஜுக்கு போகல, அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ஹஜ்ஜுக்கு அனுப்பி விட்டாங்க. ஏனென்றால், அந்த ஆண்டு துல்ஹஜ் மாதம்,
துல்ஹஜ் மாதத்தின் உடைய கணக்கில் வரவில்லை. ஏனா முஷ்ரிக்குகள் என்ன செஞ்சிருந்தாங்க மாசத்தை முன்பின் தள்ளி வைத்து இருந்தார்கள். அதனால ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் போகவில்லை. அபூபக்கர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அனுப்பி வைத்தார்கள். அடுத்த ஆண்டு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஹஜ்ஜுக்கு போகும் போது சொல்றாங்க.
4662 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الوَهَّابِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنِ ابْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ الزَّمَانَ قَدِ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَالأَرْضَ، السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا، مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ، ثَلاَثٌ مُتَوَالِيَاتٌ: ذُو القَعْدَةِ، وَذُو الحِجَّةِ، وَالمُحَرَّمُ، وَرَجَبُ، مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى، وَشَعْبَانَ "
ஆண்டுகள் காலங்கல் இப்போது சுற்றி அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைக்கும் போது எப்படி அமைந்திருந்ததோ அந்த அமைப்பு இப்போது வந்து விட்டது. துல்ஹஜ் வந்து விட்டது, அடுத்து முஹர்ரம் முஹர்ரம் இல்ல வந்துருச்சு, ஸஃபர் ஸஃபர்ல வந்துருச்சு.
அறிவிப்பாளர் : அபூ பகரா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 4662 குறிப்பு 4
இதுதான் என்ன செய்வாங்கனா அரபுகள் வந்து சண்டை போட்டுக்கிட்டே இருப்பாங்களாம் அஷ்ஹுருள் ஹுரும் வந்துவிடும் துல்கஃதா வந்துரும். துல்கஃதாவ நம்ம அப்புறமா வெச்சிப்போ துல்கஃதா தூக்கிட்டு பின்னாடி போட்டுட்டு ஹலால் ஆன மற்ற மாசம் இருக்கு பாருங்க இந்த நாள் போக அதுல ஒன்ன தூக்கி வச்சுப்பாங்க. இதுதான் நசி மாதத்தை மாற்றுவது இது குஃப்ர். பிறையைப் பார்த்து நோன்பை ஆரம்பிப்பதிலும் பிறையை பார்த்து நோன்பை விடுவதிலும் இந்த நசி எங்கிருந்து வந்துச்சு மாதத்தை மாற்றுவது எங்கிருந்து வந்தது?
உலகத்துல எவ்வளவுதான் வித்தியாசம் பட்டாலும் சவுதியில் பாக்குற பிறை ஆப்பிரிக்காவுல பாக்குற பிறை இது இந்தியாவுல பாக்கிற பிறை இது பாகிஸ்தானில் பார்க்கிற பிறை என்னத்த தான் வித்தியாசம் வந்தாலும் ஒரு மாசமாங்க வித்தியாசம் வருது அவங்களுக்கு ஒரு மாசம் நமக்கு ஒரு மாசம்நா வந்துடுச்சு இது நசி என்பது அல்ல. நசி என்பது மாதத்தை மாற்றுவது அப்போ மக்களுக்கு இந்த மாதிரி சொல்லி அவர்களுக்கு தவறான விளக்கத்தை சொல்லி தவறான வியாக்கியானத்தை சொல்லி ஹதீஸை மீறவைப்பது.
ரமதான் உடைய நோன்பை பிறை பார்த்து ஆரம்பிக்கிறோம் எனறால் ஏன் ஆரம்பிக்கிறோம்? இந்த நோன்பு எந்த நபியின் மூலமாக கடமையாக்கப்பட்டதோ அந்த நபி அப்படித்தான் ஆரம்பித்தார்கள். அப்படிதான் நமக்கும் கற்றுத் தந்தார்கள்.
1909 - حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَوْ قَالَ: قَالَ أَبُو القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ غُبِّيَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلاَثِينَ
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நீங்கள் பார்த்து நோன்பை வையுங்கள். பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகத்தால் பிறை மறைக்கப்பட்டு விட்டால், ஷாபானுடைய எண்ணிக்கையை 30 ஆக பூர்த்தி செய்யுங்கள். இப்போ நீங்க சொல்ற ஹிஜ்ரா காலண்டர் படி இந்த ஹதீஸ நிராகரிக்க வேண்டுமே தவிர எந்த வகையிலும் அமல்படுத்தவே முடியாது. ஹதீஸை ஒரு வஹியை நிராகரிப்பதை தவிர வேறவழியே கிடையாது.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 1909
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய நோன்பு குறித்த வழிகாட்டலை நீங்க பாருங்க இது சாதாரணமா எடுத்துக் கொள்ள முடியாது. இத நம்ப தெளிவுபடுத்துவதற்காகவே சொல்றேன், ஏனென்றால் இன்று குர்ஆன் ஹதீஸ் பேசக்கூடிய பேசிக் கொண்டிருந்த பலர் இந்த வழிகேடிலே இலகுவாக சிக்கி, கடைசியில் அவர்களுடைய வாயிலிருந்து நான் இந்த காதால் கேட்டதை சொல்கிறேன் குர்ஆன்ல தெளிவா இருக்கும் போது ஹதீஸை ஏன் பாக்கணும்? அஸ்தஃபிருல்லாஹ் அழீம்.
ஹதீஸை பார்க்கிறதுனால தான் குழப்பமே வருது. அடுத்த வார்த்தை நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் என்று சொல்லி நம்மள குழப்பத்துல விட்டுட்டு போயிட்டாங்க. எந்த திசையில் பார்க்கணும்னு சொன்னாங்களா? எவ்வளவு கீழ மேல பாக்கணும் சொன்னாங்களா? அஸ்தஃபிருல்லாஹ் அழீம்.
ஒருத்தன் சுன்னாவுக்கு வெளியில போயிட்டான்னு வச்சுக்கோங்க அவ்ளோதான் முடிஞ்சிருச்சு அந்த வலிக்கேடு இருக்குதே கடைசியில் பனீ இஸ்ராயில் தீ மைதானத்தில் சுத்துற மாதிரி தான். பனீ இஸ்ராயீல் தெரியுமா? தீ மைதானத்தில சுத்துன கதை தெரியுமா? காலையில ஆரம்பிப்பாங்க சாய்ந்திரம் பார்த்தால் திரும்பவும் அதே இடத்துல தான் இருப்பாங்க. காலையில இருந்து நடந்து நடந்து கடைசில சாயந்திரம் ஆன உடனே பார்த்தா எங்க ஆரம்பிச்சாங்களோ மைதானத்தில் வீட்டில் வைத்துவிட்டு ஒரு மணி நேரம் நடப்பீங்களே அதே கதைதான்.
அல்லாஹ் அந்த மாதிரி பூமி அவர்களுக்கு ஆக்கிட்டான். அந்த மாதிரி தான் இவர்கள். என்ன செய்கிறார்கள்? மக்களுக்கு இந்த ஹதீஸின் மீது உண்டான அவநம்பிக்கை ஹதீஸுக்கு தப்பு தப்பா அர்த்தம். ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு பிறையை கால்குலேஷன் பண்ண தெரியல. அவங்க வந்து அறியாத உம்மி நபியா இருந்தாங்க,
அதனால பாவம் அவங்க பிறையை பார்த்து நோன்பு வச்சாங்க. நம்ப சயின்ஸ்ல எங்கேயோ போயிட்டோம் நாங்க 3000 வருஷத்துக்கு முன்னாடி உள்ள பிறையை கண்டுபிடிச்சிட்டோம். 3000 வருஷம் பின்னாடி உள்ள பிறையே கண்டுபிடிச்சிட்டோம் அவங்க சொன்னது சொல்ற நான் எதுவும் சொல்லல. 3000 வருஷம் முன்னாடி பிறையை கண்டுபிடிச்சிட்டாங்களா 3 ஆயிரம் வருஷம் பின்னாடி பிறையை கண்டுபிடிச்சிட்டாங்களாம்.
அந்த அடிப்படையில ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹஜ்ஜத்துல் விதாவில் இருந்த பிறை அரஃபா மைதானத்தில பிறை என்னப்பா ஆச்சு? மிஸ்டக் ஆயிடுச்சு ரசூலுல்லாஹ்வுக்கு. யாருக்கு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வியாழக்கிழமை தான் அரபாவில் இருந்துக்கணும்.
அவங்க தப்பா வெள்ளிக் கிழமைல போய் இருந்துட்டாங்க. புரியுதா உங்களுக்கு.நபியை மார்கத்தில் தவறு செய்வதிலிருந்து பாதுகாப்பது யாருடைய பொறுப்பு அல்லாஹ்வுடைய பொறுப்பு ரப்புடைய பொறுப்பு. அல்லாஹ் அவர்களை வழி தவற விட மாட்டான்.
அல்லாஹ் அவர்களை வழிகேட்டிலே விட மாட்டான். கடைசில எந்த அளவு துனிஞ்சுட்டாங்க ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹஜ்ஜ தவறுதல் அடிப்படையில. ரமலானை எதிர்பார்ப்பது, ரமளானை வரவேற்பது இதையே இன்றைக்கு நம்ப சொல்கிறோம் என்றால் நீங்கள் இந்த அடிப்படை உள்ள ரமலானுக்குள்ள போகவில்லை என்றால் ஒட்டுமொத்த ரமலானும் வேஸ்ட்.
686 - حَدَّثَنَا أَبُو سَعِيدٍ عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الأَشَجُّ قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، قَالَ: كُنَّا عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ فَأُتِيَ بِشَاةٍ مَصْلِيَّةٍ، فَقَالَ: كُلُوا، فَتَنَحَّى بَعْضُ القَوْمِ، فَقَالَ: إِنِّي صَائِمٌ، فَقَالَ عَمَّارٌ: «مَنْ صَامَ اليَوْمَ الَّذِي يَشُكُّ فِيهِ النَّاسُ فَقَدْ عَصَى أَبَا القَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» وَفِي البَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ، وَأَنَسٍ.: «حَدِيثُ عَمَّارٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَالعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ العِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَنْ بَعْدَهُمْ مِنَ التَّابِعِينَ، وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ، وَمَالِكُ بْنُ أَنَسٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِ، وَالشَّافِعِيُّ، وَأَحْمَدُ، وَإِسْحَاقُ، كَرِهُوا أَنْ يَصُومَ الرَّجُلُ اليَوْمَ الَّذِي يُشَكُّ فِيهِ، وَرَأَى أَكْثَرُهُمْ إِنْ صَامَهُ فَكَانَ مِنْ شَهْرِ رَمَضَانَ أَنْ يَقْضِيَ يَوْمًا مَكَانَهُ "
யார் யமுஷ்ஷக் சந்தேக நாளில் நோன்பு வைத்தானோ அவன் அல்லாஹ்வுடைய தூதருக்கு மாறு செய்து விட்டான். ரசூலுக்கு மாறு செய்து விட்டாள்.
அறிவிப்பாளர் : ஸிலா இப்னு சுஃபர் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 686 (குறிப்பு 3)
அப்போ நீங்க நோன்ப ஆரம்பிக்கும் போதே நீங்க யவ்முஷ் ஷக்கிலே நோன்பு ஆரம்பிக்க வேண்டும். யாரு காலண்டரின் அடிப்படையிலே கணக்கின் அடிப்படையிலேயே நோன்பை ஆரம்பிக்கின்றார்களோ அவர்கள் ரசூலுல்லாஹ் உடைய கட்டளையை மீறி யவ்முல் ஷக்கிலே 29 ஆகிவிட்டால் பிறையைப் பாருங்கள் என்று சொன்னாங்க கணக்கின் அடிப்படையிலேயே நோன்பை ஆரம்பியுங்கள் என்று சொல்லவில்லை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். ரமலானுடைய ஒரு நோன்பு எவ்வளவு மகத்தான நோன்பு தெரியுமா?
அட முட்டாளே அது மகத்தானது என்று இருந்தால் அந்த மகத்துவத்தை மகத்துவமாக ஆக்குவது ரசூலுல்லாஹ் உடைய வழிமுறையின் படி நீ நோன்பு வைத்தால் தான். எப்படி? அந்த மகத்துவம் எப்போது மகத்துவம் ஆகும் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அந்த வழிமுறையின் படி வைக்கப்பட்டால் தான் அது மகத்துவமாகும்.
அதேபோல ரமலானுடைய பிறை முடியுது 29ல முடிஞ்சா 29 ல நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பிறையை பார்க்க சொல்றாங்க. பிறையைப் பார்க்கவில்லை என்றால் நோன்பை முடிக்காதீர்கள் என்று சொன்னார்கள். இவங்க பார்க்காமலேயே ரமலானுடைய 29 பார்த்துட்டு பெருநாள் கொண்டாடி இருக்கிறான் நோன்பு வைக்கிற முஸ்லிம்களை பார்த்துட்டு ஹராம் என்று சொல்றான்.
எவ்வளவு பெரிய அயோக்கியத்தனம் இது மார்க்கத்தில். அல்லாஹ்வுடைய தூதரின் வழிகாட்டுதல் படி நோன்பு வைக்கக் கூடிய உம்மத்தை பார்த்து அவர்கள் சொல்வது என்ன ஹராம் செய்யறீங்க பெருநாள் அன்னைக்கு நோன்பு வச்சிட்டீங்கன்னு சொல்லிட்டு.
பாதி பேருக்கு மார்க்கமும் தெரியாதா ஹதீஸும் தெரியாதா ஆமாங்க பெருநாள் அன்னைக்கு நோன்பு வைக்க கூடாதுங்க அப்படின்னு சொல்லி போயிடுறாங்க. ஜாஹிதுகள் பின்பற்றி எங்க போவாங்க கடைசில வழி கேட்டில் தான். பாருங்க ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவை வெற்றி கொண்டாங்க மதினாவுக்கு திரும்புறாங்க அங்கு ஒரு அமீர நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நியமிக்கிறாங்க. நீயே மிச்சீட்டு அவர கூப்பிடுறாங்க மக்காவுடைய முக்கியவர்களை கூப்பிடுகிறார்கள் உட்கார வைக்கிறாங்க ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்.
2338 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ أَبُو يَحْيَى الْبَزَّازُ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا عَبَّادٌ، عَنْ أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ الْحَارِثِ الْجَدَلِيُّ، مِنْ جَدِيلَةَ قَيْسٍ، أَنَّ أَمِيرَ مَكَّةَ خَطَبَ، ثُمَّ قَالَ: «عَهِدَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَنْسُكَ لِلرُّؤْيَةِ، فَإِنْ لَمْ نَرَهُ، وَشَهِدَ شَاهِدَا عَدْلٍ نَسَكْنَا بِشَهَادَتِهِمَا»، فَسَأَلْتُ الْحُسَيْنَ بْنَ الْحَارِثِ مَنْ أَمِيرُ مَكَّةَ، قَالَ: لَا أَدْرِي، ثُمَّ لَقِيَنِي بَعْدُ، فَقَالَ: هُوَ الْحَارِثُ بْنُ حَاطِبٍ أَخُو مُحَمَّدِ بْنِ حَاطِبٍ، ثُمَّ قَالَ الْأَمِيرُ: إِنَّ فِيكُمْ مَنْ هُوَ أَعْلَمُ بِاللَّهِ وَرَسُولِهِ مِنِّي، وَشَهِدَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَوْمَأَ بِيَدِهِ إِلَى رَجُلٍ، قَالَ الْحُسَيْنُ: فَقُلْتُ لِشَيْخٍ إِلَى جَنْبِي مَنْ هَذَا الَّذِي أَوْمَأَ إِلَيْهِ الْأَمِيرُ؟ قَالَ: هَذَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، وَصَدَقَ كَانَ أَعْلَمَ بِاللَّهِ مِنْهُ، فَقَالَ: «بِذَلِكَ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
அந்த மக்காவுடைய அமீர் சொல்லிக் காட்டுகிறார்ங்க ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எங்களிடத்திலே ஒப்பந்தம் வாங்கினார்கள், வாக்குறுதி வாங்கினார்கள், உடன்படிக்கை எடுத்தார்கள், எதற்கு? ஹஜ் உடைய அமல்களை வணக்க வழிபாடுகளை பிறையை பார்த்து நீங்கள் செய்ய வேண்டும் என்று.
அறிவிப்பாளர் : ஹுசைன் இப்னு அல்ஹாரிஸ் அல்ஜதலி ரழியல்லாஹு அன்ஹு , நூல் : அபூ தாவூது, எண் : 2338 (குறிப்பு 5)
இது எது? வரைக்கும் சயின்ஸ் வளர வரைக்கும் சைன்ஸ் வளர்ந்த பிறகு போயிடுங்க எல்லாரும் மார்க்கத்தை விட்டு அப்படியா? சயின்ஸ்ல எந்த ஒன்றுங்க மார்க்கத்தில் முரண்படுது மார்க்கம் என்பது முந்திய காலத்தில் இருந்து கியாம நாள் வரை உள்ள ஒன்று. உங்களுடைய சயின்ஸ் தான் மார்க்கத்துக்கு ஏற்றபடி நீங்க மாத்தணுமே தவிர மார்க்கத்தை மாற்ற முடியாது.
எதற்கு ஏற்ப சயின்ஸ்க்கு ஏற்ப. சயின்ஸ் மாற்றப்படும் வளைக்கப்படும். மார்க்கம் திருத்தப்படாது மாற்றப்படாது இது முடிவு செய்யப்பட்ட மார்க்கம். இந்த மார்க்கத்தில் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒப்பந்தம் வாங்குறாங்க நீங்கள் பிறையை பார்க்காமல் ஹஜ் உடைய கிரிகைகளை ஆரம்பிக்கக் கூடாது என்று புரியுதுங்களா.
2116 - أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ شَبِيبٍ أَبُو عُثْمَانَ، وَكَانَ شَيْخًا صَالِحًا بِطَرَسُوسَ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ حُسَيْنِ بْنِ الْحَارِثِ الْجَدَلِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدِ بْنِ الْخَطَّابِ، أَنَّهُ خَطَبَ النَّاسَ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ، فَقَالَ: أَلَا إِنِّي جَالَسْتُ أَصْحَابَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَسَاءَلْتُهُمْ، وَإِنَّهُمْ حَدَّثُونِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صُومُوا لِرُؤْيَتِهِ، وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، وَانْسُكُوا لَهَا فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا ثَلَاثِينَ، فَإِنْ شَهِدَ شَاهِدَانِ فَصُومُوا، وَأَفْطِرُوا
அறிவிப்பாளர் : அப்துல் ரஹ்மான் இப்னு ஜெய்து இப்புனுல் கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : நஸாயி, எண் : 2166 குறிப்பு 6
பிறை 29 சந்தேகமாக இருக்கு முடிஞ்சிடுச்சு அடுத்து நோன்பா இல்லையா என்று சொல்லி யவ்முஷ் ஷக்கா இருக்கு. அன்றைக்கு அந்த அமீர் மக்களுக்கு பிரசங்கம் பயான் நடத்துகிறாங்க அந்த சந்தேக நாளில் மக்களுக்கு சொன்னார்கள் மக்களே! நான் அல்லாஹ்வுடைய தூதரின் தோழர்களிடம் நட்பு வைத்திருந்தேன் அவர்களோடு பழகி இருக்கிறேன் அவர்களிடத்திலே படுத்து இருக்கிறேன்,
அவர்களிடத்திலே மார்க்கத்தை குறித்து கேட்டிருக்கின்றேன் அவர்கள் எல்லோரும் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னதாக பிறையைப் பார்த்து நோன்பை வையுங்கள் மக்களே பிறை பார்த்து நோன்பை விடுங்கள்.
மக்களே! ஹஜ்ஜுடைய அமலை பிறை பார்த்து வையுங்கள். உங்களுக்கு பிறை தெரியவில்லை என்றால் மாதத்தின் எண்ணிக்கையை 30 ஆக பூர்த்தி செய்யுங்கள். பிறை பார்த்ததாக இரண்டு சாட்சிகள் சாட்சி சொன்னால் நீங்கள் நோன்பை ஆரம்பிக்கலாம் நோன்பை முடிக்கலாம் காலண்டரைப் பார்த்து கிடையாது.
காலண்டரைப் பார்த்து நீ ஊருக்கு போறியா ஊர்ல இருந்து வரியா டிக்கெட் புக் பண்றியா கல்யாணத்தை புக் பண்றியா அது உன் தனிப்பட்ட விஷயம். நீ இபாதத்து செய்றியா எத பாத்து செய்யணும். கிலாஃபத் இல்ல உலக முஸ்லிம்களுக்கு யூதர்கள் செய்ற சதி ஹிஜ்ரா காலண்டர்ல. உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய காலத்தில் இருந்துச்சு உன்னை யாரு காலண்டர் வச்சிக்க வேண்டாம் என்று சொன்னா.
உன்னை யார் அந்த காலண்டரின் படி உன் கல்யாணத்தை குறிக்க வேணாம்னு சொன்னா. உன்னை யார் அந்தக் கல்யாணத்திற்கு படி உன்னுடைய பயண தேதியை குறிக்க வேண்டான்னு சொன்னான் சொன்னமா? ரமலான ஆரம்பிக்காதுன்னு சொன்னோம். ரமலான் முடிக்காதுன்னு சொன்னோம்
நாங்க ஏன் சொல்றோம் எங்களுக்கு நபி அப்படித்தான் சொன்னாங்க. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹ் அப்படித்தான் சொன்னான்.
يَسْأَلُونَكَ عَنِ الْأَهِلَّةِ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ وَلَيْسَ الْبِرُّ بِأَنْ تَأْتُوا الْبُيُوتَ مِنْ ظُهُورِهَا وَلَكِنَّ الْبِرَّ مَنِ اتَّقَى وَأْتُوا الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا وَاتَّقُوا اللَّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
(நபியே!) அவர்கள் பிறைகளைப் பற்றி உம்மிடம் கேட்கிறார்கள். நீர் கூறுவீராக: “அவை மக்களு(டைய கொடுக்கல் வாங்கலு)க்கும் ஹஜ்ஜுக்கும் காலங்களை அறிவிக்கக்கூடியவை ஆகும். இன்னும், நீங்கள் வீடுகளுக்கு அவற்றின் பின்வாசல்கள் வழியாக வருவது நன்மை இல்லை. எனினும், நன்மை என்பது யார் அல்லாஹ்விற்கு அஞ்சுகிறாரோ அதுதான். ஆகவே, நீங்கள் வீடுகளுக்கு அவற்றின் தலைவாசல்கள் வழியாக வாருங்கள். இன்னும் நீங்கள் வெற்றியடைவதற்காக அல்லாஹ்வை அஞ்சுங்கள்!” (அல்குர்ஆன் 2 : 189)
அல் குர்ஆன் அதுல எல்லா இபாதத்தும் வந்துரும். ஹிலால் என்பதற்கு அர்த்தம் தெரியாத முட்டாள்கள். அதான் அரபி படிக்கணும். இமாம் இப்னு கையிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவங்க எழுதுறாங்க இந்த பித்அத் செய்றாங்க பாருங்க அனாச்சாரம் இந்த பித்அத் செய்யக்கூடிய அனாச்சாரம் செய்யக்கூடிய இந்தப் பலபேருடைய வழிக்கேடு பித்அத்களுக்கு பல முக்கிய காரணங்கள் இருக்கு அதிலே முக்கிய காரணம்
அரபு மொழியை ஒழுங்காக தெரியாது. அறிவாளி ஹிலால் என்றால் பார்க்கப்பட்டது என்று பொருள். ஹிலால் என்றால் என்ன எந்த பிறை வானத்தில் உதித்து அது உங்கள் கண்ணால் பார்க்கப்பட்டதோ அது பிறை. இந்த அறிவாளி எப்படி தெரியுமா? சயின்ஸ் படி பிறை பிறக்குதல் பிறை உதித்தல் வேறு. ஷவ்வால் பிறை பகலில் 12 மணிக்கு உதித்திருச்சு.
அப்படின்னு சொல்லி எட்டு மணிக்கு பெருநாள் தொழுகை விட்டு போயிடுவான். ஷவ்வால் பிறை பகல் 12 மணிக்கு வானத்தில் உதிர்த்துச்சு அத நாங்க கண்டுபிடிச்சிட்டோம்னு சொல்லி. அந்த ஷவ்வால் பிற எப்போ தெரிஞ்சிடுச்சா அவங்களுக்கு பகல் 12 மணிக்கு தெரிந்திருச்சுன்னு சொல்லி இவர் நோன்பை நேத்த முடிச்சுட்டு சொல்லி காலைல 8 மணிக்கு பெருநாள் தொழுதுட்டா ஏழு மணிக்கு பெருநாள் தொழுதுட்டா முடிஞ்சிருச்சா கதை.
அதேபோல தான் ரமலானுடைய பிறை இருக்குதுல இவங்களுக்கு ஷாபான் பிறை 29 உடைய பகலிலேயே வந்துருச்சு. அந்த இரவு தராவீஹ் தொழுதுடுவாங்க. அல்லது அவங்க வந்து தொழுகையை ஆரம்பிச்சுடுவாங்க. இன்னும் என்ன தெரியுமா அநியாயம் அதாவது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவங்க சஹாபாக்கள் தாபியீன்கள் அதுக்கு முன்னாடி உள்ள பிறையை பார்த்து வைத்துக் கொண்டு இருந்த அரபுகள் இவங்க எல்லாருமே பிறையை தப்பா பார்க்கிறார்களா.
எப்படின்னு சொன்னா பிறையை மேற்கில் சூரியன் மறைந்த உடனே பார்க்க கூடாதா காலையில சுபுவுக்கு பிறகு கிழக்குல பார்க்கணுமா பிறையை எங்க பார்க்கணுமா கிழக்கு பக்கம் பார்க்கணுமா. உண்மையிலங்க இந்த சயின்டிஃபிக் பிறை கால்குலேட் பண்ணுவாங்களா இந்த அஸ்ட்ரானமில அவர்களே இந்த முட்டாளுடைய பேச்சைக் கேட்டு சிரிக்கிறார்கள்.
ஏண்டா ஒரு கிறுக்குத்தனத்துக்கு அளவே இல்லையா என்று சொல்லி. உலகத்திலே இந்த கால்குலேஷன் படி யாராவது போயிருக்கிறார்கள் என்று சொன்னால் சில குறிப்பிட்ட மக்கள் போயிருக்காங்க. அந்தக் கால்குலேஷன் எதுக்கு எப்ப எடுப்பாங்கன்னு சொன்னா நல்லா கவனிங்க பிறை 29 முடிஞ்சு பிறை மகஃரிபு நேரத்துல வானத்தில் உதிர்த்து அது பார்க்கப்படுவதற்கு சாத்தியம் இருந்து ஆனால் பிற கண்களால் அது துல்லியமாக இருக்க அது பார்க்கப்பட முடியாது என்ற காரணத்தினால் இந்த சூழ்நிலையில் அந்தப் பிறையை எடுத்துக் கொள்ளலாம் என்று ஒரு குறிப்பிட்டவர்கள் சொல்கிறார்கள்.
எந்த அளவுக்கு இதுதான் பிறையை கணக்கின் அடிப்படையில் முடிவு செய்தல் என்பதுல சில அறிஞர்களுடைய அந்த இறுதிக் கருத்து இதுதான். இந்த முட்டாள்கள் சொன்ன மாதிரி 12 மணிக்கு பிறந்த பிறையை வெச்சுக்கிட்டு காலையில் 7 மணிக்கு பெருநாள் கொண்டாடுவது இனிக்கும் மத்தியானம் 12 மணிக்கு வானத்துல ரமலானுடைய பெற உதித்துச் என்று சொல்லிட்டு அடுத்த நாள் நோன்பு வைக்கிறது. இந்த முட்டாள் தனத்தை உலகத்துல எந்த அறிஞரும் சொல்லவில்லை. புரியுதா உங்களுக்கு வித்தியாசம்.
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரமலானை 30 ஆக நீங்கள் பூர்த்தி செய்யுங்கள் எப்போது பிறை தெரியவில்லை என்றால். அதுபோன்று ஷாபானை 30 ஆக பூர்த்தி செய்யுங்கள் ரமலானுடைய பிறை தெரியவில்லை என்றால். மீதி யாராவது சந்தேக நாளில் நோன்பு வைத்தால் அவர் என்ன செய்து விட்டார்
அபுல் காசிம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு மாறு செய்து விட்டார். ஆகவே என் அன்பிற்குரியஅல்லாஹ்வின் நல்லடியார்களே! இந்த விஷயத்துல ரொம்ப கவனமா இருந்துக்கணும் இந்த ஃபித்துனா நாளுக்கு நாள் பெருகி கொண்டிருக்கின்றது.
ரமலானை நாம் ஆசையோடு, அன்போடு எதிர்பார்த்து இருக்க வேண்டும். ஏன் சகோதரர்களே? இந்த ரமலான் அல்லாஹுத்தஆலா வேதங்களை இறக்குவதற்காக தேர்ந்தெடுத்த மாதம். அவனுடைய இறுதி வேதம் ஆகிய அல்குர்ஆன் அல்லாஹ்வுடைய கலாம்களிலேயே சிறந்த கலாமாகிய அல்குர்ஆன் இறக்கப்படுவதற்காக ரப்புல் ஆலமீன் தேர்வு செய்த மாதம்.
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ فَمَنْ شَهِدَ مِنْكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ وَمَنْ كَانَ مَرِيضًا أَوْ عَلَى سَفَرٍ فَعِدَّةٌ مِنْ أَيَّامٍ أُخَرَ يُرِيدُ اللَّهُ بِكُمُ الْيُسْرَ وَلَا يُرِيدُ بِكُمُ الْعُسْرَ وَلِتُكْمِلُوا الْعِدَّةَ وَلِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ
ரமழான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாகவும் நேர்வழி உடைய சான்றுகளாகவும் இன்னும் உண்மை, பொய்யை பிரித்தறிவிக்கின்ற தெளிவான சத்தியத்தின் சான்றுகளாகவும் உள்ள அல்குர்ஆன் இறக்கப்பட்டது. ஆகவே, உங்களில் எவர் அம்மாதத்தில் (உள்ளூரில்) தங்கி இருப்பாரோ அவர் அதில் கண்டிப்பாக நோன்பு நோற்கவும். இன்னும், எவர் நோயாளியாக அல்லது பயணத்தில் இருப்பாரோ அவர் (அந்த நோன்பை) மற்ற நாட்களில் கணக்கிடவும். அல்லாஹ் உங்களுக்கு இலகுவை நாடுகிறான். சிரமத்தை நாடமாட்டான். (நோன்பின்) எண்ணிக்கையை நீங்கள் முழுமைப்படுத்துவதற்காகவும்; உங்களை நேர்வழிபடுத்தியதற்காக அல்லாஹ்வை நீங்கள் பெருமைப்படுத்துவதற்காகவும்; நீங்கள் நன்றி செலுத்துவதற்காகவும் (ரமழான் மாதத்தில் நோன்பிருங்கள்)! (அல்குர்ஆன் 2 : 185)
அல்குர்ஆன் இறக்கப்பட்ட மாதம் இது அல்லாஹ் சுபஹானஹூதஆலா இந்த மாதத்தை முஃமீன்கள் இபாதத்தோடு கழிக்க வேண்டும் என்பதற்காக பகல் நேரத்திலே நம் மீது நோன்பை கடமையாக்கி விட்டான். வேற இபாதத்தினால் கொஞ்ச நேரம் செய்வோம் அதோட ஓடிப் போயிடுவோம்.
இந்த நோன்பு எப்படின்னு சொன்னா பகல்ல ஆரம்பிச்சிட்டா நீ தூங்குனா கூட எப்படி இருக்கிற சுபஹானல்லாஹ். அல்லாஹ்வுடைய ரஹ்மத்தை பாருங்கள் நம்மை இபாதத்தில் வைக்க வேண்டும் என்று நம்மை அவனுடைய இபாதத்திலே வைக்க வேண்டும் என்று அல்லா எப்படி ஒரு நோன்பை கொடுத்தான் நீ தூங்கினாலும் இபாதத்து நீ வியாபாரத்துக்கு போனாலும் இபாதத்து. நீ ஸ்கூலுக்கு படிக்கப் போனாலும் இபாதத்துன்னு சொல்லி நோன்பு அல்லாஹ் கொடுத்தான்.
இந்த நோன்பு காலை ஸஹர் செய்ததிலிருந்து அடுத்து இஃப்தார் வரைக்கும் நீங்கள் எதில இருக்கிறீங்க இபாதத்தில் இருக்கிறீங்க. ரொம்ப பேரு இந்த ஹிக்மத்தை யோசிக்கிறது இல்லை. நோன்பு அவர் ஆரம்பித்ததில் இருந்து முடிற வரைக்கும் எதில் இருக்கிறாரு இபாதத்தில் இருக்கிறார்.
இவ்வளவு நீண்ட நேரம் அடியான அல்லாஹுத்தஆலா இபாதத்துல வச்சிருக்கான். ஒழு இல்லனா கூட நீ இபாதத்தில் இருக்க தூக்கத்துல உனக்கு குளிப்பு கடமையாயிட்டாலும் நீ இபாதத்தில் இருக்கிற வியாபாரம் செய்து கொண்டு இருந்தாலும் இபாதத்தில் இருக்கிற அல்லாஹு அக்பர். விசால ரஹ்மத்தை பாருங்கள்! அல்லாஹ்வுடைய விசாலமான கருணையை பாருங்கள்.
சரி இதனுடைய இரவு காலங்களை அல்லாஹுத்தஆலா நம் மீது அவனுடைய அருளினால், ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறையாக ஆக்கிவிட்டான் இதனுடைய இரவுகளிலே நாம் விழித்திருந்து நம்மால் முடிந்த அளவு குர்ஆனை ஓதுவதையும் தொழுவதையும்.
அதுலயும் அல்லாஹுத்தஆலா நம் மீது எவ்வளவு கருணையாளன் முதல் 10ல இரண்டாவது 10ல இரவுல கூட நீ ஒய்வு கூட எடுத்தேக்கோ கொஞ்சோ தூங்கிக்கோ ஒன்னு பிரச்சனை இல்லை பாதி இரவு தூங்கிக்கோ அல்லது இரவுல இரண்டு பகுதி தூங்கிக்கோ
மூன்றில் ஒரு பகுதி அமல் செய். ஆனால் இந்த கடைசி பத்து வந்து விட்டால் அடியானே பகல் ஃபுல்லா நீ இபாதத்தில் இருக்கிற மாதிரி இரவெல்லாம் எனக்காக வேண்டி விழித்திரு ஏனென்றால் நான் உனக்காக இந்த கடைசி இரவில் ஒரு இரவை வச்சிருக்கேன் உனக்காக மகத்துவம் மிக்க ஒரு இரவு வைத்திருக்கேன் குர்ஆன் இறக்கப்பட்ட இரவு.
إِنَّا أَنْزَلْنَاهُ فِي لَيْلَةِ الْقَدْرِ وَمَا أَدْرَاكَ مَا لَيْلَةُ الْقَدْرِ لَيْلَةُ الْقَدْرِ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ تَنَزَّلُ الْمَلَائِكَةُ وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ مِنْ كُلِّ أَمْرٍ سَلَامٌ هِيَ حَتَّى مَطْلَعِ الْفَجْرِ
நிச்சயமாக நாம் இதை ‘கத்ர்’ இரவில் இறக்கினோம்.,(நபியே!) ‘கத்ர்’ இரவு என்னவென்று உமக்கு அறிவித்தது எது?,‘கத்ர்’ இரவு ஆயிரம் மாதங்களைவிடச் சிறந்தது.,அதில் வானவர்களும், ஜிப்ரீலும் தங்கள் இறைவனின் அனுமதிகொண்டு (அந்த ஆண்டுக்குரிய அல்லாஹ்வின்) எல்லாக் கட்டளைகளுடன் இறங்குகிறார்கள். ,ஸலாம் (-ஈடேற்றம்) உண்டாகுக! அது அதிகாலை உதயமாகும் வரை (நீடிக்கிறது). (அல்குர்ஆன் 97 : 1, 2, 3, 4, 5)
அல்குர்ஆன் அல்லாஹுத்தஆலா குர்ஆன்ல ஒரு இஷாராவே ஒரு விஷயத்தை சொன்னா அது எவ்ளோ பெரிய விஷயம். ஒரு சூராவையே அல்லாஹ் சுபஹானஹூதஆலா இந்த குர்ஆன் இறக்கப்பட்ட இரவுக்காக இறக்கி அதன் மகத்துவத்தை கண்ணியத்துவத்தை நமக்கு சொல்லித் தருகிறான் என்றால்.
சகோதரர்களே அந்த இரவு உள்ள மாதத்தை எதிர்பார்ப்பதை விட அதை அடைய வேண்டும் என்ற ஆசை இருப்பதை விட அந்த மாதத்தில் அமல் செய்ய வேண்டும் அல்லாஹ் எனக்கு வாழ்க்கையை கொடு என்ற பிராத்திப்பதை விட இந்த முஃமினுக்கு வேறு என்ன பெரிய ஆசை இருக்க வேண்டும். நம்முடைய மார்க்கத்தை இன்னும் ஆழமா சிந்திக்கிறது இல்லை,
தீனுடைய தத்துவங்களை நாம தேடுறதில்ல. ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எவ்வளவு அழகா சொல்றாங்க பாருங்க ஏன் ரமளானை நாம் எதிர்பார்க்கிறோம்? ஏன் ரொம்ப ரமளானுக்காக நான் தயாரிப்பதாக இருக்கணும்?
16 - (233) حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَهَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ، قَالَا: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، عَنْ أَبِي صَخْرٍ، أَنَّ عُمَرَ بْنَ إِسْحَاقَ مَوْلَى زَائِدَةَ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «الصَّلَوَاتُ الْخَمْسُ، وَالْجُمْعَةُ إِلَى الْجُمْعَةِ، وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ، مُكَفِّرَاتٌ مَا بَيْنَهُنَّ إِذَا اجْتَنَبَ الْكَبَائِرَ»
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : முஸ்லிம், எண் : 233 குறிப்பு 7
ரமலான் மட்டுமல்ல ஒவ்வொரு தொழுகைக்கும் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏழு கூட்டத்தார்கள் அர்ஷுடைய நிலையில் இருப்பார்கள் என்று கூறும் போது என்ன வார்த்தை சொன்னார்கள் ஒரு மனிதர் பள்ளியில் முன் கூட்டியே வரக்கூடியவர்கள்,
660 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ بُنْدَارٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ، يَوْمَ لاَ ظِلَّ إِلَّا ظِلُّهُ: الإِمَامُ العَادِلُ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ، فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ، أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ
ஒரு மனிதர் பள்ளியில் அதான் சொன்ன உடனே வரக்கூடியவர், எப்பொழுதும் முதல் ரக்காத்திலே தொழக் கூடியவர், இப்படி எல்லாம் வாசகம் இப்படி எல்லாம் வாசகம் இருக்கு. இதில் ஏதாவது ஒன்று ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தேர்ந்தெடுத்தாங்களா. என்ன வார்த்தையை தேர்ந்தெடுத்தார்கள். அந்த ஒரு மனிதன் அவனுடைய உள்ளமோ மஸ்ஜிதுகளிலே தொங்க விடப்பட்டிருக்கின்றது.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : புகாரி, எண் : 660 குறிப்பு 8
என்ன கருத்தால மிக்க வார்த்தை எவ்வளவு இலக்கிய நயம் அவர் மனைவியோடு இருக்கிறார் ஆனால் அவருடைய கல்வி பள்ளிகளில் இருக்கின்றது. அவர் வியாபாரத்தில் இருக்கிறார் அவருடைய கல்வி பள்ளியில் இருக்கிறது. அவர் பயணத்தில் இருக்கிறார் தொழிலே இருக்கிறார் எங்க இருந்தாலும் சரி அவருடைய தொழுகையின் எதிர்பார்ப்பு அது ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஒப்பிடறாங்க அவருடைய கல்பு பள்ளியிலே தொங்கவிடப்பட்டிருக்கின்றது.
அத்தகைய தேடல் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதேபோல தான் ரமலானிலே சொல்கின்றார்கள் ஐந்து நேர தொழுகைகள், ஜும்மா உடைய தொழுகை அடுத்த ஜும்மா வரை, ரமலான் உடைய மாதம் அடுத்த ரமலான் வரை
அவற்றுக்கு மத்தியில் மனிதன் செய்கின்ற அத்தனை பாவங்களையும் இவை போக்கி விடுகின்றன. அந்த அடியான் பெரும் பாவத்தை விட்டு விலகி இருப்பாறா ஆனால். நம்ம கண்ணால செய்தது காலால செஞ்சது கையால செஞ்சது மனசால செஞ்சது லட்சக்கணக்கான சிறு பாவங்கள். பெரும் பாவத்தை ஒரு மனிதன் நினைவை வைத்து அதற்காக வேண்டி தவ்பா செய்துவிடுவான்.
அவனுடைய உள்ளத்திலே ஈமான் இருக்குமேயானால் பெரும் பாவத்தை எந்த ஒரு முஃமினும் தொடர மாட்டான் தொடக்கூடாது தொடர்ந்தால் இமான் டேமேஜ் ஆகிவிடும். இந்த சிறுபாவம் இருக்குதே போர போக்குல பாக்குறது போற போக்குல கேட்கிறது
அல்லது, ஏதாவது ஒன்னு மனசுல உதித்து நடந்துறது அல்லாஹுத்தஆலா எப்படி அருள் பாலிக்கின்றான் நீ ரமலான் அடைஞ்சிட்டேன்னு சொன்னா போன ரமலானில் இருந்து அடுத்த ரமலான் வரை உன்னுடைய சிறு பாவங்கள் எத்தனை மில்லியன் அல்ல டிர்ள்ளியன் அளவு இருந்தாலும் மன்னிச்சிட்ரேன் சொல்கிறான்.
அல்லாஹு அக்பர் எவ்ளோ பெரிய ரஹ்மான் பாருங்க. இந்த ரமலான இப்படிப்பட்ட ரமலானை எதிர்பார்க்கிறத விட வேறு என்னங்க வேலை இருக்கு. இப்படிப்பட்ட ரமலானை அடைய வேண்டும் என்ற ஆசையை விட வேறு என்னங்க பெரிய ஆசை இருக்க முடியும். இன்னும் பாருங்க ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்படி சொல்றாங்க
2106 - أَخْبَرَنَا بِشْرُ بْنُ هِلَالٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَاكُمْ رَمَضَانُ شَهْرٌ مُبَارَكٌ فَرَضَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْكُمْ صِيَامَهُ، تُفْتَحُ فِيهِ أَبْوَابُ السَّمَاءِ، وَتُغْلَقُ فِيهِ أَبْوَابُ الْجَحِيمِ، وَتُغَلُّ فِيهِ مَرَدَةُ الشَّيَاطِينِ، لِلَّهِ فِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ، مَنْ حُرِمَ خَيْرَهَا فَقَدْ حُرِمَ
ரமலான் உங்களுக்கு வரப் போகிறது ரமலானுக்கு முன்னாடியே அதுக்காக நீங்கள் தயாராக வேண்டும். மனதளவு தயாராகணும்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : நஸாயி, எண் : 2106 குறிப்பு 9
فَإِذَا فَرَغْتَ فَانْصَبْ وَإِلَى رَبِّكَ فَارْغَبْ, وَأَنِيبُوا إِلَى رَبِّكُمْ وَأَسْلِمُوا لَهُ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَكُمُ الْعَذَابُ ثُمَّ لَا تُنْصَرُونَ
ஆகவே, நீர் (உமது உலக வேலைகளில் இருந்து, அல்லது மார்க்க காரியங்களில் இருந்து) ஓய்வு பெற்றால் (அல்லாஹ்வை வணங்குவதில் முழுமையாக ஈடுபட்டு) களைப்படைவீராக!,இன்னும், உம் இறைவனின் பக்கம் ஆர்வம் கொள்வீராக!, இன்னும், உங்கள் இறைவன் பக்கம் திரும்புங்கள்! உங்களுக்கு தண்டனை வருவதற்கு முன்னர் அவனுக்கு முற்றிலும் பணிந்து விடுங்கள். (அல்லாஹ்வின் தண்டனை வந்துவிட்டால்) பிறகு, நீங்கள் உதவி செய்யப்பட மாட்டீர்கள். அல்குர்ஆன் (94 : 7, 8, 39 : 54)
கல்பை அல்லாஹ்வின் பக்கம் முன்னோக்கி ஆசைகளை அல்லாஹ்வுடைய அமல்களிலே நிலைத்துக் கொள்ள வைத்து உலக ஆசைகளில் இருந்து உள்ளத்தை துண்டித்து வைத்து மறுமையின் மீது முன்னோக்கி வைத்து அந்த எதிர்பார்ப்பு இருக்கணும்.
அதுக்கு தான் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விசேஷமாக சொல்றாங்க ரமலான் வரப்போகிறது. இல்லையென்றால் மறதியோடு வந்து மறதியோடு போக வேண்டியது தான். சொன்னாங்களா நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இப்னு குசைஃப் உடைய அறிவிப்பு
2022 - حَدَّثَنَا عَبْدَانُ بْنُ أَحْمَدَ، ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ عُبَيْدِ بْنِ عَقِيلٍ، ثنا إِسْمَاعِيلُ بْنُ أَبَانَ، ثنا قَيْسُ بْنُ الرَّبِيعِ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرٍ، قَالَ: صَعِدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمِنْبَرَ، فَقَالَ: «آمِينَ آمِينَ آمِينَ» قَالَ: " أَتَانِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ، فَقَالَ: يَا مُحَمَّدُ مَنْ أَدْرَكَ أَحَدَ وَالِدَيْهِ فَمَاتَ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللهُ قُلْ آمِينَ، فَقُلْتُ: آمِينَ، قَالَ: يَا مُحَمَّدُ مَنْ أَدْرَكَ شَهْرَ رَمَضَانَ فَمَاتَ فَلَمْ يُغْفَرْ لَهُ فَأُدْخِلَ النَّارَ فَأَبْعَدَهُ اللهُ قُلْ آمِينَ، فَقُلْتُ: آمِينَ، قَالَ: وَمَنْ ذُكِرْتَ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ فَمَاتَ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللهُ، قُلْ آمِينَ، فَقُلْتُ: آمِينَ "
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிம்பரிலே ஏறினார்கள் மூன்று முறை ஆமீன் என்று சொன்னார்கள். ரசூலுல்லாஹி இடத்திலே கேட்கப்பட்டது அல்லாஹ்வுடைய தூதரே நீங்க என்ன செய்து கொண்டு இருந்தீர்கள். சொன்னார்கள் எனக்கு ஜிப்ரீல் வந்தார்,
ஒரு அடியான் நாசமாவானாக அல்லது ஒரு அடியான் அல்லாஹ்வுடைய கருணையிலிருந்து தூரமாக்குவானாக அல்லாஹ்வின் சாபம் இறங்கட்டும் அவன் மீது என்று ஜிப்ரீல் சொன்னார்; எந்த அடியான் ரமலான் வந்தது ஆனால் அவனுடைய பாவங்கள் மன்னிக்கப்படவில்லை நான் சொன்னேன் ஆமீன் என்று.
அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு , நூல் : முஃஜம் கபீர் தப்ரானீ, எண் : 2022 குறிப்பு 10
நாங்கல்லாம் ரமலானுக்காக தயாரிப்பு செய்ய ஆரம்பிச்சிட்டோங்க. ரமலான் வந்துருச்சு வந்துருச்சு சாமான் வாங்கி வைங்க என்ன சாமான்கள் குர்ஆன் ஹதீஸ் புக் கிடையாது. ரமலான் வந்துருச்சு பர்ச்சேஸ் முடிஞ்சுச்சா. தயாரிப்பு பள்ளிவாசல் பெயிண்ட் அடிச்சாச்சு பாய போட்டாச்சு ரமளான் வருது இதுதான் நம்ம தயாரிப்பு.
ஹதீஸ் கிதாபுல எங்கேயாவது ரமலான் வருவதற்காக வேண்டி பள்ளி எல்லாம் முன்கூட்டியே பெயிண்ட் அடிச்சு ரெடி பண்ணாங்க. முஃமின்கள் எல்லாம் முன்னாடியே சமையல் சாமான் எல்லாம் ரெடி பண்ணி வெச்சிக்கிட்டாங்க.
பெருநாளுக்காக முன்னாடியே சட்டை எல்லாம் வாங்கி வச்சுக்கிட்டாங்க. அப்படின்னு எங்கேயாவது ஒரு கடைசி தாபீயின் ஆவது ஒரு அமல் செய்து இருக்கிறாரா ஒண்ணுமே இல்ல. இருக்கிற டிரஸ்ல ஒரு நல்ல டிரஸ் வச்சுப்பாங்க ஜும்மாவில் போடுவதற்கு அவ்வளவுதான் இருக்கிற டிரஸ்ல ஏற்கனவே வாங்கி வச்சிருக்கீங்களா அதுல ஒரு நல்ல டிரெஸ்ஸா பார்த்து சுத்தம் பண்ணி எதுக்கு வச்சிக்கிறது.
மொத்தமா ஜும்மாவுக்கும் பெருநாளுக்கும் வச்சிக்கிறது. எங்கேயுமே இஸ்லாமிய வரலாறுகளில் ரமலானுக்காக ஸ்பெஷல் பர்ச்சேஸ் இருக்கான்னு இமாம் கிட்ட கேட்டுக்கோங்க நான் சொல்றது தப்புனா நான் உடனே மாத்திக்கிறேன். ரமனுக்காக ஸ்பெஷல் பர்ச்சேஸ் அப்படின்னு சொல்லி ஹதீஸ் கிதாபுல நமக்கு கிடைக்கு தான் தேடிப் பார்த்தால் கிடைக்கல.
ஒன்னு கிடைக்குது ஆனா அத நம்ப செய்ய மாட்டோம் அது என்னன்னா நம்முடைய முன்னோர்கள் ஸலஃப் ஸாலிஹீன் என்ன செய்வாங்கனா ஷாபான் மாதம் வந்துட்டாலே வியாபாரத்தை எல்லாம் ஸ்டாப் பண்ண ஆரம்பிச்சிடுவாங்க. நம்ம உல்ட்டா. என்னடா வியாபாரத்தை ஸ்டாப் பண்ண ஆரம்பிச்சிட்டாங்கடானா ரமலான்ல தராவீஹ்ல குர்ஆன் ஓதனும் மற்ற நேரங்களில் குர்ஆன் ஓதனும்னு சொல்லிட்டு ஷாபான்ல குர்ஆன் ஓதி பிராக்ஸ் ட்ரீஸ் எடுக்க ஆரம்பிச்சிடுவாங்க.
ரமலான்ல கியாமுல் வைத்து குர்ஆன் ஓதனும் இல்ல அதற்காக வேண்டி ஷாபானை குர்ஆன் ஓதுவதற்காக குர்ஆனை மனப்பாடம் செய்ததை உறுதிபடுத்திக் கொள்வதற்காக ஷாபானை ரிசர்வ் பண்ண ஆரம்பிச்சுடுவாங்க. அப்போ கடைசியில ரமலான் வந்துட்டா முடிஞ்சு போச்சா அவ்வளவுதான் அப்படியே இபாதத்துக்காக அவர்கள் ஒதுங்கி விடுவார்கள். யோசிச்சு பாருங்க நம்ம என்ன செய்றோம் மனசாட்சியோடு சொல்லுங்கள் நாம் ரமலான்ல நம்ப நோன்பு தான் வெக்கிறோம் என்று சொல்லி.
நம்ம சாப்பிடுற டைம்ம மாத்தி வச்சிருக்கோம் ஏழு மணி எட்டு மணி ஒன்பது மணிக்கு டிபன் சாப்பிடுவதை சஹர்ல சாப்பிடுறோம். மதியான லன்ச 6:30 மணிக்கு சாப்பிடறோம். டின்னரே டின்னர் நேரத்துல வெட்டிறோம். அடுத்து தராவிக்கு பின்னாடி எக்ஸ்ட்ரா பிட்டிங் போட்டுக்கறோம். எங்கேயாவது ரமலான்ல சாப்பாடு உடைய அளவை குறைச்சோம்னு சொல்லி மனசாட்சியை தொட்டு சொல்லுங்க.
பரக்கத்தால் சாப்பிடுங்க பரக்கத்தால் நோன்பு தொறங்க. பட்டினியா இருக்குது பரக்கத்துங்க ரமலான்ல. குறைவா சாப்பிடுவது பரக்கத். சுன்னத்துக்கு மாற்றமா வயிறு முழுக்க சாப்பிடுவது பரக்கத் என்று சொல்கிறான். அது பரக்கத்துல வயிறு பிழைக்க சாப்பிட்டா உன்னால மக்ரிஃபே தொழ முடியாது எப்படி தராவிஹ் தொழுவ.
இமாம் தராவீல அல்லாஹ் தொழ வச்சுட்டு இருப்பார் பின்னாடி பின்னாடி வரவங்க பாட்டில் தண்ணி குடிச்சிட்டு இருப்பாங்க கட கடன்னு. அவர் பாவம் அவர் பாட்டுக்கு ஓதி ஓதி தொழ வச்சுட்டு இருப்பாரு பின்னாடி தொழுறங்க எப்படி கொடுக்குறாங்க தண்ணி பாட்டில் பாட்டிலா காலியாகுது. உன் ஐடியாவை அல்லாஹ் கிட்ட காட்டாத இபாதத்துல காட்டாத.
மனிதனுடைய நஃப்ஸ பாருங்க எப்போ சுன்னத்தை மீறுகிறானோ அப்பொழுது அவருடைய நஃப்ஸு எப்படி கெடுக்கிறது இதுல என்ன தெரியுமா விஷயம் இந்த நப்ஸை நாம் எப்படி பக்குவப்படுத்துறோமோ அப்படிதான்.
அல்ஹம்துலில்லாஹ் எனக்கு போதும் அப்படின்னு நினைத்து வையுங்க அல்லாஹ் அதுல பரக்கத் செய்வான். எந்த அளவு நம்முடைய முதுகை நிமிர அளவுக்கு சாப்பிட்டு அல்ஹம்துலில்லாஹ் என்று வந்துவிடுகிறோமோ நீ இரவு தொழுகையை ராகத்தா செய்யலாம்.
எப்போ அதிகமா சாப்பிடுறானோ அப்போ அவனுக்கு சோம்பேறித்தனம் அதிகமாகும் தாகம் அதிகம் எடுக்கும் தூக்கம் அதிகமாக வரும். எப்போ உணவை குறைக்கிறானோ ஆட்டோமேட்டிக்கா அவனுக்கு தூக்கத்தினுடைய தேடல் இருக்காது தண்ணீருடைய தேடலில் இருக்காது இபாதத்தில் அதிகமா நேரம் செலவு பண்ண முடியும். இததான் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் சஹாபாக்களும் செஞ்சாங்க.
يَاأَيُّهَا الْمُزَّمِّلُ قُمِ اللَّيْلَ إِلَّا قَلِيلًا نِصْفَهُ أَوِ انْقُصْ مِنْهُ قَلِيلًا أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا
போர்வை போர்த்தியவரே! (வணக்க வழிபாட்டுக்காக) இரவில் எழுந்து தொழுவீராக, (இரவில்) குறைந்த நேரத்தைத் தவிர! (அந்த குறைந்த நேரத்தில் ஓய்வெடுப்பீராக!) ,அதன் (-இரவின்) பாதியில் எழுந்து தொழுவீராக! அல்லது, அதில் கொஞ்சம் குறைப்பீராக! (-இரவின் மூன்றில் ஒரு பகுதி வணங்குவீராக!), அல்லது, அதற்கு மேல் அதிகப்படுத்துவீராக! (இரவில் மூன்றில் இரு பகுதி வணங்குவீராக!) இன்னும், (தொழுகையில்) குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக! (அல்குர்ஆன் 73 : 1, 2, 3, 4)
அதனால அவர்களுக்கு அல்குர்ஆன் (73:1-4) இது லேசாகிவிட்டது. கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே ஆக இந்த ரமலான் என்பது அமல்களுக்காக எதிர்பார்க்கப்படக்கூடிய மாதம். அந்த ரமலானுக்காக தயாரிப்பு என்பது உணவுகளை சேமித்து வைப்பது புதிய உடைகளை வாங்குவதோ அல்லது நமது வீடுகளை மசூதிகளை வெளிறங்கமான பொருள்களைக் கொண்டு அலங்கரிப்பதோ அல்ல.
இபாதத்துக்காக வேண்டி நம்மை தயாரிப்பது. இப்போதே குர்ஆன் ஓதுவதில் அதிக நேரத்தை ஈடுபடுத்துவது. அது மட்டுமா ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பற்றி நம்முடைய பாசத்திற்குரிய நேசத்திற்குரிய மதிப்பிற்குரிய நம்முடைய அன்னை ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் சொல்லுகின்றார்கள்:
176 - (1156) وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، جَمِيعًا عَنِ ابْنِ عُيَيْنَةَ، قَالَ أَبُو بَكْرٍ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ أَبِي لَبِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، عَنْ صِيَامِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: " كَانَ يَصُومُ حَتَّى نَقُولَ: قَدْ صَامَ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ: قَدْ أَفْطَرَ، وَلَمْ أَرَهُ صَائِمًا مِنْ شَهْرٍ قَطُّ، أَكْثَرَ مِنْ صِيَامِهِ مِنْ شَعْبَانَ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ، كَانَ يَصُومُ شَعْبَانَ إِلَّا قَلِيلًا "
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை நான் பார்த்ததில்லை ரமலான் அல்லாத வேறு ஒரு மாதத்தில் முழுமையாக நோன்பு வைத்தவர்களாக இந்த ஷாபான் மாதத்தை தவிர. இந்த ஷாபான் மாதம் வந்துவிட்டால் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதிகமாக நோன்பு வைப்பார்கள்.
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : முஸ்லிம், எண் : 1156 குறிப்பு 11
ஷாபான் மாசத்துல எதுக்காக நோன்பு அதுதான் ஒவ்வொரு ஹதீஸையும் தத்துவத்தையும் புரிய ஆரம்பிக்கணும் நம்ம ஆளுங்க என்ன சொல்றாங்க ரமலான் வருது சாப்பிட்டு தெம்பாய் இரு. நோன்பு வருதா நோன்பு வைக்கணுமா என்ன செய்யணுமா நல்லா சாப்பிட்டு மூன்று வேலை நல்லா தின்னி தெம்பா இரு.
இப்போ ஒலிம்பிக்கில் போய் ஓடணும் ஒலிம்பிக்கில் ஓடணும் பா தூங்க போனா சொல்லுவிங்க போட்டி வருது போட்டியில் ஜெயிக்கணும் ஃபர்ஸ்ட் ஆளா வரணும் என்ன செய்யணும் பிராக்டிஸ் எடுக்கணுமா இல்ல பெட்டில்ல படுத்து தூங்கனுமா.
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்றாங்க ரமலானுடைய நோன்பு வருது அது சிறப்பா கவனிக்கிறது இப்ப ஷாபானில் நோன்பு வையுங்கள் என்று சொல்கிறார்கள். ரமலான் உடைய பிறை ஒன்னு இருக்கு பாருங்க முதல் நோன்பு பள்ளியில் பார்த்தா அசர் தொழுதுட்டு இல்லனா அஸருக்கு முன்னாடி எல்லா ஷஹீது ஆயிட்டு இருப்பாங்க அப்படியே தொழுதுட்டு கிடப்பாங்க.
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ன செஞ்சாங்க ஷாபான் மாதத்தில் நோன்பினை கழித்துக் கொண்டே இருந்தார்கள் நோன்பை வைத்துக் கொண்டே இருந்தார்கள். கடைசியில் யவ்முஷ் ஷக்கில் மட்டும் நிப்பாட்டிக்கிறது.
அப்போ ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ரமலானை ஷஹ்ருன் முபாரக் என்று சொன்னார்கள் பரக்கத் எதில் இருக்கு அமல்களில் இருக்கு. அல்லாஹுத்தஆலா நோன்பு வைப்பதை உங்கள் மீது கடமையாக்கினான் வானத்தின் கதவுகள் அதிலே திறக்கப்படுகின்றன.
2106 - أَخْبَرَنَا بِشْرُ بْنُ هِلَالٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَاكُمْ رَمَضَانُ شَهْرٌ مُبَارَكٌ فَرَضَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْكُمْ صِيَامَهُ، تُفْتَحُ فِيهِ أَبْوَابُ السَّمَاءِ، وَتُغْلَقُ فِيهِ أَبْوَابُ الْجَحِيمِ، وَتُغَلُّ فِيهِ مَرَدَةُ الشَّيَاطِينِ، لِلَّهِ فِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ، مَنْ حُرِمَ خَيْرَهَا فَقَدْ حُرِمَ
துவாக்கள் அங்கீகரிக்கப்படுகின்றன சொர்க்கத்தின் உடைய கதவுகள் திறக்கப்படுகின்றன. நரகத்தினுடைய வாசல்கள் பூட்டப்படுகின்றன. சைத்தான்களிலே வம்பு செய்யக்கூடியவர்கள் அந்த சைத்தானுடைய மூர்க்கர்கள் அதிலே விளங்கிடப்படுகின்றார்கள். அல்லாஹ்வுக்காக ரமலான் மாதத்திலே ஒரு இரவு இருக்கிறது அந்த இரவு ஆயிரம் மாதங்களை விட சிறந்தது. அந்த இரவின் நன்மை யாருக்கு கிடைக்கவில்லையோ அவர் எல்லா நன்மைகளையும் இழந்து விட்டார்.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : நஸாயி, எண் : 2106 குறிப்பு 12
இது ரமலானை பற்றி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ரமலானுக்கு முன்னாடி சஹாபாக்களுக்கு சொன்ன அறிவுரை. அப்போ எந்த அளவு ரமலானை எதிர்பார்த்து இருப்பாங்க ஆசையோடு இருந்திருப்பாங்க ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். இன்னும் நிறைய ஹதீஸ் இன்னும் ஜும்மாவில் கேட்டிருப்பீங்க மற்ற மற்ற அறிஞர்களுடைய பயான்ல கேட்டிருப்பீங்க அல்லாஹுத்தஆலா விசேஷமாக இந்த ரமலான் உடைய மாதத்திலே அடியார்களை நரகத்திலிருந்து விடுதலை செய்கின்றான்.
682 - حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ العَلَاءِ بْنِ كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا كَانَ أَوَّلُ لَيْلَةٍ مِنْ شَهْرِ رَمَضَانَ صُفِّدَتِ الشَّيَاطِينُ، وَمَرَدَةُ الجِنِّ، وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ، فَلَمْ يُفْتَحْ [ص:58] مِنْهَا بَابٌ، وَفُتِّحَتْ أَبْوَابُ الجَنَّةِ، فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ، وَيُنَادِي مُنَادٍ: يَا بَاغِيَ الخَيْرِ أَقْبِلْ، وَيَا بَاغِيَ الشَّرِّ أَقْصِرْ، وَلِلَّهِ عُتَقَاءُ مِنَ النَّارِ، وَذَلكَ كُلُّ لَيْلَةٍ " وَفِي البَابِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، وَابْنِ مَسْعُودٍ، وَسَلْمَانَ
அல்லாஹுத்தஆலா இந்த மாதத்திலே நரகத்திலிருந்து விடுதலை செய்து கொண்டே இருக்கின்றான். ஒவ்வொரு இரவும் அந்த விடுதலை நடந்து கொண்டு இருக்கின்றது. ஆகவே அன்பானவர்களே நம்ப ரெண்டு மூணு வேலைகளை செய்யணும்.
ஒன்று என்ன குர்ஆனோடு தொடர்பை அதிகப்படுத்துவது, நஃபீல் ஆன நோன்புகளை அதிகப்படுத்துவது, யாருக்கு அறவே முடியலையா குறைந்தபட்சம் இந்த வாரத்தினுடைய சுன்னத்தான திங்கள் மற்றும் வியாழன் நோன்பு இந்த மாதத்தில் ஆரம்பித்து விட வேண்டியது. அதற்குப் பிறகு தொழுகையில நீண்ட நேரம் தொழுது இப்பவே ப்ராக்டிஸ் எடுக்கிறது. அல்லாஹ்விடத்தில் துவா செய்வது யா அல்லாஹ் எனக்கு அமல்களிலே ஆர்வத்தை கொடு என்று அல்லாஹ்விடத்தில் துஆ செய்வது.
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு , நூல் : திர்மிதி, எண் : 682 குறிப்பு 13
அப்போ ரமதான் உடைய சிறப்புகள் சம்பந்தமா வந்திருக்கக் கூடிய ஹதீஸ்களை படித்து படித்து ஆர்வத்தை அதிகப்படுத்திக் கொள்வது. இந்த மாதிரி நம்ம இன்ஷா அல்லாஹ் ஒரு தர்பியத்தை கொடுத்துக் கொண்டால் நம்ப ரமலானை எதிர்பார்க்கிறது, காத்திருக்கிறது, ரமலான் வருவது இன்ஷா அல்லாஹ் ஒரு மி ஃபுல் ரமலானாக ஒரு பயனுள்ள அர்த்தமுள்ள ரமலானாக ஆக வேண்டும்.
அல்லாஹ் எனக்கும் உங்களுக்கும் நம்முடைய பாவங்கள் மன்னிக்கப்படுவதற்குரிய ரமலானாக நன்மைகளை அதிகப்படுத்துவதற்குரிய ரமலானாக நம்முடைய சொர்க்கத்திற்குரிய ரமலானாக இந்த ரமலானில் அல்லாஹுத்தஆலா ஆக்கி அருள்வானாக நம்முடைய மறதிகள் அலட்சியங்கள் நம்முடைய பாவங்கள் அனைத்தையும் அல்லாஹுத்தஆலா போக்கி ஒரு பரிசுத்தமான கல்பை தக்வாவை அல்லாஹுத்தஆலா எனக்கும் உங்களுக்கும் நசீபாக்குவானாக....
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
(குறிப்பு 1)
وَقَوْلِ اللَّهِ تَعَالَى: {فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ، وَأُدْخِلَ الجَنَّةَ فَقَدْ فَازَ، وَمَا الحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الغُرُورِ} [آل عمران: 185] وَقَوْلِهِ: {ذَرْهُمْ يَأْكُلُوا وَيَتَمَتَّعُوا، وَيُلْهِهِمُ الأَمَلُ فَسَوْفَ يَعْلَمُونَ} [الحجر: 3] وَقَالَ عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ: «ارْتَحَلَتِ الدُّنْيَا مُدْبِرَةً، وَارْتَحَلَتِ الآخِرَةُ مُقْبِلَةً، وَلِكُلِّ وَاحِدَةٍ مِنْهُمَا بَنُونَ، فَكُونُوا مِنْ أَبْنَاءِ الآخِرَةِ، وَلاَ تَكُونُوا مِنْ أَبْنَاءِ الدُّنْيَا، فَإِنَّ اليَوْمَ عَمَلٌ وَلاَ حِسَابَ، وَغَدًا حِسَابٌ وَلاَ عَمَلٌ» {بِمُزَحْزِحِهِ} [البقرة: 96]: «بِمُبَاعِدِهِ» تعليق مصطفى البغا] ش (زحزح) أبعد ونحي. (فاز) نجا وربح. (متاع الغرور) متعة يتمتع بها لأمد قليل وهي أي - الدنيا - تخدع من تعلق بها واستكان إليها. (ذرهم) اتركهم ودعهم. (يتمتعوا) بملذات الدنيا. (يلههم الأمل) يشغلهم عن عمل الآخرة والتوبة إلى الله عز وجل ما يأملونه من البقاء في الدنيا وما ترغبه نفوسهم من طول عمر وزيادة غنى ونحو ذلك. (مدبرة) بما فيها من ملذات (مقبلة) بما فيها من أهوال وحشر وحساب ونعيم خالد أو جحيم مقيم (بنون) متعلقون بها تعلق الأبناء بالآباء راغبون فيها ومقبلون عليها لا يلتفتون إلى غيرها. (اليوم) في الدنيا. (غدا) في الآخرة]
(குறிப்பு 2)
687 حَدَّثَنَا مُسْلِمُ بْنُ حَجَّاجٍ قَالَ: حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ: حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ، عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَحْصُوا هِلَالَ شَعْبَانَ لِرَمَضَانَ»: «حَدِيثُ أَبِي هُرَيْرَةَ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِثْلَ هَذَا إِلَّا مِنْ حَدِيثِ أَبِي مُعَاوِيَةَ»، وَالصَّحِيحُ مَا رُوِيَ عَنْ مُحَمَّدِ بْنِ عَمْرٍو، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَا تَقَدَّمُوا شَهْرَ رَمَضَانَ بِيَوْمٍ وَلَا يَوْمَيْنِ»، وَهَكَذَا رُوِيَ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ، عَنْ أَبِي سَلَمَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَحْوَ حَدِيثِ مُحَمَّدِ بْنِ عَمْرٍو اللَّيْثِيِّ
(குறிப்பு 3)
686 - حَدَّثَنَا أَبُو سَعِيدٍ عَبْدُ اللَّهِ بْنُ سَعِيدٍ الأَشَجُّ قَالَ: حَدَّثَنَا أَبُو خَالِدٍ الأَحْمَرُ، عَنْ عَمْرِو بْنِ قَيْسٍ، عَنْ أَبِي إِسْحَاقَ، عَنْ صِلَةَ بْنِ زُفَرَ، قَالَ: كُنَّا عِنْدَ عَمَّارِ بْنِ يَاسِرٍ فَأُتِيَ بِشَاةٍ مَصْلِيَّةٍ، فَقَالَ: كُلُوا، فَتَنَحَّى بَعْضُ القَوْمِ، فَقَالَ: إِنِّي صَائِمٌ، فَقَالَ عَمَّارٌ: «مَنْ صَامَ اليَوْمَ الَّذِي يَشُكُّ فِيهِ النَّاسُ فَقَدْ عَصَى أَبَا القَاسِمِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ» وَفِي البَابِ عَنْ أَبِي هُرَيْرَةَ، وَأَنَسٍ.: «حَدِيثُ عَمَّارٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ» وَالعَمَلُ عَلَى هَذَا عِنْدَ أَكْثَرِ أَهْلِ العِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَمَنْ بَعْدَهُمْ مِنَ التَّابِعِينَ، وَبِهِ يَقُولُ سُفْيَانُ الثَّوْرِيُّ، وَمَالِكُ بْنُ أَنَسٍ، وَعَبْدُ اللَّهِ بْنُ المُبَارَكِ، وَالشَّافِعِيُّ، وَأَحْمَدُ، وَإِسْحَاقُ، كَرِهُوا أَنْ يَصُومَ الرَّجُلُ اليَوْمَ الَّذِي يُشَكُّ فِيهِ، وَرَأَى أَكْثَرُهُمْ إِنْ صَامَهُ فَكَانَ مِنْ شَهْرِ رَمَضَانَ أَنْ يَقْضِيَ يَوْمًا مَكَانَهُ "
(குறிப்பு 4)
4662 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الوَهَّابِ، حَدَّثَنَا حَمَّادُ بْنُ زَيْدٍ، عَنْ أَيُّوبَ، عَنْ مُحَمَّدٍ، عَنِ ابْنِ أَبِي بَكْرَةَ، عَنْ أَبِي بَكْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " إِنَّ الزَّمَانَ قَدِ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَالأَرْضَ، السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا، مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ، ثَلاَثٌ مُتَوَالِيَاتٌ: ذُو القَعْدَةِ، وَذُو الحِجَّةِ، وَالمُحَرَّمُ، وَرَجَبُ، مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى، وَشَعْبَانَ "
(குறிப்பு 5)
2338 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ الرَّحِيمِ أَبُو يَحْيَى الْبَزَّازُ، حَدَّثَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ، حَدَّثَنَا عَبَّادٌ، عَنْ أَبِي مَالِكٍ الْأَشْجَعِيِّ، حَدَّثَنَا حُسَيْنُ بْنُ الْحَارِثِ الْجَدَلِيُّ، مِنْ جَدِيلَةَ قَيْسٍ، أَنَّ أَمِيرَ مَكَّةَ خَطَبَ، ثُمَّ قَالَ: «عَهِدَ إِلَيْنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَنْسُكَ لِلرُّؤْيَةِ، فَإِنْ لَمْ نَرَهُ، وَشَهِدَ شَاهِدَا عَدْلٍ نَسَكْنَا بِشَهَادَتِهِمَا»، فَسَأَلْتُ الْحُسَيْنَ بْنَ الْحَارِثِ مَنْ أَمِيرُ مَكَّةَ، قَالَ: لَا أَدْرِي، ثُمَّ لَقِيَنِي بَعْدُ، فَقَالَ: هُوَ الْحَارِثُ بْنُ حَاطِبٍ أَخُو مُحَمَّدِ بْنِ حَاطِبٍ، ثُمَّ قَالَ الْأَمِيرُ: إِنَّ فِيكُمْ مَنْ هُوَ أَعْلَمُ بِاللَّهِ وَرَسُولِهِ مِنِّي، وَشَهِدَ هَذَا مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَأَوْمَأَ بِيَدِهِ إِلَى رَجُلٍ، قَالَ الْحُسَيْنُ: فَقُلْتُ لِشَيْخٍ إِلَى جَنْبِي مَنْ هَذَا الَّذِي أَوْمَأَ إِلَيْهِ الْأَمِيرُ؟ قَالَ: هَذَا عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ، وَصَدَقَ كَانَ أَعْلَمَ بِاللَّهِ مِنْهُ، فَقَالَ: «بِذَلِكَ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ»
(குறிப்பு 6)
2116 - أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ، قَالَ: حَدَّثَنَا سَعِيدُ بْنُ شَبِيبٍ أَبُو عُثْمَانَ، وَكَانَ شَيْخًا صَالِحًا بِطَرَسُوسَ، قَالَ: أَنْبَأَنَا ابْنُ أَبِي زَائِدَةَ، عَنْ حُسَيْنِ بْنِ الْحَارِثِ الْجَدَلِيِّ، عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ زَيْدِ بْنِ الْخَطَّابِ، أَنَّهُ خَطَبَ النَّاسَ فِي الْيَوْمِ الَّذِي يُشَكُّ فِيهِ، فَقَالَ: أَلَا إِنِّي جَالَسْتُ أَصْحَابَ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، وَسَاءَلْتُهُمْ، وَإِنَّهُمْ حَدَّثُونِي أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «صُومُوا لِرُؤْيَتِهِ، وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، وَانْسُكُوا لَهَا فَإِنْ غُمَّ عَلَيْكُمْ فَأَكْمِلُوا ثَلَاثِينَ، فَإِنْ شَهِدَ شَاهِدَانِ فَصُومُوا، وَأَفْطِرُوا
(குறிப்பு 7)
16 - (233) حَدَّثَنِي أَبُو الطَّاهِرِ، وَهَارُونُ بْنُ سَعِيدٍ الْأَيْلِيُّ، قَالَا: أَخْبَرَنَا ابْنُ وَهْبٍ، عَنْ أَبِي صَخْرٍ، أَنَّ عُمَرَ بْنَ إِسْحَاقَ مَوْلَى زَائِدَةَ، حَدَّثَهُ عَنْ أَبِيهِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَقُولُ: «الصَّلَوَاتُ الْخَمْسُ، وَالْجُمْعَةُ إِلَى الْجُمْعَةِ، وَرَمَضَانُ إِلَى رَمَضَانَ، مُكَفِّرَاتٌ مَا بَيْنَهُنَّ إِذَا اجْتَنَبَ الْكَبَائِرَ»
(குறிப்பு 8)
660 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ بُنْدَارٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ، يَوْمَ لاَ ظِلَّ إِلَّا ظِلُّهُ: الإِمَامُ العَادِلُ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ، فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ، أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ
(குறிப்பு 9)
2106 - أَخْبَرَنَا بِشْرُ بْنُ هِلَالٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَاكُمْ رَمَضَانُ شَهْرٌ مُبَارَكٌ فَرَضَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْكُمْ صِيَامَهُ، تُفْتَحُ فِيهِ أَبْوَابُ السَّمَاءِ، وَتُغْلَقُ فِيهِ أَبْوَابُ الْجَحِيمِ، وَتُغَلُّ فِيهِ مَرَدَةُ الشَّيَاطِينِ، لِلَّهِ فِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ، مَنْ حُرِمَ خَيْرَهَا فَقَدْ حُرِمَ
(குறிப்பு 10)
2022 - حَدَّثَنَا عَبْدَانُ بْنُ أَحْمَدَ، ثنا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللهِ بْنِ عُبَيْدِ بْنِ عَقِيلٍ، ثنا إِسْمَاعِيلُ بْنُ أَبَانَ، ثنا قَيْسُ بْنُ الرَّبِيعِ، عَنْ سِمَاكٍ، عَنْ جَابِرٍ، قَالَ: صَعِدَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمِنْبَرَ، فَقَالَ: «آمِينَ آمِينَ آمِينَ» قَالَ: " أَتَانِي جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ، فَقَالَ: يَا مُحَمَّدُ مَنْ أَدْرَكَ أَحَدَ وَالِدَيْهِ فَمَاتَ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللهُ قُلْ آمِينَ، فَقُلْتُ: آمِينَ، قَالَ: يَا مُحَمَّدُ مَنْ أَدْرَكَ شَهْرَ رَمَضَانَ فَمَاتَ فَلَمْ يُغْفَرْ لَهُ فَأُدْخِلَ النَّارَ فَأَبْعَدَهُ اللهُ قُلْ آمِينَ، فَقُلْتُ: آمِينَ، قَالَ: وَمَنْ ذُكِرْتَ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ فَمَاتَ فَدَخَلَ النَّارَ فَأَبْعَدَهُ اللهُ، قُلْ آمِينَ، فَقُلْتُ: آمِينَ "
(குறிப்பு 11)
176 - (1156) وحَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَعَمْرٌو النَّاقِدُ، جَمِيعًا عَنِ ابْنِ عُيَيْنَةَ، قَالَ أَبُو بَكْرٍ: حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ، عَنِ ابْنِ أَبِي لَبِيدٍ، عَنْ أَبِي سَلَمَةَ، قَالَ: سَأَلْتُ عَائِشَةَ رَضِيَ اللهُ عَنْهَا، عَنْ صِيَامِ رَسُولِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: " كَانَ يَصُومُ حَتَّى نَقُولَ: قَدْ صَامَ وَيُفْطِرُ حَتَّى نَقُولَ: قَدْ أَفْطَرَ، وَلَمْ أَرَهُ صَائِمًا مِنْ شَهْرٍ قَطُّ، أَكْثَرَ مِنْ صِيَامِهِ مِنْ شَعْبَانَ كَانَ يَصُومُ شَعْبَانَ كُلَّهُ، كَانَ يَصُومُ شَعْبَانَ إِلَّا قَلِيلًا "
(குறிப்பு 12)
2106 - أَخْبَرَنَا بِشْرُ بْنُ هِلَالٍ، قَالَ: حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ، عَنْ أَيُّوبَ، عَنْ أَبِي قِلَابَةَ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَتَاكُمْ رَمَضَانُ شَهْرٌ مُبَارَكٌ فَرَضَ اللَّهُ عَزَّ وَجَلَّ عَلَيْكُمْ صِيَامَهُ، تُفْتَحُ فِيهِ أَبْوَابُ السَّمَاءِ، وَتُغْلَقُ فِيهِ أَبْوَابُ الْجَحِيمِ، وَتُغَلُّ فِيهِ مَرَدَةُ الشَّيَاطِينِ، لِلَّهِ فِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ، مَنْ حُرِمَ خَيْرَهَا فَقَدْ حُرِمَ
(குறிப்பு 13)
682 - حَدَّثَنَا أَبُو كُرَيْبٍ مُحَمَّدُ بْنُ العَلَاءِ بْنِ كُرَيْبٍ قَالَ: حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ، عَنْ الأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِذَا كَانَ أَوَّلُ لَيْلَةٍ مِنْ شَهْرِ رَمَضَانَ صُفِّدَتِ الشَّيَاطِينُ، وَمَرَدَةُ الجِنِّ، وَغُلِّقَتْ أَبْوَابُ النَّارِ، فَلَمْ يُفْتَحْ [ص:58] مِنْهَا بَابٌ، وَفُتِّحَتْ أَبْوَابُ الجَنَّةِ، فَلَمْ يُغْلَقْ مِنْهَا بَابٌ، وَيُنَادِي مُنَادٍ: يَا بَاغِيَ الخَيْرِ أَقْبِلْ، وَيَا بَاغِيَ الشَّرِّ أَقْصِرْ، وَلِلَّهِ عُتَقَاءُ مِنَ النَّارِ، وَذَلكَ كُلُّ لَيْلَةٍ " وَفِي البَابِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ عَوْفٍ، وَابْنِ مَسْعُودٍ، وَسَلْمَانَ
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/