நபி ﷺ அவர்கள் செய்த அழைப்புப் பணி! | Tamil Bayan - 754
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த அழைப்புப் பணி
ஜுமுஆ குத்பா தலைப்பு : நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செய்த அழைப்புப் பணி
வரிசை : 754
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
நாள் : 09-07-2021 | 16-09-1444
بسم الله الرحمن الرحيم
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை.
நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
அல்லாஹ் கூறுகின்றான் :
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
(KLC தாஃவா சென்டர் ஆழ்வார்திருநகர்- 04- 12- 2022)
அல்லாஹ்வுடைய அருளால் காலையிலிருந்தே ஒரு தாவா நிகழ்ச்சியிலே நீங்கள் எல்லாம் பங்கு பெற்றுக் கொண்டிருக்கிறீர்கள் அல்ஹம்துலில்லாஹ்! அல்லாஹுத்தஆலா உடைய அருளால் தாவாவை விட ஒரு சிறந்த காரியம் இந்த உலகத்தில் இல்லவே இல்லை ஆனால், அதை புரிந்தவர்கள் மிகக் குறைவு அதை புரிந்தவர்கள் மிகக் குறைவு இந்த தாவாவை நாம் புரிந்து கொண்டிருந்தால் இதில் நாம் பைத்தியமாக இருப்போம் இதில் நாம் பைத்தியமாகி இருப்போம்.
وَمَنْ اَحْسَنُ قَوْلًا مِّمَّنْ دَعَاۤ اِلَى اللّٰهِ وَعَمِلَ صَالِحًا وَّقَالَ اِنَّنِىْ مِنَ الْمُسْلِمِيْنَ
யார் அல்லாஹ்வின் பக்கம் அழைத்து, தானும் நல்லமலை செய்து, நிச்சயமாக நான் முஸ்லிம்களில் ஒருவன் என்று கூறுவாரோ அவரைவிட பேச்சால் மிக அழகானவர் யார்? (அல்குர்ஆன் 41 : 33)
அர்ஷுடைய இறைவன் ரப்புல் ஆலமீன் எப்படி கேட்கிறான் அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவரை விட பேச்சாள் அழகானவர் வேறு யார் ஆக இருக்க முடியும். எப்படி அல்லாஹ்வின் பக்கம் அழைப்பவரை விட பேச்சாள் சொல்லால் மிக அழகானவர் யார்? அவரை விட மிக அழகிய பேச்சை யாரும் பேசி விட முடியுமா? அல்லாஹ்வுடைய அடியார்களை பார்த்து,
إِنَّ اللَّهَ رَبِّي وَرَبُّكُمْ فَاعْبُدُوهُ هَذَا صِرَاطٌ مُسْتَقِيمٌ
(ஈஸா தொடர்ந்து கூறியதாவது:) “நிச்சயமாக அல்லாஹ்தான் எனது இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான் (ஈஸா தொடர்ந்து கூறியதாவது:) “நிச்சயமாக அல்லாஹ்தான் எனது இறைவனும், உங்கள் இறைவனும் ஆவான். ஆகவே, நீங்கள் அவனை வணங்குங்கள். (அல்குர்ஆன் 3 : 51)
அவனை நீங்கள் வணங்குங்கள் இப்படி சொல்லக்கூடிய இந்த பேச்சை விட ஒரு உயர்ந்த பேச்சு அல்லாஹ்விடத்தில் இல்லை அல்லாஹ்வுடைய வேதங்கள் இறக்கப்பட்டது, நபிமார்கள் அனுப்பப்பட்டது, எல்லாமே இந்த செய்தியை சொல்வதற்காகதான், எல்லாமே இந்த செய்தியை அல்லாஹ்வுடைய அடியார்களுக்கு கொண்டு போய் சேர்ப்பதற்காகத்தான் ஆகவே, இதை விட ஒரு சிறந்த அமல் இல்லவே இல்லை.
அப்படி சொல்பவர் தானும் நல்ல அமல்களை செய்ய வேண்டும், அவரும் சரியா ஆக தொழுகணும், சரியாக குர்ஆன் ஓதனும், சரியா திக்கரு செய்யணும், அல்லாஹ்வுடைய சட்டங்களை பேண வேண்டும். இப்படி தாவா உடைய தாவத்துடைய வேலையை செய்யும் போது பணிவுள்ளவராக இருந்து நானும் முஸ்லிம்களிலே ஒருவன் தான் எனக்கென்று தனி ஒரு சிறப்பு இல்லை நானும் உங்களிலே ஒருவன் தான் என்று அவர் பணிவாகவும் நடந்து கொள்கிறார் என்ற, இப்படிப்பட்டவரை விட ஒரு அழகான பேச்சு உடையவர் வேறு யார் இருக்க முடியும் என்று அல்லாஹுத்தஆலா சவாலாக கேட்கிறான்.
ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் இந்த தாஃவாவுக்காகவே தன்னை முழுமையாக அர்ப்பணித்த இந்த உம்மத்துடைய முதல் தாயீ இந்த உம்மத்துடைய முதல் தாயீ யாரு ரசூலுல்லா ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முதல் தாயீ முழுமையான தாயீ ஆவார்.
நம்மெல்லாம் எப்படி தாயீ நம்ம எப்படிப்பட்ட தாயீ பார்ட் டைம் சில பேரு முழு டைமா இருக்காங்க கொஞ்சம் சிரமத்தை பார்த்தா ஓடிப் போயிடுவோம், ஒரு போலீஸ்காரர் ஏம்பா இங்க நின்னு பேம்ப்லேட் கொடுக்கிற என்று கேட்டால் ஐயா சார் நான் போறேன் அப்படின்னு ஓடிப் போகிறது.
யாரைப் பார்த்தாலும் பயம் நாலு ஏசு வாங்க பயம், நாலு திட்டுவாங்க பயம், நாலு அடி வாங்க பயம், இல்லையா! இந்த கவர்மெண்டில் நீங்க தாவா எல்லாம் பண்ணாதீங்க, இப்ப நீங்க அமைதியாக இருங்க, உங்க ஏரியால மட்டும் சொல்லுங்க, அங்க சொல்லுங்க இங்க சொல்லுங்க, இதை சொல்லாதீங்க, அதை சொல்லாதீங்க,
பயந்தே பாதி பேரு மவுத்து வரதுக்கு முன்னாடியே மவுத்தாகிட்டு இருக்காங்க பயந்து, வரத்துக்கு முன்னாடியே மவுத் ஆகிட்டு இருக்காங்க, தாயி என்பவர் வீரமானவர்களாக இருக்க வேண்டும் எப்படி இருக்கணும் வீரமானவராக இருக்க வேண்டும்.
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கூப்பிட்டார்கள் இங்கே வாப்பா என்று இந்த லெட்டர் இது என்னுடைய லெட்டர் எடுத்துட்டு போ எடுத்துட்டு போனாங்க தனி ஆளு போப்பா ரசூல்லாஹ் யார்கிட்ட போகணும் ஹிர்கல்டப்போ யார்ட்ட போ ரோம பேரரசுடைய மாமன்னர் ஹிர்கல்டப்போ என்று சொல்லிட்டாங்க சேரி ரசூலுல்லாஹ் போறேன் இதுல என்ன இருக்கு.
ஆனால் நம்மளா இருந்தா என்ன செஞ்சிருப்போம் அங்கேயே பைஜாமா எல்லாம் லூசா போயி 4- தடவை பாத்ரூம் போய் 5-வது தடவை மயக்கமாகி சில பேரை பார்த்தீங்கன்னா மேடையில ஜும்ஆவிளையும் சரியே பள்ளியிலும், சரியே பல மணி நேரம் பேசுறவர்கள் எல்லாம் இருக்காங்க 2- மணி நேரம், 3- மணி நேரம் முஸ்லிம்களுக்கு மத்தியில கேட்டால் ஈமானுடைய பேச்சை பேசுகிறார்,
கேட்டா நான் வந்து அல்லாஹ்வை பற்றி பேசுகிறேன் என்று, ஒரு முஸ்லிம் அல்லாதவர்கள் கூப்பிட்டு பக்கத்துல உட்கார வைத்து அல்லாஹ்வ பத்தி சொல்லுங்க சொன்னால் கை கால் எல்லாம் நடுங்க ஆரம்பித்து விடும் கை கால் எல்லாம் ஆட ஆரம்பிச்சு வேர்வை எல்லாம் வந்து சட்டை எல்லாம் ஒரு மாதிரியாக போய் ஆளே சக்கராத்து நிலைமையில் ஆயிடும்.
நீங்க நூறு, ஆயிரம், லட்சம் முஸ்லிமை கூப்பிட்டு வச்சு அவருக்கு லாயிலாஹ இல்லல்லாஹ் சொல்றது பெருசு கிடையாது. மாறாக அவன் தான் ஏற்கனவே லாயிலாஹ இல்லல்லாஹ் ஏற்றுக் கொண்டவன் தானே ஏற்றுக்கொண்டவனுக்கு நீங்கள் திரும்பி லாயிலாஹ இல்லல்லாஹ் சொன்னீங்கன்னா! ஒருத்தன் அல்லாஹ்வோடு இன்னும் பல கடவுள்கள் இருக்கிறார்கள்,
لَتَشْهَدُونَ أَنَّ مَعَ اللَّهِ آلِهَةً أُخْرَى قُلْ لَا أَشْهَدُ
நிச்சயமாக நீங்கள், அல்லாஹ்வுடன் வணங்கப்படும் வேறு கடவுள்கள் இருப்பதாக சாட்சி கூறுகிறீர்களா?” (நபியே!) கூறுவீராக: “(நான் அதற்கு) சாட்சி கூறமாட்டேன்!” (அல்குர்ஆன் 6 : 19)
அல்லாஹ் நபியை பார்த்து கேட்க சொன்னான் மக்களே அல்லாஹ்வோடு வேறு கடவுள்கள் இருக்கிறார்கள் என்று நீங்கள் சாட்சி சொல்கிறீர்களா நீங்கள் அப்படி ஏற்றுக் கொள்கிறீர்களாநபியே நீங்க சொல்லுங்க நான் அப்படி ஒற்றுக்கொள்ள மாட்டேன் ஏற்றுக்கொள்ள மாட்டேன் அல்லாஹ்வோடு வேறு ஒரு கடவுள் இருப்பதை நான் ஒத்துக் கொள்ள மாட்டேன் இல்லை லாயிலாஹ இல்லல்லாஹ்,
என் கடவுளும் உங்கள் கடவுளும் நான் யாரை வணங்க வேண்டுமோ நீங்கள் யாரை வணங்க வேண்டுமோ அவன் ஒருவன் தான் என்பதே அவர்களை கூப்பிட்டு சொல்லுங்கள் அப்படின்னு அல்லாஹுத்தஆலா ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கிட்ட சொல்றான்.
அந்த மாதிரி தாவா குடுங்க என்று சொல்லபட்ட இப்போ அந்த தாவாவை விட்டாச்சு எந்த தாவாவை விட்டாச்சு? நமக்கு சாதகமான ஒரு பகுதியை மட்டும் பிடித்துக் கொண்டாச்சு, எப்படி நம்ம எப்போதும் அப்படித்தானே! சஹன்ல சாப்பிடுவது, கைலுல்லாஹ் உறக்கம் இதெல்லாம் சுன்னத்துங்கன்னு சொல்லிடுவோம் இல்லையா? எல்லாமே இந்த சுன்னத்துலாம் நமக்கு வந்து நஃப்ஸுக்கு அதனால பிரயோஜனமா இருந்தா இந்த சுன்னத்தை எல்லாம் நம்ப ஏற்றுப்போம்.
சுன்னத்துல பெரிய சுன்னத் என்ன? அல்லாஹ்வுக்கு இணை வைப்பவர்களையோ! அல்லாஹ்வை நிராகரிப்பவர்களையோ! அல்லாஹ்வின் பக்கம் அழைப்பது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னத்துல பெரிய சுன்னத் என்ன? இன்னைக்கு பிரச்சனை ஏங்க தாவா கொடுத்தா வந்துரும், தாவா குடுத்தா அப்படி பிரச்சனை வரும் என்றால்?
அந்தப் பிரச்சனைக்கு பிறகு தான் அல்லாஹ்வுடைய தீர்ப்பு வரப்போகுது, அப்படி பிரச்சனை வரும் என்றால் என்ன சொல்றீங்க அந்த பிரச்சனைக்கு பிறகு தான் அல்லாஹ்வுடைய தீர்ப்பு வரும் நீ அந்த தாவாவை கொடுக்காத வரைக்கும், அதை நீங்க எடுத்து சொல்லாத வரைக்கும் இப்படியே இருக்க வேண்டியதுதான், இப்படியே இருக்க வேண்டியதுதானா? நிலைமை இன்னும், மோசமாக போகும் ரெண்டு வகையில் மோசமா போகும்.
எதிரிகள் சாட்டப்படுவார்கள், அடுத்தது என்ன மோசமா போகும், நம்முடைய சந்ததிகள் இஸ்லாமை விட்டு வெளியேறி கொண்டு இருப்பார்கள், அல்லாஹ் பாதுகாக்கணும்! இஸ்லாமை விட்டு வெளியேறி ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உருவாக்கிய தாயீகள் எப்படி என்றால்? இந்த தாவாவுக்காக தன்னுடைய உயிரையும், தன்னுடைய செல்வத்தையும், முழுமையாக கொடுத்தவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் அப்படித்தான் அவர்கள் உருவாக்கிய ஸஹாபாக்களும் அப்படித்தான் இருந்தார்கள்.
ஒருத்தரை கூப்பிட்டார்கள் ஹிருக்கல்ட போங்கன்னு சொன்னாங்க, ஒருத்தரை கூப்பிட்டாங்க அது தாண்டி எகிப்து எங்க இருக்கு, ஒரே ஒரு ஆளுங்க மதினாவில் இருந்து பயணம் செய்றாருங்க, போயிட்டாரு முகவ்கீஸை பார்த்து இந்தாப்பா ரசூல் அல்லாஹ் லெட்டர் அனுப்பி இருக்காங்க, என்ன தைரியம் இருக்கும்,
இன்னொருத்தர் பஹ்ரைன் அங்கு அனுப்பி விட்டாங்க, இன்னொருத்தரை ஜோரடானுக்கு அனுப்பி விட்டார்கள், ஒருத்தரையும் விடல ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம். தாவாவுக்கு முன்னாடிங்க எந்த பொருளுமே கிடையாது, தாவாவுக்கு முன்னாடி புரியல நான் சொல்றது தாவாவுக்கு முன்னாடி எந்த கொம்பனுமே கிடையாதுங்க நீங்க தாயீயாக அல்லாஹ்வின் பக்கம் அழைக்கக்கூடிய, தவ்ஹீதின் பக்கம் அழைக்கக்கூடிய தாயியாக ஆனீர்கள் என்றால்? மூமின் முஸ்லிம் என்ற வீரத்தையும் அல்லாஹ் சேர்த்து போடுவான்.
இல்லனா நம்ம கோழையா உட்கார்ந்து இருக்க வேண்டியதுதான். ரொம்ப பேர பார்த்து இருப்பீங்க இவ்வளவு பெரிய தாடி வச்சிருப்பாங்க தொப்பி போட்டு இருப்பாங்க முஸ்லிம் அல்லாதவரை பார்த்தா யோவ் வணக்கம் ஐயா அப்படிம்பாங்க அவன் தூக்குறதுக்கு முன்னாடி இவன் தூக்கிடுவான் என்ன காரணம் பயம், பயம் எதுக்கு எடுத்தாலும் பயம் பயமே பயம் ஒரு தடவை கூட தான் பழகக்கூடிய முஸ்லிம் அல்லாதவர்கள் கிட்ட ஒரு வார்த்தை கூட அல்லாஹ்வை பற்றி சொல்லி இருக்க மாட்டார்.
இன்னும், சில பேரு எப்படின்னா சொல்ல கூடாது என்கிற கொள்கையில் கூட இருக்காங்க எப்படி சொல்ல கூடாதுங்குற கொள்கையில கூட தெளிவா இருக்காங்க. சில பேரு என்ன சொல்லுவாங்க மேலிடத்திலிருந்து பர்மிஷன் வரவில்லை என்பார்கள். எங்க இருந்து பர்மிஷன் வரலையாம்! மேலிடத்திலிருந்து பர்மிஷன் வரலை என்பார்கள்.
அது என்னடா மேல் இடம் நமக்கு மேலிடம் யாருங்க ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹ் கொடுக்கிற பர்மிஷன் யார் மூலமாக தெரிய வரும் ரசூலுல்லாஹ் தான் நமக்கு மேலிடம் இல்லையா சரியா நான் சொல்றேன் குரானில் ஆயத்து இருக்குங்க
اُدْعُ اِلٰى سَبِيْلِ رَبِّكَ بِالْحِكْمَةِ وَالْمَوْعِظَةِ الْحَسَنَةِ وَجَادِلْهُمْ بِالَّتِىْ هِىَ اَحْسَنُ اِنَّ رَبَّكَ هُوَ اَعْلَمُ بِمَنْ ضَلَّ عَنْ سَبِيْلِه وَهُوَ اَعْلَمُ بِالْمُهْتَدِيْنَ
(நபியே!) ஞானம்; இன்னும், அழகிய உபதேசத்தின் மூலம் உம் இறைவனுடைய பாதையின் பக்கம் (மக்களை) அழைப்பீராக! மேலும், மிக அழகிய முறையில் அவர்களிடம் தர்க்கிப்பீராக! நிச்சயமாக உம் இறைவன், - அவனுடைய பாதையிலிருந்து யார் வழி தவறினாரோ அவரை - மிக அறிந்தவன் ஆவான். இன்னும், நேர்வழிபெற்றவர்களையும் அவன் மிக அறிந்தவன் ஆவான். (அல்குர்ஆன் 16 :125)
قُلْ هٰذِه سَبِيْلِىْۤ اَدْعُوْۤا اِلَى اللّٰهِ عَلٰى بَصِيْرَةٍ اَنَا وَمَنِ اتَّبَعَنِىْ وَسُبْحٰنَ اللّٰهِ وَمَاۤ اَنَا مِنَ الْمُشْرِكِيْنَ
(நபியே!) கூறுவீராக: “(அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குவது,) இதுதான் என் பாதையாகும். நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான அறிவின் மீது இருந்தவர்களாக அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறோம். அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். நான் இணைவைப்பவர்களில் உள்ளவன் இல்லை. (அல்குர்ஆன் 12 : 108)
அல்லாஹ் சொல்றான் நபியை பார்த்து நபியே உங்களுடைய இறைவனுடைய, மார்க்கத்தின் பக்கம் அழையுங்கள், தவ்ஹீதின் பக்கம் மக்களை அழையுங்கள், ஞானத்தோடு அழையுங்கள், அழகிய உபதேசத்தை சொல்லி அழையுங்கள், பிடிவாதம் பிடிப்பவர்கள் இடத்திலே அழகிய முறையிலே நீங்கள் தர்க்கம் செய்யுங்கள்.
அல்லாஹ் கட்டளையை போட்டான் போட்டானா அடுத்து ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் டிக்ளர் பண்ணிட்டாங்க எப்படி டிக்ளேர் பண்ணுங்க? இதோ பாருங்க அல்லாஹ்வின் புறத்திலிருந்து டிக்ளேர் பண்ண சொல்றான் அல்லாஹுத்தஆலா நபியே நீங்கள் சொல்லுங்கள். இதுதான் எனது மார்க்கம் இதுதான் எனது மார்க்கம் என்னுடைய டியூட்டி என்ன? என்னுடைய கடமை என்ன?
அல்லாஹ்வின் பக்கம் அழைப்பேன் எனது வேலையே அல்லாஹ்வின் பக்கம் அழைப்பது தான், என் வேலை என்ன அல்லாஹ்வின் பக்கம் அழைத்துக் கொண்டே இருத்தல், யாரைப் பார்த்தாலும் சரி அல்லாஹ்வை வணங்குங்கள், படைத்த இறைவன் ஆகிய அல்லாஹ்வை வணங்குங்கள், அதுதான் இஸ்லாம்.
நீங்க எடுத்த உடனே போயிட்டு ஒருத்தவனை இஸ்லாத்துக்கு வாங்கன்னு சொல்லாதீங்க அல்லாஹ்வை வணங்குங்கன்னு சொல்லுங்க, இறைவனை வணங்குங்கள், இறைவனை வணங்க உங்களை அழைக்கிறேன்.
குர்ஆன் ஃபுல்லா என்ன இருக்கு எனது மக்களே! அல்லாஹ்வை வணங்குங்கள், அல்லாஹ்வை வணங்குவதை எப்படி? வணங்குறதுங்க நீங்க முஸ்லிமான அல்லாவை வணங்கலாம். இஸ்லாம்ல வந்தால் தான் அல்லாவை வணங்கலாம், ஏன்னா வேற எதுலயும் அல்லாஹ்வை வணங்க முடியாது. வேறு எந்த வழி முறையிலையும் போயி அல்லாஹ்வை வணங்குவதற்கு உண்டான வழிமுறை இருக்கா? இல்லை அப்போ நீ அப்போ நீ கம்பல் சரியா முஸ்லிமா தான் ஆயாகணும்.
என் வேலை என்ன அல்லாஹ்வின் பக்கம் அழைப்பது. எப்ப பாத்தாலும் இது தான் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய மைண்ட்ல ஏறி இருந்துச்சு வேற ஒண்ணுமே கிடையாது. இதற்காகத்தான் போர் செய்தார்கள், இதற்காக தான் ஹிஜ்ரத் செய்தார்கள், அவர்கள் முடித்த திருமணம் இதற்காக, அவர்கள் உருவாக்கிய சமுதாயம் இதற்காக, அவர்கள் உருவாக்கிய நாடு இதற்காக, அவர்களுக்கு இறக்கப்பட்ட குர்ஆன் இதற்காக, அவர்களுடைய மொத்த வாழ்க்கை,
அவர்கள் உருவாக்கிய சமுதாயம் மொத்தமே இதற்காகத்தானே, வேற ஒரு ஆப்ஷனே இல்ல தாவாவை அடிப்படையாக வைத்து தான் எப்ப போனாலும் சரி, எப்ப பார்த்தாலும் சரி, யாரைப் பார்த்தாலும் சரி, அல்லாஹுத்தஆலா ஒரு கட்டத்துல நம்முடைய நபி மேல நமக்கு அவங்க நபி, அல்லாஹ்வுக்கு அவங்க யாரு? கலீல். அல்லாஹ்வின் புறத்திலிருந்து நபி ரசூல் நம்ம அவங்கள நபின்னு சொல்றோம் அல்லாஹ்வுக்கு அவங்க நபி போக இன்னொரு கோணம் என்ன இருக்கு அல்லாஹ்வுடைய கலீல் பெஸ்ட் பிரின்ட் ரசூலுல்லாஹ் எப்படி சொன்னாங்க,
فَإِنَّ اللَّهَ تَعَالَى قَدِ اتَّخَذَنِي خَلِيلاً كَمَا اتَّخَذَ إِبْرَاهِيمَ خَلِيلاً
இப்ராஹீமை அல்லாஹுத்தஆலா தனது உற்ற நண்பனாக எடுத்துக் கொண்டது போன்று என்னை அவனுடைய உற்ற நண்பனாக எடுத்துக் கொண்டான் அல்லாஹ்வுக்கு அவங்க கலில் அப்போ தன்னுடைய உற்ற நண்பரை நோய் வாய் பட்டு மனதால் சஞ்சல பட்டு மவுத்தா போறத அந்த கலீல் ஏற்றுக் கொள்வானா அந்த உற்ற நண்பன் அல்லாஹ் ஏற்றுக்கொள்வானா அல்லாஹ்வுக்கு முடியல கஷ்டமாயிடுச்சு அல்லாஹ் ஆயத்த இறக்குனா எத்தனை ஆயத்து மூணு ஆயத்த அல்லாஹ் இறக்கினான்.
அறிவிப்பாளர் : ஜுன்துப் இப்னு அப்துல்லாஹ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 532, குறிப்பு (1(
طٰهٰ مَاۤ اَنْزَلْـنَا عَلَيْكَ الْـقُرْاٰنَ لِتَشْقٰٓى
தா ஹா. (நபியே!) நாம் இந்த குர்ஆனை நீர் சிரமப்படுவதற்காக உம்மீது இறக்கவில்லை, (அல்குர்ஆன் 20:1, 2)
நபியே இப்படி நீங்கள் சிரமப்படுவதற்கு வேதனைப்படுவதற்காக இந்த குர்ஆனை நாம் உன் மீது இறக்கவில்லை, எப்படி இத்தகைய ஒரு வேதனையை அனுபவிப்பதற்கு நாம் குர்ஆனை இறக்கவில்லை அடுத்து,
فَلَعَلَّكَ بَاخِعٌ نَّـفْسَكَ عَلٰٓى اٰثَارِهِمْ اِنْ لَّمْ يُؤْمِنُوْا بِهٰذَا الْحَـدِيْثِ اَسَفًا
ஆக, (நபியே!) அவர்கள் இந்த குர்ஆனை நம்பிக்கை கொள்ளவில்லை என்பதற்காக (அவர்கள் மீது) துக்கப்பட்டு (விலகி சென்ற) அவர்களுடைய (காலடி) சுவடுகள் மீதே உம் உயிரை நீர் அழித்துக் கொள்வீரோ! (அல்குர்ஆன் 18 : 6)
நபியே இவர்களெல்லாம் மூமின்களாக ஆகவில்லை என்பதற்காக உங்களை நீங்கள் கொன்று விடுவீர்கள் கவலையால், ஏன்னா ஒரு மனிதனுக்கு ஹை கவலை என்பது ஹை டென்ஷன் ஓவர் டென்ஷன் ஆனா என்ன ஆகும். ஹார்ட் அட்டாக் வரும் பிபி வரும் அல்லாஹ் சொல்றான் நீங்கள் கவலையால் அந்த வேதனையில் உங்களை நீங்கள் கொன்று கொள்வீர்களோ!
உங்களை நீங்கள் அழித்து விடுவீர்களோ! பொறுமையா இருங்க சில நேரங்களில் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த மக்கள் எல்லாம் முஃமினாகனுமே! முஸ்லிமாகனுமே! ஒரே கவலை அப்படியே அவங்களை வந்து விட மாட்டாங்க ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அல்லாஹுத்தஆலா அந்த மாதிரி நேரத்துல நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கொஞ்சம் பின்னாடி இழுப்பான் அல்லாஹுத்தஆலா நபியே!
اَفَاَنْتَ تُكْرِهُ النَّاسَ حَتّٰى يَكُوْنُوْا مُؤْمِنِيْنَ وَلَوْ شَاءَ رَبُّكَ لَآمَنَ مَنْ فِي الْأَرْضِ كُلُّهُمْ جَمِيعًا أَفَأَنْتَ تُكْرِهُ النَّاسَ حَتَّى يَكُونُوا مُؤْمِنِينَ
உம் இறைவன் நாடினால், பூமியிலுள்ளவர்கள் அனைவரும் நம்பிக்கை கொண்டிருப்பார்கள். ஆக, (நபியே!) நீர் மக்களை, - அவர்கள் நம்பிக்கையாளர்களாக ஆகுவதற்காக நிர்ப்பந்திப்பீரா? (அல்குர்ஆன் 10 : 99)
எல்லாரும் மூமின் ஆகிவிட வேண்டும் என்று நீங்கள் நிர்பந்திக்க போகிறீர்களா? அல்லாஹ் நாடினால் பூமியில் உள்ள எல்லோரையும் அல்லாஹ் முஃமினாக ஆக்கி இருப்பான் நீங்க சொல்லுங்க, நீங்க எடுத்து சொல்லுங்க, இப்ப பாருங்க ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவ்வளவு வேகத்தில் போனாங்க அல்லாஹுத்தஆலா நபியே கொஞ்சம் ஸ்டாப் பண்ணுங்க இந்த அளவுக்கு செய்யுங்க இதற்கு மேல வேணாம்னு புடிச்சி இழுக்குற அளவுக்கு அவங்களுடைய தாவா இருந்தது.
நம்ம நிலைமை எப்படி இருக்கு பின்னாடி இருந்து புல்டோசரை வைத்து தள்ள வேண்டியதா ஒருத்தன்வனுக்காவது தாவா கொடுங்கள், பக்கத்து வீட்டுக்காரனுக்காவது தாவா கொடு, உன்ன பார்த்து சிரிக்கிறவனுக்காவது தாவா கொடு, உன் பேச்சை கேட்கிறவனுக்காவது தாவா கொடு, உன்னோட படிச்ச பிரண்டுக்காவது தாவா கொடு, இல்லையா நம்ம ஒவ்வொருத்தரும் நம்ம அன்றாட சந்திக்க கூடிய முஸ்லிமல்லாதவர்கல வாழ்க்கையில எத்தனை பேருக்கு தாவா கொடுத்திருக்கிறோம்?
என்று எண்ணிவிடலாம் الا ما شاء الله என்ன மாதிரி ஆள சொல்றேன் உருப்படாத ஆளுங்கள எப்படி எத்தனை பேருக்கு தாவா கொடுத்திருக்கோம்னு சொல்லி இல்லையா இது என்னங்க இது நான் சொல்றது புரியுதா நான் மொத்தமா எத்தனை பேருக்கு லாயிலாஹ இல்லல்லாஹ்வை சொல்லி இருக்கேன், முஸ்லிமல்லாதவர்கள அப்படிங்கறத விரல் விட்டு எண்ணிவிடலாம்.
இதற்கு பேறாங்க தாவா அல்லாஹ் இப்படியா தாவா கொடுக்க சொன்னான் அழைத்துக் கொண்டே இருங்கள் அழைத்துக் கொண்டே இருங்கள் ஒருத்தரு வராரு நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய தாவாவை பாருங்கள் ரொம்ப பென்டாஸ்டிகா இருக்கும் சரி இத சொல்லிட்டு அதற்கு வருகிறேன் அப்போ அல்லாஹ் அடுத்து என்ன சொன்னான்:
هٰذِه سَبِيْلِىْۤ اَدْعُوْۤا اِلَى اللّٰهِ عَلٰى بَصِيْرَةٍ اَنَا وَمَنِ اتَّبَعَنِىْ
என் டூட்டி என்ன அல்லாஹ்வின் பக்கம் அழைப்பது ,எப்படி அழைப்போம் நானும் என்னை பின்பற்றியவர்களும் இந்த வேலையை செய்வோம் தெளிவான ஆதாரத்தில் இருந்தவர்களாக. அப்போ நீங்க ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமுடைய சமூதாயம் அவர்களுடைய ஃபாலவர்ஸ் அவர்களை நீங்கள் பின்பற்றக் கூடியவர்கள் என்றால், அதுல முதல் சுன்னத் என்ன? நீட்ட ஜிப்பா போடுறதோ, நீளமான தாடி வைக்கிறதோ அல்லது, வேற வேற இதெல்லாம் இருக்கணும் செய்யணும் அதுவும் அவசியம் தான் அதற்கு மேல ஒரு அவசியம் இருக்கிறது.
என்னது? அது எதற்காக நபி அனுப்பப்பட்டார்களோ எதற்காக இப்ப நம்ம பிரச்சனை என்ன இந்த சின்ன சுன்னத் எல்லாம் பாலோ பண்ணி திருப்தி அடைந்து விடுகிறோம் சின்ன சுன்னத் எல்லாம் தொழுகைக்கு முன்னாடி சுன்னத் தொழுது விட்டு திருப்தி அடைந்து கொள்கிறோம் கண்டிப்பாக திருப்தி அடையும், மாஷா அல்லாஹ் தொழுகைக்கு பின்னாடி சுன்னத்து, கல்யாணம் பண்றது, வலிமா சாப்பிடுவது, அகீகா கொடுப்பது, நல்லா இருக்கும்ல ஜாலியா பிரியாணி கிடைக்குதுன்னா சும்மாவா எல்லாம் ஜாலி யப்பா தாவா கொடுப்பானா பாக்கலாம் பாய்,
மக்காவுல இருந்த எதிர்ப்பை விடுவாங்க அபூஜஹலை விடவா இங்க ஒருத்தன் இருக்கிறான், அபூலஹபை விடவா இங்கே இருக்கான், அப்படியே இருந்து, அப்படியே ஒருத்தன் இருக்கான்னு வச்சுக்கோங்களேன் என்னங்க ஆயிடப் போகுது நம்மள கொன்னுடுவானா அதைத்தானேங்க எதிர்பார்க்கிறோம்,
அந்த சஹாதத்தை எதிர்பார்த்து தானே தாவாவை செய்யணும் அப்படி இல்லன்னா நீங்க தாவாவுக்கே வராதீங்க போயிடுங்க ஓடிப் போயிடுங்க தாவாவுக்கே You are not fit for the dhawa you are unqualified அல்லாஹ்வின் பாதையில் நான் தாவா செய்யும்போது கொல்லப்பட வேண்டும் என்ற நிய்யத் இல்லனா you are not a dayee நீங்க சும்மா டுபாக்கூர் மெட்ராஸ் பாஷையில் சொல்லுவாங்களா டுபாக்கூர் அப்படினா என்ன சும்மா அது என்னங்க தாவா தாவா நாலே,
اِنَّ اللّٰهَ اشْتَرٰى مِنَ الْمُؤْمِنِيْنَ اَنْفُسَهُمْ وَاَمْوَالَهُمْ
நிச்சயமாக அல்லாஹ், நம்பிக்கையாளர்களிடமிருந்து அவர்களுடைய உயிர்களையும் அவர்களுடைய செல்வங்களையும் நிச்சயம் அவர்களுக்கு சொர்க்கம் உண்டு என்பதற்கு பகரமாக விலைக்கு வாங்கினான். (அல்குர்ஆன் 9 : 111)
என்னை நான் அல்லாஹ்வுக்கு விற்று விட்டேன் என்று வராது தான் தாவா என்னை நான் அல்லாஹ்வுக்காக அல்லாஹ்விடத்தில் விற்று விட்டேன் சொர்க்கத்திற்காக விற்று விட்டேன் என்று வரதுக்கு தான் தாவா அடி வாங்காமல் திட்டு வாங்காமல் ஏசு வாங்காமல் நம்மள்ல சில பேர் ஷஹீத் ஆகாம எப்படிங்க தாவா ஃபுல் ஃபில் ஆகும் சொல்லுங்க பாக்கலாம் எதற்கு பயம்?
حَدَّثَنَا حَفْصُ بْنُ عُمَرُ الْحَوْضِيُّ حَدَّثَنَا هَمَّامٌ عَنْ إِسْحَاقَ عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ بَعَثَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَقْوَامًا مِنْ بَنِي سُلَيْمٍ إِلَى بَنِي عَامِرٍ فِي سَبْعِينَ فَلَمَّا قَدِمُوا قَالَ لَهُمْ خَالِي أَتَقَدَّمُكُمْ فَإِنْ أَمَّنُونِي حَتَّى أُبَلِّغَهُمْ عَنْ رَسُولِ اللَّه صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَإِلَّا كُنْتُمْ مِنِّي قَرِيبًا فَتَقَدَّمَ فَأَمَّنُوهُ فَبَيْنَمَا يُحَدِّثُهُمْ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذْ أَوْمَئُوا إِلَى رَجُلٍ مِنْهُمْ فَطَعَنَهُ فَأَنْفَذَهُ فَقَالَ اللَّهُ أَكْبَرُ فُزْتُ وَرَبِّ الْكَعْبَةِ ثُمَّ مَالُوا عَلَى بَقِيَّةِ أَصْحَابِهِ فَقَتَلُوهُمْ إِلَّا رَجُلًا أَعْرَجَ صَعِدَ الْجَبَلَ قَالَ هَمَّامٌ فَأُرَاهُ آخَرَ مَعَهُ فَأَخْبَرَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُمْ قَدْ لَقُوا رَبَّهُمْ فَرَضِيَ عَنْهُمْ وَأَرْضَاهُمْ فَكُنَّا نَقْرَأُ أَنْ بَلِّغُوا قَوْمَنَا أَنْ قَدْ لَقِينَا رَبَّنَا فَرَضِيَ عَنَّا وَأَرْضَانَا ثُمَّ نُسِخَ بَعْدُ فَدَعَا عَلَيْهِمْ أَرْبَعِينَ صَبَاحًا عَلَى رِعْلٍ وَذَكْوَانَ وَبَنِي لَحْيَانَ وَبَنِي عُصَيَّةَ الَّذِينَ عَصَوْا اللَّهَ وَرَسُولَهُ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
ஆகவே அப்போ சஹாபாக்கள்ல ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அனுப்புனாங்க தைரியமா போனாங்க ஒருத்தரை அனுப்பி விட்டாங்க ஏமாத்தி கூட்டிட்டு போய்ட்டாங்க அதைப்பற்றி எல்லாம் பயப்பட மாட்டாங்க சஹாபாக்கள் புரியுதா ஏமாத்துறவன் அவன் அல்லாஹ்விடத்தில் எதையும் அனுபவிப்பான் புரியுதுங்களா இல்லையா போனா அவரு தாவா கொடுத்துட்டாரு கடிதத்தை கொடுத்துட்டாரு மெசேஜை சொல்லிட்டாரு நிக்கிறாரு அந்த குடும்பத்தார்கள். வம்சம் அவங்க வந்து ஒரு பெரிய கபிலா வம்சம் அந்த ஆளு பின்னாடி இருக்கிற வீரர்கள் கிட்ட ஒரு கண்ண காட்டுனாரு அவ்வளவுதான் முடிஞ்சிருச்சு வந்த வேகத்துக்கு ஈட்டில குத்தலாம் பாருங்க ஒரு குத்து இந்த இடத்தில் சுருவி நெஞ்ச பொளந்து வெளிய வந்துருச்சு அலட்டிக்கவே இல்லையே அவரு அலட்டிக்கவே இல்லையே! காபாவின் இறைவனின் மீது சத்தியமாக நான் வெற்றி பெற்று விட்டேன் முடிஞ்சிருச்சு.
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 2591
சொல்லுங்க பார்க்கலாம் நினைத்து கூட பார்க்க முடியாது நமக்கு என்ன குடும்பத்து பயம் சொத்து பயம் பிரச்சனை என்னவென்றால் இந்த உலகத்துல ரொம்ப நாள் வாழ்ந்து அனுபவிக்க வேண்டும் என்ற ஆசை நமக்கு அதனாலேயே தாவாவுக்கு வர மாட்டார்கள் தாவாவை கொடுக்க மாட்டுகின்றான் தாவாவிலும் போக மாட்டான் யாரைப் பார்த்தாலும் பயம். ஒரு முஃமின் மறுமையில் வாழ வேண்டும் என்று ஆசை படக்கூடியவன் தான் மூஃமின் மறுமையில இந்த உலகத்தில் இருக்கிற வரைக்கும் இருப்பேன் நமக்கும் யஹுதி நசராணிக்கும் இடையில் உள்ள வித்தியாசமே என்னங்க அல்லாஹ் என்ன சொல்றான்
وَلَتَجِدَنَّهُمْ اَحْرَصَ النَّاسِ عَلٰى حَيٰوةٍ وَ مِنَ الَّذِيْنَ اَشْرَكُوْا يَوَدُّ اَحَدُهُمْ لَوْ يُعَمَّرُ اَ لْفَ سَنَةٍ وَمَا هُوَ بِمُزَحْزِحِه مِنَ الْعَذَابِ اَنْ يُّعَمَّرَ وَاللّٰهُ بَصِيْرٌ بِمَا يَعْمَلُوْنَ
இன்னும் (நபியே! பொதுவாக எல்லா) மக்களை விடவும் (குறிப்பாக) இணைவைப்பவர்களை விடவும் (உலக) வாழ்க்கையின் மீது பேராசைக்காரர்களாக அவர்களை (-யூதர்களை) நிச்சயமாக நீர் காண்பீர்! அவர்களில் ஒருவர், “அவர் ஆயிரம் ஆண்டு(கள்) உயிரோடு இருக்க வேண்டுமே?” என்று விரும்புவார். அவர் (நீண்ட காலம்) வயது நீட்டிக்கப்படுவது (அல்லாஹ்வின்) தண்டனையிலிருந்து அவரைத் தப்ப வைக்கக்கூடியதில்லை. அல்லாஹ், அவர்கள் செய்வதை உற்று நோக்குபவன் ஆவான். (அல்குர்ஆன் 2 : 96)
அல்லாஹ் சொல்றான் நபியே இந்த யூதர்கள் இருக்கின்றார்களே மக்களில் அதிகம் பேராசை உடையவர்களாக இருப்பார்கள் எதற்கு வாழ்க்கை வாழ்வதற்கு ஆயிரம் ஆண்டு வாழ வேண்டும் என்று அவர்கள் விரும்புவார்கள் அது வந்து யாருடைய வேலை யூதர்கள் கிறிஸ்தவர்கள் முசிரிக்குகள் உடைய வேலை புரியுதுங்களா இல்லையா அல்லாஹ் மூமின்களை பற்றி அல்லாஹ் என்ன சொல்றான் அவர்கள் அல்லாஹ்வுடைய பாதையிலே ஷஹீதாக வேண்டுமென்று ஆசைப்படக் கூடியவர்கள்.
அல்லாஹ் நம்மை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்படக்கூடியவர்கள் அப்போ நம்ம தாவாவுக்கு வரதுக்கு முன்னாடி சில குவாலிட்டி இருக்கு தாவாவுக்கு வரதுக்கு முன்னாடி அல்லாஹுத்தஆலா அப்படித்தான் நபியை உருவாக்கினான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஸஹாபாக்களை உருவாக்கினார்கள்.
அந்த எக்கின் இருந்தால்தான் உங்களுடைய தாவா வந்து பவர்ஃபுல்லா இருக்கும் உங்களுடைய தாவா வந்து உறுதியானதாக இருக்கும் எந்த விதமான சமரசமும் இல்லாததா இருக்கும் அல்லாஹ்வுடைய எக்கின் அப்படியே உள்ளத்தில இறங்கி கிட்டே இருக்கணும் குர்ஆனுடைய வசனத்தை ஓத ஓத அந்த குர்ஆனுடைய வசனத்தின் உடைய எக்கின் நம்முடைய உள்ளத்தில இருக்கணும் இல்லன்னா முனாஃபிக் மாதிரிதான் முனாஃபிக்குகளுக்கு எப்படி அப்போ அப்போ அல்லாஹ்வும் ரசூலும் சொன்னதுல சந்தேகம் வந்துடும் முனாஃபிக்குகள் யாரு அல்லாஹ் இல்லைன்னு சொன்னவங்களா முஹம்மது ரசூலுல்லாஹ் என்று சாட்சி சொல்லாதவர்கள் ஐந்து நேர தொழுகை தொழாதவர்களா எல்லாமே செய்றவங்க ஆனா யாரு சந்தேகப்படக்கூடியவர்கள்.
مَّا وَعَدَنَا اللّٰهُ وَرَسُوْلُه اِلَّا غُرُوْرًا
“அல்லாஹ்வும் அவனது தூதரும் நமக்கு பொய்யை (ஏமாற்றம் தரக்கூடியதை)த் தவிர (உண்மையான வெற்றியை) வாக்களிக்கவில்லை” என்று கூறிய சமயத்தை நினைவு கூருங்கள் (அல்குர்ஆன் 33 : 12)
கொஞ்சம் பிரச்சனை வந்துட்டா அல்லாஹ்வும் ரசூலும் நம்மள கை விட்டுட்டாங்க என்று சொல்வார்கள் அல்லாஹ்வும் ரசூலும் நம்மை கைவிட்டு விட்டார்கள் என்று சொல்வார்கள் அவர்களுக்கு கஷ்டத்தை பார்த்தாலே பிடிக்காது சிரமத்தை சந்திக்கவே பிடிக்காது இஸ்லாம் என்ற பெயரை சொல்லி லாபம் வந்து கொண்டே இருந்தால், we are Muslim we are Muslim “நாங்க முஸ்லிம் நாங்க முஸ்லிம் என்று அப்படியே ரொம்ப ஜாலியா இருப்பாங்க.
وَاِنْ اَصَابَتْهُ فِتْنَةُ اۨنْقَلَبَ عَلٰى وَجْهِه خَسِرَ الدُّنْيَا وَالْاٰخِرَةَ
இன்னும், அவருக்கு சோதனை ஏற்பட்டால் தனது (நிராகரிப்பின்) முகத்தின் மீதே அவர் திரும்பி விடுகிறார். அவர் இவ்வுலகிலும் மறு உலகிலும் நஷ்டமடைந்து விட்டார். இதுதான் தெளிவான (பெரிய) நஷ்டமாகும். (அல்குர்ஆன் 22 : 11)
கொஞ்சம் பிரச்சனை வந்துருச்சு நைசா நள்ளிவிடுவார்கள் எனக்கும் அதுக்கும் சம்பந்தமே இல்லைங்க நான் வேற அவர் வேற என்ன சொல்லிடுவான். நாங்கள் எல்லாம் அப்படி கிடையாது என்றுவான் நாங்க உண்டு எங்க வேலை உண்டுன்னு நாங்க தொழுவோமாம் வைப்போங்க நாங்க எல்லாம் எந்த வம்புக்கும் போக மாட்டோக தாவா கொடுக்கிறது வம்பா யோசித்துப் பாருங்கள் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு அல்லாஹுத்தஆலா சொன்னான் நபியே நீங்க தாவா குடுங்க உங்களுடைய உம்மத்தை தாயீயாக உருவாக்குங்கள்.
யார பார்த்தாலும் சரி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் முஸ்லிமல்லாத ஒருவரை பார்த்து விட்டாலே அவரோடு பழகி விட்டாலே முதல் வேலை என்னதான் தாவாவை கொடுத்து தான் அடுத்த வேலை அவர் ஏற்றுக் கொள்கிறாரோ, மறுக்கின்றாரோ அவர் ஏற்றுக் கொள்ற வரைக்கும் தாவா கொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.
அல்லது, அவர் மவுத்தா போற வரைக்கும் தாவா கொடுத்துகிட்டே இருப்பாங்க இதுதாங்க தாவா தாவா எப்படி இருக்கணும் ஒன்று அவர் ஏற்றுக் கொள்ளனும் இல்லனா நம்ம ரெண்டு பேர்ல யாராவது ஒருத்தவரு மவுத்தா போகணும் ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அப்போ அந்த தாவா உடைய ஃபிக்ஹ் அவனுடைய சிந்தனையில அப்படியே முழுசா எப்படி அப்படின்னா இதுல எந்த அளவுக்கு அவங்க அந்த தாவாவுடைய சிந்தனை நம்ம எப்படி நம்ம என்ன நினைப்போம் நம்முடைய எதிரிகள் எல்லாம் அப்படியே நெருப்பில் எரிந்து செத்து விடணும் எப்படி இப்ப நம்ம என்ன நினைச்சுகிட்டு இருக்கோம்னா இப்ப இந்தியால இவ்வளவு பேர் வந்து இஸ்லாமுக்கு எதிராக இருக்கிறார்கள் இவர்களை எல்லாம் வானத்தில் இருந்து அல்லாஹ் ஒரு இடியை இறக்கி எல்லாத்தையும் சாவடிச்சிடனும் அல்லது, ஒரு அதாப் வரனும் எப்படி இஸ்ரேவேலர்களுக்கு இஸ்ரவேலர்களுடைய காலத்தில் ஃபிர்அவ்ன் உடைய வீட்டுக்கு மட்டும் வந்துச்சு பாருங்க,
فَاَرْسَلْنَا عَلَيْهِمُ الطُّوْفَانَ وَالْجَـرَادَ وَالْقُمَّلَ وَالضَّفَادِعَ وَالدَّمَ اٰيٰتٍ مُّفَصَّلٰتٍ فَاسْتَكْبَرُوْا وَكَانُوْا قَوْمًا مُّجْرِمِيْنَ
ஆகவே, அவர்கள் மீது புயல் காற்றை, வெட்டுக்கிளிகளை, பேன்களை, தவளைகளை, இரத்தத்தை தெளிவான அத்தாட்சிகளாக அனுப்பினோம். ஆக, அவர்கள் பெருமையடித்(து புறக்கணித்)தனர். இன்னும், குற்றம் புரிகின்ற மக்களாக இருந்தனர். (அல்குர்ஆன் 7 : 133)
وَلَمَّا وَقَعَ عَلَيْهِمُ الرِّجْزُ قَالُوْا يٰمُوْسَى ادْعُ لَـنَا رَبَّكَ بِمَا عَهِدَ عِنْدَكَ لَٮِٕنْ كَشَفْتَ عَنَّا الرِّجْزَ لَـنُؤْمِنَنَّ لَكَ وَلَـنُرْسِلَنَّ مَعَكَ بَنِىْۤ اِسْرَآءِيْلَ
அவர்கள் மீது தண்டனை நிகழ்ந்தபோது, அவர்கள் கூறினார்கள்: “மூஸாவே! உம் இறைவனிடம் -அவன் உம்மிடம் வாக்குறுதி கொடுத்த பிரகாரம் (அதை நிறைவேற்றக் கோரி) - எங்களுக்காகப் பிரார்த்திப்பீராக. எங்களை விட்டு தண்டனையை நீர் நீக்கினால் உம்மை நிச்சயம் நம்பிக்கை கொள்வோம்; இன்னும், இஸ்ரவேலர்களை உம்முடன் நிச்சயம் அனுப்புவோம்.” (அல்குர்ஆன் 7 : 134)
வெள்ளப்பெருக்கு அப்பறம் பேணு அப்புறம் தவக்களை ரத்தம் இஸ்ரவேலர்களுடைய வீட்டுக்கு மட்டும் இபித்துகளுடைய வீட்டிற்கு மட்டும் யார் வீட்டுக்கு வரல இந்த பிரச்சனை இஸ்ரேவேலர்களுடைய வீட்டுக்கு வரல அதை பார்த்துவிட்டு தான் ஃபிர்அவ்ன் ஓடி வந்தான்,
மூசா இது என்ன பெரிய பிரச்சனையா இருக்கு உங்க வீட்டுக்கு எல்லாம் இல்ல, எங்க வீட்டுக்கு மட்டும் வந்துகிட்டு இருக்கு எங்களால தாங்க முடியலப்பா சரி ஏதோ ஒன்னுப்பா நம்ம பிரச்சனையை முடிச்சுக்கலாம் நான் இஸ்ரவேலர்கள் அனுப்பிடறேன் அத பாத்துக்கலாம் நீ எப்படியாச்சும் துவா பண்ணுப்பா என்று சொல்லிட்டு ஒவ்வொரு தடவையும் மூஸா அலைஹிஸ்ஸலாம் துவா செய்ய துவா செய்ய அவன் மாறிக்கொண்டு இருந்தான்.
அப்ப என்ன விஷயம்னா நம்ம எப்படி ஒரு மெண்டாலிட்டியில் இருக்கிறோம் என்று சொன்னால் வானத்தில் இருந்து ஒரு முஃஜிஸா நடக்கணும் வானத்தில் இருந்து ஒரு அற்புதம் நடக்கணும் அந்த அற்புதம் அந்த அற்புதம் இறங்கி என்ன ஆகணும்னா இது இஸ்லாமுக்கு எதிராக இருக்கக்கூடிய காபிர்களை எல்லாம் அழிச்சிடனும் எப்படி அழிச்சிட்டு அப்படியே நம்மள வந்து ஆட்சியில உட்கார வச்சிடனும் எப்படி நம்மள ஆட்சியில் உட்கார வச்சுட்டு அப்படியே அப்பதான் நம்ம தொழுகை எல்லாம் கரெக்ட்டு நம்ம தொழுதது சரி அப்படிங்கற ஒரு மென்டாலிட்டியில் நம்ம இருக்கிறோம்.
எல்லாம் காஃபிரும் என்ன ஆகிவிட வேண்டும்? என்னதான் சிந்தனையோ தெரியல பொதுவா சில முஸ்லிம்கள் என்ன நினைச்சு இருக்காங்கன்னு சொன்னா இவங்க எல்லாம் நமக்கு தொந்தரவு தராங்கள, இவங்க எல்லாம் நமக்கு பிரச்சனை பண்றாங்களே! நம்ம துவா கேட்டு இவர்களை எல்லாம் அழித்துவிட வேண்டும், விடக்கூடாது அப்படிங்கிற மாதிரி சிந்தனையியே பெரும்பாலானவர்களுக்கு இருக்கு அது மட்டுமல்ல எதற்கெடுத்தாலும் அவங்க எல்லாம் காஃபிர் அவர்கள் எல்லாம் முஷிறிக் அப்படின்னு அவர்களை ஒதுக்கு ஒதுக்குனு ஒதுக்கி எட்டி உதைத்து இவனே நரகத்தில் தள்ளி விடுவான் போல இருக்கிறது.
அந்த மாதிரி ஒரு சிந்தனை தான் இன்று முஸ்லிம்களிலே ஒரு கூட்டத்தாரிடம் பரவலாக இருப்பதை பார்க்கிறோம். ஒதுக்கியாச்சு நம்ம தனி, அவங்க தனி என்பது வேற அவர்களை இப்போ இந்த சமுதாயம் ஒதுக்கி இருக்கிற மாதிரி ஒதுக்குனா பிரச்சனை கூட தான் செய்யும். அல்லாஹ் எதுல நீங்க ஒதுக்கி இருக்கீங்க எதுல நீங்க சேர்ந்து இருக்கீங்கன்னு சொன்னா அந்த இலக்கணத்தை நம்ம புரியவில்லை என்றால் பிரச்சனைதான்.
இப்போ இவர் என்ன செஞ்சாரு எதுல அல்லாஹ் சேர சொன்னானோ பிரிஞ்சிட்டாரு எதுல அல்லாஹ் பிரிய சொன்னானோ அதுல சேர்ந்துட்டாரு இன்றைக்கு இதில் பெரிய உதாரணம் என்ன அவர்களுடைய புள்ளையார் சதுர்த்தி அந்த சதுர்த்தி திருவிழா வருது பள்ளிவாசலில் இருந்து ஹஜரத் போய் ஃபாத்தியா ஓதி வழி அனுப்பி வைக்கிறார்,
இன்னும், முஸ்லிம்களில் இருந்து ஜமாத் போயி மத நல்லிணக்கம், சமய நல்லிணக்கம் சமூக நல்லிணக்கம் என்று, சொல்லிட்டு பார்த்தீங்களா இங்க தான் வந்து நிக்கணும் நீங்க இந்த அளவு அல்லாஹ் சொல்லாத அளவுக்கு தூரமா போனீங்கன்னா கடைசியில எங்க வந்து நிப்பீங்க அல்லாஹ் தடுத்ததுல வந்து நிற்பீர்கள் சமரசம் செஞ்சுட்டு எதுல அல்லாஹ் சமரசம் செய்யாதே என்று தடுத்தானோ!
قُلْ يَاأَيُّهَا الْكَافِرُونَ لَا أَعْبُدُ مَا تَعْبُدُونَ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ وَلَا أَنَا عَابِدٌ مَا عَبَدْتُمْ وَلَا أَنْتُمْ عَابِدُونَ مَا أَعْبُدُ لَكُمْ دِينُكُمْ وَلِيَ دِينِ
(நபியே!) கூறுவீராக: நிராகரிப்பாளர்களே!, நீங்கள் வணங்குவதை நான் வணங்க மாட்டேன், இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை, இன்னும், நீங்கள் வணங்கியதை நான் வணங்குபவனாக இல்லை, இன்னும், நான் வணங்குகிறவனை நீங்கள் வணங்குபவர்களாக இல்லை, உங்கள் (வழிபாடுகளுக்குரிய) கூலி உங்களுக்குக் கிடைக்கும். இன்னும், எனது (வழிபாடுகளுக்குரிய) கூலி எனக்குக் கிடைக்கும். (அல்குர்ஆன் 109 : 1, 2, 3, 4, 5, 6)
நீ வணங்குறது வேற நான் வணங்குவது வேற நீ வணங்குவதற்கு நான் இபாதத் பண்ண முடியாது நீ செய்கிற இபாதத் இருக்குதே அந்த சிலைகளுக்கு அது அல்லாஹ்வுக்கு செய்யக் கூடிய இபாதத்தா ஆகாது நீ வேறப்பா நான் வேறப்பா,
இபாதத்துல கூட்டாகாதிங்க, இபாதத்துல சேராதீங்க, அவங்களுடைய மத கலாச்சாரத்தில் சேர்ந்து விடாதீர்கள், அப்படி என்று அல்லாஹ் தடுத்தான் இப்போ ஒரு கூட்டம் புதுசா கிளம்பி இருக்கு தமிழ் கலாச்சாரம், தமிழர்கள் கலாச்சாரம், எப்படி தமிழர் கலாச்சாரமாம்! முஸ்லிம் தானா ஆனா தமிழர் கலாச்சாரம், தமிழர் மரபுவாம், தமிழர் கொள்கையாம், அப்படி எல்லாம் கிடையாதுங்க.
நீ அரபு காரனா இருந்தாலும் சரி, நீ அரபியா இருந்தாலும் சரி, நீ இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு வந்தால் தான் முஸ்லிம். நீ குர்ஆன் இறக்கப்பட்ட மக்காவில் இருக்கக்கூடியவனாக இருந்தாலும் சரி, நபியின் உடைய குடும்பத்தில் உள்ளவனாக இருந்தாலும் சரி, நீ இஸ்லாமிய கலாச்சாரத்திற்கு வந்தால் தான் நீ முஸ்லிம். இஸ்லாத்திற்கு முரணான உலகத்துல எந்த கலாச்சாரத்தில் இருந்து கிட்டு நீ இஸ்லாம் என்று சொன்னாலும் சரி அந்த இஸ்லாமை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்.
அந்த இஸ்லாமை ஒரு அணு அளவு கூட ஏற்றுக்கொள்ள மாட்டான் அப்போ ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் யார பார்த்தாலும் சரி அவர்களுடைய மைண்ட் என்ன இந்த தாவா தான் அல்லாஹ்வின் பக்கம் அவர்களை அழைத்தல் ஒரு சில உதாரணம் பாருங்க ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதுவும் எப்படி அழைப்பாங்க பாருங்க ஒவ்வொருத்தரட்டையும் அவங்களுடைய விதமே ஒரு விதமா இருக்கும் மனிதர்களை பார்த்து முகத்தைப் புரிந்து ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய அந்த தாவா உடைய அந்த மெத்தட் அழைக்கக் கூடிய வாசகங்கள்.
அம்ரு இப்னு துஃபைல் அத்தவ்ஸி ஒரு பெரிய தவுஸ் என்ற குடும்பத்தார்கள் தாயிப் நகரத்தில அதனுடைய தலைவர் வராரு ரொம்ப பெரிய புத்திசாலி பெரிய அறிவாளி அப்ப குரேஷிகள் எல்லாம் பெரிய தலைவர் வர சேதி கேட்டவுடனே ஓடிட்டாங்க அம்ரே இங்க இருக்காரே முஹம்மது ஒருத்தரு பேசிறாத மயக்கி விடுவார், பேசிராத உன்னைய சூனியம் பண்ணி விடுவாரு, பேச்சிலேயே அப்படி, இப்படின்னு,
சொன்ன உடனே இவரு மக்காவுக்கு தவாஃபுக்கு வந்தவரு என்னடா இது அப்படின்னு சொல்லிட்டு நல்லா கெடச்சதெல்லாம் துணி பஞ்ச காதுல வச்சு அப்படியே திணிச்சிக்கிட்டாப்ல திணிச்சுக்கிட்டு காபத்துல்லாவை தவாப் செய்றாரு அங்கே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அமைதியா நின்னு தொழுதுகிட்டு இருக்காங்க குர்ஆன் ஓதிட்டு அவர் அப்படியே சுத்தி சுத்தி தவாப் பண்ணிட்டு அப்படியே பார்க்கிறார் பாருங்கள் ஒரு விஷயம் சுபஹானல்லாஹ்!
தாயீகள் எப்படின்னா அவர்களைப் பார்த்தாலே அல்லாஹுத்தஆலா ஒரு விதமான ஒளியையும் ஒரு விதமான பிரகாசத்தையும் ஒரு விதமான மகிழ்ச்சியையும் அல்லாஹ் போடுவான் அல்லாஹுத்தஆலா தாயிகள் உடைய முகத்தில் அப்படி வைத்திருக்கிறான் அல்லாஹுத்தஆலா அப்போ கடைசியில ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தொழுது முடித்துவிட்டு வெளியே வருகிறார்கள்,
அவர் தவாப் முடிச்சிட்டாரு முடிச்சிட்டு இடையில வேற அதை கொஞ்சம் கொஞ்சம் லூஸ் பண்ணிக்கிட்டாரு என்னத்த நம்ம அப்படி மயங்கி விட போறோம் நம்மள விட பெரிய அறிவாளி யார் இருக்கா நமக்கு தெரியாத கவிதையா நமக்கு தெரியாத ஞானமா கேட்டு தான் பார்ப்போமே ரசூல் அல்லாஹ் ஓதுற குர்ஆன் அப்படியே கொஞ்சம் வித்தியாசமா இருக்கே அப்படின்னு சொல்லிட்டு ஓகே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் காபத்துல்லாஹ்ல இருந்து வெளியே போறாங்க,
அவர் போறாரு போயிட்டு நீங்க தான் முஹம்மதா ஆமா மக்கள் உங்களை பத்தி என்ன என்னமோ சொல்றாங்களே நீங்க ஓதுறத கேட்ட நல்லா தானே இருக்குது நீங்க என்ன சொல்றீங்க அப்படி என்றார்கள் ஒன்னும் இல்லங்க ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சிம்பிள் நம்ம தாங்க தாவாவை ரொம்ப காம்ப்ளிகேட்டடா ஆக்கி வைத்திருக்கோம் இப்படி ஆக்கி வைத்திருக்கிறோம் தாவனா அப்படியே நம்ம எல்லாம் தாவா கொடுக்க முடியுமா?
ஏப்பா ஒன்னும் இல்லைங்க வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் அந்த செய்தியை சொல்றது தான் தாவா வானம் பூமியை படைத்தவனை வணங்குங்கள் இதற்கு பெரிய என்ன நாலேஜ் தேவை என்னங்க பெரிய wisdom தேவை உங்களுக்கு இறைவன் ஒருவனா இல்லையா வானத்தை படைத்தது யார் கேளுங்கள் அல்லாஹ் கேட்கிற மாதிரி,
مَنْ رَّبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ
(நபியே!) கூறுவீராக: “வானங்கள் இன்னும் பூமியின் இறைவன் யார்?” (அல்குர்ஆன் 13 : 16)
பூமியை படைத்தது யார் உன்னை படைத்தது யார் கேளுங்கள் அவன வணங்குப்பான்னு சொல்லுங்க முடிஞ்சு போச்சு வேற விவாதத்துக்கே போகாதீங்க வேற விவாதத்துக்கே தர்க்கத்துக்கே போகாதீங்க எங்க போனாலும் நீ முதல்ல இதை பைனல் பண்ணு அடுத்து அடுத்ததுக்கு போகும் இஸ்லாம் பெண்களை அடிமையாக்குகிறது சரிப்பா அதை இரண்டாவதாக பார்ப்போம் இஸ்லாம் பயங்கரவாதத்தை போதிக்கின்றது.
இரு பேசுவோம் இஸ்லாம் பெண்களுக்கு உரிமை கொடுப்பதில்லை பேசுவோம் என்னத்த சொன்னாலும் சரி இந்த பாரு முதல்ல தலைய புடி அப்புறம் வாழு கீழு எல்லாத்தையும் புடிக்கலாம் வணங்கத் தகுதியானவன் யார்? யாரை வணங்கனும் உன்னுடைய வணக்க வழிபாட்டை நீ யாருக்கு உரித்தாக்குவாய், உன்னுடைய இறைவன் யார்?
அதை பத்தி பேசு முதல்ல நீ அதை பேசும்போது இங்கேயும் அங்கேயும் ஓடாத உன்னை படைத்தது யார் நீ யாரை வணங்கிக் கொண்டிருக்கிறாய் அதை முதல்ல முடிவு பண்ணு புரியுதுங்களா சுத்தி சுத்தி அங்கதான் வந்து நிக்கணும் வேற எதுக்குமே பதில் சொல்லாதீங்க நீங்க இதற்கு பதில் சொல்ல பதில் சொல்ல அவன் இன்னொன்றை கொண்டு வந்து கொண்டே இருப்பான் சைத்தான் அவன் உள்ளத்தில் போட்டுக் கொண்டே இருப்பான்,
இதை கேளு அதை கேளு என்று சொல்லி கேள்வி வந்துகிட்டே இருக்கும் இந்தப்பா அதெல்லாம் வேணாம் முதல்ல இத சொல்லு மாஃபூத் ரப் யாரு இபாதத்து யாருக்கு அதை முதல்ல சொல்லு அங்கேயே நில்லுங்க விடாப்பிடியா கண்டிப்பா ஒரு நாளைக்கு பாய் எனக்கு கலிமா சொல்லிக் கொடுத்துவிடு என்று சொல்லுவான் நம்ம அதை விட்டுட்டு அவனை திருப்தி படுத்த பார்க்கிறோம்,
அவனுக்கு ஏற்ற மாதிரி சந்தேகங்களுக்கு பதில் சொல்லி பதில் சொல்லி அவன் முழுசா திருப்தி ஆகுறதுக்கு பார்க்கிறோம் சைத்தான் திருப்தியாக விடுவானா சொல்லுங்க சைத்தான் அவனுக்கு மீண்டும் மீண்டும் இன்னொரு சந்தேகத்தை கிளப்பிக் கொண்டே இருப்பான் சந்தேகத்திற்கு உண்டானதை சைத்தான் எடுத்துக் கொடுத்து கொண்டே இருப்பான் முதல்ல அல்லாஹ்விடத்திலே வணங்கறது அல்லாஹ்வைத் தவிர வேறு யாருக்கும் இல்லை,
அதை முதலில் முடிவு செய் அதுக்கப்புறம் பார்ப்போம் மிச்சதை இதுதான் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய தாவா அப்ப என்ன செஞ்சாங்க அவர் சொன்ன உடனே சரி என்ன நீங்க சொல்றீங்க என்றார்கள் அப்பா இவ்வளவு பெரிய அறிவாளிக்கு தாவா கொடுக்கிறதுக்கு எப்படி எல்லாம் கற்பனை பண்ணி எவ்வளவு நேரம் பேசி இருப்போம் ஒன்னும் இல்லங்க ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்,
إِنَّ الْحَمْدَ لِلَّهِ، نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ
தாவா பினிஷ் அவர் அப்படியே கேட்டார் பாருங்க அப்படியே அவருக்கு புல்லரிச்சிருச்சு உடம்பெல்லாம் சிலிர்த்து விட்டது நீங்கள் சொன்னதை திரும்ப சொல்லுங்கள் நீங்கள் சொன்னது எனக்கு திரும்ப சொல்லுங்கள், இரண்டாவது தடவை சொல்கிறார்கள் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவரை அறியாமல் அவருடைய நிலைமை அப்படியே மாறுது நீங்கள் சொன்னதை அப்படியே திருப்ப சொல்லுங்கள் மூன்றாவது முறை சொல்கிறார்கள் அது கேட்டு முடித்த உடனே அவர் சொல்றாரு உங்களுடைய கையை நீட்டுங்கள்.
சுபஹானல்லாஹ் அப்போ ரசூலுல்லாஹ் உடைய ஹதீஸ்லயும், அல்லாஹ்வை புகழ்வதிலும் அல்லாஹ்வை சாட்சி சொல்வதிலும், அவ்ளோ பெரிய மகா தத்துவம் இருக்குது. நம்ம தான் ஒண்ணுமே புரியலங்க நீங்க சில முஸ்லிம் அல்லாத அல்ஹம்துலில்லாஹ் தாயீகள் பல சந்தர்ப்பங்களில் உங்களுக்கு தெரிந்திருக்கும் எத்தனை காபிர் தெரியுமா எனக்கு அல்ஹம்துலில்லா என்கிற வார்த்தை எனக்கு ரொம்ப பிடிக்கும்னு சொல்றவன் நீங்க பாய் உங்க கிட்ட ஒரு வார்த்தை ரொம்ப பிடிக்கும் பாய் என்ன நடந்தாலும் சரி நீங்க எல்லா புகழும் இறைவனுகே என்றுசொல்றீங்க பாருங்களேன் அதை அடிச்சுக்க முடியாது பாய் என்கிறான்.
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 46 - (868) குறிப்பு (2)
நம்மதான் அவனுங்க அத சொல்றதுக்கு பயந்துகிட்டு உட்கார்ந்திருக்கோம் அந்த அல்லாஹ் பெரியவன் என்று சொல்றீங்க பாத்தீங்களா என்ன கிரேட் வேர்ட் பாய் அது யார்? சொல்றா அவங்க சொல்றாங்க நீங்க இன்ஷா அல்லாஹ் என்று ஒரு வார்த்தை சொல்றீங்க பாருங்க பாய் என்ன பாய் என்ன நம்பிக்கை பாய் இது எதையுமே நீங்க சொல்றது இல்லையே பாய் நான் அதை செய்வேன் இத செய்வேன் என்று இன்ஷா அல்லாஹ் சொல்றீங்களா? பாய் என்ன? பாய் இது அவன் விலங்கி வச்சிருக்கான் நம்ம தான் ஒண்ணுத்துக்கும் உதவாதவன் சொல்றதுக்கு பயப்படுறோம்.
ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஓதி காட்டினார்கள் அவ்வளவுதான் அவருக்கு புல்லரிச்சு போச்சு இங்க பாருங்க ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்துல பெரிய அறிவாளிகளும் இருந்தார்கள், சாதாரண மக்களும் இருந்தார்கள், சமுதாய தலைவர்களும் இருந்தார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தாவா கொடுத்து இஸ்லாமை ஏற்றுக் கொண்ட இந்த எல்லா வகையான மக்களுக்கும் கொடுக்கப்பட்ட தாவா உடைய அந்த அமைப்பு, அந்த முறை, நீங்க சிந்திச்சு பாருங்கள்.
நம்ம அதை பின்பற்றுவது இல்லை நம்ம பாட்டுக்கு தனியா ஒரு டிராக்ல போய்கிட்டு இருக்கும் நம்ம தனியா நம்ம ஒரு லாஜிக், நம்ம ஒரு கற்பனை, என்று சொல்லி போய்கிட்டே இருக்கோம் நீங்க ரிசல்ட்டை பார்க்காதீர்கள் ஒரு தடவை சொன்னா ஏத்துக்கல ரெண்டு தடவை சொன்னா ஏத்துக்கல மூணு தடவை சொன்னோம் ஏத்துக்கல இவனுக்கு சொல்லி பிரயோஜனம் இல்லைங்க சில பேரு எந்த அளவுக்கு தெரியுமா இருக்காங்க, தாவா கொடுத்தால் பாய் நான் இவனுக்கு நிறைய தடவை சொல்லிட்டேன் பாய் இவன் எல்லாம் கேக்க மாட்டான் பாய் வேஸ்ட் பாய் டயத்தை வேஸ்ட் ஆகாதீங்க வாங்க என்கிறான் அல்லாஹ் அக்பர் இப்படியே இருக்காங்க பாய் இவன் என் பிரண்டு தான் பாய் இவனுக்கு தெரியும் நான் இத்தனை தடவை சொல்லிட்டேன் இவன்னெல்லாம் கேட்க மாட்டான் பாய் யாருங்க முடிவு பண்ணிங்க,
اِنَّ الَّذِيْنَ كَفَرُوْا سَوَآءٌ عَلَيْهِمْ ءَاَنْذَرْتَهُمْ اَمْ لَمْ تُنْذِرْ هُمْ لَا يُؤْمِنُوْنَ
நிச்சயமாக எவர்கள் (மன முரண்டாக) நிராகரித்தார்களோ அவர்களை நீர் எச்சரித்தாலும், அல்லது அவர்களை நீர் எச்சரிக்கவில்லையென்றாலும் (அது) அவர்கள் மீது சமம்தான். அவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள். (அல்குர்ஆன் 2 : 6)
இந்த வகை உங்களுக்கு இறங்கிருச்சா அல்லாஹ் அடையாளப்படுத்திட்டு சில பேருக்கு அல்லாஹ் சொல்றான் அல்லாஹ் நபிக்கு அடையாளப்படுத்திட்டான் இவங்களுக்கு எல்லாம் வேஸ்ட் நபியே அப்படின்னு ரசூலுக்கு வஹி மூலம் அடையாளப்படுத்தினான் சொல்லுங்க பார்க்கலாம் அதைக் கூட ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வெளியே சொல்லல அது யாருன்னு சொல்லிட்டு அது அல்லாஹ்வுக்கும் ரசூலுல்லாவுக்கும் உள்ள ரகசியமாகவே இருந்து போச்சு யாரெல்லாம் குஃபுரிலேயே கடைசில இறந்துட்டாங்களோ அதற்குப் பிறகுதான் நமக்கு தெரியும் இவர்கள் எல்லாம் அந்த லிஸ்ட் எந்த லிஸ்ட் அபூஜஹாலே, அபூலஹப் உமையா,
إِنَّ الَّذِينَ كَفَرُوا سَوَاءٌ عَلَيْهِمْ أَأَنْذَرْتَهُمْ أَمْ لَمْ تُنْذِرْهُمْ لَا يُؤْمِنُونَ خَتَمَ اللَّهُ عَلَى قُلُوبِهِمْ
அவர்களின் உள்ளங்களில் ஒரு (சந்தேக) நோய் இருக்கிறது. எனவே, அவர்களுக்கு அல்லாஹ் (சந்தேக) நோயை அதிகப்படுத்தினான். இன்னும், அவர்கள் பொய் கூறுபவர்களாக இருக்கின்ற காரணத்தால் துன்புறுத்தக்கூடிய தண்டனை அவர்களுக்கு உண்டு . (அல்குர்ஆன் 2 : 6)
லிஸ்ட்னு அவங்க குபூர்ல இறந்ததற்கு பிறகு தான் நமக்கு தெரியும் சஹாபாக்களுக்கே தெரியும் புரியுதா! இங்க இன்னொரு சம்பவத்தை பாருங்க நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய பணியாளர் அவர் ஒரு யஹுதி பையன் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கிட்ட வந்தாரு அந்த குடும்பம் ஒரு ஏழ்மையான குடும்பம் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கொடை கொடுக்கக் கூடியவர்கள், பணியாளர்களை ரொம்ப கண்ணியமாக வைத்துக் கொள்ளக் கூடியவர்கள்,
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய கொடையை எதிர்பார்த்து வராங்க அதேபோல ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்தப் பையன ரொம்ப நல்லவிதமா வச்சிக்கிறாங்க பார்த்தா ரெண்டு நாளா அந்தப் பையன் வரல ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மூன்றாவது நாள் தேடி போறாங்க போனா அந்த பையனுக்கு மூச்சு வாங்கிகிட்டு இருக்கு ரசூலுல்லாஹ் பதறிப் போயிடுறாங்க இங்க பாருங்க அல்லாஹ் அக்பர் நம்ம ஒண்ணுமே புரிய மாட்டிக்கின்றோம் நம்ம குர்ஆனை படிக்க மாட்டோம்,
ஹதீஸை படிக்க மாட்டோம், விளங்க மாட்டிக்கிறோம் எதையுமே ஒட்டுமொத்தமா ஒரு கூட்டத்தை முத்திரை குத்தி ஒதுக்குவதில் தாங்க நம்ம ரெடியா இருக்கோம் ஒட்டுமொத்தமா முத்திரை குத்தி அவர்களை ஒதுக்கி வைப்பதிலே தான் நாம் ரெடியா இருக்கின்றோமே தவிர அவர்களை எப்படிடா சேர்த்து தாவா கொடுப்போம் என்கிறதுக்கு நம்ம தயாரா இல்லை,
இந்த யஹுதி கூட்டம் இருக்குதுல்ல ஒப்பந்தத்தை மீறினவங்க சரியா ஒன்றுக்கு பல தடவை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை கொலை செய்ய முயற்சி பண்ணவங்க இல்லையா கல்லை தள்ளி விட முயற்சி பண்ணவங்க இல்லையா அல்லாஹ்வையே திட்டினவங்க,
அல்லாஹ்வுடைய கைய கட்டி போட்டாச்சு அவனால யாருக்கும் இப்போ கொடுக்க முடியாது இப்ப எங்கள்ட்ட தான் அல்லாஹ்வே கேட்பான் அப்படிங்கற அளவுக்கு திமிரு பேசின கூட்டம் நபிமார்களை கொன்ன கூட்டம்.
Allah now become very poor we are now become very rich என்று சொன்ன கூட்டம் அந்த அளவுக்கு அநியாயம் பண்ண கூட்டம் இல்லையா அல்லாஹ் அவ்ளோ சொல்லிக் காட்டுகிறான் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சமூகத்தில் பழகும் பொழுது இந்த மாதிரி விஷயங்களை சொல்லி அவர்களை ஒதுக்கினார்களா? இது அவர்களுடைய மூதாதையர்களை பற்றிய நேச்சுரல் அவர்களுடைய பேக்ரவுண்டை தெரிந்து வைத்துக் கொள்வதற்கு அல்லாஹ் இறக்குகின்றான்,
இதனால் நீங்க அவங்க கிட்ட பழகாதீங்க இதனால நீங்க அவங்க கிட்ட பழகாதீங்கன்னா அல்லாஹ் சொல்றான் அவர்களை உற்ற நண்பர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள், உங்களுடைய பாதுகாவலர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இதுதான் எங்க அல்லாஹ் சேர சொல்ற, எங்க அல்லாஹ் பிரிய சொல்றான், இப்போ பாருங்க இப்படிப்பட்ட யஹுதி குடும்பத்தை சேர்ந்த ஒருத்தரை சின்னப் பையன தன் வீட்டுல பணியாளரா வச்சிருக்காங்க ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தன் மஸ்ஜிது நபவில பணியாளரா வச்சிருக்காங்க சொல்லுங்க பார்ப்போம் நம்மளா இருந்தா என்ன செஞ்சிருப்போம்,
ஏன்டா மவனே யஹுதி சொல்லுங்க பார்க்கலாம் புரிய மாட்டேங்குது இங்க இருந்து தான் பகைமையே ஆரம்பம் ஆச்சு உங்களுக்கு என்னுடைய அனுபவத்தை சொல்றேன் பாருங்க நாங்க கிட்டத்தட்ட ஐந்து அல்லது, ஆறு ஆண்டு வடநாட்டுல இருந்தோம் படிக்கிறதுக்கு நான் அப்பவே நினைப்பேன் அங்குள்ள உலமாக்கள், அங்கு உள்ள முஸ்லிம், பொதுமக்கள் அங்குள்ள முஸ்லிம் அல்லாதவர்களை பார்க்கும் பொழுது எனக்கு பல நேரத்துல ரொம்ப கவலை வரும்,
ரொம்ப நான் வந்து வித்தியாசமா யோசிப்பேன் ஏன்னா நான் பார்த்த வரைக்கும் ஒரு முஸ்லிம் கூட நான் முஸ்லிமை பார்த்து ஒரு சிரித்ததாகவோ அல்லது ஒரு பிரண்ட்லியா இப்போ நம்ம பஸ்ல ஏறோம் ஒரு இடம் இருக்கு ரெண்டு சீட்ல ஒரு சீட்டு காலியா இருக்கு நீங்க ஃப்ரீயா ஒக்காந்து இருக்கீங்க ஒரு முஸ்லிம் அல்லாதவர் ஏறுறாரு என்ன செய்வீங்க நீங்க வாங்க வாங்க உட்காருங்க அப்படின்னு தள்ளி உட்கார்ந்து வரவேற்பீர்களே இந்த மாதிரியோ,
அல்லது, பழக்கத்தில் ஒரு முஸ்லிம் அல்லாதவர்களுடைய கடையில போயி ஒரு பொருள் வாங்குற மாதிரியோ அல்லது, அவங்கள ரோட்ல பார்க்கும்பொழுது என்னங்க நல்லா இருக்கீங்களா அல்லது, ஒரு அண்டை வீட்டாரை பார்க்கும் பொழுது இந்த மாதிரி நான் பார்க்கவே இல்லை எப்ப பார்த்தாலும் சரி, இந்த எலிய புடிக்க போற பூனை மூஞ்ச வச்சிருக்க மாதிரி தான் இருப்பாங்க ஒரு மொரப்பு தான் அவர் இவரை பார்த்தா மொறப்பு இவர் அவரை பார்த்தா மொரப்பு இன்னைக்கு அதுதான் முட்டிக்கிட்டு இருக்குது நாங்க இங்க இருந்து தமிழ்நாட்டுல இருந்து போன புள்ளைங்களா நம்ம இங்க எப்படி பழகி இருப்போம் சொல்லுங்க பார்க்கலாம் இத பார்த்துட்டு எங்களுக்கு அதை பார்த்தா கடைசியில எங்களுக்கு பயமே வந்துருச்சு கேட்டா எடுத்த உடனே,
அவங்க எல்லாம் அப்படி, அவங்க எல்லாம் இப்படி, இப்படியே சொல்லியே பிரிச்சு பிரிச்சு இன்னைக்கு அதனுடைய முசீபத்து தான் அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள், அல்லாஹ் பாதுகாக்கணும்! தாவாவுக்கு உண்டான வாசல முதல்ல அடைச்சவங்க இவங்கதான் யாரு இவங்கதான் எப்போ நீங்க தாவாவுடைய வாசல அடைப்பீங்களோ அல்லாஹ் ஏன் உங்கள பாதுகாக்கணும் அல்லாஹ் ஏங்க உங்கள பாதுகாக்கணும் இபாதத்து மட்டுமா அதுக்கு தான் வானத்திலேயே கூட்டம் இருக்குதே பறவைகள் இருக்காங்களா மிருகம் இருக்குதே அல்லாஹ்வை மட்டும் வணங்குவதற்கு இல்லையா என்னங்க சொல்றீங்க அல்லாஹ் குர்ஆனில் அப்படித்தான் சொல்றான்:
وَاِنْ مِّنْ شَىْءٍ اِلَّا يُسَبِّحُ بِحَمْدِه
இன்னும், அவனைப் புகழ்ந்து துதித்தே தவிர எந்த ஒரு பொருளும் இல்லை. (அல்குர்ஆன் 17 : 44)
இங்க எல்லாமே என்ன வணங்குதப்பா எல்லாமே வானத்துல பூமியில எல்லாமே அல்லாஹ்வை மட்டும் தான் வணங்குகிறது மனிதர்களில ஜின்களில மட்டும் தான் பிரச்சனை அப்போ வெறும் உங்க இபாதத் மட்டும்னா உங்களுக்கு ஏன் அல்லாஹ் செக்யூரிட்டி கொடுக்கணும் உங்கள அல்லாஹ் ஏன் சேவ் பண்ணனும் உங்களுக்கு ஏன் அல்லாஹ் தனியா ஒரு பாதுகாப்பு கொடுக்கணும் உங்களுக்கு ஏன் அல்லாஹ் தனியா கண்ணியம் கொடுக்கணும் வெறும் உங்க இபாதத் மட்டும் போதும்னா அந்த உம்மத்தா நம்ம?
قُلْ هٰذِه سَبِيْلِىْۤ اَدْعُوْۤا اِلَى اللّٰهِ عَلٰى بَصِيْرَةٍ اَنَا وَمَنِ اتَّبَعَنِىْ وَسُبْحٰنَ اللّٰهِ وَمَاۤ اَنَا مِنَ الْمُشْرِكِيْنَ
(நபியே!) கூறுவீராக: “(அல்லாஹ் ஒருவனை மட்டும் வணங்குவது,) இதுதான் என் பாதையாகும். நானும் என்னைப் பின்பற்றியவர்களும் தெளிவான அறிவின் மீது இருந்தவர்களாக அல்லாஹ்வின் பக்கம் அழைக்கிறோம். அல்லாஹ் மிகப் பரிசுத்தமானவன். நான் இணைவைப்பவர்களில் உள்ளவன் இல்லை.”(அல்குர்ஆன் 12 : 108)
كُنْتُمْ خَيْرَ اُمَّةٍ اُخْرِجَتْ لِلنَّاسِ تَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ
(நம்பிக்கையாளர்களே!) மக்களுக்காக உருவாக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மையை (மக்களுக்கு) ஏவுகிறீர்கள்; இன்னும், தீமையை விட்டும் (மக்களை) தடுக்கிறீர்கள்; (அல்குர்ஆன் 3 : 110)
وَلْتَكُنْ مِّنْكُمْ اُمَّةٌ يَّدْعُوْنَ اِلَى الْخَيْرِ وَيَاْمُرُوْنَ بِالْمَعْرُوْفِ وَيَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَاُولٰٓٮِٕكَ هُمُ الْمُفْلِحُوْنَ
சிறந்ததின் பக்கம் அழைக்கின்ற, நன்மையை ஏவுகின்ற, பாவத்திலிருந்து தடுக்கின்ற ஒரு குழு உங்களில் இருக்கட்டும். இன்னும், அவர்கள்தான் வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் 3 : 104)
எல்லாத்துக்குமே நம்ம அர்த்தம் வந்து ராங்கா ட்ரான்ஸ்லேஷன் பண்ணி வச்சாச்சு எப்படி? நன்மையை ஏவுவது, தீமையை தடுப்பது, தொழுகைக்கு கூட்டிட்டு வர்றது, முஸ்லிமை நோன்பு வைக்க சொல்றது, முஸ்லிமை ஹஜ்ஜுக்கு போக சொல்வது, முஸ்லிமை தாடி வைக்க சொல்றது, முஸ்லிமை குடிக்காத என்று சொல்வது, எதற்கு அர்த்தம் நன்மையை ஏவி தீமையை தடுப்பதற்கு நம்ம எப்படி அர்த்தம் வச்சிருக்கோம்.
முஸ்லிமையே போய் புடிச்சுட்டு வந்து தொழுவு, நோன்பு வை, ஜக்காத்து கொடு, குடிக்காத, திருடாதே, என்று சொல்றதுதான். அல்லாஹு அக்பர், எதற்கு அல்லாஹ் இதை இறக்கினான் ஷிர்க்கை தடுங்கள் தவ்ஹீதை ஏவுங்கள், இதுக்கு சஹாபாக்கள் தாபியீன்கள் சொல்லக்கூடிய விளக்கம் என்ன, தவ்ஹீதை ஏவுங்கள்,
ஷிர்க்கை விட்டு தடுங்கள், தவ்ஹீதை விட பெரிய مَعْرُوْفِ கிடையாது, ஷிர்க்கை விட பெரிய مُنْكَرِ கிடையாது, அதை இரண்டியுமே விட்டுட்டீங்க. ஒன்னை ஏவுறதை விட்டுட்டீங்க, ஒன்ன தடுக்கிறத விட்டுட்டீங்க, நீங்க இந்த பெரும் பாவங்களை மட்டும் பேசிக்கிட்டே இருக்கீங்க அதுவும் உங்களுக்கு உள்ளார அதுவும், உங்களுக்கு உள்ளார மட்டும் அப்போ ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்,
பூட்டி வைக்கப்படக்கூடிய சுவர்களுள் பேசப்படக்கூடிய மார்க்கத்தை கொடுத்த அனுப்பப்பட்டார்கள் அப்போ அந்த மூன்றாவது நாள் போயி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பார்த்தா அந்த பையனுக்கு நெஞ்சு ஏறி இறங்கிக்கிட்டு இருக்கு என்ன செய்றாங்க ரொம்ப அவருக்கு பக்கத்தில நின்னுகிட்டு அவர் சிஃபாவுக்காக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் துவா செய்யறாங்க ஆனா தெரிஞ்சிருச்சு அந்த மூச்சிலேயே ஏற்றம் இறக்கம் தெரிஞ்சிருச்சு சொல்றாங்க.
تشهد ان لا اله الا الله واني رسول الله
இதுதான் தாவா விட்டாங்களா? பாத்தீங்களா? யோசிச்சு பாருங்க அன்பை வெளிப்படுத்தி தாவா கொடுக்கணும் நம்ம வெறுப்பை வெளிப்படுத்தி தாவா கொடுக்கிறோம் அல்லது, கட்டளையா மிரட்டி தாவா கொடுக்கிறோம் அல்லது, வந்து அவனை எல்லாம் முதல்ல நரகத்தில் தள்ளி தாவா கொடுக்கிறோம் என்னதான் நீ முதல்ல நரகத்தில் தள்ளிட்டயே அப்புறம் எதற்கு நான் மொத்தமா போயிடுறேன் அப்படிங்குறான் வெறுப்போடு தாவா கொடுக்கிறோம் எப்படி ஏத்துப்பாங்க அவன அந்நிய படுத்திட்டு தாவா கொடுக்கிறோம் அல்லாஹுத்தஆலா கண்டிப்பா சொல்லி இருக்கான்.
اِنَّمَا الْمُشْرِكُوْنَ نَجَسٌ
இணைவைப்பவர்கள் எல்லாம் அசுத்தமானவர்கள். (அல்குர்ஆன் 9 : 28)
முசிரிக்குகள் நஜீஸ்கள் என்று அல்லாஹ் சொல்லி இருக்கின்றான் எது நஜிசு அவர்களுடைய அகீதா நஜீஸ் அவன் உடல் நஜீஸ் என்று சொன்னாங்களா சொன்னா அல்லாஹுத்தஆலா அவனோடு சாப்பிடுவது நஜீஸ் என்று சொன்னா அல்லாஹுத்தஆலா சொல்லுங்க அவனோடு உட்கார்ந்து பேசுவது நஜீஸ் என்று அல்லாஹ் சொன்னானா புரியுதா தம்பி,
அல்லாஹ் கண்டிப்பாக சொல்லி இருக்கின்றான் முசிரிக்குகள் நஜீஸ் அவங்க காபாவுக்கு வரக்கூடாது ஏன்னா அவங்க அக்கீதா அந்த ஷிர்க்குடைய அக்கிதா காபா இருக்குது அதற்கு தகுதி உள்ளவங்க தான் வர முடியும் அது போக ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களுடைய வீட்ல வர வச்சிருக்காங்க இல்லையா சாப்பாடு கொடுத்திருக்காங்க அவர்கள் அங்கே சாப்பிட்டு இருக்கிறார்கள்.
எப்படி நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஹேண்டில் பண்ணி இருக்காங்க பாருங்க அப்போ அதை சொன்ன உடனே ஏற்கனவே இத்தனை நாளு ரசூலுல்லாஹட வேலை செஞ்சு இஸ்லாம் எப்படி உள்ளத்தில் ஏறி இருக்கும் இதே ஒரு முஷ்ரிக்கா இருந்திருந்தார்னா ரசூலுல்லாஹ்விடத்தில் வேலை செஞ்சு ஒண்ணாவது நாளே கூட முஸ்லிமாயிருப்பாரு இரண்டாவது நாளே கூட முஸ்லிமாயிருப்பாரு ஆனா இது யாரு இவங்க யாரு? சொல்லுங்க நல்லா சத்தமா பதில். யகுதி, யூதர்கள்.
அவங்க என்ன நெனச்சிட்டு இருக்காங்க என்ன சொல்லி வளர்க்குறாங்க பிள்ளைகளை இவர் வந்து நமக்குள்ள நபி கிடையாது நமக்குள்ள நபினா வந்துட்டு போயிட்டாங்க இவர் வந்து ரசூல் உம்மியின் இவர் எழுத படிக்க தெரியாத அரபிகளுக்கு வந்த ரசூல் நம்ம ரசூல் கிடையாதுன்னு சொல்லி தன்னுடைய பிள்ளைகளை வளர்த்துட்டு இருக்காங்க அது மட்டும் அல்ல,
نَحْنُ اَبْنٰٓؤُا اللّٰهِ وَاَحِبَّآؤُه
இன்னும், யூதர்களும், கிறித்தவர்களும் “நாங்கள் அல்லாஹ்வுடைய பிள்ளைகள், அவனுக்கு விருப்பமானவர்கள்’’ என்று கூறினார்கள். (அல்குர்ஆன் : 5:18)
நம்ம எல்லாம் அவுலியாவோட மிக க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸ் நமக்கெல்லாம் இது தேவை கிடையாது நமக்கு முன்னாடி உள்ளதே போதும் அப்படின்னு மண்டையில ஏத்தி வச்சிருந்ததினால் தான் இவ்வளவு நாள் அவர் கலிமா சொல்லாம இருந்தாரு கடைசியில் இங்க வந்தாச்சு அவங்க சொன்னது ரசூலுல்லாஹ் பள்ளியில் ஓதுனது எல்லாம் கேட்டு கேட்டு அவர் ஒரு அனலைஸ் பண்ணி வச்சிருந்தார்.
حَدَّثَنَا سُلَيْمَانُ بْنُ حَرْبٍ، حَدَّثَنَا حَمَّادٌ وَهْوَ ابْنُ زَيْدٍ، عَنْ ثَابِتٍ، عَنْ أَنَسٍ رَضِيَ اللَّهُ عَنْهُ، قَالَ: كَانَ غُلاَمٌ يَهُودِيٌّ يَخْدُمُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَمَرِضَ، فَأَتَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَعُودُهُ، فَقَعَدَ عِنْدَ رَأْسِهِ، فَقَالَ لَهُ: أَسْلِمْ، فَنَظَرَ إِلَى أَبِيهِ وَهُوَ عِنْدَهُ فَقَالَ لَهُ: أَطِعْ أَبَا القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَأَسْلَمَ، فَخَرَجَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ وَهُوَ يَقُولُ: الحَمْدُ لِلَّهِ الَّذِي أَنْقَذَهُ مِنَ النَّار
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கடைசில வந்ததோட சொல்றாங்க என்னப்பா மௌத்தா போ போற ஷஹாதத் சொல்லிட்டு போப்பா அப்படின்னு சொன்ன உடனே அவருடைய உள்ளத்தில் இறங்கி இருந்த அந்த ஈமான் மவுத் உடைய பயம் ஆகிறத் உடைய பயம் தெரிஞ்சிருது எல்லாமே அப்ப தந்தையை பார்க்கிறார் அல்லாஹுத்தஆலா தந்தையுடைய உள்ளத்திலும் விளக்கத்தை கொடுத்தான் அவர் சொன்னாரு நீயாச்சும் சொர்க்கத்துக்கு போ அபுல் காசிம் உடைய பேச்சைக் கேட்டு விடு என்று உடனே,
மௌத்தாயிட்டாரு ரசூலுல்லாவுக்கு எவ்வளவு சந்தோஷம் பாருங்க, அல்லாஹுத்தஆலா நரகத்திலிருந்து ஒரு உயிரைப் பாதுகாத்தான் அல்ஹம்துலில்லாஹ் என்று சொல்லிட்டு வெளிய வந்து கொஞ்ச நேரம் மூச்சு வாங்கிட்டு தங்களுடைய தோழர்கள் கிட்ட சொல்றாங்க உங்களுடைய சகோதரரை நல்லடக்கம் செய்யுங்கள் சுபஹானல்லாஹ்!
அன்பை வெளிப்படுத்தணும் உங்களுடைய பற்றை உங்களுடைய பிரியத்தை வெளிப்படுத்தணும் சுபஹானல்லாஹ் நம்ப துபாய்ல பிரண்டு ஒருத்தர் அனேகமா நீங்க அதுல இருந்தீங்களா என்னன்னு தெரியல ஜக்கரியா பாய் அதுல நிறைய முஸ்லிம் அல்லாத சகோதரர்கள் வந்திருந்தார்கள் இது வந்து சுபஹானல்லாஹ் அல்லாஹ் மிகப்பெரியவன் நம்ப பேசி பேசி தாவா கொடுக்கிறதவிட நம்ம அக்லாக்கை வெளிப்படுத்திவிட்டு டக்குனு டச் பண்ணா போதுங்க அவர் முஸ்லிமாகிவிடுவார் எப்படி நம்ம பேசிக்கிட்டே இருக்கோம்,
பாருங்க அக்லாக்கை வெளிப்படுத்தாமல் அக்லாக்கை வெளிப்படுத்திட்டு லேசா டச் பண்ணுங்களேன் பட்டுன்னு சரண் இஸ்லாத்துக்கு வந்த சகோதரர் ஒருத்தர் அழுதுட்டாரு நான் முழுக்க முழுக்க முஸ்லிமல்லாதவர்களுடைய சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டிருந்தேன் நான் ஒரு ஸ்கூலோ, காலேஜோ, சேர்ந்த ஹாஸ்டல் அதுல பார்த்தா என்னுடைய ரூம் மேட் ஒரு முஸ்லிம் என்ன எனக்கு உடல் சுகம் இல்லாமல் போயிடுச்சு அப்போ அந்த உடல் சுகம் இல்லாத நேரத்துல என்னுடைய சொந்த சகோதரனை விட அந்த முஸ்லிம் என்னுடைய ரூம் மேட் கவனித்துக் கொண்டது என்னால பொறுக்கவே முடியல இப்படிப்பட்ட ஒரு சகிப்பு இப்படிப்பட்ட ஒரு உதவி நான் யோசித்தே பார்க்கவில்லை.
சில நேரங்களிலே அவன் வந்து அவனும் சாதாரணமான ஒருத்தன் தான் ஒரு வாழைப்பழம் வாங்கிட்டு வருவான் நான் ரூம்ல இருப்பேன் எனக்கு கொடுத்துட்டு அவன் பட்டினியா இருப்பான் இதை பார்த்துட்டு அவன பத்தி தெரிஞ்சு கொள்வதற்காக அவனுடைய மார்க்கத்தை கேட்ட அவன் கிட்ட முஸ்லிமா ஆயிட்டேன் என்று சொல்லிட்டு எனக்கு நான் குர்ஆனை படிக்கல ஹதீஸை படிக்கல என்னுடைய ரூம் மேட் உடைய குணத்தால் நான் முஸ்லிமானேன் என்றார்.
சொன்னாரு என்னுடைய ரூம் மேட் உடைய குணத்தால் முஸ்லிம் ஆனேன் என்றார் சுபஹானல்லாஹ் யோசித்துப் பாருங்கள் அல்லாஹ் அக்பர் இந்த மாதிரி நிறைய சம்பவங்கள் இருக்கு திரும்ப ரசூலுல்லாஹ் கிட்ட போவோம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எப்படி பாருங்க அக்லாக் அவங்க நினைச்சாங்கன்னா நூற்றுக்கணக்கான காபீர்களை ஒரு இஷாரால கொன்னு போட்டு இருக்கலாம் நூற்றுக்கணக்கான காபிர்களை என்ன செய்து இருக்கலாம் இன்னைக்கு அந்த மாதிரி அதிகாரம் எல்லாம் நம்ம கையில வந்து இருந்துச்சுன்னு வச்சுக்கோங்க தொலைஞ்சானுவோ,
அதனாலயே என்னமோ, அல்லாஹுத்தஆலா கொடுக்காமல் இருக்கான் நமக்கு அந்த பக்குவோம் இல்லாதனால அந்த காலத்துல சூபி கதையில ஒரு கதை சொல்லுவாங்க அது உண்மையோ என்னமோ என்ன லேசா சின்னதா சொல்லிக்கிறேன் ஒரு பெரிய ஞானி கிட்ட போய் ஒருத்தவரு ஐயா நீங்க எனக்கு إسم الأعظم சொல்லித் தரனும் எதுக்குய்யா நான் துவா செய்வதெல்லாம் கபூல் ஆகணும் சரி அப்படியா கொஞ்ச நாளு பணிவிடையிலேயே இரு கொஞ்ச நாளும் மத்ததெல்லாம் படிச்சிக்கோ அதற்கு நீ பக்குவம் வந்த உடனே அதை நான் சொல்லி தரேன் சரி என்று பணிவிடைல இருக்காரு அப்போ வந்து அவர் ஒரு வழியா ஒரு தூரமா போகும்போது,
அங்க ஒரு வயசான மனிதர் அப்ப அந்த ந்த பக்கமா வந்த சிப்பாயி அந்த வயசான மனிதர் கிட்ட சண்டை போடுறான் சண்டை போட்டு அடிச்சிடுறான் சிப்பாய் பெரும்பாலும் அப்படித்தான் இருப்பார்கள் ஏதாவது கொஞ்சம் முன்ன பின்ன பேசியதனால் அவங்களுக்கு திருப்தியா பதில் சொல்லவில்லை என்றால் எடுத்து அடித்து விடுவார்கள் அதுவும் அந்த ராஜா காலத்துல கையில சாட்டை இருந்து கொண்டே இருக்கும் இந்த காலத்துல லத்தி இருக்கிற மாதிரி இதை அவர் பார்த்துட்டாரு யாரு பாத்துட்டா إسم الأعظم கத்துக்க வந்தவர் வெளியே போனாருல அவரு பார்த்துட்டாரு,
பார்த்துட்டு அன்னைக்கு சாயந்தரம் தன்னுடைய குரு உஸ்தாத் கிட்ட வரும்பொழுது உஸ்தாத் வாழ்க்கையே வீணாக்கிட்டீங்க நீங்க நீங்க மட்டும் வந்த உடனே إسم الأعظم சொல்லி தந்து இருந்தா இன்னைக்கு நான் பார்த்த காட்சில ஒரு வயதானவர இந்த மாதிரி ஒரு சிப்பாய் போட்டு அடிச்சுகிட்டு கிடந்தான் சாட்டையால நான் துவா செஞ்சு அப்பயே அந்த சிப்பாய ஒரு கதி பண்ணி இருப்பேன் அப்படின்னு சொல்லிட்டு இப்போ இவரு கேக்குறாரு இந்த குரு அந்த வயதானவர் எப்படி இருந்தார் தோற்றம் என்ன என்று சொல்லிட்டு எல்லாத்தையும் சொல்லி முடித்த உடனே சொல்றாரு அவர் தாம்பா எனக்கு إسم الأعظم சொல்லி கொடுத்தவரே அவர் தான் பா எனக்கு குரு என்று சொல்லிட்டு,
அதுதான் பக்குவம் அல்லாஹுத்தஆலா நாடியிருந்தால் மக்கால! ரசூலை இறக்குகின்றான் உலகத்திற்கே இதுவரைக்கும் வந்திராத வர முடியாத அப்படிப்பட்ட ஒரு மனிதரே இல்லாத ஒரு மாமனிதர் தானே ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ரசூல் என்று அனுப்புகிறான் ஒரே வருஷத்துல மக்காவை மாத்தி இருக்கலாம்ல அல்லாஹுத்தஆலா முடியுமா முடியாதா அல்லாஹ்வுக்கு ஒரே மாசத்துல மாத்தி இருக்கலாம்ல 13 வருஷம் இழுத்து அடிச்சாங்களாம் அல்லாஹுத்தஆலா தர்பியத் 13 வருஷம் சஹாபாக்களுக்கு தர்பியத் அடி வாங்குங்க பொறுமையா இருங்க சகிங்க நீங்க குர்ஆன் ஆயத்து ஃபுல்லா பாருங்க மக்காவில் இறங்கின வசனம் எல்லாம் பொறுமை செய்யுங்கள், சகிங்கள், பொறுமை சகித்துக் கொள்ளுங்கள்.
சகித்துக் கொள்ளுங்கள் முந்தைய நபிமார்கள் கொல்லப்படவில்லையா முந்தைய இறைத்தூதர்கள் உடைய மக்கள் கொல்லப்படவில்லையா அவர்கள் என்ன சோர்ந்து விட்டார்களா பயந்துவிட்டார்களா திரும்பத் திரும்பத் திரும்பத் திரும்ப இந்த பில்லரை இறக்கிற மாதிரி அல்லாஹுத்தஆலா ஈமான சபுர இறக்கிக்கிட்டே இருந்தான் 13 வருஷம் அவங்களுக்கு தர்பியத் சொல்லுங்க பாக்கலாம் விஷயத்துக்கு,
வாங்க ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நாடி இருந்தாங்கன்னா ஒரு இஷாரால என்ன செஞ்சிருக்கலாம் நூற்றுக்கணக்கான காஃபிர்கள் உடைய தலைய சீவி இருக்கலாம் பத்ரு போர்ல 70 கைதி இல்லையா ஒரே சீவு உமர் வேற சொல்றாரு சீவிருவோங்குராரு ஒரு இஷாரால சிவி இருக்கலாம் அதே போல எத்தனை இடங்கள்ல ஏன் மக்கா வெற்றி கொள்ளப்பட்டப்ப ஆயிரம் கணக்கான பேர சீவி இருக்கலாம் ஒட்டகத்தில் உட்கார்ந்துகிட்டு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னாங்க,
யூ ஆர் ஆல் ப்ரீ, யூ ஆர் டோட்டலி ஃப்ரீடம், டாங்க மொத்தமே அதிகபட்சமா ஆறு பேரு பேர என்னுனாங்க இவர்களை மட்டும் பிடிச்சுட்டு வாங்கன்னாங்க முடிஞ்சு போச்சு அத்தனை நூற்றுக் கணக்கான பேர ஃப்ரீ பண்ணாங்க ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சரி வாங்க என்ன ஆச்சுன்னு சொன்னா இந்த அம்ருனு ஒருத்தரு இவருடைய மகன்லாம் பெரிய பெரிய வீரர் பத்ரு போர்ல வந்த பேர்ல மகன்களை சில பேர கொன்னு,
புட்டு கதை முடிஞ்சிடுச்சு சில பேரு கைதியா மாட்டிக்கிட்டாங்க இப்ப இவரும் சஃப்வான்னு ஒருத்தர் ரெண்டு பேரும் பெரிய லீடர் பயங்கரமான வீரர்கள் வேற ரெண்டு பேரும் ஒக்காந்து பேசுகிறாங்க என்ன பேசுகிறாங்க மக்கால பேசிக்கிறாங்க என்னப்பா அமரு இந்த மாதிரி ஆய் போச்சே என்னப்பா சஃப்வான் இந்த மாதிரி ஆய் போச்சே அப்படின்னு சொல்லிட்டு அப்ப இந்த அம்ரு சொல்றாரு என்ன பண்ண எனக்கு புள்ள குட்டி நிறைய எனக்கு மட்டும் ஒரு வாழ்வாதாரத்திற்கு ஒரு கேரண்டி கிடைச்சிடுச்சுனா என் உயிரே போனாலும் சரி,
நான் போய் முஹம்மது போட்டு தள்ளிட்டு வருவேங்குராறு இதுதான் சந்தர்ப்பம்னு சஃப்வான் புடிச்சிகிட்டாரு அதைப்பற்றி கவலைப்படாத உன் பொண்டாட்டி புள்ளைங்களுக்கு கொடுக்க வேண்டியதெல்லாம் நான் அவங்கள கவனிச்சுக்க வேண்டியது நான் என் செல்வத்துல அவங்கள நான் கஞ்சத்தனமே நான் காட்ட மாட்டேன் நீ தைரியமா இப்பயே கிளம்புண்ட்டாரு அவர் நல்ல பெரிய சூப்பரான வாழ வாங்கி அதுல விஷத்தை தடவி தடவி தடவி காயவச்சி உரையில போட்டுக்கிட்டு,
நேரா கிளம்பிட்டாரு எங்க மதினாவுக்கு எதுக்கு ரசூலாவை போட்டுத் தள்ள இதுல வேற மக்கால இருக்கும்போது வேற ரொம்ப மோசமான காஃபிரா இருந்தவரு அவர் மதினாக்குள்ள வந்துட்டாரு உமர் ரலியல்லாஹு அன்ஹு இருக்கிறாங்களே கண்ணு சாதாரண கண்ணு கிடையாது அப்படியே பார்த்தாங்களே டேய் வரவன் அமருலடா சாதாரண ஆள் இல்லையே என்று சொல்லிட்டு அது மட்டும் இல்ல இத்தனை நீட்டுக்கு இருக்குது வாளு வாள் இவன் என்னடா வாள்ள இத்தனை நீட்டிக்கு இருக்கிறான்னு சொல்லிட்டு எந்திரிச்சிட்டாங்க குதிச்சிட்டாங்க யா ரசூலுல்லாஹ் கல்புன்,
மிருகம் வருதுனாங்க யாரைப் பார்த்து யாரசூலுல்லாஹ் மிருகம் கல்புக்கு நாய்னு ஒரு அர்த்தம் மிருகம்னு ஒரு அர்த்தம் மிருகம் வருதுன்னு சொன்னா காஃபீர் மிருகம் வருது சாதாரண ஆள் கிடையாது ரசூலுல்லாஹ் பாக்குறாங்க கூல் டவுன் யா ரசூலுல்லாஹ் அவன் மோசமான ஆளாச்சே இதுல வேற இத்தனை நீட்டோட வாலோட வரான்,
ரசூலுல்லாஹ் சொல்லிக்கிட்டே இருக்காங்க அதெல்லாம் இருக்கட்டும் அன்சாரிகளே எந்திரிங்கன்னு சொல்லிட்டாங்க சுத்தி நில்லுங்கன்னு சொல்லிட்டாங்க ரசூலுல்லாஹ்வை சுபஹானல்லாஹ் அன்சாரியே சுற்றி நில்லுங்க அவகிட்ட விட்டுடாதீங்க அவங்கள அப்படின்னு சொல்லிட்டாங்க எல்லா அன்சாரிகளும் சுத்தி நின்னுக்கிட்டாங்க ரசூலுல்லாஹ் இங்க சொல்லிகிட்டே இருக்காங்க உமர் அப்படித்தான் நேரா போயிட்டாரு புடிச்சு கைய புடிச்சு,
முறுக்கி வாழ புடிச்சு பின்னாடி கட்டிக்கிட்டாரு என்ன ரசூலுல்லாஹ் சொல்றாங்க விடுப்பா ஃப்ரீ பண்ணுப்பா யா ரசூல் அல்லா வாலு வச்சிருக்கான் அவன் பரவாயில்ல விடுங்கன்னு சொல்லிட்டு அல்லாஹு அக்பர் ரசூலுல்லாஹ்வுக்கும் நல்லா தெரியும் ஏன்னா வஹீ வந்திருச்சு இங்க எங்க யாருக்கு அல்லாஹ் இறக்கிட்டான் நபியே சஃப்புவானும் அமரும் ரெண்டு பேரும் மக்காவுடைய செவுத்துல காபத்துல்லா செவத்துல சாஞ்சுகிட்டு உங்கள போட்டு தள்றதுக்கு மசூரா பண்ணிட்டு அம்ரு இந்த வாளோட வரான் நபியே என்று அல்லாஹ் வஹீ இறக்கிட்டான் அதற்கு பின்னாடி நடக்குதுங்க இவ்வளவு சம்பவம் இந்த எதற்கும் துணிந்தவர்கள் இருப்பார்கள் பாருங்கள் புரியுதுங்களா அவங்க லெவலே வேற இவ்வளவு நடக்குது இல்ல இந்த அமரு ஏதாவது அலத்திக்கிட்டாரா,
கம்முனு கல்லு கூண்டு மாதிரி இருக்காருங்க ஏன்னா எப்படியோ தான் உயிர் போனாலும் போடுவோம் என்கிற உறுதியில இருக்காப்ல கடைசில பக்கத்துல உட்கார வச்சாச்சு உமர் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்றாங்க கைய எடுங்க உமருக்கு தாங்க முடியல சுத்தி நின்னுக்கிட்டாங்க கேர்ஃபுல்லா நிக்கிறாங்க ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்,
நெஞ்சிலே அவருடைய நெஞ்சில இப்படி கையை தடவுறாங்க சுபஹானல்லாஹ் அப்படியே அவருடைய உள்ளத்தில் இருந்து குஃப்ர் எல்லாம் போகுது ரசூலுல்லாஹி மேல உள்ள பகைமை எல்லாம் போகுது எப்படி பிரியத்தை வெளிப்படுத்துறாங்க பாத்தீங்களா தன்னை கொள்ள வரான்னு சொல்லி அல்லாஹ்வே சொல்லிட்டான் இவன் வரவன் உங்களை கொல்றதுக்குன்னே விஷம் தேய்க்கப்பட்ட வாலை கொண்டு வருகிறான் என்று,
சொல்லிட்டு அந்த காபிர் கிட்ட ரசூல் அல்லாஹ் நடந்து கொள்கின்ற முறையை பாருங்க மஸ்ஜிதில் கூட்டு வைத்து பக்கத்தில் உட்கார வைத்து அது மட்டுமல்ல அவரிடத்தில் முரட்டுத்தனமா நடந்து கொண்ட தன்னுடைய தோழர்கள் தனது உயிருக்கு பாதுகாப்புக்காக வேண்டி அந்தத் தோழர்களை ப்ளீஸ் நீங்கள் எல்லாம் தள்ளி நில்லுங்க கூல் டவுன் கூல் டவுன் கொஞ்சம் பொறுமையா இருங்க கொஞ்சம் அமைதியா இருங்க அவரை உட்கார வச்சுட்டு,
அவருடைய நெஞ்சில் தடவி விட்டுட்டு அமர் என்ன செய்தி அப்படின்னு கேக்குறாங்க இதோ எங்க பிள்ளைகள் எல்லாம் மாட்டிக்கிட்டாங்கல எதுல பத்ரு போர்ல கைதியா இருக்காங்கள அவர்களையெல்லாம் பார்த்துவிட்டு போக வந்து இருக்கேன் அப்படின்னு அள்ளி விடுகிறார் அப்போ ரசூல் அல்லா கேக்குறாங்க அது சரி பார்த்துட்டு போக வரவருக்கு எதற்கு இத்தனை பெரிய வாலு பாத்துட்டு போறவருக்கு இத்த பெரிய வால் எதற்கு ஆமா இந்த வாழை வைத்து எதை கிழிச்சிட்டோம் நாங்க இந்த வாழை வைத்து நாங்க பெரிய ஏதாவது,
சாதிக்கிறதா இருந்தா பத்ருப்போரிலேயே சாதித்து இருப்போமே எப்படி பாருங்க அவர் எப்படி அதாவது கொலை செய்ய வந்தோம் என்கிறதே அறவே தெரிந்து விடக்கூடாது திட்டம் அறவே தெரிந்து விடக்கூடாது என்கிறதுல கிளியரா இருக்காரு அப்படின்னு பேசுறாரு கடைசியில ரசூலுல்லாஹ் அம்ரே உங்களுக்கு நான் ஒன்றை சொல்லட்டுமா என்ன சொல்லப் போறீங்க நீயும் சஃப்வானும்,
காபத்துல்லாஹ் உடைய செவத்துல சாஞ்சிக்கிட்டு உட்கார்ந்து பேசினீங்களே அப்படின்னு சொல்லிட்டு இதை சொன்ன உடனே ஏற்கனவே ரசூலுல்லாஹ் உடைய கேரக்டர்ல அவரு ஏனா மக்காவுல ரசூலுல்லாஹ் பொறுமையா இருந்தாங்கன்னா அது வேற விஷயம் மதினாவுல ரசூலுல்லாஹ் பொறுமையா இருக்காங்கணா அது வேற விஷயம்
That is your different place same character different place different meaning
அங்க பொறுமையா இருந்தாங்கன்னா அது வேற எதிர்க்க முடியாது எதிர்த்து இருக்கலாம் ஆனால் எதிர்க்க முடியாது ஒரு சூழ்நிலை அப்படி இல்லையா இங்க ரசூலுல்லாஹ் பொறுமையா இருந்தாங்கன்னா சகிப்பா இருந்தாங்கன்னா சொல்லுங்க பார்க்கலாம் கைமா போட்டு இருப்பாங்க யாரு அன்சாரிகள் முஹாஜிர்கள் யார அம்ரை என்ன செஞ்சி இருப்பாங்க ரசூலுல்லாஹ் ஒரு இஷாரா பண்ணி இருந்தா சொல்லுங்க கொத்து கைமா போட்டு இருப்பாங்க பீஸ் பீசா நறுக்கி இருப்பாங்க பாருங்க அங்க செஞ்சதுக்கும் பழி,
வாங்கல இப்போ வந்திருக்கிறதுக்கும் பழி வாங்கல சொல்லிட்டு சொல்றாங்க என்ன அமிரே உடனே அவரு ஷஹாதா சொல்லிட்டு அங்கேயே முஸ்லிம் ஆயிடுகிறார் ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர புடிச்சு உமரு கையிலேயே பிடித்து சொல்றாங்க உன்னுடைய சகோதரனுக்கு மார்க்கத்தை கற்றுக் கொடு என்கிறார்கள் இன்னும் படிங்க ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு நிறைய இருக்கு படிச்சுக்கிட்டே இருந்தீங்கன்னா நிறைய,
கிடைக்கும் அதுல அது வந்து கடல் அன்னைக்கு பாருங்க துபாய் உடைய புக் ஃபேர்ல ஒரு ஏழு வயது பிள்ளை அதிகமான புத்தகங்கள் படித்த பிள்ளைகள்ல அந்த பிள்ளைக்கு ஃபர்ஸ்ட் பிரைஸ் கிடைக்குது ஏழு வயது பிள்ளை அந்த 7 வயது பிள்ளைகிட்ட அந்த துபாய் புக் ஃபேருடைய பெரிய லீடர் டாக்டர் லேடி ஒருத்தவங்க அவங்க கேக்குறாங்க அந்த பிள்ளை கிட்ட நீ நிறைய புக் படிச்சு இருப்ப எங்களுக்கு ஒரு அட்வைஸ் பண்ணு எந்த புக் அதிகமா படிங்கன்னு தபக்குனு அந்த புள்ள சொன்னுச்சு ரசூல் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்க்கை வரலாறு படிங்கன்னு ஏழு வயது பிள்ளை சிரியாவுடைய பிள்ளை ஏழு வயது பிள்ளை சொல்லுது
எல்லாரும் அப்படியே தலை குனிந்து அழுகிறார்கள் யோசித்துப் பாருங்கள் கைர் அல்ஹம்துலில்லாஹ் அல்லாஹுத்தஆலா நமக்கு நர்பாக்கியத்தை கொடுக்கணும் ஒரு விஷயம் நம்ம தாவா செய்யணும்னு உறுதி செய்யணும் இரண்டாவது குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் தாவா செய்யணும்னு உறுதி செய்ய வேண்டும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்,
அவர்களுடைய தாவாவை கற்று அதன் அடிப்படையிலே தாவா செய்யணும்னு உறுதி செய்யனும் எத்தகைய சோதனைகளிலும் இந்த தாவாவை விட்டு பின்வாங்க கூடாது என்று உறுதி செய்யணும் அல்லாஹ்விடத்திலே எங்களுக்கு சூழ்நிலைகளையும் சோதனைகளையும் லேசாக்கி கொடு அல்லாஹ் எங்களை இதிலிருந்து திருப்பி விடாதே யா அல்லாஹ் அல்லாவை முன்னோக்கி துவா செய்தவர்களாகவே தாவா செய்ய வேண்டும் அல்லாஹ் சுபஹானஹூதஆலா எனக்கும் உங்களுக்கும் அந்த நற்பாக்கியத்தை தந்த அருள் புரிவானாக!
ஆமீன்
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم
குறிப்புகள் :
குறிப்பு 1)
(1/ 377) صحيح مسلم
23 - (532 حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، وَإِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ - وَاللَّفْظُ لِأَبِي بَكْرٍ قَالَ إِسْحَاقُ: أَخْبَرَنَا، وَقَالَ أَبُو بَكْرٍ: - حَدَّثَنَا زَكَرِيَّا بْنُ عَدِيٍّ، عَنْ عُبَيْدِ اللهِ بْنِ عَمْرٍو، عَنْ زَيْدِ بْنِ أَبِي أُنَيْسَةَ، عَنْ عَمْرِو بْنِ مُرَّةَ، عَنْ عَبْدِ اللهِ بْنِ الْحَارِثِ النَّجْرَانِيِّ، قَالَ: حَدَّثَنِي جُنْدَبٌ، قَالَ: سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ أَنْ يَمُوتَ بِخَمْسٍ، وَهُوَ يَقُولُ: «إِنِّي أَبْرَأُ إِلَى اللهِ أَنْ يَكُونَ لِي مِنْكُمْ خَلِيلٌ، فَإِنَّ اللهِ تَعَالَى قَدِ اتَّخَذَنِي خَلِيلًا، كَمَا اتَّخَذَ إِبْرَاهِيمَ خَلِيلًا، وَلَوْ كُنْتُ مُتَّخِذًا مِنْ أُمَّتِي خَلِيلًا لَاتَّخَذْتُ أَبَا بَكْرٍ خَلِيلًا، أَلَا وَإِنَّ مَنْ كَانَ قَبْلَكُمْ كَانُوا يَتَّخِذُونَ قُبُورَ أَنْبِيَائِهِمْ وَصَالِحِيهِمْ مَسَاجِدَ، أَلَا فَلَا تَتَّخِذُوا الْقُبُورَ مَسَاجِدَ، إِنِّي أَنْهَاكُمْ عَنْ ذَلِكَ
குறிப்பு 2)
صحيح مسلم (2/ 593)
46 - (868) وحَدَّثَنَا إِسْحَاقُ بْنُ إِبْرَاهِيمَ، وَمُحَمَّدُ بْنُ الْمُثَنَّى، كِلَاهُمَا عَنْ عَبْدِ الْأَعْلَى، قَالَ ابْنُ الْمُثَنَّى: حَدَّثَنِي عَبْدُ الْأَعْلَى وَهُوَ أَبُو هَمَّامٍ، حَدَّثَنَا دَاوُدُ، عَنْ عَمْرِو بْنِ سَعِيدٍ، عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ، عَنِ ابْنِ عَبَّاسٍ، أَنَّ ضِمَادًا، قَدِمَ مَكَّةَ وَكَانَ مِنْ أَزْدِ شَنُوءَةَ، وَكَانَ يَرْقِي مِنْ هَذِهِ الرِّيحِ، فَسَمِعَ سُفَهَاءَ مِنْ أَهْلِ مَكَّةَ، يَقُولُونَ: إِنَّ مُحَمَّدًا مَجْنُونٌ، فَقَالَ: لَوْ أَنِّي رَأَيْتُ هَذَا الرَّجُلَ لَعَلَّ اللهَ يَشْفِيهِ عَلَى يَدَيَّ، قَالَ فَلَقِيَهُ، فَقَالَ: يَا مُحَمَّدُ إِنِّي أَرْقِي مِنْ هَذِهِ الرِّيحِ، وَإِنَّ اللهَ يَشْفِي عَلَى يَدِي مَنْ شَاءَ، فَهَلْ لَكَ؟ فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ الْحَمْدَ لِلَّهِ، نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ» قَالَ: فَقَالَ: أَعِدْ عَلَيَّ كَلِمَاتِكَ هَؤُلَاءِ، فَأَعَادَهُنَّ عَلَيْهِ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، ثَلَاثَ مَرَّاتٍ، قَالَ: فَقَالَ: لَقَدْ سَمِعْتُ قَوْلَ الْكَهَنَةِ، وَقَوْلَ السَّحَرَةِ، وَقَوْلَ الشُّعَرَاءِ، فَمَا سَمِعْتُ مِثْلَ كَلِمَاتِكَ هَؤُلَاءِ، وَلَقَدْ بَلَغْنَ نَاعُوسَ الْبَحْرِ، قَالَ: فَقَالَ: هَاتِ يَدَكَ أُبَايِعْكَ عَلَى الْإِسْلَامِ، قَالَ: فَبَايَعَهُ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «وَعَلَى قَوْمِكَ»، قَالَ: وَعَلَى قَوْمِي، قَالَ: فَبَعَثَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ سَرِيَّةً، فَمَرُّوا بِقَوْمِهِ، فَقَالَ صَاحِبُ السَّرِيَّةِ لِلْجَيْشِ: هَلْ أَصَبْتُمْ مِنْ هَؤُلَاءِ شَيْئًا؟ فَقَالَ رَجُلٌ مِنَ الْقَوْمِ: أَصَبْتُ مِنْهُمْ مِطْهَرَةً، فَقَالَ: رُدُّوهَا، فَإِنَّ هَؤُلَاءِ قَوْمُ ضِمَادٍ
__________
[شرح محمد فؤاد عبد الباقي]
[ ش (يرقي) من الرقية وهي العوذة التي يرقى بها صاحب الآفة (من هذه الريح) المراد بالريح هنا الجنون ومس الجن (فهل لك) أي فهل لك رغبة في رقيتي وهل تميل إليها (ناعوس البحر) ضبطناه بوجهين أشهرهما ناعوس هذا هو الموجود في أكثر نسخ بلادنا والثاني القاموس وهذا الثاني هو المشهور في روايات الحديث في غير صحيح مسلم وقال القاضي عياض أكثر نسخ صحيح مسلم وقع فيها قاعوس قال أبو عبيد قاموس البحر وسطه وقال ابن دريد لجته وقال صاحب كتاب العين قعره الأقصى]
DARUL HUDA
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
Website: http://www.darulhuda.net/