HOME      Khutba      ஜிஹாதும் கிலாபத்தும் இஸ்லாமின் அடிப்படைகளா | Tamil Bayan - 759   
 

ஜிஹாதும் கிலாபத்தும் இஸ்லாமின் அடிப்படைகளா | Tamil Bayan - 759

           

ஜிஹாதும் கிலாபத்தும் இஸ்லாமின் அடிப்படைகளா | Tamil Bayan - 759


ஜிஹாதும் கிலாஃபத்தும் இஸ்லாமின் அடிப்படைகளா?
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : ஜிஹாதும் கிலாஃபத்தும் இஸ்லாமின் அடிப்படைகளா?
 
வரிசை : 759
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 30-12-2022 | 06-06-1444
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிப்பிற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவைப் போற்றிப் புகழ்ந்தவனாக, அல்லாஹ்வுடைய தூதர் மீதும் அந்த தூதரின் குடும்பத்தார் தோழர்கள் மீதும் அல்லாஹ்வுடைய ஸலவாத்தும் ஸலாமும் இறங்கட்டும் என்று வேண்டியவனாக, உங்களுக்கும் எனக்கும் அல்லாஹ்வின் பயத்தை நினைவூட்டியவனாக இந்த ஜும்ஆ குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். 
 
அல்லாஹ் சுபஹானஹு தஆலா நம்முடைய உள்ளங்களில் ஈமானை நிரப்புவானாக! தக்வாவை நிரப்புவானாக! அல்லாஹ்வுடைய வேதத்தை சரியான முறையில் புரிந்து, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை சரியான முறையில் புரிந்து, கண்ணியத்திற்குரிய சஹாபாக்கள், யாரை அல்லாஹு தஆலா வெற்றியாளர்கள், பொருத்தத்திற்கு உரியவர்கள், சொர்க்கவாசிகள் என்று வர்ணித்தானோ, புகழ்ந்தானோ அந்த சஹாபாக்கள் உடைய பாதையில் வாழ்ந்து அல்லாஹ்வுடைய மன்னிப்பையும், அருளையும், மறுமையினுடைய சொர்க்கத்தின் வெற்றியையும், அல்லாஹு தஆலா எனக்கும் உங்களுக்கும் தந்தருள வேண்டும் என்று வேண்டியவனாக இந்த குத்பாவை ஆரம்பம் செய்கிறேன். ஆமீன்!
 
அல்லாஹ்வுடைய இந்த தீன், புரிந்து கொள்வதற்கு இலகுவான ஒன்று. அல்லாஹ்வின் இந்த மார்க்கம், எல்லா மக்களாலும் இலகுவான முறையில் அறிந்து கொள்வதற்கும், கற்றுக் கொள்வதற்கும், புரிந்து கொள்வதற்கும், எடுத்து நடப்பதற்கும் மிக இலகுவான ஒன்று. 
 
ஒரு சில குறிப்பிட்ட மக்கள் மட்டுமே புரிந்து கொள்ளும்படியான வரட்டு தத்துவங்கள், முரட்டு அடிப்படைகள் இந்த மார்க்கத்தில் இல்லை. அல்லாஹு தஆலா தான் இறக்கிய குர்ஆனை எளிதாக்கி வைத்தான். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவை எளிதாக்கி வைத்தான். இஸ்லாமிய மார்க்கத்தை எளிதாக்கி வைத்தான். 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அழைப்பு பணிக்கு செல்லக்கூடிய தங்களுடைய அழைப்பாளர்களுக்கு சொல்வார்கள்: 
 
يَسِّرُوا ولا تُعَسِّرُوا، وبَشِّرُوا، ولا تُنَفِّرُوا
 
يَسِّرُوا -நீங்கள் மார்க்கத்தை மக்களுக்கு இலகுவாக்கிக் கொடுங்கள். அதனுடைய போதனைகளை, அதனுடைய தத்துவங்களை, அதனுடைய ஒழுக்கங்களை, அவனுடைய கொள்கை கோட்பாடுகளை மக்களுக்கு இலகுவாக்கி சொல்லிக் கொடுங்கள். 
 
ولا تُعَسِّرُوا -மார்க்கத்தை நீங்கள் சிரமப்படுத்தாதீர்கள். உங்கள் மீது சிரமங்களை சுமத்திக் கொள்ளாதீர்கள். பிறருக்கு மார்க்கத்தை சிரமமாக காட்டாதீர்கள். 
 
وبَشِّرُوا -இன்னும், மக்களுக்கு நற்செய்தி சொல்லுங்கள். அல்லாஹ்வுடைய மறுமையின் வெற்றியைக் கொண்டு, அல்லாஹ்வுடைய மன்னிப்பைக் கொண்டு, சொர்க்கத்தைக் கொண்டு, பாவமன்னிப்பை கொண்டு, அல்லாஹ்வுடைய விசாலமான கருணை, பாவ மன்னிப்பைக் கொண்டு மக்களை நீங்கள் சந்தோஷப்படுத்துங்கள்; நற்செய்தி சொல்லுங்கள்.
 
ولا تُنَفِّرُوا -மக்களை நீங்கள் வெறுப்படையச் செய்யாதீர்கள். இந்த மார்க்கத்தின் மீது மக்களுக்கு வெறுப்பு ஏற்படும்படி, மக்களுடைய உள்ளத்திலே ஒரு கசப்புணர்வு ஏற்படும்படி, இந்த மார்க்கத்தை நீங்கள் சிரமப்படுத்திக் கொள்ளாதீர்கள். 
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 69.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
«اكْلَفُوا مِنَ الأَعْمَالِ مَا تُطِيقُونَ»  ولَنْ يُشَادَّ الدِّينَ أحَدٌ إلَّا غَلَبَهُ
 
மார்க்கத்தில் உங்களுக்கு சொல்லப்பட்ட அமல்கள் என்னவோ, அந்த அமல்களில் முடிந்ததை, உங்களுக்கு சாத்தியமானதை எடுத்து நீங்கள் செயல்படுத்துங்கள். நீங்கள் உங்கள் மீது சிரமத்தை ஏற்படுத்த நினைத்தால், இந்த மார்க்கத்தோடு போட்டி போட நினைத்தால், யாராவது இந்த மார்க்கத்தோடு, இதைவிட நான் பலமானவன், நான் ரொம்ப மார்க்கத்தை உறுதியாக பின்பற்றி விடுவேன் என்பதாக போட்டி போட நினைத்தால், இந்த மார்க்கம் அவரை மிகைத்து விடும்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 39, 6465.
 
எவ்வளவு அழகான வழிகாட்டுதல்! ரசூல் அல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் செயல் முறையோடு சஹாபாக்களுக்கு இதைச் செய்து காட்டினார்கள்.
 
ஒருமுறை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மஸ்ஜிதிற்கு வருகிறார்கள். அங்கே இரண்டு தூண்களுக்கு இடையிலே கயிறு கட்டப்பட்டிருக்கிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களுடைய மனைவிமார்களிடத்தில் கேட்கிறார்கள்; எதற்காக கயிறு கட்டப் பட்டிருக்கிறது என்று. 
 
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா சொன்னார்கள்: இது ஜைனப் உடைய வேலை. அப்போது, ஏன் என்று கேட்டார்கள். அவர்களுக்கு பதில் சொல்லப்பட்டது; 
 
(ஜைனப் ரலியல்லாஹு அன்ஹா அவர்கள், ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனைவி ஆவர்கள். ஜைனப் பின்து ஜஹ்ஷ் மிகப்பெரிய வணக்கசாலி, பெரிய தர்மசாலி, அல்லி அல்லி கொடுத்துக்கொண்டே இருப்பவர். உறவுகளை சேர்ப்பவர். அவர்களுடைய திருமணம் அல்லாஹு தஆலாவால் நடத்திவைக்கப்பட்டது.)
 
அல்லாஹ்வின் தூதரே! அவர் இரவிலே தொழுவார் அப்போது இந்தக் கயிற்றில் கையை அவர் இணைத்துக் கொள்வார். கயிற்றில் கையை விட்டு இப்படி தக்பீர் கட்டிக் கொள்வார். தூக்கம் மிகுதியால் கீழே விழுந்து விடாமல் இருப்பதற்காக, அந்த அளவு இரவு வணக்கத்தை அவர் செய்கிறார். நின்று வணங்குகிறார்.
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வரவேற்றார்களா? இதை ஆமோதித்தார்களா? புகழ்ந்தார்களா? மெச்சினார்களா? இல்லை. அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழிகாட்டினார்கள்: 
 
فَقالَ النبيُّ صلَّى اللهُ عليه وسلَّمَ: لا، حُلُّوهُ، لِيُصَلِّ أَحَدُكُمْ نَشَاطَهُ، فَإِذَا فَتَرَ فَلْيَقْعُدْ
 
நீங்கள் அமல் செய்யுங்கள், உங்களுக்கு சுறுசுறுப்பு உற்சாகம் இருக்கும் வரை. உங்களில் ஒருவருக்கு சோர்வு ஏற்பட்டால் அவர் ஓய்வு எடுத்துக் கொள்ளட்டும். அவர் தூங்கிக் கொள்ளட்டும். பிறகு முழுமையாக ஓய்வெடுத்தவுடன் அவருடைய அசதி, சோம்பல் போனவுடன் எழுந்து அவர் தொழட்டும். இப்படி சிரமப்படுத்திக் கொள்ளாதீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வழிகாட்டினார்கள். 
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1150.
 
இன்னும் ஒரு ஹதீஸிலே ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்களுடைய அறிவிப்பிலே வருகிறது. நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வீட்டிற்கு வருகிறார்கள்; அந்த நேரத்திலே மூன்று நபர்கள் வெளியே செல்கிறார்கள். நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்டார்கள், யார் அவர்கள்? எதற்காக வந்தார்கள்? என்ன தேவைக்காக வந்தார்கள்? என்று. 
 
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா அவர்கள் ரசூலின் அமலைப் பற்றி கேட்பதற்கு அவர்கள் வந்தார்கள் என்று கூறுகிறார்கள். 
 
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா விடத்திலே வந்தவர்கள் கேட்கிறார்கள். அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் வீட்டிலே என்ன செய்வார்கள்? எப்படித் தொழுவார்கள்? எப்படி நோன்பு வைப்பார்கள்? இரவு வணக்கம் எப்படி இருக்கும்? என்பதாக. 
 
ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய எதார்த்தமான இலகுவான எளிமையான வணக்கத்தை அங்கே அவர்களுக்கு புரிய வைக்கிறார். வருவார்கள், தூங்குவார்கள். மனைவிமார்களின் தேவை இருந்தால் தேவையை நிறைவேற்றுவார்கள். பிறகு, அவர்கள் குளித்து சுத்தமாகி தொழுவார்கள். நோன்பு வைப்பார்கள். நோன்பு இல்லாமலும் இருப்பார்கள். நோன்பு வைத்துக் கொண்டே இருப்பார்கள். இந்த மாதம் எல்லாம் நோன்பிலே முடிப்பார்கள் என்று நினைக்கும் போது நோன்பை விட்டு விடுவார்கள். பிறகு நோன்பே வைக்க மாட்டார்கள். 
 
இப்படியாகத்தான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய அமல் இருக்கும் என்பதாக கூறிய போது, அவர்கள் இந்த அமலை மிகக் குறைவாக கருதினார்கள். 
 
மேலும், அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அல்லாஹ்வால் மன்னிக்கப்பட்டவர்கள். அவர்களுடைய பழைய புதிய பாவங்கள் எல்லாம் அல்லாஹ் மன்னித்து விட்டான். நாம் அப்படி அல்ல என்று கூறி, அவர்களிலே ஒருவர், நான் இனி பெண்கள் இடத்திலே செல்ல மாட்டேன். திருமணம் முடிக்க மாட்டேன். காலமெல்லாம் நோன்பிருக்க போகிறேன். காலமெல்லாம் அல்லாஹ்வுக்காக வணக்க வழிபாடுகளிலே செல்ல போகிறேன் என்பதாக முடிவெடுத்தார்.
 
ஒருவர், இரவிலே தூங்கவே மாட்டேன். நின்று வணங்கிக் கொண்டே இருப்பேன் என்பதாக முடிவெடுத்தார். இன்னொருவர், வாழ்நாள் எல்லாம் நான் நோன்பு வைப்பேன். நோன்பை விடவே மாட்டேன் என்பதாக முடிவெடுத்தார். 
 
இப்படி ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு வந்தவர்களுடைய நிலைப்பாட்டை விளக்குகிறார். உடனே அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும் அழைக்கிறார்கள், மற்ற தோழர்களையும் மஸ்ஜிதிலே அழைத்து சுருக்கமான பிரசங்கம் செய்கிறார்கள்: 
 
இப்படி மூன்று நபர்கள் வந்தார்கள். அவர்கள் என்னுடைய வணக்க வழிபாடுகளை பற்றி விசாரித்தார்கள். அவர்களுக்கு இப்படி சொல்லப்பட்டது. அதை அவர்கள் குறைவாக கருதி இப்படி பேசிக்கொண்டு சென்றார்கள். 
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
أَمَا واللَّهِ إنِّي لَأَخْشَاكُمْ لِلَّهِ وأَتْقَاكُمْ له، لَكِنِّي أصُومُ وأُفْطِرُ، وأُصَلِّي وأَرْقُدُ، وأَتَزَوَّجُ النِّسَاءَ، فمَن رَغِبَ عن سُنَّتي فليسَ مِنِّي
 
அறிந்து கொள்ளுங்கள்! உங்களில் நான் அதிகம் அல்லாஹ்வை அறிந்தவன். உங்களில் நான் அதிகமாக அல்லாஹ்வை பயப்படக்கூடியவன். உங்களில் அதிகமாக இறையச்சம் உடையவன் நான். நான் திருமணம் முடிக்கிறேன். மனைவிகளோடு வாழ்கிறேன். நோன்பு வைக்கிறேன். நோன்பு இல்லாமலும் இருக்கிறேன். இரவிலே தொழுகிறேன். இரவிலே தூங்கவும் செய்கிறேன் என்று சொல்லிவிட்டு, பிறகு ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: யார் என்னுடைய இந்த வழிமுறையில் இருந்து விலகிச் செல்வாரோ, இதை விரும்ப மாட்டாரோ, இதை நாட்டம் கொள்ள மாட்டாரோ, அவர் என்னை சேர்ந்தவர் இல்லை. (1)
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5063.
 
அல்லாஹ்விடத்தில் சொர்க்கம் வேண்டுமா? அல்லாஹ்வுடைய மன்னிப்பு வேண்டுமா? மறுமையிலே உங்கள் அமல்களுக்கு நற்கூலி அல்லாஹ்விடத்திலே  வேண்டுமா? இதில் எது உங்களுக்கு வேண்டும் என்றாலும் சரி, இந்த மார்க்கத்திலே அதற்கு ஒரே வழி இத்திபாஃ -பின்பற்றுதல் தான். 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறையில் மட்டும் தான் இந்த மார்க்கத்தில் உங்கள் வாழ்க்கையிலே apply செய்ய முடியும். 
 
قُلْ إِنْ كُنْتُمْ تُحِبُّونَ اللَّهَ فَاتَّبِعُونِي يُحْبِبْكُمُ اللَّهُ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ
 
(நபியே!) கூறுவீராக: “நீங்கள் அல்லாஹ்வின் மீது அன்பு வைப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள். அல்லாஹ் உங்கள் மீது அன்பு வைப்பான்; இன்னும், உங்களுக்கு உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன், மகா கருணையாளன் ஆவான்.’’ (அல்குர்ஆன் 3 : 31) 
 
வசனத்தின் கருத்து : நபியே! நீங்கள் சொல்லுங்கள்! நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவராக இருந்தால் உங்களுக்கு, அல்லாஹ்வின் மீது அன்பு இருக்குமேயானால், அல்லாஹுத்தஆலா கேட்கிறான்; நிபந்தனையாகச் சொல்கிறான்; நீங்கள் உங்கள் அமல்களைக் கொண்டு அல்லாஹ்வுடைய முஹப்பத்தை வேண்டக்கூடியவர்களாக இருந்தால், அல்லாஹ் விரும்ப வேண்டும் என்னை, அல்லாஹ் என்னை ஏற்றுக் கொள்ள வேண்டும்; அல்லாஹ்வுடைய நேசர்களிலே நான் ஆக வேண்டும் என்று நீங்கள் விரும்பினால், உங்களுக்கு ஒரே வழி தான். 
 
நபியே நீங்கள் சொல்லுங்கள்! நபியாகிய  என்னை நீங்கள் பின்பற்றுங்கள் என்று. உங்களைப் பற்றி அவர்களுக்குச் சொல்லுங்கள். ரசூலுல்லாஹ்வை எப்படி பின்பற்ற வேண்டும்? தொழுகையிலே நீங்கள் பின்பற்ற வேண்டும். உங்கள் நோன்பிலே ரசூலுல்லாஹ்வை நீங்கள் பின்பற்ற வேண்டும். உங்கள் ஹஜ்ஜிலே, ஜக்காத்திலே, திருமணத்திலே, உங்களது சுக துக்கங்களிலே, உங்களது குடும்ப வாழ்க்கையிலே, உங்களது அரசியல் வாழ்க்கையிலே, உங்களது சமூக வாழ்க்கையிலே, இந்த மார்க்கத்தை எப்படி பரப்புவது, இந்த மார்க்கத்தை எப்படி நிலை நாட்டுவது, மார்க்க பிரச்சாரம் எப்படி செய்வது? இஸ்லாமை வாழ்க்கையிலே எப்படி கொண்டு வருவது? இஸ்லாமை எப்படி நிலை நாட்டுவது? எல்லா விஷயத்திலும் நீங்கள் ரசூலுல்லாஹ்வை பின்பற்ற வேண்டுமே தவிர, உங்களுக்கென புதிய கொள்கைகளை சொல்லித் தரக்கூடிய இயக்கத்தினுடைய தலைவர்களையோ, குழுக்களின் தலைவர்களையோ, நமது ஜமாத்தின் தலைவர்களையோ நீங்கள் பின்பற்ற முடியாது. 
 
யாருடைய வழிகாட்டுதலாக இருந்தாலும் சரி, யாருடைய கட்டளையாக இருந்தாலும் சரி, யாருடைய சட்டமாக இருந்தாலும் சரி, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய சுன்னாவுக்கு, வழிகாட்டுதலுக்கு உட்பட்டு இல்லை என்றால் அதற்கு நாம் கீழ்ப்படிய முடியாது. அதைக் கொண்டு அல்லாஹ்வுடைய மன்னிப்பை அன்பை எதிர்பார்க்க முடியாது. 
 
அல்லாஹ் சொல்கிறான்: நபியைப் பின்பற்றி உங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டால், இஸ்லாமை நீங்கள் ஏற்றால், இஸ்லாமை நீங்கள் நடைமுறைப்படுத்தினால் அப்போது தான் அல்லாஹ் உங்களை நேசிப்பான். உங்கள் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் மகா மன்னிப்பாளன். மகா கருணையாளன்.  (அல்குர்ஆன் 3 : 31)
 
அல்லாஹ் சொல்கிறான்: நீங்கள் விலகிச் சென்றால், நீங்கள் வேறு பாதையைத் தேர்ந்தெடுத்தால், இந்த நிராகரிப்பாளர்களை அல்லாஹ் நேசிக்க மாட்டான். யார் அல்லாஹ்வுடைய வழியிலிருந்து, அல்லாஹ்வுடைய இதாஅத்திலிருந்து, ரசூலுடைய இத்தாகத்திலிருந்து விலகிச் செல்கிறார்களோ, அவர்களை அல்லாஹு தஆலா நேசிக்க மாட்டான். 
 
இந்த வழி, எதை ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவிலே போதித்தார்களோ, எதை மதினாவிலே போதித்தார்களோ, எதை இறுதியாக விட்டுச் சென்றார்களோ அதுதான்ஒரே வழி. 
 
இதுதான் என்னுடைய நேரான பாதை இதை பின்பற்றுங்கள். அல்லாஹ்வுடைய ஒரே நேரான பாதையில் இருந்து உங்களைப் பிரித்து விடக்கூடிய மற்ற பாதைகளை பின்பற்றாதீர்கள். (அல்குர்ஆன் 6:153) (அல்குர்ஆன் 6:153) (அல்குர்ஆன்6:153)
 
இந்த மார்க்கம் அல்லாஹ்வுடைய மார்க்கம். இந்த மார்க்கம் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய மார்க்கம். இது அமானிதமாக நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது.
 
எப்படி ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பின்பற்றினார்களோ, பிரச்சாரம் செய்தார்களோ, அப்படித்தான் இந்த மார்க்கத்தை நாம் பின்பற்ற வேண்டும் பிரச்சாரம் செய்ய வேண்டும். அடிப்படைக் கடமைகள் இருக்கின்றன. அகீதா கொள்கை இருக்கிறது. ஒழுக்கம் மாண்புகள் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் உண்டான வழிகாட்டுதல் இந்த மார்க்கத்தில் கொடுக்கப் பட்டிருக்கிறது.
 
முதலாவதாக இன்று பல குழுக்களுக்கும், பல இயக்கங்களுக்கும், பல குரூப்புகளுக்கும், பல பிரிவுகளுக்கும், பல பார்ட்டிகளுக்கும், அவரவர் ஒரு கொள்கையை வகுத்துக் கொண்டு அந்தக் கொள்கையில் கொண்டு போய் மார்க்கத்தை புகுத்த நினைக்கிறார்கள். அந்தக் கொள்கையின் பக்கம் உம்மத்தை அழைக்கிறார்கள். அந்தக் கொள்கையில் சேர்ந்தவர்களை தங்களைச் சேர்ந்தவர்களாக அவர்கள் முடிவு செய்கிறார்கள். 
 
எவ்வளவு தெளிவாக அல்லாஹ் சொல்கிறான்பாருங்கள்! இதைவிட ஒரு தெளிவான வசனம் தேவையா? நான் யார்? நம்முடைய முதல் பணி என்ன? எதை நாம் செய்ய வேண்டும்? எதற்காக இந்த மார்க்கம் நமக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது? எல்லாவற்றையும் அல்லாஹுத்தஆலா இந்த வசனத்திலே சொல்லி விடுகிறான். 
 
كُنْتُمْ خَيْرَ أُمَّةٍ أُخْرِجَتْ لِلنَّاسِ تَأْمُرُونَ بِالْمَعْرُوفِ وَتَنْهَوْنَ عَنِ الْمُنْكَرِ وَتُؤْمِنُونَ بِاللَّهِ وَلَوْ آمَنَ أَهْلُ الْكِتَابِ لَكَانَ خَيْرًا لَهُمْ مِنْهُمُ الْمُؤْمِنُونَ وَأَكْثَرُهُمُ الْفَاسِقُونَ
 
(நம்பிக்கையாளர்களே!) மக்களுக்காக உருவாக்கப்பட்ட சிறந்த சமுதாயமாக நீங்கள் இருக்கிறீர்கள். நீங்கள் நன்மையை (மக்களுக்கு) ஏவுகிறீர்கள்; இன்னும், தீமையை விட்டும் (மக்களை) தடுக்கிறீர்கள்; இன்னும், அல்லாஹ்வை நம்பிக்கை கொள்கிறீர்கள். வேதக்காரர்களும் (உங்களைப் போன்று) நம்பிக்கை கொண்டால் அது அவர்களுக்கு மிகச் சிறந்ததாக இருக்கும். அவர்களில் நம்பிக்கையாளர்களும் உண்டு. அவர்களில் அதிகமானவர்களோ பாவிகள்தான். (அல்குர்ஆன் 3 : 110)
 
முந்திய சமுதாயங்களுக்கு கொடுக்கபட்ட சிறப்புகள் எல்லாம் ஒரு சேர கொடுக்கப்பட்ட சமுதாயம் தான் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய உம்மத்தாகிய நாம். இதைவிட என்ன வேண்டும்? 
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
نَحْنُ الْآخِرُونَ الْأَوَّلُونَ يَوْمَ الْقِيَامَةِ
 
நாம் இறுதியாக வந்தோம். நாம் உம்மத்துடைய வருகையில் இறுதியாக வந்தோம். ஆனால், சொர்க்கம் செல்வதில் நாம் முதலாமவர்களாக இருப்போம். (2)
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 855.
 
முந்திய சமுதாயம் எல்லாம் அந்த நபிமார்களுடைய மார்க்கத்தை பாதுகாக்கவில்லை குழப்பம் ஏற்படுத்தி விட்டார்கள். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இந்த உம்மத் அவர்களுடைய தீனை பாதுகாத்துக் கொண்டே இருக்கும். 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
«لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي قَائِمَةً بِأَمْرِ اللهِ، لَا يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ أَوْ خَالَفَهُمْ، حَتَّى يَأْتِيَ أَمْرُ اللهِ وَهُمْ ظَاهِرُونَ عَلَى النَّاسِ»
 
என்னுடைய உம்மத்திலே  ஒரு கூட்டம் சத்தியத்திலே உறுதியாக நிலையாக இருப்பார்கள். அவர்கள் ஓங்கிக் கொண்டே, உயர்ந்து கொண்டே இருப்பார்கள். அவர்களை விட்டு பிரியக் கூடியவர்கள், கைவிடக்கூடியவர்கள், அவர்களுக்கு எந்த தொந்தரவையும், எந்த இடையூறையும், எந்தக் குறையையும் உண்டு பண்ண முடியாது. அல்லாஹ்வுடைய இறுதி உத்தரவு கியாமத் நாள் வருகிற வரை அவர்கள் ஓங்கிக் கொண்டே மிகைத்துக்கொண்டே இருப்பார்கள்.
 
அறிவிப்பாளர் : ஜாபிர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 1037.
 
அல்லாஹுத்தஆலா இந்த உம்மத்தை அப்படி ஆக்கி இருக்கின்றான். இதிலே ஒருவன் பித்அத் செய்தால் அதைக் கண்டிக்க கூடிய, சுன்னத்தை மக்களுக்கு சொல்லக் கூடிய ஒரு அறிஞரை ஒரு அழைப்பாளரை அல்லாஹு தஆலா அங்கே உருவாக்குவான். 
 
இங்கே ஒருவன் ஷிர்க் செய்தால் அந்த ஷிர்கை கண்டிக்க கூடிய தவ்ஹீதை மக்களுக்கு எடுத்துச் சொல்லக்கூடிய ஒரு அறிஞரை ஒரு அழைப்பாளரை அல்லாஹுத் தஆலா ஏற்படுத்துவான். 
 
இங்கே ஒருவர் பாவம் செய்தால் பெரும் பாவமோ சிறு பாவமோ எதை செய்தாலும் அதை கண்டித்து நன்மை சொல்லக்கூடிய ஒரு அறிஞரை ஒரு அழைப்பாளரை அல்லாஹ் ஏற்படுத்தி அந்த சீர்திருத்தத்தை அல்லாஹ் செய்வான். 
 
இந்த உம்மத்தை ஹைரோடு -நன்மையோடு பாதுகாக்க கூடிய பொறுப்பு அல்லாஹ் உடைய பொறுப்பு.    
 
இந்தக் குர்ஆனை நாம் இறக்கினோம், இதை நாம் பாதுகாப்போம் என்று அல்லாஹ் சொல்கிறானே, குர்ஆனுடைய பாதுகாப்பிலே ஒன்றுதான், அந்தக் குர்ஆனை பாதுகாக்க கூடிய, அதனுடைய சத்திய அழைப்பை உண்மை அழைப்பை பாதுகாக்க கூடிய, அதை மக்களுக்கு அழுத்தம் திருத்தமாக, கூடுதல் குறைத்தல் இல்லாமல், சரியான முறையில் இறக்கப்பட்ட அதே நோக்கத்தோடு எடுத்துச் சொல்லக்கூடிய அறிஞர்களை, அழைப்பாளர்களை அல்லாஹ் காலமெல்லாம் பாதுகாத்து வைத்திருப்பான். ஒருபோதும் அந்த சத்தியம் அணையாது. யாராலும் அணைக்க முடியாது. 
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
அல்லாஹ்வுடைய ஒளி அவர்கள் அனைக்க நினைக்கிறார்கள். அல்லாஹுத்தஆலா அவனுடைய ஒளியை பரிபூரண மாக்குவான். (அல்குர்ஆன் 9 : 32)
 
அவனுடைய ஒளியை கண்டிப்பாக நிறைவடையச் செய்வான். நிராகரிப்பவர்கள் வெறுத்தாலும் சரி, இணை வைப்பவர்கள் வெறுத்தாலும் சரி. 
 
அன்பு சகோதரர்களே! இந்த மார்க்கத்தினுடைய முதல் அடிப்படை, அல்லாஹ்வுடைய தவ்ஹீதின் பக்கம் மக்களை அழைப்பது, ஈமானின் பக்கம் மக்களை அழைப்பது, லாயிலாஹ இல்லல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பது, ஷிர்க் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சுன்னாவின் மீது அனாச்சாரம் இல்லாத சமுதாயத்தை உருவாக்குவது. இதே அழைப்பை பிற மக்களுக்கு எடுத்துச் சொல்வது. 
 
இன்று, பலர் புலம்பி இருக்கிறார்கள். தவ்ஹீதை ஏன் எடுத்துச் சொல்ல வேண்டும்? இப்போது நாம் சொல்ல வேண்டியது செய்ய வேண்டியது எல்லாம் மக்களை கிலாபத்து பக்கம் இணைக்க வேண்டும்;  மக்களை ஜிகாதின் பக்கம் அழைக்க வேண்டும் என்று.
 
இந்த மார்க்கத்தில் கிலாஃபத்து இருக்கிறது. யாருக்கும் மாற்று கருத்து கிடையாது. இந்த மார்க்கத்தில் ஜிகாதும் இருக்கிறது. யாருக்கும் மாற்று கருத்து கிடையாது. ஆனால் அடிப்படை என்ன? அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிகாட்டுதல் என்ன? 
 
எங்கே எதைச் செய்ய வேண்டுமோ, எங்கே எந்த பிரச்சாரத்தை செய்ய வேண்டுமோ, எதை முதலாவதாக செய்ய வேண்டுமோ, எல்லாம் நமக்கு வழிகாட்டப்பட்டிருக்கிறதே, அதை விட்டுவிட்டு ஒரு கொள்கையாக, ஒரு குழுவாக, ஒரு பார்ட்டியாக உருவாக்கிக் கொண்டு அந்த சித்தாந்தத்திற்கு ஏற்ப இஸ்லாமை அதற்குரிய உண்மையான அல்லாஹ்வுடைய சாயம் என்று இருக்கிறது அல்லவா! அதிலிருந்து இவர்களுடைய இயக்கச் சாயத்தை பூசுவது, இவர்களுடைய பார்ட்டியின் சாயத்தை பூசுவது. 
 
அன்பு சகோதரர்களே! இவர்களுக்கும், இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை. இவர்கள் எத்தனை வசனங்களை ஓதினாலும் சரி, இவர்கள் எத்தனை ஹதீஸ்களை ஓதினாலும் சரி, எந்த அளவு மார்க்கத்தின் அடையாளங்களை, தக்வாவை இவர்கள் வெளிப்படுத்தினாலும் சரி, ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்திலே இத்தகைய பித்னா ஏற்படவில்லையா? சஹாபாக்கள் உடைய காலத்திலேயே இத்தகைய பித்னா  ஏற்படவில்லையா? பின்னால் உள்ளவர்களுடைய காலத்திலே ஃபித்னா ஏற்படவில்லையா? 
 
பித்னா எல்லா காலத்திலும் இருக்கிறது. நாம் மார்க்கத்தை புரிவதற்காக குர்ஆன் ஹதீஸின் பக்கம் வந்தால் அங்கே நமக்கு வழிகாட்டுதல் இருக்கிறது. 
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தபூக் போருக்குப் பிறகு கனிமத்தை பங்கு வைத்துக் கொண்டிருந்தார்கள்.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய மனதிலே அல்லாஹ் எப்படி போட்டானோ அந்த அடிப்படையிலே சிலருக்கு கூடுதலாக, சிலருக்கு குறைவாக அவர்கள் தர்மம் செய்து கொண்டே இருந்தார்கள். 
 
அப்போது வந்த ஒரு மனிதர் ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களைப் பார்த்துச் சொன்னார்: யா! முஹம்மத் இது அல்லாஹ்வுடைய முகம் நாடி கொடுக்கக்கூடிய பங்கு கிடையாது. நீங்கள் நீதமாக பங்கு வையுங்கள். நீங்கள் நீதம் செலுத்தவில்லை, நீதமாக பங்கு வையுங்கள். அல்லாஹ்வை பயந்து கொள்ளுங்கள் என்று சொன்னார். 
 
கொஞ்சம் சிந்தித்துப் பாருங்கள்! இந்த வழிகட்ட கூட்டத்தார்கள் எல்லாம் இதே இந்த அமைப்பில் உள்ளவர்கள் தான். ஹதீஸுக்கும் ஆயத்திற்கும் கரெக்ஷன் கொடுக்கக் கூடியவர்கள். மார்க்கத்திற்கு கரெக்ஷன் போடக் கூடியவர்கள். மார்க்கம் இப்படித்தான் இருக்க வேண்டும், இப்படித்தான் அமல்படுத்த வேண்டும் என்று அதற்கு இவர்கள் தத்துவத்தை சொல்லிக் கொடுக்கக் கூடியவர்கள். 
 
அல்லாஹ்வின் தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த மனிதனைப் பார்த்து கேள்வி கேட்டார்கள்: நான் நீதம் செலுத்தவில்லை என்றால், வேறு யார் நீதம் செலுத்துவார். நான் அல்லாஹ்வை பயப்படவில்லை என்றால் வேறு யார் அல்லாஹ்வை பயப்படுவார். வானத்தில் உள்ள இறைவனுக்கு நான் நம்பிக்கைகுரிய தூதனாக இருக்கிறேன். என் மீது உங்களுக்கு நம்பிக்கை வரவில்லையா? என் மீது உங்களுக்கு திருப்தி வரவில்லையா? என்பதாக அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் கேட்கிறார்கள். (3)
 
அறிவிப்பாளர் : அபூ சயீத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3610.
 
அந்த மனிதனுடைய கொள்கையை உருவானவர்கள் தான் காலம் காலமாக பல காரிஜியாக்கள் என்ற கூட்டம். யார் அவர்கள்? ஆட்சியாளர்களோடு அவர்களுக்கு எதிரான கொள்கைகளை அவர்களுக்கு எதிரான பிரச்சனைகளை உருவாக்கி, முஸ்லிம்களுடைய ஜமாத்தை தலைமையிலிருந்து பிரித்து கொண்டே இருப்பது, முஸ்லிம்களுக்கு மத்தியிலே குழப்பம் செய்வது. 
 
உங்களுக்கு தெரியும்; ஷைத்தானை பொறுத்தவரை அவனுக்கு என்ன நோக்கம்? உம்மத்தை வழி கெடுக்க வேண்டும். உம்மத்தை நரகத்தில் தள்ள வேண்டும். குர்ஆன் சுன்னாவில் இருந்து உம்மத்தை பிரிக்க வேண்டும். மார்க்கத்தில் பற்றோடு இருப்பவரை மார்க்கத்தின் பற்றின் பெயரிலேயே வழி கெடுக்க வேண்டும். 
 
ஆகவேதான், நம்முடைய மார்க்கத்திலே இரண்டு முக்கியமான விஷயங்கள் இருக்கின்றன. பல அடிப்படைகளிலே இரண்டு முக்கியமான அடிப்படைகள், ஒன்று, மார்க்கத்தை மீறுவது, அதாவது மார்க்கத்தில் சொல்லப்பட்ட சட்டங்களை, கடமைகளை விடுவது. அது ஒரு மீறுதல். அது மார்க்கத்தை மீறிச் செல்வது. 
 
இன்னொன்று, மார்க்கத்தில் மீறுவது. அதாவது, சொல்லப்பட்ட சட்டங்களை, சொல்லப்பட்ட கடமைகளை, சொல்லப்பட்ட ஃபரள்களை, அவை எங்கே சொல்லப்பட்டன? எதற்காக சொல்லப்பட்டன? என்பதையெல்லாம் புறக்கணித்துவிட்டு இவர்களுடைய கற்பனையிலே அந்த சட்டங்களுக்கு விளக்கம் கூறி, அந்த சட்டத்திலே மார்க்கத்தை மீறுவது. 
 
எப்படி நஸாராக்கள் ஈஸா அலைஹி வஸல்லம் அவர்களை அல்லாஹ்வுடைய குழந்தை என்று சொன்னார்களோ அது மீறுதல்.
 
அல்லாஹு தஆலா சொல்லிக் காட்டுகின்றான். யூதர்களும், ஈஸா அலைஹி வஸ்ஸலாம் விஷயத்திலே மார்க்கத்தை மீறினார்கள். எப்படி? அவர்கள் ஈஸா அலைஹி வஸ்ஸலாம் அவர்களை ஜினா உடைய மகன் என்று சொன்னார்கள். ஒரு பக்கம் இப்படி, இன்னொரு பக்கம் இப்படி இந்த இரண்டுக்கும் இடையிலே இருப்பவர்கள் தான் நடுநிலையாளர்கள். நீதமானவர்கள். 
 
அல்லாஹுத்தஆலா இந்த வசனத்திலே சொல்லுகின்றான்: நீங்கள் யார்? எதற்காக உருவாக்கப்பட்டீர்கள்? உம்மத்துக்காக, உலக மக்களுக்காக. என்ன செய்ய வேண்டும். அல்லாஹுத்தஆலா தெளிவாகச் சொல்கிறான. (அல்குர்ஆன்3:110).    
 
இது மதினாவில் இறக்கப்பட்ட வசனம். எந்த மதினாவைக் கொண்டு கிலாஃபத்து தான் இந்த இஸ்லாமிய மார்க்கத்தின் அடிப்படை என்று பிரச்சாரம் செய்கிறார்களோ, கிலாஃபத் இல்லை என்றால் இஸ்லாம் இல்லை என்று பிரச்சாரம் செய்கிறார்களோ, கிலாஃபத்து தான் குர்ஆனுடைய நோக்கம், கிலாஃபத்தும் ஜிகாதும் தான் இஸ்லாமுடைய அடிப்படை என்று பிரச்சாரம் செய்கிறார்களோ, அங்கே அந்த மதினா வாழ்க்கையிலே இறக்கப்பட்ட வசனம். 
 
அல்லாஹுத்தஆலா இங்கே என்ன சொல்கிறான்? இந்த உம்மத் உலக மக்களுக்காக நீங்கள் வெளியாக்கப்பட்டிருக்கிறீர்கள். கொண்டு வரப்பட்டிருக்கிறீர்கள். உங்களுடைய வேலை என்ன? மக்களுக்கு நன்மையை போதிக்க வேண்டும். மக்களுக்கு  நன்மையை நீங்கள் ஏவ வேண்டும். 
 
குர்ஆனுக்கு விளக்கம் என்றால் சஹாபாக்களின் விளக்கத்தை எடுக்க வேண்டும். தாபியீன்கள் விளக்கத்தை எடுக்க வேண்டும். இந்த நன்மையை ஏவுதல், இதுதான் இந்த உம்மத்துடைய அடிப்படை என்று அல்லாஹ் சொல்கிறான். 
 
நான் சொல்லவில்லை. வேறு எந்த அறிஞரும் சொல்லவில்லை. அல்லாஹ் நேரடியாக சொல்வது, இந்த மஃரூஃப் என்றால் என்ன? இதற்கு ரசூலுல்லாஹ் உடைய விளக்கம் என்ன? சஹாபாக்களின் விளக்கம் என்ன? 
 
இமாம் தபரி சொல்லுகிறார்கள்: நீங்கள் மக்களை தவ்ஹீதின் பக்கம், வணக்க வழிபாடுகளை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும் என்ற கொள்கையின் பக்கம் அழையுங்கள். லாயிலாக இல்லல்லாஹ் முஹம்மது ரசூலுல்லாஹ் என்ற ஏகத்துவம் பக்கம் மக்களை அழையுங்கள். 
 
தீமையிலிருந்து மக்களை தடுக்க வேண்டும். தீமை என்றால் என்ன? முன்கர் என்றால் என்ன? அல்லாஹ்விற்கு இணை கற்பிப்பதிலிருந்து மக்களை நீங்கள் தடுங்கள். வணக்க வழிபாடுகளை அல்லாஹ் அல்லாதவர்களுக்கு செய்கிறார்களே, படைத்த இறைவனை விட்டுவிட்டு அவனுக்கு வழிபாடு செய்யாமல் படைப்புகளை வணங்குகிறார்களே அந்த மக்களை நீங்கள் அந்த ஷிர்க்கில் இருந்து தடுத்து தவ்ஹீதுக்கு கொண்டு வாருங்கள். இதன் மூலமாக அல்லாஹ்வின் மீது ஈமானை நீங்கள் சரி செய்யுங்கள். (அல்குர்ஆன் 3:110)
 
இதுதான் இஸ்லாம் சகோதரர்களே! அல்லாஹு தஆலா கண்ணியத்திற்குரிய வேதம் அல்குர்ஆனிலே நபிமார்களின் வரலாறை அல்லாஹ் ஆரம்பிக்கிறான். 
 
சூரத்துல் அஃராஃபிலிருந்து அல்லாஹ் ஆரம்பிக்கிறான். சூரத்துல் அஃராஃபில் இருந்து பிறகு சூரா யூனுஸ் பிறகு சூரா ஹூது, பிறகு சூரத்துல் ஹிஜ்ர், பிறகு அடுத்து வரக்கூடிய மற்ற அத்தியாயங்கள், பிறகு அடுத்ததாக சூரத்துல் அன்பியா நபிமார்களின் பெயரிலேயே ஒரு அத்தியாயம், பிறகு சூரத்துல் ஷுஅரா, இப்படியாக குர்ஆனுடைய நெடுகிலும் அல்லாஹுத்தஆலா நபிமார்களுடைய அந்த தாவாவை, அவர்களை நான் ஏன் அனுப்பினேன்? அவர்களுக்கு ஏன் வேதம் கொடுக்கப்பட்டது? என்பதை எடுத்துச் சொல்கிறானே! 
 
எங்கேயாவது குர்ஆனிலிருந்து ஒரு வசனத்தை கொண்டு வந்து காட்டட்டும். ஜிஹாதுக்காகத் தான் உங்களை நான் அனுப்பி இருக்கிறேன் என்று அல்லது கிலாஃபத்தை நிலைநிறுத்துவதற்கு தான் நீங்கள் இந்த பூமியிலே அனுப்பப்பட்டிருக்கிறீர்கள் என்று ஒரு வசனத்தை காட்டட்டும். எங்கேயுமே அப்படி இல்லை. 
 
எப்படி இருக்கிறது? உதாரணத்திற்கு பாருங்கள்! மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹுத்தஆலா முதன் முதலாக பேசுகிறான். அல்லாஹ் சொல்கிறான்:
 
إِنَّنِي أَنَا اللَّهُ لَا إِلَهَ إِلَّا أَنَا فَاعْبُدْنِي وَأَقِمِ الصَّلَاةَ لِذِكْرِي
 
நிச்சயமாக நான்தான் அல்லாஹ். என்னைத் தவிர (உண்மையில் வணங்கத்தகுதியான) இறைவன் அறவே இல்லை. ஆகவே, என்னை வணங்குவீராக! இன்னும், என் நினைவிற்காக தொழுகையை நிலைநிறுத்துவீராக! (அல்குர்ஆன் 20 : 14) 
 
அல்லாஹுத்தஆலா, பொதுவாக நபிமார்களைப் பற்றி அல்லாஹ் சொல்கிறானே! நான் எத்தனை இறைத்தூதர்களை அனுப்பி இருக்கிறோமோ, எத்தனை ரசூல்மார்களை அனுப்பி இருக்கிறோமோ, அந்த எல்லா ரசூல்மார்களுக்கும் நான் கொடுத்த வஹீ என்ன? சட்டம் என்ன? நாம் என்ன அழைப்பை அவர்களுக்கு கொடுத்தோம்? 
 
என்னைத் தவிர வணக்கத்திற்குரிய இறைவன் வேறு யாருமில்லை. என்னை நீங்கள் வணங்குங்கள். அந்த இபாதத்தின் பக்கம் மக்களை அழையுங்கள் என்பது தான். (அல்குர்ஆன் 21 : 25)
 
அல்லாஹுத்தஆலா நூஹ் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் அவர்களிலிருந்து ஆரம்பிக்கிறான். நூஹை அவர்களுடைய மக்களுக்கு நாம் நபியாக அனுப்பினோம். நூஹ் என்ன சொன்னார்?
 
என் மக்களே! அல்லாஹ்வை வணங்குங்கள். அவனைத் தவிர வேறு இறைவன் உங்களுக்கு யாருமே இல்லை. (அல்குர்ஆன்11 : 84) 
 
இப்படி நபிமார்களுடைய தஃவா குர்ஆனிலே சொல்லப் பட்டிருக்கிறதே, அவர்களை அனுப்பப்பட்டதன் நோக்கம் இந்த குர்ஆனிலே சொல்லப்பட்டிருக்கிறதே! 
 
நான் எல்லா உம்மத்துக்கும் ரசூலை அனுப்பி இருக்கிறோம். ரசூலை ஏன் அனுப்பினோம்? அல்லாஹ்வை வணங்குங்கள். அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படக்கூடிய அத்தனை பொய்யான வஸ்துக்களை விட்டு, நீங்களாக ஏற்படுத்திக் கொண்ட கற்பனையான தெய்வங்களை விட்டு நீங்கள் விலகி விடுங்கள். (அல்குர்ஆன் 16 : 36)
 
இந்த வழிகெட்ட கூட்டங்களுக்கு எப்போதுமே என்னவென்றால், நீங்கள் ஆதாரங்களை, விளக்கங்களை கொடுத்தால், நீங்கள் அவர்களுக்கு குர்ஆன் வசனங்களை, ஹதீஸ்களைக் கொண்டு நீங்கள் அவர்களுக்கு தெளிவு கொடுத்தால், என்ன செய்வார்கள் தெரியுமா? நீங்கள் சொல்லக்கூடிய அதே குர்ஆனுடைய வசனத்திற்கு நீங்கள் சொல்லக்கூடிய அதே ஹதீஸிற்கு சஹாபாக்களும், தாபியீன்களும், ஹதீஸ் உடைய அறிஞர்களும், உம்மத்துடைய சான்றோரும் சரியாக புரியாத, அவர்கள் சொல்லாத விளக்கத்தை உங்களுக்கு கொண்டு வருவார்கள். 
 
நீங்கள் எந்த குர்ஆன் வசனங்களை, ஹதீஸை அவர்களுக்கு சொல்கிறீர்களோ, அதே குர்ஆன் வசனங்களை அவர்கள் தங்களுடைய வழிகேடுகளுக்காக பயன்படுத்துவார்கள். 
 
நம்முடைய சஹாபாக்கள், தாபியீன்களிடத்திலே அதற்கு என்ன அர்த்தம் அறியப்பட்டிருந்ததோ, அதை தவறான அர்த்தம் என்றோ பழைய அர்த்தம் என்றோ அல்லது அது உண்மையான அர்த்தம் இல்லை என்று மறுத்துவிட்டு அவர்கள் புதிய அர்த்தத்தை கொண்டு வருவார்கள். 
 
உதாரணத்திற்கு 'இபாதத்' இதற்கு குர்ஆனிலே சொல்லப்பட்ட விளக்கம் என்ன? அர்த்தம் என்ன? நபிமார்கள் விளங்கிய அர்த்தம் என்ன? இஸ்லாம் ஆகிய முதல் தலைமுறை ஆகிய சஹாபாக்களிடத்திலே அறியப்பட்ட அர்த்தம் என்ன? 
 
ஒரு அடியான் தன்னுடைய வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வுக்கு செய்வது, அல்லாஹ்வை ரப்பாக ஏற்று, மஹ்மூதாக ஏற்று அவனை வணங்குவது. (அல்குர்ஆன் 6:162-163) தங்களுடைய வணக்க வழிபாடுகளை அல்லாஹ்வுக்காக ஆக்குவது. (அல்குர்ஆன் 39:11-39:3) வணக்க வழிபாடுகளை, இபாதத்தை அல்லாஹ்வுக்காக ஆக்குவது. 
 
இவர்கள் என்ன சொல்வார்கள். இந்த இபாதத் என்பது, நாம் அல்லாஹ்வுடைய சட்டத்திற்கு மட்டும் அடிமை. அல்லாஹ்வுடைய சட்டத்தை நிலை நிறுத்துவது தான் நம்முடைய இபாதத், தொழுகை, நோன்பு இதெல்லாம் அதற்காக ஒரு training அவ்வளவு தான். தொழுகை ஒன்றுமில்லை. இது சாதாரணமானது. ஜிகாது செய்வதற்கு தர்பியத்துக்காக தொழுகை கொடுக்கப்பட்டிருக்கிறது. ஜிகாத்துடைய சிரமம் தாங்குவதற்காக நோன்பு கொடுக்கப்பட்டிருக்கிறது. 
 
இப்படியாக வணக்க வழிபாடுகளுக்கு என்னென்ன அர்த்தம் தீனிலே சொல்லப்பட்டதோ அத்தனை அர்த்தங்களையும், அதனுடைய அந்த தத்துவத்திலிருந்து உண்மையான ரூஹ் -உயிரோட்டத்திலிருந்து வெளியாக்கிக் கொண்டு வந்து இவையெல்லாம் ஒரு சடங்குகள் இதன் நோக்கம், கிலாஃபத்தும், ஜிகாதும் என்று கூறுவார்கள்..
 
அன்பு சகோதரர்களே! இதுதான் அல்லாஹ்வுடைய மார்க்கத்தின் நோக்கமாக இருந்தால், அல்லாஹுத்தஆலா ஒரு வசனத்தில் அதை சொல்லி இருக்கலாம் அல்லவா! என்னுடைய ஆட்சியை பூமியில் நிலை நிறுத்துங்கள். அல்லாஹ்வுடைய தீனை, இபாதத்தை நிலை நிறுத்துங்கள். 
 
தீன் என்பது உடைய அர்த்தம் என்ன? அல்லாஹ்வை வணங்குவது. அல்லாஹ்வை, வணக்க வழிபாடுகளை அல்லாஹ்விற்கு பரிசுத்தமான முறையிலே ஆக்குவது, அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு குர்ஆன் புரியவில்லையா, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மக்காவிலே 13 ஆண்டு கால வாழ்க்கையிலே என்ன சொன்னார்கள்?
 
மக்களே! லாயிலாஹ இல்லல்லாஹ்வை சொல்லுங்கள். என்னை நீங்கள் அழைத்துச் செல்லுங்கள். எனக்கு பாதுகாப்பு கொடுங்கள். இந்த லாயிலாஹ இல்லல்லாஹ்வை மக்களுக்கு நான் எடுத்துச் சொல்ல வேண்டும். 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எமன் நாட்டிற்கு முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்களை அனுப்புகிறார்கள். அவர்களுக்கு சொல்லி அனுப்புகிறார்கள்: முஆதே, நீ வேதம் கொடுக்கப்பட்ட யூத கூட்டத்தார்களிலே ஒரு சமூகத்தை நீ சந்திப்பாய். நீ என்ன செய்ய வேண்டும் அவர்களுக்கு நீ முதலாவதாக அவர்களை லாயிலாஹ இல்லல்லாஹ்வின் பக்கம் அழைப்பாயாக.  வணக்க வழிபாடுகளை அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே செய்ய வேண்டும் என்ற தவ்ஹீதின் பக்கம் அழைப்பாயாக. அதை அவர்கள் ஏற்றுக் கொண்டால் தொழுகையின் பக்கம் அழையுங்கள். அதை அவர்கள் ஏற்றுக் கொண்டால் ஜக்காத்தின் பக்கம் அழையுங்கள். (4)
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1395.
 
அன்பு சகோதரர்களே! அல்லாஹ்வுடைய தீன் இப்படித்தான் பரவியது. இந்த தீனுடைய அடிப்படை தவ்ஹீதை நிலை நாட்டுவது. தவ்ஹீதின் பக்கம் மக்களை அழைப்பது. இந்த தீனின் அடிப்படை ஷிர்க் இல்லாத சமூகத்தை, ஷிர்க் இல்லாத உம்மத்தை உருவாக்குவது. சுன்னா உடைய உம்மத்தை உருவாக்குவது. 
 
ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மிகத் தெளிவாகச் சொன்னார்கள். எப்படி அந்த காரிஜியாவுடைய காலத்திலே அந்த மக்களுடைய வணக்க வழிபாட்டை பார்த்து சிலர் ஏமாந்தார்கள்.
 
ரசூலுல்லாஹ் தெளிவுபடுத்தினார்கள். இவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அந்த குர்ஆன் அவர்களுடைய தொண்டைக்கு கீழே இறங்காது. அவர்கள் ஈமானை விட்டு, தீனை விட்டு வெளியேறுவார்கள். எப்படி வேட்டையை நோக்கி அம்பை எரியும்போது, எப்படி வேட்டையில் இருந்து அம்பு வெளியேறி விடுகிறதோ, அப்படி தீனில் இருந்து வெளியேறுவார்கள். அவர்களுடைய வணக்க வழிபாடு, அவர்களுடைய நோன்பு, தொழுகையை நீங்கள் பார்க்கும் பொழுது உங்களுடைய தொழுகையை நீங்கள் குறைத்து மதிப்பிடுவீர்கள். உங்களுடைய நோன்பை நீங்கள் குறைத்து மதிப்பிடுவீர்கள். உங்களுடைய வணக்க வழிபாடுகளை குறைத்து மதிப்பிடுவீர்கள். ஆனால், அவர்களுக்கு தீனிலே எந்த பங்கும் இருக்காது என்று சொன்னார்கள். (3)
 
அறிவிப்பாளர் : அபூ சயீத் அல்குத்ரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 3610.
 
அப்படித்தான் சகோதரர்களே! இன்றைய நிலைமை மக்களுக்கு குழப்பம் அடைந்திருக்கிறது. மக்கள் தவ்ஹீதை விட்டு விட்டார்கள். இஸ்லாமிய பிரச்சாரத்தை விட்டு விட்டார்கள்.
 
இன்று மக்கள் கபூர்களில் சென்று சுஜூது செய்து கொண்டு இருக்கிறார்கள். கபுர்கள் ஒரு மஸ்ஜிதாக மாறி இருக்கிறது. அதை ஏற்றுக்கொள்ளக்கூடிய ஒரு உம்மத்தாக மக்கள் மாறி இருக்கிறார்கள். அல்லாஹ்வைத் தவிர வணங்கப்படக்கூடிய தெய்வங்களை உருவாக்கி வைத்திருக்கிறார்கள். ரசூலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் உடைய சுன்னாவை தெரியாத பித்அத் மார்க்கமாக ஆக்கிவிட்ட உம்மத்தை உருவாக்கி வைத்து கொண்டு இவர்கள் கிலாஃபத்தை பற்றி பேசுகிறார்கள். ஜிஹாதை பற்றி பேசுகிறார்கள். 
 
எது ஜிஹாத்? அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
المُجَاهِدُ مَنْ جَاهَدَ نَفْسَهُ
 
ஜிஹாத் எது? முதல் முஜாஹித் யார் தெரியுமா? நஃப்ஸ் இடத்திலே போராடி அல்லாஹ்வுடைய தீனிலே அந்த நஃப்ஸை கொண்டு வரக்கூடியவர்கள். 
 
அறிவிப்பாளர் : ஃபழாலா பின் உபைத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : திர்மிதி, எண் : 1621.
 
மேலும் சொன்னார்கள்: குழப்பமான காலத்தில் மக்களுக்கு தீனை குழப்பிச் சொல்வது, தங்களுடைய இயக்கங்களுக்கு ஏற்ப பிரச்சாரம் செய்வது, குர்ஆன் சுன்னா ஆதாரங்களை இயக்கத் தலைவர்களின் வழிகாட்டுதலுக்கு ஏற்ப பிரச்சாரம் செய்வது. 
 
1400 ஆண்டுகளாக இஸ்லாம் இருக்கிறது. இந்த இஸ்லாமிலே, இந்த அல் இஹ்வானுல் முஸ்லிமின் என்ற இந்த இயக்கம் உருவாக்கப்படுவதற்கு முன்பாக அல்லது மௌதூதியைச் சேர்ந்த அபுல் அஃலா உருவாக்கப்படுவதற்கு முன்பாக அல்லது இந்த பயங்கரவாத குழுக்கள், அவர்களுடைய பெயர்கள் ஒவ்வொரு நாட்டிலும் ஒருஒரு பெயர்களாக இருக்கலாம். இந்தக் குழுக்கள் உருவாக்கப்படுவதற்கு முன்பாக, நல்லா புரிந்து கொள்ளுங்கள் வார்த்தையை, அல் இஹ்வானுல் முஸ்லிமின் என்ற முஸ்லிம் பிரதர்ஸ் என்ற இந்த இயக்கம் உருவாக்கப்படுவதற்கு முன்பாக அல்லது இந்தியாவிலே அபுல் அஃலா மௌதூதி உடைய இந்த மௌதூதி ஜமாத் உருவாக்கப்படுவதற்கு முன்பாக அல்லது அவர்களுடைய சித்தாந்தத்திலிருந்து உருவான இந்த ஆயுதம் ஏந்திய இந்த பயங்கரவாத குழுக்கள் உருவாவதற்கு முன்பாக இஸ்லாம் இருந்ததா? இல்லையா? 
 
முஸ்லிம் அறிஞர்கள் இருந்தார்களா? இல்லையா? முஸ்லிம் சீர்திருத்தவாதிகள் இருந்தவர்களா? இல்லையா? முஸ்லிம் நாடுகளும் இருந்தன. முஸ்லிம் மன்னர்கள் இருந்தார்கள். அதுபோன்று முஸ்லிம் அல்லாதவர்கள் ஆட்சி செய்யக்கூடிய நாடுகளிலே முஸ்லிம்கள் இருந்தார்கள். 
 
அங்கே அறிஞர்கள் இல்லாமல் போய்விட்டார்களா? 1400 ஆண்டுகளாக அங்கே இத்தகைய ஜிஹாது தான் இஸ்லாமின் அடிப்படை கிலாஃபத்து தான் இஸ்லாமுடைய அடிப்படை என்ற எந்த ஒரு எழுதப்பட்ட ஆதாரமாவது இருக்கிறதா? எழுதப்பட்டிருக்கிறதா? என்று சிந்தித்துப் பாருங்கள்
 
அன்பு சகோதரர்களே! முந்திய காலத்தில் உருவாக்கப்பட்ட காரிஜியா சிந்தனையுடைய ஒரு நவீன வாதம் தான் இவை எல்லாம் என்று புரிந்து கொள்ளுங்கள். 
 
அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இது குறித்து தான் தெளிவாகச் சொன்னார்கள்: 
 
الْعِبادَةُ في الهَرْجِ كَهِجْرَةٍ إلَيَّ
 
ஃபித்னாவுடைய காலத்திலே இபாதத்து செய்வது என் பக்கம் ஹிஜ்ரத் செய்வதற்கு சமமானது.
 
அறிவிப்பாளர் : மஃகல் இப்னு யஸார் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2948.
 
அல்லாஹ்வுடைய இபாதத்தை பற்றி பிடிப்பது, வணக்க வழிபாட்டை பற்றி பிடிப்பது குழப்பமான  காலத்திலே என் பக்கம் நீங்கள் ஹிஜ்ரத் செய்வதைப் போன்று. 
 
இன்று,  முஸ்லிம்கள் தொழுகை இல்லாமல் இருக்கிறார்கள். முஸ்லிம்கள் ஜகாத் இல்லாமல் இருக்கிறார்கள். அல்லாஹ்வுடைய குர்ஆனை ஓதத் தெரியாத முஸ்லிம்களாக இருக்கிறார்கள். நம்மைச் சுற்றி நூற்றுக்கணக்கில் அல்ல, லட்சக்கணக்கிலே அல்லாஹ்வை அறியாத மாற்றார்கள் இருக்கிறார்கள். 
 
அவர்களுக்கு எல்லாம் தாவா கொடுக்காமல், ஞானத்தை கொண்டும், அழகிய உபதேசங்களை கொண்டும் அல்லாஹ்வின் மார்க்கத்தின் பக்கம் அழையுங்கள் என்று, அல்லாஹ் சொல்லி இருக்கக்கூடிய அந்த தாவாவை விட்டு விட்டார்கள். 
 
எதை அல்லாஹுத்தஆலா இந்த மார்க்கத்தின் அடிப்படையில் வைக்கவில்லையோ, இஸ்லாம் ஐந்து தூண்கள் மீது நிறுவப்பட்டுள்ளது என்ற ஹதீஸை நீங்கள் எடுத்து படித்துப் பாருங்கள். இஸ்லாமின் அடிப்படை இவர்கள் சொல்வது போன்று இதுவாக இருந்திருக்குமேயானால், அதை அல்லாஹ்வுடைய தூதர் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அந்த ஐந்தோடு ஆறாவதாக சேர்த்து சொல்லி இருக்க மாட்டார்களா! 
 
ஆகவே, அன்பிற்குரியவர்களே! நம்முடைய வாலிபர்களுக்கு, நம்முடைய சமுதாய மக்களுக்கு கட்டாயமான விழிப்புணர்வை செய்ய வேண்டிய அவசியத்தில் நாம் இருக்கிறோம். நாமும் அல்லாஹ்வை பரிசுத்தமான முறையிலே வணங்கி, அந்த தவ்ஹீதை மக்களுக்கு எடுத்துச் சொல்வது, நாமும் சுன்னாவை சரியான முறையிலே பின்பற்றி சுன்னாவை மக்களுக்கு எடுத்துச் சொல்வது.
 
இதை நாம் பரிபூரணமாக்கும் போது அல்லாஹ் சுபஹானஹு தஆலா அவன் நமக்கு வாக்களித்த ஆட்சியைக் கொடுப்பான். இது அல்லாஹ்வுடைய செயல்.
 
ஆட்சிக்காக அழைப்பு கொடுப்பதோ, ஆட்சிக்காக குழுக்கள் சேர்ப்பதோ, இது இஸ்லாமிய மார்க்கத்தில் இல்லை. இஸ்லாமிய மார்க்கத்தில் எது இருக்கிறது? அல்லாஹ்வின் பக்கம், அல்லாஹ்வுடைய இபாதத்தின் பக்கம், அல்லாஹ்வுடைய தீனின் பக்கம், அல்லாஹ்வுடைய ரசூலின் பக்கம், அல்லாஹ்வுடைய ரசூல் உடைய சுன்னாவின் பக்கம் மக்களை அழைப்பது, தக்வாவின் பக்கம் அழைப்பது, நன்மையை ஏவி தீமையை தடுப்பது. 
 
இதுதான் மார்க்கத்தின் அழைப்பாக சொல்லப்பட்டிருக்கிறதே தவிர, குழுக்களாக உருவாகிக் கொண்டு ஜிஹாதுக்காக அழைப்பு கொடுப்பதோ அல்லது கிலாஃபத்துக்காக அழைப்பு கொடுப்பதோ இதற்கும் இஸ்லாமிய மார்க்கத்திற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. 
 
ஆதாரங்களை தவறான முறையில் ஜோடித்து, மக்களுடைய சிந்தனைகளை இவர்கள் brainwash செய்கிறார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். 
 
அல்லாஹ்வுடைய மார்க்கத்தைக் கற்றுக் கொள்ளுங்கள். இந்த மார்க்கத்தை கற்ற அறிஞர்கள் இடமிருந்து, உங்களுடைய மார்க்கத்தை நீங்கள் கற்றுக் கொள்ளுங்கள். எந்த ஒன்றையும் இயக்க சிந்தனையோடு எந்த ஒன்றையும் ஒரு தனிப்பட்ட  ஒரு  பார்ட்டியினுடைய ஒரு பைழாவோடு நீங்கள் சிந்தித்துப் பார்க்காதீர்கள். 
 
அல்லாஹ்வுடைய குர்ஆனை அது இறக்கப்பட்ட விதத்திலே சிந்தித்துப் பாருங்கள். கண்டிப்பாக அல்லாஹ் நேர்வழி காட்டுவான். அல்லாஹ் சுபஹானல்லாஹு தஆலா நம்முடைய உம்மத்தை பாதுகாப்பானாக! நம்முடைய வாலிபர்களை பாதுகாப்பானாக! எல்லா வித குழப்பங்களில் இருந்து நம் சமுதாயத்தின் உடைய ஈமானை, நம்முடைய சமுதாயத்தின் அமல்களை பாதுகாத்து, நமக்கு அல்லாஹ் கொடுத்திருக்கக் கூடிய இந்த செல்வத்தை, இந்த ஆற்றலை எல்லாம் அல்லாஹ்வுடைய தீனுக்கு உண்மையான முறையிலே பணி செய்து அல்லாஹ்வின் பக்கம் மக்களை அழைப்பதற்கு அல்லாஹ் அருள் புரிவானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
جَاءَ ثَلَاثَةُ رَهْطٍ إلى بُيُوتِ أزْوَاجِ النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم، يَسْأَلُونَ عن عِبَادَةِ النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم، فَلَمَّا أُخْبِرُوا كَأنَّهُمْ تَقَالُّوهَا، فَقالوا: وأَيْنَ نَحْنُ مِنَ النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم؟! قدْ غُفِرَ له ما تَقَدَّمَ مِن ذَنْبِهِ وما تَأَخَّرَ، قالَ أحَدُهُمْ: أمَّا أنَا فإنِّي أُصَلِّي اللَّيْلَ أبَدًا، وقالَ آخَرُ: أنَا أصُومُ الدَّهْرَ ولَا أُفْطِرُ، وقالَ آخَرُ: أنَا أعْتَزِلُ النِّسَاءَ فلا أتَزَوَّجُ أبَدًا، فَجَاءَ رَسولُ اللَّهِ صلَّى اللهُ عليه وسلَّم إليهِم، فَقالَ: أنْتُمُ الَّذِينَ قُلتُمْ كَذَا وكَذَا؟! أَمَا واللَّهِ إنِّي لَأَخْشَاكُمْ لِلَّهِ وأَتْقَاكُمْ له، لَكِنِّي أصُومُ وأُفْطِرُ، وأُصَلِّي وأَرْقُدُ، وأَتَزَوَّجُ النِّسَاءَ، فمَن رَغِبَ عن سُنَّتي فليسَ مِنِّي. الراوي : أنس بن مالك | المحدث : البخاري | المصدر : صحيح البخاري الصفحة أو الرقم: 5063 | خلاصة حكم المحدث : [صحيح]
 
குறிப்பு 2)
 
وحَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ، وَزُهَيْرُ بْنُ حَرْبٍ، قَالَا: حَدَّثَنَا جَرِيرٌ، عَنِ الْأَعْمَشِ، عَنْ أَبِي صَالِحٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " نَحْنُ الْآخِرُونَ الْأَوَّلُونَ يَوْمَ الْقِيَامَةِ، وَنَحْنُ أَوَّلُ مَنْ يَدْخُلُ الْجَنَّةَ، بَيْدَ أَنَّهُمْ أُوتُوا الْكِتَابَ مِنْ قَبْلِنَا، وَأُوتِينَاهُ مِنْ بَعْدِهِمْ، فَاخْتَلَفُوا، فَهَدَانَا اللهُ لِمَا اخْتَلَفُوا فِيهِ مِنَ الْحَقِّ، فَهَذَا يَوْمُهُمُ الَّذِي اخْتَلَفُوا فِيهِ، هَدَانَا اللهُ لَهُ - قَالَ: يَوْمُ الْجُمُعَةِ - فَالْيَوْمَ لَنَا، وَغَدًا لِلْيَهُودِ، وَبَعْدَ غَدٍ لِلنَّصَارَى " (صحيح مسلم - 855)
 
குறிப்பு 3)
 
بيْنَما نَحْنُ عِنْدَ رَسولِ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ وهو يَقْسِمُ قَسْمًا، أَتَاهُ ذُو الخُوَيْصِرَةِ -وهو رَجُلٌ مِن بَنِي تَمِيمٍ- فَقالَ: يا رَسولَ اللَّهِ، اعْدِلْ، فَقالَ: ويْلَكَ! ومَن يَعْدِلُ إذَا لَمْ أَعْدِلْ؟! قدْ خِبْتَ وخَسِرْتَ إنْ لَمْ أَكُنْ أَعْدِلُ. فَقالَ عُمَرُ: يا رَسولَ اللَّهِ، ائْذَنْ لي فيه فأضْرِبَ عُنُقَهُ؟ فَقالَ: دَعْهُ، فإنَّ له أَصْحَابًا يَحْقِرُ أَحَدُكُمْ صَلَاتَهُ مع صَلَاتِهِمْ، وصِيَامَهُ مع صِيَامِهِمْ، يَقْرَؤُونَ القُرْآنَ لا يُجَاوِزُ تَرَاقِيَهُمْ، يَمْرُقُونَ مِنَ الدِّينِ كما يَمْرُقُ السَّهْمُ مِنَ الرَّمِيَّةِ، يُنْظَرُ إلى نَصْلِهِ فلا يُوجَدُ فيه شَيءٌ، ثُمَّ يُنْظَرُ إلى رِصَافِهِ فَما يُوجَدُ فيه شَيءٌ، ثُمَّ يُنْظَرُ إلى نَضِيِّهِ -وهو قِدْحُهُ- فلا يُوجَدُ فيه شَيءٌ، ثُمَّ يُنْظَرُ إلى قُذَذِهِ فلا يُوجَدُ فيه شَيءٌ، قدْ سَبَقَ الفَرْثَ والدَّمَ، آيَتُهُمْ رَجُلٌ أَسْوَدُ، إحْدَى عَضُدَيْهِ مِثْلُ ثَدْيِ المَرْأَةِ، أَوْ مِثْلُ البَضْعَةِ تَدَرْدَرُ، ويَخْرُجُونَ علَى حِينِ فُرْقَةٍ مِنَ النَّاسِ. قالَ أَبُو سَعِيدٍ: فأشْهَدُ أَنِّي سَمِعْتُ هذا الحَدِيثَ مِن رَسولِ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ، وأَشْهَدُ أنَّ عَلِيَّ بنَ أَبِي طَالِبٍ قَاتَلَهُمْ وأَنَا معهُ، فأمَرَ بذلكَ الرَّجُلِ، فَالْتُمِسَ فَأُتِيَ به، حتَّى نَظَرْتُ إلَيْهِ علَى نَعْتِ النَّبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ الذي نَعَتَهُ. الراوي : أبو سعيد الخدري | المحدث : البخاري | المصدر : صحيح البخاري الصفحة أو الرقم: 3610 | خلاصة حكم المحدث : [صحيح] التخريج : أخرجه البخاري (3610)، ومسلم (1064)
 
குறிப்பு 4)
 
أنَّ النبيَّ صَلَّى اللهُ عليه وسلَّمَ بَعَثَ مُعَاذًا رَضِيَ اللَّهُ عنْه إلى اليَمَنِ، فَقالَ: ادْعُهُمْ إلى شَهَادَةِ أنْ لا إلَهَ إلَّا اللَّهُ، وأَنِّي رَسولُ اللَّهِ، فإنْ هُمْ أطَاعُوا لذلكَ، فأعْلِمْهُمْ أنَّ اللَّهَ قَدِ افْتَرَضَ عليهم خَمْسَ صَلَوَاتٍ في كُلِّ يَومٍ ولَيْلَةٍ، فإنْ هُمْ أطَاعُوا لذلكَ، فأعْلِمْهُمْ أنَّ اللَّهَ افْتَرَضَ عليهم صَدَقَةً في أمْوَالِهِمْ تُؤْخَذُ مِن أغْنِيَائِهِمْ وتُرَدُّ علَى فُقَرَائِهِمْ. الراوي : عبدالله بن عباس | المحدث : البخاري | المصدر : صحيح البخاري الصفحة أو الرقم: 1395 | خلاصة حكم المحدث : [صحيح]
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/