HOME      Khutba      ரமழானின் வருகையும் அல்குர்ஆனின் உபதேசம் | Tamil Bayan - 770   
 

ரமழானின் வருகையும் அல்குர்ஆனின் உபதேசம் | Tamil Bayan - 770

           

ரமழானின் வருகையும் அல்குர்ஆனின் உபதேசம் | Tamil Bayan - 770


ரமழானின் வருகையும் அல்குர்ஆனின் உபதேசமும்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : ரமழானின் வருகையும் அல்குர்ஆனின் உபபதேசமும்   
 
வரிசை : 770
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 10-03-2023 | 18-08-1444
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71) 
 
கண்ணியத்திற்குரிய சகோதர்களே! சில தினங்களில் அல்குர்ஆன் இறக்ககப்பட்ட மாதத்தை நாம் சந்திக்க இருக்கிறோம். அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா ரமழான் என்ற மாதத்தை நமக்கு கொடுக்கும்போது அந்த மாதத்தோடு சேர்த்து அவனை வணங்கி வழிபட்டு, அவன் சொர்க்கத்திற்குரிய கிரயமாக, நிபந்தனையாக எதை ஆக்கி இருக்கிறானோ அந்த தக்வாவை அடையும் பொருட்டு அதிலே நமக்கு நோன்பையும் கடமையாக்கியுள்ளான். அந்த தக்வாவுக்குரிய உண்மையான வழிகாட்டுதலாக அல்லாஹு தஆலா அல்குர்ஆனை இறக்கினான்.  
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
 
நம்பிக்கையாளர்களே! நீங்கள் இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்காக உங்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது - உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போன்று. 
 
 (அல்குர்ஆன் 2 : 183) 
 
முன்சென்றவர்களுக்கு மிகுந்த சிரமங்களோடு பல நிபந்தனைகளோடு நோன்பு கடமையாக்கபட்டது. அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களுடைய சமுதாயமாகிய உமத்துன் மர்ஹூமதுன் -அல்லாஹுடைய விஷேசமான கருணைக்குரிய இந்த சமுதாயத்துக்கு கடினமான சட்டங்களை நீக்கிவிட்டு இலகுவான, எளிமையான சட்டங்களைக்கொண்டு  இந்த நோன்பை கடமையாக்கினான், அல்லாஹ்வுடைய அச்சம் பயம் வருவதற்காக.
 
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ هُدًى لِلنَّاسِ وَبَيِّنَاتٍ مِنَ الْهُدَى وَالْفُرْقَانِ
 
ரமழான் மாதம் எத்தகையது என்றால் அதில்தான் மனிதர்களுக்கு நேர்வழிகாட்டியாகவும், நேர்வழி உடைய சான்றுகளாகவும் இன்னும் உண்மை, பொய்யை பிரித்தறிவிக்கின்ற தெளிவான சத்தியத்தின் சான்றுகளாகவும் உள்ள அல்குர்ஆன் இறக்கப்பட்டது.
 
 (அல்குர்ஆன் 2 : 185)
 
வழிகேட்டிலே குழப்பதிலே மறுமையின் பாதையை அறியாமல் இருப்பவர்களுக்காக அல்லாஹ்வின் பக்கம் சேர்ப்பிக்கக் கூடிய சரியான, நேர்மையான, நடுநிலையான பாதையை காட்டுவதற்காக இந்த குர்ஆன் ரமழான் மாதத்தில் இறக்கப்பட்டது.
 
நேர்வழி குறித்த எந்த விளக்கம் மற்றும் தெளிவு வேண்டுமானாலும்  எதில்  நேர்வழி வேண்டுமானாலும் இறை வழிபடுகளா, ஒழுக்கங்களா, சமூக சட்டங்களா மற்றும் பொருளாதார சட்டங்களா இப்படி மனித வாழ்க்கைக்கு தேவையான அனைத்து அம்சங்களிலும் எது நேர்வழியோ அதற்குரிய ஆதாரம் குர்ஆனிலே இருக்கும். 
 
அல்லாஹ் கூறுகிறான்:
 
مَا فَرَّطْنَا فِي الْكِتَابِ مِنْ شَيْءٍ
 
எதையும் (லவ்ஹுல் மஹ்ஃபூள் எனும்) புத்தகத்தில் நாம் (குறிப்பிடாமல்) விடவில்லை. 
 
(அல்குர்ஆன் 6 : 38)
 
மேலும், الفرقان  -உண்மையை பொய்யிலிருந்து பிரித்தரியக் கூடியது; அநீதத்திலிருந்தும்,  வழிகேடுகளிருந்ததும் நீதத்தையும், நேர்மையையும், நேர்வழியையும் பிரித்து அறிவிக்க கூடியது இந்த குர்ஆனாகும். 
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா இந்த மாதத்தில் நோன்பை நமக்கு கடமையாக்கினான் தக்வா நம்மிடத்தில் வரவேண்டும் என்பதற்காக, அல்லாஹுடைய உண்மையான பயம் வரவேண்டும் என்பதற்காக. 
 
அந்த தக்வா இருந்தால்தான் இந்த குர்ஆனை கொண்டு நேர்வழி பெறமுடியும், நமக்கு சுவர்க்கம் இலகுவாக கிடைக்கும், மறுமை விசாரணை இலகுவாக அமையும். தக்வா இல்லை என்றால் மரணத்துக்கு பிறகுள்ள ஒவ்வொரு நிலையயும் மிக சிரமமாக இருக்கும். 
 
செல்வதைக் கொண்டு இந்த உலக வாழ்கையில் செல்வந்தர்களும் வசதி படைதவர்களும் சமாளித்துக் கொள்ளலாம். ஆனால், மறுமையில் ஒரு ஆட்சியாளன் தன்னுடைய ஆட்சியைக் கொண்டோ, செல்வந்தன் தன்னுடைய செல்வதைக் கொண்டோ, ஒரு அதிகாரி தன்னுடைய பதவியைக் கொண்டோ மறுமையின் காரியத்தில் எதையும் சமாளிக்க முடியாது. அங்கு தக்வா மட்டும்தான் நமக்கு பயன் தரக்கூடியதாக இருக்கும்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா இந்த உயர்ந்த வணக்கமாகிய நோன்பு பற்றி சொல்கிறான்:
 
كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ لَهُ، إِلَّا الصِّيَامَ فَإِنَّهُ لِي وَأَنَا أَجْزِي بِه 
 
ஆதமின் மகன் செய்யக்கூடிய அமல்களெல்லாம் அது அவனுக்காக. ஆனால், இந்த நோன்பு எனக்கு மட்டும் பரிசுத்தமானது. ஆகவே, இந்த நோன்புக்குரிய கூலியை நான் விஷேசமாக கொடுக்கிறேன்.  (1)
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி,எண் : 1904, 5927.
 
மேலும், நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
 
مَنْ صَامَ رَمَضَانَ إِيمَانًا وَاحْتِسَابًا، غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ
 
யார் ரமழானுடைய மாதத்தில் இறை நம்பிக்கையோடு நன்மையை ஆதரவு வைத்து நோன்பிருப்பர்களோ அவர்களுக்கு முந்திய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப் படும்.  
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1901.
 
ஹதீஸின் கருத்து : தன்னுடைய ஈமானை வலுப்படுதுவதற்காக, சடங்காக அல்ல, ஏதோ ரமழான் வந்துவிட்டது, சஹர் சாபிப்டுகிறோம், இஃப்தார் சாப்பிடுகிறோம் என்பது இல்லை. மாறாக, ஒவ்வொரு நோன்பிலும் என்னுடைய ஈமானை வலுப்படுத்த, அல்லாஹ்வின் மீது என்னுடைய அன்பை அதிகப்படுத்த, மறுமையின் மீது என்னுடைய எகீனை அதிகப்படுத்த, உறுதியோடு இந்த நோன்புக்குரிய கூலியை அல்லாஹ் எனக்கு மறுமையில் குறைவில்லாமல் கொடுக்க வேண்டுமே! என்று எதிர்பார்த்தவண்ணமாக அந்த ஸஹரிலிருந்து இஃப்தார் வரை அந்த எண்ணத்தை புதுபித்துக் கொண்டே இருக்க வேண்டும்.
 
ரஸூலுல்லாஹி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்:
 
இந்த ஒரு உயர்ந்த அடிப்படையில் யார் நோன்பு நோற்பார்களோ அவர்களுக்கு முந்திய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப் படும்.
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1901.
 
மேலும், ரஸூலுல்லாஹி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொன்னார்கள்:
 
الصيام والقرآن يشفعان للعبد يوم القيامة 
 
நோன்புமும் குர்ஆனும் நாளை மறுமையில் அடியார்களுக்காக அல்லாஹ்விடத்தில் பரிந்துரை செய்யும். இன்னும் ஒரு அறிவிப்பில் வருகிறது. அந்த இருவருரைடைய பரிந்துரையும் அல்லாஹ்விடத்தில் ஏற்றுக்கொள்ளப்படும். (2)
 
அறிவிப்பாளர் : அப்துல்லாஹ் இப்னு அம்ர் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்னத் அஹ்மத், எண் : 6626.
 
அத்தகைய உயர்ந்த ரமழானுடைய மாதத்தை அடைய பெறுவதற்கு ரஸூலுல்லாஹி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் எதிர்பார்ப்புகளோடு இருந்தார்கள். ரமழானுடைய பிறையை எதிர்பார்த்து கொண்டு இருப்பர்கள்.  
 
ரமலானை கண்ணியப்படுதும் விதமாகவும், அல்லாஹ் அதற்கு முன்னால் கொடுத்து இருக்ககூடிய உயர்ந்த ஒரு மாதமாகிய ஷஅபானை பயன் படுதிகொள்ளும் விதமாகவும் இந்த ஷஅபானில் அதிகமான நாட்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு இருக்கிறார்கள்.
 
உஸாமா இப்னு ஸைத் ரழியல்லாஹ் அன்ஹு கேட்கிறார்கள். யா ரசூலுல்லாஹ்! இந்த ஷஅபான் மாதத்தில் அதிகமாக நீங்கள் நோன்பு வைப்பதை நான் பாக்கிறேனே?
 
ரஸூலுல்லாஹி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
ذَاكَ شَهْرٌ يَغْفُلُ النَّاسُ عَنْهُ
 
இந்த மாதத்தை மக்கள் மறந்துவிட்டார்கள், அலட்சியம் செய்து விடுகிறார்கள், இந்த மாதத்தில் அமல்கள் அல்லாஹ்விடத்தில் உயர்த்தப்படுகின்றன. (3)
 
அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : நசாயி, எண் : 2356
 
ஒரு மனிதரிடத்தில் ஈமானும், தக்வாவும் உயரும் என்றால் அதனுடைய அடையாளம் அவருக்கு அமல்களில் ஆர்வம் இருப்பது, அமல்களில் தன்னை வருத்திக்கொள்வார். ஒரு மனிதருக்கு ஈமானும் தக்வாவும் பலகீனமாகிறது என்றால் அவர்க்கு அமல்களில் ஆர்வம் குறைவாகி விடும். 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களைப் பற்றி கூறினார்கள்:
 
أَمَا واللَّهِ إنِّي لَأَخْشَاكُمْ لِلَّهِ وأَتْقَاكُمْ له
 
உங்களில் அதிகமாக அல்லாஹ்வை அஞ்சக் கூடியவன் நான்தான் என்று சொன்னார்கள். (4)
 
அறிவிப்பாளர்  :  அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 5063.
 
இன்னும் கூறினார்கள்:
 
أُحِبُّ أَنْ يُرْفَعَ عَمَلِي وَأَنَا صَائِمٌ
 
நான் நோன்பாளியாக இருக்கும் நிலையில் என்னுடைய அமல் என்னுடைய ரப்பிடத்தில் உயர்த்தப்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன். (3)
 
அறிவிப்பாளர்: உஸாமா இப்னு ஸைத் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : நசாயி, எண் : 2356
 
நம்முடைய அமலில்களில் இருக்கக் கூடிய சிறிய சிறிய குறைகள் அலசியங்கள் எல்லாம் நம்முடைய அமல்கள் அல்லாஹ்விருக்கு முன்னால் சமர்பிக்கப்படும் போது அந்த நேரத்தில் அல்லாஹ் தன்னுடைய அடியானை பார்க்கிறான்; அவன் ஏதேனும் ஒரு வணக்கவழிபாடுகளில் இருந்தால் அந்த வணக்க வழிபாட்டின் பொருட்டால் அல்லாஹ்விடத்தில்  உயர்தப்பட்டதல்லவா! அந்த எல்லா அமல்களையும் சரி செய்து அல்லாஹு தஆலா அங்கிகரித்து விடுகிறான்.
 
இந்த நோன்பு என்கிற வணக்கம் என்பது இந்த ஒரு வணக்கம் மட்டும்தான் மனிதனோடு எப்போதும் ஒட்டிக்கொண்டு இருக்கக் கூடியது. குர்ஆன் ஓதுவது, தர்மம், தொழுகை முதலிருந்து இறுதிவரை இவைகள் அனைத்தும் அதை செய்யும்போது மட்டும்தான் அந்த அமல். 
 
ஆனால், நோன்பு என்பது நாம் ஸஹரிலிருந்து நோன்பு திறக்கும்வரை தூக்கத்தில், வியாபாரத்தில், இன்னும் நம்முடைய தேவைக்கு சென்றாலும் இப்படியாக அடியானோடு பிரியாமல் ஒரு நீண்ட நேரம் அடியானை இபாதத்தில் வைக்கக் கூடியதுதான் இந்த நோன்பு.
 
ஆகவே, இந்த அமலை தேர்ந்தெடுத்தார்கள் என்னுடைய அமல் அல்லாஹ்விடத்தில் உயர்த்தப்படும்போது நான் நோன்பாளியாக இருக்க வேண்டுமென்று. 
 
இந்த அடிப்படையில் இரண்டு வசனங்களை நாம் பார்க்க இருக்கிறோம். அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா சிந்திப்பதற்க்காக நமக்கு இறக்கிய அல்குர்ஆனில் சூரா ஆல இம்ரானில் 133 லிருந்து 137 வரைக்குமுள்ள வசனங்களை கொஞ்சம் சிந்தித்து பாருங்கள்! இந்த ரமழானோடு இதை ஒப்பிட்டு பாருங்கள்! அமல்களில் யாருக்கு அலச்சியம் ஏற்படுகிறதோ அல்லது அமல்களில் யார் கவனக்குறைவோடு இருக்கிறார்களோ அவர்கள் சிந்திக்க வேண்டும்.
 
இந்த உலகம் முடிந்துகொண்டே இருக்கிறது அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்களுடைய கூற்றை இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பதிவு செய்கிறார்கள். 
 
ارْتَحَلَتِ الدُّنْيَا مُدْبِرَةً، وَارْتَحَلَتِ الآخِرَةُ مُقْبِلَةً، وَلِكُلِّ وَاحِدَةٍ مِنْهُمَا بَنُونَ، فَكُونُوا مِنْ أَبْنَاءِ الآخِرَةِ، وَلاَ تَكُونُوا مِنْ أَبْنَاءِ الدُّنْيَا، فَإِنَّ اليَوْمَ عَمَلٌ وَلاَ حِسَابَ، وَغَدًا حِسَابٌ وَلاَ عَمَلٌ
 
நம்மோடு இந்த உலகமும் பயணிக்கிறது அதனுடைய முடிவை நோக்கி. நம்மோடு மறுமையும் பயணித்து வருகிறது. நம்மை இந்த உலகம் பின்னோக்கி செல்கின்றன. மறுமை முன்னோக்கி வருகின்றன. உலகத்திற்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். மறுமைக்கும் பிள்ளைகள் இருக்கிறார்கள். நீங்கள் மறுமையின் பிள்ளைகளாக இருங்கள். மேலும் உலக வாழ்க்கையின் பிள்ளைகளாக இருந்து விடாதீர்கள்.
 
நூல் : புகாரி.
 
அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய ஒரு ஹதீஸுக்கு விளக்கம் சொல்லும்போது இந்த கூற்றை சொல்லுகிறார்கள். 
 
ஒவ்வொரு நாள் விடியும்போதும் இரவு நாம் படுக்கைக்கு செல்லும்போதும் நம்முடைய ஆயுள்காலம் முடிந்துகொண்டே இருக்கிறது. 
 
உலகத்தை விசாலப்படுத்துவதிலும், உலக செல்வங்களை அதிகப்படுத்துவதிலும், உலக வாழ்க்கையின் வசதிகளை தேடிக்கொள்வதிலே எந்த அளவுக்கு முனைப்பாக இருக்கிறோம்! அதுவோ முடிந்து விடக்கூடியது. அதுவோ நம்மைவிட்டு தீர்ந்து விட கூடியது.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா கூறுகிறான்:
 
مَا عِنْدَكُمْ يَنْفَدُ وَمَا عِنْدَ اللَّهِ بَاقٍ
 
உங்களிடம் உள்ளவை தீர்ந்துவிடும். அல்லாஹ்விடத்தில் உள்ளவையோ நிரந்தரமானவையாகும்.
 
(அல்குர்ஆன் 6:36)
 
மேலும், சொல்லுகிறான்:   
 
وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ
 
இன்னும், உங்கள் இறைவனின் மன்னிப்பின் பக்கமும் சொர்க்கத்தின் பக்கமும் விரையுங்கள். அதன் அகலம் வானங்களும் பூமியுமாகும். (அது) அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்காக தயார்படுத்தப்பட்டுள்ளது.
 
(அல்குர்ஆன் 3:133) 
 
வசனத்தின் கருத்து : ரமழானோடு இதை ஒப்பிட்டுப் பாருங்கள்! அல்லாஹு தஆலா மறதியில் இருக்கக் கூடிய இன்னும் கவனக்குரைவில் இருக்கக் கூடிய நம்மை பார்த்து கூறுகிறான். உங்களுடைய இறைவனின் மன்னிப்பை அடைவதற்கு நீங்கள் விரைந்து வாருங்கள்! 
 
سَارِعُوا என்றால் ஒருவரைப்பார்த்து அவரைவிட நம்முடைய வேகத்தைக் கூட்டுவது. சாலையில் அல்ல. வணக்கவழிபாடுகளில்  அல்லாஹு தஆலா சொல்கிறான். سَارِعُوا  நீங்கள் ஒருவரைவிட ஒருவர் வேகமாக வாருங்கள். எதற்காக? உங்களுடைய இறைவனின் பாவமன்னிப்பை பெறுவதற்காக. 
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா கூறுகிறான்:
 
يَا عِبَادِي إِنَّكُمْ تُخْطِئُونَ بِاللَّيْلِ وَالنَّهَارِ، وَأَنَا أَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا، فَاسْتَغْفِرُونِي أَغْفِرْ لَكُمْ
 
நீங்கள் பகலிலும் பாவம் செய்கிறீர்கள், இரவிலும் பாவம் செய்கிறீர்கள். நானோ எல்லா பாவத்தையும் மன்னிக்க காத்துக்கொண்டு இருக்கிறேன். என்னிடத்தில் மன்னிப்பு கேளுங்கள். நான் மன்னிக்க தயாராக இருக்கிறேன். (5)
 
அறிவிப்பாளர் : அபூதர் அல் கிஃபாரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2577.
 
அன்பு சகோதர்களே! அடியான் பாவத்தைவிட்டு விலக வேண்டுமென்று அல்லாஹுடைய விருப்பமாக இருக்கிறது.
 
அல்லாஹ் கூறுகிறான்: 
 
وَاللَّهُ يُرِيدُ أَنْ يَتُوبَ عَلَيْكُمْ وَيُرِيدُ الَّذِينَ يَتَّبِعُونَ الشَّهَوَاتِ أَنْ تَمِيلُوا مَيْلًا عَظِيمًا
 
நீங்கள் திருந்த வேண்டுமென்று அல்லாஹ் விரும்புகிறான், நீங்கள் சுத்தமானவர்களாக ஆக வேண்டும் என்பதை அல்லாஹ் விரும்புகிறான், பாவத்தை விட்டு விலகி அல்லாஹ்வின் பால் திரும்ப வேண்டும் என்பதை அல்லாஹ் விரும்புகிறான்.
 
ஆனால், மனோ இச்சையை பின்பற்றகூடிய சரீர ஆசைகளை பின்பற்றக்கூடிய இந்த வழிகேடர்களோ நீங்கள் அல்லாஹ்வுடைய மார்க்கத்திலிருந்து விலகி முற்றிலுமாக உலக ஆசைகளின் பக்கம் விழுந்து விடவேண்டும் என்பதை விரும்புகிறார்கள். 
 
(அல்குர்ஆன் 4:27) 
 
இன்று, நாம் நினைத்து பார்க்கவேண்டும் நம்மை சோதித்து பார்க்க வேண்டும். நாம் அல்லாஹுடைய விருப்பத்திற்கு பதில் தருகிறோமா? அல்லது நம்மை வழிகெடுக்கூடிய ஷைத்தான் நப்ஸுடைய இச்சைகளை பின்பற்றிகொண்டு இருக்கிறோமா? 
 
அல்லாஹு தஆலா அழைக்கிறான்; வாருங்கள், நான் மன்னிக்க தயாராக இருக்கிறேன். நோன்பை கொண்டு உங்களுக்கு மன்னிப்பு, ஸதக்காவை கொண்டு உங்களுக்கு மன்னிப்பு, ஹஜ்ஜை கொண்டு உங்களுக்கு மன்னிப்பு, உபரியான தொழுகைகளைக் கொண்டு உங்களுக்கு மன்னிப்பு, கடமையான தொழுகையைக் கொண்டு உங்களுக்கு மன்னிப்பு, நீங்கள் செய்யகூடிய உழுவுக்காக உங்களுக்கு மன்னிப்பு, நீங்கள் செய்யக்கூடிய திக்ருக்காக உங்களுக்கு மன்னிப்பு இப்படி ஒவ்வொரு வணக்க வழிபாட்டுக்கும் அல்லஹு தஆலா மன்னிப்பை தர காத்திருக்கிறான்.
 
قُلْ يَاعِبَادِيَ الَّذِينَ أَسْرَفُوا عَلَى أَنْفُسِهِمْ لَا تَقْنَطُوا مِنْ رَحْمَةِ اللَّهِ إِنَّ اللَّهَ يَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا إِنَّهُ هُوَ الْغَفُورُ الرَّحِيمُ
 
(நபியே!) கூறுவீராக! (பாவங்கள் செய்து) தங்கள் ஆன்மாக்கள் மீது எல்லை மீறிய என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் இருந்து நிராசை ஆகாதீர்கள். (நீங்கள் வருந்தி, திருந்தி, அல்லாஹ்விடம் மன்னிப்பு கேட்டால் உங்களது) எல்லாப் பாவங்களையும் நிச்சயமாக அல்லாஹ் மன்னிப்பான். நிச்சயமாக அவன் மகா மன்னிப்பாளன், பெரும் கருணையாளன். 
 
(அல்குர்ஆன் 39:53)
 
எப்போது இந்த படைப்பினங்களை படைத்தானோ அப்போதே எழுதிவிட்டான். அபூ ஹுரைரா (ரழியல்லாஹ்அன்ஹு) அறிவிக்கிறார்கள் மேலும் இமாம் புகாரி(ரஹ்) பதிவு செய்கிறார்கள்.
 
إنَّ اللَّهَ كَتَبَ كِتابًا قَبْلَ أنْ يَخْلُقَ الخَلْقَ: إنَّ رَحْمَتي سَبَقَتْ غَضَبِي، فَهو مَكْتُوبٌ عِنْدَهُ فَوْقَ العَرْش 
 
அல்லாஹு தஆலா படைபினங்களை படைத்தபோதே விஷேசமாக ஒரு ஏட்டில் எழுதி அதை தன்னுடைய அர்ஷுக்கு மேலே தனியாக வைதுக்கொண்டான். அதில் அல்லாஹு தஆலா எழுதியிருக்கிறான்; என்னுடைய அருள் எப்போதும் என்னுடைய கோபத்தை மிகைத்து நிற்கின்றன என்று. 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 7554.
 
அன்பு சகோதரர்களே! அத்தைகைய அருளாளன் அழைக்கிறான். உங்களுடைய இறைவனின் மன்னிப்பை அடைவதற்காக. அந்த மன்னிப்புக்கு பிறகு அல்லாஹ் உங்களை உயர்ந்த சொர்க்கத்திற்க்கு அழைக்கிறான். 
 
وَسَارِعُوا إِلَى مَغْفِرَةٍ مِنْ رَبِّكُمْ وَجَنَّةٍ عَرْضُهَا السَّمَاوَاتُ وَالْأَرْضُ أُعِدَّتْ لِلْمُتَّقِينَ
 
இன்னும், உங்கள் இறைவனின் மன்னிப்பின் பக்கமும் சொர்க்கத்தின் பக்கமும் விரையுங்கள். அதன் அகலம் வானங்களும் பூமியுமாகும். (அது) அல்லாஹ்வை அஞ்சுபவர்களுக்காக தயார்படுத்தப்பட்டுள்ளது.
 
(அல்குர்ஆன் 3:133) 
 
நோன்பின் மூலமாக தக்வா. தக்வா இருந்தால் நோன்பு பலன் தரும். தக்வாவுடைய வழிகாட்டுதல்கள் நமக்கு குர்ஆனிலிருந்து கிடைக்கும். இந்த தக்வாவைக் கொண்டுதான் அல்லாஹுடைய மன்னிப்பும் அல்லாஹுடைய சொர்க்கமும் கிடைக்கும். 
 
பிறகு, அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா இந்த ஆல இம்ரானுடைய வசனத்தில் தக்வாவுக்கான சில அடையாளங்களை இந்த இடத்தில் விவரிக்கின்றான்.
 
தக்வாவிற்கு பல அடையளாம் இருக்கின்றன.  முதலாவதாக தக்வாவை புரிந்து கொள்ள வேண்டும். இது நம்முடைய தோற்றத்தில் மட்டும் அல்ல. சிலருக்கு தோற்றம் தக்வாவுடைய தோற்றமாக இருக்கலாம். சிலர், தக்வாவுடைய தோற்றத்தில் வெளிபடுவார்கள். 
 
ஆனால், அவர்களுடைய செயல்கள் ஹராமானதாக இருக்கும், அவர்களுடைய செயல்கள் பாவமாக இருக்கும், அவர்களுடைய உள்ளங்களில் கெட்ட குணங்களாக இருக்கும், தடுக்கப்பட்ட பாவங்களில் உலன்றுக்கொண்டு இருப்பார்கள்.
 
சிலர், பார்ப்பதற்க்கு சாதாரணமானவர்களாக இருப்பார்கள். ஆனால், அவர்களுடைய உள்ளமோ அல்லாஹுவின் பயத்தால் நடுநடுங்கிக்கொண்டு இருக்கும். 
 
ஆகவே, ரஸூலுல்லாஹி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள், 
 
التَّقْوَى هاهُنا ويُشِيرُ إلى صَدْرِهِ ثَلاثَ مَرَّاتٍ
 
அல்லாஹ்வை பயந்துகொள்ளுங்கள் பயந்துகொள்ளுங்கள் என்று கூறியபோது அவர்கள் தனது உள்ளத்தை சுட்டிக்காட்டி சொன்னார்கள்; தக்வா இங்கே இருக்கிறது, தக்வா இங்கே இருக்கிறது, தக்வா உள்ளத்திலே இருக்கவேண்டுமென்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் உள்ளத்தை சுட்டிக்காட்டினர்கள். 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் :முஸ்லிம், எண் : 2564.
 
அமலுக்கு தக்வா தேவை அந்த அமலிலே தக்வா இருக்கவேண்டும். அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா தக்வாவுடைய அடையாளமாக இந்த இடத்திலே சொல்லுகிறான். அதில் முதலாவதாக, 
 
தக்வாவுடையவர்கள் உலக பற்றட்டவர்களாக இருப்பார்கள். தான் இந்த உலகத்தில் சேர்த்துவைத்து, தனது குடும்பத்திற்காக விட்டுச்செல்வதைவிட, தன்னுடைய மறுமைக்காக தான் அனுப்பி வைத்தது அதிகமாக இருக்கவேண்டும் என்று ஒருவன் விரும்பினால் அவனிடத்தில் தக்வா இருக்கிறது.
 
யார் அவர்கள்? அவர்களின் அடையாளங்களில் ஒன்றை அல்லாஹ் சொல்கிறான். அவர்கள்  தர்மத்தில் கவனமுடையவர்களாக இருப்பார்கள். இதை தக்வாவுடைய உயர்ந்த அடையாளமாக அல்லாஹ் சொல்கிறான்.
 
الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ 
 
(அல்குர்ஆன் 3:134) 
 
வசனத்தின் கருத்து: அவர் கஞ்சத்தனம் இல்லாமல் கருமித்தனம் இல்லாமல் மார்க்கத்தில் செலவு செய்வார். ஏழைகளுக்காக செலவு செய்வார். உறவுகளுக்கு கொடுப்பார். நன்மையான காரியங்களில் தன்னால் முடிந்தவரை செலவு செய்வார். 
 
இங்கே கேள்வி என்ன, வசதி இருக்க வேண்டுமே, செல்வம் இருக்க வேண்டுமே, இல்லை அல்லாஹ் நமக்கு இந்த இடத்தில் இதைத்தான் வலியுறுத்திகிறான் அவர்கள் நெருக்கடியில் இருந்தாலும் தர்மம் செய்வார்கள், வசதி இல்லாமலும் இருந்தாலும் தர்மம் செய்வார்கள், தங்களுடைய வரும நிலையிலும் தர்மம் செய்வார்கள், செல்வ நிலையிலும் தர்மம் செய்வார்கள்.
 
ஒருவருவரிடம் ஒரு கோடி இருக்கிறது, சில ஆயிரங்களை கொடுக்கிறார். ஒருவருவரிடம் வெறும் நூறு ரூபாய் அல்லது ஐம்பது ரூபாய் இருக்கிறது. அவர் ஒரு ரூபாய் மட்டும் தர்மம் செய்கிறார் அல்லது ஒரு ஐந்து ரூபாயை தர்மம் செய்கிறார்.
 
நாம் அந்த தொகையின் அளவை பார்க்கிறோம். அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா பார்ப்பது, கொடுக்கின்ற மனிதனின் தக்வாவை பார்க்கிறான். அவனுடைய மனத்தூய்மையை பார்க்கிறான். அவன் எந்த எண்ணத்தில் கொடுக்கிறான் என்பதை பார்க்கிறான். 
 
யா அல்லாஹ்! உன்னை திருப்திப் படுத்துவதற்காக என்னால் முடிந்ததை நான் கொடுக்கிறேன். ஆகவேதான், சொன்னார்கள்: 
 
اتَّقُوا النَّارَ وَلَوْ بِشِقِّ تَمْرَةٍ
 
உங்களுக்கு முடியவில்லை என்றால் உங்களிடத்தில் ஒரே ஒரு பேரித்தம்பழம்தான் உங்களுடைய உணவுக்கே இருக்கிறது என்றால் அதனுடைய பாதியை பிரித்து ஒருவருக்கு தர்மம் செய்தாவது நரகத்தைவிட்டு பாதுகாத்து கொள்ளுங்கள். 
 
அறிவிப்பாளர் : அதீ இப்னு ஹாத்திம் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 1417.
 
இலட்சங்களை அல்லாஹ் பார்ப்பது இல்லை, கோடிகளை அல்லாஹ் பார்ப்பது இல்லை. கொடுக்கப்பட்டது யாருடைய முகத்திற்காக என்பதையே பார்க்கிறான்.
 
وَمَا لِأَحَدٍ عِنْدَهُ مِنْ نِعْمَةٍ تُجْزَى إِلَّا ابْتِغَاءَ وَجْهِ رَبِّهِ الْأَعْلَى
 
யார் ஒருவருக்கும் பிரதி பலன் செய்யும்படியான உபகாரம் ஏதும் அவரிடம் இருக்காது. எனினும், அவரோ உயர்ந்தவனான தன் இறைவனின் முகத்தைத் தேடியே தர்மம் செய்வார்.
 
(அல்குர்ஆன் 92:19-20)
 
மேலும், அல்லாஹ் கூறுகிறான்:
 
إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنْكُمْ جَزَاءً وَلَا شُكُورًا إِنَّا نَخَافُ مِنْ رَبِّنَا يَوْمًا عَبُوسًا قَمْطَرِيرًا
 
நாங்கள் உங்களுக்கு உணவளிப்பதெல்லாம் அல்லாஹ்வின் முகத்திற்காகத்தான். உங்களிடம் (இதற்கு) கூலியையும் நன்றியையும் நாங்கள் நாடவில்லை. நிச்சயமாக நாங்கள் எங்கள் இறைவனிடம் (பாவிகளின் முகங்கள்) கடுகடுக்கின்ற (குற்றவாளிகளின் நெற்றிகள்) சுருங்கிவிடுகின்ற ஒரு நாளை பயப்படுகின்றோம்.
 
(அல்குர்ஆன் 76 : 9-10)
 
அல்லாஹ்வையும் மறுமையும் பயந்து மட்டுமே தர்மம் கொடுப்பது. என்னுடைய பெயர் பதியப்பட வேண்டும் என்பதற்காக, எனக்கு பதவி கிடைக்க வேண்டும் என்பதற்காக, என்னை பற்றி புகழபப்ட வேண்டும் என்பதற்காக அல்ல.
 
அல்லாஹுடைய தூதர் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்களல்லவா!
 
ورَجُلٌ تَصَدَّقَ أخْفَى حتَّى لا تَعْلَمَ شِمَالُهُ ما تُنْفِقُ يَمِينُهُ يُظِلُّهُمُ اللَّهُ في ظِلِّهِ، يَومَ لا ظِلَّ إلَّا ظِلُّهُ
 
அவனுடைய இடதுகை கைக்கே தெரியாது வலது கை தர்மம் செய்வது. அவர்கள் அர்ஷுடைய நிழலில் இருப்பார்கள். (6)
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 660
 
الَّذِينَ يُنْفِقُونَ فِي السَّرَّاءِ وَالضَّرَّاءِ وَالْكَاظِمِينَ الْغَيْظَ وَالْعَافِينَ عَنِ النَّاسِ وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِينَ
 
அவர்கள், செல்வத்திலும் வறுமையிலும் தர்மம் செய்வார்கள்; இன்னும், கோபத்தை மென்றுவிடுவார்கள்; இன்னும், மக்களை மன்னித்து விடுவார்கள். அல்லாஹ் (இத்தகைய) நல்லறம் புரிபவர்கள் மீது அன்பு வைக்கிறான்.
 
  (அல்குர்ஆன் 3:134)
 
தொடர்ந்து அல்லாஹ் கூறுகிறான்: அவர்கள் தங்களுக்கு உலகத்தில் சேர்த்ததை விட மறுமையில் சேர்ப்பார்கள். 
 
நமக்கு இந்த இலக்கணம்தான் இங்கு புரியவில்லை. இங்கேதான் நமக்கு சிக்கலாக இருக்கிறது. நாம் என்ன நினைத்துக்கொண்டு இருக்கிறோம்? செல்வதை சேர்த்து வைப்போம். நமக்கு நம்முடைய வயோதிகத்துக்கு எவ்வளவு சேர்த்து இருக்கிறோம்? நமது பிள்ளைகளுக்காக எவ்வளவு சேர்த்து வைத்து இருக்கிறோம்? நாம்சேர்த்து வைத்ததெல்லாம் இந்த உலகத்தில் விட்டு செல்லகூடியது.
 
எதை அல்லாஹுடைய பாதையில் அல்லாஹுவிற்காக கொடுத்தோமோ, ஏழைகள், அனாதைகள், இல்லாதவர்களுக்காக கொடுத்தோமோ இது நம்மோடு நாம் மறுமைக்கு எடுத்துச் செல்லகூடியது. 
 
அல்லாஹ் கூறுகிறான்: 
 
وَمَا تُقَدِّمُوا لِأَنْفُسِكُمْ مِنْ خَيْرٍ تَجِدُوهُ عِنْدَ اللَّهِ هُوَ خَيْرًا وَأَعْظَمَ أَجْرًا
 
உங்களுக்காக நன்மையில் எதை நீங்கள் முற்படுத்துகிறீர்களோ அதை அல்லாஹ்விடம் (நீங்கள் செய்ததை விட) மிகச் சிறப்பாகவும் கூலியால் மிகப் பெரியதாகவும் நீங்கள் பெறுவீர்கள்.
 
     (அல்குர்ஆன் 73: 20)
 
அன்பானவர்களே! இது நமக்கு ஒரு பெரிய உரையாகும். நம்முடைய கையிலே இருக்ககூடிய செல்வதைக்கொண்டு நாம் இதைகொண்டு அனுபவிக்க ஆசைபடுகிறோமா? அல்லது இதில் முதலாவதாக ஒரு பகுதியை அல்லாஹ்விற்காக தர்மம் செய்யவேண்டும் என்பதை ஆசைபடுகிறோமா? நம்முடைய உள்ளத்தில் தக்வா இருக்கிறதா? இல்லையா? என்பதை நாமே சோதித்து பார்ப்பதற்க்குள்ள அடையாளமாகும்.
 
அல்லாஹ் சொல்கிறான்: தக்வா உள்ளவர்கள் அவர்களுக்கு வறுமை இருந்தாலும் சரி, தர்மம் செய்வார்கள், தர்மத்தை நிறுத்த மாட்டார்கள். 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் என்ன செய்தார்கள்?
 
ஒன்று, நாம் நம்முடைய வசதிக்காகவும் ஆடம்பரத்திற்க்காகவும் செலவு செய்கிறோம். இரண்டாவது, நம்மில் இன்னும் பலர் இருக்கிறார்கள். கடன் வாங்கி தன்னுடைய ஆடம்பர தேவைகளை அனாவசிய தேவைகளை நிறைவேற்றுவார்கள். 
 
கடன் வாங்குவதே கூடாது. அதற்கென்று மார்க்கம் சில வரையறை வைத்திருக்கிறது. பலர், சாதாரண கடன் மட்டும்மல்ல, வட்டிக்கு கடன் வாங்கி பிரறை வருத்தி கடன் வாங்கி அத்தியாவசிய தேவைகளுக்கு அல்ல, மாறாக, ஆடம்பரத்திற்க்காகவும் அனாவசியத்திற்க்காகவும் இவர்களாக உருவாக்கிய தேவையற்ற தேவைகளுக்காக இவர்கள் கடன் வாங்குவார்கள்.
 
ஆனால், ரஸுலுல்லாஹ் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் ஸஹாபாக்களும் கடன் வாங்கினார்கள். எதற்க்காக தெரரியுமா?
 
பிறக்கு உதவி செய்வதற்காக, ஏழைகளுக்கு உணவு கொடுப்பதற்க்காக, ஆடை இல்லாதவருக்கு ஆடை  கொடுப்பதற்க்காக, வீடு இல்லாதவருக்கு நிழலை அமைத்து கொடுப்பதற்காக இருந்தன.
 
நம்முடைய கடன் எதற்காக? இருந்தது நம்முடைய அனாவசியதுக்காக. எனவே, நமக்கும் அவர்களுக்கும் உள்ள வேறுபாட்டை பாருங்கள். 
 
அவர்கள் கடன் வாங்கி ஏழைகளுக்கு கொடுத்தார்கள். தன்னுடைய சுய தேவைக்காக வாங்கவில்லை. அப்படியே வாங்கி இருந்தாலும்,  வறுமை பசி பட்டினியால் வாங்கி இருக்கிறார்களே தவிர, ஆடம்பர தேவைகளுக்காக அனாவிசிய தேவைகளுக்காக அவர்கள் ஒருபொழுதும் கடன் வாங்கியது இல்லை.
 
அல்லாஹ் சொல்கிறான்: அந்த தக்வாவுடையவர்கள் எத்தைகையவர்கள் என்று தெரியுமா?
 
وَالْكَاظِمِينَ الْغَيْظَ
 
அவர்கள் தன்னுடைய கோபத்தை அடக்கிக் கொள்வார்கள்.
 
     (அல்குர்ஆன் 3:134)
 
பிறர் மீது தங்களுடைய கோபம் வரும்போது அவர்களை மன்னித்துவிடுவார்கள். கோபத்தை மென்று அப்படியே விழுங்கிவிடுவார்கள தங்களுடைய உள்ளத்தில் அதை புதைத்து விடுவார்கள். இது தக்வாவுடைய உயர்ந்த அடையாளமாகும்.
 
தக்வா வருவதற்க்கான ஒரு காரணமாக அல்லாஹ் சொல்லிகாட்டுகிறான். நமது மனைவி மீதுள்ள கோபத்தை, நமது பிள்ளைகள் மீதுள்ள கோபத்தை, நமது நண்பர்கள் மீதுள்ள கோபத்தை, நம்மோடு பணிசெய்யக்கூடியவர் மீதுள்ள கோபத்தை, நமக்கு கீழ் பணிசெய்யகூடிய பணியாளர்கள் மீதுள்ள கோபத்தை, நம்முடைய சக மனித சமூதாயத்தின் மீதுள்ள கோபத்தை கால்புணர்சியை மென்று விழுங்கி  அவர்களை அல்லாஹ்விற்காக மன்னிப்பது.  
 
அவர்களை மன்னித்து விடகூடியவர்களாக இருப்பார்கள். யார்மீதும் குரோதத்தை, பகமையை, கால்ப்புணர்ச்சியை தங்களது உள்ளத்தில் வைத்திருக்க மாட்டார்கள். எப்போதும் உள்ளத்தை பரிசுத்தமாக வைதிருப்பார்கள். 
 
அன்புக்குரியவர்களே! கோபத்தை அடக்குவது. பிறகு அந்த கோபத்திற்க்கு காரணமானவர்களை மன்னிபது. அது உயர்ந்த குணம். நம்முடைய உள்ளத்தில் இருக்ககூடிய நெருக்கடியை நீக்கி உள்ளத்தை விசாலப்படுத்த கூடிய ஒரு குணமாகும்.
 
இமாம் ஷாபிஃ ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்கிறார்கள்: நான் எல்லா முஃமின்களையும் யாரெல்லாம் எனக்கு தொந்தரவு, அநீதம், கெடுதி செய்தார்களோ, யார் மூலமாக எனக்கு பிரச்சனை ஏர்பட்டதோ அவர்களையெல்லாம் மன்னித்து விடுகிறேன். 
 
அதற்க்கு ஒரு காரணம் சொல்லுகிறார்கள்; ஏன் தெரியுமா! நாளை மறுமையில் அல்லாஹ்வுக்கு முன்னால் அவர்கள் வரும்போது என் காரணமாக அல்லாஹ்விடத்தில் குற்றவாளிகளாக நிற்கக்கூடாது. ஏன் தேரியுமா! அப்படி அவர்கள் குற்றவாளிகளாக நிறுத்தப்பட்டு அவர்கள் சுவர்க்கம் செல்வது தடைபடுமேயானால் என்னுடைய நபிக்கு மனம் வர்த்தம் கொடுத்தவனாக நான் ஆகிவிடுவேன், என்னுடைய நபியின் சமுதாயத்தை ஒரு குற்றவாளியாக நாளை அல்லாஹ்விற்கு முன்னால் நிறுத்தக்கூடிய ஒரு செயலை செய்து என்னுடைய நபியை வருத்தபடுத்த நான் விரும்பவில்லை. எனக்கு தீங்குசெய்த எல்லோரையும் நான் மன்னித்து விடுகிறேன் என்று சொன்னார்கள்.
 
அல்லாஹு தஆலா கூறுகிறான்: இந்த தக்வாவுள்ள இவர்களுக்கு இந்த நற்குணத்தின் காரணமாக தர்மம் செய்வது, கோபத்தை அடக்குவது, அடியார்களை மன்னிப்பது இதனால் இவர்கள் தக்வாவிலிருந்து மேலும் ஒரு படி கூடுகிறார்கள்.
 
وَاللَّهُ يُحِبُّ الْمُحْسِنِين
 
முஹ்சினீன் என்ற அந்தஸ்துக்கு இவர்கள் வருகிறார்கள். இத்தைகைய முஹ்சின்களை அல்லாஹ் நேசிக்கிறான். 
 
     (அல்குர்ஆன் 3:134)
 
பிறகு அல்லாஹு தஆலா கூறுகிறான்:  
 
وَالَّذِينَ إِذَا فَعَلُوا فَاحِشَةً أَوْ ظَلَمُوا أَنْفُسَهُمْ ذَكَرُوا اللَّهَ فَاسْتَغْفَرُوا لِذُنُوبِهِمْ وَمَنْ يَغْفِرُ الذُّنُوبَ إِلَّا اللَّهُ وَلَمْ يُصِرُّوا عَلَى مَا فَعَلُوا وَهُمْ يَعْلَمُونَ
 
இன்னும், அவர்கள் ஒரு மானக்கேடானதைச் செய்தால்; அல்லது, தங்களுக்குத் தாமே அநீதியிழைத்துவிட்டால் (உடனே) அல்லாஹ்வை நினைவில் கொண்டுவருவார்கள்; தங்கள் பாவங்களுக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை யார் மன்னிப்பார்? அவர்களுமோ (பாவம் என) அறிந்தவர்களாக இருந்த நிலையில் தாங்கள் செய்த (பாவத்)தின் மீது பிடிவாதமாக தொடர்ந்து நிலைத்திருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 3:135)
 
வசனத்தின் கருத்து : ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் இந்த உடல் இச்சையால் சூழபட்டவர்கள்தான் மனிதர்கள்.  இந்த இச்சைக்கு அடிமையாகி அசிங்கமான வெறுக்கத்தக்க ஒரு காரியத்தை அவர்கள் செய்து விட்டால் அல்லது வேறொரு பாவத்தை செய்துவிட்டால் அவர்கள் அல்லாஹுவை நினைத்து விடுவார்கள். உடனே அல்லாஹ்விடத்தில் போவமன்னிபு கேட்பார்கள். அல்லாஹுவை தவிர அடியார்களின் பாவத்தை மன்னிப்பதற்கு யார் இருக்கிறார்கள் என்று கேட்டுவிட்டு சொல்கிறான், இவர்கள் தான் செய்வது தவறு என்று தெரிந்துவிட்டால் அதை தொடரமாட்டர்கள். 
 
أُولَئِكَ جَزَاؤُهُمْ مَغْفِرَةٌ مِنْ رَبِّهِمْ وَجَنَّاتٌ تَجْرِي مِنْ تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَنِعْمَ أَجْرُ الْعَامِلِينَ
 
அத்தகையவர்கள் - அவர்களின் கூலி அவர்களுடைய இறைவனிடமிருந்து மன்னிப்பும், சொர்க்கங்களும் ஆகும். அவற்றின் கீழ் ஆறுகள் ஓடும். அவர்கள் அதில் நிரந்தரமாக தங்கி இருப்பார்கள். நல்ல அமல் செய்பவர்களின் கூலி மிக சிறந்ததாக இருக்கும்! (அல்குர்ஆன் 3:136)
 
அன்பு சகோதார்களே! இது போன்ற குர்ஆனுடைய வசனங்களை ஓதும்போது இவற்றை நம்முடைய சிந்தனைக்காக எடுத்துகொள்ள வேண்டும். குறிப்பாக இந்த வசனங்களை வரக்கூடிய ரமழானோடு கொஞ்சம் ஒப்பிட்டு பாருங்கள். 
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா சொர்கத்திற்கு அழைக்கிறான், மன்னிப்புக்கு அழைக்கிறான். சொர்க்கமும் மன்னிப்பும் எதன் மூலம் கிடைக்கும்? அமல்களின் மூலமாக கிடைக்கும், நம்முடைய நல்ல நற்குணங்களின் மூலமாக கிடைக்கும். அல்லாஹுவின் பக்கம் நம்மை நெருக்கமாக்கி வைக்ககூடிய அல்லாஹுவுடைய பிரியத்தை ஏற்படுத்தக் கூடிய நன்மைகளை செய்வதில் நாம் தீவிரம் காட்டவேண்டும். 
 
அத்தககைய ஒரு சிறந்த மாதத்தை நாம் அடைய இருக்கிறோம். அதற்காக இபொழுதுதிலிருந்தே நாம் தயாராகுவது. எப்படி தயாராகுவது? கடைகளில் சென்று பொருட்கள் மற்றும் ஆடைகளை வாங்குவதா? வீடுகளை அலங்கரிப்பதா? பள்ளிகளை அலங்கரிப்பதா? 
 
இல்லை, சகோதர்களே! அதற்காகவே குர்ஆன் ஓதுவதை அதிக படுத்தவேண்டும். மீதம் இருக்ககூடிய ஷஅபான் மாதத்தில் நபில் நோன்புகளை வைக்ககூடிய பழக்கங்கள் சந்தேகத்திற்குரிய நாள் 29 முடிந்த அடுத்த நாளை தவிர மீதமுள்ள எல்லாம் நாட்களிலும் நோன்பு வைக்கலாம். 
 
சிலர் ஒரு பலவீனமான ஹதீஸை வைத்து ஷஅபான் 15 க்கு மேல் நோன்பு வைக்ககூடாது என்று சொல்லுவார்கள். அப்படி அல்ல, இறுதிவரை நோன்பு வைத்து கொண்டே இருக்கலாம். பிறை 29 ல் உள்ள சந்தேகத்திற்குரிய நாட்களை தவிர. 
 
ஆகவே, இதுபோன்ற அமலைகளைக்கொண்டு ஆயத்தம் ஆகுவோமாக!
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா  இந்த ரமழானை அடையபெறக்கூடிய நற்பாக்கியத்தை எனக்கும் உங்களுக்கும் தந்தருள்வானாக! இந்த ரமழானில் அதிகம் அதிகம் அமல்செய்து அல்லாஹுடைய மன்னிப்பையும், அருளையும், அன்பையும் அடையபெறக்கூடிய உயர்ந்த நற்பாக்கியத்தை எனக்கும் உங்களுக்கும் தந்து தந்தருள்வானாக!
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
كُلُّ عَمَلِ ابْنِ آدَمَ له إلَّا الصَّوْمَ، فإنَّه لي وأنا أجْزِي به، ولَخُلُوفُ فَمِ الصَّائِمِ أطْيَبُ عِنْدَ اللَّهِ مِن رِيحِ المِسْكِ.
 
الراوي : أبو هريرة | المحدث : البخاري | المصدر : صحيح البخاري الصفحة أو الرقم : 5927 | خلاصة حكم المحدث : [صحيح] | أحاديث مشابهة | شرح حديث مشابه
 
குறிப்பு 2)
 
حَدَّثَنَا مُوسَى بْنُ دَاوُدَ، حَدَّثَنَا ابْنُ لَهِيعَةَ، عَنْ حُيَيِّ بْنِ عَبْدِ اللَّهِ، عَنْ أَبِي عَبْدِ الرَّحْمَنِ الْحُبُلِيِّ، عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو: أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " الصِّيَامُ وَالْقُرْآنُ يَشْفَعَانِ لِلْعَبْدِ يَوْمَ الْقِيَامَةِ، يَقُولُ الصِّيَامُ: أَيْ رَبِّ، مَنَعْتُهُ الطَّعَامَ وَالشَّهَوَاتِ بِالنَّهَارِ، فَشَفِّعْنِي فِيهِ، وَيَقُولُ الْقُرْآنُ: مَنَعْتُهُ النَّوْمَ بِاللَّيْلِ، فَشَفِّعْنِي فِيهِ "، قَالَ: «فَيُشَفَّعَانِ» (مسند أحمد مخرجا 6626)
 
குறிப்பு 3)
 
يا رسولَ اللَّهِ ! لم ارك تَصومُ شَهْرًا منَ الشُّهورِ ما تصومُ من شعبانَ ؟ ! قالَ : ذلِكَ شَهْرٌ يَغفُلُ النَّاسُ عنهُ بينَ رجبٍ ورمضانَ ، وَهوَ شَهْرٌ تُرفَعُ فيهِ الأعمالُ إلى ربِّ العالمينَ ، فأحبُّ أن يُرفَعَ عمَلي وأَنا صائمٌ الراوي : أسامة بن زيد | المحدث : الألباني | المصدر : صحيح النسائي الصفحة أو الرقم: 2356 | خلاصة حكم المحدث : حسن التخريج : أخرجه النسائي (2357) واللفظ له، وأحمد (21753)
 
குறிப்பு 4)
 
جَاءَ ثَلَاثَةُ رَهْطٍ إلى بُيُوتِ أزْوَاجِ النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم، يَسْأَلُونَ عن عِبَادَةِ النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم، فَلَمَّا أُخْبِرُوا كَأنَّهُمْ تَقَالُّوهَا، فَقالوا: وأَيْنَ نَحْنُ مِنَ النَّبيِّ صلَّى اللهُ عليه وسلَّم؟! قدْ غُفِرَ له ما تَقَدَّمَ مِن ذَنْبِهِ وما تَأَخَّرَ، قالَ أحَدُهُمْ: أمَّا أنَا فإنِّي أُصَلِّي اللَّيْلَ أبَدًا، وقالَ آخَرُ: أنَا أصُومُ الدَّهْرَ ولَا أُفْطِرُ، وقالَ آخَرُ: أنَا أعْتَزِلُ النِّسَاءَ فلا أتَزَوَّجُ أبَدًا، فَجَاءَ رَسولُ اللَّهِ صلَّى اللهُ عليه وسلَّم إليهِم، فَقالَ: أنْتُمُ الَّذِينَ قُلتُمْ كَذَا وكَذَا؟! أَمَا واللَّهِ إنِّي لَأَخْشَاكُمْ لِلَّهِ وأَتْقَاكُمْ له، لَكِنِّي أصُومُ وأُفْطِرُ، وأُصَلِّي وأَرْقُدُ، وأَتَزَوَّجُ النِّسَاءَ، فمَن رَغِبَ عن سُنَّتي فليسَ مِنِّي. الراوي : أنس بن مالك | المحدث : البخاري | المصدر : صحيح البخاري الصفحة أو الرقم: 5063 | خلاصة حكم المحدث : [صحيح]
 
குறிப்பு 5)
 
عَنِ النَّبيِّ صَلَّى اللَّهُ عليه وسلَّمَ فِيما رَوَى عَنِ اللهِ تَبَارَكَ وَتَعَالَى، أنَّهُ قالَ: يا عِبَادِي، إنِّي حَرَّمْتُ الظُّلْمَ علَى نَفْسِي، وَجَعَلْتُهُ بيْنَكُمْ مُحَرَّمًا، فلا تَظَالَمُوا، يا عِبَادِي، كُلُّكُمْ ضَالٌّ إلَّا مَن هَدَيْتُهُ، فَاسْتَهْدُونِي أَهْدِكُمْ، يا عِبَادِي، كُلُّكُمْ جَائِعٌ إلَّا مَن أَطْعَمْتُهُ، فَاسْتَطْعِمُونِي أُطْعِمْكُمْ، يا عِبَادِي، كُلُّكُمْ عَارٍ إلَّا مَن كَسَوْتُهُ، فَاسْتَكْسُونِي أَكْسُكُمْ، يا عِبَادِي، إنَّكُمْ تُخْطِئُونَ باللَّيْلِ وَالنَّهَارِ، وَأَنَا أَغْفِرُ الذُّنُوبَ جَمِيعًا، فَاسْتَغْفِرُونِي أَغْفِرْ لَكُمْ، يا عِبَادِي، إنَّكُمْ لَنْ تَبْلُغُوا ضَرِّي فَتَضُرُّونِي، وَلَنْ تَبْلُغُوا نَفْعِي فَتَنْفَعُونِي، يا عِبَادِي، لو أنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وإنْسَكُمْ وَجِنَّكُمْ، كَانُوا علَى أَتْقَى قَلْبِ رَجُلٍ وَاحِدٍ مِنكُمْ؛ ما زَادَ ذلكَ في مُلْكِي شيئًا، يا عِبَادِي، لوْ أنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وإنْسَكُمْ وَجِنَّكُمْ، كَانُوا علَى أَفْجَرِ قَلْبِ رَجُلٍ وَاحِدٍ؛ ما نَقَصَ ذلكَ مِن مُلْكِي شيئًا، يا عِبَادِي، لو أنَّ أَوَّلَكُمْ وَآخِرَكُمْ وإنْسَكُمْ وَجِنَّكُمْ، قَامُوا في صَعِيدٍ وَاحِدٍ فَسَأَلُونِي، فأعْطَيْتُ كُلَّ إنْسَانٍ مَسْأَلَتَهُ؛ ما نَقَصَ ذلكَ ممَّا عِندِي إلَّا كما يَنْقُصُ المِخْيَطُ إذَا أُدْخِلَ البَحْرَ، يا عِبَادِي، إنَّما هي أَعْمَالُكُمْ أُحْصِيهَا لَكُمْ، ثُمَّ أُوَفِّيكُمْ إيَّاهَا، فمَن وَجَدَ خَيْرًا فَلْيَحْمَدِ اللَّهَ، وَمَن وَجَدَ غيرَ ذلكَ فلا يَلُومَنَّ إلَّا نَفْسَهُ. وفي روايةٍ: إنِّي حَرَّمْتُ علَى نَفْسِي الظُّلْمَ وعلَى عِبَادِي، فلا تَظَالَمُوا. الراوي : أبو ذر الغفاري | المحدث : مسلم | المصدر : صحيح مسلم الصفحة أو الرقم: 2577 | خلاصة حكم المحدث : [صحيح]
 
குறிப்பு 6)
 
سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ في ظِلِّهِ، يَومَ لا ظِلَّ إلَّا ظِلُّهُ: الإمَامُ العَادِلُ، وشَابٌّ نَشَأَ في عِبَادَةِ رَبِّهِ، ورَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ في المَسَاجِدِ، ورَجُلَانِ تَحَابَّا في اللَّهِ اجْتَمعا عليه وتَفَرَّقَا عليه، ورَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وجَمَالٍ، فَقَالَ: إنِّي أخَافُ اللَّهَ، ورَجُلٌ تَصَدَّقَ، أخْفَى حتَّى لا تَعْلَمَ شِمَالُهُ ما تُنْفِقُ يَمِينُهُ، ورَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ. الراوي : أبو هريرة | المحدث : البخاري | المصدر : صحيح البخاري
 
الصفحة أو الرقم: 660 | خلاصة حكم المحدث : [صحيح] التخريج : أخرجه البخاري (660)، ومسلم (1031)
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/