HOME      Khutba      சான்றோரின் ரமழான் | Tamil Bayan - 776   
 

சான்றோரின் ரமழான் | Tamil Bayan - 776

           

சான்றோரின் ரமழான் | Tamil Bayan - 776


சான்றோரின் ரமழான்
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : சான்றோரின் ரமழான்
 
வரிசை : 776
 
இடம் : காந்தி நகர் மதுரை
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 17-03-2023 | 25-08-1444
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய
 
இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
மதிபிற்கும், கண்ணியத்திற்குறிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹுடைய தூதர்மீதும், அந்த தூதரின் பாசத்துக்குரிய குடும்பத்தார்மீதும் மற்றும், தோழர்கள்மீதும் ஸலவாத்தும், ஸலாமும் கூறியவனாக! உங்களுக்கும், எனக்கும் அல்லாஹுவின் பயத்தை, தக்வாவை நினைவூட்டியவனாக, நம்முடைய இம்மை, மறுமை வாழ்க்கைக்கு அல்லாஹ்விடத்தில் அவனுடைய அருளையும், அன்பையும், நேர்வழியையும் வேண்டியவனாக! இந்த ஜும்மாவுடைய உரையை ஆரம்ப்பம் செய்கிறேன்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நம்முடைய பாவங்களை மன்னிப்பானாக! அவனுடைய அருளுக்கும், அன்புக்கும் தகுதியான நல்ல மக்களில் என்னையும், உங்களையும் ஆக்கி அருள்புரிவனாக! வரக்கூடிய ரமழானை அல்லாஹுவை அதிகம் அதிகம் வணங்குகவதர்க்கும், குர்ஆனுடைய நேர்வழியை பெறுவதற்கும் நோன்புனுடைய உன்னத நோக்கமாகிய தக்வாவை நம்முடைய உள்ளத்தில் உறுதிப் படுத்துவதற்கும், நிலைப் படுதுவதர்க்கும், அதிகப்படுத்துவதற்க்கும் காரணமான ரமழானாக அல்லாஹு தஆலா ஆக்கி அருளவேண்டுமென்று அல்லாஹுவிடத்தில் துஆ செய்தவனாக! ஆரம்பம் செய்கிறேன்.
 
கண்ணியத்திற்குறிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! இப்படிதான் இதற்க்கு முன்னால் பல ரமழான்கள் நமக்கு வந்து சென்றன. இந்த ரமழானைக் கொண்டு என்ன அடையப்போகிறோம்?, இந்த ரமழான் எந்த நோக்கத்திற்காக நோன்பு வைப்பதும், இன்னபிற வணக்க வழிபாடுகளும், நமக்கு அல்லாஹ்வின் புறத்திலிருந்து மார்க்கமாக ஆக்கப்பட்டதோ, அந்த நோக்கதை சரியாகப் பெற்றுகொள்கிறோமா? எந்த அளவுக்கு  பெற்றுகொள்கிறோம் என்ற சுயப் பரிசொதனையை நாம் கண்டிப்பாக செய்து ஆகவேண்டும். 
 
கண்ணியத்திற்குறிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! நாம் அனைவருக்கும் எப்போதும் சிறந்த ஒரு முன் உதாரணம், ஒரு வழிகாட்டி நமக்கு கண்டிப்பாக தேவைப்படுகிறது. அந்த முன் வழிகாட்டியை, முன் உதாரணத்தை பார்க்கும் போதுதான் அவர்களை போன்று நாமும் நம்மை மாற்றிக் கொள்ளவேண்டும்.
 
அவர்களுடைய வழியில் செல்லவேண்டும் என்ற ஆர்வமும், ஆசையும் நமக்கு பிறக்கும். நாம் ஒரு வழிகாட்டியாக, முன் உதாரணமாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால் நம்முடைய வாழ்கை எந்த ஒரு சரியான திசையில் செல்ல வேண்டுமோ அந்த திசையில் செல்லாது.
 
கண்ணியத்திற்குறிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! எல்லா நல்லவர்களுக்கும் மிகப்பெரிய, மிக சிறந்த முன் உதாரணமாக, வழிகாட்டியாக, அனைவருக்கும் முன்னோடியாக அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை ஆக்கி இருக்கிறான்.
 
நம்முடைய வணக்க வழிபாடுகளுக்கு, நற்குணகங்களுக்கும், கொடுக்கல் வாங்கள் இன்னும் இந்த உலகதுடைய சிறிய, பெரிய அனைத்திற்க்கும் அவர்கள் தான், நமக்கு சிறந்த முன் உதாரணமாக திகழ்ந்து இருக்கிறார்கள்.
 
அன்பு சகோதர்களே! இந்த உலகத்திலே நாம் ஏன் அனுப்பபட்டோம் என்பதை முதலாவதாக சிந்தித்துப் பார்க்கவேண்டும். அல்லாஹுவை வணங்குவது, வணக்க வழிபாட்டில் நம்மை ஈடுபடுத்துவது, அதன் மூலமாக அல்லாஹுவின் பொருத்ததை, அன்பை அடையபோவது, அதன் மூலமாக சொர்க்க வாழ்கை கிடைப்பது இது நம்முடைய வாழ்க்கையின் பிரதான நோக்கமாக எப்போதும் நம்முடைய கண்ணுக்கு முன்னால் நம்முடைய நினைவில் இருக்கக் கூடிய மிக முக்கியமான ஒன்றாகும்.
 
وَمَا خَلَقْتُ الْجِنَّ وَالْإِنْسَ إِلَّا لِيَعْبُدُونِ
 
ஜின்களையும் மனிதர்களையும் - அவர்கள் என்னை வணங்குவதற்கே தவிர - நான் படைக்கவில்லை. (அல்குர்ஆன் 51 : 56)
 
அல்லாஹ்வை வணங்கவேண்டும், வணக்க வழிபாட்டில் திளைக்க வேண்டும், வணக்க வழிபாட்டை அதிகப் படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். ஒரு முஸ்லிம் ஒரு வணக்கத்திலிருந்து இன்னொரு வணக்கத்தின்பால் செல்வானே தவிர இத்தோடு என்னுடைய இறைவணக்கம் முடிந்து விட்டது என்று இறைவணக்கத்தை முடித்து கொள்பவனாக இருக்க மாட்டான். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்: 
 
عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ، يَوْمَ لاَ ظِلَّ إِلَّا ظِلُّهُ وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ الله
 
ஏழு வகையான மக்கள் நாளை அல்லாஹுடைய நிழலில் இருப்பார்கள் அந்த நாளில் வேறு எந்த நிழலும் இருக்காது. அவர்களில் ஒரு வகையினர் இவர்கள் அல்லாஹுடைய வணக்க வழிபாட்டில் வளர்ந்த வாலிபர்
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 660, 1423, குறிப்பு (1)  
 
அல்லாஹ்விற்கு மிக பிரியமானது என்ன? இந்த பூமியில் அல்லாஹ்வை வணங்கபடுவது, அல்லாஹ்விற்கு இந்த பூமியில் மிக வெறுப்பானது எது அல்லாஹ்விற்கு மாறுசெய்வதாகும். அல்லாஹ் தஆலா நமக்கு உணவு அளிக்கிறான், நம்முடைய தேவைகளை நிறைவேற்றுகிறான், அதிகமான அருளைகளை நம்மீது பொழிகிறான்.
 
وَمَا بِكُمْ مِنْ نِعْمَةٍ فَمِنَ اللَّهِ
 
மேலும், உங்களிடம் உள்ள அருட்கொடைகள் எல்லாம் அல்லாஹ்விடம் இருந்துதான் (உங்களுக்கு) கிடைத்தன. (அல்குர்ஆன் 16 : 53)
 
இந்த அருள்கொடைகளை எல்லாம் அல்லாஹ் ஏன்? நமக்கு கொடுக்கிறான் அது அல்லாஹ்வை வணங்குவதற்க்காகதான். நம்முடைய வாழ்கையை வணக்கத்திற்கு ஏற்ப்ப மாற்றிக்கொள்ள வேண்டுமே தவிர. இன்று நாம் செய்கிறோம் அல்லவா? நம்முடைய வாழ்க்கைக்கு ஏற்பப நம்முடைய வணக்கத்தை மாற்றிக்கொண்டோம். 
 
இஸ்லாம் நமக்கு ஏன் கொடுக்கப்பட்டது, இந்த மார்க்கம் ஏன் நமக்கு கொடுக்கப்பட்டது அல்லாஹுடைய வணக்கத்தை, பொருத்ததை, நேசத்தை, மார்க்கத்தை அடிப்படையாக வைத்து, அதற்க்கேற்ப்ப நம்முடைய வாழ்க்கையை அலங்கரிப்பது, நம்முடைய வியாபாரம், தொழில், நம்முடைய குடும்ப வாழ்க்கையை அமைப்பது. 
 
இப்படி அணைத்து தேவைகளையும் நம்முடைய மார்க்கதில் கற்றுக்கொடுப்பதைப் போன்று அமைத்துக் கொள்வது நம்முடைய மார்க்கத்திற்கு ஏற்பப வணக்க வழிபாட்டை நோக்கமாக அடிபடையாக வைத்து ஆனால், நம்முடைய நிலைமை எவ்வளவு பரிதாபமாக ஆகிவிட்டது எந்த சமூதாயத்தை பார்த்து அல்லாஹு தாஆலா இவ்வாறு கூறினானோ:
 
رِجَالٌ لَا تُلْهِيهِمْ تِجَارَةٌ وَلَا بَيْعٌ عَنْ ذِكْرِ اللَّهِ وَإِقَامِ الصَّلَاةِ وَإِيتَاءِ الزَّكَاةِ يَخَافُونَ يَوْمًا تَتَقَلَّبُ فِيهِ الْقُلُوبُ وَالْأَبْصَارُ
 
(இறை இல்லங்களில் தொழுகின்ற) ஆண்கள் - வர்த்தகமோ விற்பனையோ அல்லாஹ்வின் நினைவை விட்டும் தொழுகையை நிலை நிறுத்துவதை விட்டும் ஸகாத் கொடுப்பதை விட்டும் (இன்னும் வணக்க வழிபாடுகளை அல்லாஹ்விற்கு மட்டும் தூய்மையாக செய்வதை விட்டும்) அவர்களை திசை திருப்பி விடாது. அவர்கள் ஒரு நாளை பயப்படுவார்கள். அதில் (-அந்நாளில்) உள்ளங்களும் பார்வைகளும் தடுமாறும். (அபடிபட்ட அந்த சமூதாயத்தின் நிலையை பாருங்கள்) (அல்குர்ஆன் 24 : 37)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا لَا تُلْهِكُمْ أَمْوَالُكُمْ وَلَا أَوْلَادُكُمْ عَنْ ذِكْرِ اللَّهِ وَمَنْ يَفْعَلْ ذَلِكَ فَأُولَئِكَ هُمُ الْخَاسِرُونَ
 
நம்பிக்கையாளர்களே! உங்கள் செல்வங்களும் உங்கள் பிள்ளைகளும் உங்களை அல்லாஹ்வின் நினைவை விட்டும் திருப்பி (உலகக் காரியங்களில் ஈடுபடுத்தி) விடவேண்டாம். ஆக, அத்தகையவர்கள்தான் நஷ்டவாளிகள். (அல்குர்ஆன் 63 : 09)
 
இன்று வணக்க வழிபாடுகள் நம்முடைய உலக தேவைகளுக்காக அலங்காரம், முற்றிலுமாக மறு சீரமைக்கபட்டு, சடங்குகளைப் போன்று மாறிவிட்டன. நம்முடைய அடிப்படை இந்த உலக வாழ்க்கையை செளிப்பாக்குவது, இதை விசாலப்படுதுவது, இதிலே அதிகப்படியான சுகத்தை, செல்வத்தை தேடுவது, இதுதான் வாழ்க்கையின் அடிப்படை குறிக்கோளாக, நோக்கமாக ஆக்கபட்டுவிட்டது, இதன் காரணத்தால் நம்முடைய மார்க்கம் ஒரு சின்ன அடையாளமாக ஒட்டிக்கொண்டு இருக்கிறது. 
 
அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா இத்தகைய மறதியாளர்களாகிய நம்மை நம்முடைய மறதியிலிருந்து மீட்டு எடுப்பதற்காக அல்லாஹுடைய அன்பின் பக்கம் நம்மை கொண்டு வருவதற்காக அல்லாஹுடைய வணக்கத்தை நினைவு படுத்துவதற்காக கொடுக்ககூடிய உயர்ந்த சந்தர்ப்பங்களில் ஓன்றுதான் நாம் இப்போது சில நாட்களில் சந்திக்க இருக்கிற ரமழானுடைய மாதமாகும்.
 
இப்தார் நிகழ்ச்சிக்காவோ, சஹரின் விருந்துக்காகவோ கொடுக்கப்பட்ட மாதம் இல்லை, நம்முடைய வாழ்கை வசதிகளை தேடி பெருக்கிகொள்வதர்க்காக அல்ல அல்லது, புதிய ஆடைகளை தேடி அணிந்துகொண்டு நம்மை அலங்கார படுத்துவதற்காக அல்ல, நம்முடைய உடலுக்காக அல்ல மாறாக, நம்முடைய ஆன்மாவுக்காக கொடுக்கபட்டது என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: 
 
التَّقْوَى هاهُنا ويُشِيرُ إلى صَدْرِهِ ثَلاثَ مَرَّاتٍ
 
தன்னுடைய உள்ளதை சுட்டிக்காட்டி சொன்னார்கள் இங்குதான் தக்வா இருக்கிறது என்று மூன்று முறை சொன்னார்கள் இந்த தக்வாவுக்கதான் ரமழான் நோன்பே நம் மீது கடமையாக்கப்பட்டது. 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2564 குறிப்பு (2)
 
அல்லாஹு தாஆலா பல வணக்கவழிபாடுகளை நம் மீது கடமையாக்கிறான் குறிப்பிட்ட சில வணக்க வழிபாடுகளுக்கு அதனுடைய மிக உயர்ந்த இலட்சியத்தை நமக்கு வழியுறுத்தி அல்குர் ஆனில் சொல்லிகாட்டுகிறான் அப்படி சொல்லிகாட்டப்பட்ட இலட்சியங்கள், உணர்த்தப்பட்ட நோக்கங்கள் வரையறுக்கப்பட்ட அடிப்படை, நமக்கு உணர்த்தப்பட்ட வணக்க வழிபாடுகளில் ஒன்றுதான் இந்த ரமழானுடைய நோன்பாகும். 
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُتِبَ عَلَيْكُمُ الصِّيَامُ كَمَا كُتِبَ عَلَى الَّذِينَ مِنْ قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ
 
நம்பிக்கையாளர்களே! நீங்கள் இறையச்சமுள்ளவர்களாக ஆகுவதற்காக உங்கள் மீது நோன்பு கடமையாக்கப்பட்டது உங்களுக்கு முன்னிருந்தவர்கள் மீது கடமையாக்கப்பட்டது போன்று. (அல்குர்ஆன் 2 : 183)
 
இமாம் தபரி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்: குர் ஆனில் எந்த இடங்களில் لعلكم என்று அல்லாஹு தஆலா பயன்படுத்துகிறானோ அதனுடைய பொருள் لأجل காரணத்தை அல்லாஹ் விவரிக்கிறான் அவனை நீங்கள் பயந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அல்லாஹ் தடுத்த பாவத்தை விட்டு நீங்கள் விளங்கி கொள்ள வேண்டும் என்பதற்காக அல்லாஹ் உங்கள் மீது கடமையாக்கிய ஃபர்லுகளை கட்டாய கடமைகளை நீங்கள் நிறைவேற்றவேண்டும் என்பதற்காக.
 
ரமழானுடைய நோக்கம் நம்முடைய ஆண்மாவை பரிசுத்த படுத்துவது, ரமழானில் நம்முடைய உள்ளத்தில் ஈமானை உறுதி படுத்துவது ஈமானின் அடிபடை குணமாகிய தக்வாவை உறுதிப் படுத்துவது.
 
யார் இந்த ரமழானை வணக்க வழிபாடுகளைக் கொண்டு செளிப்பாரக்கி கொண்டார்களோ, இந்த ரமழானுடைய அதிகமான நேரங்களை, கலங்களை நோன்பும் அது போன்று குர் ஆன் ஓதுதல் தர்மங்கள் செய்வது இது போன்ற வணக்க வழிபாடுகளால் யார் ரமழானை நிரப்பிக்கொண்டாரோ அன்புகூறியவர்களே! கண்டிப்பாக அவர் இந்த தக்வாவை அடைய பெறுவார் அல்லாஹ் அவருக்கு தக்வாவை கொடுப்பான், பாவமன்னிப்பை கொடுபான். அவரை விஷெசமாக உயர்ந்த சிறந்த நல்லடியார்களில் ரமழானை பயன்படுத்தியக் கொண்ட நல்லவர்களில் ஆக்கிக்கொள்வான்.
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை எடுத்துக் கொள்ளுங்கள் அவர்கள் இந்த ரமழானை எப்படி பயன் படுத்தினார்கள். ரமழானை எதிர்பார்த்து ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இருந்தார்கள் ரமழான் வருகிறது என்ற ஆர்வத்துடன் இருந்தார்கள்.
 
ஆகவேதான் ரமழான் வருவதற்கு முன்பே ஷாபானுடைய பிறையை கணக்கிட ஆரம்பித்து விடுவார்கள் இப்போது ஷாபானுடைய பிறை என்ன என்று அப்படியே பார்த்துகொண்டு வருவார்கள் ரமழானுடைய பிறையை பார்க்க வேண்டும் என்பதற்காக அவ்வளவு ஆர்வத்தோடு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறையை எதிர்ப் பார்த்துக்கொண்டு இருப்பார்கள். ஹதீஸில் வருகிறது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள்.
 
كانَ رسولُ اللَّهِ صلَّى اللَّهُ عليْهِ وسلَّمَ يتحفَّظُ من شعبانَ ما لا يتحفَّظُ من غيرِهِ
 
ரமழானுக்காக வேண்டி அந்த ரமழானுடைய பிறையை எதிர் பார்த்து அவர்கள் பிறையை கண்காணித்து கொண்டே இருப்பார்கள்.
 
அறிவிப்பாளர் : ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : அபூ தாவூத் எண் : 2325
 
ஷாபானுடைய இந்த பிறையை அவர்கள் பார்த்து கொண்டே அது மட்டுமா ரமழானுக்கு முன்பே ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தங்களது தோழர்களுக்கு உணர்த்த ஆரம்பித்து விடுவார்கள்.
 
ஷாபானுடைய மாதத்தில் தானும் நோன்பு வைத்து தங்களது தோழர்களுக்கு நோன்புடைய ஆர்வம் மூட்டுவார்கள் சஹாபாக்கள் கேட்டார்கள் அல்லாஹுடைய தூதரே இந்த ஷாபானுடைய மாதத்தில் இவ்வளவு அதிகமாக நோன்பு வைக்கிறீர்களே அபோது கூறினார்கள்:
 
يا رسولَ اللَّهِ ! لم ارك تَصومُ شَهْرًا منَ الشُّهورِ ما تصومُ من شعبانَ ؟ ! قالَ : ذلِكَ شَهْرٌ يَغفُلُ النَّاسُ عنهُ بينَ رجبٍ ورمضانَ وَهوَ شَهْرٌ تُرفَعُ فيهِ الأعمالُ إلى ربِّ العالمينَ ، فأحبُّ أن يُرفَعَ عمَلي وأَنا صائمٌ
 
இந்த மதத்தில் மக்கள் மறந்து விடுகிறார்கள், அல்லாஹ்விடத்தில் அவனுடைய அமல் உயர்த்த படுகிறது, என்னுடைய அமல் உயர்த்தப்படவேண்டும் நான் நோன்பாளியாக இருக்கும்போது என்று ஆசைபடுகிறேன். என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் விளக்கம் சொன்னார்கள்.
 
அறிவிப்பாளர் : உஸாமா இப்னு ஜெய்து ரழியல்லாஹு அன்ஹு, நூல் : நஸாயி, எண் : 2356
 
அறிஞசர்கள் சொல்கிறார்கள் இதுவும் ரமழானை வரவேற்ப்பதர்க்காகவும், ரமழானுடைய நோன்பு இலகுவாகுவதற்க்காகவும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் செய்த முன் ஏற்பாடாகும்.
 
நம்மில் பலரை பார்கிறோம் ஒரு ஆண்டிலே நபிலான எந்த நோன்பையும் நோற்று இருக்க மாட்டார்கள் நோன்பின் பயிற்சி இருந்தால்  ரமழானுடைய முதல் ஆறு நோன்புகள் மிக சிரமமாக இருக்கும் அவர்களுக்கு யார் மற்ற நாட்களில் நபிலான நோன்புகளை வைத்து பழக்கமாக இருக்கிறார்களோ அவர்களுக்கு ரமழானின் ஆரம்ப நோன்பாக இருக்கட்டும், நடுவாக இருக்கட்டும், இறுதியாக இருக்கட்டும் இலகுவாக அவர்களுக்கு இருக்கும். ஷாபானுடைய இறுதி நாட்களில் சந்தேகதிற்குரிய நாளை சொன்னார்கள்:
 
حَدَّثَنَا آدَمُ، حَدَّثَنَا شُعْبَةُ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ زِيَادٍ، قَالَ: سَمِعْتُ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ، يَقُولُ: قَالَ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: أَوْ قَالَ: قَالَ أَبُو القَاسِمِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «صُومُوا لِرُؤْيَتِهِ وَأَفْطِرُوا لِرُؤْيَتِهِ، فَإِنْ غُبِّيَ عَلَيْكُمْ فَأَكْمِلُوا عِدَّةَ شَعْبَانَ ثَلاَثِينَ
 
நீங்கள் பிறையை பார்க்கிற வரை நோன்பை ஆரபிக்காதீர் பிறையை பார்க்கிற வரை நோன்பை விடாதீர்கள் எனவே மக்கள் பிறையை பாக்கும்படி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ஏவினார்களே இந்த ரமழானை வரவேற்பதில் அதில் வணக்க வழிபாடுகள் செய்வதில் எந்த அளவு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஆர்வமுள்ளவர்களாக இருந்தார்கள் என்பதை நாம் பார்த்து கொள்ளலாம் பிறகு ரமழான் வந்து விட்டால் அதில் என்ன என்ன வணக்க வழிபாடுகள் இருக்கிறது,
 
ஒன்று நோன்பு நோற்பது இதை கண்டிப்பாக எல்லோரும் செய்யதான் போகிறோம் ஆனால், இந்த நோன்பை எப்படி நோன்பு வைத்து கொண்ட நிலையில் என்ன அமல்களை செய்வது நம்மை நாம் எப்படி ஈடுபடுத்துவது அதற்க்கு பிறகு நோன்புனுடைய இரவு காலங்கள் நோன்பின் பகல் காலங்கள் இங்கே தான் நாம் வேறுபடுகிறோம், நாம் வித்தியாசப்படுகிறோம் நம்முடைய சிறந்த சான்றோர்களிலிருந்து அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நம்முடைய மார்க்கத்தில் நமக்கு சிறந்த வழிகாட்டியாக சஹாபாக்களையும், தாபியீன்கலையும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறையை பின்பற்றிய நல்லோர்களை நமக்கு வைத்து இருக்குகிறான் ஆகவேதான்.
 
وَالسَّابِقُونَ الْأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالْأَنْصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُمْ بِإِحْسَانٍ رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ
 
(இஸ்லாமை ஏற்பதில்) முதலாமவர்களாகவும் முந்தியவர்களாகவும் இருந்த முஹாஜிர்கள்; இன்னும், அன்ஸாரிகள்; இன்னும், இவர்க(ளுக்கு பின்னர் வந்து இவர்க)ளை நன்மையில் பின்பற்றிய(மற்ற)வர்க(ள் ஆகிய இவர்க)ளைப் பற்றி அல்லாஹ் திருப்தியடைந்தான். இன்னும், இவர்களும் அவனைப் பற்றி திருப்தியடைந்தனர். இன்னும், சொர்க்கங்களை இவர்களுக்கு (அவன்) தயார் செய்து வைத்திருக்கிறான். (அல்குர்ஆன் 9 : 100)
 
எந்த நபியின் மீது குர்ஆன் இறக்கபட்டதோ யார் இந்த அல்லாஹுடைய வார்த்தையை உள்ளத்தில் சுமர்ந்தார்களோ அந்த ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நோன்பை கண்ணியபடுத்தும் விதமாக, அந்த நோன்பிலே தக்வாவை கொண்டு வரும் விதமாக நோன்பிலே அல்லாஹுடைய அச்சத்தை உள்ளத்தில் உறுதிபடுத்தும் விதமாக, குர்ஆனோடு தொடர்புடையவர்களாக, அதிகம் தொடர்புடையவர்களாக இருந்தார்கள்.
 
தானும் குர்ஆனை ஓதுவார்கள் அல்லாஹு தஆலா விஷெசமாக நம்முடைய ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்காக ஜிப்ரீலை அலைஹிஸ்ஸலாம் இறக்கி அவர்கள் குர் ஆனை ஓத ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அதை கேட்ட பிறகு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜிப்ரீக்கு அலைஹிஸ்ஸலாம் மனப்பாடமாக ஒதிகாட்ட ஜிப்ரீல்  அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அதை கேட்டு சரி செய்து விட்டு பிறகு வான் உலகத்திற்கு செல்லுவார்கள்.
 
இப்படிபட்ட சிறந்த ஏற்ப்பாட்டை அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா ரமழானுடைய எல்லா நாட்களிலும் அது பகலோ அல்லது இரவோ ரமழானுடைய எல்லா காலங்களிலும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு ஏற்படுத்தி கொடுதிருந்தார்.
 
كانَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ أجْوَدَ النَّاسِ، وكانَ أجوَدُ ما يَكونُ في رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، وكانَ جِبْرِيلُ يَلْقَاهُ في كُلِّ لَيْلَةٍ مِن رَمَضَانَ، فيُدَارِسُهُ القُرْآنَ، فَلَرَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ أجْوَدُ بالخَيْرِ مِنَ الرِّيحِ المُرْسَلَةِ. أبو هُرَيْرَةَ، وفَاطِمَةُ رَضِيَ اللَّهُ عنْهمَا، عَنِ النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ: أنَّ جِبْرِيلَ كانَ يُعَارِضُهُ القُرْآنَ
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜிப்ரீக்கு (அலைஹிஸ்ஸலாம்) குர் ஆனை சமர்ப்பணம் செய்யகூடிய, ஓதி காட்டி கேட்க்க கூடிய, கேட்டு ஓதி காட்டகூடிய, அந்த ஒரு வழக்க முள்ளவர்களாக இருந்தார்கள்.
 
அறிவிப்பாளர் : ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 3220
 
இந்த ஹதீஸ் நம்மை கடந்து செல்கிறது, எத்தனை முறை கடந்து சென்று இருக்கும், எத்தனை முறை நாம் இதை கேட்டு இருப்போம். ஆனால், ரமழானோடு நம்முடைய குர்ஆன் ஓதுதலை ஒப்பிட்டு பார்த்தால் நம்முடைய நோன்பு வணக்கதை இந்த குர்ஆனை கொண்டு நாம் கண்ணியப்படுதிநோமா? ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் குர்ஆனை ஜிப்ரீலுக்கு (அலைஹிஸ்ஸலாம்) ஒதிகாட்டியது மட்டும் அல்ல பொதுவாகவே ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய இரவு வழிபாடு என்பது சூரா முஸ்ஸமில் சொல்லுகிறான்.
 
يَاأَيُّهَا الْمُزَّمِّلُ  قُمِ اللَّيْلَ إِلَّا قَلِيلًا  نِصْفَهُ أَوِ انْقُصْ مِنْهُ قَلِيلًا  أَوْ زِدْ عَلَيْهِ وَرَتِّلِ الْقُرْآنَ تَرْتِيلًا
 
போர்வை போர்த்தியவரே!, (வணக்க வழிபாட்டுக்காக) இரவில் எழுந்து தொழுவீராக, (இரவில்) குறைந்த நேரத்தைத் தவிர! (அந்த குறைந்த நேரத்தில் ஓய்வெடுப்பீராக!), அதன் (-இரவின்) பாதியில் எழுந்து தொழுவீராக! அல்லது, அதில் கொஞ்சம் குறைப்பீராக! (-இரவின் மூன்றில் ஒரு பகுதி வணங்குவீராக!), அல்லது, அதற்கு மேல் அதிகப்படுத்துவீராக! (இரவில் மூன்றில் இரு பகுதி வணங்குவீராக!) இன்னும், (தொழுகையில்) குர்ஆனை நிறுத்தி நிதானமாக ஓதுவீராக! (அல்குர்ஆன் 73 : 1, 2 , 3 ,4)
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மிகவும் உடல் சோர்வு உற்றவர்களாக இருந்தால் குறைந்தபட்சம் இரவில் மூன்றில் ஒரு பகுதியை இரவு வணக்கத்தில் கழிப்பார்கள். இன்னும் கொஞ்சம் ஆரோக்கியமாக இருந்தால் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அதுக்கு அடுத்த கட்டமாக இரவின் பாதியை வணக்க வழிபாட்டிலே கழிப்பார்கள்.
 
இன்னும் உற்சாகமாக இருந்தால் அதுதான் அதிகமான காலம் இரவில் மூன்றில் இரு பகுதிகளில் வணக்க வழிபாட்டிலே கழிப்பார்கள் பிறகு சகர் நேரத்தை எதிர்பார்த்து கொண்ட்டிருந்து இஸ்திக்ஃபார் அல்லாஹ்விடத்தில் பாவமன்னிப்பு கேட்பதில் ஈடுபடுவர்கள்.
 
وَبِالْأَسْحَارِ هُمْ يَسْتَغْفِرُونَ
 
இன்னும், (நீண்ட நேரம் இரவில் தொழுது விட்டு) அதிகாலையில் அவர்கள் (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புத் தேடு(வதில் ஈடுபடு)வார்கள். (அல்குர்ஆன் 53 : 18)
 
இந்த ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய அமல்தான் சஹாபாக்களுடைய அமலாக இருந்தது நபியை பார்த்தார்கள் அப்படியே நபியைப் போன்று தன்னுடைய வணக்க வழிபாட்டுகளை மற்றிகொண்டார்கள் ஆகவேதான் சஹாபாக்களை அல்குர் ஆனில் போற்றும்போது:,
 
تَرَاهُمْ رُكَّعًا سُجَّدًا يَبْتَغُونَ فَضْلًا مِنَ اللَّهِ وَرِضْوَانًا
 
(தொழுகையில் குனிந்து) ருகூஃ செய்தவர்களாக; (சிரம் பணிந்து) சுஜூது செய்தவர்களாக அவர்களை நீர் காண்பீர். அவர்கள் அல்லாஹ்வின் அருளையும் பொருத்தத்தையும் விரும்புகிறார்கள். (அல்குர்ஆன் 48 : 29)
 
وَالَّذِينَ يَبِيتُونَ لِرَبِّهِمْ سُجَّدًا وَقِيَامًا
 
இன்னும், அவர்கள் தங்கள் இறைவனுக்காக (தொழுகையில்) சிரம் பணிந்தவர்களாகவும் நின்றவர்களாகவும் இரவு கழிப்பார்கள். (அல்குர்ஆன் 25: 64)
 
இந்த ரமழானுடைய மாதத்தில் குர்ஆனை தொழுகையில் ஓதுவது பிறகு தொழுகைக்கு வெளிலையும் ஓதுவது இந்த குர்ஆன் நமக்கு நேர்வழிக்காக, இறையச்சத்திற்காக, ஈமானுக்காக, நமது மறுமை நம்ம்பிக்கையை ஆழப்படுத்துவதற்காக, அதிகப் படுத்துவதற்காக இறக்கப்பட்ட வேதமாகும் .
 
இங்கே ஒரு பெரிய கைசேதம் என்ன வென்றால்? பலர் குர்ஆனை ஓதுவார்கள் ஆனால் அதனுடைய அர்த்தத்தை தெரியாமல் இருப்பார்கள் ஓதுதலும், சிந்தித்து ஓதுதலும் இரண்டும் வேறு வேறு அமல்களாக ஆகிவிட்டன.
 
சிலர் குர்ஆனை ஓதுவார்கள் ஆனால் குர்ஆனுடைய கருத்துகளை சிந்திக்க மாட்டார்கள் அதனுடைய நேர்வழியிலிருந்து பலன் பெரமாட்டர்கள் சிலர் குர்ஆனுடைய சில மொழிபெயர்ப்புகளை மட்டும் படிப்பைதக்கொண்டு நிறுத்தி விடுவார்கள் அந்த குர்ஆனுடைய வாக்கியங்களை ஓதமாட்டர்கள்.
 
குர்ஆன் என்பது அந்த அரபி வாக்கியத்திற்கும் அதனுள் இருக்ககூடிய கருத்துக்கும் சேர்ந்த ஒரு பெயரே தவிர பொருள் மட்டும் குர்ஆன் அல்ல மாறாக வாக்கியம் மட்டும் குர்ஆன் அல்ல வாக்கியமும் பொருளும் சேர்ந்து குர்ஆனுடைய அந்த வாக்கியத்தையும்,
 
بِلِسَانٍ عَرَبِيٍّ مُبِينٍ
 
தெளிவான அரபி மொழியில் (இது இறக்கப்பட்டது). (அல்குர்ஆன் 26: 195)
 
இந்த குர் ஆனையும் இந்த குர் ஆனின் மொழியையும் அல்லாஹ் புகள்கிறான் அல்லவா 
 
وَكَذَلِكَ أَنْزَلْنَاهُ حُكْمًا عَرَبِيًّا
 
(நபியே!) இவ்வாறுதான் நாம் இ(ந்த மார்க்கத்)தை (தெளிவான) சட்டமாக அரபி மொழியில் இறக்கினோம். 
 
அந்த குர்ஆனை அரபி மொழியில் ஓத வேண்டும் அதனுடைய பொருளை சிந்திப்பதோடு 
 
أَفَلَا يَتَدَبَّرُونَ الْقُرْآنَ أَمْ عَلَى قُلُوبٍ أَقْفَالُهَا
 
ஆக, அவர்கள் குர்ஆனை ஆழ்ந்து சிந்தித்து ஆராய வேண்டாமா? அவர்களது உள்ளங்கள் மீது பூட்டுகள் போடப்பட்டுள்ளனவா?
 
இது மட்டுமா எத்தனை இடத்திலே சிந்தியுன்கள்! இந்த குர்ஆனை ஆய்வு செய்யுங்கள் புரியக்கூடிய, சிந்திக்கக்கூடிய, அறிவுடைய மக்களுக்கு என்று அல்லாஹு தஆலா குர்ஆனை சிந்திப்பதின் பக்கம் அதனுடைய நேர்வழியிலிருந்து அதனுடைய பலன் பெருவதின் பக்கம் அழைக்கிறான்.
 
ஆனால், இன்று நம்முடைய கைசேதம் என்ன? அரபி மொழியை படிக்காததால் அது தொழுகையில் ஓதபடுவதரற்க்காகவும், குர்ஆனுடைய ஹதீசுடைய, துவாக்களுடைய வாக்கியங்களை மட்டுமே நாம் நிறுத்திக்கொண்டோம், அந்த அரபி மொழியிலிருந்து தூரமான ஒரு கைசேதமான நிலையின் காரணமாக இன்று நம்மிலே பலருக்கு குர்ஆன் ஓதக்கூடிய ஆர்வம் ஏற்படுவது இல்லை ஒன்றை நீங்கள் படிக்கிறீர்கள், வாசிக்கிரீர்கள் அதை நீங்கள் புரிய வில்லை என்றாலோ,
 
அதனுடைய கருத்து உங்களுடைய உள்ளத்தில் தாக்கத்தை ஏற்படுத்த வில்லையென்றால் ஒன்றை ஆர்வத்தோடு, ஆசையோடு பார்கிறீர்கள், அதை படிக்கிறீர்கள் ஆனால் அதன் மூலமாக உங்களுடைய உள்ளத்தில் இறை வேதத்தை ஓதுகிறோம் அந்த இன்பத்தை தவிர வேறு உணர்வுகள் பிறக்கவில்லை என்றால் எப்படி திரும்ப திரும்ப அதை ஓத வேண்டும், படிக்க வேண்டும், புரட்ட வேண்டும்  என்ற ஆசை ஏற்படும் இன்று குர் ஆனிலிருந்து ஏன் தூரமானோம்!  தூரமாக ஒதிக்கி வைத்திருக்கிறோம்! இப்படி ஒரு நிலை நமக்கு வந்து விடுமா என்று பயப்பிட வேண்டும் நாளை மருமையில் சில மக்களுக்கு எதிராக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் வாதிடுவார்கள் 
 
وَقَالَ الرَّسُولُ يَارَبِّ إِنَّ قَوْمِي اتَّخَذُوا هَذَا الْقُرْآنَ مَهْجُورًا
 
இன்னும், (மறுமையில் நமது) தூதர் கூறுவார்: “என் இறைவா! நிச்சயமாக எனது மக்கள் இந்த குர்ஆனை புறக்கணிக்கப்பட்ட ஒரு பொருளாக எடுத்துக்கொண்டனர்.” (அல்குர்ஆன் 25: 30)
 
நாளை மறுமையில் அல்லாஹ்விடத்தில் மனிதர்களுக்காக சாதகமான சிபாரிசாகவும் ஆதரனமாகவும் இன்னொரு பக்கமும் சில மனிதர்களுக்கு எதிரான பாதகமான ஆதாரமான சாட்சியாக இந்த குர் ஆன் இருக்கும். ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
والْقُرْآنُ حُجَّةٌ لَكَ أو عليك 
 
இந்த குர்ஆன் சாதகமாக சாட்சி சொல்லும், அல்லது உனக்கு எதிராக ஆதாரமாக அமையும் என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நமக்கு எச்சரிக்கை செய்தார்களே! இந்த குர் ஆனோடு நம்முடைய தொடர்பு எப்படி இருக்கிறது.
 
அறிவிப்பாளர் : அபூ மாலிக் அல்அஷ்அரி ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 223, குறிப்பு (3
 
நம்முடைய முன்னோர்கள் இந்த குர்னோடு அவர்களுடைய தொடர்ப்பை எடுத்து பாருங்கள் ஸுஃப்யான் அஸ்சவ்ரி  ரஹிமஹுல்லாஹ் அவர்களை பற்றி வருகிறது ரமழான் மாதம் வந்து விட்டால் மற்ற நபிலான வணக்க வழிபாடுகள் ஹதீஸ்களை படிப்பது, ஆராய்ச்சி செய்வது, போதிப்பது இப்படி அனைத்தையும் விட்டு விட்டு குர்ஆனை ஓதுவதை முழுமையாக ஈடுபட்டு விடுவார்கள்.
 
ஏன் அந்த குர்ஆனை ஓத ஓத தான் இங்கே ஓதுதல் என்பது அதை புரிவதோடு, சிந்திப்பதோடு அல்லாஹ் என்னை நோக்கி பேசுகிறான் இப்னு மஸ்வூது ரழியல்லாஹு அன்ஹு சொல்கிறார்கள் அல்லவா! அல்லாஹ் இவ்வாறு கூறினால் ஈமான் கொண்டவர்களே என்று கூறப்பட்டால் அந்த அழைப்பை கேட்டு விட்டால் முஃமினா அடியனே உன்னுடைய சேவியை அப்படியே கொடுத்து விடு அல்லாஹ் சொல்வதை கவனமாக கேளு என்று அந்த நிலையில் நாம் குர்ஆனை ஓத வேண்டும்.
 
ஸுஃப்யான் அஸ்சவ்ரி  ரஹிமஹுல்லாஹ் அவர்களுடைய வரலாற்றில் பதியப்படுகிறது ரமழானுடைய மாதம் வந்து விட்டால் எல்லா வணக்க வழிபாடுகளையும் விட்டு விட்டு அவர்கள் குர் ஆன் ஓதுவதில் ஈடுபட்டு விடுவார்கள்.
 
இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் முகம்மது இப்னு இஸ்மாயில் அவர்களை பற்றி வாழ்கை குறிப்பிலே எழுதப்படுகிறது ரமழானின் ஒவ்வொரு பகலிலும் ஒரு முறை குர் ஆனை முழுமையாக ஓதுவார்கள் அதற்க்கு, பிறகு தராவீஹ் தொழுகையில் மூன்று நாள் தராவீஹ் தொழுகைக்கு ஒருகுர் ஆன் ஓதி முடித்து விடுவார்கள்.
 
ஜெய்து இப்னு சுபைர் ரஹ்மத்துல்லாஹி அலைஹி தாபியீங்களில் முக்கியமான ஒருவர் ஹதீஸ் கலை வல்லுநர் இன்னும் குர்ஆன் விரிவுரையாளர் அவர்கள் ரமழானின் ஒவ்வொரு இரண்டு இரவுகளில் குர்ஆனை முடிக்க கூடியவர்களாக இருந்தார்கள்.
 
வலீது இப்னு அப்துல் மலிக் மிக பெரிய உமவியா குடும்பத்தை சேர்ந்த மன்னர் ஆவார்கள். அவர்கள் அவ்வளவு ஆட்சி பொறுப்புக்கும், அந்த வேலைக்கு இடையில் ரமழானுடைய மாதம் வந்துவிட்டால் மூன்று நாட்களுக்கு ஒருமுறை அவர்கள் குர்ஆனை முடிப்பார்கள்.
 
كان يختم في كل ثلاث
 
கதாதா ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஹதீஸிலும், தஃப்ஸீரிலும் மிக பெரிய இமாம் அவர்கள் அவரை பற்றி வருகிறது அவர்கள் ஒவ்வொரு ஏழு நாட்களுக்கும் குர் ஆனை ஓதி முடிப்பார்கள் ஆனால் ரமழான் வந்துவிட்டால் ஒவ்வொரு மூன்று நாளுக்கு ஒரு முறை குர்ஆனை முடிப்பார்கள்.
 
இன்னும் ரமழானுடைய இறுதி பத்து வந்து விட்டால் பொதுவாக வாழ்நாளில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அப்துல்லா இப்னு அம்ரு இப்னு ஆஸ்க்கு அந்த ஒரு வரையறை, வணக்க வழிபாடுக்காக ஒரு வரையறை கொடுத்து இருந்தார்களே!
 
அப்துல்லா இப்னு அம்ரு இப்னு ஆஸ் அவர்கள் மீண்டும் மீண்டும் கேட்டுகொண்டே  வருகிறார் குறைந்த பட்சம் அதாவது அவர்களுக்கு அந்த குர்ஆனுடைய ஓதுதல் கணக்கை கேட்க்கும் போது ஒரு வாரத்திற்கு ஒரு முறை குர்ஆன் முடியுங்கள் என்று சொல்கிறார்கள்.
 
அதற்க்கு பிறகு அவர் கேட்க்கிறார் முதலாவதாக மாதத்திற்கு ஒரு முறை பிறகு, வாரத்திற்கு ஒரு முறை பிறகு, மூன்று நாளைக்கு அந்த அடிப்படையில் வாரத்திற்கு ஒரு முறை அதற்க்கு மத்தியில் குர்ஆன் ஹதீஸின் கற்றுக்கொடுக்கக்கூடிய,, போதிக்ககூடிய, பணிகள் ஒரு புறம் இருக்க அப்படி இருந்தும் ஏழு நாட்களுக்கு ஒரு முறை குர்ஆனை ஓத கூடியவர்களாக இருந்தார்கள்.
 
ரமழானுடைய மாதம் வந்துவிட்டால் மூன்று நாட்களுக்கு ஒரு முறை முடிப்பார்கள் கடைசி பத்து வந்து விட்டால் ஒவ்வொரு இரவிலும் இரு குர்ஆன் முடிப்பார்கள்.
 
இமாம் ஷாபிஃ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் அவர்களை பற்றி அவர்களுடைய மாணவர் சொல்லகூடிய பிரபல்யமான கூற்று ரமழானுடைய மாதத்தில் குறைந்தது அறுவது முறை குர்ஆன் முடிப்பார்களாக இருந்தார்கள்.
 
வகீ இப்னு ஜர்ராஹ் அவர்கள் ரஹ்மத்துல்லாஹி அலைஹி ரமழானுடைய ஒவ்வொரு இரவிலும் ஒரு முறை கத்னாவும் பிறகு மூன்றில் ஒரு முறை குர்ஆனை முடக்க கூடியவர்களாக இருந்தார்கள் இப்படி நம்முடைய சஹாபாக்கள் தாபியீன்ங்களை பார்க்கும் போது குர்ஆனோடு எந்த அளவுக்கு தொடர்புடியவர்களாக இருந்தார்கள்.
 
சிலருக்கு சந்தேகம் வரலாம் மூன்று நாளைக்கு உள்ளாக குர்ஆனை முடிக்க கூடாது என்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள் அப்படி ஓதக்கூடியவர் குர்ஆனை விளங்க முடியாது என்று சொன்னார்களே! 
 
இமாம் இப்னு ரஜப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி ரமழான் அல்லாத பொதுவான காலங்களில் இந்த சட்டம் தான் ரமழான் அல்லாத மாதத்தின் மற்ற மாதங்களில் அவர்கள் குர்ஆனை அதிகபடியாக முற்று நாளைக்கு ஒரு முறையும் பிறகு, வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது, மாதத்திற்கு ஒரு முறையோ ஓதக்கூடியவர்களாக இருந்துதார்கள்.
 
ஆனால், குர் ஆணுக்காக இறக்கப்பட்ட மாதமாக வணக்க வழிபாடுகளுக்காக தன்னை முழுமையாக ஒதுக்கிக் கொள்வதற்குரிய மாதமாகிய இந்த ரமழான் மதாம் வந்துவிட்டால் அவர்களுடைய குர் ஆனுடைய தொடர்பு இப்படிதான் இருந்தது. 
 
மாலிக் இப்னு அனஸ் ஹதீஸ் கலையின் மிக பெரிய இமாம் அவர்கள் பிஃக்ஹுடைய மிக பெரிய அறிஞசர் ரமழானுடைய மாதம் வந்து விட்டால் மற்ற எல்லா பணிகளையும் ஒதிக்கி விட்டு குர் ஆனோடு தங்களை அவர்கள் ஈடு படுத்தி கொள்வார்கள்.
 
பிறகு தர்மம் இருக்கிறது அல்லாஹுடைய பாதையில் சதகா செய்ய வேண்டிய அந்த தான தர்மங்கள் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை பார்க்கும் பொழுது இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா சொல்கிறார்கள்:
 
كانَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ أجْوَدَ النَّاسِ بالخَيْر, وكانَ أجوَدُ ما يَكونُ في رَمَضَانَ, وكانَ أجوَدُ مِنَ الرِّيحِ المُرْسَلَة
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் பொதுவாகவே செல்வத்தை மக்களுக்கு அதிகம் கொடை கொடுப்பவர்களாக இருந்தாரர்கள். ஆனால் அதே நேரத்தில் ரமழான் வந்துவிட்டால் வேகமாக வீசக்கூடிய காற்றை விட அதிகம் தர்மம் செய்யக்கூடியவர்களாக இருந்தார்கள்.
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா, நூல் : புகாரி, எண் : 3220
 
அதற்க்கு பிறகு அல்லாஹுடைய அடியார்களுக்கு நோன்பு திறக்க ஏற்பாடு செய்வார்கள் இன்னும் அவர்களுடைய வறுமையில் அவர்களுக்கு உதவி செய்வது இப்படியாக தான் தர்மங்களில் நம்முடைய நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களும் இன்னும் நம்முடைய சான்றோர்களும் ரமழானை இவ்வாறு கழிப்பவர்களாக இருந்தார்கள்.
 
கண்ணியத்திற்குறிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! இன்று அல்லாஹ் நம்மை மன்னிக்க வேண்டும் நம்முடைய ரமழான் எப்படி மாறி இருக்கிறது என்றால் சஸருடைய உணவுகளை விசாலப்படுத்துவதும், இஃப்தாரை வகைபடுத்துவதும், ஆடை அலங்காரங்களை தேடுவதும், வீடுகளை அலங்கரிப்பதும், புதிய சாமான்களை வாங்குவதும், சந்திப்புக்களை இப்படியா நம்முடைய நேரங்களையும், செல்வங்களையும் வீணடிக்கக்கூடியவர்களாக இருக்கிறார்கள். 
 
أنَّ نَبِيَّ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ وزَيْدَ بنَ ثَابِتٍ: تَسَحَّرَا فَلَمَّا فَرَغَا مِن سَحُورِهِمَا، قَامَ نَبِيُّ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ إلى الصَّلَاةِ، فَصَلَّى، قُلْنَا لأنَسٍ: كَمْ كانَ بيْنَ فَرَاغِهِما مِن سَحُورِهِما ودُخُولِهِما في الصَّلَاةِ؟ قالَ: قَدْرُ ما يَقْرَأُ الرَّجُلُ خَمْسِينَ آيَةً
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்  சில மிடர் பாலைகொண்டு, பெரித்தம்பழத்தைக் கொண்டு அவர்கள் சஸர் செய்யகொடியவர்களாக இருதார்கள். அது போன்றுதான் அவர்களுடைய இஃபதார் இருந்தன. சஸருக்கும், சுபுஹுக்கும் இடையில் உள்ள நேரம் ஐம்பது ஆயத்துகள் ஓதக்கொடிய அளவுக்குத்தான் இருக்கும். ஆனால், சஸரை நாம் அதை முற்படுத்தி அங்கையும் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வழிமுறைக்கு மாற்றம் செய்கிறார்கள். 
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு, நூல் : புகாரி, எண் : 576
 
ஆக கண்ணியத்திற்குரிய அல்லாஹுவின் நல்லடியார்களே நாம் அனைவரும் முன்மாதிரியான ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களையும், சஹாபாக்களையும் சிறந்த முன் உதாரணமாக எடுத்துக்கொண்டு அவர்களுடைய வாழ்க்கை வரலாறை படிக்கும்  போதுதான் நம்முடைய உள்ளத்தில் உண்மையான ஆசை பிறக்கும் அவர்களைப் போன்று நாமும் ஆகவேண்டும் என்கிற  அந்த ஈமானிய உணர்வு பிறக்கும் யாரைபற்றி அதிகமாக கேட்பமோ, பேசுவமோ அவர்களைப்போன்று நாமும் மரவேண்டும் என்கிற அந்த உணர்வு தேடல் ஏற்படும் அல்லாஹுடைய ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய வாழ்கை வரலாறையும் கண்ணியமிக்க  சஹாபாக்களுடைய வாழ்கை வரலாறையும் எப்படியெல்லாம் பயன் படுத்தினார்கள் அதுபோன்று நம்முடைய உண்மையான அந்த தகுவாவையும் ஆர்வத்தையும் நாம் எடுத்துக் கொள்வோமாக இன்னும் சென்ற ரமழானை விட இந்த  ரமழான் சிறந்த ஒரு ரமழானாக இருக்க வேண்டும் அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நாம் அனைவருடைய பாவத்தை மன்னிப்பானாக!  
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்பு 1)
 
صحيح البخاري (1/ 133)
 
حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ بُنْدَارٌ، قَالَ: حَدَّثَنَا يَحْيَى، عَنْ عُبَيْدِ اللَّهِ، قَالَ: حَدَّثَنِي خُبَيْبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ، عَنْ حَفْصِ بْنِ عَاصِمٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " سَبْعَةٌ يُظِلُّهُمُ اللَّهُ فِي ظِلِّهِ، يَوْمَ لاَ ظِلَّ إِلَّا ظِلُّهُ: الإِمَامُ العَادِلُ، وَشَابٌّ نَشَأَ فِي عِبَادَةِ رَبِّهِ، وَرَجُلٌ قَلْبُهُ مُعَلَّقٌ فِي المَسَاجِدِ، وَرَجُلاَنِ تَحَابَّا فِي اللَّهِ اجْتَمَعَا عَلَيْهِ وَتَفَرَّقَا عَلَيْهِ، وَرَجُلٌ طَلَبَتْهُ امْرَأَةٌ ذَاتُ مَنْصِبٍ وَجَمَالٍ، فَقَالَ: إِنِّي أَخَافُ اللَّهَ، وَرَجُلٌ تَصَدَّقَ، أَخْفَى حَتَّى لاَ تَعْلَمَ شِمَالُهُ مَا تُنْفِقُ يَمِينُهُ، وَرَجُلٌ ذَكَرَ اللَّهَ خَالِيًا فَفَاضَتْ عَيْنَاهُ "
 
குறிப்பு 2)
 
صحيح مسلم (4/ 1986)
 
32 - (2564) حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ مَسْلَمَةَ بْنِ قَعْنَبٍ، حَدَّثَنَا دَاوُدُ يَعْنِي ابْنَ قَيْسٍ، عَنْ أَبِي سَعِيدٍ، مَوْلَى عَامِرِ بْنِ كُرَيْزٍ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَا تَحَاسَدُوا، وَلَا تَنَاجَشُوا، وَلَا تَبَاغَضُوا، وَلَا تَدَابَرُوا، وَلَا يَبِعْ بَعْضُكُمْ عَلَى بَيْعِ بَعْضٍ، وَكُونُوا عِبَادَ اللهِ إِخْوَانًا الْمُسْلِمُ أَخُو الْمُسْلِمِ، لَا يَظْلِمُهُ وَلَا يَخْذُلُهُ، وَلَا يَحْقِرُهُ التَّقْوَى هَاهُنَا» وَيُشِيرُ إِلَى صَدْرِهِ ثَلَاثَ مَرَّاتٍ «بِحَسْبِ امْرِئٍ مِنَ الشَّرِّ أَنْ يَحْقِرَ أَخَاهُ الْمُسْلِمَ، كُلُّ الْمُسْلِمِ عَلَى الْمُسْلِمِ حَرَامٌ، دَمُهُ، وَمَالُهُ، وَعِرْضُهُ»
 
குறிப்பு 2)
 
صحيح مسلم (1/ 203)
 
(223) حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ، حَدَّثَنَا حَبَّانُ بْنُ هِلَالٍ، حَدَّثَنَا أَبَانُ، حَدَّثَنَا يَحْيَى، أَنَّ زَيْدًا، حَدَّثَهُ أَنَّ أَبَا سَلَّامٍ، حَدَّثَهُ عَنْ أَبِي مَالِكٍ الْأَشْعَرِيِّ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الطُّهُورُ شَطْرُ الْإِيمَانِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَأُ الْمِيزَانَ، وَسُبْحَانَ اللهِ وَالْحَمْدُ لِلَّهِ تَمْلَآَنِ - أَوْ تَمْلَأُ - مَا بَيْنَ السَّمَاوَاتِ وَالْأَرْضِ، وَالصَّلَاةُ نُورٌ، وَالصَّدَقَةُ بُرْهَانٌ وَالصَّبْرُ ضِيَاءٌ، وَالْقُرْآنُ حُجَّةٌ لَكَ أَوْ عَلَيْكَ، كُلُّ النَّاسِ يَغْدُو فَبَايِعٌ نَفْسَهُ فَمُعْتِقُهَا أَوْ مُوبِقُهَا»
 
 
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/