HOME      Khutba      மர்ஹபா யா ரமழான்! | Tamil Bayan - 783   
 

மர்ஹபா யா ரமழான்! | Tamil Bayan - 783

           

மர்ஹபா யா ரமழான்! | Tamil Bayan - 783


மர்ஹபா யா ரமழான் !
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : மர்ஹபா யா ரமழான் !
 
வரிசை : 783
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 24-03-2023 | 02-09-1444
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் அடியார்களே! உங்கள் முன்னால் அல்லாஹு தஆலாவை போற்றி புகழ்ந்தவனாக, அல்லாஹுடைய தூதர் மீதும் இன்னும் அந்த தூதரின் குடும்பத்தார் மற்றும் தோழர்கள் மீதும் அல்லாஹுடைய ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டுமாக என்று வேண்டியவனாக உங்களுக்கும், எனக்கும், எல்லாம் முஃமின்களுக்கும், முஸ்லிம்களுக்கும் அல்லாஹ்விடத்தில் பாவமன்னிபை, மறுமையின் நிரந்தரமான இறுதி வெற்றியை, சொர்க்க வாழ்க்கையை வேண்டியவனாக இந்த உரையை ஆரம்பம் செய்கிறேன்.
 
அல்லாஹு ஸுப்ஹானஹு வதஆலா நம்முடைய பாவங்களை அனைத்தையும் மன்னிப்பனாக! பாவங்களை விட்டு நம்மை பரிசுத்தப்படுத்துவானாக! பாவங்களை விட்டு தூரமாக்குவனாக! ஆமீன். 
 
அல்லாஹ்வின் அடியார்களே! எந்த மாதத்திற்காக நம்முடைய சான்றோர்கள் ஆறு மாதங்களாக துஆ செய்வார்களோ! 
 
யா அல்லாஹ்! ஸலாமத்தோடு இந்த ரமழானை அடையப்பெறக்கூடிய வாய்ப்பை கொடு என்று. அப்படிபட்ட மாதத்தை நாம் அடையப் பெற்று இருக்கிறோம். அது மட்டும் அல்ல இந்த மாதம் முடிந்துவிட்டால் தொடர்ந்து  ஆறு மாதம் துஆ செய்வார்கள்.
 
யா அல்லாஹ்! இந்த மாதத்தில் நாங்கள் செய்த அமல்களை ஏற்றுக்கொள் என்று. இது நம்முடைய ஸஹாபாக்கள், தாபியின்கள், நம்முடைய சான்றோர்களுடைய  வழிமுறையாக இருந்தன.
 
அத்தகைய ஒரு ரமழானாக நமக்கு இருக்குமா? என்பதை நாம் சிந்திக்க வேண்டும். அல்லது உண்பது, உடுத்துவது, தின்பது இப்படியாக நம்முடைய ரமழான் கழிந்துவிடுமா? எத்தனை ரமழான் நமக்கு வந்து சென்றுவிட்டது! அந்த ரமழானைக் கொண்டு நம்முடைய தக்வாவை, ஈமானை, அமல்களை, அல்லாஹுடைய நெருக்கத்தை அதிகப்படுதினோமா? என்று நாம் சிந்தித்து பார்க்க வேண்டும்.
 
நம்முடைய முன்னோர்களின் துஆக்களை பாருங்கள்:
 
اللهم ارزقني صيامه وقيامه صبرًا واحتسابًا وارزقني فيه الجد والاجتهاد والقوة والنشاط 
 
அல்லாஹ்வே! இதோ ரமழான் எங்களுக்கு வந்துவிட்டது. இந்த ரமழானில் எங்களை பாதுகாப்பாக ஆக்கி வை! இந்த ரமழானை எங்களுக்கு பாதுகாத்துக் கொடு! இந்த ரமழானில் நோன்பு இருப்பதிலும், இதில் நின்று வணங்குவதிலும், பொறுமையும், நன்மையையும், எதிர்ப்பார்ப்பதிலும் எங்களுக்கு வாய்ப்புக்கொடு! இந்த ரமழானில் மன உறுதியோடு, தீவிர முயற்சியோடு, முழு வலிமையோடு அமல் செய்வதற்குரிய பாக்கியத்தைக் கொடு!
 
இந்த ரமழானில் தூங்குவதிலும், அமல்களில் ஆர்வமின்மையிலிருந்து எங்களை நீ பாதுகாத்துக்கொள்! லைலதுல் கத்ரிலே நின்று வணங்குவதற்கு எங்களுக்கு வாய்ப்பைக்கொடு! என்று நம்முடைய முன்னோர்கள் துஆ செய்வதை இமாம் தப்ரானி ரஹிமஹுல்லாஹ் அவர்கள் பதிவு செய்கிறார்கள்.
 
கண்ணியத்திற்குரியவர்களே! இந்த ரமழானுடைய சிறப்பு மற்றும் நன்மையையும் யார் குர்ஆனிலிருந்தும், ஹதீஸ்களிலிருந்தும் படித்து பாப்பார்களோ அத்தைகைய சிந்தனையாளருக்கும், நல்லோர்களுக்கும்தான் புரியவரும்; இந்த ரமழான் எத்தகைய கண்ணியமிக்க மாதம் என்று.
 
அல்லாஹு தஆலா கூறுகிறான்: 
 
شَهْرُ رَمَضَانَ الَّذِي أُنْزِلَ فِيهِ الْقُرْآنُ
 
நேர்வழி காட்டியாகவும், நேர்வழி உடைய சான்றுகளாகவும் இன்னும் உண்மை, பொய்யை பிரித்து அறிவிக்கின்ற தெளிவான சத்தியத்தின் சான்றுகளாகவும் உள்ள அல்குர்ஆன் இறக்கப்பட்டது.
 
(அல்குர்ஆன் 2: 185)
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இந்த மாதத்திற்காக சொர்க்கத்தின் வாசல்கள் திறக்கப்பட்டு, நரகத்தின் வாசல்கள் அடைக்கப்பட்டு, விசேஷமாக மலக்குகள் இறக்கப்பட்டு, இந்த மாதத்தில் நன்மைகளை அதிகரித்துக் கொள்வதற்கு அல்லாஹு தஆலா அழைப்புக் கொடுக்கிறான் என்று சொன்னால், இந்த மாதத்தின் கண்ணியத்தை புரிவதற்கு இதைவிட சிறந்த சான்றுகள் நமக்கு என்ன தேவையாக இருக்க முடியும்! 
 
உமர் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ரமழான் மாதம் வந்துவிட்டால் இப்படி சொல்லுவார்கள். 
 
(நம்முடைய முன்னோர்கள் அவர்கள் ரமழானை வரவேற்ற விதம் என்ன? நாம் அதை வரவேற்ற விதம் என்ன?)
 
அவர்கள் சொல்லுவார்கள்: எங்களை பாவங்களிலிருந்து சுத்தப்படுத்தக் கூடிய மாதமே! உன்னுடைய வருகை நல்வரவு ஆகட்டும் என்று வருக வருக என்று இந்த மாதத்தை வரவேற்றார்கள்.
 
நாமோ அதை பற்றியெல்லாம் சிந்திப்பதை விட்டு விட்டு நம்முடைய வீட்டுக்கு ரேஷன் வாங்குவது, நம்முடைய பள்ளிக்கு வெள்ளை அடிப்பது, பெருநாளுக்குரிய ஆடைகளை சேகரிப்பது. இப்படி நோன்புடைய மாதத்தில் கூட உண்பதை, தின்பதை மட்டுமே நம்முடைய சிந்தனை சுருங்கிவிட்டதை பார்க்கிறோம்.
 
அலீ ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் இத்தகைய மனிதரைப்பற்றி சொல்கிறார்கள்:
 
من كان همه ما يدخل جوفه كانت قيمته ما يخرج منه
 
யாருடைய கவலையெல்லாம், சிந்தனையெல்லாம், எண்ணமெல்லாம் அவரின் வயிற்றுக்குள் செல்கிற உணவை பற்றி மட்டுமே இருக்கிறதோ, அதை பற்றி மட்டுமே சிந்தித்துக்கொண்டு இருக்கிறாரோ அவருடைய மதிப்பு வருடைய வயிற்றிலிருந்து என்ன வெளியாகுமோ அதனுடைய மதிப்புதான் அவருடைய மதிப்பும்.
 
எவ்வளவு அழகாக சொன்னார்கள் பாருங்கள்! இந்த உணவு என்பது நமக்கு தேவை. வாழ்வாதாரத்திற்கு, வாழ்க்கைக்கு, இந்த உலகத்தில் உயிரோடு இருப்பதற்கு இது தேவையே தவிர, இதை பற்றியே சிந்தித்துகொண்டு இருப்பது, இதை வகைபடுத்துவது, இதற்க்கு பின்னால் அலைவதற்காக நாம் படைக்கப்படவில்லை. 
 
மிகப்பெரிய தாபியி ஒருவர், ஸஹாபாக்களுடைய மாணவர், அஹ்னப் இப்னு கைஸ் அவர்கள் வயது முதிர்ந்து விட்டார். தள்ளாதக்கூய வயது. 
 
அவர்களிடத்தில் கேட்கப்பட்டது, இந்த வயதிலும் கடமையான நோன்புக்கு பதிலாக உபரியான நோன்புகளை வைக்கிறீர்களே? 
 
[நோன்புடைய பாடத்தில் ஒரு விரிவான விளக்கம் இருக்கிறது. ரமழானின் நோன்பு மட்டும் அல்லாஹு தஆலா நமக்கு கொடுக்கவில்லை.
 
இது கடமையான நோன்பு. குறைந்த பட்சம் வைத்து ஒரு முஃமீன் தன்னுடைய ஆன்மாவை பரிசுத்தப் படுத்தியாக வேண்டும். எப்படி ஐந்து நேர தொழுகை என்பது கட்டாயமான தொழுகையோ இந்த அளவுக்காவது அவன் இபாதத் செய்து, நான் அல்லாஹ்வுடைய அடிமை, நான் அல்லாஹ்வை என்னுடைய இறைவனாக ஏற்றுக்கொண்டேன் என்பதை நிரூபிக்க வேண்டும். 
 
இதுபோக, சுன்னதான, உபரியான தொழுகைகள் இருகின்றது. அப்படித்தான் இந்த நோன்பிலும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் திங்கள் மற்றும் வியாழன் நோன்பை கற்றுக்கொடுத்தார்கள். ஒவ்வொரு மாதத்திலும் பிறை 13,14,15 அல்லது மாதத்தின் எந்த பகுதிகளிலாவது மூன்று, அரஃபா, ஆஷூரா ஆகிய நோன்புகள் வைப்பதை கற்றுக் கொடுதார்கள்.
 
காரணம் என்ன? இந்த நோன்பின் மூலமாகத்தான் நம்முடைய ஆன்மா அதற்குரிய சரியான பயிற்சியை நாம் கொடுக்க முடியும். அந்த ஆன்மாவை அல்லாஹுடைய அன்புக்கும், அருளுக்கும், பாவமன்னிப்புக்கும் தகுந்ததாக நாம் ஆக்க முடியும்.]
 
அஹ்மத் இப்னு கைஸ் இடத்தில் நோன்பு உங்களை மேலும் பலவீனப் படுதிவிடுமே? நீங்கள் தள்ளக்கூடிடய முதிர்ந்த வயோதிகத்திற்க்கு வந்து விட்டீர்களே? என்று சொன்னபோது அவருடைய மறுமை சிந்தனையைப் பாருங்கள்! அவர்கள் சொன்னார்கள்: 
 
إني أعده لسفر طويل والصبر على طاعة الله سبحانه أهون من الصبر على عذابه
 
நான் இந்த நோன்பை ஒரு நீண்ட பயணத்திற்காக செய்து கொண்டு இருக்கிறேன். யாருடைய பயணம் மிக நீண்ட தூரமாக இருக்குமோ அவர் அதற்கேற்ப அந்த தயாரிப்பை செய்து கொள்வார்.
 
(மறுமையுடைய பயணம் எவ்வளவு நீண்ட பயணம் என்பதை நினைத்துப் பாருங்கள்! கப்ருடைய வாழ்க்கையை நினைத்து பாருங்கள்! மஹ்ஷருடைய மைதானத்தை நினைத்து பாருங்கள்! அல்லாஹ்விற்கு முன்னால் 50 ஆயிரம் ஆண்டுகள் நிற்கவேண்டுமே! அந்த நாளை நினைத்து பார்க்க வேண்டும்.)
 
சொன்னார்கள்: இந்த வயோதிகத்திலும் நான் நோன்பு வைக்கிறேனே. இந்த நோன்பை ஒரு நீண்ட பயணத்திற்காக செய்து கொண்டு இருக்கிறேன்.
 
பிறகு சொன்னார்கள்: நாளை மறுமையில் அல்லாஹுடைய தண்டனையில் சிக்கி, அதில் பொருமையாக இருப்பதைவிட இன்று இந்த உலகத்தில் அல்லாஹுடைய வணக்க வழிபாட்டில் பொறுமையாக இருந்து, நாளை மறுமையின் நீண்ட வேதனையிலிருந்து தப்பித்துக் கொள்வது எனக்கு மிக இலகுவானதாகும்.
 
இமாம் முஸ்லிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஒரு ஹதீஸை பதிவு செய்கிறார்கள். கேட்டு நடுங்கவேண்டிய ஹதீஸாகும். 
 
ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொன்னார்கள்:
 
يُؤْتَى بأَنْعَمِ أهْلِ الدُّنْيا مِن أهْلِ النَّارِ يَومَ القِيامَةِ، فيُصْبَغُ في النَّارِ صَبْغَةً، ثُمَّ يُقالُ: يا ابْنَ آدَمَ، هلْ رَأَيْتَ خَيْرًا قَطُّ؟ هلْ مَرَّ بكَ نَعِيمٌ قَطُّ؟ فيَقولُ: لا واللَّهِ يا رَبِّ، ويُؤْتَى بأَشَدِّ النَّاسِ بُؤْسًا في الدُّنْيا مِن أهْلِ الجَنَّةِ، فيُصْبَغُ صَبْغَةً في الجَنَّةِ، فيُقالُ له: يا ابْنَ آدَمَ، هلْ رَأَيْتَ بُؤْسًا قَطُّ؟ هلْ مَرَّ بكَ شِدَّةٌ قَطُّ؟ فيَقولُ: لا واللَّهِ يا رَبِّ، ما مَرَّ بي بُؤْسٌ قَطُّ، ولا رَأَيْتُ شِدَّةً قَطُّ
 
அறிவிப்பாளர் : அனஸ் இப்னு மாலிக்  ரழியல்லாஹு அன்ஹு, நூல் : முஸ்லிம், எண் : 2807 
 
உலகத்தில் இன்பத்தை மட்டுமே அனுபவித்த ஒரு பெரிய சுகவாதியை நாளை மறுமையில் கொண்டு வரப்படும். அவன் நிராகரிப்பாளனாக இருப்பான். அவனை நரகத்தில் ஒரு முக்க வைத்து கொண்டு வாருங்கள் என்று மலக்குகளுக்கு கட்டளை இடுவான்.
 
பிறகு, அவனிடத்தில் கேட்கப்படும்; உலகத்தில் எதாவது இன்பத்தை பார்த்து இருக்கிறாயா? அந்த மனிதன் சொல்வான்; நான் உலகத்தில் எந்த இன்பத்தையும்
 
அனுபவித்ததே இல்லை. இன்னும் இந்த உலகத்தில் மிக கஷ்டம் துன்பம்,
 
வேதனையை அனுபவித்த ஒரு முஃமினை மறுமையில் கொண்டு வரப்பட்டு அவனை சொர்க்கத்தில் உள்ளே அப்படியே அனுப்பி அப்பட்யே வெளிலே எடுக்கபடும். அவனிடத்தில் கேட்கபடும் உலகத்தில் எதாவது துன்பத்தை அனுபவித்து இருக்கிறாயா என்று அவனோ,
 
இந்த உலகத்தில் துன்பத்தை தவிர எதையும் பார்த்ததே இல்லை ஆனால் முஃமினாக இருந்தான்.அந்த மனிதனை சொர்க்கத்திற்குள் அனுப்பி வெளிலே எடுக்கபடும் பிறகு கேட்கப்படும் நீ எதாவது உலகத்தில் துன்பத்தை பார்த்துதிரிக்கிறாயா!,
 
அந்த மனிதன் ஒரு நொடியின் சொர்க்க சுகத்திலே சொல்லுவான் நான் உலகத்தில் எந்த கஷ்டத்தையும் பார்த்தது இல்லை என்று கூறுவான் சிந்தித்து பாருங்கள் மறுமை எவ்வளவு நமக்கு படிப்பினை தரக்கூடியதாக இருக்கிறது.
 
நம்முடைய முன்னோர்களின் வாழ்கை வரலாறை நாம் பார்க்கிறோம் ஹசன் பசரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் சொல்கிறார்கள் யார் ரமழானில் மட்டும் அதிகமாக வணக்க வழிபாடுகளை செய்துகொண்டு அல்லது ரமழானில் மட்டும் இருக்கிறார்களோ,
 
இவர்களும் அதற்க்கு பிறகு இதிலிருந்து எடுத்த படிப்பினையைக் கொண்டு பிற மாதத்தில் எடுத்து வணக்க வழிபாடுகளை செய்ய வில்லை என்றால் சிலர் ரமழானின் மட்டும் தொழுகைக்கு வருவார்கள், குர்ஆனை திறப்பார்கள் அப்படி இல்லை மாறாக ரமழானில் அதிக படுத்தவேண்டும் .
 
ரமழானில் நன்மையை அதிகபடுத்த வேண்டுமே தவிர ரமழானில் மட்டுமே நன்மைகளை செய்வது அல்ல இவர்களைபற்றி சொல்லும்போது இவர்கள் தன்னுடைய இறைவனை ரமழானில் மட்டும் அறிந்து கொண்டார்கள் அதற்க்கு பிறகு தன்னுடைய இறைவனை மறந்து விட்டார்கள்.
 
கண்ணியதிற்குரிவர்களே! இந்த ரமழானுடைய மாதம் அல்லாஹு ஸுப்ஹானஹுவ தஆலா நோன்பின் மூலமாக நம்முடைய உள்ளங்களை சுத்தப்படுதுகிறான் இந்த நோன்பு எப்படி இருக்கவேண்டும் அது வணக்கவழிபாடுகளோடு இருக்கவேண்டும்.
 
வெறும் நோன்பு வைத்தோம் அதற்க்கு பிறகு வீன் பேச்சுகள், விளையாட்டுகள், சுற்றுவது இப்படியாக நாம் நம்முடைய நேரங்களை கழிப்போமையானால் இந்த நோன்பின் மூலமாக என்ன நன்மை கிடைக்க வேண்டுமோ அது நமக்கு கிடைக்காது.
 
மாறாக பகலுடைய காலங்களில் நம்முடைய வாழ்வாதாரத்திற்கு தேவை இருந்தால் அந்த வேலைகளை எவ்வளவு சுருக்கமாக முடிக்க முடியுமோ அதை முடித்தற்கு பிறகு மற்ற அமல்களில் நாம் கவனத்தை செலுத்த வேண்டும்.
 
குறிப்பாக இரண்டு முக்கியமான அமல்கள் ஒன்று குர்ஆன் ஓதுதல், தர்மம் செய்வது நம்மால் முடிந்த அளவுக்கு உபரியான தர்மம் செய்வது இந்த ரமழானில் அதிக படுத்துதல் இந்த இரண்டும் நம்முடைய முன்னோர்களிடம் இருந்த ரஸூலுல்லாஹி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்,
 
அவர்களிடமிருந்து ஸஹாபாக்கள், தாபியின்கள், இமாம்கள் வரை இருந்த எல்லாம் நல்லவர்களுடைய ஒரு சிறப்பான எடுத்துகட்டான அமலாக இருந்தது. இன்று நாம் பாக்கிறோம் அல்ஹம்துலில்லாஹ் நம்முடைய முஸ்லிம் சகோதரர்கள் குர்ஆன் ஓதுவதிலும்,
 
தான தர்மம் செய்வதிலும் ஒரு அளவுக்கு முன் வந்து இருந்தாலும் எந்த அளவுக்கு நம்முடைய முனோர்கள் இதிலே ஆர்வமோடு இருந்தார்களோ அந்த ஆர்வத்திற்கு போட்டி போடவேண்டும் அதன் மூலமாகதான் நாளை அவர்களுடன் சேரக்கூடிய பாக்கியத்தை அடைவது,
 
இது ஒரு போட்டிக்கான காலம் நாம் யாரோடு போட்டிபோடவேண்டும் சஹாபாக்களோடு இமாம்களோடு போட்டிபோட வேண்டும். நம்முடைய முன்னோர்களை பார்த்தால் அவர்கள் உதாரணமாக,
 
ஹம்மாத் இப்னு அபி சுலைமான் ரமழான் மாதத்தில் குறைந்தது முழு மாதமும் ஐநூறு  நபர்களுக்கு அவர்கள் மட்டும் தனியாக இப்தார் விருந்து கொடுக்ககூடியவர்களாக இருந்தார்கள். அது மட்டும் மல்ல  அதில்கலந்துகொண்ட அனைவருக்கும்,
 
பெருநாள் என்று குறைந்தது நூறு திர்கம் அன்பளிப்பு செய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். அப்துல்லா இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹு ரஸூலுல்லாஹி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய  தோழர்களில் மிக முக்கியமான தோழர்,
 
அல்லாஹு தஆலா அவர்களுக்கு செல்வ வசதியும் கொடுத்து இருந்தான். பொதுவாக செல்வந்தர்களை பொறுத்த வரை அவர்கள் தனியாக குடும்பத்தோடு அவர்கள் மட்டும் இப்தார் செய்ய விரும்புவார்கள் அதிகமான வகைகளை வைத்துக்கொண்டு ஆனால்,
 
இங்கு அப்துல்லா இப்னு உமரை பாருங்கள் ஏழைகள் அனாதைகள் இல்லாமல் அவர்கள் ஒருபோதும் நோன்பு திறந்ததே இல்லை அந்த இப்தாரை அவர்கள் இல்லாமல் திரும்பி பார்க்கவே மாட்டர்கள். அவர்களுடைய குடும்பத்தார்கள் அவர்களுக்காக நிறைய உணவுகளை செய்வார்கள்.
 
பள்ளிவாசல்களிருந்து ஏழைகள் மற்றும் அனாதைளை அழைத்துக்கொண்டு அவர்களோடு அமருவார்கள். பொதுவாக இந்த வீட்டில் உள்ளவர்கள் பெண்கள் கணவன்மீது இருக்ககூடிய அன்பால் எதாவது சில நேரங்கள் அந்த ஏழைகளை,
 
அனாதைளை தனியாக பிரித்தால் அவர்கள் இவ்வாறு சொல்லுவார்கள் இந்த ஏழைகள் கலந்து கொல்லாத இப்தார் எனக்கு தேவையே இல்லை என்று கூறிவிட்டு அப்படியே பள்ளிக்கு சென்று விடுவார்கள்.
 
அந்த அளவுக்கு அவர்கள் ஏழைகளோடு, அனாதைகளோடு இப்தார் செய்வதில் மிக பெரிய ஈடுபாடு கொண்டவர்களாக இருந்தார்கள். உமர் இப்னு கத்தாப் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்கிறார்கள் நோன்பு என்பது வெறும் உண்பதில், குடிப்பதிலிருந்து, மட்டும் நாம் விலகி இருப்பது 
 
قال عمر بن الخطاب: ليس الصيام من الطعام والشراب وحده، ولكنه من الكذب، والباطل، واللغو، والحلف
 
இந்த நோன்பிலே பொய்யான, வீணான, புறம், அநாசியமான, தேவையற்ற காரியங்களை பேசுவதைவிட்டும் விலகி இருப்பதுதான் உண்மையான நோன்பாகும்.
 
யார் தன்னுடைய நோன்பை இரண்டு காரியங்களிருந்து பாதுகாப்பாரோ அவருடைய நோன்புதான் உண்மையான நோன்பு என்று முஜாஹித் ரஹிமஹுல்லாஹ் அவர்கள் சொல்கிறார்கள். 
 
مجاهد رحمه الله : خصلتان من حفظهما سلم له صومه الغيبة والكذب
 
இரண்டு காரியங்களை விட்டு ஒருவர் தன்னை பாதுகாத்துக் கொண்டால் அவருடைய நோன்பு அவருக்கு பாதுகாப்பாக இருக்கும். அதில் ஓன்று புறம் மற்றும் போய் பேசுவதாகும். அல்லாஹு ஸுப்ஹானஹுவ தஆலா ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்களை விசேஷமாக இறக்குவான்.
 
எதற்காக வேண்டி? ரஸூலுல்லாஹி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு குர்ஆனை ஒதிகான்பிப் பதர்க்காக ஆகவே யார் குர்ஆன் ஓத தெரியாதவர்களாக இருக்கிறார்களோ இதுவரை குர்ஆன் படிக்க வில்லையோ குறைந்தபட்சம் தனது வீட்டில் குர் ஆன் ஓத தெரிந்தவர்களிடம் அவர்களை ஓத சொல்லி அவர்கள் ஓத கேட்பது இதுவும் அல்லாஹுவிடத்தில் ஒரு சிறப்புக்குரிய ஒரு அமலாகும்.
 
كانَ رَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ أجْوَدَ النَّاسِ، وكانَ أجوَدُ ما يَكونُ في رَمَضَانَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ، وكانَ جِبْرِيلُ يَلْقَاهُ في كُلِّ لَيْلَةٍ مِن رَمَضَانَ، فيُدَارِسُهُ القُرْآنَ، فَلَرَسولُ اللَّهِ صَلَّى اللهُ عليه وسلَّمَ حِينَ يَلْقَاهُ جِبْرِيلُ أجْوَدُ بالخَيْرِ مِنَ الرِّيحِ المُرْسَلَةِ. وَعَنْ عبدِ اللَّهِ، حَدَّثَنَا مَعْمَرٌ بهذا الإسْنَادِ نَحْوَهُ، وَرَوَى أبو هُرَيْرَةَ، وفَاطِمَةُ رَضِيَ اللَّهُ عنْهمَا، عَنِ النبيِّ صَلَّى اللهُ عليه وسلَّمَ: أنَّ جِبْرِيلَ كانَ يُعَارِضُهُ القُرْآنَ
 
அறிவிப்பாளர் : ஃபாத்திமா ரழியல்லாஹு அன்ஹா, நூல் : புகாரி, எண் : 3220
 
ரஸூலுல்லாஹி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடத்திலிருந்து குர்ஆனை கேட்பார்கள் அதற்க்கு பிறகு ரஸூலுல்லாஹி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம்,
 
அவர்களுக்கு ஓதிகட்டுவார்கள். ஆகவே குர்ஆனை மணணம் செய்தவர்கள் இந்த மாதத்தில் தாங்கள் மணணம் செய்த குர்ஆனை மனபாடம் செய்து உறுதிபடுத்தி புதுபித்து இன்னொரு ஹாபிலுக்கு அதை ஓதிகாட்டுவது ஸுன்னாவாகும் என்பதாக நம்முடைய அறிஞ்சர்கள் எழுதுகிறார்கள்.
 
குறிப்பாக குர்ஆனோடு நம்முடைய சகோதர்களே குர்ஆனுடைய வாக்கியங்களை ஓதுவது மட்டும் அல்ல அந்த வாக்கியங்களை ஓதும்போது இதிலிருந்து அல்லாஹுதஆலா எனக்கு என்ன நேர்வழியைவைத்து இருக்கிறான் என்ற படிப்பினையோடு ஓத வேண்டும்.
 
சிலரை பொருத்தவரை அந்தவாசகங்களை மட்டும் அப்படியே ஓதிவிட்டு நான் குர்ஆன் முடித்துவிட்டேன் என்பதாக திருப்திபட்டுக் கொள்கிறார்களே! அதனுடைய நேர்வழியிலிருந்து சிலவற்றைகூட அவர்கள் கற்றுக்ள்ளகொள்ளாமல் இது ஒரு  பெரிய துர்பாக்கியம்,
 
குர்ஆனுடைய வாக்கியங்களை ஓதுவது எவ்வளவு முக்கியமோ அதுபோன்று அந்த குர்ஆனுடைய ஒளியாகிய, நர்பாகியமாகிய அதனுடையவழிகாட்டுதல்கள் அதில்எதை எனக்கு ஏவுகிறான் எதிலிருந்து என்னை தடுக்கிறான் என்று கன்ட்டிப்பாகாக கற்றுகொள்வதுஎன்பது ஒவ்வொரு முஃமினுடையகடமையாகும். 
 
நாம் இப்போழுதுதான் ரமழானுடைய தொடக்கத்தில் இருக்கிறோம் இப்போதிலிருந்து நாம் கண்ணும் கருத்துமாய் நாம் சரிபடுத்திக் கொள்ளவிள்ளை என்றால் பிறகு ரமழான் முடியும்போது ஆகா ரமழான் வந்ததே நான் அலட்சியமாய் இருந்துவிட்டேனே என்று கைசேதப்படகூடிய நிலைவந்துவிடும் அல்லாஹ் பாதுகாப்பானாக! 
 
409 - أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ صَالِحٍ الْبُخَارِيُّ بِبَغْدَادَ، حَدَّثَنَا الْحَسَنُ بْنُ عَلِيٍّ الْحُلْوَانِيُّ، حَدَّثَنَا عِمْرَانُ بْنُ أَبَانَ، حَدَّثَنَا مَالِكُ بْنُ الْحَسَنِ بْنِ مَالِكِ بْنِ الْحُوَيْرِثِ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: صَعِدَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمِنْبَرَ، فَلَمَّا رَقِيَ عَتَبَةً، قَالَ: «آمِينَ» ثُمَّ رَقِيَ عَتَبَةً أُخْرَى، فقَالَ: «آمِينَ» ثُمَّ رَقِيَ عَتَبَةً ثَالِثَةً، فقَالَ: «آمِينَ» ثُمَّ، قَالَ:  «أَتَانِي جِبْرِيلُ، فقَالَ: يَا مُحَمَّدُ، مَنْ أَدْرَكَ رَمَضَانَ فَلَمْ يُغْفَرْ لَهُ، فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْتُ: آمِينَ، قَالَ: وَمَنْ أَدْرَكَ وَالِدَيْهِ أَوْ أَحَدَهُمَا، فَدَخَلَ النَّارَ، فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْتُ: آمِينَ، فقَالَ: وَمَنْ ذُكِرْتَ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيْكَ، فَأَبْعَدَهُ اللَّهُ، قُلْ: آمِينَ، فَقُلْتُ: آمِينَ
 
ரஸூலுல்லாஹி ரசூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் மின்பரில் ஏறுகிறார்கள் ஆமீன் ஆமீன் ஆமீன் என்று ஸகாபாக்கள் விளக்கம் கேட்கிறார்கள் அல்லாஹுடையதூதரே எப்போதும் இல்லாமல் இன்று செய்திர்களே! சொன்னார்கள்,
 
ரமழான் வந்ததற்கு பிறகும் அந்த ரமழான் வந்து சென்று முடிந்து விட்டதே ஆனால் அவருடைய பாவம் மன்னிக்கபடவில்லை என்றால் அவர் நாசமாகட்டும் என்று ஜிப்ரில் அலைஹிஸ்ஸலாம் துஆ கேட்டார் நான் அமீன் என்று கேட்டேன்,
 
நாம் செய்யக்கூடிய முக்கியமான அமல்களில் எப்படி நோன்பு, குர்ஆன் ஓதுதல், தர்மம் இருக்கிறதோ அதுபோன்று ஒரு முக்கியமான ஒரு அமல் இந்த ரமழானில் அதிகம் அதிகம் பாவமன்னிப்பு கேட்பது நீங்கள் கடைகளில் இருந்தாலும்,
 
நாவிலே  இந்த இஸ்திக்பார் பாவமன்னிபு நாம் விடாமல் செய்துகொண்டு இருந்தாலே அல்ஹம்துலில்லாஹ் இந்த ரமழானில் அடையவேண்டிய  ஒரு பெரிய நற்பாக்கியத்தை அடைந்துகொள்வோம். அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா எனக்கும்,
 
இன்னும் உங்களுக்கும் இந்த ரமழானை மிக பயனுள்ள ரமழானாக நன்மைகள்நிறைந்த ரமழானாக அல்லாஹுடைய பாவமன்னிப்பு கிடைக்ககூடிய ரமழானாக அக்கி அருளுவனாக நம்முடைய இன்னும் நம்முடைய பெற்றோர்களின் இன்னும் நம்முடைய முஃமமினான சகோதர்கள் இன்னும் சகோதரிகள் அனைவருடைய பாவங்களையும் மன்னிபானாக! 
 
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/