HOME      Khutba      இவை நோன்பை முறிக்காது! | Tamil Bayan - 784   
 

இவை நோன்பை முறிக்காது! | Tamil Bayan - 784

           

இவை நோன்பை முறிக்காது! | Tamil Bayan - 784


இவைகள் நோன்பை முறிக்காது
 
 
ஜுமுஆ குத்பா தலைப்பு : இவைகள் நோன்பை முறிக்காது
 
வரிசை : 784
 
இடம் : மஸ்ஜிதுல் ஹுதா, தாருல் ஹுதா, மண்ணடி, சென்னை – 1
 
கதீப் : உமர் ஷரீஃப் அப்துஸ் ஸலாம்
 
நாள் : 09-09-2023 | 31-03-1444 
 
بسم الله الرحمن الرحيم
 
إنَّ الْحَمْدَ لِلَّهِ نَحْمَدُهُ وَنَسْتَعِينُهُ، مَنْ يَهْدِهِ اللهُ فَلَا مُضِلَّ لَهُ، وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ، وَأَشْهَدُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَحْدَهُ لَا شَرِيكَ لَهُ، وَأَنَّ مُحَمَّدًا عَبْدُهُ وَرَسُولُهُ، أَمَّا بَعْدُ  فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللهِ، وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ، وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا، وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ
 
நிச்சயமாக எல்லாப் புகழும் அல்லாஹ்விற்கே! அவனை நாம் புகழ்கிறோம்; அவனிடம் உதவி தேடுகிறோம். அவன் யாரை நேர்வழி செலுத்தினானோ அவரை வழிகெடுப்பவர் யாரும் இல்லை. அவன் யாரை வழிகெடுத்தானோ அவரை நேர்வழி செலுத்துபவர் யாரும் இல்லை. நிச்சயமாக வணக்கத்திற்குரிய
 
இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் அறவே இல்லை, அவன் தனித்தவன், அவனுக்கு இணை அறவே இல்லை, மேலும் நிச்சயமாக முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவனுடைய அடியாரும் தூதரும் ஆவார்கள் என்று சாட்சி கூறுகின்றேன்.
 
பிறகு, பேச்சுகளில் மிக சிறந்தது அல்லாஹ்வின் வேதமாகும். வழிமுறைகளில் மிக சிறந்தது முஹம்மது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் வழிமுறையாகும். காரியங்களில் மிக கெட்டவை மார்க்கத்தில் புதிதாக சேர்க்கப்பட்டவை ஆகும். ஒவ்வொரு அனாச்சாரமும் வழிகேடாகும்.
 
அல்லாஹ் கூறுகின்றான் :
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللهَ حَقَّ تُقَاتِهِ وَلَا تَمُوتُنَّ إِلَّا وَأَنْتُمْ مُسْلِمُونَ
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்கள் அல்லாஹ்வை அவனுக்கு பயப்படவேண்டிய முறைப்படி உண்மையாக பயப்படுங்கள். (முற்றிலும் அவனுக்கு வழிப்பட்டவர்களாக) முஸ்லிம்களாகவே தவிர நீங்கள் இறந்துவிட வேண்டாம். (அல்குர்ஆன் 3 : 102)
 
يَاأَيُّهَا النَّاسُ اتَّقُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ مِنْ نَفْسٍ وَاحِدَةٍ وَخَلَقَ مِنْهَا زَوْجَهَا وَبَثَّ مِنْهُمَا رِجَالًا كَثِيرًا وَنِسَاءً وَاتَّقُوا اللهَ الَّذِي تَسَاءَلُونَ بِهِ وَالْأَرْحَامَ إِنَّ اللهَ كَانَ عَلَيْكُمْ رَقِيبًا
 
பொருள் : மனிதர்களே! நீங்கள் உங்கள் இறைவனுக்குப் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவன் உங்கள் அனைவரையும் ஒரே ஓர் ஆன்மாவில் இருந்து உற்பத்தி செய்தான். (ஆரம்பத்தில் அந்த ஒருவரை படைத்து) அவரிலிருந்து அவருடைய மனைவியைப் படைத்தான். பின்பு அவ்விருவரிலிருந்து ஆண்கள், பெண்கள் என பலரை (இப்பூமியில்) பரப்பினான். ஆகவே, (அத்தகைய) அல்லாஹ்வுக்கு நீங்கள் பயந்து (நடந்து)கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் (உங்களுக்குள் ஒருவருக்கொருவர் வேண்டியவற்றைக்) கேட்டுக்கொள்கிறீர்கள். இன்னும் (அல்லாஹ்வுக்குப் பயந்து) இரத்த உறவினர்களிடமும் (அன்பாக நடந்து கொள்ளுங்கள்). நிச்சயமாக அல்லாஹ் உங்களைக் கவனித்தவனாகவே இருக்கிறான். (அல்குர்ஆன் 4 : 1)
 
يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا اتَّقُوا اللَّهَ وَقُولُوا قَوْلًا سَدِيدًا يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعِ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا
 
பொருள் : நம்பிக்கையாளர்களே! நீங்களும் அல்லாஹ்வுக்குப் பயந்து நேர்மையான விஷயங்களைக் கூறுங்கள். அவன் உங்கள் காரியங்களை உங்களுக்கு சீர்படுத்தி வைத்து உங்கள் குற்றங்களையும் உங்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எவர் கீழ்ப்படிகிறாரோ அவர் நிச்சயமாக மகத்தான வெற்றியடைந்து விட்டார். (அல்குர்ஆன் 33 : 70, 71)
 
கண்ணியத்திற்குரிய அல்லாஹ்வின் நல்லடியார்களே! அல்லாஹு தஆலவை போற்றி புகழ்ந்தவனாக அல்லாஹுடைய தூதர் மீதும், அந்த தூதரின் கும்டுபத்தார், தோழர்கள் மீதும் ஸலவாத்தும் ஸலாமும் நிலவட்டுமென்று வேண்டியவனாக!
 
உங்களுக்கும், எனக்கும் அல்லாஹுவிடத்தில் பாவமன்னிபை, இம்மை, மறுமையின் வெற்றியை, சொர்க்க வாழ்க்கையை வேண்டியவனாக இந்த உரையை ஆரம்பம் செய்கிறேன். 
 
அல்லாஹு தஆலா நம்முடைய ரமழானை ஏற்றுக்கொள்ளப்பட்ட ரமழானாக ஆக்குவானாக! இந்த மாதத்தில் நோன்பு இருந்தும், இரவு வணக்கங்களை செய்தும், தானம் தர்மங்கள் செய்தும் இன்னும் அல்லாஹ்வும், அல்லாஹ்வுடைய தூதரும் ஆர்வமூட்டிய எல்லாவிதமான நன்மைகளை செய்து அல்லாஹ்வுடைய பொருத்தத்தை அடைவதற்குரிய வாய்ப்பை எனக்கும், உங்களுக்கும், அனைத்து முஸ்லிம்களுக்கும் அல்லாஹு தஆலா வழங்குவனாக! ஆமீன். 
 
ரமழான் மாதத்தினுடைய சிறப்பு, நோன்புடைய சிறப்பு, இன்னும் இரவு தொழுகையின் சிறப்பு, தானம் தர்மத்தினுடைய சிறப்பு ஆகியவற்றை எல்லாம் தொடர்ந்து நாம் பல அறிஞர்கள், அழைப்பாளர்கள் மூலமாக கேட்டு வருகிறோம்.
 
அல்லாஹ் நாடினால் இந்த ஜும்ஆவில் குறிப்பாக நோன்பு குறித்த சில முக்கியமான சட்டங்களைப் பற்றி நாம் பார்ப்போம். அதாவது நோன்பை முறிக்ககூடிய காரியங்களில் சில சந்தேகங்கள், குழப்பங்கள் நிகழ்வது உண்டு இது நோன்பை முறிக்குமா? அது நோன்பை முறிக்குமா?
 
என்று அந்த அடிப்படையில் நம்முடைய உடலுக்குள் செல்லக்கூடியது அதுவும் குறிப்பாக நம்முடைய குடலுக்குள் செல்லக்கூடிய எது உணவு, குடிபானமாக இருக்குமோ அதுதான் நம்முடைய நோன்பை முரிக்ககூடியதாக இருக்கும். இது ஒரு பொதுவான சட்டமாகும்.
 
நம்முடைய உடலுக்குள் செல்லக்கூடிய அந்த சாதனம் நேராக வைற்றுக்குள் சென்று நம்முடைய உணவு அல்லது குடிபானத்தின் இடத்தில் சென்று அந்த குடிபானம் எது உடலுக்கு தெம்பை, வலிமையைக் கொடுக்குமோ அத்தகைய ஒரு உணவாகவோ அல்லது அதனுடைய இடத்தில் இருக்ககூடிய எதுவாக இருந்தாலும் சரி அதுதான் நோன்பை முறிக்குமே தவிர நம்முடைய உடலிலிருந்து வெளியேறக்கூடியது நம்முடைய நோன்பை முறிக்காது.
 
உதாரணமாக! சில நேரங்களில் மூக்கிலே சொட்டு மருந்து விடவேண்டிய தேவை ஏற்படும், கண் சிகிச்சை செய்தவர்கள் கண்ணுக்கு மருந்து விடவேண்டிய தேவைப்படும் அல்லது, சுர்மா போடுவது அல்லது, சில நேரங்களில் மூச்சு திணறல் ஏற்படும் பொழுது அப்போது ஒரு கருவி அது மூக்கில் வைக்ககூடியது அதுபோன்ற அந்த சுவாசிக்கும் கருவி இவையெல்லாம் நோன்பை முறிக்ககூடிய செயல்கள் அல்ல இவற்றை பயன்படுத்துவது வெறுக்கப்பட்ட செயல்களும் அல்ல.
 
ஆகவே, சிலர் இவ்வாறு சொல்வார்கள் தவிர்ந்து இருப்பது நல்லதுதான் என்று சொல்வார்கள் அப்படிபட்ட சட்டமும் இதற்க்கு கிடையாது.
 
இப்ராஹீம் ரஹிமஹுல்லாஹ் தாபியின்களில் ஒருவர். அவர்களிடத்தில் கேட்கப்பட்டது. அதாவது, நோன்பாளிக்கு சொட்டு மருந்து விடலாமா? அதுபோன்று அவர் சுர்மா பயன்படுதுவரா? என்று.
 
சுர்மா போடும்போது அதனுடைய கண்ணுக்கு, காதுக்கு நாம் எதாவது மருந்து போட்டாலோ அதனுடைய அந்த சுவை தொண்டையில் தெரிவது உண்டு. அப்படி தெரிகிறதே? என்று கேட்டபோது சொல்கிறார்கள்:
 
ليس بشيء
 
தாபியின்களில் மிகப்பெரிய சட்ட வல்லுநர் சொன்னார்கள்: அதனால் எந்த பிரச்சனையும் இல்லை நோன்பு முறிந்து விட்டாது. 
 
அதுபோன்று நம்முடைய முகத்திற்கு பயன்படுத்தக் கூடிய பவ்டர்களோ, அல்லது பெண்கள் பயன்படுத்தக் கூடிய அழகு சாதனங்களோ இவையெல்லாம் நோன்பை முறிக்கக்கூடிய காரியங்கள் அல்ல.
 
அதுபோன்று மருதாணி இடுவது இந்த ஒரு செயல்களெல்லாம் நம்முடைய உடல் புரதிற்கு மேல்புறத்தில் செய்யகூடிய எந்த ஒன்றாக இருந்தாலும் சரி நோன்பை முறிக்காது.
 
அதுபோன்று நம்முடைய காயங்களுக்கு மருந்து இடுவது சில நேரங்களில் பின் துவாரத்தின் வழியாக கூட மருந்து போடுவார்கள் இப்படிப்பட்ட எந்த ஒன்றாக இருந்தாலும் சரி நோன்பை முறிக்காது.
 
இன்னும் இரத்தம் வெளியேறுவது வாந்தி எடுப்பது இவையெல்லாம் நோன்பை முறிக்காது காயத்தின் மூலமாக இரத்தம் அதிகமாக வெளியேறினாலும் சரி சில நேரங்களில் நம்முடைய மருத்துவ மனையில் சிகிச்சைக்காக இரத்தம் கொடுக்கவேண்டிய தேவை ஏற்படுகிறது அந்த சூழ்நிலையில் ரெத்தம் நாம் கொடுத்தாலும் சரி அது அதிகமாக கொடுத்தாலும் சரி குறைவாக கொடுத்தாலும் சரி அதுவும் நோன்பை முறிக்காது.
 
அதுபோன்று இந்த சிறுநீரகம் பாதிக்கப்பட்டதரற்கு சிகிச்சை அது செய்வதின் மூலமாகவும் நோன்பு முறியாது இதற்க்கு என்ன ஒரு பொதுவான சட்டம் என்றால் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா மிக பெரிய கல்விமான் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் தோழர்களில் முக்கியமான தோழர். 
 
الصوم مما دخل وليس مما خرج 
 
நோன்பு எது வைற்றுக்குள் செல்கிறதோ அதன் காரணமாக தான் நோன்பு முறிந்து விடுமே தவிர எது வெளியேருகிறதோ அதன் மூலம் நோன்பு முறியாது. 
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா, நூல் : பைஹகி, எண் : 2/467
 
ஆக நம்முடைய சில்லி மூக்கு ஒடைந்து இரத்தம் வடிந்தாலும் சரி அல்லது இரத்தம் கொடுப்பதாக இருந்தாலும் சரி இதன் காரணகமாக நோன்பு அறவே முறியாது பெரும்பாலான தற்காலிகமாக இந்த விஷயத்தைதான் உறுதிபடுத்துகிறார்கள். 
 
எவ்வளவு இரத்தம் கொடுத்தாலும் சரி அதனால் உடல் பலவீனம் ஏற்பட்டாலும் சரி நம்முடைய நோன்பை விட்டு விடுவதற்கு வேனா அனுமதி இருக்கிறதே தவிர நோன்பு அதனால் நோன்பு முறியாது.
 
இப்னு தைமிய்யா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஒரு அழகான விளக்கத்தை சொல்கிறார்கள்: ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய காலத்தில் ஸஹாபாக்கள் போருக்கு சென்றார்கள், நோன்பு வைத்த நிலையிலே ஜிஹாதுக்கு சென்றார்கள் ரெத்தம் வெளியேறுவது நோன்பை முறிக்ககூடிய காரியமாக இருக்குமையானால்,
 
நிச்சயமாக ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தங்களுடைய ஸஹாபாக்களுக்கு கண்டிப்பாக விளக்கி இருப்பார்கள் அப்படி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் சொல்லாததும், நோன்பு வைத்த நிலைலேயே சஹாபாக்கள் ஜிஹாதிலே சென்றது காயபட்டது அவர்களுக்கு இரேத்தம் வெளியேறியது அதனால் தன்னுடைய நோன்பை முரறித்துக் கொள்ளவில்லை.   
 
ஆக இதுலிருந்து மிக தெளிவாக தெரியக்கூடிய சட்டம் என்னவென்றால் அதுபோன்று சில நேரங்களில் மயக்கம் ஏற்படுவது உண்டு நோன்பு வைத்த நிலையில் சிலருக்கு புதிதாக இருக்கும் அல்லது வேறு எதாவது உடலில் அவருக்கு பலவீனம் இருக்குமேயானால் நோன்பு வைத்து இருக்கும் நிலையில் அவருக்கு மயக்கம் ஏற்பட்டால் ஒரு மணி நேரமோ அல்லது இரண்டு மணி நேரமோ அவர் மயக்கதில் அப்படியே கிடக்கிறார் பிறகு அவர் தெளிவுகிறார் இவருடைய சட்டம் என்னவென்றால் இவருடைய நோன்பு முறியாது இவர் விளித்தற்கு பிறகு நோன்பை அப்படியே தொடரலாம்.
 
இப்னு உமர் ரழியல்லாஹு அன்ஹுமா அறிவிக்கிறார்கள்: அவர்கள் அதிகமாக நபில் நோன்பு வைக்ககூடியவர்களாக இருந்தார்கள். அதும் அவர்களுடைய இப்தார் ஸகர் பொறுத்த வரையில் மிகவும் எளிமையாக இருக்கும் இதன் காரணமாக பல நேரங்களில் பகல் நேரத்தில் அவர்களுக்கு மயக்கம் வந்து விடும் அப்படியே மயக்கமாக நீண்ட நேரம் கீழே கிடப்பார்கள்.
 
பிறகு தெளிவு வந்த பிறகு அந்த நோன்பை அப்படியே தொடர்வார்கள் மாறாக முறிக்க மாட்டார்கள். ஆகவே நோன்பு இருக்ககூடிய நேரத்தில் யாருக்காவது பலவீனம் ஏற்பட்டு மயக்கம் ஏற்பட்டால் அதன் காரணமாக நோன்பு முறியாது. இந்த வாந்தி எடுப்பதை பற்றியும் அறிஞர்களிடத்தில் இரண்டு விதமான கருத்து இருக்கிறது. 
 
தானாக வாந்தி வந்தால் நோன்பு முறியாது என்பதில் எல்லா அறிஞர்களிடத்தில் ஒருமித்த கருத்தில் இருக்கிறார்கள் ஆனால் யாராவது ஒருவர் வலுகட்டாயமாக கைவிட்டு அவராக வேண்டு மென்று வாந்தி எடுத்தல் சில அறிஞ்சர்கள் ஒருசில ஹதீஸ் அடிபடையில் நோன்பு முறிந்து விடும் என்று கூறுகிறார்கள்.
 
ஆனால் சரியான ஹதீஸ் அடிபடையிலும் சஹாபாக்கள், தாபியின்கள் தீர்பு அடிபடையில் வேண்டுமென்று வாந்தி எடுத்தாலும் அல்லது தானாக வாந்தி எடுத்தாலும் நோன்பு முறியாது இதற்க்கு அடிப்படையான காரணம். 
 
الصوم مما دخل وليس مما خرج
 
நோன்பு என்பது எது வயிற்றுக்குள் செல்கிறதோ அதன் காரணமாகத் தான் நோன்பு முறிந்து விடுமே தவிர எது வெளியேறுகிறதோ அதன் மூலமாக நோன்பு முறியாது. 
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா, நூல் : பைஹகி, எண் :2/467
 
إذا قاء فلا يفطر إنما يخرج ولا يولج أو إنما يُخرَج ولا يولج  
 
அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் சொல்லகூடிய ஒரு ஃபதுவாவை இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள். அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் கேட்கப்பட்டது ஒருவர் வாந்தி எடுப்பாரேயானால்.
 
வாந்தி எடுத்துவிட்டால் அவருடைய நோன்பு முறியாது அவர் வயிற்றுலிருந்து வெளியேற்றுகிறாரே தவிர உடலுக்கு எதுவும் செலுத்த வில்லை. 
 
அறிவிப்பாளர் : அபூ ஹுரைரா ரழியல்லாஹு அன்ஹு, நூல் :புகாரி, எண் : 3/33
 
அதுபோன்று முந்திய காலத்தில் இருந்த சிகிச்சை இரத்தம் குத்தி எடுப்பது சில நோயின் காரணமாக இரத்ததை உடலின் சில குறிப்பிட்ட பாகங்களிலிருந்து குத்தி எடுப்பது,  மாட்டு கொம்பு அல்லது, கூர்மையான சில பொருள்களின் மூலமாக இன்று கூட பரவலாக பார்க்கிறோம்.
 
இவ்வாறு இரத்தம் குத்தி எடுப்பதால் ஆரம்பத்தில் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் இதை தடுத்து இருந்தார்கள் பிறகு ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம அவர்கள் இதை அனுமதி கொடுத்து விட்டார்கள் நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களே நோன்பு இருந்த நிலையில் இரத்தம் குத்தி எடுத்து இறுக்கிறார்கள். 
 
إحتجم النبي صلى الله عليه و سلم وهو صائم 
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நோன்பு இருந்த நிலையில் இரத்தம் குத்தி எடுத்து இருக்கிறார்கள் அதை போன்று இஹ்ராமுடைய நிலையிலும் இரத்தம் குத்தி எடுத்து இருக்கிறார்கள் இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் இந்த இரண்டு அறிவிப்பையும் பதிவு செய்கிறார்கள்.
 
அறிவிப்பாளர் : இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா, நூல் : புகாரி,எண் : 1938
 
அனஸ் இப்னு மாலிக் ரழியல்லாஹு அன்ஹு அவர்களிடத்தில் ஸாபிதுல் புனானி என்கிற ஒரு தாபியி கேட்கிறார்: நீங்கள் வெறுப்பவர்களாக இருந்தீர்களாக நோன்பாளி நோன்பு வைத்த நிலையில் இரத்தம் குத்தி எடுப்பதை அதாவது இது தவறு என்று கருதுபவர்களாக இருந்தீர்களாக? அதற்க்கு அவர்கள் கூறினார்கள் இல்லை பலவீனம் ஏற்பட்டாலே தவிர.
 
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் காலத்தில் இதை தவறாக கருதுவது இல்லை மாறாக அவருக்கு பலவீனம் ஏற்பட்டாலே தவிர.
 
ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்களை பற்றி அறிவிக்கபடுகிறது. அவர்களின் வீட்டில் இருக்ககூடிய அடிமை பெண்கள் அவர்கள் இரத்தம் எடுப்பார்கள் அபோது ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் அதை ஒருபோதும் தடுத்ததில்லை இதையும் இமாம் புகாரி ரஹிமஹுல்லாஹ் பதிவு செய்கிறார்கள்.
 
ஆக உடலுக்கு பலவீனம் ஏற்பட்டு நோன்புக்கு ஒரு சோர்வை ஏற்படுத்தி விடும் என்று இருக்குமையானால் அது எந்த செயலக இருந்தாலும் சரி அது பொதுவாக தவிர்க்கப்படவேண்டிய ஒன்றாகும். 
 
ஆனால், இன்றைய காலத்தில் இரத்தம் கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு ஒருவர் அதற்காக இரத்தம் கொடுப்பாரையானால் அதனுடைய சட்டம் வேறு பொதுவாக தன்னுடைய உடலிலிருந்து கெட்ட இரத்ததை வெளியாக்குவதற்க்காக எடுப்பது ஹிஜாமத் என்று சொல்லுவார்கள்.
 
அதனுடைய சட்டம் வேறு அதை பொறுத்த வரை தன்னுடடைய நோன்பில் பலவீனத்தை ஏற்படுத்தும் என்று இருந்தால் அது தவிர்க்க படவேண்டிய ஒன்றாகும். 
 
இரத்தம் கொடுப்பது உயிரை பாதுகாப்பதற்கோ, அல்லது ஒரு சிகிச்சையை சரியாக நடப்பதற்காகவோ, இப்படி இன்னொருடைய உயிருக்கோ, உடல் ஆரோகியத்துக்கு பாதுகாப்பதற்கு இரத்தம் கொடுப்பது என்பது இது எந்த நிலையிலும் வெறுக்கப்பட்ட ஒரு செயல் அல்ல அதன் காரணமாக நோன்பில் பலவீனம் ஏற்பட்டாலும் அவர் நோன்பை விட்டு விடலாம் எந்த குற்றமும் இல்லை. இதிலிருந்து அல்லாஹுடைய மார்க்கத்தில் உயிர்களை பாதுகாப்பது, பிறருக்கு உதவி செய்வது, பிறரின் உயிரை பாதுகாப்பது, பிறரின் தேவைகளில் பங்களிப்பு, எவ்வளவு உயர்ந்த வணக்கமாக என்பதையும் நாம் கவனிக்க வேண்டும்.
 
ஹசன் பஸரி ரஹிமஹுல்லாஹ் கூறுகிறார்கள்: நான் தனியாக நின்று ஆயிரம் ரக்அத்துகள் தொழுவதை விட ஒரு முஸ்லிமுக்கு உதவி செய்வது எனக்கு விருப்பமானதாகும்.
 
இன்று பலர் வணக்க வழிபாடுகளில் ஆர்வ முள்ளவர்களாக இருக்கிறார்கள் ஆனால் சமூகத்திற்கு, ஏழைகளுக்கு, உதவி செய்வதில் மனமில்லாமல் இருப்பது அவர் இஸ்லாத்தை சரியாக புரிந்து கொள்ளவில்லை, நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் போதித்த மனித நேயத்தை, இஸ்லாத்தின் மார்க்க அடிப்படையை, அல்லாஹுடைய கருணையை அவர்கள் சரியாக புரிந்து கொள்ளவில்லை.
 
பல ஸஹாபாக்கள், தாபியின்கள் நோன்பு வைத்த நிலையில் இரத்தம் குத்தி எடுத்து இருக்கிறார்கள் என்பதை ஹதீஸ் நூல்களிலிருந்து பார்க்கிறோம். 
 
அதுபோன்று ஊசி போடுவதைப் பற்றி பெரும்பாலும் கேள்வி இருப்பது உண்டு இந்த ஊசி என்பது எது நம்முடைய உடல் வலிமைக்காக போடப்படுமோ, களைப்பை போக்குவதற்காக வலிமைக்காக வேண்டி அல்லது, பசியை போக்குவதற்காக வேண்டி அல்லது, தெம்புக்காக வேண்டி போடப்படுமோ அந்த ஊசி மட்டும்தான் போடக்கூடாது.
 
காரணம் என்ன அது ஒரு மனிதனுக்கு உணவு அல்லது குடிபானுதுடைய இடத்தில் இருக்கக் கூடியது. ஆகவே இதற்காக அல்லாமல் மயக்கத்தை ஏற்படுத்து வதற்க்காகவோ அல்லது, வேறு எதாவது காய்ச்சல், ஜலதோஷம்  போன்ற காரணங்களுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காக மருத்துவத்தின் அடிப்படையில் மருந்தாக கொடுக்கப் படகூடிய ஊசி நோன்பை முறிக்காது. எது உணவுடைய இடத்தில் இருக்குமோ அத்தகைய ஊசி மட்டும்தான் நோன்பை முறிக்ககூடியதாக இருக்கும்.
 
உதாரணமாக மயக்கதுக்காக வேண்டியோ அல்லது மற்ற எதாவது காரணங்களுக்காகவோ போடபட்கூடிய ஊசிகள் அது நோன்பை முறிக்ககூடியது இல்லை. சில நேரங்களில் பல்லை பிடுங்கும்போது வலி தெரியாமல் மறக்க வைப்பதற்க்காக வேண்டி நமது வாயின் உள்ளே ஊசி போடுவார்கள் இப்படிபட்ட எந்த விதமான ஊசிகளும் நோன்பை முரிக்ககூடியது இல்லை.
 
ஆக, கண்ணியத்திற்குறியவர்களே! நமக்கு மத்தியில் அதிகமான காரியங்கள் அவற்றை தெளிவான ஆதாரத்தோடு தெரிந்து அல்லாஹுடைய வணக்கத்தை நிறைவேற்ற வேண்டும். அது நோன்பு, தொழுகை, ஜகாதாக இருந்தாலும் சரி அல்லாஹுடைய இந்த மார்க்கம் என்பது தெளிவான ஆதாரத்தின் மீது அமையப்பட்டதாகும். 
 
ஆகவே அல்லாஹுடைய மார்க்கத்தை கற்று ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுடைய சரியான சுன்னாவை கற்று நம்முடைய வணக்க வழிபாடுகளை சரியான முறையில் அமைத்து கொள்வோமாக அல்லாஹு ஸுப்ஹானஹு தஆலா நம்முடைய நோன்புகளை, வணக்க வழிபாடுகளை பாதுகாப்பானாக!  
 
ஆமீன்
 
أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين من كل ذنب فاستغفروه إنه هو الغفور الرحيم  
 
குறிப்புகள் :
 
குறிப்பு 1)
 
DARUL HUDA
 
211(102), FIRST FLOOR, LINGHI STREET, MANNADY, CHENNAI – 600001.
 
muftiomar@gmail.com, 044 2524 7866, 9840174121, 9884469044
 
Facebook: https://www.facebook.com/muftiomarsheriffqasimi/
 
Youtube: https://www.youtube.com/channel/UC4CmuDuplV91jmQ2jX32Iwg?view_as=subscriber
 
Website: http://www.darulhuda.net/